திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஆதாமின் வழிமரபு அட்டவணை.

1 குறிப்பேடு (The First Book of Chronicles) [1][தொகு]

முன்னுரை

'சாமுவேல்' மற்றும் 'அரசர்கள்' ஆகிய நூல்களில் குறிக்கப் பெற்ற நிகழ்ச்சிகளே 'குறிப்பேடு'களில் வேறொரு கோணத்தில் காட்டப்படுகின்றன. 'முதலாம் குறிப்பேட்டின்' இரு அடிப்படைக் கருத்துக்களாவன:

1) இஸ்ரயேல் மற்றும் யூதா அரசுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கிடையிலும் கடவுள் தம் வாக்குறுதிகளைத் தொடர்ந்து காத்ததோடு, யூதாவில் இருந்தவர்கள் வழியாக, தம் மக்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார். இதற்குச் சான்றாக தாவீது மற்றும் சாலமோன் ஆகியோர் ஆற்றிய பெரும் சாதனைகளும், யோசபாத்து, எசேக்கியா, யோசியா, ஆகியோர் செய்த சமயச் சீர்திருத்தங்களும், மக்கள் கடவுளிடம் கொண்டிருந்த பற்றுறுதியும் விளங்குகின்றன.

2) எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பியவர் சாலமோனே. ஆயினும், அங்கு தொடங்கிய இறைவழிபாட்டு ஒழுங்குமுறைகளையும் அவற்றுக்கான குருத்துவ, லேவிய அமைப்புகளையும் ஏற்படுத்தியவர் தாவீதே.

1 குறிப்பேடு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. வழிமரபு அட்டவணை 1:1 - 9:44 612 - 627
2. சவுலின் இறப்பு 10:1-14 627 - 628
3. தாவீதின் ஆட்சி

அ) தொல்லைகளும் சாதனைகளும்
ஆ) கோவிலைக் கட்டுவதற்கான தயாரிப்பு

11:1 - 29:30

11:1 - 22:1
22:2 - 29:30

628 - 656

628 - 644
644 - 656

1 குறிப்பேடு[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

ஆதாமிலிருந்து ஆபிரகாம் வரை[தொகு]

(தொநூ 5:1-32; 10:1-32; 11:10-26)


1 ஆதாம், சேத்து, ஏனோசு;
2 கேனான், மகலலேல், எரேது,
3 ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,
4 நோவா, சேம், காம், எப்பேத்து.


5 எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு.
6 கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.
7 யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.


8 காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.
9 கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான்.
10 கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.
11 எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,
12 பத்ரூசியர், பெலிஸ்தியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.
13 கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,
14 மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
15 இவ்வியர், அர்க்கியர், சீனியர்,
16 அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.


17 சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,
18 அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.
19 ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்; ஒருவர் பெயர் பெலேகு,[*] ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.
20 யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
21 ஆதோராம், ஊசால், திக்லா,
22 ஏபால், அபிமாவேல், சேபா,
23 ஓபீர், அவிலா, யோபாபு; இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.


24 சேம், அர்பகசாது, சேலா,
25 ஏபேர், பெலேகு, இரெயு,
26 செருகு, நாகோர், தெராகு,
27 ஆபிராம் என்ற ஆபிரகாம்.

இஸ்மயேலின் வழிமரபினர்[தொகு]

(தொநூ 25:12-16)


28 ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்; அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:
29 இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,
30 மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,
31 எற்றூர், நாபிசு, கேதமா; இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.


32 ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்: சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு. யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.
33 மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.

ஏசாவின் வழிமரபினர்[தொகு]

(தொநூ 36:1-19)


34 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்; ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.
35 ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.
36 எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.
37 இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.

ஏதோம் நாட்டின் முதல் குடிமக்கள்[தொகு]

(தொநூ 36:20-30)


38 சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.
39 லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னா;
40 சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்; சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.
41 அனாவின் மகன் தீசோன்; தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.
42 ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்; தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.

ஏதோம் நாட்டின் மன்னர்கள்[தொகு]

(தொநூ 36:31-43)


43 இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் மகன் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.
44 பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
45 யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
46 ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.
47 அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.
48 சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார்.
49 சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால்அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.
50 பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.
51 அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்: திம்னா, அலியா, எத்தேத்து,
52 ஒகோலிபாமா, ஏலா, பீனோன்.
53 கெனாசு, தேமான், மிபுசார்,
54 மக்தியேல், ஈராம்; இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.

குறிப்பு

[*] 1:19 எபிரேயத்தில் 'பிரித்தல்' என்பது பொருள்.

அதிகாரம் 2[தொகு]

யூதாவின் வழிமரபினர்[தொகு]


1 இஸ்ரயேலின் மைந்தர்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2 தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.
3 யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.
4 யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு; யூதாவின் புதல்வர் மொத்தம் ஐந்து பேர்.


5 பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.
6 செராகின் புதல்வர்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஐந்து பேர்.
7 விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார் [1] கர்மியின் புதல்வருள் ஒருவன். [2]
8 ஏத்தானின் மகன் அசரியா.

அரசர் தாவீதின் மூதாதையர்[தொகு]


9 எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெலூபாய்.
10 இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.
11 நகசோனுக்கு சல்மா பிறந்தார்; சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.
12 போவாசுக்குப் ஓபேது பிறந்தார்; ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
13 ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எலியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
14 நான்காம் மகன் நெத்தனியேல், ஐந்தாம் மகன் இரதாய்,
15 ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.
16 இவர்களின் சகோதரரிகள்: செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.
17 அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.

எட்சரோனின் வழிமரபினர்[தொகு]


18 எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.
19 அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்; அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.
20 கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.


21 பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.
22 செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்தன. 23 கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்றூர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.
24 எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.

எரகுமவேலின் வழிமரபினர்[தொகு]


25 எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்: தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.
26 எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.
27 எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.
28 ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா; சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.


29 அபிசூரின் மனைவியின் பெயர் அபிகயில்; அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.
30 நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்; செலேது புதல்வரின்றி இறந்தார்.
31 அப்பயிம் புதல்வர்: இசி; இசியின் புதல்வர், சேசான்; சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.


32 சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.
33 யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா; இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.


34 சேசானுக்கு புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.
35 சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.
36 அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்; நாத்தானுக்குச் சாபாத்து பிறந்தார்.
37 சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்; எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.
38 ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.
39 அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்; ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.
40 எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்; சிஸ்மாய்க்குச் சல்லூம் பிறந்தார்.
41 சல்லூமுக்கு எக்கமியா பிறந்தார்; எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.

காலேபின் பிற வழிமரபினர்[தொகு]


42 எரமகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்: தலைமகன் மேசா; இவர் சீபின் தந்தை; இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.
43 எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.
44 செமாவுக்கு இரகாம் பிறந்தார்; இவர் யோர்க்கயாமின் தந்தை. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.
45 சம்மாயின் புதல்வர்: மாகோன்; மாகோன் பெத்சூரின் தந்தை.


46 காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்; ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.
47 யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.


48 காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.
49 மேலும் அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான செவாவையும் பெற்றெடுத்தார்; காலேபின் புதல்வி அக்சா.


50 இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.
51 பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.


52 கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, அட்சி மெனுகோத்து.
53 கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர்; இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.


54 சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.


55 யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்; இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.

குறிப்புகள்

[1] 2:7 எபிரேயத்தில் 'பெருங்கேடு' என்பது பொருள்; மறுபெயர் 'ஆக்கான்' (காண். யோசுவா 7:1).
[2] 2:7 யோசு 7:1.


(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை