சேக்கிழார் தந்த செல்வம்/சேக்கிழாரின் தனித்துவம்
திறவு கோல்கள் : இரண்டு பாடல்கள்
ஏனைய காப்பியப் புலவர்கட்கு வாய்த்தது போல், தனி ஒருவருடைய வரலாற்றைப் பாடும் வாய்ப்புச் சேக்கிழாருக்கு இல்லை. பலருடைய வரலாற்றைப் பாட வேண்டிய சூழ்நிலை இருந்தமையின் ‘தொண்டு’ என்ற ஒரு பண்பைக் காப்பியத்திற்குத் தலைமையாக வைக்கின்றார். அதன் பிறகு, தொண்டு பல வகைப்படும் ஆதலால், ஒவ்வொரு வகையான தொண்டை மேற்கொண்டவர்களுடைய வரலாறுகளை ஒன்றாக இணைக்கிறார். தனித் தனியாகப் பார்க்குமிடத்து, இவர்கள் செய்த பணிகள் பல வகைப்படுமேனும், அவை அனைத்தும் தொண்டு என்ற பொதுத் தலைப்பில் அடங்கி விடுவதைக் காணலாம். அவருடைய காப்பியத்தின் கட்டுக்கோப்பு இவ்வாறு அமைய வேண்டும் என்று முடிவு செய்தவுடன், பல்வேறு பணிகளைச் செய்த இந்த வரலாற்று நாயகர்களிடம் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூற விரும்புகிறார். சுந்தரர் உள்ளிட்ட இவ் அடியார்கள் பொதுத் தன்மை பற்றி ஒரு கூட்டமாக வைத்துப் பேசப்படலாம் என்பதை அறிந்தார் சேக்கிழார். எனவே, இவர்களுடைய பொதுத் தன்மையைக் கூறும் பகுதிக்குத் “திருக்கூட்டச் சிறப்பு” என்று பெயரிட்டார். அதிலுள்ள பதினொரு 50 சேக்கிழார் தந்த செல்வம் பாடல்களில் இரண்டு பாடல்கள் மிக முக்கிய மானவை. சேக்கிழாரையும் பெரியபுராணத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த இரண்டு பாடல்களும் திறவுகோல்களாகும். அவை வருமாறு: கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்; (பெ. பு-143) ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார் ஈர அன்பினர், யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ ? (பெ. பு-144) இப்பாடல்களில் உலக மக்களிடை வாழ்ந்தும், தனித்துவம் பெற்று விளங்கும் இவர்கள் என்ன தனித்துவத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாகச் சொல்கிறார், சேக்கிழார். வறுமை கேடு), செல்வம் (ஆக்கம்) - இரண்டும் இல்லையேனும் மனநிறைவு, அமைதி என்பவற்றை நிறைவாகப் பெற்றுள்ள இவர்களைச் செல்வர்கள் (திருவினார்) - என்று கூறுகிறார், சேக்கிழார். இந்த மனநிலை எவ்வாறு வந்தது என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல சேக்கிழாரின் தனித்துவம் 51 அடுத்த அடியைப் பாடுகிறார். இது மண்ஒடு, இது செம்பொன் என்ற வேறுபாடு அவர்கள் மனத்தில் பதியாமையால் இரண்டையும் ஒன்றாகவே பார்க்கின்றார்கள் என்று கூறுகின்றார். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டு, பொன்னை மதியாமல் ஒதுக்கிவிடுகின்ற மனநிலை வேறு. சேக்கிழார் இங்கே சொல்லியது அதுவன்று. ஒக்கவே நோக்குவார்’ என்றதால்-இவை இரண்டிடையும் உள்ள வேறுபாடு அவர்கள் கண்ணிலும் மனத்திலும் படவேயில்லை என்று கூறுவதால் சமதிருஷ்டி என்று சொல்லப்படும் ஒரு மனநிலையை அடைந்துவிட்டவர்கள் என்பதை அறிவிக்கிறார். உலகத்தில் பிறந்து வாழும் இவர்கள் ஒட்டையும் செம்பொன்னையும் வேறுபாடு தெரியாமல் பார்க்கின்றார்கள் என்றால், இவர்கள் எந்த அடிப்படையில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற வினாத் தோன்றும். பொன்னால் வரும் மகிழ்ச்சியும் வறுமையால் வரும் துன்பமும் இவர்கள் பால் இல்லையென்றால் வாழ்க்கையில் வேறு ஏதோ ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும், அதற்காகவே இவர்கள் வாழ்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தவுடன் அந்தக் குறிக்கோள் யாது என்று சேக்கிழார் கூறுகிறார். மோட்சம் என்று சொல்லப்படும் வீடுபேற்றைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நெஞ்சுரம் படைத்த இவர்கள் வாழ்க்கையின் 52 சேக்கிழார் தந்த செல்வம் குறிக்கோள் யாது? அது "கூடும் அன்பினில் கும்பிடுவதே" ஆகும். இவர்களைப் பொறுத்தவரை மானிடப்பிறவி துயரம் தருவதோ வெறுக்கத் தகுந்ததோ அன்று. இந்தப் பிறவி இருப்பதால்தான் கும்பிட முடிகிறது. ஏனையோர் இறைவனைக் கும்பிட்டு உலக இன்பங்களையும் வீடுபேற்றையும் பெற விரும்புவர். இக்கூட்டத்தார் கும்பிடுவதற்குப் பயனாக வீடுபேற்றைக்கூட விரும்பு வதில்லை. கும்பிடுவதன் பயன், இன்னும் கும்பிடுவதே ஆகும். இந்த ஒரு பாடலின்மூலம் இத்திருக் கூட்டத்தினர் நம்மிடையே வாழ்ந்தாலும் நம்மிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பதைக் கூறி விட்டார், சேக்கிழார். அப்படியானால் இவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு? அதற்கு விட்ையாகத்தான், அடுத்த பாடலைக் கூறுகிறார். இத் திருக்கூட்டத்தாரை