உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/167

விக்கிமூலம் இலிருந்து


167அப்பா! பூனைக்கு இருட்டில்கூடக் கண் தெரியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! வெளிச்சம் மங்கலாயிருந்தால் நாம் ஒன்றையும் பார்க்கமுடியாது, ஆனால் பூனைக்கோ குறைந்த வெளிச்சத்திலும் கண் தெரியும். ஆனால் அதை வைத்துக் கொண்டு பூனைக்கு இருட்டில்கூட கண் தெரியும் என்று கூறுவது தவறு. இருட்டாயிருந்தால் நமக்குக் கண் தெரியாதது போலவே பூனைக்கும் கண் தெரியாது.

பூனையின் கண்ணுக்கும் நம்முடைய கண்ணுக்கும் வித்தியாசம் உண்டு. நம்முடைய கண்ணிலுள்ள விழித்திரை தீடீரென்று சுருங்கி கண்மணியை மூடிக்கொள்ள முடியாது. ஆனால் பூனையின் விழித்திரை மூடிக்கொள்ள முடியும். அதனால் பிரகாசமான பகல் வெளிச்சத்தில் பூனையின் விழித்திரை அநேகமாக மூடிக்கொள்ளும். கண்மணி ஒரு கோடுபோல் மட்டுமே தெரியும். ஆனால் இரவிலோ விழித்திரை நன்றாகத் திறந்து, உள்ள வெளிச்சம் முழுவதையும் ஏற்றுக்கொள்ளும். அதனால்தான் பூனைக்கு மங்கலான வெளிச்சம் உள்ள இடத்தில் கூடக் கண் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/167&oldid=1538484" இலிருந்து மீள்விக்கப்பட்டது