உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/75

விக்கிமூலம் இலிருந்து


75அப்பா! சென்னையில் அழகான விளம்பர விளக்குகள் போடுகிறார்களே, அதை எப்படிச் செய்கிறார்கள்?

அம்மா! சாதாரணமாக வீடுகளில் எரியும் மின்சார விளக்கில் மின்சாரமானது டங்ஸ்டன் என்னும உலோகத்தால் செய்த மெல்லிய கம்பி வழியாகச் சென்று அந்த கம்பியை ஒளிவிடும்படி செய்யும்.

ஆனால் விளம்பர விளக்குகளில் மெல்லிய கம்பி எதுவும் கிடையாது. அதிலுள்ளது "நியான்" என்னும் வாயுவாகும். அது காற்றிலுள்ள வாயுக்களில் ஒன்று. ஆனால் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும். அப்படி ஒரு வாயு இருப்பதாக 1898-ம் ஆண்டில் ஸர் வில்லியம் ராம்ஸே என்பவர் கண்டுபிடித்தார்.

மின்சாரம் அந்த வாயு வழியாகச் செல்லும்போது பகலில் கூடப்பளிச்சென்று தெரியக்கூடிய பிரகாசமான சிவந்த நிற ஒளி உண்டாகும். அத்துடன் சிறிது பாதரஸம் சேர்ந்தால் நீல ஒளி தரும். விளக்கின் கண்ணாடியின் நிறத்தை மாற்றிப் பல நிறமான ஒளியைப் பெறலாம்.

இத்தகைய ஒளியை அதிகமான அளவு பெற மிகவும் குறைந்த அளவு நியான்வாயு போதும். அதனால் இத்தகைய விளக்குகள் விலை குறைந்தனவாக உள. இந்த விளக்குகள் தரும் வெளிச்சம் இருபது மைல் தூரம் வரை கூடத்தெரியும். அதனால் ஆகாய விமானிகளுக்கு இடங் காட்டுவதற்கு இதையே உபயோகிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/75&oldid=1538220" இலிருந்து மீள்விக்கப்பட்டது