தாவோ - ஆண் பெண் அன்புறவு/இயற்கை நெறி
1. உடனே செயல்படு.
மலையை மேல் நோக்கி ஊற்றுநீர் பாய்வதில்லை ஆனால் கடலை நோக்கித்தான் ஓடுகிறது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கீழ்நோக்கி ஓடும் தன்மை உடையவர்கள
இயற்கை முறையை ஒத்து இருவரும் மனமொத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கீழ் இறங்கிச் செல்ல வேண்டும் மனம் ஒப்பி வாழ்தலே சிறந்தது. தொன்று தொட்டு இயங்கிவரும் இயற்கை நெறி பொய்ப்பதில்லை
2. எல்லைக்கு அப்பால்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஏதோ ஒன்று உள்ளது. கவனி, அமைதியாய் உள்ளது முகர்ந்து, சுவைத்துப் பார் ஒன்றுமில்லை. தொடு, வெறுமை அதைக் கண்கள் கண்டதில்லை அதன் உயரம், அகலம், எடை, ஆழம் எங்குள்ளது? அது ஏதோ எனச் சொற்கள் கூறுகின்றன, இருந்தும் அதை அளவிட முடியாது
அது கொடுக்கப்படுகிறது, கொள்வதில்லை பெறப்படுகிறது, ஆனால் எடுக்கப்படுவதில்லை அது நமக்கு, நமக்காக, நமமுள் நேருகிறது. ஆனால் அதைக் காண முடியாதுஎதைக் காண முடியாததோ, அதை இழக்க முடியாது அளக்க முடியாத அது அளவிற்கப்பாற்பட்டது
3. செயற்படுதல்
மலையிலிருந்து கடலை நோக்கி ஓடும் சிற்றோடை தனது வழியில் உள்ள ஒவ்வொரு கல்லையும் தொடடுச் செல்கிறது மழை பொழிகின்ற இடத்தை நனைக்கின்றது. உயர் நிலை முதல் கீழ் நிலை வரை, கடினமானது முதல் மென்மையானது வரை, காய்ந்த இடம் முதல் அதிக ஈரமான இடம் வரை
மனம் போனபடி தண்ணீர் அது எல்லாவற்றையும் ஈரமாக்கிச் செழித்து வளர்க்கிறது ஏற்றுக் கொள்ள மறுதலிப்பு இவற்றிற்கு அப்பால், தேர்ந்தெடுப்பதற்கும் அப்பால் உள்ளது விருப்ப மில்லாதது போராடாது நேர்மை செய்கிறது
4. அலைவற்று இருத்தல் -
எல்லாவறறிலும் மேலான நன்கொடை "இயற்கை”யின் நன்கொடை அது எவ்வாறு கொடுபட முடியும்? மற்றவர்கள தங்கள் கொடுப்பதை ஒழுங்கு படுத்தாத போதும், பெறுவதைச் சீர் படுத்தாத போதும் அமைதியாக இருப்பதன் மூலம்
மலைகள் இருக்கும் போது, நீர் அவற்றை விட்டு விலகி ஓடுகின்றது. பள்ளத்தாக்கு உள்ள இடத்தில் அது பாய்கிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள அசையும் அமைதிதான் ஒருவருக்கொருவர் கொடுக்கும் நன்கொடை அமைதியை நம்பு இணைந்து அமைதியாயிரு அது நகரும்.
