உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்மொழி இலக்கிய வரலாறு/மணிமேகலை

விக்கிமூலம் இலிருந்து

20. மணிமேகலை

ஆசிரியர்-காலம்

மணிமேகலையை இயற்றியவர் ‘கூலவாணிகன் சாத்தன்’, என்று மணிமேகலையிலுள்ள பதிகம் கூறுகிறது. ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தன்’ என்று சிலப்பதிகாரத்திலுள்ள பதிகம் செப்புகின்றது. இப்புலவரது இயற்பெயர் சாத்தன் என்பதும், இவர் கூலவாணிகம் செய்தவர் என்பதும், இவரது ஊர் மதுரை என்பதும் இத்தொடர்களால் அறியப்படும். மதுரையில் கூலவாணிகராய் இருந்த இவர் பைந்தமிழைப் பாங்குறக் கற்றுப் பாவலராயும் விளங்கினர் என்பது இத்தொடர்களால் தெளிவாகின்றது.

இவர் கோவலன் கண்ணகி காலத்தில் வாழ்ந்தவர், மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய அவளது முற் பிறப்பு வரலாற்றை நேரிற் கேட்டவர் என்பன சிலப்பதிகாரத்தால் தெரிகின்றன. மேலும் இவர் செங்குட்டுவள்-இளங்கோவடிகள் காலத்தவர் என்பதும் சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. அவ்வடிகளே சிலப்பதிகாரத்தைச் செய்ய வேண்டுமென்று இச்சாத்தனார் வேண்டினர் என்பது சிலப்பதிகாரப் பதிகத்தால் அறியக் கிடக்கின்றது. மேலும் அடிகள் தம் நூலைச் சாத்தனார் முன்னிலையில் அரங்கேற்றினார் என்பதும், சாத்தனார் இளங்கோவடிகள் முன்னிலையில் மணிமேகலையை அரங்கேற்றினார் என்பதும் இரு நூல்களின் பதிகங்களால் தெளிவாகின்றன. ஆகவே, இச்சாத்தடாக்டர் மா. இராசமாணிக்கனார் 359

னார், செங்குட்டுவன் - இளங்கோவடிகள் காலத்தவர் என்பது ஐயமற அறியக்கிடப்பது காண்க.

இனி, இவர் பாடியுள்ள மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள சிறப்புச் செய்திகளைக் காண்போம்.

நூலின் அமைப்பு

மணிமேகலை என்னும் காவியம், கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாற்றை விரித்துக் கூறும் பெருநூல் ஆகும். இது சிலப்பதிகாரத்தைப்போலவே ஆசிரியப்பாவில் அமைந்த முப்பது காதைகளையுடையது. சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி வரலாற்றை விரித்துக் கூறுவது. அதன்கண் பல சமயச் செய்திகளும் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் அது சமண சமயப் பிரசாரத்துக்கென்று எழுந்த நூல் அன்று. மணிமேகலை என்னும் இந்நூல் மணிமேகலை வரலாற்றைப் பெளத்த சமயத்தோடு பிணைத்துக் கூறுவது: அவளது வரலாற்றைக் கூறுமுகத்தான் பெளத்த சமயமே சிறந்த சமயம் என்பதை எடுத்துக்கூறும் முறையில் அமைந்திருப்பது. ஆயினும் சிலப்பதிகாரத்தைப் போன்ற நடை, வருணனைகள், அறவுரைகள், பல சமயக் கொள்கைகள் முதலியவற்றைத் தன்பால் கொண்டிருப்பது. இது பெரும்பாலும் சமய நூலாய் அமைந்திருத்தலால் கதைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. விண்ணில் பறந்து செல்லுதல், மந்திரவலிமையால் உருவம் மாறுதல், பசியின்றி இருத்தல், உணவு எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுர பியைக் கண்டெடுத்தல், கற்புடைய மங்கையைத் தீயும் துன்புறுத்தாத நிகழ்ச்சி, தெய்வங்களே நேரிற் பேசுதல் முதலிய அரிய செயல்கள் இதன்கண் கூறப்பட்டுள்ளன. ஆயினும் உயிர்களின் பசிப்பிணி போக்குதலை மிகச் சிறந்த அறமாக இந்நூல் பல இடங்களில் வற்புறுத்துகிறது.

சிறப்புச் செய்திகள் -

1. இந்திர விழா : இஃது எவ்வாறு நடைபெற்றது என்பதை இந்நூலின் முதற்காதை நன்கு எடுத்து இயம்பு கிறது. இதில் கூறப்பட்ட இந்திரவிழாவும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இந்திரவிழாவும் காவிரிப்பூம்பட்டினத்திலேயே நடைபெற்றவை. இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

2. மூவகைப் பத்தினிப் பெண்டிர்: கணவனை இழந்த பெண்டிர் உடனே கணவனுடன் எரி மூழ்கி இறப்பர்; சிலர் தனியே எரி வளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பர்; வேறு சிலர் கணவனை நினைந்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காகக் கைம்மை நோன்பு நோற்பர் (காதை 2).

3. உடலின் இழிவு: மணிமேகலையின் தோழியான சுதமதி, மணிமேகலையை விரும்பிவந்த உதயகுமரன் என்ற சோழ இளவரசனை நோக்கி, அவனால் விரும்பப்படும் உடலின் இழிவை எடுத்துரைக்கும் பகுதி படித்து அறியத்தக்கது.

“வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங்கரவின் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்.”

-காதை 4, வரி 113-121

4. உடல் அடக்க முறைகள்: சங்ககாலத்தில் இறந்தவர் உடலைச் சுடுதல், வாளா இட்டுப் போதல், தோண்டப்பட்ட குழியில் இடுதல், தாழ்ந்த இடங்களில் அடைத்து வைத்தல், தாழியினால் கவித்தல் என்னும் முறைகள் கையாளப்பட்டன (காதை 6, வரி 60-67). டாக்டர் மா. இராசமாணிக்கனார் 361

5. அரசியல் அறிவுரை : மணிமேகலா தெய்வம், மணி மேகலைமீது காதல் கொண்ட உதயகுமரன் கனவில் தோன்றிக் கீழ்வருமாறு அறிவுரை கூறியது. அவ்வறிவுரை ஆட்சித் தலைவர்கள் உள்ளத்தில் இருத்தற்குரியது.

“கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடில் மாரிவறங் கூறும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்”.

 - காதை 7 வரி 8-12

இஃது எவ்வளவு சிறந்த அறிவுரை!

6. பசிப்பிணி என்னும் பாவி : தீவதிலகை என்னும் தெய்வ மகள் பசியின் கொடுமையைப்பற்றி மணிமேகலையிடம் கூறினமை பசிப்பிணியை நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றது. அதனைக் கீழே காண்க:

“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி யென்னும் பாவி.”

 - காதை 11, வரி 76-80

7. உண்டி கொடுத்தோர் சிறப்பு: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தவராவர் என்று காயசண்டிகை கூறுகின்றாள். அவள் கூறுவதைக் கீழே காண்க:

"ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.”

-காதை, 11, வரி 92-93

8. தலயாத்திரை: மக்கள் தம் பாவத்தைப் போக்கத்தல யாத்திரை செய்து குமரித்துறையில் நீராடுதல் வழக்கம் (காதை 13, வரி-5-7).

