உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/200

விக்கிமூலம் இலிருந்து


200அப்பா! பூவாமல் காய்க்கும் மரம் உண்டா?

அம்மா! பூக்கள் பார்ப்பதற்கு அழகாயிருக்கின்றன. இன்பமான மணமும் வீசுகினறன. ஆனால் அவை நாம மகிழ்வதற்காகவா பூக்கின்றன? இல்லை. பூவில் காய் உண்டாகி காயிலுள்ள விதைகள் பூமியில் விழுந்து முளைத்து மரஞ்செடிகள் உண்டாவதற்காகவே பூக்கள் உண்டாகின்றன. ஆனால் செடிகள் உண்டாவதற்கு விதைகள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை.

அம்மா! நீ முருங்கை மரம் பார்த்திருக்கிறாய் அல்லவா? அந்த மரத்தை விதை ஊன்றியும் உண்டாக்கலாம், கிளையை வெட்டி நட்டும் உண்டாக்கலாம்.

ஆகவே விதைகள் இல்லாமல் மரஞ்செடிகளை உண்டாக்க முடியும் என்று கூறலாமேயன்றிப் பூக்காமல் காய்க்க முடியும் என்று கூற முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/200&oldid=1538676" இலிருந்து மீள்விக்கப்பட்டது