தந்தையும் மகளும்/130
Appearance
130அப்பா! சோப் குமிழிகளில் வானவில் போல் அழகான நிறங்கள் தோன்றுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! சூரிய ஒளி சரலாந்தர் கண்ணாடி போன்ற முப்பட்டைக் கண்ணாடி வழியாகச் சென்றால் அப்பொழுது அது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறக்கதிர்களாகப் பிரிந்து தோன்றுகின்றன. வானவில் உண்டாவது மழைகாலத்தில் தான்மழைத் துளிகள் முப்பட்டைக் கண்ணாடிகள் போல் இருந்து சூரியனுடைய வெண்மையான ஒளியை ஏழு நிறங்களாகத் தெரியுமாறு செய்து விடுகின்றன.சோப் குமிழியில் உள்ள காற்றைப் பொதிந்து உள்ளும் புறமுமாக இரண்டு சோப் நீர் உறைகள் உள. இந்த உறைகளும் அவற்றிற்கு இடையேயுள்ள இடமும் சேர்ந்து அநேக முப்பட்டைக் கண்ணாடிகள் போல் ஆகிவிடுகின்றன. அதனாலேயே சோப் குமிழியில் அழகான வர்ண ஜாலங்கள் தோன்றுகின்றன.