உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/120

விக்கிமூலம் இலிருந்து


120அப்பா! அண்ணன் செடிகளுக்குப் போட உரத்தை உரக்குழியில் வெட்டி எடுத்த போது அது சூடாய் இருப்பதாகச் சொன்னானே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் உரக்குழியில் உதிர்ந்த இலைகள், குப்பை கூளங்கள், முதலியவைகளை எல்லாம் போட்டு வைக்கிறோம். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அவைகள் எல்லாம் மக்கி உருமாறிப் போகின்றன அதற்குக் காரணம் என்ன?

காற்றில் மிதந்து கொண்டும் தரையில் இருந்து கொண்டுமுள்ள பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் குப்பை கூளங்களில் சேர்ந்து தங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காக அவைகளைப் பொருள்களாகப் பிரித்து அவற்றிலுள்ள பிராணவாயுவை உபயோகித்துக் கொள்கின்றன. பிராணவாயு எதனுடனேனும் சேர்வதையே எரிதல் என்று கூறுகிறோம். எரியும் பொழுது உஷ்ணம் உண்டாகும். ஆனால் குப்பை கூளங்கள் எங்கே எரிகின்றன. அப்படியே தானே இருக்கின்றன என்று கேட்பாய். அம்மா! அவை எரியத்தான் செய்கின்றன. ஆனால் மெதுவாக எரிவதால் எரிவது கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படிப் பிராண வாயுவுடன் சேர்ந்து எரிவதால் தான் அண்ணன் குப்பையை வெட்டியதும் அது சூடாகத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/120&oldid=1538317" இலிருந்து மீள்விக்கப்பட்டது