உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/செய்யுட்கள் 201 - 400

விக்கிமூலம் இலிருந்து

பற

தலைமாண பாங்களுக்குத்

நற்றிணை

இரண்டாம் தொகுதி

201. திருநல உருவின் பாவை!

பாடியவர் : பரணர். பரணர். திணை:

பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.

.....

துறை : கழறிய

[(துறை விளக்கம்) தலைமகன், ஒரு தலைவிபால் காத லுற்றான். 'அது பொருந்தாது' எனப் பாங்கன் அதனை மறுத்து உரைக்கின்றான். அப் பாங்கனுக்குத் தனது காதல் நிலையைத் தெளிவுபடுத்தி உரைப்பதுபோலத், தலைவனின் கூற்றாக அமைந்த செய்யுள் இது.)

மலையுறை குறவன் காதல் மடமகள்

பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள் உள்ளல் கூடா தென்போய்-மற்றும் செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும் உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும் பெருநிலம் கிளறினும் திருநல வுருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் உள்ளாள் என் நெஞ்சத் 'தாளே!

10

5

· தெளிவுரை: வாழ்கின்றவனான குற்

நெருங்குவதற்கும் மலைக்கண்ணவனின் அன்புக்குரிய இளமகள் அவள், அவள் நின்னால் பெறுவதற்கு அரியவள்; நின்னால் அரிதான காவலிடத்தே இருப்பவள்; நின் சொல்லைக் கேட்டு எதிரேற்றுக் கொள்ளுதற்கு ஏற்றவாறு முதிர்ச்சி யடையாத சிற்றிளம் பருவத்தினள். அத் தன்மையளாகிய அவளை நீயும் காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந் தாது" என்கின்றவனாகிய பாங்கனே!

செவ்விய பழங்கள் பொருந்திய வேர்ப்பலா மரங்களை யுடையது கொல்லிமலை. அதன்கண், தெய்வக்காவலையுடைய தனாலே தீமையில்லாத, நெடிய கோட்டினின்றும் வீழுகின்ற அழகிய வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்ததான பாறையிடத்தே அமைந்திருப்பது, கொல்லிப்பாவை. மோதி இடித்தாலும், மிக்க மழைத்துளிகள் விரைய வீழ்ந்தாலும், இடிகள் சினந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய இயற்கையினாலான ஊறுகள் தோன்றினாலும், அன்றி வேறு பலவும் நிலநடுக்கத்தால் நடுங்குமாயினும், தான் கொண்டுள்ள, இந்தப் பெருநிலப் பகுதியே கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மையைக் கொண்டது அக்கொல்லிப் பாவை. அதனைப் போலவே, நீ யாது கூறினும், அன்றி யாது நேரினும், அவளும் என் நெஞ் சத்தே நீங்காதாளாகி நிலை பெற்றனள்; அதனைவிட்டு எக்காலத்தும் போவாள் அல்லள். இனி, யான்தான் யாது செய்வேனோ?

சொற்பொருள் : காதல் அருந்தவமிருந்து பெற்ற செல்வ மகள்; பேரன்பு காட்டிப் மகள் - அன்புக்குரிய மகள்; பேணி வளர்த்த மகளும் ஆம். மடமகள் - இளமகள்; மடப் பத்தை உடைய மகளும் ஆம்; மடமாவது நன்மை தீமை தெளியாப் பேதைமை. பெற லருங் குரையள் - பெறு தற்கு அரியவள். கடிகாவல். காப்பினள்- காவலுக்கு உட் பட்டவள். எதிர்கொள்ளல் - எதிரேற்று செவ்வேர்ப் பலா - சிவந்த வேர்ப்பலா; சற்றே சிவந்த விடை கூறல். சுளைகளைக் கொண்ட இது பலாவிற் சிறந்தது; பயம் -பழம். கோடு-மலைமுகடு. குடவரை - மேற்குப்பகுதி மலைச்சாரல். கால் - காற்று. உடன்று - சினந்து. வுலகம். கிளரினும் - நடுக்கமுற்றாலும். 'பாவை' பெருநிலம் - பெரிய நில கொல்லிப் பாவையை. என்றது, நற்றிணை!தெளிவுரை

.

விளக்கம்: குறவன் விருப்பத்தோடு மணஞ்செய்து தரினன்றி, அவளை வேறுவழியாக அடைதல் இயலாது என் பவன், 'காதல் மடமகள்' என்றனன். அவனை மீறி, அவளைப் பெறுதலும் இயல்வதன்று என்பவன் 'பெறலருங் குரையள்' என்றனன். அவள் வெளிப்போந்து நின்னைக் காண்பதும், அன்றி நீதான் சென்று அவளைக் காண்பதும் கைகூடா தென்பவன், அருங்கடிக் காப்பினள்' என்றனன். அரிதின் முயன்று அவளைச் சந்திப்பினும், நின் பேச்சைக் கேட்டு நினக்கு இசைவு தருவதற்குத் துணியும் தகைமையில்லா இளம் பருவத்தாள் என்பவன், 'சொல்லெதிர் கொள்ளா இளையள்' என்றனன். அத் தன்மையள் ஆதலின் அவளை தான் உள்ளல் கூடாது என்றும் பாங்கன் வலியுறுத்தினன். இதனைக் கேட்டுத் தலைமகன் கலங்கினான் அல்லன். 'கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெருநிலம் கிளறினும், தன் திருநல உருவின் மாயா இயற்கையுடைய கொல்லிப் பாவையை அறிவாயே! அதனைப்போலவே அவளும் என் உள்ளத்தாள்; இனி எதாலும் போதல் செய் யாள்' என்கின்றான். இதனால், பாங்கன், அவளைத் தலைவன் பாற் கூட்டுவிக்கவே இனித் துணை நிற்பானாதல் வேண்டும் என்பது தலைவன் முடிவாகும். கொல்லிப் பாவை அமைந் துள்ள இடத்தைக் குறிப்பிடுவான், 'நெடுங்கோட்டு அவ் வெள் அருவிக் குடவரை யகத்து' என்றனன். இதன் சிறப்பும், கண்டாரைத் தன் பெருங்கவினால் தன்பால் ஈர்க்கும் வனப்பும், எவரும் அறிந்தது; அத்துணை வனப்பு மிக்க அழகியள் தலைவி என்பதும் இதனால் விளங்கும்.

தெய்வம் காத்தலால் தீதின்றியும், பலவின் பழம் பொருந்தியும் விளங்கும் கொல்லியைப் போலத் தெய்வத் துணையாலே தன் காதலும் தீதின்றி இனிது நிறைவெய்தும் என்றானும் ஆம். கொல்லியைச் சிறப்பாகக் குறித்தது தலைவன் அப் பகுதியைச் சார்ந்தவனாதலாலும் ஆம்.

கண்டார், தாமே அதன் அழகிலே பித்துற்று அடிமை யாகும் பெருவனப்புக் கொண்ட கொல்லிப் பாவையைப் போலவே, அவளும் அத்துணை வனப்பினள் என்பதும் இதனால் விளங்கும். வரை-மலை;பெரும்பாலும் இரு நாடு களின் எல்லையாக மலையே அமைதலால் 'வரை' என்றனர்.

பாங்கன்' தலைவனின் துணையாக உடன் செல்லும் இளைஞன்.தோழனின் நெருக்கம் பாங்கனுக்கு இல்லை.

கன்

Am எக்கு 202. செல்சுடர் நெடுங்கொடி!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை : துறை: உடன் போகா நின்ற தலைமகன் தலை மகட்குச் சொல்லியது.

[(து-வி.) தன் இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுடன் உடன்போக்கிற் செல்கின்றாள் தலைவி. அவள் வழியிடை வருத்தத்தைப் போக்குவானாகக், காட்டைக் காட்டித், தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

புலிபொரச் சிவந்த புலவுநா றிருங்கோட்டு ஒலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து வண்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழம் தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப் பொன்புரை கவளம் புறந்தருபு ஊட்டும் மாமலை விடரகம் கவைஇக் காண்வரக் கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப்

сл

5

10

பல்பூங் கோங்கம் அணிந்த காடே!

தெளிவுரை : புலியோடு போரிட்டுக் கொன்றதாலே சிவப்புக்கறை படிந்ததும், புலவுநாற்றத்தை யுடையதுமான பெரிய கொம்பினிடத்தே உண்டாகிய பலவாகிய முத்துக்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிசெய்ய, வன்கண் மையிலே மிகுந்ததாய், வலிய மேட்டு நிலத்திலேயுள்ள பருத்த அடியையுடைய வேங்கை மரத்தைத் தகர்த்துத் தள்ளியது, பெரிய கையையுடையதான வேழம் ஒன்று. கன்றோடும், இளமை நலங்கொண்ட தன் பிடியையும் அருகே கொண்டுள்ள அது, மொய்த்துத் தேனீட்டக் கருதிக் கூடியிருந்த வண்டினத்தின் பெருங்கூட்டமானது அகன்று போகுமாறு, அவ் வேங்கையின் பொன்னைப்போன்ற பூவும் தழையுங் கலந்த உணவுக் கவளத்தை, அவற்றுக்கு

அன்போடு பறித்து ஊட்டியபடி யிருக்கும். பெருமலை யிடத்துள்ள, அத்தகைய பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டதாய், அழகுற இக்காடும் தோன்றுவதைக் காண் பாயாக! இளையவளே, நீயும் வாழ்க! நின் தந்தைக்கு உரிய நற்றினை தெளிவுரை


தான, கார்த்திகை மீன் பொருந்தியதும், அறஞ்செய்தற் கமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப், பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக!

சொற்பொருள்: சிவந்த - புலியின் குருதிக்கறை படிந்த தனாலே சிவப்புற்ற புலவு நாறு-புலால் நாற்றங்கொண்ட இருங்கோடு-பெரிய கொம்பு. ஒலிதல் - தழைத்தல் - உண் டாதல். ஆர்ப்ப-ஒலிக்க. வலிசிறந்து- வன்கண்மை மிகுந்து. வன்சுவல்-வலிய மேட்டுநிலப் பகுதி; வன்மையாவது நீர்ப் பசையால் நெகிழ்வு பெற்றிராத வறட்சித் தன்மை. பராரை - பருத்த அடிமரம். முருக்கி-ஒடித்துத்தள்ளி. தடக்கை - பெரியகை - துதிக்கை. பொன்புரை கவளம்-பொன் போலத் தோன்றும் வேங்கைப் பூவும் தழையுமாகக் கூடிய உணவுக் கவளம். தேன் செய்-தேனை ஈட்டும். பெருங்கிளை. பெரிதான வண்டின் கூட்டம். புறந்தருபு -அன்போடுங் கூடியதாய். விடரகம் - மலைக்கண்ணுள்ள பிளவிடங்கள்; வெடிப்பிடங்கள் என்பர். கவைஇ - தன்பாற் கொண்டு. காண்வர- காட்சிக்கு இனிதான அழகோடு. குறுமகள் - இள மகள். அறுமீன் கெழீஇ அறம்செய் திங்கள் - கார்த்திகை மீன் பௌர்ணமியன்று கூடிவருகின்றதும், அறம் செய்தற்கு உரியதுமாகிய கார்த்திகைத் திங்கள் பெளர்ணமி நாள். கோங்கம் - கோங்கமரம். அணிந்த அணிந்த காடு- அழகுறப் பெற் றுள்ளதனாலே அணிபுனைந்தாற் போலத் தோன்றும் காடு.

விளக்கம்: 'புலிபொரச் சிவந்த புலவு நாறு இருங் கோட்டு வேழம்' என்றது. புலியை அணிமையில் தானே தன் கோட்டால் குத்திக்கொன்று, அதன் குருதிக்கறை படிதலால் சிவந்தும், புலவு நாற்றங்கொண்டும் விளங்கிய பெரிய கோட்டையுடைய வேழம்' என்றதாம். அத்தகு ஆண் மையன் தான் என்பதும் உணர்த்தினான். அவ் வேழம் வலிசிறந்து வன்சுவற் பராரை வேங்கையை முரித்துத் தள்ளியது; அதுவும் புலிபோலத் தோன்றிய தோற்றத்தினால் என்க. அடுத்து, கன்றோடுங் கூடிய தன் பிடியைக் காணவும் அதன் சினம் தணிகின்றது. மென்தழையும் பூவுங் கூடிய வேங்கைக் கவளங்களை அன்போடே தன் கன்றுக்கும். பிடிக்கும் கொய்து ஊட்டுகின்றது. இவ்வாறே தலைவனும், தலைவியை மீட்கக் கருதித் தன்னை எதிர்த்து வருவாரை வென்றும், அலர் உரைப்பாரை ஒதுக்கியும்,தலைவியை யைத் தோழி


தலைமகளுக்கு

நற்றினை தெளிவுரை

நன்னூர்க் கண்ணே கொண்டுபோய் மணம் புரிந்து, இல்லத்தே வைத்து அன்புடன் காத்துப் பேணுவான் என்ப தாம். இது பகற்போதில் காட்டகத்தே கண்டது.

இரவில், முழுநிலவு எறிக்கக் கோங்கம் பூக்களால் அழகுடன் தோன்றும் காட்டைக் காட்டி, 'அவள் தந்தை அறம் செய்யும் கார்த்திகை நாளில் எடுத்த கார்த்திகை விளக்கு வரிசைகள் போலிருக்கின்றது' எனப் புனைந்து கூறி, அவளை மகிழ்விக்கின்றான். இதனால், காட்டிடையே இரவில் ஏதும் இடையூறில்லை என்று கூறினானுமாயிற்று.

விளக்கொழுங்கு கோங்கம் பூப்போலத் திகழ்தலைக் கோங்கின் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும்' (அகம். 153) எனப் பிற சான்றோரும் உரைப்பர். காடு விளக்கம் பெறுவதுபோல, நீயும் மனைவாழ்க்கையில் என்னால் பேணப் பட்டுப் பெரிதும் விளக்கம் பெறுவாய் என்று உணர்த்தி அவளைத் தெளிவித்தானும் ஆம்.

203. கானல் இயைந்த கேண்மை! பாடியவர்: உலோச்சனார். திணை: துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய் வரைவு கடாயது.

... ...

[(து. வி.) தலைமக்களின் களவுறவை மணவுறவாக்க விரும்பினாள் தோழி; தலைவன் கேட்டு உணருமாறு, தலைவிக் குச் சொல்லுவாள்போல, அவள் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த்

தடந்தாள் தாழை முள்ளுடை நெடுங்கோட்டு அகமடற் பொதுளிய முகைமுதிர்பு அவிழ்ந்த கோடுவார்ந் தன்ன தோடுபொதி வெண்பூ எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலால் மறுக்கும் மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை ஒருநாள் கழியினும் உய்வரிது என்னாது. கதழ்பரி நெடுந்தேர் வரவாண் டழுங்கச் செய்ததன் தப்பல் அன்றியும்

உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே!

5

10


தெளிவுரை : முழங்கும் கடலலைகளாலே கொழித்து இடப்பெற்ற, பெரிய மணல்மேட்டிலே நிற்கின்றது, பெரிய தாளையுடையதான தாழை. அத் தாழையினது, முள்ளுடைய நெடிய கிளையினிடத்தேயுள்ள அகமடற்கண்ணே, முகை யானது, தான் முதிர்தலாலே கட்டவிழ்ந்தது. அதுதான் சங்கு நீண்டாற்போன்ற தோடுகளாலே மூடப்பெற்ற, வெண்பூவாகவு மானது. மோதுகின்ற அலையினது தாக்கு தலாலே அப்பூத்தான் சிதைவுற்றுத் தாது உதிர்ந்தும் போயிற்று. அதனின்றும் எழும் நறிய மணத்தாலே, அதுதான் சிறிய குடியிருப்பையுடைய பாக்கத்துத் தெருக் களிலுள்ள புலால் நாற்றத்தைப் போக்கும். அத்தகைய தாழை மணம் கமழுகின்ற கானற்சோலையிலே ஏற்பட்டது நம்முடைய காதல் உறவு. இவ் உறவானது, ஒருநாள் தலைவனைக் காணாதே போயினும், அதன்பின் உய்தல் அரிது என்னும் தன்மையது. இதன் உண்மையைக் கருதாமல், விரைந்த செலவையுடைய குதிரைகள் பூட்டிய நம் காதலரது நெடிய தேரினது வரவைத், தாம் தூற்றிய அலருரைகளாலே, அவன் ஊரிலேயே அழுங்கச் செய்தனர் நம் ஊரவர். அத் தவற்றோடும் அமையாதாராய், இவ் ஆரவாரத்தையுடைய ஊரவர், அவரைப் பிரிந்ததனா லுண்டாகிய நம் மெலிவுகண்டு வருத்தங்கொண்டு இரங்குதலும் உடையராயினரே! துதான் எதனாலோ தோழீ?

தெள்ளித்

சொற்பொருள்: கொழீஇய - கொழித்த தூற்றிய. மூரி எக்கர் - பெரிதுயர்ந்த மணல்மேடு.கொஞ்சங் கொஞ்சமாக மணல் சேரச்சேரத் தான் உயர்வதுபற்றி 'எக்கர்' என்றனர். தடந்தாள்-பெரியதாள்; தாள்-அடிமரப் பகுதி. அகமடல்-மடலகத்து உள்ளிடப் பகுதி. பொதுளிய - பூத்துத் தோன்றிய. முகை-மொட்டு. முதிர்பு-முதிர்ச்சி பெற்று. அவிழ்தல் - கட்டவிழ்தல். கோடு-சங்கு. வார்தல். வளர்தல். தோடு-புறவிதழ். உதைத்தலின்-மோதித் தாக்கு தலினால். சிறுகுடிப் பாக்கம்-சிறுகுடியாகிய பரதவர் பாக்கம். பாக்கம்-கடற்கரை சார்ந்த ஊர். மறுகு - தெரு. புலால்- புலால் நாற்றம்; மீனுணங்கப் போடலால் உண்டாவது. கானல் - கடற்கரைக் கானற்சோலை. கேண்மை - நட்புறவு. கழியினும் - வாராதே கழிந்தாலும், உய்வு - உயிர் பிழைத்தல். கதழ்வு-விரைவு. ஆண்டு- அவ்விடத்தே; அவர்தம் ஊரிடத்தே. தப்பல் - தவறு. உயவு - மேனி மெலிவு; இது தலைவனைப் பிரிதலால் வந்தது. அழுங்கல் ஊர்-அலருரைத்து

. ஆரவாரிக்கும் தன்மைகொண்ட ஊர்; அலர் உரைப்பார் பெரிதும் மகளிர் என்று கொள்க.

விளக்கம்: 'மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை எனக் கானற்சோலையிடத்தே நேர்ந்த தலைவன் தலைவியரின் முதற்சந்திப்பையும் பிறவற்றையும் கூறினாள்,தலைவன், ஊழ்கூட்டிய அந்த உறவின் சிறப்பை நினைவுகொளற்கும், அதுபோது கூறிய உறுதிமொழிகளை நினைத்தற்கும். 'ஒரு நாள் கழியினும் உய்வரிது என்னாது' என்றது, அவன் பிரிவைப் பொறாத கழிபெருங் காதலள் தலைவி என்றற்கு. 'தேர் வரவு கண்டு அழுங்க' என்றது, அவன் வரையக் குறித்துச்சென்ற காலத்துக் கழிவினும் வராதேபோயினமை குறித்துப் புனைந்து சொல்லியதும், ஊரலர் ஏற்பட்டதை உணர்த்தியதும் ஆம். 'உயவுப் புணர்ந்தன்று' என்றது தலைவியின் மெலிவைக் குறிப்பிட்டது. தலைவியின் மெலிவு கண்ட முதுபெண்டிர் முதலியோர் வெறியாடல் முதலாயின மேற்கொள்ளலைக் குறித்துக் கூறியதும் ஆம். இதனால், இனிக் களவில் தலைவியை அடைதல் அரிது என்பதும், வரைந்து மணந்துகொள்ளலே தக்கதென்பதும் உணர்த்தினள். ஊர் மேல் பழியைச் சார்த்திக் கூறினாலும், தலைவியை விரைந்து மணந்து கோடலே தலைவன் இனிச் செயத்தக்கது என அவன் கடமையை உணர்த்தியதுமாம்.

உள்ளுறை உவமம் : தாழையின் வெண்பூத் திரைமோது தலாலே பொங்கித், தாது சொரிந்து, சிறுகுடிப் பாக்கத்தே உளதாகிய புலால் நாற்றத்தைப் போக்கும். அது போக்கு மாறு போலத், தலைவனும், களவை நீட்டித்தலால் உண்டாகும் அலரைப் போக்க முன்வந்து, தலைவியின் பெற்றோர்க்கு வேண்டும் வரைபொருளைத் தந்து, தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்வதன் மூலம், ஊரலரைப் போக்குதல் வேண்டும் என்பதாம். தலைவியின் மேனி மெலிவால் அவள் இனியும் பிரிவு நீட்டிப்பின் இறந்து படுவாள் ஆதலின், அதனைப்போக்குவதற்குக் கருதினையாயின் விரைய மணம்வேட்டு வருதலைச் செய்வாயாக என்றனள். பயன் : இதனைக் கேட்டலுவானாகிய தலைமகன், விரைந்து வந்து மணந்து கோடலிலே, தீவிரமாகத் தன் மனத்தைச் செலுத்துவான் என்பதாம். Boo

லைமகளி


204. விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே!

பாடியவர்: அம்மள்ளனார். திணை: துறை: பின்னின்று தலைமகன் ஆற்றானாய்த் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

"

[(து. வி.) தோழியின் உதவியாலே தலைவியை அடைய நினைக்கும் தலைவன், அவள்பால் சென்று இரந்து வேண்டு கின்றான். அவள் உதவுதற்கு மறுத்துவிடவே, அவன் தலைவிக்கும் தனக்குமுள்ள பிரித்தற்கு இயலாத உறவைத் தன் ெ நஞ்சோடு உரைத்துக்கொள்வானே போலத் தோழியும் கேட்குமாறு உரைத்துத் தோழிக்கும் தெளிவு படுத்துகின்றான். இவ்வாறமைந்த செய்யுள் இது.) தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை

குளிர்கொள் வியன்புனத் தெற்பட வருகோ குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாழ் புணரிய நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ

இன்சொல் மேவலின் இயலுமென் நெஞ்சுணக் கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து தான்செய் குறிவயின் இனிய கூறி

ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்

10

5

டுறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்

கொடிச்சி செல்புறம் நோக்கி

விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே!

10

தழை

தெளிவுரை : " தளிர்சேர்ந்த தண்மையான யுடையை உடுத்து, குளிரென்னும் கிளிகடி கருவியைக் கையிற்கொண்டு, நீதான் காவல் புரியும் நின் தந்தையுடைய அகன்ற தினைப்புனத்திடத்தே, ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப்போதிலேயே யான் வரவோ? அல்லது, குறுகிய சுனையிடத்தே கொய்த குவளைப்பூவை அணிந்து, நாம் தலைப் புணர்ச்சி பெற்ற நறிய தண்ணிய மலைச்சாரலிடத்தே ஆடிக் களித்தற்கு வரவோ? நின் இனிய சொல்லினை விரும்பித் துடிக்கும் என் நெஞ்சமானது அமைதி கொள்ளுமாறு, மடந்தையே! நின் கூர்மையான பற்களிடத்தே ஊறுகின்ற வாயூறலைப் பருகுவேன்" என்று யான் தனக்கு உரைத்தேன், அதனைக் கேட்டாளாகிய அவளும், தான் செய்தகுறியிடத்தே என்னைக் கொண்டு சென்று, இனிய சொற்களைக் கூறி, என்னையும் தெளிவித்தனள். கலைமானைப் பிரிந்து செல்லும் அதன் இளைய பெண்மானைப்போல, என்னைவிட்டு வேறாகப் பிரிந்து நீங்கி, மிகுதியான மூங்கில்கள் உயர்ந்த தன்னுடைய சிறுகுடி நோக்கியும் அவள் சென்றனள். அப்படிச் சென்ற போகவிடுத்த அவளது முதுகுப்புறத்தை நோக்கியபடி

என்

எதனாலும் நெஞ்சமானது, அவளை நினைத்தலை இனிக் கைவிடாது. இனி, யான்தான் யாது செய்வேனோ? சொற்பொருள் : தளிர்-இளந்துளிர். தழை-தழையுடை. குளிர்-கிளிகடி கருவி. வியன் புனம் - தினைப்புனம்; தகப்பனின் வளமையைக் குறித்தது. ஏற்பட-காலையில். குறுஞ்சுனை - குறுகலான கனை; 'குறுகல்' என்றது, சுனையின் மேற்பரப்பை. சுனை - மலைக்கண் மழைநீர் தங்கிநிற்கும் பள்ளமான இடம். குவளை - நீர்க்குவளைப் பூ. புணரிய-தலைக் சோலை. கூட்டம் வாய்க்கப்பெற்ற. சாரல் - மலைப்பகுதிச் ஆடுகம் - கூடிவிளை படுதற்கு. மேவல் - விரும்புதல். இயலும்- ஒழுகும். நெஞ்சு நெஞ்சம் தன் கவலை தீர்ந்து களிப்பெய்த. குறிவயின் - குறியிடத்தில். குறியிடம்-இருவரும் சந்திக்கக் கருதிக் குறிப்பிட்ட இடம். ஏறு -மானேறு. கொடிச்சி - குறக்குலப் பெண், பூங்கொடி போன்றவள் என்பது சொற்பொருள்.

உண

·

விளக்கம்: 'தளிர்சேர் தண்தழை' என்றது பெரும் பாலும் அசோகந்தளிர் போன்றவையே தழையுடைக்குப் பயன்பட்டு வந்ததனால்; 'தளிரும் பூவும் சேர்ந்த தண்ணிய தழையுடை' எனலும் பொருந்தும். 'எற்பட' என்பதனை 'மாலைநேரம்' எனவும் சிலர் கொள்வர்; ஆயின் புனத்து வருதலும் சாரற்கண் ஆடுதலும் பிறவும் மாலைநேரத்து நிகழக்கூடாமையின் காலைநேரமாகக் கொள்ளப்படுதலே சிறப்பு ; படுதல்-தோன்றுதல். 'குறிவயின்' என்றது, தலைவி யால் 'இன்னவிடத்துக்கு இன்ன போதிலே நீயிர் வருக’ எனச் சுட்டப்படும் இடத்தை; 'களஞ் சுட்டு கிளவி கிளவியது ஆகும்' என்பது விதி - (தொல்.பொருள். சூ120). முதற் சந்திப்பு புனத்திடத்தும், அடுத்து மலைச்சாரலிலும்,பின் குறியிடத்தும் இவர்கள் களவிற் சந்தித்துப் பழகி நட்புச் செய்தனர் என்று கொள்க. 'ஏறுபிரி மடப்பிணை கடுப்ப? என்றது, தங்கள் பழைய உறவைப் பற்றிய உண்மையை உரைத்ததோடு, அவளும் தன்னைப் பிரிந்து, பிரிவைத் தாங்கி வாழ்ந்திராள் என்பதையும் தோழிக்கு உணர்த்தியதாம்.

த லைமகண்

இதன் பயன், தோழி தலைவிபால் பேரன்பினளாதலின், அவர்கள் கூட்டத்திற்குத் தானும் துணையாக அமைந்து உதவுவாள் என்பதாம்.

மேற்கோள்: 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் தொல் காப்பியச் சூத்திரத்துச், 'சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும்' என்னும் பகுதிக்கண், 'வகை' என்றதனானே இதனின் வேறுபட வருவனவும் கொள்க' என்று கூறி, இச் செய்யுளைக் காட்டினர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். 102 சூ.உரை.)

205. மாமைக்கவின் மறையுமே!

பாடியவர்: இளநாகனார் . திணை :... ...

துறை : தலை மகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.

[ (து.வி.) இச் செய்யுள் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாவும், தோழி தலைமகன் கேட்கச் சொல்லிய தாவும் கொள்ளப்படும். தலைமகனது கடமையுணர்வும் காதற்பாசமும் சமநிலையிலே தமக்குள் போராடும் இனிய சுவையை இதன்கண் கண்டு உணரலாம். கடமை தலைவி யைப் பிரிந்து வினைமேற் செல்லலே தக்கது என்று அவனுக் குக் கூறுகிறது; காதற் பாசம், பிரிந்து செல்லின் தலைவியின் கவினழியுமே என்று நினைத்து ஏங்குகிறது. இல்வாழ்வின் சுவையான கட்டம் இது.]

அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்து ஆளி நன்மான் வேட்டெழுபு கோள்உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களி றீர்க்கும் துன்னருங் கானம் என்னாய் நீயே! குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய ஆள்வினைக் ககறி யாயின் நின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய

5

10

ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! 20

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : அருவிகள் ஆரவாரத்துடன் வீழ்ந்தபடியே யிருக்கின்றதான பெரிய மலைப்பக்கத்தே, ஆளியாகிய நல் விலங்கானது இரைகுறித்து வேட்டையாடுவதற்கு எழும். கொள்ளுதல் வல்ல நகங்களையும், அழகிய பொறிகளையு முடைய புலியைக் கொன்றொழித்த, மிகவும் கூர்மையும் உயர்வான அமைப்பும் கொண்டதான் வெண்ணிறக் கோட்டையுடைய வலிய களிற்றினைக் கொன்று, முழைஞ்சிற்கு அதனை இழுத்துக்கொண்டும் செல்லும். நீ செல்லுதற்குரிய வழியானது அத்தகைய புகுதற்கரிய காடு என்றும் கருதாயாயினை!

தன்

குவளை போலும் மையுண்ணும் கண்களையுடைய இவள், இவ்விடத்தே நின்னை நீங்கித் தனித்திருக்க, நீயும் ஆள்வினைப் பொருட்டாக அகன்று போகின்றனை! அங்ஙனமாயின்,

தோட்டப் புறத்துள்ள வளைவான முட்களைக் கொண்ட ஈங்கைச் செடியின் நெடிய அழகிய இளந் தளிரானது, நீர்மிகுதியுடையதாக வேகத்தோடு பெய்யும் பெருமழையால் நனைந்தபோது தோன்றும் அழகிய நிறத் தைப் போன்றதான், இவளது மேனியின் மாந்தளிர்க் கவினானது, நின்னோடு, தானும் இவளைவிட்டு அகன்று போய் விடுமே!

சொற்பொருள்: பெருவரை அடுக்கம் - பெரிய மலையிடத் துள்ள அடுக்கடுக்காக விளங்கும் சாரற்பகுதிகளுள் ஒரு பகுதி. கோள்- கொள்ளுதல். பூம்பொறி - அழகிய பொறிகள். உழுவை - புலி. வைந்நுதி - கூரிய நுனிப்பகுதி. ஏந்து-மேல் நோக்கி உயர்ந்து. வயம்-வலிமை. ஈர்க்கும் - இழுத்தபடி யிருக்கும். துன்னல் - நெருங்கல். ஆள்வினை - செயன்முயற்சி. படப்பை தோட்டக்காற் பகுதி. கொடுமுள் - வளைந்தமுள். ஈங்கை - ஈங்கைச்செடி; வேலியில் வைக்கப்படுவது. மாமைக் கவின்-மாந்தளிர் போன்று மென்மையும் ஒளியும் பளபளப் பும் கொண்ட அழகு. ஆய் நிறம் - அழகிய நிறம்.

விளக்கம்: கானமோ நெருங்குதற்கு அரியது; கொடு விலங்குகளையுமுடையது; அதனூடே செல்ல நினைத்தால் நினக்கு யாதாகுமோ? அதுவும் இனிதாகக் கூடியிருக்கும் நின் மனைவியை நலமிழந்து மெலிவடையச் செய்துவிட்டுப் போவதாற் பெறும் பயன்தான் யாதோ? நீ மீண்டும் வரும் வரை இவள்தான் நலன் அழியாதிருப்பாளோ? என்று நற்றிணை தெளிவுரை

21

கூறிச் செலவை நிறுத்துகின்றனன் எனக் கொள்க; அல்லது தோழி கூறக்கேட்டுத் தலைவன் நிறுத்தினன் எனக் கொள்க.

ஈங்கை வளைவான முள்ளைக் கொண்டது; அதன் நனைந்த தளிர் மகளிரது மேனி வனப்புக்கு ஒப்பிடப் படுவதை, மாரியீங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி ஆயிழை மகளிர்' எனப் பிற சான்றோரும் கூறுவர் (அகம். 208) உழுவை தொலைச்சிய வயக்களிற்றைக் கொன்று இழுத்துச் செல்லும் என ஆளியின் பெருவலிமைபற்றிக் கூறப்பட்டது. ஆள்வினை - செயன்முயற்சி. 'மாந்தளிர்'கரிய அழகிய தளிரு மாம்; மாமரத்தினது இளந்தளிருமாம்.

'மாமைக்கவின் நின்னொடு போயின்று கொல்' என்றது, பிரிந்ததன் அத்துணையே அதுதான் பசலையால் உண்ணப் பட்டுப் பாழாகுமே எனத் தலைவியது பேரன்பினைக் காட்டு தற்காம்.

இறைச்சிப் பொருள்: களிறு தனக்குப் பகையாகிய உழுவையைக் குத்திக் கொன்றதன் வலிமையைக் கூறினான், தன் மனத்திண்மையை வென்று தன்னைத் தனக்கு ஆட்படுத் திக் கொண்ட தலைவியது மாண்புமிக்க மாமைக்கவினைச் சிறப்பித்தற்கு; அவ் வலிய களிறு ஆளி நன்மானாற் கொன்று இழுத்துச் செல்லப்பட்டதைக் கூறினான், அத்தகைய அவளது மாமைக் கவினும் பிரிவு நேர்ந்துவிட்டபோது பசலையால் உண்ணப்பட்டு அழிந்து போம் என்பதைச் சிறப்பித்ததற்கு

1

மேற்கோள்: 'விழுமம் ஆவன, பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர் வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியும் என்றலும்,பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந் தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவு மாம்' என்று, 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை என்னும் சூத்திரத்து, 'வேற்று நாட்டகல்வயின் விழுமத் தானும்' என்பதன் உரைக்கண் கூறுவர் நச்சினார்க்கினியர். 'இஃது இவள் நலன் அழியுமென்று செலவு அழுங்கியது எனவும் உரைப்பர்-(தொல்.பொருள்.185,146)

-22

دیا

<>

-6-41.

நற்றிணை தெளிவுரை

206. கேண்மை அறிந்தாளோ?

ணை

பாடியவர் : ஐயூர் முடவனார். $.26001: ...... தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

துறை :

[(து.வி.) தலைவன் தலைவியரின் நீடித்த களவு ஒழுக்கத்தை நிறுத்தித் தலைவனை அவளை வரைந்து கொள்ளும் முயற்சிக்குத் தூண்டவேண்டும் எனக் கருது கின்றாள் தோழி.. தலைவனுக்காகத் தலைவி குறியிடத்தே காத்திருக்கும் சமயம், அவன் வந்து, தான் அகலுதலை நோக்கி ஒருசார் மறைந்து நிற்றலை அறிந்தவள், அறியாதா ளாகக் காட்டித் தலைவிக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது. கேட்கும் தலைவன் வரைந்து மணத்தொடு கொள்ளற்கு முற்படுவான் என்பது இதன் பயன்.]

'துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன எனல்' என்றும்,

துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் செவ்வாய்ப் பாசினம் கவருமென் நவ்வாய்த்

தட்டையும் புடைக்கக் கவணும் தொடுக்கென

5

எந்தைவந் துரைத்தன னாக, அன்னையும்

நன்னாள் வேங்கையும் அலர்கமா இனியென

என்முகம் நோக்கினள் எவன்கொல் தோழி?

சென்ற கென்னுங்கொல் செறிப்பல் என்னுங்கொல்?

கல்கெழு நாடன் கேண்மை

அறிந்தனள் கொல்லஃ தறிகலன் யானே!

10

தெளிவுரை : தோழீ! துய்யினைத் தலையிலே கொண்ட மிக்க இளமையான தினைக் கதிர்க் குலைகள் பால் கொண்டு தலைசாய்த்து, மூடியிருந்த தோடுகள் பிரிந்துபோயின வாயின் என்றும்; துறுகற் பாறைகளின் மேலாகத் தினைக்கதிர்களைக் கொய்துபோகும் பொருட்டாகக் கூடியிருந்த சிவந்த வாயை யுடைய பசிய கிலயினங்கள் தினைக்கதிர்களைக் கவர்ந்து போதலும் நேருமென்றும்; அவற்றை ஓட்டும் பொருட் டாகப் புனத்திடைச் சென்று தட்டையையும் புடைப் பீராக, கவண் கற்களையும் தொடுத்து எறிவீராக என்றும்; எம் தந்தை வந்து தாயிடத்தே உரைத்தனன். அதனைக் கேட்டாளான எம் அன்னையும், திருமண நன்னாளைக் காட்டு நற்றிணை தெளிவுரை

23

கின்ற வேங்கையும் இனி மலர்வதாகுக என்று சொல்லிய வளாக, என் முகத்தையும் கூர்ந்து நோக்கினள். அதுதான் எதனாலோ, தோழி? புனங்காவலுக்குச் சென்று வருக என்றனளோ?" இனி மனைக்கண்ணேயே செறித்துவைப் பேன் என்றனளோ? மலைநாடனது நட்பினை அன்னையும் அறிந்தனளோ? யான் யாதும் அறிந்திருக்கின்றேனே

தோழி!

சொற்பொருள்: புனிற்றுக் குரல்-இளைதான தினைக் கதிர்கள். பால் கொள்ளல்-பாலேற்றுக் காய்ப்பருவங் கொள்ளுதல். இறைஞ்சி - தலைசாய்த்து. தோடு -மூடியுள்ள மேலிலைகள். துறுகல்-வட்டக் கற்பாறை. மீமிசை - மேற் புறத்தே. பாசினம்-பசிய கிளியினம். தட்டை - கிளிகடி கருவிகளுள் ஒன்று. நன்னாள்- திருமணத்திற்கான நல்ல நாள். அலர்க -மலர்க.

விளக்கம் : தினைக் கதிர்கள் பாலேற்றுக் காய்ப்பருவம் எய்தின; ஆதலின் கவர்ந்துபோகக் கிளியினம் வருதல் கூடும்; அவற்றை வெருட்டக் கிளிகடி கருவிகளை எடுத்துக் கொண்டு புனங்காவலுக்குச் செல்லுதல் வேண்டும் என்று நினைத்திருந்த அன்னை அது கேட்டு, நன்னாள் வேங்கையும் அலர்க என்று கூறியவளாகத் தோழியை நோக்குகின்றாள். மலைநாடனோடு தலைவிக்கு நேர்ந்துள்ள நட்பை அறிந்த தோழி தி திகைக்கின்றாள். அன்னைக்கு உண்மை தெரிந்து தான் அப்படிச் சொன்னாளோ எனக் கலங்குகின்றாள். இவ்வாறு அமைந்துள்ளது செய்யுளின் பொருள். இதனைச் சிறைப்புறமாக நின்று கேட்கும் தலைவன், தலைவியை விரைய மணம்வேட்டுக் கொள்ளுதலிலேயே மனஞ்செலுத்துவான்; அப்படிச் செலுத்தவேண்டும் என்பதுதான் தோழியின் கருத்துமாகும்.

று

கதிர் முற்றித் தலைசாய்ந்த தினையைக் கவர்ந்து போகக் கிளியினம் வந்து குழுமுவதுபோலப் பருவ மலர்ச்சியுற்ற தலைவியைக் மணந்துகொள்ளக் கருதிப் பலரும் வருதல் கூடும். அவரிடமிருந்து அவளைக் காத்தல் வேண்டும் எனவும் உட்பொருள் அமைத்துக் கூறியதாகவும், அதனைக் கேட்டு உணர்ந்தே தாய் வேங்கை மலர்க என்றாளாகவும் கொள்ளு தலும் பொருந்தும்.

'திருமணம் செய்யப் பெற்றோர் கருதினர். அவள் இனி இற்செறிக்கப் படுவாள்; களவுக் குறி வாய்த்தல் அரிது; விரைய மணத்தற்குமுயல்க' என்பதும் உணர்த்தப்பெற்றது

L 24

நற்றிணை தெளிவுரை

207. பெருமீன் நினைத்த சிறாஅர்!

பாடியவர்: ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். திணை: நெய்தல். துறை: நொதுமலர் வந்துழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[(து -வி.) தலைவியின் களவு களவு உறவை அறிந்தனள் தோழி. அவள், தலைவியை மணம் பேசி நொதுமலர் வந்த போது அதிர்ச்சி அடைகின்றாள். தலைவியின் உறவைப் பற்றிய உண்மையைத் தன் தாயாகிய செவிலியிடம் உரைக் கின்றாள். இவ்வாறு அமைந்தது இச் செய்யுள். செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் உரைக்கத், தலைவியின் காதலனையே அவளுக்கு மணமுடிக்க அவர்கள் இசை வார்கள் என்பது இதன் பயனாகும்.]

.

கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை

முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென நெடுந்தேர் பண்ணி வரல்ஆ னாதே; குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி வந்தனர் பெயர்வர்கொல் தாமே? அல்கல், இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோட்சுறா எறிந்தெனக் கீட்படச் சுருங்கிய முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல் தலைகெழு பெருமீன் முன்னிய

கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே!

5

10

தெளிவுரை: கண்டல்களை வேலியாகக் கொண்டதும், உப் பங்கழிகள் சூழ்ந்ததுமான தோட்டக் கால்களிலேயுள்ள, நீர்முள்ளிச் செடிகளாலே வேயப்பெற்ற குறுகிய இறைப்பை யுடைய குடிசைகளிலே வாழ்பவர் பரதவர்கள். கொழுமை யான மீன்களை வேட்டையாடிக் கொள்பவரான அவர்களது பாக்கம் ஆரவாரிக்கும்படியாக, நெடிய தேரானது, செல் தற்கு ஏற்றவாறு பண்ணப்பட்டு வருதலிலே என்றும் தவிர் வதில்லை. குன்றைப் போலக் குவிந்து கிடக்கின்ற மணல் மேடுகளைக் கடந்து வருகின்ற அவர்தான், இனி வறிதே தான் மீள்வாரோ? அங்ஙனம் நேர்வதாயின் -

லு நற்றிணை தெளிவுரை

25

இளையரும் முதியருமாகத் தத்தம் கிளையோடு கூடி யிருந்து, கொலைவல்ல சுறாமீன் தாக்கியதனாலே கிழிதற் பட்டுச் சுருங்கிப்போன, முடிகள் மிகுதியாயுள்ள வலையினைச் செப்பஞ் செய்வர். அதனைத் தம்பாற் கொண்டு, பெரிதான கடலிடத்தே பொருந்தியுள்ள பெரிய மீன்களைக் கொள்ளக் கருதியவராக, கொல்லுந் தொழிலிலே விருப்பமுடைய சிறுவர்கள் செல்வார்கள். நம் தலைவியும் அச் சிறுவர்க ளாலே கொள்ளப்பட்டவள் ஆவாள்.

கண்டல் - ஒருவகை

சொற்பொருள்: நீர்த்தாவரம்; முள் உள்ளது; வெண்பூக்கள் பூப்பது. முண்டகம் - நீர் முள்ளி. குவவு மணல் - குவிந்த மணல். அல்கல் - இரவுப் போதில். சிறாஅர், இளையர், முதியர் என மூவகைப் பருவமும் குறிக்கப்பட்டமை காண்க. கீட்படக் - கிழிதற்பட்ட தனாலே. முடிமுதிர்வலை-முடிகள் மிகுந்த வலை. முன்னிய கருதிச் சென்ற.

-

விளக்கம்: 'பாக்கம் கல்லென வரல் ஆனாது' என்றது, அவள் காதலனும் வரைவொடு வருவான் என்றதாம், 'நெடுந்தேர் பண்ணி' என்றது, அவன் நொதுமலர் குறிக் கும் இளைஞனிலும் தகுதியான் மிக்கவன் என்றற்கும், அவனும் தலைவிபாற் பெருங்காதலினன் என்றற்கும் ஆம். 'வந்தனர் பெயர்வர் கொல்' என்றது, அவன் தலைவியோ டன்றி மீளான் என்றதாம். 'கொலைவெஞ் சிறாஅர் கோட் பட்டனள்' என்றது, தலைவி தானும் வேற்று வரைவுக்குத் தமர் இசையின், கடலில் வீழ்ந்து உயிர் துறந்து, சிறுவரால் கொள்ளப்படுபவள் ஆவாள் என்பதாம்.

உள்ளுறை பொருள் : கீட்படச் சுருங்கிய முடிமுதிர் வலை யைக் கைக்கொண்டு, கொலைவெஞ் சிறாஅர் பெருங்கடலி டத்துப் பெருமீனைக் கருதிச் சென்றாற்போல, நொதுமலரும் தம்மாற் பெறவியலாத தலைவியின் வரைவை விரும்பித் தம் அறியாமையாலே வந்தனர் என்பதாம்.

மேற்கோள்: 'இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது' என்று கூறி, இச்செய்யுளை 'நாற்றமும் தோற்றமும்' (தொல்.பொருள். 144) என்னும் நூற்பா உரையிடத்தே, 'பிறன் வரைவாயினும்' என்ப தற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

+

நற்.2 26

தோழி

தலைகேறுக்கு

இவ்வாறு துறையமைதி

நற்றிணை தெளிவுரை

கொண்டால், நொதுமலர்

வரைவுமலிந்தமை போலப் படைத்து மொழிவாளாய்த் தலைவிக்குக் கூறுவாள் போலச், செவ்விநோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கும் தலைவனும் கேட்டு உணரும் பொருட்டுத் தோழி கூறியதாகக் கொள்க.

208. பிரிந்தாரைத் தரும் மழைக்குரல்!

பாடியவர்: நொச்சி நியமங் கிழார். திணை : பாலை துறை : செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத், தோழி சொல்லியது.

((து - வி.) 'தலைமகன் பொருள் தேடி வருதலைக் கருத்தினான். அதனால் தன்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லவும் முடிவு கொண்டான்' எனக் குறிப்பாலே அறிந் தாள் தலைமகள். அதனால், அவள் பெரிதும் வருந்தி நலிய, அவளுக்குத் தோழி தேறுதல் உரைப்பதாக அமைந்தது இச் செய்யுள்]

விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி

அறல்போல் தௌமணி இடைமுலை நனைப்ப விளிவில கலுழும் கண்ணொடு பெரிதழிந்து எவன்நினைபு வாடுதி, சுடர்நுதற் குறுமகள்? செல்வர் அல்லர்நங் காதலர்; செலினும் நோன்மார் அல்லர் நோயே; மற்றவர் கொன்னு நம்பும் குரையர் தாமே சிறந்த அன்பினர்; சாயலும் உரியர் பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் முடியா தாயினும் வருவர்; அதன் தலை இன்துணைப் பிரிந்தோர் நாடித்

தருவது போலுமிப் பெருமழைக் குரலே!

5

10

தெளிவுரை: ஒளி சுடருகின்ற நெற்றியை உடையா ளான இளமகளே! வலி குறைந்தவாய் விளங்கும் இழைகள் நெகிழ்வுற்று நீங்கும்படியாக விம்முகின்றனை! முத்துப் போலும் கண்ணீர்த் துளிகள் மார்பகங்களின் இடையே விழுந்து நனைந்தபடியும் உள்ளனை! விடாதே அழுகின்ற கண்களோடும் பெரிதும் நலனழிந்து எதனை நினைந்தோ நீயும் வாடுகின்றனை! நம் காதலர் நின்னைப் பிரிந்து செல் நற்றிணை தெளிவுரை

27

பவரே அல்லர்! அவ்வாறே சென்றாரானாலும், தமக்கு உண்டாகும் காமநோயைப் பொறுத்திருப்பாரும் அல்லர்! அவர் நின்னிடத்தே பெரிதான விருப்பத்தையும் உடை யவர். நின்பாற் சிறந்த அன்பினையும் கொண்டவர். மிக்க மென்மைத் தன்மையினையும் உடையவர். அவரைப் பிரிந்து வாழும் நம்மினுங் காட்டில் இரக்கமுற்றவராய், தேடிச் சென்ற அரும் பொருள் முடியாத நிலையே யானாலும், காலத்தை நீட்டியாது, உடனே நம்பால் வந்துவிடுவர். அதன் மேலும், இப் பெரிதான மேகத்து முழக்கமானது, இனிய துணையாயினாரைப் பிரிந்திருப்போரையும் நாடித் தருவதே போலுமாய் இராநின்றது காண்! ஆதலினாலே நீயும் இனி வருந்தாதிருப்பாயாக!

சொற்பொருள்: விறல் சாய் விளங்கு இழை - பிறர் அணிபவான ஒளிவிளங்கும் இழைகளினுங்காட்டில், தன் ஒளியுடைமையும் செய்வினைச் சிறப்பும் மிகுத்துக் காட்டி, அவற்றை வெற்றிகொள்ளும் வல்லமை சிறந்த இழைகள் என்றனர். அவை நெகிழ்தல், அவன் பிரிவை நினைந்தேங்கி உடல் மெலிவுற்றதனால். அறல் - கருமணல். தெள் மணி தெள்ளிய மணிபோலும் கண்ணீர்த்துளிகள். இடைமுலை முலைகளின் இடைப்பட்ட பகுதி. விளிவில் - விடுதலில்லாத படி. கலுழல் கலங்கி அழுதல். அழிந்து - நலன் கெட்டு. நினைபு - நினைத்து. நோன்மார் - பொறுப்பவர். நம்பு- விருப்பம். சாயல் - மென்மை. குரல் - இடிக்குரல்.

.

கூறியது,

விளக்கம்: மழைக் குரலைக் குறித்துக் அங்ஙனமே அவர்தாம் செல்லற்கு நினைத்தாலும், அதற் குரிய காலமும் கார்காலமாகிய இதுவன்று; இதுதான் பிரிந்தோரை நாடித் தருவதன்றி, உடனுறைவோரைப் பிரிப்பதன்று என்கின்றனள். 'செல்வர் அல்லர்' என்றவள், படிப்படியாகச் 'சென்றாலும்' என, இப்படியே ஒவ்வொன் றாகச் சொல்வதை எண்ணி மகிழ்க. தோழி கூற்றாக அமையும் சொல்லாட்சிச் சிறப்பையும் உய்த்து உணர்ந்து இன்புறுக.

இதனால், தலைவன் பொருள் தேடி வருதலின் பொருட் டாகப் பிரிந்து போவதற்குத் துணிந்தான் என்பதனை, அவனது குறிப்புக்களாலே அறிந்து, தலைவி அவன் பிரிந் தாற்போலவே உடல் மெலிந்து கலங்குவள் என்பது, அதனைக் காணும் தலைவன், தன் செலவைத் தள்ளிப்போடு வான் என்பதும் உணரப்படும். உணரவே, இல்லற வாழ் விலே தலைவன் தலைவியரிடையே விளங்கிய நெருக்கமான மனவீடுபாட்டுச் செறிவும் விளங்கும். 28

36.36

நற்றிணை தெளிவுரை

209. உயிரோடு உடன் வாங்கும்!

பாடியவர் : நொச்சி நியமங் கிழார். திணை: குறிஞ்சி. துறை : குறை மறுக்கப் பட்டுப் பின்னின்ற தலைமகன், ஆற்றானாய்,நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது.

[(து-வி.) தலைவியை அடைவதற்கு, அவளுடைய உயிர்த் தோழியின் உதவியை நாடுகின்றான் தலைவன். அவள் உதவ மறுக்கவே, அவன் தலைவிக்கும் தனக்கும் இடையேயுள்ள காதலன்பின் திறத்தைத் தோழிக்கு உணர்த்தியவனாய்த், தான் தன் நெஞ்சுக்குக் போல இவ்வாறு கூறுகின்றான்.)

மலையிடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் தளிபதம் பெற்ற கானுழு குறவர் சிலவித்து அகல விட்டுடன் பலவிளைந்து இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல் கிளியும் தாம்அறி பவ்வே! எனக்கே படுங்காற் பையுள் தீரும்; படாஅது தவிருங் காலை யாயினென்

உயிரோ டெல்லாம் உடன்வாங் கும்மே!

கூறுவது

5

தெளிவுரை : மலைச்சாரலிடத்திலேயுள்ள தமக்குரிய தோட்டக்கால்களை, மேலும் அகலப்படுத்தி வளைத்து வேலி யிட்டனர். மழை பெய்யும் பதத்தினைப் பெற்றதும், காட்டினை உழுது வாழ்வோரான உழவர்கள் அப்பகுதியை உழுது பண்படுத்திச் சிலவாய விதைகளையும் கலப்பாக விதைத்தனர். அவை வளர்ந்து ஒரு சேரப் பலவாகவும் விளைந்தன. தலைசாய்ந்த கதிர்களுடனே விளங்கிய தினைப் புனமாகவும் ஆயிற்று. அவ்விடத்தே உள்ளாளான தலைவியது - மழலைச்சொல்லும் மாறாத இளமடந்தையது- பேச்சாகிய இனிதான குரலைக் கிளிகளும் கேட்டு அறிந்திருப்பனவே! அத்தகைய இனிதான சொற்கள் என் பொருட்டாகவும், என்னருகே அவள் இருந்தபடியே எழுமானால், என்னுடைய இக் காமநோயும் தீர்ந்து போகுமே! அங்ஙனம் மிழற்றப்படாது, அதுதான் விட்டுப் போயின் செயலும் நிகழ்வதாயின், என் உயிரோடு, என் நற்றிணை தெளிவுரை

29

அறிவு முதலாகிய குணங்களையும் அத் தவிர்தல் தன்னோடும் உடன்கொண்டு போய்விடுமே! அவளின்றியாம் உய்வது தான் எவ்வாறோ, நெஞ்சமே?

+

சொற்பொருள்: இடம்படுத்தல் - காடுகொன்று திருத்தி தினைக்கொல்லையை விரிவுபடுத்தல். கோட்டுதல் - புனத்தை வளைத்து வேலியிடல். தளிபதம் -மழை பெய்தலாகிய ஈரப் பதம்; என்றது உழவுக்கு ஏற்றதாகி செவ்விதான பதத்தினை. செய்யுழும் உழவர் போலாது, கடுமுயற்சியோடு உழவைச் செய்வதற்கு உரியவர் காட்டை உழுபவராய் குறவர் என்பதற்கு, 'கானுழு குறவர்' எனக் கூறினர்.

'சில வித்து அகல விட்டு' என்பது, விதைப்பதன் மரபை உணர்த்தும். அகல விதைப்பதனால், செடிகள் நன்கு வளர்வதற்கு வாய்ப்பு உண்டாகும். 'பலவிளைந்து'

என்றது, பலவாகக் கிளைத்து வளர்ந்து விளைச்சலைத்

தந்து என்றதாம். 'மிழலையம் தீங்குரல்' என்றது, தலைவியின் குரலினிமையின் சிறப்பை வியந்து பாராட்டிக் கூறியதாகும்; இதனால் அவளுக்கும் தனக்கும் முன்ன தாகவே பழக்கம் உண்டெனக் குறிப்பாக உணர்த்தியதும் ஆம். பையுள் - காம நோயாகிய துன்பம். எல்லாம்-அறிவும் வீரமும் ஆகிய ஆண்மைப் பண்புகள் எல்லாம். இதனாலே, அவர்களது மெய்யான காதலன்பை அறிந்தாளான தோழி, அவன் குறையை முடிக்கவே முற்படுவாள் என்பது மரபாகும்.

இறைச்சிப் பொருள்: சிலவாய விதைகளை விதைத்துப் பல வாய பயனைப் பெறுவார்போலத், தலைவியை விரும்பி யான் கூறும் இச் சிலவாய சொற்கள் நின் உள்ளத்தே நிலைபெற்று, நீயும் உதவினை ஆயின், யானும் அவளும் பலவாய இன்பங் களிலே திளைத்து வாழ்வோம் என்பதாம்.

விளக்கம்: தளிபதம் பெற்றன்றி வித்தல் நிகழாதவாறு போல, நீயும் நின் உள்ளத்தே என்பால் இரங்குதலாகிய மனநெகிழ்வைப் பெற்றாயாயின், என் சில சொற்கள் பெரும் பயனைத் தருதலும் நிகழும் என்பதாம். 'தன்பால் தோன் றும் அவலத்தை தலைவன் தோழிபால் உரைப்பது அவன் தகுதிக்கு இழுக்காகாதோ?' என்றால், காமவசப்பட்டார் அதனின்றும் உய்ந்து கரையேற எதனையும் மேற்கொள்ளத் தயங்கார் என்று கொள்க. இதுபற்றியே சான்றோரும் இத்தகைய காட்சிகளைப் படைக்கின்றனர் என்பதும் அறிக. 30

நற்றிணை தெளிவுரை

210. செல்வமும் செய்வினைப் பயனும் !

பாடியவர்: மிளைகிழான் நல்வேட்டனார். திணை : மருதம். துறை : தோழி, தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.

[(து-வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன், மீன்டும் தன் வீட்டிற்கு வருகிறான். தலைவி புலந்துகொள்ள, அவள் புலவியைத் தணிவிக்க உதவுமாறு தலைவன் தோழி யிடம் வேண்டுகின்றான். அவள், அவன் செயலைக் கண்டித்து உரைத்துப், பின் தலைவியைப் புலவிதீரச் செய்கின்றனள். அவள் உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர! நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே! சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புண்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வஞ் செல்வம்என் பதுவே!

தெளிவுரை: தலைவனே! நெல் அறுத்து நீங்கப்பெற்ற தான அழகிய இடமகன்ற வயலினிடத்தே, மீளவும் உழுத பொருட்டாக ஈரத்தையுடைய சேற்றிலே, விதைக்கும் வித்தோடும் போயின உழவர், வட்டியினிடத்தே, பற்பல வகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கின்ற, புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! எதனையும் பெரிதாக நெடுநேரம் பேசுதலாகிய பேச்சுவன்மையும், தேர் யானை குதிரை முதலாயவற்றை விரைவாக ஏறிச் செலுத்துத லாகிய உடல்வலிமையும் 'செல்வம்' என்று கொள்ளப்படுவ தன்று. அவை வாய்த்தல் முன் செய்த நல்வினைப் பயனா லேயே யாகும் என்று அறிவாயாக. இனிச் சான்றோர் 'செல்வம்' என் று சொல்வதுதான், தன்னை அடைக்கல மாகச் சேர்ந்தோரது துயரத்தை நினைத்து அச்சங்கொள்ளும் பண்பினைக் கொண்டாயாய், அவர்பால் இனிய தகையாளனா செல்வம்' என்று யிருந்து உதவும் பண்புச் செல்வமே

5 நற்றிணை தெளிவுரை

31

சொல்லப்படுவதாகும். நீதான் அதனை இல்லா தானும் ஆயினமையின், நின்பால் எதனையும் கூறிப் பயனின்று காண்.

சொற்பொருள்: அரிகால் பயிர் அறுத்துவிட்ட பின்னுள்ள தாளடி நிலம். மறுகால் உழுதல் - மீளத் தாளடிப் பயிர் செய்யக் கருதி உழுதல். செறு - சேறு. வட்டி - வட்டமான கடகப்பெட்டி. பற்பல மீன்-வயலில் கலித்துப் பெருகி யிருந்த பல்வகையான மீன்கள். யாணர் - புதுவருவாய். நெடிய மொழிதல் - தன் பெருமிதம் புலப்படக் கூறுதலும் ஆம். ஆடிய - விரையச் செல்வன ; அவை மாவும் தேரும் களிரும் போல்வன. சான்றோர் - சான்றாண்மையாளராகிய மறமாண்பினர். புன்கண் - துயரம். மென்கண் - இனிதான செயல்கள் செய்யும் தன்மை.

உள்ளுறைபொருள்: தாளடியிலே விதைப்பதற்கு விதை யோடுஞ் சென்ற பெட்டியானது, மீனொடும் திரும்பும் என்றனள். இது தலைவியோடு இல்லறம் நிகழ்த்தும் நின் பால், அதன் பயனைச் செறிவுடன் பெறுவதற்குரிய மனநிலை யில்லாதே, பரத்தையர்பாற் பெறலாகும் இழிந்த இன்பத்தினை நாடும் புல்லிய ஒழுக்கம் உண்டாயிருக்கிறது எனக் கடிந்து கூறியதாம்.

விளக்கம்: தலைவியை நெற்பயனுக்கும், பரத்தையை மீன்பயனுக்கும் உவமித்தனள். குலமகளிர்போலக் குலமரபு பேணும் மகப்பெற்றுத் தருவதற்குப் பரத்தையர் உரிமை யற்றார். ஆதலின், அவர் உறவு இழிந்ததாயிற்று என்று கொள்க. இவ்வாறு தோழியாற் கடிந்து கூறப்பெற்ற தலைவன், தன் செயலுக்கு நாணி நிற்க, அதுகண்டு இரங்கிய தோழி, அவனுக்கு உதவக் கருதித் தலைவியை இசைவிக்க முற்படுவாள் என்பதாம். புன்கண் - வருத்தம் ; மென்கண்- அருள். நெடிய மொழிதல் -ஆண்மையான

-

பேச்சுப்

பேசுதல் எனினும் ஆம். செய்யானது நெல்விளைத்துப் பயன் கொள்ளுதலுக்கு உரியது; அதனிடைய மீன் கலித்துப் பெருகுதல் இடைவரவே யாகும். இவ்வாறே தலைவனுக்கு உரியவள் மனைவி எனவும், இடைவரவேபோல வந்தவள் பரத்தை என்பதும் கொள்க.

உரிமை கடமையோடு இன்பமும் தருபவள் மனைவி என்பதும், இன்பமாகிய ஒன்றான் மட்டுமே தலைவனைக் பவள் பரத்தை என்பதும் கருதுக,

.

32

நற்றிணை தெளிவுரை

211. குருகும் தாழைப் போதும்!

பாடியவர்: கோட்டியூர் நல்லந்தையார். திணை : நெய்தல். துறை: வரைவு நீட, ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி, சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகிவரும் தலைவனின் உள்ளத்திலே, 'தலைவியை விரைந்து முறையாக மணஞ்செய்துகொள்ளல் வேண்டும்' என்னும் உணர்வை எழுப்பக் கருதுகின்றாள் தோழி. ஆங்கே, ஒருபுறமாக வந்து நின்றானாகிய தலைவன் கேட்டு உணருமாறு, தான் தலைவியிடம் கூறுவதுபோல இவ்வாறு சொல்லுகின்றாள்.)

யார்க்குநொந்து உரைக்கோ யானே! ஊர்கடல் ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவில் கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறுமடல் தலைய தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது வெரூஉம்

துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே.

5

сл

தெளிவுரை : ஊர்ந்து செல்லுகின்ற கடலினது பெருக் கானது சென்று பாய்தலினாலே உப்புப்படுதலை உடைய வான உப்புப் பாத்திகளுள், வளைந்த கழியிடத்தேயுள்ள மீன்களை வேட்டையாடி உண்ணக் கருதியதாகி எழுந்த, கருங்கால்களையுடைய நீர்க்குருகின் குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய, வளைந்த மேற்புறத்தைக் கொண்ட இறாமீனின் மீசையுடைய ஆணானது, மோதுகின்ற அலைகளாலே கொழிக்கப்பெற்ற எக்கர்மணலினது, நெடுங் கரைப் பகுதியிடத்தே வளர்ந்துள்ள நெருங்கிய மடலிடத்தே இலைகளாலே பொதியப்பட்டு விளங்கும் தாழையினது, வண்டு மொய்க்கும் வெண்மையான பூம்போதைக் கண்டு வெண் குருகோ' என அச்சமுறும். இத்தகைய கடற்கரைக்கு உரியவனாகிய நம் தலைவன் நம்மைத் துறந்து போயினன் என்று, யான்தான். யாவர்பாற் சென்று மனம்நொந்து உரைப்பேன் கொல்லோ? நற்றிணை தெளிவுரை

33

தொடர்ந்த இயக்

சொற்பொருள்: ஊர் கடல்-ஊர்ந்து செல்லும் கடல்; கடல் ஊர்தல் என்றது, அலைகளின் கத்தை. ஓதம் - கடல்நீர். செறு- 'வயல்';என்றது உப்பு விளையும் உப்புப் பாத்திகளை. கொடுங்கழி- வளைந்த உப்பங் கழிகள். கோள் - குத்து. முடங்குபுறம் - வளைந்த 'மோவாய்' என்றது, இறாமீனின் மீசையை. ஏற்றை - ஆண்; மேற்புறம். மீசை ஆணுக்கு மட்டுமே என்க. எக்கர்-மணல் நெடுங்கோடு-நெடியதான கரைப் செறிந்த தாழையின் மடல். தோடு-இதழ். வான்போது- வெள்ளை நிற மொட்டு; உருவால் வெண்குருகைப் போலத் தோற்றுவது இது. வாலிமை-வெண்மை.

கரைப் பகுதி.

மேடு.

துறு மடல்-

விளக்கம்: 'கொண்கன்' என்றது, வரையாது ஒழுகினன் ஆயினும், அவனே நம்மை மணக்கும் தலைவன் எனத் தாம் கொண்டுள்ள கற்புறுதி தோன்றக் கூறியதாம். யார்க்கு உரைக்கோம்?' என்றது, 'அவனையன்றி வேறு யார்தாம் நமக்கு உறுதுணையாவார்? அவனே துணையிலன் எனில் பிறர் யாவர் நமக்கு உதவுவார் என வருந்திக் கூறியதாம். இறவு முடங்கு புறத்தை உடையதாதலை, முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்' எனப் பிறரும் கூறுவர் (அகம் 220.). மோவாய் மீசை தாடிகளைக் குறிப்பதனைப் 'புறாள் வெள் ளெலி மோவாய் ஏற்றை' என (அகம் 133) வருவதனால் உணர்க. தாழையின் வெண்பூ குருகெனத் தோற்றுதலைத் 'தயங்கு திரை பொருத தாழை வெண்பூக் குருகென மலரும்' என வருவதனாலும் அறிக (குறு. 2269

உள்ளுறை பொருள்: 'கருங்காற் குருகின் கோள் உய்ந்து போகிய இறவின் ஏற்றை, தாழை வெண்போதுக்கு அஞ்சி மெலியுமாறு போல, இவளும், இனியும் நீதான் வரைவு நீட்டித்தாயாயின், எழுகின்ற ஊரலரானே வரும் ஏதப் பாட்டிற்கு உய்ந்து பிழைத்துள்ள யாம், இனி நின் வரைவும் வாய்க்காது இறந்து படுதலே உறுவேம் என்பதாம்.

வருதற்கு

ஊரவர் காவலும் பிறவும் கடந்துவந்து முன்னர் இவளைத் துய்த்துச்சென்ற நீதான், இனி வரைந்து அஞ்சினையாய், நீன் ஊர்க்கண்ணேயே ஒடுங்கினை போலும் என்றதூஉம் ஆம்.

இதனைக் கேட்கலுறும் தலைவன், வரைந்து சென்று மணங்கொள்ளுதலிலேயே நாட்டத்தைச் செலுத்துவானா வான் என்பதாம். 67

34

நற்றிணை தெளிவுரை

212. வந்தனர் வாழி தோழி!

பாலை.

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை : துறை: பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில் கள்வாய் வரவுகேட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து-வி.) பொருள் முடித்த தலைவன், தான் மீண்டுவரு கின்றதான செய்தியைத் தலைவிக்கு முன்னதாகத் தெரிவிப் பதற்காகத், தன் ஏவலருட் சிலரை அவள்பால் அனுப்பு கின்றான். அவர்கள்'செய்தி சொல்லக் கேட்ட தோழி யானவள், தலைவியிடஞ் சென்று, அவளை வாழ்த்துவது போன்று அமைந்த செய்யுள் இது.]

.

பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்றம் நீந்தி, நம்வயின் வந்தனர்; வாழி தோழி! கையதை செம்பொன் கழல்தொடி நோக்கி, மாமகன் கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் அவவுக்கொள் மனத்தேம் ஆகிய எமக்கே!

сл

5

10

தெளிவுரை : தோழீ! நீதான், இனிமேலும் நெடுங்காலம் இனிதாக வாழ்வாயாக! பறவைகளைப் பற்றக் கருதிய வேட்டுவன், பார்வைப்புள்ளை வைத்து அமைத்த வலையைக் கண்டதும், நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை யானது அச்சங் கொள்ளும். தான், தன் துணையை அழைத்துப் புலம்புதலையும் செய்யும்! அதன் தெளிவான விளிக்குரலானது, சுரத்தின் வழியாகச் செல்கின்றவரான கூத்தாடுவோர், தம் நடை வருத்தம் தோன்றாமற்படிக்கு விரைவாக இசைக்கின்ற யாழின் இசையோடும் மாறு கொண்டதாய் இருக்கும். அத்தகைய காட்டு நெறியின் அவ்விடத்தே, கடுங்குரற் பம்பையினைக் கொண்டாராகவும், சினங்கொண்ட நாயுடன் கூடியவராகவும் வடுகர் வருவர். அத்தகையதான, நெடிதும் பெரிதுமான குன்றத்தையும் கடந்து, நம் தலைவரும், நம் ஊருக்கு மிக அணித்தாகவே வந்து கொண்டிருக்கின்றனர். நம் கையிடத்தே விளங்கும் நற்றினை தெளிவுரை

35

செம்பொன்னாற் செய்யப் பெற்ற தொடியானது கழன்று சோர் தலைப் பார்த்தவனாக, நம் சிறந்த மகன் வந்து, நம்மை அழுதபடியே அணைத்துக் கொண்டோனாய், அதுதான் கழல்வது ஏனோ அன்னாய்?' என வினவுகின்ற அந்த இனிய அழுகையினது மழலைக்குரலைக் கேட்ரும்போதெல்லாம், நம் தலைவனிடத்தே மேலும் விருப்பங் கொண்டேமாய்த் தளர் கின்ற மனத்தை உடையேமாகிய நம்மிடத்திற்கே, அவரும் விரைவில் வந்து சேர்வர். அதனால், துயரற்றனையாய், இனிதே இன்பத்து ஆழ்ந்தனையாய், நெடிது மகிழ்வாயாக என்பது கருத்து.

பார்வை

என்பது

சொற்பொருள்: கைப்புள். இதனைக் கொண்டு பிறபுட்களை வரச் செய்து, வலைக்குள் அவை வந்து அகப்பட்டுக் கொள்ள, அவற்றை எளிதாகப் பிடிப்பது வேட்டையாடுவோர் கொள்ளும் மரபு ஆகும். படுவலை-அகப்படுத்தும் வலை. வெரீஇ-அச்சங்கொண்டு. தெள்விளி - தெளிந்த கூப்பீட்டுக் குரல். கோடியர்-கோடு- ஊதுகொம்பு; ஊது கொம்பினை உடையவரான கூத்தர்; நரம்பு-நரம்புகளையுடைய யாழைக் குறிப்பது; சினையாகு பெயர். அத்தம்-காட்டு வழி. பம்பை-ஒருவகைத் தோல் வாத்தியம்; தென்பாண்டி நாட்டிலே இந் நாளிலும் வழக் கத்தில் இதே பெயரோடு இருந்து வருகின்றது. கதம்-சினம். வடுகர்-வடுகுமொழி பேசுவோர்; தமிழகத்தின் வடபுற வெல்லைப் பகுதியில் வாழ்ந்தோர். நீந்தி-கடந்து; முயற்சி யோடே கடப்பது பற்றி நீந்தி என்றனர். கழல் தொடி- கழலும் தொடி; தொடி செறிப்புத் தளர்ந்து கழலுதல் பிரிவுத் துயரத்தின் உடல்நலிவினால். கவவு-உடலோடு ஒன்ற அணைத்துக் கொள்ளுதல். அவவு-அவா; ஆசை.

மெய்

விளக்கம்: பிரிவுத் துயரின் மிகுதியாலே இளைத்ததனைக் குறிக்கக் ‘கழல் தொடி' என்றாள்; அதனை நோக்கிய புதல்வன் வருந்தித் தாயை அணைத்து அழு கின்றனன். 'தன் சோர்வைக் கண்டு வருந்தும் இச் சிறு புதல்வனின் உள்ளந்தானும் தலைவனுக்கு இல்லையே' என நினைக்கத், தலைவியின் துயரம் மிகுதியாவதுடன், தலைவனை அணைத்து மகிழத் துடிக்கும் ஆசையும் பெருகுவதாயிற்று என்க. தனித்திருக்கும் கணந்துள் பறவையானது, வேட்டு வனின் படுவலைக்கு அஞ்சி வெருவுவதுபோன்று, தலைவியும் அத்தத்து வருவோனாகிய தலைவனின் பயணத்தில் ஆபத்து நிகழுமோ எனக் கவலையுற்றுப் புலம்புவாள் என்பதாம். அதன் தெள்விளியோடு கோடியரின் யாழொலியும் சேர்ந்து 36

தலையின்

நற்றிணை தெளிவுரை

இசைத்தல், அவரும் தம் வழிநடை வருத்தம் தீர, இசை யிலே மனஞ்செலுத்தி மகிழ்ந்தார் போலத்,தலைவியும் தலைவனுடன் இன்புற்று இனிது மகிழ்பவளாவாள் என்ப தாம். 'வடுகர்' அந்நாளில் ஆறலைப் போராய் இருந்தனர் போலும். அதுபற்றியே அவராலும் துயரம் ஏதும் கொள் ளாதே இனிது வழிகடந்து சென்று என்றனர்.

கணந்துள்- நீர்ப் பறவை இனத்துள் ஒன்று.'எந்நில. மருங்கிற் பூவும் புள்ளும்' (தொல். பொருள் 19) என்னும் விதிக்கு இணங்கப் பாலைக்கண் நெய்தற் கருப்பொருளாகிய கணந்துள் பயின்று வந்ததும் காண்க.

இறைச்சி : கணந்துட் பறவையது புலம்புங் குரலோசை யானது, வழிநடை வருத்தந் தீரக் கோடியர் மீட்டும் யாழிசையிற் கலந்து விடுவதுபோலத் தலைவியின் புலம்பல் எல்லாம், தலைவன் அளிக்கும் இன்பத்திலே இணைந்து தலைவியை மகிழ்விக்கும் என்பதாம். மெய்ப்பாடு தோழியின் உள்ளத்தே தோன்றிய உவகை. பயன்: தலைவிக்கும்

அவளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி.

213. புனம் காவலும் நுமதோ?

·

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார். திணை: குறிஞ்சி. துறை : மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.

[(து.வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன்பின்னர், ஒருநாள், தலைமகளும் தோழியும் ஓரிடத்தே இருப்பதனைக் கண்டானாகிய தலைமகனின் உள்ளத்திலே வேட்கை பெருகு கின்றது. ஆயினும், தோழிக்குத் தம் உறவை வெளிப்படக் காட்டவும் துணியானாய், அவர்பால் வரும் புதியவன் ஒருவன் போல வந்து, அவரோடு உறவுடையான்போல் இவ்வாறு வினவுகின்றான். தன் கருத்தோடு அவர் கருத்தையும் ஒன்றுபடுத்து உணரக் கூறுதலின் 'மதி உடன்படுத்தல்' ஆயிற்று.)

அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின்

வேர்க்கொண்டு தூங்கும் கொடுஞ்சுளைப் பெரும்பழம்

குழவிச் சேதா மாந்தி, அயலது

வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும்

பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதுஎனச்

5 நற்றிணை தெளிவுரை

சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ?- கோடேந் தல்குல் நீள்தோ ளீரே!

37

10

தெளிவுரை: பக்கம் உயர்ந்த அல்குல் தடத்தையும்,பருத்த தோள்களையும் உடையவரான பெண்களே! அருவியின் ஒலியானது கேட்டபடியே இருக்கின்ற பெரிய மலையிடத்தே சென்று சேர்ந்து, இளங்கன்றைக் காலிலிட்ட கயிற்றால்

பிணித்துள்ள மன்றிடத்துள்ள பலாமரத்தினை இளங்கன்றை யுடைய சிவந்த நிறப் பசுவும் சென்று அடையும். அவ்விடத்தே, அப் பலாவினது வேர்ப்புறத்தே பழுத்துக் கிடக்கும் கொழுவிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப் பழத்தையும் அப் பசு தின்னும். தின்றபின், மூங்கில்கள் நெருங்கிய சிறுமலைப் பக்கத்தேயுள்ள குளிர்ந்த நீரையும் பருகும். இத்தகைய வளமுடைய பெருமலைகளே வேலியாக வுள்ள இம் மலைநாட்டிடத்தே அமைந்துள்ள நமது சிற்றூர் தான் யாதோ?' என யான் கேட்டேனாயினும், அதற்கு யாதொரு சொல்லும் விடையாகச் சொல்லாதே இருக் கின்றீர். ஆயினும், தொகுதி கொண்ட கார்மேகங்கள் கல்லென்னும் இடிமுழக்கோடும் பெயலைச் செய்தலினாலே விளைந்துள்ள, செழுமையான செந்நிறம் பொருந்திய கதிர் களைக் கொண்ட சிறுதினையின், கொய்தற்கான பருவத்தைக் கொண்ட இத் தினைப்புனத்தின் காவலும் உமது தானோ? இதையேனும் கூறுவீராக!

L

சொற்பொருள்: மன்றப் பலா-மன்றிடத்துள்ள பலா; அல்லது, தழைத்துப் படர்ந்து மன்று போல் விளங்கும் பலாவும் ஆம். குழவிச் சேதா - இளங்கன்றையுடைய செந் நிறப் பசு. அறல் - அறல்பட்ட நீர். கல்லென - ஒலி முழக் கோடுங் கூடியதாக. கருவி - தொகுதி. செங்கேழ் - செந்நிறம்.

விளக்கம்: கன்றின் பேரிலுள்ள பாசத்தாலே அதனை நாடிவந்த சேதாவுக்கு, பலாப்பழமும் பருகுதற்கு அறல் நீரும் வாய்த்ததுபோலே, வேட்டையாடலைக் கருதியே வந்த வனாகிய எனக்கும், தலைவியைக் காணலும் அவளோடும் இன் புறுகின்ற வாய்ப்பும் கிடைத்தது என்கின்றான் தலைவன். இது தம் உறவு ஊழானது கூட்டுவித்ததனாலே வாய்த்தது

. 38

நற்றிணை தெளிவுரை

என்றதாம்; இதனால் தெய்வீக வுறவை வலியுறுத்தினான். தலைவியது நாட்டின் வளமையை கூறிப் புகழ்ந்ததும்

ஆம்.

'கோடேந்து அல்குல்' என்றது, முன்னர்த் தான் தலைவி யோடு கொண்ட களவுறவை நினைவுபடுத்தியது. 'நீள்தோளீர்' என்றது தோழிக்கும் தலைவிக்கும் இடையே யிருந்த வேற்றுமையற்ற அன்புச் செறிவைச் சுட்டியது. இதனாலே, தலைவியது கருத்துக்கு உதவுவதே தோழியின் செயலாக வேண்டும் என்றதாம்.

'கொய்புனம்' என்றது புனம் அழிந்தாற் கூட்டம் நிகழாது எனக் குறித்துப் பகற்குறி வேட்டது; புனம் அழிந்தபின் தலைவியும் மனையகம் புகுதல் நிகழுமாதலின் இரவுக்குறி வேட்பவன் சிறுகுடி யாதெனவும் வினவினான் எனக் கொள்க.

உறவுடையாளாகிய தலைவி உட்பொருளை உணர்ந்து களிக்க,அஃதறியாதாளாகிய தோழி அதனை அன்பினால் மட்டுமே வினவியதாக முதலிற் கொள்ளினும், தலைவன் தலைவியரின் மெய்ப்பாடுகளைக் கண்டதும் உண்மையினை உணர்வாள் என்று கொள்க.

உள்ளுறை பொருள் : 'கன்றையுடைய செ ந்நிற பசுவானது, பலாப்பழத்தைத் தின்று இறும்பின் அறல் நீரைப் பருகும்' என்றது, தலைவியை முன்பே இயற்கைப் புணர்ச்சியாலே பெற்றவனாகிய யானும், இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் பெற்றுக் கூடி மகிழ்வேன்' என்றதாம்.

மேற்கோள்: 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் நூற் பாவின் உரைக்கிடையிலே (தொல்.பொருள்.99), 'ஊரும் பேரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்' என்பதற்கு இச் செய்யுளைக் காட்டி, இதனை 'ஊர் வினாயது' என்பர் இளம் பூரணனார்: 'ஊரும் பிறவும் வினாயது' என்பர் நச்சினார்க் கினியர். இவ்வாறு பொருந்தக் கொண்டு பொருள் காணலும் இனிமை தருவதே.

'செங்கேழ் ஆடிய' என்பதற்குத் தலைசாய்ந்த கதிர்கள் மழையால் செந்நிறப் புதுநீர் பட்ட தரையிலே படிய எனவும் கொள்க. 

214. அவரும் கேளாரோ தோழி!

பாடியவர்: கருவூர்க் கோசனார்; திணை: பாலை. துறை: உலகியலாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவன் குறித்த பருவங் கண்டு, தலைமகள் சொல்லியது.

[(து. வி.) உலகியல் வாழ்விற்கான பொருளைத் தேடி வருவதன் பொருட்டாகப் பிரிந்த தலைமகன், பிரியுங் காலத்தே மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவத்தினது வரவைக் கண்டாள் தலைவி. அவள் மனவேதனையை. உணர்த்துவது போல அமைந்தது இச்செய்யுள்.]

‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்’ என,
வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை
‘அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது
அணிய வருதும்நின் மணியிருங் கதுப்பு’ என, 5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,
மைசூழ் வெற்பின் மலைபல இறந்து,
செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி! தோள
இலங்குவளை நெகிழ்த்த கலங்களும் எள்ளி 10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலுமிக் கார்ப்பெய்ல் குரலே!

தெளிவுரை: “தோழீ! இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறம் ஆற்றலாகிய இன்பவாழ்வும், மறுமைக்கு இன்பந் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதனவாகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்தடைவதில்லை” எனத் தலைவனும் கருதினார். அதனாலே, வினை செய்தலின் பாற் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டினரும் ஆயினார். அப்படிப் பிரியுங் காலத்திலே, “நின்னது நீலமணியைப் போன்றதான கரிய கூந்தலிலே, கார் காலத்தே அரும்பு விரிகின்ற, சுரும்புகள் தேன் உண்ணா நிற்கும் பல வகையான மலர்களையும் அணிந்து இன்புறும் பொருட்டாக யானும் வருவேன்” என்று, குறையற்ற வஞ்சினத்தினை என் நெஞ்சமும் ஏற்றுக் 40

நற்றிணை தெளிவுரை

மாறு கூறினார்.கார்மேகங்கள் திரண்டு மொய்த்திருக்கின்ற வெற்புக்களைக் கொண்ட மலைகள் பலவற்றையும் கடந்து, பொருளைச் செய்து கொணர்வதற்கும் சென்றனர். அவர் தாம், தாம் சென்றிருக்கின்ற தேயத்திடத்தும், "என் தோள்களிலே விளங்கிய தோள்வளைகள் நெகிழும்படியாகச் செய்ததனாலே ஆகிய பிரிவுக்கலக்கமாகிய துன்பத்தை நோக்கி, எள்ளி நகையாடுவதுபோல மின்னலிட்டு ஆரவாரித்தபடி தோன்றியுள்ள இக் கார்ப் பெயலின் இடிக்குரலைத் தாமும் கேட்டிருக்க மாட்டாரோ?'

சொற்பொருள்: இசை-புகழ். இன்பம் - தலைவியோடு கூடிவாழ்ந்து பெறுதலாகிய இன்பம். ஈதல் - வறுமை யாளராய் வந்து இரந்தவர்க்கு வழங்கி மகிழ்தலாகிய இன்பமும், அந்தச் செயலாலே விளைகின்றதாகிய மறுமை இன்பமும். அலரி -விரிந்த பூ. மணி - நீலமணி. கதுப்பு - கூந்தல். வஞ்சினம் - சபதம். செயிர் - குற்றம். கலக்கு அஞர் - கலக்கந் தருவதான பிரிவுத் துயரம். கார்ப்பெயல்- கார் காலத்துப் பெயலாகிய பெருமழை.

