தண்டியலங்காரம்-பொருளணியியல்
ஆசிரியர்: பெரும்புலவர் தண்டி
[தொகு]தண்டியலங்காரம்
[தொகு](தமிழ் அணி இலக்கணநூல்)
2. பொருளணியியல்
[தொகு]நூற்பா:27 (என்னை )
- என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கு என்னை உடையாள் கலை மடந்தை எவ் உயிர்க்கும்
- மன்னை யுடைய வடித்தளிர்க - ளின்னளிசூழ் (01) அன்னை உடைய அடித் தளிர்கள் - இன் அளி சூழ்
- மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா (01) மெல் மலர்க்கே கன்றும் என உரைப்பர் மெய் இலா
- வன்மனத்தே தங்குமோ வந்து (01) வல் மனத்தே தங்குமோ வந்து (01)
நூற்பா:28 ( தன்மை)
- தன்மை யுவமை யுருவகந் தீவகம் (01) தன்மை1 உவமை2 உருவகம்3 தீவகம்4
- பின்வரு நிலையே முன்ன விலக்கே பின் வரு நிலையே5 முன்ன விலக்கே6
- வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை (01) வேற்றுப் பொருள் வைப்பே7 வேற்றுமை8 விபாவனை9
- யொட்டே யதிசயந் தற்குறிப் பேற்ற ஒட்டே10 அதிசயம்11 தன் குறிப்பு ஏற்றம்12
- மேது நுட்ப மிலேச நிரனிறை ஏது13 நுட்பம்14 இலேசம்15 நிரல் நிறை16
யார்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை ஆர்வம் மொழி17 சுவை18 தன் மேம்பாட்டு உரை19
- பரியா யம்மே சமாயித முதாத்த பரியாயம்மே20 சமாயிதம்21 உதாத்தம்22
- மரிதுண ரவநுதி சிலேடை விசேட அரிது உணர் அவநுதி23 சிலேடை24 விசேடம்25
- மொப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம் ஒப்புமைக் கூட்டம்26 மெய்ப்படு விரோதம்27
- மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி (01) மாறுபடு புகழ்நிலை28 புகழாப் புகழ்ச்சி29
- நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே நிதரிசனம்30 புணர்நிலை31 பரிவருத்தனை32யே
- வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை (01) வாழ்த்தொடு33 சங்கீரணம்34 பாவிகம்35 இவை
- யேற்ற செய்யுட் கணியே ழைந்தே (02) ஏற்ற செய்யுட்கு அணி ஏழ் ஐந்தே (02)
நூற்பா:29(எவ்வகைப் )
- எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் (01) எவ் வகைப் பொருளும் மெய் வகை விளக்கும்
- சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் (03) சொல் முறை தொடுப்பது தன்மை ஆகும் (03)
நூற்பா:30 (அதுவேபொருள் )
- அதுவே, அதுவே,
- பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம் (04) (01) பொருள் குணம் சாதி தொழிலொடு புலன் ஆம் (04)
நூற்பா:31 (பண்புந் )
- பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றி பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
- னொன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
- தொப்புமை தோன்றச் செப்புவ துவமை (05) ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (05)
நூற்பா:32 (அதுவே,விரியே )
- அதுவே,
- விரியே தொகையே யிதர விதர (01) விரியே தொகையே இதர விதரம்
- முரைபெறு சமுச்சய முண்மை மறுபொருள் உரைபெறு சமுச்சயம் உண்மை மறு பொருள்
- புகழ்த னிந்தை நியம மநியம புகழ்தல் நிந்தை நியமம் அநியமம்
- மையந் தெரிதரு தேற்ற மின்சொ ஐயம் தெரி தரு தேற்றம் இன் சொல்
- லெய்திய விபரீத மியம்புதல் வேட்கை எய்திய விபரீதம் இயம்புதல் வேட்கை
- பலபொருள் விகார மோக மபூதம் பல பொருள் விகாரம் மோகம் அபூதம்
- பலவயிற் போலி யொருவயிற் போலி பல வயின் போலி ஒரு வயின் போலி
- கூடா வுவமை பொதுநீங் குவமை கூடா உவமை பொது நீங்கு உவமை
- மாலை யென்னும் பால தாகும் (06) மாலை என்னும் பாலது ஆகும் (06)
நூற்பா:33 (அற்புதஞ்)
- அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோத அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்</>
- மொப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம் ஒப்புமைக் கூட்டம் தற்குறிப்பேற்றம்
- விலக்கே யேதுவென வேண்டவும் படுமே (07) விலக்கே ஏது என வேண்டவும் படுமே (07)
நூற்பா:34 (மிகுதலுங் )
- மிகுதலுங் குறைதலுந் தாழ்தலு முயர்தலும் மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும்
