உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/64

விக்கிமூலம் இலிருந்து


64அப்பா! சில ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே வெளிச்சம் வந்தாலும், நாம் அதன் வழியாக வெளியே பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அந்தக் கண்ணாடி வழவழப்பாக இருக்காது, சொர சொரப்பாகவோ அல்லது சிறு சிறு குமிழ்கள் உள்ளகவோ இருக்கும்.

அம்மா! சாதாரண வழவழப்புக் கண்ணாடியின் மீது ஒளிபட்டால் அது அதன் வழியாக அடுத்த பக்கம் செல்லுகிறது. அதனால் வெளியிலுள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளி அத்தகைய ஜன்னல் கண்ணாடி வழியாக நம்முடைய கண்ணுக்கு வந்து சேர்கிறது. அந்தப் பொருள்கள் நமக்குத் தெரிகின்றன.

ஆனால் வழவழப்பில்லாத கண்ணாடி வழியாகப் பார்த்தால் அப்போது வெளியிலுள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளி நேராக வரமுடிவதில்லை. கண்ணாடி ஒரே தளமாக இல்லாமல் பல சிறு சிறு தளங்கள் உடையனவாக இருப்பதால் வெளியிலிருந்து வரும் ஒளியானது பலவாறு சிதறியே நமக்கு வந்து சேர்கிறது. அதனால்தான் ஒளி உள்ளே வந்தாலும் வெளியேயுள்ள பொருள்கள் தெரியாமல் போய் விடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/64&oldid=1538191" இலிருந்து மீள்விக்கப்பட்டது