அடையாளம் கண்டுகொள்ள இரண்டு நிலைகளைக் கூறுகிறார் சேக்கிழார். இவர்களுடைய புறத்தோற்றம் எளிமையானது. கழுத்தில் அக்கமணி மாலை, இடுப்பில் ஒரு கந்தை: இது புறத்தோற்றம். இனி அவர்களுடைய உள்ளத்தில் புகுந்து பார்த்தால் ஈர அன்பு நிறைந்திருப்பதைக் காணலாம். இந்த அன்பு இறைவன்மாட்டும், அவன் படைப்புகளாகிய உயிர்கள்மாட்டும் செலுத்தப்படுவ தாகும். உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஈர அன்பு எப்படி வெளிப்படுகின்றது தெரியுமா? ஈசன் பணி சேக்கிழாரின் தனித்துவம் 53 செய்வது தவிர, வேறு ஒன்றையும் இவர்கள் செய்வது இல்லை. ஈசன் பணி என்ற தொடர் ஈசனுக்குப் பணி என்றும், ஈசனால் இடப்பட்ட பணி என்றும் விரியும். ஈசனுக்குப் பணி என்று நான்காம் வேற்றுமை விரியும்பொழுது திருக்கோயிலுக்குச் செய்யும் பணியைக் குறிக்கும். திருக்கோயில் பணி என்று கூறியவுடன் மக்கள் தொடர்பில்லாப் பணி என்று நினைத்துவிட வேண்டா. மக்கள் பலரும் கூடுகின்ற இடம் திருக்கோயில் ஆதலால் அங்குச் செய்யும் பணி மறைமுகமாக மக்களுக்குச் செய்யும் பணியாகவே முடிகிறது. ‘. . . இனி, ஈசனால் இடப்பட்ட பணி என்று மூன்றாம் வேற்றுமை விரியும்பொழுது அது நேரிடையாக மக்களுக்குச் செய்யும் பணி என்று விரிகிறது. இம் மக்கட்பணியை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை "அத்தர் வேண்டி’ (பெ.பு-140) என்று தொடங்கும் பாடலில், "கைத் திருத்தொண்டு செய் கடப்பாட்டினார்’ என்று விளக்கமாகவே சேக்கிழார் கூறிவிடுகிறார். எனவே, இத்தொண்டர்கள் தாம் செய்யும் மக்கள் தொண்டையும் ஈசன் பணி என்று கருதியே செய்கின்றனர். பணி செய்வதைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார் 'ஈசன் பணி’ என்றும், அதனைச் செய்பவர் ஈர அன்பினர்’ என்றும், கூடும் அன்பினில் கும்பிடுபவர்’ 54ஆ சேக்கிழார் தந்த செல்வம் என்றும் கூறுவதில் ஒர் ஆழமான தத்துவம் அடங்கி யிருப்பதை அறிதல் வேண்டும். மக்கள் தொண்டு செய்ய முற்படுவோர்க்கு இறையன்பு அவசியமா? இறையுணர்வில்லாதவர்கள் மக்கள் தொண்டில் ஈடுபட முடியாதா என்ற வினாவை எழுப்பினால் ஒர் உண்மை அறிய முடியும். இறையன்பு இல்லா தவர்கள் தொண்டு செய்கையில் அவர்களையும் அறியாமல் நாம் செய்கிறோம், நம்முடைய பணி இல்லாவிட்டால் இந்த மக்கள் பெருந்துன்பம் அடைவர் என்ற எண்ணம் தலைதூக்கத்தான் செய்யும். அந்த அகங்காரம் வெளிக்காட்டப்படா விட்டாலும், அத்தொண்டைப் பெறுவோர் மனத்தில் ஒர் ஆதங்கத்தை விளைத்தே தீரும். இறையன்பில்லா தவர்கள் தொண்டில் இந்த நான் தலைநிமிர்ந்து நிற்பதைத் தவிர்க்கவே முடியாது. இறையன்பு மனத்தில் நிறையும்பொழுது யாருக்குத் தொண்டு செய்கிறோம் என்ற வினாவே எழுவது இல்லை. இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கட்குத் தொண்டு செய்கிறோம் என்ற நினைவு வந்தவுடன் அந்த நான்’ மறைந்தேவிடுகிறது. இந்த உண்மையை வெளிப் படுத்தவே, இறையன்போடு கூடிய தொண்டைச் சேக்கிழார் வலியுறுத்திப் பேசுகிறார். 'கைத் திருத்தொண்டு செய் கடப் பாட்டினார் என்று கூறுவதால் இந்த அடியார்கள் மக்கள் தொண்டைத் தம் கடமையாகவே கருதினர் என்று பெறப்படும். ஒருவர் தம் கடமையைச் செய்யும்பொழுது அதில் சேக்கிழாரின் தனித்துவம் - 55 பெருமையோ கர்வமோ அடைய நியாயமே இல்லை. ஆகவே, இறைவன் இட்ட பணி என்று கருதிய தாலும், கடமை என்று கருதியதாலும் மக்கள் தொண்டு இயல்பாகவே அவர்களிடம் அமைந்து விட்டது. இந்த அடியார்களிடம் மேற்கூறிய பண்புகளுடன் வள்ளுவர் கூறும் மற்றொரு பண்பும் நிறைந்திருந்தது என அறிகிறோம். வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை, யாண்டும் அஃதொப்பது இல்’ • , . * . . ; - (குறள்-363) என்ற குறளில் கூறியபடி வேண்டாமை ஆகிய செல்வம் இவர்களிடம் நிறைந்திருந்தது. அதனையே "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார் என்பதையும் அறிதல் வேண்டும். அடியவரிடம் சேக்கிழார் ஈடுபாடு ஏன்? நூற்றுக்கணக்கான திருக்கோயில்களைக் கட்டி, ஆயிரக்கணக்கான காணி நிலங்களை அத்திருக் கோயில்கட்கு இறையிலியாகத் தந்த சோழப் பரம்பரையினரின் வரலாற்றை நன்கு அறிந்திருந்த சேக்கிழார், கந்தை உடுத்திய இந்த அடியார்களிடம் எதனைக் கண்டு ஈடுபட்டார்? அவர் காலத்திய 56 சேக்கிழார் தந்த செல்வம் கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபட்டனர். அக் கூட்டத்தினரையும் பக்தர்கள் என்றுதான் சமுதாயம் கூறிற்று. இவற்றையெல்லாம் கண்டிருந்தும் சோழர்கள் மேலோ நாட்டுமாந்தர் மேலோ ஏற்படாத ஒரு