உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் அகராதிக் கலை/மூன்றாம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து


மூன்றாம் பாகம்

[பிற நிகண்டுகள்]

பிங்கல நிகண்டு

சேந்தன் திவாகரத்திற்கு அடுத்ததாகக் காலத்தால் முற்பட்டது பிங்கலம்தான். பவணந்தி முனிவர் தமது நன்னூலின் நானூற்று அறுபதாம் நூற்பாவில், ‘பிங்கலம் முதலா’ என இதனையே நிகண்டுகளின் தலை நூலாக எடுத்தாண்டிருப்பதை ஆராயின், ஒரு காலத்தில் திவாகரத்தினும் பிங்கலமே பெருவாரியாகப் பயிலப்பட்டிருந்தது என்பது புலனாகலாம்.

பெயர்க் காரணம்

‘பிங்கலர்’ என்பவரால் இயற்றப்பெற்றதாதலின், ஆசிரியர் பெயராலேயே இந்நூல் ‘பிங்கலம்’ என அழைக்கப்படுகிறது. இதற்குப் ‘பிங்கலந்தை’ என்னும் மாற்றுப் பெயரும் உண்டு. 209

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் பிங்கலரது வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ளவும் வழக்கம்போல் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. 1917-ஆம் ஆண்டில் "மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை'யில் வெளியான பிங்கல நிகண்டுநூல் பதிப்பின் முகவுரையில் பின் வருமாறு ஒரு பகுதி காணப்படுகிறது :

" பிங்கல நிகண்டு என்பது பிங்கல முனிவர் என்னும் வித்வ சிரேஷ்டரால் இயற்றப்பட்ட நூல். இவர் ஆதிதிவா கரம் இயற்றிய திவாகர முனிவர் புத்திரர். இப்பிங்கல முனிவர் சோழ வம்சத்தில் உதித்தவரே யாயினும், துறவு பூண்டு தமிழ், நூல் ஆராய்ச்சியிலேயே தமது காலத்தைப் போக்கியவர். இவர் காலம் நச்சினர்க்கினியர் காலத்துக்கு முந்திய தென்பர்.”

இது, நூலை அச்சிட்டவர்கள் எழுதிய முகவுரை யாகும். .

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியரா யிருந்த ஆ. சிங்கார முதலியார் இயற்றிய அபிதான சிந்தாமணி என்னும் நூலின் இரண்டாம் பதிப்பில் (1934-ஆம் ஆண்டு), பிங்கல முனிவரைப் பற்றிப் பின் வருமாறு காணக்கிடக்கிறது :

" பிங்கல முனிவர் :-பிங்கலந்தை என்னும் நிகண்டு இயற்றிய சைநர். இந் நிகண்டு, சூடாமணி நிகண்டு, சேந் தன் திவாகரம் முதலியவற்றிற்கு முந்திய நூலாதலால், இவர் அந்நூலாசிரியர்களுக்கு முந்தியவர். இவர் ஆதி திவாகர முனிவர்க்குப் புத்திரர்.” r

மேலுள்ள இரு குறிப்புக்களையும் நோக்கின் பிங்கலர் ஆதி திவாகரரின் மகனுவார் என்பதும், பிங்கல நிகண்டு சேக்தின் திவாகர நிகண்டினும் காலத் 210

தால் முந்தியது என்பதும் புலகுைம். இக்கருத்துப் பொருந்தாது எனினும், பிங்கல நிகண்டை அச்சிட்ட பழைய பதிப்பாசிரியரும் அபிதான சிந்தாமணி ஆசிரி யரும் மேற்கண்டவாறு கூறியுள்ளதற்கு அவர்கட்குக் கிடைத்துள்ள சான்றுகளாகக் கருதத்தக்கவை சில உண்டு. அவை வருமாறு -ே

(1) பதின்மூன்ரும் நூற்ருண்டில் கன்னூல் எழு திய பவணந்தி முனிவர், பிங்கல முதலா, கல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே' எனப் பிங்கல நிகண்டுக்கே முதன்மை தந்துள்ளார்.

(2) பதினரும் நூற்ருண்டின் இறுதியில் (1594) 'அகராதி நிகண்டு என்னும் நிகண்டு எழுதிய புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தர் என்னும் புலவர் அந்நூலின் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளில்,

" தெரிதரு பிங்கலம் திவாகரம் முதலாய்ப்

பரவிய நிகண்டு பலவெடுத்து ஆராய்ந்து ”

எனத் திவாகரத்தினும் பிங்கலத்திற்கே முதன்மை கொடுத்துள்ளார். பவணந்தியாராவது பிங்கல முதலா' எனப் பிங்கலத்தை மட்டும் விதந்து குறிப்பிட்டுள் ளார். ஆளுல் இவரோ, பிங்கலம் திவாகரம் முதலாய்' என இரண்டையும் குறிப்பிட்டு, பிங்கலத்தை முன்னும் திவாகரத்தைப் பின்னுமாக அமைத்துள்ளார். இத ல்ை, திவாகரத்தினும் பிங்கலமே முந்தியது என்னும் கொள்கை உருவாயிற்று.

(3) பிங்கல நிகண்டு நூலின் தொடக்கத்துக்கு முன்னுல் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டுள்ள சிறப் புப் பாயிரச் செய்யுளின் இடையே, 211

' செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த

பிங்கல முனிவன் எனத்தன் பெயர் நிறீஇ

உரிச்சொல் கிளவி விரிக்குங் காலை ' என்னும் அடிகள் அமைந்துள்ளன. இப்பகுதியால், திவாகரன் பெற்ற பிள்ளை பிங்கலன் என்பது தெரிய வருகிறது. சேந்தன் திவாகரத்தினும் பிங்கலமே முக்தியது என்னும் கொள்கையினர் இப் பகுதியைக் கண்டதும், ஆதிதிவாகரர் பெற்ற பிள்ளையே பிங்க லர் என்று பொருள் கூறி, சேந்தன் திவாகரம் எழுதிய திவாகரர் பிங்கலர்க்குப் பிற்பட்டவரே என்று முடிவு கட்டிவிட்டனர்.

இந்தக் கருத்துப் பொருந்தாது; பிங்கலர் ஆதி திவாகரரின் மகன் அல்லர், சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர். எனவே, பிங்கலம் சேந்தன் திவாகர நிகண்டுக்குப் பிந்தியதேயாகும். இதற்குரிய சான்றுகள் வருமாறு :

(1) பிற்காலத்தில் மிகுதியாகப் பயிலப்பட்ட சூடாமணி’ என்னும் நிகண்டுநூலைப் பதிருைம் நூற்ருண்டின் முற்பகுதியில் (1520) இயற்றிய மண் டல புருடர் என்னும் ஆசிரியர், நூலின் தொடக்கத்தில் பின்வருமாறு பாடியுள்ளார் :

" அங்கது போய பின்றை

அலகில்நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தால் தோன்றும்

திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கலர் உரைநூற் பாவில்

பேணினர் செய்தார் சேர இங்கிவை யிரண்டுங் கற்க

எளிதல என்று சூழ்ந்து ” 212

" விரவிய தேவர் மக்கள்

விலங்கொடு மரம் இடம் பல்

பொருள் செயும் வடிவு பண்பு

போற்றிய செயல் ஒலிப் பேர்

ஒருசொல் பல்பொருளி ைேடும்

உரைத்த பல்பெயர்க் கூட்டந்தான்

வருமுறை திவாகரம் போல்

வைத்துப் பிங்கலந்தை தன்னில்

" ஒருங்குள பொருளும் ஒர்ந்திட்டு

உரைத்தனன் விருத்தம் தன்னில்.”

மேலுள்ள பாடல் பகுதியில் ஒர் இடத்தில் மட்டு மன்று-இரண்டு இடங்களில் பிங்கலத்தினும் திவாக ரத்திற்கே மண்டல புருடர் முதன்மை கொடுத்திருப் பது புலகுைம். நிகண்டுக் கலையில் முழுக்க முழுக்கத் தோய்ந்து தாமும் ஒரு (சூடாமணி) நிகண்டு எழுதிய மண்டல புருடரின் தீர்ப்பாவது, பிங்கலத்தினும் திவாகரமே முக்தியது என்பதே. ஆனல், மண்டல புருடரால் குறிப்பிடப்பட்டிருப்பது சேந்தன் திவாகர மன்று- ஆதி திவாகரமே யாகும் என்று சிலர் மறுப் புக் கூறலாம். இம் மறுப்பு தவருனது. மண்டல புருடர் குறிப்பிட்டிருப்பது சேந்தன் திவாகரத்தையே! சேந்தன் திவாகரத்தில்,உள்ள பன்னிரண்டு தொகுதி களின் பெயர்களையும் வரிசை மாருமல் அப்படியே அடுக்கி வைத்து,

" விரவிய தேவர், மக்கள்,

விலங்கொடு, மரம், இடம், பல்

பொருள், செயும் வடிவு, பண்பு,

போற்றிய செயல், ஒலிப்பேர், 213

ஒருசொல் பல்பொருளி ைேடும்,

உரைத்தபல் பெயர்க் கூட்டந்தான், வருமுறை திவாகரம் போல்...... $ 2

என மண்டல புருடர் எழுதியிருக்கும் பாடலை மீண்டும் ஒருமுறை ஈண்டு நினைவு செய்து பார்த்தால், திவாகரம் என அவரால் சுட்டப்பட்டிருப்பது சேந்தன் திவாக ரமே என்னும் உண்மை மலைமேல் விளக்காகும்.

(2) இவ்வுண்மையை விளக்க மற்றும் ஒரு சான்று உண்டு. பதினேழாம் நூற்ருண்டில் ஆசிரிய நிகண்டு என்னும் நூல் இயற்றிய ஆண்டிப் புலவர் தமது முன்னுரைப் பாயிரத்தில்,

‘’ முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுசீர்

முந்து காங்கயன் உரிச் சொல் முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திரட்டி...... 3 *

எனப் பிங்கலத்தினும் திவாகரத்திற்கே முதன்மை தந்துள்ளார். இதலுைம் திவாகரமே முற்பட்டது என்பது உறுதி.

உண்மை இஃதாயின், பவணந்தியாரும், அகராதி நிகண்டு எழுதிய புலியூர்ச் சிதம்பரரேவண சித்தரும் பிங்கலத்திற்கே முதன்மை கொடுத்திருப்பது ஏன் ? என்ற வி ைஈண்டு எழலாம். இந்த ஐய வினவிற்குத் தெளிவாகத் தக்க விடையிறுக்க முடியும் :

i . - .

பவணந்தியார் தமது கன்னூலில் பிங்கலத்திற்கு

முதன்மை கொடுத்திருக்கும் சூழ்நிலையை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர் நன்னூல் உரியியலில், 214

பலபொருள் (அர்த்தம்) உடைய ஒரு சொல்லும், ஒரு பொருள் உடைய பல சொற்களுமாகச் சில சொற் களைக் கூறி, இப்படியே சொல்லிக்கொண்டு போனல் இந்நூல் விரியும் ஆதலால், ஏனைய சொற்களைப் பற்றி யெல்லாம் விரிவாக அறியவேண்டுமாயின், பிங்கலம் முதலிய நூல்களில் கண்டுகொள்க என்னும் கருத் தில், .

“ இன்னது இன்னுழி இன்னணம் இயலும்

என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே.”

என்று எழுதியுள்ளார். கன்னுாலார் இப்படிக் கூறியிருப்பதில் பொருள் உண்டு. திவாகரம், பிங் கலம் என்னும் இரண்டனுள், திவாகரத்தினும் பிங்க லத்திலேயே மிக்க சொற்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, திவாகரத்தில் ஏறக்குறைய 9500 சொற் களே விளக்கம் பெற்றுள்ளன; பிங்கலத்திலோ ஏறக் குறைய 15,800 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட பிங்கலத்தின் ஐந்தில் மூன்று பாகமே திவாகரம். இதல்ைதான் பவணந்தியார், சொற்களை விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானல் பிங்கலம் முதலிய நூற்களில் காண்க என, மிக்க சொற்கள் இடம் பெற்றுள்ள பிங்கலத்தை முதலில் குறித்தார்.

தந்தை திவாகரர் சுருக்கமாய் எழுதியிருக்க, அவர் விட்டனவற்றையும் சேர்த்து மைந்தர் பிங்கலர் விரிவாக எழுதியிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. 'தாய் பத்தடி தாண்டும் என்ருல், குட்டி பதினறடி தாண்டும் என்று பழமொழி சொல்வார்களே ! 215

பிங்கலத்தின் பெருக்கம் நோக்கிப் பவணந்தியார் அதற்கு முதன்மை கொடுத்திருப்பதின் பொருத்தத் தைப் புரிந்து கொள்ளாத சிலர், திவாகரத்தினும் பிங் கலமே முந்தியது எனப் பிற்காலத்தில் கூறத் தொடங்கிவிட்டனர். இவ்வாறே புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தரும் தம் அகராதி நிகண்டில் கூறிவிட் டிருக்கிரு.ர்.

திவாகரத்தினும் பிங்கலத்திற்குச் சிலர் முதன்மை கொடுத்துவிட்டதற்கு இன்னெரு பொருட்டும் (கார ணமும்) சொல்லலாம். அதாவது :- திவாகரரால் திவாகாம் தோன்றிய உடனேயே, அவர் மகன் பிங்கல. ரால் பிங்கலம் தோன்றிவிட்டிருக்கவேண்டும். இக் காலம்போல் அச்சு வசதியும் போக்குவரவு வசதியும் இல்லாத எட்டாம் நூற்ருண்டில் ஒரு குடும்பத்தி லிருந்து அடுத்தடுத்துத் தோன்றிய இந்த இரு நிகண் டுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் (அல்லது சிறிது முன்னும் பின்னுமாக) வெளியுலகில் பரவத். தொடங்கியிருக்கும். அதல்ை, எது முக்தியது - எது பிந்தியது என்று அறிய முடியாத ஒருநிலை - அறிய வேண்டிய தேவையில்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்க லாம். ஒருசிலர் திவாகரம் படித்துவந்திருக்கலாம் - ஒரு சிலர் பிங்கலம படித்து வந்திருக்கலாம். ஒரு சில விடங்களில் திவாகரம் பரவி யிருக்கலாம் - ஒரு சில விடங்களில் பிங்கலம் பரவி யிருக்கலாம். ஒரு சிலர்க்கு திவாகரம் உயர்ந்ததாகத் தெரியலாம்- ஒரு சிலர்க்குப் பிங்கலம் உயர்ந்ததாகத் தெரியலாம். இவ்வகையாக நாளடைவில் ஒருசிலர் திவாகரத்திற்கு முதன்மை கொடுத்திருக்கலாம் - ஒருசிலர் பி ங் க ல த் தி ற்கு முதன்மை கொ டுத்திருக்கலாம். இதல்ை, எது முந்தியது 216

- எது பிந்தியது என்று சொல்ல முடியாத அள வுக்குப் பிற்காலத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண் டும். இந்த இரு நூற்களுக்கும் நடுவே குறைந்தது ஒரு நூற்ருண்டுக் காலமாயினும் இடைவெளி யிருக் திருக்குமாயின், இரு வேறுபட்ட இந்தக் குழப்பத்திற்கு இடம் இருந்திராது; இதுதான் முன்னது - இதுதான் பின்னது என்ற திட்டவட்டமான முடிவு எல்லோரா லும் தொடர்ந்து ஒருமித்துக் கூறப்பட்டு வந்திருக்கும்.

இவ்வாறு சில பொருட்டுக்களால் சிலர் பிங்கலத் திற்கு முதன்மை கொடுத்திருப்பினும், திவாகரத்தின் தலைமை இறுதிவரை - இன்றுவரை மறையவில்லை. சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியைப் பத்தொன்பதாம் நூற்ருண்டில் (1836) அச்சிட்ட புதுவை-நயகப்ப முதலியார் தமது பதிப்பு முகவுரை .யில்,

' கையெழுத்துப் புத்தகங்களி லெழுத்துஞ் சொல்லும் மாறுபடுகின்றனவற்றை விலக்கிச் சுத்தபாடமாக வழங்குவிக் கும் பொருட்டுத் திவாகரம் - பிங்கலம்-உரிச் சொன்னிகண்டுஅரும் பொருள் விளக்கத் தீபிகை-ஆசிரிய நிகண்டு-கயாகரம்பொதிய நிகண்டு-சூத்திர வகராதி-இவை முதலிய நூல்களா

னும்-'

என்று திவாகரத்திற்கே முதன்மை கொடுத்துள்ளார். பிங்கலத்திற்கு முதன்மை கொடுத்துள்ள இருபதாம் நூற்ருண்டினர்களாகிய பிங்கல நிகண்டுப் பதிப் பாசிரியரும் அபிதான சிந்தாமணி ஆசியருங்கூட, பிங் கலர் திவாகரரின் மகன் என்பதை ஒத்துக் கொள்கின் றனர். ஆனல் அவர்கள், திவாகரன் பயந்த பிங்கல முனிவன்' என்னும் பாடற் பகுதியிலுள்ள திவாகரன் 217

என்பதற்கு ஆதிதிவாகரன் என மாற்றிப் பொருள் கொண்டதஞலேயே, சேந்தன் திவாகரரினும் பிங்கலர் முந்தியவர் எனத் திரிபாகக் கூறி விட்டனர். --

ஈண்டுப் பெரும்பாலாரின் கருத்துப்படி ஆராய்ந்து பார்த்ததில், பிங்கலத்தினும் சேந்தன் திவாகரமே முற்பட்டது என்ற முடிவு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே, பிங்கலர் சேந்தன் திவாகரரின் மகனுவார் என் பதும் தெரியவரும்.

சேந்தன் திவாகரருக்கும் பிங்கலருக்கும் தந்தைமகன் என்ற முடிச்சு போடவேண்டியதில்லை; இவர் வேறு- அவர் வேறு என்று எவரேனும் கூறினும், சேந்தன் திவாகரத்தினும் பிங்கலம் பிந்தியது என்பது வரைக்குமாவது உறுதி.

சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர் என்பதை ஒத்துக்கொண்டால், பிங்கலரின் காலமும் எட்டாம் நூற்ருண்டே என்பது பெறப்படும். பதின் மூன்ற்ம் நூற்ருண்டினராய பவணந்தியார் தமது நன்னூலில் பிங்கலத்தைக் குறித்திருப்பதால், பிங்கலம் பதின் மூன்ரும் நூற்ருண்டிற்கு மிகவும் முக்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது.

சைவ சமயத்தவராகிய சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர் என்றல், இவரும் சைவ சமயத்தவர் என்பது பெறப்படும். மேலும், ஆசிரியர், வானவர் பெயர் வகைகளைக் கூறுங்கால், மு. த லி ல் விநாயகரையும் அடுத்துச் சிவன், உமை, முருகன் ஆகியோரையும் கூறி, பின்னரே மற்ற சமயக் கடவுளர்களைப் பற்றிப் பேசி யிருப்பதால், இவர் சைவ சமயத்தவர் என்பது உறுதி. 218

பிங்கல முனிவர் எனச் சுட்டப்படுவதிலிருந்து, வாழ்க்கையின் தொடக்கத்திலோ அல்லது இறுதி யிலோ இவர் துறவு பூண்டிருக்கவேண்டும் என்பதும் தெளிவு.

நூலின் அமைப்பு

பிங்கல நிகண்டு நூலின் முகப்பில் முதலாவதாக,

" தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம்

களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன் றளியஎன் நெஞ்சே."

என்னும் பிள்ளையார் வணக்கப் பாடல் காணப்படு கிறது. இதன் கருத்து :- என் உள்ளம், ஐந்து கை களையுடைய பிள்ளையாராகிய யானை தங்கியுள்ள காடாக இருப்பினும், அது மிக்க அறிவொளி வீசி விளங்குகிறது-என்பதாம். இந்தப் பாடலை அடுத்து, சிறப்புப் பாயிரம் என்னும் தலைப்பில்,

" இருங்கடல் உடுத்தஇம் மாநிலம். விளங்க

அரும்பொருள் தெரித்த அகன்தமிழ் வரைப்பின் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுட் கணிகல தைலிற் செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல் ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி 219

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொற்ரு குைம் சிதைந்தன வரினும் இயைந்தன வரையா அந்நாற் சொற்றிறம் அரில்தய முழுதும் செங்கதிர் வாத்தால் திவாகரன் பயந்த பிங்கல முனிவன் எனத்தன் பெயர்நிறீஇ உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் வாஅன் வகையும் வானவர் வகையும் வானினும் மண்ணினும் வழங்கல் வழாஅ சனமில் ஐயர் இயல்புளி வகையும்

அவனி வகையும் ஆடவர் வகையும் அவர் திறத் தமைந்த அதுபோக வகையும் அவையவத் தடைத்த ஆன இயல்பிற் பண்பிற் செயலிற் பகுதி வகையும் மாப்பெயர் வகையும் மாப்பெயர் வகையும் ஒருசொல் பல்பொருள் ஓங்கிய வகையுமென்று இருளற ஈாைந் தாக்கி மருனற வகுத்தனன் மதியினின் விரைந்தே.” என்னும் பாடல் காணப்படுகிறது. இதன் சுருங்கிய கருத்தாவது :- ஆசிரியர், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் கால்வகைச் சொற் களையும் விளக்க உரிச்சொல் (நிகண்டு) நூல் இயற்றத் தொடங்கி, திவாகரன் பெற்ற பிங்கல முனிவன் எனத் தம் பெயரைச் சொல்லிக்கொண்டு அப்பெயரையே நூலுக்கும் இட்டு, வான்வகை முதலாக ஒரு சொல் பல் பொருள் வகை ஈருகப் பத்துத் தொகுதிகளைத் தம் அறிவுத் திறமையால் ஐயந்திரிபற அமைத்து விளக்கி 'ய்ள்ளார் - என்பதாகும்.

மேல் கூறப்பட்டுள்ள பிள்ளையார் வணக்கப் பாட லும் சிறப்புப் பாயிரப் பாடலும், ஆசிரியர் பிங்கலரால்

14 220

எழுதப்பட்டவையல்ல. இவை யிரண்டும், பிற்காலத் தில் ஏடு பெயர்த்து எழுதியோரால் இயற்றிச் சேர்க்கப் பட்டிருக்கவேண்டும். ஓர் ஒலையிலிருந்து மற்றேர் ஒலையில் பெயர்த்து எழுதுபவர்களும், ஓலைச் சுவடியி லிருந்து தாளில் அச்சிடுபவரும் இவ்வாறு கடவுள் வணக்கமும், ஆசிரியரின் சிறப்பைக் கூறும் பாயிரமும் (அணிக்துரையும்) எழுதிச் சேர்ப்பது தொன்று தொட்ட மரபு. -

இப்பாடல்கள் இரண்டும் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்தவையல்ல என்ருலும், ஆசிரியர் காலத்திலேயே ஒரு சிறந்த புலவர் எழுதியளித்த அணிந்துரை (மதிப் புரை)யாகவும் இருக்கலாம். இக்காலத்தும் ஓர் எழுத் தாளர் எழுதிய நூலுக்கு அறிஞர் சிலர் மதிப்புரை - சிறப்புரை அளிக்கும் மரபு உண்டல்லவா ?

இவ்விரண்டு பாடல்களும் பிங்கல முனிவரே எழுதிய தற்சிறப்புப் பாயிரமாகும் - அதாவது இக் காலத்தில் நூலாசிரியர் நூலின் முகப்பில் எழுதுகிற ஆசிரியர் முன்னுரை (Preface) போன்றனவாகும் என்று சிலர் கூறலாம். இக்கூற்று பொருந்தாது. சிறப்புப் பாயிரப் பாடலின் இடையிலுள்ள பிங்கல் முனிவன் எனத்தன் பெயர் நிறீஇ' என்னும் அடிய்ைக் 'கூர்ந்துகோக்கின், பிறர்எழுதியதே என்பதுபுலப்படும். பிங்கல் முனிவரே எழுதியிருப்பின், தன் பெயர் எனக் கூருது என் பெயர்’ என்று கூறியிருப்பார்; அதாவது, i. பிங்கல முனிவன் என என் பெயர் கிறீஇ என்று எழுதியிருப்பார். எனவே, இச்சிறப்புப் பாயிரப் பாடல் பிறர் எழுதியதே என்பது தெளிவு. இப்பாடலுக்கு முன்னல் பிள்ளையார் வணக்கப் பாடல் இருப்பதால் 221

அஃதும் சிறப்புப் பாயிரம் எழுதியவர் எழுதியதே: சிறப்புப் பாயிரத்திற்குப் பின்னல் பிள்ளையார் வணக் கப் பாடல் இருந்திருப்பின், அதனைப் பிங்கலர் எழுதிய காப்புப் பாடலாகக் கருதமுடியும். அவ்வாறு இல்லை பaதலின், இரண்டுமே பிறர் எழுதிய பாடல்களே.

வகைகள்

பிங்கலம் பத்து வகைகளாக அமைக்கப்பட்டுள் ளது. திவாகரத்தின் ஒவ்வொரு பிரிவும் தொகுதி' என அழைக்கப்படுதல் போல, பிங்கலத்தின் ஒவ்வொரு பிரிவும் வகை என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பத்து வகைகள் வருமாறு :

முதலாவது - வான்வகை இரண்டாவது - வானவர் வகை மூன்ருவது- ஐயர் வகை கான்காவது - அவனி வகை ஐக்தாவது - ஆடவர் வகை ஆருவது - அதுபோக வகை ஏழாவது-பண்பிற் செயலின் பகுதிவகை எட்டாவ்து-மாப் பெயர் வகை ஒன்பதாவது-மரப் பெயர் வகை

பத்தாவது-ஒரு சொல் பல்பொருள் வகை

இந்தப் பத்து வகைகளுள் முதல் ஒன்பது வகை களும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி என்னும் முதல் இனத்தைச் சேர்ந்தனவாம்; அதாவது, ஒரே பொருளுக்கு உரிய பல பெயர்களையும் கூறுவனவாம். இறுதியான பத்தாவது வகையோ ஒரு சொல் பல் 222

பொருள் பெயர்த் தொகுதி என்னும் இரண்டாவ்து இனத்தைச் சேர்ந்ததாம்; அதாவது, ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டோ, அத்தனையையும் கூறுவதாம். திவாகரத்தின் இறுதி யில் உள்ளதுபோல் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ருவது இனம் பிங்கலத் தில் பேசப்படவில்லை.

திவாகரத்தோடு பிங்கலத்தை ஒத்திட்டு நோக்கு வாம்:-திவாகரத்தில் உள்ள முதல் இனத்தைச் சேர்ந்த முதல் பத்துத்தொகுதிகளையும் பிங்கலர் முதல் ஒன்பது வகைக்குள் அடக்கிவிட்டார். திவாகரத்தில் உள்ள இரண்டாம் இனத்தைச் சேர்ந்த பதினேராவது தொகுதியைப் பிங்கலர் தமது நூலில் பத்தாவது தொகுதியாக அமைத்துள்ளார். திவாகரத்தில் உள்ள மூன்ரும் இனத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் தொகுதி யைப் பிங்கலர் பேசாது விட்டுவிட்டார்.

இனி, ஒவ்வொரு வகையும் எது எதைப் பற்றியது. என்று சிறிது நோக்குவாம் :

(1) வான்வகை -இது ஏழுலகம், வீடு, மழை முதலியன பற்றியது.

(2) வானவர் வகை - இது தெய்வங்களையும் -தேவர்களையும் பற்றியது. .

வான்வகை, வானவர் வகை ஆகிய இரண்டையும் திவாகரர் தெய்வப் பெயர்த் தொகுதி என்னும் ஒரே தொகுதியில் அடக்கி விட்டார்.

(3)." ஐயர்' வகை --முனிவர், கவிஞர் முதலான வரைப் பற்றியது. இப்ப்குதியில் உள்ள பலவற்றைத் 223

திவாகரா தெய்வப் பெயர்த் தொகுதியிலும் மக்கள் பெயர்த் தொகுதியிலும் அடக்கிவிட்டார்.

(4) அவனி வகை:-இது இடங்களைப் பற்றி யது. திவாகரத்தின் இடப் ப்ெயர்த் தொகுதியைப் போன்றதே இது, .

(5) ஆடவர் வகை:-இது, திவாகரத்தின் மக்கள் பெயர்த தொகுதியைப் போன்றது.

(6) அதுபோக வகை :- இது, வாழ்க்கையில் அநுபவிக்கிற - துய்க்கிற பொருள் வகைகளைப் பற்றி யுது. இப்பகுதி பின்வரும் இருபது உள்:தலைப்புக் களின் கீழ் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது :- .

1. உணவின் வகை 11. மண்டில வகை 2. பூணின் வகை 12. படை வகை 3. இரத்தின வகை 13. காலாள் வகை 4. உலோக வகை 14. தோல் கருவி வகை 5. ஆடை வகை 15. குடை வகை 6. பூச்சு வகை 16. ஆயுத வகை 7. சூட்டு வகை 17. செயற்கை வகை 8. இயல் வகை 18. அக்குரோணி வகை 9. இசை வகை 19. வெள்ள வகை 10. நாடக வகை 20. இல்லணி வகை

மேலுள்ளவாறு பிங்கலத்தில் அதுபோக வகை என்னும் தொகுதியில் கூறப்பட்டுள்ளனவற்றை, திவாகரர் பல்பொருள் பெயர்த் தொகுதி, செயற்தை வடிவப்பெயர்த் தொகுதி என்னும் இரண்டு தொகுதி களில் அமைத்துள்ளார். 224

7) பண்பின் செயலில் பகுதிவகை:-இது, திவா ரைத்தில் உள்ள பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி என்னும் இரண்டு தொகுதிகளையும் போன்றது.

(8) மாப் பெயர் வகை:- இது, திவாகரத்தின் விலங்கின் பெயர்த் தொகுதியைப் போன்றது.

(9) மரப் பெயர் வகை :- இது, திவாகரத்தின் மரப் பெயர்த் தொகுதி போன்றது.

(10) ஒரு சொல் பல்பொருள் வகை :-இது, திவாக ரத்தின் பதினேராவது தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதியைப் போன்றது.

நூற்பா

பிங்கல நிகண்டு திவாகரம் போலவே நூற்பாவால் (சூத்திர நடையால்) ஆனது. இந்நூலில் மொத்தம் 4121 நூற்பாக்கள் உள்ளன. ஏறக்குறைய 15,800 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன.

முறை மாற்றம்

பிங்கலத்தில் உள்ள ஒரு சொல் பல்பொருள் வகை’ என்னும் பத்தாம் பகுதிதான், இக்காலத்தில் உள்ள அகராதிகளைப்போல், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் கூறுகிறது. இப்பகுதியில் 1091 சொற்களுக்கு உரிய பொருள்கள் தரப்பட்டுள் ளன. பிங்கலர் இந்த 109| சொற்களையும் அகராதி முறையில் அடுக்கிக் கூருமல், தம் உள்ளம் போன போக்கில் முன்னும் பின்னுமாக வைத்திருந்தார். ஒரு 225

சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமானல் அந்தச் சொல்லைப் பிங்கலரது அமைப்புமுறையில் உடனே கண்டுபிடிக்க முடியாது. முதலிலிருந்து படித்துக் கொண்டு வந்தால்தான் அச்சொல் கிடைக்கும். எனவே, பிங்கலரது வைப்புமுறை வசதி இல்லாதது என்பது புலம்ை. .

இக்குறையைப் போக்க, பிற்காலத்தில் பிங்கல கிகண்டை அச்சிட்ட சிவன்பிள்ளை என்னும் அறிஞர், 109 சொற்களையும், அ-ஆ , க-கா என இக்கால அகராதி முறையில் அடுக்கிப் பதிப்பித்துள்ளார். சான்ருக, முதல் மூன்று பாக்களையும் இறுதியில் உள்ள மூன்று பாக்களையும் காண்பாம் :

- (அகப்பா) (1) புரிசையும் உள்ளுயர் நிலமும் அகப்பன.”

(அகம்)

(2) " மனமும் உள்ளும் மனையும் பாவமும்

புவியும் மாப்பொதுப் பெயரும் அகமே.”

  • . (அகலுள்)

(3) ஊரும் நாடும் அகலுள் ஆகும்.'

(வை) (108.9) " வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல்.

(வைகல்) (1090) “ தினமும் தங்கலும் தெரியின் வைகல்.”

(வையம்) -

(1091) உரோகிணி நாளும் பாரும் தேரும்

ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும்.” 

மேல் உள்ள அகராதி முறையான அமைப்பு முறை சிவன்பிள்ளை யவர்களின் கைவண்ணமாகும். படிப்பவரின் வசதியைக் கருதி, பிங்கலரது வைப்பு முறையை மாற்றிய சிவன் பிள்ளையின் துணிவு வியத்தற்குரியது. இம்முறையினால், எந்தச் சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமாயினும் உடனே கண்டு பிடித்துவிடலாம்.

இந்த அகராதி வைப்புமுறை சிவன் பிள்ளையின் கைவண்ண மன்று; பிங்கலரே அகராதி முறையில் அமைத்தார் என்று யாரும் சொல்ல முடியாது—சொல்லக் கூடாது; ஏனெனில், பழைய ஓலைச் சுவடிகள் பலவற்றிலும் அகராதி முறையில் நூற்பாக்கள் காணப்பட வில்லை; அதனால் என்க.

நூற்பா ஒற்றுமை

திவாகரம் போலவே பிங்கலமும் நூற்பா நடையால் ஆனது என்ற ஒற்றுமை ஒருபுறம் இருக்க,—திவாகரத்தில் உள்ள சில நூற்பாக்கள் போலவே பிங்கலத்திலும் சில நூற்பாக்கள் உள்ளன. சான்றாகச் சில வருமாறு:—

(ஓர் அறிவுயிர்)

“உற்றறி புலனது ஒன்றே உடைமையின்
மற்றைப் புல்லும் மரனும் ஓரறிவே.”

(ஈரறி வுயிர்)

“உற்றறி புலனும், நாவும் உடைமையின்
அட்டையும் நந்துவும் போல்வ ஈரறிவே.”

(மூவறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கும் உடைமையின் முற்பெறு சிதல் எறும்பு இணைய மூவறிவே."

(காலறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கொடு, கண்ணும் பெற்ற வண்டும் ஞெண்டும் நாலறிவே."

(ஐயறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி

மக்களும் மாவும் ஐந்தறிவினவே.”

(ஆறறி வுயிர்) " மனத்தோடு ஆறறி வினரே மக்கள் ஒருசார் விலங்கும் அதுபெறற் குரித்தே.”

மேல் உள்ள ஆறு நூற்பாக்களும் திவாகரத்தில் உள்ளவை. இனி இதே கருத்துக்களைக் கூறும் பிங்கல நூற்பாக்களைக் காண் பாம் :- -

(ஓரறி வுயிர்) " உற்றறி புலனது ஒன்றே உடைமையின் மற்றைப் புல்லும் மானும் ஒாறிவே."


