உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்கிழார் தந்த செல்வம்/காழிப்பிள்ளையாரும் காளத்தி வேடனும்

விக்கிமூலம் இலிருந்து

8. காழிப்பிள்ளையாரும் காளத்தி வேடனும்

காளத்தி வேடன் என்ற பட்டினத்துப் பிள்ளையின் தொடர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய கண்ணப்பரைக் குறிக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்பெருமானின் நீண்ட வரலாறு பலருக்கும் தெரிந்திருக்கும் ஆதலின், அவ்வரலாற்றை விரிப்பதை விட்டு விட்டுச் சேக்கிழார் பாடிய முறையில் சில நுட்பங்களை மட்டும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிள்ளை பாதி, புராணம் பாதி

பெரிய புராணத்தில் உள்ள அறுபத்து மூன்று வரலாறுகளில், இரண்டு வரலாறுகள் தனித்து நிற்கும் சிறப்புடையவை. அவையாவன திருஞானசம்பந்தர் வரலாறும், கண்ணப்பர் வரலாறும் ஆகும். தேவாரம் பாடிய மூவருடைய வரலாறும், பெரிய புராணத்தில் இருந்தே அறியப்படுவனவாகும். இந்த மூவருடைய எல்லையற்ற சிறப்பில் ஈடுபட்டு, அப்பெருமக்களிடம் பக்தி பூண்டு, அவர்கள் வரலாற்றைச் சேக்கிழார் பாடியுள்ளது உண்மைதான். இம் மூவருள்ளும் திருஞானசம்பந்தர் வரலாறு மிக விரிவாக — ‘பிள்ளை பாதி, புராணம் பாதி’ என்று சொல்லுகின்ற அளவிற்கு — விரிந்துள்ளதும் உண்மைதான். பதினாறு ஆண்டுகளே வாழ்ந்து, இறையடி சேர்ந்த ஆளுடைய பிள்ளை வரலாற்றை இவ்வளவு விரிவாகத் தெய்வச் 290 சேக்கிழார் தந்த செல்வம் சேக்கிழார் பாடக் காரணம் ஏதேனும் இருக்குமோ என்று சிந்திப்பதில் தவறில்லை. "உணர்ந்ந்தார்" - அவ்வாறு சிந்தித்தால், சில காரணங்கள் நம் மனத்தில் தோன்றும். அவையாவன:- பல்லவர் ஆட்சியில் சிவ வழிபாடும் பக்தி நெறியும் தமிழ் மொழியும் எங்கோ மறைந்துவிட்ட நிலையில் இவை மூன்றையும் அவற்றிற்குரிய இடத்தில் நிலைபெறச் செய்தவர் இப்பெருமானே ஆவார். : "திசை அனைத்தின் பெருமைளலாம் தென் திசையே r வென்று ஏற மிசைஉலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல, அசைவுஇல்செழும் தமிழ்வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல’’ என்றும், பெபு-1927) "பிள்ளையர் திரு அவதாரம் செய்தார். . - (பெயு-929) என்பது சேக்கிழாரின் கணிப்பு. இவை புறக்காரணங் களாகும் எனப்படலாம். உலகின்ற அன்னையின் திருமுறைப்பாலை மானிட உடம்போடு இருக்கை யிலும் உண்ட பெரியவர் இப்பெருமானே ஆவர். உலகிடைத் தோன்றிய எந்த மகானுக்கும் இத்தகைய சூழ்நிலை கிட்டவில்லை. அன்னையின் முலைப் காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் * 29. பாலை உண்டமையின் "உவமைஇலாக்கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில். பெ. பு-1973) என்பது சேக்கிழார் கூற்று அறிவின் முதிர்ச்சியில் பயிலப்பட வேண்டிய கலைஞானங் களும் உணர்வின் முதிர்ச்சியில் அடையப்பட வேண்டிய ஞெய் ஞானங்களும் ஆளுடைப் பிள்ளையாரை ஒரே வினாடியில் அடைந்தன. இவை அனைத்தையும் அப்பெருமான் அறிந்தார், தெரிந்தார், தெளிந்தார், பெற்றார், என்று கூறாமல் "அந்நிலையில் உணர்ந்தார்.” என்கிறார், தெய்வச் சேக்கிழார். பலகாலும் சிந்தித்துப் பொருள் உணர வேண்டிய பகுதியாகும் இது. "இதோ இவன்தான்' அடுத்தபடியாக வேதமும்கூட இன்னார் என்றோ இத்தகையவன் என்றோ உடன்பாட்டு முறையில் சுட்டிக் காட்ட முடியாத மூலப் பரம் பொருளை 'இன்னான்.” என்று கூறி 'இதோ இவன் தான்."என்று ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டிய பெருமை உடையவர் ஆளுடைப் பிள்ளையார். இது அல்ல’ என்ற பொருளுடைய "நேதி என்ற சொல்லாலே வேதம் பரம்பொருளைக் குறித்தது. ஆனால், காழிப் பிள்ளையார் பெம்மான் இவன் அன்றே என்ற அண்மைச் சுட்டால் சுட்டிக் காட்டிய பெருமை உடையவர். 292 சேக்கிழார் தந்த செல்வம்