பெரும் ஈடுபாடு அல்லது பக்தி இவர்களிடம் சேக்கிழாருக்கு எப்படி வந்தது: பல அடியார்கள் வரலாற்றில் அவர்கள் கோயிலுக்குச் சென்றதாகக்கூடக் கதை இல்லை. அப்படி இருந்தும் சேக்கிழார் அவர்களிடம் ஏன் ஈடுபட்டார்? இந்த அடியார்களிடம் ஆடம்பரமற்ற, எளிய வாழ்வு, வேண்டுதல் வேண்டாமை கடந்த நிலை, குறிக்கோள் வாழ்க்கை, இறையன்பு, தொண்டு மனப்பான்மை ஆகிய பண்புகள் ஒட்டுமொத்தமாகக் காணப்பெற்றமையின் சேக்கிழார் இவர்களிடம் ஈடுபட்டார். . - இவர்களிடம் இறைவன் வந்தான் இவர்களைப் பொறுத்தவரை மற்றோர் அதிசயமும் இவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது. இவர்கள் யாரும் இறைவனைத் தேடிச் சென்றதாக ஒரு வரலாறுமி ல்லை. அதற்குப் பதிலாக, ஆனாயர் முதல் அத்தனை அடியார்களையும் தேடிக்கொண்டு இறைவன் வந்ததாகத்தான் இவர்கள் வரலாறு பேசுகிறது. உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன்ை நாடிச் செல்கின்றன; இன்றவனோ இவர்களை நர்டி சேக்கிழாரின் தனித்துவம் 57 வருகின்றான். அப்படி வரும்பொழுதும் தன்னுடைய இறைவடிவைக் காட்டியிருந்தால் இறைவன் என்று அறிந்ததால் இவர்கள் பெருந்தியாகங்களைப் புரிந்தனர் என்று சொல்லலாம். அப்படியுமில்லை. மானுட வடிவில், இன்னும் சொல்லப்போனால் காண்போர் சட்டை செய்யவிரும்பாத கிழட்டு ஏழை வடிவம் தாங்கியே இறைவன் இவர்களிடம் 'வருகிறான். அப்படிப்பட்டவர்களைச் சந்தித்தால் நம் போன்றவர் மனத்தில் ஒரு அலட்சிய பாவம் தோன்றுவது இயல்பு. அப்படி இல்லாமல், எதிரே உள்ள கிழட்டு மானிட வடிவிடம் எல்லையற்ற அன்பும் மரியாதையும் காட்டினார்கள் இந்த அடியார்கள். இன்னும் கூறப்போனால், வந்தவர் கோபத்தை விளைக்கக்கூடிய செயல்களைச் செய்தாலும் நம்பி ஆரூரர் திருமண நிகழ்ச்சி, திருநீலகண்டர், அமர்நீதியார், சிறுத்தொண்டர், இயற்பகையார் என்பவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்) இந்த அடியார்கள் ஒரு சிறிதும் மனங்கோணாமல் தொண்டு செய்வதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் தம் தொண்டினைச் செய்வதல்லாமல், இறைவனை அடையவேண்டுமென்று அவனை நாடிச் செல்ல வில்லை. தன்னலம் அற்ற இவர்கள் தொண்டாலும், குறிக்கோள் வாழ்க்கையாலும், இறை பக்தியாலும் ஈர்க்கப்பட்ட இறைவன் இவர்களை நாடி வருகிறான் என்பது இந்த அடியார்களின் வாழ்க்கையில் காணப்பெறும் தனிச் சிறப்பாகும். இதுவும் சேக்கிழார் 58 சேக்கிழார் தந்த செல்வம் மனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர் இக்காப்பியத்தைப் பாட முன் வந்ததற்கு, இதுவும் ஒரு பெருங்காரணமாகும். சேக்கிழாரின் தனிச் சிறப்பு? அடியார்கள் என்று அழைக்கப்படும் இத்திருக் கூட்டத்துப் பட்டியலைத்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் பதிகத்தில் தந்தார். அந்தப் பதிகத்தின் தனிச் சிறப்பைச் சேக்கிழார் தவிர வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கொரு காரணமும் உண்டு என்று நினைக்கலாம். எந்த ஒரு சுவையை நாம் அனுபவிக்க வேண்டு மென்றாலும் அந்தச் சுவை, அனுபவிக்கின்றவர் மனத்தில் ஒரு சிறிதாவது இருத்தல் வேண்டும். வீரம், நகை, காதல் முதலிய ᏭᎦ©ᏈᎧ☾al ᏧᏠ5óᏡ}öᎢ அனுபவிக்கின்றவர்கள் அந்தச் சுவையின் ஒரு பகுதியை முன்னரே பெற்றிருத்தல் வேண்டும். அழுகைச் சுவைக்குரிய ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதைப் பார்ப்பவர் அனைவரும் ஒரே மாதிரியாக அதில் அழுந்திவிடுவதில்லை. ஒரு சிலர் அதில் ஈடுபட்டுக் கோவென்று கதறி அழுவர். ஒரு சிலர் அதனால் எவ்விதப் பாதிப்புமில்லாமல் கல்லாய்ச் சமைந்திருப்பர். இந்த நாயன்மார்கள் வரலாற்றில் ஆணிவேராக இருக்கும் இறையன்பு (பக்தி)ச் சுவையில் ஈடுபட எல்லாக் கவிஞருக்கும் சேக்கிழாரின் தனித்துவம் 59 இயன்றிருக்காது. சேக்கிழார் ஒருவருக்குமட்டுமே அச்சுவையில் ஈடுபடும் தனித்தன்மை இருந்ததால் தான், இந்த உதிரி வரலாறுகள் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய சேக்கிழார் பிள்ளைத்தமிழில் பக்திச் சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவர் என்று கூறுகிறார். உவமைகள் உள்ளத்தைக் காட்டும் ஒரு கவிஞன் உவமை கூறும்பொழுது அவன் உள்ளத்தில் எந்தவொன்று மிகுந்திருக்கிறதோ அந்த அடிப்படையிலேயே அவன் உவமைகள் அமையும். ஒரு கவிஞன் பயன்படுத்திய உவமைகளையெல்லாம் ஒன்றாய்த் தொகுத்துப் பார்த்தால் அவனுடைய மனத்தில் எந்த ஒன்று அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை அறியமுடியும். உதாரணத்திற்காக ஒன்றை இங்கே காணலாம். 