இவ்வாறே வித்தியாதரர் தம் தீவினையைப் போக்கப் பொதியில் மலைக்கு வந்தனர் (காதை 17, வரி 22-24).

9. கணிகையர் இயல்பு: கணிகையர், பாணன் இறந்தவுடன் இறக்கும் தன்மையில்லாத யாழைப் போன்றவர்; மேலும் மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து தேன் இல்லாத பூவை விட்டு நீங்கும் வண்டினைப் போன்றவர்; மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப்போல் ஆடவரை விட்டு நீங்குபவர். இது மாதவியின் நாயாகிய சித்திராபதி கூறியுள்ள செய்தியாகும் (காதை 18, வரி 17-22).

10. கணிகையர்க்குத் தண்டனை: கணிகையருள் குடிக்குற்றப்பட்டாரை ஏழு செங்கல் சுமத்தி அரங்கினைச் சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபு (காதை 18, வரி 33-34).

11. அறம் செய்யக் காரணம்: மணிமேகலை தன்னைக் காதலித்துவந்த உதயகுமானை நோக்கித் தான் உயிர்களுக்கு அன்னம் படைக்கும் நல்லறத்தை மேற்கொண்டதற்குக் காரணம் கூறுகின்றாள். அதனை அவள் வாயாலேயே கேட்டு மகிழ்க:

“பிறத்தலும் மூத்தலும் பினிப்பட் டிரங்கலும்
இறத்தலு முடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்.”

-காதை 16, வரி 136-139

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 363

12. அரச நீதி : மணிமேகலைமீது காதல்கொண்ட உதயகுமரன் அவள் இருந்த இடத்திற்குச் சென்றான். அவனுக்கு அஞ்சிய மணிமேகலை காயசண்டிகை என்ற வித்தியாதர மகளது வேடத்தில் காணப்பட்டாள். உதய குமரன் அவளிடம் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தான் . காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அங்கு வந்த அவள் கணவனான வித்தியாதரன், உதயகுமரன் தன் மனைவியுடன் பேசுவதாகவே கருதிச் சீற்றம் கொண்டான். அவன் அன்று இரவு ஒரிடத்தில் மறைந்து இளவரசனின் வருகையை எதிர்பார்த்து இருந்தான். உதயகுமரன் அன்று இரவு மணிமேகலையைச் சந்திக்க வந்தான். மறைந்திருந்த வித்தியாதரன் அரசிளங்குமரனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான்.

மாதவர் வாயிலாக இவ்வருத்த நிகழ்ச்சியை அறிந்த, சோழமன்னன் சிறிதும் வருந்தவில்லை;

மாதவர் நோன்பும் மடவார்க் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்:
மகனை முறைசெய்த மன்னவன் வழியோர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்
ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையுங் காவல் செய் கென்றனன். '
-காதை 22, வரி 208-214

இச் சோழனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர்க் ககந்தன் என்பவன் சோழ நாட்டை ஆண்டான். அவன் மகன் மருதி என்னும் பார்ப்பணியை, “நீ வா’’ என்று அழைத்தான். இதனை அறிந்த மன்னன் அவனைத் தன் மகன் என்றும் கருதாமல் வாளால் வெட்டி வீழ்த்தினான். இங்ஙனம் இறந்தவனுக்கு முன்னோனான அரசிளங்குமரன் விசாகை என்னும் செட்டிப் பெண்ணின் கழுத்தில் தான் 364 தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

அணிந்திருந்த மாலையைப் போட முயன்றான். அதனை அறிந்த மன்னன் அவனையும் வாளால் வெட்டி வீழ்த்தினான் (காதை 22). சோழ மன்னர் நீதி வழுவாதவர் என்பதற்கு இவை ஏற்ற சான்றுகளாகும்.

13. தீயவை பத்து: கொலை, களவு, காமம், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல், வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி ஆகிய பத்தும் தீயவை (காதை 24, வரி 125–130.)

14. அரசர்க்கு அறிவுரை:

“அரசர் தாமே யருளறம் பூண்டால்
பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்” .
 -காதை 25 வரி 226-231

சமயக் கருத்துக்கள்

சங்க காலத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் முதலிய பல சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை எட்டுத் தொகை நூல்களால் அறியலாம். ஆயின், எத்துணைச் சமயங்கள் அக்காலத்தில் இருந்தன என்பதை மணிமேகலையால்தான் நன்கறிதல் கூடும். மணிமேகலை என்னும் காவியத்தில் 27ஆம் காதையில் பல சமயவாதிகள் வஞ்சிமாநகரில் இருந்தனர் என்பது கூறப்பட்டுள்ளது. அவருள் வைதிகவாதி, சைவவாதி. பிரமவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கிய வாதி, வைசேடிகவாதி , பூத வாதி. பெளத்தவாதி என்பவர் குறிப்பிடத்தக்கவராவர். இவர்களுடைய சமயக்கொள்கைகள் 27ஆம் காதையில் கூறப்பட்டுள்ளன. 29ஆம் காதையிலும் 30ஆம் காதையிலும் பெளத்த சமயக் கொள்கைகளும் கருத்துக்களும் அறிவுறுத்தும் முறையில் கூறப்பட்டுள்ளன. காபாலிகர் சுடலைநோன்பிகள் என்று இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளனர். மாவிரதிகள் ‘விரத யாக்கையர்’ என்று பேசப்பட்டுள்ளனர் (காதை 6). எனவே, சைவத்தின் உட்பிரிவுகளாகிய காபாலிகமும் மாவிரதமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இருந்தன என்பதற்கு மணிமேகலை ஏற்ற சான்றாகும்.

ஏழு என்ற எண்ணிக்கை பெளத்த சமயத்தில் மதிப்பு மிக்கதாகும் (9-18, 13-14, 22-72).

பாண்டு கம்பளம்: தேவேந்திரன் இருக்கைமீது வெள்ளைக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். இது ‘பாண்டு கம்பளம்’ எனப்படும். நிலவுலகில் ஐந்தவித்த பெரியோர் தோன்றுவராயின், அப்பாண்டு கம்பளம் அசையும். இந்திரன் அதன் அசைவால் உண்மையை உணர்ந்து, ஐந்தவித்த பெரியோனைக் காணச் செல்வான். அவனுக்கு வேண்டும் உதவியைச் செய்வான் (காதை 14, வரி 25-35). இப்பாண்டு கம்பளச் செய்தி சமணசமய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

விருப்பப்படி பிறப்பு: மனிதன் ஒரு பிறப்பில் எதனை அழுத்தமாக விரும்புகின்றானோ அவ்விருப்பப்படியே அடுத்த பிறவியில் பிறப்பன் என்பது அக்கால மக்கள் நம்பிக்கை. ஆபுத்திரன் ஒரு பசுவினால் வளர்க்கப்பட்டவன். அவன்,

“தற்காத் தளித்த தகைஆ அதனை
ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின்
ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத்
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்

கொருதா னாகிஉலகுதொழத் தோன்றினன்.”