'எனது உரை தனது உரையாக இவையெல்லாம் ஒருபுறமிருக்க, திரு இலம்பயங் காட்டுர் என்ற ஊரில் பாடிய தேவாரப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் 'எனதுரை தனதுரையாக என்று பாடிய பெருமை காழியில் தோன்றிய இச் சிறிய பெருந்தகையாருக்கே உரியதாகும். இதன் பொருள் என் வாயிலிருந்து வரும் சொற்கள் தேவாரப் பாடல்கள்) இறைவனே நேரிடையாகக் கூறியவை ஆகும்’ என்பதாகும். இம்மட்டோடு நில்லாமல் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் இப்பாடல்களைக் கற்பவர் இன்னின்ன பயன்களைப் பெறுவர் என்று கூறுவதோடு நில்லாம்ல், "பயனைப் பெறுவர், ஆணை நமதே!”என்று கூறிய பெருமகனார் இம் மூவருள்ளும் காழிப்பிள்ளையார் ஒருவரே ஆவர். இவற்றை யெல்லாம் நன்குணர்ந்த சேக்கிழார், காழிப் பிள்ளையாரை இறைவனோடு ஒன்றாக வைத்தே புராணம் பாடியுள்ளமையை அறிய முடியும். தனித்தன்மை . . . . . . . . . . . . . . . . ; பத்தொன்பதாம் ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானியாகிய இராமலிங்க வள்ளல் له لBit}′لی பெருமான் நால்வரைப்பற்றியும் புகழ்ந்து பாடியுள்ளார் எனினும், திருஞானசம்பந்தரைக் குறிக்கும்பொழுது மட்டும் ஞானசம்பந்த குருவேட் என்று பாடுவதைக் காணலாம். ஏனைய மூவர் வரலாற்றிலும் ஈடுபட்டு, மனங்குழைந்து, அன்பு காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 293 நெக்குருகப் பாடும் வள்ளலார், திருஞான சம்பந்தரைப்பற்றிப் பாடும்பொழுது மட்டும் அச்சங்கலந்த பக்தியுடன், குருவின் எதிரே அடங்கி நிற்கும் சீடனைப்போலப் பாடுவதைக் காணமுடியும். எனவே, பெரியபுராணத்தில் காழிப்பிள்ளையார் வரலாறு தனித்தன்மை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே அக்கருத்தை ஓரளவு விவரித்து கூறியுள்ளோம். .” * முற்றிலும் மாறுபட்டது கண்ணப்பர் வரலாறு, காழிப்பிள்ளையின் வரலாற்றோடு முற்றிலும் மாறுபட்டதாகும். வைதிகக் குடும்பத்தில் பிறந்தவர் பிள்ளையார். கொல், எறி, குத்து, வெட்டு என்ற சொற்களையல்லாமல் வேறு எச்சொல்லையும் அறியாத வேடுவர் குலத்தில் தோன்றியவர் திண்ணனார். எல்லாக் கலைகளையும் ஒதாது உணர்ந்தவர் பிள்ளையார் கலை என்ற சொல்லையே அறியாது வளர்ந்தவர் திண்ணனார். மூன்று வயதிலேயே பரம்பொருளின் இயல்பை அறிந்து, தெளிந்து, உணர்ந்து அதனைப் பாடலாக இயற்றி, பிறருக்கும் உணர்த்தும் பேராற்றல் பெற்றவர் பிள்ளையார், பதினாறு வயதுவரை இறைவன், சிவ பெருமான் என்ற சொல்லையே காதால்கூடக் கேட்டறியாதவர் திண்ணனார். இத்துணை மாறுபாடுகள் இருந்தும் இருவ்ரும் ஒரே நிலையில் உள்ளனர் என்பதைச் சேக்கிழார் மிக நுணுக்கமாகத் 294 . சேக்கிழார் தந்த செல்வம் தெரிவிக்கின்றார். காழிப்பிள்ளையார் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு காளத்திக்குச் சென்றபொழுது, திண்ணனாரின் வரலாறு முழுவதுமாக அப்பெருமானின் மனத்திரையில் நிழலாடுகின்றது. வேயனைய என்று தொடங்கும் பாடலில், "வாய்கலசமாக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகுநயனம் காய்கணையினால் இடந்து ஈசனடிகூடு காளத்தி - மலையே' (திருமுறை: 3-69-4) எனப் பின்னிரண்டு அடிகளில் கண்ணப்பர் வரலாறு முழுவதையும் கூறிவிடுகின்றார். கும்பிட்டப் பயன் காளத்தி மலையிடைச் சென்று, காளத்தி நாதரைக் கீழே வீழ்ந்து வணங்கி எழுந்தாராம் - பிள்ளையார். கூடும் அன்பினில் கும்பிட்ட அப்பெருமானுக்கு, அந்தக் கும்பிடுதலின் பயன் கண்ணப்பர் வடிவில் எதிரே நின்றது என்ற பொருள்பட, "கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்’(பெபு-2925) என்று சேக்கிழார் கூறுவது ஒரு மாபெரும் கருத்தை உள்ளடக்கியதாகும். பரஞானம், அபர ஞானம் என்ற இரண்டையும் முழுதுணர் பெருமானாகிய, பிள்ளையார், இந்த காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 295 இரண்டு சொற்களின் பொருளைக்கூட அறியாத ஒருவரின் வடிவைக் கண்டார். அவ்வடிவு கும்பிடுதலின் பயனாக அமைந்தது என்று சேக்கிழார் கூறுவது பல நாள் சிந்தித்துப் பொருள் காண வேண்டிய ஒரு பகுதியாகும். பக்தியும் சாத்திர சடங்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சாத்திரம், தோத்திரம் என்ற இரண்டும் வளர்ச்சி அடைந்துவிட்டன. பக்தி இயக்க காலத்தில் (5, 7, 8ஆம் நூற்றாண்டுகளில் சாத்திரத்திற்கு ஒரு மிகச் சிறிய இடமே தரப்பெற்றது. சாத்திரம் கூறும் நியம, நிஷ்டைகள் எதுவும் அக் காலத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, வடமொழி