தந்தையும் மகளும்/32

விக்கிமூலம் இலிருந்து


32அப்பா! சங்கீதமும் சப்தம்தானே, ஆளுல் அது மட்டும் கேட்க இனிமையாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! சப்தம் என்பது எப்படி உண்டாகிறது என்பதைக் கவனித்தால் இதன் காரணம் விளங்கும். குளத்தில் ஒரு கல்லைப் போட்டால் முதலில் ஒரு அலை

உண்டாகி பிறகு அலைகள் விரிந்து கரை வந்து சேர்வதை நீ பார்த்திருப்பாய்.

அது போல் எதைக் கொண்டேனும் காற்றில் அலையை உண்டாக்கினால், அதிலும் அலைகள் ஒன்றை அடுத்து ஒன்றாக உண்டாகி நம்முடைய காதில் வந்து சேர்ந்து சப்தம் கேட்கும்படி செய்கிறது.

இந்த அலைகள் ஒரே அளவான நீளமுடையனவாயிருந்தால் அப்பொழுது உண்டாகும் சப்தம் காதிற்குக் கஷ்டமாயிராது; இனிமையாக இருக்கும். அதைத்தான் சங்கீதம் என்று சமஸ்கிருதத்திலும் இசை என்று தமிழிலும் சொல்லுகிறோம். காதுக்கு இசைந்த சப்தமாக இருப்பதால் அதை இசை என்று கூறுவது பொருத்தமல்லவா??

ஆனால் சப்த அலைகள் வேறு வேறு நீளம் கொண்டதாக இருந்தால் முதல் அலை காதிலுள்ள தோல் பறையில் ஒருவித அதிர்ச்சியும் அடுத்த அலை வேறுவித அதிர்ச்சியும் இப்படி பலவிதமான அதிர்ச்சிகள் உண்டாக்கும். அதனால் தான் காதுக்குக் கேட்க கஷ்டமாயிருக்கிறது. அப்பொழுது தான் இது என்ன இரைச்சல்! கூப்பாடு! என்று கூறி வருந்துகிறோம்.

வாயால் பாடுகிறவர்களும் வாத்தியத்தில் வாசிப்பவர்களும் ஒரே நீளமுள்ள சப்த அலைகள் உண்டாக்கி நம்முடைய காதில் மதுரமான இசையைப் பெய்து நம்மை மகிழ்விக்கிறார்கள். நாம் மெதுவாகச் சாவதானமாகப் பேசினாலும் இசையைப் போலவே இனிமையாக இருக்கும். அதனால் தானே குழந்தைகளுடைய மழலைச் சொல்லும் இசை போல் கேட்கின்றது. அதனால் அம்மா,நீ எப்பொழுதும் அந்த விதமாகவே பேசி வரவேண்டும். அப்பொழுது தான் உனக்கும் சந்தோஷமாயிருக்கும; பிறரும் சந்தோஷப்படுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/32&oldid=1538108" இலிருந்து மீள்விக்கப்பட்டது