—காதை 15, வரி 17-21

அறத்தின் சிறப்பு : இந்நூல் முழுமையும் அறத்தையே வற்புறுத்துகிறது. அறம் என்பது நல்வினை: நல்வினை ஒன்றே உயிர்க்கு உறுதியாவது என்று இந்நூல் வற்புறுத்துகிறது. நல்வினையில் சிறப்புப்பகுதி தானம் செய்தல். அத்தான வகைகளுள் உயர்ந்தது அன்னதானம்.

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வருக் தாரார்

மிக்க அறமே விழுத்துணை யாவது”

-காதை 22, வரி 135-138

தீவினை வலிமையுடையது என்பது இந்நூலில் பல இடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

“ஆங்கவன் தீவினை உறுத்த தாகலின்” 22-193.”

உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டது, சென்ற பிறப்பில் அவன் செய்த தீவினையால் ஆகும் (23, 82-85).

“உம்மை வினைவந்து உறுத்தல் ஒழியாது.”

என்று கண்ணகித் தெய்வம், கோவலன் கொல்லப்பட்டமைக்கு, அவன் முற்பிறப்பில் செய்த தீவினையை மணிமேகலைக்கு எடுத்துக் காட்டியது (26. வரி 14-33).

வருணனை

மணிமேகலை என்னும் காவியம் பெளத்த சமயச் செய்திகளையே மிகுத்துக் கூறுவதாயினும், ஆங்காங்குச் சில வருணனைப் பகுதிகளையும் பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்கது. காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் எங்ஙனம் அமைந்திருந்தது என்பதைச் சாத்தனார் அழகுறக் கூறியுள்ளார். அவ்வுவவனத்தில் குரவம், மரவம், குருந்தம் கொன்றை, திலகம், வகுளம், வெட்சி, நரந்தம், நாகம், புன்னை, பிடவம், தளவம், குடசம், வெதிரம், அசோகம், செருந்தி, வேங்கை, சண்பகம் முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அவ்வனத்தின் தோற்றம், கைத்தொழிலில் பண்பட்ட வல்லுநரால் இயற்றப்பட்ட ஓவியத்தொழில் அமைந்த துகில் போர்த்ததுபோலக் காணப்பட்டதாம் (காதை 3, வரி 160-169).

மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் நோக்கிச் சென்றபொழுது காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் அந்நிகழ்ச்சிகளைத் தம் புலமைத்திறன் விளங்கும்படி பாடியுள்ளமை படித்து இன்புறத்தகும். குடிகாரன் ஒருவன் சமணத் துறவியின் பின் சென்று அவனைப் பரிகசித்தல் ஒரு காட்சியாகக் கூறப்பட்டுள்ளது. பித்தன் செயல்கள் இரண்டாம் காட்சியாகக் காட்டப்பட்டுள்ளன. பேடிபோல வேடமிட்டுக் கண்ணன் மகன், வாணனது பேரூரில் ஆடிய பேடிக் கூத்து ஒரு தெருவில் ஆடப்பட்டது. ஆசிரியர் அப்பேடிக் கோலத்தை அழகுற வருணிக்கிறார். இப்பகுதிகள் சாத்தனாரது பாத்திறனை நமக்கு நன்கு விளக்குவனவாகும்.

ஆசிரியர் புகாரை வனப்பு மிகுந்த ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி வருணித்திருப்பது படிக்கப்படிக்கச் சுவை பயப்பதாகும் (காதை 5, வரி 109-122) ,

இவ்வாறே சாத்தனார் அந்திப்பொழுதை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி வருணித்திருத்தல் அவரது புலமையை அழகுற அறிவிப்பதாகும் (காதை 5, வரி 123-141).

ஆசிரியர் சக்கரவாளக் கோட்டத்தைத் திறம்படப் பல வரிகளில் வருணித்துள்ளார். அக்கோட்டத்தில் இறந்தவர் பொருட்டு எடுக்கப்பெற்ற சமாதிகள் இத்தகையவை என்று ஆசிரியர் கூறியுள்ளது கவனிக்கத்தகும்;

“அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்

நால்வேரு வருணப் பால்வேறு காட்டி”

இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும். '

 - காதை 8 , வரி 54-59

பத்தொன்பதாம் காதையில் அரண்மனையைச் சேர்ந்த பூம்பொழில் வருணனை படித்து இன்புறத்தகும்(வரி56-106). அப்பூம்பொழிலின் நடுவில் பசும்பொன் மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபம் மகத வினைஞர், மராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர், யவனத் தச்சர், தண்டமிழ் வினைஞர் ஆகிய ஐந்து வகையினரும் சேர்ந்து அமைத்ததாகும். அம்மண்டபத்தின் கூரை பொன்வேயப்பட்டது. அது பசிய சாணத்தால் மெழுகப்படாதது; சந்தனத்தால் மெழுகப்பட்டது என்று கொள்ளலாம்.

இருபத்தெட்டாம் காதையில் வஞ்சி மாநகரைச் சூழ இருந்த அகழியில் கலந்த பலவகை நீரும் அகழியின் சிறப்பும் படித்து இன்புறத் தக்கவை. அவற்றைக் கீழே காண்க:

“மாடமகளிர் கரிய கூந்தலை ஆட்டிய நறுமணக் கலவை நீர், எந்திரவாவிகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவர் அணிந்த சாந்து கலந்தோடும் நீர், மன்னன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விசிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேல் ஒருவர் வீசும் நறுமண நீர், உபாசகர் துறவிகளின் திருவடிகளைத் தம் கைகளால் விளக்கும் நன்னீர், நறும்புகை கமழும் தண்ணீர்ப்பந்தர்களில் குடங்களிலிருந்து ஊற்றுகின்ற நீர், மணச் சாந்துகளை அரைப்பவர் மனைகளின் நீர் ஆகியவை அகழியில் பாய்கின்றன. அவற்றால் அகழியில் வாழும் முதலை இனங்களும் மீன்களும் தமது புலால் நாற்றத்தை நீக்குகின்றன. அவ்வகழியில் தாமரை, குவளை, கழுநீர், ஆம்பல் முதலிய பூக்கள் மலர்ந்துள்ளன. வண்டினங்கள் அம்மலர்களிலுள்ள தேனை உண்டு ஆரவாரிக்கின்றன. இத்தகைய சிறப்புடைய அகழி வில்லைப்போலக் காணப்படுகின்றது.” கதைகள்

வடமொழியாளர் தொல்காப்பியர்க்கு முன்னரே தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றனர் என்பது முன்னரே கூறப்பட்டது. அவர்கட்குப் பின்பு சமணரும் பெளத்தரும் தமிழகத்தில் தங்கித் தங்கள் சமயக் கொள்கைகளைப் பரப்பினர். பெருந்தேவனார் என்ற புலவர் பாரதத்தைத் தமிழிற் பாடிப் புகழ் பெற்றார். இராமாயண வரலாற்றுச் செய்திகளுட் சில எட்டுத்தொகை நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணப் படுகின்றன. புத்தர் பல பிறவிகளை எடுத்து உயிர்களுக்குப் பல நன்மைகளைச் செய்தனர் என்பதைக் கூறும் புத்த சாதகக் கதைகள் அக்காலத் தமிழகத்தில் பரவியிருந்தன; சுருங்கக் கூறின் வேதநெறி, சமணம், பெளத்தம் பற்றிய கதைகள் தமிழகத்தில் நன்கு பரவியிருந்தன என்னலாம்.