(ஈரறி வுயிர்)

"உற்றறி புலனும், நாவும் உடைமையின் அட்டையும் நந்தும் போல்வ ஈசறிவே.”

(மூவறி வுயிர்)

" உற்றறி புலன், நா, மூக்கும் உடைமையின் முற்பெறு சிதல் எறும்பு ஆதி மூவறிவே.” 228

காலறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண்ணும்

பெற்ற வண்டு ஞெண்டு ஆதி தாலறிவின.”

ஐயறி வுயிர்) " உற்றறி புலன், நா, மூக்கொடு, கண், செவி

மக்களும் மாவும் ஐயறி வினவே.”

(ஆறறி வுயிர்) " மனளுேடு ஆறறி வினரே மக்கள்

ஒருசார் விலங்கும் அதுபெறற் குரித்தே.”

இவை ஆறும் பிங்கல நூற்பாக்களாகும். இந்த ஆறு பாடல்களைப் பொறுத்தமட்டும், எங்கோ ஒரு சொல் அல்லது ஒரிரு எழுத்து தவிர வேறு வேறுபாடு திவாகரத்திற்கும் பிங்கலத்திற்கும் இல்லையன்ருே?

பிங்கலத்தில் மேலும் பல விடங்களில், திவாகர நூற்பாக்களே அடிப்படையாக வைத்துக்கொண்டு, சில சொற்களையும் அடிகளையும் கூட்டியும் குறைத்தும் இடம் மாற்றியும் புதுக்கியும் நூற்பாக்கள் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

இதிலிருந்து, பொதுவாக முன்னுேர் மொழியைசிறப்பாகத் தந்தையின்மொழியைப் போற்றவேண்டும் என்னும் மரபைப் பிங்கலர் பின்பற்றி யுள்ளார் என்பது புலகுைம். அன்றியும், தந்தையின் சொத்தா கிய திவாகரத்தை, மைந்தகிைய பிங்கலர் எப்படியும் கையாளலாம் போலும் ! 

பெயர் தெரியா நிகண்டுகள்

திவாகரம், பிங்கலம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டாகும் என்னும் முடிவை ஆராய்ச்சியாளர் சிலர் ஒத்துக்கொள்ளாமல் பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

இவ்விரண்டினையும் அடுத்து, கிடைத்திருக்கும் நிகண்டுகட்குள் காலத்தாலும் தரத்தாலும் முதன்மையுடைய சூடாமணி நிகண்டின் காலம் பதினாறாம் நூற்றாண்டாகும் எனச் சிலர் ஆய்ந்து கூறியுள்ள முடிவை வேறு சிலர் ஒத்துக் கொள்ளாமல், பதினான்கு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டெனச் சில நூற்றாண்டுகள் முன்னுக்கு இழுத்துக்கொண்டு வருகின்றனர்.

எது எப்படி யிருந்தபோதிலும், முன்னர்ப் புகழ் பெற்றிருந்த திவாகரம், பிங்கலம் ஆகியவற்றின் காலத்துக்கும், பின்னர்ப் புகழ் பெற்றிருந்த சூடாமணி நிகண்டின் காலத்துக்கும் நடுவில், இரண்டு மூன்று நூற்றாண்டு காலமோ — அல்லது நான்கைந்து நூற்றாண்டு காலமோ-அல்லது ஏழெட்டு நூற்றாண்டு காலமோ—அதாவது ஒரு சில நூற்றாண்டு காலமாயினும் இடைவெளி யிருந்திருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இடைவெளிக் காலத்தில் பல நிகண்டுகள் தோன்றியிருக்கக்கூடும். ஆனால் அவை கிடைக்கவில்லை; பெயர்களும் தெரியவில்லை; 230

அந்தோ! அழிந்தொழிந்து மறைந்தன. ஆல்ை சில கிகண்டுகள் மட்டும் சிறிதளவு சுவடுகள் விட்டுச் சென் றுள்ளதாக ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளனர். சில சுவடுகள் வருமாறு:

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உரியியலின் இறுதியிலுள்ள

அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பாத்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கின் இனத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநளிை கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்தல் என்மஞர் புலவர்.'

என்னும் நூற்பாவின் உரையில் உரையாசிரியர் இளம் பூரணர், , ,

' இருமை பெருமையும் கருமையும் செய்யும்.” " தொன்று என்கிளவி தொழிற்பயில்வு ஆகும்.”

என்னும் இரண்டு நூற்பாக்களை எடுத்துக் காட்டி -யுள்ளார். இந்த இரண்டு பாக்களும் எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பட்டன என்று கண்டுபிடிக்க முடிய வில்லை. பாக்களைப் பார்த்தால், ஏதோ நிகண்டு நூலைச் சேர்ந்தவையாகத் தெரிகின்றன. இருமை என் லும் சொல்லுக்குப் பெருமை, கருமை என இரு பொருள் உண்டு என்பது முதற்பாவின் கருத்து. தொன்று என்னும் சொல்லுக்குத் தொழிற்பயிற்சி என்னும் பொருள் உண்டு என்பது இரண்டாவது பாவின் கருத்து. எனவே இவையிரண்டும். ஏதோ ஒரு 231

நிகண்டின்-அல்லது- எவையோ இரண்டு நிகண்டு களின் ஒரு சொல் பல் பொருள் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். இவ்விரு பாக்களும் இதுவரைக்கும் கிடைத்துள்ள எந்த நிகண்டு களிலும் இல்லையாதலின், பெயர் தெரியாது அழிந்து சிதைந்து போன நிகண்டைச் சேர்ந்தனவே என்பது தெளிவு. இந்த இரு பாக்களையும் எடுத்துக் காட்டிய இளம்பூரணர் பதினேராம் நூற்ருண்டினர் எனச் சொல்லப்படுவதால் அக்காலத்துக்கு முன்பே இவை எழுதப்பட்டிருக்கவேண்டும்.

அடுத்து, யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் ஒரு சுவடு கிடைக்கிறது. யாப்பருங்கலத்தின் செய்யுளியலில் உள்ள ',

' குறள்சிங் தின்னின்ச நேரிசை பஃருெடை

எனஐந் தாகும் வெண்பாத் த்ானே.”

என்னும் நூற்பாவின் உரையில், நேர்' என்னும் சொல்லுக்குரிய பொருள்களைப் பின்வருமாறு உரை யாசிரியர் குறிப்பிட்டுள்ளார்:

" நேர் என்பது மர்ருதற் கண்ணும், ஒத்தற் கண்ணும், தனிமைக் கண்ணும், மிகுதிக் கண்ணும், துட்பத்தின் கண் ணும், சமணுதற் கண்ணும், உடம்படுதற் கண்ணும், பாதிக் கண்ணும், தலைப்பாட்டின் கண்ணும், நிலைப்பாட்டின் கண் னும், கொடைக் கண்ணும் நிகழும்.”

அதாவ்து -கேர் என்னும் சொல்லுக்கு மாருதல், ஒத்தல், தனிமை, மிகுதி, நுட்பம், சமன், உடம்படுதல், பாதி, தலைப்பாடு, நிலைப்பாடு, கொடை எனப் பதினுெரு பொருள்க்ள் சொல்லப்படும்-என்று உரையாசிரியர் அறிவித்துள்ளார். 232

இந்தப் பதினெரு பொருளும் ஏதேனும் ஒரு நிகண்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண் டும். அந்த நிகண்டு இன்னதென்று தெரியவில்லை. இதுவரைக்கும் கிடைத்துள்ள எந்த நிகண்டிலும் பதினெரு பொருள்கள் கூறப்படவில்லை. எடுத்துக் காட்டாக, திவாகர நிகண்டில்,

' உடன்படல், உவமை, ஒத்தல், துட்பம்,

சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமைஎன திகழ்ந்த ஒன்பானும் நேர் என் கிளவி.”

என ஒன்பது பொருள்களே கூறப்பட்டுள்ளன. இந்தப் பாவில் திவாகரரே ஒன்பான்’ (ஒன்பது) என எண் ணிைக்கையிட்டுச் சொல்லிவிட்டார். சூடாமணி நிகண் டிலோ, - J

" நேர், சமம், ஈதல், பாதி, . -

நெடில், உடன்பாடு, நுட்பம்."

என ஆறு பொருள்களே அறிவிக்கப்பட்டுள்ளன. பிங்கலம் போன்ற சில நிகண்டுகளிலோ, நேர் என்னும் சொல் பேசப்படவேயில்லை. எனவே, யாப்பருங்கல விருத்தியுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பதி ைெரு பொருள்களையும் கூறும் ஏதோ ஒரு நிகண்டு இருந்திருக்கவேண்டும். அது கிடைக்கவில்லை-அதன்

பெயரும் ெ தரியவில்லை.

மற்றும், திவ்யப் பிரபந்தத்தின் பெரிய விரிவுரை யில் சில விடங்களில் சில நூறபாக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் அமைப்பை நோக் குங்கால் அவை நிகண்டு நூற்பாக்களாகவே தெரிகின் றன. அவையும் எந்தெந்த நிகண்டுகளைச் சேர்ந்தவை எனப் புலப்படவில்லை. 233

மேலும், சென்னே அரசின் கீழைக்கலே ஓலைச் சுவடி நிலையத்தில், ஆசிரியர்பெயரும் நூலின் பெயரும் தெரியாத ஏதோ ஒரு கிகண்டின் ஆறு தொகுதிகள் மட்டும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக் கிகண்டின் முதல் தொகுதி இல்லையாம். முதல் தொகுதி இருக்திருந்தால் பெயர் தெரிந்திருக்குமே! அத்தொகுதி எப்படியோ கைநழுவி விட்டிருக்கிறது. இரண்டாம் தொகுதியிலிருந்து ஆறு தொகுதிகள் உள்ளனவாம், இறுதித் தொகுதிகளும் காணப்படவில்லையாம். இக் காலத்தில் புத்தகங்களின் முன் தாள்கள் சிலவும் பின் தாள்கள் சிலவும் கிழிந்து அகன்று விடுவதுபோல அக்காலத்தும் ஒலைச்சுவடி நூற்களின் முற்பகுதியும் பிற்பகுதியும் கெட்டுவிட்டிருக்கும் அல்லவா ? பதிற் |றுப் பத்து என்னும் சங்க இலக்கியத்தின் முதல் பத்தும் இறுதிப்பத்தும் இப்படித்தானே இழக்கப்பட்டு விட்டன. இந்த நிலை.மேற்குறிப்பிட்ட நிகண்டிற்கும் ஏற்பட்டிருக்கிறது . இங்கிகண்டு நூற்பா(சூத்திர)

கடையில் உள்ள தாம். -

இவ்வாறு பல நிகண்டுகள் ஏற்பட்டும், அவை கன்கு போற்றிக் காக்கப்படாமையால் ஊர் பேர் தெரியாதபடி அழிந்து போயின. எனவே, இப்பெயர் தெரியா நிகண்டுகள், திவாகரம் பிங்கலம் ஆகியவற் :றின் காலத்துக்கும் சூடாமணி நிகண்டின் காலத்துக் கும் கடுவிலுள்ள இடைவெளிக் காலத்தில் தோன்றி .யிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறு கின்றனர். ஆனல், இப்பெயர் தெரியா நிகண்டுகள் அனைத்துமே திவாகரத்திற்கும் சூடாமணிக்கும் இடையில்தான் தோன்றின என்று அறுதியிட்டுக் கூற முடியாது; இன்னே ரன்னவற்றுள் சில, ஆதி 234

திவாகரம் தோன்றி அழிந்துவிட்டதுபோல் சேந்தன் திவ்ாகரத்திற்கு முந்தியும் தோன்றி மறைந்திருக்க லாம். மற்றும் தொல்காப்பியச் சொல்லதிகார-இளம் பூரணர் உரையிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட

' இருமை பெருமையும் கருமையும் செய்யும்.” 'தொன்று என்கிளவி தொழிற் பயில்வு ஆகும்.”

எனனும் இருநூற்பாக்களும், சிலர் கூறுவதுபோல் ஏதோ ஒரு நிகண்டைச் சேர்ந்தனவாயிராமல், தொல் காப்பியம் போன்ற ஒரு மொழியிலக்கண நூலைச் சேர்ந்தனவாயும் இருக்கலாமே ! -

ஆகக் கூடியும், பெயர் தெரியா நிகண்டுகள் சில, திவ்ர்கரத்திற்கு முந்தித் தோன்றி மற்ைந்தது போலவே, திவாக்ரத்திற்கும் சூடாமணிக்கும் உள்ள இடைக்காலத்திலும் தோன்றி மறைந்தன என்பதைத் த்ன்டயின்றி ஒத்துக்கொள்ளலாம். ஏனெனில், சூடர் மணியைத் தொடர்ந்து சிறிதும் இடைவெளியின்றிப் பல நிகண்டுகள் தோன்றி யிருக்கும்போது, சூடா ம்ணிக்கு முன்பும் திவாகரம், பிங்கலம் ஆகியவற்றைத் தொடர்ந்து சில அல்லது பல நிகண்டுகள் தோன்றி யிருக்கத்தானே வேண்டும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நூற்ருண்டிலும் தமிழறிஞர் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிகண்டு செய்திருப்பர் போலும் ! இப்படிப் பார்த்தால், இப்போது கிடைத்திருக்கும் நிகண்டுகளைவிட, கிடைக்காமல் மறைந்து போன் நிகண்டுகளே மிகுதி என்பது தெளிவாகும். சிவசுப்ர ம்ணியக் கவிராயர் என்னும் புலவர் தாம் இயற்றிய நாமதீப நிகண்டின் தற்சிறப்புப்பாயிரப் பாடல் ஒன் றில், இதற்குமுன் தோன்றியுள்ள கிகண்டுகள் 235

நூற்றுக் கணக்கானவை எனக் கருமித்தனமாகக்

கணக்குப் போடாமல், ஆயிரக் கணக்கானவை-அது

வும் பல்லாயிரக் கணக்கானவை எனப் பரந்த அளவில்

தாராளக் கணக்குப் போட்டுள்ளார். அந்தப் பாடல்

வருமாறு :

" பல்லா யிரநிகண்டில் பண்டிதர்கள் சொன்னபொருள்

எல்லாம் எளிதாய் இனிதுணரக்-கல்லிடையூர் மன்னுசிவ சுப்ா மணியன் கவிராசன் பன்னுதமிழ் நாம தீபம்."

இப்பாடலிலிருந்து, மறைந்துபோன நிகண்டு களின் அளவை உய்த்துணரலாம். கிடைத்திருக்கும் நிகண்டுகளில் ஏதேனும் ஒன்றையாயினும் எவரும் கல்லாத இந்த இருபதாம்நூற்ருண்டில்-கிடைத்திருக் கும் நிகண்டுகளின் பெயர்களைக்கூடப் பெரும்பாலான கல்விமான்கள் அறிந்திராத இந்த இருபதாம் நூற். ருண்டில்-நிகண்டுகள் என ஒருசார் கலைநூற்கள் உள்ளன என்பதையே மாபெருங் கல்வி வல்லுநர் களுள் பெரும்பாலோர் தெரிந்திராத இரங்கத்தக்க இந்த இருபதாம் நூற்ருண்டில், கிடைக்காமல் மறைந்துபோன நிகண்டுகளைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிருர்கள் ? அந்தோ காலமே !

15 நனனுால

திவாகரம், பிங்கலம் ஆகியவற்றிற்கும் சூடாமணி நிகண்டிற்கும் இடையில், நிகண்டு மாதிரியான ஓர் அமைப்பைத் தன்னகத்தே ஒர் உறுப்பாகக் கொண்ட ‘நன்னூல் என்னும் ஒரு நூல் எழுந்தது. நல்ல நூல்நன்மை தரும் நூல் ஆனது பற்றி இது நன்னூல் எனப் பெயரிடப்பட்டது. தொல்காப்பியம் போலவே இஃதும் ஒரு மொழியிலக்கண நூலாம்.

ஆசிரியர் வரலாறு

கன்னூலின் ஆசிரியர் பவணந்தியார் என்பவர். இவர் ஒரு சைனசமயத் துறவி. நூலின் தொடக்கத் தில்

“ பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த

நான்முகற் ருெழுது நன்கியம்புவன் எழுத்தே.”

என அசோக நிழலில் அமர்ந்த அருகக் கடவுளை வழி பட்டிருத்தலின் சைனர் என்பது தெளிவு. இவர் சனகை என்றழைக்கப்படும் சனகாபுரம் என்னும் ஊரில் வாழ்ந்த சன்மதி என்னும் முனிவரின் மாணுக்கராவார். அதல்ை இருவரும் அதே ஊரினர் எனக்கொள்ளலாம். இவர் தொண்டை மண்டலத்தில் உள்ள சனகாபுரம் என்னும் ஊரினர் என்று தொண்டை மண்டல சதகம் என்னும் நூலும், கொங்கு மண்டலத்திலுள்ள சனகா புரம் என்னும் ஊரினர் என்று கொங்கு மண்டல சதகமும் கூறுகின்றன. இவற்றுள் எது உண் மையோ ? சீயகங்கன் என்னும் சிற்றரசனல் இவர் 237

ஆதரிக்கப் பெற்றவர். அவனது வேண்டுகோளின் படியே இவர் கன்னூலே எழுதினராம் ஆசிரியரது வரலாற்றை நன்னூலின் முகப்பி லுள்ள

  • மலர்தலை உலகின் மல்கிருள் அகல

இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியின் ஒருதா னகி முதலீறு ஒப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மனவிருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவற அருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னர் இகலற நூறி யிருநில முழுவதும் தனதெனக் கோலித் தன் மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் அருங்கலை வினோதன் அமரா பரணன் மொழிந்தன கை முன்னேர் நூலின் வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் பொன்மதில் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத்து இருந்தவத் தோனே.”

என்னும் சிறப்புப் பாயிரச் செய்யுளால் ஓரளவு உய்த் துணரலாம்.

ஆசிரியர் காலம்

பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன், மூன்ருங் குலோத்துங்கச் சோழ மன்னனின் கீழ் அடங்கியாண்ட 238

ஒரு சிற்றரசன். அச்சோழ மன்னனது ஆட்சிக்காலம் கி. பி. 1178 முதல் 1216-ஆம் ஆண்டுவரையும் ஆகும். எனவே, சீயகங்கன் காலமும் பவணந்தியார் காலமும் அதே அல்லது அதைத் தொடர்ந்த காலம் என்பது புலனுகும். ஆகவே, கன்னூல் எழுந்த காலம் பதின் மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதி எனலாம். நன்னூ லில் பிங்கலம் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்குப் பிற்பட்டது இது என்பதும் அறியற்பாற்று.

நூலின் அமைப்பு நன்னூல் நூற்பா (சூத்திர) கடையில் யாக்கப் பட்டுள்ளது. இப்போது உள்ள கன்னூலில் எழுத்ததி காரம், சொல்லதிகாரம் என இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. ஆனல், கன்னூலில் எழுத்ததி' காரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதி காரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரங்கள் இருந்ததாகவும், அவற்றில் எழுத்திலக்கணம், சொல் லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் ஐந்திலக்கணங்கள் சொல் லப்பட்டதாகவும் கன்னூல் உரையிலும் பெரிய திரு. மொழித் தனியனிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனல், சைனர் சிலர், தொல்காப்பியம் போலவே நன்னூலும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொரு ளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளே உடையதென வும், பொருளதிகாரத்தில் தொல்காப்பியம் போலவே பொருளிலக்கணத்துடன் யாப்பிலக்கணமும் அணி யிலக்கணமும் இணைத்துச் சொல்லப்பட்டன எனவும் கூறுகின்றனர். எது உண்மையாயினும், முழு கன்னுர லும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதுவரைக்கும்

உறுதி. 239

நூலின் முதற் பகுதியாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய் யிற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் ஐந்து இயல்கள் உள்ளன. இரண்டாவதாகிய சொல்லதி காரத்தில் பெயரியல், வினையியல், பொதுவியல், இடை யியல், உரியியல் என ஐந்து இயல்கள் உள்ளன. பொதுவாகச் சொல்லதிகாரத்தில், சிறப்பாக இடை யியல்-உரியியல்களில்தான் சொற்பொருள் பற்றிய நிகண்டுக் கூறு அமைந்து கிடக்கிறது. அது வருமாறு :

நிகண்டுப் பகுதி

இடையியலில் -ஏ, ஓ, என, என்று, உம், என்ரு, எனு, ஒடு, தில், மன், மற்று, கொல், தெய்ய, அந்தில், ஆங்கு அம்ம, மா, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள', ஈ, யாழ, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, கின்று முதலிய இடைச் சொற்கட்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட் டாக, ஏ, ஓ என்னும் இடைச் சொற்களின் பொருள் களைக் காண்பாம் :

(ஏகார இடைச்சொல்) ' பிரிநிலை விஎைண் ஈற்றசை தேற்றம்

இசைநிறை எனஆறு ஏகாரம்மே.”

(ஓகார இடைச் சொல்) ': ஒழியிசை விச்ைசிறப்பு எதிர்மறை தெரிநிலை கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஒவே.” 240

என்பன கன்னூற் பாக்கள். அதாவது - ஏ என்னும் சொல் பிரிநிலை, வினு, எண், ஈற்றசை, தேற்றம், இசை கிறை என ஆறுபொருள்கள் உடையதாம், ஒ என்னும் சொல் ஒழியிசை, வினு, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிப்பு என எட்டுப் பொருள்கள் உடையதாம். இவ்வாறே மற்ற சொற்களின் பொருள்களையும் நன்னூலில் காண்க. இந்த இடை யியல், திவாகரத்திலுள்ள ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதியைப் போன்ற அமைப்புடையதாகும்

அடுத்த உரியியலில், திவாகரத்தில் உள்ளாங்கு, ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி, ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி, பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்று வகைக் கூறு களும் சுருங்கிய அளவில் உள்ளன.

உரியியலின் தொடக்கத்தில் ஓரறிவுயிர், ஈரறி வுயிர், மூவறிவுயிர், காலறிவுயிர், ஐயறிவுயிர் ஆகியவை இன்னின்னவை என விளக்கப்பட்டுள்ளன

“ புல்மரம் முதல உற்றறியும் ஒரறிவுயிர்.” ! முரள் நந்து ஆதி நாவறிவோடு ஈரறிவுயிர்.”

" சிதல் எறும்புஆதி மூக்கறிவின் மூவறிவுயிர்.” " தும்பி வண்டு ஆதி க்ண்ணறிவின் நாலறிவுயிர்.” ' வானவர் மக்கள் நாகர் விலங்கு புள்

ஆதி செவி யறிவோடு ஐயறிவுயிரே.”

என்பன நூற்பாக்கள். ஆருவது அறிவைப் பற்றிப் பவணந்தியார் ஒன்றுமே கூறவில்லை. இந்தப் பகுதி திவாகரத்தில் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 241

- மேற்கொண்டு உரியியலில் ஒரே பொருளைக் குறிக் கும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. மிகல் என்னும் ஒரு பொருளைக் குறிக்க ஆறு பெயர்கள் உள்ளன வாம் :

“ சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்.”

என்பது நூற்பா. அடுத்து, சொல் என்னும் ஒரு பொரு ளைக் குறிக்கப் பதினறு பெயர்கள் உள்ளனவாம்:

' மாற்றம், துவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை,

கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல், சொல்லே.'

என்பது நூற்பா. அடுத்து, ஓசை என்னும் ஒரு பொரு ளைக் குறிக்க இருபத்திரண்டு பெயர்கள் உள்ளன வாம் :

  • முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை,

இரக்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குாை, கனை, சிலை, சும்மை, கெளவை, கம்பலை, அரவம், ஆர்ப்போடு இன்னன ஒசை.”

என்பது நூற்பா. இந்தப் பகுதி ஒருபொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்தது.

மேலும் உரியியலில் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கடி என்னும் ஒரு சொல்லுக்குப் பதின்மூன்று பொருள்கள் உரியன வாம். அவை :

' கடி யென் கிளவி : காப்பே, கூர்மை,

விரையே, விளக்கம், அச்சம், சிறப்பே, விாைவே, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவே, மன்றல், கரிப்பின் ஆகும்.” 242

என்பது நூற்பா. இந்தப் பகுதி ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்ததாகும்.

இன்னும் உரியியலில், உயிர்ப் பொருள்களின் பண்புகள், உயிரல் பொருள்களின் பண்புகள் போன் றனவும் சொல்லப்பட்டுள்ளன. ஆகக்கூடியும் நன்னூ லில் நிகண்டுக் கூறு (அம்சம்) மிக மிகச் சுருங்கிய அளவிலேயே உள்ளது. ஆசிரியர் பவணந்தியார், மொழியிலக்கண நூலாகிய இந் நன்னூலில் எல்லாச் சொற்களையும் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க முடி யாது; அவற்றை யெல்லாம் பிங்கலம் முதலாகிய நூற் களில் விரிவாகக் கண்டு கொள்க' என உரியியலின் இறுதியில் கூறியிருப்பது ஈண்டு மீண்டும் நினைவு கூரத் தக்கது.

நன்னூலின் ஆட்சி

கன்னூல் எழுந்ததும் தொல்காப்பியத்தின் இடத் தைத் தான் பிடித்துக் கொண்டது. தொல்காப்பியத் தினும் சுருக்கமும் தெளிவும் நோக்கியும், பிற்காலத்து மொழி கடைக்கு ஏற்ற இலக்கண முடிபுகள் அமைக் துள்ளமை கருதியும் மக்கள் நன்னூலேயே மிகுதியாகக் கையாளத் தொடங்கினர். நன்னூல் பயின்ற பின்னரே தொல்காப்பியம் என்ற நிலை ஏற்பட்டது. நன்னூலின் ஆட்சி பெருகவே, மயிலைநாதர், ஆண்டிப்புலவர், சங்கரகமச்சிவாயர், சிவஞான முனிவர் முதலிய புலவர் பெருமக்களால் கன்னூலுக்கு உரைகள் எழுதப்பட்டுப் பலராலும் பயிலப்பட்டன. உரைகளின் எண்ணிக்கை யைக் கொண்டே ஒரு நூலின் ஆட்சியும் மாட்சியும் புலப்படுமே ! சூடாமணி நிகண்டு

திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டுக்கும் அடுத்தபடியாக, கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் காலத்தாலும் தகுதியாலும் முதன்மை பெறுவது சூடாமணி நிகண்டு. இந் நிகண்டு எழுந்ததும் திவாகர மும் பிங்கலமுங்கூட மங்கத் தொடங்கிவிட்டன. சூடாமணிக்குப் பின்னர்ப் பற்பல நிகண்டுகள் தோன்றி யும், அவற்றுள் ஒன்ருலும் சூடாமணியின் இடத் தைப் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இக் கிகண்டு பிற்காலத்தவரால் பெரிதும் பயிலப்பட்டது. நிகண்டு என்ருல் சூடாமணிதான் - நிகண்டு படித்த வர் என்ருல் சூடாமணி படித்தவர்தான் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு இங்கிகண்டு தமிழ் மக்களிடையே மிகவும் பரவி மிளிர்ந்தது.

பெயர்க் காரணம்

சூடாமணி என்பது, தலையில் அணியும் ஒருவகை அணியின் (நகையின்) பெயராம். மற்ற உறுப்புக் களில் அணியும் அணியினும் - மணியினும் தலைமேல் அணியும் மணியணி மிகவும் சிறப்புடைத்து. எனவே, அணிகளுக்குள் சிறந்த தலைமணியான சூடாமணியைப் போல, நிகண்டுகளுக்குள் தலைசிறந்தது இந்நூல் என் னும் கருத்தில் இஃது சூடாமணி நிகண்டு என அழைக் கப்பட்டிருக்கவேண்டும். தலைமணியாகிய சூடாமணி யைச் சூளாமணி என அழைக்கும் வழக்கம் இருப்பது போல, சூடாமணி நிகண்டைச் சூளாமணி நிகண்டு என அழைக்கும் ஒருசார் வழக்கமும் உண்டு. இங்கிகண்டு 244

பன்னிரண்டு தொகுதிகளை உடைய தாதலின், சூடா மணி பன்னிரண்டு நிகண்டு என்றும் இதனை அழைப்ப துண்டு.

ஆசிரியர் வரலாறு

சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டல புருடர்’ என்பவர். இவர் மண்டல புருடோத்தமன் என்றும் சில சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆல்ை இவர் தாமே எழுதிய தற்சிறப்புப் பாயிரப் பாடலில் தம் பெயர் மண்டலவன்’ எனக் கூறிக் கொள்கிருர். ஆசிரி யர், மண்டல புருடன் என்னும் தம் பெயரைத் தற். கூச்சத்தால் சுருக்கி, மண்டலவன் எனக் கூறிக் கொண்டிருக்கலாம்.

இவர் தொண்டை நாட்டில் உள்ள பெருமண்டுர் என்னும் ஊரினர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனல் தமது ஊர் வீரை (வீரபுரம்) என்று ஆசிரியரே சூடா மணி நிகண்டில் பல விடங்களில் கூறியுள்ளார். அரும் பொருள் விளக்க நிகண்டிலும் வீரை மண்டலவன்’ எனச் சுட்டப்பட்டுள்ளார். இவர் சைனம் எனப்படும். சமண சமயத்தினர்; குணபத்திரன் என்னும் சமண சமயப் பெரியாரின் மாணவர்; கிருட்டிணராயன் என் னும் அரசனல் ஆதரிக்கப் பெற்றவர். இந்த உண்மை களையெல்லாம், சூடாமணி நிகண்டின் முகப்பில் ஆசிரியரே பாடியுள்ள தற்சிறப்புப் பாயிரப் பாடல் களால் அறிந்து கொள்ளலாம். அந்தப் பாடல்கள் வருமாறு : 245

(1) பொன்னுநன் மணியும் முத்தும்

புனைந்த முக்குடை நிழற்ற

மின்னுபூம் பிண்டி நீழல்

வீற்றிருந் தவனே வாழ்த்தி

மன்னிய நிகண்டு சூடா

மணியென ஒன்று சொல்வன்

இந்நிலந் தன்னின் மிக்கோர்

யாவரும் இனிது கேண்மின்.”

(2) பூமலி அசோகின் நீழல்

பொலிந்தஎம் அடிகள் முன்குள் ஏமமா முதனூல் சொல்லக்

கணதரர் இயன்ற பாவால் தாமொரு வழிநூல் சொல்லச்

சார்புருால் பிறருஞ் சொல்லத் தோமிலா மூன்று நூலும்

துவமென உதித்த வன்றே.” (8) அங்கது போய பின்றை

அலகில் நூல் பிறந்த மற்றும் செங்கதிர் வரத்தில் தோன்றும்

திவாகரர் சிறப்பின் மிக்க பிங்கலர் உரைநூற் பாவில்

பேணினர் செய்தார் சேர இங்கிவை யிரண்டுங் கற்க

எளிதல என்று சூழ்ந்து ” (4) சொல்லொடு பொருள் உணர்ந்தோன்

சோதிட நீதி வல்லோன் நல்லறி வாளன் எங்கள்

நறுங்குன்றை ஞான மூர்த்தி பல்லுயிர்க் கொருதா யாகும்

பசமன்மா முனிவன் மெய்ந்நூல் வல்லுநர் வல்லார்க் கெல்லாம்

வரையறத் தசையில் வந்து ” 246

(5) ' பரிதிஒன்றுதயம் செய்து

பங்கயம் அநேக கோடி முருகெழ மலர்வித் தென்ன

முகமுடன் அக மலர்த்தி மருவுமுத் தமிழை முன்னுள்

வளர்த்த பாண்டியனே போலக் கருதிய வெல்லாந் தந்து

கவிமணி மாலை சூடி ’ (8) செகமெனும் பளிங்கு மாடத்

திகிரி வேந்தரையே போலப் புகழெனும் பஞ்சி சேர்த்திப்

பொலிவுறு பேரத் தாணி மகிழ்குண பத்திரன் எங்கள்

வழித்தெய்வம் போல்வான் சொல்ல இகபரம் இரண்டும் வேண்டி

இயலிசை வல்லோர் கேட்ப ” (?) விரவிய தேவர் மக்கள்

விலங்கொடு மரம் இடம் பல் பொருள் செயும் வடிவு பண்பு

போற்றிய செயல் ஒலிப்பேர் ஒருசொல் பல்பொருளி ைேடும்

உரைத்தபல் பெயர்க் கூட்டந்தான் வருமுறை திவாகரம் போல்

வைத்துப் பிங்கலந்தை தன்னில் ” (8) " ஒருங்குள பொருளும் ஒர்ந்திட்டு

உரைத்தனன் விருத்தம் தன்னில் இருந்தவை நல்லோர் குற்றம்

இயம்பிடார் என்ப தெண்ணித் திருந்திய கமல ஆர்தி

திருப்புகழ் புராணம் செய்தோன் பரந்தர்ேக் குணபத்திரன் தாள்

பணிந்த மண்டலவன் ருனே.” 247

மேலுள்ள பாடல்களால், - ஆசிரியரின் பெயர் மண்டலவன் (மண்டல புருடர்) என்பதும், அவர் அசோக நிழலில் அமர்ந்திருக்கும் அருகக் கடவுளை வணங்கும் சமண சமயத்தினர் என்பதும், திருப்புகழ் புராணம் என்னும் நூலொன்றும் இயற்றியவர் என் பதும், குணபத்திரரின் மானக்கர் (சீடர்) என்பதும், இயற்றிய நூலின் பெயர் சூடாமணி நிகண்டு என்ப தும், திவாகரருக்கும் பிங்கலருக்கும் காலத்தால் பிற் பட்டவர் என்பதும், குணபத்திரர் கட்டளை யிட்டதா லும், மேலும் சிலர் கேட்டுக் கொண்டதாலும் சிறப் பாகத் திவாகர அமைப்பைப் பின்பற்றியும், ஓரளவு பிங்கலத்தையும் தழுவியும் சூடாமணியை இயற்றி ர்ை என்பதும் கன்கு புலகுைம்.

இப்பாடற் பகுதியில் மண்டல புருடர் தம் ஆசான கிய குணபத்திரரை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார் : குணபத்திரர் குன்றை என்னும் ஊரினராம்; ஞாயிறு போல் தோன்றி நன்மை செய்பவராம்; பாண்டியரே போல் தமிழ் வளர்ப்பவராம்; ஞான அரசாட்சி புரிபவ ராம்; சோதிடநூல் வல்லவராம் - இவ்வாறெல்லாம் புகழ்ந்து மண்டலபுருடர் தம் ஆசானன்பை (குரு பக்தியை) வெளியிடுகிருர். இக்காலத்தாரிடம் இத் தகைய கன்றியுணர்வு உண்டா ?