- பான்மாறு படுதலும் பாகுபா டுடைய (08) பால் மாறுபடுதலும் பாகுபாடு உடைய (08)
நூற்பா:35 (போலமானப்)
- போல மானப் புரையப் பொருள போல மானப் புரையப் பொருள
- நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப
- வேர வேய மலைய வியைய ஏர ஏய மலைய இயைய
- வொப்ப வெள்ள வுறழ வேற்ப ஒப்ப எள்ள உறழ ஏற்ப>
- வன்ன வனைய வமர வாங்க அன்ன அனைய அமர ஆங்க
- வென்ன விகல விழைய வெதிரத் என்ன இகல இழைய எதிரத்
- துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ துணை தூக்கு ஆண்டு ஆங்கு மிகுதகை வீழ
- விணைசிவண் கேழற்றுச் செத்தொடு பிறவு இணை சிவண் கேழ் அற்றுச் செத்தொடு பிறவும்
- நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே (09) நவை தீர் பான்மை உவமைச் சொல்லே (09)
நூற்பா:36 (உவமையும் )
- உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
- தொன்றென மாட்டினஃ துருவக மாகும் (10) ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும் (10)
நூற்பா:37 (தொகையே )
- தொகையே விரியே தொகைவிரி யெனாஅ தொகையே விரியே தொகைவிரி எனாஅ
- யியைபே யியைபிலி வியநிலை யெனாஅச் இயைபே இயைபிலி வியநிலை எனாஅ
- சிறப்பே விரூபகஞ் சமாதான மெனாஅ சிறப்பே விரூபகம் சமாதானம் எனாஅ
- வுருவக மேக மநேகாங் மெனாஅ உருவகம் ஏகம் அநேகாங்கம் எனாஅ
- முற்றே யவயவ மவயவி யெனாஅச் முற்றே அவயவம் அவயவி எனாஅச்
- சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே (11) சொற்ற ஐம் மூன்றும் மற்று அதன் விரியே (11)
நூற்பா:38 (உவமை )
- உவமை யேது வேற்றுமை விலக்கே உவமை ஏது வேற்றுமை விலக்கே
- யவநுதி சிலேடையென் றவற்றொடும் வருமே (12) அவநுதி சிலேடை என்று அவற்றொடும் வருமே (12)
நூற்பா:39 ( உருவக)
- உருவக முவமை யெனவிரு திறத்தவும் உருவகம் உவமை என இரு திறத்தவும்
நிரம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற் நிரம்ப உணர்த்தும் வரம்பு தமக்கு இன்மையின்
- கூறிய நெறியின் வேறுபட வருபவை கூறிய நெறியின் வேறுபட வருபவை
- தேறினர் கோட றெள்ளியோர் கடனே (13) (01) தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே (13)
நூற்பா:40 (குணந்தொழில் )
- குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
- லொருவயி னின்றும் பலவயிற் பொருடரிற் ஒரு வயின் நின்றும் பல வயின் பொருள் தரின்
- றீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும் (14) தீவகம் செய்யுள் மூ இடத்து இயலும் (40)
நூற்பா:41 (அதுவே,மாலை )
- அதுவே, (01) அதுவே,
- மாலை விருத்த மொருபொருள் சிலேடையென மாலை விருத்தம் ஒரு பொருள் சிலேடை என
- நால்வகை யானு நடைபெறு மென்ப (15) நால் வகையானும் நடைபெறும் என்ப (15)
***
[தொகு]நூற்பா:42 ( முன்வருஞ்)
- முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் முன் வரும் சொல்லும் பொருளும் பல வயின்
- பின்வரு மென்னிற் பின்வரு நிலையே (16) பின் வரும் என்னின் பின் வரு நிலையே (16)
நூற்பா:43 ( முன்னத்தின்)
- முன்னத்தின் மறுப்பினது முன்ன விலக்கே முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
- மூவகைக் காலமு மேவிய தாகும் (17) மூ வகைக் காலமும் மேவியது ஆகும் (17)
நூற்பா:44 (அதுவே,பொருள் )
- அதுவே, அதுவே,
பொருள்குணங் காரணங் காரியம் புணரும் (18) பொருள் குணம் காரணம் காரியம் புணரும் (18)
நூற்பா:45 (வன்சொல் )
- வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி வன் சொல் வாழ்த்து தலைமை இகழ்ச்சி
- துணைசெயல் முயற்சி பரவச முபாயங் துணை செயல் முயற்சி பரவசம் உபாயம்
- கையற லுடன்படல் வெகுளி யிரங்க கையறல் உடன்படல் வெகுளி இரங்கல்
- லைய மென்றாங் கறிந்தனர் கொளலே (19) ஐயம் என்று ஆங்கு அறிந்தனர் கொளலே (19)
நூற்பா:46 (வேற்றுப்பொருள் )
- வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை வேற்றுப் பொருள் சிலேடை ஏது என்று இன்னவை
- மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும் (20) மேற்கூறு இயற்கையின் விளங்கித் தோன்றும் (20)