5. பேரொப்புதல்
பேரன்னை தான் எல்லாவற்றின் உயிர் வாழும் படைப்புக் கலம் எல்லாவற்றிலும் அவளே உயிராக உள்ளாள்
ஏதும் செய்யாமலேயே, அவள் எல்லாவற்றையும் இருக்கச் செய்கிறாள். அவளது பெரிய கோளத்தில் (வட்டத்தில் பழுப்பு, பசுமை மற்றும் உயிர் வாழ் இனங்கள் செழிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அறிகுறி காட்டுவது போல அவள் இதனால் ஒவ்வொன்றும் தானே இருக்கும்
‘பேரன்னையால்’ தான் ஒவ்வொன்றுக்கும் இடையே தற்போதுள்ள பிணைப்பு உள்ளது. உருண்டையாகவும், சூழ்ந்துள்ளவாறும் உள்ள 'அவள் ஒரு முழுமையான வெறுமை, இதில் தான் எல்லாமே நடைபெறுகின்றன எல்லாவற்றிலுமாயும், எங்கும் காணப்படாததுமான ‘அவள்’ எவற்றையும் ஏற்கும் பேருள்ளத்தவள்6. எல்லையற்ற அறை
சுவரில்லை, ஆகவே அது வீடாகாது மிகவும் சிறிய அறையினுள் வாழ முடியாது அதனுள் உள்ள வெறுமைதான் இன்ப நலமுள்ளது
ஆனையும், பெண்ணையும் ஒருசேர வைத்துள்ள ஒரு வீடு வரையறுக்கப்பட வேண்டும், ஆனால் சுருக்கக் கூடாது நாற்புறங்களும் சுற்றியிருக்க வேண்டும. இருந்தும் இடைவெளி இருக்க வேண்டும் இருவரும் இணைந்து வாழ்வதில் எல்லையில்லா அறையைக் காண்
7. அன்புறவைக் கொண்டிரு
ஆணுக்கும். பெண்ணுக்கும் இடையே உள்ள பிணைப்பை வியககும்படி தக்கவை
காற்று, கடல் போல அதைத் தாங்கு. மலையைபோலத் தழுவு
8. உள்ளபடியே இருத்தல்
காக்கப்பட்டது இழக்கப்படும் இழக்கப்படுவது வைக்கப்படும் நிலைத்து வைக்கப்படாதது போல ஒருவருக்கொருவர் இருக்கவும்9. உள்ளிருந்து வருதல்
உரிமைப்படுத்து, அப்போது இழப்பு நேரலாம் முயற்சி செய், தோல்வி ஏற்படும். போராடு, தோல்வி உண்டாகும் வந்து சேரத் தளராதே கண்டுபிடிக்க, விட்டுக்கொடு நம்புவதற்கு, வெறுமையாயிரு. பெறுவதற்கு மேன்மை செய்
சிக்கலாகத் தோன்றும் எதுவும் எளிமையாகவும், எளிதாகவும் இருக்கிறது ஏனெனில் அது நம் உள்ளிருந்து தோன்றுகிறது. ஆனால் இல்லாமல் கொடுக்கப் படுவதில்லை.
10. மறைபுதிர் ஒன்றும் இல்லை
அது எல்லாவற்றிலும் இருப்பதாலும், எல்லா வற்றிற்கும் இடையே இருப்பதாலும், ‘இயற்கை’ என அழைக்கப்படுகிறது அது எல்லா இடங்களிலும், ஒவ்வொரு கணமும் உள்ளது ஆகவே இது ஒரு மறைபுதிர் அன்று ஆனால் அதைத் தேடையில் அது தவறிவிடும் அதைப் பற்றி எண்ணு, குழப்பம் உணடாகும்.
முகர்வதற்குச் சற்றே மூச்சு இழு கேட்பதற்குச் சற்று அக்கறை கொள் காணச் சற்றே விழி திற ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கண்டு கொண்டார் என்பது இல்லை, ஆனால் ஒருவர் மற்றவரைக் கண்டார் என்பதே11. வெளிப்புறம்
காதுகளால் அல்லாமல், அமைதி மூலம் கேள் கண்களால் இல்லாது, இருட்டின் மூலம் காண். சொற்களாலல்லாது. பேசாதவற்றை அறி
12. முட்டாள் ஆட்டம்