மணிமேகலையில் இத்தகைய பல கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் வசிட்டன் அகத்தியன் பிறப்புப் பற்றிய கதை, உதயணன் கதை, அகலிகை கதை, திக் கடவுள் மனைவியின் கதை, பரசுராமன் அரசர்களை அடக்கிய கதை, ஒரு பிறப்பில் வடநாட்டில் பிறந்த சிலர் வேறு பிறவியில் தென்னாட்டில் பிறந்த கதைகள் என்பவை குறிப்பிடத் தக்கவை. திருமால் மூன்றடியால் மூவுலகங்களையும் அளந்தமை, கண்ணனும் பலராமனும் நப்பின்னையோடு நடனமாடியமை, திருமாலின் மகன் பிரமன் என்பது. சக்கரவாளக் கோட்டம் மயனால் அமைந்தமை என்றாற் போன்ற செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பிறமொழிச் சொற்கள்

பெளத்த நூல்கள் முதலில் பாலிமொழியில் எழுதப்பட்டன; பின்னரே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே, பெளத்த சமயம் பற்றிய கருத்துக்களை விளக்கும் இடங்களிலெல்லாம் இவ்விரு மொழிச் சொற்களும் இடம்

த-24

பெற்றுள்ளமை இயல்பாகும். மணிமேகலை தலைசிறந்த பெளத்த காவியம். அதனால் இதன்கண் சிலப்பதிகாரத்தில், காணப்படும் பிறமொழிச் சொற்களைவிட மிகுதியான பிற மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இயல்பேயாகும். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:

தீவகச் சாந்தி, பூரணகும்பம், விலோதம், வாதி (காதை 1): சித்திராபதி, வயந்தமாலை, காயக்கரணம் (2): சுதமதி, சண்பை, ஆராமம், மாருதவேகன், உய்யாணம், சம்பாதிவனம், கவேரன், பகவன், உவவனம், பீடிகை, அராந்தாணம், வித்தகர், சித்திரம் (3) , உதய குமரன், மகரம் (4); சாப சரத்தி, சமணர், சங்கதருமன், குணன், வாமன், வருணம், தீர்த்தன், புராணம் (5): விஞ்சயன், வஞ்சம், தோரணம், சார்ங்கலன், கோதமை, தெய்வ கணங்கள், அசுரர். அந்தரம், யோசனை (6).

இரவிவன்மன், துரகம், துச்சையன். தாரை, வீரை, இலக்குமி (7) , பதும சதுரம், தருமபீடிகை (8): மாதவன், காந்தாரம், பூர்வதேயம் பாதலம், அசோதரம், அமுதபதி, அத்திபதி, சித்திபுரம், நீலபதி, இராகுலன், கவேரகன்னி, ஆசனம் (9); சாதுசக்கரன், இரத்தினதீவம், அமரன், அங்கம், பாதபங்கயம் (10): தீவதிலகை பூமி, சமந்தம், கோமுகி, புத்திரன். அமுதசுரபி, நாதன், பாதம், விடம் (விஷம்) (11); துடிதலோகம், மாதிரம் (12).

வாரணாசி, உவாத்தி, அவஞ்சிகன், நேமி, சிந்தா தேவி, அசலன், சிருங்கி, கம்பளன் (13); பாண்டு கம்பளம், சாவகம் (14): பிக்குணி, கோசம்பி, வத்தவன், உஞ்சை, யூகி, திப்பியம், காயசண்டிகை (15); சாதுவன், ஆதிரை, கணிகை, சாரணர். சந்திரதத்தன், அசரீரி, பத்தினி, பாடை (பாஷை), குரு. செட்டி (16) விருச்சிகன், தந்தி (யானை) , சம்பு (17) .

தாபதம், அஞ்சனம் (18) , நகுலம், மகதம், மராட்டம், தமனியம் (19); விச்சை (வித்தை) , விந்தம், அந்தரி (20); டாக்டர் மா. இராசமாணிக்கனார் 371

அற்புதம், பிரமதருமன், துவதிகன், மயன், மார்க்கம் , உத்தர மகதம், சாவகன், சாதுசக்கரன் (21); காந்தமன், சுகந்தன். பரசுராமன், ககந்தன், காகந்தி, தருமதத்தன். விசாகை, தக்கண மதுரை (22): வாசந்தவை, இராசமா தேவி (23); அபிநயம், கமலம், வாசம், சலம், பார்த்திபன், வாசவன், நாகபுலம், பூமி, சந்திரன் (24); அநித்தம், நித்தம், துக்கம், ஆரியன், கஞ்சுகம், அமரசுந்தரி, ஏதம், மந்திரி, சனமித்திரன், பிரமர் (25):படிமம், சினம், கபிலை, இந்திரவிகாரம், பிடகம், தேவகுலம் (28).

வேதவியாதன், கிருதகோடி, உவமம், ஆகமம்: அருத்தனபத்தி, வைதிகம், அபாவம், சுகம், நாமம், சாதி, கிரியை, அநுமானம், அதுமேயம், சாதனம், சாத்தியம், அந்துவயம், நிச்சயம், ஐதிகம், காந்தம், பிரமாணம், ஆபாசம், மாத்திரை, உலோகாயதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம், அக்க பாதன், கணாதன், சைமினி, பாவம், கற்பகம், வியா கரணம், விபரீதம், பரமாணு தன்மாத்திகாயம், அதன் மாத்திகாயம், காலா காயம், சீவன், பந்தம், நிம்பம், ஆகாயம், புத்தி, வாயு, பாயுபத்தம், வாக்கு, பிரளயம், புருடன், மனம், புத்தி, ஆங்காரம், சித்தம், ஆன்மா, கருமம், சாமானியம், விசேடம் (27) ; எந்திரம், சீலம், தனு, சாவகம், ககனம், தருமதவனம், சாலை, போனகம், பளிதம் (28)

ஆதி, சினேந்திரன், பிரத்தியம், பிரத்தியக்கம், திட்டாந்தம் உபநயம், நிகமனம், விபக்கம், சுபாவம், சத்தம், கடம், அநன்னுவயம், சாமம், கெளடிலச்சாமம், வெதிரேகம், சாதன்மியம் வைதன்மியம், விருத்தம், சுவசனம், பிரசித்தம், அபிரசித்தம், உபயம், விசேடியம், அவிநாசி வாதி. விநாசமம், உபயாசித்தம், அன்னியதராசித்தம், சித்தா சித்தம், ஆசிரியாசித்தம், தன்மியசித்தம், சாதாரணம், அசாதாரணம், சபக்கை, வியாபி, வியபிசாரி, சங்கயம், அநேகாந்திகம், வர்த்தித்தல், மூர்த்தம், அமூர்த்தம், சொரூபம், இந்திரியம், பரார்த்தம், சயனா சயனங்கள், சன்னு, அசன்னு, கிருத்தி, கிருத்தம், வைதன்னியம் (29); சரணாகதி, மூலம், புத்தர், சந்தி, நரகம், ஆதிக்கண்டம், உற்பவித்தல். மைத்திரி, கருணா முதிதை, சுருதி, சிந்தனாபாவனாதரிசனை, ஞானதீபம் (30).