மற்றும் மண்டல புருடர், சூடாமணியின் பன் னிரண்டு தொகுதிகளின் இறுதியிலும், இத்தொகுதி யைச் சேர்ந்த இத்தனை பாடல்களும் இன்னுர் மானக் கராகிய இன்னர் எழுதியவை என்று அறிவிக்கும் வாயிலாகத் தம்மையும் தம் ஆசானையும் குறிப்பிட் டுள்ளார். அப்பாடற் பகுதிகள் வருமாறு : 248

  • பனைகுண பத்திரன்தாள் போற்று மண்டலவன் ருனே.” ' குறுநறுங் குன்றை வேந்தன் குணபத்திசன் தந்த

நோன்மை தருநெறி நோற்கும் வீரை தழைத்த மண்டல வன்முனே.” ' வருமுறை யுரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்

ருனே.

3 *

' நிரப்படுங் குணபத்திரன் தாள் நித்தலும் போற்றி செய்து

விருப்புறு விரத லேன் வீரை மண்டலவன் செய்தான்.” " மன்னு சீர்க் குணபத்திரன்தாள் வணங்கும் மண்டலவன்

ருனே.” “ இகலிலாக்குணபத்திரன் றன் இரு சரண் இதயம் வைத்தோன் மிகுபுகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான்.” -ć 6 குணபத்திரன் தாள்

நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டல வன்ருனே.” " தேங்கிய புகழான் குன்றைக் குணபத்திரன் திருத்தாள்

போற்றி வீங்குநீர்ப் பழனஞ் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான்." 'மைம்முகிற் குணபத்திரன் தாள் வணங்கு மண்டலவன்

ருனே.” 'அறந்தரு குணபத்திரன் தாள் அரணெனச் சாண மானேன்

மறந் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான்.” ' சொன்னவன் குணபத்திரன் தாள் சூடுமண்டலவன் ருனே.” 'திருக்கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடிக்கொண்

- டோன் மருக்கிளர் பொழில்சூழ் விரைமன்னன் மண்டலவன் தானே.” இப்பாடற் பகுதிகளால், குணபத்திரரது ஊர் குன்றை என்பதும், மண்டல புருடரது ஊர் வீரை என் பதும் புலப்படும். குன்றை என்பது குன்றையூர். வீரை என்பது வீரபுரம். இவை தொண்டை காட் டைச் சேர்ந்தவை. வீரைமண்டலவன் என ஆசிரியர் 249

அடிக்கடிச் சொல்லி யிருப்பதிலிருந்து. - பெயரோடு ஊரையும் இணைத்துச் சொல்லும் வழக்காறு அன்றும் உண்டு என்பது விளங்குவதோடு, ஆசிரியரின் ஊர்ப் பற்றும் விளங்கும். இந்த ஊர்ப் பற்று இருந்திராவிட் டால், ஆசிரியரின் ஊரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைக்காதல்லவா ? மேலும், நீர்வளம் - கில வளம்-பொழில்வளம் எல்லாம் செறிந்த வீரை என ஆசிரியர் தம் ஊரைப் புகழ்ந்திருப்பது ஈண்டு குறிப் பிடத்தக்கது.

ஆசிரியரது ஊராகிய வீரைக்குப் பெருமண்டுர் என்னும் வேறு பெயரும் உண்டு எனச்சிலர் கூறுகின்ற னர். இந்த வீரை தொண்டை மண்டலத்தில் உள்ள தென்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஆசிரியர் தொண்டை மண் ட ல த் தை ச் சேர்ந்தவர் எனத் * தொண்டை மண்டல சதகம் என்னும் நூல் பின்வரு மாறு கூறுகிறது :

“......... நிகண்டு சூடாமணி தானுரைத்த மண்டலவன்

குடிகொண்டது நீள்தொண்டை மண்டலமே.”

மற்றும், ஆசிரியர் தம் ஆசானைக் குன்றை வேக் தன் எனக் குறிப்பிட்டுள்ளமையும், தம்மை வீரை மன்னன் என மூன்று இடங்களில் கூறிக்கொண்டுள்ள மையும் ஈண்டு உணர்தற்பாலன. வேந்தன், மன்னன்

என்ருல் என்ன ?

குணபத்திரரும் மண்டல புருடரும் குன்றை, வீரை ஆகிய ஊர்களை ஆண்ட குறுகில மன்னர்களாய் இல்லாவிடினும், அக்காலத்தில் இருந்த கிராம ஆட்சி முறையில், அவ்வவ்வூர்களின் ஆட்சித் தலைமைப் பொறுப்பாயினும் இவர்களிடம் இருந்திருக்கவேண் டும். அல்லது, சமயத்துறையில் - கல்வி கலைத்துறை யில் அவ்வவ்வூர்களில் இவர்கள் முதன்மையும் 250

தலைமையும் பெற்றிருக்கவேண்டும்; அதாவது கவிச் சக்கரவர்த்தி-பாவேந்தர் என்ற அளவில் இவர்கள் தலைசிறந்து விளங்கியிருக்கவேண்டும். மேலும், தமிழ் காட்டில் சமண சமயம் தலைவிரித்தாடிய அந்தக் காலத்தில், ஊர்களில் சமயத் தலைவர்களின் செல் வாக்கே மேலோங்கி யிருந்தது என்னும் உண்மையும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. மற்றும், அண்மைக் காலம் வரையுங்கூட, உலகம் முழுவதுமே சமயத் தலைவர்களே அரசர்க்குமேல் அரசராக உலகை ஆட் டிப் படைத்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

ஆசிரியரின் காலம்

ஆசிரியர் மண்டல புருடர் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுவது ஒரு சிக்கலான செயலாகத் தோன்று கிறது. நீந்தத் தெரியாமல் தண்ணிரில் மூழ்கித் தத் தளிப்பவனுக்கு ஒரு சிறு துரும்பும் தெப்பமாகத் தென் படுவது போல், சூடாமணியில் உள்ள ஒரு குறிப்பு ஆசிரியரின் காலத்தை ஒரு தோற்றமாக (உத்தேச மாகக்) கணிக்க உதவுகிறது : .

துடாமணியின் ஒன்பதாவது தொகுதியாகிய செயல் பற்றிய பெயர்த் தொகுதியின் பத்தாவது செய்யுளில் கிருட்டிண ராயன்' என்னும் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். கொடை மடம்' என்பதற்கு விளக்கம் கூறவந்த மண்டல புருடர், கிருட்டிண ராயன் கைபோல் வரையறை யில்லாமல் வாரி வழங் குவதற்குத்தான் கொடை மடம் என்று பெயர் எனக் கூறியுள்ளார். அச்செய்யுளின் முதல் மூன்று அடிகளி லும் அம்மன்னனைப் புகழின் உயர் எல்லேயில் நிறுத் திச் சிறப்பித்துள்ளார் : 251

இதோ அந்தப் பாடல்:

' படைமயக் குற்ற போதும்

படைமடம் ஒன்றி லாதான்

மடைசெறி கடகத் தோளான்

மதிக்குடை மன்னர் மன்னன்

கெடிமன்னர் வணங்குந் தாளான் கிருட்டிண ராயன் கைபோல்

கொடைமடம் என்று சொல்ப

வரையாது கொடுத்த லாமே.”

இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள கிருட்டிண ராயன் எந்தக் கிருட்டிண ராயன் என முடிவு கட்டுவது எளிதன்று. இந்தப் பெயரில் பல மன்னர்கள் இருந்த தாகத் தெரிகிறது. விசயநகரம் ஆண்டவர் ஒருவர்தொண்டை மண்டலத்துச் சிற்றரசர் ஒருவர்- இரண் டாம் விக்கிரமாதித்தச் சோழனுக்கு கட்பரசர் ஒருவர்இராட்டிர கூடத்தை ஆண்டவர் ஒருவர் - செஞ்சியை ஆண்டவர் ஒருவர் - இப்படியாக இந்தப் பெயரில் பல மன்னர்கள் கூறப்படுகின்றனர். மண்டலபுருடரை ஆதரித்தமையால் சூடாமணியில் நன்றி பாராட்டப் பட்டுள்ள மன்னர் இவர்களுள் யாரோ ?

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி யின் பதிப்பாசிரியர், மண்டல புருடர் பதினரும் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்றும், ஒரு தோற்றம் கி. பி. 1520-ஆம் ஆண்டு வாக்கில் சூடாமணி நிகண்டு தோன்றி யிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அப்படியென் ருல் பதிருைம் நூற்ருண் டில் விசயககரத்தில் அரசு செலுத்திய இராயர்’ காலத்தவராகக் கொள்ளல் வேண்டும்.

16 252

மண்டல புருடர் சூடாமணியில் பன்னிரண்டாம் தொகுதியின் தொண்ணுளரும் செய்யுளில், பன்னிரண் டாம் நூற்ருண்டில் வாழ்ந்த பாற்கரர் என்பவர் இயற் றிய பாற்கரம்' என்னும் கணித நூலைக் குறிப்பிட்டுள் ளார் :

' குணகாரம் பரியச்சந் தான்

குறித்த பாற்கரமே மூலம்.”

என்பது அப்பாடற் பகுதியாம். இதல்ை, மண்டல புருடர் பன்னிரண்டாம் நூற்ருண்டிற்குப் பிற்பட்ட வர் என்பது மட்டும் உறுதி; இதுபோலவே, பதினரும் நூற்ருண்டிற்கு உட்பட்டவர் என்பதும் உறுதி.

நூலின் அமைப்பு

தொகுதியும் பாடலும்

சூடாமணி திவாகரம் போலவே புன்னிரண்டு தொகுதிகள் உடையது அவையாவன :- -

1. தேவப் பெயர்த் தொகுதி பாடல்கள் ...93 2. மக்கட் பெயர்த் தொகுதி ,, ...106 3. விலங்கின் பெயர்த் தொகுதி 33 ...78 4. மரப் பெயர்த் தொகுதி 68... و و 5. இடப் பெயர்த் தொகுதி 3 3 ...68 6. பல்பொருள் பெயர்த் தொகுதி 33 ...35 7. செயற்கை வடிவப் பெயர்த்தொகுதி , ...76 8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி ,, ...82 9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி 3y ...67 10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி ,, . ...52 253

11. ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி , ...310 12. பல்பெயர்க் கூட்டத்து !

ஒரு பெயர்த் தொகுதி ,, ...154

தொகுதிகளின் எண்ணிக்கையில் சூடாமணி திவாகரத்தை ஒத்திருப்பதல்லாமல், தொகுதிகளின் பெயர்களிலும் ஒத்திருப்பது காண்க. சூடாமணியைத் திவாகரத்தின் விரிவான மறு பதிப்பு என்று கூறலாம். இதன் பன்னிரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 1189 செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர் தம்மைப் பற்றிக் கூறியுள்ள தற்சிறப்புப் பாயிரப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் மொத்தம் சூடாமணியின் பாடல்கள் 1197 ஆகும். ஆறுமுக காவலர் பதிப்பில் மொத்தம் 1197 செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனல் பழைய பாடல் ஒன்று, சூடாமணியின் மொத்தச் செய்யுட்கள்

1125 என்றே கூறுகிறது.

ஒரு பழம் பாடலில் 1125 செய்யுட்கள் எனக் கூறப் பட்டிருப்பதையும், ஆறுமுக நாவலர் பதிப்பில் 1197 செய்யுட்கள் இருப்பதையும் - அதாவது 72 செய்யுட் கள் மிகுதியாக இருப்பதையும் கண்ட சிலர், பிற்காலத் தில் யாரோ 72 செய்யுட்களைப் புதிதாகப் பாடி இடைச் செருகலாகச் சேர்த்துவிட் டிருக்கவேண்டும் எனக் கூறுகின்றனர்.

எதை கம்புவது 1125 செய்யுட்களே என முடிவு கட்டும் பழம் பாடலை எழுதியவர் தவருகக் கணக்கிட் டிருக்கக் கூடாதா ? அவருக்குக் கிடைத்த ஒலைச் சுவடி யில், ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக 72 செய்யுட்கள் விடுபட்டிருக்கக் கூடாதா ? ஒலை காணுமற் போவதும் செல்லரித்துப் போவதும் இயற்கை தானே ! 254

சூடாமணி 1197 செய்யுட்கள் உடையது என்னும் கொள்கையினர் தக்க சான்று ஒன்று தர முடியும். அதாவது - சூடாமணியின் ஒவ்வொரு தொகுதியின் இறுதிப் பாடலிலும், இத்தொகுதியில் மொத்தம் இத் தனை பாடல்கள் எழுதியுள்ளேன் என்று ஆசிரியரே கணக்குக் கட்டிக் கூறியுள்ளார். அந்தக் கணக்கின் படி கூட்டிப் பார்த்தால் மொத்தம் 1197 செய்யுட்கள் வருகின்றன.

ஆல்ை, 72 செய்யுட்கள் இடைச் செருகலே என் னும் கொள்கையினர், 72 செய்யுட்களைப் புதிதாகப் பாடி இடையிடையே செருகியவர்கள் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் ஆசிரியர் கூறியுள்ள எண்ணிக்கையையும் திருத்தி விட்டிருப்பார்கள், என்று. கூறக் கூடும்.

இவற்றுள் எது உண்மையோ, யார் அறிவார் : நூல் நடை

திவாகரமும் பிங்கலமும் நூற்பா (சூத்திர) கடை யில் இருப்பதால் படித்து நினைவில் இருத்துவதற்குக் கடினமா யுள்ளது என்று கருதித் தாம் விருத்தப் பாவால் சூடாமணியை எழுதி யிருப்பதாக ஆசிரியர் தற்சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இசையுடன் படித்துச் சுவைப்பதற்கும் அந்த இசையோட்டத். துடன் செய்யுளை நினைவில் இருத்ததற்கும் விருத்தம் மிகவும் ஏற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மையே !

சொற்கள்

முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 11,000 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. பதினேராம். 255

தொகுதியிலோ 1575 சொற்களுக்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. திவாகரத்தை நோக்க இது எவ்வளவோ மிகுதியல்லவா ?

நூலின் போக்கு

நூலின் தொடக்கத்தில், ஆசிரியரின் முன்னுரை யாகிய தற்சிறப்புப் பாயிரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் அருகக் கடவுள்மேல் காப்புப் பாடல் உள்ளது. இதனுல், ஆசிரியர் சைனர் என்பது கன்கு புலகுைம். மற்றும், தெய்வங்களின் பெயர்களைக் கூறவந்த இடத்தில் திவாகரரும் பிங்கலரும் சைவக் கடவுளரை முதலிற் கூறியிருக்க, மண்டல புரு.ரோ அருகக் கடவுளுக்கே முதன்மை கொடுத்துள்ளார். நூலின் தொடக்கமேஅதாவது, முதல் தொகுதியின் முதல் பாடலே அரு கனைப் பற்றியதுதான். இதோ அப்பாடல் :

' அநகன் எண்குணன் நிச்சிந்தன்

அறவாழி வேந்தன் வாமன் சினன் வரன் உறுவன் சாந்தன்

சினேந்திரன் நீதி நூலின் முனைவன் மாசேனன் தேவன் மூவுல குணர்ந்த மூர்த்தி புனிதன் வென்ருேன் விராகன்

பூமிசை நடந்தோன் போதன்."

இப்படியாகத் தொடங்கி முதல் ஐந்து பாடல்களில் அருகக் கடவுளின் பெயர்களை அடுக்கிக்கொண்டு போகிருர். இதன் பின்னரே சிவன், திருமால் முதலான தெய்வங்களைப் பற்றிப் பேசியுள்ளார். 256

மற்றும், மண்டல புருடர் ஒவ்வொரு தொகுதி யின், இறுதியிலும், இத்தொகுதியில் மொத்தம் இத் தனை பாடல்கள் பாடியுள்ளேன் என்று குறிப்பிட் டிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு தொகுதியிலும் தொடக்கத்தில் காப்புப் பாடலும் இறுதியில் பாடல்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் பெயரும் அமைக்கப்பட்டுள்ளமைக்கு எடுத் துக் காட்டாக, ஐந்தாம் தொகுதியாகிய இடப்பெயர்த் தொகுதியின் முதல் பாடலும் இறுதிப் பாடலும் வருமாறு :

(முதல் பாடல் - காப்பு] ' கடலெழும் இரவி கோடி கால்சீத்துப் பொடித்த தென்ன

மடலவிழ் கமல ஆர்தி வந்த வாமனேயே போற்றி அடைவுள திணை தேம் ஊர்வான் அகம்புறம் ஆதி யாய இடனுடைத் தாக வைத்த இடப்பெயர்த் தொகுதி

சொல்வாம்.” (இறுதிப் பாடல்)

  • முன்னெடு மேலும் மற்று மொழியுமஞ் ஞாங்கர் தானே முன்னரே தலைத்தா ளாகும் முதலொடு புரமும் அப்பேர் அன்னதிவ் விடப்பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம்

செய்தான் மன்னுசீர்க் குணபத்திரன் தாள் வணங்கு மண்டலவன்

தானே.” (எட்டோடு அறுபது விருத்தம் - அறுபத்தெட்டு விருத்தப் பாடல்கள்.)

அச்சுப் பதிப்புகள்

மற்ற நிகண்டுகளினும் சூடாமணியே மக்களால் மிகவும் பயிலப்பட்டதால், அச்சு வசதி ஏற்பட்ட 257

பின்னர் அது பலரால் பதிப்பிக்கப்பட்டது. சில பதிப்புகள் வருமாறு :

(1) நூல் முழுதும் உரையுடன் (பன்னிரண்டாம் தொகுதிக்கு மட்டும் உரையில்லை.) யாழ்ப்பாணத்து கல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலப்பிள்ளை யால் பார்வையிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. (இரண் டாம் பதிப்பு - கி. பி. 1898)

(2) நூல் முழுதும், மணிமங்கலம் வடிவேலு முதலியாரால் பார்வையிடப்பட்டு, மதுரை குருசாமி காயுடுவால் (கி. பி. 1901) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

(3) நூல் முழுதும் உரையுடன், பாரிப்பாக்கம் முனியப்ப முதலியாரால் பார்வையிடப்பட்டு அப்பாவு பிள்ளையால் (கி. பி. 1910) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

(4) நூல் முழுதும், கா. கதிரைவேற் பிள்ளை மாணவர் ப. கணேச முதலியார் செப்பனிட்ட உரை யுடன் (கி. பி. 1933) வெளிவந்துள்ளது.

(5) நூல் முழுதும் - யாழ்ப்பாணத்து கல்லூர் ஆறுமுக காவலரால் ஆராயப்பட்ட பதிப்பு - பலமுறை வெளிவந்துவிட்டது. 7-ஆம் பதிப்பு (கி. பி. 1957ஆம் ஆண்டில் வெளியாயிற்று.

(6) சூடாமணியின் பதினேராவது தொகுதி மட்டும் புதுவை - கயகப்ப முதலியார் உரையுடன் திரு. வேங்கடாசல முதலியாரது சென்னை சரசுவதி அச்சுக் கூடத்தில் (1836) பதிப்பிக்கப்பட்டுள்ளது. 258

(7) பதினேராவது தொகுதிமட்டும், தில்லை - கடராசசுவாமி அவர்களால் பார்வையிடப்பட்டு, பூ. மு. இராசு முதலியாரின் சென்னை புரசை ரூபி அச்சுக் கூடத்தில் (1910) பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படியாகப் பலரால் பலமுறை பதிப்பிக்கப்பட் டிருப்பதிலிருந்து சூடாமணியின் ஆட்சியும் மாட்சியும் விளங்கும்.

பதினேராவது (தொகுதி) நிகண்டு

சூடாமணியின் பதினேராம் தொகுதி, ஒரு சொல் லுக்குரிய பல பொருள்களையும் கூ றுகின்ற இக்கால அகராதிகளைப் போன்ற (Homonyms) பகுதியாதலின், அக்காலத்தில் இத்தொகுதி மிகவும் முதன்மை பெற் றிருந்தது. நிகண்டு படித்தவர்கள் என்ருல் சூடாமணி யின் பதினேராவது தொகுதியைப் படித்தவர்கள் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு இத்தொகுதி உயர்ந்திருந்தது. இதேைலயே இத்தொகுதி பதி னேராவது நிகண்டு என ஒரு தனி நிகண்டு நூல் போல் அழைக்கப்பட்டு வந்தது. பதினேராவது நிகண்டு என்பது சூடாமணியின் ஒரு பகுதி என்பதை அறியாமல், அதனை ஒரு தனி நிகண்டாகவே அன்றும் சிலர் கருதினர் - இன்றும் சிலர் கருதுகின்றனர்.

புதுவை கயகப்ப முதலியார், தில்லை நடராசசுவாமி முதலியோர் இப்பதினேராம் தொகுதியை மட்டும் தனி நூலாக அச்சிட்டிருப்பதொன்றே இத்தொகுதியின் ஆட்சிக்கும் மாட்சிக்கும் போதிய சான்றகும். கயகப்ப முதலியாரின் பதிப்பில் ஒரு சொல் பல பொருட் டொகுதி என்பது நூற்பெயராகவும், கடராச சுவாமி பதிப்பில் பதினேராவது கிகண்டு என்பது நூற் 259

பெயராகவும் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கோக்கத் தக்கது.

பதினேராம் தொகுதியின் இன்றியமையாமையைச் துடாமணி ஆசிரியர் மண்டல புருடரே உணர்ந்திருந் தார். அதனல், எளிதில் மனப்பாடம் செய்வதற்குரிய முறையில் இத்தொகுதியை அமைப்பதற்கு வழி கண் டார். இத்தொகுதியில் தாம் சொல்ல எடுத்துக் கொண்ட 1575 சொற்களையும், பதினெட்டு மெய்யெழுத் துக்களின் அடிப்படையில் பதினெட்டு வகை எதுகைச் சொற்களாகப் பிரித்துக் கொண்டார்.எதுகை என்பது, ஒவ்வொரு சொல்லிலும் இரண்டாவது எழுத்து ஒத் 'திருப்பதாகும். அகம், நகை, முகில் என்னும் சொற் களில் இரண்டாவது எழுத்தாக - க - கை - கி - எனக் ககர இனம் ஒத்திருக்கிறதல்லவா ? இதற்குக் ககர எதுகை என்று பெயராம். வனம், கனிவு, பனுவல் என்னும் சொற்களில் இரண்டாவது எழுத்தாக - ன - ணி - னு - என னகர இனம் ஒத்திருக்கிறதல்லவா? இதற்கு னகர எதுகை' என்று பெயராம்.

இப்படிப் போல 1575 சொற்களையும், ககர எதுகை முதலாக னகர எதுகை ஈருகப் பதினெட்டு வகைக்குள் அடக்கினர் ஆசிரியர். அவையாவன :

1. க கர எதுகை 7. த கர எதுகை 2. க. கர எதுகை 8. ந. கர எதுகை. 3. ச கர எதுகை 9. பகர எதுகை 4. ஞ கர எதுகை 10. ம. கர எதுகை 5. ட கர எதுகை 11. ய கர எதுகை 6. ண கர எதுகை 12. கர எதுகை 260

13. ல கர எதுகை 16. ள கர எதுகை 14. வ கர எதுகை 17. ற கர எதுகை 15. ழ கர எதுகை 18. ன கர எதுகை

எடுத்துக் காட்டாக, இத்தொகுதியிலிருந்து ககர எதுகைக்கு ஒரு செய்யுளும், னகர எதுகைக்கு ஒரு. செய்யுளும் வருமாறு :

(ககர எதுகை)

பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு மகரமே சுருப்பூந் தாதாம் வசிகூர்மை வசியம் வானே அகம்மனம்மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே.”

இப்பாடலில் பகவன், பகல், மகரம், வசி, அகம் என்னும் ஐந்து சொற்கட்கு உரிய பொருள்கள் தரப் பட்டுள்ளன. ககர எதுகைச் சொற்களிடையே வசி’ என்னும் சகர எதுகைச் சொல்லும் இப்பாடலில் கலந்து விட்டிருக்கிறது.

(னகர எதுகை) " தானமே மதம் நீராட்டுத் தருகொடை சுவர்க்கம்

தாற்பேர் பீனமே பருமை பாசி பேடுஎன்ப பேடி ஊரே நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கு நீரும் வானம் ஆகாயம் என்ப மழை உலர்மாமும் ஆமே.”

இப்பாடலில், தானம், பீனம், பேடு, கானம், வானம் என்னும் ஐந்து சொற்களின் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. னகர எதுகைச் சொற்களி னிடையே பேடு என்னும் டகர எதுகைச் சொல்லும் இப்பாடலில் கலந்துவிட்டது. . 261

ஆசிரியர் ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக் கும் தொடர்பு கண்டார் இல்லை - ஒரு செய்யுளுக்கும் அடுத்த செய்யுளுக்கும் தொடர்பு கண்டாரில்லை. எப்படியோ முடிந்த வரைக்கும் ஒவ்வொரு செய்யுளி லும் எதுகைச் சொற்களை அமைத்தால், செய்யுளை நினைவில் நிறுத்துவதற்கும், வேண்டிய சொல்லை. வேண்டியபோது நினைவிலிருந்து வருவிப்பதற்கும். உதவும் என்று எண்ணினர்-அப்படியே செய்தார். பொதுவாக எவர் பாடிய எந்த நூலிலுள்ள எந்த விருத்தப் பாடலும் நான்கு அடிகளிலும் எதுகை உடையதா யிருப்பதால், நினைவில் இருத்துவதற்கும் மீண்டும் வருவிப்பதற்கும் பெரிதும் உதவும் இயல்பின தாம்.அதேைலயே மண்டல புருடர் விருத்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு பாடலின் கான்கு அடி களுக்கும் எதுகை வேண்டுமாதலால், 1575 சொற்களை யும் எதுகை வாரியாகப் பிரித்துப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆசிரியர் முதலில் ககர எதுகைச் சொற்கள் - அடுத்து ங்கர எதுகை - அடுத்து சகர எதுகை - என்று இந்த வரிசையில் அமைத்திருப்பதிலும் இக்கால அகராதி முறையின் வாடை வீசுகிறது. இக்கால அக ராதிகளில், முதலில் முதல் எழுத்தின்படி சொற்களை வரிசைப் படுத்திப் பின்னர் அவற்றையே இரண்டாம் எழுத்தின்படியும் வரிசைப்படுத்துவர். அகம், அணில், ஆடல், ஆவல்-இது இக்காலத்து அகராதி முறை. அதாவது, - முதலில் அகம், அணில் என ‘அ’வில் தொடங்கும் சொற்கள்; பின்னர் ஆடல், ஆவல் என 'ஆ'வில் தொடங்கும் சொற்கள். 'அ'வில் தொடங்கும் சொற்களுக்குள்ளும் க என்பதை இரண்டாவது, 262

எழுத்தாக உடைய அகம் என்னும் சொல் முக்தியும், "ணி என்பதை இரண்டாம் எழுத்தாக உடைய அணில் என்னும் சொல் பிந்தியும் இருப்பது காண்க. எழுத்து வரிசையில் னி என்பதைவிட க’ என்பது முன்னது அல்லவா ? கம் மண்டல புருடரோ முதல் எழுத்தைக் கவனிக்காமல் இரண்டாவது எழுத்தை மட்டும் அகராதிக் கண்கொண்டு நோக்கியுள்ளார்.

ஆசிரியர் 1575 சொற்களையும் பதினெட்டு எதுகைக் குள் அடக்கிப் பதினெட்டுப் பகுதிகளாக அமைத்திருப் பதல்ை, நாம் ஒரு சொல்லுக்குப் பொருள்தேட 1575 சொற்களையும் புரட்டிக்கொண்டு கிடக்க வேண்டிய தில்ல்ை. எடுத்துக் காட்டாக, கழல் என்னும் சொல்லுக் குப் பொருள் காணவேண்டுமாயின், கேரே ழகர எதுகைப் பகுதிக்குச் சென்று விடலாம். ஆசிரியர் கையாண்டுள்ள இந்த அமைப்பு ஓரளவு அகராதி முறை போன்ற வசதி உடையதல்லவா ?

ஆல்ை, மண்டல புருடர் கையாண்டுள்ள எதுகை முறையில் குறை இல்லாமலும் இல்லை. காம் எடுத்துக் காட்டாக முன் பார்த்த ககர எதுகைப் பாடலில் ககர எதுகைச் சொற்களினிடையே வசி' என்னும் சகர எதுகைச் சொல்லும், னகர எதுகைப் பாடலில் னகர எதுகைச் சொற்களினிடையே பேடு என்னும் டகர எதுகைச் சொல்லும் கலந்திருப்பதைக் கண்டோம். இவ்வாறு கலப்பு எதுகையாக அமைத்திருப்பது ஒரு குறைதானே !! அடியை நிரப்புவதற்காக இடை யிடையே வேறு எதுகைச்சொல்லையும் ஆசிரியர் கலந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது. அடியை நிரப்பவேண் 'டும் என்னும் நோக்கத்தில் - மோனை அமைந்த சொல்லைப் போடவேண்டும் என்னும் நோக்கமும் 263.

கலந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக மேலே பார்த்த ன்கர எதுகைப் பாடலின் இரண்டாம் அடியில் பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே என பீனம் என் னும் னகர எதுகைச் சொல்லுக்கு மோனையாகப் பேடு" என்னும் டகர எதுகைச் சொல் போடப்பட்டுள்ளது. மோனை என்பது முதல் எழுத்து ஒத்திருப்பது. பீ” என்னும் எழுத்துக்கு பே' என்னும் எழுத்து மோனை யாகும். ஒவ்வோர் அடியிலும் இவ்வாறு மோனை அமைய வேண்டியது யாப்பிலக்கண முறையாகும். ஒத்த எதுகை உடைய மோனைச் சொல் இருந்து கிடைத்தால் ஆசிரியர் போடுவார்; கிடைக்காவிட்டால் வேறு எதுகை உடைய மோனைச் சொல்லைத்தானே போடவேண்டும்? அவர் என்ன செய்வார் ! கலப்பு எதுகை ஏற்பட்டதன் பொருட்டு (காரணம்) இப்போது புலனுகலாம்.

மற்றும், சில விடங்களில் சொல்லுக்குப் பொருள் கூறும்போது வேண்டாத அடைமொழிச் சொற்களைச் சேர்த்திருப்பதால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது - என்று ஒரு குறை கூறப்படுகிறது. எடுத்துக் காட்டாக, விழவு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறவந்த ஆசிரியர், .

“ விழவு என்ப மிதுன ராசி விளங்கும் உற்சவமு மாகும்.'

என்று பாடியுள்ளார். விழவு என்னும் சொல்லுக்கு மிதுனராசி, உற்சவம் என்னும் இரண்டு பொருளாம். இங்கே, உற்சவத்தை விளங்கும் உற்சவம் என அடை. மொழி தந்து குறிப்பிட்டுள்ளார். விழவு என்பதற்கு விளங்கும் என்றும் ஒரு பொருள் உண்டு போலும் என்று சிலர் மயங்கக் கூடும். ஆனல் இத்தகைய, 264

மயக்கம் போதிய இலக்கியப் பயிற்சி யில்லாதோர்க்கே ஏற்படும். இந்த மயக்கம் ஏற்படாதிருக்க ஆசிரியர் சில விடங்களில் இந்தச் சொல்லுக்கு இத்தனை பொருள் உண்டு என்று இறுதியில் எண்ணிக்கை யிட்டும் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக குழல் என்னும் சொல்லுக்குத் துளையுடைப் பொருள், மயிர் இசைக்குழல் என்னும் மூன்று பொருள் உண்டு என்பதை,

' குழல்துளையுடைப் பொருட்பேர் மயிர் இசைக்குழல்

முப்பேரே.”

என்னும் அடியால் அறிவித்துள்ளார். இறுதியில் முப்பேர் (மூன்று பொருள்களின் பேர்) என்று எண் .ணிக்கையிட்டு விட்டதால் பொருள் மயக்கத்திற்கு இடமில்லை யன்ருே ?

எனவே, இதுபோல்வனவற்றைப் பெருங் குறை யாக எடுத்துக்கொள்ளக் கூடாது. செய்யுளில் இடம் அடைப்பதற்காகவும் எதுகை மோனை அமைப்பதற் காகவும் - அதே நேரத்தில் அழகுக்காகவும் சுவைக் காகவும் சில அடைமொழிச் சொற்களைச் சேர்க்கத் தான் வேண்டியிருக்கும். இந்நுட்பங்களையெல்லாம் செய்யுள் இயற்றும் பயிற்சி யுடையோரே நன்கறிவர்.'

ஆசிரியர் மண்டல புருடரே பதினேராம் தொகு தியை எதுகை முறையில் வரிசைப்படுத்திப் படிப் போர்க்கு வசதி செய்திருந்தும், மேலும் சில வசதி க9ளப் பிற்காலத்தார் செய்துகொண்டுள்ளனர். ஒரே எதுகைச்சொற்கள் அமைந்த பாடல்களைத் தனியாக வும், கலப்பு எதுகைச் சொற்கள் அமைந்த பாடல் களைத் தனியாகவும் பிரித்தனர். ஒரே எதுகைச் 265

சொற்கள் அமைந்த பாடல்களையும், திவாகரத்தில் செய்தது போல், ஆதியில் பொருள் - அந்தத்துப் பொருள் என இருபிரிவாகப் பகுத்துக் கொண்டனர். இவ்வாறெல்லாம் பிற்காலத்தினர் தத்தம் கைவண் -ணம் பெய்து எளிதாக்கிக் கற்றனர்- கற்பித்தனர்.

வேதகிரியார் சூடாமணி

சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியில் மொத்தம் 310 விருத்தப் பாக்கள் உள்ளன; அவற்றின் வாயிலாக 1575 சொற்களுக்கே பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது; தமிழ் மொழியில் உள்ள மற்ற சொற்கள் எல்லாம் இடம் பெறவில்லை. இக்குறை போக்க, பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த களத்துர் வேதகிரி முதலியார் என்பவர், மேலும் பல சொற்களை எதுகை முறையில் அமைத்துப் புதிதாக 290 விருத்தப் பாக்களை இயற்றிச் சூடாமணி நிகண் டின் பதினேராம் தொகுதியில் உள்ள 310 விருத்தப் பாக்களின் இடையிடையே புகுத்தி (310+290=600) மொத்தம் 600 பாக்கள் கொண்ட தனிநூலாக்கி வேதகிரியார் சூடாமணி’ என்னும் பெயரில் 1842-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவ்வாறெல்லாம் சூடாமணி கிகண்டின் பதினேராம் தொகுதி பல அவதாரங்கள்’ எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

நயநப்ப முதலியார் உரை

பதினேராம் தொகுதியில் பலர் பல சீர்திருத்தங்கள்

செய்ததன்றி அதற்குமட்டும். தனியே உரை எழுதியும்

உள்ளனர். அவ்வுரைகளுள் புதுவை-கயாகப்ப முதலி யார் உரை தானும் ஒன்று என்பதோடு கில்லாமல், 266

முதன்மையானதாகவும் பிறரால் பின்பற்றப்பட்ட தாகவும் தெரிகிறது. பதினேராம் தொகுதியாகிய ஒரு சொல் பலபொருள் தொகுதியை எல்லோரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும்வண்ணம் ஓர் உரை

எழுதுக என்று நாதமுனி என்பவர் கேட்டுக்கொள்ள கயகப்ப முதலியார் தெளிவாக உரை எழுதினராம்.