ஆதிக்கத்தாலும் ஸ்மிருதிகளின் தாக்கத்தாலும் தமிழரிடையே சாத்திரங்கட்கு மதிப்பு வளரலாயிற்று. நாவரசர் பெருமான் காலத்தில் இந்தக் கிரியைகளை அவர் சாடுவதைப் பார்த்தால், அவர்கள் காலத்திலேயே சாத்திரங்கள் ஒரளவு செல்வாக்குப் பெற்றிருந்தன என அறிதல் கூடும். * - சாத்திரம், தோத்திரம் ஆகிய இரண்டும் ஒரே பொருளை அடைய வழிவகுக்கும் இணைக் கூறுகள் ஆகும். சாத்திரவழி வாழ்க்கையில் பல கட்டுப் பாடுகளை ஏற்படுத்தி, பல சடங்குகளுக்கு இடம் வகுத்து, அம்முறையில் வாழவேண்டும் என்று 296 சேக்கிழார் தந்த செல்வம் கூறுவதாகும். என்ன காரணத்தாலோ வேத காலத்திலேயேகூட இந்தச் சடங்குகட்கு அதிக மதிப்புத் தரப்பெற்றுவிட்டது. ரிக் வேதத்தில் பல மண்டிலங்களில் செய்யப்பெறும் வேள்விகள், சடங்குகட்கு முக்கியத்துவம் அளித்தன. அந்த வேதத்தில் சொல்லப்பட்டதைவிட மிகவும் விவரமாகச் செய்யப் படவேண்டிய சடங்குகள்பற்றிக் கூறும் வேதசாகைகள் உடன் இணைக்கப் பெற்றன. இந்த இணைப்புகள் பிராமணங்கள் என்று சொல்லப்படும். நாளாவட்டத்தில் வேதசாலை களைவிடப் பிராமணங்கள் வலுப்பெற்றன. இந்த நிலையில்தான் கண்ணப்பர் இம்மண்ணிடைத் தோன்றினார். வேட்டையாடச் சென்ற அவர் எதிர்பாராது கண்ட காளத்திநாதனைப் பல்லாண்டுகளாக ஆகம ரீதியில் வழிபடும் பழக்கம். உடைய சிவகோசரியார் என்ற அந்தணரும் அதே காலத்தில் வாழ்ந்தவராவார். காழிப்பிள்ளையார் எந்த யாகத்தையும் செய்த தாக வரலாறுகள் இல்லை. ஆனால், அவர் தந்தையார் இவரைப் பிள்ளையாகப் பெற்ற பின்பும் கூட யாகம் செய்வதை விட்டுவிட வில்லை. சடங்குகளில் ஈடுபட்டவர்கள் அதனை விடுதல் இயலாத காரியம். இறைவனே வந்து கனவில் கூறிய பிறகும் சிவகோசரியார் தம்முடைய வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. நாளாவட்டத்தில் இந்தச் சாத்திரவாதிகட்கும் பக்தி காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 297 மார்க்கத்தில் ஈடுபட்டவர்கட்கும் கருத்து வேற்றுமை வளரலாயிற்று. அத்தகைய ஒரு காலத்தை வெளிப் படுத்திச் சாத்திர வழிபாட்டைவிடப் பக்தி வழிபாடு பல மடங்கு உயர்ந்ததாகும் என்பதை எடுத்துக் காட்டவே கண்ணப்பர் புராணத்தைப் பயன் படுத்துகிறார் சேக்கிழார். இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு மனமும், உணர்வும்தான் வேண்டுமே தவிர, கல்வி அறிவு தேவையில்லை என்பது சங்க காலம்தொட்டு இந் நாட்டில் நிலைபெற்ற கொள்கையாகும். திரு முருகாற்றுப்படை இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். திருவேரகத்தில் வழிபடுகிறவர்கள் ஈர வேட்டி அணிந்துகொண்டு, உச்சியில் கூப்பிய கையினராய், ஆறெழுத்து மந்திரத்தை வாய்விட்டுக் கூடச் சொல்லாமல் மனத்திற்குள் சொல்லிக் கொள்ளும் வேத விற்பன்னர்கள் ஆவர். இதனெதிராகத் திறந்த வெளியில் ஆட்டுக்கிடாய் அறுத்து, அதன் குருதியில் அரிசியைக் கலந்து நாலா பக்கமும் சிதறவிட்டு முருகா என்று ஒலமிடும் பக்தர்கள் ஒருபுறம். இவை இரண்டு காட்சிகளையும் வருணித்த நக்கீரர், வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (திருமுருகாற்றுப்படை-) என்று பாடுகிறார். அறிவின் எல்லையில் நின்று வழிபடும் திருவேரகத்து அந்தணர்க்கும் அறிவு என்ற சொல்லையே அறியாது முருகனிடம் முழு ஈடுபாடு 298 : சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு அவனை அழைக்கும் வேலனுக்கும் முருகப் பெருமான் ஒரே நேரத்தில் அருள் பாலிக்கின்றான். பக்தியும் அன்பும் நிறைந்த இடத்தில் கிரியைகள் தேவைப்படுவதில்லை என்ற அருங்கருத்தைத் திருமுருகாற்றுப்படை மூலம் அறிந்து கொண்ட தெய்வச் சேக்கிழார் அதற்கு ஒரு முழு வடிவு கொடுக்கும் முறையில் கண்ணப்பர் புராணத்தைப் பாடுகிறார். கண்ணப்பர் வரலாறு கூறும் சேக்கிழார் அவர் வழிபாட்டு முறையைக் கூறுகிறார். அவர் வாயில் பொன் முகலி ஆற்றுநீரை கொணர்ந்து இறைவன் மேல் உமிழ்ந்து விட்டு, தன் தலையில் குடிக்கொண்டு வரும் பூவை இறைவன் முடியின் மேல் வைத்து, தான் கொண்டுவந்த இறைச்சியைப் படைத்து, இறைவனை உண்ணுமாறு வேண்டுகிறார். இதேபோல கண்ணப்பருக்கு தெரியாமல் சிவகோசரியாரும் ஆகம முறைப்படி வழிபாடு செய்தார். இவை