உள்ளடக்கத்துக்குச் செல்

நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பொருள் பங்கீட்டில் மனக்கசப்பு

விக்கிமூலம் இலிருந்து

172. பொருள் பங்கீட்டில் மனக்கசப்பு

பெருமானார் அவர்கள் தாயிபிலிருந்து அல்ஜிஃரானாவுக்குத் திரும்பி வந்தார்கள்.

ஹூனைன் சண்டையில் பிடிபட்ட கைதிகளையும் பொருட்களையும் ஜிஃரானாவில் வைத்திருந்தார்கள் அல்லவா? கைதிகளின் உறவினர்கள் வந்து அவர்களை மீட்டுக் கொண்டு போகக் கூடும் என்று நினைத்தார்கள். அதனால் சில நாட்கள் வரை பெருமானார் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். எவரும் வரவில்லை. எனவே கைதிகளையும் பொருட்களையும் பங்கிடச் செய்தார்கள். ஐந்தில் ஒரு பகுதியை, பொது நிதிக்காகவும் ஏழைகளுக்காகவும் ஒதுக்கி வைத்து, மீதி நான்கு பாகத்தையும், படைகளுக்குப் பங்கிட்டார்கள். பங்கிடும் போது, இஸ்லாத்தில் புதிதாகச் சேர்ந்த மக்காவாசிகளுக்கு வீதாச்சாரத்திலிருந்து சிறிது கூடுதலாகவே கொடுத்தார்கள்.

அன்ஸாரிகளில் சில இளைஞர்கள் அதை அறிந்து, "ரஸூலுல்லாஹ் அவர்கள் குறைஷிகளுக்குக் கூடுதலாகக் கொடுத்து விட்டார்களே” என்று குறைப்பட்டனர். வேறு சிலரோ "கஷ்டத்தின் போது நம்மை நினைப்பதும், சண்டையில் கிடைத்த பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதுமாயிருக்கிறதே” என்று கூறலானார்கள்.

அன்ஸாரிகளிடையே அதிருப்தி நிலவுவதை அறிந்த பெருமானார் அவர்கள், அவர்களை அழைத்து, "குறைஷித் தலைவர்களுக்கு நான் அதிகமாகக் கொடுத்ததாக நீங்கள் சந்தேகப்பட்டுக் கூறியது உண்டா?" என்று வினவினார்கள்.

அவர்கள் சத்திய சீலர்களானதால், “எங்களில் பெரியவர்கள் யாரும் எதுவும் கூறவில்லை. இளைஞர்களில் சிலர் மட்டும் அப்படிச் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அப்பொழுது, பெருமானார் அவர்கள் அன்ஸாரிகளிடம், “நீங்கள் ஆரம்பத்தில் வழி தவறியவர்களாக இருந்தீர்கள். ஆண்டவன் என் மூலமாக உங்களை நேர்வழிப்படுத்தினான். நீங்கள் பல பிரிவுகளாகி, பகைமை உணர்வோடு இருக்கையில், ஆண்டவன் என் மூலமாய் உங்களுககுள் ஒற்றுமையை உண்டாக்கினான். நீங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருந்தீர்கள். ஆண்டவன் என் மூலமாக, உங்களைச் செல்வர்களாக ஆக்கினான். இவை எல்லாம் உண்மை அல்லவா ?” என்று கேட்டார்கள்.

பெருமானார் அவர்கள் கூறிய சொல்லின் முடிவிலும், அன்ஸாரிகள், "ஆண்டவனுடைய உதவியும் , அவனுடைய ரஸூலுடைய உதவியும் எல்லாவற்றையும் மேன்மையுறச் செய்து விட்டன" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பின்னர், பெருமானார் அவர்கள் அன்ஸாரிகளிடம், “வேறு விதமான விடை கூட எனக்குச் சொல்லக் கூடும்” என்றார்கள்.

அன்ஸாரிகள் "யாரஸூலல்லாஹ்! நாங்கள் என்ன விடை கூற முடியும்! என்றார்கள்.

அப்பொழுது பெருமானார்கள் அவர்கள், "நீங்கள் விரும்பினால் இப்படியும் சொல்லலாம்: 'முஹம்மதே! உங்களுடைய மக்கள் உங்கள் மீது நம்பிக்கையற்று இருக்கும் போது, நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையானவர்களாக ஏற்றுக் கொண்டோம் . உங்களுக்கு ஆதரவு இல்லாத போது நீங்கள் தனியாக வந்தீர்கள். நாங்கள் உதவி புரிநது ஆதரித்தோம்'. இவ்வாறாக நீங்கள் கூறினால் 'நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்' என்று நான் சொல்லிக் கொண்டிருப்பேன்.

"அன்ஸாரிகளே! குறைஷிகள் புதிதாக முஸ்லிம்களாகி இருக்கிறார்கள்; இப்பொழுது அவர்கள் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். சண்டையில் கிடைத்த பொருட்களால் அவர்களைத் தேற்றலாம் என்று விரும்பினேன். அன்ஸாரிகளே! மற்றவர்கள் ஒட்டகங்களையும், ஆடுகளையும் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு போவார்கள். நீங்கள் முஹம்மதை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போவதைப் பிரியப்படவில்லையா? என்னுடைய ஆத்மா யார் கையில் இருக்கிறதோ, அவன் பேரில் சத்தியமாக, நிச்சயமாக, நான் உங்களைக் கைவிட மாட்டேன் மற்றவர்கள் எல்லோரும் காட்டின் ஒரமாய்ப் போய்க் கொண்டிருக்கையில் அன்ஸாரிகள் மட்டும் கணவாய் வழியாகப் போனால், நான் அன்ஸாரிகளுடன்தான்