தமிழ்ப் பழமொழிகள் 2/கீ

விக்கிமூலம் இலிருந்து


கீ

கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?

கீர்த்தியால் பசி தீருமா? 8400


கீர்த்தியும் அபகீர்த்தியும் வந்தால் போகா.

கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.

கீரி கடித்த பாம்பு போல.

கீரி கீரி நண்டு பிடி, வாய்க்கால் கீரி நண்டு பிடி, வயலுக்கு கீரி நண்டு பிடி.

(வாயை மூடித் திறக்கும் விளையாட்டு.)

கீரியும் பாம்பும் போல: 8405


கீரி வாய்ப் பாம்பு போல.

கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ்.

கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுவதற்கா?

(கட்டுகிறதா?)

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

(வைப்பது போல.)

கீரைக்குக் கழுவின தண்ணிர் கிண்டி அவிக்கப் போதும். 8410


கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல்.

கீரைக்குப் புழு வேரில்.

கீரை, கீரைத்தண்டு, கீரைப் புளிக் குழம்பு என்றானாம்.

கீரைத்தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டு ஏன்?

(பாட்டா?)

கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா? 8415

(கழுவின தண்ணீரிலே வெந்துவிடும்.)


கீரை மசித்த வாணாயில் ரசம் வைத்த உறவு.

கீரையும் இரண்டு கறி பண்ணாதே.

கீரையும் மயிரும் விரவியது போல.

கீரையும் மாவும் கெட்ட புளிச்சாறும்.

(கட்ட )

கீரை விற்ற தானியம் போல. 8420


கீழ் அகத்து மன்னி குளித்தால் கிழக்கு வெளுக்கும்.

கீழ் எலி போலத் தோண்டிக் கிளறுகிறது.

கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ் உலகமும் பார்த்தவன் போல் பேசுகிறான்.

கீழ் ஏழு லோகமும் மேல் ஏழு லோகமும் கண்ட காட்சியா?

கீழ்க்காது மூளி, மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி. 8425


கீழ்க்குலத்தான் ஆனாலும் கற்றவன் கற்றவன்தான்.

கீழ்க் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்.

கீழக் கரை நாய் அடிபட்டாற் போல் அடிபடுகிறாயே.

கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கின்றான்.

கீழே போட்டு உதைக்கச்சே மீசையில் மண் படவில்லை என்ற கதை. 8430


கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்.

(கோலார் தங்க வயலில்.)

கீழே விழுகிற மாப்பிள்ளைக்கு அரிவாள் மணையை முட்டுக் கொடுத்தது போல.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்றானாம்.

கீழைத்தெருக் கிழவி அவிசாரி போனாள் என்று மேலைத் தெருக்கிழவன் கோவணத்தில் கிட்டியைக் கட்டி அடித்தானாம்.

கீழைத் தெருவிலே பல்லக்குக் கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொள்கிறது. 8435

(கீழைத் தெருவிலே கொடுத்து.)


கீழோர் ஆயினும் தாழ உரை.

கீற்றிலே கனவிலே தெரியுமா?

கீற்றிலே வேண்டாம்; காற்றிலே வாரு.

கீறி ஆற்றினால் புண் ஆறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கீ&oldid=1160277" இலிருந்து மீள்விக்கப்பட்டது