இரண்டுமே கிரியைகள் அல்லது சடங்குகள் தானே என்று சிலர் வினவலாம். நூலில் விதித்த முறைகளை பின்பற்றி ஒவ்வொரு சடங்கிற்கும் உரிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு செய்யும் கிரியைகளே சடங்குகள் எனப்படும். சிவகோசரியார் விபரம் அறியாத திண்ணனார் இறைவன் முடிமேல் உள்ள பூவைகாட்டி இது என்ன என்று கேட்ட பொழுது, உடனிருந்த நாணன் தான் முன்பு ஒருமுறை வந்தபொழுது ஒரு பார்ப்பான் இறைவன் மேல் நீரை ஊற்றி பூவைச் சொறிந்து எதிரே உணவை வைத்து காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 299 ஏதோ முணுமுணுத்தான் என்ற விபரத்தைக் கூறினான். இதைக்கேட்ட திண்ணன், குடுமித் தேவருக்கு இவை எல்லாம் பிடிக்கும் போலும் என்ற எண்ணத்தில் அவற்றை அவன் விரும்பிய முறையில் செய்தான். எனவே, திண்ணன் செய்ததும் வேலன் வெறியாடு களத்தில் செய்யப் பெற்றவையும் சடங்குகள் என்ற பெயரில் அடங்க மாட்டா. திண்ணன்-திண்ணனார் நாணன், காடன் இருவருடன், பன்றியைத் துர்த்திச் சென்ற திண்ணனார். இறுதியாக அதனைக் கொன்ற இடம் காளத்திமலையின் அடிவாரம் ஆகும். அப்பொழுதுதான் மலையினை முதன் முறையாகக் காணுகின்றார் திண்ணனார். இது என்ன மலை என்று உடன் இருந்த நாணனை வினவ, தனக்குத் தெரிந்த விடையை அவன் கூறினான். குடுமித் தேவர் என்பவர் இம்மலைமேல் உள்ளார். நீ விரும்பினால் சென்று கும்பிட்டு வரலாம் என்றான். இருவரும் புறப்பட்டு விட்டனர். அடிவாரத்தில் ஒடும் பொன் முகலி ஆற்றைக் கடந்து, மலையை நோக்கிச் செல்லுகின்ற திண்ணனார் ஒரு விசித்திரமான அநுபவத்தை அடைகிறார். அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத திண்ணன் உடன் வரும் நாணனை நோக்கி, 'ஆவது என்?இதனைக் கண்டு இங்கு அனைதொறும் என்மேல் பாரம் 300 சேக்கிழார் தந்த செல்வம் போவதொன்றுளது போலும்’ : - - (பெ. பு-746) என்கிறார். அதாவது, மலையை நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்தொறும் அவர்மேல் இருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் இருந்ததாம் என்மேல் பாரம் என்று அவர் சொல்வது சாதாரண மனிதர்களுக்குரிய பொறி, புலன்கள் ஆக்கிரமிப்பால் ஏற்படுகின்ற மனச்சுமை ஆகும். அது உடற்சுமை அன்று; மனச்சுமை என்பதைக்கூட வேறுபாடு படுத்திக் காணமுடியாத ஒர் அப்பாவியாக இருக்கிறார் திண்ணனார். படிகளில் ஏறி, குடுமித்தேவரை காண்கின்ற அந்த வினாடிவரை, வேடர்குல மைந்தனாகிய திண்ணன் தான் அங்கே இருக்கிறான். மனச்சுமைகளை இறக்க விரும்பும் எந்த ஒருவனும் தவம், தியானம் முதலியவற்றை மேற் கொண்டு பல்லாண்டுகள் பயின்றால் அந்தச் சுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க முடியும். சுமை இறங்கிய மனம் வெற்றிடமாக இருப்பதில்லை. சுமை இறங்க இறங்க அந்த வெற்றிடத்தை இறையருள் நிரப்புகிறது. பல்லாண்டுகள் பயிற்சி, தவம், தியானம் என்பவற்றின் துணை கொண்டு பெறுகின்ற ஓர் அநுபவத்தைத் திண்ணன், சில மணித் துளிகளில் பெற்றுவிடுகிறான். எனவே, மலையை நோக்கி அவன் நடக்கத் தொடங்கிய காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 301 பொழுது, குறையத் தொடங்கிய பாரம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, குடுமித் தேவரைப் பார்க்கின்ற அந்த வினாடியில் முழுவதுமாக நீங்கி விடுகிறது. இந்த வினாடியில் நாகன் மகன் திண்ணன் மறைந்து விடுகிறான். திண்ணனின் வடிவம் முழுவதும் பஞ்ச பூதங்களும், பொறி புலன்களும் சேர்ந்து ஆக்கிய உடம்பாக இல்லாமல், அவ் வடிவு முழுவதையும் இறையன்பு என்ற ஒன்று ஆட்கொண்டுவிட்டது. இந்த முழுமாற்றம் (metamorphosis) ஏற்பட்ட பிறகு, அவன் வடிவு, செயல் அனைத்தும் இறைவன் செயலாகவே மாறிவிடுகின்றன. அதனால், எதிரே உள்ள சிவலிங்கத் திருமேனி, திண்ணன் கண்களில் கல்லால் செய்யப்பட்ட விக்கிரகமாகத் தோன்றவில்லை. அவனைப் பொறுத்த மட்டில், பரம்பொருள் நிர்க்குண, நிராமய, நிராலஞ்சனமாக இருக்கின்ற ஒன்று என்ற சிந்தனை இல்லை. அந்தத் திருமேனியைக் கட்டிக்கொண்டு, "மலையிடை எனக்கு வாய்த்த மரகதமணியே’ என்று பேசத் தொடங்கியவன், தனக்கு மிகவும் வேண்டப்பட்ட, தன்னால் காக்கப்பட