நூற்பா:47 ( முன்னொன்று)
- முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் முன் ஒன்று தொடங்கி மற்று அது முடித்தற்குப்
- பின்னொரு பொருளை யுலகறி பெற்றி பின் ஒரு பொருளை உலகு அறி பெற்றி
- யேற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே (21) ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே (21)
நூற்பா:48 (முழுவதுஞ் )
- முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் முழுவதும் சேறல்1 ஒரு வழிச் சேறல்2
- முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல் முரணித் தோன்றல்3 சிலேடையின் முடித்தல்4
- கூடா வியற்கை கூடு மியற்கை கூடா இயற்கை5 கூடும் இயற்கை6
- யிருமை யியற்கை விபரீதப் படுத்தலென் இருமை இயற்கை7 விபரீதப் படுத்தல்8என்று
- றின்னவை யெட்டு மதன தியல்பே (22) இன்னவை எட்டும் அதனது இயல்பே (22)
நூற்பா:49 (கூற்றினுங் )
கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் கூற்றினும் குறிப்பினும் ஒப்பு உடை இரு பொருள்
- வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே (23) வேற்றுமைப்பட வரின் வேற்றுமை அதுவே (49)
நூற்பா:50 (அதுவே,குணம் )
- அதுவே, அதுவே,
- குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும் (24) குணம் பொருள் சாதி தொழிலொடு புணரும் (24)
****
[தொகு]நூற்பா:51 ( உலகறி)
- உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி உலகு அறி காரணம் ஒழித்து ஒன்று உரைப்புழி
- வேறொரு காரண மியல்பு குறிப்பின் வேறு ஒரு காரணம் இயல்பு குறிப்பின்
- வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும் (25) வெளிப்பட உரைப்பது விபாவனை ஆகும் (25)
நூற்பா:52 (கருதிய )
- கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற் கருதிய பொருள் தொத்து? அது புலப்படுத்தற்கு
- கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென மொழிப (26) ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப (26)
நூற்பா:53 ( அதுவே,அடையும்)
அதுவே, அதுவே,
- அடையும் பொருளு மயல்பட மொழிதலு அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்1
- மடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும் அடை பொது ஆக்கி ஆங்ஙனம் மொழிதலும்2
- விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலு விரவத் தொடுத்தலும்3 விபரீதப் படுத்தலும்4
- மெனநால் வகையினு மியலு மென்ப (27) என நால் வகையினும் இயலும் என்ப (27)
நூற்பா:54 (மனப்படு )
- மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி மனப்படு ஒரு பொருள் வனப்பு வந்து உரைப்புழி
- யுலகுவரம் பிறவா நிலைமைத் தாகி உலகு வரம்பு இறவா நிலைமைத்து ஆகி
- யான்றோர் வியப்பத் தோன்றுவ ததிசயம் (28) ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம் (28)
நூற்பா:55 ( அதுதான்)
- அதுதான், அதுதான்,
- பொருள்குணந் தொழிலையந் துணிவே திரிபெனத் பொருள் குணம் தொழில் ஐயம் துணிவே திரிபு எனத்
- தெருளுறத் தோன்று நிலைமைய தென்ப (29) தெருள் உறத் தோன்றும் நிலைமைய (29)
நூற்பா:56 (பெயர்பொரு )
- பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினு பெயர் பொருள் அல் பொருள் என இரு பொருளினும்
- மியல்பின் விளைதிற னன்றி யயலொன்று இயல்பின் விளை திறன் அன்றி அயல் ஒன்று
- தான்குறித் தேற்றுத றற்குறிப் பேற்றம் (30) தான் குறித்து ஏற்றுதல் தன் குறிப்பு ஏற்றம் (30)
நூற்பா:57 (அன்னபோல )
- அன்ன போலெனு மவைமுத லாகிய அன்ன போல் எனும் அவை முதல் ஆகிய
- சொன்னிலை விளங்குந் தோற்றமு முடைத்தே (31) (01) சொல் நிலை விளங்கும் தோற்றம் உடைத்தே (31)
நூற்பா:58 (யாதன் )
- யாதன் றிறத்தினு மிதனினிது விளைந்தென் யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்து என்று
- றேதுவிதந் துரைப்ப தேது வதுதான் ஏது விதந்து உரைப்பது ஏது அதுதான்
- காரக ஞாபக மெனவிரு திறப்படும் (32) காரகம் ஞாபகம் என இரு திறப்படும் (32)
