உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/67

விக்கிமூலம் இலிருந்து


67அப்பா! கண்ணாடியைப் புகையில் காட்டிச் சூரிய கிரகணம் பார்க்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கு மிடையில் வந்து சூரியனைத் தெரியவொட்டாமல் மறைப்பதையே சூரிய கிரகணம் என்று கூறுவார்கள். ஆனால் சூரியன் முழுவதும் தெரியாமல் இருப்பது ஆபூர்வமாகும். சூரிய கிரகணத்தன்று சூரியன் அரைகுறையாகத் தெரியவே செய்யும். ஆயினும் சூரியனை நாம் பார்க்க முடியாது, நம்முடைய கண் கூசும்.

கண்கள் கூசாமல் சூரியனைப் பார்ப்பதற்காகவே புகையில் காட்டிக் கறுப்பாக்கிய கண்ணாடியை உபயோகிக்கிறார்கள். சாதாரணமாக ஒளியானது கண்ணாடி வழியாகச் செல்லக் கூடியது. அவ்விதம் கண்ணாடி வழி வரும் ஒளியும் கண்களைக் கூசும்படியே செய்யும். ஆனால் கறுப்பு நிறம் ஒளிக் கதிர்களைக் கிரகித்துக் கொள்ளும் குணமுடையது. ஆதலால் புகையில் காட்டிய கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்க்கும் பொழுது புகையின் கருமை சூரிய வெளியில் பெரும் பாகத்தை உண்டுவிடுகிறது. அதனால் கண் கூசாமல் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/67&oldid=1538204" இலிருந்து மீள்விக்கப்பட்டது