விளக்கம் : பல் தெரியக் காட்டி நகுதலின்போது உண்டாகும் ஆரவாரத்திற்கு இடிக்குரலையும், பல்லொளிக்கு மின்னலையும் நயமாக உவமித்தனர். 'கேளார் கொல்லோ!' என்றது, கேட்டனராயின், சொற்பிழையாராகிய அவர் தாம் இதற்குள் மீண்டும் வந்திருப்பாரே எனக் கருதும் ஆற்றாமை மிகுதியாற் கூறியதாகும். தேயந்தோறும் பருவங்களும் வேறுபடுதலினாலே, அவர் சென்றுள்ள நாட்டிடத்தே இக் கார்ப்பருவமானது இன்னும் தோன்றிற் றில்லை போலும் என்று மனந்தேறுவதற்கு முயன்றதாம். வஞ்சினம் பொய்த்தார் என்று அவருக்குத் தெய்வக்கேடு சூழாமை கருதுவாள், தன் அருளுடைமையாலே இவ்வாறு கூறுகின்றனள் என்க. இதுபற்றியே 'செயிர்தீர் காதலர். என அவர் வஞ்சினம் பொய்த்தல் இலர் என்று

கூறினளாம். நெஞ்சு உணக் கூறுதலாவது, நெஞ்சமும் ஏற்றுத் தெளிவு கொள்ளுமாறு உறுதிச் சொற்களால் தெளிவு கூறுதல். தெய்வம் அஞ்சல், அழுகையாகிய மெய்ப் பாடுகளும், அயாவுயிர்த்தல் பயனும் இதற்குக் கொள்ளப் படும்.

இசையும் இன்பமும் ஈதலும் என்னும் மூவகை அறங் களும் இதன்கண் கூறப்பட்டன. நற்றிணை தெளிவுரை

and

& drin

215. தங்கினால் என்னவோ?

41

பாடியவர்: மதுரைச் சுள்ளம் போதனார். திணை: நெய் தல். துறை : (1) பகற்குறி வந்து மீள்வானை, 'அவள் ஆற்றுந் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. (2) இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.

[(து.வி.) பகற்குறி இரவுக்குறி வருவானை மண முயற்சி களிலே மனஞ்செலுத்துமாறு தோழி தூண்டுவதற்குச் சொன்னதாக இச் செய்யுளைக் கொள்க.] ச்

குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் பகல்கெழு செல்வன் குடமலை மறையப் புலம்புவந் திறுத்த புன்கண் மாலை இலங்குவளை மகளிர் வியனகர் அயர, மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக் கரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து இன்றுநீ இவணை யாகி எம்மொடு தங்கின் எவனோ தெய்ய? செங்கால் கொடுமுடி அவ்வலை பரியப் போகிய கோட்சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே!

5

10

தெளிவுரை : சேர்ப்பனே! கீழைக் கடலினின்றும் எழுந்து வந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பியவனாகப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய செல்வனாகிய ஆதித்த ம் மேலைத்திசைக்கண் மலையிடத்தே போய் மறைவா னாயினன். துன்பத்தை முற்படுத்தியதாக வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலையும் வந்தது. இலங்கியவளையணிந்த இல்லுறை மகளிர்கள் தத்தம் மாளிகையிலே இருந்தபடியே இம் மாலைப்போதினை விரும்பி வரவேற்று இன்புறுவர். மீன் கொழுப்பை உருகச் செய்து தொகுத்த ஊனாகிய நெய்யினை வார்த்து ஏற்றியுள்ள ஒள்ளிய விளக்குச் சுடர் களின் ஒளியினை, நீலநிறக் கடற் பரப்பிலே அசையும் அலைகள் மோதிமோதி அலைக்கின்றன, இவ் வண்ணமாகிய DOD

  • 42

நற்றிணை தெளிவுரை

இப்பொழுதிலே, கடற்கரையைச் சார்ந்தபடியே சென்று பலரும் காத்திருந்த கல்லென்னும் ஒலியை யுடைய தான் இப் பாக்கத்திலேயே, இன்று நீயும் இவ்விடத்தேயே இருந்தவனாகி எம்மோடும் தங்கியிருந்தால், அதனால் நினக் கேதும் குறை உண்டாகுமோ? சிவந்த கோல்களோடும் பிணித்த வளைவாக இடப்பெற்ற முடிகளையுடைய அழகிய வலையானது கிழியும்படியாக, அதனை அறுத்துத் தப்பிச் சென்ற, கொல்லவல்ல சுறாமீனைக் கருதியபடி, மிகுந்த வலிமையுடனே சென்றுள்ளவரான எமரும், அதனைப் பிடித் துக் கொணராதே கரைநோக்கி வருவார் அல்லர்காண்!

சொற்பொருள்: இவர்ந்து - எழுந்து தோன்றி. குரூஉக் கதிர் - நிறம் அமைந்த கதிர்; செந்நிறக் கதிரும் ஆம். 'பகல் கெழு செல்வன்' என்பதற்குப் பதிலாகப் 'பகல் செய் செல்வன்' எனப் பாடபேதம் கொள்வர் சிலர். புலம்பு தனிமைத் துயரம். புன்கண் - புன்கண்மை ; வருத்தும் தன்மை. நகர் - மாளிகை. ஊன்நெய் - ஊனாகிய நெய். நீல் நிறப்பரப்பு - நீலநிறத்தையுடைய கடற்பரப்பு. 'ஒண்சுடர் என்பது, கரையோரத்தே, கடலில் மிதக்குமாறு, பாக் கத்தை அடையாளம் காணற்பொருட்டாக ஏற்றிவிடப் பெற்றுள்ள திமில் விளக்குகள் அல்லது மிதவை விளக்குகள் எனினும் ஆம். அன்றிப் பாக்கத்தே ஏற்றியுள்ள விளக்கு நிழல்களை அலைகள் அசைக்கும் என்பதும் ஆம். 'தெய்ய' அசை. பரிய - கிழிய. முன்பு - மிகுந்த வலிமை.

விளக்கம்: மாலையும் வந்து அடுத்து இருளும் வரப் போகின்றது; வலையறுத்துப் போன சுறாமீனைப் பற்றிக் கொணரக் கருதி எம்மவரும் கடலிடைச் சென்றுள்ளனர். அவர் வெற்றி வருகையை நோக்கிப் பாக்கத்தவரும் கரை சேர்பு கல்லென்னும் ஆரவாரத்தோடு கூடியுள்ளனர். எனவே, நீதான் எவ்விதப் பயமுமின்றி எம்மோடு இன்றிரவு தங்கிப் போவாயாக. இவள் மாலையை நோக்கி வருந்தும் பிரிவுத்துயரைத் தணிப்பாயாக என்கிறாள் தோழி. இதனால், தலைவி இரவிற்படும் துயரை நினைந்து, தலைவன் அவளை வரைந்து கோடற்கே முயல்பவன் ஆவான் என்பதாம். ஒண்சுடர் தயங்கு திரை உதைப்ப' என்பதுபோல், நம் உண்மைக் காதலுறவையும் குறிப்பான் உணர்ந்து அலவற் பெண்டிர் பழிதூற்றலும் நிகழும் என்றதுமாம்.

இனி, இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதற்கு, 'மணஞ் செய்து கொண்டால் அன்றித் தலைவியின் இல்லத்தே வைகு நற்றினை தெளிவுரை மரத்த

43

தல் நினக்கு இயலாதது ஆதலினாலும், வேட்டம் வாய்ப்பின் எமர் எந்நேரமும் திரும்புதல் கூடுமாதலானும், அவர் வந்து நின்னைக் காணின் ஏதம் உண்டாதல் கூடுமாதலானும், மாலை புன்கண் உடையதாகலின் தலைவியும் ஆற்றியிருப் பாள் அல்லள் ஆகலானும், இவை எல்லாம் இல்லாதிருக்க, இவளை நீதான் மணந்து கொள்ளலே இனிச் செய்வதற்கு உரியது எனக் குறிப்பால் உணர்த்தினள் என்றும் கொள்க. வரைவு கடாதல், மெய்ப்பாடு - பெருமிதம். பயன் இவை இரு துறைகட்குமே கொள்ளுக. ஒன்றை உணர்த் தும் போதும் குறிப்பால் நயமாக உணர்த்தும் நுட்பத்தை அறிந்து இன்புறுக.

'இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை' (அகம் 90), "கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை' (அகம் 340) எனப் பிற சான்றோரும் உரைத்தலைக் காண்க.

216. வேட்டோரே இனியர்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: மருதம். துறை: தலைமகளுக்குப் பாங்காயினார்

கேட்பத், தலைமகன் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, பாணற் காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது.

காதல் பரத்தையானவள், [(து.வி.) தலைமகனின் காதலின் மிகுதியை இவ்வாறு தனக்கு அவன்பாலுள்ள தலைவியின் பாங்கிலுள்ளோர் கேட்குமாறு எடுத்துக் கூறுவ தாக அமைந்த செய்யுள் இது. பரத்தையரினும் இத்தகைய உழுவலன்பு உடையாரும் பலர் இருந்தனர் என்பதற்குக் கோவலன்பால் மாதவிக்கு இருந்த அன்பினையும் கூறலாம்.)

துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்! கண்ணுறு விழுமங் கைபோல் உதவி நம்முறு துயரங் களையார் ஆயினும் இன்னா தன்றே அவரில் ஊரே!

எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

5 ·

44

நற்றணை தெளிவுரை

குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற

ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக் கேட்டோர் அனையர் ஆயினும், வேட்டோர் அல்லது பிறர்இன் னாரே!

70

தெளிவுரை : ஊடலுணர்த்திக் கூடுகின்ற கலவியோடே பொருந்தியவராக, என்பால் எய்திலராயினும், காண்டற்கு இனியராகிய தலைவரைக் கண்டு இன்புறுவதற்கான எல்லை யிலேனும் வாழ்ந்திருத்தலும் அந்த அளவிலே எனக்கு இனி தாவதாகும். கண்ணில் விழுதலானவொரு சிறுதுகளையும் கையானது அப்பொழுதுதானே சென்று விலக்குமாறு போல, நம்மிடத்தே பொருந்தியுள்ள அவரது பிரிவாலுண் டாகிய இக் காமநோயினை வந்து விலக்காராயினும், அவரில் லாத ஊரிலே யானிருப்பது என்பது மேலும் துன்பந் தருவ தாகும் அல்லவோ! எரிபோலும் பூக்களைக் கொண்ட வேங்கை மரத்திடத்தே உறைவோனாகிய கடவுள் காத் தலைச் செய்கின்ற, குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் கண்ணே இருந்த கட்டுப்பரணாகிய அவ்விடத்திலே,

னாகிய

அயலா

ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை வருத்துதலினாலே, தன் ஒரு முலையையே அறுத்துக் கொண்ட வளான திருமாவுண்ணியின் கதையினைக் கேட்டோரும், அத் தன்மையராகவே நம்மைக் கைவிட்டனராயினும், நம்மால் விரும்பப்பட்டோராகிய அவரையன்றிப், பிறர் யாவராயினும் நமக்கு இன்னாதாரே யாவர்!

சொற்பொருள் : துனி - புலவியாகிய துன்பம். துன்னல் வந்து சேர்தல். காணுநர் - காண்டற்கு இனியராய தலைவர்- காண்புழி - காணற்கு ஏற்கும் ஓர் இடத்து. விழுமம் துயரம். எரி - நெருப்பு. வேங்கைக் கடவுள் - வேங்கை யிடத்தே உறையும் கடவுள்; வேங்கை மலரும் காலமே திருமண நிகழ்வை அறிவிக்குங் காலம் எனக் கொள்வது பண்டைய மரபு; அதுகாலை அதன்கண் தெய்வம் உறைவ தாகக் கருதி அதனைப் பூசிப்பதும் வழக்கம்; இதுபற்றியே தன் உறவுக்கு அத் தெய்வத்தைச் சான்றாக்கிய திருமா அண்ணி, பின்னர்க் காதலனாற் கைவிடப்பெற்ற போதிலே சான்றோர்பால் வழக்குரைத்த காலத்து, அத் தெய்வம் சான்று கூறாதிருக்கத் தன் ஒரு முலையை அறுத்தெறிந்து நன் கற்பை நிலைநாட்டியபோது, நெய்வமும் தோன்றிச்

நற்றிணை தெளிவுரை

45

சான்று கூறிற்று என்பதும், அவனும் மனந்திருந்தி அவளை மணந்து வாழ்ந்தான் என்பதும் பழங்கதை. கேட்டோர் கேட்டறிந்தவராகிய தலைவரும் பிறரும்.

விளக்கம்: தலைவன் தன் உறவை மறுப்பினும், தானும் திருமாவுண்ணி போலத் தங்கள் உறவை மெய்ப்பித்து அவனைப் பெறுவதற்கு மனவுறுதி கொண்டவள் என்கிறாள் அவள். "வேங்கைக் கடவுள்' முருகனைக் குறிப்பதும் ஆகலாம். குறமகளிர் தம் காதலனோடு தம்மைச் சேர்ப் பிக்க முருகனை வேண்டிக் குரவையாடுதலைச் சிலம்பிற் கண்டு இன்புறுக. நாணுடைப் பெண்டிர் இவ்வாறு மன்றேறி வழக்குரைத்தல் வழக்கமில்லை. எனினும், அருகிய நிலையில் இவ்வாறுஞ் செய்து தம் கற்பறத்தைக் காத்தாரும் உளர் என்பதும் இதனால் அறியப்படும்.

கண் பரத்தையாகவும், விழுமம் அவள் கொண்ட பிரிவுத் துயராகவும், கைபோல் உதவுங் கடப்பாட்டினன் தலைவன் எனவும் உவமங்களைப் பொருத்திக் காண்க.

திருமாவுண்ணி கதை கண்ணகி கதையையே ஒத்திருத் தலைக் காண்க. 'குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற' என்பதற்கு, அதற்கேற்றவாறு கோவலனின் கொலை நிகழ்வைப் பொருத்திப் பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

'முலையறுத்தல்' என்பது நகில் குறைத்தல் என்பதும், அது காமவின்ப நுகர்ச்சிக்கண் இன்புறுத்திய உறுப்புக் களின் ஒன்றான முலைக்கண்களைத் தாம் பிரிவுத்துயரால் வெதும்பிய வெம்மையின் வேகத்தால் திருகி எறிதல் என்பதும் ஆய்வாளர் உறுதிப்படுத்திய செய்திகள்.

217. விடுவேன் தோழி!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தலை மகன் வாயில் மறுத்தது.

[(து.வி.) பரத்தமை உறவிலே பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியின் ஊட சினத்தைக் கண்டு, அவள் சினத்தைத் தணிவிக்குமாறு தோழியை விடுக்கின்றான். தோழியும் தலைவிபாற் சென்று, தலைவனை மீளவும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதுபோல அமைந்த உருக்கமான செய்யுள் இது.] 46

நற்றிணை தெளிவுரை

இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம் இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது

கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்

பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன்

5

நனிபெரிது இனியன் ஆயினும், துனிபடர்ந்து ஊடல் உறுவேன், தோழி! நீடு

புலம்புசேண் அகல நீக்கிப்

புலவி உணர்த்தல் வண்மை யானே!

தெளிவுரை : தோழீ! புகழ் மிகுதிப் படும்படியாக வாழ்கின்றவருடைய செல்வமானது நாளுக்குநாள் சிறந்து விளங்கும். அதுபோலக் காணுந்தோறும் சிறந்து விளங்குகின்றதாயிருந்தது விரைந்த செலவினையுடைய வேழம் ஒன்று. அதுதான் கரு நிறத்தை உடையதும் வலிமை கொண்டதுமான புலிைையக் கண்டு அஞ்சி, அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றது. அது காலை அயலி டத்தே உள்ளதாகிய கரிய அடிமரத்தையுடைய வேங்கை மரமானது எதிரிட, அதுதான் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தன் பெருஞ்சினத்தைத் தணித்துக் கொண்டது. இத்தகைய குன்றுகளுக்குரிய நாடன் நம் தலைவன். அவன் நமக்கு மிகப் பெரிதும் இனியவனே! ஆயினும், அவனோடு ஊடுதற்கு உரியவற்றையே மேற்கொண்டு அவன்பால் ஊடலைச் செய்வேன். நீளவும் நின்று நம்மை வருத்தும் தனிமைத் துயரமானது, சேய்மைக் கண்ணே அகன்று போமாறு செய்து, என் ஊடலைத் தெளிவிக்கக் கருதிச் சொல்லாலும் செயலாலும் என்பால் அன்புகாட்டும் வண்மையைச் செய்யும் அன்புடையவன் அவன் என்பதனைக் காண்பாயாக!

சொற்பொருள்: பொலியும் - சிறந்து விளங்கும். 'கதழ்வாய் வேழம்' கதழ்வரல் வேழம் என்பதும் பாடம். கதழ்வு- விரைவு. கேழ் - நிறம். வயம் - வலிமை. மறலி- மோதிச் சிதைத்து. துனி வருத்தம். - புலவி- வருத்தம். புலவி - ஊடல்.

விளக்கம்: கொடையால் புகழ்பெற்றோனின் செல்வ மானது பலருக்கும் பயன்பட்டு வறுமை தீர்த்தலால் சிறந்து தோன்றுவதாயிற்று; அவ்வாறே விரைந்த செலவினதான நற்றிணை தெளிவுரை

47

அந்த வேழமும் அயலாக நின்ற வேங்கை மரத்தைப் புலி யென மயங்கி, மோதிச் சிதைத்து ஊறுபடுத்தும்; அதனால் தன் சினம் தணியும் என்றது, பகையை ஒழித்தற்கு உரித் தான இடத்திலே ஒதுங்கிப்போய், பகையாகா ஒன்றைப் பகையென மயங்கி அதற்கு ஊறுசெய்யும் அறியாமையைத் தன் சினத்தால் மேற்கொண்டது என்றதாம். வேழத்தின் இச் செயல் நகையாடற்கே உரியது. இத்தகைய நாடன் எனவே, அவனும் அத்தகைய மயக்கத்தை உடையனாயி னான் என்பதாம். இது, தனக்குரிய காதன் மனைவிக்குத் தலையளி செய்து இன்புறுத்தலை செய்யாது ஒதுங்கிப் பரத்தையின் அழகினாலே மயங்கினான்; அவளோடு இன்புற்று வாழ்தலை நாடி மனைவியை வருத்தமுறச் செய்த கொடு மையைக் குறித்துக் கூறியதாகலாம்.

பிரிவுத் துயராலே வருந்திய தலைவி, தலைவன் மீண்ட காலத்திலும், ஊடிச்சினந்து, அந்த வருத்தத்தை அவனும் சிறிது பொழுதேனும் அநுபவிப்பதைக் கண்டு ஆறுதல் கொள்ள நினைப்பாள் என்பதும், அதனாலே அவன் அவள் பால் இரந்தும் உறுதி கூறியும் சொல்லும் பணிவான சொற்களைக் கேட்டு மனம் மகிழ்வாள் என்பதும், அதன் பின்னர் அவன் அளிக்கும் கூடலிலேயும் திளைப்பாள் என்பதும் தலைவியரின் மனநிலையைக் குறித்துக் கூறப் படுவதாம்.

உள்ளுறை : களிற்றியானை புலிக்கு புலிக்கு அஞ்சி ஒதுங்கி, வேங்கையைச் சிதைத்துத் தன் சினந்தணிவது போலத், தலைவனும், தலைவியின் சினத்தைக் கண்டு அஞ்சித் தலைவியின் தோழி மூலம் அவளை இசைவித்துத் தன் தாபத்தைப் போக்குதற்கு முயன்றான் என்பதாம். இந்த அச்சம் அவன் கொண்ட பரத்தைமை உறவென்னும் குற்றத்தால் அவன்பால் ஏற்பட்டது என்க.

'வெரீஇ' என்பதற்கு வெருவி ஓடச் செய்து எனப் பொருள் கொண்டு, புலி வெருவி ஓடியதனாலே சினந் தணியாதாய், அயலது வேங்கை மரத்தைச் சிதைத்தது எனவும் பொருள் கொள்வர். இதுவும் பொருத்தமாகலாம். 48

நற்றிணை தெளிவுரை

218. தனியனாகக் கேட்பேனோ?

பாடியவர்: கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார். தினை : நெய்தல். துறை : வரைவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

[(து. வி.) களவு உறவிலே கூடிய காதலன் குறித்தபடி வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ளாததனாலே தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அது கண்டு ஆற்றாளாகிய தோழி, 'இன்னும் சில நாட் பொறுத்திரு என்று கூறுகின்றாள். அதனைக் கேட்டதும், தலைவி தன் ஆற்றாமை தோன்ற அவருக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]

ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே,

-

எல்லியும் பூவீகொடியிற் புலம்படைந் தின்றே, வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும் நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும், மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளிந்தோர் கூறிய பருவங் கழிந்தன்று -பாறிய பராரை வேம்பின் படுசினை இருந்த குரா அற்"கூகையும் இராஅ இசைக்கும், ஆனா நோயட வருந்தி, இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ. பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

5

10

தெளிவுரை: தோழி! ஞாயிறும் மேலைத் திசையிலே இறங்கித் தன் கதிர்களும் மழுக்கம் அடைந்ததாய் உள்ளது அதனாலே, இரவுப்பொழுதும் பூவுதிர்ந்த கொடியினைப் போலத் தனித்துத் துயருரா நின்றது. வௌவால்களும் இடந்தோறும் பறந்து கொண்டிருக்கும். ஆந்தைச் சேவலும் தான் மகிழ்ச்சியினை மிகவும் பெற்றதாகி நகைக்குந்தோறும் தன் பெட்டையை அழையாநிற்கும். அழிவற்றதான காதலோடும் நெறிப்படப் பலவுங் கூறி என்னைத் தெளிவித்துப்போன காதலர் வரைந்து வருவதாகக் கூறிய பருவமும் மெல்ல மெல்லக் கழிந்து போகின்றது. இடை யிடையே பட்டுப்போன பருத்த அடிமரத்தையுடைய வேம்பினது இலையுதிர்ந்த கிளையினிடத்தே தங்கிய குரா அலாகிய கூகையும் இரவெல்லாம் குழறா நிற்கும்! நற்றிணை தெளிவுரை

49

நீங்காத காமநோயானது வருத்துதலாலே வருந்தியிருக்கும் யானும், பருத்த அடியினையுடைய பனைமரத்தின் மடலிலே.. இருந்தபடி தன் துணையை விளித்துக் கூவும் அன்றிற் பறவையினது குரலையும் இன்னும் தனிமையளாக இருந்த படியே கேட்டிருப்பேனோ? எவ்வண்ணம் ஆற்றி இருப்பேன் என்பதாம்.

மாயாக்

சொற்பொருள்: ஞாயிறு ஞான்று-ஞாயிறு சாய்ந்து. எல்லி - இரவுப் பொழுது புலம்படைந்தது- பொலிவிழந்து விட்டது. வயின்தொறும் - இடந்தோறும். 'சேவல்' என்றது ஆந்தைச் சேவலை. விளிக்கும் - கூவி அழைக்கும். காதல்-குன்றாத காதல். அதர்ப்பட - நெறிப்பட.பாறிய பட்டுப்போன. பாருசினை- இலைகள் உதிர்ந்துபோன கிளை. குராஅல் - கபில நிறம். கூகை-பேராந்தை. ஆனா அமையாத, நீங்காத. அன்றில்- அன்றிற் பறவை.

விளக்கம்: ஞாயிறு சாய்ந்து கதிர் மழுங்கினாற்போல யானும் ஒளியிழந்தேன்; எல்லியிற் பூவீழ் கொடியிற் புலம் படைந்தாற் போன்று யானும் புலம்படைந்தேன் என் கின்றாள். கூடியிருந்த காலத்து இனிதாயிருந்த மாலையும் இரவுப்பொழுதும் இதுகாலை மகிழ்வூட்டவில்லை என்பாள் இவ்வாறு கூறுகின்றாள்.

ஆந்தைச் சேவல் இரைதேடப் போன தன் துணையை விரும்பிக் கூப்பிடும்' என்றாள், அத்தகைய அன்புதானும் கூப்பிடும்'என்றாள், தலைவனிடம் இலையாயிற்றென்று வருந்துகின்றாள். அதுவும் இன்புற்றிருத்தலையே நினையும் பொழுதில், அவன்தான் பிரிந்து உறைகின்றானே எனவும் நோகின்றனள்.

'மாயாக் காதலொடு அதற்படத் தெளிந்தோர்' இன்று அக் காதலையும் மறந்தனர் போலும் என்கின்றாள். பகற் போது பிறவாற்றான் ஒருவாறு தேறியிருக்கின்றமனம், இரவுப் போதில், அவனே நினைவாக நின்று வருந்தித் துயிலையும் கெடுத்து நோயும் செய்யும் என்பாள், 'கூகையும் இராஅ இசைக்கும்' என்கின்றாள். இனியும் தான் உயிரோடு ஆற்றி யிருத்தல் தானும் இயலாது என்பாள் 'அன்றிற் குரலைத் தமியேன் கேட்குவென் கொல்லோ?' எனச் சொல்லி வேதனையுறுகின்றாள். இதனால் அவள் கொண்ட துயரத்தின் மிகுதியும் புலப்படும்.

மாலைப் பொழுதானது காமநோயினை முற்படவிட்டு வருதலால், அது வருவதற்கு ஏதுவாய் அமைந்த ஞாயிறு படுந் தன்மையைக் கூறினாள்; தனித்து உறையும் வாழ்விலே

50

еда

நற்றினை தெளிவுரை

இரவுப்போது இன்பந் தராமையின் எல்லியும் புலம்பு அடைந்தது என்றாள். ஏனைப் புள்ளினந்தானும் புணர்ச்சி கருதித் தத்தம் துணையை விளிக்கும் குரலைக் கேட்பதனாலே, தன் துயரம் துயரம் மிகுவதனையும் கூறிப் புலம்புகின்றாள்.

219. என்னதூஉம் புலவேன்!

பாடியவர்: தாயங்கண்ணனார். திணை : துறை : வரைவிடை வைத்துப் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

நெய்தல்.

பிரிய ஆற்றாளாகிய

[(து.வி.) பொருளீட்டி வந்து நின்னை மணப்பேன் என்று உறுதி கூறிப் பிரிந்தானாகிய காதலன், தான் குறித்த பருவத்தில் வராது போயினதனால், அதுவரை ஆற்றியிருந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதுகாலை, அவள் துயர்கண்டு பொறாதாளான தோழியானவள் தலைவனின் பாற் குறையாகச் சில கூற, அது கேட்டுத் தலைவி தன் காதலுறுதி புலப்படக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) கண்ணும் தோளும் தண்நறும் கதுப்பும் பழநலம் இழந்து பசலை பாய,

இன்னுயிர் பெரும்பிறி தாயினும், என்னதூடம் புலவேன் வாழி-தோழி!- சிறுகால்

அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடல்

5

பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்

கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர்

முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்கும்

கானலம் பெருந்துறைச் சேர்ப்பன் தானே யானே புணர்ந்த மாறே!

10

தெளிவுரை : தோழீ! நீயும் : நெடிது வாழ்வாயாக! கண்களும் தோள்களும் தண்ணிய நறியகூந்தலும் தத்தம் உடைய பழைய அழகினை இழந்தன. என் மேனியிலும் பசலை பாய்ந்தது. இனிதான உயிரும் இறந்துபடுவதான எல்லைக்கண்ணே உள்ளது. ஆயினும், நம் சேர்ப்பனோடு யான் சிறிதேனும் புலத்தலைச்செய்யேன் என்று அறிவாயாக. சின்னஞ்சிறு கால்களை உடையவான ஞெண்டுகளோட பெயர்ந்து செல்லும் புலவு நாற்றத்தைக் கொண்ட அலைகளை நற்றிணை தெளிவுரை

51

நெருங்கியிருப்பது பெருங்கடல். அதனிடத்தே சென்று பெரிய பெரிய மீன்களை வேட்டையாடிக் கொள்ளும் தொழிலினர் நம் சிறுகுடிப் பரதவர்கள். அவர்கள் கடலிடை மீண்டு வருவார்க்கு அடையாளமாக இரவுப்பொழுதிலே ஏற்றி வைத்துள்ள மிக்க கதிர்களையுடைய ஒள்ளிய விளக்குகள் தானும், முதிராத இளஞாயிற்றினிது எதிராகத் தோன்றுவதோர் ஒளியைப் போலத் தோன்றா நிற்கும். இத்தகு கானற் சோலையையும் கடற்றுறையும் உடை யோனாகிய நம் தலைவன், தானே தமியனாக வந்து என்னை முன்னர்க் கூடினோன் ஆதலினாலே, இனியும் அவனாகவே மீளவும் வருவான் எனும் நம்பிக்கையுடையேன். அதனால் அவன்பால் சினங்கொள்ளேன்!

-

சொற்பொருள்: 'பழநலம்' என்றது, அவனைக் கூடுதற்கு முன்பாக விளங்கிய கன்னிமைக்காலத்தின் அழகுநலத்தை. பசலை - தேமலாகிய படர் நோய், பெரும்பிறிது - சாக்காடு. அலவன் - ஞெண்டு. புலவு - புலால் நாற்றம். கனைகதிர்- மிக்க கதிர்கள். முதிரா ஞாயிறு.இளஞாயிறு. எதிரொளி- எதிரான ஒளி; அன்றிக் கானற் சோலையிலே அதனால் உண்டாகும் எதிரொளியும் ஆம். 'கானலம் பெருந்துறை - அழகிய கானற் சோலைகளையுடைய பெரிதான கடற்றுறை.

விளக்கம்: இதனாலே, தலைவிக்குத் தலைவனிடத்தே யுள்ள தளராத நம்பிக்கை தெளிவாகும். அவனது அன்பின் செறிவைக் களவிற்கூடி அநுபவித்துக் கண்டவளாதலின் 'அவன் தன்னை மறந்தான்; அதனாலேயே காலம் நீட்டித்தான்' என்று குறைகாணும் தலைவியின் சொற்களை இப்படி மறுத்துக் கூறுகின்றனள். 'தன் மனையறத்துக்கு வேண்டிய பொருளைத் தானே முயன்று தேடிவந்த பின்னரே, தன் காதலியை மணந்துகூடி இல்லறம் நாடத்தல் பண்டைத் தமிழ் மரபு. பெற்றோர் செல்வத்து இன்பநலம் துய்த்தலை எவரும் விரும்பார். 'ஆகவே, அம் முயற்சிகளுக்குத் தலைவன் பிரிதலைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் தலைவியரின் கோட்பாடு ஆகியிருந்தது. 'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள். (நற்.110) ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே' எனப் போதனார் காட்டும் பண்பே தமிழ் மகளிர் பண்டைப் பெரும் பண்பு ஆகும்.

இறைச்சிப் பொருள்: பரதவர் கங்குல் மாட்டிய விளக்கு களின் ஒளியானது இளங்கதிரின் செவ்வொளிபோல 52

நற்றிணை தெளிவுரை

விளங்கும் என்றது.' தலைவன் கூடிப் பிரியுங் காலத்தே 'நின்னைப் பிரியேன்' என்று கூறிய வாய்மையானது; அவன் மறந்து விட்ட இன்றும் என்னுளத்தே பசுமையாக நின்று என் உயிரைப் போகாதே தாங்கி நிற்கின்றது என்பதாம்.

இதனாலே விளங்கும் மெய்ப்பாடு அழுகை; பயன் அயாவுயிர்த்தல் என்பர்.

அகவாழ்விலே திளைக்கும் பண்டைக் கன்னியர் காளையர் எத்துணைச் செம்மையான நெறியிடத்தே நின்று, உறுதியோடு வாழ்வியலைக் கண்டனர் என்பதனை இச் செய்யுளால் அறியலாம்.

220. பெரிதும் சான்றோர் !

பாடியவர்+ குண்டுகட் பாலியாதனார். திணை: குறிஞ்சி. துறை : (1) குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. (2) பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்தது.(3) தான் ஆற்றானாய்ச் சொல்லியது.

[(து-வி.) (1) தலைமகன் அடைந்த துயரத்தைப் போக்கு மாறு தலைவியிடஞ் சொன்ன தோழி, அவளும் அதற்கு இசை யாளாக, ஊரவரின் அறியாமையைக் குறித்துத் தலைவியும் கேட்டு மனம் மாறுமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. (2) தன் குறையைத் தோழிபால் உரைத்து நின்றா கிய தலைவன், அவள் கேட்கும் எல்லையிலே பின்பக்கமாக ஒதுங்கி நின்று, தோழியின் சிறந்த நிலையை வியப்பான் போலக் கூறுவதாகவும் இது அமையும். (3) தோழிபால் குறையிரந்து நின்றவன், தான் தன் துயரத்தை ஆற்றானாகி, அவள் கேட்குமாறு கூறுவதாசுவும் கொள்ளலாம்.]

சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நீறீஇக் குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள் பெரிதுஞ் சான்றோர் மன்ற-விசிபிணி முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண் 'ஊரேம்' என்னுமிப் பேரேம் உறுநர் தா மே ஒப்புரவு அறியின், தேமொழிக் கயலேர் உண்கண் குறுமகட்கு அயலோர் ஆக'லென்று எம்மொடு படலே!

5

10 53

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : உணவு உண்ணாததாகிய நல்லதொரு குதிரையைப் பனைமடலாலே பண்ணிக் கொண்டோம். அதற்குச் சிறிய மணிகளையும் தொடராகக் கோத்தேம். பெரிய கச்சையையும் பூட்டி நிறுத்தினோம். குறியதாக முகிழ்த்துள்ள எருக்கின் பூவாலாகிய கண்ணியையும் சூட்டி னேம். அதிலே ஏறினேமாய் அதனை ஈர்த்துக் கொண்டே மாய்த் தலைவியின் ஊரிலுள்ள தெருவிடத்தேயும் எம் குறையைக் கூறியபடி வந்தேம். அதுகாலை அத் தெருவின் கண்ணே எம்மைப் பின்தொடர்ந்து திரிகின்றவராகச் சிறிய குறிய பிள்ளைகளும் பலர் சூழ்ந்தனர். அவர்கள் தாம் பெரிதும் சான்றோர் ஆவர் காண்! நன்றாக இறுகக்கட்டிய குடமுழாவின்கண் ஓயாது அடித்தலாலே எழுகின்ற முழக் கத்தோடுங் கூடிய திருவிழாவையுடைய அவ்வூரினிடத்தே, 'யாமும் இவ்வூரினேம்' எனச் சொல்லியபடி, எம்மோடும் உரையாடியவர்தாம், பெரிதான மயக்கத்தை உடைய வர்கள் ஆவர். தாந்தாம் உலகநடையினை அறிந்திருப்பா ராயின், தேன்போலே இனிக்கின்ற பேச்சினையும் கெண்டை மீனைப்போல விளங்கும் மையுண்ட கண்களையும் உடைய வளான நம் இளமடந்தைக்கு இத் தோழியர்தாம் அயலாம் தன்மை உடையராவர் என்று சொல்லுகின்றனரே! அவர் தாம் எத்துணை மயக்கம் கொண்டவர்!

கோத்துக்

சொற்பொருள்: தொடர்தல் - தொடர்ந்து கட்டுதல்; தொங்கலாகக் கட்டுதலும் ஆம். கச்சு-பனை மடலின் கறுக்கால் புண்ணாகாமைப் பொருட்டு மேலாக இடப்படும், பெரிய துணியாலாகிய கச்சு. குறுமுகிழ்- எருக்கு-குறிதாக முகிழ்த்த எருக்கு; நன்கு இதழ் விரியாத பூ என்றபடி; குவிமுகிழ் எனவும் பாடம். 'நன்மா' என்றது, அதுதான் தனக்குத் தலைவியை இசைவித்தலாகிய நன்மையைச் செய்தலினால். முழவு - குடமுழவு என்னும் - தோல் கருவி. ஏமுறல்- மயங்குதல். ஒப்புரவு-ஒத்தது அறிந்து அதற்கேற்ப நடக்கின்ற ஒழுகலாறு. மனத்திற் பட்டதைப் பட்டபடியே ஒளியாது உரைத்தல் பிள்ளைகளின் இயல்பாதலின் 'சான்றோர்' என்றனர்.

சிறு

விளக்கம்! தலைவி இசையாதபோது, 'அச் சிறுவர் தாம் உண்மையே உரைத்தனர்; யாம் நினக்கு அயலோர் ஆகலே உண்மையாயிற்று' எனத் தோழி வருந்துவதாகவும், அதனால் தலைவி தெளிவடைந்து இசைவு கூறுவதாகவும் கொள்க. அயலோர் ஆகலே உண்மை' என அவர் கூறியது சான்றாண் மையான பேச்சுப் போலும்" எனத் தலைவன் கூறியதைக் $4

தலைவன்

பாகன்

சிறவேட்டரை நற்றிணை தெளிவுரை

கேட்ட தோழி, தலைவியின் முன்னுறவை உணர்ந்தாளாய்த் தன் நட்புரிமை தோன்ற அவனுக்கு உதவ முற்பட்டு அவளை அவனோடு கூட்டுவிப்பள் என்பதாம். 'முகம்' என்பது, தான் புகுதற்கு இடமாகிய நோக்கு; புகுதல். அந் நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதல். மெய்ப்பாடு, பிறன்கட் டோன்றிய இளிவரல்; பயன் - தலைமகளை முகம் புகுவித்தல்,

221. செல்க நின் தேர்!

பாடியவர் : இளவேட்டனார். திணை : முல்லை. துறை : வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் பாகற்குச் சொல் லியது.

ன்பவேட்கை

[(து-வி.) வினைமுடித்து மீள்வானாகிய தலைமகனின் உள்ளத்திலே அதுவரை ஒடுங்கி நின்ற மேலோங்குகின்றது. விரையச் சென்று தலைவியைக்

காணற்கு விரும்புகிறவன், 'தேரை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.)

மணிகண் டன்ன மாநிறக் கருவிளை

ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணியப் பொன்தொடர்ந் தன்ன தகைய நன்மலர்க் கொன்றை ஒள்ளிணர் கோடுதொறும் தூங்க வம்புவிரித் தன்ன செம்புலப் புறவின் நீரணிப் பெருவழி நீளிடைப் போழச் செல்க-பாக-நின் செய்வினை நெடுந்தேர் விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள் மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க நடைநாட் செய்த நவிலாச் சீறடிப்

பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி

'வந்தீக, எந்தை!' என்னும்

அந்தீம் கிளவி கேட்க நாமே!

80

தெளிவுரை : பாகனே! வருகின்ற விருந்தினை எதிரேற்று உபசரிக்க விருப்பங் கொண்டவள், பெருத்த தோள்களைக் கொண்டாளாகிய இளமை கொண்டவள், மின்னலைப்போல ஒளிசிதறும் விளங்கிய அணிகளைப் பூண்டவள்,என் தலைவி, அவள்தான். எம் நல்ல மாளிகையானது விளக்கங்கொள்ளு

5

сл நற்றிணை தெளிவுரை

55

மாறு, நாட்காலையிலே, நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும்,பூப்போன்ற கண்களையும் உடையோனாகிய எம் புதல்வன் தூங்கும் இடத்தருகே சென்று, அவனருகே குனிந்து, 'எந்தாய் வருவாயாக' என்று அழைத்தபடியே அவனைத் துயிலெழச் செய்வாள். அந்த இனிதான பேச்சை நாமும் கேட்டு மகிழவேண்டும். ஆதலினாலே,

நீலமணியைக் கண்டாற்போல்க் கருநிறத்தோடு தோன்றும் கருங்காக்கணங் கொடியின் பூக்கள், ஒள்ளிய பூக்களைக் கொண்ட தோன்றியோடும் கலந்து தண்ணிய புதல்தோறும் அழகு செய்தபடி இருக்கின்றன. பொற் காசினைத் தொடராகக் கோத்துவைத்தாற்போல விளங்கும் நல்ல மலர்களைக் கொண்ட சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள், அதன் கிளைதோறும் தொங்கியபடி இருக் கின்றன. இவற்றாலே புதியதொரு மணத்தினைப் பரப்பினாற் போலப் பொலிவோடு விளங்குகின்றது, சிவந்த தரையை யுடையதான இம் முல்லை நிலம். நீராலே அழகு பெற்றிருக் கும் இதன் பெருவழியின் நெடிதான இடமெங்கணும் கவடு பிளக்குமாறு, நின் செய்வினைத் திறனைக்கொண்ட நெடிய தேரானது விரையச் செல்லுவதாகுக!

கருவிளை - கருங்

சொற்பொருள்: மாநிறம் - கருநிறம். காக்கணம். ஒண்பூ - ஒளிசுடரும் புதுப்பூக்கள். புதல்-புதர்; சிறுதூறு. 'பொன்' என்றது பொற்காசுகளை. தூங்க தொங்க.வம்பு - புதுமணம். நீரணிப் பெருவழி - நீரால் அழகு பெற்றுள்ள பெரிய வழி; நீரால்' அழகுபெற்றது கார்ப் பெயலால். செய்வினை நெடுந்தேர் - செயல்படும் வினையை முடித்து வரும் வரைக்கும் ஊறின்றிச் செலுத்துவதற்கு ஏற்புடையதாகப் பண்ணப்பட்ட நெடியதேர். குறுமகள்- இளையோள். 'நடை நாள் செய்த' என்பதற்கு, நடத்தலை அன்றுதானே தொடங்கிய எனினும் ஆம். நவிலா- தரையிற் பொருந்தாத; நடை பயன்றறியாத தன்மை. ஒல்கல் - இடைநுடங்க அசைந்து நிற்றல்.

.

விளக்கம் : புதல்வன் இதுகாறும் நடைபயிலத் தொடங்கியிருப்பான் என்று எண்ணமிடும் தலைவன், அந்த இனிய காட்சியின் நினைவிலே திளைக்கின்றான். அவன் அயர்ந்து உறங்கியிருப்ப, அவனருகே சென்று குனிந்தபடி. பாசத்தின் பெருக்கோடு அவனை எழுப்பவாளாய், 'எந்தாய் வந்தீக' என அழைக்கின்ற தலைவியின் தாய்மைச் செயல்

< 56

தோழி

1

கபிலர

நற்றிணை தெளிவுரை

அவன் மனத்திரையிலே எழுந்து நிறைகின்றது. அதனைப் பாகனிடம் உரைத்துத் தேரை விரையச் செலுத்துமாறு கூறுகின்றான் தலைவன்.

அதுகாறும் கோடையாலே வெதும்பிக் கிடந்த செம் புலப்புறவு, கார்காலத்து வருகையாலே பொலிவு பெற்றும், புதர்கள் தோறும் தோன்றிப் பூக்களும் கருவிளையின் பூக்களும் அழகு செய்யவும், கோடுதோறும் கொன்றைச் சரங்கள் தூங்கவுமாக விளங்கிய செவ்வியைக் கூறினான். அவ்வாறே, பிரிவுத் துயராலே அதுகாறும் வாட்டமுற்றிருந் தாளான தலைவியும், இனிப் புதுப் பொலிவு பெறுவாள் என்னும் உட்கருத்தும் தோன்றுதல் கண்டு இன்புறுக. மெய்ப்பாடு, உவகை; பயன் - பாகன் தேரினை விரைவாகச் செலுத்துதல்.

222. ஊக்கிச் செலவுடன் விடுகோ!

பாடியவர் : கபிலர். திணை: குறிஞ்சி. துறை : தோழி தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்பறமாகச் செறிப்

பறிவுறீஇ வரைவு கடாயது.

[ (து. வி.) தலைவனின் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணங்கொள்ளுதலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. தலைவியிடம் கூறுவாள்போலத்,தலைவனும், ஒருசார் நிற்பவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவியைப் பெற்றோர் ற்செறித்தல் நேரும் என்று குறிப்பாகக் கூறுகின்றாள்.)

கருங்கால் வேங்கைச் செவ்வி வாங்குசினை வடுக்கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென விசும்பாடு ஆய்மயில் கடுப்ப, யான் இன்று பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச் செலவுடன் விடுகோ, தோழி -பலவுடன் வாழை ஓங்கிய வழையமை சிலம்பில் துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர் சேணெடுங் குன்றங் காணிய நீயே!

5

10 நற்றிணை தெளிவுரை

57

தெளிவுரை : தோழீ! பலாமரங்களுடனே மலைவாழையும் உயரமாக வளர்ந்து செறிந்துள்ளதும், உயரமிக வளர்ந்த சுரபுன்னை மரங்களும் உடையதுமான பக்கமலைச் சாரலிலே துயிலுகின்ற, பிடியானையின் பக்கத்திலே மேகங் கவிந்து அதை மறைத்தது. அதனால், அதனைக் காணாதுபோன அதன் பெருங்களிறானது, அதனை அழைத்ததாகப் பிளிறாநிற்கும். இத்தகைய சோலைகளைக் கொண்ட்தான, நின் தலைவருக்கு உரியதும், தொலைவிடத்தே இருப்பதுமாகிய நெடிய ன்றத்தினை நீயும் காணும் பொருட்டாக

கரிய அடியையுடைய வேங்கையது சிவந்த பூக்களோடுங் கூடியதான வளைந்த கிளையினிடத்தே வடுக் கொள்ளுமாறு பிணித்திருக்கின்ற, முறுக்கேறிய புரிகளோடுங் கூடிய கயிற்றினைச் சார்ந்ததும், கைவினைத் திறனாலே புனையப்பெற்ற சிறிய முடக்கத்தை உடையதுமான ஊசலை இழுத்து, மெல்ல நின்னை அதன்பால் ஏற்றிவைத்து, நீதான் விசும்பிடத்தே ஆடிப் பறக்கின்ற அழகான மயிலைப் போல எழிலுடன் தோன்றுமாறு, யானும், இன்று, நின் அல்கு லிடத்தே கிடக்கின்ற பசும்பொன் மணிகள் கோத்துள்ள மேகலையைப் பற்றினேனாய், மேலே செல்ல உயர்த்தி, உடனே பின்னே செல்லுமாறும் விடலாமோ? இதனைச் சொல்வாய் காண்!

சொற்பொருள்: செவ்வி- சிவந்த மலர். வாங்கு சினை- தரைப்பக்கமாக வளைந்து தாழ்ந்துள்ள கிளை. விடுபுரி முரற்சி-புரிகள் முறுக்குற்று அமைந்த கயிறு. 'கைபுனை சிறுநெறி' என்றது, அக் கயிற்றிடத்தே அமர்ந்து ஆடுதற்கு ஏற்றபடியாகக் கையால் அழகிதாகப் புனையப்பெற்ற சிறிய வளைவான பகுதி. பசுங்காழ் - பசிய மணிகள்; இதனை மேகலை என்னும் அணியாகக் கொள்க. ஊக்கி-மேலே உயரத் தூக்கி. பலவுடன் - பலாமரங்களுடன். 'பலவுடன் வாழை ஓங்கிய' என்பதற்குப் பலவாகச் செறிந்துள்ள வாழைகள் உயரமாக வளர்ந்துள்ள என்றும் உரைப்பர்.

."

விளக்கம்: அவர்களது சிறுகுடியின்கண், அவர்களது இல்லின் அணித்தாகவுள்ள சோலையிடத்தே இருந்து அவள் இவ்வாறு சொல்லுகின்றாள் எனக் கொள்க. 'அவனைத்தான் யாம் வரக் காண்கிலேம். இற்செறிப்புற்ற யாம் இனிமேல் அவனைக் கூடித் துயர்தெளிதல் என்பது அரிதாகலின், அவன் குன்றத்தைக் கண்டேனும் தேறியிருப்பேம்' என்பது இது. இதனைக் கேட்டலும் தலைவன், இனிக் களவுறவு நற்4 58 capt

லவன்

moy.

நற்றிணை தெளிவுரை

வாய்த்தற்கு இயலாமையினையும், தன்னைப் பிரிந்துறைதல் ஆற்றாளாய்த் தலைவி கொள்ளும் நோயின் மிகுதியையும் அறிந்தானாய், அவளை வேட்டுவந்து முறைப்படி மணத்தற்கு மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம்.

இனிக் களவு நிகழ்தல் கூடாமையின், தலைவன் வரைந்து எய்துதலே செய்யக்கூடியது' என உணர்த்தலின், இது வரைவு கடாயது ஆயிற்று. மெய்ப்பாடு: பெருமிதம்; து பயன்; வரைவு கடாதல். உயர்ந்தும் தாழ்ந்தும் ஊசலாடும் தலைவியை 'விசும்பாடு ஆய்மயில் கடுப்ப' என வியந்து கூறியது, தலைவன் தலையளி செய்யானாயின் அந்த அழகு நலம் அழியும் என அவனுக்கு அறிவித்தற்கு ஆகும்.

"

உள்ளுறை : 'மேகம் மறைத்தலாலே பிடியைக் காணாது வருந்திய களிறு பிளிறும்' என்றது, தலைவனும் நின்னைக் காணாதே நின்போலவே துயருற்றிருப்பன் என உள்ளுறுத்துக் கூறித் தலைவியைத் தேற்றியதாம்; அவனை வரைந்து வருதற்குத் தூண்டியதும் ஆம்.

223. எல்லி வம்மோ புலம்ப!

பாடியவர் உலோச்சனார். திணை: நெய்தல். துறை: பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.

[ (து-வி.) பகற்குறி வந்து மீளும் தலைவனிடம், "எங்கள் ஐயன்மார் அறியின் இவளை இல்லத்தே காவற்படுத்துவர்; இனி எம் னி இல்லின் அணிமைக்கு இரவுப்போதில் வருக" எனக் கூறுவாள்போல, அதுவும் வாயாமை உணர்த்துதன் மூலம், வரைந்து வருக என்று வலியுறுத்துகின்றாள் தோழி.] இவள்தன்,

காமம் பெருமையிற் காலையென் னாள்நின்

அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப் பகலும் வருதி பல்பூங் கானல்

இந்நீ ராகலோ இனிதால்! எனின், இவள்

அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால்,

எல்லி வம்மோ மெல்லம் புலம்ப

சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின் துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்திவ் ஆம்பல் ஊரே!

5 நற்றினை தெளிவுரை

1

59

தெளிவுரை : மென்புலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவனே! இவள் நின்பாற் கொண்டுள்ள காமத்து மிகுதி யினாலே, இதுதான் காலைப்பொழுதாயிற்றே எனவும் கருதாளாயினாள்! நீயுந்தான் இவள்பாற் கொண்டுள்ள நின் அன்பு பெரிதாக உடைமையினாலே, இவளுக்குத் தலையளி செய்தலை விரும்பினையாய்ப் பகற்பொழுதின் கண்ணும் வருகின்றனை! பலவாகிய பூக்களைக் கொண்டதான இக் கானற் சோலையிலே நீவிர் இருவீரும் இத்தன்மையராகின ராய்க் கூடியிருத்தல் எமக்கும் இனிதாகுவதே! எனினும், அயலவர் உரைக்கின்ற பழிச்சொற்களே காரணமாக, இவளும் வெளிவருதற்கரிதான காவலுக்கு இனி உட்படு பவள் ஆவாள்காண்! அதனாலே, நீதான் இனிமேல் இரவுப் போதிலேயே வருவாயாக. ஆயின், சுறாமீன்களின் கூட்ட மானது மிகுதியாயுள்ள நிறைந்த கடற்பரப்பினிடத்தும், அதனைச் சார்ந்துள்ள துறையினிடத்தும், உறங்காத கண்ணினராய்க் கூடியிருக்கும் கொடிய பெண்களையும், அம்பல் உரைத்தலே இயல்பாகவுடைய இவ்வூரும் உடைத் தாயிருப்பது. அதனையும் கருதுவாயாக!

சொற்பொருள்: பெருமையின் - பெரிதாக உடைமை யாலே. காலை- காலைப்பொழுது. அன்பு - காதலன்பு. அளித்தல் - அருளுதல்; தலையளி செய்தல், 'கானல்' என்றது, கானற் சோலையினை. நீர் - தன்மை. அலர் - பழிச்சொல்.கடி- காவல். எல்லி-இரவு. கலித்த - பெருகியுள்ள. அம்பல் ஊர் - பழிகூறும் இயல்பினராகிய ஊரவர்.

.

விளக்கம்! 'வருதி' என்றது வந்து திரும்புகின்றவனை நோக்கிச் சொல்லியது. இரவுக்குறி நேர்வாள்போல, 'எல்லி வம்மோ' என்றனள். அதுதான் இயலாமை கூறுவாள். கடற்பரப்பு சுறவினம் கலித்தது; ஆகலின் நினக்கு ஏதமாகு மென யாம் கவலையடைவோம் எனவும், துறையினும் துஞ்சாக் கண்ணரான பெண்டிரை இவ்வூர் உடையது ஆதலின், அலர் மேலும் பெரிதாவதற்கு அஞ்சுவோம் எனவும் குறிப்பாக உணர்த்துகின்றாள். இனிச் செயத்தக்கது இவளை நீதான் வரைந்துவந்து மணந்து கொள்ளுதலே என்பதனை இவ்வாறு உணர்த்தினள். இருவருமே ஒத்த காதலன்பை உடையவர் என்பதனைக் கூறினாள், பிரிவு நீட்டிப்பின் தலைவி ஆற்றியிராளாய் அலமருவாள் என்பதனையும் புலப்படுத் தினாள். மெய்ப்பாடு, பெருமிதம்; பயன் வரைவு கடாதல். कत

60

நற்றிணை தெளிவுரை

இறைச்சி: சுறாமீன் இருக்கின்ற கடலினது துறையிடத்தே துஞ்சாத கண்ணை உடையவரான மாதரை இவ்வூர் உடையது என்றது, மனையிடத்தே தலைவியிருக்கின்ற துஞ்சாக் கண்ணினளாகக் காவலிருக்கும் அன்னையையும், புறத்தே வலியுடையராய்க் காத்திருக்கும் ஐயன்மாரையும் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியதாம்.

224. இன்ப வேனிலும் வந்தது!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ, திணை : பாலை. துறை : தோழியாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள், பெயர்த்துஞ் சொற்கடாவப்பட்டு, அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாராகாரோ?' என்று சொல்லியது.

[(து-வி.) தலைவன் பிரிவைத் தோழி தலைவிபாற் சென்று கூறுகின்றாள். அவன் பிரிந்தது அறிந்த பின்னரும், அவன் பிரிவைத் தாங்கமாட்டாளாய்த் துயரங்கொள்ளும் தலைவி, தோழியிடத்தே கூறி நொந்து கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது.)

அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலைப் பின்பனி அமையம் வருமென முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவரும் பினவே புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து இனியெவன் மொழிகோ யானே - பயன்றக் கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி வினைமூசு கவலை விலங்கிய

வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே ?

10

தெளிவுரை: தோழீ! நம் தலைவர்தானும் நம்மிடத்தே அன்புடையவர், மிகவும் பெரியவர்! அதன் மேலும், பின் பனிக் காலமானது அடுத்துவரும் என்பது குறித்ததாய், முன்பனிக் காலத்தே தளிர்களை முற்படற் தோற்றுவித்தபடி அரும்புகளைக் குராமரங்களும் கொள்ளா நின்றன. "தலை வனும் தலைவியுமாகி ஒன்று கூடினீர்! பிரியாதே கூடியிருந்து

LO

5 நற்றினை தெளிவுரை

60

இன்புறுவீராக' என்று கூறுவனபோல, மாமரத்தின் பூங் கொத்துக்களைத் தாங்கியுள்ள கொம்புகளிலே இருந்தபடி, சிவந்த கண்களையுடையவான கருங்குயில்கள் எதிர்எதிர் ஒன்றோடொன்று மாற்றி மாற்றிக் கூவியபடியே இருக் கின்றன; இத்தகு இன்பந்தரும் இளவேனிலும் வந்தது; ஆதலினாலே நம்மிடத்தேயிருந்தும் பிரியமாட்டோம் என்று நம்மைத் தெளிவித்தோரும் அவர். இப்போதோ,

பயன் அற்றுப் போனதாய்ச் செவ்வியழிந்து காய்ந்து கிடக்கின்ற பல பெரிய நெடிய வழியிடத்தே, வில்லேந்திய ஆறலை கள்வர்கள் மொய்த்துச் செவ்வி நோக்கியிருக்கும்படி யான கவர்த்த வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும் வெண்மை கொண்ட பகைவ ரூர்களையும்,கடத்தற்கரியதான சுரத் தினையும் கடத்துபோகக் கருதியவரான அவருக்கு, யான் இனி யாது சொல்ல மாட்டுவேனோ?

சொற்பொருள்: பெரியர் - பெரிதும் பண்புடையவர். கொழுந்து - துளிர்கள். அரும்பு - பூவரும்பு. இணர்-பூங் கொத்து. இருங்குயில்- கருங்குயில். எதிர்குரல் பயிற்றல்- ஒன்று மாற்றி மற்றொன்றாகத் தொடர்ந்து கூவுதல். தெளித்தோர் - தெளிவு கொள்ளச் செய்தோர். தெளித் தோர் தேஎத்து - தெளித்தோரிடத்து. பயன் - பசுமையும் வளனுமாகிய பயன்; 'கயன்' எனவும் பாடம்; கயன் - குளம். கண்ணழிதல்- இடத்தின் செவ்வி கெட்டுப் போதல். கவலை- கவர்த்த வழிகள். விலங்கிய -குறுக்கிட்ட. 'வெம்முனை என்றது முனையிடத்துள்ள வெம்மைமிக்க பகைவர் ஊர்களை.

விளக்கம்: அன்பற்றாரும் பண்பற்றாரும் பிரியக் கருதினால் யாமும் பொறுத்திருப்போம். அன்புடையரும், பெரியரும், 'காலமல்லாக் காலத்தே. பிரிவேனோ' எனக் கவலைகொண்ட என்னை முன்பு தெளிவித்தோருமாகிய அவரே பிரிந்து போயினரே! இனி அவரைப்பற்றி யாது கூறுவது காண்?

இன்பத்தை விட்டுக் கொடிய வெம்மையான நெறியையே நாடியதனால், அவர் மனமும் அவ்வாறு கொடியதாயிற்றுப் போலும் என்று நினைத்து வருந்து கின்றாள்.

'அன்பர்! பெரியர்!' என்றது, அன்பும் மறந்தார், சொற் பிழைத்துப் பெருமையும் மறந்தார் என்று அசதியாடிச் சொல்லியதாம். இதனால், தலைவி அயா வுயிர்த்து ஆற்றி யிருப்பாள் என்பதும் உணரப்படும். தவி

62

ind

ཏ.ཉི;ཡྩོད

தப்பி

கபிலர

நற்றிணை தெளிவுரை

225. இரந்தாரும் உள்ளாரோ?

பாடியவர்: கபிலர். திணை : குறிஞ்சி. துறை (1) வன் புறை எதிரழிந்தது; (2) பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.

[ (து-வி.) (1) பிரிவாலே வருந்தி நலனழியும் லைவியைத் தெளிவிக்க நினைத்த தோழி, அவள்பாற் சென்று, 'அவர் இன்றே வருவார்; வருந்தாதே' என்று வலியுறுத்திக் கூறுகின்றாள். தலைவன் வருகையைப் பல நாட்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து, அவன் வரவைக் காணாமல் வாடியிருக்கும் தலைவி, அதனைக் கேட்டதும், தன் பொங்கிவரும் துயரத்தை ஆற்ற மாட்டாதவளாகக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.

(2) காதற்பரத்தையானவள் தலைமகட்குப் பாங்காயினார் கேட்கும்படியாகத், தலைவன் தானே விரும்பி வந்து என்னைச் சேர்ந்திருப்பதனை நினைந்து, தலைவி உள்ளம் வருந்து வதனாலே யாது பயனோ?' எனச் செருக்கிக் கூறியதுமாம்.]

முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை வெண்கோடு கடுப்ப

வாழை ஈன்ற வையேந்து கொழுமுகை

மெல்லியல் மகளிர் ஒதி அன்ன

பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை இரந்தோர் உளர்கொல், தோழி? திருந்திழைத் தொய்யில் வனமுலை வரிவனப்பு இழப்பப் பசந்தெழு பருவரல் தீர

நயந்தோர்க்கு உதவா நாரின் மார்பே!

தெளிவுரை: தோழீ! திருத்தமாகச் செய்யப் பெற்ற அணிகலனை அணிந்தவும், தொய்யிற் குழம்பாலே எழுதப் பெற்ற அழகினைக் கொண்டவுமான வனப்புடைய முலைகளது இரேகையின் அழகெல்லாம் இழந்துபோகும்படி யாகப் பசலை நோயானது பாய்வதனாலே உண்டாகின்ற, பிரிவுத்துயராகிய வருத்தம் எல்லாம் நீங்குவதற்குத் தன்னைக் காதலித்தோர்க்கு உதவியாக அமையாத, அன்பற்ற மார்பினை உடையவன், நம் காதலன்! நற்றினை தெளிவுரை

63

முருகவேளைப் போன்ற வலிமையோடு, கடுமையான சினத்தை மிகுத்துக் கொண்டு போரிட்ட யானையினது குருதிக் கறைபடிந்த வெண்மையான கொம்புகளைப்போல, வாழையினது

து

அப்பொழுதுதானே ஈன்ற கூர்மை பொருந்திய கொழுத்த முகையானது, வெவ்விய சாயலை யுடைய மகளிரது கூந்தலை முடியிட்டுக் கொண்டையாகப் போட்டாற்போல, அதன் பூவோடும் கூடியதாக அசைந்து கொண்டிருக்கும், பெரிய மலைகளுக்குரிய நாடனாகிய அவனை, அதுகுறித்து இரந்து வேண்டினாரும் உளரோ, காண்!

சொற்பொருள்!- முருகு - முருகப்பெருமான். முன்பு- வலிமை. சினம் செருக்கல் - சினத்தை மிகுத்துக்கொள்ளல்; சினத்தால் செருக்குறுதல். 'பொருத யானை வெண்கோடு எனவே, அதன்மேல் படிந்துள்ள குருதிக்கறையு ம் பெற்றனம். வை-கூர்மை. முகை - மொட்டு. வெண்கோடு தாறுவிடுதலுக்கும், ஓதி பூவுக்கும் உவமை. துயல்வரல். அசைதல். வரி - இரேகைகள். பருவரல் - பிரிவுத்துயரம். நார்- அன்பு.

விளக்கம்: 'தானே வந்து தலையளி செய்தவன்,இன்று நாம் இவ்வாறு நலனழிந்து வாடியிருக்கும்போது, அருளற்ற வனாய் நம்மை மறந்தானே?' என்பவள், 'இரந்தோர் உளர் கொல்?' என்கின்றாள். உதவாத தன்மையை நினைவாள் 'நாரில் மார்பு' என்கின்றனள். நார் - அன்பு.

·

விரும்பினார்க்கு உதவாத அன்பற்ற அவன் மார்பினை இங்கு விரும்பினாரும் எவரேனும் உளரோ? அவன் பலர் மாட்டும் துய்க்கச் செல்லும் தன் பரத்தைமை இயல்பினாலே தூண்டப் பெற்று என்னிடத்தும் வந்தனன். இதுகொண்டு தலைவியும் என்னை நோவது எதன்பொருட்டோ?" எனப் பரத்தை கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்திப் பொருள் கொள்ளுக.

'வாழை ஈன்ற கொழுமுகையானது, பகையைக் கொன்று குருதிக்கறை படிந்து விளங்கும் யானைத் தந்தம் போல விளங்கும் மலைநாடன்' என்றனள். இதுதான், அவன் அன்புடையான் போலவே தோன்றினாலும், உள்ளத்தே பெரிதும் கொடுமை செய்யும் இயல்பினைக் கொண்ட வனாகவும் இருக்கின்றான் எனக் குறிப்பால் கூறியதும் ஆகலாம், தலைவி.

64

கணியர் புகார் நற்றிணை தெளிவுரை

'தொய்யில்' என்பது, கொடிபோல மணச்சாந்தால் வரைவது; அதனை 'விரித்தல்' என்றும் கூறுவதுண்டு. இது பற்றியே அதனாலமையும் வனப்பை 'வரிவனப்பு' என்றனர்.

י

து

பசந்தெழு பருவரல் கூறியது' தன்வயின் உரிமை கூறியதாம்; நயந்தோர்க்கு உதவாமை சொன்னது, அவன்வயிற் பரத்தைமை சுட்டியதாம் என்று அறிதல் வேண்டும்.

226. மரஞ்சாக மருந்து கொள்ளார்!

பாடியவர்: கணியன் பூங்குன்றார்; கணிபுன் குன்றனார் என்னும் பாடம். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எ ரெழிந்தது.

[(து-வி.) தலைமகனது பிரிவிடையே மெலிந்தாளாகிய தலைவியிடம் சென்று, 'இன்னுஞ் சிறிது காலம் வலிதிற் பொறையோடு இருப்பாயாக' என்கின்றாள் தோழி. அவளுக்குத் தன் வருத்தமிகு நியானது தோன்றத் தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்! நாந்தம் உண்மையின் உளமே; அதனால்,

தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்

சென்றோர் மன்ற, நங்காதலர்! என்றும்

இன்ன நிலைமைத் தென்ப

5

என்னோரும் அறிய இவ் உலகத் தானே!

தெளிவுரை: அழகிய நுதலை உடையவளே! இவ்வுலகத் திலேயுள்ள மாந்தர்கள், மரம் பட்டுப் போகுமாறு, அதனிடத்தே உளதான மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்: உயர்வான தவத்தைச்செய்வாருங் கூடத், தம்முடைய உடலது வலிமை யானது முற்றவும் கெட்டுப்போகும் எல்லைக்கண்ணும் தொடர்ந்து அத் தவத்தைச் செய்ய மாட்டார்கள். தம் நாட்டுக குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன்னை எல்லாம் நற்றினை தெளிவுரை

நாடாளும்

மன்னர்கள்

65

முற்றவும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவற்றை நீயும் அறிவாய் அல்லவோ! நாம் அவர் நம்பால் கொண்டுள்ள அன்பினது தகைமையி னாலேயே உயிர் வாழ்கின்றோம் ஆதலினாலே,

"தாம் செய்யும் பொருளினது அளவும் அதனாலே அடையவிருக்கும் பயனும் பற்றித் தெளிவாக நம் காதல ராகிய அவரும் அறியாராயினர்: பொருளீட்டுதல் ஒன்றே செயத்தக்கதாவது என்று தாம் அதன்பால் மனநெகிழ்ச்சி பெரிதும் உடையராயினர்; வெயிலானது நிலைகொள்ளு தலாலே நெடிதுபட்டுக், கோடையின் வெம்மையில் அழ கிழந்த சுரத்தின் வழியும் பிற்பட்டு ஒழியுமாறு, அதனையும் கடந்து, அதற்கு அப்பாலுள்ள நாட்டிற்கும் அவர் சென் றனர். எக்காலத்திலும் ஆடவரது நிலைமை இப்படிப் பட்டதே என்பார்கள் உலகத்தார். இதனை இவ்வுலகி னிடத்து யாவருமே அறிவர் கண்டாய். எனவே, யானும் அவர் மீண்டுவரும் வரையும் பொறுத்திருப்பேன் என்று அறிவாயாக.

சொற்பொருள்: 'மரம்' என்றது மருந்துப் பயனுள்ள மரத்தை. உரம்-உள்ள வலிமை. வளம் - வளமை. கசிந்து- நெகிழ்ந்து. என்றூழ் - வெயிலின் வெம்மை. ஒழிய -பிற் பட்டுப் போக; அஃதாவது அதனைக் கடந்து. என்னோரும் எல்லாரும்.

விளக்கம்: பொருள் ஈட்டி வருவது இன்பநுகர்வின் பொருட்டாகவே அன்றோ! ஆயின், அதற்கு இன்றியமை யாதேமாகிய யாம், அவர் பிரிவாலே நலிவுற்று அழிந்தபின் அதுதான் வாய்ப்பதாகுமோ? என்னை இவ்வாறு நலியச் செய்துட்டு எந்த இன்ப நுகர்ச்சியை விரும்பிப் பொரு என்று உவமை ளீட்டச் சென்றனரோ, நம் காதலர்?" களால் தன் நிலையையும், தன்னைப் பிரிந்த தலைவனின் தன்மையையும் தலைவி விளக்குகின்றாள்.

பின்னும் மருந்து கொள்ளக் கருதி, மருந்து மரத்தை மாந்தர் முற்றவும் சிதைத்துக் கொள்ளார்; வலிமை பெற்று மீளவும் உயர்தவத்தைத் தொடரக் கருதியே வலிமை இழந்தபோது அதனைக் கைவிடுவர்; மீண்டும் வரிவாங்கும் பயனைப் பெறக் கருதியே அரசரும் தமக்குரிய இறையை அளவோடு பெறுவர்; இதுதான் உலக இயல்பு. தமக்கு நிலை யாகப் பயன்படுவதான ஒன்றை எவருமே முற்றவும் }

66

Nicho Joon

முதன்னார்

முதன்

நற்றிணை தெளிவுரை

அழித்தற்கு மனம் ஒப்பார். இருப்பவும், அவர், நம் காதலர், நம்மைப் பிரிந்து போய் இவ்வாறு வருத்தினரே என்று தலைவி நினைத்து மனம் நோகின்றாள்.

.

"இவ்வாறு உளம் நைந்தாளாயினும், உலகத்து ஆடவர் தன்மை இதுவென்று சான்றோர் கூறுவராதலின், அதனை உலகத்து எல்லோரும் அறிவர். ஆதலின், இதற்கு அவரை நோவதாலும் பயனில்லை; ஆற்றியிருத்தலே செயத் தக்கது" என்று முடிவிற்கூறித் தான் அமைதி கொள்ளவும் முயல்கின்றாள் என்று கொள்ளுக.

"வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என்பது குறுந்தொகை (135) இந்த நெறியைப் போற்றுவாள், 'நாம் தம் உண்மையின் உளமே' என்றாள். மெய்ப்பாடு, அழுகை; பயன், அயா வுயிர்த்தல்.

227. அருளே அலராகின்றது!

பாடியவர்: தேவனார் : பூதன் தேவனார் என்றும் பாடம். திணை: நெய்தல். துறை: வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.

((து-வி.) தலைவியை மணஞ்செய்து கொள்ளுதலிலே மனத்தைச் செலுத்தாது, களவுப் புணர்ச்சியிலேயே மனங் கொண்டவனாக ஒழுகிவரும் தலைவனிடம், தோழி தலைவியின் நிலையை எடுத்துக் கூறி, அவளை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.]

அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த இன்னுயிர் கழியினும் நனியின் னாதே! புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த

பின்னேர் ஓதியென் தோழிக்கு அன்னோ! படுமணி யானைப் பசும்பூண் சோழர்

கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்

கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்

தேர்வழங்கு தெருவின் அன்ன

கௌவையா கின்றது ஐயநின் அருளே!

5 நற்றிணை தெளிவுரை

67

பல

தெளிவுரை : ஐயனே! புன்னை மரங்கள் செறிந்துள்ள அழகிய கானற் சோலையிடத்தே, நீ குறித்தபடியே காலத்தும் வந்து, நின்னையும் இன்புறுத்தியவள், பின்ன லிட்ட அழகிய கூந்தலையுடையாளான அவளுக்கு, ஐயோ! ஒலிக்கின்ற மணியையுடைய யானையினை என் தோழி! பசும்பொன்னாலாகிய

யும், சோழர். அவருக்கு உரித்தானது, பூண்களையும் உடையவர் கொடிகள் தாடியபடி விளங்கும் அசைந் தெருக்களைக் கொண்டதான் ஆர்க்காடு என்னும் பேரூர். அவ்வூரிடத்தே, கஇளையுடைய தான குடங்களிலே வண்டினம் மொய்த்து நீங்காதபடியே இருக்கும். இடையறாது தேர்கள் செல்லுகின்ற அவ்வூர்த் தெருவின்கண் விளங்கும் பூசலைப்போல விளங்குகின்றது, நின் அருளாலே என் தோழிக்கு இவ்வூர்த் தெருவின்கண் எழுந்திருக்கும் அலர் உரைகளின் ஆரவாரம். 'அறிவுடை யோர் என்பவர் எல்லாரும் அறநெறியிலே நிற்பார் அல்லர்’ என்று பலரும் கூறுவர். அதுதான். கூறுவர். அதுதான் நின்னதும் ஆயின், அவளது சிறந்ததான இனிய உயிர்தான் இறந்துபட்டதன் பின்னரும், இப் பழிச்சொற்கள் அவள் குடிக்கும் மிகவும் துன்பம் தருவதாகிய தன்மையது என்றேனும் அறிவாயாக. 'அவள் இறந்து படாவாறும், அலர் நிற்குமாறும் விரைந்து வந்து வரைந்து மணந்து வாழ்விப்பாயாக!

சொற்பொருள்: அறிந்தோர் - அறிதற்குரிய அறநெறி களின் கூறுபாடுகளை அறிந்தோரான் நம் காதலர். அற னிலர் - அறன் தழுவிய நெறியின் கண்ணே நிற்பாரல்லர்; களவின்கண் கூடிய தலைவியை முறைப்படி வரைந்து கொள் ளலே அறத்தொடு பட்டது; அதனை மறந்தமையின் அற னிலர் என்றனள் போலும். 'இன்னுயிர் கழியினும் இன் னாதே' என்றது, அவள் பிறந்த குடியிடத்தே உள்ளார்க்கு நீங்காத பழியாகி வருத்தந் தருதலினால். புணர்குறி - சேர் தற்கு என்று குறித்த குறியிடம். படுமணி - ஒலிக்கும் மணி. தடவு -கள்சாடி ; அல்லது கட்குடம். 'புள்' என்றது வண்டினை.

விளக்கம்: ஆர்க்காட்டுத் தெருவிலே, கட்குடிப்பவர் எப்போதும் கூடியிருத்தலாலும், தேர்களின் செலவு மிகுந் திருத்தலாலும் உளதாகும் ஆரவாரத்தைப் போல,உங்கள் களவுறவைப் பற்றிய பழிச்சொற்களைப் பற்றிய பூசலும் நீங்காது மிகுவதாயிற்று என்பதாம். 'ஆர்க்காடு' சோழர் பேரூர்களுள் ஒன்று என்பது இதனுள் கூறப்படுகின்றது. தொண்டை நாட்டு ஆர்க்காட்டிலும், பாண்டி நாட்டு

·

. .

68

முடத்திருமாறனார்)

நற்றிணை தெளிவுரை

ஆர்க்காட்டிலும் வேறுபடுத்திக் காட்டுதற் பொருட்டு இதனைச் 'சோழர் ஆர்க்காடு' என்றனர். இது காவிரிக்குத் தென்கரையில் உள்ளதென்பர் ஒளவை அவர்கள். இதனைக் கேட்டதும் தலைமகன் மனங்கலங்கியவனாகத் தலைவியை வேட்டு வருதலை உளங்கொள்வான் என்பது இதனால் ஏற்படும் பயன் ஆகும்.

'அறிந்தோர் அறனிலர் என்றலின், சிறந்த இன்னுயிர் கழியினும்' என்பதற்கு, 'உங்கள் களவு ஒழுக்கத்தை அறிந் தவர் நின்னை அறனில்லாதான் எனப் பழித்தலின், அது பொறாதே அவள் இன்னுயிர் கழிதலும் கூடும்' எனத் தலைவி யின் காதல் மேம்பாட்டைக் கூறியதும் ஆம். 'நனி இன் னாதே' என்பதற்கு, அப்படி அவள் இறப்பின் அப்பழிதானும் நின்னைச் சூழும் என்று எச்சரித்த தென்றும் உட்பொருள் கருதலாம்.

228. நமக்கு அருள மாட்டானோ?

பாடியவர்: முடத்திருமாறனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[(து-வி.) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைமகன் கேட்டுத், தலைவியை விரைவிலே வந்து மணமுடிப்பதிலே ஈடுபடல் வேண்டும் எனக் கருதும் தோழி, தான் தலைவியிடம் கூறுவாள் போல் இவ்வாறு கூறுகின்றனள்.)

என்னெனப் படுமோ தோழி! மின்னுவ சிபு

அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்

கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள்

பண்பில் ஆரிடை வரூஉம் நந்திறத்து! அருளான் கொல்லோ தானே- கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் வரிகொள் சாபத்து எறிகணை வெறீஇ அழுந்துபடு விடரகத்து இயம்பும் எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே!

5 நற்றிணை தெளிவுரை

69

தெளிவுரை: தோழி! கானகத்தே வாழ்வோனான வேட்டு வனது முதுகைப் போலத் தோன்றும், பெரிதான துதிக் கையை உடையதான வேழமானது, வரிந்து கட்டுதலை. யுடைய வில்லிலிருந்து ஏவப்படும் அம்புக்கு அச்சங் கொண்டது. அதனாலே, ஆழ்ந்துபட்டுள்ள மலைப்பிளவி னிடத்தே மறைவாகச் சென்று நின்றபடி பிளிற நின்றது. அத் தன்மைத்தான, மேலெழுந்து வீழ்கின்ற அருவிகளை யுடைய மலைநாட்டிற்கு உரிமையுடை யோனானவன் நம் தலைவன். அவன், மின்னலிட்டதாய் இருளைப் பிளந்து கொண்டு மேகங்கள் முழக்கமிடுகின்றதும், தாம் சூலுற்று முதிர்ந்ததனாலே அத கடனைத் தீர்க்குமாறு கண் ணொளி மறையுமளவு நாற்புறமும் பரந்து, மிக்க இருளினைச் செய்கின்றதுமாக விளங்கும், செறிந்த இருளையுடையதான நள்ளிரவுப் பொழுதிலே, நற்பண்பாடுகள் ஏதும் இல்லாத தான கடத்தற்கரிய வழியினைக் கடந்தேமாய். அவன் பொருட்டாக வருகின்ற நம்மாட்டு, அவன்தான் அருளினைச் செய்ய மாட்டானோ? அவன் அவ்வாறு அருளாதிருத்தல் தான் எதனாலே என்று சொல்லப்படுமோ? அதனை யானும் அறியேனே!

எழுசி

சொற்பொருள்:

வசிபு - பிளந்து;

இருளைப் பிளந்து கின்ற மின்னலின் ஒளியாதலின் 'வசிபு' என்றனர். அதிர் குரல் - அதிர்கின்ற குரல்; இடி முழக்கம்; பிற உயிரினங் களை அதிரச்செய்கின்ற கடுங் குரலும் ஆம். முதிர் கடன்- சூல் முதிர்ந்ததனாலே உண்டாகிய கடமை; அது அதனைக் கழித்தல்; அதாவது, மழையாகப் பெய்தல். கண் தூர்பு- கண்ணொளி மறையுமாறு. கனையிருள் - செறிந்த இருள். பண்பில் ஆரிடை - பண்பிலாத கடத்தற்கரிய காட்டுவழி; பண்பில்லாமை கரடு முரடு உள்ளமையும், கொடு விலங்குகள் உள்ளமையும், பசுமை கெட்டு பாலைப்பட்டமையும் ஆம். சிறுபுறம் - முதுகுப் புறம். வரிகொள்-வரித்தலைக் கொண்ட; வரித்தலாவது வரிந்து கட்டுதல், இதனால் வில்லுக்கு வலிமை மிகுதிப்படும். அழுந்து பள்ளம். விடரகம் - மலைப்பிளப்பிடம்.

விளக்கம்: வரும் வழியது ஏதங் கருதிக் கவலையுறுதல் இயல்பேயாகலின், இனி இவ்வாறு வருதலை மேற்கொள்ள விடாது, விரைய வரைந்து கொள்ளுதலே செயற்கு உரியது. எனத் தலைமகன் கருதுவானாவது இதன் பயனாகும். தீர்த்தலாவது, தன் கடமையைச் செய்தல். மாரியும் தன் கடமையை மறவாதே தீர்த்தலைத் செய்தலை மேற்கொள்ளு

கடன் 70

8) mar நற்றிணை தெளிவுரை

கின்றது; ஆயின், தலைவனோ தன் கடனைத் தீர்த்தலாகிய, அடைந்தார் துயர் தீர்த்தல் ஆகிய நம்மை மணந்து கொள் ளுதலை நினையானாயினான் என்று குறிப்பாக உணர்த்தியதும் ஆம்.

.

சூலுற்ற மேகங்கள் தம் கடனைத் தவறாதே தீர்த்தலைப் போலத் தலைவிக்கு உறுதுணையான தோழியும், அவளுக்குத் தான் செய்தற்குரிய கடனாகிய தலைவனோடு மணம் புணர்த் தும் செயலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், இவ்வாறு கூறுவாள் எனக் கொள்ளுதலும் பொருந்தும். வேட்டுவனின் கணைக்கு வெருவியதாகி, விடரகத்துச் சென்று முழங்குவது போலத் தலைவியும் இனி ஏதிலாட்டியர் உரைக்கின்ற பழிச்சொற் களுக்கு அஞ்சினளாய்த் தன் மனையகத்தே தனித்திருந்து புலம்பி வருந்துவள் ஆவள் என்பதாம்.

உள்ளுறை:

யானையானது,

229. வாடையும் வந்து நின்றது!

பாடியவர்: இளங்கண்ணனார் எனக் கொள்வர் உரையாசிரியர் ஒளவை. திணை: பாலை. துறை: (1) தலை மகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்று வித்துச் செல்ல உடன்பட்டது. (2) செலவழுங்குவித்த தூஉம் ஆம்.

[ (து-வி.) (1) தலைமகன் பிரியக்கருதிய செய்தியைத் தலைவியிடஞ் சென்று பக்குவமாகச் சொல்லி அவளை அதற்கு இசைய வைத்த பின்னர், தலைவனிடம் வந்து, தோழி, அவன் செலவுக்கு உடன்பட்டு கூறியதாக அமைந்தது இச் செய்யுள். (2) தலைமகன் பிரிந்து போதலைத் தடுத்துவிடக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.)

.

சேறும் சேறும் என்றலின் பலபுலந்து செல்மின் என்றல் யானஞ் சுவலே!

செல்லா தீமெனச் செப்பின் பல்லோர்

நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே! அதனால்,

செல்மின்; சென்றுவினை முடிமின்; சென்றாங்கு அவண்நீ டாதல் ஓம்புமின்! யாமத்து இழையணி யாகம் வடுக்கொள முயங்கி

5 நற்றிணை தெளிவுரை

உழையீ ராகவும் பனிப்போள், தமியே

குழைவான் கண்ணிடத் தீண்டித் தண்ணென வாடிய இளமழைப் பின்றை

வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே!

71

தெளிவுரை: நாம் வினை கருதிப் பிரிந்தேமாய்ச் செல்வேம் செல்வேம் என்று நீர்தான் பலகாலும் கூறுதலி னாலே, யான் தலைவியின் துயரை நினைந்தேனாய்ப் பலவாகப் புலந்து, 'செல்வீராக' என்று சொல்லுதற்கும் அஞ்சா நிற்பேன். 'நீர்தான் செல்லாதீராய் இவண் இருப்பதாக' என்று சொன்னால், பலருங் கூறாநிற்கும். மார்பில் எறியும் அம்புகளைப் போலுங் கடுஞ் சொற்களின் நிமித்தமாக அஞ்சா நிற்பேன். அதனாலே, நீரும் செல்வீராக; சென்று செயக் கருதும் வினையினையும் முடிப்பீராக; சென்ற அவ் விடத்திலே நெடுங்காலம் நிற்றலைக் கைவிடுதற்காவது பார்த்துக் கொள்வீராக! இரவின் நடுயாமத்தே கலன் அணிந்த மார்பகம் வடுக்கொள்ளுமாறு தழுவியபடி நீர் தாம் அருகிலேயே இருப்பீராயினும், அந்தச் சிறுபிரிவையும் நினைத்து நடுங்குபவள் தலைவி கண்டீர்! அவள்தான் தனியே இருந்து வருந்துமாறு, அகன்ற இடமெங்கணும் பரவியபடி நெருங்கித் தண்ணென்னும்படி பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர் வந்து நின்ற வாடைக் காற்றையும் கண்டீர் அல்லவோ! ஆயின்,ஆராய்ந்து செய்யத்தகுவன கருதிச் செய்வீராக!

சொற்பொருள்: சேறும்- செல்வேம். புலந்து - வேறுபட்டு. நிறம் - மார்பு. புன் சொல்-பழிச் சொற்கள். நீடாதல்- நீட்டித்து இருத்தலைச் செய்யாதிருத்தலையாவது மேற்கொள் ளாமல். யாமம்-இரவின் நடு யாமம். உழையீர் - அருகிருப் பீர். பனிப்போள் - நீர் தாம் பிரிந்தும் போவீரோ எனச் சிறு பிரிவுகட்கே நடுங்குபவள். வாடை - வாடைக்காலம்.

விளக்கம்: 'பலபுலந்து' என்றது, தலைவனின் பிரிவைப் பற்றிக் குறிப்பினாலே அறிந்தாளான தலைவியின் நடுக்கமும் மெலிவும் ஆகிய பலவற்றையும் நினைந்து புலந்து என்றதாம். அதனால், தலைவனைச் 'செல்மின்' என்று சொல்ல முடியாத வளாகின்றாள். ஆயின், உலகியல் அறநெறி கருதிப் பிரிதலை மறுக்கவும் முடியாதவள், ஊரவர் உரைக்கும் பழிச் சொற்கள் குறித்து அஞ்சுகின்றாள். இதனால், இதனை நாடு காவலைக் குறித்த பிரிவு என்று கொள்ளுக; அதற்குப் 11.. 1, 1...

