தந்தையும் மகளும்/191

விக்கிமூலம் இலிருந்து


191அப்பா! காற்று பலமாக அடித்தால் பெரிய மரங்கள் சாய்ந்துவிடுகின்றன, சிறிய செடிகள் சாயாமல் நிற்கின்றன, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! காற்று தரையின் பக்கத்தில் வீசுவதைவிட உயரத்திலேயே அதிக பலமாக வீசும். அதனால் பலமான காற்று தரையிலிருந்து அதிக உயரமாக இல்லாத செடிகளைச் சாய்க்காமல் அதிக உயரமான மரங்களைச் சாய்த்து விடுகிறது.

அத்துடன் காற்று மரத்தின் மீது படும் இடத்தின் வரப்பு அதிகம். செடியிலோ மிகக் குறைவு. அதனால் அதிகமான காற்று மரத்தைத் தாக்குகிறது. அது பலமாகவும் தாக்குவதால் மரத்தைச் சாய்த்துவிட முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/191&oldid=1538659" இலிருந்து மீள்விக்கப்பட்டது