இந்தச் செய்தி கயகப்ப முதலியாரது உரைநூற் பதிப் பின் தொடக்கத்தில், அவரைப் புகழ்ந்து புதுவைபொன்னுசாமி முதலியாரால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ள

உரைப்பாயிரப் பாடலால் தெரியவருகிறது. அப்பாடல் வருமாறு :

உரைப் பாயிரம் (நேரிசை யாசிரியப்பா)

“ வளமலி கடல்சூழ் மாநில மதனில்

உளநூல் எவற்றினும் உறுபயன் யாவையும் கற்றுணர்ந் தவரும் கல்லா தவரும் சற்றும் உளனிற் றளர்வெய் தாமல் வேங்கடம் குமரி மேற்கடல் கீழ்க்கடல் ஆங்கள் வெல்லையுள் அருந்தமிழ்ப் பெளவத் திலகும் அமிழ்தென இயைந்திடும் ஒருசொற் பல்பொருள் தொகுதி பகர்பொருள் அனைத்தையும் வெளிப்படை யாக விதந்ததற் கோருரை எளிதின் உணர இயற்றுதி என்ன மருமலர்ப் பொழிலு மணிதிகழ் மாடமும் பெருகுதல் வளங்கள் பிறங்கும் ஆவணமும் சேலூர் கயமும் செறிந்தெழில் விளங்கும் வேலூர்க் கதிபன் வென்றிசேர் மகிபன் திருமால் பதத்தைச் சிந்தையில் இருத்தும் பெருமான் தமிழ்மறை பெரிதுணர் பெற்றியன் கருணைச் சாகரம் கல்விக் காகரம் 267

பொருள்நளிை யளிக்கும் புலவர் பொன்மேரு மேதகு சந்தியப்பன் மெய்த்தவத்தால் காதல கைக் கவினுறத் தோன்றிக் கோதறு மேழிக் கொடியினை யுயர்த்த நாத முனிமன் நவின்றன. கைத் திவாகரம் அரும்பொருள் விளக்கத் தீபிகை அவாவற உணர்த்தும் ஆசிரிய நிகண்டோ டகலாப் பிங்கலம் அமர்ந்திடும் உரிச்சொல் நிகண்டு கயாகரம் நிகழ்த்தும் இரேவணர் சூத்திரம் பொதிய நிகண் டெனும் தொன்னூல் மாத்திர மன்றியும் மருவு தொல்காப்பிய முதனூல் விதிகளை முழுதுணர் அறிவால் இதமுள சொல்வழுப் பொருள்வழு இலாவகை ஆராய்ந் ததனை அமைதிபெற விரித்து ஏரார் இலக்கியம் ஏற்கும் படியுரை மேற்கோள் காட்டி மேம்படச் செய்தனன் பாற்பட இசைத்த பல்கலைப் புலமையும் நாற்றிசை எங்கணு நண்ணிய சிறப்புந் தோற்றமும் ஆற்றலுஞ் சோர்விலா நடையுங் கிளர்பெருஞ் செல்வமுங் கீர்த்தியும் ஓங்கி வளரளஞ் ஞான்றும் வயம்பெறு நிபுணன் கங்கை குலாதிபன் கடிகமழ் குவளை தங்கு புயாசலன் தரும குனலயன் உயர்சீர்ப் புதுவையின் உற்ற நயநப்பன் எனுமியற் பெயர்கொள் நாவலனே.” இப்பாடலிலிருந்து தெரியவரும் சில கருத்துக்

356ΥΤΙΤ6) 16ύΙ :--

வள மிக்க வேலூரில் சந்தியப்பன் என்னும் பெரி யார் வாழ்ந்தார். அவர் திருமாலை வழிபடுபவர்; அருட் கடல்; கல்வியே உருவானவர் பொருள் ஈந்து புலவர் களைப் போற்றுபவர். அவர் மகன் காதமுனி என்பவர்.

17 268

ந நாதமுனி மேழிக் கொடி உடையவர். இவர், ஆடாமணியின் பதினேராம் தொகுதிக்கு உரை எழுதும் படி கயகப்பன் என்னும் அறிஞரைக் கேட்டுக்கொண் டார். இந்த கயகப்பர் பல்கலைப் புலவர்; எங்கும் பரவிய புகழினர்; பெருஞ் செல்வர்; கங்கை குலத்தினர்; தோளில் குவளைமாலை அணிபவர்; கொடைப் பண் பினர்; புதுவை என்னும் ஊரினர். இவர், தொல்காப் பியம், திவாகரம் முதலிய நூற்களை ஆராய்ந்ததன் துணைகொண்டு பல நூற்களிலிருந்து தக்க மேற் கோள்களும் காட்டிப் பிழையின்றி உரையியற்றினர்

மேலுள்ளாங்கு, பதினேராம் தொகுதிக்கு உரை யெழுதியவர் பெயரே இவ்வளவு பெருமிதப்படுத்தப் படுவதை நோக்குவோர், அப்பதினேராவது தொகுதி எவ்வளவு இன்றியமையாததாகப் போற்றப்பட் டிருக்கும் என்பதையும் நுனித்துணர முடியும்.

இனி, இத்தொகுதியை மாதிரி பார்ப்பதற்காக இரண்டே இரண்டு சுவையான இடங்களை எடுத்துக்

கொள்வாம் :

உப்பு என்னும் சொல்லுக்கு, பெண்கள் ஆடும் ஒரு வகை விளையாட்டு, உவர்ப்புத் தன்மை(உப்புக் கரிப்பு), கடல், இனிமை என நான்கு பொருள்கள் உண்டாம்:

' உப்பு மெல்லியலாாாடல் உவர் கடல் இனிமை நாற்பேர்.”

என்பது சூடாமணிப் பாடல் பகுதி. இக்கான்கு பொருள்களுள், மெல்லியலாராகிய பெண்கள் உப்பு குந்தம் - உப்பு மூட்டை போன்ற பெயர்களில் ஆடும் உப்பு விளையாட்டு என்னும் பொருளும் புதிதன்று; உவர்ப்புத் தன்மை, கடல் என்னும் இரண்டு பொருள் 269

களுங்கூடப் பழையனவே. ஆணுல், இனிமை என் னும் பொருள்தான் இனிமையாகவும் புதுமையாகவும் உணரப்பட்டுச் சுவை பயக்கிறது.

ஆம், உண்மைதான் ! உப்பு என்னும் சொல்லுக்கு 'இனிமை என்னும் பொருள் முற்றிலும் பொருந்தும்முக்காலும் பொருந்தும்.

தனியே வாயில் போட்டால் கரித்துத் து - து’ என்று துப்பக்கூடிய பொருள் உப்பு என்பது உண்மைதான் என்ருலும், தனித் தனியே கச்சுத் தன் மையுடைய சோடியம், குளோரைன் என்னும் இரண்டு பொருள்களின் சேர்க்கைப் பொருள்தான் உப்பு என் பது உண்மைதான் என்ருலும், உப்பு என்னவோ இனிமை தரும் பொருள்தான் ! நூறு ரூபாய் செல விட்டு ஆக்கும் ஒர் உணவுப் பொருளில் ஒரு சிறி தளவு உப்பு போடாவிட்டால் அதை வாயில் வைக்க முடியுமா ? சிறிது உப்பு சேர்த்துவிட்டாலோ அமிழ் தம் -அமிழ்தம் அல்லவா? புளி, மிளகாய், எண்ணெய், கடுகு, சீரகம், வெங்காயம், காய், பயறு முதலியவற் றுள் எதையும் சேர்க்காமலேயேகூட 92–GöðTGö)6). உண்டுவிட முடியும். ஆனல் உப்பு போடா மல் உண்ண முடியாதே ! உப்பு ஒன்றுமட்டுமே சேர்த்துக் கூழாகவும் கஞ்சியாகவும் உட்கொண்டுவிட முடியுமே ! இதல்ைதான், உப்பில்லாப் பண்டம் குப் பையிலே' என்னும் பழமொழி எழுந்தது. தெலுங்குப் பெரியாராகிய வேமன்னர் என்பவரும் வேமன்ன பத் தியம் என்னும் தமது நூலின் ஒரு பாடலில் இந்த உப்புச் செய்தியை ஒரு பெரிதாக மதித்து, உப் பில்லாத கறி (பதார்த்தம்) உதவியற்றது. (உப்பு லேனு கூர ஆனம்புருச்சலகு') என்று கூறியுள்ளார். 270

எனவே, 2_GöðT Gö)(3)] இனிமையுடையதாக்குவது உப்பே யாதலின் உப்பு இனிமை எனப்பட்டது.

உணவை உணவாக ஆக்குவது - அதாவது - உண்ணக் கூடியதாகச் செய்வது உப்பே யாதலின் உணவுக்கு உப்பு என்னும் குழுஉக்குறிப் பெயரும் உண்டு. அவர் உப்பைத் தின்றுவிட்டு அவருக்கே கேடு செய்யலாமா ? உங்கள் உப்பைத் தின்றுவிட்டு உங்களுக்கே கேடு சூழ்வேன ? என்னும் உலக வழக்குத் தொடர்களில் உப்பு என்றது உணவைக் குறிக்கின்றதல்லவா ? எனவே மண்டல புருடர் சூடா மணி நிகண்டில் உப்பு என்னும் சொல்லுக்கு உணவு என்ற பொருளையும் சேர்த்து ஐந்து பொருள்கள் எழுதி யிருக்கலாம். இவ்வாறு எழுதாவிடினும், அவர் கூறி யுள்ள இனிமை என்னும் கான்காவது பொருளிலேயே உணவு என்னும் ஐந்தாவது பொருளையும் அடக்கி விட லாம். உணவை உண்ணக்கூடிய அளவில் இனிமை யுடைய பொருளாகச் செய்வது உப்பே யன்ருே !

உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்னும் முது மொழியும் தமிழ் மொழியில் உண்டு. ஈண்டு, உப்பிட் டவர் என்பதற்கு உணவளித்தவர் என்று பொருள் கொள்வதனினும், கூழுக்கோ, கஞ்சிக்கோ, கீரைக்கோ போட உப்பு வாங்கவும் வசதியின்றி நீ தவித்தபோது, சிறிது உப்பு அளித்து உண்ணும்படிச் செய்தவர்கள் என்று பொருள் கொள்வது சாலச் சிறந்தது. எனவே, உப்பே இனிமை என்னும் பொருட்பொருத்தம் இப்போது இனிது விளங்குமே !

ஏன், உப்பு என்னும் சொல்லுக்கு இனிமை என் நறும் பொருள் உண்டா என்று வள்ளுவனரிடம் 271

சென்று கேட்டுப் பார்ப்போமே ! ஆம், உண்டு என்று அவர் திருவாய் மலர்கிருர் :

ஒரு தலைவனும் தலைவியும் ஊடல்கொள்கின்றனர்; பின்னர் ஊடல் நீங்கிக் கூடுகின்றனர். ஊடலைத் தொடர்ந்து நிகழ்ந்த அக் கூடலில் மிக்க இனிமை கண்டனர். "ஆகா! ஊடிக் கூடும் இந்த இனிய இன்பம் இன்னும் கிடைக்காதா” என்று ஏங்குகிருன் தலைவன். சுவை கண்ட பூனையல்லவா ? இந்தக் கருத்து, திருக் குறள் காமத்துப் பாலில் ஊடல் உவகை என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இதோ குறள் : -

'ஊடிப் பெறுகுவம் கொல்லோ துதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.”

இந்தக் குறட் பாவில் இனிமை என்னும் பொருளில் உப்பு என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் பெரு மான் வள்ளுவனர். இலக்கியம் கண்டதற்கு இலக் கணம் என்றபடி, இது போன்ற இலக்கிய ஆட்சிகளைக் கண்டே நிகண்டு நூலார் சொற்பொருள் தொகுத்துள்

,5ҮТ657 ҒТ ,

மற்றும் உலகியலில்கூட, ஒரு காட்சியோ - ஒரு சொற்பொழிவோ - ஓர் எழுத்துப் படைப்போ - அல்லது இன்னும் வேறு ஏதேனும் ஒன்ருே சுவை பயக்கவில்லையாயின், அதில் உப்பு சப்பு ஒன்றும் இல்லை என்று கூறி மக்கள் உதட்டைப் பிதுக்குவது கண் கூடு. இவ்வாறெல்லாம் நின்று உப்பு என்னும் சொல்லின் இனிமைப் பொருள் நமக்கு இனிமை தருகிறது. 272

அடுத்து, சமன்' என்னும் சொல்லின் பொருள் உணரத்தக்கது. சமன் என்பதற்கு யமன், கடு என்னும் இரு பொருள்கள் உண்டாம்.

“ சமன் யமன் நடுவும் ஆகும்.”

என்பது சூடாமணிப் பாடல் பகுதி. சமன் என்னும் சொல்லுக்குரிய நடு (சமம்) என்னும் பொருள், அனைவரும் அறிந்த அன்ருட வழக்கில் உள்ள பொருளேயாகும் ; ஆனல் யமன் (எமன்) என் னும் பொருளோ புதுமையானது- நினைக்கத் தக்கது.

எமன் என ஒருவன் இருக்கிரு-ைஇல்லையா என்ற ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவ தின்று. ஆனல் அப்படி: யொருவன் இருப்பதாக ஒரு சிலராயினும் நம்புகின் றனர். அவன் எல்லோரையும் சமமாகக் கருதுபவனும். அரசர்-ஆண்டி, இல்லறத்தார்-துறவறத்தார், ஏழை செல்வர், இளையவர்-முதியவர், ஆண்கள்-பெண்கள், பிறந்த குழந்தை - குழந்தை பெற்ற தாய் என்ற வேற்றுமை அவனுக்குக் கிடையாதாம். அவரவர்க் குள்ள காலக்கெடுவின்படி ஒரு நொடி நேரமும் தாழ்க்காது சென்று உயிரைப் பிடிப்பானும். அவனது இந்த நேர்மைப் பண்பை - நடுவுநிலைமையை, சாத்தனர் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியத் தில் உள்ள

' தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்

ஈற்றிளம் பெண்டிர் ஆற்ருப் பாலகர் முதியோர் என்னுன் இளையோர் என்னுன் ”

என்னும் பாடற் பகுதியாலும் உணரலாம். எனவே, எவரும் எமனுக்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுத்து உயிரைக் காத்துக்கொள்ள முடியாதுபோலும் ஆனல், 273

மார்க்கண்டேயன் சிவனது உதவியால் எமனை வென்ற புராணக் கதை உண்டு. அறநெறிப்படி நோக்கின், சிவன் எமனை உதைத்து மார்க்கண்டேயனைக் காத்தது பொருந்தாச் செயலே. இது கட்டுக் கதையாதலின் இதனை விடுப்பாம்.

இதுகாறுங் கூறியவாற்ருல், துலாக் கோல்போல் எமன் நடுநிலைமை உடையவன் - சம நோக்கினன் என்பது பெறப்படும். இதனுலேயே இவனை எம தருமன்’ என்றுகூட அழைப்பதுண்டு. இதேைலயே இவனுக்குச் சமன் என்னும் பெயர் வைக்கப்பட்டது. மேலும் இவன், அவரவரது குற்றத்திற் கேற்பக் கண்டிப்பான தீர்ப்பு வழங்குவதாகவும் கூறுவதுண்டு

திருவாளர் யமதருமனைப் பற்றிய செய்தி கம்பத் தக்க தன்று என்று சொல்லப்படினும், சமன் என்னும் சொற் பொருள் நயம் அறிவிற்கு விருந்தாயுள்ளது.

இவ்வாறு சூடாமணியின் பதினேராவது தொகுதி யின் சொற்பொருள் கயச் சோலைக்குள் புகுந்தால் எண்ணற்ற இடங்களில் அமர்ந்து இளைப்பாறலாம்.

மூன்ருவதும் முதலாவதும்

சூடாமணி பவணந்தியார் காலத்திற்குப் பின்னல் எழுந்த நிகண்டாதலின், அவர் தமது கன்னூலில் இதனைக் குறிப்பிடவில்லை. ஆயினும், அந் நன்னூலில் உள்ள பிங்கலமுதலா நல்லோர் உரிச்சொலில்: என்னும் நூற்பாப் பகுதிக்குப் பிற்காலத்தில் உரை யெழுதிய சங்கர நமச்சிவாயர் என்னும் பெரும்புலவர் இந்தச் சூடாமணியை மறந்தாரிலர் - மறக்கத்தான் 274

முடியுமா ? பிங்கலம் திவாகரம் சூடாமணி முதலிய நூற்களுள்' என உரை விரித்துப் போந்தார் அவர்.

எனவே, நிகண்டுகளுக்குள் சூடாமணி மூன்ருவது இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தமை புலனுகும். காளடைவில் முதலிடத்தையும் இது பெற்றுவிட்டது என்றும் துணிந்து கூறலாம். ஆம்! அருமருந்தைய தேசிகர் தாம் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டில், சூடாமணியின் ஆசிரியராகிய வீரை மண்டலவருக்கே முதலிடம் தந்துள்ளார். மண்டல புருடர் முதலான ஆசிரியர்கள் எழுதிய நிகண்டு களைப் பின்பற்றித் தாம் தமது நிகண்டை இயற்று வதாகப் பாயிரத்தில் கூறியுள்ளார். அப்பாடல்

வருமாறு :

' மாவியல் சிறக்கும் வீரை

மண்டலவன் காங்கேயன் ரேவன சித்தன் செஞ்சொற்

கயாதரன் இவராற் சொற்ற பாவியல் நூற்கூ ருேர்சொல்

பல்பொருள் தொகையெலாம் சேர்த்து ஒவிலா வளஞ்சிறப்ப

ஒருபெரு ருால தாக.”

இந்தப் பாடலில் அருமருந்தைய தேசிகர் மண்டல புருடருக்கு முதலிடம் கொடுத்திருக்கிருர் என்ருல், அவரது சூடாமணி நிகண்டுக்கு முதலிடம் கொடுத் துள்ளார் என்பதுதானே பொருள் ! திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டையும் இருட்டடிப்புச் செய்து விட்டு, அவற்றின் இடங்களை இந்தச் சூடாமணி பிடித்துக்கொண்டதை இப்பாடலால் அறியலாம்: . o 尊 அகராதி நிகண்டு

பெயர்க் காரணம்

இந்தக்காலத்தில் சொற்பொருள் கூறும்(டிக்ஷனரி) நூலை அகராதி என வழங்குகிருேம் நாம். அகராதி என்னும் இந்தச் சொல்லை முதல்முதல் அறிமுகப் படுத்தியது இந்த அகராதி நிகண்டுதான். சொற் பொருள் கூறும் நூலை மக்கள் பண்டைக் காலத்தில் 'உரிச்சொல் என்னும் பெயரால் அழைத்தார்கள் : இடைக்காலத்தில் நிகண்டு’ என்னும் பெயரால் அழைத்தார்கள் ; இக்காலத்தில் அகராதி என்னும் பெயரால் அழைக்கின்ருர்கள். அகராதி, நிகண்டு என்னும் இரண்டு பெயர்களையும் இணைத்துக்கொண்டு இந்த அகராதி நிகணடு காட்சியளிப்பது ஒரு புதுமையே..! அதாவது, தமிழ் அகராதிக் கலை (Tamil Lexicography) வளர்ச்சியில் இது ஒரு புதுத் திருப்பமே யாகும். திருப்பம் எப்படி என்று பார்ப்போம் :

இதுவரையும் சொற்பொருள் விளக்க எழுந்த நூல்கள் யாவும் அ, ஆ என்ற அகர வரிசையில் ஆசிரியர்களால் அமைக்கப்படவில்லை. உலகிலேயே முதன் முதலாக இந்த அகராதி நிகண்டே அ, ஆ என்ற வரிசையில் ஆசிரியரால் சொற்கள் நிரல் செய்யப்பட்டு இயற்றப்பட்டது. அதல்ை அகராதி நிகண்டு என்னும் சிறப்புப்பெயரும் பெற்றது. இக்காலத்தில் டிக்ஷனரியை (Dictionary) அகராதி என்று அழைக்கக் கற்றுக் கொடுத்ததே இந் நிகண்டுதான். எனவே, இது ஒரு 276

புதுத்திருப்பந்தானே ! இந்நூலுக்குப் பிறகே மேலை காட்டில் அகர வரிசையில் அகராதிகள் தோன்றின என்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது.

வேறு பெயர்கள்

இரேவண சித்தரால் சூத்திர (நூற்பா) கடையில் எழுதப்பட்ட நூலாதலின் அகராதி நிகண்டிற்கு, 'இரேவண சூத்திரம் என்ற பெயரும் உண்டு. இந்நூல் சூத்திர கடையில் அமைக்கப்பட்ட அகராதியாதலின் இதற்குச் சூத்திர வகராதி என வேறு ஒரு பெயரும் உண்டு.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் இரேவண சித்தர் எனப்படுபவர். இவர் புலியூர்ச் சிதம்பர ரேவன சித்தர் என நீளமாகவும் அழைக்கப்படுகிருர், புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) வழிபட்ட ஊராதலின் சிதம்பரத்திற்குப் புலியூர் என்ற பெயரும் உண்டு. எனவே, ஆசிரியரது ஊர் சிதம்பரம் என்பது புலனுகும். இவர் சைவ வேளாள மரபினர் எனவும், வீரசைவச் சமயத்தினர் எனவும் சொல்லப்படுகிருர் ஆசிரியர் பல பாக்களில் பட்டி சுரரைத் தொழு திருப்பதால், திருப்பட்டிசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனைக் குலதெய்வமாகக் கொண் டவர் என்பது புலப்படும்.

அகராதி நிகண்டேயன்றி, திருப்பட்டீசுரப் புராணம், திருவலஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் ஆகிய புராண நூற்களும் ஆசிரியர் இயற்றி யுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் முதல் அகராதி முறையில் நிகண்டு இயற்றிய திறனென்றே, 277

ஆசிரியரின் அறிவு நுட்பத்திற்கும் புலமையின் தலைமைக்கும் போதிய சான் ருகும்.

காலம்

ஆசிரியர் இரேவண சித்தர் அகராதி நிகண்டின் பாயிரத்தில், சகாத்தம் 1516- ஆம் ஆண்டில் இந்: நிகண்டைத் தாம் இயற்றியதாகக் கூறியுள்ளார் :

' அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்னுாற்று

ஒருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில்...... * * * * * * * * * * * * * * * * * * * * > . . . அகராதி நிகண்டென

ஒதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே.”

என்பது அப்பாயிரப் பாடற் பகுதி. சக ஆண்டுடன் 78 ஆண்டுகள் கூட்டிக் கொண்டால் கி. பி. ஆண்டு கிடைக்கும். எனவே, சக ஆண்டு 1516 என்ருல், கி.பி. 1594-ஆம் ஆண்டில் அகராதி நிகண்டு இயற்றப் பட்டது என்பது தெளிவு. ஆகவே, ஆசிரியரின் காலம் பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது வரைக் கும் உறுதி. மேலும் அவர் அகராதி நிகண்டு இயற்றிய பின்னும் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்க் திருக்கலாம்.

நூல் அமைப்பு

திவாகரத்தில் உள்ள பன்னிரு தொகுதிகளும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன அல்லவா ? அம் மூன்றனுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி'என்னும் பிரிவைச் சார்ந்ததே அகராதி நிகண்டு. அதாவது திவாகரம், சூடாமணி ஆகிய நிகண்டுகளிலுள்ள பதினேராவது 278

தொகுதி யொன்றுமட்டுமே அகராதி நிகண்டாக விரிந்துள்ளது. ஆனல் அமைப்பில் அவற்றினும் இது வேறுபட்ட தாகும்.

இந்நிகண்டு நூற்பா (சூத்திர) யாப்பினலானது. இந்நூலினைப் பத்துத் தொகுதியாகப் பிரித்து, மொத்தம் 3368 நூற்பாக்கள் எழுதியிருப்பதாக ஆசிரியர் பாயிரத்தில் கூறியுள்ளார். ஆனல் அச் சிட்டநூலின் இறுதியில் 3334 பாக்கள் என்று தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இடையிடையே 34 பாக்கள் எப்படியோ விடுபட்டுப் போயின.

அகர வரிசையை யொட்டி இந்நூல் பத்துத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ ைவ ...tl. IITG).JGöT :

அகராதிப் பேர்த் தொகுதி ககராதிப் பேர்த் தொகுதி சகராதிப் பேர்த் தொகுதி ஞகராதிப் பேர்த் தொகுதி தகராதிப் பேர்த் தொகுதி

நகராதிப் பேர்த் தொகுதி பகராதிப் பேர்த் தொகுதி

மகராதிப் பேர்த் தொகுதி யகராதிப் பேர்த் தொகுதி வகராதிப் பேர்த் தொகுதி

1

'அ' தொடங்கி 'ஒள' வரையும் உள்ள உயிர் எழுத்துக்களை முதலிலே உடைய சொற்களெல்லாம் அகராதிப் பேர்த் தொகுதியிலும், 'க: தொடங்கி கெள வரையும் உள்ள எழுத்துக்களை முதலிலே 279

த் தொகுதியிலும், இவைபோலவே மற்ற மற்ற ற்களெல்லாம் மற்ற மற்ற தொகுதிகளிலும் .க்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன.

§: சொற்களெல்லாம் ககராதிப் (ககர இனம்)

இந்நூலில் பல வகையான சொற்கள் இடம் பெற் ஸ்ளன ; அதாவது, பிற நிகண்டுகளில் உள்ள சொற். ளாடு, சங்க இலக்கியங்களிலும் அவற்றின் உரை ளிலும் உள்ள அருஞ் சொற்களும், பிற்காலத் மிழிலக்கியங்களிலுள்ள சொற்களும், உலக வழக்குச் சாற்களும், வடமொழி - தெலுங்கு - கன்னடம் முதலியவற்றினின்றும் திரிந்து வந்த சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் இடம் பெற்றுள்ள சொற்களெல்லாம் அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது உண்மையாயினும், சொற்களின் முதல் எழுத்தைப் பொறுத்துமட்டுமே அகரவரிசை பின்பற்றப்பட்டிருக் கிறது ; இக்கால அகராதிகளில் உள்ளாங்கு சொற். களின் இரண்டாவது - மூன்ருவது - கான்காவது எழுத்துக்களையும் பொறுத்து அகரவரிசை அமைக்கப் படவில்லை. என்ருலும், "சும்மா கிடந்த பிள்ளையாருக்கு ஒரு பொங்கல் சோறு போதாதா” என்னும் பழமொழியே போல, அகராதி முறையே தோன்ருதிருந்த காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமாவது சொற்கள் அகர வரிசைப் படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கதும்

பாராட்டத் தக்கதுமாகுமன்ருே !

நூல்

ஆசிரியர் நூலின் தொடக்கத்தில் பிள்ளையார்மேல் இரண்டு காப்புப் பாடல்கள் பாடியுள்ளார். அவை 280

' சோதி விநாயகர் பாத மெனமுடி

வோதிய நாவினுர் நீதி யுளார்களே.”

' வெள்ளை வாரணப் பிள்ளையார் பதம்

உள்ளுவார் மனக் கள்ள மாறுமே.”

இவையன்றி, ஒவ்வொரு தொகுதியின் முன்ன இறைவனை வணங்கி இன்ன தொகுதியைச் செ கிறேன் என்று கூறியே தொடங்கியுள்ளார்.

இஃதிங்ங்ன மிருக்க, இந்நிகண்டின் ஒலை சுவடியில் நூலின் தொடக்கத்தில் பின்வரும் பாடல் காணப்படுகிறதாம் :

" தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந்

திருக்கிளர் குழைக்காதுங்

கான ருமலர்த் திருமுகச் சோதியுங்

கயிரவத் துவர் வாயும்

மோன மாகிய வடிவமு மார்பமு

முத்திசைத் திருக்கையும்

ஞான தேசிகன் சரணதா மரையுமென்

நயனம் விட் டகலாவே.'

இது திருமால் வணக்கப் பாடலாகும். அகராதி நிகண்டின் ஆசிரியர் இரேவண சித்தரோ சைவர். எனவே இப்பாடலை, ஏடு பெயர்த் தெழுதிய வைணவ ரொருவர் தம் வழிபடு கடவுளை வழிபட்டு வேலையைத் தொடங்குமுகத்தான் எழுதிச் சேர்த்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே, இரேவண சித்தர் பிள்ளையார் காப்பு மட்டுமே எழுதினர் என்பது தெளிவு.

பிள்ளையார் வணக்கத்தையடுத்து ஆசிரியரின் தற்சிறப்புப் பாயிரப் பாடல் அமைந்துள்ளது. அதில் 281

பற்கூறிய செய்திகள் பலவற்றையுங் காணலாம். }ப்பாடல் வருமாறு :

' உலகினர் பவமற மலைமகள் தவஞ்செயும் தேசுகொள் பட்டிச் சுரன்பதம் பணிந்து ஒலியெழு கடல்சூழ் உலகினிற் றெரிக்கும் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றுரைதரு சொற்கள் ஒருநான் கதனில் திரிசொலின் பேதம் இருவகை யதுதான் ஒருசொற் ருனே பலபொரு ளாகியும் பலசொற் ருனே ஒருபொருள் நிலவியும் வருமிதில் ஒருசொல் பலபொரு ளதனைத் தெரிதரு பிங்கலம் திவாகர முதலாய்ப் பரவிய நிகண்டு பலவெடுத் தாராய்த் ததிற்சில திரட்டி அகர முதலாய் மதித்தெழு வகார வர்க்கம் ஈருய் மொழிமுதல் எழுத்து நூற்ருெரு நாலடைவே மொழிதரு சூத்திர முதற்பதந் தோறும் வருபெய ராதிப் பொருளா யெடுத்தே ஒருபெயர் முதல் நாற்பத்தா றிருய் நிகழ்தர உரைக்கும் தொகைதனக் கிப்பெயர்

அடைவினில் அங்கங் கமர்ந்துள பேரும் இடையிடை யடைவிலங் கில்லாப் பேரும் மன்னு சூத்திர மூவாயிரத் துடனே முந்நூற் றறுபத் தெட்டெனுந் தொகையாய் வந்திடுந் தொகுதி ஈரைந்தென வகுத்தே அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்ஞாற் ருெருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில் ஐந்ததி காரம் அறுபத்து நாற்கலை உந்திய வறிவால் ஒருங்குட னுணர்ந்த நாற்கவி வாணர் நகைதர யானும் நூற்பா வதனுல் நுண்ணிய வறிவினில் ஆதரவால் அகராதி நிகண்டென ஒதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே. ” 282

இப்பாயிரப் பாடல் அகராதி நிகண்டைப் பற்; அறிந்து கொள்வதற்குரிய அகச் சான்ருய் அமை! துள்ளது. இப்பாடலினல் அறிந்து கொள்ளும் இன்று யமையாத செய்திகள் சிலவற்றை ஈண்டு மீண்டு தொகுத்துக் காண்பாம் :- இந்நூல் ஒரு சொல் ப பொருட் பெயர்ப் பிரிவைச் சார்ந்தது ; அகர முத வகரம் ஈருகப் பத்துத் தொகுதிகளை உடைய அகராதி முறையில் அமைந்தது நூற்பா நடையா ஆனது மொத்த நூற்பா 3868 : சொற்கட்கு ஒ பொருள் (அர்த்தம்) முதல் நாற்பத்தாறு பொருள்வரை கூறப்பட்டுள்ளன ; நூலின் பெயர் அகராதி நிகண்டு; நூல் எழுந்த காலம் சக ஆண்டு 1516 (கி. பி. 1594).

இவ்வளவு செய்திகளையும் உள்ளடக்கிக்கொண் டிருக்கும் இப்பாயிரம், அகராதி நிகண்டை ஆராய விரும்புவோர்க்கு அருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை.

இனி, சொற்பொருள் கூறும் நூற்பாக்கள் சில வற்றைக் காண்பாம். மற்ற நிகண்டுகளினும் இக் நிகண்டில் இன்னுெரு புதுமையும் உண்டு. அதாவது, ‘அ’ என்னும் எழுத்தை முதலில் உடைய சொற்களை முதலில் கிறுத்தியிருப்பதிலேயே மேலும் ஒரு புதுமை யைப் புகுத்தியுள்ளார் ஆசிரியர். அதாவது, ஒரே ஒரு பொருள் (அர்த்தம்) மட்டும் உடைய சொற்களை எல்லாவற்றிற்கும் முதலில் அமைத்துள்ளார் ; இந்தப் பகுதிக்கு 'அம் முதல் ஒரு பெயர்’ என்று தலைப்பு தரப்பட்டுள்ளது. 'அம் முதல் ஒரு பெயர் என்ருல், 'அ' என்னும் எழுத்தை முதலில் பெற்று ஒரே ஒரு பொருள் தரும் சொல் - என்று பொருளாம். இதற்கு 283

எடுத்துக் காட்டாக அகராதி நிகண்டிலிருந்து இரண்டு நூற்பாக்கள் வருமாறு :

(அம் முதல் ஒரு பெயர்) (1) அசன் என்பதுவே சங்கான் ஆகும்.”

(2) “ அம்பிகை என்பது உமையவள் பெயரே.”

அரன் என்னும் சொல்லுக்குச் சங்கரன் என்னும் ஒரு பொருள் உரியது. அம்பிகை என்னும் சொல்லுக்கு உமையவள் என்னும் ஒரு பொருள் உரியது. இப் படியாக ஒரு பொருள் உடைய எழுபத்திரண்டு சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றையடுத்து. இரண்டு பொருள்கள் மட்டும் உடைய சொற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு அம்முதல் இருபெயர்’ என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு நூற்பாக்கள் வருமாறு :

(அம் முதல் இரு பெயர்)

(73) “ அந்தரியே உமை துர்க்கை என்றிருபேர்.”

(74) ' அனந்தை தானேர் சத்தியும் பூமியும்.”

