உள்ளடக்கத்துக்குச் செல்

நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/விளையாட்டிலே விருப்பம் இல்லை

விக்கிமூலம் இலிருந்து

3. விளையாட்டிலே விருப்பம் இல்லை

பெருமானார் அவர்கள் இளம்பருவத்தில், தனித்திருந்து சிந்தனையிலே ஆழ்ந்து விடுவார்கள். மற்றப் பிள்ளைகளைப் போல் விளையாட்டுகளிலே நாட்டம் கொள்வதில்லை.

பெருமானார் அவர்களின் இளம் பருவத் தோழர்கள் ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்தார்கள். “மனிதன் மேலான காரியங்களுக்காகப் படைக்கப் பட்டிருக்கிறானே தவிர, விளையாட்டுக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப்படவில்லை” என்று கூறி மறுத்துவிட்டார்கள்.