தமிழ் அகராதிக் கலை/ஐந்தாம் பாகம்
ஐந்தாம் பாகம்
சொல்லும் மொழியும்
சொல் பிறந்த கதை
சொற்களின் சேர்க்கையே மொழி (பாஷை). மொழி பேசும்போது பல சொற்களைத் தொடர்ந்து ஒலிக்கி றோம். சொற்களின் தொடர்ச்சியைச் சொற்றொடர் அல்லது வாக்கியம் என்கிறோம். மொழி பேசும்போதும் எழுதும்போதும் பல வாக்கியங்கள் இடம் பெறுகின் றன.
காரண காரிய முறைப்படி (Logical Method) எழுத் துக்களால் ஆனது சொல் - சொற்களால் ஆனது வாக் கியம் - வாக்கியங்களால் ஆனது மொழி - என்றாலும், மொழியில் முதலில் எழுத்துக்களும் அடுத்துச் சொற் களும், பின்னர் வாக்கியங்களும் தோன்றவில்லை; முத லில் வாக்கியங்களும் பின்பு சொற்களும் பின்னரே எழுத்துக்களும் தோன்றின. உளவியல் (Psychological 448
Method) முறைப்படி இக்கருத்தே பொருத்தமாகப் புலப் படுகிறது. எப்படி?
முதற்காலத்தில் மக்கள் ஒருவர்க்கொருவர் தம் கருத்தை வாக்கியமாகவே பேசித்தெரிவித்துக் கொண் டனர். இன்றுங்கூட இப்படித்தானே ! தனி எழுத்தோ, தனிச் சொல்லோ ஒரு கருத்தை அறிவிக்க முடியாது. சில வேளைகளில் தனிச் சொல் ஒரு கருத்தை அறிவிப் பதுபோல் தோன்றினும், அந்தத் தனிச் சொல்லில் ஒரு வாக்கியம் கட்டாயம் மறைந்திருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் 'தண்ணீர்' என்று ஒரு சொல் மட்டும் சொல்வாரேயானால், 'தண்ணீர் கொண்டு வா' என்று சொல்கிறார் என்பது கருத்து. எனவே, 'தண்ணீர்' என் னும் ஒரு சொல்லுக்குள் தண்ணீர் கொண்டு வா என் னும் ஒரு வாக்கியம் மறைந்திருப்பது பேச்சுப் பழக்கத் தால் புலனாகிவிடும். பேசுபவர் சில வேளைகளில் முயற் சிச் சிக்கனத்திற்காக, வாக்கியமாகப் பேசாமல் தனிச் சொல் சொல்கிறார் என்பதுதான் இதிலுள்ள உண்மை .
அவ்வளவு ஏன் ? தொடக்கத்தில் குழந்தைகளுங் கூட வாக்கியமாகத்தானே பேசுகிறார்கள்! இன்னுங் கேட்டால், குழந்தைகளின் குதலைப் பேச்சிலே சொற் களைத் தனித்தனி வடிவத்தில் அடையாளங் கண்டு பிடிக்க முடியாது; ஏதோ மொத்தையாக ஒலிகளின் சேர்க்கை தான் காதில் விழும் ; பிறகு நாளடைவி லேயே ஒவ்வொரு சொல்லின் உருவமும் பிரிவினை பிரிவினையாகப் புரியும்.
Tக
இது போலவே, மக்களினம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன் குழந்தைப் பருவத்திலிருந்த (Basic Period) தொடக்க காலத்தில், ஏதேதோ ஒலிச் 449
சேர்க்கைகளின் வாயிலாகவே ஒருவர்க்கொருவர் கருத் தறிவித்திருக்கவேண்டும். பின்னரே நாளடைவில் மொத்தையான ஒலித்திரளிலிருந்து தனித் தனியாகச் சொற்கள் பிரிவினை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கும் வெகு காலத்திற்குப் பின்னரே, ஒவ்வொரு சொல்லின் ஒலியையும் பல கூறுகளாகப் பிரித்து ஒவ் வோர் ஒலிக் கூற்றிற்கும் ஒவ்வோர் எழுத்து கண்டு பிடித்து மொழிக்கு வரிவடிவம் உண்டாக்கினர்
அறிஞர்.
'அணில்' என்னும் சொல்லை எடுத்துக் கொண்டால், அ - ணி - ல் என்னும் மூன்று எழுத்துக்களும் உண்டான பின்புதான் சொல் உண்டாயிற்று என்று எவரும் சொல்லார்; அவ்வாறு சொல்லினும் தவறு; ஏனெனில், இன்னும் எழுத்துருவம் பெறாமல் பேச்சளவில் மட்டும் உள்ள மொழிகள் உலகில் எத்தனையோ உள்ளன. எழுதும் மொழிகட்குள்ளுங்கூட, மராத்தி, இந்தி, முத லிய வட இந்திய மொழிகட்குத் தனி எழுத்தின்மை யால் சம்ஸ்கிருத மொழியின் எழுத்தினாலேயே அவை எழுதப்படுகின்றன. ஆங்கிலம், செர்மனி, பிரெஞ்சு முதல் லிய ஐரோப்பிய மொழிகட்கும், மலாசியாவில் வழங்கும் மலாய் முதலிய தென் கிழக்கு ஆசிய மொழிகட்கும், ஆப்பிரிக்க மொழிகள் சிலவற்றிற்கும் சொந்தமாகத் தனி எழுத்தின்மையால் அவையெல்லாம் இலத்தீன் மொழியின் (a,b,c,d முதலிய இருபத்தாறு) எழுத்துக் களினாலேயே எழுதப்படுகின்றன.
மேலுள்ள பல எடுத்துக்காட்டுகளிலிருந்து, மொழி யில் சொற்றொடர்களும் வாக்கியங்களும், அவற்றின் உறுப்பாகிய சொற்களுமே முந்தியவை; சொற்களின் உறுப்பாகிய எழுத்துக்கள் பிந்தியவையே என்னும் 450
கருத்து நன்கு தெளிவாகும். இக்கருத்துக்கு இயற்கை நிலையை யொட்டி இன்னுங்கூடச் சான்று பகரலாம் : அதாவது மக்கள் ஐந்து வயது வரையும் சொற்றொட ரையும் சொற்களையும் பேச்சின் வாயிலாகக் கற்றுக் கொண்ட பின்னர்தான் அவற்றின் உறுப்பாகிய எழுத் துக்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். மற்றும், சொந்த எழுத்துடைய தமிழ் போன்ற மொழி களைப் பேசுவோருள்ளும் படிக்காத மக்கள் பலர், பேச்சு சின் வாயிலாகச் சொற்றொடர்களையும் சொற்களையும் அறிந்து வைத்திருக்கிறார்களே தவிர, எழுத்துக்களை இன்னும் அறிந்தா ரிலர். எனவே, எழுத்து மிகவும் பிந்தியது என்பது உலகறிந்த உண்மையாகும்.
இங்கே, எழுத்து மிகவும் பிந்தியது என்னும் கருத்து இவ்வளவு விரிவாக ஏன் கூறப்பட்ட தென் றால், - சொல்லைவிட எழுத்து எப்படிப் பிந்தியதோ - அது போலவே, சொற்றொடரைவிடச் சொல் பிந்தியது என்னும் கருத்தை வலியுறுத்துவதற்கேயாம். இதனை இன்னுஞ் சிறிது ஆய்வோம் :
அ, ணி,ல் என்னும் எழுத்துக்களைத் தனித்தனி யாக ஒலிக்கும் போது தனி எழுத்துக்குப் பொருள் மதிப்பில்லை ; அவை மூன்றையும் சேர்த்து அணில் என ஒலிக்கும்போதே, அந்த ஒலித்திரள் ஓர் உயிர்ப் பொருளைக் குறித்துப் பொருள் மதிப்பு பெறுகிறது. அணில் என்ற சொல் கூட அணில் எனத் தனியாக ஒலிக்கப்படும்போது அணில் என்ன ஆயிற்று என ஒன்றும் புரியாமையால், போதுமான பொருள் மதிப்பு பெறவில்லை; அச் சொல்லே, 'அணில் மரத்தில் கடிது ஓடுகிறது', 'அணில் கடித்த கனி யிது' என வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தப்படும் பொழுது 451
தனக்குரிய பொருள் மதிப்பைப் பெறுகிறது. மற்றும், 'அணில் மரத்தில் கடிது ஓடுகிறது' என்னும் வாக்கி யத்தில் அணில் என்னும் சொல் பொருள் மதிப்பு பெறுவதோடு, அடுத்துள்ள மரம் என்னும் பெயர்ச் சொல்லும் அதனோடு இணைந்துள்ள அத்து, இல் என் னும் இடைச் சொற்களும், அடுத்துள்ள 'கடிது' என் னும் உரிச்சொல்லும், அடுத்துள்ள ஓடு என்னும் வினைச் சொல்லும் அதனோடிணைந்துள்ள கிறு, அ, து என்னும் இடைச்சொற்களுங்கூடத் தத்தமக்குரிய பொருள் மதிப்பைப் பெறுகின்றன. இவற்றைத் தனித்தனியே சொன்னால் ஏது பொருள் மதிப்பு? இதனால்தான், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், தனித் தனிச் சொற்களைத் தந்து, சொந்த வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தும்படி மாணவரைக் கோருகின் றனர். வாக்கியமாகச் சொல்லும்போது அவ்வாக்கியத் திலுள்ள தனித் தனிச் சொற்களின் பொருள் தன்னில் தானே தெளிவாக விளங்குவதால், அதற்குத் 'தன் பொருளைத் தானே விளக்கும் வாக்கியம்' எனப் பெயர் சொல்லப்படுகிறது.
இந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பில் அ, ஆ, இ, ஈ என முதலில் வெற்று எழுத்துக் களைக் கற்பிப்பதில்லை; 'அ' என்னும் தனி எழுத்தை 'அணில்' என்னும் சொல்லின் வாயிலாகவே கற்பிக் கின்றனர் ஆசிரியர்கள். அணில் என்னும் சொல்லைக் கூட, அணிலைப் பார்த்திருக்கிறாயா? அது எங்கே வசிக்கும்? அது என்ன செய்யும்? அது என்ன உண் ணும்? என்பன போன்ற வாக்கியங்களின் வாயிலாகவே அறிமுகப்படுத்துகின்றனர். அதாவது, முதலில் அணி லைப் பற்றி வாக்கியமாகப் பேசுவார்கள்; பின்னர், வாக்கியத்திலிருந்து அணில் என்னும் சொல்லைத் 452
தனித்துப் பிரித்தெடுத்து எழுதுவார்கள்; பின்னர், அணில் என்னும் சொல்லிலிருந்து 'அ' என்னும் எழுத் தைத் தனித்துப் பிரித்தெடுத்து எழுதிக் காட்டு வார்கள் - சொல்லவும் செய்வார்கள். இது தான் இயற் கைக்கு உகந்த உள்நூல் முறையாகும்.
இந்தக் காலத்தில் என்றென்ன? அந்தக் காலத்தி லேயேகூட, தமிழ்நாட்டு மாண்டிசரி' என்று சிறப்பிக் கத் தக்க ஒளவைப் பிராட்டியார், 'அறஞ் செய் விரும்பு' என்னும் வாக்கியத்தின் வாயிலாக 'அ' என் னும் எழுத்தையும், ஆறுவது சினம்' என்னும் வாக்கி யத்தின் வாயிலாக 'ஆ' என்னும் எழுத்தையும், இன் னும் இ, ஈ முதலிய மற்ற எழுத்துக்களையும் 'இயல்வது கரவேல்', 'ஈவது விலக்கேல்' முதலிய மற்ற வாக்கியங் களின் வாயிலாகவும் தமிழ்க் குழந்தைகட்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார் அல்லவா? அதனையும் ஈண்டு
ஒப்பு நோக்குக.
இதுகாறுங் கூறியவற்றிலிருந்து, சொல்லுக்கு முந்தியது சொற்றொடரே என்னும் கருத்து தெள்ளத் தெளிவாகும். அங்ஙனமெனில், தொடக்க காலத்து மக்கள் ஏதோ வாய்க்கு வந்தபடி உளறிய ஒலித் தொடரிலிருந்தே தனித் தனிச் சொற்கள் பிரிக்கப்பட்ட டன் என்னும் முடிவுக்கு வரவேண்டும்.
இந்தக் கருத்து பலருக்குச் செரிமானம் ஆகாது தான்! ஆராய்ச்சிக் கண் கொண்டு கூர்ந்து நோக்கு வோரே இதனைச் செரிக்கச் செய்துகொள்ள முடியும்.
இந்தக் கருத்தை மறுப்போர் பின்வருமாறு கூறக் கூடும் :-" மக்கள் முதலில் ஒவ்வொரு பொருளையும் 453
ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சொல்லால் குறித் தார்கள்; இப்படியாகப் பொருள்கட்கும் செயல்கட்கும் பெயர் வைத்த பின்னரே, பல சொற்களைச் சேர்த்து வாக்கியமாகப் பேசிக் கருத்தைத் தெரிவித்துக் கொண் டார்கள். தனித் தனிக் கற்கள் இல்லாமல் கட்டடம் கட்ட முடியாதது போலவே, தனித் தனிச் சொற்கள் இல்லாமல் வாக்கியம் அமைக்க முடியாதல்லவா? எனவே, கட்டடத்திற்கு முந்தியது கல்லே என்பது போல, சொற்றொடருக்கு முந்தியது சொல்லே என்பது புலனாகும்.
மேலுள்ளவாறு சிலர் கூறக்கூடும். இதிலும் ஓரளவு உண்மையிருக்கிற தென்றாலும், இவ்வுண்மை தொடக்க நிலைக்கு முற்றிலும் பொருந்தாது ; தொடக்க நிலைக்கு அடுத்தடுத்த நிலைகளிலேயே இவ்வுண்மை ஓரளவு பொருந்தும். இக்கருத்தைத் தெளிவு செய்யச் சிறிது விளக்கம் தேவை :
மாந்தர் தனித் தனிக் கற்களை யடுக்கி வீடு கட்டு வது உண்மைதான்! வீட்டிற்கு முந்தியது கல்லே என் பதும் உண்மைதான்! ஆனால் இந்தக் காலத்தில் உள் ளதுபோல் அந்தக் காலத்தில் சுடுமண் (செங்கல்) கற் களோ, கருஞ்சுதை மண் (சிமட்டி) கற்களோ இருக்க வில்லை. மலைக் குகைகளில் வாழ்ந்து பழகியவர் மரபில் வந்த மக்கள், மொத்தமான மலையிலிருந்தே தனித் தனியாகக் கருங்கல் கட்டிகளை வெட்டியெடுத்துப் பின் னர் அவற்றைச் சேர்த்துக் கல்வீடு கட்டினார்கள். இந் தக் காலத்திலுங்கூட, மலைப் பாங்கிலுள்ள ஊர்களில் மதில்கள் கருங்கல் துண்டுகளால் எழுப்பப்பட்டிருப்ப தைக் காணலாம். எனவே, தனித் தனிக் கருங்கல் துண்டுகள் எனப்படுபவை, மொத்தமான ஒரு தொகுப் 454
பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையே என்பது புல னாகும். ஒரு (மலைத்) தொகுப்பிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட தனித் தனிக் கருங்கல் துண்டங்களைக் கண்ட மக்கள், பின்னர் அவை போலவே செயற்கைக் கற் களைச் செய்யத் தொடங்கினர். செயற்கைக் கற்களுங் கூட மொத்தத் தொகுப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட் டவையே! நிலத்திலிருந்து மண்ணைத் தோண்டி யெடுத்துப் பிசைந்து தனித் தனியாக அறுத்துச் சூளை யில் இடப்பட்டவையே செங்கற்கள். சொல்லின் கதை யும் இதுவேதான் !
ஊமையர் கைக் குறிப்புடன் ஏதேதோ ஒலிகளை யெழுப்பிக் கருத்தறிவிக்க முயல்வது போலவே, முதற் காலத்து மாந்தரும் கைக் குறிப்புடன் ஏதேதோ கூக்குர லிட்டே கருத்தை அறிவித்துக்கொண்டனர். அவர்கள் எந்தப் பொருளைக் காட்டி என்ன ஒலி எழுப்பினார் களோ அந்த ஒலி அப்பொருளின் பெயராயிற்று; அந்த ஒலிப் பகுதி பிற்காலத்தில் இலக்கணத்தில் 'பெயர்ச் சொல்' எனப்பட்டது. மற்றும், அவர்கள் எந்தச் செய் லைக் (வினையைக்) குறிக்க என்ன ஒலி எழுப்பினார்களோ அந்த ஒலி அச்செயலின் (வினையின்) பெயராயிற்று; அந்த ஒலிப் பகுதி பிற்கால இலக்கணத்தில் 'வினைச் சொல்' எனப்பட்டது. பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் இப்படி ஏற்பட்டனவே.
