திருமுகப் பாசுரம்
Appearance
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதின்மிசை நிலவும் பானிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூ படியெனப் பாவலருக்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மணிதிகழ் குலவிய குடைக்கீழ்
சேருமா வுகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.