12

கல்வன்

நற்றிணை தெளிவுரை

போவதே கடன் என்பதும், அதனை மறுத்தல் பெண்களுக் கும் மரபாகாது என்பதும், அவன் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதும் தோன்றச் 'செல்மின்', 'சென்று வினை முடிமின்' என்கின்றனள். 'முயங்கி உழையீராகவும் பனிப்போள்' என்று தலைவியைக் கூறியது, அவள் பிரியின் உயிரினையும் தரித்திருப்பாளோ எனக் கலங்கியதாம். அதனை அவனும் நினைவிற் கொண்டு வினைமுடித்ததும் விரைய மீளவேண்டும் என்றதும் ஆம். 'வாடையும் கண்டீரோ' என்றது, அது உடனுறைந்து இன் புறுத்தற்கு உரிய காலம் என்பதை நினைவுபடுத்தி,அக் காலத்துப் பிரிவை ஆற்றியிருப்பதற்கு இயலாளாய்த் தலைவி கொள்ளும் நடுக்கத்தை உணர்த்தியதாம்.

செலவழுங்குவித்தல் என்னும் துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுவதாயின், பிரிவைக் கல்வியிற் பிரிவாக வும், இதனைக் கேட்டலுறும் தலைவன், அதனை அப்போதைக்கு கொள்க. நிறுத்துவன் என்பதும்

23.காணுங்கால் இனிது!

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். திணை: மருதம். துறை: தோழி வாயில் மறுத்தது.

[ (து-வி.) பரத்தையிற் பிரிந்து வீட்டிற்கு வருகின்றான் தலைவன். தலைவியின் சினத்தை அறியானாதலால், அவளைச் சமாதானப் படுத்துமாறு தோழியை வேண்டுகின்றான். அவள், அவனுக்கு இசையமறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

கயக்கணக் கொக்கின் கூம்புமுகை யன்ன கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது

குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்செட விரியும்

கயற்கணங் கலித்த பொய்கை ஊர!

முனிவில் பரத்தையை என்துறந் தருளாய்

5

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தா அங்கு

இனிதே தெய் நின் காணுங் காலே!

10 நற்றிணை தெளிவுரை

73

தெளிவுரை: இளம் பிடியானையினது செவியைப்போல விளங்கும் பசுமையான இலைகளையும், குளத்தினிடத்தே யுள்ள கூட்டமாயிருக்கும் கொக்கைப்போலத் தோன்றும் குவிந்த முகைகளையும், அவற்றிற்கேற்ப அமைந்த திரட்சி யான தண்டினையும் கொண்டிருப்பது நீராம்பல். அதன் அமிழ்தைப் போல மணம் பரப்புகின்ற தண்மையான மலரானது கீழைத்திசைக்கண்ணே தோன்றுகின்ற வெள்ளி போல, இருளைப் போக்கியபடி மலர்ந்திருக்கும். அத்தகையதும், கயல் மீன்களின் கூட்டம் கலித்துப் பெருகி யிருப்பதுமாகிய பொய்கையினையுடைய ஊரனே!

யைப்

என்னை வேண்டி நிற்றலைக் கைவிட்டுவிட்டு, நின்பால் சினம் ஏதும் இல்லாதிருப்பவளாகிய பரத்தையிடஞ் சென்று அவளுக்கு அருள்வாயாக! தனிமையானது எம்மைப் பெரிதாகத் துன்புறுத்திய காலத்திலே, அதுதான் நீங்கு மாறு, புதுவதாக வற்றிக் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள வயற்பகுதிகளிலே குளிர்ச்சியுற நிறைந்த புதுப்புனலானது பாய்ந்து பரவினாற்போல, நின்னைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சியே எமக்கு இன்பந் தருவதாயிருக்கின்றது. எமக்கு அதுவே போதும் !

சொற்பொருள்: வயப்பிடி இளைய பிடி; முயப் பிடி எனவும் பாடம். பாசடை - பசிய இலை. இலை. கூம்புதல் - குவிந் திருத்தல். கணைக்கால்-திரட்சியான தண்டு. தண்போது- குளிர்ச்சியுள்ள மலர். குணக்குத் தோன்று வெள்ளி - கீழ்த் திசையிலே தோன்றும் விடிவெள்ளி; வெள்ளிஎழப் பொழுது புலரும் என்பதாம்; இது கதிரவன் உதயத்திற்குமுன் ஏற் பட்ட புலர்காலைப் பொழுது. முனிவு- சினம். புலம்பு- தனிமைத்துயரம். புதுவறம்-புதுவதாக உண்டான வறட்சி. மலிபுனல்-மிகுதியான புதுப்புனல். 'தெய்ய' அசைநிலை.

விளக்கம்: தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது இது பரத்தையானவள் நின்னைத் தன்பால் விருப்புக் கொள்ளச் செய்து தான் பயனடைதலிலேயே. கருத்தா யிருப்பாள் என்று கூறுவாள். அவளைப் பிரிந்து. நீதான் இங்கு வந்ததற்காகவும் சினம் கொள்ள மாட்டாள் என்ற னள். ஆனால், நின்பால் உரிமையுடைய யாமோ சினங் கொள்வேம் என்றதும் ஆம். நீதான் இங்கு வருதலையே மறந்தாய் போலும் என்று இருந்தேமாகிய எமக்கு, நீதான் வந்து காட்சியளித்தனை. நின்னைக் கண்டு மகிழ்ந்த அந்தக்

நற் -5. 74

நற்றிணை தெளிவுரை

காட்சியே எமக்கு இன்பமாயிற்று. எமக்கு அது போதும் என்பதாம். பொருந்தா ஒழுக்கமாகிய அவன் செயலை இல்வாறு இகழ்ந்து உரைக்கின்றனள்.

நின்னைக் காணவும் பெறேமாய் வாடி நலிந்திருந்த எமக்கு, நின்னைக் கண்டதே இன்பந்தந்தது போலச் சிறந்த உதவியாயிற்று; வறங்கூர்ந்த செறுவில் புதுப்புனல் பாய்ந் தாற்போல எம் மனத்து வெம்மையும் தணிந்தது என் றதும் ஆம். இவ்வாறு, சினந்து வாயின் மறுத்து உரைக்கின்றாள் தோழி.

இறைச்சி: ஆம்பலந் தண்போது வெள்ளிபோல மலர்ந் திருந்தபோதும், அதுதான் வெள்ளியாக ஆகாததுபோல, நீதான் பரத்தைக்குச் செய்யும் தலையளியும் நினக்கு மகனைப் பெற்று நின் குடிக்கு ஒளியூட்டும் உறவு ஆகாது என்பதாம். அவள் தலைவியாகும் தன்மையைப் பெறமாட்டாள் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது.

231. போதவிழ்ந்த புன்னை!

பாடியவர் : இளநாகனார். திணை: நெய்தல். துறை: சிறைப் புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாயது.

[ (து. வி.) தலைவன் ஒருசார் வந்து நிற்றலைக் கண்டாள் தோழி. அவன் உள்ளத்திலே, 'தலைவியை மணந்து கொள்ள வேண்டும்' என்னும் எண்ணத்தை ஊட்டக் கருதினாள். தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்குமாறு கூறு கின்றனள்.]

மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொழு மரபின் எழுமீன் போலப்

பெருங்கடற் பரப்பின் இரும்புறந் தோயச் சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும் துறைபுலம் புடைத்தே தோழி! பண்டும் உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன

பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக் கானலங் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்கா மாறே.

5 நற்றிணை தெளிவுரை'

மாசற

75

தெளிவுரை: தோழீ! முன்னேயும் மனைக்கண்ணேயுள்ள ஊர்க் குருவியினது முட்டையை உடைத்தாற்போலத் தோன்றும் பெரிதான அரும்புகள் இதழவிழ்ந்துள்ள, கருமை யான அடியையுடைய புன்னைமரங்களைக் கொண்ட கானற் சோலையிடத்தே, நம் தலைவன் நமக்குத் தந்த காதலானது, நம் உள்ளத்தினின்றும் நீங்காதே யுள்ளதுகாண்! அதனாலே, விளங்கிய நீலமணியின் நிறத்தையொத்த வானத்தினிடத்தே தோன்றி, உலகினரால் கைகூப்பித் தொழப்படுகின்ற மரபினையுடையது மரபினையுடையது எழுமீன் மண்டிலம் என்னும் சப்தரிஷிகள் மண்டிலம். அஃதேபோலத் தோற்று மாறு சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரிய முதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியே யிருக் கும். அதனைத் தமியேமாய் நோக்குங்கால், அது நமக்கும் துயர்தருவதாயுள்ளது! அங்ஙனம் நாமும் களித்து மகிழ் வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே!

சொற்பொருள்: மை - குற்றம்; கருமையும் ஆம். அப் போது 'மையற' என்பதற்கு மேகங்களால் மறைக்கப்பட் டிராத நிர்மலமான என்று கொள்க,நட்சத்திரங்கள் தெளி வாகத் தோன்றுதலின். மணிநிற விசும்பு - நீலமணியின் நிறத் தைக் கொண்டதான விசும்பு. எழுமீன் - ஏழு நட்சத்திரக் கூட்டம் எனப்படும் சப்தரிஷி மண்டிலம்; இவர்கள் தம் முடைய தவத்தாலும் ஒழுக்கத்தாலும் விண்மீன்களாகும் உயர்நிலை பெற்றவர்; இவர்களைத் தொழுவதனாலே நன்மை யுண்டு என்பது பழந்தமிழரின் நம்பிக்கையாகும்; இதனை அடுத்திருப்பதும், இதனோடு இணைந்த சிறப்பினதுமான அருந் ததியைக் குறிப்பதாகக் கொள்க. இன்றுவரை மகளிர் தம் கற்புக்குச் சான்றாக அருந்ததியைக் காட்டித் தொழுதல் மரபு; இது மணச்சடங்குகளுள் ஒன்றாகவே அமைந்துள்ளது. இரும்புறம் - கரிய முதுகுப்புறம்;இதனைக் காக்கையின் முதுகுப் புறமாகக் கொள்வர்; அன்றிப் 'பெருங்கடல் பரப்பின் இரும் புறம்' எனக் கடலோடு சேர்த்துக் கடலின் கருமையான மேற்புறம் எனலும் பொருந்தும். வானத்தே தோன்றும் எழுமீன்போல அவை அப்போது தோன்றும் என

உவமை

கொள்க. 'துறை புலம்பு உடைத்து' என்றது, அவைபோலத் தானும் நீர்விளையாட்டயர் தற்குக் காதலன் அருகே இன்மை யால். 'போதுவிரிந்த மலர்', அதன் அமைப்புக்கு உடைந்த குருவிமுட்டையின் வடிவம் உவமை கூறப்பெற்றது. 16

ent

उसन

முதுவெள்கள்ளர் நற்றிணை தெளிவுரை

விளக்கம்: புன்னையங் கானலை நோக்கியதும், முன்பு கூடிய இடமாதலின், பழைய நினைவுகளாலே கலங்கித் துயருற்றனள்; அவனோடும் ஆடற்குரிய துறையாதலின் அது நினைந்தும் மனம் வாடினாள். காலம் மாலையாதலைச் செய்யுளின் அமைப்பால் அறிதல் வேண்டும். அறியவே. இஃது இரவுக் குறிக்கண் கூறுதல் என்றும் கொள்ளப்படும்.

இறைச்சிப் பொருள் சிறு வெண்காக்கை தத்தம் துணை யோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே, 'களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது' என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், அதனால் மணமும் விரைவில் கைகூடும் என்பதாம்.

232. வேரல் வேலிச் சிறுகுடி!

பாடியவர்: முதுவெண்கண்ணனார்; முதுவெங்கண்ணனார் எனவும் பாடம். திணை; குறிஞ்சி. துறை: பகல் வருவானை இரவுவா எனத் தோழி சொல்லியது.

((து.வி.) பகற்குறிக்கண்ணே வந்து ஒழுகுவானாகிய தலைவனைத் தோழி எதிர்கொண்டு, இரவுக்குறி நேர்வாளே போல இவ்வாறு கூறுகின்றனள். அதுவும் இயலாமையைக் குறிப்பால் உணர்த்தித் தலைவியை வரைந்து வலியுறுத்துகின்றனள்.)

சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம் குளவித் தண்கயங் குழையத் தீண்டிச் சோலை வாழை முணைஇ அயலது வேரல் வேலிச் சிறுகுடி அல்றச் செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் மாமலை நாட தாமம் நல்கென வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை வீயுக விரிந்த முன்றில்

கல்கெழு பாக்கத்து அங்கினை சென்மே.

கொள்ளுமாறு

5 நற்றினை தெளிவுரை

17

தெளிவுரை: சிறுத்த கண்களையும் பெருத்த கைகளையும் கொண்ட யானையின்,ஆணும் பெண்ணுமாகிய இரண்டின் இனம், தண்ணிய குளக்கரையிலே செறிந்திருந்த மலைப் பச்சை குழையுமாறு மெய்யுறத் தம்முட் புணர்ந்து கூடிய பின்னர், சோலையிடத்தேயுள்ள மலைவாழைகளைத் தின்பதை யும் வெறுத்தவாய், அதற்கு அயலதாயுள்ளதும், மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலியை உடையதுமாகிய சிறிய குடியிருப்பிலே யுள்ளவர்கள் அச்சத்தால் அலறுமாறு சென்று, சிவந்த அடிமரத்தையுடைய பலாவினது இனிய பழங்களை உதிர்த்துத் தின்னாநிற்கும். அத் தன்மையுடைய பெரிதான மலைநாட்டிற்கு உரியவனே, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! எந்தைக்கு உரியதும், வேங்கையின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற முற்றத்தை உடையதும், மலை யிடத்தே பொருந்திய பாக்கத்திலுள்ளதுமாகிய எம் மனை யகத்திலே இன்றிரவும் போதுமட்டும் நீதான் தங்கினையாய்ப் பிற்றைநாளிற் செல்வா டாக! அதற்கு இசைவாயாயின், நின் மாலையினை அடையாளமாகத் தருவாயாக!

சொற்பொருள்: சிறுகண் - சிறுத்துள்ள கண்கள். ஈரினம் களிறும் பிடியுமாகிய யானையினம். குளவி - மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறப்படும். 'தீண்டி என்றது அதன்பால் மெய்யுறக் கூடிக் களித்து என்றதாம். 'வாழை' என்றது மலைவாழையினை. முணைஇ - வெறுத்து; 'முணைவு முனி வாகும்' என்பது தொல்காப்பியம். வேரல்- மூங்கில்; வேரல் வேலி என்பதனை மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலி எனக் கொள்ளலும் பொருந்தும். 'செங்கால் பலவின்' என் றது, செம்பலா எனக் குறித்தற் பொருட்டு. தாமம்-மாலை. 'தாமம் நல்குக' என்றது, நின்னைக் காணாது அலமரும் தலைவி அதனை அணைத்தாயினும் இன்புறுவள் என்றற்காம். முன்றில்-முற்றம். 'பாக்கம்' குடியிருப்பு; கடற்கரையூர்க் குரிய பெயர், குறிஞ்சிச் சிற்றூர்க்கும் இங்கே கூறப்பெற்றது. விளக்கம்: உடலின் பெருமையை நோக்கக் கண் மிகவும் சிறுத்து உளதாதலின், 'சிறு கண் யானை' என்றனர். இரவில் தங்கிச் செல்வாயாக' என வேண்டியது, 'பகற் பொழுதின் கண்ணே இவளோடு கூடிக் களித்து நீதான் இன்புறுத்தினை ; இரவிலே இவள்தான் தனிமையில் துயருற்றா ளாய்ப் பெரிதும் நலிவள்; ஆதலின் இரவும் தங்கிப்போவாய் என் வேண்டுவதாகும். இதனால், இரவில் அவள்படும் துயரத்தை நீக்குதற்குக் கருதினையாயின், அவளை ஊரறிய 78

cont

தபட்கா

2584 Rizayň நற்றிணை தெளிவுரை

மணந்து கொள்வாயாக எனக் குறிப்பாகக் கூறினள் என்று கொள்க.

·

உள்ளுறை: யானையின் ஈரினம் தலைவனும் தலைவியு மாகவும், 'குழையத் தீண்டி என்றது, அவர் இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதைக் குறித்ததாகவும், 'வாழையை வெறுத்து' என்றது, மீளவும் களவுறவை வெறுத்துவிடலே தக்கது எனவும், 'சிறுகுடி அலற' என்றது, அலவற் பெண்டிர் நடுங்கி வாயடங்குமாறு செய்து எனவும், 'பலவின் பழம் மிசையும்' என்றது, வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்தி இன்பம் துய்ப்பாயாக எனவும் உள்ளுறை பொருளாகக் கொண்டு கூறினளாகக் கொள்ளுக.

233. நாருடை நெஞ்சத்து ஈரம்!

பாடியவர்: அஞ்சில் ஆந்தையார். திணை: குறிஞ்சி. துறை: வரையாது நெடுங்காலம் வந்தொழுக, 'இவள் ஆற்றாள்' என்பது உணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) வரைந்து கொள்ளற்கு முற்படாதவனாகத் தலைமகன் நெடுங்காலம் வந்து களவு ஒழுக்கத்திலேயே நீடித் திருப்பான் ஆகின்றான். 'இது நீடிப்பின் இனியும் தலைவி ஆற்றாள்' எனக் கருதிய தோழி, தலைவன் கேட்டுத் தெளியு மாறு, தலைவியிடத்தே சொல்லுவாளேபோல இவ்வாறு கூறுகின்றனள்.]

கல்லாக் கடுவன் நடுங்க முள்எயிற்று மடமா மந்தி மாணா வன்பறழ்

கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும்

பெருங்கல் நாடனை அருளினை யாயின்,

இனியன கொள்ளலை மன்னே! கொன்னொன்று

கூறுவன் வாழி தோழி! முன்னுற

நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி

ஆன்றோர் சென்னெறி வழாஅச்

சான்றோன் ஆதல்நற் கறிந்தனை தெளிமே!

தெளிவுரை : தோழீ! நீயும் நெடிது வாழ்வாயாக! தன் னுடையதான தொழிலையன்றி வேறு தொழிலைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு, முட்போன்ற கூர்மையான பற்களைக்

5 நற்றினை தெளிவுரை

79

கொண்டதும், மடப்பத்தை உடையதுமான பெரிய மந்தி யானது, வளர்ச்சி நிரம்பாத வலிய தன் குட்டியோடும், உச்சிகள் உயர்ந்த மலையடுக்கத்தே இயங்கும் மேகங்களுக்கு உள்ளாகச் சென்று ஒளித்துக் கொள்ளும். அத் தன்மை யுடைய பெரிய மலைநாட்டுத் தலைவனுக்கு நீயும் அருளிச் செய்தனை யாயின், இனியேனும் அத்தன்மைத்தான செயல் களை மேற்கொள்ளாதே இருப்பாயாக! வெறிதே ஒன்று கூறுவேன்! அதனையும் கேட்பாயாக தலைமகன் நின்முன்னே வந்தடைந்தபோது, அன்பை உடையதான நின் நெஞ்சத் திலே மிக்கெழுகின்ற காதலை மறைத்துக் கொண்டனையாய், அவனோடு சொல்லாடி, அவன்தான், ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறியாகிய இல்லறம் மேற்கொண்டு ஒழுகுதலிற் பிழையாத சான்றோன் ஆகுதலை நன்றாக அறிந்து கொண்டனையாகி, அதன் பின்பே அவனை ஏற்றுக்கொள் ளலையும் தெளிவாயாக!

சொற்பொருள் : கல்லாக் கடுவன் தன் தொழிலன்றிப் பிறவற்றைக் கற்றறியாத ஆண் குரங்கு; பிறவென்றது மகவோடுங்கூடிய தன் மந்தியைப் போற்றி உதவுதலாகிய கடப்பாட்டுணர்வு. அஃதன்றித் தன் புலனிச்சையொன்றே கருதுமாதலின், 'கல்லாக் கடுவன்' என்றனர். மடமா மந்தி இளமைப் பருவத்துக் கருமுக மந்தி; பெரிய மந்தி. 'மாணா வன்பறழ் குலத்தொழில் பயிலாத வலிய குட்டி. கோடு- மலையுச்சி. ஆடு மழை - இயலும் மேகம். ஒளிக்கும் -ஒளித்து மறையும். இனியன கொள்ளலை - இனி அத்தன்மையான அன்புச் செயல்களை மேற்கொள்ளா திருப்பாயாக. 'இனி என கொள்ளலை' எனவும் பாடம்; இனி என் சொற்களை ஏற்றுக்கொள்வாய் அல்லை என்பது பொருள்.நார்- அன்பு. ஈரம் - காதலன்பு. சென்னெறி - செவ்விதான நெறி; செல் நெறி எனக் கொள்ளின் செல்லும் ஒழுகலாறு எனக் கொள்க. வழாஅ - வழுவாத, வாழா என்று பாடம் கொள்ளின் அந் நெறிப்படி வாழாத என்று கொள்க சான்றோன் - சால்பினன்.

விளக்கம்: ஆன்றோர் சென்னெறியானது பலரறியக் கோடலும், களவினைக் கடிதலும். அந் நெறிப்படி வாழான் எனவே, அவன் அன்பிலன், ஒதுக்கத் தக்கவன் என்றதாம். ஊரலரால் நாம் வேதனையுறுவோம்; அவன் பிரிவால் நீயும் கலங்கி நெஞ்சழிவாய்; இவற்றைக் கருதாது களவிற் பெறும் இன்பமே நாட்டமாகி வரும் அவன் சால்பிலன் என்கின்

80

Chy

- வெள்ளில்கு

நற்றினை தெளிவுரை

றனள். இதனைக் கேட்டலும் தலைமகன் தன்பால் தெளிவு பெற்றானாகி, விரைய வரைந்து மணந்து கோடலில் மனஞ் செலுத்துவான் ஆவன் என்பதாம்.

உள்ளுறை : கடுவன் மனம் நடுங்க மந்தியும் பறழும் மேகத்தூடே சென்று மறைந்தாற்போல, நாமும், அவன் நம்மைக் காணாதே வருந்துமாறு அயலே சென்று மறைந்து கொள்வேம் என்று கொள்க. அங்ஙனம் செய்வோ மாயின், களவுறவு தடைப்படுதலின், அதன் பின்னாவது அவன் வரைந்து வருதலைப்பற்றி நினைப்பவனாவான் என்பதாம்.

234.

....

பல

பழைய

இச் செய்யுள் கண்டெடுக்கப்பெற்ற ஏட்டுப் பிரதிகளிலும், மற்றும் வெளியான பல அச்சுப் பிரதிகளிலும் காணப்பெறவில்லை. குறுந்தொகையுள் ஒரு பாடல் அதிகமாக வந்துள்ளது. அதில் ஒன்பது அடிகளோடு வந்துள்ள செய்யுள் (எண் 307) இந்தக் காணாமற்போன செய்யுளாக என்பது இருக்கலாம் அறிஞர் சிலரின் கருத்தாகும். அந்தச் செய்யுளை ('வளை யுடைய' எனத் தொடங்குவது) இத் தெளிவுரை நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கின்றோம்.

235. குன்றின் தோன்றும் குவவுமணல்!

ஒளவை

பாடியவர் : பழைய பிரதிகளில் பெயர் காணப்பட வில்லை; வெள்ளி வீதியார் எனக் கொள்வர் அவர்கள். திணை: நெய்தல். துறை: வரைவிடை ஆற்றா ளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

[(து. வி) மணம் செய்து கொள்ளாது தலைவன் காலம் நீட்டிப்பக் கண்டு பொறாளாயின தலைவிக்கு, தோழி, 'அவன் வரைவொடு வருதல் உறுதி' எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை

பொன்னேர் தாதின் புன்னையொடு கமழும் பல்பூங் கானல் பகற்குறி வந்துநம்

மெய்களின் சிதையப் பெயர்ந்தனன்; ஆயினும்

5 நற்றிணை தெளிவுரை

குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி- தண்தார் அகலம் வண்டிமிர்பு ஊதப்

படுமணிக் கலிமா கடைஇ

நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.

81

10

தெளிவுரை : தோழீ! வலிமையான அலைகளாலே மோதப் பட்ட, சருச்சரை பொருந்திய வளைந்த அடியை உடைய தும், ஆராயப்பட்ட வாளின் வாய்போல விளங்கும் முள் ளமைந்த இலைகளை உடையதுமான தாழையின் கண்ணே யுள்ள, பொன்போலும் அழகிய பூந்தாதின் மணமானது, புன்னையின் மலரோடுஞ் சேர்ந்து கலந்தபடி கமழுகின்ற தன்மையுடையது, பலவாகிய பூக்கள் உடையதான கானற் சோலை. அவ்விடத்தே, பகற்குறிக்கண் வந்து நலன் நுகர்ந்து நம்முடைய மெய்யிடத்திருந்த கவினைச் சிதையச் செய் தவனாகத் தலைவன் பிரிந்து போயினான். ஆயினும், தண்ணிய தாரணிந்த மார்பிடத்தே வண்டுகள் மொய்த்துத் தேன் உண்டபடி இருக்க, ஒலிக்கும் மணிபூண்ட செருக்கிய குதிரை களைச் செலுத்தியபடி, நெடிய நீரையுடைய நெய்தல் நிலத் தானாகிய நம் தலைவன் வரைவொடு வருகின்றதனை-

குன்றுபோலத் தோன்றுமாறு மணல்குவிந்த மேடு களின் மேலேறி நின்று யாமும் கண்டு வருவதற்குச்

செல்வோமா!

-

சொற்பொருள் : உரவு - வலிமை ; பொருத - மோதிய. பிணர்படு - சருச்சரை பொருந்திய. தடவு - வளைந்த.அரவு வாள் வாளரம்.பொன்னேர் தாது - பொற்றுகள் போலத் தோன்றும் மகரந்தத் துகள்கள். 'கானல்' என்றது கானற் சோலையினை. குவவு மணல் - குவிந்த மணல்மேடு.அகலம் மார்பு. கலிமா - செருக்குடைய குதிரை. சேர்ப்பன் நெய்தல் நிலத் தலைவன்.

.

விளக்கம்: 'தாழைப் பூவின் மணம், புன்னைப்பூவின் மணத்தோடு சேர்ந்து கமழும் பலவாகிய பூக்களையுடைய கானல்' என் என்றது, அதுவும் மணம் பெற்றுத் திகழ்ந்த அழகினை வியந்ததாம். அவ்விடத்தே வாய்த்த பகற்குறிக் கண் தலைவனும் தலைவியும் இன்புற்றனர் என்க. அவன் தலையளியால் அவளது எழில் புதுப் பொலிவு பெற்றது. எனினும், அவன் வரைவொடு வைத்துப் பிரிய, அவள் !

82

நம்பிகுட்டுவை நற்றிணை தெளிவுரை

மெய்க்கவின் சிதையலாயிற்று என்றதாம். இதனைக் கூறு வாள், 'சிதையப் பெயர்ந்தனன்' என்றனள். அகலத்தே தண்தார் வண்டிமிர்பு ஊதவும், குதிரைகளின் மணியொலி முழங்கவும் வருகின்றான்; ஆதலின் வரைவொடு வருவா னாகவே கொள்ளல் வேண்டும். அவ் வொலியைக் கேட் டவள், வழியிடைச் சென்று அவன் வருகின்ற செவ்வியைக் காணலாம் எனத் தலைவியை அழைக்கின்றனள்!

இறைச்சிப் பொருள்: 'தாழையும் புன்னையும் கலந்து மணம் பரப்பும் கானல்' என்றது, தலைவனும் தலைவியும் ஊரவர் வாழ்த்த முறைப்படி மணம் பூண்டு சேரி புகழ இல்வாழ்வு நடத்துவர் என்றதாம்.

236. நோயும் கைம்மிகப் பெரிதே!

பாடியவர் : நம்பி குட்டுவனார். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[(து-வி.) தலைமகன், தான் சொன்னாற் போன்று தன்னை வந்து வரைந்துகோடலைச் செய்யாமையினால், தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அதனைப் 'போக்கக் கருதிய தோழி, 'அவன் தவறாது வருவான்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அப்போது, தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்றலை அறிந்த தலைவி, தோழிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு தன் துயரமிகுதியை உரைப்ப தாக அமைந்த செய்யுள் இது.)

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யுந் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே; ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென

.நிறைய நெஞ்சத் தன்னைக்கு உய்த்து, ஆண்டு உரையினி வாழி தோழி!-புரையில்

5

நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென வியலறை மூழ்கிய வளியென்

பசலை யாகந் தீண்டிய சிறிதே!

10 நற்றிணை தெளிவுரை

83

தெளிவுரை: "தோழீ! நீ, வாழ்வாயாக! என்பால் உண் டாகியதான இக் காமநோயும் அளவு கடப்பப் பெரிதா கின்றது. என் உடம்பும் தீயை உமிழ்கின்றாற் போலக் காமநோய் தாக்குதலினாலே வெப்பத்தை உடையதாய் இராநின்றது. ஆதலினாலே,

குற்றமில்லாத ஒண்ணிய நேர்மை கொண்ட என் ஒளி வளைகளை நெகிழச் செய்தோன் அவன்; அவன் குன்றத்தைச் சார்ந்த, பெருமை பொருந்திய நெடிய மலைப்பக்கங்களிலே ஊடாடியதாகத் தண்ணென்று, அகன்ற நம் குன்றத்துப் பாறையிடத்தேயும் வந்து நிரம்பியுள்ள காற்றானது, பசலைபடர்ந்த மார்பிடத்தே சிறிது தீண்டுதலையேனும் யான் விரும்புகின்றேன். அது குறித்து,

r

என்

நீதான் விரையச் சென்று, நரகம்போலக் கொடுமை நிரம்பிய நெஞ்சத்தையுடைய நம் அன்னைக்கு, 'உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது கொண்டு சென்றால், இவள் தன் நோய் பெரிதும் நீங்கப் பெறுவாள்' என்று உரைத்து, அவள் இசைவைப் பெற்று வருவாயாக" என்பதாம்.

சொற்பொருள்: நோய் - காமநோய். கைம்மிக - அளவு கடப்ப; பிறர் அறியாவாறு மறைக்கின்ற தன்மையையும் கடந்து பெருகிய நோய் என்க. தீயுமிழ் தெறலின் - தீயை உமிழ்ந்தாற்போல வருத்துதலினால்; இது நோயின் கொடுமை எனக் கூறுக; இனி இரவுக்குறிச் சிறைப்புறமாகக் கொள்ளின் நிலவொளியைக் குறித்ததாகக் கொள்க. ஒய்யென - விரைவாக. முன்றில் - முற்றம்; இல்லத்தின் முன்பாக விளங்கும் காலியிடம். நிரையம் - நரகம். புரை குற்றம். ஏர் - அழகு. ஒளி. அண்ணல் - பெருமை யுடைய. வியல் - அகன்ற. அறை - பாறை

-

.

விளக்கம் : தன் காதலை உணராதே, தன்னை இல்வயிற் செறித்துக் காவலும் ஏற்படுத்தியதனால், 'நிரையம் போன்ற நெஞ்சத்து அன்னை' என்று இகழ்ந்தனள். அவள்தானும் தன்போற் பெண்ணாயினும், தானும் கன்னிப் பருவத்தே. இத்தகைய காதல் உறவினளேனும், இப்போது தன்னைத் தடைசெய்ய முனைகின்ற கொடுமையால் மனம் வெதும்பி பெண்மையின் இவ்வாறு அன்னையைப் பழிக்கின்றனள்.

கற்பறத்துக்கு ஊறு விளைத்தலினாலே, 'நரகம் புகுவள்' என இவ்வாறு கசந்து கூறினாளும் ஆம். 'புரையில் நுண் ஏர்

84

bny bbm mm காதக்கனை. நற்றிணை தெளிவுரை

எல்வளை' என்றது, சையளவிற்கு மிகுதலும் குறைதலு மாகிய குற்றம் அற்றதும், நுண்ணிய வேலைப்பாட்டால் அழகுடையதுமான ஒளியுள்ள வளை என்றதாம். அது நெகிழ்ந்தது மேனியின் மெலிவால். அதனை நெகிழச் செய்தோன் அவன் என்பதாம்.

'அவன் மலைக்காற்றேனும் சிறிது தீண்டி என் துயரைத் தீர்க்க' என்று புலம்புகின்றவளின் துயரமிகுதியைக் கேட்ட லுறும் தலைமகன், 'இனியும் வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிப்பின் இத்தகு அன்புடையாள் இறந்துவிடலும் கூடும். எனக் கவலைகொண்டு, அதற்காவன விரையத் துணி தலை நினைப்பான் என்பதும் கொள்க.

இறைச்சி: கொடு முடியிலே காற்றானது அளாவிச் சூழ்தலைப் போல,என் தோள்களும் அவன் தோள்களைத் தழுவி நிற்குமே என்று நினைத்து என்று நினைத்து இரங்கியது இதுவாகும்.

237. இன்னுயிர் அன்ன காதலர்!

பாடியவர்:

காரிக்கண்ணனார். திணை : பாலை. துறை:

தோழி உரை மாறுபட்டது.

[(து. வி.) பிரிவுக் காலத்திலே தலைவியின் தனிமைத் துன்பத்தை நீக்குமாறு தேற்றுவதற்குச் சில சொல்ல முற்படுகின்றாள் தோழி. அதனை ஏற்காது, தலைவி ஆற்றி யிருப்பதைக் கண்டதும், அவளது மனவுறுதியைத் தோழி வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

நனிமிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனிமலி கண்ணும் பண்டு போலா இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி

உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை! உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்

புரவெதிர்ந்து தொகுத்த யானை போல உலகம் உவப்ப தரும்

வேறுபல் உருவின் ஏர்தரு மழையே!

сл

5

10 நற்றிணை தெளிவுரை

85

இரவலர்

தெளிவுரை : மடந்தையே! வியப்புடைய வரும்பொழுது, அவர்க்குக் கொடுத்தலைக் கருதினனாக, வள்ளல் ஆய் ஆண்டிரன் யானைத்திரள்களைச் சேர்த்து வைப் பான். அப்படி அவன் சேர்த்துவைத்த யானைத்திரள்களைப் போல, உலகத்து உயிர்கள் எல்லாம் உவப்படையுமாறு, சொல்லுதற்கரியவான பற்பல உருவங்களோடுங் கூடியவை யாக, மழை மேகங்கள் வானில் எழுந்து ஓங்கித் தோன்று வதனை, அதோ காண்பாயாக! இஃது அவர்தாம் வருவதாகக் குறித்த பருவம் அல்லையோ! 'இதுகாறும் மிகப்பெரிதும் பசந்தனையாய்த் தோள்களும் மெலிந்துபோக, நீர் நிரம்பிய கண்களையும் கொண்டிருந்தனை. இருப்பினும், இவை முன்னைப் போலன்றி இவ்வாறு வேறுபட்டுப் போகுமாறு, நமக்கு இனிய உயிரைப் போன்றவரான நம் பிரிதற்கரிய காதலரும் நம்மைப் பிரிந்து சென்றவர், தாம் வருதற்குக் குறித்த காலத்தையும் நீடிக்கச் செய்தனரே!' என்று சொல் லப்படும் புலவியை உள்ளத்துக் கொண்டனையாய், அவர் வந்தவிடத்து அவரிடத்து ஊடுகின்றதனையேனும் நீ செய்ய மாட்டாயோ? இஃது என்னே வியப்பு!

சொற்பொருள்: நனிமிக - மிகப் பெரிதும். சாஅய் மெலிந்து. பனிமலி கண் - நீர் நிரம்பிய கண். பிரிவருங் காதலர் - பிரிதற்கு அருமை யுடையவரான காதலன்பை உடையவர். நீத்து - கைவிட்டு அகன்று. நீடினர்-வினை குறித்துச் சென்ற தேயத்தே காலத்தை நீட்டித்தனர்! புலவி ஊடல். ஏர்தரல் -எழுதல்; அழகுதருதலும் ஆம்!

-

விளக்கம்: வியத்தற்கரிய திறத்துடன் இசையும் கூத்தும் பாட்டும் நிகழ்த்தும் புலமையாளர் ஆதலின், வியப் புடை இரவலர் என்றனர். இனி, அவர்தாம் சிறிது பொருளே. பெற்றுப் போதலைக் கருதினராகவும், ஆய் அண்டிரன் அவர்க்கு யானைகளையே பரிசிலாக அளிக்கும் செயலை நினைந்து வியந்தனர் எனினும் ஆம். அண்டிரனின் இத்தகைய கொடைச் சிறப்பினை வியந்து, 'வாய்வாள் அண்டிரன் பாடின கொல்லோ, களிறு மிகவுடைய இக் கவின்பெறு காடே!' என்று பாடுவர் சான்றோர். வானத்தே எழுந்து மொய்த்த கருமுகில்களின் தோற்றத்தை இவ்வாறு களிற்றுக் கூட்டங்கட்கு ஒப்பிட்டு இன்புறுகின்றனர். 'உட் கொண்டு ஊடிற்றும் இலையே' என்றது, 'ஆற்றியிருப்பாரும் அவன் வந்த காலத்து ஊடுதல் இயல்பாக, நீதான் அது தானும் செய்திலை!' என வியந்து கூறியதாம். 86

கருக்க் கந்தரத்தனார

நற்றினை தெளிவுரை

அன்பிலள் கொடியள்' எனப் பிற பெண்டிர் பழிப்பர்; அது குறித்தேனும் புலப்பாயாக

போன்று, 'ஊடின்றுமிலையோ' என்றனள்.

என்று

238. பருவஞ் செய்த மாமழை!

கேட்பாள்

பாடியவர்: கருவூர்க் கந்தரத்தனார். திணை. முல்லை. துறை : தலைமகள் பருவங்கண்டு அழிந்தது.

[(து. வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றானாகிய தலைமகன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற காலத்தின் வரவுக்குப் பின்னரும், தான் வராதானாகத், தலைவி; அதுவரை யிலும் தன் பிரிவுத்துயரை ஆற்றியிருந்தவள், நெஞ்சழிந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]

வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப

வண்டுவாய் திறப்ப விண்ட பிடவம் மாலை அந்தி மாலதர் நண்ணிய

பருவஞ் செய்த கருவி மாமழை

அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல்

சான்றோர்ப் புரைவதோ அன்றே-மான்றுடன்

உரவுரும் உரறு நீரில் பரந்த

பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட

கனியா நெஞ்சத் தானும்

இனிய வல்லநின் இடிநவில் குரலே!

5

10

வாய்

தெளிவுரை : கோடையானது தாக்குதலினாலே பட்டுப் போயுள்ளகாடு; அக்காட்டினிடத்தே சிறியவாகப் பூவணிந்த கூந்தலையுடையவரான ஆயர் மகளிர் கூட்டமாகக் கூடியி ருக்கின்ற அக் கூட்டத்தினைப் போல, வண்டுகள் திறந்து தேனைப்பருகுமாறு மொய்த்திருக்கும் இதழ்விரிந்த பிடவுகளை உடையதாயிருப்பது அந்திப் பொழுது. இவ் அந்திப்பொழுதிலே, யான் மிகவும் காமமயக்கங் கொண்டு வருந்துமாறு வந்து சேர்ந்தனை! கார்ப்பருவத்தைத் தோன் றச் செய்த கூட்டமான கார் மேகமே! நீதான். இவ் விடத்தே, அவரது மனநிலையையும் அறிந்து வந்திருக்கின் றாயோ? அவ்வாறு அறிந்து வருதலானது சான்றோர்க்கு ஒத்த நற்றிணை தெளிவுரை

81

தான செய்கையும் அல்லவே! ஒரு சேர மயங்கி நின்று இடித்து முழக்கும் தொழிலையுடைய தன்மையினாலே, காட்டிடத்துப் பரவியுள்ள பாம்புகளின் படம் மழுங்கிப் போகுமாறு செய்வாய். அஃதும் அல்லாமல், மாட்சிமைப் பட்ட, கனியாத நெஞ்சத்தவரான நம் தலைவரின் உள்ளத் தையும் கனியச் செய்வாயோ? அப்படிச் செய்யாமை யினாலே, நின் இடியாற் பிறக்கும் முழக்கங்களும் எமக்கு இனிமையானவை ஆகா காண்! இவ்வாறு இவ்வாறு மேகத்தை நோக்கிப் புலம்புகிறாள் தலைவி.

சொற்பொருள்: வறம் - கோடை கொல் - தாக்கி வருத்த. கார்ப்பருவத் தொடக்கத்தில் பிடவு மலரும் என் பதை, 'வண்டு வாய் திறப்பு விண்ட பிடவம்' என்றனர். 'பிடவுத் தளையவிழக் கார்ப்பெயல் செய்த காமரு மாலை எனப் பிற சான்றோரும் இதனைக் கூறுவர் (நற்.256). மால்- மயக்கம். புரைவது - ஒப்பது.மான்றுடன் - மயக்கத்துடன்; இது எங்கும் இருள் கவிதலால் உண்டாவது.

விளக்கம்: அவரை வரத்தான் தந்திலை, அவர் நிலையை யேனும் நீதான் அறிந்து சொல்லவல்லாயோ என்றால், அதுவு மில்லை. அவர் நெஞ்சைக் கனியப் பண்ணி உதவுவாய் என்ப தும் இல்லை. என் நோயை மிகுதிப்படுத்தலே அன்றி, அது குறைதற்கான செயல் எதனையும் செய்யாமையின், நீதான் எனக்கு இனிய அல்லை என்கின்றனளும் ஆம்.

'பிறர் நோயும் தம் நோய்போற் போற்றி அறனறிதல், சான்றோர் கட்கெல்லாம் கடன் (கலி. 139)' என்பது உலகியல் ஆதலின், அதனைப் பேணாத நின் செயல் சான்றோர் செயலோடு ஒப்பாவதும் அன்று என்பதும் ஆம்.

குறித்த பருவத்து வாராது காலந்தாழ்த்தமையினாலே பாம்பினது நஞ்சுடைப் படத்தினுங் காட்டில் அவன் நெஞ்சம் கொடிதானது என்பாள், கனியா நெஞ்சத் தானும் என்கின்றனள் எனவும் கொள்க.' நோய்க்கு நஞ்சு மருந்தாமாறு போல, நோய்ப்பட்ட அவளுக்கு. அவன் நெஞ்சு மருந்தாகும் என்றதுமாம்.

நினக்குச் சால்பாவது, வினை கருதிச் சென்ற நம் காதலர் இருக்குமிடத்தும் சென்று முழக்கினையாய், 'நீர் தான். மீள்வதற்குக் குறித்த பருவம் வந்தது காண்பீர்' என்று அவர்க்கு அறிவுறுத்தலேயாகும்' என்றதுமாம்.

. 88

குற்றியகாத

நற்றிணை தெளிவுரை

239. இவ்வூர் என்னாகுமோ?

பாடியவர்: குன்றியனார். திணை: நெய்தல். துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து.வி) களவொழுக்கத்துத் தலைமகன் ஓர்புறத்தே வந்து மறைந்திருப்பதை அறிந்த தோழி, தலைவியை விரைய வரைந்து வருதற்கு அவனைத் தூண்டக் கருதிய வளாய்த், தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்

னிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தல் புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி

முயங்கெனக் கவிழ்ந்த இவ்வூர்

எற்றா வதுகொல், யாம் மற்றொன்று செயினே?

5

10

தெளிவுரை: மேலைத்திசையிலே சாய்ந்து வீழ்கின் ஞாயிறானது, மேலை மலைக்குப் பின்னாகச் சென்று மறைய வும், இருள்மயங்கிய மாலைப்பொழுதிலே, கள்ளைக் குடித்த தனாலே மயக்கங் கொண்டவரான பரதவர்கள், பகற் போதிலே வருத்தமின்றிப் பெற்ற பெரிய மீன்களை எளிய விலைகட்கே விற்று விடுவர். ஞெண்டுகள் விளையாடியபடி யிருக்கும் புலவு நாற்றத்தையுடைய மணல்பரந்த முன்றில் களைக் கொண்டதும், காண்பார்க்கு விருப்பந்தருவதுமான சிறு குடியின் கண்ணே, செல்வதற்குரிய ஒழுங்குபட்ட வழி யினிடத்தே, அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பி வைத்தாற்போலே நெய்தல் மலர்களின் புறவிதழ்களால மூடப்பெற்ற பூக்கள் கெடும்படி மிதித்தபடியே, தத்தம் இல்லங்களை நோக்கியும் அவர் செல்வர். வளப்பத்தையுடைய கரிய கழிபொருந்திய நீர்மலிந்த அத்தகைய நெய்தல் நிலக் தலைவனுக்கு, யாமும் மனமொத்தவராய் இருந்தேமாய், நற்றிணை தெளிவுரை

89

அவனிட்ட தொழில்களைக் கேட்டுச் செய்து வந்தேமும் இல்லை. அங்ஙனமாகவும், 'முன்னங் கையிடத்தேயுள்ள நெடிய கோற்றொழில் அமைந்த ஒளிகொண்ட வளைகள் உடையும்படியாக, அவனை வளைத்து அணைத்தனையாய்த் தழுவுவாயாக' என்று கூறிக் கலங்கியழுகின்ற இவ்வூரவர் தாம், யாம் அவனுக்கு அமைய நடக்கவல்லதான போக்கு உடன்படுதலாகிய ஒன்றையும் செய்தனமாயின், என்ன பாடுபடுவரோ? அதனை யானும் அறியேனே! என்பதாம்.

சொற்பொருள்: ஞான்ற ஞாயிறு - சாய்ந்து போகின்ற ஞாயிறானது. குடமலை- மேலைத் திசைக்கண் உள்ள மலை. மான்ற மாலை - மயக்கந்தருகின்ற மாலை. மாறி-விலைமாறி. முன்றில் - முற்றம். காமர் சிறுகுடி -காண்பவர் விரும்பும் அழகிய சிறிய குடியிருப்பு. பூத்தப-பூக்கள் அழிய. வார்கோல் எல்வளை - நெடிய கோற்றொழிலையுடைய ஒளியுள்ள வளையல்கள் வாங்கி - வளைத்து. முயங்கு தழுவு வாயாக. கலுழ்ந்த - கலங்கிப் புலம்பிய.

.

-

விளக்கம் : இனிது பெறு பெருமீனைப் பரதவர் தம் கள்ளுண்ட மயக்கத்தாலே எளிய விலைக்கு மாறிவிட்டனர். என்று அறிக. வலிதே பெற்ற மீனாயின் அவ்வாறு விற்பா ரல்லர் என்பதும் விளங்கும்.

'இல்லறம் கொண்டு தலைவற்குத் தொண்டு செய்யும் பயனைப் பெற்றேமில்லையே' என்று வருந்துவாள், 'தொழில் கேட்டன்றோ இலமே' என்றனள். அவனோடு கூட்டம் உண்மையை ஊரவர் அறிந்தனர் என்பாள், 'வாங்கி முயங்கு என இவ்வூர் கலுழ்ந்தது' என்றனள். இதனால், 'இனி இறந்து படுதலேயன்றி வேறு வழி யாதும் காணோம்' என்று புலம்புவாள், அதனால் அவனுக்குப் 'பழி எய்தும்' எனவும் கவலையுறுகின்றனள்.

.

உள்ளுறை :'இனிதிற் பெற்ற பெருமீனை எளிதில் மாறிக் குடித்து மயங்கினரான பரதவர், நெறியிலுள்ள நீலமலரை மிதித்தவாறு வீடு நோக்கிச் செல்வர்' என்றனள். இவ் வாறே காம மயக்கங் கொண்டானாகிய காதலனும் அரிய பொருளைத் தமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து, ஊரார் எடுத்துரைத்த அலரினைத் தாழ மிதித்து அடக்கித் தன்னூர்க்கு அவளைக் கொண்டு செல்வானாகுக என்றதாம்.

இதனைக் கேட்டலுறும் தலைவனும், விரைவில் வரைந்து வருதலையே கருதுவானாவன் என்பதாம்.

நற்.- 6 90

BRuNgmis நற்றிணை தெளிவுரை

240. கணிச்சியிற் குழித்த கூவல்!

.

பாடியவர்: நப்பாலத்தனார். திணை: பாலை. துறை: (1) பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; (2) நெஞ்சி னால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.

[து.வி) (1) பிரிவுத் துயரின் வெம்மைக்கு ஆற்றா ளாகிய தலைவி, தலைவன் கடந்து செல்லும் வழியின் வெம்மை யையும் நினைத்தவளாக, அவன் வன்னெஞ்சைக் குறித்துப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது. (2) பொருளின்பால் தன் உள்ளம் பெரிதும் செல்லலைக் கண்டு, தலைவியைப் பிரியவும் மனமற்ற தன்மையையும் நினைந்து, இருபாலும் ஊசலாடிய உள்ளத்தானாகிய ஒரு தலைவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

ஐதே கம்மவிவ் வுலகுபடைத் தோனே, வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள்! கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகம் துயிலிடைப் படூஉம் தன்மைய தாயினும் வெயில்வெய் துற்ற பரலவல் ஒதுக்கில்

கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இனநிரை வெளவும்

கானந் திண்ணிய மலைபோன் றிசினே!

5

10

தெளிவுரை: கூர்மையோடே அழகும் ஒளியும் அமைந்த பற்களையும், ஒளிகொண்ட நெற்றியையும் உடையவளான இளமகளே! கைகளாலே அணைத்தபடியே முயங்கிக் கிடப் போம். அம் முயக்கமானது மெய்யோடு மெய்ப்பொருந்தக் கிடப்பது. அதனிடைச் சிறுபொழுது தழுவலை நீக்கி அவர் சற்றே ஒதுங்கிப் படுப்பார். அதற்கே பொறாமல், ஏங்கு கின்ற சுடுமூச்சோடு விளங்கும், பருத்த கொங்கைகளைக் கொண்டதான என் மார்பகம்! அதுதான், அவரையின்றித் தனித்துக் கிடந்து துயில்கின்றதான கொடுமையையும் பொறுக்குமோ! அதுதான் அத் தன்மைப்பட வருந்துவ தாயினும், நற்றிணை தெளிவுரை

91

வெயிலின் வெம்மையாலே கொதிப்புற்ற பரற்கற்களை யுடைய பள்ளங்களிலே, ஒருபக்கமாகக் கணிச்சியாலே குழிதோண்டிக் கிணறாக்கியுள்ள இடத்தைப், இடத்தைப், பசுநிறை மேய்க்கும் ஆயர்கள் சென்று அடைவர். அதனிடத்தே நீரைக் காணாராகி, மேலும் பள்ளந் தோண்டி, அதனிடத்தே ஊறிவரும் நீரைக் குடித்தும் ஆனிரைக்கு ஊட்டியும் விடாய் தீர்ப்பர். அத்தகைய பத்தலையும், எங்கும் நீரைக் காணாத வான யானைக்கூட்டங்கள் வரிசையாகச் சென்று கவர்ந்து கொள்ளும். கானத்தின் தன்மையும் அது விளங்கும். மலை யிடத்திலுள்ள திண்ணிய மலையைப்போல நிலையான தன்மையாக ருக்கின்றது என்பர். அதுதான் அதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. நம் தலைவர் செல்லும் வழியை அப்படிக் கொடுவெம்மையோடும் படைத்த கொடியவன். தானும் அதனிடத்தே பையச்சென்று துன்புற்று நலிவானாக!

-

சொற்பொருள்: ஐதுஏகு பையச் செல்லுசு. கைகவர் முயக்கம் - இருவர் கைகளும் மாறிப் பிறர் உடலைத் தழுவிய படி கிடக்கின்ற முயக்கம். திருகி-மாறுபட்டு; புரண்டு படுத்து என்க. பரல்-பரற்கற்கள். அவல் -பள்ளம். கணிச்சி - குந்தாலி; பாறைப் பகுதியை உடைக்கும் வலிய இருப் பாயுதம்.கூவல் - குழி. பத்தல் -அதிற் செய்த பள்ளம்; பட்டை யால் முகந்து கொள்ளற்கு ஏற்றபடி தோண்டப்படுதலின் 'பத்தல்' என்றனர். பள்ளத்தே நீர் இருக்கலாம்; அஃதின்றி வறண்டது; அதன்பால் குந்தாலியால் குழித்துக் கிணறு போலத் தோண்டியிருந்தனர்; அதுவும் வறண்டது; அதன் நடுவில் மீளவும் தோண்டி, அதன்கண் எழுந்த சிறு ஊறலை ஆயர் உண்டனர்; அவர் தோண்டிய அப் பத்தல் தானும் இதுபோது யானை இனநிரைகளால் கவரப்பட்டன. அதுவும் இனி இல்லை என்பதாம்.

விளக்கம்: என்னாலே துய்த்து இன்புறுவதற்கு ஏதுவாகிய அவரது மெய்தானும், நீரற்ற அந்த நெடுவழியிலே வாடி நலனிழந்து போவதுபோலும் என்று வேதனைப்படுகின்ற தலைவியானவள், இந்த உலகத்தைப் படைத்தவன் அந்த வழியிடை மெல்லமெல்லச் சென்று தானும் அந்தத் துயரை அநுபவிப்பானாக என்று சபிக்கின்றாள். அவளது பிரிவுப் பெருந்துயரத்தின் வெம்மை இதனாலே நன்கு விளங்கும். கோவலர் இவ்வாறு பத்தல் தோண்டுவது வழக்கம் என் பதனை, 'பநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடுகளிக் சோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு 92

நற்றிணை தெளிவுரை

சிறுகுழி' எனவரும் அகநானூற்றுச் செய்யுட்பகுதியாலும் அறியலாம் (அகம் 155). 'கானம்' திண்ணிய மலைபோன் றிசினே' என்பதற்கு, 'முல்லை நிலத்ததாகிய அப் பாலை தானும் மலைபோலத் திண்மைபெற்றுப் போயிற்று' எனவும், யானை இன நிரை வந்து வெளவுதலால் அது குன்றுகளை யுடைய மலைப்பகுதி போலத் தோன்றலுறும் எனவும் கொள்ளலாம்.

றைச்சி : 'ஆனிரை உண்பிக்க வேண்டிக் கோவலர் கூவலருகே பறித்த பத்தலிலே நிரம்பியிருந்த நீரையும் யானை யினம் கவர்ந்து உண்ணா நிற்கும்' என்றனள். அவ்வாறே தலைவனாலே துய்த்தற்கு உரியதான என் நலனையும் பசலை யானது கவர்ந்துண்ணும் என்றனளாம்.

மெய்ப்பாடு, அழுகை; பயன், அயாவுயிர்த்தல். இனி, பொருள் இரண்டாவதாகக் கூறப்பட்ட, 'நெஞ்சினால் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது' என்னும் துறைக்கு ஏற்பப் பின்வருமாறு பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும்.

"நெஞ்சமே! இக் குறுமகளை முயங்கித் துய்த்துப் பெறு கின்றதான இன்பத்தினை வேண்டாவென வெறுத்து நீக்குத லாலே, இவள்தான் துயிலைப் பெறாதாளாக வருந்தித் துன் புற்று நலிவாளாயிலும், யான் செல்லுதற்குரிய கானமோ வெம்மை மிக்கதாய், மலைபோலும் பேரச்சத்தைத் தரு கின்றதே! அதனைப் படைத்தவன், தானும் மெத்தென அத னிடைச் சென்று நலிவானாக" என்று தலைமகன் கூறியதாக உரைத்துக் கொள்ளல் வேண்டும்.

யான் துய்த்தற்குரிய அவளது எழில் நலத்தினை அப் போது பசலையானது என்று உண்டு ஒழித்துவிடும்' சொன்னதாக, இறைச்சிப் பொருளும் அதற்கேற்பக்

கொள்க.

இதன் பயன், தலைவன் பிரிவைக் கைவிட்டு இல்லத் திலேயே தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்; இதனால் அவள் மனத் துயரம் அகலும் என்பதும் கொள்க.

+ A.

can't

நற்றிணை தெளிவுரை

மதுரைப் பெருமசதாைர்

241. எல்லை போகிய பொழுது!

93

பாடியவர் : மதுரைப் பெருமருதனார். திணை: பாலை. துறை: தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

[(து.வி.) தலைமகனின் பிரிவினாலே துயரமுற்று வருந்தி நலனழிந்தாள் தலைவி. அவளைத் தேற்றக் கருதிய தோழி, 'நீ வலிதிற் பொறுத்திருப்பாய்; அவர் விரைய வருவார்' எனக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைமகள் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உள்ளார் கொல்லோ தோழி கொடுஞ்சிறை புள்ளடி பொறித்த வரியுடைத் தலைய நீரழி மருங்கின் ஈரயிர் தோன்ற

வளரா வாடை உளர்புநனி தீண்டலின் வேழ வெண்பூ விரிவன பலவுடன். வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல்லுறப் பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் பல்லிதழ் உண்கண் கலுழ

நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.

5

сл

10

தெளிவுரை: தோழி! நீர் வற்றிய இடங்கள்தோறும், வளைந்த சிறையையுடையவான பறவைகளின் உள்ளங்காற் சுவடுகள் படிந்து வரிகளை மேலே கொண்டுள்ள இடங் களாகத் தோன்றும். அத் தடங்களின் மேலாகக் குளிர்ந்த நுண்மணல் படிந்து தோன்றுமாறு மெல்லென வாடைக் காற்று வீசியபடி இருக்கும். அதுதான் மிகுதியாகத் தீண்டு தலினாலே வேழக்கரும்பினது வெளிய பூக்கள் பலவும் ஒரு சேர இதழ்விரிந்து, வேந்தருக்கு வீசப்படுகின்ற கவரியைப் போலத் தோன்றியபடி, அழகிய புதல்தோறும் அழகு செய்த படி இருக்கும். மேகங்கள் கலைந்து போகின்றதான வானத் திடத்தே ஞாயிறானது மறைந்தும் வெளிப்பட்டும் மாறி மாறிக் காணப்பட்டு விழித்தும் மூடியும் இமைப்பதுபோல விளங்கும். இத்தகைய பகற்காலமானதும் கழிந்ததாய் இரவுப்பொழுதும் வந்து சேர்ந்தது. "இதன்கண், பனி பெய் தலைத் தொடங்கிய வருத்தம் மிகுகின்ற நடுயாமப் பொழு

க் 94

நற்றிணை தெளிவுரை

திலே பல இதழ்களையுடைய பூவைப்போலும் மையுண்ட எம் கண்கள் நீரினைச் சொரியும். நிலைபேறில்லாத பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பினாலே நம்மைப் பிரிந்து சென்றோர் நம் காதலர். அவர்தாம் நம்மைப்பற்றி நினைக்கவே மாட்டாரோ?

தன்மை

சொற்பொருள்: கொடுஞ் சிறை - வளைந்த யுடைய சிறை; சிறை - இறக்கை. 'அளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை' என்பது குறுந்தொகை (92). வரி-வரிகள்; 'புள்ளடி பொறித்த வரி' என்றது, நீர் வற்றியபோது, மீன் பற்றுதற் பொருட்டுக் குருகுகள் நடந்து சென்ற சுவடு பதிந்த சேரானது, காய்ந்ததும் கோடு கோடாய்க் கோல மிட்டாற்போலத் தோன்றும் என்றதாம். தலை - இடம். ஈரயிர்-குளிர்ந்த நுண்மணல். உளர்பு - வீசியபடி. வேழம்- வேழக் கரும்பு. மழை மேகம். பையுள்-வருத்தம். 'பொருட் பிணி' பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பு: பொருட் காதலாகிய நோய் எனினும் ஆம்.

விளக்கம்: உடனுறைந்து இன்புறுதற்குத் தலைவனும் தலைவியுமாகிய இருவரும் பெரிது விருப்புறுங்காலம் நடுக்கந் தரும் வாடைக்காலம். ஆதலினால், அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறினாள். 'வேழம்' கொறுக்கச்சி எனவும் வேழக் கரும்பு எனவும் சொல்லப்படும். நிலையில்லாத பொருளின் மேற்கொண்ட பிணிப்பாலே, நிலைபேறான இன்பத்தைக் கைவிட்டாராய் அகன்று போயினவர் அவர். இதனாலே அவர் அறநெறிப்பட ஒழுகலை மறந்தார்; நமக்கும் இனி அருள்வாரல்லர் என்று கூறி வாடி வருந்துகின்றாள் தலைவி.

மேகத்திரள்களுக்கு இடையே தோன்றியும் மறைந்தும் காணப்படுகின்ற ஞாயிற்றைப்போல, அவரும் நமக்கு அணி செய்தும் பிரிந்து நலியச்செய்தும் வருத்துகின்றவரேயல்லா மல், நிலையான இன்பத்திற்கு உரியவராக விளங்குவாரல்லர் எனக் கூறி நொந்ததாம்.

இதனைக் கேட்கின்றவன், மேலும் காலம் தாழ்க்கா தானாய், அவளை மணந்து கொள்ளும் முயற்சிகளை மேற் கொள்வான் என்பதாம். நற்றிணை தெளிவுரை

தல்வண்

பாகன்

242. கார் தொடங்கின்றே!

95

பாடியவர்: (விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்.) திணை : முல்லை. துறை :-- வினைமுற்றி - மறுத்தராநின்றி தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.

[(து. வி.) வினைமுடித்து மீள்கின்ற தலைவன், தலைமகள் பாற் கொண்டுள்ள காதன்மை மேலெழ, விரையத் தேரைச் செலுத்துமாறு தன் பாகனுக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.)

இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்

புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து செல்க பாகநின் தெரே! உவக்காண் கழிப்பெயர் களரில் போகிய மடமான்

விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக்

காமர் நெஞ்சமொடு அகலாத்

தேடூஉ நின்ற இரலை ஏறே!

5

10

தெளிவுரை : பாகனே! இலையுதிர்ந்திருந்த பிடாமரங் கள் எல்லாம் குளிர்ந்த மலர்களைத் தருகின்ற அரும்புகளை முகிழ்த்தன. புதர்மேல் ஏறிப் படர்கின்ற முல்லைக் கொடி யில் பூக்கள் மலர்ந்தன. கொன்றைகள் பொற்காசுகளைப் போன்ற பூக்களைப் பூத்தன. நீலமணியின் நிறத்தைப் போன்ற பலவாய் மலர்களை யுடையவாய்க் காயாவின் குறுகியவான கிளைகள் விளக்கம் பெற்றன. காலைப் பொழு திலேயே மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர் நிலத்திலே போகிய இளைய பிணைமானானது, மருண்டு ழித்தலையுடைய கண்களைக் கொண்ட தன் குட்டியின் பின்னே, தன் இனமாகிய ஏனைய மான் கூட்டத்தினின்றும் நீங்கி வேறிடத்தை நோக்கி ஓடிப் போகின்றது. அப் பிணையின்மீது விருப்பமிக்க நெஞ்சத் தோடு, தானும் இனத்தினின்றும் நீங்கிச் சென்றதாய், அதனைத் தேடியபடி நிற்கின்ற ஆண்மானையும் உவ்விடத்துக் காண்பாயாக! ஆதலின், நின் தேர்தானும் மிக விரைந்து செல்வதாக! 96

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள் : பிடவம்-பிடாமரம்.

-

"

ஈர்மை

குளிர்ச்சி. தளவம் - முல்லை. மணி - நீலமணி.காயா-காயா மரம். கஞல - விளங்கித் தோன்ற; பூவும் தளிருமாக அழகுடன் தோன்ற. காலை பொழுது; காலைப் பொழுதும் ஆம். வல்விரைந்து - மிக விரைந்து. கழி உப்பங்கழியின் நீர்; களர்பட்ட நிலப்பகுதி. மடமான் இளமான்; என்றது பிணையினை. காமர்-விருப்பம். இரலை ஏறு -ஆண்மான். பேதை -குலத்தொழில் அறியாத சிறு குட்டி.

விளக்கம்: 'இலையில் பிடவம்' என்றது, கோடையில் இலையுதிர்த்து நின்ற பிடவினது பழைய தன்மையை; அது தான் ஈர்மலர் அரும்பின என்றான், அவ்வாறே வாடியிருக் கும் தலைவியும் புதுப்பொலிவு பெறுதலை நினைக்கின்றான். புதலிவர் தளவம் பூங்கொடி அவிழ்தலைக் காண்கின்றான், அவள் தன்னைத் தழுவிப் பெறுகின்ற மகிழ்வைக் கருது கின்றான். பொன்னென மலர்ந்த கொன்றை காண்பான் அவள் பொன்மேனியையும், காயாவின் கருநீல மலரைக் காண்பாள் அவள் கூந்தலையும் எண்ணுகின்றான் என்று கொள்க.

பேதைமையால் இனத்தினின்றும் பிரிந்து சென்ற தன் சிறுகுட்டியோடு சென்ற பிணையைத் தேடி நிற்கும் இரலை ஏற்றைக் காட்டினான், தானும் புதல்வனோடு வருந்திய படியிருந்து, பிறர்போல இன்புற்றிராது ஒதுங்கி நிற்கும் தன் தலைவியை விரையச்சென்று சேர்தலை விரும்புகின்றான்.

'களர் நிலம்' என்றது, அதன் செடி கொடியற்ற தன் மையைக் காட்டுதற்கு; அதன்கண் மான்குட்டி ஓடியது பேதைமையால் என்க; இதனைக் கேட்டலும் பாகனும் தேரை விரையச் செலுத்துவானாவன் என்பது இதனைக் கூறியதனால் விளையும் பயன் ஆகும்.

243. அறத்தினும் பொருள் அரியது!)

பாடியவர்:

காமக்கணி நப்பசலையார் திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவனின் பிரிவிடையே மெலிந்த தலைவி யானவள், அறமும் பொருளுமாகிய வாழ்க்கைக்கு உறுதிப் பொருள்கள் பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டு நோகின்றது போல அமைந்த செய்யுள் இது.) நற்றிணை தெளிவுரை

தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய துறுகல் அயல தூமணல் அடைகரை அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப் பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய்யுற இருந்து மேவர நுவல இன்னா தாகிய காலைப் பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே!

97

5

10

தெளிவுரை : தேன் உண்டாகின் டத்தே தெளிவான நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக் கற்பாறை; உண்டாகின்ற பக்கமலை; அதனி அந்தப் பாறைக்கு அயலதாகத் தூய மணல் பரந்து கிடக் கும் அடைகரை; அதனிடத்தே, அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துள்ள நறிய மாமரங்கள் மிகுந்த சோலை; அந்தச் சோலையின் கண்ணுள்ள மரங்களின் இலைச்செறிவு கொண்ட பகுதிகள் தோறும் அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை, 'சூதாட்டக், காயானது உருண்டு போவது போன்றதான நிலையில்லாத வாழ்க்கை இது; இதனை முன்னிட்டுப் பொருளாசையாலே நும் துணையா வாரைப் பிரிந்து போகாதிருத்தலைப் பேணுவீராக; நீர்தாம் அறிவு உடையீர்!' எனப் பிரிவுத் துயரத்தாலே செயலறும் படியாகக் கைவிட்டுப் போக உரைத்து, அவர் போக்கை விலக்குவதுபோலக் கூவாநிற்கும். நினைப்பார்க்குக் கடிந்து 'மெய்யொடு மெய்யானது பொருந்துமாறு தன் பெடை யுடன் கூடியிருந்தபடியாக, நம் உள்ளத்தேயும் விருப்ப முண்டாகக் கூவாநிற்கும். நமக்குத் துன்பந் தருவதாகிய இக் காலத்தினும் (இளவேனிற் றித்துத் தம் மனைவியரைப் பிரிதல் ஆடவர்க்கு இயல் காலத்தினும்) பொருள் பென்று கூறப்படுமானால், அறத்தைக் காட்டிலும் பொருள் தான் பெரிதும் அருமையுடையது போலும்!

சொற்பொருள்: தேம்படு சிலம்பு - தேன் கூடுகள் பல வற்றையுடைய பக்கமலை. தெள்ளறல் - தெளிந்த நீர். துறுகல் - வட்டக்கல். அலங்கு சினை - அசையும் கிளை. பொதும்பு - இலைச் செறிவு, பூங்கண் - அழகிய கண்; சிவந்த

! 98

கண்ணும் ஆம். தலின், சூதினை (குறள். 933).

உண்டாக.

நற்றிணை தெளிவுரை

கவறு-சூதாடு காய்; இஃது உருண்டோடு உருளாயம் என்று குறளினும் உரைப்பர் கையற - செயலற. மேவர-வி

ரு ப்பம்

அயல்

விளக்கம் தெள்ளறல் தழீஇய துறுகல் தூமணல் அடை கரையாவது, மலையிடத்துச் சுனையைச் சார்ந்த அடைகரை என்க. மழைநீர் சுனையை நோக்கி ஓடி வந்து வந்து தூயமணல் அப்பகுதியிற் செறிந்திருக்கும் என்பதாம். 'ஊடினீர் எல்லாரும் உருவிலான் தன்னாணை, கூடுமின் என்று குயில் சாற்ற' எனப் பிறரும் குயிற்குரலுக்கு இவ்வாறு பொருள் கொள்வர். 'அகறல் ஓம்புமின் அறிவு போதலைச் செய்பவர் டையீர்' என்றலின் அகன்று

அறிவிலர் என்பதும் பெற வைத்தனர்.

‘மேவர நுவல' என்பது கூடியிருப்பார்க்கு அக் குரல் தான் பெரிதும் இன்பந் தருதலின், அவர் விரும்பும்படி யாகக் கூவி என்றும் பொருள் கொள்ளப்படும். 'இன்னா வாகிய காலை' என்றது 'பிரிதற்கு உரியதல்லாத காலத்தினை. 'அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே' என்று ஆடவரைக் குறித்துக் கூறியது, அது பெண்டிர்க்கு என்றும் இயல் பாகாது என்பதனாலுமாம்.

பிரிவிடத்தும் அவனை நோவாமல், ஆடவரது இயல் பைக் குறித்தே மனம் வெதும்பும் தலைவியது உள்ளச் செவ்வியை எண்ணி உணர்ந்து இன்புறல் வேண்டும். 244. மாதர் வண்டின் தீங்குரல்!

பாடியவர் ! கூற்றங் குமரனார். திணை : குறிஞ்சி. துறை: அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது. [(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்துறைந்த காலத் திலே, தலைவியின் நலங்கெடக் கண்ட தோழி, 'இனி நமரா வார்க்கு உண்மை அறிவுறுத்தி வரைவு எதிர் கொள்ளு விப்பன்' என்கின்றாள். அவளுக்குத் தலைவி தன் ஆற்றாமை தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ

5 நற்றிணை தெளிவுரை

துயர்மருங்கு அறியா அன்னைக்கு இந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யாய் ஆதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த செயலை 'அந்தளிர் அன்னவென்

மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.

99

10

தெளிவுரை : தோழீ! மணிகள் நிரம்பக் கிடந்து ஒளி யெறிக்கின்ற நெடிதான மலைப்பக்கத்தே, அழகுண்டாக உயர்ந்து நிற்கும் அசோகினது செவ்விய தளிரைப் போன்ற தாகிய என் நல்ல மேனியினது அழகானது முற்றவும் கெடும் படியாகச் செய்த, வலியிழந்த என் மாமைநிற மெய்யிற் படர்ந்துள்ள இப்பசலை நோயினை நீயும் கண்டனை. கண்டும்,

மழை பெய்தமையாலே பெரிதும் குளிர்ந்து போயுள்ள மலைச்சாரற் பகுதிகளிலே, கூதிர்க்காலத்தே பூப்பதாகிய கூதளத்தின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியபடி இருக்கும். அப் பூக்களின்பால் மொய்க்கின்ற அழகிய வண்டுகளின் இனிதான இசைக்குரலை, மணம் வீசும் பக்கமலையிடத்தே யுள்ள அசுணமாவானது, யாழோசையென மயங்கிக் கேட்ட படியும் இருக்கும். அத்தகைய உயர்மலை நாடனுக்கு, 'இந் நோய் தீர்தற்கான வழிதான் இது' வெனச் சொல்லுதலான ஒன்றையோ, அல்லது,

'நாம் படுகின்ற துயருக்குரியதான காரணந்தான் இது'வென அறியாதாளான அன்னைக்கு. இந்நோய் தணியும் வழிதான் இது' என உரைத்து, அறத்தொடு நிற்ற லான ஒன்றையோ, நீதான் செய்கின்றாய் அல்லை! ஆதலின் நீதான் கொடியை யாவாய் காண்!

சொற்பொருள் : கூதிர் - கூதிர்காலம். கூதளம் - கூதாளி எனப்படும் கொடியினம். அலரி - அலர்ந்த பூக்கள். மாதர் அழகிய. நயவரும் - விருப்பம் வரச் செய்யும். தீங்குரல் இனிதான இசைக்குரல். அசுணம் - அசுணமா; புள் எனவும் கொள்வர். மணி - நீலமணி.செயலை - அசோகு.மதன் வலி. மாமெய்- மாமைக் கவின் கொண்ட மெய்.

வாய

விளக்கம்: 'மணம் நாறு சிலம்பு' என்றது, வேறு பல பூக்களின் மணத்தோடுங் கூடியதாக மண்ணின் குளிர்ந்த மணமும் கலந்து மணப்பதைக் குறித்ததாம்.

-

. 100

நற்றிணை தெளிவுரை

இனியை

செய்யாய்; ஆதலிற் கொடியை' என்றது, செய்யின் எனக்கு என எதிர்மறைப் பொருள்படக் கூறியதாகக் கொள்வதுமாம்.'உயர் மலை நாடன்' என்றது, நீ அவன் பாற் குறையைக் கூறின், விரைந்து குறைமுடிக்கும் உயர் பண்பினன் அவன் என்றதும் ஆம்.

அன்னை வெறியயர்தல் குறிகேட்டல் முதலாயின செய் தற்கண் ஈடுபட்டுக் கவலையுறல் கண்டும், அதனைத் தடுக்கு மாற்றால், 'நாடனது மார்பு செய்த இந்நோய்க்கு மருந்து அவனே' எனக் கூறி அறத்தோடு நில்லாமையை நினைவாள், அதுதானும் செய்திலை என்றனள். இதன் பயன், தோழி அறத்தோடு நிற்றலைச் செய்ய முற்படுவாள் என்பதாம்.

உள்ளுறை: கூதாளியிலே மொய்த்து இசைக்கும் வண்டின் குரலை யாழிசைபோலும் என மயங்கும் அசுணமாப் போலே, தலைவன் நலனுண்டு துறத்தலாலே வேறுபட்டு விட்ட என் நோயை முருகு அணங்கியது போலும் என அன்னையும் பிறழ உணர்ந்தனள் என்பதாம்.

மேற்கோள்: (1). 'அறத்தோடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப' என்னும் தொல்காப் பியச் சூத்திர (203) உரைக்கண், இச் செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது தலைவி அறத்தொடு நிற்குமாறு' என்பர் இளம்

பூரணர்.

(2) 'உயிரினும் சிறந்தன்று நாணே' என்னும் சூத்திர உரைக்கண் (113) இதனை எடுத்துக் காட்டி,இஃது அறத் தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது' என்பர் நச்சினார்க்கினியர்.

245. சுரும்பிமிர் சுடர் நுதல்!

பாடியவர்: அல்லங்கீரனார்; அள்ளங் கீரனார் எனவும் பாடம். திணை : நெய்தல். துறை: குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.

[(து - வி.) தலைமகனுக்காகக் குறைமுடிக்க இசைந்த தோழி, தலைவியிடம் வந்து, அவள் கருத்தை வயப்படுத்தக் கருதியவளாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது. சொல்லாடலின் நுட்பம் அமைந்துள்ளமை காண்க! நற்றிணை தெளிவுரை

நகையா கின்றே தோழி தகைய

அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் துணிநீர்ப் பௌவந் துணையோடு ஆடி ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் தெளிதீங் கிளவி யாரை யோவென் அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப் பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான்நம் அணங்குதல் அறியான் நம்மில் தான்அணங் குற்றமை கூறிக் கானல் சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப்

பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுநின் றதுவே.

101

5

сл

10

தெளிவுரை : தோழீ! "அழகு மிகுதியான மலர்களை யுடைய கழிமுள்ளியினின்றும் ஆய்ந்தெடுத்த மலர்களாலே தொடுத்த பூமாலையினை, நீலமணி போன்ற கூந்தலினிடத்தே வண்டுகள் வந்து மொய்க்கும்படியாகச் சூடிக்கொண்டனை! தெளிந்த நீரையுடையதான கடலிடத்தே தோழியரோடும் சென்று விளையாடினை! நேரிதாய் நுணுகிய இடையினையும், அகன்ற அல்குல் தடத்தையும், தெளிந்த இனிய சொல்லையும் உடையாளே! அரிதாகச் சேர்ந்திருக்கின்ற எனது இனிய உயிரைக் கவர்ந்த நீதான் யாவளோ?' என்று அவன் வினவினான். பூண்கள் மிகுதியான நெடுந்தேரிற் பூட்டிய குதிரைகளின் வாரைக் கையிலே தாங்கியபடியே நின்றான். தான் நம் மனத்தைக் கவர்ந்தானாய், நம்மை வருந்தச் செய்ததனை அறியாதவனாய், நம்மாலே தான் வருத்த முற்றமை மட்டுமே எடுத்துக் கூறினான். கானற் சோலைக் கண்ணே. வண்டுகள் மொய்த்த ஒளிகொண்ட நம் நெற்றியை நோக்கியவாறே, பெரிய கடல்நிலத் தலைவனான அவன், நம்மைத் தொழுதும் நின்றான். இதுதான் நகை யுடையதாய் இராநின்றது காண்!

தகுதியாவது

சொற்பொருள்: தகைய தகுதியுடைய; கொய்து சூடுதற்கான தகைமை; அழகுற இதழ் விரிந்திருத் தலும் ஆம். முண்டகம் - கழிமுள்ளி. மணி - நீலமணி. தைஇ - ஒப்பனை செய்து. துணிநீர்- தெளிந்த நீர்; அலை மிகுதியற்றி ருக்கும் கடல்நீர். 'துணை' என்றது தோழியரை ஒழுகு நுண் இடை - நேரிதாய் நுணுகிய இடை. தெளிதீம் கிளவி. 102

நற்றிணை தெளிவுரை

தெளிந்த இனிய பேச்சு. 'அது புணர் இன்னுயிர்' என்றது, உயிரின் சிறப்புப்பற்றி; அது கழியின் மீளக் கொணர்ந்து புணர்த்தல் ஏலாமையின் இப்படிக் கூறினாள். அதனைக் கவர்தல் மிகக் கொடுமை என்பாள் 'வௌவிய நீ' என்று பழி கூறினான். அணங்குதல் - தாக்கி வருத்துதல்.

விளக்கம்: தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னரே ஏற்பட்டிருந்த உறவினைத் தான் அறிந்தமை புலப்படத் தான் ஏதும் அறியாதாள் போலக்கொண்டு தோழி இப்படி உரைக்கின்றாள். கானற் சோலைக்கண் அவன் தொழுது நின்றமை கூறினாள், அவன் தலைவியைக் காண விரும்பியே அவ்விடத்துக் காத்து நின்றதனைத் தான் உணர்ந்ததனைக் கூறினாள். அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், தேர்ப்புரவி தாங்கி' என்றனள். அவன் காதன்மை மிகுதி கூறுவாள் தொழுது நின்றது' கூறினாள். தலைவியும் மயங்கியதைத் தான் உணர்ந்ததைக் கூறுவாள், தான் நம் அணங்குதல் அறியான்' என்றாள்.

அவனாலே

பெருங்கடற் சேர்ப்பன் இவ்வாறு நம்மைக் கண்டு வினாயதும், தொழுததும் நகையாடுதற்குரிய செயலல்லவோ என்று களிப்போடு கூறுகின்றாள். இவற்றால் தலைவிக்குத் தோன்றும் மெய்ப்பாடுகளை அறிந்து அவளைத் தலைவனோடு சேர்த்தல் இதன் பயனாகும்.

246. வருதும் என்ற பருவம்!

பாடியவர்: காப்பியஞ் சேந்தனார். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீ இயது.

[(து-வி.) பிரிந்துறை வாழ்விலே மெலிவுற்ற தலைமகளை நோக்கி, 'அவன் இன்னே வருகுவன்' என்று வலியுறுத்திக் கூறித் தெளிவிக்க முயலுகின்ற தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இது. பிரிவுத் துயரத்தின் மிகுதியாலே பெரிதும் நொந்து நலிவும் மெலிவும் அடைந்த தலைவியின் மனம் பெரிதும் சோர்ந்து போகின்றது. அவளுக்குக் கார்காலத்து வரவைக் காட்டியபடி தோழி இவ்வாறு தேறுதல் உரைப்பதாகக் கொள்க.] நற்றிணை தெளிவுரை

இடூஉ ஊ ங்கண் இனிய படூஉம்

நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் மனைமர நொச்சி மீமிசை மாச்சினை

வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச்

செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர், வரூவர் - வாழி தோழி - புறவில்

பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை யவிழ் இன்னிசை வானம் இரங்குமவர்

'வருதும்' என்ற பருவமோ இதுவே?

103

5

10

.

தெளிவுரை : வாழ்வாயாக தோழீ! நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம் பக்கத்தேயாய் அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது. மனையிடத்தே வேலியாக அமைந்துள்ள நொச்சிமரத்தின் மேலாக, உயரமாக வளர்ந்துள்ள மாமரத்துக் கிளையிலிருந்த படியே, இனிமையுண்டாகக் கூவுதலிலே தேர்ந்த கருங் குயிலும் தன் குரலினை எடுத்துக் கூவாநிற்கும். திட்பம் கொண்ட உள்ளத்தோடே பலவான சுரங்களையும் கடந்து சென்று, பொருளைச் செய்தலைக் குறித்து நம்மை விட்டுப் பிரிந்து போனவர் நம் தலைவர். ஆயினும், அவர் தாம் குறித்துச்சென்ற காலத்தைப் பொய்ப்பதிலர்; உறுதியாக வந்து சேர்வர். காட்டினிடத்தே நிற்கும் பொன்னிறப் பூக்களைக் கொண்டவரான கொன்றை மரங்களோடு, பிடா மரங்களும் அரும்பு முகிழ்த்து மலர்தலைச் செய்கின்றன. இனிதாக முழங்குதலையுடைய மேகமும் முழங்கா நிற்கும். அவர் 'வருவேம்' எனக் குறித்த பருவமும் இதுவேயாகும். அவர் இன்னே வருவர்காண்!

-

சொற்பொருள் : இடூஉ ஊங்கண் - குறிப்பிட்ட இடங்கள். இனிய படூஉம் - இனிய குறிகள் தோன்றும். பாங்கில் நம் பக்கமாக; நமக்கு ஆதரவாக. மனைமர நொச்சி - மனைக்கு வேலியாக அமைந்துள்ள நொச்சிமரம். மாச்சினை-மாமரக் வினைமாண் - தன்வினையிலே மாண்புடைய; அது இனிமை பயப்பக் குரலெடுத்துக் கூவுதலாகிய செயல். உரம் - உள்ளத் திண்மை; அது காதலியைப் பிரியத் துணிதலும், சுரநெறிக்கண் துணிவோடு சென்று கடத்தலு

கிளை. 104

நற்றிணை தெளிவுரை

மாகிய மனத்திட்பம். நீந்தி - முயற்சியோடு

கடந்து இனிதாக இது அவர்

சென்று. புறவு-காடு. இன்னிசை வானம் - முழங்கும் மேகம்; முழக்கம் இனிதாதல், வருவதாகக் குறித்த பருவத்தினது வரவை அறிவித்தலால்.

விளக்கம்: கட்டுக் காணுதலும், பல்லி சொல்லுக்குப் பலன் காணலும் பண்டைய வழக்கம் என்பது இச் செய்யுளால் அறியப்படும். 'மனைவயிற் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே' எனக் கலித்தொகையுள்ளும் (கலி 11) இவ் வழக்கம் கூறப்படும்' செய்தற்கு உரிய பொருளைச் செய் பொருள் என்று கூறினாள். 'அவர் தவறாதே வருவர்; நீயும் அதுவரை பொறுத்திருப்பாயாக' என்று தெரிவிக்கின்றாள் தோழி. இதனைக் கேட்கும் தலைவியும் தன் துயரத்தை ஆற்றியிருப்பாளாவள் என்பது இதன் பயனாக விளங்குவ

தாம்.

247. எஃகுறு பஞ்சின் எழிலி!

குறிஞ்சி துறை :

பாடியவர் : பரணர். திணை : 'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.