வேண்டிய ஒரு தோழனாகவே குடுமித்தேவரைக் கருதுகிறான். இதன் பிறகு, குடுமித்தேவரின் முழு அன்பனாகிய ஒருவன்தான் அங்கு உள்ளானே தவிர, நாகன் மகன் 302 சேக்கிழார் தந்த செல்வம் அவனால் அன்பு செய்யப்பட்ட குடுமித் தேவருக்குப் பசிக்கும் என்று நினைத்து, வேண்டுமான விலங்குகளை வேட்டையாடிக்கொண்டு வந்து, நீ உண்க'என்று கூறிப்படைக்கிறான். அப்படிப் படைக்கப்பட்ட உணவைக், குடுமித்தேவர் ஏன் உண்ணவில்லை என்ற எண்ணம் திண்ணன் மனத்தில் ஏனோ தோன்றவேயில்லை. குடுமித் தேவரே திண்ணன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய இடம் இது. இந்த எண்ணம் திண்ணன் மனத்தில் ஒரு வினாடி முளை விட்டிருக்குமேயானால் இன்னும் அவன் திண்ணனாகத்தான் இருக்கிறான் என்பதற்கு அது அடையாளமாகும். ஆறு நாளும் அவன் படைத்த உணவு அப்படியே கிடப்பது கூட அவன் மனத்தில், 'ஏன் என்ற வினாவையோ இது ஏற்கப்படவில்லை என்ற வருத்தத்தையோ தரவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்: குடுமித் தேவரைத் தவிர, இரண்டாவதாகத் திண்ணன் என்ற ஒருவன் இல்லை. அவன் வேறு, குடுமித்தேவன் வேறு என்றில்லாத நிலையில் ஏன்? என்ற வினாவை எழுப்புவது யார்? நாகன் மகன் திண்ணன் என்ற ஒருவன், குடுமித் தேவரில் வேறுபட்டுத் தனியே இல்லை என்றால், தினந்தோறும் வேட்டை ஆடியவன் யார்? இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று வாயில் அதுக்கிப் பார்த்தவன் யார்? குடுமித் தேவரிடம் இவற்றை காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 303 வைத்து, தேனும் உடன் கலந்தது இது தித்திக்கும், உண்க!' என்று கூறினவன் யார்? இவற்றைச் செய்தவன் நாகன் மகன் திண்ணன் என்று கொண்டால், கண்ணப்பர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றாகிவிடும். இருவர் விளக்கம் : சேக்கிழார் மலையிடை இவற்றைச் செய்து கொண்டிருப்பவன் Այmri- என்ற வினாவிற்கு இருவர் விடை பகர்கின்றனர். ஒருவர் தெய்வச் சேக்கிழார். மிக அற்புதமாக அவர் விடை அமைந்துள்ளது. தன்பரிசு (volition), வினை இரண்டு நல்வினை, தீவினை) உயிர்களைப் பற்றிநிற்கின்ற மலம் மூன்று (ஆணவம், கன்மம், மாயை) ஆகிய இவை ஆறும் ஒருவனிடம் இருந்தால்தான் அவன் தனித்துவம் பெற்ற மனிதனாக எண்ணப்படுவான். பொறி, புலன், மனம் ஆகிய அனைத்தும் தொழிற்படாமல் ஆள் மயக்க நிலையில் (Coma stage) உள்ள ஒருவனைத் திண்ணன் நிலையில் உள்ளவன் என்று கூறலாமா என்ற வினாத் தோன்றினால் முடியாது’ என்றுதான் கூற வேண்டும். காரணம், இந்த நிலையில் உள்ளவனுக்குக்கூட மனம், சித்தம், புத்தி ஆகியவை தொழிற்படாவிடினும் அகங்காரம் என்ற காரணம் தொழிற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். இதை அறிய ஓர் எளிதான வழி உண்டு. ஆழ்நிலை மயக்கத்தில் உள்ள ஒருவனை, எல்லாப் பொறிகளும் செயலிழந்த 304 சேக்கிழார் தந்த செல்வம் நிலையில் உள்ள ஒருவனை, அவன் பேரைச் சொல்லி கூப்பிட்டால் உடனே 'உம்' என்று பதிலிறுப்பதைக் காணலாம். ஆனால், இந்நிலை ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பாகம்தான் நிற்கும். எனவே, அந்தக்கரணம் நான்கினும் மிக ஆழத்தில் இருக்கும் அகங்காரத்தைப் போக்க முடியாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. திண்ணனுக்கு இந்த அகங்காரமும் இல்லை என்பதை நமக்குக் கூறுவதற்காகவே, தன்பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் . إلكيIوز அன்புபிழம்பு ஆய்த் திரிவார் அவர் கருத்தின் . . o - - அளவினரோ!' (டெ. பு-803) என்று கூறுகிறார். இந்த ஆறும் இல்லை என்றால் திண்ணன் என்ற வடிவில் வேறு என்ன இருந்தது என்ற வினாத் தோன்றுமல்லவா? அதற்கு விடை கூறுபவர் போல, அன்பு பிழம்பாய் திரிவார்’ என்று கூறுகிறார். அன்புப் பிழம்பு என்றால், அது சிவம் என்றே பொருள்படும் என்ற கருத்தை, அன்பு சிவம் இரண்டென்ப அறிவிலா அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் - : (திருமந் : 270) காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 305 என்ற திருமூலர் வாக்கால் அறியலாம். பிற்காலத்து தோன்றிய சாத்திர வழிநின்று இதைக் கூற வேண்டுமானால், திண்ணன் என்பவனுடைய பசு’ கரணங்கள் அனைத்தும் ஒய்ந்து, அவை பதி கரணங் களாக மாறிவிட்டன. இப்பொழுது, திண்ணன் செய்கின்ற செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை. 