முடிவுரை

இதுகாறும் கூறியவற்றை முறையாகப் பார்த்துவரின், சமயத்துறையில் பிற சமயத்தார் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றுவந்ததையும், அவர்கள் செல்வாக்குப் பெறப் பெற, வேற்று மொழிச் சொற்களும் தமிழில் படிப்படியாக மிகுதிப்படலாயின என்பதும் இனிது புலனாகும். இந்த வளர்ச்சியை உளங் கொண்டாற்றான் அடுத்துவரும் பகுதியில் சங்க காலத்திற்குப் பின்பு உண்டான தமிழ் வளர்ச்சியை உள்ளவாறு உணர்தல் கூடும்.

பிற்சேர்க்கை
சங்ககாலப் புலவர் - 552

1. அகம்பன் மாலாதனார் 22.ஆர்க்காடுகிழார் மக
2. அஞ்சில் அஞ்சியார் னார் வெள்ளைக் கண்
3. அஞ்சிலாந்தையார் ணத்தனார்
4. அஞ்சிலத்தை மகள் 23.ஆரியவரசன் யாழ்ப்
நாகையார் பிரமதத்தன்
5. அடைநெடுங் கல்வி 24.ஆலங்குடி வங்கனார்
யார் 25.ஆலத்தூர் கிழார்
6. அண்டர்மகன் குறு 26.ஆலம்பேரி சாத்தனார்
வழுதி 27.ஆலியார்
7. அணிலாடு முன்றிலார் 28.ஆவூர்க் காவிதிகள்
8. அதியன் விண்ணத்த சாதேவனார்
னார் 29.ஆவூர் கிழார்
9. அந்தியிளங் கீரனார் 30.ஆவூர்க்கிழார் மகனார்
10.அம்மள்ளனார் கண்ணனார்
11.அம்மூவனார் 31.ஆவூர் மூலங்கிழார்
12.அம்மெய்யனாகனார் 32.ஆவூர் மூலங்கிழார்
13.அரிசில்கிழார் மகனார் பெருந்தலைச்
14.அல்லங்கீரனார் சாத்தனார்
15.அள்ளூர் நன்முல்லை 33.இடைக்கழிநாட்டு நல்
யார் லூர் நத்தத்தனார்
16.அறிவுடை நம்பி 34.இடைக்காடனார்
17.ஆசிரியர் நல்லந்துவ 35.இடைக்குன்றூர் கிழார்
னார் 36.இடையன் சேந்தங்
18.ஆசிரியர் பெருங்கண் கொற்றனார்
ணனார் 37.இடையன் நெடுங்கீர
19.ஆடுதுறை மாசாத்த னார்
னார் 38.இம்மென் கீரனார்
20.ஆதிமந்தியார் 39.இரணிய முட்டத்துப்
21.ஆமூர்க் கவுதமன் பெருங்குன்றூர்ப்
சாதேவனார் பெருங்கௌசிகனார் |
40. இருங்கோன் ஒல்லை 69. உறையன்
யாயன் செங்கண்ண 70. உறையூர் இளம்பொன்
னார் வாணிகனார்
41. இருந்தையூர்க் கொற் 71. உறையூர் ஏணிச்சேரி
றன் புலவன் முடமோசியார்
42. இரும்பிடர்த்தலையார் 72. உறையூர்க் கதுவாய்
43. இளங்கீரந்தையார் சாத்தனார்
44. இளங்கீரனார் 73. உறையூர்ச் சல்லியன்
45. இளங்கோ (அடிகள்) குமரன்
46. இளந்திரையனார் 74. உறையூர்ச் சிறுகந்தன்
47. இளந்தேவனார் 75. உறையூர்ப் பல்காய
48. இளநாகனார் னார்
49. இளம்புல்லூர்க் காவிதி 76. உறையூர் மருத்துவன்
50. இளம்பூதனார் தாமோதரனார்
51. இளம்பெருவழுதியார் 77. உறையூர் முதுகண்
52. இளம்போதியார் ணன் சாத்தனார்
53. இளவெயினனார் 78. உறையூர் முதுகூத்த
54. இளவேட்டனார் னார்
55. இறங்குகுடிக் குன்ற நாடன் 79. உறையூர் முதுகொற்
56. இறையனார் றன்
57. இனி சந்த நாகனார் 80. ஊட்டியார்
58. ஈழத்துப் பூதந்தேவ 81. ஊன்பித்தை
னார் 82. ஊன்பொதி பசுங்
59. உக்கிரப் பெருவழுதி குடையார்
60. உகாய்க்குடி கிழார் 83. எயிற்றியனார்
61. உம்பற்காட்டு இளங் 84. எயினந்தை மகனார்
கண்ணனார் இளங்கீரனார்
62. உமட்டூர்கிழார் மக 85. எயினந்தையார்
னார் பரங்கொற்ற 86. எருக்காட்டூர்த் தாயங்
னார் கண்ணனார்
63. உருத்திரன் 87. எருமை வெளியனார்
64. உரோடகத்துக் கந்த 88. எருமை வெளியனார்
ரத்தனார் மகனார் கடலனார்
65. உரோடகத்துக்காரன் 89. எழூஉப்பன்றி நாகன்
66. உலோச்சனார் குமரனார்
67. உவர்க்கண்ணூர்ப் புல் 90. ஐயாதிச் சிறுவெண்
லங்கீரனார் தேரையார்
68. உழுந்தினைப் புலவன் 91. ஐயூர் முடவனார் |
92. ஐயூர் மூலங்கிழார் 118. கடுவன் மள்ளன்
93. ஒக்கூர் மாசாத்தனார் 119. கண்ணகனார்
94. ஒக்கூர் மாசாத்தியார் 120. கண்ணகாரன் கொற்
95. ஒருசிறைப் பெரியனார் றனார்
96. ஒரூஉத்தனார் 121. கண்ணங் கொற்
97. ஒல்லையூர் தந்த பூதப் றனார்
பாண்டியன் 122. கண்ணம் புல்லனார்
98. ஓதஞானி 123. கண்ணன்
99. ஓதல் ஆந்தையார் 124. கணக்காயன் தத்தன்
100. ஓரம் போகியார் 125. கணக்காயனார்
101. ஓரில் பிச்சையார் 126. கணக்காயனார் மக
102. ஓரேருழவர் னார் நக்கீரனார்
103. ஓரோடோகத்துக் கந் 127. கணியன் பூங்குன்றன்
தரத்தனார் 128. கதப்பிள்ளைச் சாத்த
104. ஒளவையார் னார்
105. கங்குல் வெள்ளத்தார் 129. கதையங் கண்ண
106. கச்சிப்பேட்டு இளந் னார்
தத்தனார் 130. கந்தக் கண்ணன்
107. கச்சிப்பேட்டுக் காஞ் 131. கந்தரத்தனார்
சிக்கொற்றன் 132. கபிலர்
108. கச்சிப்பேட்டு நன்னா 133. கயமனார்
கையார் 134. கருங்குழலாதனார்
109. கச்சிப்பேட்டுப் பெருந் 135. கரும்பிள்ளைப்
தச்சனார் பூதனார்
110. கடம்பனூர்ச் சாண் 136. கருவூர் ஓதஞானி
டிலியன் 137. கருவூர்க் கண்ணம்
111. கடலுண் மாய்ந்த பாளனார்
இளம்பெருவழுதி 138. கருவூர்க் கண்ணம்
112. கடியலூர் உருத்திரங் புல்லனார்
கண்ணனார் 139. கருவூர்க்கதப்பிள்ளை