[ (து-வி.) வரைவிடை வைத்து வேந்துவினைமேற் பிரியக் கருதிய தலைவனை நெருங்கி, 'நின்னைப்

பிரியின் இவள்

மெலிவுற்று அழிவாள்' எனக் கூறி, 'விரைந்து வரைந்து கொள்க' எனத் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ

வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி

எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக்

கோடுயர் நெடுவரை ஆடும் நாட! நீ

5

நல்காய் ஆயினும் நயனில செய்யினும்

நின்வழிப் படூஉம்என் தோழி நன்னுதல்

இருந்திறை கூடிய பசலைக்கு

மருந்துபிறி தின்மைநன்கு அறிந்தனை சென்மே! நற்றிணை தெளிவுரை

.

105

தெளிவுரை : பழைமையுற வந்த வலிமையோடும் மாறுபாடும் மிக்கெழலாலே சினங்கொண்டு, புலியைக் கொன்ற களிற்றினது சிவந்த கோட்டினைக் கழுவுமாறு. இரவிலே வீழ்கின்ற மழையைப் பொழிந்தது, இனிய இடிக் குரலையுடைய மேகம். அதுதான், பிற்றைநாளின் வைகறைப் பொழுதிலே, இருப்பு வில்லாலே அடிக்கப்பட்டு நொய்ம்மை யாகிப்போன பஞ்சைப் போலவாகிப் பரந்து, உச்சியுயர்ந்த நடிதான மலைப்பக்கத்தே இயங்கியபடி யிருக்கும் நாட்டிற்கு உரியவனே! நீ இவளை வரைந்துகொண்டு இவளுக்கு அருளிச்செய்யாய் ஆயினும், நின் தலைமைக்குப் பொருந்தாத செயல்களையே செய்தாய் ஆயினும், நின் உள்ளஞ் சென்ற வழியே தான் நடக்கும் பண்பினள் என் தோழியாவாள். இவளுடைய நல்ல நெற்றியினிடத்தே நிலையாகத் தங்குதலை மேற்கொண்ட பசலை நோய்க்கு மருந்து நின்னையன்றிப் பிறிதொன்று யாதும் இல்லையா தலை நன்கு அறிந்தனையாகி, அதன்மேல் நீயும் நின் வினைமேற் செல்வாயாக!

சொற்பொருள்: தொன்றுபடு துப்பு-பழைமையுற வந்த வலிமை. முரண் -மாறுபாடு. பழைய வலிமையோடு வன்மை

முரணும் மிகுதியாகிச் சினமும் எழவே அதன் அளவிடற்கரிதாயிற்று என்பதாம். செங்கோடு-சிவந்த கோடு; சிவந்தது புலியின் குருதி படிந்ததால். எஃகு-பஞ்சு கொட்டும் இரும்புவில். வைகறை - விடியற்காலம்.கோடு- உச்சி.நயனில- தகுதிக்கு மாறுபட்டன; இது அடைந்தார்க்கு அருளாமையும், அவர்க்குத் தன்னாலே வருத்தம் தோன்றச் செய்தலும். இருந்து இறைகூடிய பசலை - நிலையாகத் தங்கி யிருந்து படர்ந்த பசலைநோய்; 'விருந்திரை' எனவும் பாடம்.

விளக்கம்: பெயல் நீங்கிய மேகங்கட்கு அடிக்கப்பட்டு நொய்தான பஞ்சை உவமையாகக் கூறினர். வரைவிடை வைத்துப் பிரியலுற்ற தலைமகனுக்குச் சொல்பவளாதலின் தான் தலைவிக்குத் தேறுதல் பலகூறித் தெளிவித்தமை தோன்ற, 'நிள் வழிப் படூஇம் என் தோழி' என்றனள்.

இதனால், அவன் சென்று வினைமுடித்து விரைந்து வந்து தலைவியை வரைந்து இல்லற வாழ்வில் இன்புறுத்தல் வேண் டும் என்பதாம். 'பசலைக்கு மருந்து பிறிதின்மை நன்கு அறிந்தனை சென்மே' என்றது, நின்னையன்றி இவளைக் காப்ப வர் பிறர் யாருமில்லை என்றதாம். இவள் நோய் பிறரால் அறியப்பட்டுப் பழியுரைக்கு ஏதுவாக, அதனால் இவள் உயிர் தரியாளாதலும் கூடும் என்றும் சொன்னதாம்.

நற்.7 106

நற்றிணை தெளிவுரை

இதனைக் கேட்டலுறுபவன், தலைவியை வரைந்து கொள்ளுதற்கே முதற்கண் முற்பட்டவனாகத் தான் வினை மேற் செல்லுதலையும் சிலகாலம் தள்ளிப்போடுபவனாவான் என்பதாம்.

உள்ளுறை : புலியைக் கொன்ற களிற்றின் கோட்டைக் கழுவும்படி இரவில் மழைபொழிந்த மேகம், வைகறையில் வரைமீது நொய்மையுற்ற பஞ்சினைப்போல் இயங்கும் என்றது, வேற்றரசை வெல்லுதல் குறித்த போரிலே நீ பட்ட புண்களை எல்லாம், இவள்தான் தன் தழுவுதலாலே போக்கி விட, நீயும் எளியையாய் இவளோடு கூடியவனாக இல்லி லேயே இருப்பவனாவாய் என்றதாம். இரவில் பெய்த கார் மேகம் வைகறையில் விளர்த்துப் போவதைப்போல, நின் னாலே தலையளி செய்யப்பெற்றுப் பூரிப்படைந்த இவள் மேனியின் எழில் நலம், வைகறையில் நீ அகலவும், கெட்டு வெளுத்துப் போதலும் நிகழும் என்றதுமாம்.

248. மயில்போல் மருள்வேனோ?

பாடியவர்: காசிபன் கீரனார். திணை முல்லை. துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.

[(து.வி.) கார்ப்பருவம் வந்தது; அவர்தாம் வந்தார் அல்லர் என்று வாடி நலனழிந்த தலைவிக்கு, 'இது உண்மை யான கார்காலத்தின் தொடக்கம் அன்று' எனத் தோழி கூறி, அவளைத் தெளிவிக்க முயல்வதுபோல் அமைந்த செய்யுள் இது.)

சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ

பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத் தண்புதல் அணிபெற மலர வண்பெயல் கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பின் மையிற் பண்பில பயிற்றும் பொய்யிடி யதிர்குரல் வாய்செத்து ஆலும் னமயில் மடக்கணம் போல

நினைமருள் வேனோ? வாழியர், மழையே!

5 நற்றிணை தெளிவுரை

107

தெளிவுரை : மேகமே! என் காதலர் வினைகருதி என்னைப் பிரிந்து சென்ற காலத்து, 'சிறு பூக்களையுடைய முல்லையின் தேன்மணம் கமழ்கின்ற பசிய மலர் எல்லாம், புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட நல்ல யானையின் புள்ளி பொருந்திய முகம்போலத் தோன்றியவாகத், தண்மையான புதர்கள் தோறும் அவை அழகுபெறுமாறு மலர்ந்திருக்கும், மிகுதி மான பெயலையுடைய கார்முகில் எழுதரும் பருவமே யான் வரும் பருவம்' என்றனர். அங்ஙனமாகவும், பெருந்துன்பத் தாலே எனது உள்ளம் இப்போது நடுங்குதலைக் காணும் பொருட்டாக, என்பால் நினக்கு அன்பு இல்லாமையாலே, பண்பினுக்கு இயல்பல்லாத நிலையிலே ஒலிக்கின்ற பொய் யான இடியது அதிரும் குரலினையும் மெய்யானதே எனக் கொண்டு ஆரவாரிக்கின்ற, இனஞ்சூழ்ந்த மயில்களினது அறிவில்லாத கூட்டத்தைப்போல, யானும் நினைக் கார்ப் பருவத்து மேகமாகக் கொண்டு மயங்குவேனோ? யான் மயங்கேன் கண்டாய்!

பசுவீ.

சொற்பொருள் : சிறுவீ - சிறியவான பூக்கள். பசுமையான புதுப் பூக்கள். பொறி - புள்ளி. வரி-கோடு. புகர் - புள்ளி. அஞர் - துன்பம். பண்பில - பண்பில்லாத் தன்மையோடும் கூடியதாக. வாய்-வாய்மை. ஆரவாரிக்கும். மடக்கணம் - அறிவற்ற கூட்டம்.

ஆலும்.

விளக்கம்: மழையை வாழ்த்தியது இகழ்ச்சிக் குறிப்பு. தன் தலைவன் பொய்யுரை புகலா வாய்மையன் ஆதலின், அவன் குறித்துச்சென்ற கார்ப்பருவத்தின் தோற்றத்தையே பொய்த் தோற்றம் என்று இகழ்கின்றாள் தலைவி. இதனைக் கேட்டுத் தோழி, தலைவன் உறுதி பொய்த்தான் எனக் கூற முற்பட்டவள், தலைவியின் கற்புச் செவ்வியை அறிந்து அதனைக் கூறாளாய், தலைவியின் பொறையைப் போற்று கின்றனள் என்றும் கொள்க.

புதரிற் படர்ந்த முல்லையின் சிறுபூக்கள். யானைமுகம் போலத் தோற்றும் என்றது, அவ்வாறே நீயும் எனக்குத் துன்பத்தாலே தோன்றினை என்பதாம். வண்பெயலால் தண்புதல் அணிபெற்றாற்போல, அவர் வரவால் யானும் அழகுபெறுவேன் என்கின்றாள் தலைவி.

பொய்யிடியைக் கார்காலத்து இடியாம் மெய்யெனக் கருதி ஆரவாரிக்கும் இனமயில் மடக்கணம்போல, நின் வரவை உண்மையான காலத்தின் வரவு எனக்கொண்டு இவ்வூர்ப் பெண்டிர் பலரும் அவரைப் பழித்து ஆரவாரிப்பர் என்பதும் ஆம். 108

நற்றிணை தெளிவுரை

I

249. அலரெழச் சென்றது தேர்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: வரைவிடை மெலிந்தது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றான் தலைவன். அதனாலே மிகச்சோர்ந்து மெலிவுற்றாள் தலைவி. அவளுடைய மனத்தெழுந்த கலக்கத்தின் காரணமாக அவள் புலம்புவதுபோல அமைந்த செய்யுள் இது.]

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை நீலத் தன்ன பாசிலை அகந்தொறும் வெள்ளி யன்ன விளங்கிணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தா துதிரப்

புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்

வரிவண் டூதலின் புலிசெத்து வெரீஇப் பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத் தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண் மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி அம்பல் மூதூர் அலரெழச்

சென்றது அன்றோ கொண்கன் தேரே!

5

10

தெளிவுரை : இரும்பைப்போன்று விளங்கும் கரிய கிளை களையுடையது புன்னைமரம். அதன் பசுமையான இலைகள் நீலம்போலத் தோன்றும். அவ் இலைகளுக்கு உள்ளிடந் தோறும் வெள்ளியைப் போல வெண்ணிறம் வெண்ணிறம் கொண்ட அதன் பூங்கொத்துக்கள் விளங்கித் தோன்றும். அப்பூக்களி லுள்ள பொற்றுகள் போன்ற நரிய தாது மணல்மேட்டிலே உதிரும். புலியின் பொறிபோலும் புள்ளிகளைக் கொண்ட தாக மணங் கமழும் நிறம்பெற்ற அம் மணல்மேடு தோன்றும். வரியமைந்த வண்டுகள் அவ்விடத்தே மொய்த்து ஊதா நிற்கும். அதனைக் காணும் விரைந்த செலவையுடைய குதிரைகள், அதுதான் புலிபோலும் என மயங்கி அச்சங் கொள்ளும். பலமுறை இழுத்து நிறுத்தவும் நிறைக்கு அடங்கி நில்லாவாய்ப் பந்து போலத் தம் கால்களால் தாவிக் குதிக்கும். அதனைக் கண்டு வளப்பமிக்க நம் சேரியின்கண் உள்ளாரெல்லாம், கல்லென் னும் ஆரவாரத்தோடு அவ்விடத்தே சென்றனர். அம்பல் கூறுவார் வாழ்கின்ற நம் மூதூரிடத்தும் அதனாலே நம்மைக் நற்றிணை தெளிவுரை

109

குறித்த பழிச்சொற்கள் எழுந்தன. இவ்வாறு, வந்தும் நமக்கு அருளாதபடி சென்றது அல்லவோ நமது கொண் கனின் தேர்! அவன்தான் இனி மீண்டும் இவ்வூரிடத்தே வந்து நம்மையும் வரைந்து மணந்து கொள்வானோ? யான் எவ்வாறு உயிர் வாழ்வேன்?

சொற்பொருள்: பாசிலை-பசிய இலைகள். இணர்-பூங் கொத்து.பூ நாறு-பூமணம் கமழும். குரூஉச் சுவல்- நிறம் கொண்ட மணல்மேடு. புலிசெத்து -புலிபோலும் என மயங்கி. பரி - விரைந்த செலவு. வயங்குதாள்- வலியமைந்த கால்கள். தகைவரை-நிற்கும் எல்லைக்கண். மல்லல் - வளமை. கொண் கன் - நெய்தல்நிலத் தலைவன்.

விளக்கம்: பூமணங் கமழ நிறம்பெற்று விளங்கும் மணல்மேட்டின் மேலாகப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து கிடந்ததனைப் புலிபோலும் எனக் கொண்டு அஞ்சிய குதிரை கள், கட்டுக்கு அடங்காவாய்ப் பந்துபோலத் துள்ளிக் குதித் தன என்க. இதனால் ஊரவர் வந்து கூடி ஆர்ப்பரிக்க, ஊரி டத்தே பழியும் எழலாயிற்று. இதனால் அவமானம் அடைந் தான் அவன். அவன் இனியும் இவ்வூரிடத்தே வந்து என்னை யும் வரைந்து மணந்து கொள்வானோ என்று ஏங்குகின்றாள் தலைவி.

'சேரி' என்பது ஊரின் புறத்தே ஒரு சாரார் சேர்ந்து இருப்பது. அதனைக் கடந்து சென்றால் உயர்குடியினர் வாழும் மூதூர் இருக்கும். வெருவிய குதிரைகள், சேரியி னுள்ளே, சேரி கல்லெனப் புகுந்து சென்று, அம்பல் மூதூர் அலர் எழுமாறு அதனுள்ளும் போயினதாகச் மறைந்தது என்பதும் கருத்தாகும்.

சென்று

250. நகுகம் வாராய்!

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார்

நல்வெள்ளை

யார் . திணை: மருதம். துறை : புதல்வனொடு புக்க தலைமகன்

ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது.

[(து. வி.) பரத்தை உறவிலே மகிழ்ந்தவனாகச் சில காலம் லைவியைப்

பிரிந்திருந்த

தலைவன்,

.

ஒரு

சமயம் தன் வீட்டின் பக்கமாக வருகின்றான். தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடும் தன் புதல்வனைக் கண்டதும் 110

நற்றிணை தெளிவுரை

மகிழ்கின்றான். அவனை எடுத்து அணைத்தபடியே தலைவியின் நினைவெழத் தலைவிபாற் செல்கின்றான். அப்போதும் அவள் 'நீர் யாரோ?' என்று கேட்க, அதனைச் சொல்லித் தன் பாணனுடன் நகையாடுவதாக அமைந்த செய்யுள் இது.] நகுகம் வாராய் பாண! பகுவாய்

அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாந்தன்

முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப் பிறைவனப் புற்ற மாசறு திருநுதல் நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து வெரூஉமான் பிணையின் ஒரீஇ

யாரை யோவென் றிகந்துநின் றதுவே!

5

10

தெளிவுரை: பாணனே! நாம் நகையாடிக் களிக்கலாம் வருவாயாக! உள்ளே பரல்கள் இடப் பெற்றதும் பிளந்த வாயினை உடையதுமான கிண்கிணி ஆரவாரிக்கத் தெரு விலே சிறுதேர் உருட்டி நடைபயின்று கொண்டிருந்தனன், இனிய மொழியினைப் பேசும் எம் புதல்வன். செவ்வாம்பலின் மலரைப்போலத் தோன்றும் சிவந்த அவன் வாயின் நீரா னது ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு, யான் இல்லத்துள் அவனை எடுத்து அணைத்தபடியே சென்றேன். விருப்பம் கொண்ட என் நெஞ்சமானது என்னைத் தூண்டிச் செலுத்துதலாலே யானும் தலைவியை முயங்குதல் என்னும் விருப்பத்தோடே அவளைச் சென்றும் நெருங்கினேன். பிறையது வனப்பைக்கொண்ட குற்றமற்ற அழகிய நெற்றி யையும், மணங்கமழும் கரிய கூந்தலையும் கொண்டாளான என் காதலியானவள், என் வருகையைப்பற்றி வேறாகக் கருதிக் கொண்டாள். அஞ்சி அகலுகின்ற மான்பிணை யினைப்போல என்னைவிட்டு ஒதுங்கிச் சென்று நின்றபடி, 'என் அருகே நெருங்கி வருவதற்கு நீதான் யாவனோ?' என்ற படியே வினவலையும் செய்தனள். அதனை எண்ணி யாம் நகையாடி மகிழலாம், வருவாயாக!

  • சொற்பொருள்: பகுவாய் பிளப்புண்ட மூட்டுவாய்; பெரிய வாயும் ஆம்; இதனைத் தவளைவாய்க் கிண்கிணி என அதன் மூட்டுவாய் அமைப்பையொட்டிக் கூறுதலும் உண்டு. அரி நற்றினை தெளிவுரை

111

உள்ளிடு பரல்கள். தேர் நடை பயிற்றல் - சிறுதேர் உருட்டிய படி நடை பயிலுதல். தேமொழி-இனிமையான மழலைப் பேச்சு. பூநாறு செவ்வாய் - செவ்வாம்பலைப்போலத் தோன் றும் சிவந்த வாய். துரப்ப - செலுத்த. வேறு உணர்ந்து என்னை வேற்றானைப் போலக் கருதி; இப்படிக் கருதியது ஊடற் சினத்தால் என்க. வெரூஉம் - அஞ்சும்; அஞ்சுவது பகை விலங்குகளைக் கண்டவிடத்து. இகந்து - கை கடந்து.

விளக்கம் : தலைவன் தன்னை விரும்பி வந்தான் அல் லன்; தெருவிற் போவோன் தன் புதல்வனைக் கண்டதும் பாசத்தால் ஈர்க்கப் பெற்று, அவனைத் தூக்கியபடி உள்ளே வந்தவன், வந்தவிடத்துத் தன்னைக் கண்டதும் ஆசை மீதூர நெருங்குகின்றனன்" என்பதனை அறிந்த தலைவி, இவ்வாறு கடிந்து அவனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றாள். தங்கள் உறவின் பேறாகிய புதல்வனையும் நினையாளாய், 'நீ யாரையோ?' என்று சொன்னாள். இதுதான் தலைவனுக்கு நகைப்பைத் தருகின்றது. அதனைத் தன் பாணனோடும் சொல்லி மகிழ் கின்றான் அவன் இதனால், பாணனும் நகைகொள்ளத் தலைவியும் தன் சினந்தணிந்து தலைவனை ஏற்று இன்புறுத்து வாளாவது பயனாகும்.

.

மேற்கோள்: 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரத்தின் (தொல். பொருள்.) 'அழியல் அஞ்சல் ஆயிரு பொருளினும் தானவட் பிழைத்த பருவத்தானும்' என்றதற்கு இச்செய்யுளை எடுத் துக் காட்டுவர் இளம்பூரணனார். இச்சூத்திரத்தின், 'ஏனை வாயில் எதிரொடு தொகைஇ' என்னும் பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி,' இஃது ஏனை வாயிலாகிய பாண னுக்கு உரைத்தது' என்பர் நச்சினார்க்கினியர்.

251. நீடினை விளைமோ தினையே!

ச்

பாடியவர் : மதுரைப் பெருமருதன் இளநாகனார். திணை குறிஞ்சி. துறை: சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.

[ (து.வி.) தினையை நோக்கிக் கூறுவதுபோல அமைந்தது இச் செய்யுள். புனங்காவல் கொண்டிருக்கும் காலத்தே வந்து, களவொழுக்கத்திலே ஈடுபட்ட தலைவனின் உள்ளத்திலே, தலைவியை விரைந்து வந்து வரைந்து மணந்து கொள்வதை வற்புறுத்த நினைக்கின்றாள் தோழி

A12

நற்றினை தெளிவுர்

அவன் வந்து, செவ்விநோக்கி ஒரு சார் ஒதுங்கி நிற்பதையும் அறிந்தவள், இப்படித் தினையை நோக்கிக் கூறுகின்றாள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.)

நெடுநீர் அருவிய கடும்பாட் டாங்கன் பிணிமுத லறைய பெருங்கல் வாழைக் கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும் நன்மலை நாடனை நயவாய் யாம்அவன் அளிபே ரன்பின் இன்குரல் ஓப்பி நின்புறங் காத்தலும் காண்போய் நீயென் தளிரேர் மேனித் தொல்கவின் அழியப் பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவரும் தோடிடங் கோடாய், கிளர்ந்து

நீடினை விளைமோ வாழிய தினையே!

5

10

தெளிவுரை : தினைப் பயிரே! நெடிதான நீர்மையை யுடைய அருவிகளின் பேரொலியானது எழுந்தபடியே யிருக்கின்ற அவ்விடத்தே, பிணிப்புண்ட அடியையுடைய பெரிதான மலைவாழையினது, கொழுவிய பருத்த இனிய கனிகளை, மந்திகள் கவர்ந்து உண்ணாநிற்கும் நல்ல மலைக் குரிய மலைநாடன், என் தலைவன்! அவனை நீயும் விரும்பு வாயாக! யாம், அவனது மிகுதியான பேரன்பின் திறத்தாலேயே, இனிய குரல் எடுத்துப் பாடினமாய்க், கதிர்களைக் கொய்யவரும் புள்ளினங்களை எல்லாம் ஓப்பின மாய், நின்னைப் பாதுகாத்திருப்பேம்! இதனையும் நீகண்டிருக் கின்றனை! மாவின் தளிரனைய என் மேனியினது பழைய கவின் அழிதலாலே, பலியுண்ணும் கடவுட்கு வழிபாடு செய்வாராய், முருகைக் குறித்துத் தமர் வெறியாடலையும் இனி மேற்கொள்ளுவர். அவ்வாறு அவர் என்னைக் குறித்து வெறி அயர்தலை மேற்கொள்ளும் ஆரவாரமிகுந்த அக் காலத்து, யானும் இல்லின்கண் செறிப்பு உறுவேன். ஆதலின், கிள்ளை முதலாய பறவையினம் எல்லாம் ஒருசேரச் சேர்ந்துவந்து, நின் முற்றிய கதிர்களைக் கவர்ந்து போகும். ஆதலினாலே, தோடுபொதிந்த நின் கதிர்களைத் தலைசாய்க் காயாய், நிமிர்ந்து நின்று, நெடுநாட் கழித்துக் கதிரீன்று நீயும் விளைவாயாக! தினையே, நீயும் வாழ்க! நற்றினை தெளிவுரை

இது

113

சொற்பொருள்: கடும்பாட்டு -கடுமையான வெருட்டும் பாட்டு. பிணிமுதல் அரைய-பிணிப்புண்ட அடிப்பகுதியை யுடைய; இது கன்றுகள் பல்கிப் பிணிப்புண்டிருத்தலையும், காட்டுக் கொடிகளாலே பிணிப்புண்டிருத்தலையும் உணர்த்தும். நயத்தல்-விரும்பல். அளிபேர் அன்பு - தலையளி செய்தலாய பேரன்பு; இரக்கம்கொண்டு செய்த பேரன்பும் ஆம். புறங்காத்தல் -பாதுகாத்தல். தளிர் - மாந்தளிர். பலிபெறு கடவுள்-பலியேற்று உண்ணும் கடவுள்; முருகு. கலி-ஆரவாரம். தொடங்குநிலை - தொடங்கும் பொழுதிலே. கிளர்ந்து - நிமிர்ந்து நின்று.

.

விளக்கம்: 'களவுப் புணர்ச்சியினாலே என் பழைய மேனிநிறம் மாறுபட்டத்தறிந்த அன்னையும் தமரும், முருகு அணங்கிற்றுப் போலும் என்று கருதினர்; என்னைக் குறித்து வெறியயர் தலையும் மேற்கொள்வர். அக் காலத்து யானும் இற்செறிப்பு உறுதலை அடைவேன். ஆதலின், நின் கதிர்களைப் பறவையினம் கவர்ந்து போகும். ஆகவே, நீயும் கதிர் முற்றி விளைதலைச் சற்றுக் காலம் நீட்டிப்பாயாக' என்கின்றாள். இதனைக் கேட்கின்ற தலைவன், அவளைப் பிரிந்து வாழற் கியலாத தன் காதன் மிகுதியாலே தானும் உளஞ்செலுத்தப் பட்டானாய், அவளை மணந்து கோடற்கு உரிய செயல்களை ' நாடுபவன் ஆவன் என்பதாம்.

தினை விளையுங் காலம் மணவினைக்கு உரிய கால மாதலின், அதனைத் தலைவனும் நினையாது நீட்டித்தவனாக இருத்தலின், 'தினையே நீயும் நின் கதிர்முற்றி விளைதலைச் சற்று அதுவரை நீட்டிப்பாயாக' என்றனளும் ஆம்.இன்றேல், அவனைப் பெறாத யாம் நலிவெய்தி அழிவெய்தலும் நேரும் என்றதும் ஆம். அவன்தான் காலத்தை மறந்தானாயினான்; ஆதலினாலே,நீ கதிர்முற்றுங் காலத்தையேனும் நீட்டிப் பாயாக என்பது தலைவியின் துயரத்தை நன்கு காட்டும்.

உள்ளுறை : அருவியொலி நீங்காதிருக்கும் இடத்தருகே யுள்ள வாழையின் கனியை, அவ் வொலிக்கு அஞ்சாதே சென்று மந்தி கவர்ந்து உண்ணும் அஃதேபோல், வெறியயர் தலிலே தமர் ஈடுபட்டு ஆரவாரித்திருக்கும் காலத்துத் தலைவி தலைவன்பால் வந்து களவிற் சேர்ந்து இன்புறலும் வாய்க்கும் என்றதாம். இதுதான் எளிதா காமையின். வரைந்து கோடலே செயற்குரியது என்று குறிப்பாக உரைத்ததும் ஆம்.

·

1 

252. புனைசுவர்ப் பாவை!

பாடியவர் : அம்மெய்யன் நாகனார். திணை: பாலை. துறை: ‘பொருள் வயிற் பிரியும்’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) ‘தலைவன் பொருள்தேடி வருதலைக் கருதினனாகப் பிரிவான் போலும்’ என, அவனது செயற்பாடுகளிலே கவலையடைந்தாள் தலைவி. அதனைக் கண்டனள் தோழி. ‘இவளது குணநலன்கள் யாவையுமே அவரைத் தடுத்து நிறுத்த வல்லமையற்றன; இனி ஆற்றியிருத்தலே செய்யற்பாலதாகும்’ எனத் தெளிவுற்றனள். அதனைத் தலைவிக்கும் அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உலவை ஓமை ஒல்குநிலை யொடுங்கிச்
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தம்
திறம்புரி கொள் கையொடு இறந்துசெயின் அல்லது
அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த 5
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப்
பாவை யன்ன பழிதீர் காட்சி
ஐதேய்ந் தகன்ற வல்குல் மைகூர்ந்து!
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண்
முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய் 10
நன்னாப் புரையுஞ் சீரடிப்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே!

தெளிவுரை : சுவரினிடத்தே அழகிதாக எழுதப் பெற்ற பாவையினைப் போன்ற, குற்றத்தின் தீர்ந்த காட்சியைக் கொண்டவள்; மெல்லிதாகப் பொருந்தி அகன்ற அல்குல் தடத்தினை உடையவள்; மை எழுதப் பெற்று மலர் பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளைப் பொருந்தியுள்ள குளிர்ச்சியமைந்த கண்களைக் கொண்டவள்; முயலைப் பிடிப்பது கருதி எழுந்த, விரைந்த செலவைக் கொண்டதும், சினமுடையதுமான நாயினது நல்ல நாவைப் போல விளங்கும் சிறிதான அடிகளைக் கொண்டவள்; திரண்ட கூந்தலையும், புனைந்த இழையையும் உடையாளான தலைவி! இவளுடைய குணங்கள்—


நற்றிணை தெளிவுரை

115

கிளைகளைக்கொண்ட ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிடத்தே ஒடுங்கிக் கிடந்தபடி, 'சிள்வீடு' என்னும் வண்டுகள் ஒலி செய்தபடி இருக்கின்ற, சேய்மையிலுள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளை. இன்னபடியாகக் கடந்து செல்வேமென்னும் கோட்பாட்டோடு கடந்து சென்று. பொருள் செய்தலை அல்லாது, வீட்டிடத்தே சோம்பியிருந் தோர்க்கு அரிய பொருளின் சேர்க்கையானது யென்று, இதுவரையிலும் ஒருப்பட்டு எழாத அவர் நெஞ்சமானது, இதுகாலை உடன்பட்டுப் பொருள் செய்தலைப் பற்றியே கருதலினால், மேற்கொண்ட வினையிடத்தே குறுக்கிட்டு அவரைத் தடுத்தலைச் செய்தில போலும்! ஆதலினாலே, இனி ஆற்றியிருத்தலே யல்லாது, யாம் செய்யத் தகுந்ததுதான் யாதுமில்லை!

+

இல்லை

சொற்பொருள்: ஓமை-ஒருவகைக் காட்டு மரம். ஒல்கு நிலை - இடுக்குப் பட்டுள்ள இடங்கள். 'சிள்வீடு' என்பது ஒருவகை ஒலி வண்டு. கறங்கும் - பெரிதாக ஒலிக்கும். திறம்- செய்தற்கான கூறுபாடுகள். சுவர்ப்பாவை-சுவரிடத்து எழுதப்பெற்ற பாவை; 'காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்ப் பாவை' என்று அகநானூற்றுள்ளும் கூறப் பெறும் (அகம்.369) 'என்றும் மாறாதிருக்கும் அழ'கென் பதனை இவ்வாறு குறித்தனர். முடுகு விசை - முடுகிய விரைவு. நாயின் நாக்குப் பெண்களின் அடிக்கு உவமையாதலை, 'வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி' என்பதனாலும் (பொருநராற்றுப்படை) அறியலாம்.

விளக்கம்: இவளுடைய அழகும் குணனும் அவன் செலவை மாற்ற யலாவாயினமையின், 'இல்லிருந் தோர்க்கு அரும்பொருட் கூட்டம் இல்லை' என்னும் உலகியலறம் அவன் உள்ளத்தே முகிழ்த்து வலுப்பெற்றது. இனி, ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதாம்!

உள்ளுறை : ஓமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிள் இடுக்குகளிலே ஒடுங்கிக் கிடந்து சிள்வீடுகள் கறங்கும்' என்றனர். அவ்வாறே யாமும் பொலிவழிந்த மனைக் கண்ணே ஒடுங்கிக் கிடந்து புலம்பினமாய்த் தனிமைத் துயரத்தைக் கழித்து ஆற்றியிருத்தலே இனிச் செய்தற்குரிய அறமாகும் என்றதாம். ஓமை இல்லத்துக்கும், பட்டுப்போன கிளை இடுக்குகள் இல்லத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கும். சிள்வீடு தலைவிக்கும், அதன் கறங்கல் தலைவியின் பிரி வாற்றாதே புலம்பும் புலம்பலுக்கும் பொருத்தமாவன

· 116

நற்றிணை தெளிவுரை

253. கவின் எய்திய காப்பினள் ! பாடியவர்: கபிலர்.திணை: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: செறிப் பறிவுறீஇ வரைவுகடாயது.

[(து. வி.) தலைவி இல்லிடத்தேயே செறிக்கப் பெற் றனள்; இனிக் களவுறவும் வாய்ப்பது அரிது! ஆதலின் நீதான் இவளை வரைந்துவந்து மணந்து கொள்ளலே இனிச் செய்தற்குரியது' என்று, தலைமகனிடம் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை

கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து எனவ கேளாய் நினையினி நீநனி உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் பேரிசை உருமொடு மாறி முற்றிய பல்குடைக் கள்ளின் வண்டுமகிழ்ப் பாரி பலவுறு குன்றம் போலப்

பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே!

போலக்

தெளிவுரை : ஒளி செய்கின்ற அணிகலனை அணிந்த ளமகள் நின் தலைவி. அவள் பெரிய முழக்கத்தோடேகூடிய இடியோசையோடு மழைமேகங்கள் மிகுதியாகச் சூழ்ந்த தும், பலவாகிய பனங்குடையிலே இட்டு உண்ணும் கள் ளாகிய வளவிய களிப்பையுடையதும், பலா மரங்கள் நிறைந்ததுமான், பாரியது பறம்புமலையினைப் கண்டார் வியக்கின்ற பேரழகினையும் எய்தினள். அத னாலே. இல்வயின் செறிக்கப் பெற்றனளாய் அரிய காவலை உடையாளும் ஆயினாள். அதனாலே, இனி நின் னோடும் களவுக்குறி சேர்ந்து இன்புறுதலைத் தள்னுள்ளத்தே மிகுதியாக நினைப்பினும், அதுதான் வாயாமை கருதி நடுங்கு வாளாயினள். நீயுந்தான்,

புள்ளினம் தத்தம் துணையோடுங் கூடினவாய்த் தத்தம் கூடுகளிடத்தே சென்றடைந்து கூடியிருந்தாலும், கணவனும் மனைவியுமாகக் கூடியிருப்போரைக் கண்டாலும், படுக்கை யுற்றுக் கிடக்கின்ற யானையைப் போலச் சுடுமூச்சினை நினைவிலே ஆயினை. மிகுதியான கலங்கிய வருத்தத்துடனே பெரிதும் உள்ளம் அழிந்தனையாய், என்

உடையை

-

5 நற்றிணை தெளிவுரை

1

117

சொற்களைக் கேளாயுமாயினை. இனியேனும் விரைந்து அவளை வரைந்துகொண்டு வாழ்தலுக்காவனவாய முயற்சி களை விரையச் செய்தலை நினைவாயாக!

சொற்பொருள்: பதி - கூட்டிடம்; தங்குமிடம். பள்ளி யானை - படுக்கையிலே கிடந்த யானை. கழிபட வருந்திய மிகுதிப்பட வருத்தமுற்ற. எவ்வம் - துன்பம்; அது காமமிகுதி யாலே உண்டாயது. பெரிதழிந்து - பெரிதும் உளமழிந்து. உள்ளினும் - நினைப்பினும்; நினைத்தலாவது, லைவனைக் களவுக் குறியிடஞ் சென்று சேர்தலை. பனிக்கும் - நடுங்கும். இசை முழக்கம். மாரி - மழை மேகங்கள். முற்றிய இருண்டு சூழ்ந்த.கவின் - அழகு.

-

விளக்கம் : 'உள்ளினும் பனிக்கும்' என்றது, இரவுக் குறி நேர்தல் ஒருகால் வாயாதாகும் எனின், அதன் பொருட்டு நீவரும் வழியின் ஏதங் கருதியும், நினக்குத் தமராலே ஏற்படக்கூடிய துயரம் கருதியும் நடுங்குவா ளாயினள் என்றதாம். களவு முட்டுப்பட்ட விடத்துக் கூடி யிருப்பாரையும், கூடியிருக்கும் புள்ளினத்தையும் காணும்போதெல்லாம் தலைவன் பெரிதும் உளமழிந்து சோர்தலேயன்றி, வரைந்து வந்து மணத்தலைப் பற்றி யாதும் நினைத்திலன் என்பதாம்.

பறம்புமலையிலே வாழ்ந்த பாரிவள்ளல் வருவார்க்குக் கள்ளினை மிகுதியாகத் தந்து களிப்பான் என்பதனை, 'ஒருசார் அருவி யார்ப்ப வாக்கவுக்க தேக்கட் டேறல். கல்லலைத் தொழுகு மன்னே'எனக் கபிலர் புறநானூற்றிலும் கூறுவர் (புறம்.115)

மூவேந்தராலும் கொள்ளற்கு அரிதான பெருங்காப் புடன் திகழ்ந்தது பாரியின் பறம்பு. தலைவியையும் அருங் காப்பில் இட்டிருந்த நிலைமைக்கு அந்தப் பறம்புக் காப்பின் வன்மையை உவமை கூறினர்.

'எனவ கேளாய்' என்றது, நின் செயலிழந்த தன்மை யாலே, அவள்தான் உயிரழிதலும் கூடும் என்றதாம்.

'பள்ளி யானையின் வெய்ய உயிரினை' என்றது, அதுதான் கோம்பிக் கிடத்தலைப் போல, நீயும் நின் ஆண்மையும் அறப் பண்பும் மறந்தாயாய், வருந்துதல் செயலாகக் மட்டுமே கொள்வாயாயினை என்பதாம். 118

நற்றிணை தெளிவுரை

254. சிறுகுடிச் சேர்ந்தனை சென்மோ! பாடியவர் : உலோச்சனார். திணை : நெய்தல். துறை: தோழி படைத்து மொழிந்தது.

[ (து.வி.) தலைமகன், இற்செறிப்புற்ற தலைமகளைத் தலைவன் அடைந்து இன்புறுவதற்கு இயலானாய் வருந்து கின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சிலவற்றைப் புனைந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும் துனியில் நன்மொழி இனிய கூறியும்

சொல்லெதிர் பெறாஅய் ஆகி மெல்லச்

செலீஇய செல்லும் ஒலியிரும் பரப்ப! உமணர் தந்த உப்புநொடை நெல்லின் அயினி மாஇன்று அருந்த நீலக் கணம்நாறு பெருந்தொடை புரளும் மார்பில் துணையிலை தமியை சேக்குவை அல்லை

நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி

வானம் வேண்டா உழவினெம்

கானலம் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே!

сл

5

10

தெளிவுரை : பகற்பொழுது எம்முடன் கூடியிருந்து வண்டல் மனையினைப் புனைந்து உதவினை; கரை மேலாக வந்து மோதுகின்ற அலைகளை உதைத்து விளையாடலையும் செய்தனை; குன்றுபோல உயர்ந்திருக்கும் வெண்மையான மணல் மேட்டிடத்தே கொடியரும்பின் பூக்களைக் கொய்தும் தந்தனை; வருத்தம் இல்லாதபடி நல்ல மொழிகளுள் இனிமையாயினவற்றையே எம்மிடத்துக் கூறினை. ஆனால்,

கூறிய சொற்களுக்கு எதிர்மாற்றம் எதனையும் பெறாத வனாகி, மெல்ல நின்னூர்க்குச் செல்லுதலையும் மேற் கொண்டனை. ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பின் தலைவனே! நேராக வகுக்கப்பெற்ற இடம் பொருந்திய சிறிய பாத்தி களுள் கடல்நீரைப் பாய்ச்சி உப்பினை விளைவிக்கும் மழையை வேண்டாத வேளாண்மையினை உடைய எமது கடற்கரைச் சோலை சூழ்ந்த சிறு குடியினிடத்தே வந்து சேர்ந்தாயாய், எம் இல்லிடத்தே தங்கி, இன்றைய இராப் பொழுதையும் கழித்துப் போவாயாக! நற்றிணை தெளிவுரை

119

அங்ஙனம் தங்கிச் செல்வாயாயின் உப்பு வணிகராலே உப்பை விலைமாறிக் கொண்டுவரப் பெற்ற நெல்லினாலே சமைக்கப்பெற்ற அரிசிக் காணத்தை நின் குதிரைகள் இன்று உண்ணுதலைச் செய்யவும், நீதான், இவ்விடத்தே, நீலமலர்க்கூட்டம் நறிய மணத்தைக் கமழுகின்றதான பெரிய மாலையானது புகழுகின்ற மார்பினையாகி, அம்மார் பிடத்தே அணைத்து இன்புறுதற்கான நின் துணைவியும் இல்லாதே தனியனாகத் தங்குவாயும் அல்லை காண்! அதனால் தங்கிச் செல்வாயாக பெருமானே!

சொற்பொருள்; வண்டல் மணற்பாங்கிலே சிற்றிலை இழைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு. தை இ - புனைந்து; சிற்றில் புனைந்து எனவும், சிற்றில்லில் வைத்து விளையாடு தற்கு ஏற்ற பஞ்சாய்ப் பாவையைப் புனைந்து எனவும் கொள்ளுக. வரு திரை-கரையை நோக்கி வருகின்ற அலைகள். உதைத்தல் - உதைத்து. விளையாடல்; அன்றிச் சிற்றிலைச் சிதைக்க வரும் அலைகளை உதைத்து அதனைக் காத்தற்கு முயலலும் ஆம். துனி - வெறுப்பு.ஒலிஇரும் பரப்பு - ஒலியோடு விளங்கும் கடற்கரைப் பரப்பு. அயினி - உணவு. மா- தேர்க் குதிரைகள். தொடை -தொடுக்கப்பெற்ற பெரிய மாலை. சேக்குதல் - தங்குதல். நேர்கண் சிறுதடி- நேர் நேராக விளங்கும் இடப்பரப்பாக மறிக்கப்பட்டுள்ள சிறுசிறு உப்புப் பாத்திகள். பிற பயிர் விளைத்தலைப்போல உப்பு விளைத்தலுக்கு மழையின் தேவை வேண்டாவாதலின், 'வானம். வேண்டா உழவு' என்றனர். 'வானம் வேண்டா வளனில் வாழ்க்கை' என அகநானூற்றிலும் இது கூறப் பெறுதலைக் காண்க (அகம்.186).

•.

விளக்கம்: நீதான் எமக்கு இனியன பலவும் செய்தனை யாய், எம்மால் விரும்பப்படுகின்றவனும் ஆகி, நின் கருத்தை யும் எமக்கு புலப்படுத்தினை! நின் இரப்புக்கு யாமும் இசையுங்கால் அதனாற் பழிபல வந்தெய்தும். ஆதலின் பலரும் உறங்கும் இரவு வேளையில், எம் விருந்தினனாகி, எம் இல்லத்தே வந்து தங்கிச் செல்வாயாக என்கின்றனள், விரைந்து மணந்தாலன்றி அவ்வாறு தலைவியின் இல்லத்தே தங்குதல் தலைவனின் உயர்வுக்கு இயலாமையின், அதனை மறுத்து வரைவு வேட்டனள் ஆயிற்று. இதனைக் கேட்ட லுறும் தலைவனின் உள்ளத்தே தலைவியை விரைந்து சென்று மணத்தலே செயற்கு உரியதென்னும் உறுதிப்பாடு எழும் என்பது முடிபாகும். 120

நற்றிணை தெளிவுரை

255.இன்றவர் வாராராயின் நன்று! பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார். திணை : துறை : ஆறுபார்த் துற்றது.

குறிஞ்சி.

[ (து.வி.) தன்னைத் தலைவன் வரைந்து மணந்து கொண்டு சென்று, தன்னுடனே கூடி இல்வாழ்க்கை நடத்து தலைப் பெரிதும் விரும்புகின்றாள் தலைவி. அதனைத் தலைவ னுக்குச் சொல்ல விரும்புகின்றவள், அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாளேபோல, அவன் கடந்து வரும் வழியின் கொடுமைக்குத் தான் அஞ்சுவதாகக் கூறுகின்றாள். இவ்வாறு தலைவி சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.)

கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார் வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை கன்முகைச் சிலம்பிற் குழூஉ மன்னோ

மென்தோள் நெகிழ்ந்துநாம் வருந்தினும், இன்றவர்

வாரா ராயினோ நன்றுமன் தில்ல

உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிப்

பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்

திருமணி அரவுத்தேர்ந் துழல

உருமுச்சிவந் தெறியும் ஓங்குவரை யாறே!

6

10

தெளிவுரை : பேயினங்கள் காற்றோடும் கலந்தவையாய் இயங்குகின்றன; ஊரவர் அனைவரும் செயலொழிந்து உறங்கியிருக்கின்றனர்; கேட்போருக்கு அச்சத்தைத் தருதலை யுடைய குறிஞ்சிப் பண்ணைப் பாடியபடியே, காவல் மேற் கொண்டிருக்கும் கானவர்களும் துயில்வாரல்லர். வலிமிகுந்த களிற்றினோடும் போரிட்டதான வாள் போலுங் கோடுகளைக் கொண்ட வேங்கைப் புலியானது, மலையிடத்தே யுள்ள கல்முழைஞ்சினுட் கிடந்ததாய் முழக்கமிடுகின்றது! ஐயகோ! உயர்ந்த மலைப் பக்கத்தே விளக்கமோடே மின்னலைச் செய்தபடியே காற்றும் மழையுமாகக் கலந்து பெய்த இரவுப்பொழுது கழிந்துபோன நடுயாமத்திலே, இடிமுழக்கத்திற்கு அஞ்சியபோதும் தான் இழந்துவிட்ட மணியைத் தேடியபடி பாம்பினம் வருந்தியிருக்க அவற்றை நற்றிணை தெளிவுரை

121

மேலும் அச்சுறுத்துவதுபோல இடிகள் மிகவும் முழங்கி அதிருகின்ற தன்மையது, உயர்ந்த மலைப்பக்கத்து வழியும் ஆகும். மென்மையுடைய நம் தோள்கள் தளர்வுற்றுப் போக நாம் வருத்தமுற நேரினும், இன்றிரவுப் போதில் அவர் இவற்றைக் கடந்து இங்கு வாராதிருத்தலே மிகவும் நல்லதாகும்!

கிளர- செயலவிந்து

சொற்பொருள் : கழுது-பேய். கால் காற்று. எழுந்து வீசாநிற்ப. ஊர்மடிதல்-ஊரவர் உறங்கிக் கிடத்தல். குறிஞ்சி-குறிஞ்சிப்பண். உருகெழு மரபின் குறிஞ்சி' என்றது, கானவர் முருகயர்தற்கும் வேட்டம்போவதற்கும் இயக்கும் பண் ஆதலினால், குறிஞ்சி பாடுதல்-குறிஞ்சிப் பண்ணிலே பாட்டுப் பாடுதல். கடி காவல். நகர்-பெருமனை. ‘கானவர்" என்றது, மனைக் காவலரை. 'முகை' என்றது மலைச்சரிவிலுள்ள பாறையிடுக் குகளை 'தோள் நெகிழ்தல்' அவரை நாம் அடையப் பெறாமையால். பெயல் - மழை. கால்-காற்று. பெயல் கால் மயங்கிய - காற்றோடு கலந்து பெருமழையும் பெய்ய. பொழுது கழி பானாள்' என்றது, இரவின் நடுயாமப் பொழுதினை. திருமணி - அழகியமணி. உருமு-இடிக்குரல். ஓங்குவரை யாறு - உயர்ந்த வரைப்பக்கத்தே அமைந்த வழி.

.

விளக்கம்: "யாமத்து வரின் பேயணங்கும் என அஞ்சு வேம், ஊரவர் துயின்று ஊரரவம் ஓய்ந்ததாகலின் அவன் வரவைக் காவலர் எளிதிற் காண்பரெனக் கலங்குவேம், அன்றி அவரும் துயிலாராதலின் அவரால் அவனுக்கு ஏதமுறுமோவென நடுங்குவேம், வழியிடையே களிறுக்குத் தோற்ற வேங்கையாலும் மணி தேடி உழலும் அரவாலும் துன்புறலும் நேருமோவெனவும் கலங்குவேம், இடியும் மழையும் காற்றுங் கூடிய இந்நள்ளிரவில் உயர்வரையிடத்து வழியும் தெளிவாகத் தோன்றாதே எனவும் திகைப்பேம், ஆதலின் இன்று அவர் வாராதிருத்தலே நல்லது. அவர் நினைவாலே வருந்தி எம் தோள்கள் நலியினும் நலியட்டும்" என்று மனநொந்து கூறுகின்றாள் தலைவி.

இதனால், அவன் தமக்கு இன்றியமையாதவன் என் பதும், அவனுக்கு ஏதமெனில் தாம் உயிர்வாழாத் தன்மையேம் எனவும் உணர்த்தி, இந்நிலையினை ஒழித்தற்கு அவன் தன்னை விரைய மணந்துகொள்ளலே நன்மை தருவ தாகும் என்பதும் புலப்படுத்தினாள். இதன் பயன் வரைவு வேட்டல் ஆகும்.

நற்-8 122

நற்றிணை தெளிவுரை

மேற்கோள்: 'இரவுக்குறி வரலால் தலைவி வருந்துவள் என்றது' என இச்செய்யுளை, 'நாற்றமும் தோற்றமும். (தொல். பொருள் 114) என்னும் சூத்திரத்து,ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்' என்னும் பகுதியின் உரை யிடத்தே ஆசிரியர் நச்சினார்கினியர் காட்டுவர்.

256. கார்ப்பெயல் செய்த காமர்மாலை!

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: 'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.

[ (து-வி.) தலைவன் பொருள் தேடிவருதலைக் கருதினான்; தன்னைப் பிரிந்து போதலையும் எண்ணினான் எனக் கலங்கி யழிந்தனள் தலைவி. அவளுக்கு, அவன், தான் போகப் போவ தில்லை என தெளிவிப்பதுபோல அமைந்த செய்யுள் இது.) நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப்

பல்குறப் பெருநலத் தமர்த்த கண்ணை! காடே, நிழல்கவின் இழந்த அழல்கவிர் மரத்த புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே; இந்நிலை தவிர்ந்தனம் செலவே; வைந்நுதிக் களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் கார்ப்பெயல் செய்த காமர் மாலை

மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை

காழ்கொள் வேலத் தாழ்கிளை பயந்த

கண்கவர் வரிநிழல் வதியும்

தண்படு கானமும் தவிர்ந்தனஞ் செலவே!

5

10

குற்றந்தீர்ந்த

தெளிவுரை : நீதான். புகழ்மைந்த, சிற்றடிகளை உடையை! பல்கிய பெரிதான நலங்களமைந்த அமர்த்த கண்களையும் உடையை! காடோ,நிழலாலே உண்டாகின்ற அழகினை இழந்து போனதும், வேனிலது வெம்மையாலே கரிந்துபோய்க் கிடப்பதுமான மரங்களை உடையது. மாவும் பிறவும் வழங்குதலற்றுத் தனிமை நிலை பெற்றதாய்த் தன் பொலிவழிந்து போயுமிருக்கின்றது! இந் நிலையைக் கருதினமாதலின், நின்னையும் உடன் கொண்டு போதற்கு இய யலாமையினால், யாமும்.எம் செலவினைக் கோடைக்காலத்தே கைவிட்டனம். நற்றிணை தெளிவுரை

123

னி

கூர்மையான நுனியையுடைய களாவின் அரும்புகள் ஒருங்கே மலர்ந்து மணங்கமழும்; பிடவினது அரும்புகள் கட்டவிழ்ந்து இதழ்விரிந்து மலர்ந்திருக்கும்; இங்ஙனமாகப் கார்காலமும் தனக்கு உரியதான பெயலைச் செய்தது. இனி தான இக்காலத்தின் மாலைப்பொழுதிலே, இளைய பிணை யினைத் தழுவியின்புற்ற கரிய பிடரினைக் கொண்ட கலைமானானது, வயிரமேறிய வேலமரத்தினது தாழ்ந்து கிடக்கும் கிளைகள் பயந்த, காண்பார் கண்களைக் கவர்கின்ற வரிப்பட்ட நிழலிடத்தே சென்று தங்கியிருக்கும் குளிர்ச்சி பொருந்திய காட்டிடத்தே, நின்னைக் கூடியிருப்பதற்குரிய தான இக் கார்காலத்துச்செல்வதனையும் யாம் கைவிட்டனம். எனவே, நின்னைப் பிரிவேனேன நினைந்து நீயும் நலிவது வேண்டாதது காண்!

சொற்பொருள்: அமர்த்தல் - மதர்த்தல். அழல்-கோடை யின் வெப்பம். கவர்தல்-சுட்டெரித்தல். புலம்பு - தனிமை; அது மாவும் பிறவும் வழங்குதல் அற்றுப்போன தன்மை. நலம் - காடுதரு பொருள்களாலும் பசுமையாலும் விளங்கிய பொலிவு. களவு - களாமரம். பிடவு-பிடாமரம். எருத்து- பிடரி. இரலை - கலைமான். காழ் - வயிரம். தண்படுகானம். குளிர்ச்சிப்பட்ட காடு.

விளக்கம்: கோடைகாலத்தே நின் சிற்றடிகள் காட்டின் வெம்மையைத் தாங்காவெனக் கருதியும், நின் கண்களின் அழகெலாம் கெடுமெனக் கருதியும், யாம் செலவைக் கைவிட்டனம். இக் கார்காலத்தேயோ மானினம் கூடிக் கலத்தலைக் கண்டு. யாமும் நின்னைப் பிரிந்து போதற்கு விரும்பாதே, நின்னோடும் இருத்தலையே விரும்பினமாதலின் செலவைக் கைவிட்டனம் என்கின்றான்.

இதன் பயனாகத் தலைவியும், தன் துயரத்தை விட்டா ளாய்த் தலைவனோடு கூடிக் கலந்து இன்புறுவள் என்பதாம்.

'பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை' எனக் கண்களை வியந்தது, அவள் கண்கலங்கி நீர் சொரிய நின்றது கண்டு, அவளைத் தேற்றுவானாகக் கூறியதாகும். 'பாடல் சான்ற பழிதபு சீறடி' என அடியை வியந்தது, அவள் தெளி யாளாக அடிதொட்டுச் சூளுரைப்பான் சொல்வதாகும்.

'மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை' என்றது, அவ் வாறே தானும் தழுவியிருத்தலையே நினைப்பதன்றிப் பிரிந்து போதலை நினையாதான் என்று கார்காலத்தைக் காட்டிக் கூறுகின்றானும் ஆம். 124

நற்றிணை தெளிவுரை

257. இயங்குநர் மடிந்த சிறுநெறி!

பாடியவர்: வண்ணக்கன் சொருமருங் குமரனார்; வண் ணக்கன் சேரிக்குமரங் குமரனார் எனவும் கொள்வர். திணை: குறிஞ்சி, துறை : தோழி, தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு

கடாயது.

[(து-வி.) இரவுக் குறியினை விரும்பி வருவானாகிய தலைமகனைத் தோழி நெருங்கி இவ்வாறு உரைக்கின்றனள். வரும் வழிக்கண் ஏதம் மிகவும் உண்டாதலின் யாம் அஞ்சு வேம் எனக் கூறுவதன் மூலம், இரவுக்குறி மறுத்து வரைந்து வருதலை வேண்டுகின்றனள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]

விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ மழையெழுந் திறுத்த நளிர் தூங்கு சிலம்பின் கழையமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு இலங்குவெள் ளருவி வியன்மலைக் கவாஅன் அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் பொன்மருள் நறுவீ கன்மிசைத் தா அம் நன்மலை நாட! நயந்தனை அருளாய்! இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக் கடுமா வழங்குதல் அறிந்தும்

நடுநாள் வருதி நோகோ யானே.

сл

5

10

தெளிவுரை: இடிகளின் ஓயாத முழக்கத்தோடே மழை மிகுந்ததாக எங்கணும் பெய்தலைத் தொடங்கியது; மேகங் கள் திரண்டு சூழ்ந்து கொண்டதனாலே, மலைப்பக்கங்கள் குளிர்ச்சிமிகுந்த ஆயின ; மூங்கில்கள் செறிவாக வளர்ந்து நெடிதாகவும் ஓங்கியுள்ள வானளாவும் மலையுச்சியிலுள்ள விளங்கும் வெள்ளிய அருவியானது. அகன்ற மலைப்பக்கங் களிலே வீழ்கின்றது. அவ்விடத்தே, அரும்புகள் இதழ்விரிந் தவாய் மலர்ந்திருக்கின்றதும், கரிய அடிமரத்தை உடையது மான வேங்கையினது, பொன்னைப்போலத் தோற்றும் நறிய வான பூக்கள் பாறை மேலாக உதிர்ந்து பரவியபடியிருக் கின்ற, நல்ல மலைநாடனே! வழிப்போவார் யாருமில்லாத படி விளங்கும், ஒடுங்கிய, நீர் பெருகி நிற்கின்ற தன்மையது நீ வரும் வழியாகும். அவ் வழியிடையே கடிய விலங்குகளான. புலி முதலானவை வழங்குதலை அறிந்துவைத்தும், நீதான் இரவின் நடுயாமப் பொழுதிலேயே வாராநின்றனை! அதனைக் நற்றிணை தெளிவுரை

125

கருதி யானும் நோவா நின்றேன். எம்பால் விருப்புடையை யாகி, இனி அவ்வாறு வருதலை நீக்கினையாய் அருள்தலைச் செய்வாயாக, பெருமானே!

+

எமக்கு

சொற்பொருள்: விளிவில்- டையீடில்லாதபடி. அரவம் - இடி முழக்கம். தளி - மழை. உறைஇ - பெய்து மழை எழுந்து - மேகங்கள் வானத்தே எழுந்து. இறுத்த- தங்கிய, நளிர் - குளிர்ச்சி. சிலம்பு - பக்கமலை. கழை மூங்கில். அமல்பு - செறிந்து. வயம் - நீர்ப் பெருக்காகிய வளம். சிறுநெறி - ஒடுங்கிய வழி. கடுமா - புலி போன்ற கொடிய விலங்குகள்.

விளக்கம்: 'வழியிடையே நினக்கு யாதானும் துன்பம் உண்டாகுமோ?' என எண்ணி யாம் மிகுதுயர்ப்பட்டுக் கலங்குவேம். ஆதலின். இரவு வருதலைக் கைவிடுக என் றனள். வேங்கைப் பூ கன்மிசைத் தாவும் என்று சொன்னது, அதுதான் மணங்கோடலுக்கு உரித்தான காலமென்பதனை நினைப்பித்ததாம். 'இயங்குநர் மடிந்த' என்றது வழக்க மாகப் போதலை மேற்கொள்வாரும் அச்சமுடையவராய்க் கைவிட்டதனாலே, யாருமற்றதாக விளங்கிய நெறி என்ற தாம்.

உள்ளுறை: வேங்கையின் பொன்போன்ற நறிய மலர் கள் தம்மைக் கொய்து சூடுவாரை அற்றவாய்க் கற்பாறை மேல் உதிர்ந்து கிடப்பது போல, நீதான் அருகிருந்து நுகர்ந்து இன்புறுத்தாதலினாலே இவளுடைய நலனும் ய னற்றுக் கொன்னே அழிந்து போதலைச் செய்யும் என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், விரைய வந்து வரைத் லுக்கு மனத்தே உறு கொள்வான் என்பது இக் கூற்றின் பயனாகும்.

258. அன்னை செறித்தனள்!

படியவர்: நக்கீரர். திணை: நெய்தல். துறை: தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து.வி.) பகற்குறி வந்து ஒழுகுவானாகிய தலைவனிடம் வந்து, தலைவியின் தோழி, 'தலைவி இற்செறிக்கப்பட்டாள்' என்பதைச் சொல்லி, இனி வரைந்து கொண்டாலன்றி அவளை அடைதல் இயலாது என உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

7 126

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச்

செல்வல் கொண்க செறித்தனள் யாயே

நற்றிணை தெளிவுரை

கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் திருவுடை வியநகர் வருவிருந்து அயர்மார்

பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்குகிர் நிமிரல் மாந்தி, எற்பட அகலங் காடி அசைநிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் மருங்கூர்ப் பட்டினத் தன்னவிவள் நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே.

.

5

10

தெளிவுரை: கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோரின் கால்கள் வெம்புமாறு, கீழைத் திசை மலையிடத்தே தோன்றி எழுகின்ற ஞாயிறும் தோன் றிப் பகற்பொழுதைச் செய்தது. அத்தகைய பகற் பொழுதிலே செல்வ வளத்தையுடைய நம்முடைய பெரிய மனையினிடத்தே விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஓம்புதற்குப் பொன் தொடியினை அணிந்தவரான மகளிர் சமைத்து நிவேதித்துப் புறங்கடையிலே கொக்கின் உகிர் போன்ற வெண்சோற்றைப் போட்டனர். அச் சோற்றைத் தின்றுவிட்டுப், பொழுது மறையும் மாலை வேளையிலே, அகன்ற அங்காடித் தெருவிலேயுள்ள அசைந்தேகும் நிழலி டத்தே குவிக்கப்பெற்றுள்ள பசிய இறாமீனைக் கவர்ந்து, பசுங்கண்களையுடைய காக்கையானது உண்ணும். அதனையும் உண்ட பின்னர்க், கடற்கரையிலே, அலையாலே அசைந்து கொண்டிருக்கின்ற கலத்தினது கூம்பினிடத்தே சென்று அக் காக்கையானது தங்கும். அத்தகைய மருங்கூர்ப்பட்டி னத்தைப் போன்றவளான இவளது, அழகும் ஒளியும் பொருந்திய, நெருங்க அணிந்த வளைகள் கழன்று ஓடுவதனை அன்னையும் கண்டனள். கண்டவள், இவளையும் இவ் விடத்தே சாவற்படுத்தினள்: பலவாகிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே நீதான் செய்த பகற்குறியிடத்தே, யானும் தனியாகவே வந்து, நினக்கு அதனையும் கூறினேன். இனி, யானும் எம் இல்லுக்குச் செல்வேன். நீதான் இனி இவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளலைக் கருது

வாயாக! நற்றிணை தெளிவுரை

127

சொற்பொருள்: பல்பூங்கானல் - பலவாகிய பூக்களை யுடைய கானற் சோலை. மரீஇ - சென்றடைந்து. கொண் கன் - நெய்தல் நிலத்துத் தலைவன். புறங்கடை -வீட்டின் பின்புறம். நிமிரல் - சோறு.எற்பட-கதிர் சாய. பச்சிறா - இறாமீன். தூங்கல் - அசைதல். வங்கம் - மரக்கலம். சேக் கும் - தங்கும். நெங்கு ஏர் எல்வளை -அழகும் ஒளியும் உடையவாக, நெருங்க அணிந்த வளைகள்.

விளக்கம்: நின்னைக் கண்டு மகிழாமையாலே பெரிதும்- துன்பம் உறுபவள் தலைவி எள்பாள், அவள் உடல் நலித லினாலே மெலிவு அடைந்தனளாகத் தன் நெருங்கவணிந்த ஒளிவளைகள் சுழன்று வீழ மெலிந்தனள் என்றாள். அதனைத் தெய்வம் அணங்கிற்று எனத் தாய் இற்செறித்தனள். அவள் வாடாமற்படிக்கு இனி நீதான் அவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக என்கின்றனள். உணவு படைக்கு முன் சிறிது சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் மரபு. மருங்கூர்ப்பட்டினம் கீழைக் கடற்கரைப் பகுதி யிலுள்ள பாண்டியர்க்குரிய ஓர் பட்டினம். அதன் வனப் பினை அவளது வனப்புக்கு உவமையாக உரைத்தனள்.

உள்ளுறை : மகளிரிட்ட பலிச்சோற்றை உண்டபின், அங்காடியிற் குவித்துக் கிடக்கும் இறாமீனையும் கவர்ந்து உண்ட காக்கையானது, வங்கத்துக் கூம்பிற் சென்று தங்கும் மருங்கூர் என்றனள். இது, பாங்கற் கூட்டத்தாற் பகற்குறி பெற்றும், பாங்கியிற் கூட்டத்தால் இரவுக்குறி பெற்றும் இவள் நலனைத் துய்த்து இன்புற்ற நீயும், இவளை மணந்து வாழக் கருதாயாய், நின் ஊர்க்கண்ணே சென்று இனிதே இருப்பாயாயினை என்று கூறியதாம். இதனை உணரும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடற்கு விரைபவன் ஆவான் என்பதாம்!

259 என்ன செய்வோமோ?

பாடியவர்: கொற்றங் கொற்றனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவு

கடாயது.

[ (து. வி.) தலைவனின் மனத்தைத் தலைவியை மணந்து கூடி வாழ்தலிலே செலுத்த விரும்புகின்றாள் தோழி. அதனை அவனுக்கு உணர்த்த நினைப்பவள், பகற்குறியிடத்தே, அவன் வந்து ஒரு சார் ஒதுங்கிச் செவ்வி பார்த்து நிற்பு

  1. 28

நற்றிணை தெளிவுரை

தறிந்தவள், தலைவிக்குச் சொல்வாளேபோல அவனுங்கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகின்றனள். இங்ஙனம் அமைந்த செய்யுள் இது].

யாங்குச்செய் வாங்கொல் தோழீ! பொன்வி

வேங்கை ஓங்கிய தேங்கமழ் சாரல்

பெருங்கல் நாடனொடு இரும்புனத் தல்கிச் செவ்வாய்ப் பைங்கிளி யோப்பி அவ்வாய்ப் பெருவரை யடுக்கத் தருவி யாடிச் சாரல் ஆரம் வண்டுபட நீவிப்

பெரிதமர்ந் தியைந்த கேண்மை சிறுநனி அரிய போலக் காண்பேன் விரிதிரைக் கடல்பெயர்ந் தனைய வாகிப்

5

புலர்பதங் கொண்டன ஏனற் குரலே?

10

தெளிவுரை: தோழீ! தினைக் கதிர்கள் எல்லாமும் விரிந்த அலையையுடைய கடல் நீரெல்லாம் வற்றி நிறம் மாறினாற்போலத் தாமும் காயும் பருவத்தை அடைந்தன கண்டாய்! இனி, நமர் அவற்றைக் கொய்வாராதலின். நம்மையும் இவண் வரவிடாராய் இல்லின் கண்ணேயே செறிப்பதும் நிகழும். பொன்போலப் பூக்களைக் கொண்ட வேங்கை மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கின்ற, தேன் மணங் கமழுகின்ற மலைச்சாரல் இது. இதனிடத்தே பெரிய மலைநாடனோடே கரிய தினைப்புனத்திலே தங்கியிருந்து, சிவந்த வாயையுடைய பசுமை நிறங்கொண்ட "கிளிகளை ஒப்பியும், அவ்விடத்தேயுள்ள பெரிய மலைப்பக்கத்தேயுள்ள அருவியிலே நீராடியும், சாரலிடத்தே பெற்ற சந்தனத் தேய்வையை வண்டு மொய்க்கும்படியாகப் பூசியும், மிகவும் விருப்பமுடனே செய்துகொண்ட பொருந்திய நட்புற வானது, இன்னுஞ் சிறிது நாளிலே வாய்த்தற்கு மிகவும் அரிதாகித் தேய்ந்து இல்லாதே போகும்போலத் தோன்றக் காண்கின்றேன்! இனி, நாமும் என்ன செய்ய மாட்டு

வேமோ!

சொற்பொருள்: தேம்கமழ்சாரல் - புதுப்பூக்களின் மிகுதி யினாலே தேனின் நறுமணம் கமழ்ந்தபடி இருக்கின்ற மலைச் சாரல். பெருங்கல் நாடன் - பெரிய மலை நாட்டினன். இரும் புனம் - கரிய தினைப்புனம்; பெரிய தினைப்புனமும் ஆம். அல்கி - தங்கி, ஆரம் - சந்தனம்; ஆரம் நீவி என்றலின் பற்றினை தெளிவுவர

129

சந்தனத் தேய்வையைக் குறித்தது. அமர்ந்து - விரும்பி. இயைந்த கேண்மை- கூடிய நட்புறவு, கடல் பெயர் தல்

கடல் நீர் வற்றிப்போதல்.

விளக்கம்: இனி முன்போல அவனைக் அவனைக் காண்பதும், கூடியிருந்து இன்புறுவதும் வாய்த்தல் அரிதாகும் என்றனள்; அது நீங்கியவழி யாமும் இறந்துபடம் கூடும் என்பதும் செய்வாங் குறிப்பாகப் புலப்படுத்துவாள், "யர்ங்குச்

கொல் என்றனள்.

..

கடல்நீர் வற்றிவிட, அவ்விடம் மெல்ல மெல்லக் காய்ந்து நிறம் மாறுபட்டாற்போலத் தினைக்கதிர்கள் நீர் வற்றியவையாய்க் காய்தலை அடைந்து வருகின்றன என் கின்றனள். காற்றிலே அசைந்தாடும் பசுந்தினைக் கதிர்களின் தோற்றத்திற்கு விரிதிரைக் கடலின் தோற்றத்தையும், அக் கதிர்கள் காய்ந்தவழித் தோன்றும் நிலைக்கு நீர்வற்றிக் காய்ந்த கடலின் தோற்றத்தையும் கொள்ளுக.

260 மறந்து அமைகலன்!

பாடியவர்: பரணர். திணை : மருதம். துறை: ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) பரத்தை உறவுகொண்டு தலைவியைப் பிரிந்து சென்றவன், மீண்டுவந்து அவளை விருப்போடு தழுவு கின்றான். அவள் சினம் தணிந்திலள் எனினும், அவனைத் தடுக்கவும் செய்யாதவளாக, அவன் குற்றத்தைச் சுட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது]

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர! வெய்யை போல முயங்குதி முனையெழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை அன்னவென் ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த முகையவிழ் கோதை வாட்டிய பகைவன் மன்யான் மறந்தமை கலனே!

சுக

10 130.

நற்றினை தெளிவுரை

தெளிவுரை : தலைவனே! கருந்தாளுடைய எருமை யானது கழுநீர் மலரை மேய்ந்து உண்ணும்; பழனங்களிலே மலர்ந்துள்ள தாமரையின் குளிர்ச்சியான பூக்களையும் தின்னும்; பின் அதனையும் வெறுத்ததாகி, படையணியிலே சேர்ந்த மறவரைப்போலச் செருக்கோடு நடந்துசென்று, பழனங்கட்கு அயலதாகக் குன்றுபோலச் சேர்ந்துள்ள வெண்மனற் குன்றிடத்தே கிடந்து உறங்கும். இத்தகைய தன்மைகொண்ட ஊருக்கு உரியவனே !

நீதான், இதுபோது என்பால் மிகவும் விருப்ப முடையவனே போல என்னைப் பலகாலும் தழுவுகின்றனை! பகைவர் முனைத்து எழுதலாலே உண்டாகிய போரிடத்தே, அப் பகைவரை அழித்து வெற்றி கொண்ட செவ்வேலை ஏந்திய மாவீரன் 'விரா அன்' என்பவன். மிக்க நீர் நிலை பொருந்தியதும், அவ்விராஅனுக்கு உரியதுமான இருப்பை யூரைப் போன்றது என் எழில் நலம். தழைத்த பலவாகிய எனது கூந்தலிடத்தே அழகு உண்டாகுமாறு சூடிப் புனைந்த அரும்பு மலர்ந்த புதுப்பூவிலே தொடுக்கப்பெற்ற மாலை யானது வாடும்படியாகப் பிரிந்து போன்,

பகைவன்

அல்லையோ, நீ! அந்த நினது கொடுமையை மறந்து யானும் நினக்கு இசைந்திருப்பவள் அல்லேன். ஆதலின் என்னைவிட்டு அகன்று போவாயாக!

I

-

சொற்பொருள்: கழுநீர்-செங்கழுநீர்.பழனம் - வயல். பனிமலர் - குளிர்ச்சியான புதுமலர். தண்டு - படையணி. மள்ளர்-வீரர். இயலி- நடையிட்டுச் சென்று. வெய்யை- -விருப்பமுடையை. முனை - பகைவர் பகைத்தெழுந்த போர் முனை. தெவ்வர் - பகைவர். வயவன்-வீரன். இவன் இருப்பையூருக்கு உரியவனாகிய 'விரா அன்; இருப்பை இருப்பையூர். முகையவிழ் கோதை அரும்பாலே தொடுக்கப்பெற்று, மொட்டு மலர்ந்தபடியிருக்கும் தலைமாலை. 'உண்மையாகவே நீதான் என்னை விரும்பி வந்தவன் அல்லன்' என்பாள், 'வெய்யை போல' என்றனள். 'கோதை வ ட்டிய பகைவன்' என்றது, அதனைச் சூடியதன் பயனாகிய அவனது தழுவலைப் பெறாதே வாடச் செய்த வருத்தம் தோன்றக் கூறியதாம். 'மறந்து அமைகலன் என்றாள், அதனை யான் மறவேன் ஆதலின், நின் பொய் யானதாகிய இவ்வன்புத் தழுவலைக் கைவிடுக என்றனள். அவன், தன் குற்றத்தை உணர்ந்து பணிந்து வேண்ட, அவளும் தன் ஊடல் தீர்வாள் என்பது இயல்பாகும்.

விளக்கம் :

! நற்றிணை தெளிவுரை

உள்ளுறை : செங்கழுநீரை யுண்ட

131

எருமையானது,

பின் தாமரை மலரை உண்டு, அதனையும் வெறுத்துச் செருக்கு நடை நடந்து சென்று, வெண்மணற் குன்றிலே சென்று கிடந்து துயிலும் என்றனள். இவ்வாறு தலைவியை நுகர்ந்தவன், காதற் பரத்தையை நாடிச் சென்று நுகர்ந்த பின், அவளையும் வெறுத்து, செருக்கோடு சென்று சேரிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்தனன் என்று கூறியது இது

து.

வெகுளி தோன்றக் கூறினாளாயினும், அவன் வேண்டத் தன் ஊடல் தீர்பவள் ஆவள் என்பதே இதன் பயனாகும்.

261. அருளிலர் வாழி தோழி!

..

பாடியவர்: சேந்தண் பூதனார். திணை : குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது (1) தலைமகள் இயற்பட மொழிந்தூஉம் ஆம்.

[(து-வி.) தலைவன் வந்து ஒரு சிறைப்புறமாக நிற்பதறிந்து அவன் மனதை வரைந்து வருதலிலே செலுத்தக் கருதிய தோழி, தலைவிக்குச் சொல்வது போல அமைந்த செய்யுள் இது. (2) தலைவி தன்னைத் தலைவன் வரைந்து கொள்ள முற்படாததனை நினைத்து வருந்தத், தோழி தலைவனை அது குறித்துப் பழித்துக் கூறுகின்றாள். அவளுக்குத் தன் கற்புத் தன்மை புலப்படத் தலைவி கூறுவதாக அமைந்ததும் செய்யுள் ஆகலாம்.]

அருளிலர் வாழி தோழி? மின்னுவசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு வெஞ்சுடர் கரந்த கடுஞ்சூல் வானம் நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகித் தாவில் பெரும்பெயல் தலைஇய யாமத்துக் களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் வெளிறில் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும் சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை எருவை நறும்பூ நீடிய

பெருவரைச் சிறுநெறி வருத லானே,

இச்

5

10 132

நம் காதலர்

நற்றினை தெளிவுரை

பல

தெளிவுரை : தோழி, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! நம்மாட்டு அருளில்லாதவரே ஆயினார்! மேகங்கள் மின்னல் பிளந்தபடியே இருளை நிறைத்து பரந்துள்ள வானத்திடத்தே, இடிகளும் முழக்கமிட்டபடி வெம்மையான அதிர்கின்றன. ஞாயிற்றை வெளியே தோன்றாதபடியாக மறைத்துக் கொண்டு நிறைந்த சூலையுடையவாயின கார்மேகங்கள்! அம் மேகங்கள் நெடியவும் பெரியவுமான குன்றுகளிடத்தே குறுகிய படலங்களாக இயங்குவனவாயின. இடையீடில்லாத பெரும் பெயலையும் அவை பெய்யத் தலைப்பட்டன. இத்தகையதான இரவின் நடுயாமத்தே, களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக் கொண்ட பெருஞ் சினத்தையுடைய மலைப்பாம்பானது, வெளிறே இல்லாதபடி முற்றவும் வயிரமேறிய மரத் தினையும் தன்னுடலாற் பிணித்து மிகவும் பற்றிப் புரட்டா நிற்கும். சந்தனமரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள இனிய மணம் கமழுகின்ற மலைப்பிளவினிடத்தே கொறுக்கச்சியின் அத்தகைய பெரிய நறிய பூக்கள் நீடி மலர்ந்துள்ள

.

மலையிடத்துச் சிறுநெறியினைக் கடந்தும், அவர் வருதலை உடையர்! ஆதலானே, அவர் நம்பால் அருளிலர் கண்டாய்!

-

·

சொற்பொருள்: வசிபு - பிளந்து எழுந்து. இருள் தூங்கு விசும்பு - இருளடர்ந்து கருத்திருக்கும் வானம். ஏறு - இடியேறு. வெஞ்சுடர்-வெம்மையைச் செய்யும் சுடர். கமஞ்சூல்- நிறை சூல். நெடும் பெரும் குன்றம் - நெடிய பெரிய குன்றம். குறும் பல மறுகி - குறுகிய பலவாகப் படர்ந்து. தாவில் பெரும் பெயல் - குற்றமற்ற பெரும் பெயல். இடைவிடாத பெரு மழை. மாசுணம் - பாம்பு ; களிறை அகப்படுத்திய பெருமலைப் பாம்பு. வெளிறில் காழ்மரம் - வெளிறேயின்றி முற்றவும் வயிரம் பாய்ந்த பெருமரம்; இதனைச் சந்தன மரமாகவும் கொள்ளலாம். போகிய -உயர்ந்து வளர்ந்த. எருவை- கொறுக்கச்சி.

யாம்

விளக்கம்: அவர், தாம் வருகின்ற வழியிடையே அவருக்கு யாதாயினும் ஏதம் உண்டாதலை நினைந்து மிகவும் வருத்தமுறும்படி செய்பவராயினதால், அவர்க்கு நம்மீது அருள் இல்லை; இதனை விடுத்து, அவர் நம்மை வரைந்து வந்து மணந்து கொண்டு பிரியாத இன்பந் தருதலன்றோ அருண்மையாகும் என்று சொல்லி கடாயதாகக் கொள்க.

வரைவு நற்றிணை தெளிவுரை

133

அவர்தாம் வரைந்து கொள்ளாதே, யாம் பெரிதும் கலக்கமடையுமாறு இரவு நேரத்தே இவ்வழியைக் கடந்து வருதலால், நம்மீது அருளில்லாதவர் ஆயினார். ஆயினும், நாம் இறந்துபோதலைக் கருதினவராக நம் துயரைத் தீர்க்கும் கருத்தோடு வருதலால், அவர் எத்தகைய ஏதமு மற்றவராகி நெடிது வாழ்வாராக என்று கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்தி உரைகொள்க.

இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவிமாட்டுத் தானும் ஆராத காதலை உடையோனாதலினாலே, அவளை விரைந்து மணந்து கூடி வாழ்தலிலே மனஞ்செலுத்துபவன் ஆவான் என்பதாம். இதுவே, இப்படிச் சொல்வதன் பயனும் ஆகும்.

262. தோள் அரும்பிய சுணங்கு!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். திணை : பாலை. துறை: தலைமகள் ஆற்றாக் குறிப்பறிந்து பிரிவிடை விலக்கியது.

[(து.வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தன்னைப் பிரிந்து போதலைத் தலைவன் உளங்கொண்டான் என்பதனைக் குறிப்பாலே அறிந்து, தலைவி பெரிதும் கவலையால் நலிவடை கின்றனள். அவளது நலிவைக் கண்டு மனங்கலங்கியவன் தன் நெஞ்சொடுங் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர் ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து

நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த்

துனிகூர் மனத்தள் முனிபட ருழக்கும

பணைத்தோள் அரும்பிய சுணங்கின் கணைக்கால்

குவளை நாறும் கூந்தல், தேமொழி

இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப்

பிரிவல்நெஞ் சென்னும் ஆயின்

அரிதுமன் றம்ம இன்மைய திளிவே!

5

10

தெளிவுரை : தண்ணிய புனத்திடத்தே வளர்ந்துள்ள கருங்காக்கணத்தின் கண்ணைப் போன்ற கருமையான மலர்கள், வாடைக் காற்று வீசுதலாலே, கூத்தாட்டயரு கின்ற மயிலினது பீலியைப் போல அசைந்தாடியபடி I

134

நற்றினை தெளிவுரை

யிருக்கும். மழைத்தூவலும் இடைவிடாதே தூவிக்கொண் டிருக்க விளங்கும், ஊர் முழுவதும் துயில் கொண்டிருக் கின்ற இரவின் நடுயாமப் பொழுதும் வரும். அப்பொழுதிலே நடுக்கத்தைத் தருகின்ற காமநோயானது தன்னை நலி வடையச் செய்ததாலே தான் நல்ல அழகெல்லாம் குன்றிப் போக, எப்பொருளையும் வெறுத்துவிட்ட மனத்தினளாசுத் தன்னையே முனிந்து ஒறுக்கின்ற காமநோயினாலே இவளும் வாடுவாள். ஆயினும், இவள் தான் பருத்த தோள்களும் அரும்பிய தேமலும், திரட்சியமைந்த கால்களும், குவளை மலர்களின் மணம் நாறுகின்ற கூந்தலும் இனிய சொற்களும் உடையவளாயும் உள்ளனள். இவளை விட்டுப் பிரிந்து, செய்வினைபற்றிய முயற்சிகளிலேயே உள்ளமானது என்னை இழுத்தலாலே, என் நெஞ்சுதானும் 'பிரிவே சிறந்தது என்று உறுதி கொள்ளுமாயின், அதற்குக் காரணமாகிய வறுமையாலே வந்தெய்துகின்ற இனிவரவானது, அப் பிரிவினுங்காட்டிற் பொறுத்தற்கு அரியதாகும்! இதுதான் என்னவோ?

சொற்பொருள்: 'கருவிளை' என்றது கருங்காக்கணத்தினை. அதன் மலரின் வண்ணமும் அமைவும் மகளிர் கருங் கண் களுக்கு உவமை கூறப்பெற்றது. காற்றாலே அசைந்தாடும் அது, ஆடுகின்ற மயிலினது பீலிபோலத் தோன்றும் என்பது சிறந்த உவமையாகும். செடியின் பசுமையை மயிற் பீலியோடும், அதன் பூக்களைப் பீலியின் கண்களோடும் பொருத்திக் கண்டு இன்புறுக. சாய்தல் - குன்றுதல். துனி - வருத்தம்.படர்-படரும் காமநோய். குவளை நாறும் கூந்தல்-குவள மலரைச் சூடியதனாலே, அதன் மணங்கமழு கின்ற கூந்தல்.

விளக்கம்: 'ஊர்துஞ்சு யாமத்து' இவள் துயரத்தை அருகிருந்து தேற்றித் தெளிவிப்பவரும் இலராக, இவள் தனியேயிருந்து தன்னையே வெறுக்கும் பெருந்துன்பத்தை அடைவாளோ என்று கலங்குகின்றான். 'பணைத்தோள்' என்பது முதலாகிய அவளது உருவத்தெழிலைக் கூறியது, இவளை முயங்காது பார்த்தே இருப்பினும், அதுவே இனி தாகும் என்று வியந்ததாம், 'தேமொழி' என்பது, பார்த்து இன்புறாத அளவினும் அவள் பேசக் கேட்பினும் அதுவே இன்பமாகும் என்றதாம். இன்பந்தரும் இவையிற்றை இழந்தேமாய், இவளையும் ஏங்கி நலிந்து நலங் கெடுமாறு கைவிட்டுப், பிரிந்து போவதற்கும் நெஞ்சம் தூண்டுவதாயின் நற்றிணை தெளிவுரை

வறுமையாலே வருகின்ற பொறுத்தற்கு அரிது, என்று

கின்றான்.

135

இளிவரவுதான் எத்துணைப் அதனை நினைத்துச் சோர்

இதன் பயன், அவன் தன் செலவைக் கைவிட்டவனாக இல்லத்தே தங்கி விடுபவனாவன் என்பதாம்.

இன்பமும் பொருளுமாகிய இரு பெருந் தேவை களுக்கு நடுவே சிக்கி ஊசலாடுகின்ற இளமைப் பருவத் தினரின் உள்ளத்தை ஓவியப்படுத்திக் காட்டும் செய்யுள் இது.

263. பிறைவனப்பு இழந்த நுதல்!

சிறந்த

பாடியவர் : இளவெயினனார். திணை: நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.

[ (து.வி.)

தலைமகனானவன் ஒருசிறைப் புறமாக வந்திருப்பதை அறிந்த தோழி, அவனுக்குத் தலைவியை விரைய வந்து மணந்துகொள்ளல் வேண்டுமென்று அறி வுறுத்தக் கருதினவளாக, அவன் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.)

பிறைவனப் பிழந்த நுதலும் யாழநின் இறைவரை நில்லா வளையும் மறையாது ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு உரையவற் குரையா மாயினும் இரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முட முதிர் நாரை கடல்மீன் ஒய்யும் மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் கரப்பவும் கைம்மிக்கு, உரைத்த தோழி! உண்கண் நீரே.

