தந்தையும் மகளும்/116
Appearance
116அப்பா! சிமிண்டை எந்த இடத்தில் உபயோகியாவிட்டாலும் ஸ்நான அறையில் உபபோகிப்பது நன்று என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! சில வருஷங்களுக்கு முன் வரை சுண்ணாம்புக் கல்லைக் காளவாயில் இட்டுச் சுட்டு அதன்பின் அதைத் தண்ணீர் சேர்த்து அந்த நீற்றுடன் மணலும் நீரும் கலந்து சாந்தாக்கி உபயோகித்து வந்தார்கள். அச்சாந்தைக் காரை என்று கூறுவார்கள். ஆனால் சாந்து தண்ணீர் படும் இடங்களில் இடிந்தும் கரைந்தும் போகக்கூடியது. சிமிண்டோ தண்ணீரில் கரையாது, அதற்குப் பதிலாக அதிக உறுதியே பெறும். தண்ணீர் படப்படத்தான் சிமிண்டுக்கு அதிக பலம். அதனால்தான் ஸ்நான அறைக்கு சிமிண்டு உபயோகிப்பது நல்லது என்று கூறுகிறார்கள்.