தந்தையும் மகளும்/170
170அப்பா! பூனை சீறும் போது அதன் ரோமம் சிலிர்த்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கோபத்தால் ரோமம் சிலிர்த்து கண்கள் சிவந்து விடுகின்றன, பார்க்கப் பயங்கரமான தோற்றம் உண்டாய் விடுகிறது. அதற்குக் காரணம் சொல்லுகிறேன்.
எல்லாப் பிராணிகளுடைய உடம்பிலும் பிருக்கங்கள் என்ற சிறுநீர் உண்டாக்கும் இரண்டு உறுப்புகள் உள. அவற்றின் மேலே ஆட்ரனல் என்று கூறும் இரண்டு சுரப்பிகள் இருக்கின்றன. கோபமோ பயமோ உண்டாகும் சமயம் அந்தச் சுரப்பிகளிலிருந்து ஒருவித நீர் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பிராணி சண்டையிடவோ ஓடி விடவோ தயார் ஆகின்றது. சண்டையிட வேண்டுமானாலும் ஓடிவிடவேண்டுமானாலும் தசைகளுக்கு அதிகமான இரத்தம் தேவை. அதனால்தான் அந்த நீர் சுரந்ததும் ஜரணவேலை நின்று விடுகிறது. அதற்காகப் பயன்பட்டு வந்த இரத்தம் தசைகளுக்குப் போய்ச் சேருகிறது. ஈரலும் தான் சேமித்து வைத்துள்ள சர்க்கரையைச் சக்தி உண்டாக்குவதற்காகத் தசைகளுக்கு அனுப்பிவைக்கிறது. தசைகள் களைப்பின்றி வேலை செய்யத் தயாராகின்றது.
அதனால் தான் பூனை கோபம் வந்தால் ரோமத்தைச் சிலிர்த்துக்கொண்டு சீறுகிறது.