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் (திருத்தோனோக்கம் 6)என்ற மணிவாசகரின் அனுபவ விடை இதற்குச் சான்றாகும். திண்ணனின் இந்த நிலையைத் தேகப் பிரக்ஞை உடல் உணர்வு) அற்ற நிலை என்பர், தங்களுக்கென்று ஓர் உடம்பிருக்கிறது. அதற்கென்று சில தேவைகள் உண்டு என்ற நினைவே இவர்கள் மாட்டு இருப்பதில்லை. அண்மையில் திருவண்ணா மலையில் வாழ்ந்த மகான் சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி அவர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் வாழ்ந்த ரமண மகரிஷி நினைவுகூரலாம். "தேகப்பிரக்ஞை இல்லாமல் சேஷாத்திரி சுவாமிகள் ஒருவரால்தான் வாழ முடியும்” என்று ரமணர் கூறியதை இங்கு நினைவுகூர்தல் நலம். s . இருவர் விளக்கம் : குடுமித்தேவர் "இப்பொழுது, இவன் யார்? ” என்ற வினாவிற்கு விடை இறுத்த இரண்டாமவர் குடுமித்தேவரே ஆவார். சிவகோசரியார் கனவிடைத் தோன்றிய பெருமான், 306 சேக்கிழார் தந்த செல்வம் "அவனுடைய வடிவு எல்லாம் நம்பக்கல் அன்பு என்றும் அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு ‘. - எனறும அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் - * - ! . என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள் - செய்தார். ' (பெ. பு-806) திண்ணனின் வடிவு, செயல், அறிவு என்ற மூன்றும் தம்மைப்பற்றியே என்று குடுமித்தேவர் கூறிவிட்டதால், திண்ணனுக்குத் தேகப் பிரக்ஞை இல்லை என்பதை அறிவித்தாராயிற்று. திண்ணன், கண்ணப்பனாகின்ற நிலை. அவன் குடுமித்தேவரைக் கண்ட முதல் நாளே நிகழ்ந்துவிட்டது. ஒருகணம் : தேகப் பிரக்ஞை இந்த ஆறு நாளும், தன்பரிசு, வினை இரண்டு முதலியவற்றை இழந்து, குடுமித்தேவரைக் காவல் புரியும் ஒருவனாக விளங்கிய திண்ணனாருக்கு, ஒரு வினாடி நேரம் தன்பரிசு (தேகப்பிரக்ஞை) தோன்று மாறு அருள்புரிகின்றார் குடுமித்தேவர். குடுமித் தேவரைத் தவிரத் தன்னையே மறந்துநின்ற ஒருவன், அவர் கண்ணில் குருதி வடிந்தால் கட்டிக்கொண்டு அழுவானே தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டான். தன் உடம்பு (தேகப் பிரக்ஞை) என்ற ஒன்று இருந்தாலொழிய, குடுமித்தேவருக்குத் தன் கண்ணை காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 307 இடந்து அப்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றி இராது. அந்த எண்ணத்தைத் தோற்றுவித்தால், விளைவு இரண்டு வகையில் செல்லலாம். ஒன்று, வளர்ந்துவிட்ட நிலைமையில் இருந்து வழுக்கி, கீழே சென்று நாகன் மகன் திண்ணனாக மாறிவிடலாம். அல்லது, அந்த ஒரு வினாடி தேகப் பிரக்ஞை நின்ைவைப் பயன்படுத்திக்கொண்டு, ஊனுக்கு ஊனிடல் வேண்டும் (பழுதடைந்த உறுப்பிற்கு அதே போன்ற மற்றோர் உறுப்பை மாற்றாக (Transplantation) பயன்படுத்த வேண்டும் என்ற நினைவு வரலாம். திண்ண்னார் தம் கண்ணை இடந்து குடுமித் தேவருக்கு அப்பினான். திண்ணனாரைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டாவது வழியையே மேற்கொள்வான் என்று அறிந்த குடுமித்தேவர், திண்ணனுக்கு உடல் உணர்வை ஏற்படுத்தினார். ஒரு போலி விளக்கம் கண்ணப்பர் வரலாற்றில் உள்ள இந்த நுணுக்கத்தை ஆழ்ந்து சிந்திக்காமல் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஒருவர், திண்ணன் கண்ணை இடந்ததற்கு ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆறு நாளும் திண்ணன் பன்றி, மான் முதலியவற்றை வேட்டையாடி அம்பினால் குத்திக் கொன்றான் ஆதலால், அதற்குத் தண்டனையாக அவன் கண்ணைத் தோண்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவே அவர் தந்த விளக்கம். . 