உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/100

விக்கிமூலம் இலிருந்து


100அப்பா! ரயில்வே ஸ்டேஷனில் சாமான் வைத்துத் தள்ளும் வண்டியில் ஒரு சக்கரம் மட்டும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அதை நீ கவனித்திருக்கிறாயா? அந்த வண்டியில் ஒரு சக்கரம் மட்டும் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

சக்கரம் உருண்டையாக இருக்கிறது. உருண்டையாக உள்ள வஸ்து தரையில் அதிகமாக உராயாது. அதனால் அதைத் தரையின் மீது எளிதாக இழுக்கவும் தள்ளவும் செய்யலாம். அதற்காகத்தான் வண்டியில் சக்கரங்கள் மாட்டுகிறார்கள். அம்மா இரண்டு சக்கரங்களைத் தள்ளுவதைவிட ஒரு சக்கரத்தைத் தள்ளுவது எளிதல்லவா? அது ஒரு காரணம்.

அத்துடன் அந்தத் தள்ளுவண்டியைத் தள்ளாத பொழுது அது சாயாமல் இருப்பதற்கு அதன் புறத்தில் இரண்டு கால்கள் உள. தள்ளும் பொழுது நாம் பின்புறத்தைத் தூக்கிப் பிடித்துக் கொள்கிறோம். அதனால் தான் அந்த வண்டியில் ஒரு சக்கரம் மட்டுமே இருக்கிறது. அப்படியிருப்பது அதை எளிதாகத் தளளிக்கொண்டு போவதற்குப் பெரிதும் உதவுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/100&oldid=1538266" இலிருந்து மீள்விக்கப்பட்டது