உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/106

விக்கிமூலம் இலிருந்து


106 அப்பா! சிலர் தெருவில் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து டில்லி பார் அயோத்தி பார் என்று படம் காட்டுகிறாரே. அந்தப் படங்கள் ஊர்களை நேரில் பார்ப்பது போலவே காட்டுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நமக்கு இரண்டு கண்கள் இருக்கின்றனவே, அவையிரண்டும் எதையும் ஒரே விதமாகப் பார்ப்பதாகவே எண்ணுவாய், அது தவறு. வலது கண்ணானது பார்க்கும் பொருளின் வலது பாகத்தையும் இடது கண்ணானது பார்க்கும் பொருளின் இடது பாகத்தையுமே அதிகமாகப் பார்க்கிறது. ஒருகண்ணை மூடிக்கொண்டு பார் அப்பொழுது நான் கூறுவது விளங்கும். இரண்டு கண்களிலும் விழும் பொருளின் பிம்பங்கள் இரண்டையும் சேர்த்தே நமது மூளையானது ஒரே பொருளாகக் காண்கிறது அதனால் தான் நாம் பார்க்கும் பொருள் போட்டோப் படம் போல் தட்டையாக இல்லாமல் நிஜ உருவத்துடன் காண்கிறது.

நீ சொல்லுகிறாயே தெருவில் காட்டுவதாக, அந்தப் படங்களும் கண்களில் விழும் பிம்பங்கள் போல் எடுக்கப்பட்ட படங்களே. இரண்டு காமராக்களை சிறிது விலகி இருக்கும்படி வைத்துக் கொண்டு ஒரு பொருளைப் படம் பிடிப்பார்கள். பிறகு அந்த இரண்டு படங்களையும் அடுத்தடுத்து வைத்துக் கொண்டு அதற்காக உண்டாக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் பார்த்தால் நமக்குத் தெரிவது தட்டையான படமாக இராமல் நிஜ உருவமாகவே இருக்கும். இத்தகைய கருவியைத்தான் தெருவில் கொண்டுவருவது. அதை முதன் முதலாக ஆங்கில விஞ்ஞானியான ஸர் சார்லஸ் விட்ஸ் டோன் என்பவரே 1832-ம் ஆண்டில் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/106&oldid=1538281" இலிருந்து மீள்விக்கப்பட்டது