5

10

தன்

தெளிவுரை : தோழீ! பிறையைப்போன்ற ற வனப்பை எல்லாம் இழந்துவிட்ட நினது நெற்றியையும், தங்குதற்கு உரியதான இடத்திலேயே நில்லாதபடி கழன்றோடும் நின் வளைகளையும், மறைத்தேனும் கூறாதே எதிராக வந்தே ஊரவர் அலர்தூற்றும் பழியுரைகளையும், 136

நற்றிணை தெளிவுரை

நமக்குள்ள நாணத்தாலே மறைத்தேமாய், நாமும் அவருக்கு நம் துயரைப்பற்றி ஒரு சொல்லேனும் சொல்லே மாயினேம். எனினும்,

பசியது மிகுதியாலே இரைதேடி வருதற்குச் செல்லு தலைத் தான் விரும்பியபோதும், தலைச்சூலாலே உண்டாகிய இயங்கமாட்டாத தன் வருத்தத்தினாலே, கானற் கழிக்குத் தான் செல்லாது, கழனிக் கண்ணேயே தங்கியிருந்து விட்டது வளைந்த வாயையுடைய நாரையின் பேடை ஒன்று; அதற்கு, உடல் வளைந்த நாரைச் சேவலானது, கடலிடத்து மீனைப் பற்றிக் கொண்டுபோய் அன்போடுங் கொடுக்கும்; அத்தகைய மென்னிலமான கடற்கரைத் தலைவனைக் கண்டதும், பலகால் நாம் ஒளித்துக்கொள்ள முயலவும், அதற்கு உட்படாதே கைகடந்து, நின் மையுண்ட கண்களி லிருந்து வெளிப்படுகின்ற கண்ணீரே நம் வேட்கை. நோயை எடுத்துச் சொல்வதாயிற்றே! இனி, யாமும்

தான் செய்வோமோ?

1

யாது

சொற்பொருள்: இறை - முன்கை, கௌவை - பழிச்சொல். கடுஞ்சூல்-தலைச்சூல். கானல் - கழிக்கானல். கொடுவாய். வளைந்த வாய். முடமுதிர் நாரை - உடல்வளைந்த நாரைச் சேவல். கைம்மிகல் - அளவு கடந்து வெளிப்படல்.

.

விளக்கம்: தலைமகள் தானுறு துயரைத் தானே தலைமகனுக்கு எடுத்துச் சொல்வது என்பது பெண்மை இயல்பு ஆகாமையின், அதனைக் காப்பதற்கு முயன்றனர் என்றனள். 'தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல், எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை' என்பது களவியல் விதியாகும் (தொல். களவு. 27). ஆயின், அவனைக் கண்டதும் பெருகிவழியும் கண்ணீர், அவனுக்கு அவளது நோயின் மிகுதியைக் காட்டும் என்பதாம்.

தன்னாட்டுப் பறவையும், தன் பேடைக்கு நலிவு தீர்த்தற்கு விரையச் செயல்படுகின்ற அன்புடைமையைக் காண்பவன், தானும் அதனை மேற்கொள்ளாததனை எண்ணி வெட்கமுற்று, விரையச் செயற்பட முனைவன் என்பதாம். தலைவியின் வனப்பிழந்த நெற்றி முதலாயினவற்றைத் தலைவன் கண்டறிந்தானல்லையோ எனின், அவனது ஆர்வத்து மிகுதியும், தலைவியது வேட்கை மிகுதியும் அவற்றைக் கண்டும் உணரவிடாது செய்தன வென்று கொள்ளுக. 2

நற்றினை தெளிவுரை

137

உள்ளுறை : வயலிலே வயலிலே தங்கிய பேடைக்கு நாரைப் போத்து கடல்மீனைக் கொண்டுவந்து தந்து உதவுதல் போலத், தலைவியை இல்லத்தே கொண்டுவைத்துத் தானும் பொருளைத் தேடிவந்து அவளுடனே கூடி இன்பமான இல்வாழ்க்கையினை நடத்துதல் வேண்டும் என்பதாம்.

264. ஐதுவிரித்த அணிகிளர் கலாவம்!

பாடியவர்:ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். திணை : பாலை. துறை: உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது (1); உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம் (2).

((து.வி.) உடன் போக்கிலே தலைவியோடு செல்லும் தலைவன்; அவளது வருத்தங்கண்டு, அவளைத் தேற்றி, விரையச் செல்லுமாறு நயமுடன் கூறி வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது (1); அவன் தன் ஊர் அணிமைக் கண் வந்தது எனக் காட்டி அவளை விரைவுபடுத்தியதும் ஆம் 2.]

பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு வான்தளி பொழிந்த காண்பின் காலை அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின் வீபெய் கூந்தல் வீசுவளி உளர ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே! வேய்பயி லிரும்பிற் கோவலர் யாத்த ஆபூண் தெண்மணி இயம்பும்

உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் லூரே!

5

தெளிவுரை : மடந்தையே! பொழுதும் ஒளிகுறைவுற்ற தாய் மறையத் தொடங்குகின்றது. மூங்கில் செறிந்துள்ள குறுங்காட்டுப் புறங்களிலே, கோவலர்கள் பசுக்களுக்குக் கட்டியுள்ள அழகிய தெளிவான ஓசைகொண்ட மணிகளும் ஒலிக்கத் தொடங்கின. அவ்விடத்தே காண்பாயாக!எம் சிறிய நல்ல ஊரும் அதோ தோன்றுகின்றது. பாம்பு அச்ச முற்றுத் தனது புற்று வளையிடத்தே சென்று பதுங்குமாறு முழக்கமிட்டபடி, வலமாக மேலெழுந்து வானமும் மழையைப் பொழிந்தது; அதனாலே நிலப்பரப்பு எங்கணும் காண்பதற்கு இனிதான செடி கொடிகளாலே பசுமை DB.--9 138

நற்றிணை தெளிவுரை

பெற்றுத் தோன்றும் கார்ப்பருவமும் வந்தது; அக் கார்ப் பருவத்திலே, அழகு விளங்குகின்ற தன் தோகையைப் பைய விரித்தபடியே ஆடலைத் தொடங்கும், நீலமணியைப் விளங்கும் கழுத்தைக்கொண்ட மயிலைப்போல, நினது பூச்சூட்டப் பெற்றிருக்கின்ற கூந்தலானது வீசுகின் காற்றாலே அசைந்தாட, முற்பட நீயும் செல்வாயாக!

போல

சொற்பொருள்: அளை - பாம்புப் புற்றாகிய வளை. செறிய- பதுங்கிக்கொள்ள. வலனேர்பு-வலமாக மேலெழுந்து.தளி- மழை. காண்பு இன் காலை-காட்சிக்கு இனிதான பொழுது; இது கார்ப்பருவம். அணிகிளர் கலாவம்-அழகு சுடரிடுகின்ற தோகை. ஐது விரித்து - பைய - விரித்து; வியக்கும்படி விரித்தும் ஆம். மணி- நீலமணி. உளர - அசைந்தாட பொழுது எல்லின்று - ஞாயிறும் ஒளிகுன்றப் பொழுதும் - சாய்ந்தது. இரும்பு-குறுங்காடு, தெண்மணி-தெளிவான ஓசையுடைய மணி. சிறுநல் ஊர்-சிறிய நல்ல ஊர்.

விளக்கம்: தலைவிக்கு மயிலையும் விரிந்து ஆடும் அவள் கூந்தலுக்குத் தோகையையும் உவமித்தனர். 'கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும்' என ஐங்குறு நூற்றும் (ஐங்.300), விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் கலாவ மஞ்ஞையின் காண்வர இயலி' எனப் புறநானூற்றும் (புறம்.133) வருதல் காண்க.

தன்னூர் மிகமிக அணிமைக் கண்ணேயே உளது என்பான் ஆபூணும் மணியின் ஒலியைக் ஒலியைக் கேட்குமாறு உரைத்தான். விரைந்து செல்வாயாக எனச் சொல்வான் கூந்தல் வளியுளர ஏகுதி என்கின்றான். அப்படி ஏகுகின்ற காட்சியைக் கண்டு தானும் இன்புறுதலைக் கூறுவான், அவளது எழிலை வியந்தானாக, 'அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல ஏகுதி' என்கின்றான்.

இதனைக் கேட்ட அவளும், தன் அயாவொழிந்தாளாக, மனத்தே ஊக்கமும், தன் காதலனது ஊரைச் சென்றடையும் விருப்பமும் மேலெழ, விரைந்து நடத்தலைச் செய்வாள் என்பது இப்படிச் சொல்வதன் பயனாகும். கார்ப்பருவம் கூறியது உடனுறைந்து மகிழ்தற்கு உரிய பருவம் அதுவாதலால். ஊர் அணிமைத்தாதலின் அச்ச மின்றிச் செல்லலாம் என்பதுமாம். நற்றிணை தெளிவுரை

265. கலாவத்தன்ன ஒலிமென் கூந்தல்!

139

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.

[ (து-வி.) தலைவியைத் தோழியின் ஒத்துழைப்போடு அடைதலை விரும்பினான் தலைவன். அவள், அவன் நிலைகண்டு, 'இவன் யாதோவொரு குறையுடையவன் போலும்!' என உய்த்து உணருவதற்கு முன்பே, தலைவனின் ஏக்கம் மிகுதியா கிறது. அவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல் அள்ள லாடிய புள்ளி வரிக்கலை வீளை யம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத் தன்ன வார மார்பின் சிறுகோற் சென்னி ஆரேற் றன்ன மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் கலிமயிற் கலாவத் தன்ன விவள் ஒலிமென் கூந்தல் நம்வயி னானே.

5

தெளிவுரை : காய்ந்துபோன புல்லை மேய்ந்ததனாலே உதிர்ந்த முதிர்ந்த கொம்பினை உடையதும், புள்ளியையும் வரியையும் உடையதுமான கலைமானானது, சேற்றிலே

கிடந்து புரண்டு தன் வெம்மையைத் தீர்த்துக்கொள்ளும். அத்தகைய, ஒலியோடு செலுத்தப்படும் அம்பினைக் கொண்ட வரான வில்வீரர்களின் தலைவனும், பொலிவு பொருந்திய தன் தோளிலே கவசம் பூட்டியிருப்போனுமாகிய மிஞிலி என்பவன். பேணிக் காத்துவரும் பாரம் என்னும் மலைநாட் டூரைப் போன்றதும்,

ஆத்திமாலை சூடிய மார்பினனான சோழன், தன் கையிற் சிறிதான செங்கோலைக் கொண்டபடி சிற்றரசரை வரவேற் கும், 'ஆரேற்று' என்னும் அருளைப் போன்றதும்,

மாரிபோல வழங்கும் கொடை மிகுதியும் கள்ளுணவு முடைய ஓரி என்பானின் கொல்லி மலையிடத்துள்ள செருக்கிய மயிலைப் போன்றதுமான,

.: 140

நற்றிணை தெளிவுரை

அழகினையுடையவள் இவள் ஆவாள். இவளது தழைத்த மென்கூந்தலானது நமக்கே உரியவாகும் அல்லவோ!

சொற்பொருள் : இறுகுபுல் - காய்ந்துபோன கரட்டுப்புல்; தரை ஈரமற்று இறுகிப் போகப் புல்லும் கரடுபட்டுப் போயிற்று என்க. அதனை மேய்தலாலே கோடு தரையிற் பட்டுப்பட்டுத் தெரித்து வீழ்தலின் 'அறுகோட்டு' என்றனர். முற்றல் -முதிர்ச்சி; கலையின் கோடு முதிர்ச்சியடைந்ததும் கழன்று வீழும்! அதுபோது உண்டாகும் நோவைத் தீர்த்துக்கொள்ள, அது சேற்றிலே ஆடியது என்று கொள்க. அதுவும் அச்சமின்றி வாழும் சிறப்புடையது மிஞிலி காக்கும் பாரம்!

'சிறுகோல்' என்றது செங்கோலினை; அது செங் கோன்மையின் அடையாளமாகச் சோழன் கையிலே திகழ்வது. 'ஆரேற்று' என்றது, சோழன் தனக்கு உட்பட்ட தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலை சூடிப் போற்றும் ஒருவகை விழாக் கோலம்.

கலிமயில் - செருக்கிய மயில்.

விளக்கம்: நோயுற்றுத் தன் கழன்ற கோட்டைவிட்டு எஞ்சிய பகுதியைச் சேற்றிலாட்டியபடி இருக்கும் கலை மானுக்குத் துன்பஞ் செய்யாது ஏகும் விளை அம்பின் வில்லோர் என்று, அவரது அருளுடைமையைக் கூறினர்.

தனக்கு உட்பட்டாரையும் வரவேற்றுப் போற்றி, அவர்க்கும் தனக்கு ஒப்ப ஆத்திசூடி மகிழும் சோழனின் சிறந்த அருளுந் தன்மையையும் கூறினர்.

மாரிபோல வழங்கும் வண்மையும், மகிழ்வூட்டும் கள்வளமும் கொண்ட கொல்லிமலையிலே செருக்கித் திரியும் மயிலின் எழிலையும் கூறினர்.

இதனால், தலைவியது குடிச்சிறப்பும், அருள்தல் உள்ளமும் காட்டி, அவள் தனக்கே உரியவள் என்பதும் கூறுகின்றான் தலைவன்!

போற்றப்பட்டோர்: கொண்கான நாட்டு நன்னனின் படைத்தலைவருள் ஒருவனாகிய மிஞிலி என்பவன்; 'சென்னி" என்பான் கரிகாலனின் தந்தையாகிய இளஞ்சேட் சென்னி; ஓரி கொல்லி மலைக்குத் தலைவன்.

கூந்தல் நம்வயினானே' என்றது, அது தன் ஒருவனாலேயே தீண்டற்கு உரியதென்னும் உரிமை பற்றியாம்! கலிமயிற் நற்றிணை தெளிவுரை

.'

140

கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே' என வரும் குறுந்தொகையும் இதனை விளக்கும் (குறுந்.225). கணவரை இழந்த மகளிர் கூந்தலை மழித்து விடுவது இயல்பான பண்டைய மரபு. இதனைக் 'கொய்ம் மழித் தலையொடு கைம்மையுற' எனவரும் புறப்பாட்டடி யாலும் அறியலாம் (புறம்.261).

266. குறுங்காற் குரவின் குவியிணர்!

பாடியவர் : கச்சிப்பேட்டு இளந்தச்சனார். திணை: முல்லை. துறை : தலைமகனைச் செலவுடன் பட்டது (1); கடிநகர் வரைப்பிற் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் த தோழி 'நும்மாலே யாயிற்று' என்று சொல்லியதூம் ஆம் (2).

[ (து-வி.) தலைமகன் வினைவயிற் பிரியக் கருதியதறிந்த தோழி, அவனை நெருங்கி,தாம் அவனது செலவுக்கு உடன் பட்டு ஆற்றியிருப்பதாகக் கூறி, அவனைக் கவலையற்றுச் சென்று வருமாறு உறுதிமொழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது (1); தலைமகன், வரைவிடைப் பிரிந்து சென்ற வன், தலைவியை மணம்வேட்டுச் சான்றோருடன் அவள் இல்லத்துக்கு வந்தபோது, தோழி, 'இத் திருமணமானது நுமது முயற்சியாலேயே நடந்தது' என அவனைப் பாராட்டு வாளாக மகிழ்ந்து கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.] கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் அகலு லாங்கண் சீறூ ரேமே அதுவே சாலுவ காமம் அன்றியும்

எம்விட் டகறிர் ஆயின் கொன்னொன்று. கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு இரீஇய காலை இரியின்

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே!

5

தெளிவுரை : ஐயனே! நீவிர் வாழ்வீராக! புன்செய்க் காட்டிடத்தே வாழ்பவர் ஆப் பயன் கொள்வாரான கோவலர். அவருக் குரித்தான குறுகிய புனங்களுக்கு அயலாகக் குறுகிய அடிமரத்தையுடைய குரா மரங்கள் குவிந்த கொத்தாகிய வெண்பூக்களைப் பூத்திருக்கும். 142

நற்றிணை தெளிவுரை

ஆடுகளை மேய்ப்போனாகிய இடையன் அவற்றைத் தன் தலையிலே சூடிக் கொள்வான் அவ்விடத்தாகிய அகன்ற உள்ளிடங்கொண்ட மனைகளையுடைய சிற்றூரிடத்தே வாழ்! திருப்பவர் யாம். அங்ஙனம் வாழ்வதொன்றுமே எம் விருப் பத்திற்குப் பொருந்துவதாயிருக்கும். அல்லாமலும், எம்மை இவ்விடத்தேயே தனித்து இருக்குமாறு நீர்தாம் பிரியக் கருதுவீராயின், நுமக்கு ஒன்றைச் சொல்லுகேன். ஆயமும் தாயருமாகிய எம் பிறந்தகத்துச் சூழலினின்றும் வேறு படுத்தி எம்மைக் கொணர்ந்து, நுமது இல்லத்தின் கண்ணே இருக்கச் செய்த பொழுதிலே, யாமும் வருந்தியவிடத்து, பருங்குடியிலே நிலவும் அந் நிலைமைகள் எக்காலத்தும் பெருமை குன்றுவனவாகும் அல்லவோ!

-

சொற்பொருள்: கொல்லை - புன்செய்ப் பகுதியாகிய தோட்டக்கர்ல்கள். கோவலர் - பசுநிரை மேய்ப்போர். குறும் புனம் - குறுகிய அளவுள்ள தினைப்புனம். குறுங்கால்- குறுகிய அடிமரத்தையுடைய. குரவு-குராமரம். ஆடுடை இடை மகன் ஆடுகளை மேய்க்கின்றவனாகிய இடைக்குலத்தான். அகலுள் - அகன்ற மனைப்பகுதி. சீறூர் - சிற்றூர். வேறுபட்டு- தாயரும் ஆயருமாகிய பிறந்தகச் சூழலின்று வரைந்து கொண்டு, தன் மனையகத்தே வேறுபட்ட சூழ்நிலையிலே இருக்கச் செய்த நிலை. இரியின்-வருந்தின்.

விளக்கம்: குரவு நெடுமரமன்று; குறுமரவகை சார்ந்தது என்பதனால் 'குறுங்கால் குரவு'என்றனர். ஆடுடை இடையன் என்றது, ஆடுகளை உடைய இடையன் என்றும், களித்து ஆடுகின்ற ஆட்டத்தை உடையவனாகிய இடையன் என்றும் பொருள்தரும். சிற்றூரே மாதலின்' என்று கூறியது, யாம் ஒருவர்க்கொருவர் உதவுகின்ற கலந்துறை வாழ்விலே கூடியிருப்பவராவேம் என்றதாம். சிற்றூருள் ஒருவர்க்கு வரும் இன்பதுன்பங்களை அனைவருமே கலந்து மகிழ்ந்தும் வருந்தியும் ஏற்பது இயல்பு.

இரண்டாவது கூறிய துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுங் காலத்தே:-

வரைவிடை வைத்துப் 'பிரிந்தபோது, யாம் எம் சிற்றூரின் கண்ணுள்ள எம் பெற்றோர் இல்லின் கண்ணே இருந்தேமாய் ஆற்றியிருந்தனம்.நீர்தாம் நும் முயற்சியாலே துபோது மணவினைக்கு முயன்று வந்துள்ளீர். அனைத்தும் நும்மாலே ஆயிற்று. நும்மை மணந்து நும் இல்லம் புகுந்து இல்லறம் ஏற்கும் தலைவி, நும் பேரில்லத்தின் கண்ணும் நும் நற்றிணை தெளிவுரை

குடிப்பெருமைக்குக்

143

குறை ஏற்படாவண்ணம் நடந்து கொள்வாள் என்னும் கருத்துப்படப் பொருளைக் கூட்டி உரைத்துக் கொள்க.

267. வந்துநின்ற வயமான் தோன்றல்!

பாடியவர்: கபிலர்.திணை : நெய்தல். துறை: தோழி, காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப் புறமாகச் சொல்லியது (1); வரைவு கடாயதுமாம் (2)

[(து வி.) களவுறவாலே தலைவியின் மேனியிடத்தே தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், அவளைத் தெய்வம் அணங்கிற்று எனக் கருதினள். அவளை இல்லத்தில் காவ லிட்டுச் சிறையும் வைத்துப் பேணினள். அவ்வமயம் தலைவியது காமநோய் மிகுதலைக் கண்டு வருந்தின தோழி, ஒருநாள், தலைவன் ஒருசார் வந்து நிற்பதைக் கண்டவள், அவன் கேட்டு உணருமாறு, அவனைக் காணாதாள் போன்று, தனக்குள் சொல்லிக் கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது. (1); இவ்வாறு சொல்லி வரைவு கடாயதும் ஆகும்.(2)]

நொச்சி மாவரும் பன்ன கண்ண

எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொழுதி இலங்கெயிற் றேஎர் இன்னகை மகளிர் உணங்குதினை துழவும் கைபோல் ஞாழல் மணங்கமழ் நறுவீ வரிக்குந் துறைவன் தன்னொடு புணர்ந்த வின்னமர் கானல் தனியே வருதல் நனிபுலம் புடைத்தென வாரேல் மன்யான் வந்தனென் தெய்ய சிறுநா வொண்மணித் தெள்ளிசை கடுப்ப இனமீன் ஆர்கை யீண்டுபுள் ளொலிக்குரல் வைமகன் என்ன வளவை வயமான். தோன்றல் வந்துநின் றனனே!

5

10

தெளிவுரை : நொச்சியது கரிய அரும்பினைப் போன்ற கண்களையுடையன ஞெண்டுகள். மணலிடத்தேயிருக்கும் அத்தகைய ஞெண்டினது பெரிதான சுற்றத்தோடுங்கூடிய கூட்டமானது, ஞாழலின் மணங்கமழும் உதிர்ந்த மலர் களைத் தம் கால்களாலே வரிவரியாக வரித்துக் கோலஞ் 144,

நற்றிணை தெளிவுரை

செய்தபடி யிருக்கும். அதுதான், விளங்குகின்ற பற்கள் ஒளிசெய்கின்ற அழகிய இனிய நகையினையுடைய, குன்றத்து மகளிர்கள் காயவைத்திருக்கும் தினையைத் தம் கை விரல் களாலே துழாவி விடுவதனைப் போன்றும் தோற்றும். அத்தகைய துறைக்கு உரியவன் தலைவன்! அவனோடு தலைவி யைக் கூட்டுவித்த, விருப்பத்தையுடைய கானற்

சோலை

யிடத்தே, தலைவியில்லாதே, யான் மட்டும் தனியே வருதல் மிகவும் வருத்தம் உடையதென்று கருதிய யானும், அவ் விடத்திற்குப் பெரும்பாலும் வாராதிருந்தேன். ஆயின், ஒருநாள் அவ்விடத்துக்கு யானும் வந்தேன். அவ் வேளை யிலே, சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியினது தெளிந்த ஓசையைப் போல ஓசை எழுப்பியபடியே, மீனினத்தைத் தின்னுகின்றதற்கு வந்து கூடுகின்ற புட்களின் ஒலிக்குரலைக் கேட்டேன். கேட்டவள், 'இவ்வோசை நம் தலைமகனது தேரிற் கட்டியுள்ள மணியோசையினைப் போன்றது' என்று சொல்லுவதற்கு நினைந்த அளவிலேயே, வலிமிக்க குதிரை கள் பூட்டிய தேரைச் செலுத்தியபடியே அவனும் வந்து நின்றனன். ஆனால், இனி அவர்கள் கூட்டந்தான் இவ் விடத்தே நேர்தல் வாயாது!

சொற்பொருள்: மா அரும்பு - கருமையான பூவரும்பு. எக்கர் - மணல்மேடு. இருங்கிளைத் தொழுதி-பெரிய சுற்ற மாகிய கூட்டம். துழவும் - துழாவி விடும்; இது தினை நிரலே போலக் காயும் பொருட்டாக மகளிர் செய்யும் வினை. ஞாழல் - சுரபுன்னை. வரிக்கும் - கோடிட்டுச் செல்லும். அமர் கானல் - விருப்பமுடைய கானற் சோலை; விருப்பம் உடையதானது அதன்கண் தலைவனும் தலைவியும் களவிற் கூடி இன்புற்றிருந்த காரணத்தால். நனி புலம்பு-மிகுதி யான வருத்தம்; இது பழைய களிப்பையும் தற்காலத்துப் பிரிவையும் நினைதலால் உண்டாவது. வயமான் வலிய குதிரைகள்.

விளக்கம்: புள்ளொலி கேட்டதனை மணியொலி என மயங்கினாள் என்றாலும், அவன் தேர் வந்ததும் உண்மை யாதலின், இது து படைத்துக் கொள்க.

அல்லது,

கூறியதெனக்

அவன் தேர்வரவால் கலைந்து மேலெழுந்த

புட்குரல் எனவும் கருதுக.

.

இற்செறிப்பாலும் காப்பு மிகுதியாலும் களவுக்கூட்டம் இனிமேல் வாயாது; தலைவியின் காமநோய் பெருகுதலால் அவள் இறந்து படுதலும் நிகழக் கூடும்; எனவே இனி நற்றினை தெளிவுயார

145

விரைந்து அவளை வரைந்து மணந்து கொள்ளலே செயத் தக்கது என்று தலைவன் துணிவானாவது இதன் பயனாகும்.

இறைச்சி : ஞாழலின் உதிர்ந்த பூவை ஞெண்டு துழவும் என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி வாடியவளாக இற் செறிக்கப் பெற்றிருப்பாளான தலைவியை, ஏதிலாட்டியர் பழிச்சொற்கள் பலவுங்கூறி வருத்தா நிற்பர் என்றதாம். காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்தே கூறினமை யால், இவ்வாறு கூறுதலும் அறத்தொடு பொருந்துவ தென்க.

268. காதல் செய்தலும் காதலம் !

காமக்

பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார்; காணிபார் எனவும் பாடம். திணை : குறிஞ்சி. துறை: தலை மகட்குச் சொல்லியது (1), தலைமகன் வந்து ஒழுகவும் வேறு பாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம் (2)

[ (து .வி.)

தலைவன் சிறைப்புறமாகத், தலைமகட்கு உரைப்பாள் போலத் தோழி தலைமகன் சுேட்டுணருமாறு சொல்லியதாக அமைந்த செய்யுள் இது (1); தலைவன் கள விற்கூடிப் பிரியுங்காலச் சிறுபிரிவிலும் தலைவிக்கு உண்டான வேறுபாடுகளைக் காணும் தோழி, 'நீதான் இப்படி யாயினை' என அவளுக்கு உரைப்பாள் போலத், தலைவன்பால் வரைவு வேட்கையை உண்டாக்கியதாகவும் கொள்ளப்படும்.]

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க

மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக்

கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ

ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த

நாறுகொள் பிரசம் ஊறுநா டற்குக்

காதல் செய்தலுங் காதலம் அன்மை

யாதனிற் கொல்லோ?-தோழி/- வினவுகம்

பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே.

5

தெளிவுரை : தோழீ முற்றத்திலே புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறு வோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை

I 146

நற்றிணை தெளிவுரை

ஏற்பாடு செய்தனள். அச்சம் பொருந்திய அகன்ற இடத் தேயுள்ள சுனைக்கண்ணே நீர் நிறையும்படியாக, மேக மானது பெரும் பெயலைச் செய்வதற்குத் தலைப்பட்ட மிகவும் நெடிதான குன்றத்திடத்தே, கரிய கரம்புகளை யுடைய குறிஞ்சியது வன்மையில்லாத வெண்மையான பூக்களிலே, வேட்டுவரது இல்லங்களிலே ஓவியத்துக் கண் டாற்போலக் கட்டப் பெற்றுள்ள, மணங்கமழும் தேன் அடைக்கு வேண்டியவளவு தேன் ஊறிக்கொண்டிருக்கின்ற நாடன், நம் தலைவன்! அவனுக்கு யாம் பலபடியாகக் காதல் செய்து ஒழுகியபோதும், அவனாலே அந்த அளவுக்கு யாமும் காதலிக்கப்படாமைதான் எந்தக் காரணத்தாலோ?இதனை யாமும் வேலனிடம் வினவுவோம்; வருக, தோழி!

"

.

சொற்பொருள் : சூர் - அச்சம். நனந்தலை - அகன்ற இடம். மால்பெயல் - பெரும் பெயல். மன்னெடுங்-மிகவும் நடுமையான.மதனில் - வலிமையிலவாகிய; மென்மை வான்பூ - வெண்மையான பூ .

மிகுந்த.

ஓவு - ஓவியம். ஓவு-ஓவியம். இழைத்த -கட்டியுள்ள; தேனீக்கள் இல்லச் சார்பிலே கட்டியுள்ள தேனடையானது ஓவியந் தீட்டினாற்போல இல்லத்தை அழகு செய்தபடி இருந்தது என்பதாம். பிரசம் - தேன். கடிகொள்ளல் - விளக்கங் கொள்ளல்.

-

விளக்கம் : தலைமகன் வரைந்து கொண்டு வருதலை நினையாது களவினையே நாடியவனாதலைக் கண்டு, அவனுக்குத் தலைவியின் நோயை அன்னை அறிந்தனள் என்பதனையும், இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனையும்,அவள் அவனின்றி வாழாள் என்பதனையும் குறிப்பாக உணர்த்தக் கருதுகின்ற தோழி இவ்வாறு உரைக்கின்றனள். இதனைக் கேட்டலுருவானாகிய தலைமகன், தலைவிபாற் தலைவிபாற் பெருங் காதலன் தானுமாதலின், தலைவியை மணந்து கொள்ளுதலை நினைந்து செயற்பட முற்படுவானாவன் என்பது இதன் பயனாகும். 'காதல் செய்தலும் காதலம் அன்மை' என்றது, அவன் இன்ப மாத்திரையே த்ம்மை விரும்புகிறவனாயினான் என்று வருந்துவதாகும்.

உள்ளுறை : குறிஞ்சிப் பூவின் தேனானது இல்லத்தே இழைத்திருக்கும் தேனடையிலே ஊறும் என்றது, சோலைக் கண்ணே தலைவனால் தலையளி செய்யப் பெற்ற நினைவு களாலே, இல்லத்துச் செறிப்புண்டிருக்கும் தலைவியும் இறந்துபடாளாய் உயிரோடிருப்பாள் என்பதாம். }

நற்றிணை தெளிவுரை

269. பாலார் துவர்வாய்ப் புதல்வன்!

147

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை. துறை: தோழி வாயின் மறுத்தது (1); செலவழுங் குவித்ததூஉம் ஆம் (2).

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து வந்தானாகிய தலைமகன் விடுத்த தூதர்கள் சென்று தோழியை வாயில் வேண்ட. அவள் தலைவனது செயலைக் கடிந்து அதற்கு மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் (!); பிரியக் கருதிய தலை மகனுக்குத் தலைவியின் நிலைமையை அவன் வாயிலர் கேட்பக் கூறிப் பிரிவைக் கைவிடத் தூண்டும் வகையில் அமைந்த செய்யுள் எனினும் பொருந்தும் (2).]

குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன் மாலைக் கட்கின் மார்பூர்பு இழிய

அவ்வெயி றொழுகிய செவ்வாய் மாண்நகைச் செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி திருமுகத் தலமருங் கண் இனைந் தல்கலும் பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார் சிறுபல் குன்றம் இரப்போர்

அறிவார் யாரவர் முன்னி யவ்வே.

.

5

தெளிவுரை : குரும்பை போன்ற மணியைக் கொண்ட ணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும், பால் உண்ணு கின்ற சிவந்த வாயினையும், மற்றும் பலவான பசும்பொன் கலன்களையும் உடையவன் நம் புதல்வன். அவன். மாலை விளங்குவதும், கண்ணுக்கு இனிதானதுமாகிய தலைவனின் மார்பினிடத்தே ஏறியும் இறங்கியுமாக விளையாட்டு அயர்வான். அதனைக் கண்டு மகிழ்ந்த அவனது அழகிய எயிறுகள் நிரல்பட அமைந்த சிவந்த வாயிடத்தே மாட்சிமைப்பட்ட நகையும் தோன்றும்! குற்றமில்லாத கோட்பாட்டை உடையவளான உயிர்போல விரும்பப் பட்ட காதலியானவள் அதனைக் கண்டு பொறாது, தன் திருமுகத்திலே உலவும் கண்கள் கலங்கியவளாவாள். நாள்தோறும் பெருமரத்தைச் சுற்றித் தழுவிப் படர்ந் திருக்கும் வள்ளிக்கொடியைப் போல, நம்மையும் மேலே செல்லவிடாது பிணித்துக் கொள்வாள் என்று அவர்தாம்

> 148

நற்றிணை தெளிவுரை

கருதிற்றிலர். சிறிய பலவாகிய குன்றங்களைக் கடந்து செல்வாரும் ஆயினர். அவர் உள்ளத்தே நினைபவற்றை அறியவல்லார் தாம் யார்? அறிந்தோரைப்போல நீவிரும் வந்து வாயில் வேண்டுவதுதான் எதற்காகவோ?

சொற்பொருள் : குரும்பை மணிப்பூண் - குரும்பைபோலச்

செய்த மணிகள் கோத்த அரையிற் கட்டும் கிண்கிணி. கட்கின் மார்பு-காண்டற்கு இனிமை தருவதாகிய மார்பு. ஊர்பு இழிதல்-ஏறியும் இறங்கியும் விளையாட்டயர்தல். மாண் நகை - மாட்சி கொண்ட சிரிப்பு ; இது புதல்வனின் விளையாட்டைக் கண்ட இன்பத்தால் தோன்றியது. வள்ளி- வள்ளிக்கொடி. இறப்போர் - கடந்து செல்வோர்.

விளக்கம் : காதலனது மார்பிலே ஊர்ந்து விளையாடும் புதல்வனின் விளையாட்டுச் செயலைக் கண்ட தலைவி, அவன் மார்பினைக் கிண்கிணி ஊறுபடுத்தும் எனக் கலங்கியவ ளாய்த், தலைவனைப் பெருமரவள்ளியிற் பிணித்துக் கொண்

டனள் என்க.

அவரது அத்தகைய காதற்பெருக்கையும், புதல்வனது அத்தகைய இனிய விளையாட்டையுமே மறந்து பிரிந்து சென்றவர், இனி யாதுதான் செய்தற்குத் துணியார்? அவர் பேச்சை யாமும் இனி ஒருபோதும் நம்புதற்கில்லோம் என்பதாம்.

காதலனது

முயக்கத்து நினைவினாலேயே அவன் பிரிவை மறந்து யாமும் ஆற்றியிருப்போம் என்று வாயில் மறுத்ததும் ஆம்.

தலைவனாலே விரும்பப்பட்ட பரத்தையர் அவன் குடிக்கு விளக்கஞ் செய்யும் புதல்வரைப் பெற்றுத்தரும் உரிமை இல்லாதவர் என்பதைக் குறிப்பாகக் கூறித் தமது கற்பற உயர் மாண்பினை வாயிலர்க்கு உரைத்ததும் ஆம்.

இதனால், தலைவியின் காதற்பெருக்கையும் மறந்து பரத்தையர் உறவினை நாடிச்சென்ற தளர்ச்சியுடையவன் தலைவன் எள்பதும், அவனது அவனது அச் செயலால் தலைவி பெரிதும் வெகுளி உடையவளாயினாள் என்பதும் விளங்கும். இத்தகு உரிமையும் துணிவும் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழகத்துத் தலைவியர் என்பதும் அறிதல் வேண்டும்.

புதல்வன் தலைவனது மார்பணியைச் சிதைக்க, அதுகண்டு தலைவி மனம் வருந்துவாள் என்பது அவளது காதற் பாசத்தினால் ஆகும்.

1 நற்றிணை தெளிவுரை

270. கூந்தல் முரற்சியிற் கொடிதே!

149

பாடியவர்: பரணர். திணை : நெய்தல். துறை : தோழி வாயில் நேர்கின்றாள், தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால்.

[(து.வி.) தலைமகனின் பரத்தைமை உறவாலே தலைவிக்கு அவன்பால் வருத்தமிகுதி உண்டாயிருந்தது. அவன் மனைக்கு மீண்டு வந்தபோது, அவள் அவனை ஏற்க உடன்படாள் ஆயினாள். அதனையறிந்த தோழி, அவர்களுக் குள் சுந்து செய்விப்பாளாக, அவனைக் குறைகூறுவாள் போலத், தலைவியின் மனமும் அவனுக்கு இரங்குமாறு, அவளும் உடனின்றபோது கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத் தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி உருள்பொறி போல எம்முனை வருந்தல் அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாய் பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா ஏற்பெரி தளித்தனை நீயே பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்

வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

கூந்தல் முரற்சியின் கொடிதே

மறப்பன் மாதோநின் விறல்தகை மையே.'

..

5

10

தெளிவுரை : பெருத்த தூற்றினை உடையதான தாழையிடத்தே அமைந்த தன் கூட்டினிடத்தே இருக்கவிய லாதாகியது ஒரு வண்டு. குளிர்ந்த நறுமணமானது மிகுதி யாகக் கமழ்தலை உடையவும், வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தை உடையவுமான மலர்களைச் சூடியுள்ள, இருளைப்போலும் கருமையான மகளிரது கூந்தலை நோக்கி அது சென்றது. அவ் விடத்தேயுள்ள பூக்களிலுள்ள மிகுதி யான மகரந்தத் துகள்களினுள்ளே ஆடியதனாலே மயக்க முற்று, நிலத்தே அது உருண்டும் விழுவதாயிற்று. அதனைப் போல, எம் முன்பாக வந்து நீயும் வருந்துதல்தான் நினக்கு அழகாயிருக்கின்றது. இதுவல்லாது, இவளை நின்பால் அன்பி னாலே பிணித்துக் கொள்ளுதலுக்காவன எதனையும் நீதான் 150

நற்றிணை தெளிவுரை

தெளியமாட்டாய். பெருத்த தோள்களாகிய செல்வத்தை யுடைய இவளைக் காட்டினும், ஏடா, நீதான் எதனிடத்தே பெரிதும் அன்பு காட்டுகின்றனையோ? இதுதான் -

அழகுடைய

விரிந்த பிடரி மயிராற் பொலி வுற்றவும், விரைந்த செலவைக் கொண்டவுமான நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பலரையும் தோற்று ஓடச் செய்தவனும், அதனைச் செய்து முடித்த வெற்றி வேலினை ஏந்தியவனுமான நன்னன் என்பான், அவ் வரசரது உரிமைமகளிர் கூந்தலைக் கொய்து முறுக்கிய கயிற் றாலே, அவர்களின் போர் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்த கொடுஞ் செயலினும் காட்டில் கொடிதான தாகும். ஆதலாலே, நினது வலிமையான தகுதிப்பாட்டினை யும் யானும் மறந்துவிடுவேன், காண்பாயாக!

சொற்பொருள்: தடந்தாள்-பெரியதான தூறு; தூறு என்றது அடிமரத்தை. குடம்பை-கூடு. நோன்றல் பொறுத்தல்; நோனா- பொறுக்க மாட்டாமை. முனை முன்பாக ;'ஐ'சாரியை. பொறி - வண்டு. பொங்கு துகள் பொங்கும் மகரந்தத் துகள்; துகள் பொங்குதல் வண்டு கிண்டுதலால். தேற்றா - தெளியாத. பெருந்தோள் செல் வம் - பெருத்த தோள்களாகிய செல்வம்; மகளிர்க்குத் தோள்கள் பெருத்திருப்பது பேரழகு தருவதாகலின் அதனைச் செல்வம் என்றனர். அளித்தல் - அன்பு செய்தல். பொற்பு அழகு உளை - பிடரிமயிர். பரி - குதிரையின் விரைந்த செலவுக்குப் பெயர். நன்மான் - நல்ல சாதிக் குதிரைகள். வேந்தர் - அரசர்; இவர் பகையரசராகிய பிண்டன் முதலியோர். முரற்சி - முறுக்கிய தன்மை விறல்- வலிமை.

-

விளக்கம் மணத்தாலே சிறந்த தாழையின்பால் அமைந்த தன் இருப்பிடத்தை வெறுத்துச் சென்ற வண் டானது, பிற பூக்களாலே அழகுபெற்ற மகளிரது கூந்தலி டத்தே சென்று மொய்த்து, அவ்விடத்தே பொங்கிய துகளி லேயும் ஆடியபடி மயங்கித் தரையிலே வீழ்ந்தாற்போல, நீதானும் நின் மனைக்குரிய சிறந்தவளாகிய இவளை வெறுத் துச் சென்று, பகட்டுக் கவர்ச்சியினராகிய பரத்தையரி டத்தே கூடிக் களித்தனையாய் மயங்கி, அந்த அடையாளங் கள் நின் மேனியிடத்தேயும் தோன்றும்படியாக, எம் முன்னேயும் வந்து தாழ்ந்து நிற்பாய் ஆயினை' என்கின்றாள் தோழி. வண்டு தலைவனுக்கும், தாழைக் குடம்பை தலைவிக்

1 நற்றிணை தெளிவுரை

151

கும், வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பரத்தை யருக்கும், உருண்டு வீழ்ந்த தரை தோழிக்கும் உவமை யாகக் கொள்க.

தாழையின் பூவை மகளிர் தம் சடையிலே சேர்த்து முடித்துக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும்போது, அந்தச் சடையினது ே தோற்றம் கூடுபோலத் தோன்றும்; ஆதலின் அதனைச் சூடியிருந்த தலைவியின் கூந்தற்சிறப்பைத் தாழைக் குடம்பை என்றனர். வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல்' கூந்தல்' என்றது, வண்டினங்களைத் தன் நறுநாற்றத்தால் தன்பால் ஈர்க்கும் மலர்களைச் சூடிய இருள்போலும் கூந்தல் என்க. இதனால், தலைவன் தன் குற்றத்தை உணர்ந்து 'நாணத், தன் முன்னே தலைவனைப் பழித்தலைப் பொறாதவளான தலைவியும், தோழியைக் கடிந்து, அவனை ஏற்றுக்கொள்வதற்கு முற்படுவாள் என்க. 271. தாவின்று கழிக கூற்றே!

பாடியவர்: சொல்லியது.

......

திணை : பாலை. துறை : மனை மருண்டு

[(து. வி.) தன் மகள், தான் விரும்பிய காதலனுடனே, தன் வீட்டினின்றும் நீங்கிச் சென்றுவிட்டனளாக, அதனால் எழுந்த பழியுரைகளைக் கேட்டுப் பொறுக்கவியலாதவளா யினாள் அவள் தாய். அவள், தன் மனையிடத்தே இருக்க முடியாதபடி மனம் மயங்கியவளாகப் புலம்பிக் கூறுவது போன்று அமைந்த செய்யுள் இது.]

இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தா தெருவின் வைகுதுயில் மடியும் செழுந்தண் மனையொடு எம்மிவண் ஒழியச் செல்பெருங் காளை பொய்ம்மருண்டு சேய்நாட்டுச்

சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்

5

வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த குவளை யுண்கண் என்மகளோ ரன்ன செய்போழ் வெட்டிய பொய்த லாயம் மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு மாயிருந் தாழி கவிப்பத்

தாவின்று கழிகளற் கொள்ளாக் கூற்றே.

ΤΟ 152

நற்றிணை தெளிவுரை

ம்

தெளிவுரை : கரிய எருமையினது அணித்தாக ஈனப் பெற்ற பெரிய செவியையுடைய கன்றானது, பசிய பூந்தா துகள் உதிர்ந்து எருவாகக் கிடத்தலையுடைய தொழுவினி டத்தே, தங்கப் பெற்ற துயிலை மேற்கொண்டு உறங்கா நிற்கும், செழுமையும் தண்மையும் கொண்டது இம் மனை யாகும். இதனோடு,எம்மையும் இங்கே தனித்திருக்கவிட்டு, எம் மகளும், தன்னோடு வருகின்ற பெரிய காளையாவானின் பொய்ச்சொற்களாலே மயங்கியவளாக, நெடுந்தூரத்தே யுள்ள அவன் நாட்டை நோக்கியும் செல்வாளாயினள். சுவையான காய்களையுடைய நெல்லி மரங்கள் செறிவுற்றுப் போவாரை மேற்போகாதபடி தடுக்கின்ற நெல்லிமரச் சோலையினுள்ளே, தரையிலே வீழ்ந்து கிடந்த கடை திரண்ட காய்களை ஒருசேரத்தின்று, வறண்ட சுனையிடத்தே யுள்ள மிகச்சிறிதளவான நீரையும் குடித்தவளாக, அவளும் போவாளோ! குவளை மலரைப் போலத் தோன்றும் மையுண்ட கண்களை உடையவளான அத்தகைய எம் மகள் தான்-

சிவந்த பனங்குருத்தை வெட்டிப் பதப்படுமாறு பனியிற் போடுதலாகிய மாலைப்பொழுதின் பின்னே, நிலவு விரிகின்றதான இரவுப்பொழுதிலே, அவளைத் தேடிப் பின் சென்றவர் அவளை மீட்டுக் கொணர, அவள் மனைக்கு மீண்டுவருகின்ற அந்தத் தோற்றுவாடிய நிலையைக் காணற் கும், என்னை விதி விதித்துவிட்டதே! அதற்கு முன்பேயே என்னைப் பெரிய தாழியிலேயிட்டுக் கவிக்கும்படியாக, என் உயிரைக் கொண்டு போகாத கூற்றமானது, தானும் தன் வலியழிந்ததாய்த், தன்னையே தாழியிலிட்டுப் புதைக்கும்படி யாக இறந்து ஒழியக் கடவதாகுக!

சொற்பொருள்: வைகுதுயில் - தங்கப் பெற்ற உறக்கம். செழுந்தண் மனை - செழுமையும்,மரச்செறிவால் தண்மை யுங் கொண்டதான். மனை. பெருங்காளை - பெரிய காளை; பெரிய என்றது என்குறிப்பு. பொய் மருண்டு - பொய் யுரைகளாலே மயங்கி; பொய் என்றது அவன் தன் மகட்குச் சொல்லிய உறுதிமொழிகளை; அது வாயாமற்படி அவளைத் தன் வீட்டார் மீட்டுக் கொணர்வர் என்பதனால் இப்படிக் கூறினள். போக்கரும் பொங்கர் - போக்கைத் தடுக்கும் சோலை; போதற்கு அரிதாயது, நேல்லிக் காய்கள் காலை உறுத்தலாலும் தன்னத் தூண்டுதலாலும் வீரனை - வறண்ட சுனை. புறங்காண்டல் எண்ணம் நிறைவேறாமல் தோல்வி யுற்று மண்டதைக் காணுதல்; இதனால், அவள் கருத்தும்

+ நற்றிணை தெளிவுரை

153

வாயாது, குடிக்குப் பழியும் வந்தடைதலின், அதனைக் காணா முன், தான் உயிரைவிட்டுவிட விரும்புகின்றாள் தாய். தாழி கவிப்ப - தாழியாற் கவித்து மூட; இது இறந்தபின் உடலைப் புதைக்கும் பண்டைய தமிழ் மரபு. தாவின்று - வலி யழிந்து.

-

விளக்கம்: பனையின் குருத்தோலையை வெட்டி விரித் துப் பனியிற் பதப்படுமாறு வைத்தல் இன்றும் காணும் வழக்கம் ஆகும். தன் மகளின் நல்ல வாழ்விலே ஆர்வங் கொண்ட தாயது மனம், இவ்வாறு அவள் செய்த பழிக்குரிய செயலாலே நொந்து நலிவுற்று வெதும்புகின்றது. 'தமர் அவளை மீட்டு வருவர்' என்பது, அவள் கொண்ட நம்பிக்கை. அதற்குள் தன் உயிரையே விட்டுவிட நினைக்கின்றாள் அவள்.

+

1

இறைச்சி / எருமைக் கன்றும் பூந்தாதிலே கிடந்து துயில் கொள்ளும்' என்றது, அத்தகைய வளமனை வாழ்வை யும் விரும்பாது, தன் காதலனின் மார்பே பாயலாகத் துயிலக் கருதி, அவனுடன் போகிய தன் மகளது கா தற் பெருக்கை வியந்து கூறியதாகும். அதனை வாழ்த்தி உள்ளம் மகிழ்வதும் ஆகும். இதனால், அவள் தமரின் கண்ணிற் படாதபடி, தன் காதலனுடன் அவனூர்க்கே நலமாகச் சென்று சேர்ந்து, அவனையே மணந்து, இன்பமான இல்வாழ் விலே திளைப்பதையே அந்த அன்னை விரும்புகின்றாள் என்பதும், அவளைத் தமர் மீட்டுக் கொணர்தலை அவள் விரும்பவில்லை என்பதும் விளங்கும்.

¡

272. அலர்வாய் அம்பல் மூதூர் !

பாடியவர் : முக்கல் ஆசான் நல்வெள்ளையார். திணை : நெய்தல். துறை:(1) வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; (2) தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) மணந்து கொள்வதிலே மனஞ் செலுத்தாமல், களவு உறவினையே தலைவன் விரும்பினவனாக நெடுங்காலம் வந்து ஒழுகி வருகின்றான். அவனை விரைய மணந்து கொள் வதற்குத் தூண்டும் வகையால், அவன் கேட்டு உணருமாறு தலைமகள் தோழிக்குச் சொல்லுவாள் போலச் சொன்ன தாகவோ (1). அல்லது தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (2) அமைந்த செய்யுள் இது.) நற் 30 154

கடலம் காக்கைச் செவ்வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடிகொய் தழித்த

நற்றிணை தெளிவுரை

பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக் கடுஞ்சூல் வதிந்த காமர் மேடைக்கு இருஞ்சேற் றயிரை தேரிய தெண்கழிப்

பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் நல்கா மையின் நசைபழு தாகப்

பெருங்கை யற்றவென் சிறுமை யலர்வாய்

நோயா கின்றது நோயினும் பெரிதே!

அம்பன் மூதூர் அலர்தந்து

10

LO

5

தெளிவுரை : நோன்பு மேற்கொண்டவரான மகளிர்கள் கொடிகளைக் கொய்து அழித்து இடம்செய்துள்ள நெருங்கிய அடும்பின் கொடிகளைக் கொண்டதான் வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே, நிரம்பிய சூலுடனே சென்று தங்கி யிருந்தது, கடற்காக்கைப்பேடை ஒன்று. தன்னாலே விரும்பப் படுகின்ற அந்தத் தன் பேடைக்கு உணவாகக் கரிய சேற்றி னிடத்தே உள்ளதான அயிரைமீனைத் தேர்ந்தெடுத்துக் கொணர விரும்பியது, கடலியங்கு நர்க்காக்கையுள் சிவந்த வாயினதால் அதன் சேவல். அதுதான் அதன்பொருட்டாகத் தெளிந்த நீரையுடைய கழியிடத்தேயுள்ள பூக்களையுடைய ஆழமான இடத்தினைச் சென்று துழாவியபடி இருக்கும். இத் தன்மைத்தான கடற்றுறைக்கு உரியவன் நம் தலைவன். அவன் நமக்குத் தலையளி செய்யாமையினாலே நாம்

அவ

னோடுங் கூடியிருந்து இல்லறம் பேணுவோம் என்னும் நம் முடைய விருப்பமும் பழுதாகி விட்டது. அதனாலே பெரிதும் செயலிழந்து போயின என் காமநோயாகிய சிறுமைப் பாடானது பழிகூறுதலே இயல்பாகவுடைய அலருரைக்கும் பெண்டிர் வாழும் எம்மூதூரிடத்தே அலரையும் கொண்டு தந்தது. அதுதான், அவரைப் பிரிதலாலுண்டாகிய நோயினுங் காட்டில் பெரிதும் நோய் செய்வதாகின்றது, தோழி!

சொற்பொருள்: கடலம்காக்கை - கடலைச் சார்ந்து வாழ் வதாகிய கடற் காக்கை. படிவமகளிர் - நோன்பு மேற் கொண்ட மகளிர்; பொம்மல் - செறிவு. சிறை-ப க் க ம். கடுஞ்சூல் - நிறைசூல்; முதற்சூலும் ஆம். வதிந்த - தங்கிய; தங்கு தல் தன்னாற் பறந்து சென்று இரைதேட வியலாத தளர்ச்சி மிகுதியினால்.தெண்கழி- மேலே தெளிந்த நீரைக் கொண்ட நற்றிணை தெளிவுரை

155

கழிப்பகுதி. பூவுடைக்குட்டம்-நீர்ப்பூக்களை உடையதான ஆழமான இடம். துழவும் - துழாவித்தேடும். நசை-விருப்பம்; இஃது இல்லுறை மனைவியாக அமைந்து அறம் பேணும் வாழ்க்கையிலே கொண்ட விருப்பம். பெருங்கையற்ற- பெரிதும் செயலழிந்த. சிறுமை - களவுறவால் மேனியின் வண்ணம் மாறிச் சிறுமையுற்ற தன்மை.

அழித்த

விளக்கம்: 'படிவ மகளிர் கொடி கொய்து பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை' என்றதனால், அந்நாளைய மகளிர் கடல் தெய்வத்தை வேட்டு நோன்பு பூண்டு, அதனைக் கழிக்கும் நாளிலே பொங்கலிட்டுப் பூசனை செய்வதற்கு வசதியாகச் செய்யப்பெற்ற வெண்மணல் மேட்டின் ஒரு பக்கம் என்றும் கொள்க. மணந்து இல்லற மாற்றும் பெருமையை விரும்பியவள், அதுதான் நேராமை யின் நொந்து வாடி நலிவுற்று, அதனால் ஊரவர் பழிதூற்றச் சிறுமையும் எய்தினள் என்பதாம். இதனைக் கேட்டலும் தலைவன், அதுதான் தன்னாலே உண்டாயது என்பது உணர்ந் தானாய், விரைவில் அவளை மணக்கக் கருதுவான் என்பதுமாம். காக்கைப் பேடைக்குச் சேவல் அன்போடு செய்யும் அது தானும், அவர் நம் மாட்டுச் செய்யக் கருதிலரே என்று நினைந்து நொந்ததுமாம்.

உள்ளுறை : காக்கைச் சேவலானது கடுஞ்சூலோடு வதிந்த தன் பேடைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது அவ்வாறே தலைவனும் பொருளீட்டி வந்து பெற் றோருக்கு அளித்துத், தன்னை மணந்து இன்புறுத்தல் வேண் டும் என்றதாம்.

கடுஞ்சூலோடு வெண்மணல் ஒருசிறை வதியும் பேடைக்கு அங்குள்ள அடும்பு பயன்படாமை போலத், தான் பிறந்த இல்லிடத்தே வாழும் தலைவிக்கு, அங்குள்ள வளன் எல்லாம் பயன் தருவதின்று; தலைவனின் தலையளியே இன்பந் தருவது, பயன்தருவது என்றதுமாம்.

'படிவமகளிர்' என்றது தாமும் அவ்வாறே நோன்பு பூண்டு தெய்வத்தைத் தம் காதலனோடு கடிமணம் புணர்க்கு மாறு செய்கவென வேட்டதனைக் குறிப்பால் உணர்த்தியது மாம். அன்றிப் பிரிவுத் துயரால் வருந்தி உண்ணாமையும் ஒப்பனைசெய்யாமையும் மேற்கொண்டதனால், 'படிவமகளிர் போலத் தோன்றியதனாலும் ஆம்.

!

! 156

தோது

தலைககுககு நற்றிணை தெளிவுரை

273. எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரம் !

பாடியவர் : மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்த னார். திணை: குறிஞ்சி. துறை : தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறியயரும்' என்பதுபடச் சொல்லியது.

[(து-வி.) இப்படிக் கூறுவதனாலே தலைவன் தெளிவு அடைந்தவனாகத் தலைமகளை விரைவிலே மணந்து கொண்டு இல்லறமாற்றுதலைப் பற்றிய முடிபினைக் கொள்பவனாவான் என்று கொள்க.)

இஃதெவன் கொல்லோ தோழி, மெய்பரந்து எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம்

வெம்மையில் தான்வருத் துறீஇ நம்வயின்

அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென

வேல னுரைக்கும் என்ப வாகலின்

வண்ண மிகுத்த அண்ணல் யானை

நீர்கொள் நெடுஞ்சுனை யமைந்துவார்ந் துறைந்தென்

கண்போல் நீலம் தண்கமழ் சிறக்குங்

குன்ற நாடனை உள்ளுதொறும்

நெஞ்சுநடுக் குறூஉம் அவன் பண்புதரு படரே.

5

10

தெளிவுரை : தோழி! நின்னது மெய்யனைத்துமே பரந்த தாகித் துன்பத்தை உறுவித்த நம்முடைய வருத்தத்தை நம் அன்னையும் கண்டனள். நம்பாலுள்ள விருப்பத்தினாலே தானும் வருத்தமுற்றவளாகினள். நம்பால் நிகழ்ந்ததனை ஏதும் அறியாதாளாக, முருகவேளுக்கு வெறியினையும் எடுத் தனள். அதன்கண் வெறியாடும் வேலனும், 'முருகுதான் நின்னை அணங்கிற்று' என்று கூறுவான் என்பர். ஆதலினாலே,

·

வண்ணத்தாலே அழகு மிகுதியாகப் பெற்ற பெரிய யானையானது, நீர் முகந்து கொள்ளுகின்ற நெடுஞ்சுனையின் கண்ணே அமைந்து நெடிதாகத் தங்கியிருக்கின்ற அவ் விடத்தே, என்கண்போல மலர்கின்ற நீலமலர்கள், தண்ணிய வாய், மிகுதியாக மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றது மாகிய குன்றத்துக்குரிய நாடனாகிய நம் தலைவனை எண்ணுந் தோறும், அவன் பண்பு தருகின்ற வருத்தமானது, எனது நற்றிணை தெளிவுரை

157

நெஞ்சத்தையே நடுக்கமுறச் செய்யும் தன்மையாகிறதே! இதுதான் எவ்வாறு இனி முடியுமோ தோழி?

சொற்பொருள்: மெய் பரந்து-மெய்யினிடத்தே பரவி. எவ்வம்-துன்பம். வெம்மை-விருப்பம். அறியாது- உண்மை அறியாது. நம்வயின் அறியாது - நம்மிடத்தே வினவி உண்மை அறியாது எனலும் ஆம். அயர்ந்த - வெறியயர்ந்த. அயர்ந்த அன்னை-வருந்தித் தளர்ந்த அன்னையும் ஆம். வெறி-வெறி யாட்டு. வண்ணம் - நிறம். இது முகத்தில் தோன்றும் புள்ளி களால் உண்டாவது. அண்ணல்-தலைமைப்பாடு. பெரிய பண்பு - சால்பு ; இது முன்பு செய்த தலையளியை - ; நினைந்து கூறியது.

விளக்கம்: அவன் நமக்குச் செய்த தலையளி எல்லாம் இதுபோது எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரமாகவே விளைந்தது என்றனள். இஃது அவன் வரைந்து கொண்டு இல்லறம் இயற்றுங் கருத்திலனாகக் களவு உறவிலேயே நீடித்த விருப் பினனாக விளங்கியமையை நினைந்து வருந்திக் கூறியதாகும். 'வெம்மையில் தான் வருத்துறீஇ' என்றது, அன்னை நம் துயரத்தைக் கண்டதும் நம்பாலுள்ள அன்பினாலே வருத்த மடைந்தனள். அவன் அன்பிலனாதலின் அதனைக் குறித்து

ஏதும் கருதிற்றிலன் என்றதாம். 'அயர்ந்த அன்னை' இது எதனால் உற்றதென அறியாளாக மயங்கித் தளர்ந்த அன்னை என்றதாம். 'வெறியென வேலன் உரைக்கும் என்ப என்றது, 'முருகே அணங்கிற்று; வெறியாடி முருகை வழி படுக' என்பான் வேலன் என்று சொல்லுவார்கள் என்றது, பிறர் உரைப்பதைக் கேட்டுக் கூறியதாம்.

'அமைந்து வார்ந்து உறைந்து என் கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும்' என, நீலத்தின் செறிவை உரைத்ததாக வும் கொள்ளலாம். பண்பு படர் தருவதன்று எனினும், அதுதான் இதுபோது படர்தருகின்றதே; இதுதான் இனி என்னவாக முடியுமோ என்பதுமாம்.

'யானை நீர் கொள்ளும் தண்சுனையிடத்து நீலம் தண் கமழ் சிறக்கும் என்றது, தலைவன் தலைவியைக் கொள்ளக்

கருதித் தலைவியின் மனையிடத்து வேட்டுவருங் காலத்தே, அவளது இல்லத்தாரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதாம்.

'என்னவாகுமோ?' என்று கவலையுற்றது, தலைவியின் களவுக் காதல் உறவினைக் கருதியாகும். 158

நற்றிணை தெளிவரை

உள்ளுறை : நீர் உண்ணும் அண்ணல் யானை தலைவனாக வும், அது உண்ணும் சுனை தலைவியது குடியாகவும், நீர் தலைவி யாகவும், நீலம் தண்கமழ் சிறத்தல் அவளைப் பெற்ற பெற் றோரும் பிறரும் மகிழ்தலாகவும் உள்ளுறை பொருள் கொள்க.

274. வருதியோ பொம்மல் ஓதி!

திணை : பாலை. பாடியவர்: காவன்முல்லைப் பூதனார். திணை : துறை : தோழி, 'பருவம் மாறுபட்டது' என்றது.

[(து.வி.) தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற காலத் திலே, 'அவன் கோடையது வெம்மையால் வழியிடையே துன்பம் அடைதலும் கூடும்' என்று எண்ணி வருந்துகின்றாள். அவளது வருத்தத்தைப் போக்கக் கருதிய தோழி, 'அவ் விடத்து மழைக்காலம் ஆயிற்றுக் காண்' என்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

‘நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழந்தாம் குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி’எனக் கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு

பெருங்கல் வைப்பின் சுரன்இறந் தோரே.

இரும்புலி வழங்கும் சோலை

தெளிவுரை : தம்முள்ளே

மாறுபட்டவான

பெரிய

புலிகள் திரிந்து கொண்டிருக்கும் சோலைகளை உடையதான பெரிய மலைநாட்டைச் சார்ந்த நிலமாகிய சுரத்தைக் கடந்து செல்பவர் நம் காதலர். அவருக்கு ஏதம் ஏதும் உள தாமோ என நீயும் வருந்துவாய். ஆயின்,

நெடிய வானத்திடத்தே மேகங்கள் மின்னலிட்டுச் சிறு சிறு துளிகளையும் பெய்யத் தொடங்கிப் பெருமழையாகவும் பொழிந்ததாகிய, பிளப்புக்களையுடைய குன்றத்திடத்தே வாழ்கின்ற உழையாகிய பெண்மானின் அழகிய உட லானது தீண்டுதலாலே, இழையணிந்தாளாகிய பெண் ஒருத்தியது பொன்னாற் செய்யப்பெற்ற காசினைப் போன்ற

5 நற்றிணை தெளிவுரை

i

159

வாகிய ஒள்ளிய பழங்கள் உதிருகின்ற, குமிழ மரங்கள் நிரம்பியிருக்கும் குறுகிய பல வழிகளைக் கொண்டதான சுரநெறியிலே, அடர்ந்த கூந்தலை உடையாளே! நீயும் எம் மோடும் வருகின்றாயோ? என்று அவர் சொல்லிய சொற் களையும் உடையர்காண்! ஆதலின், அங்கு அவர் வேனிலால் வெம்மையுறுவதும் இலரென்று தெளிவாயாக.

சொற்பொருள்: நெடுவான் - நெடிய வானம். வான் மேகமும் ஆம். குறுந்துளி-குறுகிய சிறு துளி. படுமழை பெருமழை. பகுவாய்க் குன்றம் - பிளப்புக்களைக் கொண்ட குன்றம். உழைமான் அம் பிணை - உழையாகிய மானின் அழகிய பிணை. பிணை - பெண் மான். இழை மகள் - கல னணிந்த இளமகள். பொன் செய் காசு-பொற்காசு என் றும் வழங்குவர். குமிழ் - குமிழ மரம். தலைமயங்கல் - நிரம்பிச் செறிவோடிருத்தல்; பிற மரங்களோடு கலந்திருத்தலும் ஆம். குறும்பல் அத்தம் - குறுகலான பலவாகிய வழிகள். பொம்மல் ஓதி - அடர்ந்த கூந்தல்; அதனை உடையாளான தலைமகளைக் குறித்தது. வேறுபட்டு - மாறுபட்டு: இரும்புலி பெரிய புலிகள்.

விளக்கம் : தலைவன் செல்லும் வழியிடையிலே அவன் துன்புறுதல் கூடும் எனக் கவலையுற்ற தலைவிக்கு, அவன் பிரிந்த காலத்துச் சொன்ன சொற்களை நினைவுபடுத்தி, இவ்வாறு தேறுதல் உரைக்கின்றாள் தோழி. 'எம்மொடு' வருதியோ?' என அவன் அழைத்ததை நினைவுபடுத்தியது, அதுகாலை 'அதுதான் மகளிர்க்கு மரபன்று' எனக் கூறி மறுத்துத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறிய தலைவியின் சொற்களை நினைவுபடுத்துதற்கும் ஆம். இவ்வாறு கணவனோடு மகளிர் உடன்செல்லலையும் கோவலனோடு சென்ற கண்ணகி கதையால் அறியலாம். இனிச் 'செல்லற்கும் எளிது பொருளும் எளிதாகக் கிடைப்பது, எனவே நீயும் உடன் வருகின்றாயோ?' என்று அவன் அழைத்ததாகவும் கொள்ள

லாம்.

இறைச்சி : 'மான்பிணை சென்று தீண்டலும் மரத்திற் பழுத்துக் கனிந்திருந்த குமிழின் பழங்கள் பொற்காசு போல உதிரும்' என்றது. அவ்வாறே தலைவன் சென்று பொருளினை ஈட்டத் தொடங்கியதும், பொருளும் விரைவில் கிடைக்கும் என்க. அப்படி வந்து கைகூடுவதாகலின், அவன் அதனோடும் விரைவிலே மீண்டு வருவான் எனவும் கூறித் தலைவியைத் தேற்றுகின்றனளாகக் கொள்க.

i 160

நற்றிணை தெளிவுரை

275. பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்!

பாடியவர்: அம்மூவனார். திணை : நெய்தல். துறை: சிறைப்புறமாகத் தலைமகனது வரவு உணர்ந்து வற்புறுப்ப, வன்முறை எதிர்மொழிந்தது.

-

((து.வி.) : தலைவன் வந்து செவ்வி நோக்கியபடி ஒரு சார் ஒதுங்கி நிற்கின்றான். அதனை அறிந்த தோழி பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியைத் தேற்றுவாளாக, 'அவன் விரைவிலே வருவான்' என்று வலியுறுத்தி கூறு கின்றாள். அவளுக்குத் தன்னுடைய கற்புத்திண்மையும் வருத்தமும் புலப்படத் தலைவி பதிலிருப்பதாக அமைந்த செய்யுள் இது.)

செந்நெல் அரிநர் கூர்வாட் புண்ணுறக் காணார் முதலொடு போந்தெனப் பூவே படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெலத் தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தல் பெரூநீர்ச் சேர்ப்பற்கு -யான்நினைந் திரங்கேன் ஆகநோய் இகந்து அறனி லாளன் புகழ்வென்

பெறினும் வல்லேன்மன் தோழி யானே!

5

தெளிவுரை: தோழீ! முற்றிய செந்நெற் கதிரை அரிப வரது கூரிய வாளாலே அறுக்கப்பட்ட நெய்தலானது, அதனைக் காணாதவரான அவரது நெற்கதிர்க் கட்டுக்க ளோடுஞ் சேர்ந்து, களத்திற்கும் போய்ச் சேரும். தன்னை அறுத்த வாட்படையோடும், தன்னை எப்புறமும் அழுத்திய படியிருக்கும் கதிர்களோடும் நேர்ந்த துயராலே கலங்கிய அந்நெய்தலானது, சூட்டோடு கிடக்கும் தனக்குற்ற துயரத் தையும் அறியாதாகி, இனிய துயிலைப் போக்கியபடி வெம்மையாலே தாக்கும் கதிர்களைக் கொண்ட கதிரவனின் வரவைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதுமாகித், தன் பசிய இதழ்களைத் திறந்தபடி பூத்தலையும் செய்யும். அத்தகு பேதைமை வாய்ந்த நெய்தலைக் கொண்ட கடற்கரை நாட் டவன் நம் தலைவன். அவனுக்காக, அவன் என்னைப் பிரிவுத் துயராலே நலியச் செய்த கொடுமையை நினைந்தும், அதனாலே நமக்குற்ற பழியைக் கருதியும், யான் ஏதும் வருந்த மாட்டேன். என் நெஞ்சத்து நோயின் கொடுமையையும் நற்றிணை தெளிவுரை

16எ

கடந்து, அறனிலாளனாகிய அவன் என்பால் வந்து, என்னைப் புகழ்தற்கு எத்தகைய துயரத்தைப் பெரினும், அதனைத் தாங்கியிருக்கவும் யான் வல்லமை உடையேன். ஆதலின், நீதான் கவலையடைதல் வேண்டாம் காண்!

கருத்து: 'பிரிவை அவன் வரும்வரை பொறுத்திருப் பேன்' என்பதாம்.

சொற்பொருள் செந்நெல் - நெல்வகையுள் ஒன்று, சிவப்பான அரிசி கொண்டது. படை-அரிவாள். மயங்கிய- வருத்தமுற்றுக் கலங்கிய படுக்கை - பாயல்; அது நெற் சூடு. விழுமம் - துன்பம். தெறுகதிர்-வாட்டும் வெம்மை கொண்ட கதிர். பேதைத் தன்மை; இது கதிரவன் வரவு கண்டதும் துயரை மறந்து பசுவாய் திறந்து மலர்தல். அறனிலாளன் - அறநெறியைக் காக்கும் பண்பற்றவன்; தலைவனைக் குறித்தது; தன்னால் காதலிக்கப்பட்டாளை முறைப்படி மணந்து இல்வாழ்வாகிய அறத்தைப் பேணுதலை மறந்தவன் என்பதனால் இப்படிக் கூறினாள்; இதனால், தான் மணத்தை விரும்புவதையும் உணர்த்தினாள். என் பெறினும். எவ்வகைத் துயரத்தை அடையப் பெறினும்; துயரமாவன, பிரிவால் நேர்ந்ததும், அன்னை அறிதலால் விளையும் அச்ச மும், அலருரைகளால் உண்டாகும் பழியும் போல்வன.

விளக்கம்: 'பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன் என்றது, நெய்தற்கு உறும் துயரத்தை அறியாதே போயின தலைவன் என்றதாம். இதனால், தானுற்ற துயரத்தை அவ னுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தினாள். நெய்தல்

படை

யொடுங் கதிரொடும் மயங்கினாற் போலத், தானும் தலைவனின் காதன்மையோடும், தன் குடும்பப் பாங்கோடும் உழன்று மயங்கிய நிலையையும் உணர்த்துகின்றாள். கதிரவன் தறுகதிர் வரவு கண்டதும், நெய்தல், தான் துயரை மறந்து பூவை மலரச் செய்து களிப்பதுபோலத், தானும் அவன் வரைந்து வருதலோடும், தன் துயரையும் மறந்து களிப்பவ பவளாவள் என்பதுமாம். இதனால், பெண்மையின் திண்மை யான தன்மையைத் தோழிக்கு உணர்த்தினாள். நெய்தல் வைகறைப் போதில் மலர்வது. ஆகவே, இரவெல்லாம் துயருற்ற தலைவியும் வைகறைப் போதில் இல்லத்தார் தன் நிலையைக் காணாமற்படிக்குத் தன் துயரை மறைத்து முக மலர்ச்சியோடும் புறத்தே தோன்றுவாள் என்பதாம்.

உள்ளுறை : நெய்தல், தான் பல துயருற்ற போதும், கதிரவன் தோன்றவும் மலர்ந்தாற்போல,பிரிவுத் துய

1 Gina

162

நற்றிணை தெளிவுரை

ராலே வாடியிருக்கும் தலைவியும், தலைவன் வரைவொடு வரின், அனைத்தும் மறந்தவளாக உவகை கொள்வாள் என்பதாம்.

இதனைக் கேட்டலுறும் தலைவன், தலைவியை முறையாக மணந்துகொண்டு, பிரியாது வாழும் இல்லற வாழ்விலே மனஞ் செலுத்துவான் என்பது இதன் பயனாகும்.

276. கட்சி சேக்கும் கான மஞ்ஞை!

பாடியவர்! தொல் கபிலர். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.

[(து.வி.) பகற்குறிக் கண்ணே தலைவியைக் கூடி இன்புற்றுத் தன் ஊர்க்குச் செல்லும் தலைமகன்பால். அவனைத் தன் இல்லிலே வந்து விருந்துண்டு போக அழைப் பாள்போல, விரைவிலே பலரறி மணத்தைத் தோழி அறிவுதுத்துவதாக அமைந்த செய்யுள் இது.]

கோடு துவையாக் கோள்வாய் நாயொடு காடுதேர் நசைஇய வயமான் வேட்கும் வயவர் மகளிர் என்றி யாயின்

குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்

சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்

கல்லகத் ததுவெம் மூரே செல்லாது

சேர்ந்தனை சென்மதி நீயே பெருமலை வாங்கமை பழுனிய நறவுண்டு

வேங்கை முன்றிற் குரவையும் கண்டே!

5

10

தெளிவுரை : கொம்புகளை ஊதியபடி, கொள்ளுதலிலே வல்ல வாயையுடைய நாயோடும் சென்று, காட்டின்கண்ணே இரை தேடியபடி இருக்கும் விருப்பத்தையுடைய வலிய விலங்கினையே தாம் கொள்ளுதலை விரும்பும், வேட்டுவ வீரரின் மகளிர் என்று எம்மைச் சொல்வாயாயின், யாம் அவரல்லேம்! யாம் குறவர் மகளிரேம். குன்றிடத்தே வாழ்கின்ற கொடிச்சியரேம். தினை காவலன் கட்டிய நெடிய கால்களையுடைய பரணிடத்திலே, காட்டு மயில்கள் தமக்கு வேண்டும் ஒதுக்கிடயாகக் கருதித் தங்கியிருக்கும் மலையின் நற்றிணை தெளிவுரை

163

கண்ணது எம் ஊர். நீர்தான் இப்போதே திரும்பிச் செல் லாது எம்மூர்க்கண் தங்கியிருந்துவிட்டுச் செல்வீராக. பெரிய மலையிடத்தே தோன்றி வளைந்த மூங்கிற் குப்பி களிலே நிரப்பி முற்றவைத்துள்ள நறவினை உண்டுவிட்டு, வேங்கை மரம் நிற்கும் முற்றத்திலே யாமாடும் குரவைக் கூத்தையும் கண்டுவிட்டுப் போவீராக!

-

சொற்பொருளும் விளக்கமும்: கோடு - கொம்பு. துவையா -ஊதியபடி. கோள் வாய்- கொள்ளுதல் வல்ல வாய். வேட்டை நாய்கள் பிற விலங்குகளைத் தம் வாயாற் பற்றிக் கொள்ளும் தன்மையன என்பதனால், கோள் வாய் நாய் என்றனர். தேர்தல் - ஆராய்தல்; இது தமக்கேற்ற இரை யாதெனவும், எங்குள்ளது எனவும் சுற்றித் தேடித்திரிதல். வயமான் - வலிய விலங்கு. இது புலி முதலியவற்றைக் குறிப்பது. வேட்கும் - வேட்டையாட விரும்பும். வயவர் வலிமையாளர்; வேட்டுவர். கொடிச்சி - குறக்குலப் பெண் ணின் பெயர். சேணோன் இதணத்து உள்ளோன்; இதணம் என்பது புனங்காவலுக்குக் கட்டியுள்ள உயரமான பரண்; இதன் மேலிருந்தபடி குறவன் இரவிலே சாத்திருப்பான் என்பதாம். கழுது - பரண். கட்சி - ஒதுக் புனத்தைக் கிடம். சேக்கும் - தங்கும். செல்லாது - நின் ஊருக்குப் போகாது. வாங்குதல் - வளைதல். பழுனிய நறவு -முதிர வைத்த கள். முன்றில் - முற்றம்.

-

de

.

ஒவ்வொரு சமயம் வந்து இவளைத் தழுவிச் செல்கின் றாய். எனினும் இவளோ நின் சிறுசிறு பிரிவையும் பொறுக்க லாற்றாது நலிகின்றாள். எனவே இன்றிரவுக்கு எம்மூரிடத்தே தங்கிச் செல்வாயாக" என்கின்றாள் தோழி. அதனால் இடை யூறு உண்டாகாது எனவும், தன்னவர் விருந்தினர்ப்பேணும் மரபினர் எனவும் கூறுவாள், 'நறவுண்டு; குரவையுங் கண் செல்வாயாக' என்கின்றனள்.

இவ்வாறு தலைவன் வந்து, தலைவியின் பெற்றோர் உபசரிக்கத் தலைவியின் விட்டில் இரவில் தங்குவது என்பது தலைவியை வரைந்து கொண்டன்றி இயலாது ஆதலின், களவுக்குறி மறுத்து வரைவு கேட்டனளும் ஆம்.

'யாம் வயவர் மகளிர் அல்லேம் குறவர் மகளிரேம்' என்றது,எம்மவர் நீ வரைந்துவரின்

அதனை ஏற்றுக்

கொள்ளும் தன்மையர் என்றதாம். 'குறவர் மகளிரேம்'

என்றதுடன், 'குன்று கெழு

கொடிச்சியேம்' எனவும்

கூறியது, அதனை மேலும் வலியுறுத்துவதற்காம். 164

நற்றிணை தெளிவுரை

277. அறிவும் கரிதோ அறனிலோய் !

பாடியவர்: தும்பிசேர் கீரனார்; தும்பிசொகினனார் எனவும் பாடம். திணை : பாலை. துறை: பட்டபின்றை வரை யாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாகிய தலைமகள், தும்பிக்குச் சொல்லியது.

[(து. வி.) தலைமகன் தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து போயிருக்கின்றான். அவன் நினைவால் அவள் வருந்துகின்றாள். அவன் குறித்தகாலமும் கழிந்தது. அதனால் அவள் துயரமும் பெரிதாயிற்று. அவ்வேளையிலே தம்முட் கூடியிருந்த தும்பிகளை நோக்கி, அவள் தன் நெஞ்சழிந்த நிலைமையைக் கூறுவாள்போல் அமைந்த செய்யுள் இது.] கொடியை வாழி தும்பி இந்நோய்

படுகதி லம்ம யான்நினக் குரைத்தென மெய்யே கடுமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே? மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி வேறுபட

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ, அன்பிலர்

.

வெம்மலை யருஞ்சுரம் இறந்தோர்க்கு என்நிலை உரையாய் சென்றவண் வரவே!

5

10

தெளிவுரை ; தும்பியே! என்னளவிலே நீதான் சொடியை! ஆயினும், நீதான் இன்புற்று வாழ்வாயாக! யானோ, இப் பிரிவுத்துயரென்னும் நோயின் காரணமாக செத்தொழிவேனாகுக! யான் நின்னை நம்பி என் நிலையை நினக்கு உரைத்ததனாலேதான் இந்நிலை எனக்கு ஏற்பட்டது. நின் உடலோ கருமையானது; அன்றியும் அதனைப்போலவே நின் அறிவும் செவ்விதாகக் கருமையானது தானோ! எம் மனையைப் பொருந்தக் காத்திருக்கும் மாட்சிமைப்படப் பெரிதாக அமைக்கப்பட்ட வேலியிடத்துள்ள, நுண்ணிய முட்களையுடைய மரங்களின் மீது பீர்க்குப் படர்ந்துள்ளது. பூந்தாதோடும் பூத்துள்ளதும் குலைகட்டியதுமான

அப் நற்றிணை தெளிவுரை

165

பீர்ச்கின் பூக்களிலே ஊதித் தேனைப் பருகினை! அதற்கு வேறுபட்டதாக நறுமணம் இல்லாமையினாற் போலும், என்பாற் படர்ந்துள்ள பசலையிடத்தும் வந்து ஊதினாயல்லை. நின் சிறிய குறிய பேட்டினுக்கு அன்புடையையாய் விரை வுடனே ஓடிப்போய் அதன் நெஞ்சம் நெகிழுமாறு அதற்குத் தலையளி செய்ததன் பயனோ இஃதெல்லாம்! என் காதலரோ என்பால் அன்பில்லாதவராயினார். என்னைப் பிரிவினால் இவ்வாறு வருந்தவிட்டு, வெம்மை கொண்ட மலையிடத் துள்ள கடத்தற்கரிய சுரநெறியையும் கடந்து சென் றுள்ளார். அவண் சென்று, இவ்விடத்தே என்பால் அவரும் வருமாறு, என் துயர நிலையை, அவருக்கு நீதான் உரைக்க மாட்டாயோ!

கருத்து: நீதான் உரைக்க மாட்டாயாதலின், இனிச் சாவு ஒன்றே எனக்கு எஞ்சியது என்பதாம்.

சொற்பொருள்: கொடியை-கொடுமை உடையை; கொடுமையாவது துன்புற்றார்க்கு நெஞ்சம் இரங்காத வன்கண்மை. படுக -செத்து ஒழிவேனாகுக. 'தில், அம்ம அசைகள். செவ்வன் அறிவு -செவ்வையாக இருத்தற்கு உரியதான அறிவு; அதுதான் கரிதோ என்றது, அதுதான் செவ்வையினின்று மாறுபட்டதனால். அறன் - நீதி; இது நொந்தார்க்கு இயன்றதை உதவும் பண்பு. உற- பொருந்த. கிடக்கை - வீட்டைச் சூழ அமைந்து கிடப்பது; இது முள் மரத்தால் அமைந்த வேலி. தாறு- குலை. நாற்றம் - மணம்; பசலை நிறத்தால் பீர்க்கம் பூவை ஒத்திருப்பினும், மணம் இல்லாததனால் அதன்பால் மொய்த்தால் தேன் கிடையாது என அறிந்து தும்பி ஒதுங்கிற்றென்க. நெஞ்சு நெகிழ் செய்தல் - நெஞ்சம் நெகிழுமாறு தலையளி செய்தல். வெம் மலை - கோடையின் கடுமையால் வெம்மைப்பட்ட மலை. இறந்தோர் - கடந்தோர்.

விளக்கம்: 'நின்பால் உரைத்தும் பயனில்லை' என்பாள் நின்னிடம் உரைத்ததன் பயனோ இவ்வாறு யான் மேலும் துயருற்றது என்று நோகின்றனள். நெஞ்சம் கரியார்க்கு ஒன்றை உரைப்பின் அதுதான் மாறான பயனைத் தரு மென்பது உலக வழக்கு. அதனை நினைந்து, இவ்வாறு கூறினளும் ஆம். 'தாறு' என்றது பீர்க்கின் காய்க் குலைகளை. 'ஓடி நெஞ்சு நெகிழ் செய்தல்' என்றது, அப் பெட்டையைப் பின்னே தொடர்ந்து பறந்து சென்று, அதன் ஊடலைத் Gigs

166

நற்றிணை தெளிவுரை

தீர்க்கும் சிறப்பை. மனைப்புறம் காக்கும் என்றது மனையின் புறத்தே அமைந்து அதனைக் காத்தல். 'மாண் பெரும் கிடக்கை' என்றது, புறத்தார் கடந்து புக இயலாத உயரமும் செறிவும் அமையக் கிடக்கும் வேலியை.

278. கோடுதோறும் நெய்கனி பசுங்காய்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.

(து.வி) வரைபொருள் குறித்துப் பிரிந்து சென் றோனாகிய தலைவன், குறித்த காலத்து வந்தானில்லை. அதனாலே தன் நெஞ்சத் துயரம் மிகுந்தாளாய் மெலிந்து வாடினாள் தலைவி. அதுகாலை அவன் பலரும் அறியுமாறு வருதலைக் கண்ட தோழி, அவன் வரைவொடு வருதலை உணர்ந்து, தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

படுகாழ் நாறிய பராரைப் புன்னை

ஆடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப் பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் நெய்கனி பசுங்காய் தூங்குந் துறைவனை இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல் கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின

கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே.

அடியை

தெளிவுரை : தானே வித்து வீழ்ந்து முளைத்த பருத்த உடையதான புன்னையது, அடுத்ததாக வளர்ந் துள்ள மரன் பழம்போலும் அரும்புகள், வாய்திறந்த வாய் இதழ் விரிந்தன. அங்ஙனம் மலர்ந்த, பொன்போல விளங்கும் மகரந்தமிக்க பலவாகிய அம் மலர்களிடத்தே, சூடுவோர் கொய்ததுபோக எஞ்சியுள்ள மலர்கள், கிளைகள் தோறும் நெய்கனியும் பசுங்காய்களாக முதிர்ந்து தூங்கும். இத்தகைய துறைக்கு உரியலனான நம் தலைவனை,நினக்கு உரிய யான் கணவனாதலையும். இப்பொழுது

அறிந்து

5 நற்றிணை தெளிவுரை

You

167

கொண்டேன். கடற்கழியின் சேற்றிடத்தே வந்தமையால் சேறுபடிந்த திரண்ட கால்களைக் கொண்ட கோவேறு கழுதையின் குளம்பின் எப்புறமும் சிவந்த இறா மீன்கள் உள்ளொடுங்கப் பட்டவாய் அழிந்தன. மற்று, அவன்றன் கோதையிடத்தும், அணிந்த உடை முதலிய யாவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய நுண்மணல் சென்று படிந் துள்ளது!

