நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கல்வி பயிலாமல் அறிவுக் கூர்மை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. கல்வி பயிலாமல் அறிவுக் கூர்மை

இளமையிலே அறிவுக் கூர்மையும், சிறந்த ஆராய்ச்சியும் மிளிர்வதற்கான அறிகுறிகள் பெருமானார் அவர்களிடம் நிரம்பக் காணப்பட்டன. எந்தக் கல்விக் கூடத்திலோ அல்லது எந்தத் தனி ஆசிரியரிடத்திலோ பெருமானார் கல்வி பயின்றதில்லை.

இதனாலேயே பெருமானார் அவர்களுக்குக் ‘கல்வி கற்காதவர்’ (உம்மி) என்ற பெயர் உண்டாயிற்று.