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்கதேவர் தலையாய கவிஞருள் ஒருவர். தமிழின் மிகச்சிறந்த காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணி இயற்றியவர் அவர் அக் கவிஞர் பெருமகனார் மிகச் சாதாரணமாக நாம் அன்றாடம் கானும் நெற்பயிரின் வளர்ச்சியைப் { fot) உவமைகளோடு ஒரே பாடலில் பாடியுள்ளார். 60 சேக்கிழார் தந்த செல்வம் "சொல் அருஞ்துல் பசும்பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' (சீவக சிந்தாமணி - 53) என்ற மிக அற்புதமான இப்பாடலில் நெற்பயிர் சூல் கொண்டு இருந்ததற்குப், பச்சைப்பாம்பு சூல் கொண்டு இருத்தலையும், பால் பிடிக்காத கருக்காய்க் கதிர்கள் தலையைத் துரக்கிக்கொண்டு நிற்பதற்கு அற்பர்கள் கையில் செல்வம் வந்தால் அவர்கள் தலையைத் துரக்கிக்கொண்டு நிற்பதையும், பால் பிடித்து மணி நிரம்பிய கதிர்கள் வளைந்து தொங்குவதற்குக், கல்வி நிறைந்த அறிஞர்கள் தலை வணங்கி இருப்பதையும் உவமைகளாகக் கையாள்கிறார். நெய்தற்கலியில் வரும் "தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம் துஞ்ச' (கலித்-19) என்ற உவமைதான் தேவர் பெருமான் கையில் பட்டு, இன்னும் வளர்ச்சி அடைந்து, மெருகேறி மேலே காட்டிய பாடலாக வெளிப்படுகிறது. தேவர் பெருமான் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சேக்கிழாரோ 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எனவே, திருத்தக்க தேவருடைய இந்த அற்புதக் கவிதையில் ஈடுபட்டு இந்த உவமையைத் தாமும் மேற்கொள்ள விரும்புகிறார். முற்றிய நெற்கதிர்கள் தலை வளைந்து இருப்பது எக்காலத்தும் நிகழ்வ தாகும். எனவே, இதைக் கூறவந்த சேக்கிழார் சேக்கிழாரின் தனித்துவம் 61 தேவரின் உவமையைச் சிறிது மாற்றி, நெற் கதிர்கள் மணி பிடிப்பதற்கு முன் தலை நிமிர்ந்து விரிந்து நிற்பதற்கு, "--அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன: கதிர்கள் எல்லாம்” (பெ. பு-7) என்றும், முற்றிய கதிர்கள் வளைந்து நிற்பதற்கு, "பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல்’’ (பெ.பு-72) என்றும் உவமை கூறுவது அவரது மனத்தில் மேலோங்கி நின்ற பக்திச்சுவைக்கு எடுத்துக் காட்டாகும். . சேக்கிழார் தமக்கு முன்னர் இருந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் துறைபோகக் கற்றுள்ளார் என்பதையும் அறிதல் வேண்டும். சிந்தாமணி சமண நூல்; ஆதலால் அதனைப் புறக்கணித்தார் என்று சேக்கிழார் புராணம் பாடிய பிற்காலப் புலவர் அறியாமை நகைப்பிற்கு உரிய தாகும். 9ம் நூற்றாண்டில் தோன்றிய கம்பனுடைய இராம காதையையும் 10ம் நூற்றாண்டில் தோன்றிய திருத்தக்கதேவரின் சிந்தாமணியையும் சேக்கிழார் நன்கு பயின்றுள்ளார் என்பதையும் அவர்கள் 62 சேக்கிழார் தந்த செல்வம் இருவருக்கும் பிற்பட்டுத் தோன்றியமையின் அவர்களைப் பின்பற்றி அவர்கள் கூறிய உவமைகள் முதலியவற்றையும் அழகுபடுத்துகிறார் என்பதையும் அறியவேண்டும். தேவரின் ஓர் gł.6}}{o) isłóð) of J எவ்வாறு சேக்கிழார் பயன்படுத்தினார் என்று மேலே கண்டோம். அதே போலக் கம்பநாடனுடைய உவமையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று காண்போம். அயோத்தியில் ஒடும் சரயு நதிபற்றிப் பேசவந்த கம்பன், சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ் உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்” - (கம்ப-23) என்று பாடுகிறான். இந்த உவமையில் ஈடுபட்ட சேக்கிழார் அதில் உள்ள குறையையும் காண்கிறார். சரயு என்பது ஜீவநதி, ஆண்டு முழுவதும் நீர்வற்றாமல் நிறைந்து ஒடும் நதியாகும் அது. இதனைத் தாய் முலைக்கு ஒப்பிடுவதில் ஒரு குறை ஏற்படுகிறது. குழந்தை தாயின் முலையில் வாய் வைத்துக் குடிக்கும்பொழுதுதான் பால் சுரக்குமே தவிர, சாதாரண நிலையில் பால் வெளிவருவது இல்லை; என்றாலும், மிக அற்புதமான உவமையாகும் இது. இந்தக் குறையை நீக்கி, இதே உவமையைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார். தொண்டை நாட்டில் காஞ்சியை அடுத்து ஒடும் பாலாற்றைத் திருக்குறிப்புத் சேக்கிழாரின் தனித்துவம் 63 தொண்டர் வரலாற்றில் வருணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பாலாற்றைப் பொறுத்த மட்டில் ஆண்டில் பெரும்பகுதி நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும். ஆனாலும் பாலாற்றுப் படுகையில் வேளாண்மை நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. வேளாளர்கள் தேவைப்படும்பொழுது பாலாற்று மணலைப் பறித்து, ஊற்று உண்டாக்கி