தமிழிலக்கணத்தில் பெயர்ச்சொல், வினைச்சொல் ' இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கனுள் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களுமே முந்தி யவை; இடைச் சொற்களும் உரிச் சொற்களும் பிந்திய வையே. முந்திய பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் 455
என்னும் இருவகைக்குள்ளும் பெயர்ச் சொற்களே
முந்தியவை. பிந்திய இடைச் சொற்கள், உரிச்சொற்கள் - என்னும் இரண்டனுள் இடைச் சொற்களே முந்தி யவை. எனவேதான், முன்பின் தோன்றிய முறை யைக் கொண்டு சொற்களைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற வரிசையில் நிறுத்தினர் இலக்கண நூலோர். இச் செய்திகளை ,
சொல்லெனப் படுப பெயரே வினை என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. "இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப. என்னும் தொல்காப்பிய நூற்பாக்களானும்,
அதுவே,
இயற்சொற் றிரிசொலியல்பிற் பெயர், வினை என இரண்டாகும் இடை, உரி அடுத்து நான்கு மாம் திசைவட சொல்லணுகாவழி.
T
என்னும் நன்னூற் பாவானும் நன்கு தெளியலாம். தொல்காப்பியரும் நன்னூலாரும், 'சொற்கள் பெயர்ச் சொல், வினைச்சொல் என இரு வகைப்படும் என முன் னர்க் கூறி, இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சேர்ந் தால் நான்கு வகையாகும்' எனப் பின்னர் இடைச் சொல்லையும் உரிச்சொல்லையும் இரண்டாந்தர நிலையில் பிரித்துப் பேசியிருக்கும் நுட்பத்தை உணர்க. இலக் கண ஆசிரியர்கள் இருவரும் இவ்வாறு கூறியிருப் பதன் பொருத்தத்தை ஒரு சிறிது விளக்குவாம் :
பெயர்ச் சொற்கள் எனப்படுபவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் பெயர்களே யாகும். முதற்கால மக்கள் முதலில் பொருட்களின் 456
பெயர்களைத்தான் சுட்டியிருப்பர்; அவர் தம் பேச்சு பொருட்களைப் பற்றியதாகத்தான் முதலில் இருந்திருக்க முடியும்; பின்னரே அவர்கள் பலவிதமான செயல்களில் (வினைகளில்) கருத்துச் செலுத்தியிருப்பர்; அப்போது பலவித வினைச்சொற்கள் தோன்றியிருக்கும். இப்போ தும், முதல் முதலாக மொழி பேசத் தொடங்கும் பச் சிளங் குழந்தைகளின் பேச்சைக் கூர்ந்து நோக்கின், முத லில் அவர்தம் வாயிலிருந்து பொருட்களின் பெயர்கள் வெளிப்படுதலையே காண முடியும்; பின்னரே அவர்கள் வினைச் சொற்களை யறிந்து பேசுகின்றனர். எடுத் துக் காட்டாக, - அம்மா, அப்பா, பாச்சி (பால்), சோச்சி (சோறு), தண்ணி (தண்ணீர்), மம்மு, (தின்பண்டம்) முதலிய பெயர்ச் சொற்களைத்தான் குழந்தைகள் முத லில் கூற அறிவார்களே தவிர, ஆடுதல், ஓடுதல், தாண்டுதல், குதித்தல், பேசுதல், பாடுதல் முதலிய வினைச் சொற்களை முதலில் அறியமாட்டார்கள். எனவே, பெயர்ச்சொல்லுக்குப் பின்னரே வினைச் சொல் என்பது பெறப்படும்.
அடுத்து, இடைச்சொல் எனப்படுவது, தனித்துப் பொருள் தரும் ஒரு வகைச் சொல்லன்று; பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் இணைத்துப் பேசும்போது தானாக ஓடி வரும் ஒரு வகை ஒலியமைப்பே இடைச்சொல் எனப்படுவது. எடுத்துக் காட்டு வருமாறு :- மரம் என்பது ஒரு பெயர்ச் சொல் ; குதித்தல் (குதி) என்பது ஒரு வினைச்சொல்; 'மரத்தின் லிருந்து குதித்தான்' என்னும் தொடரில், மரம் என்னும் பெயர்ச் சொல்லின் பின்னே அத்து, இல், இருந்து என் னும் இடைச் சொற்களும், குதி என்னும் வினைச் சொல்லைத் தொடர்ந்து த், த், ஆன் என்னும் இடைச் சொற்களும் இயற்கையாக வந்து கருத்தைத் தெளி 457
வாக அறிவிக்கத் துணை புரிந்துள்ளன. இந்த இடைச் சொற்களைத் தனியாகக் கூறும்போது இவற்றிற் குப் பொருள் இல்லையாதலின் பெயர்வினைபோல் இவற் றைச் சிறந்த சொல் வகையாகக் கொள்ளாமல் இரண் டாந்தர வரிசைக்குத் தள்ளிவிட்டனர் இலக்கண நூலோர். பெயருக்கும் வினைக்கும் பின்னால் அமைந் திருப்பதே, இடைச்சொல் பெயருக்கும் வினைக்கும் பிற் பட்டது என்று கூறச் சான்றாகப் போதும்.
அடுத்து நான்காவது உரிச்சொல். கறுப்பு, சிவப்பு, மிகுதி, முழுமை முதலிய பண்புகளைக் குறிக் கும் உரிச்சொற்கள், முதற்கால மாந்தரின் பேச்சு வளம் பெற வளம்பெறவே - நாகரிகம் வளரவளரவே தோன்றி யிருக்க முடியும். குழந்தைகளும் பண்புகளை அறியக் காலம் பிடிக்கிறதன்றோ ? எனவே தான், இறுதியாக - நான்காவதாக உரிச்சொல் நிறுத்தப்பட்டது. மற்றும் 'சிவப்புக் (கோபக்) கண்கள்,' 'சாலப் (மிகுதியாகப்) பேசினான்' என உரிச்சொல் பெயர் வினையைச் சார்ந்தே வருதலின், உரிச்சொல்லைப் பெயர் வினைபோல் சிறப்புச் சொல்லாகக் கொள்ளாமல் இரண்டாந் தரமாகவே கருதினர் இலக்கண நூலோர். எனவே, தொல்காப் பியரும் நன்னூலாரும் சொற்களை யமைத்துள்ள வைப்பு முறையின் பொருத்தம் இப்போது இனிது புலனாகலாம்.
முதற்கால மக்களின் மொத்தமான ஒலித்தொகுப்பி லிருந்து பெயர், வினை முதலிய சொற்கள் பிரிந்து பிறந்த வரலாறு இதுகாறுங் கூறப்பட்டது. இந்தக் கருத்து இன்னும் சிலருக்குச் செரிமானம் ஆகவில்லை யென்றால், அவர்கட்கு மேலுஞ் சில சான்றுகள் தர வேண்டும் : 458
(1) சொல் தனித்தனியாகப் புரியாமல் மொத்த ஒலித் தொகுப்பாகக் காதில் விழும் ஓராண்டுப் பச்சிளங் குழந்தையின் அழுகையிலும் மொழி உண்டு. பேச்சே யறியாத குழந்தை, அழுகையின் வாயிலாகவும் மற்றும் பல்வகை ஒலிக் குறிப்புக்களின் வாயிலாகவும் மொழி பேசித் தன் கருத்துக்களையும் தேவைகளையும் அறிவிக் கின்றது. பின்னரே சொல்வாரியாகப் பேச்சு புரிகிறது.
(2) நாம் அறியாத வேற்று மொழி ஒன்றினை அம்மொழியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நமக்கு அப்பேச்சு, மொத்தையான ஒலித் தொகுப்பாகத் தான் தோன்றுகிறது ; தனித்தனியாகச் சொற்பாகு பாடு ஒன்றும் புரிவதில்லை. ஆங்கிலம் அறியாதவர்கள் ஆங்கிலத் திரைப் படமும் இந்தி தெரியாதவர்கள் இந்தித் திரைப்படமும் பார்க்கும்போது இந்தக் கூத்தைக் காணலாம். ஆனால் மொத்தையான அந்த ஒலித் தொகுப்பில் தனித் தனியாகப் பல சொற்கள் - உண்டு என்பது யாவரும் அறிந்த உண்மை.
60
(3) மக்கள் தாங்கள் மட்டுமே மொழி பேசு வதாக நினைக்கக்கூடாது. பறவை விலங்குகளுங்
கூட மொழி பேசுகின்றன. அவற்றின் வாய்களில் லிருந்தும் ஒலித் தொகுப்புகள் வெளிவருகின்றன அல்லவா? அந்த ஒலித் தொகுப்புகளின் பொருள் நமக்குப் புரியவில்லை யென்பதற்காக பறவை விலங்கு கட்கு மொழி பேசத் தெரியாது என்று சொல்லி விடுவதா . வேற்று மொழியாளர்களின் உரையாடலும் பறவை விலங்குகள் ஒலிப்பது போலத்தானே தோன்று கிறது. பறவை விலங்குகட்குப் பொதுவாக மக்களைப் போன்ற வடிவமும் சிறப்பாகக் கைகளும் இன்மையா லேயே, மக்கள் செய்யும் மற்ற செயல்துறைகளைச் 459
செய்ய முடியாதது போலவே எழுத்துக் கண்டுபிடித்து எழுதவும் அவற்றால் முடியவில்லை. இனவளர்ச்சி செய்யும் பறவை விலங்குகள் ஒன்றுக்கொன்று ஒலிக் குறிப்பால் கருத்தை யறிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா? சேரமான் பெருமாள் நாயனார் என்னும் சேர மன்னர் மரபைச் சேர்ந்த சிவனடியார் பறவை விலங்குகள் கழறுவதையும் (பேசுவதையும்) அறியும் ஆற்றல் பெற்றிருந்ததனால் 'கழறிற்றறிவார்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றதாக அவர் வரலாறு கூறு கிறது. ஒருசார் விலங்கு முதலிய பிற உயிர்களும் மக்களைப்போல் ஆறு அறிவுகள் உடையவை எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. எனவே, பறவை விலங்குகளும் தொடர்ந்த ஒலித் தொகுப்பால் கருத்துக்களை அறிவித்துக் கொள் வதுண்டு என்ற முடிவுக்கு வரலாம்.
எனவே, குழந்தைகளின் ஒலித் தொகுப்பு, வேற்று மொழியாளரின் ஒலித் தொகுப்பு, பறவை விலங்கு களின் ஒலித் தொகுப்பு ஆகியவற்றில் - தனித்தனிச் சொற்கள் நமக்குப் புரியவில்லையாயினும் அந்த ஒலித் தொகுப்புகளுக்குப் பொருள் உண்டு. அந்த ஒலித் தொகுப்புகளில் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு செயலையும் குறிப்பதற்குரிய ஒலிக் கூறுகள் அடங்கி யுள்ளன. ஆனால் அவை நமக்குத் தெரியவில்லை. இது போலவேதான், முதற்கால மக்களின் ஒலித் தொகுப்பும் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு செயலையும் குறிப் பதற்குரிய ஒலிக் கூறுகளை உள்ளடக்கிக் கொண் டிருந்தது; நாளடைவில் ஒவ்வோர் ஒலிக் கூறும் ஒவ் வொரு சொல்லாகப் பிரிந்து திருத்தம் பெற்றது.
29 460
இப்போது இவ்விடத்தில் சிலர் இன்னொரு சிக்கலைக் கிளப்பக்கூடும். அதாவது, - மொழியிலுள்ள பெயர்கள் ளெல்லாம் காரணப் பெயர்களே ; ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு காரணங் கருதியே நம் முன்னோர் பெயர் வைத்துள்ளனர் ; பறப்பதால் பறவை என்றும், நா (நாக்கு) நீளமாகத் தொங்குவதால் நாய் என்றும், அகழப்பட்டதால் (தோண்டப்பட்டதால்) அகழி என்றும், இப்படியே ஒவ்வொரு காரணங் கருதிப் பெயர்கள் வைக்கப்பட்டன. சில பெயர்கட்குக் காரணம் தெரியவில்லையே யெனின், அவற்றிற்கும் ஏதேதோ காரணங் கருதியே பெயர்கள் வைக்கப் பட்டன; அக்காரணங்கள் நாளடைவில் புலப்படாமல் போனதால் அப்பெயர்களை இடுகுறிப் பெயர்கள்' என இலக்கணத்தில் கூறுகின்றனர்.- எனச் சிலர் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகின்றனர். சிலர் இந்தக் கருத்தை நம்பிக்கொண்டு பின்வருமாறு கூறக்
கூடும் :
"பெயர்கள் எல்லாம் காரணங் கருதியே ஏற்படுத்தப் பட்டவை யென்றால், முதற்கால மக்கள் முதலில் ஒவ்வொரு பொருளுக்கும் தக்க காரணங் கருதி ஒவ்வொரு சொல்லைப் பெயராக வைத்த பின்னரே, அப்படி வைக்கப்பட்ட சொற்களை இணைத்துச் சொற்றொடராகப் (வாக்கியமாகப்) பேசியிருப்பர்; எனவே, சொற்றொடருக்கு முந்தியது சொல் - அதாவது - தனித்தனிச் சொற்கள் தோன்றிய பிறகே வாக்கியம் தோன்றியது. எனவே, வாக்கியமாகிய மொத்த ஒலித் தொகுப்பிலிருந்தே பின்னர்த் தனித்தனியாகச் சொற்கள் பிரித் தெடுக்கப்பட்டன என்னும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலுள்ளவாறுஞ் சிலர் கூறலா மன்றோ ? இக் கருத்துக்கு மறுப்பு வருமாறு: 461
(1) 'எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே ! என்று சிலர் கூறுங் கருத்து பொருந்தாது. முதற் காலத்தில் பெயர்கள் இடுகுறியாகவே ஏற்பட்டன. காரணப் பெயர்கள் என்று சொல்லப்படுவனவற்றின் அடிப்படைகளை (மூலங்களை) ஆராயின் அவையும் இடு குறியே என்பது புலனாகும். எடுத்துக் காட்டாக, -
பறப்பதால் பறவை என்ற பெயர் வந்தது என்றால், பறக்கும் செயலுக்குப் பறத்தல் என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது ? கொறத்தல் என்று வைத்தால் என்ன? இது போலவே, நா (நாக்கு) வெளியில் தொங் குவதைப் பார்த்து நாய் என அழைத்தார்களென்றால், நாக்குக்கு 'நா' என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது ? 'கோ' என அழைத்தால் என்ன? இவை போலவே, அகழ்வதால் (தோண்டுவதால் ) அகழி என்னும் பெயர் வைக்கப்பட்டதென்றால், அகழும் செயலுக்கு அகழ்தல் என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது? குகழ்தல் என்று சொன்னால் என்ன?
எனவே, பறவை, நாய், அகழி என்னும் காரணப் பெயர்களின் அடிப்படைகளாகிய பறத்தல், நா, அகழ் தல் என்னும் பெயர்கள் காரணம் இல்லாத இடுகுறிப் பெயர்களே.
(2) ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மொழியில் லும் ஒவ்வொரு பெயர் இருப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். நாய் என்னும் தமிழ்ப் பெயருக்கு நேராக வடமொழியில் குக்குரக' என்றும், இந்தியில் குத்தா' என்றும், ஆங்கிலத்தில் டாக்' (Dog) என்றும், பிரெஞ் சில் 'ஷியான்' (Chien) என்றும், இலத்தீன் மொழியில் கனிஸ்' (Canis) என்றும் பெயர்கள் உள்ளமை 462
காண்க. ஒரே பொருளைக் குறிக்க ஒவ்வொரு மொழி யிலும் ஒவ்வொருவிதமான - அதாவது - வேறுபட்ட ஒலிக்கூறு (சப்தம்) இருப்பதை ஆராயுங்கால், 'மக்க ளினம் குறிப்பிட்ட ஒரே காரணம் பற்றிப் பொருள்கட் குப் பெயர் வைக்கவில்லை; ஏதோ ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் உளம் போன போக்கில் எழுப்பிய ஒலிகளே பெயர்களாக நிலைத்துவிட்டன' - என்னும் உண்மை புலனாகலாம்.
(3) குறிப்பிட்ட ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு பொருளைக் குறிப்பதற்கு உரிய காரணம் இன்னது, என்று யாரும் கணக்காகச் சொல்ல முடியாது என்று மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரே கூறிவிட்டார்:
" மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா. என்பது தொல்காப்பிய நூற்பா. எனவே, ஒரு சொல் லைக் கொண்டு, அதனால் சுட்டப்படும் பொருளைப் பற் றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாது என் பதும், பொருள்களைக் குறிக்கும் ஒருவகை அடை யாளங்களே சொற்கள் என்பதும் புலனாகும்.
(4) ஒவ்வொரு பொருளிலிருந்தும் தோன்றிய ஒலியையே அவ்வப் பொருளுக்குப் பெயராக நம் முன் னோர் இட்டனர்; எடுத்துக் காட்டாக, - காக்காவானது 'கா - கா' எனக் கத்துவதால் அவ்வொலிப் பெயரால் அழைக்கப்பட்டது; 'கிலு - கிலு' என ஒலிப்பதால் கிலு கிலுப்பைக்கு அப்பெயர் ஏற்பட்டது. மற்ற பொருள் கட்கும் இக்காரணம் பற்றியே பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஏதோ இரண்டொரு பொருளுக்குத் தவிர எல்லாப் 463
பொருள்கட்கும் இக்கருத்து பொருந்தாது. எல்லாப் பொருள்களும் தாம் அழைக்கப்படுகிற பெயரொலிகள் போல ஒலியெழுப்புவது கிடையாது. 'காக்கா' கொள் கையின்படியே பார்த்தாலும், தமிழில்தான் 'காக்கா என அழைக்கிறோம் - மற்ற மொழிகளில்...?
எனவே, அடிப்படை யமைப்பின்படி ஏறக்குறைய எல்லாப் பெயர்களும் இடுகுறிப் பெயர்களே என்பது மேலுள்ள ஆராய்ச்சியால் தெளிவாகும் ; ஆகவே, முதற்கால மக்கள் எக்காரணமும் கருதாமலேயே இயற்கையாக எழுப்பிய ஒலித் தொகுப்பிலிருந்தே தனித் தனியாகச் சொற்கள் பிரிந்து பிறந்தன என்னும் கருத்து உறுதியாகும் ; ஆகவே, சொற்றொடருக்குப் பிந்தியது சொல் என்னும் கொள்கை முற்ற முடிந்த முடிபாகும்.
சொல் பிறந்த கதை இதுதான்! சொல் பெருகிய கதை
முதற்காலத்தில் இயற்கையான மலைக் குகைகளை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள், பின்னர் நாளடைவில் மலைகளிலிருந்து தனித் தனியாகக் கற்களை உடைத்துப் பிரித்தெடுத்துச் சுவர் எழுப்பிச் செயற்கையான வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். மலைப் பகுதிக்கு நெடுந்தொலைவில் இருந்தவர்கள் மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினர். பின்பு வன்மை யற்ற மண் சுவரின் நிலையாமையை உணர்ந்த மக்கள், மண்ணைப் பிசைந்து தனித்தனிப் பகுதியாக அறுத்துச் சூளையில் இட்டுச் சுட்டுச் செங்கற்களாக்கிச் சுவர் எழுப்பினர். இதனினும் இன்னும் வன்மை விரும்புபவர்கள், கருஞ்சுதை மண்ணால் (சிமட்டியால்) கல்லுண்டாக்கிக் கட்டடம் கட்டுகின்றனர்; மற்றும், கோன்கிரீட்' (Concrete) எனப்படும் கல் பொதிந்த காரைக் கலவையாலும் கட்டடம் அமைக்கின்றனர்; மேலும், கம்பியிடையிட்ட கல் கலவையாலும் (Reinforced concrete) கட்டடங்களை உறுதிப்படுத்துகின்றனர். உறுதிக்கும் திருத்தத்திற்கும் அழகிற்கும் உறுதுணை யாக இன்னும் எத்தனை எத்தனையோ முறைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. இது கல் (கட்டடம்) பெருகிய கதை. சொல் பெருகிய கதையும் இது போன்றதே! கற்பனை செய்து காண்க.
முதற்காலத்தில் மக்கள் இயற்கையாக எழுப்பிய ஒலித் தொகுப்பிலிருந்து சொற்கள் தனித்தனியாகப் பிரிந்து பிறந்தன. பிறந்த சொற்களாகிய குழந்தைகள்
465 465
திருத்தமுடன் வளரத் தொடங்கின. வளர்ந்து பெரியவர்களான பின், அவர்களிடமிருந்து பல குழந்தைகள் தோன்றின. இந்த வீட்டுக் குழந்தை களுடன், ஒண்டு குடியிருக்க வந்தவர்களின் குழந்தை களும் சேர்ந்து விளையாடத் தொடங்கின. நாளடைவில், வந்த குழந்தைகளும் பிறந்த குழந்தைகளோடு நின்று நிலைத்து விட்டன. வந்த குழந்தைகள் இடம் பிடித்துக் கொண்டதால், பிறந்த குழந்தைகள் சிலவற்றின் வளர்ச்சி குன்றிப்போனதும் உண்டு. வீட்டுக் காரர்கள், தம் வீட்டுத் தேவைகள் சிலவற்றை நிறை வேற்றிக் கொடுப்பதற்காக வெளியிலிருந்து சிலரை வரவழைத்துக் கொண்டதும் உண்டு. இப்படியாக, சொற்களாகிய மக்கள் எண்ணிக்கை தமிழ் வீட்டில் பெருகிவரலாயிற்று.
ஆம்! முதற்கால மக்களது மொழியின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் மிகமிகக் குறைவே. குழந்தைகள் சில சொற்களைக் கொண்டே மொழி பேசுதல்போல, முதற்கால மக்களும் சில சொற்கள் கொண்டே மொழிபேசினர். இஃது இயற்கையே யன்றோ !
நாளடைவில் நாகரிகம் மிகமிக, தேவைகள் பெருகப் பெருக, பிறர் கலப்பு ஏற்பட ஏற்படச் சொற் களும் பின்வருமாறு பெருகின.
(1) ஒவ்வொரு சொல்லிலிருந்தும் பல சொற்கள் கிளைத்தன. 'நட' என்னும் அடிப்படையிலிருந்து நடை, நடக்கை, நடத்தை , நடப்பு , நடவடிக்கை , நடம் , நடந்தான், நடந்தது முதலிய சொற்களும், 'உருள்' என்னும் அடிப்படையிலிருந்து உருளை, உருட்சி, 466
உருட்டு, உருட்டல், உருண்டை , உருளி, உரல்' உருடை, முதலிய சொற்களும், 'குடி' என்னும் அடிப் படையிலிருந்து குடிமை, குடித்தனம், குடிகை, குடில், குடிசை , குடிசல், குடிஞை, குடும்பம், குடும்பு, குடும்பி, குடியானவன் முதலிய சொற்களும் கிளைத்துள்ளமை யறிக. ஒரு தொழிலின் பெயரிலிருந்தும் ஒரு பொருளின் பெயரிலிருந்தும் அத்தொழிலோடும் அப் பொருளோடும் தொடர்புடையனவற்றைக் குறிக்கும் குடும்பச் சொற்கள் தோன்றுவது இயற்கை.
(2) தேவைக் கேற்பப் புதுப்புதுப் பொருள்கள் தோன்றத் தோன்ற, முன்னமேயே உள்ள சொற் களுள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து சேர்ந்து புதுச் சொற்களாக வடிவெடுத்தன. மண் + வெட்டி = மண்வெட்டி ; மரம் + கால் = மரக்கால் ; நான்கு + கால் = நாற்காலி ; கொடுமை (வளைவு) + காய் + புளி = கொடுக்காய்ப் புளி ; திரு + பாதிரி + புலி + ஊர் = திருப்பாதிரிப் புலியூர் முதலிய அந்தக் காலத்துப் பெயர்களையும் - வான் + ஒலி = வானொலி ; மின் சாரம் = மின்சாரம் ; வானம் + ஊர்தி + வானவூர்தி ; புகை வண்டி நிலையம் - புகைவண்டி நிலையம் ; திசை - காட்டும் கருவி = திசை காட்டுங் கருவி முதலிய இந்தக் காலத்துப் பெயர்களையும் நோக்குக.
Wள்
(3) கடவுட் கொள்கை , கலை, வாணிகம், அறிவியல், அரசாட்சி முதலியன காரண மாக வேற்று நாட்டாரின் - வேற்று மொழியாளரின் தொடர்பு ஏற்பட்டதால், வேற்று மொழிச் சொற்கள் பல, ஏற்கனவே இருந்த சொற்களினூடே வரம்பு கடந்து புகுந்து கலந்து விட்டன: ஜலம், சந்தோஷம், 467
சாமி, தத்துவம், முதலிய சம்ஸ்கிருதச் சொற்களும்; அந்தஸ்து, குல்லா, சமக்காளம் முதலிய இந்துத்தானி சொற்களும்; ஆசாமி,வசூல் , மாமூல் முதலிய அரே பியச் சொற்களும்; சிபாரிசு, சுமார் , மேசை முதலிய பாரசீகச் சொற்களும் ; சன்னல், சாவி, அலமாரி முதலிய போர்த்துகீசியச் சொற்களும்; புதுச்சேரி மாநிலப் பகுதியில் வாங்கு (விசிப் பலகை), தளவா (காவல் நிலையத் தலைவர்) முதலிய பிரஞ்சு மொழிச் சொற்களும் தமிழில் இரண்டறக் கலந்துள்ளமை காண்க. தமிழ் மொழியில் பல துறைகளிலும் ஆங்கில மொழி புகுந்து புரியும் திருவிளையாடல்களைச் சொல்லவே வேண்டியதில்லை.
(4) மொழிக்கு மொழி இயற்கையாகப் புகும் சொற்களே யன்றி, வந்த மொழியாளர் எப்படியாவது தம் மொழிச் சொற்களைப் பரப்ப வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து புகுத்திய வன்செய் லாலும், 'யார் ஆண்டால் என்ன?' என்ற போக்கில் சொந்த மொழியாளர் சோம்பியிருந்ததாலும் பிற மொழிச் சொற்களின் எண்ணிக்கை ஏறிவிட்டது.
(5) அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்ட கதையே போலவும், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் தம்பி கொடை பல புரிந்த கதையே போலவும், வந்த மொழியாளர் பரப்புவது ஒரு புறம் இருக்கச் சொந்தமொழியாளரே தம் சொந்த மொழியைப் பயன்படுத்துவது இழிவெனப் புறக்கணித்து, வந்த மொழிகளே உயர்ந்தவை என வரவேற்று, வீட்டிலும் நாட்டிலும் அம்மொழிகளையே பயன்படுத்தியும் - பயன் படுத்த இடந்தந்தும் உணர்வற்று வாழ்ந்ததால், சொந்த மொழிச் சொற்கள் பல வழக்கற்றுப் போக, 468
அவற்றின் இடங்களில் வந்த மொழிச் சொற்களே ஆணிவேர் விட்டு நின்று நிலைத்து விட்டன.
(6) இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உலகத் தில் கண்டுபிடிக்கப்படும் புதுப் புதுக் கலைப் பொருள்கட் குரிய பெயர்கள், சொந்த மொழியில் பெயர்க்கப் படுவதன்றி, ஒரு சிறிது திரிந்தோ அல்லது அப்படியோ எடுத்தாளப்படுவதாலும் சொற்கள் பெருகுகின்றன.
சொல் பெருகிய கதை இதுதான்! நான்கு விதச் சொற்கள்
ன
பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச் சொல் என்னும் நால்வகைச் சொற்களேயன்றி, இயற் சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன வாக நான்கு விதச் சொற்கள் தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டுள்ளன. இவற்றுள் இயல் சொல் என்பது, அம்மா, அப்பா, தண்ணீர், காற்று, உடல், உயிர் என்பன போல எல்லோர்க்கும் புரியக் கூடிய இனிய எளிய தூய இயற்கையான பேச்சு வழக்குத் தமிழ்ச் சொல்லாகும்;
"இயற் சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. என்பது தொல்காப்பிய நூற்பா.
செந்தமி ழாகித் திரியாது யார்க்கும்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல். என்பது நன்னூல் நூற்பா.
ஒரு சொல்லைச் சொன்னால், இச்சொல் எந்தப் பொருளைக் குறிக்கிறது? இந்தப் பொருளோ? அந்தப் பொருளோ? என்ற திரிபுக்கு (மயக்கத்திற்கு) இட மின்றி இயற்கையாக எளிதில் பொருள் உணர்த்தும் சொல் இயற்சொல்லாகும். இங்ஙனமின்றி, இச் சொல்லுக்கு இந்தப் பொருளோ - அந்தப் பொருளோ என்றதிரிபுக்கு இடமாகி அரிதில் (சிரமத்தில்) பொருள் உணரத்தக்க சொல் திரி சொல் ஆகும். ஒரு பொருள் 470
குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல் என நாம் முன்பு நிகண்டுகளிற்கண்ட இரு பிரிவுகளும் இந்தத் திரி சொல்லின் வகைகளாகும்.
ஒரு பொருள் குறித்த வேறு சொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒரு சொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொல் கிளவி என்பது தொல்காப்பிய நூற்பா.
ஒரு பொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த ஒரு சொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் என்பது நன்னூல் நூற்பா.
செந்தமிழ் பேசப்படும் பன்னிரண்டு நாடுகளிலும் (பகுதிகளிலும்) வழங்கும் பொதுச் சொற்களாய் இல்லா மல், அந்தந்த நாட்டில் (பகுதியில் மட்டும் வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் திசைச் சொற்கள் எனப் படும் - இது தொல்காப்பியர் கருத்து.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
என்பது தொல்காப்பிய நூற்பா. இதிலிருந்து, தொல் காப்பியர் காலத்தில் தமிழ் பேசும் மாநிலம் பன்
னிரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டு அரசுகளாக ஆளப்பட்டமை புலனாகும். வட்டார வழக்குச் சொற்கள் எல்லா இடத்துக்கும் பொதுவா யின்றி ஒவ்வொரு திசையில் (மூலையில்) மட்டும் வழங்குவதால் திசைச்சொற்கள் எனப்பட்டன.
மூவாயிரம் ஆண்டுக்கு முன் தொல்காப்பியர் திசைச் சொல் என்பதற்கு இவ்வாறு விளக்கம் தந்தார். 471
அவர் காலத்திற்குப் பின், தமிழ் மாநிலத்திற்கு அப்பாலுள்ள வேற்று நாடுகளில் வழங்கும் வேற்று மொழிகளிலிருந்தும் பல சொற்கள் தமிழ் மொழியில் புகுந்து விட்டன. எனவே, அவற்றையும் திசைச் சொற்களென , எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த நன்னூலில் பவணந்தியார் கூறியுள்ளார். செந்தமிழ். வழங்கும் பன்னிரு உள் நாடுகளில் வழங்கும் வட்டாரச் சொற்களே யன்றி, தமிழ் மாநிலத்திற்கு அப்பாலுள்ள பதினேழு வெளி நாடுகளிலிருந்து வந்த சொற்களும் திசைச் சொற்கள் என்பது நன்னூல் கருத்து.
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பின்வே திசைச்சொல் என்ப
என்பது நன்னூல் நூற்பா.
இறுதியாக வட சொல் வருமாறு :- தமிழ் மாநிலத்தின் வடக்கே வழங்கிய சம்சுகிருத மொழியில் லிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்குஞ் சொல் வட சொல் எனப்படும். இருமொழிகட்கும் பொதுவான எழுத்துக்களால் ஆன வட சொற்கள் அப்படியே தமிழில் வழங்கப்படும். சம்ஸ்கிருதத்திற்கே உரிய சிறப்பெழுத்துக்களாலும், பொது எழுத்து - சிறப் பெழுத்து ஆகிய இருவகை எழுத்துக்களாலும் ஆன வடசொற்கள் தமிழ் ஒலிக் கேற்பச் சிதைந்து திருந்தி வழங்கப்படும்.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். என்பன தொல்காப்பிய நூற்பா. 472
பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைவன வடசொல். என்பது நன்னூற் பா.
தொல்காப்பியர் கூறியுள்ள திசைச்சொல் - வட சொற்களை நோக்குங்கால், மிக மிகப் பழங்காலத்தில், பொதுவாக இந்தியாவில் - சிறப்பாகத் தென்னிந்தியா வில் தமிழ்மொழியே தனியாட்சி புரிந்தது என்பதும், பின்னர் சம்சுகிருதம் முதல்முதலாக வட இந்தியாவில் தலையெடுத்து நாளடைவில் தென்னிந்தியாவிலும் பரவத் தொடங்கியது என்பதும், அவ்வாறு பரவத் தொடங்கிய வடமொழி, தொல்காப்பியர் காலத்தில் தமிழிலக்கண நூற்களில் குறிப்பிடப்படும் அளவுக்குத் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதும் புலனாகும்.
வடதிசையிலிருந்து வந்ததால் வடசொல் எனப் பெயர் பெற்ற வடமொழிச் சொற்களும் ஒருவகைத் திசைச் சொற்களே யாதலின் திசைச் சொல் என்னும் தலைப்பிலேயே அடக்கிவிட்டிருக்கலாம். அங்ஙனம் செய்யாது, வடசொல் எனத் தனித் தலைப்பிட்டு இலக்கண நூலார் பிரித்திருப்பதை நோக்கின், எந்த அளவுக்குத் தமிழில் வட சொற்கள் புகுந்து விட்டன என்பதை உய்த்துணரலாம்.
தொல்காப்பியரால் பாகுபாடு செய்யப் பெற்ற இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு விதச் சொற்களுள், இயற் சொல்லும் திரிசொல்லுமே இன்றியமையாதவை. இவற்றுள் இயற் சொற்கள் எளிய சொற்கள் ஆதலின் நிகண்டு நூற்களில் இடம் பெறவில்லை; அருஞ் சொற்களாகிய 473
திரி சொற்களே நிகண்டு நூற்களை அடைத்துக் கொண்டன. இந்தத் திரிசொற்களின் கூட்டத்தில், வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொற்களும் நிரம்ப உள்ளன. நிகண்டுகளில் இப்படி! அகராதி நூற்களிலோ, இயற்சொல் முதலாக எல்லாவிதச் சொற்களும் ஒன்று குறையாமல் நின்று நிலவுகின்றன.
ஒரு பொருள் பல் பெயர்கள்
'ஒரு பொருள் பல் பெயர்கள்' என்னும் தலைப்பு , நிகண்டின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதாகிய 'ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்பதே யாகும். சேந்தன் திவாகரம் முதலிய நிகண்டுகளில் உள்ள பன்னிரண்டு தொகுதிகளுள் முதல் பத்துத் தொகுதி களும் இந்த ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதிகளே' யாகும்.
ஒரு பொருளைக் குறிக்க ஒரு பெயர் போதாதா? பல பெயர்கள் ஏன்? எடுத்துக் காட்டாக, - யானை என்னும் ஒரு பொருளைக் குறிக்கத் திவாகர நிகண்டில் முப்பத்தெட்டுப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:
(யானையின் பெயர்) தும்பி, கடிவை, புகர்முகம், தோல், கரி,
உம்பல், வயமா, பகடு, நால்வாய், கரிணி, குஞ்சரம், கயமே, களபம், மருண்மா , தந்தி, மாதங்கம், ஒருத்தல், களிறு, சிந்துரம் , கறையடி, எறும்பி, வழுவை, வாரணம் , வேழம், வல்விலங்கு, நாகம், மதகயம், அத்தி, இபம், கும்பி, போதகம், உவாவே, தூங்கல், மாதிரம், மறமலி கைம்மா, ஆம்பல், கோட்டுமா,
பிறவும் புழைக்கையோடு, யானைப் பெயரே என்பது திவாகர நூற்பா. இது போலவே, சிவனைக் குறிக்கத் திவாகரத்தில் அறுபத்து மூன்று பெயர்கள் 475
சொல்லப்பட்டுள்ளன. இவ்வாறாக ஒரு பொருளைக் குறிக்கப் பல பெயர்கள் ஏற்பட்டிருப்பத்திலுள்ள உண்மை யாது? அப்படி ஏற்பட்டதற்குப் பின் வருபவை பொருட்டுக்களாக (காரணங்களாக) இருக்கலாம் :
(1) ஒரு மொழியில் ஒரு பொருளுக்குப் பல பெயர் கள் இருப்பது, அம்மொழியின் சொல் வளத்தை - சொற் களஞ்சியத்தை - சொற் செல்வத்தை அறிவிக்கிறது. பணக்காரர் வீட்டில் கல (பாத்திர) வகைகளிலும், உடை வகைகளிலும், அணி (நகை) வகைகளிலும், மற்றும் அனைத்து வகைகளிலும், பற்பல இருக்கும். இது பணக்காரக் குடும்பத்திற்கு அறிகுறி. இது போலவே சொற்கள் பெருகியிருப்பது பணக்கார மொழிக்கு இயல்பு நமது தமிழ் மொழியும் பண்டு தொட்டுள்ள பணக்கார மொழியன்றோ?
சரி, உண்மைதான்! இவ்வளவு சொற் செல்வங் களும் மொழிக்கு எப்படிக் கிடைத்தன.
(2) ஒரு குடும்பத்தின் தலைவனுக்குப் பிள்ளைகள் பலர் உள்ளனர். ஒவ்வொரு பிள்ளையும் ஈட்டிய செல்வத்தைத் தொகுத்துக் கணக்கிட்டுத் தன் செல்வ மாகத் தலைவன் கருதுவது இயல்பே. அவ்வாறே, தமிழ் வழங்கும் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் பேச்சு வழக்காறுகளைத் தொகுத்துக் காணுங்கால், சொற் செல்வம் பெருகித் தோன்றுகிறது. எடுத்துக் காட்டாக, - தமிழ்நாட்டின் வட பகுதியினர் 'வழி' யென்று சொல்வதை, தென் பகு தி யினர் 'தடம்' என்னும் சொல்லால் குறிக்கின்றனர். இதே பொருளில் பாதை, பாட்டை என்னும் சொற்களும் பரவலாகப்
30 476
பல விடயங்களிலும் வழங்கப்படுகின்றன. இவையே யன்றி, செய்யுள் வழக்கில் நெறி, யாறு, அதர், வரி முதலிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்க்குங்கால், ஒரு பொருள் பல் பெயர்களின் எண்ணிக்கை பெருகுவதைக் காண லாம். இவை மட்டுமா?
(3) பொருளில் (அர்த்தத்தில்) சிறுசிறு வேறு பாடுடைய சொற்கள் பல, நாளடைவில் அவ் வேறு பாடுகள் மறைந்தோ அல்லது - மறைக்கப்பட்டோ ஒரே பொருளில் வழங்கப்படுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், கவலை, விடங்கர், பாதை, படுகர், மடு, அளக்கர் ஆகிய சொற்கள் வழி என்னும் பொருள் உடையனவே. ஆனால், இவற்றுள் பொருளில் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு . அவையாவன :- அத்தம், கபம், கடறு, தூம்பு, சுரம் ஆகிய சொற்கள், கடப்பதற்கு மிகவும் கடினமான (அரு நெறியை) வழியைக் குறிக்கும் பெயர் களாம். கவலை என்னும் சொல், ஒரு பாதையிலிருந்து பல பாதைகள் பிரியும் கவர் நெறியைக் குறிக்கும் பெயராகும். விடங்கர் என்பது சிறு வழியையும், பாதை என்பது பெரு வழியையும் குறிக்கும் பெயர் களாம். படுகர், மடு என்னும் சொற்களோ , ஏறி யிறங்கும் மேடு பள்ளமுடைய - ஏற்றத் தாழ்வுடைய வழியைக் குறிக்கும் பெயர்களாம். அளக்கர் என்பதோ நீண்ட வழியைக் குறிக்கும் பெயராம். இச் சொற்கள் ளெல்லாம் சிலவிடங்களில் வழி என்னும் பொதுப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.
(4) ஒரு பொருளுக்கே பல பொருட்டுக்கள் பற்றிப் பல பெயர்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, 477
வழியில் இயங்குவதால் 'இயவை' என்ற பெயரும், நடப்பதால் 'நடவை' என்ற பெயரும், செல்வ தால் 'செலவு' என்ற பெயரும், ஒழு கு வ தால் (தொடர்ந்து செல்வதால்) 'ஒழுக்கம்' என்ற பெயரும், வழி செப்பம் செய்யப்பட்ட தாதலால் 'செப்பம்' என்ற பெயரும் - ஆக இப்படிப் பல பெயர்கள் வழி என்னும் ஒரு பொருளைக் குறிக்க உள்ளன. இவை வினையடியா கப் பெற்ற பெயர்களாம்.
(5) ஒரு பொருளே தன் உறுப்புக்கள் தொடர் பாகப் பல பெயர்கள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, - யானை என்னும் ஒரு பொருளுக்கே, புள்ளி பொருந்திய முகம் இருப்பதால் 'புகர் முகம்' என்னும் பெயரும், கருநிறம் உடைமையால் 'கரி' என்னும் பெயரும், தொங்குகிற வாய் உடைமையால் நால் வாய் ' என்னும் பெயரும், தந்தம் உடைமையால் தந்தி' என்னும் பெயரும், உரல் (கறை) போன்ற கால் (அடி) உடைமை யால் 'கறையடி' என்ற பெயரும் துதிக்கையுடைய விலங்காதலால் 'கைம்மா' என்ற பெயரும், துளை (புழையுடைய கை உடைமையால் புழைக்கை' என்ற பெயரும் உள்ளன.
(6) ஒரு பொருளே தன் செயல் - தன்மை -பண் பினால் பல பெயர்கள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, - ஞாயிறு (சூரியன்) என்னும் ஒரு பொருளுக்கே, வெப்பமும் வெளிச்சமும் உள்ளதால் வெய்யோன், சுடர், சுடரவன், எல்லை , கதிர், கதிரவன் செங்கதிர் , செஞ்சுடர், வெங்கதிர், வெஞ்சுடர், ஆயிரங் கதிரோன் , அழல்வன், என்றூழ், கனலி முதலிய பெயர்களும், இருளை ஓட்டுவதால் இருள் வலி என்ற 478
பெயரும், பனியைப் போக்குவதால் பனிப்பகை என்ற பெயரும், பகலில் தெரிவதால் பகலவன் என்ற பெயரும், தினத்தை உண்டாக்குவதால் தினகரன் என்ற பெயரும், கோள்களுள் தலைமையும் உயர்வும் உடைமை யால் வேந்தன், சான்றோன் என்ற பெயர்களும், அலரச் செய்வதால் அலரி என்ற பெயரும், இன்னும் இவ்வாறே எண்ணிறந்த பெயர்களும் உள்ளன.
(7) வடமொழி போன்ற வேற்று மொழிகளி லிருந்தும் பல பெயர்கள் வந்து ஒரே பொருளில் வழங்குவதுண்டு. எடுத்துக் காட்டாக, ஞாயிற்றைக் குறிக்க, பதங்கன், சூரியன், உதயன் , விரிச்சிகன், மார்த்தாண்டன், கிரணன், பாநு , திவாகரன், இரவி, பாற்கரன், அருணன், தபனன் , அருக்கன், ஆதித்தன்
முதலிய வட மொழிப் பெயர்கள் தமிழில் வந்து வழங்கு வது காண்க. இது போலவே வழியைக் குறிக்க, சரி, தாரை, மார்க்கம், அயனம் முதலிய வடமொழிப் பெயர்கள் தமிழில் நடமாடுவதை யறிக.
(8) மற்றும், பொருட்டு (காரணம்) கண்டுபிடிக்க முடியாத நிலையிலே ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் இருப்பதும் உண்டு. இந்நிலையில், வட்டை, வயவை, இடவை முதலிய பெயர்கள் வழி யென்னும் பொருளைக் குறிக்கின்றன. இப்படிப் பார்க்குங்கால் வழி என்னும் ஒரே பொருளைக் குறிக்கப் பல பெயர்கள் அமைந் துள்ளமை புலனாகும். இதனை,
(வழியின் பெயர்கள்)
சரி, நெறி, ஒழுக்கம், தாரை, யாறு,
வதி, அதர், மார்க்கம், இயவை, நடவை, பதவை, செப்பம், அயனம், இடவை, 479
வாரி, வட்டை , வரி, வயவை, வகுந்து, செலவு, சிறுபதம், வழிக் கிளவி யாகும்.
என்னும் திவாகர நூற்பாவால் உணரலாம். இப்பாட லில், வழி என்னும் பொதுப் பொருளைக் குறிக்க இருபத்தொரு பெயர்கள் உள்ளமை ஓர்க. இப்பாடலில் இத்தனை பெயர்கள் இடம் பெற்றிருந்தும், தென் தமிழ் நாட்டினர் வழியைக் குறிக்க வழங்கும் 'தடம்' என்னும் பெயர் மட்டும் இடம் பெறாதிருப்பது வியப்பா யிருக்கிறது.
ஒரு பிள்ளை பிறந்தால் முதலில் பெற்றோர்கள் ஒரு பெயர் இடுகின்றனர். அது இயற்பெயர் எனப்படும். பின்னர் அவர்களே செல்லப் பெயர்கள் வேறு வைப்பார்கள். போதாக்குறைக்குப் பாட்டன் - பாட்டி முதலியோர் அழைக்கும் செல்லப் பெயர்கள் வேறு. பின்னர் பெரியவரானதும், உலகியலில் உயர்வு சிறப்புப் பெயர்களோ அல்லது இழிவு சிறப்புப் பெயர் களோ ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு எத்தனை பெயர்கள் ஏற்படினும், இறுதியில் ஏதாவது ஒரு பெயர்தான் நின்று நிலைத்து நீடிக்கும்; அஃதே எக் காலத்தும் எவ்விடத்தும் எல்லோராலும் பரவலாக அழைக்கப்படும்; மற்ற பெயர்களோ, எப்போதோ ஒரு நேரத்தில்தான் - எங்கோ ஓரிடத்தில் தான் - எவரெவரோ ஒவ்வொருவரால்தான் அழைக்கப்படும். எல்லா ஒரு பொருள் பல் பெயர்களின் நிலையும் இது போன்றதே!
ஒருபொருள் பல்பெயர்களுக்குள்ளே, சில பெயர்கள் செய்யுள் வழக்கில் மட்டும் வரும்; சில பெயர்கள் பேச்சு வழக்கில் மட்டும் வரும்; ஒரு சில பெயர்கள் இரு வழக்கிலும் வரும். அவற்றுள்ளும் ஒன்றிரண்டே பெருவாரியாக வழங்கப்படும். ஒருவர் எத்தனை வகைக் 480
கலங்கள் (பாத்திரங்கள் ) , ஆடையணிகள் வைத்திருந் தாலும், அவற்றுள் ஒரு சிலவே எப்போதும் பயன் படுத்தப்படுகின்றன; மற்றவை சிறப்பு நாட்களில் - சிறப்பு வேளைகளில் மட்டுமே பயன்படுத்தப்படு கின்றன. பேச்சு வழக்குச் சொற்கள் எப்போதும் பயன்படும் ஆடையணிகள் போன்றவை, செய்யுள் வழக்குச் சொற்களோ, சிறப்பு நாட்களில் பயன் படுத்தப்படும் ஆடையணி கலங்கள் போன்றவையாம்.
சுருங்கச் சொல்லின் , செய்யுளிலும் சரி - பேச்சிலும் சரி - ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் நடுநடுவே வரும் - போகும்; இருப்பினும், ஏதோ ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இறுதிவரை யிருந்து பேர் செல்லும்.
ஒரு பொருளுக்கு எண்ணற்ற பெயர்கள் இருக்குமே யானால், அப்பொருள் பற்றி மாந்தர்க்கு மிகுந்த ஆர்வம் இருந்தது எனக் கொள்ளலாம்' - என 'பிரீல்' (Breal) என்னும் அறிஞர் கருத்துத் தெரிவித் துள்ளார். இக்கருத்திலும் உண்மை யில்லாமற் போகவில்லை. மக்களினம் வாழ்க்கையில் எவ்வெப் பொருள்களோடு மிகுதியாகத் தொடர்பு கொள்கிறதோ, அவ்வப் பொருள்கட்குப் பெயர்கள் பல ஏற்படுவது இயல்பே! ஆனால் இக்கருத்திற்கு ஒரு சில பொருள்கள் மட்டும் விதிவிலக்காகவும் இருக்கலாம்.
ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் தோன்றிய கதை இதுதானே! ஒரு சொல் பல் பொருள்
'ஒரு சொல் பல பொருள்' என்னும் தலைப்பு , நிகண்டின் முப்பெரும் பிரிவுகளுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்பதே யாகும். திவாகரம் போன்ற நிகண்டுகளில் உள்ள பதினோராவது தொகுதி இதுதானே!
ஒரு சொல் பல் பொருள் என்றால், ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் (அர்த்தங்கள்) இருப்பது. எடுத்துக் காட்டாக, வட மொழியிலிருந்து வராத அரி' என்னும் தனித் தமிழ்ச் சொல்லுக்குப் பதினைந்து பொருட்களும், கடி என்னும் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருட் களும் திவாகரத்தில் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:
[ அரி என்னும் பெயர்ச் சொற் பொருள்) கண், வரி, கடல், பொன், கிண்கிணிப் பெய்பரல்,
பொன்னிறம், குதிரை, தவளை, குரங்கு, பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை,
எனப் பதினைந்தும் அரியெனப் புகல்ப.
[கடி என்னும் பெயர்ச் சொற்பொருள்) கடி யென் கிளவி : காப்பே, கூர்மை ,
விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே, வரைவே, மிகுதி, புதுமை, தோற்றம், மெய்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே. என்பன திவாகர நூற்பாக்கள் . திவாகரத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விடுபட்ட 482
பொருள்கள் எத்தனையோ உள்ளன. அவற்றைப் பிற நிகண்டுகளிலும், அகராதிகளிலும் காணலாம்.
இவ்வாறு ஒரு சொல்லுக்கே பல பொருள்கள் எப்படி வந்தன? ஏன் வந்தன? ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் இருப்பதுதானே பொருத்தம்? ஒரே சொல்லால் பல பொருள்களை அழைத்தால், அது, 'கஞ்சத்தனமும் பஞ்சத்தனமும் நிறைந்த ஏழ்மை நிலையின் அறிகுறி யல்லவா? அப்படியென்றால், சொல் வளம் இல்லாத ஏழைமொழி தமிழ்மொழி என்றல்லவா பொருள்படும்?
இந்தப் பெரும் புதிருக்கு இங்கே விடை காண வேண்டும். ஒரு சொல் பல் பொருள் என்றால், பல பொருள்களை ஒரே சொல்லால் அழைக்கிறோம் என்றுதானே பொருள் ! அவ்வாறு அழைக்க நேர்ந்த தின் பொருட்டுக்களைச் சிறிது ஆய்வாம் :
(1) ஒரே சொல்லால் பல பொருள்களை அழைப்பது, மொழியின் சொல்லேழ்மையைக் குறிக்கிறது - எனக் கொள்ளலாகாது; மாறாக, மொழி பேசும் மக்களின் சொற்செட்டை - பேச்சு வழக்கின் சிக்கனத்தைக் குறிப்பதாகவே கருதவேண்டும். எடுத்துக் காட்டாக, உலகம் அறிந்த காந்தி, நேரு, கென்னடி, மாக்மில்லன் முதலிய பெயர்களை எடுத்துக்கொள்வோம். இப்பெயர்கள் ஒவ்வொருவரை மட்டும் குறிப்பனவல்ல; அவ்வம் மரபில் தோன்றும் தொடர்புடைய பலரையும் குறிக் கின்றன. அதாவது, காந்தி என்னும் ஒரே பெயர் தந்தை காபா காந்தியையும் மைந்தன் கரம்சந்த் காந்தி யையும் குறிப்பதையும், நேரு என்னும் ஒரே பெயர் தந்தை மோதிலால் நேருவையும் மைந்தன் சவகர்லால் நேருவையும் குறிப்பதையும் அறியலாம். இன்னும் 483
இம்மரபுகளைச் சேர்ந்த பலரையும் இச் சொற்களால் உலகம் அழைக்கின்றதன்றோ? கென்னடி, மாக்மில்லன் முதலிய பெயர்களும் இவ்வாறே பலரை அழைக்கப் பயன்படுகின்றன.
அவ்வளவு ஏன்? நடந்த நிகழ்ச்சியொன்று வருமாறு:- தமிழ் நாட்டில் ஒரு சிற்றூரில் ஒரு குடும் பத்தில் விநாயகம், முத்தையன் எனப் பிள்ளைகள் இருவர் உள்ளனர். தெருவினர் மூத்தவனை விநாயகம் - விநாயகம் என்று அழைத்து வந்தனர். பின்னர், அடுத்துப் பிறந்த முத்தையனைச் சின்ன விநாயகம் என்று அழைத்து வரலாயினர். தம்பிக்கு முத்தையன் என்ற தனிப் பெயர் இருக்கவும், அண்ணன் பெயராகிய விநாயகம் என்ற பெயரால் அவனும் அழைக்கப்படு கிறான். தந்தைக்கு 'காபா' என்ற தனிப் பெயரும், மைந்தனுக்கு 'கரம் சந்த்' என்ற தனிப் பெயரும் இருந்துங்கூட, இருவரும் 'காந்தி' என்னும் ஒரே பெயரால் அழைக்கப்பட்டனர். தந்தைக்கு 'மோதிலால் ' என்ற தனிப் பெயரும், மைந்தனுக்கு 'சவகர்லால் ' என்ற தனிப் பெயரும் இருந்துங்கூட, இருவரும் நேரு என்னும் ஒரே பெயரால் சுட்டப்பட்டனர். குடும்பத்தில் பிறந்த தொடர்பு என்றென்ன! - சவகர்லால் நேருவிற்கு வாழ்க்கைப்பட்ட தொடர்புடைய கமலாவும் 'கமலா நேரு ' என அழைக்கப்பட வில்லையா?
மேற் குறிப்பிடப்பட்டுள்ளவர்கட்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் இல்லை; அக் குடும்பங்களில் பெயர் ஏழ்மை இருக்கிறது - என்று எவரேனும் சொல்ல முடியுமா? ஒரு சொல் பல் பொருள் நிலையும் இது போன்றதே! ஏதேனும் ஒரு விதத் தொடர்பு பற்றிப் பல பொருட்களை ஒரே சொல்லால் மக்கள் அழைப்பது 484
இயல்பே! காட்டாக, கார், வரை என்னும் இரு சொற் களை எடுத்துக் கொள்வோம் :
கார் என்னும் ஒரே சொல், கருமை நிறம் என்னும் பொருளோடு, கருமை நிறமுடைய 'மேகம்' மேகத்தி லிருந்து வரும் 'மழை', மழையால் கிடைக்கும் 'தண்ணீர்', கரிய மேகம் காணப்படுகிற மழைக்காலம் (கார்காலம் ), கார் காலத்தில் விளையும் கார் நெல், அதைக்கொண்டு சமைத்த 'சோறு' முதலிய பொருள் T களையும் தருகிறது. இப்பொருள்கள் எல்லாம் ஒன்றோ டொன்று ஒவ்வொரு வகையில் தொடர்புடையன வல்லவா? இது போலவே, வரை என்னும் ஒரே சொல், கோடு, கோடு போல் தெரிகிற கணு, கணுக்களையுடைய மூங்கில், மூங்கில் வளரும் மலை, மலையின் உச்சி, பக்க மலை, மலையில் உள்ள கல் முதலிய பொருள்களைத் தருகிறது. கார், வரை என்னுஞ் சொற்கள் எத்தனை பொருள்கள் தருகின்றனவோ, அத்தனை பொருள் கட்கும் தனித்தனிப் பெயர்கள் வேறு இருப்பது காண்க. எல்லாப் பொருள்கட்கும் தனித்தனிப் பெயர்கள் இருப்பதால் மொழியில் சோல்லேழ்மை யிருப்ப தாகக் கருத முடியாது. எனவே, தொடர்புடைய பல பொருள்களில் ஒரே சொல்லை மக்கள் வழங்குவது, ஒரு வகை மொழிச் செட்டேயாகும் என்பது புலனாகலாம்.
இவ்வாறு மக்கள் மேற்கொண்டுள்ள ஒருவகை மொழிச் செட்டைத்தான் ஆகு பெயர் ' என இலக்கண நூலார் அழைப்பதாகத் தெரிகிறது. ஒரு பொருளின் பெயர் அப்பொருளைக் குறிக்காமல் அதனோடு தொடர் புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். எடுத்துக்காட்டாக, புதுச்சேரி என்னும் பெயர் ஓர் ஊரைக் குறிக்கிறது. புதுச்சேரி திரண்டு
போருக் கெழுந்தது' என்ற தொடரிலோ, புதுச்சேரி என்னும் பெயர் அந்த ஊரைக் குறிக்காமல், அவ்வூரில் வாழும் மக்களுக்கு ஆகிவருகிறது. இந்தத் தொடரில் புதுச்சேரி என்னும் சொல்லுக்கு 'ஆகு பெயர் ' என்று பெயராம். ஒன்றன் பெயர் அதனோடு ஏதாவது ஒரு வகையிலாவது தொடர்புடைய பொருளுக்குத்தான் ஆகிவருமே தவிர, தொடர்பில்லாத பொருளுக்கு ஆகிவராது என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது.
புதுச்சேரியில் வாழும் மக்கள் என நீளமாகப் பேசும் முயற்சியைக் குறைத்து, புதுச்சேரி போருக் கெழுந்தது எனச் சொட்டாக - சிக்கனமாக மக்கள் பேசுவது இயல்பு. எனவே, புதுச்சேரி என்னும் ஒரே சொல், ஊரையும், ஊர் மக்களையும் குறிப்பதுணர்க. பெரும்பாலான 'ஒரு சொல் பல் பொருள்கள்' இப்படித் தான் மொழிச் செட்டினால் தோன்றியிருக்கக் கூடும் என்னும் கருத்து இப்போது புலனாகுமே!
மற்றும், மேலே எடுத்துக்காட்டியிருப்பது இட வாகு பெயர் எனப்படும். அதாவது, புதுச்சேரி என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்தில் வாழும் மக்களுக்கு . ஆகிவருதலின் இடவாகு பெயராம். இது போலவே 'ஒரு சொல் பல் பொருள்' என்ற நிலையில் இன்னும் பல ஆகுபெயர்கள் உள்ளன. 'கார் அறுத்தான்' என்ற தொடரில், கார் என்னும் (கார்) காலத்தின் பெயர், அக்காலத்தில் விளையும் (கார்) நெல்லுக்கு ஆகிவருவது கால வாகுபெயராம். 'நீலம் சூடினாள்' என்னும் தொட ரில், நீலம் என்னும் நிறப் பண்பின் பெயர், அந்நிற. முடைய குவளை மலரைக் குறிப்பது பண்பாகுபெயராம். 'வற்றல் தின்றான்' என்னும் தொடரில், வற்றல் (வற்று தல்) என்னும் தொழிலின் பெயர், வற்றிப் போன உண 486
வுப் பொருளைக் குறிப்பது தொழிலாகு பெயர். 'காளை வந்தான்' என்ற தொடரில் காளை என்னும் ஆண் மாட்டின் பெயர், துணிவிலும் வன்மையிலும் காளை யுடன் ஒப்புமை (உவமையுடைய வீரனைக் குறிப்பது உவமையாகு பெயராகும்.
இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ள ஒருவகை ஆகுபெயர் அமைப்பின் நுட்பத்தையும் இங்கே குறிப் பிடுதல் நன்று : அதாவது, - கருமை என்னும் பொரு ளுக்கு உரிய கார் என்னும் சொல், கருநிறம் உடைய மேகத்திற்கு ஆகி வருவது ஒரு மடி ஆகு பெயராம் ; மேகம் மழை பெய்யும் கார் காலத்திற்கு ஆகிவருவது இருமடி ஆகு பெயராம் ; கார் காலத்தில் விளையும் கார் நெல்லுக்கு ஆகிவருவது மும்மடியாகு பெயராம் ; இப் போது கார் சாப்பிட்டு வருகிறோம் என்ற விடத்தில், கார் நெல்லைக் கொண்டு ஆக்கிய சோற்றுக்கு ஆகி வருவது நான் மடியாகு பெயராம். இவ்வாறே, கோடு என்னும் பொருளுடைய வரை என்னும் சொல், கணு வைக் குறிப்பது ஒரு மடியாகு பெயர் ; கணுக்களுடைய மூங்கிலைக் குறிப்பது இருமடியாகுபெயர் ; மூங்கில் வளரும் மலையைக் குறிப்பது மும்மடியாகு பெயர். இவை போல இன்னும் பலமடி யாகு பெயர்கள் பல உள்ளன.
இவ்வாறே எல்லா ஆகு பெயர்களையும் ஆராயின், ஒரு சொல் பல பொருள்கள் தோன்றியதற்கு, மக்க ளின் மொழிச் சொட்டும் ஒரு பொருட்டாகும் என்னும் கருத்து புலனாகாமற்போகாது.
(2) ஒரு சொல் பல பொருட்கள் தோன்றியதற்கு இன்னொரு இயற்கைப் பொருட்டும் கூறலாம். அதா வது - ஒரே சொல்லால் பல பொருள்களை அழைப்பது 487
மொழியின் தொன்மையைக் குறிக்கிறது - என்ப தாகும். நமது தமிழ் மொழியையே எடுத்துக்கொள் ளலாம். தமிழில் இப்போதுள்ள சொல் வளம் மொழி தோன்றிய முதற் காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே, முதற் கால மக்கள், இருந்த சில சொற்களைக் கொண்டே, தொடர்புடைய பல பொருள்களையும் அழைத்திருக்கக்கூடும். நாளடைவில் ஒவ்வொரு பொருளுக்குமெனத் தனித் தனிப் பெயர்கள் ஏற்பட்ட டிருக்கும். அப்படி ஏற்படத் தொடங்கிய பின்னரும், பல பொருள்கட்கும் பொதுவாயிருந்த பொதுப் பெயர் ரும் பேச்சு வழக்கில் நடமாடிக் கொண் டிருந்திருக்கும். பிற்காலத்தில் எல்லாப் பொருள்கட்குமே தனித் தனிப் பெயர்கள் ஏற்பட்டுவிட்டதால், பல பொருள்கட்கும் பொதுவாயிருந்த ஒரு சொல் வகைகள், பேச்சு வழக்கி. லிருந்து படிப்படியாகக் குறைந்து செய்யுள் வழக்கோடு நின்று விட்டன. எனவே, ஒரு சொல் பல் பொருள்கள் மொழியின் தொன்மை நிலையை - தொடக்க நிலையை நினைவு படுத்துவதாக ஒரு கருத்துக்கொள்ளவும் இட முண்டு. இந்தக் கருத்துக்குத் துணையாக, குழந்தைகள் பேசும் மொழியை ஈண்டு ஒப்பிட்டு நோக்குவது, நன்று :
பச்சிளங் குழந்தைக்கு மொழிவளம் - சொல் வளம் கிடையாது. அது தொடக்கத்தில் சில சொற்களையே அறிந்திருக்கும். அந்தச் சில சொற்களைக் கொண்டே மொழி பேசும். பல பொருள்களை அழைக்க ஒரு சொல் லையே பயன்படுத்தும். எடுத்துக் காட்டாக, - அம்மா வைத் தெரியும்; அம்மா என்ற சொல்லையும் தெரியும். எனவே, அம்மா போன்ற வயதுத் தோற்றமுடைய. பிற பெண்களையும் அம்மா என்றழைக்கும். தன் ஆயாவை (பாட்டியைத் தெரியும். ஆகவே, கிழவிகளை
பின் 488
யெல்லாம் ஆயா என்றே அழைக்கும். கிழவிகளில் அத்தையும் இருக்கலாம் - பெரிய தாயாரும் இருக்க லாம் - அதைப் பற்றிக் குழந்தைக்குக் கவலையில்லை; அத்தை, பெரியம்மா முதலிய சொற்கள் குழந்தைக்குத் தெரியாதாகையால் எல்லோருமே ஆயாதான். தன் தாத்தாவைத் தெரியுமாதலால், வயதான ஆடவர்கள் மாமா, பெரியப்பா முதலிய முறையினராயிருந்தாலும் குழந்தைக்கு எல்லோருமே தாத்தாதான். அண்ணன் அக்கா முதலிய அனைத்துப் பெயர்களும் அப்படியே. மற்றும், தின்பண்டங்களுள் ஒவ்வொன்றிற்கும் ஒவ் வொரு தனிப் பெயர் இருந்தும், எல்லாவற்றையுமே 'மம்மு' என்னும் ஒரு பெயரால்தான் குழந்தை குறிப் பிடும். 'கொஞ்சம் கொஞ்சோண்டு' என்ற சொல் வழக்கு குழந்தைக்குத் தெரியும்; எனவே, தன்னிலும் சின்ன குழந்தைகளைக் கண்டால், சின்ன பாப்பா - சின்ன தம்பி என்று சொல்லத் தெரியாமல், 'கொஞ் சோண்டு பாப்பா - கொஞ்சோண்டு தம்பி' என்றே சொல்லும். இந்தக் 'கொஞ்சோண்டு' என்ற சொல் மட் டும் எப்படி தெரிந்ததென்றால், - மம்மு ரொம்ப கொடுக்கலே - கொஞ்சோண்டு கொடுக்கற' என்று அம்மாவிடம் அடிக்கடி சண்டை பிடித்துப் பழக்கப் பட்டதாகும். எப்படா வந்தே' என்று கேட்டால். நேற்று என்னும் சொல் தெரியாத குழந்தை ' நாளைக்கு வந்தேன்' என்று சொல்லும். நாளை என்னும் சொல் லுக்கு நேற்று என்ற ஒரு பொருளும் குழந்தைகளின் அகராதியில் உண்டு. அண்ணன் எங்கே' என்று கேட்டால், 'அவன் தாராந்து (தாரை வார்ந்து) போயிட்டான்' என்று குழந்தை சொல்லும். குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களைத் தாரைவார்த்து (காணாதடித்து இருப்பதுண்டு. அப்பொருள்களைப்
பட 489
போலவே அண்ணனும் ஆய்விட்டான் குழந்தைக்கு. 'அண்ணனைக் காணாம்' என்பதற்குப் பதிலாக - அண் ணன் தாராந்து போயிட்டான்' என்று குழந்தை சொல் கிறது. இப்படியாகக் குழந்தை மொழிக்குள் நுழைந்து ஆய்ந்தால், எண்ணற்ற எடுத்துக் காட்டுக்கள் கிடைக்
கும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், மக்களினத்தின் வளர்ச்சியாகட்டும் - மொழியின் வளர்ச்சியாகட்டும் - . குழந்தை நிலையில் தானே இருந்திருக்க முடியும்! எனவேதான் மொழி தோன்றிய முதற்காலத்தில் சொல்வளம் பெருகாமையால், மக்கள் தொடர்புடைய பல பொருள்களை ஒரே சொல்லால் குறித்து வந் திருப்பர்.
இந்தக் காலத்தில் கூட, புதிதாக ஒரு மொழி கற் றுக் கொள்பவர்கள், தொடக்கத்தில் தாம் அறிந்த சில சொற்களைக் கொண்டே பல கருத்துக்களைத் தப்பா கவோ தவறாகவோ பேசுவதையும் எழுதுவதையும் காணலாம். எனவே, ஒரு சொல் பல் பொருள்கள், மொழியின் தொடக்க கால நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இக்கருத்தை வைத்துக்கொண்டு மொழியில் சொல் லேழ்மை இருப்பதாகக் கொள்ளக்கூடாது. எம் மொழி யிலும் முதற்காலத்தில் சொல்லேழ்மை இருக்கத்தான் செய்யும். நாளடைவில் தான் மொழிகள் சொல்வளம் பெற்று வளர முடியும். ஒருவன் முப்பது வயதில் பெற்றிருக்கும் வளர்ச்சியை மூன்று வயதில் பெற்றிருந் திருக்க முடியாதன்றோ? ஒரு மொழி தோன்றிப் பன் னெடுங்காலம் ஆன பிறகும் சொற்களஞ்சியம் நிரம்ப 490
வில்லை யென்றால் தான், அம்மொழியைச் சொல்லேழ்மை யுடையதாகக் குறைத்து மதிப்பிட முடியும். அதிலும், வேறு மொழிகளிலிருந்து தோன்றி வேறு பல மொழி களிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்திருக் கிற ஆங்கிலம் முதலிய மொழிகளைப்போ லில்லாது தானே தலைமொழியாய்த் தோன்றி, தன் துணை கொண்டே தன்னில் தானே வளர்ந்திருக்கின்ற தமிழ் மொழியில் சொல்லேழ்மை என்ற குறைக்குச் சிறிதும் இடமேயில்லை.
மிகப் பழம்பெரு மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று - என்ற அளவில் மட்டுமல்ல - உலக மொழி களுக்குள்ளே முதல் முதல் தோன்றிய மொழி தமிழ் மொழியே - என்ற அளவில் ஒரு கொள்கை ஒரு சில ஆராய்ச்சியாளரால் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள் ளது. அங்ஙனமெனில், மக்களினம் குழந்தை நிலையில் லிருந்த மிக மிகப் பழங்காலத்தில் தோன்றிய உலக முதல் மொழியாகிய தமிழ் மொழியில் ஒரு சொல் பல் பொருள்கள் மலிந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
இதுகாறுங் கூறியவற்றால், 'ஒரு சொல் பல் பொருள்கள் ' மொழியின் தொன்மை நிலையையும் மொழிச் செட்டையும் குறிப்பதாக நம்பலாம்.
|
ஒரு சொல்லா? பல சொல்லா? ஒரு சொல் பல் பொருள்கள் பற்றி பல்லார்டு (Ballard) என்னும் அறிஞர் பின்வருமாறு ஒரு கருத்து தெரிவித்துள்ளார் : ஒரு சொல்லுக்கு இரு பொருளோ அல்லது பல பொருளோ இருக்க முடியாது; ஒரு சொல் லுக்கு ஒரு பொருள் இருப்பதுதான் இயற்கை ; அப்படி ஒரு சொல்லுக்கு மூன்று பொருள்கள் காணப்படின், 491
அச்சொல்லை ஒரு சொல்லாகக் கொள்ள முடியாது; மூன்று சொற்களாகத்தான் கொள்ள வேண்டும் - என் பதே அவர் கருத்து. அதாவது, 'பல்லார்டு அவர் களின் கருத்தின்படி பார்க்குங்கால், - அரி என்னும் சொல்லுக்குக் கண் என்றும், கடல் என்றும், பொன் என் றும், புகை என்றும் பல பொருள்கள் உள்ளன. எனவே, அரி என்னும் ஒலியை ஒரு சொல்லாகக் கொள்ளாது பல சொற்களாகவே கொள்ள வேண்டும் அதாவது, கண் என்று பொருள்படும் அரி ஒரு தனி அரி ; கடல் என்று பொருள்படுவது இன்னொரு தனி அரி; பொன் என்று பொருள்படுவது வேறொரு தனி அரி; புகை என்று பொருள்படுவது மற்றுமொரு தனி அரி; இன்னும் இப் படியே ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் அரி உள் ளது. எனவே, அரி என்னும் ஒரு சொல்லொலிக்குள் பல அரிகள் புகுந்து கொண்டிருப்பதாகக் கொள்ள வேண்டும். இது 'பல்லார்டு' போன்றவர்களின் கருத்து.
இந்தக் கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிற தென் றாலும், இதனை முற்றிலும் ஒத்துக்கொள்வதற்கில்லை. எப்படி யென்று காண்பாம் :
ஒரு சொல் பல்பொருள்களை, 'ஓரினம் தழுவி யவை', 'வேறினம் தழுவியவை' என இரு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். கார் என்னும் சொல்லால் குறிக்கப்படும் கருநிறம், மேகம், மழை, கார்காலம், கார் நெல், கார் நெல் உணவு ஆகிய பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை யாதலின், இவை ஓரினம் தழுவியவையாகும். இவ்வாறே பிறப் பாலோ, உறுப்பாலோ, இடத்தாலோ, காலத்தாலோ, பண்பாலோ, தொழிலாலோ, ஒப்புமையாலோ, இன்ன
3) 492
பிறவற்றாலோ தொடர்புடைய பொருள்கள் யாவும் ஓரினம் தழுவியவையே! இவ்வாறின்றி, அரி என்னும் சொல்லால் குறிக்கப்படும் கண், கடல், பொன், புகை, குதிரை, குரங்கு, தவளை, வண்டு முதலிய பொருள்கள் ஒன்றோடொன்று ஒருவிதத் தொடர்பும் பெறாத வேறு வேறு பொருள்களானதால், இவை வேறினம் தழுவி யவை எனப்படும்.
இவ்விரு பிரிவுகளுக்குள் வேறினம் தழுவியவற் றிற்கே பல்லார்டு சொன்ன கருத்து பொருந்தும். ஓரினம் தழுவியவற்றுக்கு அக்கருத்து அவ்வளவாகப் பொருந்தாது. ஓரினம் தழுவிய பொருள்களைக் குறிக் கும் சொல் ஏறக்குறைய ஒரு சொல்லே . அது குறிக் கும் பல பொருள்களும் ஒரே மரத்தின் பல பாகங்கள் போன்றவை. ஆனால், வேறினம் தழுவிய பொருளைக் குறிக்கும் சொல்லோ, பல சொற்களின் மதிப்புடையது; அது குறிக்கும் பல பொருள்களும் ஆல், அரசு, அத்தி, வாழை, பலா, பனை, தென்னை முதலிய தனித்தனி மரங்கள் பலவற்றைப் போன்றவை. ஆல், அரசு முதலிய எல்லாமே மரம் என்னும் பொதுப் பெயரால் சுட்டப்படு வதைப்போல, கண், கடல், பொன், புகை முதலிய எல் லாப் பொருள்களுமே அரி என்னும் பொதுப் பெயரால் சுட்டப்படுகின்றன. உண்மை இதுதான்!
மேலெழுந்தவாரியாகப் பார்க்குங்கால் வேறினம் தழுவியவையாகத் தெரியும் சில பொருள்களை ஆழ்ந்து நோக்கின், ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகைத் தொடர்பு பெற்றிருப்பது புலனாகலாம். எடுத்துக் காட் டாக , - அடுதல்' என்னும் சொல் கொல்லுதல், சமைத் தல் ஆகிய இரு பொருள்கள் தருவதும், முதற்கால மக்கள் உயிர்களைக் கொன்று தின்றதனாலும் 493
சமையலுக்கு முன் கொலை நிகழ்வதாலும் கொலையின்றிப் பெரும்பாலும் உலகில் சமையல் இல்லையாதலாலும் கொல்லுதல் என்னும் பொருளும் சமையல் என்னும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என் னும் கருத்தும் முன்னோரிடத்தில் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மேலோடு பார்க்குங்கால், கொல்லுதல் தொழில் வேறு, சமைத்தல் தொழில் வேறு என்றுதான் தோன்றும். ஆழ்ந்து பார்த்தால்தான், கொலையே தான் சமையல் - கொலை வேறில்லை , சமையல் வேறில்லை என்பது புலப்படும். அதாவது, மிகப் பழங் காலத்தில், அஃறிணை உயிர்களே யன்றி, உயர்திணை யாகிய மக்களுங்கூட, உயிர்களைக் கொன்று சமைக் காமல் பச்சையாகவே தின்றார்கள் ஆதலின், அந்தக் காலத்தில், கொன்றுவிட்டால் சமையல் முடிந்துவிட்ட தாகவே பொருள் ; உடனே உண்ண வேண்டியது தான். நாளடைவில் மக்கள் பச்சையாகவே உண்ணா மல் சமைக்கவும் தொடங்கினர். அதன் பின்னர்தான், கொல்லுதல் எனும் தொழிலைக் குறிக்கப் பயன்படுத்திய அடுதல் என்னும் சொல்லை , சமைத்தல் என்னும் தொழில் லைக் குறிக்கவும் பயன்படுத்தினர். அந்த அடுதல்) வேர்ச்சொல்லிலிருந்து அடுப்பு, அடுக்களை, அடை, அடிசில் முதலிய சொற்களெல்லாம் உருவெடுத்தன. இவ்வளவு நுட்பங்களையும் உணராமற்போனால், கொல் லுதல், சமைத்தல் என்னும் இரு சொற்களும் வேறினம் தழுவியவை என்றுதானே கூறத் தோன்றும்! உண் மையில் இவையிரண்டும் ஓரினம் தழுவியவையே யன்றோ ! இவ்வாறு நுணுகி யாராயின், ஒரு சொல் பல் பொருள்களுள் பெரும்பாலானவை ஓரினம் தழுவி யவையே என்பதும் சிறுபான்மையினவே வேறினர் தழுவியவை என்பதும் புலப்படும். 494
ஓரினம் தழுவிய வை தோன்றியதற்குரிய பொருட்டு (காரணம் ), மொழியின் தொன்மை நிலையும் மொழிச் சொட்டும் ஆகும் என ஆய்ந்து கண்டோம். இனி, வேறினம் தழுவியவை தோன்றியதற்குரிய பொருட்டு ஆராயப்பட வேண்டும்.
அரி என்னும் ஒரு சொல்லுக்குக் கண் , கடல், பொன், புகை, குதிரை, தவளை முதலிய பல பொருள்கள் உள்ளன. இத்தனை பொருள்களும் ஒன்றுக் கொன்று ஒரு சிறிதும் தொடர்பில்லாதவை. அப்படி யிருக்க, இவ்வளவு பொருள்கட்கும் அரி என்னும் ஒரு பெயர் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இவ்வினாவிற் குரிய விடை யாது :- இது தற்செயலாய் ஏற்பட்ட அமைப்பே - என்பதேயாகும். அதாவது, - பரந்துபட்ட பழந் தமிழகத்தில் வாழ்ந்த மக்களுள் ஒரு பகுதியினர் தற்செயலாய்க் கண்ணை அரி என்னும் சொல்லால் குறித்திருப்பர்; இன்னொரு பகுதியினர் கடலை அச் சொல்லால் குறித்திருப்பர்; வேறொரு பகுதியினர் பொன்னை அச்சொல்லால் குறித்திருப்பர்; மற்றும் ஒரு பகுதியினர் குதிரையைக் குறித்திருப்பர்; தற்செய் லாய் இவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்த போதோ - அல் . லது - ஒருவரின் எழுத்துப் படைப்பை மற்றொருவர் படித்த போதோ, அரி என்னும் ஒரு சொல் ஒலி பல . பொருள்களைக் குறிக்கத் தங்களால் பயன்படுத்தப்பட் டிருப்பதை அறிந்திருப்பர். பின்னர், அரி என்னும் ஒரு சொல்லுக்கு அத்தனை பொருள்களும் உரியன வாகத் தொகுத்துக் கொண்டிருப்பர். இப்படியாக, வேறினம் தழுவிய ஒரு சொல் பல் பொருள்கள் ஏற்பட்ட டிருக்கலாமன்றோ ? 495
என்ன பொருட்டினால் ஒவ்வொரு பகுதியினரும் அந்தந்தப் பொருளை அரி என்னும் சொல்லால் அழைத் தார்கள் என்று எவரும் பொருட்டு கேட்க முடியாது. “ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்னும் தொல்காப்பியத்தின்படி, ஒவ்வொரு சொல்லும் ஏதேனும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கத்தான் செய் யும். ஆனால், அந்தப் பொருளைக் குறிக்க அந்தச் சொல் ஏன் ஏற்பட்டது என யாரும் திட்டவட்டமாகப் பொருட்டு கூற முடியாது. ஆழ்ந்து நோக்கின் எல் லாச் சொற்களுமே இடுகுறிச் சொற்களே; ஒரு சொல் என்பது ஒரு பொருளைக் குறிக்க ஏற்பட்ட ஒரு வகை அடையாளமே - என்னும் கருத்து முன்பே ஓரிடத்தில் ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது. மொழிப் பொருள் காரணம் விழிப்பத்தோன்றா' என்று தொல்காப்பியரே கூறியுள்ளா ரன்றோ? எனவே, தற்செயலாய் ஒரே ஒலியால் (ஒரே சொல்லால்) பல பகுதியினர் பல பொருள்களை அழைத்திருக்கக்கூடும். நாளடைவில் அவையெல்லாம் ஒன்றுதிரட்டப்பட்டு ஒரு சொல் பல் பொருள்கள்' என்ற பட்டம் பெற்றுவிட்டன. இக் கருத்தை நம்பச் செய்வதற்கு ஒரு சான்று வருமாறு:
ஒரு பள்ளிக்கூடத்திலுள்ள ஆறாம் வகுப்பில் ஆறு ஆறு முகங்களும், ஏழாம் வகுப்பில் ஏழு ஏழுமலை களும் படிப்பதாக வைத்துக்கொள்வோம். உண்மை யில் ஓர் ஆறுமுகத்துக்காவது ஆறு முகங்கள் இருக்கா ; ஒரு முகமே இருக்கும். அதே போல் ஓர் ஏழுமலையினிடமாவது ஏழுமலைகள் இருக்கா - ஏன் - ஒரு மலைகூட இருக்காது. இருப்பினும் இப்பெயர்கள் அந் தந்த மாணாக்கரை அழைப்பதற்காக இடப்பட்ட ஒரு வகை அடையாள ஒலிகளாகும். ஒரே ஆறுமுகம் 496
என்னும் பெயரால் - அல்லது - ஒரே ஏழுமலை என்னும் பெயரால் பலர் அழைக்கப்படுவதிலுள்ள உண்மை யாது?
ஆறுமுகங்கள் அனைவரும் பல குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தனித்தனி ஊரினராகவும், தனித்தனி இனத்தினராகவும், தனித்தனி தாய்மொழியினராகவும் இருக்கக்கூடும். இருப்பினும், ஆறு ஆறுமுகங்கட்கும் அவரவர்தம் பெற்றோரால் தற்செயலாகவே ஆறுமுகம் என்னும் ஒரே பெயர் வைக்கப்பட்டுவிட்டது. ஒருவர் வைத்தது இன்னொருவர்க்குத் தெரியவே தெரியாது. இந்நிலையில், எல்லா ஆறுமுகங்களும் ஒரு வகுப்பில் கூடியபோது, பல பேருக்கு ஒரே பெயர் இருப்பது தெரிய வந்தது. இது தற்செயல் நிகழ்ச்சியே. இதேபோல் மொழியிலும் பல பொருள்கட்கு ஒரே பெயர் தற்செய் லாய்த் தோன்றியவையே, வேறினம் தழுவிய ஒரு சொல் பல் பொருட்களாம்.
இனி, பல பொருள் தரத்தக்க ஒரு சொல், எந்த இடத்தில் எந்தப் பொருளில் வந்துள்ள தென் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் :
தனி எழுத்துக்கு மதிப்பில்லாதது போலவே தனிச் சொல்லுக்கும் மதிப்பில்லை. எந்தச் சொல்லும் ஒரு வாக் கியத்தில் வைத்து வழங்கப்படும்போதே தன் முழுப் பொருள் மதிப்பையும் பெறுகிறது. ஒரு வாக்கி யத்திலுள்ள ஒரு சொல்லானது, தனக்கு முன்னும் பின்னுமுள்ள சொற் சூழ்நிலைகளின் துணையால் தன் பொருளைத் தானே எளிதில் விளக்கிவிடும். எனவே, ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது மூன்று பொருள்கள் 497
இருப்பினும், அது வந்திருக்கிற வாக்கிய அமைப் பைக் கொண்டு, அதற்கு அந்த இடத்தில் எந்தப் பொருள் உரியது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, - 'அடி' என்னும் ஒரு சொல்லுக்கு, அடிக்கிற அடி, அளக்கிற அடி என்பன போலப் பல பொருள்கள் இருப்பினும், முதுகில் நான்கு அடி கொடுத்தார்கள் என்ற தொடரில் அடிக்கிற அடி என்ற பொருளும், அந்தக் கம்பம் பன்னிரண்டு அடி உயரம் உள்ளது என்பதில் அளக்கிற அடி என்ற பொருளும், தாய் தன் குழந்தையின் அடிமுதல் முடி வரை முத்தம் தந்தாள் என்பதில் கால் என்ற பொரு ளும், குடத்தின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருக் கிறது என்பதில் கீழ்ப்பாகம் - கீழ்மட்டம் என்ற பொருளும் ஐயந்திரிபின்றி மிகத் தெளிவாக விளங்கு கின்றன.
இப்படியாக, பல பொருள் தரத்தக்க அடி என்னும் ஒரு சொல்லானது, அடி கொடுத்தார்கள் என்றவிடத் தில் பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டு கின்ற 'கொடுத்தார்கள்' என்னும் வினைச் சொல்லின் துணை கொண்டும், பன்னிரண்டு அடி உயரம் என்ற விடத்தில் பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற உயரம்' என்னும் பெயர்ச் சொல்லின் துணை யாலும், அடி முதல் முடிவரை என்ற விடத்தில் 'முடி என்னும் இனச் சொல்லாலும், குடத்தின் அடியில் கொஞ்சம் தண்ணீர் என்றவிடத்தில் குடம் - கொஞ்சம் ' ஆகிய (சந்தர்ப்பச்) சார்புச் சொற்களாலும் பொருள் விளக்குவதை யறிக. இவ்வாறு எளிதில் தெளிவாகப் பொருள் உணர்த்தும்படியே பேசுபவர்களும் பேச வேண்டும் - எழுதுபவர்களும் எழுத வேண்டும். 498
பல பொருள் தரும் ஒரு சொற்களுக்குள், தெளி வாகப் பொருள் விளங்கும்படி அமைந்துள்ள பல பொருள் ஒரு சொல்லை வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல்' என்னும் பெயராலும், தெளிவாகப் பொருள் விளங்கும்படி அமையாத பல பொருள் ஒரு சொல்லை 'வினைவேறுபடாப் பல பொருள் ஒரு சொல் என்னும் பெயராலும் தொல்காப்பியர் அழைத்துள்ளார். வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல், இயற்கையாகவே வாக்கியத்தில் அமைந்துள்ள வினைச் சொல், இனச் சொல், சார்புச் சொல் முதலிய வற்றால் எளிதில் பொருள் விளக்கும் என்றும், வினை வேறு படாப் பல பொருள் ஒரு சொல் வினை முதலியவற் றால் எளிதில் பொருள் விளக்காமையால், அப்படி விளக்குவதற்குத் துணையாக ஏதேனும் சொல்லைச் சேர்த்துப் பேசவோ - எழுதவோ செய்ய வேண்டும் என்றும், ஒரு வாக்கியத்திலுள்ள புரியாத சொல்லை , அதே வாக்கியத்திலுள்ள புரியும் சொற்களின் துணை கொண்டு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தொல் காப்பியர் மொழிந்துள்ளார். இக்கருத்துக்களை யெல் லாம், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் கிளவியாக் கம் என்னும் இயலிலுள்ள,
வினைவேறு படூஉம் பல பொருள் ஒரு சொல்
வினைவேறு படாஅப் பலபொருள் ஒரு சொல் என்று ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல்.
அவற்றுள் வினைவேறு படூஉம் பல பொருள் ஒரு சொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே." 499
ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பல பொருள் ஒரு சொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி. என்னும் நூற்பாக்களாலும், உரியியலில் உள்ள, ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்.
என்னும் நூற்பாவாலும் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வாக்கியத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சொல் லின் பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு வேண்டிய சூழ்நிலை அவ்வாக்கியத்தில் அமைந்திருக்க வில்லை யென்றால், அது குழப்பமுடைய வாக்கிய மாகவே கருதப்படும். இந்நிலை செய்யுள் வழக்கில் இருந்தாலும் இருக்கும்; ஆனால் பேச்சு வழக்கில் பெரும் பாலும் இராது. சில வேளைகளில் பேச்சு வழக்கில் நகைச்சுவைக்காக இரு பொருள் தரும் ஒரு சொல்லைப் பயன்படுத்தி மக்கள் பேசுவதுண்டு. எடுத்துக் காட் டாக , - 'நீர் வேண்டும்' என்னும் பேச்சில், தண்ணீர் வேண்டும் - நீங்களே வேண்டும் என இரு பொருள் படும்படியான நகைச்சுவை அமைந்திருப்பது காண்க. இதுபோன்ற சூழ்நிலையில் பேசுபவரும் கேட்பவரும் சிறிதும் குழப்பமின்றிப் பேசி நகைச்சுவை விருந்தைச் சுவைப்ப தியற்கை.
இவ்வாறின்றிக் குழப்பமான நிலையில் பல பொருள் ஒரு சொல் ஒன்று செய்யுளில் வருமாயின், 500
அச்சொல்லுக்கு உரிய ஒவ்வொரு பொருளையும் செய்யும் ளின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்துப் பொருந்தும் பொருளைக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் காணுந் திறன், இலக்கியப் பயிற்சி ஏற ஏற எளிதில்
கைவரப்பெறும்.
சூழ்நிலைக்கு ஏற்பப் பல பொருள் ஒரு சொல்லுக்குத் தீர்வு காண்பதே மொழி மரபு.
கல்வித் துறையில் அகராதிக் கலையின் பங்கு 'சொல்லும் மொழியும்' என்னும் தலைப்புடைய இப் பாகத்தில், சொல் பிறந்த கதையும், சொல் பெருகிய கதையும், சொல்லின் வகையும், ஒரு பொருள் பல்பெயர் களும், ஒரு சொல் பல் பொருள்களும் இதுகாறும் ஆராயப்பட்டன. இனி, கல்வித் துறையில் மொழிப் பாடத்தின் பங்கும், அம்மொழிப் பாடத்தில் சொற் பொருள் விளக்கும் அகராதிக் கலையின் பங்கும் என்ன என்பது குறித்து ஒரு சிறிது ஆய்வாம் :
உலகில் மக்கள் பல்கால் பயின்று கற்றுக்கொள்ள வேண்டிய கலைகள் பல. அவற்றுள் மொழி, தானும் ஒன்று என்ற அளவினதன்றி, தான் முதன்மையான தும் இன்றியமையாததும் ஆகும். மொழியின் துணை கொண்டே பள்ளிகளில் பல கலைகள் பயிலப்படு கின்றன - பயிற்றப்படுகின்றன. கணிதம், வரலாறு, நிலவியல், அறிவியல், அரசியல், உளவியல், மருத்துவம் போன்ற எந்தக் கலையினையும் - எந்தக் கல்வியினையும் மொழியின்றிப் பயிலவோ பயிற்றவோ முடியாதுதானே!
உலகில் உள்ள எந்தக் கலையினையும் முற்றும் பயின்று முடிக்கவியலாது. இதற்கு மொழிக்கலையும் விலக்கன்று. இன்னும் கேட்டால், மற்ற கலைகளினும் மொழிக்கலை மிக்க ஆழமும் அகலமும் உயரமும் உடையதாகும். எப்படி? எல்லாக் கலைகளையும் ஒரு 502
மொழி பெற்றிருக்குமாயின், அதாவது, எல்லாக் கலை களும் ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்குமாயின், அம் மொழியின் கன அளவு மிகுதி என்பது தெளிவு.
ஒருவர் தமிழோ - பிரஞ்சோ - ஆங்கிலமோ - ஏதோ ஒரு மொழி கற்றிருக்கிறார் என்றால், அம் மொழியில் எழுதப்பட்டுள்ள எல்லாக் கலை நூற்களையும் கற்றிருக் கிறார் என்று பொருள் இல்லை. ஒருவரே அனைத்தையும் கற்கவும் முடியாது. ஆனால், ஒருவர் ஒரு மொழியில் உள்ள இலக்கண இலக்கியச் செய்யுள் உரைநடை களைப் பரந்த அளவில் பயின்றிருப்பாராயின் - அதா வது தேர்ந்த மொழிப் புலமை பெற்றிருப்பாராயின், அப் புலமையின் துணைகொண்டு, அம்மொழியில் எழுதப் பட்டுள்ள ஏனைய கலை நூற்களையும் ஒருவாறு படித்துப் புரிந்து கொள்ளலாம். ஒரு கலை வல்லார் அக்கலை பற்றித் தெளிவாக விளக்கமாக நூல் எழுதின், அக் கலை நூலினை , மொழி வல்லார் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே கட்டாயம் புரிந்துகொள்ள முடியும். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் தரமுடியும். இதனை மேலும் ஆய்வாம்:
இந்தக் காலத்தில் தமிழோ பிரஞ்சோ ஆங்கிலமோ படித்துப் பட்டம் பெற்றிருக்கும் சிலரிடம் சென்று, அவர்கள் படித்த மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலைக் காட்டி அதில் ஏதேனும் ஐயம் கேட்டால், 'நான் இது படிக்கவில்லை, அது தான் படித்தேன் - அது படிக்கவில்லை, இதுதான் படித்தேன்' என்று ஏதேதோ சொல்லி அவர்கள் தப்பித்துக் கொள்ள முடிகிறது. இத் தகைய பதில், அவரைப் போன்ற படிப்பாளிகட்கு ஆறுதல் அளிக்கலாமே தவிர, எளிய மக்களுக்கு மன நிறைவு அளிக்க முடியாது. 'என்னவோ படித்தவர் 503
என்று கேட்டால், இது சொல்லத் தெரியவில்லையே அவருக்கு' என்று எளிய மக்கள் எளிதில் உதட்டைப் பிதுக்கிவிடுவார்கள்.
எடுத்துக் காட்டாக, - தமிழ் படித்தவர் என்ற பெயருடன் ஒருவர் ஒரு சிற்றூரில் சென்று அகப் பட்டுக் கொண்டால், ஆங்கிருக்கும் சிலர் கேட்கும் கேள்விக்கட்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்; அவர்கட்கு எழும் ஐயந்திரிபுகளையெல்லாம் தெளிவிக்க வேண்டும். இலக்கண இலக்கியங்கள் பற்றி மட்டும் கேட்டால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கணிதம், மருத்துவம், வானநூல், தத்துவம் முதலிய கலைகள் பற்றித் தமிழ் மொழியில் செய்யுள் நூற்கள் பல உள்ளன. இக் கலை நூற்கள் தொடர்பாகச் சில தொண்டு கிழங்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடும். இங்கே மொழியில் முழுப் புலமை பெற்றவர் களே ஓரளவேனும் தாக்குப் பிடிக்க முடியும். அல்லாதவர் பதமாக நழுவிவிட வேண்டியதுதான்!
தமிழ்மொழியில் வல்லவர்கள் என்றால், அம்மொழி யில் எழுதப்பட்டுள்ள அனைத்துக் கலை நூற்களையும் புரிந்து கொள்ளத்தக்கவர்கள் என்று பொருள் கொள்ளும் நிலை பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையும் இருந்தது. ஆனால் இப்போது.........?
ஒவ்வொரு மொழியிலும் இல்லாத கலைகள் பல புதிதாகப் புகுந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண் டிலே - ஒவ்வொரு மொழியிலும் ஏற்கனவே இருந்த கலைகளும் இன்னும் ஆழ்ந்து அகன்று பெருகியிருக்கும்
இந்த இருபதாம் நூற்றாண்டிலே, ஒருவர் ஒரு மொழியில் லுள்ள எல்லாக் கலை நூற்களையும் கற்பதென்பதும் 504
மாந்தர் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதுதான். அவரிடம் அவ்வாறு எதிர்பார்ப்பதும் அறிவுக்கு ஒவ்வாததுதான். ஆனால்.........?
தாம் பயின்றுள்ள மொழியில் எழுதப்பட்டிருக்கும் எல்லாக் கலைகளையும் கற்கவேண்டியதில்லை. கற் றிருக்கும் ஒரு கலையைப் பொறுத்தமட்டிலுங்கூட அக் கலை பற்றிய எல்லா நூற்களையும் கற்க வேண்டிய தில்லை. ஆனால், தாம் இதற்கு முன் படித்தறியாத எந்த நூலைத் திடீரெனத் தந்தாலும், ஓரளவேனும் அதனைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மொழிப்பயிற்சி பெற்று வைக்கலாமே! பெற்று வைக்கவும் முடியுமே!
மொழிப் பயிற்சி அல்லது மொழிக்கலை என்னும் பெயரில் ஒருவர் பரந்துபட்ட இலக்கண இலக்கியச் செய்யுள் உரைநடை நூல்களைப் பயின்றிருக்கிறார் என்றால் என்ன பொருள்? எழுத்தாளர்களின் உள்ளக் கருத்துக்களை அவர்கள் எழுதியிருக்கும் எழுத்துக் களின் வாயிலாக நன்கு புரிந்து கொள்ளும் தேர்ந்த ஆற்றல் கைவரப் பெற்றிருக்கிறார் என்றுதானே பொருள்! இவர், பயிற்சி மாற்றக் (Transfer of Training) கொள்கைப்படி - அதாவது - ஒரு துறையில் பெற் றுள்ள தேர்ந்த பயிற்சி அதனை ஒத்த இன்னொரு துறைக்கும் உதவக்கூடும் என்ற கொள்கைப்படி, மொழித் தேர்ச்சியின் உதவியால் அம்மொழியில் எழுதப்பட்டுள்ள பல்வகைக் கலை நூற்களையும் தாமே படித்துப் புரிந்து கொள்ளலாம். துணைக்குக் கலைச் சொல் அகராதியை வைத்துக் கொள்ளலாம்.
முன்காலத்தில் மொழிப் புலவர்கள் எந்தக் கலை நூலைக் காட்டி எது கேட்டாலும் ஓரளவேனும் ஈடு 505
கொடுத்தார்கள் என்றால், அதில் ஒரு மறைபொருள் (இரகசியம் ) அடங்கியிருக்கிறது. இக் காலத்தார்க்கு எட்டாத உச்சாணிக் கிளைச் செய்தி அது! ஆனால் அன்று அஃது ஊர் அறிந்த 'இரகசியமே'! அது வருமாறு:
அகராதிக் கலை (Lexicography)யாகிய நிகண்டு நூற்கள் பல தமிழ் மொழியில் உள்ளனவன்றோ! பல்கலைக் களஞ்சியங்களாகிய - பல் கலைப் பொருட் காட்சி நிலையங்களாகிய இந்நிகண்டுகளை நிரம்பக் கற்றிருந்ததனால், அக்காலத்தவர் அன்றிருந்த எந்தக் கலை நூலுக்கும் ஈடு கொடுக்க முடிந்தது. அதனால் அவர்கள் முழு மொழிப் பயிற்சி - முழு மொழிப் புலமை உடையவர்களாக மதிக்கப் பெற்றனர். கல்வித்துறை யில் நிகண்டுப் பயிற்சியின் நன்மையும் இன்றியமை யாமையும் இப்போது விளங்குமே!
ஆம்! அக்காலத்தில் என்றென்ன - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட நிகண்டு இல்லாத கல்வி சிறந்தது கிடையாது. தமிழ் நாட்டில் கல்வி என்றால் அதில் நிகண்டிற்கு முதலிடம் இருந்தது பழைய முறைத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் என் றென்ன - றென்ன வெள்ளையர்கள் வந்த பிறகும், அவர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்ட பள்ளி களிலும் நிகண்டுக் கல்வி இருந்தது.
கவ்வித்துறையில் மொழிப் பாடத்தைக் 'கருவிப் பாடம்' (Stool Subject) என்று சொல்வது மரபு மொழியின்றி எந்தக்கலையினையும் எழுதவோ கற்கவோ முடியாதல்லவா? அந்த மொழிப் பாடத் துள்ளும் செய்யுள், உரைநடை, இலக்கணம் முதலியவற்றைக் 506
கற்றுக்கொள்ள நிகண்டுப் பாடம் பெரிய கருவியாகத் திகழ்ந்தது; அதாவது, சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூற்களைக் கற்றிருந்தால் எந்தச் செய்யுள் - உரை நடைப் பகுதியிலுள்ள அருஞ்சொற்களையும் புரிந்துகொள்ள முடியுமன்றோ ? எனவே, மற்ற கலைப் பாடங்கட்கு முதன்மையான கருவிப் பாடமாகத் திகழும் மொழிப் பாடத்திற்கும் முதன்மையான கருவிப் பாடம் நிகண்டுப் பாடமாகும், என்பது புலனாகும். சுருங்கச் சொல்லின், நிகண்டுக் கல்வி ஒருவகை 'மொழி அறிவியல்' ஆகும்.