நூற்பா:59 ( முதல்வனும்)
- முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியு முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும்
- மேற்பது நீக்கமு மெனவிவை காரகம் (33) ஏற்பது நீக்கமும் என இவை காரகம் (33)
நூற்பா:60 (அவையல )
- அவையல பிறவி னறிவது ஞாபகம் (34) அவை அல பிறவின் அறிவது ஞாபகம் (34)
நூற்பா:61 ( அபாவந்)
- அபாவந் தானு மதன்பாற் படுமே (35) அபாவம் தானும் அதன் பால் படுமே (35)
நூற்பா:62 ( என்று)
- என்று மபாவமு மின்மைய தபாவமு என்றும் அபாவமும்1 இன்மையது அபாவமும்2
- னொன்றினொன் றபாவமு முள்ளத னபாவமு ஒன்றின் ஒன்று அபாவமும்3 உள்ளதன் அபாவமும்4
- மழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம் (36) அழிவு பாட்டு அபாவமும்5 என ஐந்து அபாவம் (36)
நூற்பா:63 (தூர )
- தூர காரியமு மொருங்குடன் றோற்றமுங் தூர காரியமும்1 ஒருங்குடன் தோற்றமும்2
- காரண முந்துறூஉங் காரிய நிலையும் காரணம் முந்து உறூஉம் காரியம் நிலையும்3
- யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும் (37) யுத்தமும்4 அயுத்தமும்5 முத்தையோடு இயலும்
##
[தொகு]நூற்பா:64 (தெரிபு )
- தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினு தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலுனும்
- மரிதுணர் வினைத்திற நுட்ப மாகும் (38) அரிது உணர் வினைத் திறம் நுட்பம் ஆகும் (38)
நூற்பா:65 (குறிப்பு )
- குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
- மறைத்துரை யாட லிலேச மாகும் (39) மறைத்து உரையாடல் இலேசம் ஆகும் (39)
நூற்பா:66 (புகழ்வது )
- புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் புகழ்வது போலப் பழித் திறம் புனைதலும்
- பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலு பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலும்
- மவையு மன்னதென் றறைகுந ருளரே (40) (01) அவையும் அன்னது என்று அறைகுநர் உளரே (40)
நூற்பா:67 ( நிரனிறுத்)
- நிரனிறுத் தியற்றுத னிரனிறை யணியே (41) நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை அணியே (41)
நூற்பா:68 (ஆர்வ )
- ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே (42) ஆர்வ மொழி மிகுப்பது ஆர்வ மொழியே (42)
நூற்பா:69 (உண்ணிகழ் )
- உண்ணிக டன்மை புறத்துத் தோன்ற உள் நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
- வெண்வகை மெய்ப்பாட்டி னியல்வது சுவையே (43) எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே (43)
நூற்பா:70 (அவைதாம்,வீர )
- அவைதாம், அவைதாம்,
- வீர மச்ச மிழிப்பொடு வியப்பே வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
- காம மவல முருத்திர நகையே (44) காமம் அவலம் உருத்திரம் நகையே (44)
நூற்பா:71 ( தான்றற்)
- தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை (45) தான் தன் புகழ்வது தன் மேம்பாட்டு உரை (45)
நூற்பா:72 ( கருதியது)
- கருதியது கிளவா தப்பொரு டோன்றற் கருதியது கிளவாது அப் பொருள் தோன்றல்
- பிரிதொன் றுரைப்பது பரியா யம்மே (46) (01) பிரி?து ஒன்று உரைப்பது பரியாயம்மே (46)
நூற்பா:73 (முந்துதான் )
- முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று முந்து தான் முயல்வுறூம் தொழில் பயன் பிறிது ஒன்று
- தந்ததா முடிப்பது சமாகித மாகும் (47) தந்ததாம் முடிப்பது சமாகிதம் ஆகும் (47)
நூற்பா:74 (வியத்தகு )
- வியத்தகு செல்வமு மேம்படு முன்னமு வியத்தகு செல்வமும் மேம்படு முன்னமும்
- முயர்ச்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும் (48) உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும் (48)
நூற்பா:75 (சிறப்பினும் )
- சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
- மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும் (49) மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும் (49)