அத் தண்ணிரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். கம்பன் உவமையில் உள்ள குறையைப் போக்கி, அதே உவமையைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார். பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கை வருட வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப் பள்ளநீள் வயல் பரு மடை உடைப்பது-பாலி (பெ. பு -104) 'பிள்ளை, முலையில் வாய் வைத்துக் குடிக்கத் தொடங்கியவுடன், தாய்க்குப் பால் பெருகுவது போல், வேளாளர்கள் தேவைப்படும்பொழுது பாலாற்றின் மணலைப் பறித்து, ஊற்று உண்டாக்கிய வுடன் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது என்பதே இப்பாடலின் பொருளாகும். காவிரியை வருணிக்கவந்த கவிஞர் அது மலையில் தோன்றி நாட்டிடைப் புகுந்து பல்வேறு வளங்களை உண்டாக்குதலால், “ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது” (பெ. பு-56) என்று உவமை கூறியது மேலே 64 சேக்கிழார் தந்த செல்வம் சொன்ன கருத்தை வலியுறுத்தும். இதைவிடச் சிறப்பான ஒர் இடமும் உண்டு. கண்ணப்பர் வேட்டையாடுவதை வருணிக்கவந்த கவிஞர், அற்புத மான ஓர் உவமையைக் கையாளுகிறார். வேட்டை யாடுபவர்கள் மிகப் பெரிய வலையை அகன்ற இடத்தைச் சுற்றிவளைத்துக் கட்டிவிடுவார்கள். வலைக்கு வெளியே வேட்டை நாய்களைச் சிறு இடைவெளி விட்டு நிறுத்தி விடுவார்கள். பிறகு, பறை முதலிய ஓசைகளை எழுப்பி, செடிகளிடையே பதுங்கியிருக்கும் விலங்குகளை வெருட்டுவார்கள். வெருண்டோடும் விலங்குகள், வலையில் மாட்டிக் கொள்ளும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மிருகங்கள் வலையின்மேல் எம்பிக் குதித்துத் தப்பித்துக்கொள்ள முயலும். அப்படித் தப்ப முயலும் விலங்குகளை அங்கு நிற்கும் வேட்டை நாய்கள் கவ்வி இழுத்துவிடும். வேட்டையாடும் இம் முறையை வருணிக்க வந்த கவிஞர், அருமையான ஒர் உவமையைக் கையாள்கிறார். "பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலை அற I560)P LDT உலமொடு படர்வண்தகைஉற, உறுசினமொடு - கவர்நாய்: நிலவியஇரு வினைவலியிடை நிலைசுழல்பவர்
- ... ." ... . . நெறிசேர் புலன் உறுமணன் இடைதடை செய்த பொறிகளின்
அளவு உளவே.' (பெ. பு-734) சேக்கிழாரின் தனித்துவம் 65 இதில் விவரிக்கப்பட்ட உவமையைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். ஆன்மாக்கள் நல்வினை, தீவினை என்ற இரு வலைகளுக்குள் அகப்பட்டு மீள முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த இரு வலை களையும் தாண்டியே தீரவேண்டும் என்ற முனைப்போடு ஒரு சில ஆன்மாக்கள் வீடு பெறும் நெறியை அறிந்து இவ்வலைகளை எம்பித் தாண்டியோ, அறுத்துக்கொண்டோ முன்னேற முற்படும். அப்படித் தாண்டிச் செல்லும் உயிர்களை மனம் என்ற வேடன், ஐம்பொறிகள் என்னும் வேட்டை நாய்களைச் சுற்றி நிற்கவைத்து விடுகின்றானாம். வினை வலையில் இருந்து தப்பி வெளியே வந்த இந்த ஆன்மாவை, ஐம்பொறிகள் என்னும் வேட்டை நாய்களுள் ஏதாவது ஒரு பொறி இந்த ஆன்மாவைப் பிடித்து இழுத்து மேலே செல்ல விடாமல் தடுத்து விடுகின்றதாம். இதுவே 3,4ம் அடிகளில் சொல்லப் பட்ட உவமையாகும். சேக்கிழாரின் இந்த உவமையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள, குறள் உரையாசிரியராகிய பரிமேலழகர் உதவி புரிகின்றார். குறளில் துறவு என்ற அதிகாரம் 35வது அதிகாரமாகும். துறவு என்பது அனைத்தையும் துறந்துவிடுதலாகும். அதனைக் கூறி முடித்த பின்பு 37வது அதிகாரமாக அவாவறுத்தல் என்ற அதிகாரம் காணப்படுகிறது. முழுத் துறவுக்குப் பின் அவா எங்ங்ணம் ஏற்படும்? இது பொருத்தமாக இல்லையே என்று ஐயுறுவார்க்கு இவ்வதிகாரப் 66 சேக்கிழார் தந்த செல்வம் பொருத்தத்தை விளக்கவந்த பரிமேலழகர் "அவா வறுத்தலாவது சஞ்சிதம் ஆகாமியம் முன்னும் பின்னும் வினைத் தொடர்பறுத்தார்க்கு நடுவுநின்ற உட்ம்பும் அது கொண்ட வினைப் பயன்களும் (பிராரத்துவம்) நின்றமையின், அதுபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே, அந்நினைவும் அவிச்சையெனப் பிறவிக்கு வித்தாமாகலின், அதனை இடைவிடாத மெய்ப்பொருள் உணர்வால் அறுத்தல்.’’ என்று கூறி முடிக்கிறார். எத்துணை உயர்ந்த ஞானிகளும் ஒரோவழிப் புலன் உணர்வால் அவதிப்படுதலை விசுவாமித்திரர் வரலாறு போன்றவை நமக்கு அறிவுறுத்துகின்றன. இத்துணைச் சிறப்பையும், "நிலவிய இருவினைவலையிடை' என்று தொடங்கும் உவமையில் சேக்கிழார் பெருமான் வைத்துக் காட்டியது ஈடு இணையற்றதாகும். இது போன்ற நூற்றுக் கணக்கான உவமைகளைப் பயன் படுத்திக் காப்பியம் அமைத்துள்ளார் தெய்வப்புலவர் சேக்கிழார். அதிகம் புனைந்துரையாமை உலக மொழிகளில் உள்ள பெரும்பாலான காப்பியங்கள் உயர்வுநவிற்சி அணியை மிகுதியாகக் கையாண்டுள்ளன. கற்பவர் மனத்தில் ஒரு கருத்தை ஆழமாகப் பதிப்பதற்குக் கவிஞர்கள் உயர்வுநவிற்சி அணியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வகையில் சேக்கிழாரின் தனித்துவம் . 