உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/40

விக்கிமூலம் இலிருந்து


49அப்பா! அடுப்பில் விறகில் தீப்பற்ற வைப்பதற்கு அம்மா சிராய்களை உபயோகிக்கிறாளே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எது எரியவேண்டுமானாலும் அதற்குப் பிராண வாயு அவசியம் தேலை என்பதை அறிவாய். விறகு கடிட்யாயிருக்கிறது, அதனால் அதனிடம் பிராண வாயு அதிகம்இருக்க முடியாது. ஆனால் அந்த விறகைச் சிறு சிராய்களாக உடைத்து விட்டால் அப்போது அந்தச் சிராய்களிடம் அதிகமான பிராணவாயு தங்கி நிற்கமுடியும். அதனால் தான் உன் தாயார் தீக்குச்சியைக் கிழித்து விறகில் வையாமல் சிராயில் வைக்கிறாள். சிராய் எளிதில் தீப்பிடித்துக் கொள்கிறது. அந்த உஷ்ணம் அதிகமாகவே அதனுடன் வைக்கப்பட்டுளள விறகும் தீப்பற்றிக் கொள்கிறது. இதே காரணத்தினால் தான் அம்மா! சில வேளைகளில் உன் தாயார் சிராய்க்குப் பதிலாக கடுதாசித துண்டுகளை உபயோகிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/40&oldid=1538129" இலிருந்து மீள்விக்கப்பட்டது