308 சேக்கிழார் தந்த செல்வம் சேக்கிழாரையோ, திண்ணனாரையோ அறிந்து கொள்ளாமல் மிகச் சாதாரணமான வினைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய விளக்கமாகும் இது. இவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், முத்தநாதன் மெய்ப்பொருளைக் குத்தினான் என்றால், அதற்கு முன்னர் மெய்ப் பொருள் யாரையோ குத்தியிருக்க வேண்டும் என்று விடைகூற நேரிடும். தன்பரிசு, வினை இரண்டு’ என்ற பாடலில் உடல் உணர்வு அற்ற நிலையில், திண்ணன் வாழ்ந்ததை நுணுக்கமாக எடுத்துக் கூறியுள்ளதைச் சிந்திக்காவிட்டால் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய நேரிடும். நிலை இரண்டு, அனுபவம் ஒன்று கலைஞானம், மெய்ஞ்ஞ்ானம் என்பவற்றை இறையருளால் ஒரே கணத்தில் பெற்று, ஞான வடிவினராய் வாழ்ந்த காழிப்பிள்ளையாரைக் கூற வந்த சேக்கிழார், "ஞானத்தின் திருஉருவை நான்மறையின் * ^ - 、 ... * * - தனித்துணையை" (பெ. பு-263) என்று பாடுகிறார். கலைஞானம், மெய்ஞ்ஞானம் என்பவை ஓரளவு அறிவின் துணைகொண்டு பெறவேண்டியவை ஆகும். காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 309 இவை இரண்டாலும் எந்த இறை அனுபவத்தைப் பெற முடியுமோ அதே இறை அனுபவத்தை இவை இரண்டின் உதவி இல்லாமல் அன்பின் துணை கொண்டு அடைய முடியும் என்பதை விளக்கவே கண்ணப்பர்புராணம் விரிவாகப் பாடப்பெற்றது. அறிவின் துணை கொண்டு ஆண்டவனை வழிபட்ட சிவகோசரியார், இறைவனைக் காண இயலவில்லை. அறிவின் துணையே இல்லாமல், உணர்வின் துணை ஒன்றையே கொண்டு குடுமித் தேவரை வழிபட்ட திண்ணனார் ஆறாவது நாளில் இறையோடு கலந்தார் என்பதைக் கூறுவதன்மூலம் இந்நாட்டினர் கண்ட பக்தி மார்க்கத்தின் சிறப்பைக் காட்டுகிறார் சேக்கிழார். * , , திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர், ஒரு சில அடியார்களுக்கு அடைமொழி தந்து அவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இரண்டு நம் கவனத்தை ஈர்ப்பனவாகும். தண்டிஅடிகள் என்ற பெயரைக் கேட்டவுடன் இவர் பிறவிக் குருடர் என்ற எண்ணம் நம் மனத்தில் தோன்றும். அவரைக் குறிக்க வந்த சுந்தரர், நாட்டமிகு தண்டி’ என்று கூறுகிறார். நாட்டம் என்ற சொல் புறக்கண் பார்வை, அகக்கண் பார்வை என்ற இரண்டையும் குறிக்கும். அடுத்த படியாக பரம்பரை முழுவதும் கல்வி வாசனையே இல்லாத - கண்ணப்பரை குறிக்கும்பொழுது கலை மலிந்த சீர் நம்பி 310 சேக்கிழார் தந்த செல்வம் கண்ணப்பன்' என்று கூறுவது நம் சிந்தனையைத் தூண்டுவதாகும். கல்வி வாசனையே இல்லாத ஒருவரை கலைமலிந்தவர் என்று கூறுவது பொருந்துமா? இத்தகைய ஒரு வினா நம் மனத்தில் தோன்றுவது போல தெய்வச் சேக்கிழார் மனத்திலும் தோன்றி இருக்க வேண்டும். - நம்மைப் போன்ற சாதாரண மனிதராக இல்லாமல் இறையருள் பெற்றவராக சேக்கிழார் இருந்தமையின் சுந்தரமூர்த்தி ". சுவாமிகளின் 'கலைமலிந்த என்ற சொற்றொடர்க்கு அவரால் பொருள் காண முடிந்தது. இதனைச் சற்று சிந்திப்பது பயனுடையதாகும். கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப்பெறினும் அவற்றுள் மிக இன்றியமையாத சிறப்புடன் விளங்குவது கல்விக் கலையாகும். இக்கலைகளை கற்பதன் நோக்கம் யாது?. கல்வி முதலிய கலைகள் அவற்றைப் பெற்றிருப்பவர்க்கு சிறப்பையும், புகழையும் நல் வாழ்வையும் தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. சிறப்பாக கல்விக்கலை இவற்றை எல்லாம் தருகின்றது என்பதில் ஐயமில்லை. - - இவற்றை அல்லாமல் இக்கல்விக்கலை வேறு பயன் எதனையேனும் தருகின்றதா என்ற வினாவை எழுப்பினால் ஒரு விடை கிடைக்கும். இதனை திருநாவுக்கரசர் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பின்வருமாறு விளக்கமாக கூறுகிறார். - காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 311 பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கு வித்தார். - (பெ. பு-1290) இதன்படி நிறைந்த பொருளைச் செலவழித்துக் கலை பயின்றார் என்று கூறுகிறார். அவ்வாறு கூறும் பொழுது கலைஞானத்திற்கு ஈடு இணையற்ற முறையில் ஓர் இலக்கணம் வகுக்கிறார் சேக்கிழார். சேக்கிழார் கருத்துபடி கலைஞானமானது, புலன் கொளுவ-அறிவை கருவியாகப் பற்றிக் கொண்டு, மனம் முகிழ்த்த சுருள்-விரிவடையாமல் சுருண்டு தன்னைத் தானே பற்றி நிற்கின்ற மனத்தை அச்சுருள் நீங்குமாறு செய்து விரிவடையச் செய்யும் கலை பயின்றார் என்று கூறுகின்றார். உணர்வுக்கு இடமான