67 கூடச் சேக்கிழார் ஓரளவு மாறுபட்டு நிற்கின்றார். பெருநகரங்களை வருணிக்கும்பொழுது விண்ணை முட்டும் மாளிகை, ஆடல் பாடல் நிறைந்த தெருக்கள் என்று பாடுவதில் தவறில்லை. ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் வாழும் பகுதியை வருணிக்கும் பகுதிகளில்கூடக் காப்பியக் கலைஞர்கள் உயர்வுநவிற்சி அணியைப் பயன்படுத்துவதைக் காணலாம். இதன் மறுதலையாக, மேட்டுக்குடி மக்கள், நடுத்தர வகுப்பினர், வறுமையில் வாழ்பவர் என்ற மூன்று வகையினரையும் பாட வேண்டிய சூழ்நிலை சேக்கிழாருக்கு இருந்தது. புகழ்ச்சோழ மன்னன் வாழ்ந்த உறையூர், கருவூர், நெடுமாறன் வாழ்ந்த மதுரை என்பவற்றை வருணிக்கையில் அந்நகரங்களை உயர்வுநவிற்சி அணியோடு வருணிப்பதைக் காணலாம். அமர்நீதியார், திருநீலகண்டர், ஏனாதி நாதர் என்ற நடுத்தர வகுப்பினரை வருணிக்கையில் அவரது பொருளாதார நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ளும் முறையில் பாடிச்செல்வதைக் காணலாம். ஓரளவு வறுமையில் வாழ்ந்த திருக்குறிப்புத் தொண்டர், அதிபத்தர், கணம் புல்லர், குங்கிலியக்கலயர் ஆகியோரைப்பற்றிக் கூறும் பொழுது வறுமைதான் என்றாலும் ஓரளவு தாங்கிக் கொள்ளக் கூடிய வறுமைநிலை வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகிறார். 68 சேக்கிழார் தந்த செல்வம் வறுமைமட்டு மல்லாமல் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் வாழும் திருநாளைப்போவார் போன்றவர்கள் வாழ்க்கையை வருணிக்கும்பொழுது மிக அற்புதமாக அதை விளக்குவதைக் காணலாம். அமைச்சராக வாழ்ந்த இவர், அரிசனர் வாழும் சேரியில் பலகாலம் வாழ்ந்து அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தவர்போலப் பாடுவது இவரது நுண்மாண் துழைபுலத்திற்குத் தகுந்த எடுத்துக்காட்டாகும். திருநாளைப்போவார் வாழ்ந்த ஆதனுர், தற்காலத்தில் காணப்படும் ஒரு சிறு நகரம் போன்றதாகும். வேளாண்மையை நம்பி வாழும் நடுத்தர வர்க்கத் தினரும், வசதி படைத்தவரும் வாழ்கின்ற ஊர் என்று கூறவந்த சேக்கிழார், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பாடல்களில் அவ்வூரின் இயற்கை வளத்தையும், வேளாண் வளத்தையும் மிக அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார். இவ்வளவு வளம் நிறைந்த ஊரில் வாழும் மேட்டுக்குடி மக்கள் உறைகின்ற வீடுகளைப் பற்றிக் கூறவந்த கவிஞர், புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் அயல் இடை வேறுஅடி நெருங்கக் குடிநெருங்கி உளது அவ்வூர் (பெயு-1050) என்று பாடுகிறார். சேக்கிழாரின் தனித்துவம் 69 இவ்வளவு விரிவாகப் பொருட்செல்வம் மிகுந்த மக்கள் வாழும் பகுதியைக் கூறிவிட்டு, அடுத்த நான்கு பாடல்களில் அரிசனமக்கள் வாழும் பகுதியை இதேபோல விரிவாகப் பாடுகிறார். புலைப் பாடி என்று அழைக்கப்படும் அப்பகுதிகளில் புயல் தழுவும் மாடங்களுக்குப் பதிலாக, வைக்கோலால் வேயப்பட்ட கூரைகளோடுகூடிய சிறு குடில்கள் நிறைந்துள்ளன என்றும், அக் கூரைகளின் மேல் சுரைக்கொடி படர்ந்து காய்கள் காய்க்கின்றன என்றும் பாடுவதோடு அங்கு வாழும் மக்கள் வாழ்க்கையையும், அவர்கள் வறுமையையும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுவதன்மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார். கூர்உகிர்மெல் அடி அளகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் வார் பயில்முன் றிலில் நின்ற வள் உகிர்நாய்த் துள்ளுபறழ் கார் இரும்பின் சுரி செறி கைக் கருஞ் சிறார் கவர்ந்துஒட, ஆர்சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி . (பெயு-1052) என்ற இப்பாடலில் ஓர் அற்புதமான காட்சி வர்ணிக்கப்படுகிறது. குடிசைகளின் அணித்தே நாய் ஒன்று பல குட்டிகளை ஈன்றுள்ளது. சேரியில் உள்ள இளஞ்சிறார்கள் இந்த அழகிய நாய்க் குட்டிகளை 70 சேக்கிழார் தந்த செல்வம் எடுத்துக்கொண்டு விளையாடுவதற்காக ஒடுகிறார்கள். தாயைப் பிரிந்த குட்டி கண் திறவாப் பருவமாதலின் தன் மெல்லிய குரலால் குரைக்கின்றது. ஆனால், இந்தக் குட்டிகளின் மெல்லிய குரல் வேறு எங்கும் கேட்காதவாறு, இந்தச் சிறார்கள் இடையில் கட்டியுள்ள மெல்லிய இரும்புச் சலங்கைகள் பெரிய