உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/206

விக்கிமூலம் இலிருந்து


206அப்பா! மழை பெய்யாத பாலை நிலங்களில் முட்செடிகள்தான் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம். அம்மா! அதிகமாக முட்செடிகள் தான் உண்டாகும். அவைகளுங்கூட அதிக உயரமாக வளரமாட்டா, கட்டையாகவே இருக்கும். ஆனால் வேர்மட்டும் அதிக நீளமாக ஓடும். ஈச்ச மரம் தெரியுமல்லவா. அதன் கன்று பார்க்கச் சிறிதாகவே இருக்கும், எளிதில் பிடுங்கிவிடலாம் தோன்றும், ஆனால் பிடுங்கிப்பார். பிடுங்க முடியாது. அதற்குக் காரணம் அதன் வேர் நீளமாகக் கீழே போயிருப்பதுதான். ஏன் அப்படி நீளமாயிருக்கிறது. தெரியுமா? பாலை நிலத்தில் மழை குறைவு. அத்துடன் அப்படிக் குறைவாகப் பெய்யும் மழை ஜலமும் தரையில் ஊறி அதிக ஆழத்தில் போயே தங்கும். மேற்பரப்பிலுள்ள ஜலத்தைச் சூரியன் ஆவியாக மாற்றிவிடுவான். அதனால் ஆழத்திலுள்ள நீரை உண்பதற்காகத்தான் அங்குள்ள செடிகளின் வேர் நீளமாக இருக்கின்றன.

நீர் குறைவாகக் கிடைப்பதால் செடிகள் குட்டையாக வளர்கின்றன. உயரமாகச் செழித்து வளரமுடியாமல் போகிறது. செடிகள் குட்டையாயிருந்தால் ஆடு மாடு முதலிய மிருகங்கள் அவற்றை எளிதில் தின்றுவிடும் அப்படிச் செய்யாமல் இருப்பதற்காகவே அந்தச் செடிகளில் முட்கள் உண்டாகின்றன. அந்த முட்களுங்கூட செடியின் அடிப்பாகத்திலேயே காணப்படும். எருக்கு போன்ற சில செடிகளில் சாதாரண முட்களுக்குப்பதிலாக மயிர் போன்ற மெல்லிய முட்கள் இருக்கும். சில செடிகளைத் தின்று விடாதபடி சில செடிகளைத் தொட்டால் பிசின்போல் ஒட்டும் இவையெல்லாம் செடிகளைத் தின்று விடாதபடி மிருகங்களைத் தடுப்பதற்காக ஏற்பட்டுள.

பாலை நிலச் செடிகளின் இலைகள் சிறியனவாகவே இருக்கும். செடிகளில் இலைகள் எப்பொழுதும் சுவாசிக்கின்றன என்றும் அப்பொழுது அவற்றிலிருந்து நீராவி வெளியே போகின்றது என்றும் நீ அறிவாய் இலைகள் எவ்வளவுக் கெவ்வளவு அகலமாக இருக்கின்றனவே. அவ்வளவக்கவ்வளவு அதிகமாக நீராவி வெளியேறிவிடும். ஆனால் பாலைவனத்திலோ நீர் குறைவு. அதனால் அங்குள்ள செடிகள் அதிகமான நீராவியை வெளியே விடாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அவற்றின் இலைகள் சிறியவைகளாய் இருக்கின்றன. அது மட்டுமன்று சில செடிகளின் இலைகள் இலைகள்போல் மெல்லியனவாக இரா. கட்டியாக இருக்கும். நீ சப்பாத்திக் கள்ளியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? நீ கள்ளி என்று எண்ணுவது தான் அதன் இலை. அது கிடைக்கும் நீரை அதிகமாகச் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவே அதன் இலைகள் இப்படி அகலமாயும் கட்டியாயும் இருக்கின்றன. அப்படிக் கட்டியாயிருப்பதாலும் அதிகமான நீர் ஆவியாக வெளியே போய் விடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/206&oldid=1538688" இலிருந்து மீள்விக்கப்பட்டது