கருத்து: 'இதனால், அவன் நின்னை மணந்து கொள் வதனாலே, நீயும் இனி இன்புற்றிருப்பாயாக' என்று வாழ்த் தியதாம்.

ஒன்று.

சொற்பொருள்: படுகாழ்-தானே வீழும் வித்து; யாரும் போடாதது என்பது கருத்து. நாறுதல் - முளைத்து வளர்தல். பராரை - பருத்த அடிமரம். அடுமரல், புன்னையை அடுத்து மரல். வளர்ந்துள்ள 'மரல்' கள்ளி வகையுள் மொக்குள்-மொட்டு; பூவரும்பு சூடு நர் - பூச்சூடுவாரான மகளிர். நெய் - எண்ணெய். மகளிர்.நெய் - பசுங் காய் - பசிய காய்கள்; வெண்முகை இதழ் விரிந்து பொன் னிறத் தாதோடு விளங்கி இப்போது பசுங்காயாயும் ஆயிற்று என்க, கொண்கன் -கணவன். கழி - உப்பங்கழி. ஊதை ஊதற்காற்று.

.

விளக்கம்: அவன் விரைந்து வருகின்றான் என்பதும், பலரறிய வருகின்றான் என்பதும் தோன்ற இறா அத்திரியின் குழம்பில் ஒடுங்கினதும், கோதை முதலாயவற்றுள் ஊதை மணல் ஓடுங்கினதும் கூறினளாம். இதனால், அவன் பகற் போதிலேயே பலரறிய வந்தனன் என்பதும், அதுதான் வரைவொடு வந்தது என்பதும் உணர்த்தினாள்.

279. அதர்உழந்து அசையினன் கொல்லோ!

.

கயமனார். திணை: பாடியவர்: போக்கிய தாய் சொல்லியது.

பாலை. துறை: மகட்

[(து.வி.) தலைவனோடு தலைவியும் உடன்போக்கிற் சென்று விட்டனள். அவள் செயல் அறனொடு பட்டதென்றே கருதினாலும், அவளைத் திடுமெனப் பிரிந்ததனாலே, தாயின் மனம் பெரிதும் வேதனைப்படாமலும் இல்லை; அந்த மன வேதனையைக் காட்டுவதாக அமைந்த செய்யுள் இது.) 168

நற்றிணை தெளிவுரை

வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ வைகுபனி யுழந்த வாவல் சினைதொறும் நெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புண்தாள் ஏய்ப்பப் பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம்

பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே!

сл

5

10

தெளிவுரை: வேம்பினது ஒளியையுடைய பழத்தைத் தின்னுதலையும் வெறுத்தது; இருப்பையின் இனிய பால் வற்றிய சுவையான பழத்தையும் தின்ன விரும்பியது; அதனாலே, வைகிய பனியிலேயும் சென்று வருந்தியது, வௌவால். அவ்வாறு நாடிச் சென்ற அதன்மேல், மரக் கிளைகள் தோறுமிருந்து வீழ்ந்த பனித்துளிகள், நெய் ே தாய்த்த திரியினின்றும் வீழும் சுடரைப் போலத் தண்ணிய துளிகளாக வீழ்ந்தபடியே இருக்கும். அத்தகு விடியற்காலையிலேயே சுரத்திடையே சென்று வருந்தியவள் அவள்! வாள்போலும் கோட்டையுடைய புலியேற்றை யோடு யானையும் போரிட்டது; அதனால் யானையின் கால்கள் பெரிதும் புண்பட்டன. புண்பட்ட அவ் யானையது தாள் போலச் சிதையுமாறு, பசிமிகுந்த பிடியானையானது ஓமையின் அடிமரத்தை உதைத்துச் சிதைத்தது. சிதைந்த ஓமையின் சிவந்த அந்த அடிமரமானது, வெயில் எழுந்து காய்கின்ற பொழுது விட்டுவிட்டு ஒளிசெய்தபடியே யிருக்கும். அத் தன்மையுடைய பாலையின் அருஞ்சுரமாகிய வழியிலே

.

தலைவனை அவள் மணமுடிக்கும் காலத்துக் கழிக்க வேண்டிய, சிலம்பைக் குறித்த சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாதே, பிறர்கண்டு மகிழுமாறு அவன் பின்னாகப் போயினாள் அவள்! அழகிய கலனணிந்த என் அந்த மகளின் அடிகள்தாம் அச்சுரத்திடையே சென்று இதுகாலை எவ்வாறு வருந்துகின்றனவோ! நற்றிணை தெளிவுரை

169

சொற்பொருள்: வாவல்-வௌவால். சிதர்- சிறுதுளிகள். சுரம் -சுரநெறி. அத்தம் - பாலை ஓமை-ஒரு வகை மரம். செல்வம் - செல்வம்போலப் போற்றும் விழாச் சிறப்பு.

7.

இறைச்சி: 1 . 'வேம்பின் பழத்தைத் தின்பதை வெறுத்து இருப்பைப் பழத்தை விரும்பிய வௌவாலானது, வெய்ய பனியானது உறைப்ப இருக்கும்' என்றனள். இது பிறந் தகத்துச் செல்வத்தைத் துய்ப்பதை வெறுத்துத் தலைவனின் செல்வத்தைத் துய்ப்பதை நாடிச்சென்ற தலைமகள் அவ் வில்லத்தாரோடும் எவ்வாறு மனமொத்து இருப்பாளோ என்று தாய் கலங்கியதைக் குறித்ததாம்.

2. பசியுற்ற பிடியாலே உண்ணற் பொருட்டு உதைக்கப்பட்டுப் பொழிந்த ஓமையின் அடிமரமானது, வெயிலில் ஒளி செய்யும்' என் றனள். இது, இது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட என்நிலைதான் பொழுது விடிந்ததும், பலராலும் அறியப்பட்டுத் தூற்றப்படும் என்று வருந் தியதாம்.

விளக்கம்: 'வேம்பின் ஒண்பழம்' எனவும், இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன்' எனவும் வேறுபாடு குறித்த நயம் காண்க. அருகிருக்கும் முன்னதை வெறுத்துத் தொலை விலுள்ள பின்னதை நாடிக் காலை வேளையிலே சென்று துயரத்தையும் அடையும் வாவல் என்றனர். இது, தலைவி இல்லத்தை விட்டகன்று அவனுடனே சென்றதான பேதைமையை நினைந்து கூறியதாகும். 'வைகுபனி யுழந்த வாவல்' என்றது, அவளும் புலர் காலையிலே அகன்று சென்றனள் எனக் குறிப்பதாகும். இரவிலே பிடியால் உதைத்துச் சிதைக்கப்பெற்ற ஓமையின் செவ்வரை, பொழுது புலர்ந்ததும் வெயில்பட்ட காலையிலே இமைக்கும் என்றது, அவள் இருந்த நிலைமைக்கு நல்ல உவமையாகும்.

புலியேற்றை யானையொடும் பொருதிப் புண்படுத் தியதைக் கூறியது, வழியும் ஏதமுடைத்து என்றதாம். இலையும் தழையும் அற்றுப்போகவே மரத்தைச் சிதைத்து உண்ணலாயிற்று என்றது, வழியின் கொடிய வெம்மையைக் குறித்ததாம்.

சிலம்பு கழி நோன்பு' மணத்துக்கு முன் செய்யப்படும் ஒரு விழா! இதனைக் 'கன்னிமை கழித்தல்' என்பர். அது செய்யாததற்கு முன்பே அவள் அவனுடன் சென்றதற்குத் தாய் வருந்துகின்றனள். 'பிறருண' என்றது இவ்விழாவைத் தலைவன் இல்லத்தார் கண்டு களிப்பர் போலும் என்று, அந்த நினைவாற் கூறியதாம்.

ஈற் -11

M

தலைக

170

நற்றிணை தெளிவுரை

280. நன்மனை நன்விருந்து அயரும் !

பாடியவர்: பரணர். திணை : மருதம். துறை: (1) வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது. (2) தலைமகனை ஏற்றுக்கொண்டு வழி பட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லிய தூஉம் ஆம்.

[(து.வி.) (1) பரத்தையின் உறவினாலே தலைவியை மறந்தானாகிப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன்; அவன் மீண்டும் தலைவியைக் கூடுதலை விரும்பியவனாகத் தோழியைத் தூது விடுக்கின்றான். அவள், தலைவியிடம் சென்று, தலைவனை மீண்டும் ஏற்குமாறு சொல்ல, அவள், தன் விளக்குவதாக அமைந்த சுவையான செய்யுள் இது.(2) தலைமகனைப் புலந்துவிடாது தலைவி ஏற்றுக் கொள்ள, அவள் நிலையைத் தோழி புகழ்ந்து கூற, அவளுக்குத் தலைவி சொல் லியதும் இது.]

கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும் தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை புலவாய் என்றி தோழி!-புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந்து உடைக்கும்

தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்

நன்மனை நனிவிருந் தயரும்

கைதூ வின்மையின் எய்தா மாறே!

5

10

தெளிவுரை: 'தோழீ! கொக்கு அமர்ந்ததனாலே, கிளை அசைவுற்று மாங்கனியும் விழ்ந்தது. வீழ்ந்த இனிய அம் மாங்கனியானது, கொக்கினது குவிந்த நிலைபோலத் தோற்றும் அரும்புகளையுடைய ஆம்பல்மிகுந்த, ஆழமிகுந்த நீரினுள்ளே துடுமென்னும் ஒலியோடே வீழும். அத்தகைய தண்ணிய நீர்த்துறைகளைக் கொண்டவன் நம் ஊரன். அதன்தான், அயலாம் தன்மையுடைய பொருந்தாத பரத் தமையினையும் உடையவன் என்பதைக் கண்டிருந்தும், நீதான் அவன்பால் ஊடல்கொள்ளாய் என்கின்றனை! நற்றிணை தெளிவுரை

வயலாமையது

171

பசிய கற்போன்ற முதுகிலே, அவ் வயலைக் காவல் செய்யும் மள்ளர்கள், தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்பார்கள். அத்தன்மையுடைய பழமை முதிர்ந்த வேளிர்களது குன்றூரைப் போன்றது என் மனை. அந்த என் நல்ல மனையினிடத்தே, மிகுதியான விருந்தினர்களை நாளும் உபசரித்தலாலே கையொழியாமை யினாலே, யான் அவனைப் பல நாளாகச் சந்திக்கப் பெற்றி லேன். அதனாற்றான், அவன்பாற் புலவாதுள்ளேன்,காண்பா யாக!'அவனைப்பற்றிய பிற எவையுமே எனக்குத் தோன்றிற் றில்லை' என்கின்றாள் அவள்.

|

-

சொற்பொருள்: கொக்கின் கூம்பு - கொக்கு தலையை உடலுள் ஒடுக்கியபடி யிருக்கும் நிலை. முகை - அரும்பு. பாசறை - பசிய கற்போன்ற மேற்புறம். கை தூவல்-கை யொழிதல்.-பழனம்-வயல். காவலர்-காவல் செய்வோர்.

விளக்கம்: கொக்காலே வீழ்ந்த மாங்கனியானது கொக்கின் ஒடுங்கிய நிலைபோன்ற அரும்புகளைக் கொண்ட ஆம்பல்கள் நிரம்பிய ஆழ்குட்டத்து நீரில் 'துடும்' என்ற ஓசையுடன் விழும் என்றது, மருதத்தின் நீர்வளமிக்க தன்மையை நன்கு காட்டுவதாகும்.

இரண்டாவது துறைக்கேற்ப உரை கொள்வதாயின், ஊரன் வேறுபட்டவனாக நடந்ததனை நினைத்து அவனிடத்து ஊடாதே கொள்' என்றனை; அவன் என்பால் வருவதே அரிதாதலால், ஊடினால் முற்றவும் வெறுக்குமோ என் கருதி யான் அஞ்சுவேன்" என்று தலைவி சொன்னதாகக் கொள்க.

று

உள்ளுறை: 'கொக்காலே உதிர்ந்த மாம்பழமானது ஆம்பற் பொய்கையிலே துடுமென வீழும் என்றது, பரத்தை யாலே வெறுத்து ஒதுக்கப்பட்ட தலைமகன், நின்னை வாயி லாகக் கொண்டு, இவ்விடத்துக்கு வந்தனன் போலும் என்றதாம்.

றைச்சி: 'வயல் காப்பவர், சிறப்பில்லாத நத்தை யைச் சுட்டு, ஆமையின் புறஓட்டிலே தட்டியுடைத்துத் தின்பர்' என்றது, தலைவனும் சிறப்பில்லாத பரத்தையின் நலனை விரும்பியவனாய், அவளைத் தன் பாணனின் உதவி யாலே பெற்று மகிழும் இயல்பினனாவான் என்றதாம்.

!

1 MIN

172

நற்றிணை தெளிவுரை

ஒப்புமை: 'கொக்கின் அன்ன கூம்புமுகைக் கணைக்கால் ஆம்பல் (நற் 230)' எனப் பிறரும் உரைப்பர்.

மேற்கோள்: 'அவனறிவாற்ற அறியுமாகலின்" என்னும் சூத்திரத்து,'வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது, 'தலைவ னோடு புலவாமை நினக்கு இயல்போ?' என்ற தோழிக்கு, விருந்தால் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றி லேன்; அல்லது புலவேனோ?' என்றவாறு, என நயமும் உரைப்பர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள்.147).

282. அன்பிலர் தோழி நம் காதலர் !

பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார். திணை : பாலை. துறை : (1) வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.(2) ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.

[(து-வி) (1) பிரிந்தவன், தான் வருவதாகக் குறித்த காலத்தும் வராததனாலே பெரிதும் ஆற்றாளாயினாள் தலைவி. அவளை, 'இன்னும் சற்றுப் பொறுத்திரு' என்று தோழி வற்புறுத்துகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வ தாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகள் இனியும் பொறுத்திருக்க ஆற்றாள்' எனக் கவலையுற்ற தோழி, தலை மகட்கு உரைத்ததாகவும் கொள்ளப்படும்.]

மாசில் மரத்த பலியுண் காக்கை

வளிபொரு நெடுஞ்சினை களியொடு தூங்கி வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம்பல் யாணர்

விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப

மழையமைந் துற்ற மாலிருள் நடுநாள்

தாம்நம் உழைய ராகவும் நாம்நம்

5

பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கித்

துஞ்சாம் ஆகலும் அறிவோர்

10

அன்பிலர் தோழிநங் காத லோரே! !

நற்றிணை தெளிவுரை

873

தெளிவுரை : தோழீ! மாசற்ற மரத்திலே அமர்ந்தபடியே மக்களிடும் பலியை உண்ணும் காக்கையானது, காற்று மோதுகின்ற நெடிய கிளையிலே ய தன் மேல் வீழ்கின்ற மழைத்துளியுடனேயே அசைந்துகொண்டு, பலிக்குக் காத் திருக்கும், வெல்லுகின்ற போர்வலிமையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற, நல்ல பலவகையான மிகுந்த பலிக்கொடையோடும் சொரியப்படு இன்ற, சொல்லிலடங்காத சோற்றுத் திரளைகளுடனே அழகிய பலவான ஊனும் கலந்து இடப்படுகின்ற பெருஞ் சோற்றைத் தான் நினைத்தபடியேயும் அது இருக்கும். மழை பொருந்திய பெய்தலைக் கொண்ட மயக்கத்தையுடைய இருளின் நடுயாமத்திலே, அவர்தாம் நம் அருகேயிருந்தா ராகவும், நாம் நமக்கு உண்டாகிய மெய்க்குளிரின் கடுமை யாலே மிகப்பெரிதும் வருந்தினமாய்த் தூங்காதிருந்தனம்! அதனை அறிந்தும், நமக்குத் தலையளி செய்து நம்மைக் காக் காதவரான நம் காதலர் தான் நம்பால் அன்பே யில்லாதவர் காண்! அதனால், யானும் அவர் பிரிவுக்குச் சற்றும் வருந்து வேன் அல்லேன்!

பலிச்

சொற்பொருள்: மாசு - குற்றம்; பலியுண்ணும் காக்கை குற்றமற்ற மரத்திலேயே இருக்கும் என்பது மரபு. மழையாற் கழுவப்பெற்று மாசு தீர்ந்த மரமும் ஆகும். பலியுண் காக்கை - மக்கள் தெய்வங்களைக் குறித்து இடும் சோற்றை யுண்ணும் காக்கை, களியொடு - களிப்போடு. தூங்கி - அசைந்தாடியபடி. 'கழாஅர்'-சோழர்க்குரிய கடற்றுறைப் பட்டினம். சொன்றி - சோறு; சோற்றுத் - திரளை. விடக்கு -ஊன். மால் இருள் - மயக்கத்தையுடைய இருள். உழையர் - அருகிருப்பவர். பனி-குளிர்.அழுங்கி- வருத்தமுற்று; நலிந்து.

விளக்கம்: மழையில் நனைந்து மரக்கிளையில் அசைக்கும் காற்றோடு தானும் ஆடியடியே இருக்கும் காக்கையானது, 'கழாஅர்' நகரிற் கொள்ளும் பெரும்பலியை நினைத்தபடி இருக்கும் என்றனர். இதனால், தெய்வங்களுக்கு நிணச் சோற்றுத் திரளைகளைப் பலியாக இடும் மரபும், அதனைக் காக்கை உண்ணத் தெய்வம் ஏற்றதாகக் கருதும் நம்பிக் கையும் பண்டைநாளில் இருந்தனவென்பது அறியப்படும். அருகிருந்த காலத்திலேயே நம் துயரைக் களையாத அவர் பிரிவை நினைத்து யானும் நெஞ்சழிவதிலேன் என்னும் Braif

174

நற்றிணை தெளிவுரை

தலைவியின் பேச்சிலே, அவளது ஏக்கமிகுதி நன்கு வெளிப்படக் காணலாம். அவள் காதன்மையின் மிகுதியும் புலப்படும்.

'முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்கும்' மார்பின் முயக்கம் என்பர் இதனை - (பொருநர்.183.4.) அதனைப் பெறுதலையன்றி அவனை வெறுத் தலை அவள் எதனாலும் எக்காலத்தும் நினையாள் என்பதாம்.

றைச்சிர பலியுண் காக்கையானது மழையிலே நனைந்து குளிரிலே வருந்தி நலிந்திருக்கும் காலத்தினும், கழாஅர் நகரிலே கிடைக்கும் விடக்குடைப் பெரும் பலியைக் கருதியிருக்கும் என்றனள். இது. 'என்றேனும் அவர் வந்து நம்மைத் தலையளி செய்வர் என்னும் நம்பிக்கை ஒன்றாலேயே யானும் உயிர் வாழ்கின்றேன்' என்றதாம்.

282. நாடுகெழு வெற்பனின் தொடர்பு !

பாடியவர்: நல்லூர்ச் சிறுமேதாவியார்; நன்பாலூர்ச் சிறுமேதாவியார் எனவும் கொள்வர். திணை: குறிஞ்சி. துறை: சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

[(து.வி.)] களவொழுக்கத்தேயே ஒழுகிவரும் தலைவனை தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்கு விரை தற்குத் தூண்டக் கருதினாள் தோழி. அவன் ஒருநாள் வந்து குறியிடத்து ஒரு பக்கத்தே செவ்வி நோக்கி நிற்ப தறிந்தவள், தலைவிக்குக் கூறுவாள் போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்லிய பாங்கில் அமைந்த செய்யுள் இது.] தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக் கோடேந் தல்குல் அவ்வரி வாட

நன்னுதல் சாய படர்மலி அருநோய் காதலன் தந்தமை அறியா துணர்த்த

அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்

5

கிளவியில் தணியின் நன்றுமன் சாரல்

அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை

ஆடுமழை மங்குலின் மறைக்கும்

நாடுகெழு வெற்பனொடு அமைந்தநம் தொடர்.ே.!

தெளிவுரை : தோழி!

தொகுதியாக அமைந்த,

செறித்தலைக் கொண்டவான இலங்குகின்ற

வளைகளும்

நெகிழ்ந்தன; பக்கம் உயர்ந்த அல்குலினது

அழகிய நற்றிணை தெளிவுரை

175

ரேகைகளும் வாட்டமுற்றன: நல்ல நெற்றியிடத்தே பசலையும் பாய்ந்தது; பிரிவுத் துயரம் மிகுந்த நீக்குதற்கரிய காம நோயானது, நம் காதலனாலே இந்நிலையிலே நமக்குத் தரப்பட்டது. இதனை அறியாத அன்னையானவள், தெய்வக் குற்றம்' எனக் கருதிப் படிமத்தானுக்கு இதனை அறிவித் தனள். வெறிக்களத்தே, முன்னிடப்பெற்ற கழங்கினாலே ஆராய்ந்தான் அறிவு வாய்ந்த வேலனும். அவன் சொன்னாற் போல, இதுதான் முருகனைப் பராவுதலாலே தணியுமாயின், அதுவும் நன்றுதான்! இம் மலைசாரலினிடத்தே அகிற் கட்டையைச் சுடுகின்ற கானவன், ஆங்குள்ள சருகில் முதற் கண் நெருப்பை மூட்டுதலினாலே எழுகின்ற புகையானது வானத்தையே மறைக்கும். இத் தன்மைப்பட்ட நாடு விளங்கிய வெற்பனோடு அமைந்த நம் தொடர்புதான், இனிக் கழிந்தே விட்டது போலும்!

·

சொற்பொருள்: தோடு - தொகுதி. செறிப்பு - செறிந் திருக்குமாறு அமைத்தல்! இலங்குதல்-விளங்குதல். கோடு பக்கம். அவ்வரி - அழகிய இரேகைகள். படர்-காம நோயாகிய துன்பம்; பற்றிப் படர்தலால் 'படர்' என்றனர்: அருநோய்-தீர்த்தற்கரிய நோய். முதுவாய் - அறிவு வாய்ந்த முதுமை வாய்ந்த. வேலன் - வெறியாடுவோன். உவல்-சருகு. ஆடு மழை மங்குல்-இயங்கும் மழை மேகம்.

.

தாய்

விளக்கம்: களவுக் காலத்து இடை இடையே உண் டாகும் சிறுபிரிவாலேயே தலைவி பெரிதும் நலிவெய்து கின்றனள்; அதனைத் தெய்வக் குற்றமோவெனத் கருதினள்; வெறியாடலுக்கு ஏற்பாடும் செய்தனள்; இனி இற்செறிப்பும் நிகழும்; எனவே, விரைய மணந்து கொள் வதற்குத் தலைவன் முயலவேண்டும் என்பதாம். கானவன் அகிற் கட்டையைச் சுடுதல் தினைக் கொல்லையை விரிவு படுத்தக் கருதியாகும். i

இவர்களது பேச்சைக் கேட்கும் தலைவன், அவளை மணந்து கொள்வதற்கான விரைந்த முயற்சிகளைச் செய்தலிலே விருப்பங் கொள்ளுகின்றவன் ஆவான் என்பதாம்.

இறைச்சி: 'கானவன் சுடுபுகையானது மேகம்போலத் தோன்றி மறைக்கும்' என்றனர். இது, களவின்பமே சிறந்த தெனக் காட்டி நம்முடைய தொடர்ந்த ஒழுக்கம் நம் காதலனையும் மயக்கா நிற்கும் என்பதாம். 176

நற்றிணை தெளிவுரை

283. இன்னை ஆகுதல் தகுமோ ?

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: நெய்தல். துறை: (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறு படாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்.

[(து. வி.) (1) பகற்குறியிடத்தே வந்த தலைமகனை எதிரே கண்டாளான தோழி, 'இவளை வரைந்து வந்து மணந்து கொள்வதற்கு முயல்வாயாக' என்று உள்ளுறை யால் உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.

.

(2) தலைவியை மணந்து கொண்டு தலைவன் இல்லற வாழ்விலே திளைத்து வருகின்ற காலத்தில், தோழி தலைவன் பாற் சென்று அவனைப் பாராட்டிக் கூறியதாக அமைந்த செய்யுளும் இது.)

ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல் அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ! வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய இன்னை யாகுதல் தகுமோ? ஓங்குதிரை. முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும்

வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே.

தெளிவுரை : ஒளியுடைய நெற்றியைக் கொண்டவரான பெண்கள், அகன்ற கழியிடத்தே யிருந்தும் பறித்துவந்த, மகளிரது கண்ணை நேராக ஒத்தலையுடையதும், மணம் கமழ் கின்றதுமான நறிய நெய்தல் மலர்கள், அகன்ற, கையாலே அமைத்துக் கோலஞ் செய்த சிற்றில்லை அழகுபடுத்த யிருக்கும் துறைகளையுடைய தலைவனே! உயர்ந்து வரும் அலைகளைக் கொண்ட கடலின் மேலாகப், பலரும் போற்றித் தொழுமாறு தோன்றுதலைச் செய்து, யாவரும் இன்பமடை யும்படியாக விளங்கும் ஞாயிற்றினுங் காட்டில், வாய்மை விளங்கிய நினது பேச்சையே விரும்பிய எம்மனோர்க்கு, அறிவுடையோரால் ஆய்ந்து கண்ட பழைய அழகெல்லாம் தொலையும்படியாக,நீதான் இத் தன்மையனாகுதல்,

5

Living |

நற்றிணை தெளிவுரை

177

நினக்குத் தகுதியாகுமோ? ஆதலின், நீதான் நன்குக் கருதினை யாய் ஒரு முடிவையும் செய்வாயாக!

சொற்பொருள்:ஓங்குகழி - அகன்றகழி. குறுதல் - கொய்தல். நேர்ஒத்தல் - மிக்க ஒப்புடையதாதல். அகல்வரிச் சிறுமனை- அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறு வீடு. வல்லோர்-அறி விலே வல்லவர்; அறிஞர். தொல்கவின் - பழைய தான அழகு. முந்நீர்-கடல். ஏம்-இன்பம். சுடர்-கதிரவன்.

விளக்கம்: ஞாயிற்றை உவமை கூறியது, கண்ணே அவனும் தவறாது வந்து தோன்றுதலினாலே. அவளை பகற்குறிக் வரைந்து எய்தாயாய் இங்ஙனம் ஒழுகி வந்ததனாலே அவள் தான் பெரிதும் நலனழிந்தாள்; நின் பேச்சை நம்பினோரை வருந்தவிடுதல் தான் நினக்கு முறையாகுமோ' என்கின்றாள்.

'தயங்குதிரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி" வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்'-(அகம் 263) என வாய்மைக்குக் கதிரைப் பிற சான்றோரும் காட்டுவர்.

உள்ளுறை : 'மகளிர் கொய்து கொணர்ந்த நீலமலர்கள் சிறுமனையை அழகு செய்யும்' என்றது, இவளை கொண்டனையாய் உடன்கொண்டு சென்று, நினது இல்லத் மணந்து தையும் இவளால் அணிபெறச் செய்வாயாக என்று கூறியதாம்.

இரண்டாவது துறை: தலைவனே! இவளை இங்ஙனம் வரைந்து கொள்ளாது தன் பழைய கவினழியச் செய்து நலிவித்ததுதான் நினக்குத் தகுதி தானோ?" என்றதாகக் கொள்க.

உள்ளுறை: 'சிறுமனையை மகளிர் கழியிடைக் கொய்து வந்த நெய்தல் மலரே அழகு செய்தலைப் போல, நின் இல்லத்தை இவள்தான் அழகுசெய்தற்கு உரியவள்' என்ற தாகக் கொள்க.

குறிப்பு : இச் செய்யுளில் எட்டு அடிகளேயுள்ளன 'சிறுமை' எனக் கூறிய ஒன்பது அடியினுங் காட்டில் ஓரடி குறைவாகவே உள்ளது. செய்யுளின் அமைப்பு முதலிலுள்ள ஒன்றிரண்டு அடிகள் காணாமற் போயிருக்கலாமோ என்று உணர்த்துகின்றது.

ஒண்ணுதல் மகளிர்' என்றது அவர்தாம் கவலையாற் பற்றப்படாத குமரிப்பருவத்தினர் என்றற்காம். 'வல்லோர்’ என்றது, அழகுபற்றிய சாத்திர நுட்பமறிந்த அறிஞர் என்றதுமாம்,

!

! தனக்க

யைவன்

178

நற்றிணை தெளிவுரை

284. உள்ளம் பிணிக் கொண்டோள் !

பாடியவர்: தேய்புரிப் பழங்கயிற்றினார். திணை : பாலை. துறை: பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

[(து.வி.) பொருள் தேடி வரக் கருதிப் பிரிந்து சென்றானாகிய தலைவன், அதுதான் செய்து முடியாத நிலை யிலேயும், மனம் தன் தலைவிபாற் செல்ல ஆற்றானாகிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

புறந்தாழ்வு இருண்ட கூந்தற் போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்

செல்லல் தீர்கஞ் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல்

எய்யா மையோடு இளிவுதலைத் தருமென

உறுதி தூக்கத் தூங்கி அறிவே

சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை

ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல

வீவது கொல்என் வருந்திய உடம்பே?

5

10

தெளிவுரை: 'புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும். நெய்தற்போதின் நிறத்தைப்பெறும் கரிய இமைபொருந் திய மையுண்ட கண்களையும் உடையவள் அவள்! அத்தகை யாளான, என் உள்ளத்தைத் பிணித்துக் கொண்டவள் இடத்தேயே யாமும் இனிச் செல்வேம். அவள் கொண்டிருக் கும் பிரிவுத் துயரத்தையும் தீர்ப்பேம்' என்று, எம் நெஞ்ச மானது எமக்குச் சொல்லும். "செய்யக் கருதியதான வினையை முற்றவும் முடித்தலைச் செய்யாது, இடையிலே அதற்கு ஊறு செய்தலானது, அவ்வினையாலே விளையும் பயனை அடையாமையோடு, இகழ்ச்சியையும் நமக்குக் கொடுக்கும்." என்று எழும் உறுதிப்பாட்டை ஆராய்கை யினாலே, என் அறிவோ, 'சிறு பொழுதளவுக்கும் நீதான் விரையாதிருப்பாயாக' என்று எனக்குச் சொல்லும். அவ் டத்தே, விளங்கிய, தலையிலே ஏந்தியுள்ள கொம்பினையுடைய களிறுகள் - ஒன்றோடொன்று தமக்குள் மாறுபட்டுப் பற்றி நற்றிணை தெளிவுரை

179

யிழுக்கத் தேய்ந்த புரியையுடைய பழைய கயிற்றைப் போல, என் வருந்திய உடம்புதானும் இருபாலும் இழுக்கப் பெற்று இற்று வீழத்தான்வேண்டுமோ?

சொற்பொருள் 'போது' என்றது நெய்தற் போதினை. ஈரிதழ் - குளிர்ச்சி பொருந்திய இமைகள். செல்லல் துன்பம். எவ்வம் -இடையூறு. எய்யாமை - அறியாமை; அடையாமை. இளிவு - இகழ்ச்சி. மாறு பற்றிய - இருபாலும் பற்றி இழுத்த.

விளக்கம்: உள்ளம் கொண்டமையாலே, அவளிடத்து அவளிடத்தேயே பிணிப்புக் மீண்டு போதலையே கருதிற்று அறிவு, அங்ஙனமாகப் பிணிப்பு உறாமையினாலே, ஆராய்ச்சியின்மேற் சென்றது என்று பொருள் கொள்ளல் வேண்டும். மகளிர்பால் காமுற்று மயங்கினார்க்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சியுமே முற்றத் தெளிவாகத் தோன்றா என்பதும் இதனால் உணரப்படும்.

தேய் புரிப் பழங்கயிறு' மிகச் சிறந்த உவமை. இதனால், இதனைப் பாடியவரும் இப் பெயரே பெற்றனர். 'வருந்திய உடம்பு வீவது கொல்லோ!' என்பதன்கண் வெளிப்படும் மனவேதனையை உணர்க. உள்ளம் அறிவு இரண்டும் மாறுபட்ட களிறுகட்கும், உடம்பு தேய்புரிப் பழங்கயிற் றுக்கும் நல்ல உவமைகள்.

மேற்கோள்: 'நோயும் இன்பமும் இருவகை நிலையில் என்னும் சூத்திர உரையுள் இதனை மேற்கோள் காட்டி, 'இஃது உணர்வு உடையதுபோல் இளிவரல் பற்றிக் 'ஞாயிறு திங்கள்

கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். அறிவே நாணே' என்னும் சூத்திர உரையுள், இச் செய்யு ளின் உறுதி தூக்கத் தூங்கி யறிவே, சிறு நனி விரையல்' என்னும் அடிகளை இளம்பூரணரும் எடுத்துக் காட்டுவர்.

285. எறிபுனத்துப் பகல் வருவான்!

வெண்ணாகனார்;

பாடியவர்: மதுரைக் கொல்லன் மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் எனவும் கொள் வர். திணை: குறிஞ்சி. துறை: தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்க அம்ப லும் அலருமாயிற்று என்று கூறியது.

((து.வி.) தலைவன் வந்து, செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்த தோழி, தலைவிக்குச் சொல்வாள்

T

I 180

நற்றிணை தெளிவுரை

போல, 'அவர்கள் உறவைக் குறித்த அம்பலும் அலரும் மிகுதியாயிற்று' என உரைத்து, அவை தீர்தற்பொருட்டு அவளை அவன் விரைய வந்து வரைந்து கொள்ளல் வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.)

அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்

இரவின் வருத லன்றியும் உரவுக்கணை வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி, உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு வளைவாய் ஞமலி ஒருங்குபுடை யாட வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட நடுகாற் குரம்பைத் தன்குடிவயிற் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே

நன்றால் வாழி தோழி! என்றும், அயலோர் அம்பலின் அகலான்

பகலின் வரூஉம், எறிபுனத் தானே!

5

10

தெளிவுரை : பாம்புகள் இரைதேடித் திரிந்தபடியிருக் கும், மிக்க இருள்பரந்த நள்ளிரவாகிய இரவுக்காலத்திலே வருதல் அல்லாமலும், வலிய கணைகளையும் வன்மை பொருந் திய கைகளையும் கொண்ட கானவன்,வெவ்விய வில்லை வளைத்து, நெஞ்சிடத்தே செலுத்தி வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஏற்றையோடு, வளைந்த வாயையுடைய நாய் கள் ஒருபக்கத்தே கூடிக் குரைத்தபடியே வந்து கொண் டிருக்க, வேட்டையாடி வெற்றியோடு வந்ததனாலே உவகை கொண்டோனான கானவன், காட்டகத்தேயுள்ள கால்களை நட்டுக் கட்டிய குச்சுவீடுகளைக் கொண்ட தன் ஊர்க்குச் செல்வான். அத்தகைய குன்ற நாடனின் உறவுதான், தோழீ! நமக்கும் நலம் தருவதாகுக! நீயும் வாழ்க! அவன் தான், அயலோர் உரைக்கும் அம்பலைக் கேட்டும் நம்மை விட அகலாதவன் ஆதலோடு, பகற்போதிலும் குறியிடத் துக்கு காடு எறித்துச் செய்யப்பட்ட தினைப்புனத்துக்கு, வருதலைத் தவிர்தலும் இலனாவன் கண்டாய்!

சொற்பொருள்: நடுநாள் - நள்ளிரவுப் போது. உரவு வலிமை; கணையின் வலிமையாவது அது செவ்விதாக வடிக் கப்படல். வன்கை வன்கை - வலிமையான கை; அம்பு செலுத்து தற்கான வலிமையைக் குறித்தது. முளவுமான் - முள்ளம்

நற்றிணை தெளிவுரை

தே

181

பன்றி. வளைவாய் ஞமலி - வளைந்த வாயினதான ஞமலி; 'மனைவாய் ஞமலி' எனவும் பாடம்; மனையிடத்தேயுள்ள நாய் என்று கொள்க.காட்ட -காட்டகத்ததான. நடுகாற் குரம்பை - கால் நட்டு வேய்ந்த குடிசை;சுவர் எழுப்பாதது என்க. எறிபுனம் - காட்டை யெறித்துச் செய்த புனம். வலம்படுத்தல் - வலப்புறமாக வீழச் செய்தல்.

விளக்கம்: 'அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்' என்றது, அதனால் ஏதமுறுமோவெனத் தாம் அஞ்சியதைக் கூறி, இரவுக்குறி மறுத்தலாம். வேட்டுவனின் வல்லாண்மை கூறுவார், அவன் முள்ளம்பன்றியின் ஏற்றை வேட்டை யாடியதைக் கூறினார்; இது அவர் காட்டில் திரிதலின் அவராலும் ஏதம் உண்டாகுமெனத் தாம் அஞ்சியது கூறிப் பகற்குறியும் மறுத்தலாம்.

'எறிபுனம்' என்றது, தினை கொய்து அழித்த புனம் என்றதுமாம். ஆகவே, பகற்குறியும் வாயாமை கூறி விலக்கியதாம். இதனால், பகற்குறியும் இரவுக்குறியும் விலக்கியவளாக வரைவு வேட்டனள் ஆயிற்று.

உள்ளுறை : வேட்டுலே புண்பட்டு வீழ்ந்த முள்ளம் பன்றியின் ஏற்றை, மனைநாய்கள் சுற்றிச் சூழ்ந்து நின்று குரைத்தாற்போல், தலைவனின் அருளாமையாலே நெஞ்சம் புண்பட்ட தலைவியைச் சேரியிடத்து அலவற் பெண்டிர்கள் குழுமியவராக நின்று அலருரைப்பாராவர் என்றதாம். வேட்டுவன் தலைவனுக்கும், புண்பட்ட முள்ளம் பன்றி தலைவிக்கும், நாய்கள் அலவற் பெண்டிர்க்கும் உவமையாகப் பொருந்துவன கண்டு இன்புறுக.

286. அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி !

பாடியவர்: துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார். திணை : பாலை. துறை: பிரிவிடை மெலிந்த தலைமகளை தோழி வற்புறுத்தது.

[(து.வி.) அவன் ஒரு வணிகர் பெருமகன். அவன் பொருள் தேடுதல் குறித்துப் பிரிந்தான். பிரிவுப் பெரு நோயால் அவன் மனைவி வாடித் தன் நலனழிந்தாள். அது கண்டு, அவளுடைய தோழி அவளைத் தேற்றுவாளாகக் கூறுவது இச் செய்யுள்.) 182

ஊசல் ஒண்குழை உடைவியத் தன்ன அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி கல்லென வரிக்கும் புல்லென் குன்றம்

நற்றிணை தெளிவுரை

சென்றோர் மன்ற செலீஇயரென் உயிரெனப் புனையிழை நெநிழ விம்மி நொந்துநொந்

5

தினைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின் நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ தோழியவர் சென்ற திறமே!

தெளிவுரை: ஆய்ந்து புனைந்த அணிகளை உடையாய்! தோழீ!"மலையிடத்தேயுள்ள குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலரானது ஊசலைப்போல் அசைந்தாடும் மகளிரது ஒள்ளிய குண்டலம் போலத் தோன்றும். காற்று வீசும்போது, கல்லென்னும் ஒலியோடு அவை உதிர்ந்து உடைமரங்கள் மிக்க நெறியிடத்துக் கோலமுஞ் செய்யும். அத்தகைய பொலிவிழந்த குன்றத்திடத்தேயும் நம் காதலர் சென்றனர். ஆதலினாலே, என் உயிரும் இனிப் போய் ஒழிவதாக' என்று மிகக் கூறுகின்றனை. நீதான், நின்னைப் புனைந்திருக்கும் அணிகள் கழன்று வீழும்படியாக விம்மி அழுதலையும் செய்கின்றனை. மிகவும் மனம் நொந்தனையாய் வருந்து தலையும் செய்கின்றனை. சிறிது பொறுத்திருப்பாயாக. நினைந்து பார்ப்போமாயின், 'தம்மை நட்புக்கொண்டாரது ஆக்கத்தினை விரும்பியும், தம்மைச் சேர்ந்த நின் தோள்கள் அழகுபெறுமாறு கலன்களைக் கொணர்ந்து தருதற்குமாக அன்றோ, அவர் தான் நின்னைப் பிரிந்து சென்றதன் தன்மை உளதாகும்!"

-

சொற்பொருள்: ஒண் குழை - ஒளியுள்ள குண்டலம்; இதுதான் அசைந்தாடும் இயல்பினது ஆதலின், 'ஊசல் ஒண் குழை' என்றனர். உடை - உடைமரம் வியம் - வழி. குமிழ மலர் அசைந்தாடும் காதணிபோல விளங்கும் என்பது காணக் கூடியது.கல்லென - ஆரவாரத்தோடு. வரித்தல் கோலஞ் செய்தல்; இது கற்பாறையிடத்தே மலர்கள் உதிர் தலால் உண்டாகும் தோற்றம். இனைதல் - ஏங்கிப் புலம் புதல். நட்டோர் -நட்புச்செய்த காதலர். ஆக்கம்-மேம் பாடு - வளம்; இது இல்லறம் செழுமையாக நடக்க வேண்டு

I r

நற்றிணை தெளிவுரை

183

வதற்குப் பொருளின்மிகுதி இன்றியமையாமை சுட்டியது. ஒட்டிய தோள்' என்றது, தழுவிப் பிரியாதிருக்கும் தோள் என, அவர்கள் காதலன்பை வியந்ததாம்.

விளக்கம்: 'காதில் அணிந்துள்ள குழையின் அசைவை ஊசலின் அசைவுக்குப் பிறரும் ஒப்பிட்டுள்ளனர். 'பூங்குழை யூசற் பொறைசால் காதின்' என்பது பொருநராற்றுப் படை (30). 'இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம் குமிழ்' என்று நற்றிணை 274ஆவது செய்யுளுள்ளும் கூறப்படும். இதனைக் கருதி 'ஊசல் ஒண்குழைக் காசு வாய்த் தன்ன' எனப் பாடங் கொள்வாரும் உளர்.

மேற்கோள்: 'நட்டோராக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெற வாதற்கும் அன்றோ தோழி அவர் சென்ற திறமே' என்பதனை, 'மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய என்னும் சூத்திர உரையிற் காட்டி, அணியென்பது பூணினை' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 28 உரை).

287. கொடுங்கழிப் பாசடை நெய்தல் !

பரடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: காப்பு மிகுதிக்கண் ஆற்குளாகிய தலைமகள் சொல்லியது.

[ (து.வி.) தலைவியின் களவு உறவை ஐயுற்றதனால் அவளை இல்லிற் சிறையிட்டுக் காத்து வந்தனர். அவள் நெஞ்சம் அதனாற் பெரிதும் நோகின்றது. அதனைத் தன் தோழிக்குக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.]

விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப் பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த நல்லெயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப் பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் நாம முதலை நடுங்குபகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை

5

அருகா தாகி யவன்கண் நெஞ்சம்

நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும்

தேர்மணித் தெள்ளிசை கொல்லென

10

ஊர்மடி கங்குலும் துயில்மறந் ததுவே! 184

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை: வானத்தைச் சென்று தடவுமாறுபோல உயரமாக அமைந்த கோட்டைப் புறமதிலை வெம்மையாக முற்றுகை இட்டனன். பசிய கண்களைக் கொண்ட யானைப் படையை உடைய பகைவேந்தனும் மதிற்புறத்தேயே தங்கினன். அதுகாலையும், 'வலியமைந்த எயிலைப் பகைவர் கைப்பற்றாதபடி காத்துநிற்கும் நல்ல மதில்காவல் உடை யாரான வீரரை யாம் பெற்றிருக்கின்றேம்' என்று செறுக் கிக் கூறுவான், பெரிய தகைமையாளனாகிய மறவர் குடித் தலைவன். அவனைப் போலவே யானும் துணிவோடிருந்தேன்.

வளைந்த கழியிடத்துப் பசிய இலைகளையுடைய நெய் தல்கள் மிகுந்திருக்கும், குளிர்ந்த கடற்கரைப் பகுதியாள னாகியவன் நம் தலைவன். அவன், அச்சத்தைச் செய்கின்ற முதலைகளாகிய நடுக்கந்தரும் பகையினுக்கும் அஞ்சமாட் டான். நம்பாலுள்ள காதலின் மிகுதியாலே நம்மைத் தேடியும் வந்தான். அப்படி அவன் வந்தபொழுது, கெடாத வன்கண்மை உடையதான என் நெஞ்சமும் கலங்கிற்று. நள்ளென்னும் இரவுப்போதிலே துயில் கலைந்து ஆரவாரிக் கும் புள்ளொலியைக் கேட்கும் போதெல்லாம், அதுதான் தலைவனின் தேரிற் கட்டியுள்ள மணிகளின் தெளிந்த ஓசை போலும் என மயங்கிற்று. ஊராரெல்லாம் உறங்கியிருக்கும் இந்த இரவுப்போதிலும் என் கண்கள் துயில்கொள்ளலை மறந்துவிட்டன, காண்பாயாக!

கருத்து: 'இற்சிறை பெறினும் அவன்தான் விரைந்து வந்து நம்மை மணந்து காப்பான் என்றிருந்தேன்; அதுவும் இதுபோது இல்லாதாயிற்று' என்பதாம்.

சொற்பொருள்: புரிசை - கோட்டைப் புறமதில். வெம்ப முற்றி - வெம்மை தோன்ற முற்றி: இது முற்றியதன் கடுமையை உள்ளிருப்பார் உணரும் வகையில் முற்றியதாம். எயில் உடையோர் - எயில் காத்தலில் வன்மையுடை யோரான படை மறவர். பெருந்தகை மறவன் - பெருந் தகையாளனாகிய மறவன்: பெருந்தகை இங்குப் பேராண்மை சுட்டியது. நாமம் - அச்சம். பெருமை - மிகுதி. அருகுதல்- கெடுதல்.

விளக்கம்: தான் காவலுட் பட்டமையை முற்றுகைப் பட்டிருந்த ஒரு கோட்டைக்கு உள்ளிருக்கும் தலைவனின் நிலையோடு உவமித்தாள். அவன்போல யானும் தலைவனின் ஆண்மையை நம்பினேன்; அவனோ விரைந்து வாராதானாய் நற்றிணை தெளிவுரை

Wom

185

நம்மை மறந்தனன்; நாம் புள்ளொலி கேட்கும்போதெல் லாம் அவன் தேர்மணி ஒலிபோலும் என்று மயங்கிமயங்கி இரவுத்துயிலும் இல்லாதேம் ஆயினேம் என்பதாம். புறத்தே பகைப்படை முற்றியிருப்பவும், அகமதிலோன் 'யான் எயிலுடையோரை உடையேன்' எனக் கவலையின்றித் திரிவதுபோல, தலைவி இற்செறிக்கப்பட்டுக் கடுங்காவலுட் பட்டிருக்கவும், நெறியின்கண் முதலைகள் இருப்பவும், தலைவன் தான் தலைவியின் கற்புமாண்பையும் காதலீடு பாட்டையும் கருதிய செருக்கினால், இரவுக்குறீயின்கண் வந்து ஒழுகுதலையே மேற்கொள்ளும் தன்மையனாயினான் என்று நொந்ததும் ஆம். இதனைக் கேட்கும் தோழி தலைவியது நிலையைத் தலைவனுக்கு உணர்த்த, அவனும் தெளிவுபெற்று வரைந்துகொள்ளலிலே விரைவான் என்பது இதன் பயனாம்.

288. நன்னுதல் பரந்த பசலை !

பாடியவர்: குளம்பனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் வெறியறிவுறீஇ வரைவு கடாயது.

[(து. வி.) தலைவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந் தாள் தோழி. தலைவி தலைவன் உறவினிடையே இடைப் பட்ட பிரிவினாலே தலைவிபால் பசலை தோன்றுகின்றது; அஃதறிந்த நற்றாய் முருகு அணங்கியதென வெறியாட லுக்கு ஏற்பாடு செய்கின்றாள்; இதனைத் தலைமகட்கு உரைப் பாள்போலத் தலைமகனும் கேட்டுத் தலைவியை விரைய மணந்து கொள்ளலைக் கருதுமாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

அருவி யார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு ஞாங்கர் இளவெயி லுணீஇய வோங்குகிளைப் பீலி மஞ்ஞை பெடையோ டாடுங்

குன்ற நாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண் டன்னை

செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கேட்கு மாயின், வெற்பில் ஏனற் செந்தினைப் பாவார் கொழுங்குரல் சிறுகிளி கடிகஞ் சென்றும்இந்

நெடுவேள் அணங்கிற் றென்னுங்கொ லதுவே? நற். 12

10

5 1

.

186

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : அருவிகள் ஆரவாரித்தபடியே வீழ்ந்து கொண்டிருப்பதும், அணங்குகளை உடையதுமான நெடிய கொடுமுடியின் பக்கத்திலேயுள்ள உயரமான மரக்கிளை களிலே, பீலியையுடைய ஆண்மயிலானது தன் பெடை யோடுங் கூடி ஏறியமர்ந்ததாய் இளவெயில் காய்ந்தபடியே ஆடிக்கொண்டிருக்கும் மலைநாடன், நம் தலைவன் ஆவான். அவன் நின்னைப் பிரிதலினாலே முன்னை அழகெல்லாம் கழிந்து போய், நல்ல நெற்றியிடத்தேயும் நினக்குப் பசலை படர்ந் தது. அதனைக் கண்டனள் அன்னை. செம்மையும் முதுமை யும் கொண்டவரான பெண்டிரோடும் முறத்திலே நெல்லைப் பரப்பிக் கட்டு வைத்தனளாகக் குறி கேட்பாளாயின் யாம் என் செய்வோம்? வெற்பிடத்துள்ள ஏனலாகிய செந்தினை யின்பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்து போகும் கிளிகளை வெருட்டுவேமாகச் சென்றிருந்தும், இந்த நெடிய முருகவேள் தான் அணங்கியதென்றால், அக் குறியிடத்தும் முருகு நிற்குமோ?

கருத்து: அன்னை அறிந்தனளாதலின், இனி இற் கெறிப்பே நிகழும். ஆகவே, விரைய வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதாம்.

சொற்பொருள்: அணங்கு - தெய்வம்; அச்சமும் ஆம்; அச்சம் மரச்செறிவால் உண்டாவது. ஞாங்கர்-பக்கம். பீலிமஞ்ஞை - மயிலின் ஆண். பெடை - அதன் பெட்டை. செம்முது பெண்டிர் - ஊரிடத்தேயுள்ள முதுபெண்டிர். கட்டு - கட்டுவைத்துக் குறி காணல். தலைமகளை முன்நிறுத்தி முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து நந்நான்காக எண்ணிக் காணல். எச்சம் ஒன்று இரண்டு மூன்றாயின் முருகு அணங்கிற்று என்று கொள்வது மரபு. நான்கு சரியாயின் வேறு நோய் என்பர். முருகு அணங்கியது எனக் காணின் வெறியயர்தற்கு வேலனை அழைத்து ஏற்பாடு செய்வர். பாலார் - பால் நிரம்பிய. நெடுவேள் - முருகவேள்.

உள்ளுறை : மயில் பெடையொடுஞ் சென்று விளையாடி யிருக்கும் என்றது, தலைமகனும் தலைமகளை மணந்து கொண்டு சென்று இன்புறுதல் வேண்டும் என விரும்பிய தாம்.

விளக்கம்: களவுறவால் தலைவியின் மேனியழகு மாறுபடக் கண்ட அன்னை, அது முருகணங்கியதால் ஏற்பட்டதெனக் கலங்கிக் கட்டுவிச்சியரை அழைத்துக் கட்டுக் காண்பாளா நற்றிணை தெளிவுரை

லைவி

நிலை

187

con 187

யினள் எனவும், அதன்கண் அணங்கிற்றென்பதுபட நிற்பின் வெறியாட்டயரவும் முற்படுவள் எனவும், அதன் கண் வேலன் வந்து நெடுவேள் அணங்கிற்று என்பானோ?' எனவும் படைத்துக் கூறுவதன்மூலம், இனிக் களவுறவைக் கைவிட்டு வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவா யாக என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி என்று கொள்க.

ஒப்பு வரையுச்சிகள் அணங்குடையவை என்பதனை, 'அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணங்கொள் அருவி' (அகம். 22) என்பதும் கூறும்.

289. அருளிலேன் அம்ம அளியேன். !

பாடியவர்: மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார். திணை : முல்லை. துறை : பிரிவிடைப் பருவங் சொல்லியது.

கண்டு

[(து.வி) வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தும் தலைவன் மீண்டுவரக் காணாது வருத்தமிகுதியால் நலியும் தலைவி, தோழியிடத்தே மனம் நொந்து தன்நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி தோழி! காதலர்

நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ விலரே வானம் நளிகடல் முகந்து செறிதக இருளிக் கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் கார்செய் தென்னுழை யதுவே யாயிடைக் கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய

பெருமர வேரடிப் போல

அருளிலே னம்ம அளியேன் யானே!

தெளிவுரை: தோழீ! யான் கூறுகின்ற இதனையும் கேட்பாயாக: "இந் நிலமானது தானிருக்கும் நிலையிலிருந்து ஒருபக்கமாகச் சாய்ந்து பெயர்ந்தாலும், நம் காதலர் தாம் சொல்லிய சொற்கள் தம்மிற் சாய்ந்து பெயர்தல் என்பது இல்லாதவராவர். மேகம் பெருங் கடலுக்குச் சென்று, நீரை முகந்து, வானகமெங்கணும் செறிவு பொருந்த

5 188

நற்றிணை தெளிவுரை

ருளைச் செய்து, மிக்க பெயலையும் பொழிந்து, கடுமை யான இடிக்குரலையும் முழக்கிக்கொண்டு, கார்காலத்தைச் செய்தபடி, என்னைத் துன்புறுத்துதற்கு எதிரே தோன்றா நின்றது. அவ்விடத்தே, புன்செய்க் காட்டுக் கொல்லை களிலே நிரைமேய்க்கும் கோவலர்கள், இரவுப் போதிலே எரிகொளுத்தி வைத்துள்ள பெருமரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோயும் உள்ளேயே கனிந்து பெருகிக் கனலாகின்றது. அவர் அருளும் இல்லாதேன்; யான் அளிக்கத்தக்கேன்! என் நிலையைக் காண்பாயாக!

சொற்பொருள்: புடை புடை பெயர்தல் - குடை சாய்தல்; நிலைகெடல்.நளிகடல் - பெருங்கடல். செறிதக - செறிவு பொருந்த. உழை - பக்கம் ; கொல்லை - புன்செய்த் தோட்டக் கால்கள். கோவலர்- பசுநிரை மேய்ப்போர்; எல்லி இரவுக்குத் துணையாகக் கொளுத்திய நெருப்பு. வேரடி வேராகிய அடிக்கட்டை ; இது நின்று நெடுநேரத்துக்கு எரியு மாதலின் இதைப் பயன்படுத்துவர்.

விளக்கம்: கொல்லையிற் கோவலர் கொளுத்திய எரி தணலானது இராப்பொழுது முற்றவும் கனிந்து எரியுமாறு போலத், தன் உள்ளத்துக் காமநோயும் இரவு முற்றவும் கனிந்து தன்னை அணுவணுவாக எரித்தபடி யிருக்கும் என்றனள். தன்னைப் பெருமரவேருக்கு ஒப்பிட்டது, தன் குடிப்பெருமை கருதியும், தானுற்ற நோயை உள்ளத்தள வானே அடக்கிக் காக்க முயன்றும், அது கைகடந்து மிகுதலை நினைந்தும் ஆம்.

'நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய சொற் புடை பெயர்வதோ இலரே' என்றது, தலைவனின் வாய்மை பிறழா மாண்பை உணர்த்தியதாம். அதனை நினைப்பித்து அவனை வரைவுக்கு விரைவுபடுத்தியதும் ஆம்.

290. புதுமலர் ஊதும் வண்டு !

பாடியவர் : மருதனிளநாகனார். திணை : ம ருதம். துறை: (1) பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச்சொல்லியது: (2) பரத்தையிற் பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்பத் தோழி சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) பரத்தை தலைவியின் ஊடலைத் தணிக்க நினைக் கின்றாள். விறலியிடம் கூறுவாள் போலத் தலைவனின் யல்பை உரைத்து, அவனைத் தலைவியும் ஏற்றுக் கொள்ளத்

நற்றிணை தெளிவுரை

enta

லைவ

189

தூண்டுவதுபோல் அமைந்த செய்யுள் இது.(1). பரத் தைமை கொண்டிருந்த தலைவன், தன் தலைவியை மீளவும் நாடிவர விரும்பினனாய்ப் பாணனை முதற்கண் வாயிலாக அனுப்புகின்றான். அவன் கேட்கத் தலைவியின் தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுளும் இது.) வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முதுபகடு ஆரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீப் பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும்

வண்டென மொழிப மகனென் னாரே.

தெளிவுரை : முள்ளைப் போன்றவான பற்களை உடை யாய்! வயலிடத்தேயுள்ள வெள்ளிய ஆம்பற் பூவானது களத்துக் கதிர்ச்சூட்டிடத்தே மலர்ந்திருக்கும். அண்மையிற் கன்றீன்ற பசுவானது அப்பூக்களைத் தின்னும். அது தின்ற தன் பின்னுள்ள எஞ்சியதை ஓய்ந்த நடையையுடைய பகடு மிகுதியாகத் தின்னும். அத்தகைய ஊருடையான் தலைவன். அவன் தொடர்பினை நீயும் விரும்பினையானால் என் சொற் களையும் நின் மனத்திற் கொள்வாயாக! நீயோதான் பெரு நலங்கொண்ட தகுதிப்பாட்டினை உடையவள். அவனோ வென்றால், நெடிய நீரையுடைய பொய்கையிடத்தே நடு நாளிலே சென்றடைந்தானாய்த், தண்ணிதாக மணம் கமழ் கின்ற புதுப்பூக்களை ஊதித் தேனுண்ணுகின்ற வண்டா வான் என்றே அவனையறிந்தோர் சொல்வார்கள். அல்லாமல், அவனை ஆண்மகன் என்று எவரும் கூறார். ஆதலின், அவனைப் புலத்தலாற் பயன் யாது கொல்லோ?

கருத்து: 'அவனியல்பு பரத்தைமை விரும்பலே என்று கொண்டு அதற்காக அவன்பால் ஊடாதே என்பதாம்.

சொற்பொருள்: ஆம்பல்-நீர்வளமிகுதியைக் காட்டுவது. சூடு-நெற்சூடு; கதிர்க்கட்டுகள் அடுக்கி வைக்கும்போது சூடு மிகவுண்டாவதானால் 'சூடு' என்றனர். புதுப்பூ - அன்று மலர்ந்த பூ. மிச்சில் - எஞ்சிய பூக்கள். ஓய்விடுநடை காலோய்ந்து விட்டுவிட்டு நடக்கும் நடை; இது முதிய

5 190

பகட்டின் நடை.

நற்றிணை தெளிவுரை

ஓய்தல் தளர்வால் உண்டாவது. முள் எயிறு - முட்போலும் கூர் எயிறு. நலத்தகை - நலமாம் தகைமை ; நலம் அழகும் எழிலும்,

விளக்கம்: நள்ளிரவிலே சேரிபுகுந்து புதுப்புதுப் பரத் தையரை நாடித் திரிபவன் என்பதனால், நடுயாமத்தே மலரும் ஆம்பற் பூவையுண்ணும் வண்டென்று கூறினள்.

உள்ளுறை : புனிற்றா தின்று சுழித்த மிச்சிலை முது பகடானது சென்று மிகுதியாகத் தின்றாற்போல, நின்னால் இளமைச் செவ்வியெல்லாம் உண்டு கழிக்கப் பெற்றானாகிய தலைவனைப் பிற பெண்டிரும் நுகர்வாராயினர்; அதுதான் நினக்கு ஏதும் இழுக்கம் தருவதன்று என்பதாம்.

இரண்டாவது துறைக்கு ஏற்பக் கொள்வதாயின், 'முள் எயிற்றோய்! நீதான் தலைவனது தொடர்பை விரும்பினை யானால், என் சொல்லை ஏற்றுக் கொள்ளலும் வேண்டா. நீதான் மிக்கழகு உடையவளாயிருந்தும் நின்னைப் பிரியாது உடனிருந்து வாழும் ஆண்மகன் அவன் அல்லன்; புதுப்புது மலரை நாடிச்சென்று நுகர்ந்து கழிக்கும் வண்டுபோல் பவன் அவன் என்பர் உலகோர். இதனை நீயும் கருதுவாயாக என்பதாம்.

'சூடுதரு புதுப்பூ'என்பதனைச் சூடுதற்காகக் கொய்யப் படும் புதுப்பூ எனினும் பொருந்தும். இதனைக் கொய்து சூடுவது மரபு. அவர் சூடியபின் கழித்துப் போட்ட மிச்சிலைப் புனிற்றாவும் ஓய்பகடும் பின்னர்த் தின்பவாயின என்க.

மேற்கோள்: 'தாய்போற் கழறித் தழீஇக் கோடல்' என்னும் சூத்திரவுரையில் இப் பாட்டை இளம்பூரணனார் கண்ணும்' காட்டுவர். புல்லுதல் மமக்கும் புலவிக் என்பதன். உரையில் இச் செய்யுளைக் காட்டி, இதனுள், "நீ இளமைச் செவ்வி எல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற்போலப், பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று' எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ, அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாள் என்று ஊரார் கூறுகின்ற சொல்லை, என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது எனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னார் ஆதலின், அவன் என்றும் றினாள்' என்றும், 'என் சொற் கொள்ளன் மாதோ

கடப்பாட்டாண்மை

அது

. நற்றிணை தெளிவுரை

191

என்பதற்கு, 'என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ. விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். (தொல். பொருள். 171,151)

291. அழிந்த இவள் நலனே !

பாடியவர் : கபிலர். திணை: நெய்தல். துறை: வாயி லாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து மீண்டுவரக் கருதும் தலைவனின் ஏவலனாகிய பாணனிடத்துத் தலைவியும் அவனை ஏற்கும் குறிப்பினளாதலை நுட்பமாகப் புலப்படுத்து கின்றாள் தோழி.]

நீர்பெயர்ந்து மாறிய செறிசேற்று அள்ளல் நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண்படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் தண்பெரும் பௌவநீர்த் துறைவற்கு நீயும் கண்டாங்கு உரையாய், கொண்மோ, பாண! மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து

எல்லித் தரீஇய இனநிரைப்

பல்லான் கிழவரின் அழிந்தவிவள் நலனே ?

.

5

தெளிவுரை : பாணனே! நீரானது வற்றிப் போனத னாலே தன்னுடைய தன்மை மாறுபட்டதான், செறிவு கொண்ட அள்ளற் சேற்றிடத்தேயுள்ள, நெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைப் பற்றித்தின்ன நினைத்தன நாரையினம். குவிந்து கிடக்கும் மணல் மேட்டிலே ஏறி யிருந்தபடி, அரசரின் ஒள்ளிய காலாட்படைத் தொகுதியின் தோற்றம்போல அவை தோன்றும். அத்தகைய குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைக்குரியவன் தலைவன். அவனுக்கு நீதான் கண்டது கண்டபடியே சென்று சொல்வாயாக. மிகப் பெரியவனாகிய முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக் காரி, தன் காரிக்குதிரையைச் செலுத்திச் சென்று, இராப் பொழுதிலே கொண்டுதந்த பகையரசரின் ஆநிரைகளுக்கு உரியோரான, பலவாகிய பசுக்கூட்டங்களுக்கும் உரியவரின் செல்வமெல்லாம், அந்த இரவுக்குள்ளாகவே அழிந்து

+ $92

L

நிபவன்

நற்றிணை தெளிவுரை

போயினாற் போலவே, இவளுடைய நலனும் அவனைப் பிரிந் ததனாலே முற்றவும் அழிந்து போயினதனையும் காண்பாயாக! இதுதான் அவர் குணமாமோ?

கருத்து: 'அவன் செயலாலே இவளடைந்த நலக் கேட்டை நீதான் கண்டது கண்டபடியே சென்று அவன் பாற் சொல்லுக' என்பதாம்.

சொற்பொருள்! நீர் பெயர்ந்து-நீர் வற்றிப் போய். மாறிய - தன் தன்மை மாறுபட்டுப் போகிய செறிசேற்று அள்ளல் - செறிவான சேற்றைக்கொண்ட அள்ளல். அள்ளல்- சேற்றுப்பகுதி. நெய்த்தலைக் கொழு மீன்- கொழுப்புத் சத்துடைய கொழுத்த மீன். இனக்குருகு - குருகினம். முள்ளூர்-முள்ளூர்க் கானம்; மலையமானுக்கு உரியது. 'மா' என்றது, அவனது காரிக் குதிரையை.

உள்ளுறை! மீனருந்துஞ் செவ்விநோக்கிக் குருகினம் வரிசையாக மணல்மேட்டில் இருத்தலைப்போலத் தலைமக னிடமிருந்து பெறுதற்கான பொருட்பயனை எதிர்பார்த்து விறலி முதலாயினவரோடு பாணனும் கூடியிருக்கின்றான் என்றதாம். குருகினம் படையணிபோலத் தோற்றினும் படையாகாமைபோல, விறலி முதலாயினவரும் தலைவ னுக்குத் துணையாவார்போலக் காட்டினும், உண்மையில் உறுதுணையாகும் பண்பினராகார் என்பதாம்.

விளக்கம்: 'செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் (குறுந். 312) என்பது, முள்ளூர்க்குரியவன் மலையமானாதலை உணர்த்தும். பல்லான் கிழவராயிருந்தாரும் மலையமானின் செயலால் அந்தப் பொழுதிலேயே அனைத்துமிழந்து வறிய ராயினார். அதுபோலவே, இவளும் அவன் செயலால் தன் அழகனைத்தையும் இழந்தாளாயினாள். இவளது நிலையைக் கண்டது கண்டபடியே அவனுக்கும் கூறுக என்பதாம்.

292. யாணர் வைப்பின் கானம் !

பாடியவர்: நல்வேட்டனார். திணை: குறிஞ்சி. துறை : இரவுக்குறி மறுத்தது.

மனஞ்

[(து.வி.) இரவுக்குறி வந்து ஒழுகுதலிலேயே செலுத்தியவனாக இருக்கும் தலைவனிடத்தே, தலைவியை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தைத் தூண்டக் கருது கின்றாளான தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.) நற்றிணை தெளிவுரை

நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம் தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுகரை ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும்

கராஅம் பேணாய் இரவரின் வாழேன் ஐய மைகூர் பனியே!

தெளிவுரை : ஐயனே! நெடிய

193

5

கணுக்கள் கொண்ட சந்தன மரத்தின் அசையும் கிளைகளிலே, பசுமை நிறம் அமைந்த இலையைக் கொண்ட நறுங்கொடியினதான தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். அத் தமாலத்தினை, காட்டிடத்தே இனிய தேன்எடுக்கும் குறவர்கள் வளைத்து அறுத்துக் கொண்டு போவர். அப்படிப் போகின்ற

ய.

புது

வருவாய் மிகுந்த இடத்தையுடைய கானம் என்றும் கருத மாட்டாய்! களிறுகள் தம்முட் பொருதலாலே இடிந்து கரைந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழமான பள்ளங் களிலே, ஒளிவிளங்கும் வெள்ளைப் பளிங்குக் கற்க ளோடு செம்பொன்னும் கிடந்து மின்னிக் கொண்டிருக்கும் கருங்கற்களிடையே ஓடும் காட்டாற்றது அருஞ்சுழியிடந் தோறும் முதலைகள் இயங்கியபடியிருக்கும் இவற்றையும் கருதாயாய்,இரவு நேரத்திலே நீயும் வருவாய். இருள் நிரம்பிய பனிக்காலத்து இரவிலே நீ இப்படி ரவிலே நீ இப்படி வருவதைத் தொடரின், யானும் உயிர் வாழ்ந்திரேன்!

கருத்து: 'நினக்கு. ஊறு நேருமோவென்னும் கவலையே என்னைக் கொன்று விடும்' என்றதாம்.

சொற்பொருள்:ஆரம் -சந்தனம். வலத்தல் சுற்றிப்படர்தல் கேழ் - நிறம். தமாலம் - தமாலக்கொடி; இது நறுமணமுடை யது என்பதும் இதனால் அறியப்படும். பரியும் - பற்றி இழுக்கும். கயவாய் - பெரிய வாய். வான்பளிங்கு வெண்பளிங்கு. கராம்-முதலை. 'நெடுந்தண் ஆரம்' எனவும் பாடம்.

-

இறைச்சி: தேனைக் கொள்பவர் சந்தன மரத்துப் படர்ந்த தமாலக் கொடியை அறுப்பர் என்றது, அவ்வாறே தலைவியின் நலனை நாடிவரும் நீயும் அவளைப் படர்ந்து வருத்தும் கவலையை ஒழிப்பாயாக என்பதாம். 7

194

+

தாய்

நற்றிணை தெளிவுரை

விளக்கம்: இன்று இவண் வந்து சேர்ந்த நீதான் இனித் திரும்புதல் வேண்டா என்பதாம். அதுதான் இயலாமையின் அவன் மணத்தினை விரைந்து செய்து கொள்ளுதற்கு நினைவான் என்பதுமாம். களிறு பொரக் கரைந்த கரையினைக் கொண்ட பள்ளங்களில் வெண்பளிங்கும் செம் பொன்னும் காணப்பெறும் என்றது, அவ்வாறே எதிர் பாராத நின்னது வருகையாலே தலைவியும் இன்பத்தை

அடைந்தனள் என்பதாம். பொழுதும் களிறுன்பத்தை

சுழியும் அதனிடைக் கராமும் மைகூர் பனியும் கடந்து வரு தலால், அவனுக்கு யாதாகுமோ என்னும் கவலையால் அவள் துயருற்றனள் என்க.

293. இடுபலி நுவலும் மன்றம் !

பாடியவர்: கயமனார். திணை : பாலை. துறை: 1. தாய் மனை மருண்டு சொல்லியது; 2. அவரிடத்தாரைக் கண்டு சொல்லி யதூஉம் ஆம்.

காதல

[(து.வி.)1. தன் மகள் உடன் போக்கிலே தன் னுடனே சென்று விட்டதனாலே பெரிதும் வறிதாகிப்போன மனைக்கண்ணிருந்து புலம்பும் தாயின் புலம்பலாக அமைந் தது இது. 2.தாய் தலைவனின் ஊராரைச் சார்ந்து, தன் துயர் தோன்றச் சொல்லியதாகவும் இது கொள்ளப்படும்.] மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப் பலிக்கள் ஆர்கைப் பார்முது குயவன் இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப்

பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் பெருவிதுப் புறுக மாதோ எம்மில்

பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளி இக்

கொண்டுடன் போக வலித்த

வன்கண் காளையை ஈன்ற தாயே!

தெளிவுரை : பாரகத்தேயுள்ள முதுகுடியைச் சார்ந்த வன் குயவன். அவன் நீலமணிபோலத் தோன்றும் நொச்சிப் பூவின் மாலையைச் சூடிக் கொள்வான்; பலியிடப் பெற்ற கள்ளினையும் குடித்துக்கொள்வான்; அதன்பின், தெய்வத் துக்கு இடுதற்குரிய பலியைப்பற்றியும் ஊராருக்கு எடுத்துச்

5 நற்றினை தெளிவுரை

195

சொல்லியபடி இருப்பான். அகன்ற இடத்தையுடைய அத்தகைய ஊர்மன்றத்திலே தெய்வத்துக்கு விழா வெடுத்தலையும் மேற்கொண்ட பழமைச் சிறப்புடைய மூதூரிடத்தே, பூப்போலும் கண்களைக் கொண்டவரான அவளது தோழிப் பெண்டிரைக் காணும்போதெல்லாம்-

வயப்படுத்திக் கொண்டு, அவளையும்

எம் இல்லத்துக் குமரியான பொலிவுபெற்ற கூந்தலை உடையாளைத் தன் பொய்ம்மொழிகளாலே மயக்கித் தன். வயப்படுத்திக் கொண்டு, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தன்னூர்க்குப் போவதற்கு ஒருப்படுத்திய வன்கண்மையினனாகிய காளையாவானைப் பெற்ற தாயும், என்னைப் போலவே தன் மகளைப் பிரிந்து பெரிதும் மனநடுக்கத்தை அடைவாளாக!

தாம்

கருத்து: 'என் வருத்தம் அவன் தாய்க்கும் வருக' என்ற

சொற்பொருள்: மணி -நீ ல மணி குரல் - பூங்கொத்து பலிக்கள் - பலிப்பொருளாகிய கள். ஆர்கை -உண்கை. ஆயம் ஆயமகளிர். இடுபலி நுவலல் - தெய்வத்துக்கு இன்னின்ன பலியை இடுதற்கு வருகவென்று ஊராரைக் கூவியழைத்தல். விழவு - கொற்றவைக்கு எடுக்கும் விழா. விதுப்புறல் - மன நடுக்கம் கொள்ளல்.

விளக்கம்: 'மணிக்குரல் நொச்சித் தெரியல். சூடி என்றது, நொச்சியின் பூங்கொத்துக்களைச் சூடிக்கொள்ளும் மரபினை உணர்த்தும். 'குயவன்' காளி கோயிற் பூசாரி; அவன் பாலைநில மறவர்க்கு அவரிடும் பலியைப்பற்றி ஊர்மன்றத் திலே நின்று குரலெடுத்து உரைப்பான் என்பது மரபு: விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர் - ப ழமையும் வெற்றிச் செருக்கும் கொண்ட மூதூர் விழவினை மேற் கொண்ட மூதூர் என்க. 'காளையை ஈன்ற தாயும் எம்போல் பெருவிதுப்புறுக' என்றது, அவளும் தன் மகளைப் பிரிந்து இப்படி என்போலத் துன்பமடைக என்றதாம். 'வன்கண் காளை' என்றது, இல்லத்தாரின் மனவேதனை நினையாது,தன் இன்பமே குறியாகக் கொண்டு தலைவியை அழைத்துச் சென்ற கொடுஞ்செயலைப் பற்றிக் கூறியதாம்.

தன் அன்பு மகளைப் பிரிந்ததன் வருத்தம் மேலிடப் பெரிதும் மனம் நொந்தவளான தாய் தன் மகளது மடமை பற்றியோ, அன்றி அவளது காதற் செறிவு பற்றியோ 196

glian

நற்றிணை தெளிவுகரி

அன்றி அவளைத் தன்னோடும் அழைத்துச் சென்ற காளையா வானின் காதலீடுபாடுபற்றியோ நினைப்பிற் கொண்டிலள். அவனது வன்கண்மையை நினைந்து, அத்தகு வன்கண்மை உடையவனாக அவனை வளர்த்துவிட்ட அவன் தாயானவள், தானும் தன் மகளைப்பிரிந்து தன்னைப்போலவே பெரிதும் வருந்த வேண்டும் என்றே புலம்புகின்றாள். பெண் மையின் மனவியல்பை நுட்பமாகக் காட்டும் சிறந்த செய்யுள் இதுவாகும். வெகுளியிலே தாய் கொள்ளும் மெய்ப்பாடும் அதனை ஆற்றும்வகையாலே அவள் புலம்பும் புலம்பலும் நுட்பமாக இயல்பாக அமைந்துள்ளன.

294. நோயும் இன்பமும் ஆகின்று !

பாடியவர்: புதுக்கயத்து வண்ணக்கன். கம்பூர்கிழான். திணை: குறிஞ்சி. துறை : மணமகனை உட்புக்க தோழி தலைமகளது கவின்கண்டு சொல்லியது.

[(து.வி.) தலைவியைத் தன்னுடனே அழைத்துப் போய் மணந்து கொண்டு, தலைவன் இல்வாழ்க்கை நடத்துவதனைக் கண்டு, தோழி வியந்து கூறியது.)

தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ மாயம் அன்று தோழி வேய்பயின்று எருவை நீடிய பெருவரை அகந்தொறும் தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக்

கொன்ற யானைக் கோடுகண்டு அன்ன செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள் சிலம்புடன் கமழுஞ் சாரல்

விலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே

5

தெளிவுரை: தோழீ! பெரிய மலையிடத்து உட்பகுதி தோறும் மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருப்பதோடு கொருக்கச்சியும் முளைத்துப் பரவியிருக்கும். அவ்விடத்தே தொன்றுதொட்டே வருகின்ற பகையாகிய புலியோடும் மாறுபாடு மிகுதியினாலே சினஞ்சிறந்தது களிறு ஒன்று. அப் புலியைத் தன் கோட்டாலே குத்தியும் கொன்றது. அதனாலே, குருதிக்கறை படிந்த அதன் கொம்பைப் போலச் சிவந்த புறத்தையுடைய கொழுவிய காந்தள் முகையினது நற்றிணை தெளிவுரை

197

அரும்பும் அவிழ்ந்தது. அதனால் அம் மலைப்பக்க மெல்லாம் மணங்கமழ்வதாயிற்று. அத்தகையமலைச்சாரலைக் கொண்ட, குறுக்கிட்டுக் கிடக்கும், விளங்கும் மலைநாட்டிற்கு உரியவன் தலைவன்! அவன் அகன்ற மார்பானது தீயையும் காற்றையும் ஆகாயமானது ஒருங்கே பெற்றாற்போலத் துன்பமாகவும் இன்பமாகவும் அதுதானே ஆயிற்றுக்காண். இது பொய் யன்று என்றும் நீதான் அறிவாயாக!

கருத்து: தீயாக வருத்தித் மார்பே, இதுபோது மென்காற்றாகி தாயிற்று என்பதாம்.

துயர் தந்த அவன் இன்பமும்

தருவ

சொற்பொருள்: வளி - காற்று. நோய் - பிரிவாலுண்டாகும் காமநோய். இன்பம் - அணைத்து மகிழ்தலால் அடையும் இன்பம், மாயம் - பொய்ம்மை. எருவை - கொருக்கச்சி. தான்று உறை துப்பு - பழைமையாக உண்டான பகைமை. முரண்-மாறுபாடு. செப்புடை - சிவந்த புறப் பகுதி. 'காந்தள்' என்றது செங்காந்தளை. இலங்குதல் - விளங்குதல்.

உள்ளுரை :

காந்தள் சிலம்பிடமெங்கும் கமழும் என்றது, தலைவனது அன்பு கலந்த இல்வாழ்க்கையின் அவனூரினராலும் தலைவியின் ஊரினராலும் உவந்து பாராட்டப்பெறும் சிறப்பினது என்பதாம்.

செவ்வி

விளக்கம் : அவன் பரந்த மார்பை விசும்புக்கும், பிரிவுப் பெருநோயை தீக்கும், உடனுறைந்து தரும் இன்பத்தை வளிக்கும் பொருத்திக் காண்க. வெம்மையை ஆற்றும் வளி என்று கொள்க. 'மாயம்' என்றது இல்லாத ஒன்றை உள்ளது போலத் தோன்றக் காண்டல். காந்தள் முகை யானது புலியைக் கொன்ற குருதிக்கறை படிந்த யானைக் கோடு போலத் தோற்றுமாயினும், அதுதான் எத்தகைய வன்கண்மையும் இல்லாததாய், சிலம்புடன் நறுமணம் கமழும் நற்செயலையே செய்தலைப்போலத், தலைவனும் கொடியவனே போலப் பிரிவுப் பெருநோயால் வருத்தமுறச் செய்யினும், அதனைப் போக்கி, மென்காற்றென வந்து அணைத்து இன்பம் செய்வானாக அமைந்தனன் என்பதாம். தலைவியை எண்ணி வருந்திய தோழியானவள் அவள் நடத்திய இல்வாழ்க்கைச் செவ்வியைக் கண்டு மகிழ்ந்து கூறுகின்றாள் என்றும் கொள்க. தோழிக்குத் தலைவி கூறுவ தாகவும் உரைக்கலாம். 198

நற்றிணை தெளிவுரை

295. முதிர்ந்து முடிவேம் யாமே!

பாடியவர்: ஒளவையார். திணை: நெய்தல். துறை: (1) தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. (1) சிறைப் புறமும் ஆம்.

[து வி) (1) தோழி தலைமகனை நெருங்கி, 'நம் உறவை அறிந்தனள் அன்னையாதலின், தலைவியை இற்சிறை வைக்கவும் எண்ணினள்' என்று கூறுகின்றாள். ஆகவே, இனிக்களவுறவு வாயாது; வரைந்துவந்து இவளை மணந்து கொள்ளுதற்கு விரைவாயாக என்று குறிப்பாகப் புலப் படுத்துகின்றனள். (2) தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்குமாறு தோழி கூறியதும் இதுவாகும்.] முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று யாயும் அஃ தறிந்தனள் அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை

வேறுபல் நாட்டிற் கால்தர வந்த

பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்

கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்

5

இளநலம் இற்கடை ஒழியச்

சேறும் வாழியோ முதிர்கம் யாமே!

தெளிவுரை : பசுமை கெட்டுப் போன

பக்கத்திலே காய்ந்து கிடக்கும்

காய்ந்து கிடக்கும்

மலைப்

வள்ளிக் கொடியைப் போலத், தன் புறவழகெல்லாம் அழிவுற்றதாகிப் போயின. தழைந்து தாழ்ந்த கருங்கூந்தலை உடையவரான ஆய மகளிரும், மனம் அழுங்கா நின்றனர். எம் தாயும் தலைவியின் களவொழுக்கமாகிய அதனை அறிந்து விட்டனள். அதனாலே, தலைவியை இல்வயிற் செறித்தனளாகி, அரிய காப்பையும் ஏற்படுத்தினள். ஆதலினாலே,

வேறாகிய பலப்பல நாடுகளின்றும் காற்றுச் செலுத்து தலாலே வந்தடைந்த, பலவான செய்வினைச் சிறப்புடைய நாவாய்கள் காணப்படும், எம் தந்தையது பெரிதான கடல் துறையினிடத்தே வைக்கப் பெற்றுள்ள, உண்டாற் செருக்கை மிகுவிக்கும் கள்ளின் சாடியைப் போன்றதான எம்முடைய இளமையது நலமெல்லாம், இல்லத்திடத்தேயே யாகிக் கெட்டு ஒழியும்படியாக யாமும் எம் மனையகத்தே |

I

நற்றிணை தெளிவுரை

199

செல்லா நிற்போம்! அவ்விடத்திருந்தபடியே அவனைப் பெறாதே முதுமையடைந்தும் முடிவை எய்துவோம்! இதனை எமக்கு நேர்வித்த நீதான் நெடிது வாழ்வாயாக!

கருத்து : எம்பால் அன்புடையையாயின், நீதான் மணத்தோடு விரைய வந்தனையாய் அவள் நலிவைப் போக்குவாயாக என்றதாம்.

சொற்பொருள்: முரிந்த சிலம்பு - கோடை

வெம்மை

யாலே பசுமை நலன் கெட்டழிந்து போய்க் காணப்படும் மலைப்பகுதி. எரிந்த - காய்ந்து பட்ட புறன் - மேற்புறம். ஒலிதல் - தழைத்தல். தாழ்தல் - தொங்குதல். அழுங்குதல்- பெரிதும் வருந்திச் சோர்தல். கடி-காவல். கடி அயர்தல். காவலைச் செய்தல். கால்-காற்று. பலவினை நாவாய்-பல வான செய்வினைத் திறன் பெற்ற நாவாய் : பல நாட்டின ஆதலின் அவை பல வினைத்திறன் உடையவாயின. தோன்றும் - வந்து சேர்ந்து காணப்படும். கலி - செருக்கு. மடை - மடுத்தல் உண்டல். இள ள நலம் - இளமை நலம். ளமையும் நலமும் என்றும் கொள்ளலாம். சேறும் சென்றடைவேம். முதிர்கம்- முதிர்ந்து போவேம்.

விளக்கம்: வளமை செறிந்த சிலம்பினிடத்தே பசுமை தோன்றத் திகழ்ந்த வள்ளிக்கொடி, தானும், மழைவளத் தைப் பெறாமையினாலே காய்ந்து போயினாற் போல், தலைவியின் துயர்கண்டு அழுங்கிய ஆயமகளிரது ஒலிவரும் தாழிருங் கூந்தலும் எண்ணெய்யிட்டுப் பேணப் பெறாமை யிலே அழகழிந்தது என்று கொள்க. சாடியைத் தலைவிக்கும், அதன்பாலுள்ள கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமை யாகக் கொள்க. சாடி கண்டாரை இன்புறுத்துவது, தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக் குறச் செய்து களிப்பது.

.

