தண்டியலங்காரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆசிரியர்: பெரும்புலவர் தண்டி[தொகு]

தண்டியலங்காரம்[தொகு]

(தமிழ் அணி இலக்கணநூல்)


1. பொதுவணியியல்[தொகு]

நூற்பா: 01 (சொல்லின் கிழத்தி)

சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சொல்லின் கிழத்தி மெல் இயல் இணை அடி
சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.(01) சிந்தை வைத்து இயம்புவன் செய்யுட்கு அணியே. (01)

நூற்பா:02 (செய்யுளென்பவை)

செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் செய்யுள் என்பவை தெரிவு உற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென (01) முத்தகம் குளகம் தொகை தொடர்நிலை என
வெத்திறத் தனவு மீரிரண் டாகும் (02) எத்திறத்தனவும் ஈர் இரண்டு ஆகும்.(02)

நூற்பா:03 (அவற்றுள்)

அவற்றுள், அவற்றுள்
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும் (03) முத்தகச் செய்யுள் தனி நின்று முடியும் (03)

நூற்பா:04 (குளகம்)

குளகம் பலபாட் டொருவினை கொள்ளும் (03) (01) குளகம் பல பாட்டு ஒரு வினை கொள்ளும். (04)

நூற்பா:05 (தொகைநிலைச்)

தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறி தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
னொருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் (01) ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்> பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும்
பாட்டினு மளவினுங் கூட்டிய வாகும். (05) (01) பாட்டினும் அளவினும் கூட்டிய ஆகும். (05)

நூற்பா:06 (பொருளினுஞ்)

பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை (06) பொருளினும் சொல்லினும் இரு வகை தொடர்நிலை (06)

நூற்பா:07 (பெருங்காப்பிய)

பெருங்காப் பியமே காப்பிய மென்றாங் (01) பெருங்காப்பியமே காப்பியம் என்று ஆங்கு
கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே (07) இரண்டாய் இயலும் பொருள்தொடர்நிலையே (07)

நூற்பா:08 (அவற்றுள், பெருங்)

அவற்றுள், அவற்றுள்,
பெருங்காப் பியநிலை பேசுங் காலை பெரும் காப்பிய நிலை பேசும் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன் வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
றேற்புடைத் தாகி முன்வர வியன்று ஏற்புடைத்து ஆகி முன் வர இயன்று
நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் நாற்பொருள் பயக்கும் நடை நெறித்து ஆகித்
தன்னிக ரில்லாத் தலைனை யுடைத்தாய் தன் நிகர் இல்லாத் தலைவைன உடைத்தாய்
மலைகட னாடு வளநகர் பருவ மலை கடல் நாடு வள நகர் பருவம்
மிருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் நல் மணம் புணர்தல் பொன் முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் பூம் பொழில் நுகர்தல் புனல் விளையாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் தேன் பிழி மதுக் களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் புலவியில் புலத்தல் கலவியில் களித்தல் என்று
றின்னன புனைந்த நன்னடைத் தாகி இன்னன புனைந்த நல் நடைத்து ஆகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி மந்திரம் தூது செலவு இகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப. (08) கற்றோர் புனையும் பெற்றியது என்ப. (08)

நூற்பா:09 (கூறிய)

கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும் கூறிய உறுப்பில் சில குறைந்து இயலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர் (09) (01) வேறுபாடு இன்று என விளம்பினர் புலவர். (09)

நூற்பா:10 (அறமுத )

அறமுத னான்கினுங் குறைபா டுடையது அறம் முதல் நான்கினும் குறைபாடு உடையது
காப்பிய மென்று கருதப் படுமே (10) (01) காப்பியம் என்று கருதப்படுமே (10)

$$[தொகு]

நூற்பா:11 (அவைதாம்,ஒருதிறப் )

அவைதா, அவைதாம்,
மொருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினு (01) ஒரு திறப் பாட்டினும் பல திறப் பாட்டினும்
முரையும் பாடையும் விரவியும் வருமே. (11) (01) உரையும் பாடையும் விரவியும் வருமே. (11)

நூற்பா:12 (செய்யுளந்தாதி)

செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே (12) செய்யுள் அந்தாதி சொல் தொடர் நிலையே (12)

நூற்பா:13 (மெய்பெறு )

மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு (01) மெய் பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கௌட மென்றாங் வைதருப்பம்மே கௌடம் என்று ஆங்கு
கெய்திய நெறிதா மிருவகைப் படுமே (13) (01) எய்திய நெறி தாம் இரு வகைப்படுமே (13)

நூற்பா:14 (செறிவே) )

செறிவே தெளிவே சமநிலை யின்ப செறிவே தெளிவே சம நிலை இன்பம்
மொழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை (01) ஒழுகு இசை உதாரம் உயத்தல் இல் பொருண்மை
காந்தம் வலியே சமாதி யென்றாங் (01) காந்தம் வலியே சமாதி என்று ஆங்கு
காய்ந்த வீரைங் குணனு முயிரா ஆய்ந்த ஈர் ஐங் குணனும் உயிரா
வாய்ந்த வென்ப வைதருப்பம்மே (14) (01) வாய்ந்த என்ப வைதருப்பம்மே (14)

நூற்பா:15 (கௌடமென்ப )

கௌட மென்பது கருதிய பத்தொடுங் கௌடம் என்பது கருதிய பத்தொடும்
கூடா தியலுங் கொள்கைத் தென்ப (15) (01) கூடாது இயலும் கொள்கைத்து என்ப (15)

நூற்பா:16 (செறிவெனப் )

செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை (16) செறிவு எனப்படுவது நெகிழ் இசை இன்மை (16)

நூற்பா:17 (தெளிவெனப் )

தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே (17) (01) தெளிவு எனப்படுவது பொருள் புலப்பாடே (17)

நூற்பா:18 ( விரவத்)

விரவத் தொடுப்பது சமநிலை யாகும் (18) (01) விரவத் தொடுப்பது சம நிலை ஆகும் (18)

நூற்பா:19 ( சொல்லினும்)

சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம் (19) சொல்லினும் பொருளினும் சுவை படல் இன்பம் (19)

நூற்பா:20 (ஒழுகிசை )

ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை (20) (01) ஒழுகு இசை என்பது வெறுத்திசை இன்மை (20)

நூற்பா:21 ( உதார)

உதார மென்ப தோதிய செய்யுளிற் உதாரம் எனபது ஓதிய செய்யுளில்
குறிப்பி னொருபொரு ணெறிப்படத் தோன்றல் (21) (01) குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல் (21)

நூற்பா:22 (கருதிய )

கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற் கருதிய பொருளைத் தெரிவு உற விரித்தற்கு
குரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை (22) (01) உரிய சொல் உடையது உய்த்தல் இல் பொருண்மை (22)

நூற்பா:23 (உலகொழுக் )

உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம் (23) உலக ஒழுக்கு இறவாது உயர் புகழ் காந்தம் (23)

நூற்பா:24 (வலியெனப் )

வலியெனப் படுவது தொகைமிக வருதல் (24) (01) வலி எனப்படுவது தொகை மிக வருதல் (24)

நூற்பா:25 (உரிய )

உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற் (01) உரிய பொருள் இன்றி ஒப்பு உடைப் பொருள் மேல்
றரும்வினை புணர்ப்பது சமாதி யாகும் (25) தரும் வினை புணர்ப்பது சமாதி ஆகும் (25)

நூற்பா:26 (ஏற்ற )

ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம் (01) ஏற்ற செய்யுட்கு இயன்ற அணி எலாம்
முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற் முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையின்
காட்டிய நடைநெறி கடைப்பிடித் தவற்றொடு (01) காட்டிய நடை நெறி கடைப்பிடித்து அவற்றொடு
கூட்டி யுணர்த லான்றோர் கடனே (26) கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே (26)

முதலாவது பொதுவணியியல் சூத்திரம் 26


முதலாவது 'பொதுவணியியல்' முடிந்தது[தொகு]

பார்க்க: தண்டியலங்காரம் தண்டியலங்காரம்-பொருளணியியல் தண்டியலங்காரம்-சொல்லணியியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=தண்டியலங்காரம்&oldid=1401650" இருந்து மீள்விக்கப்பட்டது