113. கடுகுபெருந்தேவனார் 140. கருவூர்க் கதப்பிள்
114. கடுந்தொடைக் காவி ளைச் சாத்தனார்
னார் 141. கருவூர்க் கந்தப்பிள்
115. கடுந்தோள் கரவீரன் ளைச் சாத்தனார்
116. கடுவன் இளஎயின 142. கருவூர்க் கலிங்கத்த
னார் னார்
117. கடுவன் இளமள்ள 143. கருவூர் கிழார்
னார் 144. கருவூர்க் கோசனார்
145. கருவூர்ச் சேரமான் 170. காவட்டனார்
சாத்தன் 171. காவற் பெண்டு
146. கருவூர் நன்மார்ப 172. காவன் பூத
னார் ரத்தனார்
147. கருவூர்ப் பவுத்திரன் 173. காவன் முல்லைப்
148. கருவூர்ப் பூதஞ்சாத்த பூதனார்
னார் 174. காவிரிப்பூம் பட்டினத்
149. கருவூர்ப் பெருஞ் துக் கந்தரத்தனார்
சதுக்கத்துப் பூதநாத 175. காவிரிப்பூம் பட்டினத்
னார் துக் காரிக் கண்ண
150. கல்பொரு சிறுநுரை னார்
யார் 176. காவிரிப்பூம் பட்டின
151. கல்லாடனார் த்துச் செங்கண்ணனார்
152. கவைமகன் 177. காவிரிப்பூம் பட்டினத்
153. கழாத்தலையார் துச் சேந்தன் கண்ண
154. கழார்க்கீரன் எயிற்றி னார்
யார் 178. காவிரிப்பூம் பட்டினத்
155. கழைதின் யானை துப் பொன் வாணி
யார் கனார் மகனார்நப்
156. கள்ளம் பாளனார் பூதனார்
157. கள்ளிக்குடிப் பூதம் 179. கிடங்கில் காவிதி
புல்லனார் கீரங்கண்ணனார்
158. கள்ளில் ஆத்திரை 180. கிடங்கில் காவிதி
யனார் பெருங்கொற்றனார்
159. காக்கை பாடினியார் 181. கிடங்கில் குலபதி
நச்செள்ளையார் நக்கண்ணன்
160. காசிபன் கீரனார் 182. கிள்ளி மங்கலங்கிழார்
161. காஞ்சிப் புலவனார் மகனார் சோகோவனார்
162. காட்டூர் கிழார் மக 183. கிள்ளிமங்கலங்கிழார்
னார் கண்ணனார் 184. கீரந்தையார்
163. காப்பியன் சேந்தனார் 185. கீரன் கீரனார்
164. காப்பியாற்றுக் காப்பி 186. குட்டுவன் கண்ணன்
யனார் 187. குட்டுவன் கீரனார்
165. காமக்கணிப் பசலை 188. குடபுல வியனார்
யார் 189. குடவாயில் கீரநக்கன்
166. காமஞ்சேர் குளத்தார் 190. குடவாயிற் கீரத்த
167. காரிக்கண்ணனார் னார்
168. காரிகிழார் 191. குண்டுகட் பாலி
169. காலெறிகடிகையார் யாதன்
192. குதிரைத் தறியனார் 221. கொள்ளம் பக்கனார்
193. குப்பைக் கோழியார் 222. கொற்றங் கொற்ற
194. குமட்டூர்க் கண்ணனார் னார்
195. குமுழி ஞாழலார் நப்ப 223. கொற்றனார்
சலையார் 224. கோக்குள முற்றனார்
196. குழல் தத்தன் 225. கோட்டம்பலத்துத்
197. குளம்பனார் துஞ்சிய சேரமான்
198. குளம்பா தாயனார் 226. கோட்டியூர் நல்லந்
199. குறமகள் இளவெயினி தையார்
200. குறமகள் குறிஎயினி 227. கோடை பாடிய
201. குறி இறையார் பெரும் பூதனார்
202. குறுங்கீரன் 228. கோண்மா நெடுங்
203. குறுங்குடி மருதனார் கோட்டனார்
204. குறுங்கோழியூர் 229. கோதமனார்
கிழார் 230. கோப்பெருஞ்
205. குறுவழுதியார் சோழன்
206. குன்றம் பூதனார் 231. கோவத்தன்
207. குன்றியனார் 232. கோவூர் கிழார்
208. குன்றூர் கிழார் 233. கோவேங்கை
மகனார் கண்ணத் பெருங்கதவன்
தனார் 234. கோழியூர் கிழார் மக
209. கூகைக் கோழியார் னார் செழியனார்
210. கூடலூர் கிழார் 235. கோனாட்டு எறிச்சி
211. கூடலூர் பல் கண்ண லூர் மாடலன்
னார் மதுரைக் குமரனார்
212. கூவன் மைந்தன் 236. சங்கவருணரென்னும்
213. கூழிக்கொற்றன் நாகரியர்
214. கூற்றங் குமரனார் 237. சத்தியங் குமரனார்
215. கேசவனார் 238. சல்லியங் குமரனார்
216. கொட்டம் பலவனார் 239. சாகலனார்
217. கொடிமங்கலத்து 240. சாகலாசனார்
வாதுளி நற்சேந்தனார் 241. சாத்தந்தையார்
218. கொடியூர் கிழார் 242. சாத்தன்
மகனார் நெய்தல் 243. சிறுமோலிகனார்
தத்தனார் 244. சிறுவெண்தேரையார்
219. கொல்லன் அழிசி 245. சிறைக்குடி ஆந்தை
220. கொல்லிக் கண்ணன் யார்
246. சீத்தலைச் சாத்த 267. தங்கால் ஆத்திரே
னார் யன் செங்கண்ண
247. செங்கண்ணனார் னார்
248. செம்பியனார் 268. தங்கால் பூட்கொல்ல
249. செம்புலப் பெயனீரார் னார்
250. செய்தி வள்ளுவன் 269. தங்கால் பொற்கொல்
பெருஞ்சாத்தன் லனார்
251. செயலூர் இளம் 270. தங்கால் பொற்கொல்
பொன் சாத்தன் லனார் வெண்ண
கொற்றனார் கனார்
252. செல்லூர் கிழார் 271. தங்கால் முடக்கொல்
மகனார் பெரும்பூதங் லனார்
கொற்றனார் 272. தங்கால் முடக்கொற்
253. செல்லூர்க் கொ றனார்
ற்றன் 273. தனிமகனார்
254. செல்லூர் கோசி 274. தாமப் பல்கண்ண
கன் கண்ணனார் னார்
255. சேகம் பூதனார் 275. தாமோதரன்
256. சேந்தம் பூதனார் 276. தாயங் கண்ணனார்
257. சேந்தன் கண்ண 277. தாயங் கண்ணியார்
னார் 278. திப்புத்தோளார்
258. சேந்தன் கீரன் 279. திருத்தாமனார்
259. சேரமான் இளங்குட் 280. திருவள்ளுவர் (திருக்குறள்)
டுவன் 281. தீன்மிதி நாகன்
