உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தர கவிராயர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
சுந்தரக விராயர் விருத்தம்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடல் 5
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 152 & 153
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்


1

ஒருகோட்டுக் கலைமுனியு மொழிதிகழும் புலியாடை யுடுத்த கோவும்
மருமலர் வாழ் திசைமுகனும் வானவர் கணாயகனு மயிடன்றானும்
கரியநிறத் திருமாலும் வாலியும் பராசனுமே காமனம்பால்
பெருமை யிழந்தன ரென்றாற் சிறு மனிதர்க் கெப்படியோ பேசுங்காலே.

2

வாசவனும் பிறர் நகைக்க வுடலானா னொருவனரா வடிவ மானான்
தேசுபுகழ்க் கலை மதியு முடலிழந்தான் மலர்வேதன் சிரமொன் றற்றான்
ஈசநுதல் விழி திறந்தான் இராவண சுந்தோப சுந்த ரிறந்தார் மண்மேல்
காசினிப் புன் மானிடரோ மோக சாகர மதனைக் கடக்க வல்லார்.

3

உணங்கி யொருகான் முடமாகி யொருகண் ணின்றிச் செவி யிழந்து
வணங்கு நெடுவால றுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி
அணங்கு நலிய மெலிவெய்தி யகல் வாயோடு கழுத் தேந்திச்
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் றுயர் செய்யான் .

4

கட்டிறலை திருப்பி வைத்தாற் றலைவலி போமோ வந்தக் கதை போலாட்டுக்
குட்டியி தென்னடி சகியே கெட்டி வயித்தியன் பள்ளி கொண்டான் பாம்பின்
பெட்டியினுங் கையிடுவ னுண்டையும் பாய்ச்சிடுவ னன்றாய் பிலமாய்க் காயங்
கட்டிடுவ னிஃதல்லா லாறாதே மதன் விடுமிப் பகழிப் புண்டான்.

5

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினான் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக் கேகும்போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்.