முதிர்கம் யாமே' என்பது சிந்தனைக்கு உரியது. வேற்று வரைவுக்கும் கற்பிற் சிறந்தாளாகிய தலைவி இசையமாட்டாள்; களவிலும் நின்னை அடையாள்; தானும் அவளை மணத்தலைக் கருதமாட்டாய்; ஆகவே, அவள் வருந்தினளாக இளமையும் அழகும் வறிதே கழிய முதிர்ந்து சாவையே அடைவாள்; அவளுக்கு அணுக்க ராகிய யாமும் அவள் பயின்ற துயரைப் பொறேமாய் அந் நிலையே எய்துவேம்; இத்துணைக்கும் காரணமாகிய 200

நற்றிணை தெளிவுரை

நீ தான் நெடிது வாழ்வாயாக என்கின்றனள். தோழி கூற்றாக அமைந்த இச் சொற்களிலே பெருமிதப் பண்பும், வரைவுகடாதலும், ஒருங்கிணைந்து மிளிர்கின்றன!

வேறு பல் நாட்டிற் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை என்பது, பழந்தமிழ் நாட்டு வாணிக வளத்தை உணர்த்துவதாம். மகளிரது இளமை நலத்தைக் கட்சாடிக்கு உவமித்த நயத்தைச் சிந்தித்து உணர்ந்து களிக்க வேண்டும்.

-

-

296: படர் உழந்து ஒழிதும் !

பாடியவர்: குதிரைத் தறியனார்; குதிரைத் துறையனார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

((து.வி.) தலைவன் கார்காலத்தேயும் வினைப்பொருட் டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குக் கருதியதனைத் தோழி வாயிலாகக் கேட்ட தலைவியானவள், அவளுக்குத் தன் நிலையைத் தெளிவிக்கக் கூறியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

என்னா வதுகொல் தோழி? மன்னர் வினைவல் யானைப் புகர்முகத் தணிந்த பொன்செய் ஓடை புனைநலம் கடுப்பப்

புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்

ஏகல் மீமிசை மேதக மலரும்

பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும்

வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் செல்ப என்ப காதலர்

ஒழிதும் என்பநாம் வருந்துபடர் உழந்தே!

தெளிவுரை: தொழீ! மன்னர்கட் குரியவான போர் வினையிலே வல்லமையுடைய யானையானது, புள்ளிகொண்ட முகத்திலே யணிந்துள்ள பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தின் புனைதல் சிறந்த அழகைப்போல, புழல் அமைந்த காய்களைக் கொண்ட கொன்றைமரத்தின் கிளை களிலே கொடிகொடியாகத் தூங்கும் சரக்கொன்றையின் பூங்கொத்துக்கள், பெருமலையின் மிக உயர்ந்த பக்கத்தே, மேன்மைப்பட மலரா நிற்கும்! நற்றினை தெளிவுரை

201

'காதலித்தாரைப் பிரிந்திருப்பவர்கள், பிரிவுத் துயரத் தாலே தனித்திருந்து வருந்துவதற்கு உரியதான கார்காலத்தி லேயும், வினைசெய்தலையே நினைந்திருக்கும் உள்ளத்தோடு, நம் காதலர் விரைந்து செல்வார்' என்பார்கள். நாம் அவரைப் பிரிந்தேமாய்ப், பிரிவைப் பொறுத்தபடி, நம்மை வருத்துகின்ற துயரத்தையும் தாங்கினமாய், இவ்விடத்தே இருந்தொழிதல் வேண்டும் என்றும் கூறுவர். இனி, எல்லாம் ஏதாய் முடியுமோ?

கருத்து: 'அவரே நம் துயரத்தை எண்ணாதவராயின், இனி யாம் எதனைப்பற்றி உயிர்வாழ்வதோ?' என்பதாம்.

சொற்பொருள் : வினை வல் யானை - போர்வினைப்பாட்டை அறிந்து அம் முறைப்படி செய்தலிலே வல்ல யானை. புகர் புள்ளி. ஓடை - நெற்றிப்பட்டம். புழல் - புழை புழற்காய்க் கொன்றை-உள்ளே புழையையுடைய கொன்றைக் காய். ஏகல் - -உயரமான பாறை. மேதக - சிறப்பாக. 'அரும் பெறற் காலை' என்றது கார்காலத்தை. வினையே நினைந்த - வினை செயல் ஒன்றை மட்டுமே நினைந்த. துனைதல் - விரைதல். வருந்துபடர் - வருந்துதற்குக் காரணமான துன்பம்.

விளக்கம்: 'யானையின் முகத்திலேயுள்ள பொற் பட்டத்தைப் போலப் பாறைமேல் விழுந்து கிடக்கும் கொன்றை மலர்கள் தோன்றும் என்றனர். யானை முகம் உயர்ந்த பாறைக்கும், பொற்பட்டம் பொன்னிறக் கொன்றைப் பூக்களுக்கும் உவமை. 'புனைநலம்' என்றது. பொற்பட்டம் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. கொன்றை சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டாற்போலப் பூத்திருத்தலின், 'கோடணி கொடி இணர்’ என்றனர். பிரிந்தோர் இரங்குவதற்குரியது 'கார் காலம் என்பது தெளிவு. 'வினையே நினைந்த உள்ளம்' என்ற தனால், தம்மை மறந்த உள்ளம் என்பதும் சொன்னது ஆயிற்று; ஆகவே, இனி எம் உயிர் என்னாகுமோ என்னும் ஏக்கமும் புலப்படும். 'துனைஇ' என்றது, அதுதான் விரையாதாயின் ஒரு சிறிது நம் நினைவும் எழக்கூடும்; அதற்கும் ஏதுவின்றி, அதுதான் விரைந்து செலுத்துவதாயிற்று; இனி என்னாகுவமோ? என்று வருந்துகின்றனள் என்பதற்காம்.

பயன் : தலைவியது இப் பேச்சைத் தோழி தலைவனுக்கு உணர்த்த, அவனும், தலைவியின் பிரிவாற்றாமைத் துயரைக் கருதினவனாகத் தான் பிரிந்து போவதனைக் கைவிடுவான் என்பதாம்.

நற் 13 202

நற்றிணை தெளிவுரை

297. அன்னை கூவினள்!

பாடியவர் : மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார். திணை : குறிஞ்சி. துறை: (1) தோழி சிறைப் புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது; (2) தோழி தலைமகளை அறத்தொடு நிலை வலிப்பித்ததூஉம் ஆம்.

து

[ (து-வி) (1) தலைவன், செவ்விநோக்கிச் சிறைப்புறமாக ஒதுங்கி நிற்பதைக் கண்டாள் தோழி. தலைமகளிடம் சொல் பவள் போலத் தலைவனும் கேட்டுக், களவு வெளியாயின உணர்ந்து, தலைவியை விரைய மணக்கும் முடிவுக்கு வருமாறு குறிப்பாகக் கூறுகின்றாள். (2) தலைமகளை அறத்தொடு நிற்பாயாக என்று வற்புறுத்தி அதன்கண் நிலை பெறுத்தியதும் ஆம்.]

5

10

பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய்; பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; அவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை;. நின்னுள் தோன்றும் குறிப்புநனி பெரிதே: சிதர்நனை முணைஇய சிதர்கால் வாரணம் முதிர்கறி யாப்பில் துஞ்சும் நாடன் மெல்ல வந்து நல்லகம் பெற்றமை மையல் உறுகுவள் அன்னை; ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே ! தெளிவுரை : தோழீ! பொன்னாலே கிண்ணத்திலே வைக்கப்பட்ட பாலானது,நின்னால் உண்ணப் செய்யப்பெற்ற படாதேயே கீழே வைக்கப்பட்டிருப்பதனைக் காணாய்! நின் மேனியது ஒளியும் மிகுந்து வேறாகத் தோன்றுகின்றது! நின் சிவந்த அடிகளால் நடந்து ஒதுங்கிப் போனாயும் அல்லை! பலவாறாகவும் மாண்புகொண்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு. கள்ளுண்டவர் அடையும் மயங்கிய பார்வைக்கு நின்பால் இடமில்லையாகவும், நீயும் அடைந்தவளேபோலத் தோன்றுகின்றனை! நாம் இவ்வாறு மயக்கம் இருப்பதன் காரணம் எதனாலே என்று எண்ணியும் பார்த்தா நற்றிணை தெளிவுரை

203

யில்லை; ஆதலினாலே, நின் உள்ளத்தே தோன்றும் குறிப்பானது மிகவும் பெரிதாயுள்ளது!

வண்டுகள் மொய்க்கும் மலரும் பருவத்தையுடைய பூக்களை வெறுத்ததான, சிதர்ந்த இறகுடன் கூடிய கால்களை யுடைய கோழியானது, முதிர்ந்த மிளகுக்கொடிகள் பின்னிக் கிடக்கும் இடத்திலே சென்று உறங்கியபடி யிருக்கும் மலை நாடனானவன், மெல்ல வந்தானாகி, நின் நல்ல உள்ளத்தேயும் இடம் பெற்றதனைப்பற்றி ஐயமுற்றவளாக, அன்னையும் மயக்க மடைவள். இப்போது, அவள் ஐயம் இல்லாதேயே, கடுங்குரல் எடுத்து நின்னை அழைக்கின்றனள்; காண்பாயாக!

கருத்து: நின்னுடைய மயக்கத்தால் களவுறவை அன்னையும் அறிவாள் என்றதாம். தலைவியால் சிறு பிரிவையும் மறக்க முடியாமையின், விரைவில் அவளை மணந்து, பிரியா துறையும் இல்லறவாழ்வினை அமைப்பதே தலைவனின் விரைந்த செயலாக வேண்டும் என்பதுமாம்.

-

சொற்பொருள்: வள்ளம் - கிண்ணம்; வட்டமாகக் குழிந் திருப்பது ; இதேபோலக் குழிந்துள்ள சிறு தோணியும் 'வள்ளம் எனப்படும். கிழக்கிருத்தல் - கீழே வைத்திருத்தல். ஏறிய - மிகுந்த மகிழ்தல் - கள்ளால் உளவாகும் மயக்கம். சிதர் - வண்டு. சிதர்கால்-மென்கால். கறி - மிளகுக்கொடி.யாப்பு கட்டியதுபோலப் பின்னிக் கிடத்தல். நல்லகம் - நல்ல உள்ளம்; அது முன்னைய நிலை; இப்போது அதுவே 'நின் மயக்கத்திற்கும் காரணமாயிற்று என்பது குறிப்பு. மையல் - மயக்கம்; எதனாலோ மகள் இவ்வாறாயினாள் என்னும் பெருங் கவலையால் உண்டாவது. ஐயம் - இவள்தான் களவுறவு பெற்றாளோ என்று நினைத்தல்.

விளக்கம்: பாலும் உண்ணப்படாதே கீழே யுள்ளது என்றது, உணவையும் வெறுத்ததனால் உடல் மெலிவுற்றனள் என்றற்காம். சேவடி ஒதுங்காய் என்றது நடத்தற்கும் வன்மை யற்றுப் போயினை என்பதாம்; மெலிவாலும், களவை மறக்க இயலாது பெருகிய பிரிவுத் துயராலும் இஃது ஆகும். 'குறிப்பு நனி பெரிது' என்றது, களவு வெளிப்படின் அறத்தொடு நிற்ற லுக்கும், தலைவனோடு உடன் போதற்கும் துணிந்துள்ள மனவுறுதியின் குறிப்பினை. அன்னை மையல் உறுகுவள் என்றது, அவள் வெகுளாளாயினும், நின் நலனையே கருதுபவளாதலின், துயரத்தால் உண்மை காணமாட்டாதே மயங்குவாள் என்பதாம். கூவினள் - கூப்பீட்டைச் செய்கின்றனள்; இது அன்னை இவர்கள் இடத்திற்குத் தொலைவாயிருப்பதைக் 204

தலைவன்

on 361

நற்றிணை தெளிவுரை

குறிப்பதும் ஆகும். ஐயம் இல்லாதேயும் கடுங்கூவினளான அன்னை, ஐயமுற்றனளாயின் இற்செறிப்பே நிகழும்; அப்போது களவுறவும் வாயாது; இவளும் இறந்துபடுபவள் என்பதாம்.

உள்ளுறை : நனையை வெறுத்த கோழியானது கறிக் கொடியது யாப்பிலே துஞ்சும் என்றனள். இது மலரன்ன மெல்லியலாளான தலைவியை வெறுத்தானாகத், தலைவன் தன்னூர்க்கண்ணே சென்று ஒடுங்கினான் என்று குறிப்பிட்டுக் கூறியதாகும்.

பயன் : தலைவியைத் தலைவன் மணக்கும் முயற்சியிலே விரைபவன் ஆவான் என்பதாம்.

298. நமக்குப் பொருந்துமோ?

பாடியவர் : விற்றூற்று வண்ணக்கன் தத்தனார். திணை : பாலை. துறை: தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி, ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லித், தலைமகன் செலவழுங்கியது.

((து-வி) பொருள் தேடி வருக என்றாள் தோழி. மனமும் பொருள்பாற் செல்லுகின்றது. தலைமகன், தலைவி பாற் செல்லும் தன் நெஞ்சினை நினைக்கின்றான். அவளைப் பிரியவும் துணியமுடியாமல், பொருள் ஆசையையும் விட முடியாமல் மனம் கலங்கி,முடிவில், பொருள்தேடப் போதலைப் தள்ளி வைக்கின்றான். அவன் மனக்கலக்கமாக அமைந்த செய்யுள் இது.]

வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச்

செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட எருமைச் சேவல் கிளைவயிறு பெயரும்

அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப்

5

பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள்

கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம்

பற்றாய்- வாழிஎம் நெஞ்சே - நற்றார்ப்

பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்

ஒருமை செப்பிய அருமை வாண்முகை

இரும்போது கமழுங் கூந்தல்

பெருமலை தழீஇயும் நோக் கியையுமோ மற்றே!

10 நற்றிணை தெளிவுரை

205

தெளிவுரை : எம் நெஞ்சமே! புதிதாக வருகின்ற மக்கள், வழியூடே வருகின்ற தன்மையை நோக்கியபடியே காத்திருப் பவர், ஆறலைப்போராகிய கள்வர்கள். அவரைக் குறிவைத்துச் சிவந்த கணையை அம்பிலே தொடுத்து எய்பவரும் அவர். சினந்த பார்வையினரான அவரது, வாய்மடித்துப் போர்த்த தண்ணுமையின் முழங்கும் குரலைக் கேட்டதும், பருந்தின் சேவலானது அச்சங்கொண்டு, தன் கூட்டம் வாழும் அவ் விடத்தை நோக்கிப் பறந்து செல்லும். கடத்தற்கரியதும், கவருபட்டதுமான அச்சந் தரும் அகன்ற அவ்விடத்தேயுள்ள பெரிய பலவாகிய குன்றுகளைக் கடந்து போவதுபற்றியும் ஒருபால் நினைப்பாய். அடுத்து, இவளுடைய கரும்பெழுதிய பணைத்த தோள்களையும் எண்ணி நோக்குவாய்! ஒருபாலும் மனம்பற்றாமல் மயங்குகின்றாய்! நல்ல வேப்பந்தாரினை அணிந் தோனான பொற்றேர்ச்செழியனின் கூடல் நகரத்திலே, பண்டு யாம் ஒருதலையாகத் துணிந்து பொருள்தேடி வருவதாகத் தோழிபாற் சொல்லிய அருமையான சொற்கள்தாம் என்னே! வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணங் கூந்தலை உடையவள் என் காதலி! இவளைப் பார்த்தபின்னர், கமழும் பெருமலைகளைக் கடந்து பொருள் தேடிவரச் செல்லுவதுதான் நம் காதலுறவுக்குப் பொருத்தமாகுமோ?

w

.

-

·

கருத்து : இவளைப் பிரிதல் ஆற்றேம்; ஆதலின், பொருளை நாடிச் செல்லுதலைச் சிறிதுகாலம் மறந்திருப்பாய் என்பதாம். சொற்பொருள்: வம்பமாக்கள் வெளியூராரான யர்கள். வருதிறம் - வருகின்ற தன்மை. செங்கணை -சிவந்த புதி கணை; சிவப்பு மூன்னர்ப் பிறர் உடலிற் பாய்ந்து பெற்ற குருதிக் கறை. 'மடிவாய்' என்றது, மடித்து வைத்துக் கட்டப்பெற்ற தோலையுடையது என்று பொருள் தரும். வகையுள் ஒன்று. அது கிளைவயிற் பெயர்தல், தண்ணுமை எருவை - பருந்து ஒலியால் அச்சங்கொண்டு என்க. நனந்தலை - அகன்ற இடம். கரும்பு - தோளில் எழுதும் ஒப்பனை. பணைத்தோள் - பருத்த தோள். ஒருதிறம் - ஒரு பக்கம். 'கூடல்' என் பக்கம். 'கூடல்' என்றது மதுரையை. 'ஆங்கண்' - அவ்விடத்தே. வாண்மை - வெண்மை. போது - பெரிய மலர்கள்.

இரும்

விளக்கம்: 'வம்பமாக்கள்' என்றது, வழியின் கொடுமை யறியாது வந்த புதியவர் என்பதற்கு. 'செங்கணை தொடுத்த என் ன்றது, மறைந்து நின்று அம்பு தொடுப்பவர் என்பதையும், 'செயிர் நோக்கு' எதிர்வரினும் அஞ்சாது சினந்து நோக்கும் 206

நற்றிணை தெளிவுரை

கொடியவர் என்பதையும் காட்டும். பொருளே கருத்தினராத லின், அருள்நோக்கு இன்றிச் செயிர் நோக்கே கொண்டவர் என்று கொள்க. பிணத்தை நாடி வானிற் பறக்கும் எருவைச் சேவலும் அஞ்சித் தன் கிளையிடம் செல்லும் என்றது, அவரது கொடிய போரைக் குறித்துச் சொன்னதாம். 'பெருமலை தழீஇய நோக்கு இயையுமோ?' என்பது, மனத்திற்குச் சொல்லும் முடிபு.

இறைச்சிப் பொருள்: எருவைச் சேவலானது தண்ணுமை யின் ஒலிக்கு அஞ்சித் தன் சுற்றத்திடம் நோக்கிப் பெயர்ந்து போகும் என்றது, யாம் பொருள் தேடி வருதலைக் குறித்துச் சென்றாலும், இவள் பிரிவாற்படும் வேதனையை எண்ணி, இடை வழியில், மீண்டு வருதலையே நினைப்போம்போலும் என்றதாம். பயன் : இந்த எண்ணத்தின் பயனாவது, அவன் தான் போகக் கருதிய செலவைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பான் என்பதாம்.

299. வில்லெறி பஞ்சி!

பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார். திணை : நெய்தல். துறை: தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல் லியது.

[(து - வி.) தலைமகன் சிறைப்புறத்தான் என்பதனை அறிந் தனள் தோழி. அவன், தலைவியை விரைவிலே மணம் புரிந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் வேண்டும் என்று கருது கின்றாள். அவன் பாலும் அந்த நினைவை எழச் செய்தற்கு நினைப்பவள், தலைவியிடம் சொல்வாள்போல, அவனும் கேட்டுத் தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றனள்.)

உருகெழு யானை உடைகொண் டன்ன ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர் தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்தாது வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும் அலர்காண் நாமிலம் ஆகுதல் அறிதும் மன்னோ. வில்லெறி பஞ்சி போல மல்குதிரை வளிபொரு வயங்குபிசிர் பொங்கும்

நளிகடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

5 நற்றிணை தெளிவுரை

207

தெளிவுரை : அச்சத்தைச் செய்கின்ற யானையானது, நல்ல உடையை அணிந்து கொண்டாற்போல, நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதர்கள் தோன்றும். அவை, கடுமை யான மேல்காற்று மோதுதலினாலே, நுண்மையான பூந்தாது களை உதிர்க்கும். விளங்கும் இழையணிந்த மகளிரது வளையல் களைப்போல அவை உதிரும். வில்லால் எறியப்படும் பஞ்சி சிதறு தலைப்போல, அடுத்தடுத்து வரும் அலைகளைக் காற்றுப் பொருதி அலைத்தலால் சிதறும் நீர்த்திவலைகள் பொங்கி எழுகின்ற பெரிய கடல்நிலத் தலைவனோடு கூடி மகிழ்வதற்கு முன்பே, அத்தகைய அழகிய நம் சீறூர்க்கண்ணே, நாம் தனிமையுற்று வருந்தியவிடத்தில்,நாம் அலர் கூறப்படுதலை இல்லாதவராய் இருந்ததனையும், நன்கு அறிவோம் அல்லமோ?

கருத்து: அவரைப் பிரிந்து இனியும் ஆற்றியிருக்க நம்மால் இயலுமோ? என்பதாம்.

சொற்பொருள்: உருகெழு யானை - அச்சம் விளைக்கும் யானை. உடைகொண்டு - முதுகில் ஆடை போர்த்துக்கொண்டு, பிணி - பிணிப்பு;கட்டு. இருங்கோடை - கடுமையான மேல் காற்று. நுண்தாது - தாழைப் பூவின் மகரந்தம். வயங்கிழை ஒளி விளங்கும் ஆபரணங்கள். தாழைப் பூவின் அடிப்பகுதி மகளிர் அணியும் வளைபோல்வதாகலின், வளையின் தாஅம் என்றனர்.

விளக்கம்: சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டுணரக் கூறுகின்றனளாதலின், அவனுக்கு ஊரலரையும் தம் பிரிவாற் றாமையும் இவ்வாறு உரைக்கின்றனள் என்று கொள்க. காற்று மோதுதலாலே உதிரும் தாழைப் பூந்தாது, மகளிர் வளை கழன்று வீழ்வதுபோலும் என்றது, தலைவனின் பிரிவால் தலைவி யும் உடல் மெலிவுற்று வருந்துகின்றவளாயினள் என்று உணர்த்துவதாம். காற்று மோதுதலாலே அலைகள் உடைந்து பிசிர் பிசிராகச் சிதறுதலைப்போல, வேட்கை நோய் வருத்துத லாலே உண்டான உடல் மாறுபாடு பற்றிய அலரும் எழுந்து ஊர் முழுதும் பரவிவிட்டது என்பதாம். சேர்ப்பன்' - கடல் நிலத் தலைவன்.

300. முன்கடை நிறீஇச் சென்றனன்!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை : (1) வாயில் மறுத்தது; (2) வரைவு கடாயதூஉம் ஆம் (மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.)

A 1.

208

நற்றிணை தெளிவுரை

[(து-வி) (1) பரத்தைபாற் சென்றிருந்த தலைவனின் தூதனாக வந்த பாணனிடம், காமக் கிழத்தியின் தோழியான விறலி, தன் தலைவி, தலைவனை ஏற்க விரும்பிலள் என்று உணர்த் துவதாக அமைந்த செய்யுள் இது; (2) வரைந்து வருதலில் மனஞ் செலுத்தாமல், களவிலேயே ஒழுகிவரும் தலைவனிடம், தலைவியை மணப்பது கருதினனாக, அயலான் ஒருவன் விரும்பி வந்து போயினன் என்று.. தோழி கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.)

சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மட்த்தகை ஆயம் கைதொழு தாஅங்கு

உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்

தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன் சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே! நியும், தேரொடு வந்து போதல் செல்லாது நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின் இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சைசூழ் பெருங்களிறு போல வெம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே!

5

10

தெளிவுரை : நெய் வடித்தாற் போலப் பிசிரடங்கிய நரம்புகளை இழுத்துக் கட்டியுள்ள யாழையுடைய, பெரிய சுற்றத்தைக்கொண்ட பாணர்களின் தலைவனே! விளங்குகின்ற தொடியணிந்தவளான அரசகுமாரியானவள் சினந்தாளாக அவ்விடத்திலே அதற்கு எதிராக மடப்பத்தையுடைய தோழியர் கூட்டமானது,அச் சினத்தைத் தணிவிக்கும் பொருட்டாகக் கைதொழுது வணங்கினாற்போல, மிகுதியான காற்று மோதுதலாலே ஆம்பல் வளைந்து தாமரை மலரிடத்திலே சாய்ந்து வணங்கியபடியிருக்கும், தண்ணிய துறையையுடைய ஊருக்குரியவன் தலைவன்! அவன், சிறு வளையினையுடைய இவளுக்கு விலையாவது இதுவேயெனப், பெருந்தேரை ஒப்பனை செய்து, எமது முற்றத்தின்கண்ணே நிறுத்திச் சென்றுள்ளனன் கண்டாய்! அவனுடைய தேரினிலே வந்த நியும், அவன் பின்னாகவே போதலைச் செய்யாமல், போர்க்களத்திலே பெரும் புண்பட்டவனாகிய அழகினைக் கொண்ட தழும்பன் என்பானின் நற்றிணை தெளிவுரை

209

ஊணூரிடத்தேயுள்ள, பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல, எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் ஓலையைத் தொட்டபடியே நிற்கின்றனையே! இதுதான் எதற்காகவோ?

கருத்து: நின் கருத்தினை யாம் ஏற்கமாட்டோம்; நீ நிற்ப தாற் பயனின்று என்பதாம்.

சொற்பொருள்: சுடர்த் தொடி - ஒளி சுடரும் தொடி. கோமகள் - கோமானின் மகள். மடத்தகை ஆயம் - மடப்பத் தகைமை கொண்டவரான ஆயமகளிர். சிறுவளை விலை - அவளை யடைதற்கான வரை பொருள். முன்கடை - முற்றம். துய் பிசிர். பெரும்புண் - பெரிய போர்ப்புண்; "பெரும்பூண்' என்றும் பாடம். 'ஊணூர்' தழும்பனின் கோநகர்.

உள்ளுறை பொருள்: காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவனின் ஏவுதலாலே நீயும் இங்கு வந்து எம்மிடத்தே இறைஞ்சி நிற்பாயாயினை என்றதாம்.

பயன் : தலைவனை ஏற்காது மறுத்து உரைத்தல்,

இரண்டாம் துறையின் தெளிவுரை: ஊரன் ஒருவன் இவளைப் பொன் அணிதலை விரும்பினன். இச்சிறுவளை உடையாளுக்கு விலை இதுவென்று தனது தேரினையும் அலங்கரித்துப் பொரு ளோடு எம் முற்றத்தே நிறுத்தித், தன் முதியோரையும் சான் றோரையும் அழைத்துவரப் போயுள்ளனன். நீயும் அவ்வாறே வந்து பரிசப்பொருளைத் தந்து மணந்து செல்வதற்கு முற்படா மல், தழும்பனது ஊணூரிடத்தே களிறு நிற்பதுபோல, அட்டிற் சாலைக் கூரையைத் தொட்டபடியே இரவெல்லாம் நிற்கின்றனை; யாது பயன்? இப்படியே நிற்பாயாக என்றதாம். இதன் பயன். தலைவனின் உள்ளம் மணந்து. கோடலிற் செல்லும் என்பதாம்.

301. யாய் மறப்பறியா மடந்தை!

பாடியவர்: பாண்டியன் மாறன் வழுதி. திணை: சேட் படுத்துப் பிரிவின்கண், 'இயற்கையில் தங்குவதோர் ஆற்றாமை 'யினாள்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.

[ (து - வி.) தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்த எண்ணுகின்றாள் தோழி. அவள் மனம் தலைவியின் தாய் அவள்மேல் செலுத்தும் பெரிதான அன்பையும் நினைக்கின்றது. அவள் தன்னுள்ளே சொல்லிக் கொள்வதுபோல அமைந்த 1

210

நற்றிணை தெளிவுரை

செய்யுள் இது. எனினும், இதனைக் கேட்கும் தனைக் கேட்கும் தலைவனும், தலைவியின் அருமையை அறிந்து, அவளை விரைவில் மணந்து இல்லறவாழ்வில் இனிது வாழ்வதுபற்றிய நினைப்பினனாவான் என்பதும் ஆம்.]

நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை மலர்பிணைத் தன்ன மாவிதழ் மழைக்கண் மயிலோ ரன்ன சாயல் செந்தார்க் கிளியோ ரன்ன கிளவி பணைத்தோள் பாவை யன்ன வனப்பினள் இவளெனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி யாய்மறப் பறியா மடந்தை

தேறைப் பறியாக் கமழ்கூந் தலளே.

·

5

தெளிவுரை : "நெடுமலைத் தொடரிடையே முளைத்த பெருத்த தண்டுடைய குறிஞ்சியது. அற்றை நாட்காலையில் பூத்திருக்கும் புதுமலரைப் போன்ற மேனியள்; பெருஞ்சுனை யிடத்துக் குவளைமலர்களுள், இரண்டை ஒருங்கு பிணைத்தாற் போல விளங்கும், கரிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களை உடையவள்; மயிலோ என்னுமாறு பொருந்திய சாயலை உடையவள்; சிவந்த கழுத்தாரத்தைக் கொண்ட கிளியோ என்னுமாறு பேசும் மழலைப் பேச்சினள்; பணைத்த தோளினள்; கொல்லிப் பாவை போலும் வனப்பினள் - இவளாகிய என் மகள்' என்று, விருப்பமுடைய நெஞ்சத்தோடு பாராட்டியபடி, தாயால் சிறிதுபொழுதுக்கும் மறந்திருத்தலை அறியாத மடந்தையான தலைவியானவள், நெய்மணம் மறந் தறியாத, மணம் கமழும் கூந்தலையும் உடையவள் ஆவாளே!

பலபடப்

கருத்து: 'தாய் அறியாமல் அவளை நின்னுடன் ஒன்று படுத்துவது இயலாத செயல்' என்பதாம்.

சொற்பொருள்: கலித்தல் - முளைத்தெழுதல். நீள்மலை - நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடக்கும் மலைத் தொடர். கிளவி - பேச்சு. பணைத்தோள் - பணைத்ததோள்; பணைத்தல்- பெருத்தல். பாவை - கொல்லிப் பாவை.

'விளக்கம்: குறிஞ்சி - குறிஞ்சிச் செடி; இது பன்னீராண் டிற்கு ஒரு முறை முளைத்துப் பூப்பது; மென்மை சிறந்தது: !

I

நற்றிணை தெளிவுரை

211

பாண்டி நாட்டுக் கோடைமலைப் பகுதியில் மிகுதி; இதனை அறிந்து பாண்டியன் மாறன் வழுதி எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பாகும். இதன் தண்டு கருமையானது; இதனைக் 'கருங் கோல் குறிஞ்சிப் பூ' எனவரும் குறுந்தொகை (செய்.3) யாலும் அறியலாம். குவளையின் இணைமலர்களைக் கண்களுக்கு உவமை கூறுவதை 'மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்' என வருவதனாலும் அறியலாம் (நற்.252).

விளக்கம் : இவள், "வீட்டின் புறம்போந்து இரவுக்குறியில் நின்னால் தழுவுவதற்கு இனி வாய்த்தல் அரிது; எனவே, மணந்து கூடியின்புறலே இனிச் செயத்தக்கது" என்பதாம். தேமறப் பறியாக் கமழ்கூந்தலளே' என்றது. நின்னால் சூட்டப்பெறும் நறுமலர்களின் மணம் அதனை வேறுபடுத்தினும் அன்னை அறிவாள் என்பதாம். 'காமர் நெஞ்சமொடு' என்றது. எப்போதும் அன்பு பாராட்டுவாளான தாய், தன் மகளின் மணப்பருவப் புதுப்பொலிவு கண்டு, மேலும் அவள்பால் விருப்பம் கூடியவளாயினாள் என்பதாம்.

கழறிய பாங்கற்குத் தலைவன் தலைவியது. மேம்பாடு கூறிய தாகவும் இதனைக் கொள்ளலாம். பாண்டியன் கோடைப் பகுதியிலே கண்டு காதலித்த ஒரு கன்னியின் வனப்பைப் பாராட்டிக் கூறியது எனவும் கருதலாம். மேனி, கண்,சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல் என உவமித்த சிறப்பு, அவன் அவளைப் பகற்குறியிற் பெற்றுக் கூடியவன் என்பதையும் புலப் படுத்துவதாம்.

302. சுடர்வீக் கொன்றை!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார். திணை : பாலை. துறை: பருவங் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.

[ (து - வி.) முன்னர்ப் பிரிந்து சென்ற பொழுதிலே, 'தான் கார்காலத்து மீண்டு வருவதாகத் தலைவன் கூறிச் சென்றிருந் தான். அந்தக் கார்காலத்தின் வரவு வரைக்கும் அவன் பிரிவைப் பொறுத்திருந்தாள் தலைவி. கார்காலம் வந்ததும், அவள் வேதனையும் மிகுந்தது. அவள் நலிவு மிகுதியைக் கண்ட தோழி, அவளைத் தேற்றுவாளாகச் சில கூறவும், அவள் தன் மிகுதியான வருத்தத்தைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) நற்றிணை தெளிவுரை

இழையணி மகளிரின் விழைதகப் பூத்த நிடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக் காடுகவின் பூத்த வாயினும் நன்றும் வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல் நறைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ அதாஅம் தேரலர் கொல்லோ சேய்நாட்டுக் களிறுஉதைத் தாடிய கவிழ்கண் ணிடுநிறு வெளிறில் காழ வேலம் நீடிய பழங்கண் முதுநெறி மறைக்கும் வழங்கரும் கானம் இறந்திசி னோரே !

-

5

10

தெளிவுரை தொலைவான நாட்டிடத்துள்ளதும், களிறு காலால் உதைத்து ஆடுதலினாலே மேலெழுந்த புழுதியானது செல்பவரின் 'கவிழ்ந்த கண்களிலும் விழுந்து மறைப்பதா யிருப்பதும், உட்புழையின்றி வயிரம் பாய்ந்த வேலமரங்கள் உயரமாக வளர்ந்திருப்பதும், பாழ்பட்டதுமான பழைய நெறியினையும் அப்புழுதி மூடிமறைப்பதுமான, செல்வதற்கரிய காட்டு வழியினும், பொருளார்வத்தினால் நம்மைப் பிரிந்து சென்றுள்ளவர் நம் காதலர். அவர் தாம்-

பொன்னிழை யணிந்த மகளிர்போல விருப்பந்தருமாறு பூத்துள்ள, நீண்டு சுரிந்த கொத்துக்களிலே விளங்கும் பூக்களைக் கொண்ட கொன்றையானது, காடெல்லாம் அழகு பெறுமாறு பூத்திருக்கின்றதாயினும், அதனையும், நன்மைப் பொருட்டாக வருகின்ற மழைக்கு எதிரேற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய பெரிய புதரிடத்தே வீழ்கின்ற தனாலே, வெண்ணிறம் தோற்றுமாறு செய்த நல்ல கொத்துக் களையுடைய தெறுழமலர்கள் வீழ்வதனையும் காண்பவர், இதுதான். கார்காலம் என்று தெளிய மாட்டாரோ?

கருத்து: 'கார்காலம் வந்ததென அறிந்தும், அவர் மனம் பொருளைவிட்டு நம்மிடத்தே வருதலிற் சென்றதில்லையே என்பதாம்.

சொற்பொருள் : சுரி - சுரிதலுடைய. எதிரிய - எதிரேற்ற நரை நிறம் - வெண்ணிறம். தெறுழ் - ஒருவகைக்

மரம்.

வெளிறு -புட்புழை.

காழ் - வயிரம்.

காட்டு

பழங்கண்-

வருத்தம். முதுநெறி - பழைதான நெறி; பலகாலும் பலரும் சென்று திரும்பும் பழையதான வழி. நற்றிணை தெளிவுரை

213

விளக்கம் : வருத்தந்தரும் கொடிய பாலையையும் பொருளார்வத்தால் கடந்து சென்றவரான நம் காதலர், இதுகாலை வழியும் கவின்பெற்றுக் கடத்தற்கு இனிதான போதும், நம்மை நிலையாமையால் அல்லவோ சொல்லிச் சென்றபடி திரும்பி வந்திலர் என்று நோகின்றனள். தெறுழம் பூக்கள் உதிர்தலால் கரிய புதர் வெண்ணிறம் பெற்று அழகி தாகத் தோன்றுமாறு போல, அவர் வந்து தலையளி செய்தன ராயின், தானும் துயர் நீங்கி அழகுபெறுவதையும் நுட்பமாகக் கூறுகின்றனள்.

303. எறி சுறவின் கடு முரண்!

பாடியவர்: மதுரை ஆருலவிய நாட்டு

சாத்தனார். திணை நெய்தல்.

துறை :

1.

ஆலம்பேரிச் வேட்கை

தாங்க கில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; 2. சிறைப் புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.

((து-வி.) 1. தான் கொண்ட காமவேட்கை தாங்க முடியாதவளான தலைமகள் தோழிக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது; 2. தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி, அவன்பால் தலைவியை விரைய வரைந்து வருதலைப் பற்றிய நினைவை எழச் செய்யக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.]

ஒலியவிந் தடங்கி யாமம் நன்ளெனக்

கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்

துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும்

துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்

நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது

உண்டுகொல் - வாழி தோழி-தெண்கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ்வலை பரியப் போகிக்

5

10

கடுமுரண் எறிசுறா வழங்கும்

நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே! 214'

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : தோழீ! நீதான் நீடு வாழ்க! தெளிந்த நீருடைய கடலிடத்தே, வலிய கையினரான பரதவர்கள், நேரான கோலையும் வளைந்த முடிகளையும் கொண்ட அழகிய வலைகளை வீசுவர்; அவ்வலை கிழியுமாறு அதனை அறுத்துக் கொண்டு வெளியே சென்று, கடுமையான முரண்பாட்டால், எதிர்ப்பட்டதை எல்லாம் தாக்கியிருந்தது சுறாமீன் ஒன்று; அத்தகைய சுறாமீன் திரிந்தபடியிருக்கும், ஆழ்ந்த நீர்த்துறைக்கு உரியவன் நம் சேர்ப்பன். அவனும், நம் நெஞ்சகத்தான் ஆகவே உள்ளனன். ஆயினும்-

"ஊரும் ஒலி அவிந்ததாய் அடங்கிற்று. யாமமும் நள்ளென் னும் ஒலியுடையதாயிற்று. நள்ளிரவுப் பொழுதும் வந்தது. ஓசை மிகுந்த நம் பாக்கத்தேயுள்ளவர் யாவரும் அயர்ந்து உறங்கு வாராயினர். நம் மன்றத்துப் பெண்ணை, மிகப் பழங்காலத்தி லிருந்தே கடவுள் தங்கியிருந்து வாழும் பருத்த அடியை உடையது. அதன் வளைந்த மடலிடத்தே, அன்றில்களின் கூடு உள்ளது. தன் துணையோடும் கூடி வாழுகின்ற அன்றிலானது அக் கூட்டிலிருந்தபடியே வேட்கைக் குரலை எழுப்புவதையும் தொடர்ந்து கேட்கின்றேம்.

அதனைக் கேட்கும்போதெல்லாம், கண் உறக்கம் அற்ற வளாய், பிரிவுத் துயரமானது தன்னைப் பெரிதும் வருந்து தலினாலே மெலிந்து, நம்மையே நினைந்து, நல்ல நெற்றியை உடையவளான நம் காதலியும் வருந்துவாள்' என்று

அவன் நினைப்பதுதான் உண்மையாகுமோ?

கருத்து: நம்மை நினைத்திலர்; ஆதலினாலேதான் இது காறும் வந்திற்றிலர் என்பதாம்.

சொற்பொருள்: தொன்றுறை கடவுள் - பழங்காலந் தொட்டு வந்து தங்கி வெளிப்பட்டு அடியவர்க்கு அருளும் கடவுள்: இன்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் இவ்வாறு பனையின் அடிமரத்தில் கடவுளை நிறுத்தி மக்கள் வழிபடு கின்றனர். தொன்முது கடவுள்' எனவும் பாடம். வாங்கு மடல் - வளைந்த மடல். உயவுக் குரல் - வேட்கைக் குரல். துணை பிரிந்த பறவை தன் துணையைச் சேர்தலை விரும்பிக் கூவி யழைக்கும் துயரக்குரல். வன்கை - வலிய கை. கொடுமுடி- வளைந்த முடி நெடுநீர் - ஆழமான நீர்; நெடுகிலும் பரந்துள்ள கடலும் ஆம்.

உள்ளுறை : அவர் சொல்லாகிய வலைப்பட்டது என் மனம்; அவர்தான் நம்மை மறக்கவும், இப்போது அதுதான் லைவி

நற்றிணை தெளிவுரை

215

அதனைக் கடந்து வெளிப்பட்டு அவரை நோவதாயிற்று. இதனைக் கொடுமுடி யவ்வலை பரியப் போகிக் கடுமுரண் சுறா வழங்கும்' என்பதனாற் பெற வைத்தனர்.

.

விளக்கம்: "நாம் அவர் பிரிவாலே வருந்தி நலிவோம் என்று நினைத்தனராயின், அவர்தாம் இதற்குள் வந்து, நம் துயரைப் போக்கியிருப்பார் அல்லரே" எனப் புலம்புகின்றாள். துணையோடன்றித் தனித்து வாழ்தல் இல்லாத இயல்பினது அன்றில். ஆதலின், 'துணைபுணர் அன்றில்' என்றனள். தன் காதலனினும் அதன் துணை சிறந்தது; சிறுபொழுதும் பிரிந் திருக்காத இயல்பினது என்று எண்ணி வருந்தியதாம்.

மேற்கோள் : மறைந்தவற் காண்டல்' என்னும் பொரு ளதிகாரச் சூத்திரத்து (111), 'காமஞ் சிறப்பினும்' என்பதற்கு, இச் செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

304. அவன் மார்பு!

பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார். திணை : குறிஞ்சி. துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது.

கள

((து -வி.) தலைவன் தலைவியை வரைந்து மணந்து கொள்வதற்கு நெடுநாளாயின்போதும் முயன்றிலன்; வின்பத்தையே விரும்பி நாடியவனாக, நெடுங்காலம் வந்தும் துய்த்தும் பிரிந்து போவானாயினன்; அவன் வரும் வழியின் ஏதம் முதலியவை குறித்துத் தலைவி வருந்தினள். அத் தலைமகளைத் தோழி பலவாறாகத் தேற்றி வந்தனள்; எனினும், நெஞ்சம் பொறுக்கலாற்றாத தலைவி, தன் துயரத்தின் நிலையை இவ்வாறு தோழிக்கு உரைக்கின்றனள்.]

வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ

வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்

துயர

நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன்

பூணரிற் புணருமார் எழிலே பிரியின்

5

மணியிடை பொன்னின் மாமை சாயவென்

அணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனால் 216

நற்றிணை தெளிவுரை

அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே!

10

தெளிவுரை : தோழீ! நீண்ட மெல்லிய தினையின் மணமுள்ள கதிர்களைக் கிளிகள் நிறையத் தின்னும். தின்று விட்டு, மலைச் சாரலிலுள்ள பாறைப் பக்கத்தேயுள்ள தன் சுற்றத்தோடும் சென்று கூடியவாய்க், காற்றாலே ஒலியெழுப்பு கின்ற கொம்பு வாத்தியத்தைப் போல், அவை ஒன்றை யொன்று கூவி அழைத்தபடியிருக்கும். நெருங்கிய பக்கமலைகளை யுடைய, அத்தகைய நல்ல மலைநாட்டவன் நம் தலைவன்!

என்

அவன் வந்து என்னைக் கூடினான் ஆயின், என்பால் நல்ல அழகும் உண்டாயிருக்கும். அவன் என்னைவிட்டுப் பிரிந்தானா யின், நீலமணியின் இடைப்பட்ட பொன்னைப்போல மேனியின் மாந்தளிர் நிறமானது அழிந்துபோகப் பசலையும் தோன்றி, என் அழகையும் நலத்தையும் கெடுக்கா நிற்கும். ஆதலினாலே, தண்ணிதாக மணம் கமழும் நறிய தாரினைக் கொண்ட வல்லமையாளனான நம் தலைவனின் மார்பானது, சையறி விலங்காகிய அசுணமாவைக் கொல்பவரது கையைப் போலவே, இன்பமும் துன்பமும் ஒருசேரப் பெரிதும் மிகுதியாக விளைவித்தலை உடைத்தாயிருப்பது காண்!

கருத்து : அவனே இன்பமும் துன்பமும் தருபவனாயின் என் செய்வது? என்பதாம்.

சொற்பொருள்: வாரல் மென் மென் தினைப் புலவுக்குரல் - நெடுமையும் மணமும் கொண்ட தினையின் மென்மையான கதிர்கள்; 'மென்மை' என்றது கதிர் முற்றாதிருக்கும் பாலேற்ற காய்ப்பருவ நிலையைக் குறித்தது; அதுதான் சில நாட்களில் முற்றுதலும், அதன்பின் தான் கிளிகடிதற்கு வாராதே இச்செறிப்புறுதலும் நிகழும் என்பதும் குறிப்பாற் கூறியதாம். கிளை - சுற்றம். வயிர் - ஊதுகொம்பு. விளிபயிற்றல் - ஒன்றை யொன்று கூப்பிட்டுக் குரல் பயிற்றல். மணி - நீலமணி. மாமை - மாந்தளிரின் மாந்தளிரின் செம்மை நிறம்; கருஞ்சிவப்பான வண்ணம். அசுணம் - அசுணமா என்னும் இசையறி விலங்கு; இதனைப் பற்ற நினைப்பவர். இன்னிசையை இசைத்து, அது அதில் மயங்கித் தம்மருகே வந்தவுடன், கடும் இசையான பறையினைக் கொட்ட, அது அதனால் உயிர்துறக்க, அதனைக் கொள்வர் என்று சொல்லப்படும். அசுணத்திற்கு இன்பம் நல்கித்

. நற்றிணை தெளிவுரை

நந்தாய்

217

தொடர்ந்து உயிரையும் வாங்கும் இசைப்பாரின் கைபோன்றது தலைவனின் கொடிய மார்பு என்றதால், அவனைப் பிரியின், தான் படும் வேதனைப் பெருக்கத்தையும் உரைத்தனளாம். விறலோன் - வெற்றியாளன்; வல்லமையாளன்; காதலியை வதைக்கும் விறலோன்' என்று, மனம் வெதும்பிக் கூறியதும் ஆகும்.

உள்ளுறை : கிளி 'தினைக்கதிரைக் கிளையோடும் தின்று விட்டுச் சென்று, கூடி விளிபயிற்றும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவியைக் களவிற்கூடிய தலைவனும், தன் சுற்றத் தார்க்குச் சொல்லி, சான்றோர் குழுவினருடன் வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதாம்.

விளக்கம்: மணியிடை யிடப்பெற்ற பொன்னானது, நீல மணியின் ஒளியால் தன் இயல்பான நிறத்தில் நீலவண்ணங் கலப்புற்றுத் தோன்றுமாறுபோலத் தலைவியின் மேனியும் பசலை யால் நிறங்கெட்டுத் தோன்றிற்று என்பதாம். மாமை மேனி நிறத்திற்கும்; அணிநலம் மெய்ப் பொலிவுக்கும் சுட்டப்

பட்டன.

மேற்கோள்: அவனறிவாற்ற அறியும் ஆதலின்' என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தின், (சூ.147) 'இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும்' என்பதற்கு, இச் செய்யுளை நக்கினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

305. நோயாகின்றோம் மகளே!

பாடியவர்: கயமனார். திணை : பாலை. துறை : (1) நற்றாய் தோழிக்குச் சொல்லியது; (2) மனை மருட்சியும் ஆம்.

[(து.வி.) (1) தன் மகள், அவள் காதலனுடன் உடன் போக்கில் வீட்டையகன்று சென்று விட்டதனாலே, தாயின் மனத்துயரம் அளவிறந்து பெரிதாகின்றது. அவள் தலைவியின் தோழியிடத்தே தன் அவலத்தைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) பெற்ற தாய், தன் மனையிடத்தேயிருந்து மருண்டு சொல்லியதாகவும் கொள்ளப்படும்.]

வரியணி பந்தும் வாடிய வயலையும்

மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்

5.-14 218

நற்றிணை தெளிவுரை

கடியுடை வியன்நகர்க் காண்வரத் தோன்றத் தமியே கண்ட தண்தலையும் தெறுவர நோயா கின்றேம் மகளை! நின் தோழி எரிசினந் தணிந்த இலையில் அம்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி இலங்கிலை வென்வேல் விடலையை விலங்குமலை ஆரிடை நலியுங்கொல் எனவே!

5

10

கட்டப்பெற்ற

தெளிவுரை : மகளே! வரிந்து வரிந்து அழகுடன் தோன்றும் பந்தும், வாடிக் கிடக்கும் வயலைக் கொடியும், மயிலது காலடிபோன்ற கரிய பூங்கொத்தையுடைய நொச்சியும், காவலையுடைய நம் அகன்ற மாளிகையிடத்தே கண்ணுக்கு அழகாகவே தோன்றுகின்றன. அவற்றோடு, அவளை யில்லாதே தனியாகச் சென்று கண்ட குளிர்சோலையும், என்னைப் பெரிதும் வருத்தா நிற்கும். நின் தோழியானவள், கதிரவனின் எரிக்கும் சினமானது தணிந்திருக்கும் மாலைப்பொழுதிலே, இலைகளற்ற அழகிய மரக்கிளையில் அமர்ந்தபடியே, வரிகள் பொருந்திய முதுகுப்புறத்தையுடைய புறாக்கள், வருத்த மிகுதி யாலே கூவுகின்ற தெளிந்த கூப்பீட்டொலியையும் கேட்பாள். கேட்டதும், "வெப்ப மிகுந்த பொழுதின்கண்ணே போரிடப் புகுந்தாற் போன்ற கண்களையுடையவளாக, இலங்கிய இலைவடிவான வெற்றிவேலை ஏந்தியபடியே தன்னோடும் உடன் வருகின்ற இளையோனாகிய தன் காதலனை உறுத்து நோக்கி, மலை குறுக்கிட்ட கடத்தற்கரியதான வழியிடையே அவனைத் துன்புறுத்துவாளோ?" என்றே, எனக்கு மிகவும் வருத்தம் உண்டாகின்றது காண்!

கருத்து : அவள்தான் அவனோடு இனிதாக வழியைக் கடந்து சென்று மணம்பெற்று நீடு வாழ்வாளாக" என்பதாம்.

சொற்பொருள் : வரியணி பந்து - வரிந்து வரிந்து கட்டிய அழகிய பந்து; இது அவள் தோழியருடன் பந்து ஆடியிருக்கும் காட்சி நினைவைத் தாய்க்கு உண்டாக்கும். வயலை - வயலைக் கொடி; இது வாடிக்கிடப்பது அதற்கு நீர்விடும் தலைவி அகன்று போயினாள் என்பதை நினைப்பூட்டும். மாக்குரல் நொச்சி- கரியபூங் கொத்துக்களையுடைய நொச்சி; இது கருநொச்சி; |

1

நற்றிணை தெளிவுரை

219

இதன் நிழலிலே அவள் சிற்றில் இழைத்து விளையாடியிருந்ததை இது நினைவுபடுத்தும். தண்தலை - குளிர்ந்தவிடமான சோலைப் பகுதி; இது அவள் தோழியரோடு கூடியாடிச் சோலை விளையாட்டயர்தலை நினைவுபடுத்தும். 'தமியேன் கண்ட கண் தலைத்தலை தெறுவர' எனவும் பாடபேதம் கொள்வர். தன் மகள் பழகிய இடங்களைப் பார்க்கப் பார்க்கத்தாயின் மனத்தே அவளது பிரிவின் நினைவு மேலெழுதலால், அவள் கொண்ட வருத்தம் மிகுதியாகின்றது. எரிசினம் - எரித்தலாகிய சினம்; சினம் என்றது அனைத்தையும் வெங்கதிர்களால் வாட்டிவருத்தலால். புலம்பு - தனிமைத் துயரம். 'புலம்பு கொள் தெள்விளி' என்றது புறவுப் பேடும் தன் துணையைக் காணாதாய்ப் புலம்பியழைக்கும் கூப்பீட்டுக் குரல்' என்றதாம். அக் குரலைக் கேட்பவள் ஆணின் பிரிந்துபோகும் கொடுங்குணத்தைக் கருதினளாகத் தன்னுடன் வருவானையும் ஐயுற்றுச் சினந்து நோக்குவாளோ என்றதாம். அது நேராதிருக்குமாக என்று நினைக்கிறது தாய்மை நெஞ்சம்.

விளக்கம்: நொச்சி மனைக்கண் வேலியிடத்தே வைத்து வளர்ப்பது; அதன் இலைகள் மயிலடிபோலத் தோன்றும் என்பது மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி' எனவரும் நற்றிணையாலும் (115) அறியப்படும். இது ஐவிரல் நொச்சி எனப்படும். இதன் நீழலிலிருந்து பெண்கள் சிற்றில் இழைத்து விளையாடுதலை, கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த, வண்டலும் காண்டிரோ கண்ணுடையீரே’ (அகம். 275) என்பதனால் அறியலாம். மனையிடத்தே மகளைக் காணாது மருண்டு வருந்தும் தாய், அவள் ஒத்த பருவத்து உடன் தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள். 'நலியுங் கொல்' என்றது, அத்தகு வெம்மை வழியில் தன்னை அழைத்து வந்த கொடுமையாலே புண்பட்டு அவனை வருத்துவாளோ!' என்று கருதிக் கூறியதாம். அவனோடு சென்றவள், அவன் மனம் உவக்க நடந்து, அவனை மணந்து, இனிது இல்லறமாற்றி வாழ்தல் வேண்டும் என்றும், அவர்களுக்குள் மனவேறுபாடு ஏதும் ஏற்படலாகாது என்றும் கவலையடைகின்றது பெற்ற தாயின் தாய்மை நெஞ்சம்!

மேற்கோள்: 'தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி' என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்தி ரத்தின் (சூ.36), தோழி தேஎத்தும்' என்னும் பகுதிக்கு, இதனை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, 'இது தோழியை வெகுண்டு கூறுவது' என்று உரைப்பர்.

I 220

நற்றிணை தெளிவுரை

306. எக்காலத்தே வருமோ?

பாடியவர்: உரோடகத்துக் கந்தரத்தனார். திணை : குறிஞ்சி. துறை.(1) புனமடிவு உரைத்துச் செறிப்பறிவுறுத் தியது; (z) சிறைப்புறமும் ஆம்.

[(து-வி.) (1) "தினை கொய்வதற்குத் தொடங்கினர்; ஆதலின் இனிக் களவு உறவும் வாய்த்தலரிது; தலைவியும் இற்செறிக்கப் படுவாள்" என்று கூறுவதன்மூலம், அவளை அவன் விரைந்து வரைந்துவந்து மணந்துகொள்ளல் வேண்டுமென வற்புறுத்து வதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகன் சிறைப்புறத் தானாகக் கூறியது என்பதும் ஆம்; அப்போதும் வரைவுவேட்டுக் கூறியதாகவே கருதுதல் வேண்டும்.]

தந்தை வித்திய மென்தினை பைபயச் சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ குளிர்படு கையள் கொடிச்சி செல்கென நல்ல வினிய கூறி மெல்லக்

கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் குலவுப்பொறை யிறுத்த கோல்தலை இருவி விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒருநிலை காண வைகல்

யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் செறிதோட் டெல்வளைக் குறுமகள்

சிறுபுனத் தல்கிய பெரும்புற நிலையே!

5'

10

தெளிவுரை: நின் தந்தை விதைத்த மெல்லிய தினைப் பயிரைக் காக்கும் பொருட்டாகப் பையச் சென்றனையாய், தினைக் கதிர்களைக் கவரவரும் கிளிகளை ஓப்புதலாகிய அச் செயல்தான், இனியும் எவ்வாறு வாய்க்குமோ? 'குளிர்' என்னும் கிளிகடி கருவியை ஏந்திய கையினளாகத் தோன்றும் கொடிச்சியே! இனி நீயும் நின் மனைக்குப் போவாயாக' என்று. நல்ல இனிய சொற்களைக் கானவரும் கூறினர். அவர், மெல்லத் தினையையும் கொய்தலைத் தொடங்கினர். புனமும், வளைந்த கதிர்களாகிய சுமையைத் தாங்கிய திரண்ட தலையையுடைய தினைத்தாள்கள் தனித்து நிற்பதாயிற்று. அதுதான் விழா நிகழ்ந்து கழிந்த, அகன்ற விழாக்களத்தைப் போலப் பொலி விழந்தும் தோன்றும். வருத்தம் பொருந்திய அக் காட்சியைக் நற்றிணை தெளிவுரை

221

காண்பதற்கு அமைந்த காலையில், தீவிய சொல்லும் செறிந்த தொடியும் விளங்குகின்ற வளையும் கொண்ட இளையோளாகிய தலைமகள், சிறிய தினைப் புனத்தேயுள்ள பரணிடத்தே நின்று காவல் காத்திருக்கும் நிலைமையைக் காணும் பொருட்டாகத் தலைவன் வருதல் தான் இனி எவ்வாறு பொருந்துமோ?

கருத்து: 'இனிக், களவுறவு வாயாது; கடிமணமே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள்: குளிர் - குளிர் என்னும் கிளிகடி கருவி; தென்னை அல்லது பனை மட்டையில் செய்வது இது. கொடிச்சி குறவர் மகள்; கொடி போன்றவள். கொடுங்குரல் - வளைந்த தினைக்கதிர்; கொழுங்குரல் எனவும் பாடம். பொறை - சுமை, கோல்தலை- கோலின் தலைப்பகுதி; தண்டின் மேற்புறம். கடுப்ப - போல.

எல்வளை

தெறுவர-பொலிவழிந்து வருத்தமுண்டாக்க, தோன்றும் எனவும் பாடம். தீஞ்சொல் - இனிக்கும் பேச்சு. செறிதோட்டு', செறிதொடி என்றும் பாடம். ஒளியுள்ள வளைகள். குறு மகள்- இளமகள். ளமகள். சிறுபுனம்- சிறிதான தினைப்புனம். புறநிலை - புறம் காக்கும் காவல் நிலை. பைதல் - துன்பம்.

-

-

விளக்கம்: புனத்தே தினைக்கதிர் கொய்யப் பெற்றது. ஆதலின், இனிப் பகற்குறி வாயாது என்பதும், கொடிச்சி செல்க' என்றதால் இனி இற்செறிப்பு நிகழ்தல் உறுதி என்பதும் உணர்த்தி, இனி இவளை வரைந்து மணந்தன்றி அடைதல் வாயாதுகாண்; அதன்பால் மனஞ்செலுத்துக என்றனள். தினை கொய்யப் பெற்ற புனமானது விழவொழி வியன்களம் போலத் தோன்றித் துன்பந்தரும் என்றது. அதன் முன்னைச் செழுமையையும், அதனிடத்தே அவளும் அவனுமாகக் கூடி மகிழ்ந்த இன்ப நினைவுகளையும் நினைவில் எழச் செய்து, அது தான் இனி வாயாமையினையும் உணர்த்தி, மனத்தை வருத்தும் என்றதாம்.

'தந்தை வித்திய' என்றது, புனங் கொய்தலைத் தள்ளிப் போடுவதும் போடாததும் தந்தையின் உரிமையன்றி மகளுரிமை அன்றென்பதற் காகலாம். பொலிவழிந்துபோய் புனத்தைப் போலவே, நின்னை அடையமுடியாத பிரிவுப் பெருநோயினாலே தலைவியும் பொலிவிழந்து வாடி வருந்துவள்; அவளைக் காத்தற்குரிய கடமையை ஆதலின், இனியும் களவையே நாடாது கடிமணம் பெற்றுப் பிரியாது வாழ்வதனைக் கருதுக என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

222

நற்றிணை தெளிவுரை

307. அவன் துயர் காண்போம்1

பாடியவர்: அம்மூவனார். திணை : நெய்தல். துறை: குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

( (து-வி.) தலைமகன் குறித்தபடி, குறித்த காலத்தில் வராததால், தலைவியின் பிரிவுத் துயரம் கரைகடந்து பெரி தாகின்றது. 'அவன் சொற்பிழையானாய் வருவான்' என்று வற்புறுத்திக் கூறுகின்றாள் தோழி. அவள், அதனை மிகவும் நயமாகச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.)

கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் பெயர்பட வியங்கிய இளையரும் ஒலிப்பர் கடலாடு விழவிடைப் பேரணிப் பொலிந்த திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி பானாள் பூவிரி கானல் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன்

அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே!

5

10

தெளிவுரை : தோழீ! விருப்பந்தரும் செலவைக்கொண்ட குதிரை பூட்டிய, நெடிய தேரினது மணியும் அதோ ஒலிக் கின்றது. பெயர்ந்துபட நடக்கின்ற ஏவல் இளைஞரும் அதோ ஆரவாரிக்கின்றனர். கடலாட்டு விழாவினை முன்னிட்டுப் பெரிய அணிகளாலே பொலிவுற்றிருக்கின்ற, திதலை படர்ந்த நின் அல்குலது நலத்தைப் பாராட்டுதலின் பொருட்டாக, நீண்ட மணல்பரந்த நெய்தல்நிலத் தலைவனும் இன்னே வருவான் கண்டாய்! அவன் இதுகாறும் வாராதானாகக் காலந்தாழ்த்து நம்மையும் வருத்தியவனாதலின்-

·

இந் நடுயாமத்தே-மலர் விரிந்த கானற் சோலைக் கண்ணே யுள்ள நாம், அவனைக் களவிலே சேர்கின்ற குறியிடத்திற்கு அவனும் வந்து, மெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறும் பொழிலினிடத்தே நம்மைக் காணாதவனாகி, அவன் படுகின்ற அல்லல் மிகுந்த அரிய அவலத்தையும் – !

நற்றிணை தெளிவுரை

223

நம் மனையருகே வளைந்து படர்ந்துள்ள குடமுழாப்போலும் அடியையுடைய புன்னையினது, கரிய அடிமரத்தின் பின்னாக மறைந்திருந்து, நாமும் சிறிதுபோது காணலாம்-வருவாயாக!.

.

கருத்து: 'அவன் தவறாதே வருவான்' என்று, தலைவியின் துயரத்தை மாற்ற முயல்கின்றாள் தோழி என்பதாம்.

சொற்பொருள்: கவர்பரி - விருப்பந்தரும் செலவுடைய குதிரை; 'கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம். நெடுந்தேர் - நெடிதான தேர்; இது தலைவனது குடிப் பெருமை சுட்டியதாகும். பெயர்பட - பெயர்ந்து போவதற்கு. இளையர் - ஏவலிளைஞர்: அன்றித் தேரின் வரவைக் கண்டு வழிவிட்டு ஒதுங்கிப்போகும் பரதவர் இளையர் என்றும் இளையர் என்றும் கருதலாம். கடலாடு விழாவிடை - கடலாட்டுப் பூணும் விழாவினிடத்தே; கடலாடு வியலிடை' எனவும் பாடம்; வியலிடை - அகன்ற கடற்றுறையிடம். பேரணி- பெரிதான அழகு செய்யும் அணி வகைகள்; சிறப்பான அலங்காரங்கள். திதலை-தேமற் புள்ளிகள். வார்மணல் -நெடிதாகப் பரந்துகிடக்கும் கடற் கரை மணற்பாங்கு. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். வாங்கிய - வளைந்த. 'நிழற்பட ஓங்கிய' என்றும் பாடம். முழவு முதல் - முழாப் போன்று பருத்த அடிமரப் பகுதி. மா கரிய. பூவிரி கானல் - பூக்கள் மலிந்த கானற் சோலை. அரும் படர் - அரிய அவலநோய்; தீர்த்தற்கரிய கவலை.

விளக்கம்: 'புணர்குறி' என்றது, புணர்தற்காகச் சுட்டப் பெற்ற குறி இடம். இதனை இரவுக்குறிப் போதில் தலைவியே சுட்டுவாள் என்பது மரபு: 'களஞ் சுட்டுக் கிளவி கிழவியதாகும். என்பது விதி (தொல். பொ. 126). இவ்வாறு கூறுவதன்மூலம், தலைவியின் துயரத்தைச் சிறிதுபொழுதுக்கு ஆற்றுவித்து, அவளை வீட்டிற்கு அழைத்தேக முற்படுகின்றாள் தோழி ! என்றும் கருதுக. 'தலைவன் வருவான்' என்பது தோழியின் கற்பனைச் செய்தியே யாதலும் அறிக.

மேற்கோள்: (1) 'நாற்றமும் தோற்றமும்' என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையுள் (தொ.பொ. 112), 'நன்ன யம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்' என வருமிடத்து, 'நயம்புரி இடத்தினும்' என்றதனால், களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க' என்று கூறி, இச் செய்யுளைக் காட்டி, 'இது வருகின்றான் எனக் கூறியது' என்பர் ஆசிரியர் ளம்பூரணனார்.

I

1 .

224

தலை

வை

நற்றிணை தெளிவுரை

(2) இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி, அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ' எனக் கூறியது என்று, நச்சினார்க்கினியரும் இச் செய்யுளைக் காட்டுவர் (தொல். பொ. 114 சூ.உரை.).

308. நெஞ்சம் வந்தன்று

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார். திணை : யாலை. துறை : நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி, ஆற்றானாய், நெஞ்சினில் சொல்லிச் செல வழுங்கியது.

[(து-வி.) இல்வாழ்வுக்கு வேண்டிய பொருளைத் தேடி வருங் கடமையினைத் தலைவனின் தலைவனின் உள்ளம் தூண்டுகிறது. காதன் மனைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடிவரத் துணிகின்றான் அக் கணவன். அவன், தலைவியின் நிலை கண்டும் உள்ளம் நெகிழ்கின்றான். தன் நெஞ்சுக்கு பிரிவால் அவள் வாடும் தன்மையைக் கூறித், தன் பயணத்தைத் தள்ளி வைக் கின்றான். இந்தக் கருத்தோடு அமைந்த செய்யுள் இது.)

செலவிரை வுற்ற அரவம் போற்றி

மலரேர் உண்கண் பனிவர ஆயிழை யாம்தற் கரையவும் நாணின வருவோள்

வேண்டா மையின் மென்மெல வந்து

வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி

5

வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப் பொறியழி பாவையின் கலங்கி நெடிதுநினைந்து ஆகம் அடைதந் தோளே, அது கண்டு ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கேற் றங்கு. எம்

பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே!

10

தெளிவுரை : யாம் பொருள் கருதிச் செல்லுதற்குரிய வற்றை விரைந்து செய்துவருதலைப் பற்றிய எம் சொல்லையும், அது கேட்பது தன் கடமையெனக் கொண்டு விரும்பிக் கேட் டனள். ஆயினும், குவளை மலரைப்போலும் மையுண்ட அவள் கண்களிலிருந்தும் அப்போது கண்ணீரும் வழிந்தது. ஆராய்ந் தணிந்த கலன்களையுடையாளான அவளும், யாம் அதனையறிந் நற்றிணை தெளிவுரை

225

தேமாய், அவளை எம்மருகே வருமாறு கூப்பிடவும், அவள் தன் செயலுக்கு நாணினளாக மெல்ல வருவாளாயினாள். என் பிரிவை அவள் உள்ளத்து விரும்பாமையினாலேயே, மெல்ல மெல்ல அடிவைத்து வந்தனள். யாதும் என்பால் வினவுதலும் அன்றி, யாதுங் கூறி என் செலவைத் தடுத்தலும் செய்யாள் ஆயினள். மணங் கமழும் தன் கூந்தல் முடியானது அசையு மாறு, விசையானது கெட்டமையாலே செயலற்றுப்போன நல்ல வேலைப்பாடமைந்த ஓர் எந்திரப் பாவையேபோலத் தன் நிலை கலங்கியவளும் ஆயினாள். நெடும்பொழுதுக்கு எதையோ நினைந்தாளாய்ப் பித்துற்று நின்றவள், சோர்ந்து என் மார்பின் மேல் மயங்கியும் விழுந்தனள். அவளது அந் நிலையைக் கண்டேம். ஈரமண்ணாலே செய்யப்பட்டு நீர் கசிந்துகொண் டிருந்த பசுமண் கலமானது, பெருமழைப் பெயலிலே கொண்டு வைத்தபோது முற்றவும் கரைந்து அழிந்து போயினாற்போலே, பொருளின் பொருட்டு அவளைப் பிரியக்கருதிய என் நெஞ்சமும் அதன்பாற் செல்லாது கரைந்து, அவளோடேயே ஒன்றிக் கலந்து விட்டது; இனிப் பிரிந்து போவதென்பதுதான் யாங் ஙனம் கைகூடுமோ?

கருத்து: 'பிரிவு' என்னும் சொல்லைக் கேட்டதும் அவளது உள்ளத்தில் பொங்கிப் பெருகிய கலக்கமிகுதியைக் கண்டேன். ஆதலின், 'அவளைப் பிரியாதிருத்தலே இதுகாலை செய்யத் தக்கது எனப் பயணத்தை நிறுத்திக்கொண்டேன்' என்பதாம்.

சொற்பொருள்: விரைவுற்ற - விரைந்து அதற்காவன செய்த. அரவம் - பேச்சரவம்; இது பிறரிடம் பேசக் கேட்ட - சொற்களும் ஆகும். பனி - கண்ணீர்த் துளிகள். கரையவும் கூப்பிடவும். வேண்டாமை - விரும்பாமை. தகைத்தல் - தடுத் தல். வெறி - மணம். துறுமுடி - கூந்தலை முடித்துக் கொண்டை யிட்டிருத்தல்; அந்தக் கொண்டையைக் குறிக்கும். பொறி

விசை.

அடைதல் - அடைக்கலமாகக் கொள்ளல்; சாய்ந்து வீழ்தல். பசுங்கலம் - சுடாத பச்சை மண்கலம். பெருமழைப் பெயல் - பெருமழையின் பெயல்; பெருமேகத்தின் பெயலும் ஆம்.

விளக்கம்: 'பொறியழி 'பாவையிற் கலங்கித் தன் ஆகம் அடைந்தவள்' எனத் தலைவியது அன்பின் பெருக்கத்தை உணர்த் தினார். 'பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து வந்தன்று' என்றது. அன்பிற் கனிந்த இவளை அடைந்திருப்பதைக் காட்டினும், பொருள் அத்துணைச் சிறந்ததன்றெனத் தன் நெஞ்சமே நெகிழ்ந்து ஒன்றுபட்டதெனத் தன் ஆர்வமிகுதியையும் கூறினதாம், தலைவி

226

கபிலர் நற்றிணை தெளிவுரை

"ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம், பெருமழைக் பெயற்கு ஏற்றாங்கு" என்றது சுவையான உவமை. அப் கலமானது பெருமழையில் கரைந்து நெகிழ்ந்து போவதுபோல, பொருள் ஆர்வத்தாலே செறிந்த அவன் உள்ளவன்மையும், அவள் நிலை கண்டதும் நெகிழ்ந்து கட்டுவிட்டது" என்று கொள்க.

309. யான் தேறியிருப்பேன்!

பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி. துறை: வரை விடை. ஆற்றாள் எனக் கவன்று. தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

.

வரைந்து

[(து-வி.) தலைவன், தலைவியை நாடி வருவதற்கு உரியதான குறித்த காலம் நீட்டித்துக் கொண்டே போயிற்று. அதனாலே, தலைவியும் பொறுக்கவியலாத் துயரத்தே பட்டவளாக உழன்றனள். 'இதனால் இவள் உயிர் அழிந்தும் போவாளோ?' என்று அவள் தோழி கலங்கினாள். தோழியின் கலக்கத்தை அறிந்தாளாகிய தலைமகள், அவள் கொண்ட துயரைத் தணிக்கும் வகையாலே, தான் ஆற்றியிருக்கும் மன உறுதியுடையவள் எனத் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்

தளிர்வனப் பிழந்தவென் நிறனும் நோக்கி யான்செய் தன்றிவள் துயரென அன்பின்; ஆழல் வாழி தோழி வாழைக்

கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும்

பெருமலை நாடன் கேண்மை நமக்கே

விழுமம் ஆக அறியுநர் இன்றெனக்

கூறுவை மன்னோ நீயே

தேறுவன் மன்யான் அவருடை நட்பே.

உடல்

தெளிவுரை: தோழியே! நீயும் வாழ்வாயாக! தொடி நெகிழ்தலாலே என் தோள்களும் மெலிவுற்றன; வாட்டத்தாலே மேனியின் இரேகைகளும் சுருங்கிப் போயின; என் மேனியும் பண்டைய மாந்தளிரின் வனப்பை இழந்து விட்டதாய், தன் நிறமும் மாறிவிட்டது; இவற்றை எல்லாம் நீயும் நோக்குவாய்! "யான் செய்த பிழையாலேதான் இவளுக்கு

நற்றிணை தெளிவுரை

227

இத்துயரமெல்லாம் வந்துற்றன' என நீயும் நினைவாய். என்பாலுள்ள மிகுதியான அன்பினாலே பெரிதும் வருந்தவும் செய்வாய்! அங்ஙனம் எண்ணி வருந்தாதிருப்பாயாக! நம் தலைவன், வாழையினது கொழுமையான மடலிடத்தேயுள்ள அகன்ற இலைகளிலே மழைத்துளிகள் கலந்து தங்கியிருக்கின்ற தான், பெருமலை நாட்டினன் ஆவான்! 'அவனுடைய நட்பானது நமக்குத் துன்பந்தருவதாக ஆகின்றவிதனை அறிபவர் எவரும் இல்லையே?' என, நீயும் கூறுவாய். ஆயினும், அவருடைய நட்பினது உறுதியை யான் நன்றாகத் தெளிந்திருக்கின்றேன்; ஆதலின், அவர் வரும்வரையிலும் பொறுத்துத் தேறியிருப்பேன் என்று நீயும் அறிவாயாக.

கருத்து: அது வரும்வரை ஆற்றியிருப்பேன் என்பதாம்.

-

சொற்பொருள்: வரி - இரேகைகள். ஆழல் - வருந்தல்; - துயருள் அழுந்தலும் ஆம். விழுமம் - துன்பம். தளி மழைத் துளி. தேறுதல் - தெளிதல். கேண்மை - கலந்து உறவாகும் நட்பு.கலாவும் - கலக்கும்.

விளக்கம்: 'தலைவன் பிரிந்து போயின களவொழுக்கத்தின் பல காலத்தும், வாய்மை பிறழாதே மீண்டும் குறித்தபடியே வந்தவனாதலின், அவன் நம்பேரிற்கொண்ட அன்பும் உறுதியான தாகலின், அவன் தவருதே வருவான் என்று தான் தேறியிருப்ப தாகத் தலைவி கூறுகின்றாள். தோழியைத் தேற்றும் வகையிலே தலைவி இவ்வாறு கூறினளேனும், அவள் உள்ளத்தவிப்பினைத் தாமே காட்டும் மேனியின் மெலிவை அவளால் மூடி மறைக்க வும் இயலவில்லை. ஆனால், "யான் செய்தன்று இவள் துயர்' என்று தோழி வருந்துவதில் பொருளில்லை எனவும், தானே அவனைத் தன் உயிர்க்காதலனாகக் கொண்டு அவன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் உரைக்கின்றனள்.

கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன்' என்றது, தலைவனும் அத் தளிபோலத் தனக்கு அருள் செய்யும் கனிவுடையவன் என்பதாம். கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவியதும், வாழையானது பொதிவிட்டுப் பூவைத் தள்ளும்; இவ்வாறே அவன் அருள் அவளும் இல்லறமாற்றி நன்மகப்பெற்று இன்புறுவள் என்பதுமாம்.

உள்ளுறை : 'வாழை மடலிலே மழைத்துளிகள் கலந் திருக்கும் என்று உரைத்தது, 'தன் உள்ளத்திலேயும் அவன் அவ்வாறே தங்கிக் கலந்திருப்பவன்' என்று உரைத்ததாம், தோழி,

228

பரணர்

நற்றிணை தெளிவுரை

அதனால், தான் அவனை நினைந்து வருந்துவதும் மறப்பதும் இல்லையென்றதும் ஆம். அவன் வரும்வரை ஆற்றியிருக்கும் உறுதியுடையவள் தான் என்பதுமாம்.

'தளிர்வனப்பு' என்றது மாந்தளிர் வனப்பை. 'மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர்' எனத் திருமுருகாற்றுப் படை யுளும் வரும் (143).

பாடபேதங்கள்: 1. நெகிழ்த்த தோளும். 2. வாழி. 3. விழுமமாக அறியுநர் இன்றென.

மேற்கோள்: 'உயிரினும் சிறந்தன்று

அழாஅல்

நாணே' எனத்

தொடங்கும் சூத்திர உரையின் கண்ணே, தோழியை ஆற்று வித்ததற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர், இப்பாட்டினை மேற் கோள் காட்டுவர் (தொல்.பொருள்: 113).

பயன் : தோழியை ஆற்றுவிக்கும் பொழுதில், அவள் கூறிய சொற்களை மெய்ப்பிக்கும் பொருட்டாகவேனும், அவள் மேலும் சில காலம் ஆற்றியிருப்பாள் என்பதாம்.

310. போர்வை அஞ் சொல்!

மி.

துறை : (1)

பாடியவர்: பரணர். திணை : வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது; (2) விறலியை மருதம். எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.

[(து - வி) 1. தன் மனைத் தலைவியைப் பிரிந்து, பரத்தமை, உறவிலே களித்தான் ஒருவன்; அவன், மீளவும் தன் தலைவியை விருப்புற்று நாடியவனாகத் தன் வீட்டிற்கு வருகின்றான்; தலைவி பால் விறலியைத் தன் பொருட்டாகத் தூதாகப் போக்கு கின்றான்; அவளும் வந்து, தலைவியிடம், அவளைத் தலைவனுக்கு இசையுமாறு செய்விக்கக் கருதினவளாகப்பலப்பல கூறுகின்றாள். அவள் பேச்சினால் தலைவிக்கு மனம் சற்றும் மாறவில்லை. தலைவி யின் தோழி விறலிக்கு விடைதருகின்ற வகையில் அமைந்த செய்யுள் இது.

2. தலைவன் பரத்தமை வகையிலே உதவி நிற்பவள் ஓர் விறலி; அவளை வழியிற் காண் உடையவன்; அவனுக்கு அவ் கின்றாள், தலைவனால் விரும்பி உறவுகொண்டு பின்னர்க் கைவிட பெற்றாளான காதற் பரத்தை ஒருத்தி; அப் பரத்தை அவ் விறலி யிடத்தில் தன் ஆற்றாமைதீரப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது நற்றிணை தெளிவுரை

229

இந்த இருநிலைக்கும் பொருந்துமாறு அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.)

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் வாளை பிறழும் ஊரற்கு-நாளை

மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட் டோராத் தாயரோடு ஒழிபுடன் சொல்லலை கொல்லோ நீயே?- வல்லைக் கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல

உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே!

5

10

தெளிவுரை: 'சுடர் விளக்கைப் போன்றதாகச் செவ் வொளியினைச் சுடர் விட்டபடியிருக்கும் தாமரை மலர்கள்; அவை களிற்றின் காதைப்போன்ற அதன் பசுமையான இலைகளோ தாமும் சாய்ந்து அலைபடும்; நீர் உண்ணும் துறைக்கண்ணே நீர் முகத்தற்பொருட்டு இறங்கிய மகளிர் அதுகண்டு அஞ்சி ஓடுவர். ஆழமான நீர் மிகுந்த பொய்கையிலே இவை உண்டாகுமாறு வாளைமீன்கள் துள்ளிப் பிறண்டபடியே இருக்கும். இத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன். அவனுக்கு ஒவ்வொரு நாளைக்கும் புதியவளான பரத்தை ஒருத்தியைக் கொண்டு கூட்டுவதற்கு முற்பட்டுள்ள, மடமை பொருந்திய பெண்ணே!

மெய்ம்மையே பேசியறியதாத நின் நாவினாலே, நிலைகுலைந்த வாறு தாழ்மை உடையதாகப் பேசுகின்ற நின் குறும்பேச்சி னாலே, நினக்கு உடன்பட்டுவிட்ட. அப் பரத்தையரின் தாய்மா ரோடு, நீயும் ஒரு சார் அடைந்திருந்தனையாய்-

விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளு கின்ற பாணனின் கையிடத்ததாகியதும், பெரிதாக உயிர்த்தலை உடையதுமாகிய தண்ணுமையினைப் போல, உள்ளே யாது மில்லாத ஒரு மேற்போர்வை போலும் நின் சொற்களை, இன்னும் சொல்லவில்லையோ? அங்ஙனம் சொல்லி, அவரையும் நின் தொழிலுக்கு உட்படுத்தவில்லையோ?"

கருத்து: ' தலைவனது காமத்துக்கு இசையப் பரத்தை யரைக் கூட்டித்தந்து, தான் பொருட் பயன்பெறும் விறலியின் 230

நற்றிணை தெளிவுரை

பெண்மைத் தன்மையை எள்ளி நகையாடி, அவள் பேச்சுத் தம்மிடமும் செல்லாது என்றதாம்.

.

தாமரையின்

பாசடை

சொற்பொருள்: விளக்கு - விளக்குச்சுடர்; செந்நிறத்துக்கு உவமை. சுடர்விடு - ஒளிவிடு. பசிய இலை. தயங்க - அலைபட. இரிதல் - அஞ்சி ஓடுதல். குண்டு நீர் - ஆழமான நீர் நிலை. 'தொலைந்தநா' - உண்மை தொலைந்து போன நா.குறுமொழி - குறுகப்பேசும் பேச்சு. தாயர் - பரத்தை யரின் தாயர். வல்சி உணவு. போர்வையஞ்சொல் - உள்ளீ டற்று மேற்போர்வையால் மட்டுமே கேட்பதற்கு அழகிதாகத் தோன்றும் பொருளற்ற ஆரவாரச் சொல்.

-

விளக்கம்: பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானால், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், இதனால், சொல்பவரின் வெகுளியையும்

காணலாம்.

இறைச்சிப் பொருள் : 'வாளைமீன், தாமரை வருந்தவும், : மகளிர் அஞ்சி ஓடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும் என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

மேற்கோள்: ஆசிரியர் நச்சினார்க்கினியர், இது 'விறலிக்கு வாயின் மறுத்தது' என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.

பாடபேதங்கள்: மகட்கொடை பொதிந்த

பெண்டே.

(தொல்.

பொதிந்த மறங்கெழு

பயன் : தலைவனின் காமக்கிழத்தியர் இல்லுறை மனைவி போல உரிமை கொண்டாடுதலைத் தடுத்ததாகும் இது; அவர் நிலையை விளக்கியதுமாகும்.

311. ஒன்றே கானலது பழி!

பாடியவர்: உலோச்சனார். திணை : நெய்தல். துறை : அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்று வித்தது.

F நற்றிணை தெளிவுரை

231

[(து-வி.) கானற் சோலையிலே கலந்து பிரிந்த தலைவனை. மீண்டும் வரக்காணாத தலைவி அதனால் சோர்கின்றாள். அது குறித்து ஊரிலே பழிச்சொற்கள் எழுகின்றன. அப் பழிப் பேச்சு தலைவியை மேலும் வாட்டுகின்றது. தலைவியின் வாட் டத்தை மாற்றக் கருதிய தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே

வறப்பின், மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து

இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்

அழியா மரபின்நம் மூதூர் நன்றே

கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே ஒன்றே தோழிஙங் காலைது பழியே கருங்கோட்டுப் புன்னை மலரில்தா தருந்தி

5

இருங்களிப் பிரசம் ஊதஅவர்

நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே!

10

தெளிவுரை : தோழீ! அழியாத மரபினை உடையது நம் பழைய ஊர். மழை பெய்தால், எங்கும் உலவுகின்ற உழை என்னும் மானினங்கள் செறியத் தோன்றப் பெற்றதாயும், பெருங் கதிர்களைக்கொண்ட நெல்லின் புதுவருவாயினை உடைய தாயும் இதுதான் விளங்கும். அம் மழைதான் பெய்யாது வறண்டுவிட்டதானாலோ, பெரிய கழியிடத்துள்ள முள்ளிச் செடிகளின் மலர்கள் உதிர்ந்து பரந்தும், சேறு எல்லாம் ஈரமற்றுக் காய்ந்தும் விளங்கும், கரிய கழிப்பாங்காகிய சேற் றிடம் எங்கணும், வெள்ளுப்பும் விளையா நிற்கும். இவையும் அன்றி, கொழுமையான மீன்களைச் சுடுகின்றதால் எழுகின்ற புகையானது நம்மூர்த் தெருவெல்லாம் எப்போதும் பெருகப் பரந்து கலந்தும் விளங்கும். முன்பு, சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களையுடைய கடல்துறையும் நமக்கு இனிதாயிருந் தது! இருந்தும், ஒன்றுமட்டும் நம் கானற்பகுதிக்குப் பழி தருவ தாகின்றது. கரிய கிளைகளையுடைய புன்னை மலரிலுள்ள தேனைப் பருகிக் களிப்பினைப் பெற்ற கருமையான வண்டுகள், நன்னிமித்த மாக எதிர்வந்து ஒலிசெய்ய, நம் காதலராகிய அவருடைய நெடிய தேரினது, செவிக்கு இனிய ஒலியைக் கேட்டல்தான் நமக்கு அரிதாகிவிட்டதே! தலைவன

232

நெஞ்சு

கழார்க்கீரன் எயிற்றியார்

நற்றிணை தெளிவுரை

கருத்து: இக் குறை ஒன்றுமட்டும் இன்றாயின், நம்மூரும் அவர் உறவும் நமக்குக் குறைவற்ற இன்பந்தருவனவாய் ஆகுமல்லவோ!' என்றதாம்.