260. சேரமான் எந்தை 282. தும்பி சொகினனார்
261. சேரமான் கணைக் 283. தும்பி சோகீரனார்
காலிரும்பொறை 284. துறைக் குறுமாவிற்
262. சேரமான் கோட்டம் பாலங்கொற்றனார்
பலத்துத் துஞ்சிய 285. துறையூர் ஓடை
மாக்கோதை கிழார்
263. சோணாட்டு முகைய 286. தூங்கலோரியார்
லூர்ச் சிறுகருந்தும்பி 287. தேய்புரிப் பழங்கயிற்
யார் றனார்
264. சோழன் குளமுற்றத் 288. தேரதரன்
துத் துஞ்சிய கிள்ளி 289. தேவகுலத்தார்
வளவன் 290. தேவனார்
265. சோழன் நல்லுருத்திரன் 291. தொடித்தலை விழுத்
266. சோழன் நலங்கிள்ளி தண்டினார்
292. தொண்டி ஆமூர்ச் 323. நிகண்டன் கலைக்
சாத்தனார் கோட்டுத்தண்டனார்
293. தொண்டைமான் 324. நெட்டிமையார்
இளந்திரையன் 325. நெடுங்கழுத்துப் பா
294. தொல்கபிலர் ணர்
295. தொல் காப்பியர் 326. நெடும் பல்லியத்த
(தொல்காப்பியம்) னார்
296. நக்கண்ணையார் 327. நெடும் பல்லியத்தை
297. நக்கீரர் 328. நெடுவெண் நிலவி
298. நக்கீரனார் னார்
299. நப்பண்ணனார் 329. நெய்தல் தத்தனார்
300. நப்பாலத்தனார் 330. நெய்தற் காக்கியர்
301. நம்பிகுட்டுவன் 331. நெய்தற் சாய்த்
302. நரிவெரூஉத்தலையார் துய்த்த ஆவூர் கிழார்
303. நரைமுடி நெட்டை 332. நொச்சிநியமங்கிழார்
யார் 333. நோய்பாடியார்
304. நல்லச்சுதனார் 334. பக்குடுக்கை நன்கணி
305. நல்லந்துவனார் யார்
306. நல்லழுசியார் 335. படுமரத்து மோசிகீர
307. நல்லாவூர் கிழார் னார்
308. நல்லிறையனார் 336. படுமரத்து மோசி
309. நல்லூர்ச் சிறுமேதா கொற்றன்
வியார் 337. பதடி வைகலார்
310. நல்லெழுதியார் 338. பதுமனார்
311. நல்வழுதியார் 339. பரணர்
312. நல்விளக்கனார் 340. பராயனார்
313. நல்வெள்ளியார் 341. பரூஉமோவாய்ப் பது
314. நல்வேட்டனார் மன்
315. நற்சேந்தனார் 342. பறநாட்டுப் பெருங்
316. நற்றங் கொற்றனார் கொற்றனார்
317. நற்றமனார் 343. பனம்பாரனார்
318. நன்பலூர்ச் சிறு 344. பாண்டரங் கண்ண
மேதாவியார் னார்
319. நன்னாகனார் 345. பாண்டியன் அறி
320. நன்னாகையார் வுடைநம்பி
321. நாசும்போத்தன் 346. பாண்டியன் ஆரியப்
322. நாமலார் மகன் படை கடந்த நெடுஞ்
இளங்கண்ணன் செழியன்
347. பாண்டியன் ஏனாதி 369. பூதனார்
நெடுங்கண்ணன் 370. பூதப் பாண்டியன்
348. பாண்டியன் கானப் தேவி பெருங்கோப்
பேரெயில் கடந்த பெண்டு
உக்கிரப் பெருவழுதி 371. பூதம்புல்லன்
349. பாண்டியன் பன்னாடு 372. பெருங்கண்ணனார்
தந்தான் 373. பெருங்குன்றூர்கிழார்
350. பாண்டியன் மாறன் 374. பெருங்கோழி நாய்
வழுதி கன் மகள் நக்கண்ணையார்
351. பாண்டியன் தலையா 375. பெருங் கௌசிகனார்
லங்கானத்துச் செரு 376. பெருஞ்சாத்தன்
வென்ற நெடுஞ் 377. பெருஞ்சித்திரனார்
செழியன் 378. பெருந்தலைச் சாத்த
352. பாரகாபரன் னார்
353. பாரதம் பாடிய 379. பெருந்தேவனார்
பெருந்தேவனார் 380. பெருந்தோட் குறுஞ்
354. பாரி மகளிர் சாத்தன்
355. பாலைக் கௌத 381. பெரும்பதுமனார்
மனார் 382. பெரும்பாக்கன்
356. பாலை பாடிய பெருங் 383. பெருவழுதி
கடுங்கோ 384. பேய்மகள் இள
357. பாவைக் கொட்டி வெயினி
லார் 385. பேயனார்
358. பிசிராந்தையார் 386. பேயார்
359. பிரமசாரி 387. பேராலவாயர்
360. பிரமனார் 388. பேரிசாத்தனார்
361. பிரான் சாத்தனார் 389. பேரெயில் முறுவலார்
362. புதுக்கயத்து வண் 390. பொத்தியார்
ணக்கண் கம்பூர் 391. பொதுக் கயத்துக்
கிழார் கீரந்தை
363. புல்லாற்றூர் எயிற்றி 392. பொதும்பில் கிழார்
யனார் 393. பொதும்பில் கிழார்
364. புறத்திணை நன்னா மகனார் வெண்கண்
கனார் ணியார்
365. பூங்கண் உத்திரையார் 394. பொதும்பில் கிழார்
366. பூங்கண்ணன் வெண்கண்ணனார்
367. பூதங்கண்ணனார் 395. பொதும்பில் புல்லாளங்
368. பூதன்தேவனார் கண்ணியார்
396. பொய்கையார் 415. மதுரை எழுத்தாளன்
397. பொருந்தில் இளங் சேந்தன்
கீரனார் 416. மதுரை எழுத்தாள்ன்
398. பொன்மணியார் சேந்தன் பூதனார்
399. பொன்முடியார் 417. மதுரைஒலைக்கடைக்
400. பொன்னாகன் கண்ணம் புகுந்தாரா
401. போதனார் யத்தனார்
402. போந்தைப் பசலை 418. மதுரை ஒலைக்கடை
யார் யத்தார் நல்வெள்ளை
403. மடல்பாடிய மாதங் யார்
கீரனார் 419. மதுரைக் கடையத்
404. மதுரை அளக்கர் தார் மகன் வெண்
ஞாழார் மகனார் அம் ணாகன்
மள்ளனார் 420. மதுரைக் கண்டரதத்
405. மதுரை அளக்கர் தனார்
ஞாழார் மகனார் 421. மதுரைக் கண்ணத்த
மள்ளனார் னார்
406. மதுரை அறுவை 422. மதுரைக் கண்ண
வாணிகன் இளவேட் னார்
டனார் 423. மதுரைக் கணக்காய
407. மதுரை ஆசிரியர் னார்
கோடன் கொற்றே 424. மதுரைக் கணக்காய
வன் னார் மகனார் நக்கீர
408. மதுரை ஆசிரியர் நல் னார்
லந்துவனார் 425. மதுரைக் கணியன்
