திருப்புமுனை/11

விக்கிமூலம் இலிருந்து

11

தானும் போட்டியில் கலந்து கொண்டதை நினைக்க நினைக்க கண்ணாயிரத்துக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இலை. பெருமை யும் பூரிப்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. போட்டி முடிவைத் தெரிந்துகொள்ள துடிக்கலானான்.

“ஏன்'டா, மணி! எப்படா கட்டுரைப் போட்டி முடிவு தெரிவிப்பாங்க, முடிவு தெரிய ஒரே ஆவலா இருக்குடா.”

கண்ணாயிரம் துடிப்பதைப் பார்த்த மணிக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்துடன் அவனை நோக்கினான்.

“நீ ஏன்’டா இப்படி துடிக்கிறே! என்னமோ முதற் பரிசு வாங்கப் போறவனாட்டம்.”

மணியின் எகத்தாளமான பேச்சு கண்ணா யிரத்தைச் சீண்டுவது போலிருந்தது.

“வாங்கப் போறவனாட்டம் என்னடா? வாங்கத் தான்'டா போறேன்! வருஷம் தவறாமப் பரிசு வாங்கி வந்த இனியனின் பரிசு ஆதிக்கம் இந்த வருஷத்தோடு அம்பேல்’டா. போட்டி முடிவு தெரிஞ்சப்புறம் உனக்கே அது புரியும். முடிவுதான் எப்ப அறிவிப்பாங்களோ தெரி யலே.”

“நாளைக்கு நடக்கப் போற பள்ளி ஆண்டு விழாவிலே போட்டி முடிவை அறிவிச்சுப் பரிசும் கொடுக்கப் போறதா இப்பதான்'டா நம்ம ஆசிரி யர் சொன்னார்.” வந்து கொண்டிருந்த தங்கதுரை ஆசிரியரின் அறிவிப்பை ஒப்புவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/11&oldid=489839" இலிருந்து மீள்விக்கப்பட்டது