அந்தரி என்னும் சொல்லுக்கு உமை, துர்க்கை என்று இரு பொருளாம். அனந்தை என்னும் சொற்குச் சத்தி, பூமி என்று இரு பொருளாம். இப்படியாக இரு பொருள் உடைய அறுபத்து மூன்று சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து மூன்று பொருள்கள் மட்டும் உடைய சொற்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பகுதிக்கு அம்முதல் முப்பேர்’ எனத் தலைப்பு தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு நூற்பா வருமாறு :

18 284

(அம் முதல் முப்பேர்) (186) " அத்தன் என்பதுவே சிவனும் பிதாவும்

சுவாமியும் என்றே சொல்லு முப் பேரே...' அத்தன் என்னும் சொல்லுக்குச் சிவன், பிதா, சுவாமி என்று மூன்று பொருளாம். இப்படியாக இன்னும் அம் முதல் காற்பேர்’, ‘அம்முதல் ஐம்பேர் என மேலும் மேலும் அடுக்கி 'அம் முதல் காற்பத்தாறு பெயர் வரையும் ஆசிரியர் கூறிச் சென்றுளார். அரி' என்னும் சொல்லுக்கு நாற்பத்தாறு பொருள்கள் உள்ளனவாம். அது பற்றிய பா வருமாறு :

(அம் முதல் காற்பத்தாறு பெயர்) " அரியே: அரித்தலும், அருக்கனும், முராரியும்,

பரியும், சிங்கமும், பகையும், தேரையும், பொன்னும், காற்றும், பொன்னகர்க் கிறையும்,

செந்நெற் கதிரும், கிள்ளையும், காந்தியும், தேரும், ஐம்மையும், சேகும், வரியும்,

கூர்மையும், நிறமும், கூற்றும், வண்டும், வேயும், பன்றியும், விசியும், புகையும்,

பாயலும், சிலம்பின் பாலும், சோலையும், கண்ணினில் வரியும், கடலும், உரகமும்,

எண்ணிய திகிரியும், ஈர வாளும், தகரும், வலியும், அரிசியும், குரங்கும்,

புகரும், நெருப்பும், புரையும், சயனமும், எறிதரு பறையும், எண்படைக் கலமும்,

குறிதரு பச்சையும், கூறிய மதுவும், அரிதலும், எனப்பெயர் நாற்பத் தாறே.”

இது காறும் 'அ' என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் சில பற்றிய நூற்பாக்கள் காட்டப்பட்டன. இவ்வாறே ம ற் ற எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை அகராதி நிகண்டிற் காண்க உரிச்சொல் நிகண்டு

சூடாமணிக்கு அடுத்ததாக உரிச்சொல்ங்கண்டைச் சொல்லலாம். நிகண்டு என்பதைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் உரிச்சொல் என்ற பெயரே பயன்படுத்தப் பட்டது என முன்னரே கூறப்பட்டுள்ளது. எளிதில் விளங்காமல் அரிதிற் பொருள் விளங்கக்கூடியதும் செய்யுளுக்கு உரியதுமாகிய சொல்லுக்கு உரிச்சொல் என்று பெயராம். இத்தகு உரிச் சொற்களைப் பற்றிய நூலுக்கு உரிச்சொல் நிகண்டு என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

ஆசிரியர் வரலாறு

உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயன் என்னும் புலவர். இவர் தொண்டை காட்டிலுள்ள செங்கற்பட்டு என்னும் ஊரினர் என்று ஒரு சாராரும், கொங்கு நாட்டினர் என்று கொங்கு மண்டல சதக ஆசிரியரும் கூறுகின்றனர். இதுபோலவே, இவர் செங்குந்த மரபினர் என்று ஒரு சார் கருத்தும், வேளாள மரபினர் என்று ஒரு சார் கருத்தும் உள்ளன. மேலும் இவர் சைவ சமயத்தினர் என்றும் துறவி என்றும் சொல்லப்படுகின்ருர்,

இவர் சைவ சமயத்தினர் என்ற கருத்துமட்டும் உறுதியானது. காங்கேயன் என்பது முருகக் கடவு ளுடைய பெயர்களுள் ஒன்று. எனவே, அப்பெயரை -யுடைய இவர் சைவர் என்பது தெளிவு. மேலும், தெய்வப் பெயர்த் தொகுதியில் சிவன், பார்வதி, 286

விநாயகர், முருகன் ஆகிய சைவ சமயக் கடவுளரையே இவர் முதலில் கூறியிருப்பதாலும் இவர் சைவர் என்பது புலகுைம். மற்றும் இவர், முதல் செய்யுளில், திருமாலாலும் கான்முக லுைம் காண முடியாத சிவபெருமான் எனச் சிவனைப் புகழ்ந்துள்ளார் :

" திருமாலுஞ் செங்கமல மேயானுங் காணுப்

பெருமான் பிறைகுடும் பெம்மான்-அருள் மூர்த்தி நன்னெஞ்சி ன்ைமறையோன் தில்லை நடம்புரிவோன் என்னெஞ்சின் மேய இறை.”

என்பது செய்யுள். இதலுைம் ஆசிரியர் சைவரே என்பது உறுதி.

காலம்

காங்கேயன் பதின்ைகாம் நூற்ருண்டினர் எனச் சிலர் கூறுகின்றனர்; இது பொருத்தமாகப் புலப்பட வில்லை. பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் இவர் வாழ்ந்தார் எனவும், கி.பி. 1600-ஆம் ஆண்டு வாக்கில் உரிச்சொல் நிகண்டு இயற்றப்பட்டது எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஏறக்குறைய இக்கருத்து. பொருத்தமானதாகத் தோன்றுகிறது. பதினெட்டாம் நூற்ருண்டில் அரும்பொருள் விளக்க நிகண்டு. இயற்றிய அரு மருந்தைய தேசிகர், தமது நூலின் பாயிரப் பகுதியில், பதினரும் நூற்ருண்டில் சூடாமணி நிகண்டு இயற்றியவராகக் கருதப்படும் வீரை(மண்டல. புருடர்) மண்டலவருக்கு அடுத்த இடம் காங்கேய னுக்கு அளித்துள்ளார்: 287

' மாவியல் சிறக்கும் விரை

மண்டலவன் காங்கேயன் ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகரன் இவராற் சொற்ற...” என்பது அரும்பொருள் விளக்க நிகண்டுப் பாடற்பகுதி. எனவே, பதினரும் நூற்றண்டினரெனக் கருதப்படும் மண்டல புருடர்க்கும், பதினெட்டாம் நூற்ருண்டின ரெனக் கருதப்படும் அரு மருந்தைய தேசிகருக்கும் இடைப்பட்டவராகக் காங்கேயனைக் கொண்டு, உரிச் சொல் நிகண்டின் காலம் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதி என முடிவு கட்டுதல் ஒரு சார் பொருத்த முடைத்து.

நூலின் அமைப்பு இந் நிகண்டு வெண்பாவால் ஆனது. நினைவில் இருத்துதற்கு வெண்பா ஏற்றது - எளியது. ஒரு முறை படித்தாலேயே வெண்பா மனப்பாடமாகிவிடும் என்று சொல்லுவது வழக்கம். அதனல் ஆசிரியர் வெண்பாவைத் தேர்ந்தெடுத்தாராம்.

இந்நிகண்டு திவாகரம்போல் பன்னிரண்டு தொகுதிகள் உடையதாம். அவற்றில் மொத்தம் 287 வெண்பாக்கள் உள்ளனவாம். சில ஓலைச் சுவடிகளில் பன்னிரண்டு தொகுதிகள் 287 பாடல்களுடன் காணப் படுகின்றன. ஆனால், வேறு சில சுவடிகளில் ஒலி பற்றிய பெயர்த் தொகுதியும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியும் ஆகிய இரண்டும் நீங்கலாக மற்ற பத்துத் தொகுதிகளே 220 பாடல்களுடன் காணப்படுகின்றன. பன்னிரண்டு .ெ தா. கு தி க ள் என்னும் கொள்கையினர், ஒலி பற்றிய பெயர்த் தொகுதியும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் 288

தொகுதியும் பிற்காலத்தவரால் போற்றிக் கற்கப் படாமையால் வழக்கழிந்து போயின ; அதேைலயே சில சுவடிகளில் பத்துத் தொகுதிகளே காணப் படுகின்றன, எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பத்துத் தொகுதிகளே என்னும் கொள்கையினரோ, ‘ஆசிரியரால் பத்துத் தொகுதிகளே எழுதப்பட்டன . ஆனல், இங்கிகண்டும் திவாகரம் போல் பன்னிரண்டு தொகுதிகள் பெற்று முழுநிறைவு உடையதாகத் திகழ வேண்டும் என விரும்பி, பின் வந்த யாரோ, ஒலி பற்றிய பெயர் த் தொகுதியையும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியையும் புதிதாகப் புனைந்து சேர்த்திருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். -

இஃது இங்ங்னம் இருக்க, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருக்கும் சுவடியில், பன்னிரண்டாம் தொகுதியான பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி மட்டும் இல்லையாம் ; ஒலி பற்றிய பெயர்த் தொகுதி உட்பட மற்ற பதிைெரு தொகுதிகளும் உள்ளனவாம். இதிலிருந்து, முதலில் யாரோ ஒருவர் ஒலி பற்றிய பெயர்த் தொகுதியை எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் என்றும், பின்னர் வேருெருவர் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதியை எழுதிச் சேர்த் திருக்கவேண்டும் என்றும் உணர இடமிருக்கிறதுஎன ஒரு சார் கருத்தும் கூறப்படுகிறது.

அச்சுப் பதிப்புகள் உரிச்சொல் நிகண்டு முதன் முதலில் 1840-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் அரசாங்க அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப் பெற்றது. இதில் பத்துத் தொகுதிகளே உள்ளன. அடுத்து, 1858-இல், யாழ்ப்பாணம் 289

ரா. ரா. அருணசலம் சதாசிவம் பிள்ளையால் யாழ்ப் பாணத்தில் அச்சிடப்பட்டதாம். இதில் எத்தனைத் தொகுதிகள் உள்ளனவென்று தெரியவில்லை. பின்னர் 1890-இல் தமிழ்ப் புலவர் சிவன் பிள்ளை அச்சேற்றினர். இதில் பன்னிரண்டு தொகுதிகளும் உள்ளன. அதன் பின்னர் 1905-இல் சுன்னுகம் அ. குமாரசாமிப் பிள்ளை பதிப்பித்தார். இதிலும் பன்னிரண்டு தொகுதிகளும்

உள்ளன.

இவற்றைக்கொண்டு ஆராயுங்கால், உண்மையில் உரிச்சொல் நிகண்டு பத்துத் தொகுதிகள் உடையதா அல்லது பன்னிரண்டு தொகுதிகள் உடையதா என அறுதியிடல் அரிய செயலெனத் தோன்றுகிறது. ஆனால், கொல்லம் ஆண்டு 950-இல் அதாவது கி.பி. 1775-ஆம் ஆண்டில் ஏடுபெயர்த்து எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிச்சொல் நிகண்டின் ஒரு பழைய பனை ஓலைச் சுவடியில் உள்ள ஒரு பாடல்: ‘பராக்கிரம பாண்டிய தேவன் என்பவன், உரிச்சொல் நிகண்டினைப் பத்துத்தொகுதியாக ஒழுங்குபடுத்தினன்’ எனக் கூறுகிறது.

" உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல்

தன்னை வைத்த மனத்து......... - - - - - - - - - பராக்கிரம பாண்டிய தேவன் கண்டீர் பத்துத் தொகுதியிற் சேர்த்தான் எவரும் படித்திடவே.” என்னும் பழம் பாடலைக் காண்க. இப்பாடலைக் கொண்டு, உரிச்சொல் நிகண்டு பத்துத் தொகுதிகள் மட்டும் உடையது எனச் சிலர் அறுதியிட்டுக் கூறு கின்றனர். ஆல்ை, 'காங்கேயன் சொன்ன உரிச் சொல் தன்னை...... பராக்கிரம பாண்டிய தேவன்...... 290

பத்துத் தொகுதியிற் சேர்த்தான்...' என்னும் இதே பாடல் பகுதியைக் கொண்டு, உரிச்சொல் நிகண்டு முதலில்பத்துக்கு மேற்பட்ட தொகுதிகள் உடையதாய் இருந்திருக்கவேண்டும் என்றும், அவற்றுள் கட்டாயம் தேவைப்படாத சில தொகுதிகளைக் குறைத்து, எவரும் எளிதில் - சுருங்கிய அளவில் படித்துப் பயன் பெறும்படிப் பத்துத் தொகுதிகளுடன் உரிச்சொல் நிகண்டைப் பராக்கிரம பாண்டிய தேவன் ஒழுங்கு செய்து அமைத்தான் என்றும் கருத்து எடுத்துக் கொள்ளவும் இடமிருப்பது போல் தோன்றுகிறதே!

புதுவைப் பதிப்பு

உரிச்சொல் நிகண்டின் பல பதிப்புக்களுள் முதலாவதான புதுச்சேரிப் பதிப்பைப் பற்றிச்சிறப்பாக ஒருசிறிது நோக்குவாம் : இஃது இந்த (1965-ஆம்) ஆண்டுக்கு நூற்றிருபத்தைந்து ஆண்டு காலத் துக்கு முன் - அதாவது கி. பி. 1840-ஆம் ஆண்டில், புதுவை குவெர்னமா(gouwernement) அச்சுக்கூடத்தில்அதாவது அரசாங்க (government) அச்சகத்தில், சிற்றம்பலம் என்னும் தமிழாசிரியர் எழுதிய உரை யுடன் அச்சிடப்பட்டது. உரிச்சொல் நிகண்டுரை என்பது நூற்பதிப்பின் தலைப்புப் பெயராகக் கொடுக்கப் பட்டுள்ளது. இப்பதிப்பின் முதல் பக்கத்திலுள்ள செய்தி அப்படியே வருமாறு :

உரிச் சொல் நிகண்டுரை


ooo----- கனம் பொருந்திய......தேசத்துப் பிராஞ்சுத்

தலங்களுக்கு......யதிகாரியாகிய 291

ழெனருல் சேங்சிமோ துரையவர்கள் துரைத்தனத்தில்

ஒற்தொனத்தே ராகிய த ல் மா ஸ் துரையவர்கள் அனுமதியில்

-سسا- OOO--------------

புதுவை மாநகரம் பிராஞ்சு......... கல்விச் சங்கத்து விசாரணைக் கருத்த ராகிய அண்ணுசாமி யையர் - கிருஷ்ணசாமி பிள்ளை இவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் அச்சங்கத்தை நாடத்துக் தலைவராகிய லே பெல்த்தியே துரையவர்கள் கட்டளைப்படி தமிழைக் கற்க விரும்புஞ் சிறுவர் முதல் யாவரும் அத் தமிழ் மொழிப் பொருளைத் தெளிவா யுணரக் காங்கேய விற்பனன் பத்துத் தொகுதியாக வகுத்துச் சொல்லிய வரிச்சொனிகண்டானது உச்சரிப்பானுங் கையெழுத் தானும் எழுத்தசை சீரடி தொடை சொற்பொருள் பிறழ்ந்தனவற்றை வழுவற வாராய்ந்து சுத்த பாட மாக்கி யதனையக் தீரச் செய்த நூதன வுரையுட னுலகி னிலை பெறும்படி

சிற்றம்பல பொத்தியாயரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. சமஸ்க்கிரத திராவிட வல்லவ ராகிய கொம்மித்தே பிரசிதாம் இராமசாமி சாஸ்த்திரியாராலும் மழவை மகாலிங்க கவிராச ரா லுங், கும்பினித் தமிழச்சுக் கூடத்திலிருக்கும் முத்துக் குமரப்ப வுடாத்தியாய ராலும் பரிசோதிக்கப்பட்டது.

— COQ---292

இரகூடிணிய ஆண்டு 1840-க்குச் சரியான விகாரி ஆண்டு

(மேல் உள்ளது பதிப்பின் முதல் பக்கத்தில் உள்ள செய்தி யாகும். இனி பதிப்பின் இறுதியில் உள்ள செய்தி வருமாறு :-) -

பத்தாவது ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி முற்றும்

o

ஆகத் தொகுதி பத்திற்கு வெண்பா - உளஉய (220):

முற்றிற்று

இஃது, புதுவை மாநகரம் - குவெற்னமா அச்சுக் கூடத்தில் அ.துத்தென் துரையவர்களால் 1840ஆம் ஆண்டில், பதிப்பிக்கப்பட்டது.

இதன் விலை - ரூபாய், தெ (3/4)

மேலுள்ளபடி கோக்கின், புதுவைப் பதிப்பில் பத்துத் தொகுதிகளே உள்ளன என்பது தெளிவு. மற்றும், தமிழர்கள் பலர் நிகண்டுகளைப் பற்றி அறியா திருக்கும்போது, பிரஞ்சுக்கார வெள்ளையர்கள் உரிச் சொல் நிகண்டுப் பதிப்பில் புகுந்து விளையாடியிருப்பது இங்கே குறிப்பிடத் தக்க செய்தியன் ருே ?

புதுவைப் பதிப்பின் முதல் பக்கத்துச் செய்தியாக மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்தை யமைத்து மழவை மகாலிங்கக் கவிராசர் என்பவர் ஒரு சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அது புதுவைப் பதிப்பில் நூலுக்கு முன்னல் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு : 293

象 漫 象 சிறப்புப் பாயிரம் நில மண்டில வாசிரியப்பா " திருவளர் மணிதிகழ் தெண்டிரைக் கடல்சூழ்

இருநில வலயத் தியற்றமிழ்ப் புலவர் தசநிகண் டறிவுறச் சாற்றினர் அவற்றுள் இசைகொள் காங்கேயன் இயம்பும் உரிச்சொல் நிகண்டிக் கால நிலவுதல் கண்டத் தொகுதி முற்றுந் தூக்கிப் பார்க்கச் சொற்பொருள் எழுத்தசைச் சோர்வுன சாது பற்பலர் பள்ளிப் பாடம் ஒதலி னதை நவையறத் திருத்தி நாவலர் மகிழ்பெறச் சுவைமலி உரையும் தோன்றச் செய்கெனச் சீர்திகழ் மர்க்கிதே சேங்சிமோ குவர்னேர் ஏர்பெறச் செங்கோல் இயற்றிடு நாளில் தகைகொள் ஒற்தொனத்தேர் தல்மாசு எனுந்துரை அகமகிழ் வுடனவர் அனுமதி பெற்றே அலகில் சீர் அண்ணு சாமி ஐயர் தலைமைசேர் கிருஷ்ண சாமி மகிபனிவ் விருவருங் கேட்க மிக்கெழிற் புதுவைப்பதித் தருமக் கல்வி தழைக்குஞ் சங்கத் தலைவரா யுவந்து சதிர்பெற நடாத்தும் சொலவரும் பெல்த் தியே துரைமகன் இனிதாய்க் கட்டளை யிடுமொழி கருத்துட் கொண்டு திட்டமொ டெவர்க்குத் தெளிவுறச் செய்தனன் வலங்கொள வோங்கு மயிலையங் கிரிமீது இலங்கயில் வேன்முரு சேர்பொன் மலரடி மனமுற வணங்கி வண்டமிழ் உணர்ந்துவிற் பனமுயர் பேர் அம்பலக் குரவன் செயு நற்றவத் துதித்தோ னதிகுல திலகன் சிற்றம் பலம்எனும் செந்தமிழ் வலனே.” இது மழவை மகாலிங்க கவியரசர் சொல்லியது.

O—--294

இப்பாடற் செய்தி குறி த் து ச் சிறி து நோக்குவாம் :

1840-ஆம் ஆண்டு புதுவையில் மர்க்கிதே சேங்சிமோ என்பவர் கவர்னராய் (குவர்னேர்)இருந்தார்; தல்மாசு என்பவர் ஒற்தொனத்தேர் (ordonnateur = Arranger) பதவி வகித்தார். லே பெல்த்தியே என்பவர் -¿Gö©ì¿¿Iso p3, 5%vol.7 Tiii(Director of Public Instruction) இருந்தார். அண்ணுசாமி ஐயர், கிருஷ்ணசாமி பிள்ளை ஆகியவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பு அலுவலாளர்களாய் இருந்தனர். சிற் றம் பல ம் என்பவர் ஆசிரியராயிருந்தார். துத்தென் என்னும் வெள்ளைத்துரை அரசினர் அச்சகத் த ல வ ரா யிருந்தார். உரிச்சொல் நிகண்டு அரசினர் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட் டிருந்தது.

இங்கிலையில், உரிச்சொல் நிகண்டுக்கு உரை எழுதும்படி அண்ணுசாமி ஐயரும் கிருஷ்ணசாமி பிள்ளையும் கேட்டுக்கொள்ள, லே பெல்த்தியே துரை கட்டளையிட, ஆசிரியர் சிற்றம்பலம் உரை எழுதினர் ; அவ்வுரை, தல்மாசு துரையின் ஒப்புதலுடன் அரசினர் அச்சகத்தில் துத்தென் துரையால் அச்சிடப்பெற்றது.

இதிலிருந்து காம் அறிவதாவது :- கம் காட் டிற்கு வெள்ளையர் வந்த பின்னும் - ஏன் - நூருண்டு களுக்கு முன்புங்கூட, வெள்ளையர் மேற்பார்வையில் கடந்த பள்ளிகளில் நிகண்டு பாடமாயிருந்திருக்கிறது; நாளடைவில் கைவிடப்பட்டது.

பாடலும் உரையும்

இனி, உரிச்சொல் நிகண்டுப் பாடலின் மாதிரிக் காகவும், சிற்றம்பல ஆசிரியரது உரையின் மாதிரிக் 295

காகவும், ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதியில் உள்ள முதல் பாடலையும் அதன் உரையையும் காண்பாம் :

(பாடல்) ' அரிபன்றி தேரைகிளி பச்சையளி சிங்கம்

பரிகவிபாம் பிந்திான்மால் கால்கூற் றிருசுடர்தீ கோவிறை திக்குக் கிரணஞ் சலங்குலிச பாவுரைகண் பர்சுவர்க்க மம்பு.’

உரை

அரி என்றது - பன்றி, தேரை, கிளி, பச்சை, வண்டு, சிங்கம், குதிரை, குரங்கு, பாம்பு, தேவேந்திரன், விஷ்ணு, காற்று, இயமன், சந்திரன், சூரியன், கெருப்பு - ஆக 16

கோ என்றது - இராசா, திக்கு, கிரணம், நீர்,

வச்சிராயுதம், கூப்பிடல், சொல், கண், பூமி, தெய்வலோகம், அம்பு - ஆக 11

மேலுள்ள பாடலானும் உரையானும், அரி” என்னும் சொல்லுக்குப் பதினறு பொருள்களும் 'கோ' என்னும் சொல்லுக்குப் பதினுெரு பொருள்களும் கூறப்பட்டுள்ளமை புலனுகும். ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தனை பொருள்கள் என உரையாசிரியர் இறுதியில் எண்ணிக்கையிட்டுக் காட்டியிருப்பது தெளிவுக்கு வழி செய்யும்.

பிரஞ்சுக்காரர்களின் ஆட்சி நிலைத்த பிறகும் அரசினர் பள்ளிகளில் உரிச்சொல் நிகண்டு கற்பிக்கப் பட்ட புதுச்சேரியில் இன்று ஒர் உரிச்சொல் நிகண்டு. நூல் தேடிக் கண்டுபிடிப்பது அரிதாகிவிட்டது. காலத்தின் கோலம் என்னே ! கயாதர நிகண்டு பெயர்க் காரணம்

கயாதர நிகண்டும் அக்காலத்தில் சிறந்த நிகண்டு களுள் ஒன்ருகப் பயிலப்பட்டு வந்தது. கயாதரர் என் லும் புலவரால் இயற்றப்பட்டதால் கயாதரம் எனப் பெயர் பெற்றது. ஆசிரியர் கெயாதரர் எனவும் பெயர் சொல்லப்படுவதால், நூலும் கெயாதரம் எனவும் சில ரால் அழைக்கப்படுகிறது. மற்றும் ஆசிரியர் கயா கரன் என்றும் சிலரால் அழைக்கப்படுவதால், நூலுக் கும் கயாகரம் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. அதாவது,

(1) மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்' என்னும் இதழில் கயாகர நிகண்டு எனத் தலைப்பு குறிப்பிடப் பட்டுள்ளது; ஆல்ை அத்தலைப்பின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்யுட்களில் கெயாதரம் என்றுள்ளது. - -

(2) வேதகிரி முதலியார் வெளியிட்ட இலக்கியக் களஞ்சியம் என்னும் நூலில் கயாகர நிகண்டு என உள்ளது.

(3) மாறனலங்காரம் என்னும் அணியிலக்கண நூலின் உரையில் கயாகரநிகண்டு எனச் சுட்டப் பட்டுள்ளது.

(4) ஆண்டிப் புலவரியற்றிய ஆசிரிய நிகண்டின் பாயிரத்தில், -

முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திாட்டி’ எனக் கயாகரம் என்றே உள்ளது. 297

(5) அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும் பொருள் விளக்க நிகண்டுப் பாயிரத்தில்,

' ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகரன் இவராற் சொற்ற”

என ஆசிரியர் கயாகரன் என்றே சுட்டப்பட்டுள்ளார். ஆல்ை, அரும்பொருள் விளக்க நிகண்டின் வேறு ஒர் ஒலைச்சுவடியில் கயாதரன் என்றுள்ளது.

(6) கயாதர நிகண்டின் ஒலைச் சுவடிகளிலும் கயாகரம் எனவும் கயாதரம் எனவும் இரண்டு நிலை களும் மாறி மாறிக் காணப்படுகின்றன. ஆசிரியர் பெயரோ கெயாதரன் எனக் காணப்படுகிறது.

இந்த நிலையில் எந்தப் பெயரை உறுதியாகக் கொள்வது? கை என்ருல் சொல், ஆகரம் என்ருல் இருப்பிடம்; எனவே, கையாகரர் என்ருல் சொற்கு இருப்பிடமானவர்-சொல்லின் செல்வர் என்பது பொருள்; எனவே, கையாகரரால் இயற்றப்பட்டது கயாகரம் ஆகும் என்பது ஒரு சாரார் கொள்கை. வட மொழி இலக்கணப்படி இந்தப் பொருளமைப்பு பொருங் தாது என்பது இன்னுெரு சாரார் கொள்கை.

சொற்பொருள் எதுவாயினும், கயாதரம் என்ற பெயரே கயாகரம் என்றும் கெயாதரம் என்றும் மாற்றி வழங்கப்பட்டிருக்கவேண்டும். கயாதரம் என்னும் சொல்லின் இடையிலுள்ள 'த' என்னும் எழுத்தின் வால்போன்ற கீழ் வளைவுக்கோடு சில ஓலைச் சுவடி களில் சரியாகப் பதிவு விழாமலோ அல்லது விழுந்தும் 298

தேய்ந்தோ போனதால் 'க' என்னும் எழுத்துப்போல் படிப்பவர் கண்கட்குத் தெரிந்திருக்கலாம்; எனவே அவர்கள் கயாகரம் எனப் படித்ததோடன்றி, ஏடு பெயர்த்து எழுதியபோதும் கயாகரம் என்றே எழுதி விட்டிருக்கவேண்டும். இந்தக் கருத்தே பொருத்த மானதாகப் புலப்படுகிறது. இதற்கு மாருக, கயாகரம் என்னும் பெயரே கயாதரம் என மாறிற்று என்று சொல்ல முடியாது. க என்னும் எழுத்து 'த' என்னும் எழுத்தாக ஒலைச்சுவடியில் கோடு நீண்டு மாறுவது இயற்கைக்கு முரணுனது.

மற்றும், கயாதரம் என்னும் பெயரை மக்கள் சிலர் பேச்சு வழக்கில் கெயாதரம் என நீட்டி நெளித்துப் பேசியிருக்கவேண்டும். கந்தகம் கெந்தகம் எனவும், கஜமுகன் கெஜமுகன் எனவும், கங்காதரன் கெங்கா தரன் எனவும் சொல்லப்படுவதைப் போல, கயாதரமும் கெயாதரம் எனச் சிலரால் சொல்லப்பட்டு, பின்னர் அவ்வாறே எழுதப்பட்டும் இருக்கவேண்டும். பேச்சு நடைக்கு ஏற்பவே எழுத்து நடையும் அமையும் என்பது இக்கால மொழியியலாரின் (கிரீனிங் (Greening என் னும் ஆசிரியரது) கொள்கையன்ருே? இக்காலக் கொள்கை என்றென்ன..! செந்தமிழும் காப் பழக்கம் என அன்றே ஒளவையார் அறிவித்துள்ளார் அல்லவா? எனவே, கயாதரம் என்பதையே நூலின் பெயராகக் கொள்ளலாம்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் கயாதரர், தேவை எனப்படும் இராமே சுரம் என்னும் ஊரினர்; சோமேசர் என்பவரின் மகன்; சைவர்; அந்தணர்; தமிழ், வடமொழி இரண்டிலும் 299

வல்லவர்; அரும்பொருள் அந்தாதி, இராமீசுரக்கோவை என்னும் வேறு நூல்களும் இயற்றியவர். இந்தச் செய்திகள், கயாதர நிகண்டின் முகப்பில் ஆசிரியரே பாடியுள்ள,

“ ஆரண நான்கும் பரவமும் மூர்த்திக ளாகிநின்ற

காரணன் பாகங் கலந்துல கீன் றருள் கன்னி பெற்ற பூரணன் பாரதப் போர்வட மேருப் பொருப்பில் வைத்த வாரணன் வாரணப் போரில் வென்ருேன் என்

வழித்துணையே.” பேதையர் பித்தர் அறியாத பாலர் சொற் பேதங்கொள்ளார் ஒதினுங் குற்றந் தெரியார் பெரியவர் ஓங்கிடப கேதனன் பற்று மறவாத தேவைக் கெயாதரன் தொல் வேதியன் சொற்ற உரிச்சொற் பனுவலு மேம்படுமே .'

&

&

g

வளர்ந்த முதனூல் வழிநூல் வழிச்சென்று மற்றவையும் அளந்து சிறியோர் அறியும்படி பெரியோ ரருளால் தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லைத் தமிழ்ப் படுத்தான் கிளர்ந்த பெரும்புகழ்ச் சோமீசன் தேவைக் கெயாதரனே.” “ வடக்குங் குமக்கொங்கை மங்கைதன் பங்கன் மலரடிக்கிழ்க் கிடக்குந் தனிநெஞ் சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் குடக்குங் குணக்கும் வடக்குந் தென்பாலுங் குவலயத்து நடக்கும் படியாக் கெயாதரம் என்று பேர் நாட்டினனே.” என்னும் பாயிரப் பாடல்களாலும், கயாதரத்தில் மக் கட் பெயரியல் என்னும் மூன்ரும் தொகுதியின் இறுதியில் உள்ள,

' வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலைதேர்

ஆரிய நாடன் தமிழ்நாடன் தேவை யதி.ப னென்னும் ஓரியல் பான குணத்தான் கெயாதரத் துள்ளமைத்தான் பேரியல் பாலொரு மூன்ருவது மக்கட் பேரியலே.”

என்னும் பாடலானும், விலங்கின் பெயரியலிலுள்ள,

j9 300

' தீட்டு மறைபயில் நாவினன் என்றுஞ் செழுந்தமிழ் நூல்

கேட்ட செவியினன் கேளா வறிவன் கெயாதரத்துள் ஈட்டிய சொற்பொருள் எல்லாந் தொகுத்தி ரிரண்டாவது காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டு கொள் ளே

என்னும் பாடலானும், மரப்பெயரியலிலுள்ள,

' காசிய கோத்திரம் வாழவந்தோன் தென் கலைத்தமிழ்தேர்

மாசில் பெருந்தகை மாரு வறிவன் மலாயனுங் கேசவனும் புகழ் தேவைநன் னுடன் கெயாதரத்துப் பேசி யமைத்தனன் ஐந்தாவது மரப் பேரியலே.”

என்னும் பாடலானும், பல்பொருட் பெயரியலிலுள்ள,

" நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே

நாடு மவர்க்கு நலந்தரு மாறு நயத்தொ டென்றுங் கேடும் பெருக்கமும் இல்லாத தேவைக் கெயாதரன் சீர் பாடுந் தமிழில் ஆருவது பல்பொருட் பேரியலே.”

என்னும் பாடலானும், ஒலி பற்றிய பெயரியலிலுள்ள,

" மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டிந்த மேதினியோர் தாவும் வினைகெடச் சாற்றிய கோன்தமிழ்த் தேவை மன்னும் கோவை யிராமீ சுரக்கோவை சொன்ன குருபரன் மற் ருேவுத லின்றி யமைத்தான் பத்தாவது ஒலியியலே.”

என்னும் பாடலானும், பிறவற்ருனும் அறியப்படும்.

காலம்

ஆசிரியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே குழப்பமே காணப்படுகிறது. பதின்ைகாம் நூற்ருண் டிலிருந்து பதினேழாம் நூற்ருண்டுவரை அங்கும் இங்குமாகக் கயாதரரின் காலம் பந்தாடப்படுகிறது. எது எப்படி யிருந்தபோதிலும், பதினெட்டாம் நூற் 301

ருண்டினராகக் கருதப்படும் அருமருந்தைய தேசிகர் தமது அரும்பொருள் விளக்க நிகண்டில் கயாதரரைக் குறிப்பிட்டுள்ளதால், பதினெட்டாம் நூற்ருண்டுக்கு முற்பட்டவர் கயாதரர் என்பதுமட்டுமாவது உறுதி.

நூலின் அமைப்பு

கயாதர நிகண்டில் பின்வருமாறு பதினுெரு இயல்கள் உள்ளன:

(1) தெய்வப் பெயரியல் (2) இடப் பெயரியல் (3) மக்கட் பெயரியல்

(4) விலங்கின் பெயரியல் (5) மரப் பெயரியல்

(6) பல்பொருட் பெயரியல் (7) செயற்கை வடிவிற் பெயரியல் (8) பண்புப் பெயரியல் (9) செயல் பற்றிய பெயரியல் (10) ஒலிபற்றிய பெயரியல் (11) ஒருசொல் பல் பொருளியல்.

திவாகரம், சூடாமணி, உரிச்சொல் நிகண்டு ஆகிய நிகண்டுகளில் உட்பிரிவுகள் தொகுதி எனக் குறிப் பிடப்பட்டுள்ளன. பிங்கல நிகண்டிலோ வகை எனக் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனல் கயாதரத்திலோ ஒவ்வொரு பிரிவும் இயல்' எனக் குறிக்கப்பட்டிருப்பது காண்க. 302

கயாதர நிகண்டின் சில ஓலைச் சுவடிகளில் ஒரு சொல் பல் பொருளியல் என்னும் பதினேராவது இயல் காணப்படவில்லையாம். இதைக் கொண்டு, பதினே. ராவது இயல் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப் பட்டது எனச் சிலர் எளிதில் கூறக் கூடும். இது பொருந்தாது. பதினே ரியல்களும் அமைந்துள்ள ஒலைச் சுவடியில் பதினேராம் இயலின் இறுதியில் பின் வரும் பாடல் உள்ளது :

' அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையைத்

தரும்பொருள் செய்த பரம்பரை யான்றினம் தண்டமிழோர் விரும்பிய கோவை யுரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான் பெரும்பொருள் கண்ட கெயாதரன் தேவைப்

பெருந்தகையே.”

பதினேராவது தொகுதியும் கயாதரத்தில் உண்டு என்பது இப்பாடலாற் புலனுகும். இதற்கு மற்றும் ஒரு சான்று உண்டு. அருமருந்தைய தேசிகர் இயற் றிய அரும்பொருள் விளக்க நிகண்டானது, ஒரு சொல்லுக்குப் பல பொருள் கூறுகின்ற பதினேராவது தொகுதியைப் பற்றியது மட்டுமே யாகும். மண்டல புருடர், காங்கேயன், இரேவணசித்தர், கயாதரர் ஆகியோர் ஒரு சொல் பல்பொருளாகக் கூறியிருப் பனவற்றைத் தொகுத்து அரும்பொருள் விளக்கம் என் னும் நூலாக உருவாக்கியதாக அதன் ஆசிரியர் பாயிரப் பாடலில் கூறியுள்ளார் :

' மாவியல் சிறக்கும் வீரை

மண்டலவன் காங்கேயன் ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகான் இவராற் சொற்ற 303

பாவியல் நூற்கூறு ஓர் சொல்

பல்பொருள் தொகையெலாம் சேர்த்து

ஒவிலா வனஞ் சிறப்ப

ஒரு பெரு நூல தாக”

என்பது அப்பாடல். இதிலிருந்து, ஒரு சொல் பல்

பொருள் கூறும் பதினேராவது இயலும் கயாதரத்தில் உண்டு என்பது தெளிவு.

கயாதரத்தில் மொத்தம் 566 பாடல்கள் உள்ளன. முதல் பத்து இயல்களிலும் 10,500 சொற்களும் பதினேராவது இயலில் 850 சொற்களும் பேசப்பட் டுள்ளன.

கயாதரப் பாடல்கள் கட்டளைக் கலித்துறை என் லும் பாவினத்தைச் சேர்ந்தவையாகும். இது, கெட்டுரு செய்து நினைவில் இருத்துதற்கு மிகவும் ஏற்றதாகும். மேலும், இந்நூல் அந்தாதித் தொடையில் அமைக் திருப்பது, பாடல்களை மீண்டும் நினைவிலிருந்து வருவித்தலுக்கு மிகவும் உதவி செய்யும். அந்தாதித் தொடையாவது, ஒரு பாட்டின் அந்தத்தில் (இறுதி யில்) உள்ள ஒர் எழுத்தோ அல்லது ஓர் அசையோ அல்லது ஒரு சொல்லோ அடுத்த பாட்டின் ஆதியில் (முதலில்) அமையும்படித் தொடுத்துப் பாடுவதாகும். ஒரு பாட்டை ஒப்பித்ததும் அதன் இறுதிப் பகுதியின் துணைகொண்டு அடுத்த பாட்டைத் தொடங்கி ஒப்பிப் பதற்கு அந்தாதி முறை மிகவும் உதவுமன்ருே ? இம் முறையில் நோக்குங்கால், சூடாமணி நிகண்டைவிடக் கயாதர நிகண்டு நினைவில் இருத்துதற்கும் (Retention) மீண்டும் வருவித்தலுக்கும் (Recal) மிகவும் ஏற்ற தென்பது புலனுகும். 304

கயாதரப் பாடல்களின் மாதிரிக்காகவும், அதே நேரத்தில் அந்தாதித் தொடையின் எடுத்துக் காட்டுக் காகவும் சில பாடல்கள் காண்பாம். தெய்வப் பெய ரியலின் தொடக்கத்தில் சிவன் பெயர்களைக் கூறும் இரண்டு பாடல்கள் வருமாறு :

  • ஆதி யணுதி அரன் சிவன் ஈசன னந்த னத்தன்

சோதி பிளுகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் பாதி உமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் பூதி புனை பாண்ட ரங்கன் பரமன் புராந்தகனே.”

" தக்கன் மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு தித்தன் இக்கன் படவிழித்தோன் காலகாலன் இறை அமலன் முக்கண் முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன் நக்கன் சடையோன் விடையூர்தி நாகா பாண னென்னே.”

மேலுள்ள இரு பாடல்களுள் முதல் பாட்டின் இறுதியில் (அந்தத்தில்) தகன்’ என்னும் அசை உள்ளது. அதனேடொத்த தக்கன் என்னும் சொல் இரண்டாம் பாட்டின் முதலில் (ஆதியில்) உள்ளது.

மற்றும், பதினேராம் இயலாகிய ஒரு சொல் பல் பொருளியலிலிருந்து இரு பாடல்கள் வருமாறு :

' அரிகடல் மால் பன்றி ஆயுதம் பச்சை அளி அருக்கன் எரிபுகை கிண்கிணி பெய் பரல் ஐம்மை யமன் கிளி கண் வரி வலி இந்திரன் மாருதம் நேமி மடங்கல் மது பரி பகை செந்நெற் கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே.”

பொன்னேர் இரும்பு சுசர் குரு மாடை பொலிவு திரு என்; ஏர் அழகு முழு பெற்றமும்; எல் ஒளி பகலாம்; தென்னே வனப்பும் இசை பாடலும் தென்றிசையும் என்ப; கொன் னே பெருமை பயனிலி அச்சம் கொளும் பொழுதே' 305

மேலுள்ள இரு பாடல்களுள் முதல் பாடலில் அரி என்னும் சொல்லுக்கும், இரண்டாம் பாடலில் பொன், ஏர், எல், தென், கொன் ஆகிய சொற்கட்கும் உரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. மற்றும், முதல் பாட லின் இறுதியில் உள்ள பொன்’ என்னும் சொல்லே அடுத்த பாடலின் தொடக்கத்தில் அக்தாதித் தொடை யாய் அமைக்கப்பட்டிருப்பது காண்க. இப்படியாக, மற்ற நிகண்டுகளினும் கயாதரம் அமைப்பில் புதுமை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாம்.

கயாதரத்தின் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் ஆசிரியர் தம் பெயர், வரலாறு, இயலின் பெயர் ஆகியவை கூறியிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. பல் பொருள் சூளாமணி நிகண்டு

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு மக்களிடையே மிகவும் பரவிய பின், நிகண்டு நூல் களைச் சூளாமணி என்னும் பெயரால் அழைக்கும் மரபு தோன்றிவிட்டது என்பது, பல் பொருள் சூளாமணி என்னும் இப்பெயரிலிருந்து தெரியவரும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் ஈசுர பாரதியார். இவர் கெல்லை மாவட் டத்தினர்; மடசை என்னும் ஊரினர்; சிதம்பரபாரதி என்பாரின் குமாரர், சைவ சமயத்தினர்; திருநெல் வேலிச் சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டவர். ஆசிரியர் இங்கிகண்டினைக் கொல்லம் 876-ஆம் ஆண் டில் - அதாவது கி. பி. 1700-ஆம் ஆண்டில் இயற்றி முடித்தார்; எனவே, இவரது காலம் பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியும் பதினெட்டாம் நூற்ருண் டின் முற்பகுதியுமாகும். இவ்வளவு செய்திகளையும் ஆசிரியரே பாடிய பல் பொருள் சூளாமணியின் பாயிர ச் செய்யுட்களால் அறியலாம். அவை வருமாறு :

' கொல்ல மெண்ணுற் றெழுபத்தா றெனக்கணிதப் பாவாணர்

குறித்த வாண்டின்

மல்குபுகழ் விக்கிரம வருடத் தாவணி மூல

வளஞ்சேர் நாளில்

நெல்லைநகர் வடிவுவந்த வேய்முத்தைப் பணிந்துலகில்

நெடுநாள் நிற்கப்

பல் பொருட்சூ ளாமணியை ஈசுரபா ரதி தமிழாற்

பாடி ேைன.” 307

" சிதம்பர பாரதிபாலன் புகழ்மடசை யுடையவளாந்

தேவி செம்பொற் பதம்பணிசெங் கைத்தலத்தான் ஈசுரபா ரதியெனுநூற்

பாவ லோனே.”

மேலுள்ள முதல் பாடலிலிருந்து, தமிழ் விக்கிரம ஆண்டு ஆவணித் திங்கள் மூலகாளில் (மூல நட்சத் திரத்தன்று) இங்கிகண்டு அரங்கேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

நூல் அமைப்பு

நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுக் குள் ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி ' என் னும் இரண்டாம் பிரிவையும், பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ரும் பிரிவையும் பற்றி மட்டும் இந்நூல் பேசுகிறது. ஆசிரியர் பின் வருமாறு மூன்று காண்டங்களாக நூலைப் பகுத்துக் கொண்டார்:

(1) ஒரு சொல் ஒரு பெயர்க் காண்டம் (2) ஒரு சொல் பல் பொருட் காண்டம் (3) பல் பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்க் காண்டம் இவற்றுள் முதல் காண்டத்தில், ஒரே பொருள் கூறும் 2800 சொற்கள் இடம் பெற்றுள்ளன; இரண் டாங் காண்டத்தில், பல பொருள் கூறும் 1465 சொற்க ளிடம்பெற்றுள்ளன. இவ்விரு காண்டங்களும் சொற்கட்குப் பொருள் கூறும் ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதி என்னும் பெரும் பிரிவைச் சார்க் தவை. மூன்ருங் காண்டமோ தொகைப் பெயர்களை விளக்குகிறது; இது பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் பெரும் பிரிவைச் சார்ந்தது. 308

அகராதி நிகண்டைப் போலவே இக்கிகண்டும் அகர வரிசையில் அமைந்துள்ளது; இதிலும் சொற் களின் முதலெழுத்து வரைக்குமே அகரவரிசை கவனிக்கப்பட் டிருக்கிறது. ஆயினும், அகராதி நிகண்டைவிட இந்நிகண்டு படிப்போர்க்கு எளிதில் பயனளிக்க வல்லது; எங்ங்ன மெனின்,- பொருள் கூறும் சொற்கள் அகராதி நிகண்டில் பத்துப் பிரிவு களில் பரவலாகக் கூறப்பட்டுள்ளன; இதிலோ இரண்டே பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. மேலும், அகராதி நிகண்டில் அம் முதல் இரு பெயர், அம் முதல் காற்பத்தாறு பெயர் என்ற சிக்கல் உள்ளது; இதில் அஃதில்லை. எனவே, பொருள் காணுவதற்காக ஒரு சொல்லைத் தேடி எடுக்க வேண்டுமாயின், அகராதி நிகண்டினும் பல்பொருள் சூளாமணி நிகண்டில் விரைவில் முடியும்.

இனி, பல்பொருள் சூ ள | ம ணி நிகண்டின் அமைப்பு முறையை விளக்கும் அகச் சான்ருக, ஆசிரியரே இயற்றியுள்ள பாயிரச் செய்யுட்களைப் பார்ப்போம் :

" தோன்றுகாண் டச்சடையான் தொல்சீர்சேர் நாமநூல்

மூன்றுகாண் டத்தால் மொழிகின்றேன்...”

" நாவுவந்த பல்பொருட் சூளாமணியைப் பாரில்

நாட்டியசீர் முதற்காண்ட மென்னும் பேர்தான்

பூவுவந்த ஒருபெயரோர் பொருளே யாகும்

போற்றிரண்டாங் காண்டம்பல் பொருளி னேர்சொல்

சேவுவந்த நெல்வேலிப் பெருமான் ஈன்ற

செவ்வேளின் திருவருளால் தேர்ந்து நான்சொல்

பாவுவந்த பெயர்மூன்ருங் காண்ட மாகும்

பலபெயர்க்கூட் டத்தொருபேர் பலவுத் தானே.” 309

மேலுள்ள பாடல்களால், இந்நூலின் மூன்று காண்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மற்ற நிகண்டுகளின் உட்பிரிவுகள் தொகுதி, வகை, வர்க் கம், இயல் முதலிய பெயர்களால் அழைக்கப்பட, இக் நிகண்டின் உட்பிரிவோ, காண்டம் என்னும் பெயரால் அழைக்கப்படுவது ஒரு புதுமையே 3.11

லுள்ள ஏழு பிரிவுகள், திவாகரத்தில் பதினேராவது: தொகுதியாக உள்ள ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதியின் வகைகளாகும். அதாவது, அந்த ஒரு தொகுதியையே கைலாச நிகண்டு ஏழு வகைகளாகப் பிரித்துக் கொண்டு செல்கிறது. மாதிரிக்காக, அந்த ஏழு வகைகளின் பெயர்கள் வருமாறு :

(1) ஓரெழுத் தொரு மொழி (2) ஒரெழுத் தொற் ருெருமொழி (3) ஈரெழுத் தொரு மொழி (4) ஈரெழுத் தொற் ருெருமொழி (5) மூவெழுத் தொரு மொழி (6) மூவெழுத் தொற் ருெருமொழி (7) காலெழுத் தொருமொழி.

இந்த ஏழனுள் முதலில் உள்ள ஓரெழுத் தொரு மொழி என்னும் பிரிவு மட்டும் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆ, ஈ, கா, மா என்பன போன்ற ஒரே எழுத்தாக உள்ள சொற்கள் மிகவும் குறைவு ஆதலாலும், வேறு எழுத்துக்கள் பின்னே தொடராமையால் எந்தச் சிக்கலும் இல்லாமையாலும் இந்த ஒரெழுத்துச் சொற்களை அகர வரிசைப்படுத்து தல் மிகவும் எளிது. அதனுல்தான், இந்தப் பிரிவை மட்டும் அகர வரிசைப்படுத்தி, மற்ற பிரிவுகளை யெல்லாம் ஆசிரியர் வாளா விட்டுவிட்டார் போலும். ஆயினும், ஒரு பிரிவிலாவது அகராதி உணர்வு தோன்றியிருப்பதுகுறித்துப் பாராட்டவேண்டியது. தான் !

கைலாச நிகண்டு சூடாமணி என நூற்பெயரின் இறுதியில் உள்ள சூடாமணி என்னும் சொல்லை. 312

கோக்கின், மண்டல புருடர் இயற்றிய சூடாமணி கிகண்டுக்கு இருந்த செல்வாக்கு புலப்படும். அப்பெயரைப் பின்வந்த நிகண்டுகளும் பெற்றுக் கொண்டதில் வியப்பில்லை.

இனி நூலின் மாதிரிக்காக, ஒரெழுத் தொற்ருெரு மொழி என்னும் பிரிவிலிருந்து மூன்று நூற்பாக்கள் வருமாறு :" ஓர் இடைச் சொல்லும் உரைக்குங் காலமும் பேசில் வறிதும் பெருமையுங் கொன்னே அச்சமும் ஆங்கதற் காகும் என்ப.” ' காற்றும் வழியும் காலும் பொழுதும்

கூற்றும் அளவையும் குவிதேர் உருளையும் காம்பும் தறியும் கண்ணென் உருபும் வான்கொடிப் படரு மரமும் புதல்வரும் சரிபுனல் ஓடைத் தாழ்ந்த வதியும் உரியதோர் இலக்கமும் உரைக்கும் காலே.'

அருக்கன் முதலா வாய்ந்த ஒன்பதும் வலியும் கொள்கையும் வல்லிடை யூறும் கொலையும் பிசினமும் கோளெனத் தகுமே.”

மேலுள்ள மூன்று நூற்பாக்களிலும் முறையே கொன், கால், கோள் என்னும் மூன்று சொற்கட்குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. கொ, கா, கோ என்னும் ஒரெழுத்துக்களை யடுத்து ன், ல், ள் என்னும் ஒற்றுக்கள் வந்து ள் ள ைம யி ன், இச்சொற்கள் ஒரெழுத்து ஒற்று ஒருமொழி என்னும் தொகுதியில்

சேர்க்கப்பட்டன. பாரதி தீபம்

பெயர்க் காரணம்

இந்த நிகண்டும் ஆசிரியர் பெயரைத் தொட்டுக் கொண்டே யுள்ளது. திருவேங்கட பாரதி என்பவரால் இயற்றப்பட்டதாதலின் பாரதி தீபம் என்னும் பெயர் பெற்றது. தீபம் என்ருல் விளக்கு. விளக்குபோல் இருந்து சொற்பெயர்ப் பொருள் விளக்கம் செய்தலின் நிகண்டுகளைத் தீபம் என அழைத்தல் மரபு.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் திருவேங்கட பாரதி என்பவர். இவருக்

குப் பரமானந்த பாரதி என்னும் வேறு பெயரும் உண் டாம். இவர் தென் கடம்பை என்னும் ஊரினர்; அந்த னர்; துறவி, கவி வல்லவர். பாரதி தீப நிகண்டின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் இத்தனையாவது தொகுதியாகிய இந்தத் தொகுதியை இன்னர் செய்தார் என்ற குறிப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, மூன்ரும் தொகுதியாகிய விலங்கின் பேர்த் தொகுதி யின் இறுதிப் பாடல் வருமாறு :

  • மீன்ருவு வாவிக் கடம்பையில் வாழ்திரு வேங்கடவன்

ஏன்ருதல் கூறுங் கவிவேந்தன் பாரதி யேற்றமலர்த்

தேன் ருழ் தொடைப்புயன் செப்பிய பாரதி தீபந்தன்னில்

மூன்ருவது விலங்கின் பேர்த் தொகுதி முடிந்ததுவே.”

இன்ன பிற பாடல்கள் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன. 314

காலம்

ஆசிரியரின் காலம் பதினேழாம் நூற்ருண்டு என் றும், பதினெட்டாம் நூற்ருண்டு என்றும் இருவித மாகச் சொல்லப்படுகிறது. பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினெட்டாம் நூற்ருண்டின் முற். பகுதியிலும் ஆசிரியர் வாழ்ந்திருக்கலாம் !

நூல் அமைப்பு கயாதரத்தைப் போலவே பாரதி தீபமும் கட்டளைக்

கலித்துறைப் பாடலால் ஆனது. ஆனல் அந்தாதித் தொடை இதில் இல்லை. இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உடையது. மொத்தம் 737 பாடல்கள் உள்ளன. முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 13,000 சொற்கள் இடம் பெற்றுள்ளனவாம். இந்நூலின் மாதிரிக்காக, முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியின் தொடக்கத்தில் சிவன் பெயர்களைக் கூறும் பாடல் வருமாறு:' அான் இறை வன்சிவன் சங்கரன் நித்தன் அமலன் கங்கா

தான்உமை பங்கன் மலைவில்லி தற்பான் தானுச்சம்பு

புரதக னன்புனிதன் பிறைசூடி புலி யதளோன்

பரசு தரன் கயிலாயன் கபாலி பசுபதியே.”

மேலுள்ள பாடலில் ஒவ்வொரு பெயருக்கும் முன் ல்ை எந்தவிதமான அடைமொழியும் இன்றி, பெயர்கள் மட்டும் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. இதனுல் குழப்பம் இன்றிப் பெயர்களை கன்கு புரிந்து கொள்ள வாய்ப்புண்டல்லவா ? ஆசிரிய நிகண்டு

இங்கிகண்டு ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத் தால் ஆனதால் ஆசிரிய நிகண்டு என்னும் பெயர் பெற்றிருக்கலாமோ என்னவோ !

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் ஆண்டிப் புலவர் என்பவர். இவர் தொண்டை நாட்டில் செஞ்சிச் சீமையை யடுத்த ஊற்றங்கால் என்னும் ஊரினர்; பாவாடை வாத்தியார் என்பாரின் மகன்; ஞானப்பிரகாசர் என்பவரின் மான வர், சைவர். இவரை கற்கீரன் என அழைப்பதும் உண்டாம். சங்கினை யறுத்து வளையல் செய்யும் குலத் தினராம் இவர். பழந்தமிழ்ச் சங்கப் புலவராகிய நற்கீரரும் இக்குலத்தவர் எனச் சொல்லப்படுவதுண்டு. இதற்குச் சான்ருக,

  • சங்கறுப்பது எங்கள் குலம்

தம்பிராற்கு ஏது குலம்." என்று நற்கீரரே பாடியதாகக் கூறப்படும் செய்யுள் எடுத்துக் காட்டப்படுகிறது. எனவே, நற்கீரர் குலத் தைச் சேர்ந்த ஆண்டிப் புலவரும் முகமன் வழக்காக நற்கீரர் என அழைக்கப்பட்டார் போலும். நூலில் உள்ள

  • மன்னுசெஞ் சிச்சீமை சூழ்தொண்டை வளநாட்டில்

வாய்த்த ஆற் றங்காலில்வாழ் வளையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார்

மைந்தனும் நற்கீரனே.” 20 316

" மண்ணுளோ எறியப் பகுத்தனன் கயிலையான்

வடிவெடுத் தைந்தெழுத்தின் மந்த்ரவுபதேசஞ்செய் ஞானப்ர காசகுரு

வனசமல ரடிசூடுவோன்.” என்னும் பாடல்கள் போன்றவற்ருல் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலே முதல் பாட்டில் உள்ள

' வளையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார்

மைந்தனும் நற்கீரனே.”

என்னும் பகுதிக்குப் பதிலாக,

' மாநகர்க் கதிபனுயர் பாவாடை வாத்தியார்

மைந்தன் ஆண்டிப் புலவனே.”

எனச் சில ஓலைச்சுவடிகளில் உள்ளது.

காலம்

திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயா தரம், அகராதி நிகண்டு ஆகியவற்றின் கருத்துக்களை ஒன்ருய்த் தொகுத்து ஆசிரிய நிகண்டைத் தாம் இயற் றியதாக ஆண்டிப் புலவர் பாயிரத்தில் கூறியுள்ளார்:

முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுர்ே

முந்து காங்கயன் உரிச்சொல் முறைபெறு கயாகரம் பகரும் அகராதியிவை

முற்றும் ஒன்ருய்த் திரட்டி.”

என்பது பாயிரப் பாடல். எனவே, காங்கேயன், கயாதரர், இரேவணசித்தர் ஆகியோருக்குப் பிற்பட்ட வர் அல்லது அவர்தம் காலத்தை ஒட்டியவர் ஆண்டிப் புலவர் என்பது புலப்படும். அதனல், பதினேழாம் 317

நூற்ருண்டின் பிற்பகுதியினர் அல்லது பதினெட்டாம் நூற்ருண்டினராக ஆண்டிப்புலவரைக் கொள்ளலாம்.

நூல் அமைப்பு

ஆசிரிய நிகண்டு மிக நீளமான அடி கொண்ட ஆசிரிய விருத்தத்தால் ஆனது. பதினெரு தொகுதிகள் உள்ளன. மொத்தம் 263 பாடல்கள் உள்ளன. முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 12,000 சொற்கள் எடுத் துப் பேசப்பட்டுள்ளனவாம். நூலின் மாதிரிக்காகப் பதினேராம் தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதியிலிருந்து ஒரு பாடல் காண்பாம் :

' கஞ்சமிகு தீபமோர் தகழிவட் டம்படைக்

கலமேறு தாளமுடனே கட்டில்எட் டும்பாண்டில் என்பர்செல் வம்பெருமை

கருமைமண் டிலம்விலங்கு சஞ்சரிக மிகவெறுப் பொடுகமலை வரவழைத்

தல்பிண்டி பத்துமாவென் ருகும்வெறி யாட்டுநாற் றங்கலக் கத்துடன்

சாறுவெம் பேய்வெருவுதல் எஞ்சல்பெறு வட்டமொடு துருவையிரு நாலும்வெறி

யெழுமோசை பற்றுநாடுர் ஏற்றகர தலநெடும் போதுபுனல் சோலைபல்

லியம்பண்ட மிவைபாணியாம் செஞ்சொலா வணங்கோட சம்புனற் கரைபாகல்

திகழ்விலங் கின்வால் பசுச் செய்வரம் பிவைகூல மென்றுமுத் தமிழ்முனி

செப்புமிப் பொருளாகுமே.”

இப்பாடல் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். பார்வைக்குப் பதினறு அடிகள் 318

உடையது போல் தோன்றிலுைம் இப்பாடல் நான்கே அடிகள் கொண்டதாகும். ஒவ்வோர் அடியும் பன்னிரண்டு சீர்கள் உடையதாகி நான்கு வரிகளாக மடக்கி எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலில் பாண்டில், மா, வெறி, பாணி, கூலம் ஆகிய சொற்களுக்கு உரிய பொருள்கள் தரப்பட் டுள்ளன. பாண்டில் என்னும் சொல்லுக்கு எட்டுப் பொருளும் (எட்டும் பாண்டில்), மா என்னும் சொல் லுக்குப் பத்துப் பொருளும் ('பத்து மா), வெறி என் னும் சொல்லுக்கு எட்டுப் பொருளும் ('இரு காலும் வெறி') உரியன என்று ஆசிரியர் எண்ணிக்கை யிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இம் முறையானது, அடை மொழிகளால் ஏற்படும் குழப்பத் திற்கு மருந்தாகித் தெளிவுக்கு வழி செய்யும். அரும்பொருள் விளக்க நிகண்டு

சொற்கட்கு அருமையாகப் பொருள் விளக்கும் நிகண்டு அரும் பொருள் விளக்க நிகண்டு. அரும் பொருள் விளக்கத் தீபிகை என்று பாயிரத்தில் ஆசிரி யர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அரும் பொருள் விளக்க நிகண்டு என்றே பரவலாக இஃது அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் அருமருந்தைய தேசிகர் என்பார். இவர் திருச்செந்துாரினர்; சிவப்பிரகாசர் என்பாரின் குமாரர்; வீரசைவ சமயத்தினர்; சிதம்பரம் பச்சைக் கந்த தேசிகரின் மாணுக்கர்; பச்சைக் கந்த தேசிகரின் ஆணைப்படி இவர் இந்நூல் செய்தாராம். இச்செய்திகள் ஆசிரியரே பாடிய பாயிரச் செய்யுட்களால் அறி யப்படுகின்றன. மேலும் ஆசிரியர், நூலின் பதினெட் டுத் தொகுதிகளின் இறுதிகளிலும் செந்தில் அரு மருந்தையன்', 'செந்தில் மேவும் அருமருந்தையன்' என்று மாறி மாறித் தம்மைச் சுட்டியுள்ளார்; தாம் செந்தில் (திருச்செந்துரர்) முருகனை வழிபடுபவர் என் றும் கூறிக் கொள்கிருர். இதல்ை, செந்தில் வேலன் ஆசிரியருக்கு வழிபடு கடவுள் என்பது புலனுகும்.

காலம்

பாயிரத்தின் இறுதிச் செய்யுளில் ஆசிரியர் இக் கிகண்டு வெளியான காலத்தைத் தெளிவாகத் 320

தெரிவித்துள்ளார். சகம் 1685-ஆம் ஆண்டில், அதாவது கி. பி. 1763-ஆம் ஆண்டில்- தமிழ் சித்திரபானு ஆண் டில் -மாசித் திங்கள் சிவராத்திரி வழிபாடு நிகழ்ந்த ஒரு வெள்ளிக்கிழமையில், சிதம்பரத்தில் திருக்கோயி லில் இந்நிகண்டு அரங்கேற்றம் செய்யப் பெற்றதாம். எனவே, ஆசிரியரின் காலம் பதினெட்டாம் நூற். ருண்டு என்பது தெளிவு.

மேலும், சூடாமணி இயற்றிய மண்டல புருடர், உரிச்சொல் நிகண்டு செய்த காங்கேயர், அகராதி நிகண்டு எழுதிய இரேவண சித்தர், கயாதர நிகண்டு பாடிய கயாதரர் ஆகியோர் கூறியவற்றையெல்லாம் தொகுத்து அரும் பொருள் விளக்க நிகண்டாகத் தாம் இயற்றியதாக ஆசிரியரே பாயிரத்தில் கூறியுள்ளார். ஆகவே, அவர்கட்கெல்லாம் பிற்பட்டவர் இவர் என்ப தும், எனவே, இவர் பதினெட்டாம் நூற்ருண்டின் இடைப் பகுதியிலும் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர் என் பதும் புலப்படும்.

நூல் அமைப்பு

நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுள் இரண்டாவதாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்னும் சொற்பொருள் கூறும் தொகுதி யின் விரிவான விளக்கமே இங்கிகண்டு. அதாவது, திவாகரம், சூடாமணி நிகண்டு போன்றவற்றிலுள்ள பதினேராவது தொகுதி ஒன்றைப்பற்றி மட்டுமே இங் நிகண்டு விரிவாகப் பேசுகிறது.

இந்நூல் எளிதில் கெட்டுரு செய்வதற்கேற்ற விருத்தப் பாவால் ஆனது. மொத்தம் 700 பாக்கள் உள்ளன. ஏறக்குறைய 3200 சொற்கட் குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. உரிச்சொல் நிகண்டு 321

கயாதர நிகண்டு முதலிய நிகண்டுகளில் பொருள் கூறப்பட்டுள்ள சொற்களின் எண்ணிக்கையை நோக்க, இந்நிகண்டில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையாகிய 3200 என்னும் தொகையளவு பன்மடங்கு பெரியது என்பதை நிகண்டு ஆராய்ச்சி யாளர் அறிவர்.

ஆசிரியர் இந்ங்கண்டினைப் பின்வரும் பதினெட் டுத் தொகுதிகளாகப் பிரித்துள்ளார் :

1. ககர வெதுகை 10. மகர வெதுகை 2. ங்கர வெதுகை 11. யகர வெதுகை 3. சகர வெதுகை 12. ரகர வெதுகை 4. ஞகர வெதுகை 13. லகர வெதுகை 5. டகர வெதுகை 14. வகர வெதுகை 6. ணகர வெதுகை 15. ழகர வெதுகை 7. தகர வெதுகை 16. ளகர வெதுகை 8. நகர வெதுகை 17. றகர வெதுகை 9. பகர வெதுகை 18. னகர வெதுகை

இரண்டாவது எழுத்து ஒத்திருப்பது எதுகை யாகும். அதாவது, ஒரு செய்யுளில் உள்ள நான்கு அடி களிலும் இரண்டாவது எழுத்து ஒன்ருக இருக்கு மால்ை அதற்கு எதுகை என்பது பெயர். எடுத்துக் காட்டாக இந்நிகண்டின் முதல் செய்யுளிலுள்ள நான்கு அடிகளின் தொடக்கங்களைப் பார்ப்போம் :

" அகவலே......

தகவறி......

பகவதி......

முகவுமா...... மேலுள்ள நான்கு அடிகளிலும் க என்பதே இரண் டாவது எழுத்தாக உள்ளதை நோக்குக. இப்படியாக, 322

க், க,கா, கி, கீ முதலிய ககர இன எழுத்துக்களே இரண் டாவதாக உடைய சொற்கள் எல்லாம் ககர எதுகை' என்னும் தொகுதியில் அடக்கப்பட்டன. ச், ச, சா, சி, சீ முதலிய சகர இனத்து எழுத்துக்களை இரண்டாவதாக உடைய சொற்கள் சகர எதுகை என்னும் தொகுதி யில் அடக்கப்பட்டன. இவ்வாறே 'க' தொடங்கி ன' வரையும் உள்ள பதினெட்டு இன எழுத்துக்களுக்கும் பதினெட்டு எதுகைத் தொகுதிகள் கொடுக்கப்பட் டுள்ளன. நாம் ஏதாவது ஒரு சொல்லுக்குப் பொருள் காணவேண்டுமாயின், அச்சொல்லின் இரண்டாம் எழுத்து என்ன என்று நோக்கி, அந்த எழுத்துக்குரிய தொகுதியில் சென்று தேடினல், அது கிடைத்துவிடும். இந்த வசதிக்காகவே எதுகை முறையில் சொற்கள் அமைக்கப்பட்டன. சொற்களை விரைந்து எளிதில் கண்டுபிடிக்க உதவவல்லது அகராதி முறையே யாகும்; அந்தத் துறையில் முன்னேடியாக எழுந்த முதல் முயற்சியே இந்த எதுகைமுறை அமைப்பாகும்.

அரும்பொருள் விளக்க நிகண்டின் எதுகை அமைப் பில் ஒரு சிறப்பு உள்ளது. சூடாமணி நிகண்டில் சொற்கட்குப் பொருள் கூறும் பதினேராவது தொகுதி யும் இந்நிகண்டு போலவே எதுகை முறையில் அமைக் கப்பட்டதாகும். ஆனல் அச்சூடாமணியில் ஒர் எது கைச் சொற்களுக்கிடையே வேறு எதுகைச் சொல் கலந்துள்ளது. காட்டாக, அதன் முதல் செய்யுளில், பகவன், பகல், மகரம், அகம் என்னும் ககர எதுகைச் சொற்களோடு வசி' என்னும் சகர எதுகைச் சொல்லுக் கும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப்படியே மற்ற எதுகைகளோடும் வேறு எதுகைகள் அந்நிகண்டில் கலந்துள்ளன. எனவே,குறிப்பிட்ட ஒரு சொல்லை இன்ன 323

எதுகைப் பகுதியில் கட்டாயம் கண்டு பிடித்து விட லாம் என்ற உறுதிக்குச் சூடாமணியில் இடமில்லை. ஆனல் இங்கிகண்டிலோ, ஓர் இனத்து எதுகைச் சொற் களோடு வேறு இனத்து எதுகைச் சொல் கலக்கவே யில்லை; அதல்ை, இந்நிகண்டில் எச்சொல்லையும் அதன் எதுகைத் தொகுதியில் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

முதல் முதலில் மோட்டாரோ, சைகிளோ, இன்னும் பிற பொருள்களோ கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றில் இல்லாத வசதிகள் பல பின்னர் நாளடை வில் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் பொருத்தப் பட்டன. வேறு எந்தச் சீர்திருத்தமும் இப்படித்தான் ! இவ்வியற்கை நிலையை யொட்டி, சூடாமணி நிகண் டைக் காட்டிலும் அரும் பொருள் விளக்க நிகண்டின் எதுகை அமைப்பில் சீர்திருத்தம் தோன்றியதில் வியப் பில்லை.

இனி, ஆசிரியரின் வரலாற்றுக்கும், இந்நூலின் அமைப்பு முறைக்கும் அகச்சான்ருக, ஆசிரியராலேயே இயற்றப்பட்ட இந்நூற் பாயிரப் பாடல்கள் ஆராய்ச்சி யாளர்க்கு உதவு மாதலின் அப்பாடல்க்ள் வருமாறு :

காப்பு (1) மகிழ்ந்துல கெவையும் போற்ற

வன்புரங் குன்ற வென்ற திகம்பான் அணங்கோர் பாகத்

தெய்வநா யகன்சேய் தந்தி முகன் றன தடியை ஏத்தி

மூதரும் பொருள் விளக்க நிகண்டெனு மணித்தீபத்தை

நிலமிசை நிகழ்த்த லுற்ரும்.” (2)

(3)

(4)

(5)

324

பாயிரம்

“பொன்ைெளிர் கமலப் புத்தேள் நறுந்துழாய்ப்

பெருமான் போற்றும்

கன்னியம் புரிசைத்தில்லை நாதன்ருள்

கருத்திற் சேர்த்திப்

பன்னரும் பொருள் விளக்கத் தீபிகை

பகர்வேன் பாரில்

செந்நெறி யுளத்தோர் யாரும் செவிமடுத்

தினிது கேண்மின்.'

'குளிர்மணி வடநீ ழற்கீழ்க்

குலவுமெம் அடிகள் தொன்னுள் எளிதிலா முதனூல் செப்ப

இலக்கண ரியையுந் தூக்காற் றெளியொரு வழிநூல் செப்பச்

சிலர்சார்பு நூலும் போற்றத் தளிர்பெற இந்நூல் மூன்றும்

சகந்தனிற் றிகழ்ந்த தன்றே.”

" ஆங்கது நிற்கப் பின்னும்

அலகில்நூல் உதித்த வாற்றிற் ருங்கொரு சொற்பொருட்பல்

விதத்தொகை தானென் றுக்கொன் ருேங்கி மிக்குங் குறைந்தும்

ஒத்திடா திருக்கை தன்னல் பாங்குயர் சின்னூற் சேரும்

பொருள்கூட்டும் பண்பை யெண்ணி ;”

இலக்கண முழுது ணர்ந்தோன்

இறையிருஞ் சிவாக மத்தின் துலைக்கடல் முற்றுங் கண்டோன்

தொல்லையாந் தில்லை மூதூர் 325

கலக்கற விளங்கும் பச்சைக்

கந்த தேசிகளும் எங்கோன் சொலத்திகழ் இகப ரத்தை

வேண்டியே தொல்லோர் கேட்க :”

(6) மாவியல் சிறக்கும் வீரை

மண்டல வன்காங் கேயன்

ரேவண சித்தன் செஞ்சொற்

கயாகான் இவராற் சொற்ற பாவியல் நூற்கூ ருேர்சொற்

பல்பொருள் தொகையெ லாஞ்சேர்த் தோவிலா வளஞ்சி றப்ப

ஒருபெரு நூல தாக”

(7) நவையறு ககர மாதி

னகரவீ றெதுகை தன்னல்

நுவலடிக் கிரண்டு மொன்றும்

நுண்பொருள் ஒருங்கு சேர்த்திச்

சுவைதிகழ் சொல்வி ருத்தத்

தொகையெழு நூறு தன்னுல்

அவைநலோர் குற்றஞ் சொல்லார்

என்பதை யகத்தில் எண்ணி ;'

(8) சொற்றனன் நருத்து எரிக்குந்

தோட்டலர் கடம்பின் திண்தோள்

கொற்றவேல் முருகன் செந்திற்

குமரவேட் கடிமை பூண்ட

நற்றவ வீரா சார

நற்சிவப் பிரகா சன்சேய்ப்

பெற்றிசேர் அரும ருந்த

தேசிகப் பெயரி ளுனே.” 326

(9) " இருஞ்சகாத் தம்ஈ ரைஞ்ஞா

றிருமுந்நூ றுடனெண் பத்தஞ்

சொருங்குசித் திரபானுப்பேர்ச்

சமைமகத் திங்க ளொப்பில்

பொருஞ்சிவ நிசிவெள் வளிப்பேர்

புனைதினந் தில்லை மன்றில்

பெருங்குணத் தோர்க் கரங்கே

றுற்றநூற் பெற்றி தானே.”

அரும்பொருள் விளக்க நிகண்டு குறித்து இது காறும் கூ ற ப்ப ட் ட செய்திகளின் சுருங்கிய தொகுப்பை மேலுள்ள பாயிரப் பாடல்களில் காண லாம்.

ஆசிரியர் அருமருந்தைய தேசிகர் தமது நிகண் டின் ஒவ்வோர் எதுகைத் தொகுதியின் முன்னும் கடவுள் வணக்கம் பாடியுள்ளார். முதல் தொகுதி யாகிய ககர எதுகைக்கு முன்னுல்மட்டும் பிள்ளையார் காப்பும் பாயிரமும் உள்ளன. மற்ற பதினேழு எது கைத் தொகுதிகளின் முன்னும் முருகக் கடவுள்மேல் வணக்கம் பாடியுள்ளார். ஒவ்வொரு தொகுதியின் முதற்பாவிலும் முருகனை வணங்கி யிருப்பதோடு, இன்ன எதுகையைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். இதுபோலவே ஒவ்வொரு தொகுதியின் முடிவிலும், செந்திலில் வாழும் முருகனை வணங்கும் அருமருந்தையன் என்கிற நான், இன்ன எதுகையைப் பற்றி இத்தனை பாடல்கள் பாடியுள்ளேன் என்று மொத்த எண்ணிக்கையுடன், எதுகைப் பெயரும் தம் பெயரும் தம் ஊர்ப் பெயரும் தம் வழிபடு கடவுள் பெயரும் கூறியுள்ளார். இவற்றின் 327

மாதிரிக்காக, சகர எதுகைத் தொகுதியின் முதற். பாடலையும் இறுதிப் பாடலையும் காண்பாம் :

(சகர எதுகை - முதற் பாடல்)

' கொலைகிளர்ந் தொளிருஞ் செய்ய

கூரிலே வடிவேற் ருங்கு

மலைசெறி கடகத் திண்டோள்

மஞ்ஞைவா கனத்தெம் பெம்மான்

முலைமுகிழ்க் குறமின் கேள்வன்

மூவிரு முகனைப் போற்றிக்

கலைவலோர் புகழ் சகார

எதுகையின் கவியைச் சொல்வாம்.”

(சகர எதுகை - இறுதிப் பாடல்)

' வழுவில வொலிசி றக்கும்

வல்லின மாஞ் சகார

மொழியெது கையினிற் செய்யுள் மூவொன்ப தாகச் செய்தான்

கழுதுண அசுரர் சேனைக்

கடருெலை குகனைப் போற்றும் அழகியற் செந்தின் மேவும்

அருமருந் தையன் ருனே.”

சகர எதுகைத் தொகுதியில் மொத்தம் இருபத் தொன்பது பாடல்கள் உள்ளன. ஆனல் இறுதிப் பாடலில், மூவொன்பதாகச் (3x9=27) செய்தான்' என இருபத்தேழு பாடல்களே குறிக்கப்பட்டுள்ளன. உண் மைதான் ! சகர எதுகைச் சொற்களுக்குப் பொருள் கூறும் இருபத்தேழு பாடல்களுடன், முருக வணக்கப் 328

பாடலாகிய முதற் பாடலும், பாடல் எண்ணிக்கையும் ஆசிரியர் பெயரும் கூறும் இறுதிப் பாடலும் சேர (27+1+1=29) மொத்தம் இருபத்தொன்பது பாடல்கள் ஆகும். இவ்வாறே ஒவ்வோர் எதுகைத் தொகுதி யிலும் ஆசிரியர் கூறியுள்ள எண்ணிக்கையோடு மேலும் முதற் பாடல், இறுதிப் பாடல் ஆகிய இரண்டு எண்ணிக்கையைச் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

இனி, சொற் பொருள் கூறும் நூற்பாடல்களின் மாதிரிக்காக, ககர எதுகையின் முதற் பாடலும் னகர எதுகையின் இறுதிப் பாடலும் வருமாறு:

(ககர எதுகை)

" அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரியம் முப்பேர் ;

தகவறி வுடனெழுக்கம் தெளிவும் சற்குணமும் சாற்றும் ; பகவதி உமையே துர்க்கை தருமதே வதைப்பேர் பன்னும் ; முகவுமாளிகை முகப்பே மொள்ளுதல் காந்திக்கும்பேர்.”

இப் பாடலில் அகவல், தகவு, பகவதி, முகவு என் ஆணும் சொற்களின் பொருள்கள் தரப்பட்டுள்ளன.

[னகர எதுகை)

" மன்றமே தெருட்சி மெய்ம்மை வாசம் அம்பலமே வீதி

நின்றகல் யாணத்தோடு வெளியென நிகழ்த்தும் ஏழ்பேர்; கன்றுகை வளையே அற்பம் காட்டிய இளமை குட்டி; நன்றே உத்தமத்தி மைம் நல்லறந் தானும் ஆமே.”

இந்தப் பாடலில் மன்றம், கன்று, கன்று என்னும் சொற்கட் குரிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ககர எதுகைப் பாடலில், அகவல் என்னும் சொல்லுக்கு 329

மூன்று பொருள்கள் உண்டென ' முப்பேர் ' என்று

எண்ணிக்கையிட்டும், னகர எதுகைப் பாடலில் மன்றம்

என்னும் சொல்லுக்கு ஏழு பொருள்கள் உண்டென

  • ஏழ்பேர்' என எண்ணிக்கையிட்டும் ஆசிரியர் கூறி

யுள்ளமை காண்க. இவ்வாறே நூல் முழுவதும் ஆங்

காங்கே பல சொற்களின் பொருள்களை எண்ணிக்கை

யிட்டுக் கூறியுள்ளார் ஆசிரியர்.

நூற்பயன்

அரும்பொருள் விளக்க நிகண்டின் இறுதிப் (700-

ஆம்) பாடலில், நூலைப் படிப்பதனால் உண்டாகும்

பயன் ஆசிரியரால் கூறப்பட்டிருப்பது ஒரு புதுமை.

இந்நிகண்டைக் கற்பவர்கள் சிறந்த புலமையும் செல்வ

மும் பெற்றுப் பெருமையுறுவராம். அப்பாடல் வருக:-

4் இருமையொன் றியதிருச் செந்தில் முருகோனை யேத்தும்

அருமருந்தையன் சொற்ற அரும்பொருள் விளக்கம் கற்றார்

பொருமுரண் டெறப்படுத்தும் புலமைநாற் றி றம் விளக்கும்

திருமருங் குறப்பொருத்தும் செருக்குட னிருப்பர் தாமே,” தொகை நிகண்டு

இதன் ஆசிரியர் சுப்பிரமணியக் கவிராயர்; திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரினர். இவர் பதினெட்டாம் நூற்ருண் டின் பிற்பகுதியினரா யிருக்கலாம்.

சிவசுப்பிரமணியக் கவிராயர் தமது நாமதீப நிகண் டின் பாயிரத்தில் தொகை நிகண்டைக் குறிப்பிட் டுள்ளார்:

8 பன்னுந் தொகைநிகண்டிற் பார்க்கவிரி வாமவைகள்

இன்னசுருக் கத்தடங்காவே.”

என்பது நாமதீபப் பாடற்பகுதியாகும். இது தவிர வேருென்றும் தொகைநிகண்டைப் பற்றி விளக்க மாகத் தெரியவில்லை.

திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளும் மூன்று பெரும் பிரிவுக்குள் அடக்கப்பட்டிருக்கும் செய்தி முன்னரே அறிந்ததே. அவற்றுள் மூன்ருவ தாகிய பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி என்னும் பிரிவைப் பற்றி மட்டும் விளக்கமாகச் சொல் வதுதான் இந்தத் தொகை நிகண்டு. அதாவது, இரு சுடர், முக்குணம், ஐம்பொறிகள் முதலிய தொகைப் பொருள்களை விளக்குவதே இங்கிகண்டு. அதனல் தான் இது தொகை நிகண்டு என்னும் பெயர் பெற். நிறது. 331

திவாகரத்தில் பன்னிரண்டாவதாக உள்ள பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் ஒரு தொகுதி மட்டுமே பிற்காலத்தில் பல்கிப் பெருகித் தொகை நிகண்டு போல் தனி நிகண்டுகளாக உரு வெடுத்துள்ளமை ஈண்டு புலனுகும்.

21 பொருள் தொகை நிகண்டு

இதன் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி (தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் அல்லர்) இவர், புதுக்கோட் டைச் சீமையைச் சார்ந்த குடுமியாமலை என்னும் ஊரி னர்; வைத்தீசுர தீட்சதரின் குமாரர். இவரது காலம் பதினெட்டாம் நூற்ருண்டாக இருக்கலாம்.

பொருள் தொகை நிகண்டு என்னும் பெயரி லிருந்தே, இந்நூல் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியின் விரிவான மறு உருவம் என்பது புலப்படும்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் 1920-ஆம் ஆண்டில் ஆறணு விலையில் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனப் புலவரும் மதுரைத் தமிழ்ச் சங்கச் சைவ நூற் பரிசோதகருமாகிய சே. ரா. சுப்பிர மணியக் கவிராயர் திருத்தியும் விளக்கியும் கூட்டியும் இங்ங்கண்டுப் பதிப்பில் தம் கைவண்ணம் காட்டி யுள்ளதாகத் தெரிகிறது.

நூலாசிரியர் 878 நூற்பாக்கள் எழுதியிருக்க, அவற்ருேடு 122 நூற்பாக்கள் பின்னர் புதிதாக எழு திச் சேர்த்து 1000 நூற்பாக்களாகக் கணக்காக்கப் பட்டது என்று ஒரு சார் கொள்கையும், ஆசிரியர் 978 எழுத, பின்னர் 22 நூற்பாக்கள் சேர்க்கப்பட்டன என்று ஒரு சார் கொள்கையும் நிலவுகின்றன. இவற். றுள் எது உண்மையோ அல்லது இரண்டும் பொய்யோ! 333

இனி நூலின் மாதிரிக்காகச் சில நூற்பாக்கள் வருமாறு:

விநாயகர் துதி

அருட்கடல் விநாயகன் அடியிணை யிறைஞ்சிப் பொருள்தொகை நிகண்டினைப் புகலுது மியாமே.”

ஒரு பொருள்

ஒருமை யாவது முத்திப் பேரும்

அஃதிறை யுணர்ந்துற லாமென மொழிப.”

(ஒன்று எனச் சிறப்பிக்கத் தக்கது வீடு பேறு)

இரு பொருள்

' அச்சுவினி தேவர் அவர் இருவோர் தமைத்

தேவ மருத்துவர் என்னச் செப்புவர்.”

(தேவ மருத்துவர் இருவர்=அச்சுவினிதேவர் எனப்படு வர்)

" அயனம் இரண்டு உத்தரம் தக்கிணமே.” (உத்தராயணம், தட்சிணுயணம் என அயனங்கள்

இரண்டாம்)

முப்பொருள்

'அயன் அரி அரன் மும் மூர்த்தியாமே.”

(மும்மூர்த்திகள் = அயன், அரி, அரன் என்பவர்கள்)

இப்படியாக ஒவ்வொரு தொகைப் பொருளும் விளக்கப்பட்டிருப்பதை நூலில் காணலாம். மேலே 334

யுள்ள 1, 2, 3 என்னும் தொகைப் பொருள் அல்லாமல், 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 27, 28, 30, 31, 32, 33, 35, 36, 38, 56, 60, 64, 96, 100– ஆகிய தொகைகளால் சுட்டப்படும் பொருள்களும் இங்கிகண்டில் விளக்கப்பட்டுள்ளன. இனி இறுதி நூற்பா வருமாறு:

' சொல்லிய அல்லன தொல் காப்பியங்களிற்

கண்டுணர்ந் திடுதல் கற்ருேர் கடனே.” ஈண்டு தொல்காப்பியங்கள் என்றது, பழைய காப்பி யங்கள் பலவற்றையாம். பொதிகை நிகண்டு

இந்நூலுக்குப் பொதிகை நிகண்டு எனப் பெயர் வந்ததின் பொருட்டு புலப்படவில்லை. இதன் ஆசிரி யர் பொதிகைமலைச் சீமையாகிய திருநெல்வேலிமாவட் டத்தைச் சேர்ந்தவர் ஆதலின், அம்மலையைச் சிறப்பிக் கும் வாயிலாக இப்பெயர் அமைக்கப்பட்டதோ!

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் சாமிநாதக்கவிராயர். இவர் சுருக்கமாகச் சாமி கவிராசன் எனவும் அழைக்கப்படுவார். ஆசிரியர் கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரினர்; சைவ வேளாளர். இவர் மகன் பூவைப் புராணம், நாம தீப நிகண்டு ஆகியவற்றின் ஆசிரியராகிய சிவ சுப்பிரமணியக் கவிராயர் என்பவர்.

பொதிகை நிகண்டே யன்றி, ஆசிரியர் தம் பெய ரால் சாமிநாதம் என்னும் இலக்கண நூல் ஒன்றும் இயற்றியுள்ளார். இதனை அந்நூலின் பாயிரப் பகுதி யாகிய,

  • பூமிசைப் பன்மொழியின் வேங்கடமுக் கடற்குட்

புணர் தமிழைந் தியல் நிகண்டாய்ந் தார்எளிதி னுணரத் தோமின் முன்னுரல் வழியொருநூல் வேண்டுமெனத் துறைசைச் சுடர்மணி சுப்பிரமணியக் குருமணி பார்த்தருள ஆமிதெனக் குருபதமும் திருக்குறிப்பும் தலைக்கொண் டகத்தியனைச் சிவசுப்ர மணியனென ஈன்ற 336

சாமிகவி ராசனதி குலத்தோன் கல்லிடையூர்ச்

சம்பனன் செய்தனன் சாமிநாதம் என்றிந்நூலே.”

என்னும் பாடலால் நன்குணரலாம். திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிக அடிகளா ரின் திருக்குறிப்புப்படி ஆசிரியர் சாமிநாதம் என்னும் இலக்கண நூல் எழுதியதாக இப்பாடலால் அறியலாம். மற்றும் ஆசிரியரின் ஊர்ப்பெயரும் மகன் பெயருங் கூட இப்பாடலால் தெரியவருகின்றன.

காலம்

இவர் மகன் சிவசுப்பிரமணியக் கவிராயர் பூவைப் புராணம் என்னும் நூலை, கொல்லம் 985-ஆம் ஆண் டில்-அதாவது, கி. பி. 1810-ஆம் ஆண்டில் இயற்றிய தாகச் சொல்லியுள்ளார். எனவே, மகன் சிவசுப்பிர மணியக் கவிராயரது காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற்பகுதி என்பது புலப்படும். ஆகவே, தந்தை சுவாமிநாதக் கவிராயரது காலம் 18-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது தெளிவு. இவர்கள் இருவரும் அப்பன் - மகன் என்பதற்குச் சான்று பகர, சிவசுப்பிர மணியக் கவிராயர் தாம் இயற்றிய நாமதீப நிகண்டின் பாயிரத்தில், என் தந்தை பொதிகை நிகண்டு என ஒரு கிகண்டு இயற்றியுள்ளார் என்னும் கருத்தில் பாடி யுளள

  • எந்தை பொதிகைநிகண் டென்ருேர்சொற் பல்பெயரே

தந்தனன்காண் பல் கூட்டஞ் சாரொருபேர்....”

என்னும் பாடற்பகுதியும் துணை புரியும்.

நூல் அமைப்பு இந்நூலில் முதல் பகுதி, இரண்டாம் பகுதி என இரு பகுதிகள் உள்ளன. முதலில் முதல் பகுதி ையப் 337

பற்றிப் பார்ப்போம்:குறுகிய அடிகள் கொண்ட ஆசிரிய விருத்தத்தாலான இது பத்துத்தொகுதிகள்உடையது. மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. முதல் ஒன் பது தொகுதிகளில் மட்டும் 14,500 சொற்கள் பேசப் பட்டுள்ளன. பத்தாவது தொகுதியில் ஏறத்தாழ 1350 சொற்கள் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நூற்பா கடையாலான இரண்டாம் பகுதியில், சொற் கட்குப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இதில் 2288 சொற்கள் உள்ளன. ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தாராதலின், அம்மாவட்டத்து வழக்குச் சொற்கள் பல இதில் இடம் பெற்றிருப்பதில் வியப் பில்லை.

குறிப்பிடத் தக்க ஒரு சிறப்பு இங்கிகண்டிற்கு உண்டு. அகராதி கிகண்டைப் போலவே அகர வரிசை யில் அமைந்துள்ளமையே அச்சிறப்பாகும். ஆனல் அகராதி நிகண்டில் அரன், அம்பிகை, அயன் என முதலெழுத்துக்கு மட்டும் அகர வரிசை கவனிக்கப்பட் டிருக்கிறது; இரண்டாம் எழுத்தாக ர, ம், ய என எழுத்துக்கள் அகர வரிசையில் இன்றித் தாறு மாருக உள்ளன. பொதிகை நிகண்டிலோ அகம், அகைத் தல், அகப்பா என முதல் எழுத்தோடு இரண்டாம் எழுத்திலும் அகர வரிசை கவனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'அ' என்னும் எழுத்தை அடுத்து ககர இனம் உள்ள சொற்கள் ஒன்றன்பின் ஒன்று கூறப் பட்டிருப்பது காணலாம். இம்முறையில் நோக்கின், அகராதி நிகண்டினும் ஒரு படி உயர்ந்தது பொதிகை கிகண்டு என்பது புலனுகும். இனி நூலின் மாதிரிக் காக ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதியிலுள்ள முதல் மூன்று நூற்பாக்கள் வருமாறு: 338

" அகம் தருவும் குறையும் வெற்பும் மனேயும்

அகமும் உள்ளும் ஆன்மாவும் அகப்பொருளும் இடமும் பாவமு மல்லவு மாகும்.”

“அகைத்தல் அறுத்திடலும் ஒடித்தலும் ஈர்தலும்

வேதனை யும்மென விளம்பினர் புலவர்.”

" அகப்பா உண்மதில் மேடையும் மதிலும்.”

மேலுள்ள மூன்று நூற்பாக்களிலும் அகம்,அகைத் தல், அகப்பா என்னும் மூன்று சொற்களுக்கும் பொருள் கூறப்பட்டிருப்பதையும், அவை மூன்றும் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதையும் காண

6\}s UD, காம தீப நிகண்டு

காமம் என்ருல் பெயர் தீபம் என்ருல் விளக்கு பெயர்ப் பொருள் விளக்கம் செய்வதால் நாமதீப நிகண்டு எனப் பெயர் பெற்றது.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் சிவசுப்பிரமணியக் கவிராயர்;கல்லிடைக் குறிச்சி என்னும் ஊரினர்; தளிச்சேரி மடத்தைச் சார்ந் தவர்; பொதிகை நிகண்டு இயற்றிய சாமிநாதக் கவி ராயரின் மகன். இந்தச் செய்திகள், சாமிநாதக் கவி ராயர் இயற்றிய சாமிநாதம் என்னும் இலக்கண நூலின் பாயிரத்திலுள்ள

" ஆமிதெனக் குருபதமும் திருக்குறிப்பும் தலைக்கொண்

டகத்தியனைச் சிவசுப்ரமணியனென வீன்ற

சாமிகவி சாசன தி குலத்தோன் கல்லிடையூர்ச்

சம்பனன் செய்தனன் சாமிநாத மென்றிந்நூலே.” என்னும் பாடற் பகுதியானும், சிவசுப்பிரமணியக் கவிராயரே இயற்றிய காமதீப நிகண்டின் பாயிரப் பாடல்களானும் உணரப்படும். ஆசிரியர் காமதீப கிகண்டே யல்லாமல் பூவைப் புராணம் என்னும் ஒரு நூலும் இயற்றியுள்ளார்.

ஆசிரியர் பெருமை

சாமிநாதக் கவிராசர் அகத்தியரைத்தான் சிவ சுப்பிரமணியன் என்னும் பிள்ளையாகப் பெற்ருர் 340 என்னும் கருத்தில், சாமிநாதம் என்னும் நூலின் பாயிரத்தில் உள்ள " அகத்தியனைச் சிவசுப்ர மணியனென ஈன்ற சாமி கவிராசன்” என்னும் பாடல் பகுதியை நோக்கின், சிவசுப்ரமணியக் கவிராயர் அகத்தியரைப் போலப் பரந்த புலமையும் தலைமையும் உடையவராய் விளங்கினர் என்பது புலப் படும். காலம் ஆசிரியர் பூவைப் புராணத்தைக் கொல்லம் 985 (கி. பி. 1810-ஆம் ஆண்டில் இயற்றியதாகக் கூறி யுள்ளமையால் இவரது காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற்பகுதி என்பது தெளிவு. மற்றும், நாமதீப நிகண்டைப் பூவைப் புராணத்துக்கு முன்பே ஆசிரியர் இயற்றியிருக்கவேண்டும். எனவே, பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியையும் ஆசிரியர் தொட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும். நூல் அமைப்பு நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதாகிய ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி: என்னும் பிரிவைச் சார்ந்தது காமதீப நிகண்டு. அதாவது, ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களையும் கூறுவது இங்கிகண்டு. இந்நூல் வெண்பா யாப்பில்ை ஆனது; பதினறு தொகுதிகளுடையது. பாயிரத்தில் எட்டுப் பாக்களும் 341

பதினறு தொகுதிகளிலும் எண்ணுறு பாக்களு. மாக மொத்தம் எண்ணுாற்றெட்டு (808) வெண்டாக்கள் உள்ளன. 12,000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில், சங்க கால வழக்காற்றுச் சொற்கள்முதல் பதினெட்டாம் நூற்ருண்டு வழக்காற்றுச் சொற்கள் வரை காணக்கிடக்கின்றன. மலையாளப் பகுதியில் வழக்கில் உள்ள தை (மரக்கன்று), ஆட்சி (வாரம்) முதலிய சொற்களும் இடம் பெற்றுள்ளன.

மற்ற நிகண்டுகளினும் இந்நூல் ஒரு புது மாதிரி யான அமைப்பு உடையது. நூல் முழுதும் கான்கு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படல மும் பல வர்க்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது முறையே அவை வருமாறு:

I உயர் திணைப் படலம்..............................2 (1) தெய்வ வர்க்கம் (2) மானிட வர்க்கம் II அஃறிணை உயிர்ப் பொருள் படலம்..........5. (1) நாற்கால் உயிர்ப் பொருள் வர்க்கம் (2) பறவை உயிர்ப் பொருள் வர்க்கம் (3) ஊர் உயிர்ப் பொருள் வர்க்கம் (4) நீர்வாழ் உயிர்ப் பொருள் வர்க்கம் (5) தாவர உயிர்ப் பொருள் வர்க்கம் III அஃறிணை உயிரில் பொருள் படலம்...........5 (1) இயற்கைப் பொருள் வர்க்கம் (2) செயற்கைப் பொருள் வர்க்கம் (3) இட வர்க்கம் (4) கால வர்க்கம்

(5) சினை வர்க்கம் 342

IV குணநாமப் படலம்... 4. (1) உயிர்ப் பொருள் - மனக்குண வர்க்கம் (2) உயிர்ப் பொருள் - வாக்குக் குணவர்க்கம் (3) உயிர்ப் பொருள் - செயற்குண வர்க்கம் (4) உயிரில் பொருள் குணவர்க்கம்

(மொத்த வர்க்கங்கள்...16

ஆக நான்கு படலங்களும் பதினறு வர்க்கங்க ளாகப் பகுக்கப்பட்டுள்ளன. திவாகரம் முதலிய நிகண்டுகளில் தொகுதி எனப்படுவதுதான் இந்நூலில் 'வர்க்கம்' எனப்படுகிறது. திவாகரத்தில் உள்ள முதல் பத்துத் தொகுதிகளும் இந்நூலில் கான்கு படலங்களின் கீழ்ப்பதிறுை வர்க்கங்களாகக் கொடுக் கப்பட்டிருப்பது ஒரு புது அமைப்பு அல்லவா ? ஆகக் கூடியும், பழைய சரக்கைப் புதிய கலங்களில் கொடு .ப்பது போன்றதுதான் இது !

நாமதீப நிகண்டு குறித்து இதுகாறும் கூறிய கருத்துக்களை எட்டுப் பாக்களில் தொகுத்துப் பாயிர மாக ஆசிரியர் சிவசுப்பிரமணியக் கவிராயரே இயற்றி -யுள்ளமை ஆராய்ச்சியாளர்க்கு மிகவும் உதவ வல்லது. அப்பாயிரப் பாடல்கள் வருமாறு :

“ ஆனைமுக னைக்குகனை யாதிபுவனேசொரியை

ஞானமுதல் கோரக்க நாதனையும்-மேன்மைபெறு சாமிகவி சாசனையுந் தான்வணங்கிப் பேருரைப்பன் பூமிதனில் உள்ள பொருட்கு.”

" ஒல்லும் உயர்திணைப்பே சஃறிணை யுயிர்ப்பொருட்பேர்

இல்பொருட்பே ரில்பொருள்க ளின் குணப்பேர்

சொல்படல

மாமொருநான் கிட்டிரண்டைந் தைந்துநால் வர்க்கமிட்டு நாமதீ பம்பகர்ந்தேன் நான்.' 343

' தேவர்.நா சாமிரண்டும் சீர்பெறுநாற் கால்பறவை

ஊர்வனநீர் வாழ்வநிலை யோரைந்து - மேவியற்கை செய்கையிடங் காலஞ் சினையைந்து நாற்குணமும் எய்துவர்க்க நாற்படலத் தே."

  • &

மனக்குணம்வாக் கின் குணமே மற்லுடலாற் செய்யும் வினைக்குணமிம் மூன்றுமுயிர் மேவுந்-தனிப்பொருள்கட் கேய்ந்தகுண மாகுமுயி சில்பொருள்க ளின் குணமொன் ருய்ந்தவிவை நாற்குணங்க ளாம்.” “ பல்வடிவு நாற்றமிரண் டைந்துவண்ண மூறெட்டு

நல்ல சுவையாறு நான்களவை - வல்லோர் புகலுமுயிர்ப் பில்லாப் பொருட்குணங்க ளாகும் பகர்படல வர்க்கமுறை பார்.” * திண்பார் புகழ்நாம தீபமோர் எண்ணுறு

வெண்பாவுஞ் சொற்செறிவான் மெய்த்த8ளயின்

பண்பு சில்பா வொற்றறுத்த லாதியகொண்டோர்கசில்பா தந் பற்றும் வகையுளியாற் பார்.” தொடைகள்

&

§

எந்தை பொதிகைநிகண் டென்ருேச்சொற் பல்பெயரே தந்தனன்காண் பல்கூட்டஞ் சாரொருபேர் - முந்தியான் பன்னுந் தொகைநிகண்டிற் பார்க்கவிரி வாமவைகள் இன்னசுருக் கத்தடங்கா வே.”

&

&

பல்லா யிரநிகண்டிற் பண்டிதர்கள் சொன்னபொருள் எல்லா மெளிதா யினிதுணரக் - கல்லிடையூர் மன்னுசிவ சுப்ர மணியன் கவிராசன் பன்னுதமிழ் நாமதீ பம்.”

மேலே காப்புச் செய்யுளாகிய முதல் பாடலில் ‘சாமி கவி ராசனையுந் தான் வணங்கி என ஆசிரியர் தம் தந்தைக்கும் வணக்கம் செலுத்தியிருப்பது புதுமையா யுள்ளது. படலங்களையும் வர்க்கங்களையும் பெயர்களுடன் எண்ணிக்கையிட்டுக் கூ றி யு ள் ள 344

ஆசிரியர், மொத்தப் பாக்கள் எண்ணுறு என்று

கூறவுக் தவறவில்லை.

இனி மாதிரிக்காக நூலின் முதல் பாடலையும்

இறுதிப் பாடலையும் காண்பாம் :

(முதல் பாடல்)

' நந்திபெம்மான் ஆலமர்ந்தோனம்பனிறை சோதிசெம்மல் அந்திவண்ணன் தாணுதித்தன் ஆனந்தன் - இந்தினன்தீ முக்களுன் ஐந்து முகன் திகம்ப ரன்சடையன் நக்க னெண்டோ ளன் பிஞ் ஞகன்.” இஃது உயர்திணைப் படலத்தில் தெய்வ வர்க்கத்தில்

சிவன் பெயர்களைக் கூறும் பாடலாகும்.

(இறுதிப் பாடல்)

" காதமொடு சாமாத்தங் காவதமுக் கூப்பாடாம் கோதில்கவி யூதமிரு கூப்பாடாம் - ஒதுநல்ல நானூறு விற்கிடை கோழிப்பறவைத் தூரமே தான வது கிரவுஞ் சம்.” இது குணகாமப் படலத்தில் உயிரில் பொருட் குண வர்க்கத்தின் இறுதிப் பாடல்-அதாவது நூலின் இறுதிப் பாடல் ஆகும். இதில் தொலைவைக் குறிக் கும் காதம், காவதம் முதலிய பெயர்கள் பேசப்பட்

டுள்ளன. வேதகிரியார் சூடாமணி நிகண்டு

இதுகுறித்து முன்னரே சூடாமணி நிகண்டு பற்றிய பகுதியில் கூறப்பட்டுள்ளது. சூடாமணி நிகண்டின் பதினேராவது தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதியே பதினேராம் நிகண்டு என்னும் பெயரில் பெருவாரியாக மக்களால் பயிலப் பட்டு வந்ததென முன்பே சொல்லப்பட்டுள்ளது. ஆனல் நாளுக்கு நாள் பெருகிவரும் சொற்களைச் சூடாமணியில் காண முடியவில்லை. இக்குறையைப் போக்கவேண்டு மெனக் களத்துார் வேதகிரி முதலியார் என்பவர் முயன் ருர். எனவே, சூடாமணியில் இல்லாத பல புதிய சொற்களைத் தொகுத்து, எதுகை முறையில் புதிதாக 290 விருத்தப் பாக்களை இயற்றி, சூடாமணி கிகண்டின் பதினேராம் தொகுதியில் முன்னமேயே இருந்த 310 விருத்தப் பாக்களின் இடையிடையே செருகி, மொத்தம் 600 பாக்கள் உடைய தனி நூலாக் கினர். அதல்ை இது, வேதகிரியார் சூடாமணி, வேதகிரி யார் நிகண்டு என்றெல்லாம் அழைக்கப்படுவதாயிற்று.

- சூடாமணி நிகண்டின் பதினேராம் தொகுதியில் 1575 சொற்களே பொருள் விளக்கம் செய்யப் பெற்றுள் ளன; ஆனல் இதிலோ 2526 சொற்கள் இடம் பெற்றுள் ளன. இந்நூல் முழுவதற்கும் வேதகிரியாரே தெளி வாக உரை எழுதியுள்ளார். இது கி. பி. 1842-ஆம் ஆண்டில் யாழ்ப்பான சங்கத்தாரால் பதிப்பிக்கப் பட்டது. எனவே, ஆசிரியர் பத்தொன்பதாம் நூற்ருண் டினர் என்பது தெளிவு. இந்நூலே யன்றி மேலும் 346

இலக்கியக் களஞ்சியம் முதலிய பல நூற்கள் வெளி யிட்டிருக்கிருர் வேதகிரியார். தொகைப் பெயர் விளக் கம் என்னும் நிகண்டு நூலும் இவருடையதே.

வேதகிரியார் சூடாமணி ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்ததாகும்.

கந்த சுவாமியம்

இதன் ஆசிரியர் சுப்பிரமணிய தேசிகர் என்பவர். இவர் கீழ்வேளுர் என்னும் ஊரினர். ஆசிரியர் பழைய நிகண்டுச் சொற்களைத் தொகுத்து இப்படியொரு நிகண்டாக நூற்பா (சூத்திர) கடையில் எழுதி யுள்ளார். நிகண்டு நூற்கள் இப்படி இப்படி அமைக்கப் படவேண்டும் என இருபத்து நான்கு கட்டளைகள் (விதிகள்) இந்நூலில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறே இங்கிகண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சொல்லுவது போலவே செய்துகாட்ட வேண்டுமல்லவா ?