409. மதுரை ஆருலவிய பூதத்தனார்
நாட்டு ஆலம்பேரி 426. மதுரைக் கதக் கண்ணன்
சாத்தனார் 427. மதுரைக் கள்ளில்
410. மதுரை இளங்கண் கடையத்தன் வெண்
ணிக் கௌசிகனார் ணாகனார்
411. மதுரை இளங்கௌசிகனார் 428. மதுரைக் காஞ்சிப்
412. மதுரை இளம்பாலா புலவன்
சிரியன் சேந்தன் 429. மதுரைக் காமக்கணி
கூத்தனார் நப்பாலத்தனார்
413. மதுரை ஈழத்துப் 430. மதுரைக் காருல
பூதன் தேவனார் வியங் கூத்தனார்
414. மதுரை எழுத்தாளன் 431. மதுரைக் கூத்தனார்
432. மதுரைக் கூலவாணி 449. மதுரைப் பாலாசிரி
கன் சாத்தனார் யர் நற்றமனார்
(மணிமேகலை) 450. மதுரைப் புல்லங்
433. மதுரைக் கூலவாணி கண்ணனார்
கன் சீத்தலைச் சாத்தனார் 451. மதுரைப் பூதன் இள
434. மதுரைக் கொல்லன் நாகனார்
புலவன் 452. மதுரைப் பூவண்ட
435. மதுரைக் கொல்லன் நாகன் வேட்டனார்
வெண்ணாகனார் 453. மதுரைப் பெருங்
436. மதுரைச் சீத்தலைச் கொல்லன்
சாத்தனார் 454. மதுரைப் பெரு மருத
437. மதுரைச் சுள்ளம் னார்
போதனார் 455. மதுரைப் பெரு மரு
438. மதுரைச் செங்கண் திள நாகனார்
ணனார் 456. மதுரைப் பேரால
439. மதுரைத் தத்தங் வாயார்
கண்ணனார் 457. மதுரைப் பொன்செய்
440. மதுரைத் தமிழ்க் கூத் கொல்லன் வெண்
தன் நாதன் தேவ ணாகனார்
னார் 458. மதுரைப் போத்த
441. மதுரைத் தமிழ்க் கூத் னார்
தனார் 459. மதுரை மருதங்கிழார்
442. மதுரைத் தமிழ்க் கூத் மகனார் பெருங்கண்
தனார் கடுவன் மள் ணனார்
ளனார் 460. மதுரை மருதங்
443. மதுரை நக்கீரர் கிழான் மகன் இளம்
444. மதுரை நல்வெள்ளி போத்தன்
யார் 461. மதுரை மருதனின்
445. மதுரைப் படை மங்க நாகனார்
மன்னியார் 462. மதுரை மள்ளனார்
446. மதுரைப் பண்ட 463. மதுரை வேளாசான்
வாணிகன் இளந் 464. மதுரை வேளா தத்
தேவனார் தன்
447. மதுரைப் பள்ளி மரு 465. மருங்கூர் கிழார்
தங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
சோகுத்தனார் 466. மருங்கூர்ப் பட்டினத்
448. மதுரைப் பாலாசிரி துச் சேந்தன் குமர
யர் நப்பாலனார் னார்
467. மருங்கூர் பாகைச் 495. முடத்தாமக் கண்ணி
சாத்தன் பூதனார் யார்
468. மருதம் பாடிய இளங் 496. முடத்திருமாறன்
கடுங்கோ 497. முது கூற்றனார்
469. மருதன் இளநாக 498. முப்பேர் நாகனார்
னார் 499. முள்ளியூர்ப் பூதியார்
470. மலையனார் 500. முரஞ்சியூர் முடி நாக
471. மள்ளனார் ராயர்
472. மாங்குடிகிழார் 501. முறுவெங் கண்ண
473. மாங்குடி மருதனார் னார்
474. மாடலூர் கிழார் 502. மூலங்கீரனார்
475. மாதி மாதிரத்தனார் 503. மையோடக் கோவ
476. மாதிரத்தன் னார்
477. மாமலாடன் 504. மோசி கண்ணத்த
478. மாமூலனார் னார்
479. மாயெண்டன் 505. மோசிக் கரையனார்
480. மார்க்கண்டேயனார் 506. மோசி கீரனார்
481. மாலை மாறன் 507. மோசி கொற்றனார்
482. மாவளத்தான் 508. மோசி சாத்தனார்
483. மாற்பித்தியார் 509. மோதரசனார்
484. மாற்றுார் கிழார் மக 510. வடமநெடுந் தத்த
னார் கொற்றங் னார்
கொற்றனார் 511. வடமவண்ணக்கன்
485. மாறன் வழுதி 512. வடமவண்ணக்கன்
486. மாறோக்கத்து நப்ப சொருமருங்குமரனார்
சலையார் 513. வடம வண்ணக்கன்
487. மிளைக் கந்தன் தாமோதரனார்
488. மிளைக் கிழான் நல் 514. வடம வண்ணக்கன்
வேட்டனார் பெருஞ் சாத்தனார்
489. மிளைப் பெருங் கந் 515. வடம வண்ணக்கன்
தன் பேரிசாத்தனார்
490. மிளை வேள் தித்தன் 516. வடமன் தாமோதரன்
491. மீளிப் பெரும்பதுமனார் 517. வடமோதங்கிழார்
492. மீனெறி தூண்டிலார் 518. வண்ணப்புறக் கந்த
493. முக்கல் ஆசான் நல் ரத்தனார்
வெள்ளையார் 519. வருமுலையாரித்தி
494. முடங்கிக் கிடந்த 520. வன்பரணர்
நெடுஞ் சேரலாதன் 521. வாடாப் பிரமந்தன்
522. வாயில் இளங்கண் 538. வெண்ணிக் குயத்தி
ணன் யார்
523. வாயிலான் தேவன் 539. வெண்பூதன்
524. வாலம் பேரி சாத்த 540. வெண்பூதியார்
னார் 541. வெண்மணிப்பூதி
525. வான்மீகியார் 542. வெள்ளாடியனார்
526. விட்டகுதிரையார் 543. வெள்வியந் தின்ன
527. விரிச்சியூர் நன்னாக னார்
னார் 544. வெள்ளி வீதியார்
528. விரியூர் நக்கனார் 545. வெள்ளூர் கிழார் மக
529. வில்லக விரலினார் னார் வெண்பூதியார்
530. விழிக்கட் பேதைப் 546. வெள்ளெருக்கிலை
பெருங்கண்ணனார் யார்
531. விற்றூற்று மூதெயி 547. வெள்ளைக்குடி நாக
னனார் னார்
532. விற்றூற்று வண்ணக் 548. வெள்ளை மாளர்
கன் தத்தனார் 549. வெறிபாடிய காமக்
533. வினைத் தொழில் கண்ணியார்
சோகீரனார் 550. வேட்ட கண்ணன்
534. வீரை வெளியனார் 551. வேம்பற்றூர்க் கண்
535. வீரை வெளியன் தித்தனார் ணன் கூத்தன்
536. வெண்கண்ணனார் 552. வேம்பற்றூர்க் குமர
537. வெண்கொற்றன் னார்

.