நூற்பா:76 (ஒருவகைச் )
- ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி ஒரு வகைச் சொல் தொடர் பல பொருள் பெற்றி
- தெரிதர வருவது சிலேடை யாகும் (50) தெரிதர வருவது சிலேடை ஆகும் (50)
நூற்பா:77 (அதுவே,செம் )
- அதுவே, அதுவே,
- செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும் (51) செம்மொழி1 பிரிமொழி2 என இரு திறப்படும் (51)
நூற்பா:78 ( ஒருவினை)
- ஒருவினை பலவினை முரண்வினை நியமம் ஒருவினை1 பலவினை2முரண்வினை3நியமம்4
- நியம விலக்கு விரோத மவிரோத நியமம் விலக்கு5விரோதம்6அவிரோதம்7
- மெனவெழு வகையினு மியலு மென்ப (52) என எழுவகையினும் இயலும் என்ப (52)
நூற்பா:79 ( குணந்தொழின் )
- குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் குணம் தொழில் முதலிய குறைபடு தன்மையின்
- மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம் (53) மேம்பட ஒரு பொருள் விளம்புதல் விசேடம் (53)
நூற்பா:80 (கருதிய )
- கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் கருதிய குணத்தின் மிகு பொருள் உடன் வைத்து
- தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம் (54) ஒரு பொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம் (54)
நூற்பா:81 (புகழினும் )
- புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே (55) புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே (55)
நூற்பா:82 (மாறுபடு )
- மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை மாறுபடு சொல் பொருள் மாறுபாட்டு இயற்கை
- விளைவுதர வுரைப்பது விரோத மாகும் (56) விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும் (56)
நூற்பா:83 (கருதிய )
- கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு கருதிய பொருள் தொகுத்து ஆங்கு அது பழித்தற்கு
- வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை (57) வேறு ஒன்று புகழ்வது மாறுபடு புகழ் நிலை (57)
நூற்பா:84 (பழிப்பது )
- பழிப்பது போலும் பான்மையின் மேன்மை பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
- புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி (58) புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி (58)
நூற்பா:85 (ஒருவகை )
- ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப் ஒரு வகை நிகழ்வதற்கு ஒத்த பயன் பிறிதிற்குப்
- புகழ்மை தீமை யென்றிவை புலப்பட புகழ்மை தீமை என்று இவை புலப்பட
- நிகழ்வ தாயி னிதரிசன மதுவே (59) நிகழ்வது ஆயின் நிதரிசனம் அதுவே (59)
நூற்பா:86 (வினைபண்)
- வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே வினை பண்பு என இவை இரு பொருட்கு ஒன்றே
- புணர மொழிவது புணர்நிலை யாகும் (60) புணர மொழிவது புணர்நிலை ஆகும் (60)
நூற்பா:87 (பொருள்பரி)
- பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே (61) பொருள் பரிமாறுதல் பரிவருத்தனையே (61)
நூற்பா:88 (இன்னார்க்)
- இன்னார்க் கின்ன தியைக வென்றுதா இன்னார்க்கு இன்னது இயைக என்று தாம்
- முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப (62) முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப (62)
நூற்பா:89 (மொழியப்)
- மொழியப் பட்ட வணிபல தம்முட்> மொழியப் பட்ட அணி பல தம்முள்
- டழுவ வுரைப்பது சங்கீ ரணமே (63) தழுவ உரைப்பது சங்கீரணமே (63)
நூற்பா:90 (ஒப்புமை)
- ஒப்புமை யில்லது மையமு முவமையிற் ஒப்புமை இல்லதும் ஐயமும் உவமையின்
- செப்பிய திறமு முவமை யுருவகமு செப்பிய திறமும் உவமை உருவகமும்
- முருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே (64) உருவகத்து அடக்கலும் உணர்ந்தனர் கொளலே (64)
நூற்பா:91 (பாவிக)
- பாவிக மென்பது காப்பியப் பண்பே (65) பாவிகம் என்பது காப்பியப் பண்பே (65)
இரண்டாவது பொருளணியியல் சூத்திரங்கள் 65
(ஆகமொத்தம் 26+65= 91 சூத்திரங்கள்)
இரண்டாவது பொருளணியியல் முடிந்தது
[தொகு]பார்க்க: