உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/104

விக்கிமூலம் இலிருந்து


104அப்பா! சில பவுண்டன் பேனாக்களில் மை அடைப்பதற்கு வேண்டிய கருவி அதிலேயே இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம் அம்மா! பவுண்டன் பேனாக்களில் மையை நிரப்புவதற்கு நாம் உபயோகிக்கும் ரப்பர் நிப்பிள் உள்ள கண்ணாடிக் குழாய் சில வகைப் பேனாக்களுக்குத் தேவையில்லை.

சில பேனாக்களில் கையில் பிடித்து எழுதும் முனையிலுள்ள திருக்கைக் கழற்றினால் ஒரு சிறிய தண்டு நீட்டிக் கொண்டிருப்பது தெரியும். அதை உள்ளே அழுத்தினால் பேனாவினுள் உள்ள காற்று வெளியே போய் விடுகிறது. அதன் பின் பேனாவின் நிப் முனையை மைக்குள் வைத்துக் கொண்டு விரல்களை அழுத்தாமல் தளர்த்தினால் வெளியே உள்ள காற்று மையின்மேல் அழுத்தி அதைக் குழாயில் ஏறும்படி செய்து விடுகிறது.

வேறுவிதமான சில பேனாக்களில் உள்ளே ஒரு நீண்ட ரப்பர் குழாயும் அடுத்து ஒரு மெல்லிய தகரமும் இருக்கும்.

அந்தத் தகட்டோடு ஒரு சிறு மெல்லிய கம்பி இணைக்கப்பட்டு, வெளியே பேனாவினுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். மை அடைக்க வேண்டுமானால் இந்தக் கம்பியை நிமிர்த்தவேண்டும். அப்பொழுது அது அத்துடன் பொருந்தியுள்ள தகட்டையும் அதை அடுத்துள்ள ரப்பர் குழாயை யும் அமுக்கும். அதனால் ரப்பர் சுருங்கும்; காற்று வெளியே செல்லும். பேனாவை மையினுள் வைத்துக்கொண்டு மெல்லிய கம்பியை எப்பொழுதும் போல் இருக்குமாறு செய்துவிட்டால் ரப்பர் குழாய் முன்போல் அகன்று விடும். வெளியே உள்ள காற்று மையைக் குழாய்க்குள் ஏறும்படி செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/104&oldid=1538275" இலிருந்து மீள்விக்கப்பட்டது