போலிமையை நீடித்துக் காக்க முடியாது நேர்மையின்மையை நிலையாக மறைக்க முடியாது நடிக்கும் முகத்திரை கிழியும். தாங்கள் ஏமாற்றுகிறோம் என்பதை மறந்தவர்கள்தாம் ஏமாறுகிறார்கள் இது எவ்வளவு மடமையான விளையாட்டு என்பதைக் கண்கள் காண்கின்றன
உலகில் எதையும் எங்கே மூடி மறைக்க முடியும்? ஆகவே ஒரு சிறிதளவு நேர்மை ஆயிரம் பங்கு தந்திர ஏமாற்றும் தன்மையை விட மிகச் சிறந்தது
13. தொடங்கும் இடம்
போலிமை தெளிவானதைத் தெளிவாக்காது (புகழில் லாத தாக்கும்) நாம் போலிமை செய்வது போல நாமில்லை நமது முயற்சிகள் கூட நம்மை (வெளி) தெரியப்படுத்தாது. முயற்சிகள் நிலைமையை இன்னும் இழிவாக்குகிறது முயற்சிகளும் போலிமையும் வெளி யேற்றப்படுத்தும் போது, எது அதாக உளதோ, அது தானே அதாகும் இதுதான் தொடங்க வேண்டிய நிலைதொடக்கம் சிக்கலானதாகத் தோன்றினாலும், தொடக்கத்தின் முதற்படி எளிதே எளிதான தொடக்கத்தைக் கண்டுகொள் எளிமையிலிருந்துதான் மிகவும் உயாந்தது தோன்றுகிறது உயர்ந்ததின் மையத்தில்தான் சிறியது உள்ளது எளிமையின் பெருமையைக் கண்டு கொள்
போலிமை, புகழ்ச்சியணி ஆகியவற்றிடம் கவனமாயிரு இன்றியமையாமையை நாடும் போது, எளிமையைப் பின்பற்று பெரியது சிக்கலானதன்று எளிமையை நம்பு இதிலிருந்து இணக்கமும், ஒற்றுமையும உருவாகிறது மிகக் குறைந்ததிலேயே பெருந்தனமை காணக் கிடைக்கிறது
15. வழக்கத்திற்குத் திரும்பல்
பொதுவான மறைபுதிரை நெருங்கி வா வழக்கமானவற்றைக் கவனி காண்பதற்கு வேறு எதுவும் இல்லை அலைபாயும் எண்ணங்கள் தொடக்க நிலைக்குத் திரும்பித் தெளிவடைகின்றன பொதுவான வற்றை வியப்பாக அறிவுதான் அறிகிறது16. புடவியைச் சரியீடு செய்
இரைச்சல் பெரிதாக இருப்பதால், நாம் கூறுவது கேட்க முடிவதில்லை அதிகப் பேரொளியால் நாம் பார்க்க முடிவதில்லை அதிகமான புதுமையில் நாமே மறைந்து விடுகிறோம் மிகுதியினைாலே நாம் தெளிவில்லாதிருக்கிறோம்
அமைதியான, மனத்தின் அடித்தளத்திலிருந்து பேச்சுகள் வரட்டும் அமைதி பேசட்டும அமைதியைக் கவனி சொற்களினிடையே உள்ள ஒலியைக் கேள்
பொறுமையாகவும், கவனமாகவும் இரு மேற்பரப்புதான் முதலில் தெளிவாயிருக்கிறது அடித்தளத்தைக் காண ஆழத்திற்கு நேரம் கொடு
ஒவ்வொரு கணமும், உலகைச் சீர்தூக்கிப் பார்
17. எண்ணங்களும் வினாக்களும்
புதிய உடலங்களை நாம் எங்குப் பெறுகிறோம்? ஒவ்வோர் உடலும் கடைசியில் தோற்றுப் போகிறது ‘தான’ என்றதும் கடைசியில் இழக்கிறது ஒவ்வொரு உடலின தான்” என்பது தனது நிலையின் பணிவை ஒத்துக் கொள்ளவேண்டும்இப்போது வழக்கமாக முன்னேறு. எண்ணங்களும், வினாக்களும்தான் பெரிய பேரிடர்கள் என்பதை மற
18. மாற்றத்தின் விளைவு
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள இடத்தை நிரப்பவும் முடியாது வெறுமையாக்கவும் முடியாது அதை நிரப்பு. இப்போது நிரப்ப அதிக இடம் இருககிறது அதை வெற்றிடமாக்கு, வெறுமை இன்னும் இருக்கும்
தேடு, அது கண்டுபிடிக்க முடியாதது அழை அது வராது இழ, அது இழக்க முடியாதது.
