நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இணைபிரியாத வளர்ப்பு
Appearance
அபூதாலிப் அவர்களின் ஆதரிப்பில் பெருமானார் அவர்கள் வளர்ந்து வந்தார்கள்.
தம்முடைய பிள்ளைகளுக்கும் மேலாகப் பெருமானார் அவர்களை அன்போடு நேசித்ததோடு, இணைபிரியாமல் கவனித்துக்கொண்டார்.
தூங்கும்போது கூடத் தம்முடனே தூங்க வைத்துக் கொண்டார்.
வெளியே போவதாயிருந்தால், கூடவே அழைத்துச் செல்வார். இவ்வாறு கண்ணும் கருத்துமாக இருந்தமையால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதே இல்லை.