முதல் இரு தொகுதிகள் மட்டும் கி. பி. 1844-இல் அச்சாயின. முதல் தொகுதியில் 1318 சொற்களும், இரண்டாம் தொகுதியில் 1425 சொற்களும் இடம் பெற்றுள்ளன.

1844-ஆம் ஆண்டில் அச்சாகியிருப்பதை கோக் கின், ஆசிரியர் காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற் பகுதி என்பது புலகுைம்.

கந்தசுவாமி என்பவர், இந்நூலாசிரியராகிய சுப்பிரமணிய தேசிகரின் பெருமதிப்பிற்கு உரியவராய் இருந்திருக்கலாம், எனவே, அவர் பெயராலேயே கந்தசுவாமியம் என இங்கிகண்டினை அழைத்தாரோ

என்னவோ ! தொகைப் பெயர் விளக்கம்

இதன் ஆசிரியர் வேதகிரி முதலியார். இவர் களத் துர் என்னும் ஊரினர் தலைசிறந்த தமிழறிஞர்; 19-ஆம் நூற்ருண்டினர்.

இந்நூலும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்தது என்பது தொகைப் பெயர் விளக்கம் என்னும் அதன் பெயரா லேயே புலனுகும்.

இஃது அகரவரிசையில் அமைந்துள்ளது; கி. பி. 1849-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது.

22 இலக்கத் திறவுகோல்

இப்படியொரு நூல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியைச் சார்ந்ததாகும்.

இலக்கம் என்ருல் எண். தொகை எண்களால் குறிக்கப்படும் பொருள்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் (சாவி) போல இருத்தலின் இலக்கத் திறவுகோல் என அழைக்கப்படுகிறது.

இந்தக்காலத்தில் நூல்(புத்தக)விற்பனையாளர்கள் வாங்குவோரைக் கவர்வதற்காக வாணிக நோக்குடன் கவர்ச்சியாக நூற்கட்குப் பெயர் வைப்பது போல, இந்த இலக்கத் திறவுகோல் என்னும் பெயர் இயற்கை யிலேயே கவர்ச்சியாக அமைந்து விட்டதல்லவா ? திறவுகோல் இருந்தால்தானே திறந்து உள்ளேயிருக் கும் பொருளைக் காணமுடியும் ! அது போலவே, இந் நூலின் துணைகொண்டு, தொகை எண்களில் அடக் கப்பட்டிருக்கும் பொருட் பெயர்களைத் தெரிந்து கொள் ளலாமன்ருே ?

தொகைண்ைகளால்சுட்டப்படும் பொருட்பெயர்கள் அகரவரிசையில் முறைப்படுத்தப்பட்டு ஒர் அட்ட வ2ண (Alphabetical List) கொடுக்கப்பட்டிருக்கிறதாம் இந்நூலில். நாகார்த்த தீபிகை நிகண்டு

காகா (நான) என்ருல் பல என்று பொருள்ாம்: காகாவிதமான (பலவிதமான) என்ற உலக வ்ழ்க்கை யும் காண்க. அர்த்தம் என்ருல் பொருள் என்று பொரு ளாம். நாகார்த்தம் (காகா-அர்த்தம்) என்ருல் பல பொருள் என்று பொருளாம். எனவே, காந்ார்த்த தீபிகை என்பது, சொற்கட்குப் பல் பொருள் விளக்கம் தரும் நிகண்டு என்பது பெறப்படும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் முத்துசாமி பிள்ளை என்னும் புலவர். இவர் திருநெல்வேலிக்காரர். இவர் மருகர் சுவாமிநாதப் பிள்ளை என்னும் தமிழறிஞர். மருகர் மாமனரின் நிகண்டைப் புகழ்ந்து ஒரு சிறப்புப்பாயிரம் எழுதி யுள்ளார். இந்நூல் கி. பி. 1850-ஆம் ஆண்டில் எழு தப்பட்டதாகத் தெரிவதால், ஆசிரியர் பத்தொன்பதாம் நூற்ருண்டினர் என்பது புலப்படும்.

நூல் அமைப்பு

இந்நூல் அரும் பொருள் விளக்க நிகண்டைப் பல வகையில் ஒத்துள்ளது; அதாவது, அது போலவே இஃதும் ஒரு சொல் பல் பொருட் பெயர்த்தொகுதி என் னும் இரண்டாவது பெரும்பிரிவைச் சேர்ந்தது; விருத்த யாப்பினுல் ஆனது. ககர எதுகைமுதல் னகர எதுகை ஈருக எதுகைமுறையில் பாகுபாடு செய்யப்பட் 350

டுள்ளது. இதன் எதுகை முறையமைப்பு மிகத் தெளிவாயுள்ளது. சொற்கட்கு முன்னல் வேண்டாத அடைமொழிச் சொற்கள் இங்கிகண்டில் இல்லை. ஆசிரி யர் முன்னேர் நிகண்டுகளிலுள்ள சொற்களோடு பல வடமொழித் திரிபுச் சொற்களுக்கும் இந்நூலில் பொருள் கூறியுள்ளார். அதனுல் இது பெருநூலாய்: விரிந்துள்ளது. மொத்தம் 1102 பாடல்கள் இதில் உள்ளன. 5452 சொற்கள் பொருள் விளக்கப்பட்டுள் ளன. இச்செய்திகளை நூலின் முகப்பில் ஆசிரியரே பாடிய தற்சிறப்புப் பாயிரத்திலுள்ள

' ககராதி னகாாவிறு எதுகை வைத்து....' “ வடநாற் சொல் செந்தமிழினும் பொருள்

தொடுத்துச் செயும் நாநார்த்த தீபிகை..." ' அடை சொற்கு அஞ்சிப் பற்பல .

விருத்தத் தானும் பகர்ந்த....” ' முன்னேர் பன்னூலிற் சில வெவ்வே றுரைத்த

வெலலாஞ் சேர்த்து ஒன்ருத் திரட்டி....... என்னும் பாடற் பகுதிகளால் அறியலாம்.

இந்நிகண்டிற்கு, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த உயர்திரு. சு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் சிறந்த உரை யெழுதியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தால், 1936-ஆம் ஆண்டில் இந்நூல் பதிப்பிக்கப் பெற்றது. சிந்தாமணி நிகண்டு

சிந்தாமணிபோல் சிறந்தது என்னும் பொருளில் இந்நூல் சிந்தாமணி நிகண்டு எனப் பெயர்பெற் றிருக்க வேண்டும். பல நிகண்டுகள் உலவும் காட்டிலே ஒரு புது நிகண்டு தோன்றும்போது ஏதேனும் ஒரு பெயர் வைத்தாக வேண்டுமல்லவா? r

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் வைத்தியலிங்கம் பிள்ளை, 676 பார்; இவர் யாழ்ப்பாணத்து வல்லி பட்டினத்துற்ை. என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவரே இந்நிகண் டுக்கு ஒர் உரையும் எழுதி கி. பி. 1874-ஆம் ஆண்டில் அச்சிட்டார். எனவே, ஆசிரியர் 19-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியினர் என்பது தெளிவு. *.

நூல் அமைப்பு

அரும்பொருள் விளக்க நிகண்டு, காகார்த்த தீபிகை என்பன போல இந் நிகண்டும் சொற்கட்குப் பொருள் கூறும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்ததாகும். அவை போலவே இஃதும் எதுகை முறையில் அமைந்த தாகும். ஆல்ை அக்கிகண்டுகளில், பல பொருள்களை உடைய சொற்களும் இடம் பெற்றுள்ளன; இங்கிகண் டிலோ ஒரு பொருளையுடைய சொற்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதனை ஆசிரியரே பாடியுள்ள 352

" நேர்செறி இளைஞர் ஒர்சொற்கு

ஒரு பொருள் நோாய் ஒரப் பார்செறி நிகண்டு சிந்தா

மணியெனப் பகர்வன் ஒன்றே.”

என்னும் பாயிரப் பாடலால் அறியலாம். இளைஞர்கள் புரிந்து கொள்வதற்காக இங்கிகண்டை இயற்றியதாக ஆசிரியர் பாயிரத்தில் கூறியிருப்பதிலிருந்து, அன்று கல்வித் துறையில் மொழிப்பயிற்சி இன்றியமையாத இடம் பெற்று மிகவும் கவனிக்கப்பட்டிருந்தது என்ப தும், எப்படியாவது நிகண்டுகளின் வாயிலாகச் சொற். பொருள்களை மாணவரின் உள்ளத்தில் திணித்துவிட வேண்டும் என்று கருதாமல், மாணவர்க்கு எளிதில் புரியக்கூடிய முறையில்-கன்கு பதியக் கூடிய வகை யில் நயமாகக்கல்வி புகட்ட வேண்டும் என்னும் உள நூல் முன்ற (Psychologiĉal Method) 316ši@ ற ஆசிரியர் களால் பின்பற்றப்பட்ட்து என்பதும் நன்கு விளங்கும்.

முன்னெழுந்துள்ள நிகண்டுகள் போலவே புது கிகண்டும் இருந்தால் அதனுல் ஒன்றும் பயன் இல்லை யல்லவா? எனவே, இந்நிகண்டின் ஆசிரியர் இதில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தெரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும்: மாணவ இளைஞர்கள் முதலில் ஒரு சொல்லுக்கு உரிய முக்கியமான ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளட்டும்; பிறகு பல பொருள்களைப் பற்றிப் பார்த்துக்கொள்ளலாம் என்று, எளிமையி லிருந்து படிப்படியாக அருமைக்குச் செல்லுதல்’ என்னும் உளநூல் முறையை ஒட்டியவர் போல, ஆசிரியர் இங்கிகண்டில் 3000 (மூவாயிரம்) சொற்களை 353

எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரே பொருள் கூறிச் சென்றுள்ளார். நூலில் மொத்தம் 400 செய் யுட்கள் உள்ளன.

இந்நூலும் எதுகை முறையில் அமைந்திருப்ப தால், சொற்களை எதுகை கோக்கி விரைவில் கண்டு பிடித்துவிடலாம்.

அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு

அபிதானம் என்ருல் பெயர். பல்பொருட் பெயர் களும் சொல்லப்படுவதால் நிகண்டினை இப்பெயரால் அழைப்பதும் உண்டு. இந்நிகண்டின் ஆசிரியர் கோபாலசாமி நாயக்கர் என்பவர். இவர் கீழ்வேளுர் என்னும் ஊரினர்; வீராசாமி நாயக்கரின் மகன்.

இந்நூல் பல்லினப் பாவகையால் பாடபபட்ட தாகும். இதன் முதல் தொகுதி மட்டும் ஆசிரியர் வாழ்ந்த போதே கி. பி. 1878-ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டது. எனவே ஆசிரியர்காலம் 19-ஆம் நூற்ருண் டின் பிற்பகுதி என்பது தெளிவு. விரிவு நிகண்டு

இந்நிகண்டு, மிகப் பல சொற்கட்கும் பொருள் கூறும் விரிவான நிகண்டு என்பது விரிவு நிகண்டு’ என்னும் இதன் பெயராலேயே விளங்கும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் கா. அருணுசல காவலர் என்பவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்து வீரவநல்லூர் என்னும் ஊரினர்; இவர் மகனுகிய பூமிநாத முதலியார் என்பவர் வீரராகவபுரம் என்னும் ஊரில் பெரிய வழக்குரைஞராய் விள்ங்கிய்வர். ஆசிரியர் வீரவநல்லூரில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூமிநாதக் கடவுளைத் தெய்வமாகக் கொண்டவர்; அதனுல்தான் தம் மகனுக்குப் பூமிநாதன் என்னும் பெயரை இட்டுள்ளார். இதனை, ஆசிரியரே பாடியுள்ள விரிவு நிகண்டின் பாயிர்த்திலுள்ள, 3.

' பொன் பொலி வீரை வேணிப்

பூமி நாதன்றன் தாசன்.”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம்.

நூல் அமைப்பு இஃதும் ஒரு சொல் பல் பொருள் தொகுதி என் னும் பிரிவைச் சேர்ந்ததாகும். சூடாமணி நிகண்டின் பதினேராவது தொகுதியை முதல் நூலாகக் கொண்டு சொற்பொருள் விளக்கிச் செல்வதால் இந்நூல் 'பதினேராவது விரிவு நிகண்டு என்றும் அழைக்கப் 355

பட்டது. சூடாமணியைக் காட்டிலும் மிக விரிவாகப் பல்வகை வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள் ளன; திருநெல்வேலி மாவட்டத்து வழக்குச் சொற்கள் மிக்குள்ளன. விரிவான இங்கிகண்டும் எதுகை முறை யில் அமைக்கப்பட்டிருப்பது படிப்போர்க்கு ஒரளவு வசதியே. இச்செய்திகளைப் பாயிரப் பகுதியிலுள்ள,

  • பொன்பொலி வீரைவேணிப் பூமிநா தன்றன் தாசன்

முன்புறு நிகண்டோடேனே முதுமொழிப் பொருளனேகம்

இன்புறும் எதுகை யாக இயற்றுமிந் நிகண்டை மேலோர்

அன்பமை கருத்திற் கொள்ள அருள்செய் ஐங்கர மாதேவே.” எனனும பாடலால அறியலாம்.

ஒரு சொல் பல் பொருள் தொகுதியைச் சேர்ந்த

கிகண்டுகளுக்குள்ளே விரிவு நிகண்டே மிகப் பெரிய தாகும். இதில் ஏறக்குறைய 1150 விருத்தப் பாக்கள் உள்ளன. இனி நூலின் மாதிரிக்காக இரண்டு செய்யுட்கள் வருமாறு:

(ககர எதுகை)

  • அகம் இடம் பாம்பு தானியம் புவி பள்ளம் உள்ளோடு

அகலியப் பொதுவே தண்டம் ஆகாயம் ஆழம் ஆன்மா பகலன் ஏழுருபு துக்கம் பாவம் உள்ளிடம் ஒர்தாரு தகுதியில் குணம் வீடோடு சாருபத்திரவம் நெஞ்சாம்."

இப்பாடலில் அகம்' என்னும் சொல்லுக்குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

(மகர எதுகை) ' கம்மலே இருமல் ஒர்வகைக் கடுக்கன் காதோலை

பம்மல் மாசோடு மங்கல் குரலடைப்பு என்பர் பாரோர்; பம்மல் மந்திப்பு மூடல் பொருத்திக் கட்டுகை மந்தாரம் செம்முதல் ஐம்பேர் என்பர்; மோட்டி தலைவி செல்வி.” 356

இப்ப்ாடலில் கம்மல், பம்மல், சீமாட்டி ஆகிய சொற்கட்குப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இக் கிகண்டு, சீமாட்டி என்னும் சொல்லையும் விடாமல் எடுத்துக்கொண் டிருப்பதை நோக்குக.

ஆரிய நிகண்டு

இந்த நிகண்டைப் புற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆரியமொழி எனும் வட்மொழிச் சொற்கள் நிரம்பத் தமிழ் மொழியில் கலந்து விட்டன அல்லவா ? அந்தச் சொற்களையெல்லாம் திரட்டி, அவற்றிற்குரிய பொருள் கூறுவதாயிருக்கலாம். இந்த நிகண்டு. அதேைலயே ஆரிய நிகண்டு என்னும் பெயரும் இது பெற்றிருக்

&B60s, L0.

" நீர்வேலி என்னும் இடத்தைச் சேர்ந்த சங்கர பண்டிதர் என்பார்தாம் இயற்றிய சைவப் பிரகாசனம் என்னும் நூலில், நூற்பா நடையில் ஆரிய நிகண்டு என ஒரு நிகண்டுநூல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-' . H என்ற செய்தி, சென்னைம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் காணக்கிடக்கிறது. சில நிகண்டுகள்

வேதகிரி முதலியார் எழுதிய இலக்கியக் களஞ்சி யம் என் னும் நூலில், பொதிய நிகண்டு, ஒளவை நிகண்டு என்னும் நிகண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகண்டுக்கும் உரியதாக ஒவ்வொரு பாட லும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் வருமாறு :

பொதிய நிகண்டு

“ தட்டுநீட் டுக்குறல் தணலினின் றுருகல்

தன்னெடை குறைதலில் லாமை

கொட்டு கடின மின்மை யாணிக்குக்

கூறுமாற் றறிவித்தல் சோதி

விட்டுவிட் டொளிர்தல் மிகுபுடத் திருத்தல்

வெவ்வழல் வென்றியைக் கொள்ளல்

கட்டிசாய்த் திடுகிற் பள்ளங்கொண் டதிக

கனங்கொளல் கனகலக் கணமே.”

இப்பாடலில் பொன்னின் இயல்புகள் கூறப்பட் டுள்ளன. தட்டி நீட்டப்படல், கெருப்பில் உருகுதல், எடை குறையாமை, தட்டுவதற்குக் கடினம் இல்லாமை, உரையாணிக்கு மாற்று அறிவித்தல், விட்டு விட்டுச் சுடர் வீசுதல், புடம் போடப்படல், கெருப்பால் அழி யாமை,கண்மாயிருத்தல் ஆகியதன்மைகளை உடைமை பொன்னின் இலக்கணமாம். இப்பாடல் படிப்பதற்கு மிகவும் சுவையா யுள்ளது. இப்பொதிய நிகண்டு விருத்தப் பாவகையால் ஆனது. 358

ஒளவை நிகண்டு

" ஏலம், தக்கோலம், சூடன்,

இலவங்கம், சாம்பிராணி, காலஞ்செல் அகில், சந்து, ஓங்கு

கத்துாரி, புழுகு, மெளவல், கோலமார் மருக்கொழுந்து, வெட்டி,

குங்குமம், இலாமிச்சம் வேர், சாலும் சண்பகம், சவ்வாது,

சாற்றும் சோடச வாசப்பேர்.” இப்பாடலில் பதினறு (சோடசம்) வகை வாசனைப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஒளவை என்னும் பெயருடைய யாராலாவது பாடப்பட்டதால் இக் நூலுக்கு ஒளவை நிகண்டு என்னும் பெயர் கொடுக்கப்

பட்டதோ ?

இப்படியாக நூற்றுக் கணக்கான நிகண்டு நூற்கள் தோன்றி நாளடைவில் மறைந்து விட்டன. சோழவந்தான் சண்முகம் பிள்ளையவர்களும் ஓர் அந்தாதித் தொடை நிகண்டு இயற்றினர். அகராதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் நிகண்டுகளை அறிந்தவர் எத்தனை பேர் ? மருத்துவ நிகண்டுகள்

இதுவரை பொதுவாக மொழித்துறைக்கு உதவும் கிகண்டுகள் பலவற்றைப் பற்றிப் பார்த்தோம். இவற் றுள்ளும் பல கலைகளுக்குரிய சொற்கள் இடம் பெற் றிருத்தலைக் கண்டோம். இவையே யன்றி, மருத்து வம், வானநூல் (சோதிடம்) முதலிய கலைகளுக்காகத் தனித் தனியே சிறப்பு நிகண்டுகள் பல இருந்தன. அவற்றுள் சில கிடைக்கப்பெற்று இப்போதும் உள்ளன. பதினெண் சித்தர்கள் மருத்துவம் பற்றிப் பதினெட்டு நிகண்டு நூற்கள் பாடியுள்ளனர். எடுத் துக் காட்டாக, அகத்தியர், போகர் ஆகியோர் நிகண்டு களைப் பற்றிப் பார்ப்போம் :

அகத்தியர் நிகண்டு

பிற்கால அகத்தியரால் அருளிச் செய்யப்பட்ட இந்நிகண்டுக்கு ஏமதத்துவம், பஞ்ச காவிய நிகண்டு, பஞ்ச காவிய நிகண்டு எண்ணுறு, அகத்தியர் நிகண்டு எண்ணுாறு என்ற பெயர்களெல்லாம் வழங் கப்படுகின்றன. விருத்த யாப்பினுல் இயற்றப்பட்ட இந்நூலில், வயித்திய காண்டம், மாந்தரீக காண்டம் என்றெல்லாம் எட்டுக் காண்டங்கள் உள்ளன. ஆயிரத் துக்கு மேலும் பாடல்கள் மிக்குள்ள இங்கிகண்டுக்கு அகத்தியர் நிகண்டு எண்ணுாறு என எண்ணின் மேல் ஒரு பெயர் உள்ளதின் பொருத்தம் புலப்பட ωfl6ύ8ου.

ஆசிரியர் ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத் திலும் கடவுளை வணங்கிக் காண்டத்தின் விவரமும் 360

கூறியுள்ளார். புலத்தியனே கேள்' என்று அடிக் கடிப் புலத்திய முனிவனை விளித்துக் கூறுவதுபோல் நூல் அமைந்துள்ளது. பல சித்தர்களைப் பற்றியும், பல நிகண்டு நூற்களைப் பற்றியும், பல்வகைப் பொருள் களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் - ஆயிரக்கணக் கில் - நூருயிரக் (இலட்சக்) கணக்கில் எண்ணிக்கை யிட்டு, படி மரக்கால் போட்டு அள அள என்று அளந்துகொண்டு போயிருக்கிருர் அகத்தியர் இக் நூலில்! அந்த இடங்களையெல்லாம் படிக்கும்போது, ஏதோ மாயா சாலக் கண்கட்டி வித்தை போல் தலை சுற்றுகிறது.

இந்நிகண்டு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானல், கன்கு ஆய்ந்து ஒரு தனி நூலே எழுத வேண்டும். எனவே, நூலின் மாதிரிக்காக இரண்டு பாடல்களை மட்டும் பார்ப்போம் :

மூளையின் பெயர்

" முடியான அகாரமதின் முதற்கரு தானுகும் மூலவெளி சச்சிதா நந்தவெளி யாகும் அடியான படியாகும் பரவெளியு மாகும்

அந்தமெனும் ஞானவழி ஆகாய வெளிதான் குடியான மூலவெளி கைலைவெளி யாகும்

குருவிருப்பா ரண்டமெனும் அகண்ட மெனும்பெயர் செடியான பேரண்ட பேரொளி யென்றும் பெயர் செப்பினுேம் இந்தபடி சிரசதுவின் பெயரே.” முதல் காண்டத்திலுள்ள இப்பாடலில், மூளையைக் குறிக்கும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இன்னும் அடுத்தடுத்த பாடல்களில் மூளை பற்றியும் மூளைக்குள் இருப்பவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவையென்ன 361

உடற்கூரு ? அறிவியலா ? யோகமா ? எல்லாமுமா ? இக்காலத்தில் மிகப் பலர்க்கு எட்டாத செய்திகள் இவை அன்ருே?

சுக்கின் பெயர்கள் ‘ மகத்தான வருக்க ம்ென்றும் நாகராதி யென்றும்

மடவான வியமென்றும் அதற்குப் பேரு அகத்தான வகநாதம் என்றும் பேரு . அருளினுேம் வலதம் என்றும் அதற்குப் பேரு வகத்தான வேர்க்கொம்பு வென்றும் பேரு

வசனித்தோ மஞ்சத்த மென்றும் பேரு நகத்தான நாக்குமம் என்றும் பேரு

நளினமதாய்ச் சொல்லிவிட்டோம் சுக்கின் பேரே...' ஐந்தாங் காண்டத்தில் உள்ள இப்பாடலில் சுக்கினைக் குறிக்கும் பல பெய்ர்களைக் காணலாம். மேலும் அறியவேண்டிய, செய்திகள் எத்தனையோ இங்கிகண்டில் உள்ளன. ஏழாங்காண்டத்தில் பல்வகை யோகங்கள் தொடர்பான செய்திகள் கூறப்பட்டிருப் பது மிகவும் குறிப்பிடத் தக்கது. மற்றும், இப்பகுதி யில் விளக்கப்பட்டுள்ள மதப்பூ லேகியம்’ என்னும் மருந்து செய்யும் முறையும் அறியத் தக்கது. போகர் நிகண்டு

போகர் ஒரு சித்தர். மற்ற மக்களால் செய்ய முடி யாத வியத்தக்க அருஞ்செயல்கள் புரிபவரைச் சித்தர் எல்ை மரபு. போகரும் அருஞ் செயல்கள் பல புரிந்த தாகப் புராணக் கதைகள் பல உண்டு. இவர் அகத்தி யரின் மாணுக்கர் என்பர் சிலர். காலாங்கிநாதர் என்ப வரின் மாணக்கர் இவர் என இவரே இயற்றிய போகர் ஏழாயிரம்' என்னும் , நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கணர் கருவூர்த் தேவர், சுந்தராநந்தர், மச்ச முனி, கந்தீசர், இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி முதலிய சித்தர் பெருமக்கள் போகரின் மாணுக்கர்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனல், இக்கிகண்டின் இறுதியில், மேல் குறிப்பிடப்பட் டிருப்பவர்கட் கெல்லாம் போகர் வணக்கம் சொல்லியுள்ளார். உண்மை எதுவோ......? -

விருத்தப்பா யாப்பினுலான போகர் நிகண்டு, போகர் நிகண்டு ஆயிரத் திருநூறு' என்று பாடல் களின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பெயர் அழைக் கப்படுவ துண்டு. இதில் 1200 பாடல்கள் உள்ளன. இந்நூலே யன்றி, போகர் ஏழாயிரம், நிகண்டு பதினேழாயிரம் சூத்திரங்கள், எழுநூறு யோகம் என் னும் நூல்களும் போகர் இயற்றியுள்ளார். நிகண்டு பதினேழாயிரம் சூத்திரங்கள்' என்னும் பெயரிலிருந்து, 17000 நூற்பாக்கள் கொண்ட ஒரு பரந்த நிகண்டு போகரால் இயற்றப்பட்டுள்ளது என்று அறியும்போது பெரு வியப்பு தோன்றுகிறது. இனி, இங்கே சொல்ல 363

எடுத்துக் கொண்ட் போகர் நிகண்டு ஆயிரத்திரு நூறு என்னும் நூலுக்குள் செல்லலாம் :

போகர் சிவனையும் உமையையும் பிள்ளையாரையும் கலைமகளையும் சித்தர்களையும் மு னிவர் க 2ள யும் காப்பாக வணங்கிப் பின்னர் நூலைத் தொடங்குகிருர் : அக்காப்பு வருமாறு :

" அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் போற்றி

அடுத்து நின்ற உமையவள்தாய் பாதம் போற்றி நிகண்டெனவே திருமூலர் நாயர் பாதம் போற்றி

நீங்காமல் காலாங்கி ஐயர் பாதம் போற்றி புகழ்ந்து நின்ற நா தாக்கள் ரிஷிகள் பாதம் போற்றி

புகழான வாக்குடைய வாணி பாதம் போற்றி முகந்துநின்ற குஞ்சாத்தின் பதத்தைப் போற்றி மூவுலகும் மெச்சுதற்கு நிகண்டு கேளே."

இப்பாடலில், தெய்வங்களுடன் திருமூலர், காலாங்கிநாதர் முதலிய சித்தர்களும் ஒருசேர வைத்து மதிக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

இங்கிகண்டில் உடற்கூறு-மருத்துவம் தொடர் பான பல்வகைப் பொருட்கட்குரிய பெயர்கள் விவர மாகக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகக் கல்காரின் பெயர்களைக் கூறும் பாடல் வருமாறு :

' கல்நாரின் பெயர்தனையே கருதக் கேளு

கல்லுக்குட் சவளையாங் கடிய சீலை நாரு அல்நாரு வில்லுக்குள் சிலாவிந்து வாகு மாற்றிகம் பூங்கல்லின் கார மாகும் செல்நாரு சிலையின்ாவி கல்லு மாகும்

சிறு நாரு கல்லதுதான் சிவப்பு மாகும் முல்நாரு சத்துமாம் சுண்ண மாகு

முக்கிரமாங் கல்நாரின் பெயருந் தானே.” 23 364

போகர் நிகண்டில் சித்தர்களின் வயது சொல்லப் பட்டிருப்பது மிகவும் வியப்பூட்டுகிறது. சித்தர் களின் வாழ்நாளின் குறைந்த எல்லை 120 ஆண்டு களாம்; உயர்ந்த எல்லே 700 ஆண்டுகளாம்; அவர்தம் சராசரி வயது 500 ஆண்டுகளாம். இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இனம் இப்போது எங்கே போயிற்ருே தெரியவில்லை.

மேலும் இக்கிகண்டில், வெடியுப்பு திராவகம் செய் யும் முறையும், தங்கத்தில் இரசம் எடுக்கும் முறையும் இன்னும் பல முறைகளும் பல பாடல்களில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்பவர்கட்கு இக்குறிப்புக்கள் பெரிதும் உதவும். கடைகளில் விற்கக் கூடிய அறுபத்து நான்கு காட்டு மருந்துச் சரக்குகளின் பெயர்கள் இந்நூலில் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

இந்நிகண்டு கிடைத்தற்கு அரியதென்றும், இதிலே அரும்பெரும் பொருள்கள் பல அறிவிக்கப்பட் டுள்ளன என்றும், இஃது ஆயிரத் திருநூறு பாடல்கள் கொண்ட தென்றும் நூலின் இறுதிப்பாடலில் ஆசிரி யர் கூறியுள்ளார். அப்பாடல் வருமாறு:

' கிட்டாது இந்நூல்தான் எவர்க்குக் கிட்டும்

கிருபையுடன் சிவயோகி முனிவர்க்குக் கிட்டும் எட்டாத பொருள்களெல்லாம் இதிலே தோயும்

என்மக்காள் சித்தர்களே முனிவர்க் கென்றும் அட்டாத ஆயிரத் திருரு ருக.

அறைந்திட்டேன் நிகண்டெனவே பெயர் வகுத்தேன் திட்டாமல் எந்தனை நீர் எப்போதுந்தான்

திறமுட்னே துதிக்கு நூல் இது முற்றே.” 365

இந்தப் போகர் நிகண்டைப் போல இன்னும் பல மருத்துவ நிகண்டுகள் தமிழ் மொழியில் நூற்றுக் கணக்கில் தோன்றியும், போற்றுவா ரின்மையால் மறைந்தே போயின. -

இனி வானநூல் பற்றிய நிகண்டுகள் பார்ப் போம். வானநூல் நிகண்டு

கணிநூல் அல்லது வானநூல் எனப்படும் வானியற் கலை (சோதிடக் கலை) பற்றிய நிகண்டுகள் பல தமிழில் இருந்தன. பெரும்பாலானவை மறைந்து போயின. இத்துறை நிகண்டின் மாதிரிக்காக, சாதக சிந்தாமணி என்னும் கணிநூல் இயற்றிய தில்லை நாயகர்' என்னும் கணிப்புலவரின் படைப்பாகிய :கால நிகண்டு', 'காரக நிகண்டு ஆகியன குறித்துச் சிறிது காண்பாம்:

கால நிகண்டு

இதில், கிழமை, திதி, நாள் (நட்சத்திரம்), யோகம் கரணம், இராசி, கோள் முதலிய காலத் தொடர்புடைய பொருட்கள் பேசப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை யும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்நிகண் டினை. ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்னும் குரிவினதாகக் கொள்ளலாம். இங்கிகண்டின் மாதிரிக் பிகாக, அசுவிகி, பரணி, கார்த்திகை என்னும் நாட்கட், (நட்சத்திரங்கட்கு) உரிய பெயர்களைக் குறிக்கும் பாடல் வருமாறு:

(அசுவிகி-பரணி-கார்த்திகை)

  • பரிமருத் துவணுள் யாழேறு செந்நி

பகர்வாசியைப் பசி யிரலை பரிவுறு முதனுள் அசுபதி யாகும் பகலவன் ருழிமுக் கூட்டும் சரியுறு கிழவன் பூதஞ் சோறடுப்புத்

தருமநாள் பரணியே யென்பர் 367

எரி பிறந்திடு நாள் நாவிதன் அங்கி

இருல் அளக்கு என்பர் கார்த்திகையே."

அடுத்து ஞாயிற்றின் (சூரியனுடைய) பெயர்களைக் குறிக்கும் பாடல்கள் வருமாறு:

“ பருதி ஆதித்தன் இமகான் பதங்கன் பனிப்பகை விண்மணி என்றுழ் அருணன் மார்த்தாண்டன் பாற்கரன் கதிரோன்

ஆயிரங் கதிரி நன்றபநன் இருள்வலி சண்டன் சூரியன் மித்திரன் எல்லை அம்போருக நண்பன் தருமொழி வேந்தன் சூரனே கவிதாத்

தரணிபன் சுடரவன் என்பார் ; ” " அனலியே பகலோன் வெய்யவன் பாதுமரி

அண்டயோநி ஏழ் பரியோன் கனலியே சான்ருேன் விலோசநன் மாவே

காலத்தை யளந்திட்டோன் இரவி இனவிரிச்சிகனே திவாகசன் ஒற்றை

யாழியன் அருணனே டுதயன் தினகரன் அருக்கன் ஞாயிறு பதங்கன் செப்பிய கிரண மாலியனே.” இவ்வாறு கால நிகண்டில் ஒவ்வொரு காலப் பொருட்கும் உரிய பல பெயர்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

காரக நிகண்டு

காரகம் என்ருல், வினைமுதல்-செயல்தலைமைசெயல் உரிமை (காரகன் =செய்வோன்-இயற்று வோன்) என்று இவ்விடத்திற்குப் பொருள் பண்ணிக் கொள்ளலாம். இக்கிகண்டில் மேடம், இடபம், மிது கம் முதலியவற்றின் உருவங்களும், காரகங்களும், 368

பலவற்றின் பலன்களும், மற்றும் பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இங்கிகண்டின் மாதிரிக்காக, மேடத்தின் உருவமும் காரகமும் சொல்லப்பட்டுள்ள முதல் பாடல் வருமாறு :

“ மேடந்தான் மேடரூப மேயாகும்

மேவிடம் காடு நாற்காலாம் நீடிய தாதுவாகும் கீழ்த்திசையாம் நிறம் சிவப்பரசன் சாதியதாம் தேடிய ஆண்பால் நிலமகன் வீடாம்

திநகான் தனக்கு உச்சமாகும் வீடிய சநிக்கு நீசமாம் இரவில்

விழித்திடும் இராசியும் என்பார்.”

ஆட்டின் உருவமுடைய மேட ஒரையைப் (இராசி யைப்) பற்றிய செய்திகள் இப்பாடலில் இடம் பெற். றுள்ளன.

தில்லை காயகர் இயற்றிய இந்தக் கணி நூல் நிகண்டுகட்கு முன்னும் பின்னும் எத்தனையோ கணி நிகண்டுகள் தோன்றின. பெரும்பாலானவற்றை நாம்

இழந்துவிட்டோம்.

அரும்பெருங் கலைச் செல்வங்கள் தோன்றி மறைய இனியும் இடந்தராமல் தமிழ் மக்கள் விழிப்பெய்து வாராக!