ஏனெனில் அது விலையற்றது. மதிப்பிற்கப்பால் பட்டதால், அது இலவசமாகக் கொடுக்கப்படுகிறது அதை பெரும் முயற்சிகளால் பெற முடியாது. ஒரு முறை கண்டு பிடிக்கப்பட்டால், அது அடக்க முடியாதது
ஒவ்வொரு கணமும் அது வேறுபடுவது. ஆனால் நாம் மாறுவதால், அது அதே பெயரில் அழைக்கப் படுகிறதுஆணும் பெண்ணும் சந்திப்பது போல, அது அவ்வளவு எளிமையாயிருப்பின், அது ஏன் அவ்வளவு இக்கட்டாயுள்ளது? அப்படிப்பட்ட போராட்டம், அவ்வளவு ஆவல். தேடல், திட்ட மிடுதல், சொற்போர், வற்புறுத்தலும், கெஞ்சுவதும், அப்பேர்பட்ட திருகல் முறுகல் ஏதோ இடைபட்டு, எளிமையானதும் சிக்கலாக ஆகிறது
முடிவு என்பது தெரிந்து கொள்ளுதல், செய்வது என்பதன்று ஆசை, விருப்பம், நம்பிக்கை, ஏன் தனிமையும் கூட மறப்பது சிறந்தது, ஏனெனில் இவை மனத்தைக் குழப்புகின்றன.
20. அறியும் தன்மை
பொருண்மைகள் கடினமாகத் தோன்றும் போது எளிமையையும், அழியும் தன்மையையும் நினைவு கொள் அது போலவே பொறுமையும், காட்சியும் நிலவும் போது நிறைவான அமைதி உவப்பு விலக்கப்படுகிறது.
21. வெளிப்படையான வினா
நகர்வதைத் தடு, அதன் மாற்றத்தை ஆய்ந்திடு. வெறுமையிலிருந்து எடுத்து விடு முழுவதும் நிரப்பு. அதற்குப் பெயரிட்டுச் சொற்களின் வலையில் இழ வெளிப்படையான வினாவின் மூலம் அமைதியான விடையை வெளிப்படுத்து
22. தெளிவானது
இயற்கையைப் போல, அகன்ற அதை இழக்க முடியாது. காணமுடியாதபடி அவ்வளவு குறுகலானது ஏமாற்றக் கூடிய அளவில் தெளிவானது
அடங்கிப் போவதால் இசைவு உண்டாகும் போதும், வெற்றி கொள்வதால் அமைதி உண்டாகும் போதும், பேசாமையின் போது சும்மா இருக்கும் போதும் அது அங்கே இருக்கிறது
போராடும் போது அது போய் விடுகிறது எடுக்கும் போது இழக்கப்படுகிறது. பெற்றுக் கொள்ளும் போது கொடுக்கப்படுகிறது, வெறுமையாயிருக்கும் போது நிரப்பப்படுகிறது
23. தொடக்கத்திற்குப் பயணம்
வழக்கமானதைக் கண்டுபிடிக்க வழக்கமானதை இழ. வழக்கத்தின் மதிப்பை வழக்கமின்மை உறுதிப்படுத்துகிறது படிக்கப்பட்டதை முழுமையாக அறியத் தெரிந்ததை விட்டு விடு. நமது எல்லா ஓட்டங்களும் வழக்கமானதை நோக்கி இட்டுச் செல்கின்றன வழக்கமானதுதான் சிறப்பானதாகிறது
போலிமையாய் இரு, சித்திரமாக உடுத்து ஏதோ ஒன்று இழந்தும, காணப்படுவதும் ஆகிறது. கண்டு பிடிக்காமல் இழ தொடக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் வழிப்பறிக் கொள்ளை எளிது
24. அமைதியான இடம்
சிக்கலான நிலையினால் எளிமை என்பது கவனித்தும் கவனியாது போலத புறக்கணிக்கப்படுகிறது அறிவுக் கூர்மையினால் எளிமை இழக்கப்படுகிறது நம்மை நாமே கடினப்பட்டு முட்டாளாக்குகிறோம்
வெறுமைச் செய்திலிருந்து தொடங்கு பின் உற்றுக் கவனி, கேட்பதைக் கவனி, பார்ப்பதை கண் விழித்துப் பாா ஏதும் எண்ணாமல் காதுகளைக் கூர்மையாக்கிக் கேள ஏதும் கருத்தற்றுத் திறந்த கண்களுடன் பார் அமைதியான இடம் ஓசையிலும், வெறுமையான காற்று முழுவதும் நிரம்பும்
'இயற்கையை’ அதனில் இருந்து பிரிக்க முடியாது.