மனத்தில் கலைஞானம் தொடக்கத்தில் இடம் பெறுவதில்லை. எல்லாக் கலைகளும் அறிவின் மூலம் பல்கால் பயின்று பெறப்படுவன ஆதலின், 'புலன் கொளுவ’ என்றார் கவிஞர். அவரவர் அறிவின் சிறப்பிற்கும், கூர்மைக்கும் ஏற்ப ஒரே முறையிலோ, பல முறையிலோ பயின்று பெறப்படுவது கலைஞானம், அதனால் தான் புலன் கொளுவ என்றார். -. இனி, இவ்வறிவின் வேறுபட்டு உணர்வுக்கு இடமாய் இருக்கும் மனம் மனிதர்களைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் விரிவடைவதில்லை. காரணம் 312 சேக்கிழார் தந்த செல்வம் அகங்கார, மமகாரங்களின் அடிப்படையில் தோன்றும் தன்னல உணர்வுகள் மனத்திடை இருத்தலின் அம்மனம் விரிவடையாமல் சுருண்டு விடுகிறது. இம் மனம் சுருள் நீங்கி முகிழ்க்க வேண்டுமேயானால் تواناییه இரண்டு வகையில் பெறப்படும். ஒரு வகை, உவமையிலா கலை ஞானத்தைப் பெற்று மனம் விரிவடைதலாகும். இந்த நிலையில் ஒன்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கலைஞானம் பெற்றவர்கள் எல்லாம் மனச்சுருள் நீக்கி மனவிரிவடைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. இப்படிப்பட்டவர்களிடத்தில் கலை தான் செய்ய வேண்டிய பணியைச் செய்யவில்லை என்று தான் கூறவேண்டும். இதனைத் தான் வான்மறை தந்த பேராசான், கற்றதனால் ஆய பயன் என்கொல்’ என்று கூறுகிறார். கலையின் உண்மையான பயன் மனச்சுருள் நீக்க வேண்டும். இவ்வாறு கூறுவதால் கலையின் பயன் என்ன என்பதை தெய்வச் சேக்கிழார் நன்கு வலியுறுத்துகிறார். நாவுக்கரசரை பொறுத்தவரை பல்லாண்டுகள் அறிதின் முயன்று, பலகலைகளையும் கற்று, மனம் விரிவடையாமல் பல காலம் கழித்து பின்னர் அவ்விரிவைப் பெற்றார். அவ்வாறு பெற்ற நிலையில் தான், ஒதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவனட . * : * * (திருமுறை: 4-93-17) என்று பாட முடிந்தது. காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 313 கலையின் பயன் என்ன என்பதை ஒருவாறு அறிந்து விட்டோம். கலையின் பயன் உணர்வுகளுக்கு இடமாகிய மனம் விரிவடைந்து உலகில் உள்ள அனைத்தையும் ஒன்றாக காணும் சமதிருஷ்டி பெறுவதே கலைஞானம் தரவேண்டிய பயனாகும் என்பது புலனாயிற்று. இந்தப் பயனை கலைஞானத்தின் மூலம் பெறலாம் என்பது முதல் வழி என்று கூறினோம். இவ்வழியில் சென்று இதனைப் பெற்றவர்கள் நாவரசர் போன்றவர்கள். - இதன் மறுதலையாக, அறிவின் துணை கொண்டு கலைகளைக் கற்று இப்பயனை பெறாமல், தொடக்கத்திலேயே இப்பயனைப் பெற். ஒரு சிலர் உலகிடை உண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சர், இயேசுநாதர், திருஞானசம்பந்தர், கண்ணப்பர் முதலானவர்கள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். கலைஞானத்தில் உதவி இல்லாமலேயே மனம் முகழ்த்த அருள் நீங்கப் பெற்றவர்கள் இப் பெருமக்கள். இவ்வாறு பெறுவது ஒரு சில பெருமக்களுக்கு முடிந்தது என்பதைக் கூற வந்த சேக்கிழார், திருஞானசம்பந்தர் புராணத்தில் இதனை விவரிக்கின்றார். உவமை இலாக்கலைஞானம் உணர்வு அறிய

- மெய்ஞ்ஞானம்

தவம்முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்”

(பெ. பு-1973)

இப்பாடலின் படி பார்த்தால், உவமை இலாக் கலை ஞானமும், அதன் பயனாக மனத்திடை தோன்றுகின்ற உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒரே வினாடியில் காழிப்பிள்ளையாருக்கு கிடைத்தது என்று கூறுகிறார். இவை அறிவின் துணை கொண்டு கற்றுத் தேர்ந்தமையால் கிடைத்தது அன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே, ‘தாம் உணர்ந்தார்’ என்று மனத்தின் செயலாக இதனைக் கூறுகிறார் கவிஞர்.

இதுவரை கூறியவற்றால், உண்மையான கலை ஞானம் இறை அடி போற்றும் மெய்ஞ்ஞானத்தை தரும் இயல்புடையது என்பதை அறிகிறோம். கலை ஞானத்தின் பயனாக உள்ள மெய்ஞ்ஞானத்தை ஒருவர் பெற்று விட்டார் என்றால், ஒன்று கலைகளைப் பயின்று அதனைப் பெற்றிருக்க வேண்டும். இன்றேல், கலைகளைப் பயிலாமலேயே, இறை அருளால் இம்மெய்ஞ்ஞானத்தை உணர்ந்து இருக்க வேண்டும். கண்ணப்பர் இந்த வகையைச் சேர்ந்தவர் ஆதலால், ‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’ என்று கூறுகிறார் சேக்கிழார்.