தந்தையும் மகளும்/188
தோற்றம்
188அப்பா! உலகத்தில் மரஞ்செடிகள் உண்டான பிறகு தான் மிருகங்கள் உண்டாயின என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! மிருகங்களுடைய உணவைக் கவனித்தால், அது செடியிலிருந்தோ அல்லது செடியிலிருந்து உணவு பெற்ற மிருகங்களிலிருந்தோ வந்ததாகவே இருக்கிறது.
ஆனால் செடிகளோ அவைகள் உணவு பெறுவதற்கு வேறு செடிகளோ மிருகங்களோ தேவையில்லை. செடிகள் தங்களுக்கு வேண்டிய உணவைக் காற்றிலிருந்தும் மண்ணிலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன.அம்மா, அதிலிருந்து தெரிவதென்ன? மரஞ்செடிகள் உண்டான பிறகுதான் மிருகங்கள் உண்டாயிருக்க வேண்டும் என்பதாகும்.