25. பணிவைப் பழகு
பணிவைப் பழக்கப்படுத்திக் கொள். ஒருவருக்பணிவில் பிறந்து, பணிவில் இறக்கிறோம் தோற்றம் முதல் முடிவு வரை இது மெய்ப்பிக்கப் பட்ட வழி
26. சொற்கள் எளியவை
சொற்களைப் பயன்படுத்தல் எளிதுதான் ஆனால் அதனால் பயன் என்ன? 'இயற்கை நெறி' கூறப் படமுடியாத ஒன்று ஒவ்வொரு சொல்லையும் தேடு ஒரு சொல்லை மட்டும் தேடுவதால் பலனில்லை. இதை 'தாவோ’ என அழை ஆனால் அது எதுவாக அழைக்கப்படுகிறதோ, அது அதுவாக இல்லை ‘இயற்கை நெறி’ எங்கே? ஒவ்வொரு சொல்லிலும் சொற்களினிடையே சொற்களுக்கு அப்பாற்பட்டும்
சொற்களை மற சான்றோர்களின் திருவாய் மொழிகளை மனத்தளவில் கடைப்பிடி பின்னர் சான்றோர்களின் வாய்மொழிகளிலிருந்து விடுபடு பிறகு அங்கே உள்ளது "இயற்கை நெறி”ஆனால் அறிவுரை ஒன்று நினைவில் வை ‘இயற்கை நெறி’ இராது ஒன்றன் பெயரைக் கூறு 'இயற்கை நெறி’ இழக்கப் படுகிறது ஒரு சொல்லைக் கூட நினையாதே.
27. வானத்தைக் கைப்பற்று
நீரை நிறுத்து, ஆற்றைக் கைப்பற்று காற்றைக் கைப்படுத்தி, வானத்தைக் கைப்பற்று அது போல் மடமைதான் போராட்டம் ஆற்றைக் கைப்படுத்த ஆறாக மாறு வானத்தைத் தன்வயப்படுத்த வானாக மாறு
28. பிறப்பிறப்பைப்போல் முயற்சி இல்லாதது
ஒவ்வொரு கருவும், பிறப்பும் வெளிச்சத்தை நோக்கிச் செல்லும் இருளை வடிவாக்குகிறது ஒவ்வொரு வாழ்க்கையும், சிறப்பும் இருளை நோக்கிச் செல்லும் வெளிச்சத்தின் நாடகம்
நாள் தடைபடுத்த முடியாதது நிலவு தன் வழியில் செல்லும் பருவங்கள் தனது நேர்சீர் ஒழுங்கில் மாறுகின்றன இயற்கை முறையுடன் அமைதியாக ஒத்துப்போ, பிறப்பை ஏற்றுக் கொண்டது போலவே, இறப்பையும் ஏற்றுக் கொள்
ஒவ்வொரு கணமுமே பிறப்பும், இறப்புமாகும் ஒவ்வொன்றும் விடுதலை பெறுவதில் காலம் உள்ளது நாம் ‘இயற்கை நெறி’ வினால் முன்னேறுகிறோம்
காலம் தீர்மானது (உறுதியானது) வெகு விரைவில் அலலது காலம் தாழ்த்த இவற்றைத் தவிர்க்கக் கவனமாகவும் கருத்தில்லாமலும் இரு இவ் உலகம் முழுதும் ஒவ்வொரு கணத்தினைப் பற்றி நிற்கிறது இருந்தும் எதுவும் ஒரு பொருட்டாவதில்லை ஒவ்வொரு கணமும் பிறப்பையும் இறப்பையும் போலவே முயற்சி இல்லாதது
29. ஒரு வகையால் கண்டுபிடித்தல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வெறுமைதான் இருவரையும் இழுக்கிறது அதைத் தேடு, இழககப்படும் அதைத் துரத்திச் செல், அது அடைய முடியாதது
வெறுமையைக் காண, முதலில் வெறுமையாகு விரும்பாமல், தேவைப்படாமல் நாம் ஒரு வகையில் கண்டு பிடிக்கப்படுகிறோம்
30. நீரைப் போலக் கூடுதல்
விட்டுக் கொடுப்பது வலிமைக்கப்பால், வலிமை விட்டுக் கொடுப்பதற்கப்பால் வினாக்களுக்கு அப்பாற்பட்டது விடைகள், விடைகளுக்கு அப்பாற்பட்டதுஇரண்டையும் கடந்து அறிய, இரண்டிற்கும் அப்பால முழுமையை எண்ணு மனம் எப்படி அவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் குறைவாக எண்ணுவதாலா? சிறியதில் கூட ‘இயற்கை நெறி' முழுமையாய் உள்ளது
இரண்டையும தாண்டி எவ்வாறு ஆணும் பெண்ணும் செல்வது? நீரைப் போல பிளந்துகொண்டு கூடுவது போலே
31. பிறகும் வெகுநாள் இருக்கும்
தொடக்ககால ஆர்வத்துண்டல் வெகு நாள்களாகவே இருந்தது பிறகும் வெகு நாள்கள் இருக்கும் இதுவரை இருந்ததால் இப்போது அது தோல்வியுறாது இதை ஏற்றுக் கொண்டு அதனுள் இனிமையாக வாழு இரண்டு உயிர்களின் நிறைவு அடைவதைவிட அதனிடம் ஏராளமாய் உள்ளது
32. இயற்கையை கண்டறிய
நடப்பதற்கு இரு கால்களையும் பயன்படுத்து கேட்பதற்கு இரு காதுகளையும் பயன்படுத்து காண்பதற்கு இரு விழிகளையும் பயன்டுத்து. புரிந்து கொள்ள ஒன்றே போதும். “இயற்கை நெறி” யைக் கண்டு கொள்ள இருவரின் மனத்தையும் பயன்படுத்து
'தான்’ என்ற மனத்துடன் அலசுவது ‘தான்' என்பதையேக் காணும் ‘தான்’ என்ற இரு மனங்களையும் பயன்படுத்து ஆனால் ‘தான்’ என்பதை அன்று
'தான்’ ‘நான்’ என்பதல்லாததைக் காண ‘தான்' 'நான்’ என்பதைக கை விடு இன்னொன்றைக் காண ஒன்றை இழ 'இயற்கை நெறி'யைக் கண்டு கொள்ள இரண்டையும் கைவிடு
33. ஒவ்வொன்றும் இருக்கிறது
இல்லாதவற்றை இருப்பதாக மனம் சுற்றிக் கொள்கிறது முடிவில் இருப்பதுடன் இலலாதவற்றை முடித்துக் கொள்கிறது. மனத்தினால்தான் நாம் பிரிகிறோம் மேலும் ஒன்றிலிருந்து மற்றதை அறிகிறோம்
ஒருவர் மற்றவரைச் சிறிய மனத்தினால் வரையறுக்கிறார் பெரிய மனத்துடன் ஒருவர் மற்றவருக்கு உரிமையாகிறார் மனமே இல்லாதவர் மற்றவராகிறார்
34. அறிந்த ஒவ்வொன்றின் அடியில்
அறியாததால் பல தடல் உளது இருந்தும் அறிந்த ஒவ்வொன்றிற்கும் அடியில் அறியாத ஒன்று உள்ளது. ஆகவே தனித்தனியாக அறிவதும் புதிர்மறையை மேலும் தீவிரப்படுத்துகிறது
இருந்த போதும், அறிவதில் அறிவதற்கான புதிர்மறை உண்டு
35. இயற்கை வழியில்
மிகுதியானதை வெறுமை ஆக்குவதும், போதிய அளவில்லாத இடததில் நிரப்புவதும் தான் “இயற்கை நெறி” யின் வழி
மனம் நிரம்பியுள்ள போது, அதை வெறுமை ஆக்க வேண்டும் அது வெறுமையாயுள்ள போது 'இயற்கை நெறி' யினால் நிரப்ப வேண்டும்
ஆணும் பெணணும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி நிரம்பி உள்ள போது, முழுமையைச் சமன் செய்ய அவர்கள் வெறுமையைக் கையாள்கிறார்கள் இரு வரும் மகிழ்ச்சியின் முழுமை இல்லாத நிலையில, மறுபடியும் இருவரும் சேர்ந்து விரும்பும் போது, அவர்கள் முதலில் வெறுமையை உருவாக்க வேண்டும்.