உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/77

விக்கிமூலம் இலிருந்து


77அப்பா! அணுக்களையும் விடச் சிறிய பொருள்கள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! ஒரு பொருளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டே போனால் கடைசியாகப் பிரிக்க முடியாத ஒரு நுண்ணிய துண்டு கிடைக்கும். அதைத்தான் அணு என்று கூறுவார்கள். அதை நாம் பூதக் கண்ணாடியாலும் பார்க்க முடியாது. பெரிய பூதக் கண்ணாடியால் மட்டும் பார்க்கக்கூடிய மிகச் சிறிய பொருள் அணுவைப்போல் ஐயாயிரம் மடங்கு பெரியதாக இருக்கும். அதனால் அணுதான் உலகில் காணப்படும் மிகச் சிறிய பொருள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இது வசை பிரிக்க முடியாது என்று எண்ணி வந்த அணுவை இப்பொழுது அறிஞர்கள் பிரித்து விட்டார்கள். அது எலக்ட்ரான்கள் என்னும் மின்சாரத் துகள்களால் ஆனதாயிருக்கின்றது. அதனால் எலக்ட்ரான் தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் எல்லாம் மிகச் சிறியதாகும். ஒரு பந்தானது தூசியை விட எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது எலக்ட்ரானை விட அணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/77&oldid=1538222" இலிருந்து மீள்விக்கப்பட்டது