உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/111

விக்கிமூலம் இலிருந்து


111அப்பா! சினிமாக் கொட்டகையில் சிவப்பாகக் கூர்மையாக ஒன்று சுவரில் மாட்டிவைத்திருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! சினிமாக் கொட்டகையில் ஏதேனும் திடீரென்று நெருப்புப் பிடித்துவிட்டால் அதை அணைப்பதற்காகவே அந்தச் சாதனத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு "நெருப்பு அணைப்பான்” என்று பெயர். நெருப்பு எரிவதற்குப் பிராணவாயு இன்றியதையாதது என்றும் நெருப்பு எரியும்போது உண்டாகும் கரியமிலவாயு நெருப்பை அணைத்து விடும் என்றும் அறிவாய். இந்த நெருப்பு அணைப்பானைக் கொண்டு கரியமிலவாயு உண்டு பண்ணி அதைக் கொண்டு நெருப்பை அணைக்கிறார்கள். அது எப்படி என்று சொல்லுகிறேன்; கேள். சிவப்பாக உள்ள கருவி பலமான பித்தளையால் செய்தது. நாம் தோசைமாவில் கலக்கும் சோடா உப்பு ஒரு பங்காகவும் தண்ணீர் இரண்டு பங்காகவும் கலந்து அந்தப் பித்தளைப் பாத்திரங்களில் ஊற்றுவார்கள். நான்கு அவுன்ஸ் ஸல்பூரிக் ஆஸிட் என்னும் திராவகத்தை எட்டு அவுன்ஸ் பாட்டிலில் ஊற்றி சோடா நீரின் மீது கருவியின் கழுத்தினின்றும் தொங்க விடுவார்கள். அந்தப் பாட்டிலைக் கவிழ்த்தால் அதன் அடைப்பான் கழன்று விழுந்து விடும் படியான விதத்தில் வைத்திருப்பார்கள், அதனால் நெருப்பு அணைப்பான் கருவியை எப்பொழுதும் சிறிது கூடச் சாயாமலே வைத்திருப்பார்கள்.

நெருப்பு உண்டானால் அந்தக் கருவி சாய்க்காதபடி நெருப்பருகே கொண்டுபோய்த் தலைகீழாகப் பிடிப்பார்கள் அப்பொழுது பாட்டிலின் அடைப்பான் கழன்றுவிடும், பாட்டிலிலுள்ள திராவகம் சோடா நீருடன்கலக்கும். அதன் காரணமாக கரியமிலவாயு உண்டாகுர். அதிகமான வாயு உண்டாவதால் அது பித்தளைப்பாத்திரத்திலுள்ள நீரைக் கழுத்தின் அருகிலுள்ள குழாயின் வழியாக அதிக விசையுடன் வெளியே செலுத்தும். அந்த நீரும் அதிலிருந்து வெளியேறும் கரியமிலவாயுவும் நெருப்பை அணைத்துவிடும்.

மண்ணெண்ணெய்க் கிடங்குகளில் உண்டாகும் நெருப்பை அணைப்பதற்கு நுரை அணைப்பான் என்னும் கருவியை உபயோகிக்கிறார்கள். அதில் அலுமினியம் ஸல்பேட் என்னும் பொருள் சோடா உப்பும் அதிமதுரமும் கலந்த நீருடன் சேரும்பொழுது நுரை உண்டாகும். அது சுவரின் மீது ஈரப்போர்வை போல் படிந்து நின்று நெருப்பை அணைத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/111&oldid=1538292" இலிருந்து மீள்விக்கப்பட்டது