தந்தையும் மகளும்/153
153அப்பா! செம்பைத் தங்கமாக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! செம்பு, ஈயம் போன்ற விலை குறைந்த சாதாரண உலோகங்களைத் தங்கமாக்குவது எப்படி என்று ஆதிகால முதல் எல்லா தேசங்களிலும் அறிஞர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். அப்படிச் செய்யும் முறையை ரசவாத முறை என்று கூறுவார்கள். பண்டைக் காலத்தில் இருந்தவர்கள் உலோகங்கள் என்பவை பாதரசமும் கந்தகமும் பல அளவில் சேர்ந்து உண்டானவைகளே என்பதாகவும் தங்கத்திலேயே மிகவும் குறைந்த கந்தகம் இருப்பதாகவும் எண்ணினார்கள். அதனால் செம்பு முதலியவற்றிலுள்ள கந்தகத்தில் பெரும் பகுதியை வெளியே போய்விடும்படி செய்து விட்டால் செம்பு தங்கமாக ஆய்விடும் என்று நம்பினார்சள். அதனால்தான் அந்த முறைக்கு ரசவாதம் என்ற பெயர் உண்டாயிற்று. ஆனால் செம்பைத் தங்கமாகச் செய்ய இதுவரை எந்த ரசவாதியாலும் முடியவில்லை.
ஆனால் இக்காலத்து விஞ்ஞானிகள் தங்கத்தை மட்டுமின்றி வேறு தனி வஸ்துக்களையும் உண்டாக்குவதற்குக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
அம்மா! தங்கம் போன்ற தனி வஸ்து ஒன்றைப் பிரித்துக்கொண்டே போனால் இனிப் பிரிக்க முடியாது என்னும் அளவு சிறியதான துண்டு ஒன்று கிடைக்கும் அல்லவா? அந்தத் துண்டை அறிஞர்கள் அணு என்று கூறுவார்கள்.
ஆனால் இப்போது விஞ்ஞானிகள் அணுவையும் பிரித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு அணுவிலும் மையத்தில் ஒரு துகள் இருப்பதாகவும் எலக்டிரான் என்னும் எதிர் மின் துகள்கள் அதைச் சுற்றி வருவதாகவும், சுற்றி வரும் எதிர்மின் துகள்கள் எத்தனையோ அத்தனை நேர்மின் துகள்கள் மையத் துகளில் இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அத்துடன் மையத் துகளில் உள்ள நேர் மின் துகள்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததே அந்த வஸ்துவின் குணம் என்றும் கூறுகிறார்கள். ஆதலால் மையத் துகளை மாற்றிவிட்டால் வஸ்துவும் மாறிவிடும். ஈய அணுவிலுள்ள நேர் மின் துகள்கள் மூன்றை நீக்கி விட்டால் அப்பொழுது ஈயம் தங்கமாகிவிடும். அவ்வாறு நேர் மின் துகள்களைச் சேர்த்தோ நீக்கியா ஒரு தனி வஸ்துவை மற்றொரு தனி வஸ்துவாகச் செய்வதற்கு வேண்டிய முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆகவே செம்பையோ ஈயத்தையோ தங்கமாக ஆக்க முடியும். ஆயினும், நமக்கு வேண்டிய அளவு தங்கம் இன்னும் யாரும் செய்ய முடியவில்லை.