நிகண்டு நூற்களிலுள்ள பன்னிரண்டு தொகுதி களிலும் பல்வகைக் கலைச்சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பெற்றிருப்பதை முன்பு கண்டோம். எனவே, நிகண்டு கற்றவர்கள் மற்றவர்களினும் எளிதாகப் பல்வகைக் கலைநூற்களையும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்; தாமும் பல்வகைக் கலைநூற்கள் எழுதுவதற்கு வேண்டிய கலைச் சொற்களை எளிதில் கையாள முடியும். பிற மொழிகளிலுள்ள கலை நூற்களைத் தமிழில் பெயர்க்கப் போதுமான கலைச்சொற்கள் தமிழ் மொழியில் இல்லை என்று இக்காலத்தில் குறைப்பாடு வோர் நிகண்டு நூற்களைப் புரட்டுவாராயின் அவற்றி லிருந்து பலதுறைக் கலைச் சொற்களைப் பெறுவது திண்ணம்! முயல்வாராக!
இவ்வளவு நன்மை தரத்தக்க அரும்பெருங் கலைக் கருவூலங்களாகிய நிகண்டு நூற்கள் இக்காலக் கல்வித் துறையால் கைவிடப் பட்டதேன்? இவ்வினாவிற்கு விடை வேண்டும்? 507
நம் நாட்டில் தமிழ்முறைக் கல்வி படிப்படியாகக் குறைய ஐரோப்பிய முறைக் கல்வி வன்மையாக நிலை யூன்றியது. ஐரோப்பியர்களுடன் வந்த அகராதிகள் நிகண்டுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நிகண்டுகளின் துணைகொண்டு அருஞ்சொற்கட்குப் பொருள் கண்டுவந்த நம் மக்கள், அகராதிகளின் துணைகொண்டு பொருள் காணத் தொடங்கிவிட்டனர். ஏன் இப்படி? இங்கே சில உண்மைகளை நாம் மறைக் கவோ மறுக்கவோ கூடாது. அவையாவன :
நிகண்டுகள் செய்யுள் நடையில் இருந்ததாலும், முயன்று வருந்தி நெட்டுருச் செய்யவேண்டியிருந்ததா லும், அகர வரிசையில் இல்லாமையாலும், அந்நிகண்டு களைப் பயன் படுத்துவதனினும், செய்யுள் நடையில் இல்லாமல் சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக அகர வரிசையிலுள்ள அகராதிகளை வருந்தி முயன்று நெட்டுருச் செய்யாமல் வேண்டியபோது எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது மக்களுக்கு எளிதாயிருந் தது. அதனால் தான் நிகண்டுகளை அகராதிகள் வென்றுவிட்டன.
மேலும், கல்வித் துறையில் புத்தியக்கங்கள் பல தோன்றத் தொடங்கின. அவற்றுள் ஒன்று உளவியல் முறையில் (Psychological Method) கல்வி கற்பிப்பதாகும். அதாவது, - குழந்தைகளின் உள்ளங்கள் எப்போதும் இன்பச் சுவையினையே விரும்புகின்றன; எளிமையும் விளையாட்டும் அவர்தம் தனியுரிமைகள் ; எனவே, குழந்தையுள்ளங்களின் இயல்பைப் புரிந்துகொண்டு அவ்வுள்ளங்கட்கு ஏற்ப எளிய முறையில் - விளையாட்டு முறையில் இன்பமான முறையில் கல்வி கற்பிக்க
32 508
வேண்டும். இதற்குத்தான் உளவியல் முறை என்று பெயராம்.
இக்கொள்கையையொட்டி ஆராய்ந்து பார்க்குங் கால், நிகண்டுகளை நெட்டுருச் செய்யும்படிக் குழந்தை களை வற்புறுத்தி வருத்துவது ஒருவகை ஒறுப்பு (தண்டனை) ஆகும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் நிகண்டுகளில் ஒன்றும் கருத்து இல்லை. ஒன்றோ டொன்று தொடர்பில்லாத வெற்று வரட்டுச் சொற் களைத் தவிர தொடர்பான செய்தியொன்றும் கூறப் படவில்லை. உளவியல் கல்வி முறையோ, குழந்தை களை எளிமையிலிருந்தே அருமைக்கு அழைத்துச் செல்லவேண்டும் - தெரிந்ததிலிருந்தே தெரியாததற்கு அழைத்துச் செல்லவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. இதன்படி பார்த்தால், தனிச் சொல்லுக்கு மதிப்பில்லை. குழந்தைகள் முன்னமேயே அறிந்துவைத்துள்ள செய்திகள் அடங்கிய சொற்றொடர்களின் (வாக்கியங் களின்) வாயிலாகவே தனிச்சொற்களை அவர்கட்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் அவர் தம் உள்ளங்கட்கு ஏற்ற இனிய எளிய முறையாகும். 'இலக்கியங் கண்டதற்கு இலக்கணம்' என்ற முறை யில், சொற்றொடர்களிலிருந்தே தனிச்சொல்லை எடுத்து நிறுத்திப் பொருள் விளக்கம் தரவேண்டும். இந்த முறை நிகண்டுக் கல்வியில் பின்பற்றப்படவில்லை. குருட்டுப் பாடமாகவாவது நிகண்டுப் பாடல்களை அடித்துப் பிடித்து நெட்டுரு செய்து கொள்ள வேண் டும். இப்படியான ஒரு முறை சிறு மாணாக்கர்கட்குக் கடினமானதுதானே! இஃதன்றி, இன்னும் ஓர் எதிர்ப்பு நிகண்டுக் கல்விக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.
அஃதாவது: 509
வாழ்க்கையில் கற்கவேண்டிய கலைகளோ பற்பல உள்ளன. பல கலைகள் இன்றி, ஏதேனும் ஒரு கலையைக் கற்கவேண்டுமென்றாலுமே, அஃதொன்றுமே மிகமிக ஆழ்ந்து அகன்று நீண்டு பரந்த ஒரு மாபெருங் கடலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மூளைக்கு எவ்வளவுதான் வேலை கொடுப்பது? வேண்டியபோது அகராதியை எடுத்துப் புரட்டிச் சொல்லுக்குப் பொருள் தெரிந்து கொண்டு போவதைவிட்டு, நிகண்டுப் பாடல் களை வீணே ஏன் நெட்டுருப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் மூளைக்குத் தேவையற்ற தொல்லை தானே? காலமும் முயற்சியும் ஒருசேர வீணன்றோ ? இந்த நேரத்தில் - இந்த முயற்சியில் வேறொன்றைக் கற்கலாம் அல்லது வேறொரு வேலை செய்யலாமே! எனவே எப்படி நோக்கினும், நிகண்டுக் கல்வியினும் அகராதிக் கல்வியே எளியது - செட்டானது - பயனுள் ளது ஆகும்!
இதுகாறும், நிகண்டுப் பயனினும் அகராதிப் பயனே சிறந்தது என்பவரது கூற்று பல கோணங்களில் வற்புறுத்தப்பட்டது. இங்கே இக்கொள்கைக்கு எதிர்ப் பாக, அகராதிப் பயனினும் நிகண்டுப் பயனே நூற் றுக்கு நூறு உயர்ந்தது என்று கச்சை கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்க முடியாதென்றாலும், நிகண் டுக் கல்வி முறையில் இருந்து வந்த பெரும் பயனை எடுத்துக் கூறாமல் விடமுடியாது.
நிகண்டுப் பாடல்களை வலிந்து முயன்று நெட்டுருப் பண்ணுவது உளவியல் முறைக்கு ஏற்றதன்று என்று இக் காலத்தில் கருதப்படினும், அக்காலத்திலோ நிகண்டுப் பாடல்களை என்றென்ன - வேறு பன்னூற் 510
பாடல்களையும் பரவலாக உருப்போடுவது எளிய பழக்க மாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிகண்டுப் பாடல்கள், பகவனே யீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் " -- என்பதுபோல இசையோடு முறை போட்டு மாணாக் கர்களால் பயிலப்பட்டுவந்ததால் அவர்தம் உள்ளங்களில் எளிதில் பதிந்து வேரூன்றி விட்டன. அதனால், நிகண்டு. கற்றவர்கள், சொந்தக் கையிருப்பில் நிரம்பப் பணம் வைத்திருப்பவர்கள் வேண்டிய போதெல்லாம் - வேண் டியபடி யெல்லாம் எடுத்துச் செலவு செய்வதைப்போல, எந்த நூலையும் எந்தப் பாடலையும் பெரும்பாலும் பிற ருதவி தேவையின்றியே எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கே ஒரு திருக்குறள் நினைவிற்கு வருகிறது : யானையும் யானையும் போரிடு' வதை மலையுச்சியில் நிற்பவன் அச்சமோ அயர்வோ இன்றி நன்கு காண முடியுமாறு போல, தன் கையில் சொந்த உடைமையாக நிரம்பப் பொருள் வைத்திருப்ப வன் எந்த வினையையும் தன் விருப்பம் போல் முட் டின்றி முடிக்க முடியும் என்னும் கருத்துடைய,
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. என்னும் திருக்குறள் தான் அது. இந்தக் குறட் கருத்தை நிகண்டுக் கல்விக்கும் பொருத்திக்கொள்ள லாம். பொருள் வைத்திருப்பவருக்கு நேர் - நிகண்டு கற்றவர்; பொருள் உடையவர் எந்த வினையையும் எளிதில் செய்வதற்கு நேர் - நிகண்டு கற்றவர் எந்த நூலையும் எளிதில் புரிந்து கொள்ளுதல். இங்கே, குறளிலுள்ள 'தன் கைத்து' என்னும் தொடரை ஊன்றி நோக்க வேண்டும். பிறர் கைப் பொருள் - ஏன் - தன் கையில் இல்லாமல் வேறிடத்தில் இருக்கும் தன் 511
பொருளேகூட தான் விரும்பியவாறு வினை செய்வதற் குத் தக்க நேரத்தில் உதவாமற்போகலாம். அகராதிப் பயனும் இதுபோன்றதுதான். திடீரென ஓரிடத்தில் ஒரு நூலை - ஒரு பாடலைப் படிக்க நேர்ந்தபோது சில சொற்கள் புரியவில்லையென்றால், இனி அகராதி தேடி - சொல்தேடி - பொருள் தேடிப் புரிந்து கொள்ள வேண்டும். செல்லு மிடமெல்லாம் அகராதி மூட்டை யைச் சுமந்து திரிய முடியுமா? நிகண்டுப் பயனோ இது போன்ற தன்று. நிகண்டு மூட்டை தலைக்கு மேலே அல்ல - தலைக்கு உள்ளே பொருத்திவைக்கப்பட் டுள்ளது. அதனால், வேண்டியதற்கெல்லாம் வேண்டிய போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவேதான், நிகண்டு கற்றவர்கள் மொழித் துறையில் (கிங்காங் - தாராசிங் போன்ற) மாமல்லர்களாகத் திகழ்ந்தார்கள். அக்கால நிகண்டுப் பயனுக்கும் இக் கால அகராதிப் பயனுக்கும் உள்ள வேற்றுமை இப் போது எளிதில் புலனாகுமே.
வேறிடத்துப் பொருள் போன்றது அகராதி; தன் கைப் பொருள் போன்றது நிகண்டு. மலர்கள் தனித் தனியே உதிர்ந்து கிடப்பது போன்றது அகராதி ; தொடுத்த மலர்மாலை போன்றது நிகண்டு. ஐந்து காசு - பத்துக் காசு பணச் சில்லறை போன்றது அகராதி ; பத்து உரூபா - நூறு உரூபா பணத்தாள் போன்றது நிகண்டு. இப்படியாக, அகராதிக் கல்வி முறையினை யும் நிகண்டுக் கல்வி முறையினையும் பல கோணங் களில் ஒற்றுமை வேற்றுமைப் படுத்திப் பார்க்குங் கால், அகராதி முறையின் மாபெரும் பயனை யாரும் மறுக்கமுடியாதென்றாலும், அதேநேரத்தில் நிகண்டு முறையின் பெரும் பயனையும் யாரும் மறைக்க முடியாது. 512
எனவே, இக்காலக் கல்விக் கூடங்களில் அகராதி யைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவது போலவே, ஓரளவேனும் நிகண்டுப் பகுதிகளையும் அறிமுகஞ் செய்து வைப்பது நல்லது. இன்னும் கேட் டால் இக்காலத்தில் நம் நாட்டைப் பொறுத்தவரையும் அகராதியே சரிவரப் பயன்படுத்தப் படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அக்காலத்தில் நம் நாட்டில் நிகண்டுகள் நிரம்பப் பயன்படுத்தப்பட்டன. இக்காலத் தில் மாணாக்கர் பெரும்பாலாரிடத்தில் அகராதியே இருப்பதில்லை. அப்படியே அகராதி தரினும், அதில் உரிய சொற்பொருள் தேடிக் கண்டுபிடித்துப் பயன் படுத்தும் முறை பலருக்குத் தெரிவதில்லை. சிலர் அகராதியையே பார்த்ததில்லை. அகராதியைப் பற்றிக் கேள்விப்படாமலுங்கூட ஒரு சிலர் இருப்பினும் வியப் படைவதற்கில்லை. இந்த இரங்கத்தக்க எளிய நிலை, இற்றைக்கு ஐம்பது அறுபது ஆண்டுகட்கு முன்பு வரையுங்கூடத் தமிழகத்தில் இருந்ததில்லை. நமக்கும் முன் தலைமுறையினருக்கு ஏதேனும் ஒரு நிகண்டின் ஒரு சில பகுதிகளாயினும் கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டன. இத்திட்டத்தை இக்காலத்திலும் கல்வித் துறையில் மீண்டும் படிப்படியாகக் கொண்டு வருவது நல்லது. அதற்குரிய வழி வருமாறு:
இக்காலக் கல்விக்கூடங்களில், மொழிப் பாடம் என்னும் பெயரில், கேட்டல் (Listening), பேசுதல் (Speaking), படித்தல் (Reading), பார்த்து எழுதுதல் (Transcription), அச்சு எழுதுதல் (Copy writing), சொற் றொடராக்கம், சொல்வது எழுதுதல் (Dictation), கடிதம் எழுதுதல் (Letter writing), கட்டுரை (Composition) எழுதுதல், செய்யுள் (Poetry), உரைநடை (Prose), 513
இலக்கணம் (Grammar), பாட்டு (Song) , கதை, நாடகம், மொழி பெயர்ப்பு முதலிய பல்வேறு பிரிவுகள் பல்வேறு வேளைகளில் (Periods) பயிற்றப்படுகின்றன. இவற் றுடன், 'பத்தோடு பதினொன்று - அத்தோடு இது ஒன்று' என்ற முறையில் நிகண்டுப் பாடத்தையும் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளலாமே! அதாவது, சூடா மணி நிகண்டு அல்லது வேறு ஏதாவது ஒரு நிகண் டைத் தேர்ந்தெடுத்து அதைப் பல கூறுகளாகப் பகுத் துக்கொண்டு வகுப்பு வாரியாகப் படிப்படியாகப் பயிற்றிவாலாமே!
இங்கே, காட்டாகத் திருக்குறளை எடுத்துக் கொள் வோம். ஐந்தாம் வகுப்பிற்கு இத்தனை குறள்கள் - இன்னின்ன குறள்கள்; ஆறாம் வகுப்பிற்கு இத்தனை குறள்கள் - இன்னின்ன குறள்கள் ; இப்படியே இன்னும் அடுத்த வகுப்புகட்கு உரிய குறள்கள் என்று பாடத் திட்டம் வகுத்துப் பயிற்றுவதைப்போல, ஒரு நிகண் டையும் பல கூறுகளாகப் பங்கிட்டுக் கொண்டு மூன்றாம் வகுப்பிலிருந்து கற்பித்து வரலாம். மூன்றாம் வகுப்பிலிருந்து தொடங்குவது குறித்துக் கருத்து வேற்றுமை தோன்றுமாயின், ஐந்தாம் வகுப்பிலிருந்து கட்டாயம் தொடங்கலாம். நிகண்டின் பன்னிரண்டு தொகுதிகளில் பிற தொகுதிகளை விட்டுவிட்டு, சொற் பொருள் கூறும் பதினோராவது தொகுதியை மட்டு மாயினும் தொடங்கிக் கற்பித்து வரலாம்.
கல்வித்துறை யறிஞர்கள் இத்துறையில் கருத்து செலுத்தியருளுவாராக!