உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/53

விக்கிமூலம் இலிருந்து


53அப்பா! தட்டைக் கழுவி வைத்தால் உலர்ந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! தண்ணீரைக் கொதிக்கவைத்தால் அது ஆவியாக மாறி விடுகிறது என்பதை நீ அறிவாய். ஆனால் தண்ணீர் ஆவியாக மாறுவது அதைக் கொதிக்க வைக்கும் போதுதான் என்று எண்ணாதே. கொதிப்பதற்கு அதிகமான உஷ்ணம் வேண்டும். ஆனால் அப்படி அதிக உஷ்ணம் இல்லாத போதுங்கூடத் தண்ணீர் ஆவியாக மாறவே செய்கிறது. அதனால் தான் நீ கழுவிவைக்கும் தட்டு உலர்ந்து போகிறது. அம்மா! அதிக உஷ்ணம் இருந்தால் ஆவியாக மாறுவது சீக்கிரமாக நடைபெறும். உஷ்ணம் குறைவாயிருந்தால் ஆவியாக மாற நேரமாகும். அவ்வளவுதான் வித்தியாசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/53&oldid=1538169" இலிருந்து மீள்விக்கப்பட்டது