தந்தையும் மகளும்/165
165அப்பா! நாயும் பூனையும் மாமிச பட்சணிதானே, ஆனால் பூனை நடக்கும்போது மட்டுந்தானே சப்தம் கேட்காமலிருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! நாயும் பூனையும் மாமிசம் தின்னும் மிருகங்கள் தான், நாயும் எலியைப் பிடித்துத் தின்னும், பூனையும் எலியைப் பிடித்துத் தின்னும், ஆனால் பூனைமட்டும் சப்தம் செய்யாமல் நடக்கிறது. அதற்கேற்ற வண்ணம் அதன் பாதங்களும் அமைந்திருக்கின்றன. பூனை நடக்கும்போது தன்னுடைய நகங்களை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டு மெத்தை போன்ற பாதங்களைக் கொண்டு நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாய் விரைவாக ஓடமுடியும். அதனால் அது சப்தம் செய்யாமல் நடக்க வேண்டியதில்லை. எலி அதன் சப்தத்தைக் கேட்டு ஓடினாலும் நாய் ஓடிப்போய் பிடித்துவிட முடியும்.
ஆனால் பூனைக்கு அப்படி விரைவாக ஓடமுடியாது. அதனால் பாய்ந்து பிடிக்கவேண்டும், அதனால்தான் அது நடக்கும் போது சப்தம் கேட்பதில்லை.