உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/55

விக்கிமூலம் இலிருந்து


55அப்பா! கண்ணாடியை வளைத்தால் ஓடிந்துவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! கண்ணாடியை வளைத்தால் ஒடிந்து தான் போகிறது. அது போலவே அநேக பொருள்கள் நடந்து கொள்கின்றன. அது மட்டுமா கடுதாசி போல் மிக மெல்லிய தகடாக அடிக்கலாம், சில பொருள்களை மெல்லிய கம்பியாக நீட்டலாம். ஆனால் இத் தன்மைகள் எல்லாப் பொருள்களுக்கும் இருப்பதில்லை. இதன் காரணம் என்ன?

அம்மா! நாம் பார்க்கும் ஒல்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மூலக்கூறுகள் என்பவற்றால் ஆனது என்பதை நீ அறிவாய். அந்த மூலக்கூறுகள் பொருள்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றனவோ. அதைப் பொறுத்ததே அவற்றின் தன்மைகள். அத்தகை அமைப்பின் வேறுபாட்டால்தான் கண்ணாடியை வளைத்ல் ஒடிந்து விடுகிறது.

ஆனால் இவ்விதம் வளைத்தால் ஒடியக் கூடிய பொருள்கள் சூடாக்கப்பட்டால் ஒடியாமல் வளைந்து விடுகின்றன. கண்ணாடியைச் சிவக்கக் காய்ச்சினால் அப்போது அதை வளைக்கவும் சத்தரிக்கவும் கம்பியாக நீட்டவும் செய்யலாம். இதன் காரணம் கண்ணாடியில் மூலக்கூறுகள் சூடில்லாத சமயம் நெருக்கமாயிருப்பதும் சூடு உண்டானதும் நெருக்கமாயில்லாமல் விலகி விடுவதுமேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/55&oldid=1538174" இலிருந்து மீள்விக்கப்பட்டது