திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/சோழமன்னர்
Appearance
4-ம் அதிகாரம்.
சோழமன்னர்.
நலன்கிள்ளி (18-27) :- இவன் கரிகாலன் குமாரன். அடிக்கடி சோபாண்டியருடன் சண்டை செய்தான். பாண்டியநாட்டின் 7 பலமான கோட்டைகளைத் தன்னுடைய தாக்கிக்கொண்டான்.
கிள்ளிவல்லன், பெருநார்க்கிள்ளி (28-72) :- நலன்கிள்ளி இறந்தபின் ராஜ வம்சத்தில் பிறந்த 9 பேர்கள் ராஜ்யத்தைத் தங்களுள் வீதித்துக்கொள்ளும் பொருட்டு பெருங் கலகம் செய்தார்கள். நலன்கிள்ளியின் குமாரன் கிள்ளிவல்லன் கலகத்தையடக்கி ராஜ்யத்தையடைந்தான். சேரபாண்டியருடன் செய்த யுத்தங்களில் இவனுக்கு வெற்றியும் கிடைத்தது. இவனுக்குப் பிறகு பட்டமடைந்த பெருநார்க்கிள்ளி ராஜஸூய யாகம் நடத்தினான்.
கொச்சென்னிக்கண்ணன், கொக்கிள்ளி :-சோழ நாட்டையாண்ட பிந்திய அரசர்களுள் கொச்சென்னிக்கண்ணன் பல ஆலயங்கள் கட்டினான். இதற்குப் பிறகு சுமார் 500 வருஷம் வரையில் சோழமன்னரைப்பற்றி ஒன்றும் தெரியாது.