ஒலி எழுப்பி அந்த நாய்க்குட்டியின் குரலை அமுக்கி விடுகின்றனவாம். அடுத்த பாடலில், புலைப்பாடிப் பெண்கள் குடிசைக்குள் தொட்டில் கட்ட முடியாமையால் அடுத்து வளர்ந்துள்ள மருத மரத்துக் கிளைகளில் தொட்டில் கட்டிக் குழந்தைகளை உறங்க வைக்கின்றனர். கோழிகள் முட்டையிட்டு அடை காக்க வசதியாகப் பெரிய பானைகள் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன. மாமரங்களில் இவர்களது இரண்டாவது தொழிலாகிய பறை, முரசம் என்ப வற்றிற்குப் பதனிட்ட தோலைக் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். சேக்கிழார் இங்குப் பாட வந்தது திருநாளைப் போவார் வரலாற்றையே ஆகும். அவர் வாழ்ந்தது ஆதனுரரை அடுத்துள்ள இச்சேரிப் பகுதியே ஆகும். இதை வருணிப்பது வரலாற்றுக்குத் தேவையான ஒன்றாகும். ஆனால், முதல் ஐந்து பாடல்களில் ஆதனூரில் மற்றொரு பகுதியில் வாழும் வளம் நிறைந்த மேட்டுக்குடி மக்கள் மாடங்களை வருணிக்க சேக்கிழாரின் தனித்துவம் - 71 வேண்டிய தேவை என்ன? மேலாகப் பார்ப்பவர்க்கு ஊரின் பல பகுதிகளையும் வருணித்தல் இயல்பே என்று தோன்றும். இவ்வாறு பல கவிஞர்கள் பாடியுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால், இப்புராணம் பாடியவர் தெய்வப்புலவர் சேக்கிழார் என்பதையும், தொண்டர்தம் பெருமை கூற வந்தவர் என்பதையும் மனத்துட் கொண்டு பார்த்தால் ஏதோ ஒன்றை நினைவூட்டவே சேக்கிழார் இவ்விரண்டு பகுதிகளையும் அடுத்தடுத்து வருணிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும், வாழ்க்கையில் எவ்விதக் கவலையுமின்றி அனைத்துச் செல்வங் களையும் பெற்று வாழும் இம் மேட்டுக்குடி மக்கள் வேறு கவலையின்மையால் தம் பெருங்கவனத்தை இறைவனிடத்தும் இறைத் தொண்டிலும் செலுத்தும் வாய்ப்பும் வசதியும் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. - இதனெதிராக அன்றாடம் வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதற்கேகூட நாள் முழுதும் உழைக்க வேண்டிய இன்றியமையாமை உடைய மக்கள் வாழும் சேரியில் முழுநேர இறையன்பர் நந்தனார் வாழ்கின்றார். இவ்விரண்டு பகுதிகளையும் வருணிப்பதன் மூலம் சமுதாயத்திற்கு ஒரு பாடம் புகட்டுகிறார் சேக்கிழார். இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் இறைத் தொண்டு, மக்கள் தொண்டு. என்பவற்றில் ஈடுபடுவதற்கும் வாழ்க்கை வசதியோ செல்வமோ தேவையில்லை என்று கூறவருகிறார் சேக்கிழார். 72 சேக்கிழார் தந்த செல்வம் இன்னுங் கூறப்போனால் செல்வம் நிறைந்த வாழ்க்கை ஒரு சிலரைத்தவிரப் பெரும்பாலானவர் களுக்கு ஆன்ம முன்னேற்றம் கிட்டாமல் செய்து விடும் பெருந்தடையாகவே உள்ளது என்பதையும் சேக்கிழார் குறிப்பாகக் காட்டுகிறார். சேரியின் வருணனையை இயல்பு நவிற்சி என்று ஒதுக்கிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தால் மேலே கூறிய உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். இப் பகுதியில் வாழ்ந்த நந்தனார், வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் உழைத்தாலொழிய இரவுக் கஞ்சிக்கு வழியில்லை என்று சொல்லும் நிலையில் வாழ்ந்தவர். பகல் முழுதும் கருவிகளுக்குத் தோலைக் கிழித்து வார் கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருடல் இத்தொழிலில் பகல் முழுதும் ஈடுபட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் மனம் எங்கே இருந்தது என்பதைக் கூறவந்த சேக்கிழார், இங்ங்னம் பாடுகிறார்: பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக்கண்ணிப் பெருந்தகையால் சிறந்த பெருங் காதலினால் செம்மைபுரி சிந்தையராய் மறந்தும் அயல்நினைவு இன்றி, வருபிறப்பின் வழிவந்த அறம்புரி கொள்கையராயே அடித் தொண்டின் நெறி நின்றார். )6 اسلام --O57( சேக்கிழாரின் தனித்துவம் 73 இக் காலத்தில் நம்மில் பலரும் வயிற்றுப் பாட்டைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. இதில் இறையன்பு செய்வதற்கும், தொண்டு செய்வதற்கும் நேரமெங்கே. என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்கு அறிவு புகட்ட வந்த சேக்கிழார் ஆதனுர் மேட்டுக்குடி மக்களையும் புலைப்பாடி நந்தனையும் அடுத்தடுத்து வைத்துக் காட்டுவதன்மூலம் நாம் இன்று கூறும் சமாதானம் எவ்வளவு தவறானது என்பதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கூறுவதால் வறுமை வாழ்க்கை வாழ்ந்தால் தான் இறையன்பு கொள்ளமுடியும் என்று நினைத்து விட்டால் அதுவும் தவறு என்பதை வேறு சில வரலாறுகளில் வைத்துக் காட்டுவார் சேக்கிழார். மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டை ஆண்ட மன்னராவார். பெருஞ் செல்வத்தில் வாழ்ந்த அவர் இறையன்பிலும் அடியவர் பணியிலும் தலைநின்றவர் ஆவார். அவருடைய செல்வம், அரச வாழ்க்கை என்பவை அவருடைய இறையன்பிற்குக் குறுக்கே நிற்கவில்லை என்பதைக் கூறவந்த சேக்கிழார், தேடிய ம்ாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று (பெயு-47) கருதி வாழ்ந்தார் என்று பாடுகிறார். பெரு வணிகராகிய அமர்நீதியார் செல்வத்திற்கு அளவே இல்லை என்பதை, 74 சேக்கிழார் தந்த செல்வம் மன்னும் அப்பதி வணிகர்தம் குலத்தினில் வந்தார்; பொன்னும் முத்தும் நன்மணிகளும் பூந்துகில் முதலா எந்நிலத்தினும் உள்ளன. வருவளத்து இயல்பால், அந்நிலைக்கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் - (பெபு-503) என்ற பாடலில் கவிஞர் தெரிவிக்கின்றார். இவ்விரண்டு வரலாறுகளாலும் பெருஞ்செல்வம் படைத்திருப்பது இறையன்பு செய்வதற்கும் தொண்டு செய்வதற்கும் தடையாக நிற்கும் என்று நினைப்பதும் பெரும் தவறாகும் என்பதைக் கூறிவிட்டார். நந்தனாரின் வறுமையோ அமர்நீதியின் செல்வமோ அவர்கள் இருவருடைய இறையன்புக்கும், ஆன்ம முன்னேற்றத்திற்கும் தடையாக நிற்கவில்லை என்பதை மிகச் சிறப்பாகக் கவிஞர் எடுத்துக் காட்டியுள்ளார். . r மனிதனாகப் பிறந்த ஒருவன் இறையன்பு பெறுவதற்கும் ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்கும், மக்கள் தொண்டில் ஈடுபடுவதற்கும் அவனுடைய சாதி, குலம், குடிப்பிறப்பு, வறுமை, செல்வம், பதவி, அதிகாரம், சூழ்நிலை என்பவை எக்காலத்திலும் எந்நிலையிலும் எக்காரணத்துக்காகவும் தடையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என்பதைத் தெய்வச் சேக்கிழாரைப்போல அறுதி யிட்டுக் கூறியவர்கள் வேறுயாருமில்லை. அவருடைய தனித்துவங்களில் இது ஒரு முக்கிய மானப் பகுதியாகும். சமுதாயப் பார்வை : இந்நூலின் நோக்கம் இதுவரை, சேக்கிழார்பற்றிப் பொதுவாகக் கூறிவந்த சிறப்புக்களை இத்துடன் நிறுத்தி, அவர் பாடிய நூலுள் சில வரலாறுகளை எடுத்துக் கொண்டு விளக்கமாகக் காண்பதே இந்நூலின் நோக்கமாகும். 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவன். என்றாலும், அந்தப் பக்திச் சுவையை எடுத்துக்காட்டுவது இந்நூலின் நோக்கமன்று. இங்குக் காணப்போகும் வரலாறுகள், எந்த அளவு அன்றைய சமுதாயத்திற்கும் இன்றைய சமுதாயத்திற்கும் நாளை வரப்போகும் சமுதாயத்திற்கும் சிறந்த பாடங்களாக அமையும் என்பதைக் காண்பதே நம் நோக்கமாகும். சைவத் திருமுறைகளில், பன்னிரண்டாவது திருமுறை என்று வைக்கப்பெற்றுப் பூசனைக்குரியதாகச் சைவப் பெருமக்கள் கருதும் ஒரு நூலை-அதில் உள்ள வரலாறுகளைச் சமுதாயப் பார்வையில் ஆராய்வது முறையா, தேவையா என்று சிலர் நினைக்கக்கூடும். அவர்கட்கு ஒரு வார்த்தை சைவ சமயத்தின் பெருமையை உணர்த்துவதற்கும் பக்திச் சுவை ஊட்டுவதற்கும் தேவார, திருவாசகம் என்பவை உள்ளன. பக்திச் சுவை ஊட்ட திருவாசகம் ஒன்றே பேர்துமானது. எனவே, அவற்றை வலியுறுத்தப் பெரியபுராணத்தையும் அழைக்க வேண்டிய தேவை யில்லை. பெரியபுராணத்தில் பக்திச் Ꭶ6üᎧᏊaᏗ வழிந்தோடுவதைப், புறச்சமயத்தார்கூட மறுக்க மாட்டார்கள். என்றாலும், அச்சுவையின் சிறப்பை உணர்த்தப் பெரியபுராணத்தைச் சேக்கிழார் பாடவில்லை என்பதை அறிதல் வேண்டும். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டு நின்ற இத்தமிழ்ச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தி, அவர்கள் வாழ்க்கையில் தொண்டு, குறிக்கோள் என்ற கால்களின் உதவியால் தமிழ்ச் சமுதாயம் நடை போட வேண்டும் என்பதற்காகவே, சேக்கிழார் இந்நூலை இயற்றினார் என்பதை அறிந்து கொண்டால், 20ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல, 24ஆம் நூற்றாண்டில் கூட, இந்நூல் மக்கள் சமுதாயத்திற்குத் தேவைப்படும் என்பதை அறிய வேண்டும். அதனை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.
அடுத்து, மனுநீதிச் சோழன், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார், கண்ணப்பர், திருநீல கண்டர் என்பவர்களின் வரலாறுகள் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஆராயப் பெறுகின்றன.
இவ்வாறு காண்பதால், இந்நூலின் பக்திச் சுவையையோ, கவிதைச் சிறப்பையோ, கற்பனை வளத்தையோ குறைத்து மதிப்பிடுவதா என்று யாரும் நினைய வேண்டா. மேலே கண்ட பல்வேறு அணுகுமுறையில், சேக்கிழாரை ஆராயலாமேனும், சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இந்நூலின் நோக்கம் ஆகும்.
※※※※※