சொற்பொருள்: வெறுத்தல் - செறிதல்.

உழை - மான் வகையுள் ஒன்று. இருங்கதிர் - பெரிய நெற்கதிர். முண்டகம் - நீர் முள்ளிச் செடி. செறு - வயல்; உப்புப் பாத்தி; செறுக்கப் பட்டது செறு; செறுதல் - தகைதல். மரபு - இயல்பு. தாது பூந்தாது; இங்கு தேனைச் சுட்டியது. களி -வண்டு

விளக்கம் : 'வான் பெய்யினும் வறப்பினும் வளம் குன்றா வாழ்வினர் நெய்தல் நில மக்கள்' என்னும் உண்மையும் இதனால் கூறப்பட்டது. இயற்கையின் மாறுபாட்டானும் வருந்துதல் இலமாகிய யாம், நம் காதலனின் வன்செயலாலே ஊரில் உண்டாகிய பழிச்சொல்லைப் பெற்று வருந்துவம் ஆயினேம் என்பதாம். 'சிறு வீ ஞாழல் துறையும் ஆர் இனிதே' என்றது. அதுதான் முன்னர்த் தலைவனை முதற்கண் கண்டு கூடியின்புற்ற இடமாதலால், 'புன்னை மலரில் தாதருந்தி இருங்களிப் பிரசம் ஊத' என்றது, அவர்கள் மீளவும் சந்திப் பதற்குக் குறித்த இடம். அங்கும் அவனைக் காணாது இவர்கள் வருந்துகின்றனர். இதனைக் கேட்கும் தலைவி தன் பெருமிதத்தை உணர்ந்தாளாய்ச் சற்று அமைதி அடைவாள் என்பதாம்.

'மழை பெய்யாது போயினும் உப்பு விளையும்' என்பது, மழை பெய்யினும் பெய்யாது போயினும் அழியாத வளமை யுடையது நம் ஊர் என்று உரைத்ததாம். தலைவி ஆற்றியிருப் பாள் என்பது இதன் உட்கருத்து ஆகும்.

பயன் : எல்லாமே நன்றாக அமையப்பெற்ற நமக்குத் தலைவனுடன் நாம் கொண்ட உறவும் முடிவில் நல்லபடியாகவே மண நிகழ்ச்சியாக முடியும் என்று தேற்றியதாம்.

312. அவள்தான் என்னாகுவளோ?

பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார். திணை பாலை. துறை : பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.

( (து-வி.) ஒரு தலைவனின் நெஞ்சமோ பொருள்மேற் செல்லுகின்றது. பிரியின், தலைவி பெருந்துயர்ப்படுவள் என்னும் அச்சம் அவன் பிரிவைத் தடை செய்கின்றது. இரண்டுக்கும்

நற்றிணை தெளிவுரை

233

இரண்டு உணர்வுகளுக்கும்-இடையே ஊசலாடும் அவன், தன் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.] நோகோ யானே நோம் என் நெஞ்சே பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச் சிறைகுவிந் திருந்த பைதல் வெண்குருகு பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள மாரி நின்ற மையல் அற்சிரம்

அமர்ந்தனள் உழையம் ஆகவும் தானே எதிர்த்த தித்தி முற்ற முலையள் கோடைத் திங்களும் பனிப்போள்

வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே.

5

தெளிவுரை: யான் நினது விருப்பின்படியே பொருளீட்டு தற்குச் செல்லாதிருக்கின்றேன் என்று, என்னை நொந்து கொள்ளும் என் நெஞ்சமே! மேலேறிப் படருகின்ற தேமற் புள்ளிகளை உடையவள்; முற்றுதலைப் பெறாத இளைய முலைகளைக் கொண்டவள்; யான் பிரியாது உடனிருப்பேனாகிய இக் கோடைக்காலத்துத் திங்களிலும், யான் பிரிவேனோ எனக் கருதி மயங்கியவளாய் மிக நடுங்குபவள் - என் காதலி. அவள்தான்-

குளிர்ச்சியமைந்த புதரிடத்தேயுள்ள ஈங்கைச் செடியினது, அழகிய தழையானது தன் முதுகினை வருடிவிடத், தன் சிறகு குவிந்திருந்தபடியே வருத்தமுற்றிருந்த வெண்மையான கொக் கினைப் பார்வைப் புள்ளாக்கி, வேட்டுவன், அதன்/கால்கட்டை அவிழ்த்து விடுவதற்கு நிற்கின்ற தன்மையுடையது கார்காலம்: பகலும் இரவும் என்னும் வேறுபாடறியாது மயங்கிக் கிடத் தற்கு உரியது கூதிர்காலம்; வாடைக் காற்றினோடு பனியும் பெரிதும் பெய்தலைக் கொண்டது முன்பனியும் பின்பனியும் ஆகிய பருவங்கள். இக் காலங்களில், என்னைப் பிரிந்து தனித் திருந்தவளாக, அவள்தான் என்ன என்ன பாடுபடுவாளோ என்று, யானும் நோவா நின்றேன். என் அந்த நோயினது உண்மையினை அறியாயாய், நீயும் என்பாற் புலக்கின்றதுதான் எதனாலோ?

கருத்து: 'யான் பிரியின் அவள் நிலை யாதாகுமோ?' எனக் கவலை அடைவேன்; ஆதலின் பிரிதல் நினைவை நீயும் கைவிடுக என்பதாம்.

P.-15 234

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள்: பனிப்புதல் - ஈரமுள்ள புதர்; பனியால் நனைந்த புதருமாம். ஈங்கை - இசங்கு என்பர்; ஒருவகை முட் செடி. அங்குழை - அழகிய குழை; குழை தழை. வருட மெல்ல மெல்லத் தொட்டுத் தடவ; தடவியது வேட்டுவனை என்றும், குருகினை என்றும் கொள்ளலாம். பைதல் - வருத்தம். ‘பைதல் வெண் குருகு' என்றது; அதன் கால்கள் கட்டப் பட்டுள்ளதனால், பறந்து செல்ல இயலாமையால்; சிறை குவிந் திருந்ததும் பறவாததால்தான். பார்வை- பார்வைப்புள்; ‘கைப் பறவை' என்றும் கூறுவர்; பழகிய பறவை இது; இதை விட்டுப் பிற பறவைகளைப் பிடிப்பது வேட்டுவர் வழக்கம். மையல் - மயக்கம். உழையம் - அருகிருப்போம். தித்தி- தேமற் புள்ளி; 'எதிர்த்த தித்தி' என்றது, அதன் மேலேறிப் படரும் தன்மையால். பனிப்போள் - நடுங்குவோள். அற்சிரம் - கூதிர்ப்பருவம். காழ் -பிணிப்பு.

உள்ளுறை பொருள் : வேட்டுவனால் பார்வையாகக் களைந்து வலையுள் வைக்கப்பட்ட வெண்குருகு, ஈங்கையின் அங்குழை வருடுதலால் தன் துயரத்தைச் சற்றே மறந்து. அந்தச் சுகத்தை நினைந்து இன்புறும். அவ்வாறே, இல்லில் நம்மாலே கைவிடப்பெற்றுத் தமியளாய்த் துயருறும் தலைவி யும், தோழி தேற்றத் தன் துயரையும் மறந்தவளாய், மாரிக் காலத்தைக் கழிப்பவளாவாள் என்பதாம்.

விளக்கம்: கடமையும் காதலன்பும் ஒன்றையொன்று மீறிச் செயல்படத் தொடங்கும் ஒரு தலைவனின் நிலையை இச் செய்யுளிற் காணலாம். இதனால், அவன் போகுங்காலம் தள்ளி வைக்கப்படும் என்பதும் விளங்கும். எனினும், கடமை, வலிமை பெற விரைவிற் பொருள்தேடச் செல்வான் என்பதும் அறியப் படும். முற்றா முலையள்' என்றது, காமவின்பத்திற் பற்று விடும் அளவுக்குப் பருவத்தால் முதிராதவள் என்றும், மகப்பேறு இன்னும் பெறாதவள் என்றும் உணர்த்துவதாம்; ஆகவே, அவள் துய்க்கும் பருவத்தள்; அப் பருவத்து அவளைப் பிரிவுத் துயரால் நலியச் செய்தல் கூடாது என்பதுமாம். இதற்குப் பயன், செலவு அழுங்குதல் என்று கொள்க.

பயன் : தோழியின் உரைகளைக் கேட்டும், தன் துயரம் வெளிப்பட்டுப் புறந்தோன்ற அதனாற் பழிச்சொல் எழுதலை நினைத்தும், தலைவி ஆற்றியிருப்பவளாவாள் என்பதுமாம். நற்றினை தெளிவுரை

313. ஒலிக்கும் தினைப்புனம்!

235

பாடியவர்: தங்கால் பொன்கொல்லன் வெண்நாகனார். திணை : குறிஞ்சி. துறை: தோழி சிறைப்புறமாகத் தலை மகட்குச் சொல்லுவாளாய்ப் புனம் அழிவுரைத்துச் செறிப் பறிவுறீஇயது.

[ (து - வி.) புனம் காவலுக்கு நின்ற விடத்திலே, தலைவி, தலைவனைக் கண்டு காதல்கொண்டு, அவனோடு கலந்து ஒன்று பட்டனள். அவன், களவாகிய அவ்வுறவையே தொடர்ந்து நாடிவருதலையும், மணத்தைப் பற்றி விரைவு கொள்ளாமை யையும் கண்டாள் தோழி. அவள் அவனுக்கு அதை வலியுறுத்த விரும்பினாள். அவன் சிறைப்புறமாக, தலைவிக்குச் சொல்வாள் போலத், தன் கருத்தை நுட்பமாக அவனும் கேட்டுணரக் கூறுகின்றாள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனை இக் காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு யாங்கா குவள்கொல் தோழி-காந்தள் கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றும் தோடுபுலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா

கொய்பதம் கொள்ளும்நாங் கூஉம் தினையே!

5

10

தெளிவுரை : தோழீ நாம் கூவிக் கிளிகளை வெருட்டும் தினைப்புனம் எல்லாம் கதிரைக் கொய்யும் பதத்தினைப் பெற்றுள்ளன. மேலுள்ள இலைகள் காய்ந்தவாய், மலையருவி யைப் போல ஒலிப்பனவாயும் தினைப்பயிர்கள் ஆகிவிட்டன. ஆதலினாலே, காந்தளின் மணம் கமழ்கின்ற பூக்கொத்து இதழ விழ்ந்து மணத்தைப் பரப்புகின்றதும், விருப்பம்வருகின்றதுமான மலைச் சாரலானது கூதாளி படர்ந்துவிட்டதாக ஆயிற்று. நறிய பொழிலும் நம்மையில்லாதே தனிமையாயிற்று என்று ஆகுமாறு. அதனையும் கைவிட்டு, யாமும் ஊரிடத்தே மீண்டும்

236

நற்றிணை தெளிவுரை

செல்வேம் போலவும் தோன்றுகின்றது. கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்திலே, நாட்காலையிலே பூத்துள்ள புதுப்பூக்கள், பொன்னினாலே பணிசெய்யும் கம்மியனின் கைவேலைப்பாட்டினைப்போல, மிகவும் வனப் பினையும் பெற்றன. தடைகளை முற்றவும் அழித்து, தழைத்த பலவாகிய கூந்தலை அழகு பெறுமாறு ஒப்பனை செய்து காண்பதற்குள்ள. விருப்பமானது அளவு கடந்ததனாலே, நம்மை இதுகாலை கைவிட்டுப் போயின நம் காதலருக்கு, நாம் தான் இனி எவ்வாறு உதவுவோமோ?

கருத்து: தலைவன், விரைவில் வந்து தலைவியை மணந்து கொண்டு இல்லறம் பேணவேண்டும் என்பதாம்.

சொற்பொருள்: நாளுறு - நாட்காலைத் தோன்றிய. பொன். செய்கம்மியன் - பொற்கொல்லன். கைவினை - கை வேலைத்திறம். தகை வனப்பு - மிகுந்த அழகு. கண்ணழி - தடை. கட்டழித் தல் - முற்றவும் ஒழித்தல் கடீஇயாற்கு - நீத்துப் போயின - வருக்கு. நயவரும் - விருப்பம் வருகின்ற. கூதளம் - கூதாளி. புலம்ப - தனிமையுற. தோடு - தினையின் இலை. கூஉம்தினை கூவிக் கிளியோப்பும் தினைப்ஓனம்

விளக்கம்: 'கடீஇயான் என்றாள், தம்மை மறந்து விட்ட அவனது கொடுமையை நினைத்து நினைத்து நொந்து கூறினாள். 'கொய்பதம் கொள்ளும் தினை' என்றதனால், இனிப் பகற்குறி வாய்த்தல் அரிதாதல் கூறினாள். 'ஊர்வயின் மீள்குவம்' என்றாள், இரவுக்குறி வேட்டது போலச் சொல்லினும், வரைவு கடாதலே அவள் கருத்தாதலை உணர்த்தினாள்.

வேங்கை பூத்தது கூறியது, அதுதான் மணவினைக்கான காலமும் வந்தது என்பதை உணர்த்தி, இனி இல்லத்தார் அது குறித்து முயலுவர் என்று கூறியதாம். 'கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து' என்றது, தாம் வரைந்து வரும்வரை பொறுத்திருப்பதாக எண்ணினும், வேங்கை மலர்ந்தது மணவினைக் காலமாக, அந்த எண்ணம் தடைப்படலும் கூடும் என்பதாம். இதனால், தாம் வருந்தி நலனழிவேம் என்பதும் கூறினளாம். தினை முற்றியது கூறிய தனால், இற்செறிப்பு உளவாதலும் கூறினளாம். ஆதலின் இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் வாய்ப்பதரிது எனவும், விரைய வரைந்து வந்து மணந்து கூடி இல்லறமாற்றலே செயற்குரியது. என்பதும் உணர்த்தினாள். தலைவி

நெஞ்சு

முப்பேர் நாகனார்

நற்றிணை தெளிவுரை

237

மணவினைக்கு

உரிய

பயன் : வேங்கை பூத்தது

காலமாதலின், விரைவில் மணவினையினைப் பெறுவதற்குத் தலைவன் முயல்வான் என்பதாம்.

314. மொழி வன்மையின் பொய்த்தனர்!

பாடியவர்: முப்பேர் நாகனார். திணை : பாலை. பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

துறை :

[ (து - வி.) பிரிந்து போயின தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற பருவமும் வந்து கழிந்தது. அவனை வரக் காணாதாளான தலைவியின் துயரமும் பெரிதாகின்றது. அவள் தன் நெஞ்சழிந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி

நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்பில்

கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்

கழிவதாக கங்குல் என்று தாம்

5

மொழிவன் மையின் பொய்த்தனர் வாழிய

நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி

அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள்

10

புன்புறா நீளிடைச் சென்றிசி னோரே!

தெளிவுரை : நெஞ்சமே! காய்கள் நொடித்துவிட்டாற் போல ஒலியோடு தெறிக்கின்ற தன்மையுடையது கள்ளி. அக் கள்ளியின், அசையும் பாவைபோலத் தோன்றும் கிளையிலே ஏறித், தனியே துயருடன் இருந்தது ஆண் புறா ஒன்று. அது தான். தான் விரும்பிய தன் பெடையைக் புணர்குறிப்போடு கூவி அழைத்தபடியே இருக்கும். வெயிலின் வெம்மையானது சற்றும் குறையாது நீண்டபடியிருக்கின்ற, அத்தகைய சுரத் தின் கண்ணே, நம்மைப் பிரிந்தும் சென்றவர் நம் தலைவர். அவர்தாம் -

யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீளவும் இளமைப் பருவத் தைத் தவறியும் அடைபவர் அல்லர்; வாழ்நாளின் வகுத்து 238

நற்றிணை தெளிவுரை

அமைந்த அளவு இதுதான் என்று அறிபவரும் யாரும் இலர் ஆதலினாலே

மாரிக் காலத்து மலர்வது சிறு செண்பகம்; அதன் ஈரிய இதழ்களையுடைய மலரினை மாலையாகக் கட்டி, நறிய வயிர முற்றிய சந்தனத்தேய்வை பூசப்பெற்ற தம் மார்பிலே அவர் சூடிக்கொண்டனர்: சிறுசிறு தேமற்புள்ளிகள் கொண்ட அழகிய நிறத்தையும், கருங்கண்களையுமுடைய, விருப்பமிகு மார்பகங்கள் அமுங்குமாறு நெஞ்சுற நம்மை இறுகத் தழுவினர்; தழுவிய படியே, 'இவ்விரவுப்போது இவ்வாறே இன்பமாகவே கழிவதாக என்றும் முன்பு கூறினர். தாம் சொல்வன்மையுடையர் ஆதலின், அவ்வாறு பிரிவையும் மறைத்து, நம்மிடம் அன்புடை யார் போலப் பொய்யும் பேசினர். அவர்தாம் நெடிது வாழ்வாராக!

-

கருத்து : "சூள் பொய்த்த அவர்தாம் நெடிது வாழ்வா ராக" என்று வாழ்த்துவதன்மூலம், தன் ஆற்றாமை கூறியதாம். சொற்பொருள்: ஒழிந்தும் - தவறியும்; என்றது கழிந்த இளமை மீளவும் வரப்போவதே இல்லை என்பதனால். வகை யளவு வகுத்து அமைந்த கால அளவு. பித்திகம் - சிறு செண்பகம். அலரி - அலர்ந்த மலர். காழ் - வயிரம். கொம்மை அழகு. பொறி-புள்ளி. வெம்முலை - விருப்பந்தரும் முலைகள்; வெம்மையுடைய முலைகளும் ஆம்.ஞெமுங்க - அமுங்க. மொழி வன்மை - சொல் வன்மை; பொய்யையும் மெய்யே போலப் பிறர் நம்புமாறு வலியுறுத்திக் கூறுதல். நொடிவிடு அன்ன - கை நொடித்தால் எழும் ஒலிபோல. பாவை - கள்ளியின் கிளை. புன்புறா - புல்லியபுறா; பேடையைப் பிரிந்து தனிமையுற்ற ஆண் புறா. பயிரும் - கூவியழைக்கும். என்றூழ் - கோடை

வெப்பம்.

விளக்கம்: குறித்த காலத்து வாராது அவர்தாம் தம் சூள் உரை பொய்த்தனர். சூள் பொய்த்த அவரைத் தெய்வம் வருத்தும். அதுதான் வருத்தாதிருக்க, அவர் நெடுநாள் வாழ்க! என்கின்றாள். தன் துயரத்து எல்லையிலும், தன் காதலரின் நலன் கருதும் பெண்ணியல்பும் இதனால் உணரப்படும். தாம் செல்லும் நெறியானது, புல்லிய புறவும் தன் பேடையை விருப்போடு அழைக்கும் தன்மையதாயிருந்தும், அதைக்கண்டு போவாரிடம் நம்மால் மீண்டுவரும் அன்பு தோன்றவில்லையே என்று நினைத்து வருந்தியதாம். 'நாளது இன்மையும், இளமையது அருமையும், அன்பினது அகலமும் பிறவும் நிகழ்ந்தது கூறி நிலையலும் பரத்தை அம்மூவனார்

நற்றிணை தெளிவுரை தலைமகன்

239

திணையே' என்னும் தொல்காப்பிய விதியையும் நினைவிற் கொள்க-(தொல் பொருள்.44).

"முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார், வாழ்நாள் வகையளவும் அறிநரும் இல்லை; ஆதலின் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல்" என்று, தலைவன் முன்பு கூறியிருந்த நாளிற் சொன்னதாகக் கொள்ளுக.

.

.

பயன் : அவர் சொற் பொய்த்தனர் என்பது உண்மை யாயினும், நம்மை வருந்தச் செய்தனர் எனினும், அதனால் ஏதும் நோயுறாதே நலமாக இருப்பாராக என்று, தன் கற்புத்தன்மை தோன்றக் கூறியதாம்.

315. மலர் தீய்ந்து அனையர்!

பாடியவர்: அம்மூவனார். திணை : நெய்தல். துறை: தலை மகனைப் பரத்தை நொந்து கூறியது.

-

( (து - வி.) ஒருத்தியைப் பிரிந்து மற்றவள் பாற் சென்ற தலைவன், மீண்டும் அவளை விரும்பி வருகின்றான். அவன் பிரிவால் நலிந்திருந்த அவளது உள்ளத்து வேதனையை' அவள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அவனுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. இதனால், அவள் ஊடல் தீர்வாள் என்பதும் அறியப்படும்.)

ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு மூத்துவினை போகிய முரிவாய் அம்பி

நல்லெருது நடைவளம் வாய்த்தென உழவர்

புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு

நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவுமுதற் பிணிக்கும் துறைவ! நன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதில் தவறுநன்கு அறியா யாயின் எம்போல் நெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர்

மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே!

5

100 240

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : நெருங்கிய, பெருந் தெய்வங்களின் பெயர் களைக் கொண்டவான யாண்டுகளும் பலவாகக் கழிந்தன. அதனால், கரையை அடுத்திருக்கும் நீர்த்துறையிலே, அலைகள் மோதி மோதித் தாக்குதலாலே மோதப்பட்டுப் பழைதாகித் தொழில் செய்வதற்கு உதவாது போயினது, முரிந்த முன்பகுதி யைக் கொண்ட தோணி ஒன்று. அதற்கு நறுமணஞ்

சேர்ந்த நல்ல புகையும் கொடாதவராக, சிறிய பூக்களையுடைய ஞாழலோடு சேர்ந்து உயரமாக வளர்ந்திருந்த புன்னை மரத்தின் கொழுமையான நிழலிலே, அதன் குடமுழவு போன்ற அடி மரத்திலே, அத்தோணியைப் பிணித்தும் வைத்தனர். நல்லபடி யாகத் தொழில் செய்து உதவிய எருதானது, தன் நடைச் சிறப்பினின்றும் நீங்கியதாயிற்று என்பதனாலே, உழவர்கள். அதனைப் புல்லையுடைய தோட்டத்திலே, தொழில் செய்யாதபடி வறிதே மேயுமாறு விட்டுவிட்டனர். அத் தன்மை கொண்ட நீர்த்துறைக்கு உரியவனாகிய, எம் தலைவனே!

பெருஞ் சிறப்பினதாகக் கருதினையாய், நீதான் அவளோடு மேற்கொண்ட நட்பினிடத்தே, சின்னஞ்சிறு தவறும் வராமற் படிக்கு, நன்றாக அறிந்து நீயும் நடத்தல்வேண்டும். அதனை நீதான் அறியாதவன் ஆயினால், எம்மைப்போலும் நெகிழ்ந்த தோள்களும் கலங்கியழும் கண்களும் கொண்டவரான மகளிரின் நிலைதான் யாதாகுமோ? நின்னால் விரும்பப்பட்ட அவர் நிலைதான், மலர்ந்து கருவேற்றுப் பயன் தந்து வீழாது தீய்ந்து மலர்ந்ததும் வறிதே உதிர்ந்துவிடும் மலரினைப் போன்றதாகுமே!

கருத்து: ' இதனை உணர்ந்தாயாய், நீதான் என்று திருந்து வையோ?' என்று மனம் வெதும்பிக் கூறியதாம்.

4.

சொற்பொருள்: தெய்வத்து யாண்டு - தெய்வப் பெயர் களைக் கொண்ட யாண்டு; தெய்வம்' வருடப் பெயர்கட்கு வந்தது.அம்பி - தோணி வகையுள் ஒன்று. புகைகொடுத்தல், பேய்க் குற்றத்திற்பட்டு அதற்குத் தீங்கு நேராமைப் பொருட்டு. நடைவளம் வாய்த்தல் என்றது, அதுதான் குன்றியதைக் குறித்ததாம். கா-தோட்டக்கால். முரிவாய் - முரிந்துபோன வாய்ப்புறம்; வாய்ப்புறமாவது தலைப்பகுதி. புணரி -அலை. நொவ்விது - நுட்பமானது. நயந்தோர் - விரும்பிக் காதலிக்கப் பட்டமகளிர்.

உள்ளுறை பொருள்: அம்பியானது மூத்து முனைமுரிந்து அலைகளால் சிதைவுற்ற காலையிற் புன்னையின் அடிமரத்தில் பிணித்துப் போடுவர் என்றது, நின்னால் விரும்பப்பட்ட மகளிர்தாம்; சிறிது முதிர்ந்து அழகு குன்றினராயின், அவரைப்

जुलाई நற்றினை தெளிவுரை லைவி

கிடைக்காடனார்

241

பாதுகாத்துப் பண்டுபோற் பேணாது, விட்டு நீங்கிப் புதியரை நாடுபவன் நீ என்று இடித்துக் கூறியதாம்.

விளக்கம்: 'நின்னை நயந்தோர் மலர் தீய்ந்தனையர்" என்றது. இயல்பான முதுமையை அடையாத பெண்களையும், நீதான் இளமையிலேயே துறந்து கைவிட்டுச் சென்று, வாடி உயிர் அழியச் செய்யும் தன்மை உடையை என்று சொல்லிப் பழித்ததாம். 'இவளும் அத்தன்மையள் ஆயினாள்' என்று அருள்தோன்றக் கூறியதும் ஆம். தலைவனின்

காமக்

கிழத்தி இவ்வாறு கூறுவது, அவளுக்கு அவன்பாலுள்ள பழைய தொடர்பையும், உரிமையையும், அக் குடும்பத்தின்பால் அவளுக்குள்ள நல்லெண்ணத்தையும் புலப்படக் காட்டுவ தாகும். பெருந்தெய்வம்' என்றது பரசிவத்தை என்பர்.

பயன் : ஊடல் தீர்ந்து கூடி முயங்கி இன்பம் காண்பர் என்பதாம்.

மேற்கோள்: 'இதனுள் மூத்து வினைபோகிய : அம்பி போலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது, இவள் இப்பருவத்தே இளையளாகற் பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல' எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க" என்ற விளக்கத்துடன், இச்செய்யுளை, புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்' என்னும் சூத்திர உரைக் கண் எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொ.பொ. 41.). பாடபேதம் : மலர்தீர்ந்தனையர்.

316. மேகம் மடமையுடையது!

பாடியவர்: இடைக்காடனார். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

((து - வி.) தலைவனைப் பிரிந்த பிரிவுத் துயரத்தால் தலைவி. யின் மனத்துயரம் பெரிதாகியது. அவள் பெரிதும் நலிவடை கின்றாள். அவள் துயரநிலை நிலைகண்டு மனம் வருந்தினாள் தோழி தலைவிக்கு அவள் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

1

மடவது அம்ம மணிநிற எழிலி

மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக்

கயலேர் உண்கண் கனங்குழை இவைநின் -242

நற்றிணை தெளிவுரை

எயிறேர் பொழுதின் எய்தரு வேமெனக் கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்தநின் நன்னுதல் நீவிச் சென்றோர் நல்நசை வாய்த்துவரல் வாரா அளவை அத்தக் கல்மிசை யடுக்கம் புதையக் கால்வீழ்த்துத் தளிதரு தண்கார் தலைஇ

விளியிசைத் தன்றால் வியலிடத் தானே!

5

10

மையுண்ட

தெளிவுரை : தோழி! கயல்மீன்போன்ற கண்களையும், கனவிய குழையையும் உடையவளே! மலரை யுடைய முகையை அழகுதோன்றக் காட்டியபடி, இம் முல்லையானது நின் பற்களைப்போலத் தோற்றும். அரும்புகள் ஈனுகின்ற அத்தகு பொழுதிலே, யாமும் நின்பால் வந்தடைவேம் என்று நமக்குத் தேறுதல் கூறிப் பிரிந்து போயினவர் நம் தலைவர். 'இடம் அகன்ற வானத்தினிடத்தே உள்ளதான நிலவோ' என்னுமாறு அமைந்த, நின் முகத்திடத்தேயுள்ள நறிய நுதலைத் தடவிவிட்டபடியே, நினக்கு ஆறுதலும் கூறிச் சென்றவரும் அவர். அவர்தாம், நம்மை வந்தடையும் விருப்பின ராகி, நம்பாலே வந்து சேராததன் முன்பாகவே-இக் கால மல்லாக் காலத்திலேயும்-

.

சுரத்து நெறியையுடைய மலையின்மேலே, அதன் பக்கவிடம் எல்லாம் மறையும்படியாகக் காலிறங்கி, நீர்த்துளிகளையும் பெய்வதாய், தண்ணிய மேகமானது, அகன்ற வானத்திடத்தே இடிமுழக்கத்தையும் மேற்கொள்ளா நின்றது. ஆதலினாலே, நீலமணியைப் போலும் நிறத்தை உடையதான இம்மேகமும் மிக்க அறியாமை உடையது, காண்பாயாக!

கருத்து : 'அவர்தாம் தம் சொற் பிழையாதவராய், குறித்த காலத்தே மீண்டு வருவர்; நீதான் அதுவரை தேற்றி இருப்பாயாக' என்பதாம்.

மடமை

சொற்பொருள்: மடவது மடமை. உடையது; யாவது குறித்த காலத்தின் வரவுக்கு முற்பட வந்த அறியாமைச் செயல். மணி - நீலமணி. மௌவல் - முல்லை. - கண்ணகன் - இடம் அகன்ற. நீவி - தடவி; தடவுதல் அன்பினைக் காட்டுதற்கான செயல். நசை - விருப்பம்; நல் நசையாவது நமக்கு நன்மை செய்தல் வேண்டுமென்னும் விருப்பம். வாரா அளவை - வாராததன் முன்பேயே, அடுக்கம் மலையடுக்கம், தோழி தலைவன்

நற்றிணை தெளிவுரை

மதுரை பூவஸ்வேட்டனார்

248

கால்வீழ்த்தல் - காலிட்டுப் பெய்தல். விளி - கூப்பீடு; இடியின் முழக்கம்.

விளக்கம்: 'அவர் குறித்த காலத்துத் தவறாது வருவர்; ஆதலின், அவர் வருதற்கு முற்பட வந்த இக் கார்தான் மடமை உடையது. இப்படிக் கூறுவதன் மூலம் அவள் துயரத்தை மறக்கவைக்க முயலுகின்றாள் தோழி. அவர்தாம் சூள் பொய்த் தனராதலின், அவர் அணங்கப்பெறுவர் என்னும் அச்சத்தையும் இதனால் போக்கியதாயிற்று. முல்லை யரும்புவது கார்காலத்து என்பதையும் சுட்டி அதனை உரைத்தானாகலாம். 'இவை நின் எயிறேர் பொழுதின்' என்றது, நலம் புனைந்து உரைத்து அவள் கவலையை மாற்றித் தெளிவித்ததாம். இக் காலவரவு அவர் சென்றிருக்கும் இடத்தும் உளதாம்; ஆதலின், அவர் சொற்பிழை யாராய் நம்மை நினைந்து விரைவிலே திரும்புவர் என்பதுமாம். இதனைக் கேட்கும் தலைவி தன் துயர் மறந்து ஆற்றியிருப் பாளாவள் என்பதுமாம்.

மடவது அம்ம மணிநிற எழிலி' என்றது, அவன் சொற் பிழையான் ஆகவே, காலவரவுக்கு முற்பட்டு எழுந்து தோன்றிய இம் மேகந்தான் மடமையுடையது எனக் கூறிப் பழித்ததாம்.

'எயிறு ஏர் பொழுது - அவள் சிறு நகைபோல முல்லை அரும்புகளை ஈன்று தோன்றும் கார்காலப் பொழுதினைக் குறித்ததாம்.

பயன் : அவர்தாம் சொன்ன காலத்து வரவில்லை என்ற போதும், காலம் நம்மை நினைப்பிக்க, விரைவிலே வந்து சேரவேண்டும் என்று தாம் விரும்பி, அமைதி காண்பதாம்.

317. கண்கள் என்னாகுமோ?

பாடியவர்: மதுரைப் பூவண்டனாகன் வேட்டனார். திணை: குறிஞ்சி. துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது.

( (து - வி.) தலைவியை மணந்து கூடி இல்லறமாற்றக் கருதானாக, அவள் களவில் தரும் இன்ப நலத்தையே நாடிய வனாக வருகின்றான் தலைவன். அவன் உளத்தை வரைந்து வருதலிற் செலுத்தக் கருதிய தோழி கூறுவதாக அமைந்தது இச் செய்யுள்.] 244

நற்றிணை தெளிவுரை

நீடிருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த பூம்பொறி யொருத்தல் ஏந்துகை கடுப்பத் தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின்—பனிகலந்து என்னா குவகொல் தானே- எந்தை ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை யாடி

5

ஆயமொடு குற்ற குவளை

மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே.

10

தெளிவுரை : நெடியதும் பெரியதுமான மலைப்பக்கத்திலே, பிடியானையோடும் கலந்த, முகத்திலே புள்ளிகளையுடைய அழகிய களிற்று யானையினது தூக்கி எடுத்த துதிக்கையைப் போல, மேலிலை நீங்கிய நீண்டு வளைந்த பசிய தினையின் கதிர்கள் வளைந்து விளங்கும். பவளம்போலச் சிவந்த வாயை யுடைய பசுங்கிளிகள், அக்கதிர்களைக்செய்து கொண்டும் போகா நிற்கும். அத்தன்மை கொண்டதான உயர்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! நீதான் விரும்பிக் காதலித்தவளாகிய தலைவியது நட்பினை அன்னையும் அறிந்தாளானால்-

எம் தந்தையது உயரமிகுந்த மலைச்சாரலிடத்தே உள்ள தான், இனிய சுனை நீரிலே நீராடினமாய், தோழிப் பெண் களோடும், அச்சுனையிடத்தே பறித்த குவளை மலரின், கரிய இதழ்கள் கொண்ட சிறந்த மலரைப்போல விளங்கும் எம் கண்கள்தாம்,

கண்ணீர் கலந்து வடியப் பெறுவதாகி, இனி என்ன கேட்டைத்தான் அடையுமோ?

கருத்து: 'நின்னைக் கண்டு மகிழ்கின்ற எம் கண்கள் நலனழியாத வகையில், நீதான் மணந்துகொண்டு அருள வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள்: நீடிருஞ் சிலம்பு - நெடிதும் பெரிதுமான மலைப்பகுதி. ஒருத்தல் - தலைவனாகிய களிறு. தோடு - மேலிலை; கதிரை மூடியிருக்கும் இவ்விலைகளைத் 'தோடு' என்பதே இன்றும் மரபாகும். பொறி - புள்ளிகள். ஏந்துகை-மேலாக ஏந்திய கை; தோடு நீங்கிய தினைக்கதிரின் தோற்றத்திற்கு உவமை, தோழி தலைமகள்

நற்றிணை தெளிவுரை

பாலைபாடிய பெருங்கடுங்

245

கவரும் - கவர்ந்து போம்; உரியவர் அறியாதபடி கொண்டு செல்லும். வாங்கிய கதிர் - வளைந்த கதிர்; நீண்டு பருத்த கதிருமாம். குறுதல் - பறித்தல்.

விளக்கம் : தினை முற்றியது; இற்செறிப்பு இனி நிகழும்; இவளோ நின் பிரிவைத் தாங்கமாட்டாதே நலிவாள்; இரவுக் குறி வாய்த்தலும் அரிது; அன்னை அறியினும் ஏதமாம்; ஆகவே, இனி, இவளை விரைய வந்து மணந்து கொள்ளுதலே செயத்தக்க தான உரிய செயல் என்பதாம். நுகர்தற்கான பருவங்கொண்ட முற்றிய தினைக்கதிரைக் கிளிதான் கவர்ந்து சென்று உண்டு இன்புற்றாற்போல, நீயும் மணப்பருவம் பெற்ற பெற்ற இவளை, இவளைப் பெற்றோர் அறியாதே களவில் அடைந்து இன்புறுவாய் ஆயினை என்பதாம்.

உள்ளுறை : கொய்துகொண்டு போன கிளிக்கன்றி. அதனை முயன்று பயிரிட்ட கொல்லையுடையார்க்குத் தினைக்கதிர் பயன்படாது போயினது போன்று, இவளும் நலன் நுகர்ந்து இன்புறும் நினக்குப் பயன்பட்டவளன்றித், தான் பிறந்த குடிக் கும், தன்னைப் பெற்றோருக்கும் யாதும் பயனற்றவள் ஆயினாள் போலும் என்பதாம்.

எனவும்

பாடபேதம் : பூவண்டூர் நாகன் வேட்டன் பாடியவர் பெயர் வழங்கும். மதுரை நாட்டுள்ள ஓர் ஊர் இது

என்பர்.

பயன் : கண்ணழகு என்னாகுமோ என்று கவல்வதனால், அதுதான் கெடாமையை நினைக்கும் தலைவன், விரைவில் மணவினையை முடித்தற்கு முயல்வான் என்பதாம்.

318. பிடி புலம்பிய குரல்!

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. திணை : பாலை. துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.

( (து - வி.) தலைவியைத் தன்னோடு உடனழைத்து வந்து, தன்னூரில் தலைவியை மணந்து இல்லறம் பேணி வருபவன் தலைவன் தலைவன் ஒருவன். சிறிது காலத்திற்குப்பின் அவனுள்ளத்தில் பொருள்தேடி வருவதற்குப் போகும் எண்ணம் வலுக்கின்றது. அதனை, அவன், தலைவியின் தோழிக்கு உணர்த்த, அவள் தலைவியின் தன்மையைக்கூறி, அவன் செலவைத் தடுப் பதற்கு முயல்வதாக அமைந்த செய்யுள் இது.]

246

நற்றிணை தெளிவுரை

நினைத்தலும் நினைதிரோ வைய வன்றுநாம் பணைத்தா ளோமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்துமிசை கொண்ட வோங்குமறுப்பு யானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து என்றூழ் விடரகம் சிலம்பப்

புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே!

.

5

.

தெளிவுரை : ஐயனே! உடன்போக்கில் உம்முடன் வந்த அந்நாளிலே, பருத்த அடியைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளைகளினாலுண்டான, நிழல் என்னும் சொல்லுக்குப் பொருந்தாத புள்ளிபட்ட நிழலிடத்தே, களைப்பாறுதலின் பொருட்டாகத் தங்கியிருந்தோம் அன்றோ! அப்போது, நமக்கு எவ்வித நடுக்கத்தையும் செய்யாதாய், நாமிருந்த இடத்து வழியாகவே வந்து தோன்றிற்று, உயர்ந்த தந்தங்களை யுடைய யானை ஒன்று. தழையை ஒடித்துத் தின்னுதலை மேற் கொண்டதான உயர்ந்த தந்தத்தையுடைய அந்த யானை யானது, புள்ளியையுடைய தன் நெடிய கையினைச் சுருட்டித் தூக்கியபடியே, பிறிதொன்றனை அறிகின்றதன் காரணமாக, இடையீடுபட்டுப் பிளிறியது. அது அவ்வாறு பிளிறியவுடனே, அதனை வேறாகக் கருதிற்றாய், அதன் புல்லிய தலையையுடைய இளைய பிடியானையானது, வெயில் பரவிய மலைப்பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்குமாறு குரலெடுத்துப் புலம்பிற்று. அதன் அத்தகு புலம்பற் குரலையும் கேட்டிருந்தீர் அல்லவோ! அதனைக் கேட்டிருந்தீர் ஆயின், கொடிய சுரநெறியில் எம்மைப் பிரிந்து செல்லாதிருப்பீர்; நும் காதலியான இவளைப் பிரியாதும் இருப்பீர் அல்லவோ!

கருத்து: 'நும் பிரிவை இவள் பொறுத்து நீர் வரும் வரைக்கும் உயிர் தரியாள்' என்பதாம்.

சொற்பொருள்: நினைத்தல் - பண்டு நிகழ்ந்ததனை நினைவு கூர்தல். பணைத்தாள் - பணைத்த அடிமரம்; பணைத்தல்-பருத்தல்; பனைத்தாள் ஓமை என்றும் வேறுபாடம். படு சினை - தாழ்ந்த கிளை; பட்டுப்போன கிளையும் ஆம். பொருந்தா பொருத்த மல்லாத; அஃதாவது நிழல் என்று சொல்லுதற்குப் பொருந் தாத. புகர் - புள்ளி; புகர் நிழல் - புள்ளிபட்ட நிழல்: நிழலும்

  • லைவனர்

வினைத்தொழிற் சோகீரனார்

நெஞ்சு

நற்றிணை தெளிவுரை

247

வெயிலும் கலந்த நிலை இது. நடுக்கஞ் செய்தல் - அச்சமுறும் படி செய்தல். நண்ணுவழி - அடைந்துள்ள வழியிடையே. மிசைதல் - உண்ணல். ஓங்கு மருப்பு - உயர்ந்த கொம்பு. பொறி - புள்ளி. அறியிடையிட்ட - அறிவதற்கேற்ப இடை யிடைப்பட்ட வேறு உணர்ந்து - மனம் வேறுபட்டதாகக்

கருதி. என்றூழ் - வெயில். புன்தலை - புல்லிய தலை; இளமையின் அமைதி இது.

விளக்கம் : 'வேறு உணர்தல்' என்பதனை, அது தான் புலியோடும் பொருதலைத் தொடங்கிற்றோ எனக் கருதி, அதனால் அதற்கு நேரும் ஊறுக்கு அஞ்சுதல். எதனையோ கருதிற்றாய்க் களிறு பிளிறவும், அதன் வரவு இடையீடுபடவும், பிடியானை புலம்பலுற்றாற்போல, நம் தலைவியும், நும் கருத்தை உணரின் ஆற்றாளாய்க் கலுழ்வாள் என்பதாம்.

இறைச்சிப் பொருள் ; களிறு வேறொன்றனைக் கருதித் தாழ்த்தமையினை, அது புலியோடு பொருதும் போலும் என மாறுபாடாக உணர்ந்து, அதன் பிடியானை புலம்பும் என்றனள். இது, தலைவியும், நும் பிரிவால், வழியிடை நுமக்கு ஏதம் நிகழுமோ எனக் கருதினளாய்ப் பெரிதும் வருந்தி நலிவடைவள் என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவன், தன் போக்கைக் கைவிடுவன்! தலைவியை அகன்று போதலை மறந்திருப்பன் என்பதாம்.

பாடபேதம் :

துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள் தோழிக்கு, 'நினைக்கலும் நினைத்திரோ வைய புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே என்பது சொல்லாமோ" எனச் சொல்லியது எனவும் கூறப்படும்.

பயன் : மடப்பிடி புலம்பியது போலத் தலைவியும் குரலெடுத்துப் புலம்பிக்கூடத் தன் ஆற்றாமையைப் போக்க வியலவில்லையே என்பதாம்.

319. மீன் துஞ்சு பொழுது

திணை :

பாடியவர்: வினைத்தொழிற் சோகீரனார். நெய்தல். துறை: காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.

·

[ (து - ம்.) தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த தலைவி பின் தாய், தலைவியை இல்லிடைச் செறித்துக் கடுமையான

248

நற்றிணை தெளிவுரை

சிறை காவலுக்கும் உட்படுத்தினாள், ஆங்கு அவளை நினைந்து வந்த அவன், அவள் நிலையை அறிந்தான். நள்ளிரவிலும் துயில் பெறாதவனாக வருந்தும் அவன், தன் உளத்திற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

ஓதமும் ஒலிஓ வின்றே ஊதையும்

தாதுளர் கானல் தௌவென் றன்றே மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில் கூகைச் சேவல் குரலோடு ஏறி ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்குகால் கிளரும் மயங்கிருள் நடுநாள் பாவை யன்ன பலராய் வனப்பின் தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி மீன்கண் துஞ்சும் பொழுதும்

யான்கண் துஞ்சேன் யாதுகொல் நிலையே!

5

10

தெளிவுரை : கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதைக் காற்றானது மகரந்தத்தைக் கிண்டும் கழிக்கரைச் சோலையும் அழகிழந்து போயிற்றே! மணல்மிகுந்த இப் பழையவூரின் அகன்ற நெடிய தெருவிலே, கூகைச் சேவலானது, அதன் பெட்டையோடும் கூடியதாகச் சென்று, மக்களியக்கம் அற்றுப் போயின்தான் பெரிய நாற்சந்தியிடத்தே, கேட்போர்க்கு அச்சம் வரும்படியாகக் குரலெடுத்துக் குழறி நிற்கும்! அணங்கு களும் வெளிப்பட்டவாய் எம்மருங்கும் உலவியபடியிருக்கும்! இருளும் ஒருவரையொருவர் அறிதற்கும் ஏலாத வகையில் மயக்கந்தரும் அடர்ந்த இருளாயிருக்கும். இத்தகைய இரவின் நடுயாமப் பொழுதிலே-

உடையவளான

கொல்லிப் பாவையைப் போன்ற பலராலும் ஆராயப் படும் அழகினையும், அகன்ற மென்மைவாய்ந்த பருத்த தோள் களையும், மிகுதியான மடப்பத்தையும் இள மடந்ததையினது, சுணங்குகளாலே அழகுபெற்ற வனப்பு வாய்ந்த கொங்கைகளைத் தழுவுதலை எண்ணியவனாக, மீன்களும் கண்ணுறங்கும் பொழுதிலும், யான் கண்துஞ்சா தேனாய் உள்ளேனே! என் நிலைதான் இனி யாதாகுமோ!

கருத்து: 'அவளை இனி முயன்று உடனே மணந்து கொள்வேன்' என்பதாம்.

< பரத்தை தோழி

நற்றிணை தெளிவுரைதலைவள்

கமலர்

249

சொற்பொருள்: ஓதம் - கடல்; ஓதத்தையுடையது ஓதம் ஆயிற்று. ஊதை - குளிர்ச்சியான வாடைக் காற்று.தாது- பூந்தாது. கிளர்தல் - கிளைத்தல். கானல் - கானற் சோலை. குரால் -கூகையின் பெட்டை. சதுக்கம் - நாற்சந்தி. கிளர்தல் - வெளிப்பட்டு உலவுதல். பாவை - கொல்லிப்பாவை. வனப்பு - அழகு.குறுமகள் - இளமகள். உள்ளி - நினைந்து.

கால்

விளக்கம்: இரவின் அமைதியும், அச்சந்தரும் கூகைக் குழறலும், அணங்குகளின் நடமாட்டமும், அவனுடைய உள்ளத் துயரத்தை மிகுதிப்படுத்துகின்றன. பொதுவாகத் தலைவியர் இரங்கும் நிலையே கூறப்படும். அஃதன்றி, இச்செய்யுள் தலைவனும் அவ்வாறு நினைந்து இரங்குதல் உளவாதலையும் உணர்த்தும் எனினும், அவன் ஆண்மகனாதலின், அடுத்து, அவளை வரைந்து சென்று மணந்து கொள்ளுதற்கான முயற்சி களிலேயே விரைந்து ஈடுபடுவான் என்று கொள்ளவேண்டும். மணல் மலி மூதூர்' என்றது மணலூர் எனக் கூறுவர் சிலர்.

பாடபேதம்: ஆசிரியர் பெயர் விளக்குடி சொகிரனார் எனவும் கூறப்படும். 'விளக்குடி' என்பது கலங்கரை விளக்கம் அமைந்துள்ள கடற்கரையூர் எனல் பொருந்தும்.

மேற்கோள்: பண்பிற் பெயர்ப்பினும் (தொல். பொரு. 103) என்னும் சூத்திர உரையுள் 'பரிவுற்று மெலியினும்' என்றதற்கு இப்பாட்டை எடுத்துக் காட்டி, இது, இரவுக்குறியில் பரிவுற்றது' என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பயன் : தலைவன், விரைவிலே மணவினைக்கு முயல்வதே செய்யத்தக்கதென்று துணிவான் என்பதாம்.

320. எதனைக் கருதினள் அவள்?

பாடியவர்: கபிலர். திணை : மருதம். துறை: பரத்தை தனக்குப் பாங்காயினாள் கேட்ப நெருங்கிச் சொல்லியது. சிறப்புற்றோர்: பாரி, ஓரி முதலியோர்.

.

[(து-வி.) தலைமகன் ஒருவன் பரத்தமை இயல்பினன். ஒருத்தியோடு உறவு கொண்டு, அவளைக் கைவிட்டு மற்றொருத்தி மையலில் சென்றனன். இதனால் முதற்பரத்தை சினங்கொண் டனள். ஒருசமயம் தலைவனை அவ்வழியே செல்லக் கண்டவள் தன் தோழியர்க்கு உரைப்பாள் போல, தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

ந.16 250

நற்றிணை தெளிவுரை

விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று எவன்குறித் தனள்கொல் என்றி யாயின் தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின் இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல் ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற் காரி புக்க நேரார் புலம்போல்

கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு காவல் செறிய மாட்டி ஆய்தொடி

எழில்மா மேனி மகளிர்

விழுமாந் தனர்தங் கொழுநரைக் காத்தே.

5

10

தெளிவுரை : தோழி! ஊரிடத்தே நிகழ்த்தப்பெறும் திருவிழாவும் நிகழ்ந்து முடிந்தது. விழாவின் பொருட்டாக முழங்கிய முழவுகளும் ஓய்ந்து கிடக்கின்றன. இக் காலத்தில், இவள்தான். யாதனைக் கருதினாளோ? என்று கேட்பாயானால், கூறுவேன் கேட்பாயாக:

ஒருநாள் உடுக்கும் தழையுடையை அணிந்தபடியே, அவ் வுடை அசைந்தாடும் அல்குலை உடையவளாக, இவ்விளையோள் தெருவிடத்தே நடந்து சென்றனள். அந்த ஒன்றினுக்கே-

பழமையாகிய வெற்றிச் சிறப்பையுடையவன் வல்வில் ஓரி என்பவன். அவனைக் கொன்றவன் திருமுடிக்காரி என்பவன். கொன்றபின், அவ் ஓரியது ஊரிடத்து ஒப்பற்ற பெருந்தெருவி னுள்ளே புகுந்தனன் காரி. அவன் புகுந்ததைக் கண்டதும், அவன் பகைவராகிய ஓரியைச் சார்ந்தோர் பலரும் ஒருசேரப் பேரிரைச்சல் இட்டனர். அவ்வொலிபோன்ற பெருநகைப்பின் ஒலியும் ஊரிடத்தே அப்போது உண்டாயிற்று.

அந் நகையொலியைக் கேட்டனர் ஆராய்ந்தணிந்த வளைகளை யுடையவரும், அழகிய மாந்தளிரின் வனப்பமைந்த மேனியை யுடையவருமான அவ்வூர் மாதர்கள், இவள் நம்முடைய கேள்வரையும் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்று எண்ணி அஞ்சினர். தம்தம் கொழுநரைக் காவலிட்டுச் செறிப்புச் செய்து பாதுகாத்துக்கொண்டு நன்மை அடைந் தனர். அங்ஙனம், அவரவர் தத்தம் கொழுநரைப் பாதுகாத்துக் கொண்டதனாலே, இவள் செயல் பயன்படாமற் போயினதனாற் போலும், இவனைக் கைப்பற்றிக்கொண்டு அகன்றனள். காண்

பாயாக! .

நேதப்பாகள்

நற்றிணை தெளிவுரை

கருத்து: 'இவன் ஒருவனே எளியனாவான்' என்று, அவனது நகையாடியதாம்.

9

துரை அவர்கர் ஞாழான் மகனார் மற்றனர்

251

அவளுக்குக் கைப்பற்றுதற்கு பரத்தமை குறித்து எள்ளி

சொற்பொருள்: விழவு - ஊர் விழவு. தழை - தழையுடை. அலமரல் - அசைதல். இளையோள் - இளையவளான பரத்தை; - அலமரும் அல்குல் இளையோள் என்றது அவள் அசைந்தசைந்து நடந்து சென்ற ஒயிலைக் கூறியது. பழவிறல் - பழமையான வெற்றிச் சிறப்பு. ஒரு பெருந் தெரு ஒப்பற்ற பெருந்தெரு; என்றது, அரசனின் கோயில் இருந்த அரச வீதியை. நேரார் - பகைவர். புலம் போல் - புலப்பம் போல். பேரிரைச்சல் போல். காரி புகுந்ததும் ஓரியின் கூட்டத்தார் நகையாடிப் பேரார வாரம் செய்தது, அவன் ஓரியை வஞ்சித்துக் கொன்றதன். மறமாண்பற்றதான செயலைக் கருதியாம். விழுமாந்தனர் சிறப்பு அடைந்தனர்; நன்மை அடைந்தனர்; அவளைக் கண்டு மயங்கிப் பின்போகாதபடி தம் கொழுநரைக் காத்துக்

கொண்டனர்.

-

விளக்கம்: காளிகோயில் விழாநாளில் இன்றும் வேப்பந் தழையாடை அணிந்தபடி மகளிர் வீதிவலம் வந்து பணிவது மரபு; இதே மரபு பண்டும் இருந்தது. ஆனால், அவள் விழா விழந்த நாளில் தழையுடை உடுத்துத் தெருவில் வந்தது ஆடவரை மயக்கித் தன் வலைப்படுத்துதற்கே என்பதாம். மாதர் பலரும் தத்தம் கொழுநரைக் காத்துக் கொண்டனர்; எவரானும் காத்தற்குரிய தகையற்ற இவன் அவள் வலைப்பட்டு அவள்பின் போயினன் என்றதாம். இதனால், அவளைப் பழித்த தோடு, தலைவனின் கட்டவிழ்ந்த பொறுப்பற்ற தன்மையையும் எள்ளி நகையாடினள் என்று கொள்ளுக. முழவும் தூங்கின்று என்றது விழாவில் முழங்கிய அதுவும், விழா முடியவும் செயலற்றுக் கிடந்தது என்பதாம். அதற்குரிய இடத்தில் தொங்கவிடப் பெற்றிருந்தது எனலும் ஆம்.

இதனால், பரத்தை தன் அயர்வு தீர்வாள் என்று கூறலாம். பயன் : அவள் மயக்கிலே மயங்கிக் கிடக்கும் தலைவன் மயக்கம் தீர்ந்ததும் அவள்பால் மீள்வான் என்பதாம்.

321. வறுமனை நோக்கி வருந்துவளோ!

பாடியவர் : மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். திணை: முல்லை. துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப் பாகற்குச் சொல்லியது. 252

நற்றிணை தெளிவுரை

((து-வி.) வினைவயிற் பிரிந்து சென்ற தலைவன், வினை முடிந்தபின், தன் வீடுநோக்கித் திரும்புகின்றான். அவன் நினைவு முற்றவும் அவன் மனைவியிடத்தேயே செல்லுகின்றது. அவன், தன் பாகனிடத்தே, தேரை விரைவாகச் செலுத்தும் படி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை

பாடின் தெண்மணித் தோடுதலைப் பெயரக் கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்பன மகளிர் சாரற்புறத் தணியக்

கல்சுடர் சேருங் கதிர்மாய் மாலைப்

புல்லென் வறுமனை நோக்கி மெல்ல

வருந்துங் கொல்லோ திருந்திழை அரிவை

வல்லைக் கடவுமதி தேரே சென்றிக

5

குருந்தவிழ் குறும்பொறை பயிற்றப்

பெருங்கலி மூதூர் மரந்தோன் றும்மே.

10

தெளிவுரை : செம்மண் நிலத்தையுடைய காட்டினிடத்தே. புல்லிய மயிரையுடைய யாடுகளின், தெளிந்த இனிய ஓசை யுடைய மணிகள் கழுத்திலே கட்டப்பெற்ற கூட்டம் எல்லாம், தாம் மேய்வதனை விட்டுத் தொழுவம் சென்று புகுமாறு ஊரைநோக்கிப் பெயரா நிற்கும். கானத்தின் கண்ணுள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரினைச், சாரலின் புறத்துள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடா நிற்பர். ஆதித்தன் அத்தமனக் குன்றினைச் சேருகின்றதான, கதிரவன் ஒளி மழுங்கிய அத்தகைய மாலைப் பொழுதிலே

திருத்தமாகச் செய்த கலனணிந்தவளான என் காதலி யானவள், யான் இல்லாமையாலே பொலி விழந்துபோன வறிய மாளிகையை நோக்கியவளாக, மெல்ல மெல்ல வருத்தங் கொண்டிருப்பாளோ?

பாகனே! குருந்த மரங்கள் மலர்கின்ற காட்டினிடத்தே நெருங்குதலும், பேரொலியுடைய நம் ஊரிடத்துள்ள மரங் கள் தோன்றாநிற்கும். நம் தேரையும் விரைவாகச் செலுத்திச் சென்றனையாய், அவ்விடத்தைச் சென்றடைவாயாக!

கருத்து: 'அவள்பால் விரையச் சென்றடைதலை நெஞ்சம் விரும்பிற்று' என்பதாம். நற்றிணை தெளிவுரை

253

சொற்பொருள்: செந்நிலப் புறவு- செம்மண் நிலங் கொண்ட காட்டுப் பகுதி. புன்மயிர் - குறுகலான மயிர். புருவை - யாடுகள். பாடின் தெண்மணி - தெளிவாக ஒலிக்கும் இன்னோசையுடைய மணி.தோடு தோடு- தொகுதி;

ஆட்டுக் கூட்டங்கள். தலைப்பெயர - வீடு நோக்கித் திரும்புதலை மேற்கொள்ள. கயவாய் அலரி - அகன்ற வாயையுடைய விரிந்த பூக்கள். சாரற்புறத்துப் பார்ப்பன மகளிர் - மலைச்சாரலின் புறத்தேயுள்ள பார்ப்பனச் சேரியிடத்து உள்ளவரான் பார்ப்பன மகளிர்; பார்ப்பனச் சேரி ஊரைச் சேராது தனித் தொதுங்கி இருந்ததாதலின் சாரற் புறத்து என்றனர். 'கல்' என்றது அத்தமன கிரியினை. கதிர்மாய் மாலை - கதிரவனின் கதிர்கள் ஒளிமங்கிவிடும் மாலைக் காலம். 'அரிவை' என்றது, தன்னுடைய மனைவியை. குருந்து - குருந்தமரம். பெருங்கலி மூதூர் - பெரிய ஆரவாரத்தையுடைய மூதூர். குறும் பொறை குறிய பொற்றைகளைக் கொண்டதான சாரற்பகுதி.

விளக்கம்: ஆடுகள் ஊர்நோக்கித் திரும்புதலும், பார்ப்பன மகளிர் பூச்சூடியிருத்தலும், அவன் வழியிடைக் கண்ட காட்சிகள். அவற்றைக் காண்பவன், தானும் விரைய வீடுசேர்வதையும், தன் மனைவியும் தான் சென்றடைந்த களிப்பினாலே மலர்சூடி மகிழ்தலையும் நினைக்கின்றான். 'மரந் தோன்றும்' என்றதனால், ஊர் அணிமையிலுள்ள தென்பதைக் குறிப்பிட்டுத் தேரை, விரைவாகச் செலுத்தும்படி கூறு கின்றனன்.

'முல்லைக் கயவாய் அலரி' என்றது. முல்லை இதழ்விரிந்து மலர்ந்துள்ளதனைக் கண்டு கூறியதாம்.

'பார்ப்பன மகளிர் கார்ப்புறத் தணிய என வருவன பார்ப்பாருட் சிலர், அந்நாளில் மருதத்தைவிட்டு முல்லை நிலப் பகுதிகளிலும் சென்று வாழ்ந்து வந்தனர் எனக் காட்டும். மாலை வேளையிலே பார்ப்பன மகளிர் முல்லைக் கயவாய் அலரியை விரும்பித் தம் கூந்தலிற் சூடினர் என்பது, அவர்தம் இன்பமயக் கத்தையும், புனைதல் விருப்பத்தையும் காட்டும். இன்றும் இவர் இவ்வாறு அணிவதனைக் காணலாம்.

பயன் : பாகன் தேரை விரையச் செலுத்தலாலே ஊரை அடைந்தவன், தன் தலைவியைத் தழுவி இன்புற்று மகிழ்வான் என்பதாம். தோழி

லைக்கு

254

வனும் 2

தலைமகள் ) மதுரைப்பாலாகிய சேந்தன் சகாள்திறன

uni 67

நற்றிணை தெளிவுரை

322. வயப்புலி ஒடுங்கும் நாடன்!

பாடியவர்: மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார். திணை : குறிஞ்சி. குறிஞ்சி. துறை: துறை : 1. தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; 2. தலைமகன் பாங்கிக்கு உரைத்ததூஉமாம்.

.

((து-வி.) 1. களவு ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தலைவனைத் தலைவியை மணந்து கொள்ளுமாறு விரைவுபடுத்த வேண்டும் என்று கருதுகின்றாள் தலைவியின் தோழி. அவன், ஒரு நாள் வந்து சிறைப்புறத்தானாகுதலை அறிபவள், அவன் கேட்டு உணருமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது; 2. தலைமகன், தலைமகளின் பாங்கிக்குத் தங்கள் உறவுக்கு உதவவிரும்பிக் கூறியதும் ஆம்.)

ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் இதனிற் கொடியது பிறிதொன் றில்லை வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை

ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர்

ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக்

கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன்

தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது

நன்னுதற் பசந்த படர்மலி அருநோய்

அணங்கென உணரக் கூறி வேலன்

இன்னியங் கறங்கப் பாடிப்

5

10

பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே.

தெளிவுரை: தோழீ, வாழ்வாயாக! மூங்கில்கள் உயரமாக வளர்ந்துள்ளன. வெட்டிச் செறித்து வைத்தாற்போலப் புதர்கள் பின்னிக் கிடக்கின்றன. அத்தகைய மலைப்பிளப்பை அடுத்துள்ள துறுகல்லிடத்தே, ஊனைத் தின்னுகின்ற பெண்புலி யானது மிகுந்த பசியால் துடித்தபடி இருந்தது. அதன் பசியைப் போக்குதற்கு விரும்பியது அதன் ஆண்புலி. மக்கள் சென்று வருதலையுடைய நுழைவதற்கு அரிதான சிறு வழியை அடுத்துச் சென்று, வாள்போன்ற கோடுகளையும் கொடிய கண்களையுமுடைய வலிமையான அப் புலியானது. பதுங்கியிருக்கும். அத்தகைய நாட்டிற்குரியவன் தலைவன். அவனுடைய தண்மை கமழுகின்ற பரந்த மார்பினைத் தனக்கே J

நற்றிணை தெளிவுரை

255

உரிமையுடையதாக நீயும் பெற்றாயல்லை. அதனால், நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறரால் தீர்த்தற்கு அருமையுடைய நின் காமநோயை, 'அணங்குத் தாக்கு இது'

என்று

அன்னை அறியும்படி வேலனும் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே பலவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ் யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின்னோயும் தணிவதா யினால், எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்று இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ?

கருத்து: 'முருகைப் பரவுதலாலே இந்நோய் தீராது, என்பதாம்.

.

என்றது,

சொற்பொருள்: 'இதனில்' முருகைப் பரவி வழிபட்டு, அதனால் தலைவியின் நோய் தணியும் என்று கொண்ட முடிபினை. பிணங்கர்-புதர். வேய் - மூங்கில். விடர்முகை - மலைப்பிளப்பு. பிணவு - பெண்புலி. வாள் வரி-வாள்போன்ற வளைவான கோடுகள்: ஒளியுடைய கோடுகளும் ஆம். உட்கு பசி - அஞ்சத்தக்க பெரும்பசி ; அச்சம் - உயிர் போகுமோ என்பதனால்; இதனால் பெண்புலி ஈன்றதன் அணிமையதா தலினால் தானே வேட்டைமேற் செல்லற்கு இயலாதது என்பது மாம். தண் கமழ் - தண்மை கமழ்தல். இன்னியம் - துடி, பறை முதலிய வாச்சியங்கள்.

உள்ளுறை : பெண்புலியின் பசியை உணர்ந்து, அதைப் போக்கக் கருத்தும் ஆண்புலி சிறுவழியிடைப் பதுங்கியிருக்கும். கொடிய குணமுடைய அதுவே, அதன் பிணவின் துயர்போக்கக் கருதிச் செயற்படுகின்றது. அவ்வாறே, தலைவன். விரைவிலே வரைபொருளோடு வந்து, தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதல் வேண்டும் என்பதாம்.

.

விளக்கம்: 'வேய் உயர்ந்து எறிந்து செறித்தன்ன பிணங் கரில் விடர். முகை' என்றது. புலி தங்கியிருக்கும் இடத்தின் கொடுமையைக் குறித்தது. உட்குபசி என்றது அளவுகடந்த பசியை. தண்கமழ் வியன்மார்பு', என்றது, அவன் மலர்மாலை சூடியவனாக வருதலைக் கருதிக்கூறியதாகும். 'பரவுறுபலி' பரவிச் செலுத்தும் பலி; பலி என்றது ஆடறுத்துத் தரும் குருதிப் பலியினை. வேலன் இன்னியம் கறங்கப்பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறு பலி' என்பது இன்றும் உண்மையாதலை, தென்தமிழ் நாட்டுப் பகுதிகளிலுள்ள முருகன் ஆவேசித்துக் குறி சொல் 256

தோழி த லைவனுக்கு

வடமுண்ணக்கன பேர் சாதத்ன

நற்றிணை தெளிவுரை

வார் செய்து வரும் பலியிடு முறையாற் காணலாம். வேலன்- பூசாரி வேலை நட்டு வழிபாடாற்றுவோன் வேலன் எனப் பட்டனன்.

பயன் : வேலன் வெறியாடி உண்மை கூறின், களவுறவு வெளிப்பட, இற்செறிப்புக் கடுமையாகும்; ஆகவே விரைவில் மணவினை முடித்தலே தக்கதெனத் தலைவன் துணிவான் என்பதாம்.

323. புலிவரி எக்கர்ப் புன்னை!

பாடியவர் : வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். திணை : நெய்தல். துறை : தோழி இரவுக்குறி நேர்ந்தது.

((து-வி.) தலைவனும் தலைவியும் பகற்போதில் சந்தித்து மகிழ்தற்கு இயலவில்லை. தலைவன் இரவுக்குறியை விரும்பு கின்றான். அதற்கு உடன்பட்ட தோழி, அவர்கள் சந்திப் பதற்கு ஏற்றதான இடத்தைக் குறிப்பிட்டுக் கூறுகின்றாள்.)

ஓங்கித் தோன்றும் தீங்கள் பெண்ணை நடுவண் அதுவே தெய்வ மடவரல் ஆயமும் யானும் அறியாது அவணம் ஆய நட்பின் மாணலம் ஒழிந்துநின் கிளைமை கொண்ட வளையார் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் புலிவரி எக்கர்ப் புன்னை உதிர்த்த மலிதாது ஊதும் தேனோடு ஒன்றி

வண்டின் இன்னிசை கறங்கத் திண்தேர்த்

தெரிமணி கேட்டலும் அரிதே

வருமாறு ஈதவண் மறவா தீமே.

5

10

தெளிவுரை : எம்மைப் போலும் மடப்பம் வருதலையுடைய ஆயமகளிரோடும் கொண்ட நட்பாகிய மாட்சிமையுடைய நன்மையினையும் ஒழிந்துபோகக் கைவிட்டாள் அவள். நின் உறவையே பெரிதானதாகப் போற்றிக் கொண்டாள்.வளைகள் ஒலி முழங்கும் முன்னங்கையினளான நல்லோளாகிய நின் காதலியின் நிலைமை இது. அவள் தந்தையது சிறுகுடியை யுடைய பாக்கமானது, இனிய கள் வடிதலையுடைய அதோ உயர்ந்து தோன்றுகின்ற பனைமரங்களின் நடுவே உளதா

· நற்றிணை தெளிவுரை

257

யிருப்பது கண்டாய். அவ்விடத்தே, புலியின் மேலுள்ள வரிகளைப் போல வரிகளைக் கொண்ட மணல்மேடு உள்ளது. அம் மணல் மேட்டில் புன்னையினின்றும் உதிர்ந்த தேன் நிரம்பிய பூந்தாதினை ஊதி உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே ஆண்வண்டுகளும் சேர்ந்து இன்னிசைபோல ஒலித்தபடியிருக்கும். அவ்விடத்திற்கு வருவாயானால், நின் திண்ணிய தேரிலுள்ள விளங்கிய மணி களின் ஒலியைப் பிறர் கேட்டலும் அரிதாகும்; அங்கு நீதான் வருவதற்குரிய வழியும் இதுவாகும். ஆகவே மறவாது வந்து அவட்கு அருள்வாயாக.

கருத்து: "யான் குறித்த இடத்திற்கு வருவாயானால், யாமும் அங்கு வந்து காத்திருப்போம்" என்பதாம்.

சொற்பொருள்: ஓங்கித் தோன்றும் - உயரமாக வளர்ந்து காணப்படும். தீங்கள் பெண்ணை - இனிய கள்ளையுடைய பெண்ணை; நீயும் இனிதாக அருந்திச் செல்லலாம் என்பது குறிப்பு. மடவரல் - மடப்பம் வருதலை உடைய. அவணம் அவ்விடம்; தாம் முன்பே போந்து காத்திருப்போம் என்பவள் இவ்வாறு சுட்டுகின்றாள். மாண் - சிறந்த. கிளைமை -உறவாம் தன்மை. 'நல்லோள்' என்றது தலைவியை. புலிவரி எக்கர் புலிக் கோடுபோல வரிகள்பட்டுத் தோன்றுகின்ற மணல் மேடு. தேன்- வண்டு. கறங்க-ஒலிக்க. தெரி மணி - விளங்கும் மணி.

இறைச்சிப் பொருள் : புன்னை உதிர்த்த தாதினை வண்டு கள் ஆரவாரித்தபடி உண்ணும் என்றனள். இது அவ்வாறே நீயும் தலைவியின் நலத்தை அஞ்சாது வெளிப்படையாக உண்டு மகிழலாம் என்றனள் என்பதாம்.

-

விளக்கம்: பனைமரங்கள் நிறைந்த மணல் மேடாதலால், பிறர் அறியாத வகையிற் கூடி மகிழ்வதற்கு ஏற்ற இடம் என்பதாம். அஞ்சாமல் வரலாம் என்பாள், பிறர் நின் தேரின் மணியோசையைக் கேட்பது அரிதாகும்' என்றனள். கள் வடி தலையுடைய பனை என்றது, நெய்தல் வளத்தினைக் காட்டுவ தாகும்.

புலிவரி எக்கர்ப் புன்னை' என்றது கூடுதற்கான இரவுக் குறியிடம் சுட்டியதாகும்.

புன்னை உதிர்த்த பூந்தாதினைத் தேனோடு வண்டினம் கூடியுண்ணும் என்றது, அவ்வாறே தந்தை தேடிக்குவித்த செல்வவளத்தை உறவும் சுற்றமும் விருந்தும் கூடியுண்டு 258

லைம்

மகன் பாங்கணுக்கு

கயமனார்

(கண்டோர் பூ நற்றிணை தெளிவுரை

களிக்கும் என்றதாம். இது தந்தை வீட்டு வளநிலை சுட்டிக் கூறியதாகும்.

பயன் : ஊர் அலர் பெரிதாயினதால் அவனுடன் மகிழ் தலை இழந்தேம் என்று குறிப்பாகக் கூறி, அவன் உள்ளத்தை மணவினையிற் செலுத்தி விடுகின்றாள் தோழி என்பதாம்.

324. நொந்து அழி அவலம்!

பாடியவர்: கயமனார். திணை: குறிஞ்சி. துறை : 1. தலை மகன் பாங்கற்குச் சொல்லியது. 2. இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதுமாகும்.

[(து-வி.) 1. தலைமகன், தன் பாங்கனுக்குத் தன் தலைவி யைப் பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது; 2. இடைச் சுரத்தே உடன்போக்கிற் சென்றாளைக் கண்டோர் சொல்லியதும் ஆம்.)

அந்தோ தானே அளியள் தாயே

நொந்தழி அவலமொடு என்ஆ குவள்கொல் பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் கோடுமுற்று யானை காடுடன் நிறைதர செய்பட் டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி அஞ்சில் ஓதி இவளுறும்

பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே.

5

தெளிவுரை : பொன்னைப் போல ஒளிறும் மேனியை உடையவளான தன் மகளாகிய இவளை, இவள் தாய் மிகவும் விரும்பிப் போற்றுபவள். அதனால், அவள்தான், அந்தோ, தானே மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள். அவள்தான் நொந்து அழிகின்ற துயரத்துடனே இனி எவ்வண்ணமாக ஆகுவாளோ? தந்தங்கள் முற்றிய யானைகள் தனது காட்டி னிடத்தே நிறையாக வந்து சேர்ந்தன. அதனாலே நெய்யைப் பூசினாற்போல விளங்கும் வலிய காம்பையுடைய வேற்படை யினையுடைய செல்வனாகிய தந்தையது, அகற்சியையுடைய மலைப்பகுதியிலே, தான் ஆடுகின்ற பந்தினை உருட்டுபவளைப் போல ஓடியோடி, அழகிய சிலவாகிய கூந்தலையுடையவளான

நற்றிணை தெளிவுரை

259

இவள் மிக்க பஞ்சுபோன்ற மெல்லடிகள், நடை பயிற்றா நிற்குமே!

கருத்து: "இத்தகு இளமையோள் எவ்வாறு என்னை விரும்பி உடன் வந்தனளோ அதுதான் ஊழ் கூட்டியது" என்பதாம்.

சொற்பொருள் : அளியள் - அளிக்கத் தகுந்தவள்; இரக்கத் திற்கு உரியவள். நொந்து அழி அவலம் - மனம் நொந்து நொந்து அதனால் உடல் நலமும் அழிபாட்டை உறுகின்றதான மனத்துயரம். பொன்போல் மேனி - பொன்னிறம் பெற்ற மேனி; இது மேனியின் வனப்பை உரைத்தது. நெய்பட்டன்ன நெய் பூசினாற் போலத் தோன்றும்; சாணையின் மெருகால் அவ்வாறு ஒளியைச் செய்யும். நோன்மை - வலிமை. செல்வத் தந்தை - செல்வனாகிய தந்தை; இது அவள் வளர்ந்த செல்வச் செழுமை கருதியது ஆம். வரைப்பின் - வரைப் பக்கத்தில். பஞ்சி - பஞ்சு. நடைபயிற்றல் - சென்றும் மீளத் திரும்பியுமாக நடந்துகொண்டிருத்தல்.

விளக்கம்: என் காதலியது தன்மை இத்தகையது ஆதலின், அவளை யான் விரும்பியது என் தகுதிக்கு ஏற்புடை யதே என்று கூறுகின்றான். தலைவன். காட்டினிடத்தே யானை நிறை புகுந்ததாதலின் அப்பகுதியில் விளையாடும் இவள் அவற் றால் துன்புறுவளோ என்று அஞ்சியதாம். அதற்கு அஞ்சாது பந்தாடலிலேயே கவனமாகவிருக்கும் விளையாட்டுப் பருவத் தாள் அவள் என்பதுமாம். இரண்டாம் துறைக்குப் “பொன் போன்ற மேனி வருந்துமே என்று அன்னை வருந்துவள் ஆதலின் என்னாகுவளோ!" என்று உரைக்கவும். செல்வத் தந்தையின் புதல்வியாவாள், இவ்வாறு ஏதுமற்றாள் போல ஓடுவதேனோ என்று இரங்கி,அந்தோ என்று கண்டார் உரைத்தனர் என்று கொள்ளுக. காட்டு வழியிற் பரற்கற்களில் இவள் எவ்வாறு நடந்து செல்வாளோவென்று இரங்குவார், பஞ்சின் மெல்லடி என்று கூறி வருந்தினர் என்க.

உடன்போக்கிற் செல்லும் தலைவி. நடை மெலிதல் வருத்தம் ஏதுமின்றிச் சென்ற செவ்வியை, 'ஓடுபந்து உருட்டு நள்போல ஓடி, அஞ்சில் ஓதி இவளும், பஞ்சி மெல்லடி நடை பயிற்றும்மே' என வியந்து கூறினர் என்றும் கொள்க.

அவள் தந்தை வீரமறக் குடியினன் என்பதனை 'நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை' என்பது தோழி 260 சூலைவளக்கு

மதுரை காருலவியங் கூத்த்தை

நற்றிணை தெளிவுரை

விளக்கும். ஆகவே, அவன் காவலையும் கடந்து அவள் சென் றனள் என்பது, அவளது கட்டுக் கடந்த பெருங்காதலை உணர்த் தும் என்பதாம்.

பயன் : தலைவன் தலைவியோடு தன்னூர் சென்று மணந்து வாழ்வான் என்பதாம்.

325. தகுமோ பெரும!

பாடியவர் : மதுரைக் காருலவியங் கூத்தனார். திணை : பாலை. துறை: தோழி செலவு அழுங்குவித்தது.

[(து-வி.) பொருளீட்டி வருதலை நினைத்துத் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகின்றான் தலைவன். அவனை நெருங்கி, அவன் பிரிவைத் தலைவி பொறுத்து உயிர் வாழாள் எனக்கூறி, அவன் போவதைத் தடுத்து நிறுத்தத் தலைவியின் தோழி முயல் கின்றாள். அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கவிதலை எண்கின் பரூமயிர் ஏற்றை இரைதேர் வேட்கையின் இரவிற் போகி நீடுசெயற் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் ஊக்கரும் கவலை நீந்தி மற்றிவள் பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய வீங்குநீர் வாரக் கண்டும்

தகுமோ பெரும தவிர்கநும் செலவே!

5

தெளிவுரை : பெருமானே! இவளுடைய குவளை மலர் போலும் மையுண்ட கண்களின் புதுமையான அழகு சிதைந்து போகுமாறு. மிகுதியான நீர் வடிதலைக் கண்டும், நீர் பிரிதல் என்பது தான் தகுதியுடையதாகுமோ? நும் செலவினைத் தவிர் வீராக! கவிந்த தலையையுடைய கரடியினது, பருத்த மயிரைக் கொண்ட ஆணானது, இரையைத் தேடிவரும் ஆசையாலே இரவு நேரத்தில் காட்டுட் செல்லும். நீடிய செயற்பாட்டையுடைய கரையான் கூட்டம் செய்து உயர்த்தியிருக்கும், பாம்புகள் வாழ்கின்ற புற்றிடத்தேயுள்ள அச் சிதலைகள் ஒழியுமாறு விரைவாக, ஒடிந்த முகப்பையுடைய பெரிய நகங்களாலே பறித்து, உள்ளிருக்கும் புற்றாஞ்சோறு முதலாயவற்றை தோழி நற்றிணை தெளிவுரை

சாறுக்கு

மதுரை படுத்க் கிளநாகனங்

261

உறிஞ்சி இழுக்கும். உள்ளத்தைச் செலுத்துதற்கும் அரிதான கவர்த்த அத்தகைய அறநெறியினைக் கடந்து செல்ல நினைப் பதை நீர் தவிர்வீராக!

கருத்து: 'நீர் பிரியின் இவள் அழிவாள்' என்பதாம்.

சொற்பொருள் : கவி தலை - கவிந்துள்ள தலை. எண்கு கரடி. ஏற்றை - ஆண்கரடி. வேட்கை- ஆர்வம். சிதலை கரையான். தோடு - கரையான் கூட்டம். புனைந்து-செய லாற்றி. எடுத்த -உயர்த்த. அர - அரா; பாம்பு. முர வாய் முறிந்த வாய்; வாய் - முன் பகுதி. கவலை - கவர்த்த வழி. பூ - கருங் குவளைப் பூ.

இறைச்சி : இரை தேடியுண்ணும் ஆர்வத்தாலே, கரடி புற்றைப் பெயர்த்து இரவில் உண்ணும் காடு என்றனள். இவளது காமவேட்கை நின்னை நாடிச் சேரும் ஆர்வத்தாலே இவள் அரிய உயிரையே உண்டு ஒழித்துவிடும் என்பதாம்.

விளக்கம் : கரடியின் பசிவேட்கை, கரையான் கூட்டம் நெடிது முயன்று உயர்த்திய புற்றுக்கும், அவற்றின் முட்டைக் கும், அவற்றுக்கும் அழிவை உண்டாக்குவதுபோல, நின்னது பொருள் வேட்கை, நெடிது முயன்று அமைத்த நின் இல்லற வாழ்வுக்கும், அதனை அமைத்த நின் துணைவியான இவளுக்கும் அழிவைத் தரும் என்பதாம். அரவாழ் புற்றம்' என்றது, கரையானின் புற்றில் ஒடுங்கியிருந்த அரவும் ஒழியுமாறுபோல, தலைவியின் அழிவால் அவளது தோழியராகிய யாமும் வருந்தி நலிவோம் என்பதாம். இதனைக் கேட்டல் உறுபவன், தன் செலவை நிறுத்தி வைப்பான் என்பதாம்.

உகுநீர் புதுநலம் சிதைய வாரக் கண்டும் தகுமோ பெரும! தவிர்க நும் செலவே' என்பது, தலைவியின் கவலை மிகுதியைப் புலப்படுத்திச் செலவைக் கைவிடுமாறு கேட்பதாகும்.

பயன் : தலைவன், தன் பிரிவைச் சிறிது நாள் தள்ளிப் போடுதலும் நேரலாம் என்பதாம்.

326. தும்மும் மந்தி!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை : குறிஞ்சி. துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது.

((து-வி.) களவு வாழ்வே இனிதென மயங்கி, வரைந்து மணங் கொள்ள நினையாதானாய் வந்து ஒழுகும் தலைமகனின் 262

நற்றிணை தெளிவுரை

போக்கைக் கண்டு, தோழிக்கு வருத்தம் உண்டாகின்றது. அவன் உள்ளத்தை வரைவிலே செலுத்தக் கருதிய அவள், அவன் பிரிவால் தலைவிக்கு நேரும் துயரமிகுதியைக் கூறுவது போல, இவ்வாறு கூறி அவனை உணர வைக்கின்றாள்.]

கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன், செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கினம் மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும் நாட!

நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழ்உறு பூஎனப். பசலை ஊரும் அன்னோ; பல்நாள் அரியமர் வனப்பின்எம் கானம் நண்ண வண்டெனும் உணரா வாகி,

மலரென மரீஇ வரூஉம், இவள் கண்ணே.

.

5

10

தெளிவுரை: கொழுமையான சுளைகளைக்கொண்ட பலாப்பழங்கள் நிறைந்திருக்கின்ற பலாமரங்களையுடைய மலைச் சாரலிலே, செழுமையாகக் காய்த்துப், பாரம் தாங்காமல் வளைந்து கிடக்கும் கரியதொரு பலா மரக்கிளையிலே, கொக் கானது மீனைக் கொணர்ந்து குத்திக் குடைந்து தின்றிருப்ப தனாலே உண்டான நாற்றத்தைப் பொறுக்கமாட்டாதாய், பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையினைக் கொண்ட மந்தி யானது, தும்மியபடியே இருக்கும் மலை நாட்டோனே!

பல நாளும் நீதான் எம்முடைய புனத்தயலே வருதல் உண்டாயினும், வரிகள் பொருந்திய வனப்பினையுடைய கரு வண்டு என்னும் உணர்விழந்தவாய், தம் அழகிழந்து, பழம் பூக்கள் போலக் கலங்கி அழகழிந்துபோகும் இவள் கண்களும், நுண்ணிய கொடியையுடைய பீர்க்கினது உதிர்தல் பொருந்திய பழம் பூவோ என்னும்படியாகப் பசலையும் படரா நிற்குமே! ஐயோ! அதனை நினக்குச் சொல்லவும் நாணுவனே யான்! இனி யேனும் இந்த நிலை வாராதே காப்பாயாக என்பதாம்.

கருத்து: இடையீடுபடும் சிறுபிரிவையும் இவள் தாங் காதவள் என்று உணர்ந்து, விரைவில் மணந்து கொள்வாயாக என்பதாம்.

சொற்பொருள்: கொழுஞ் சுளை-கொழுமையான சுளை. கொழுஞ் சுளைப் பலா என்பது, பலாவின் பல வகையுள்ளும்

தோழிக்கு

நற்றிணை தெளிவுரை

அம்முவனார்

263

சிறந்ததான ஒன்று; இதனைச் செம்பலா என்று போற்றுவர். கவான் -மலைச் சாரல். செழுங்கோள் - செழுமையான காய்கள் கொண்ட நிலை. மாச்சினை - கரிய கிளை: பெரிய கிளையும் ஆம். குடைநாற்றம் - குடைந்து உண்டதாலே, அவ்விடத்திருந்து எழும் புலால் நாற்றம். துய் - பஞ்சுபோன்ற மயிர். ஊழ் உறுபூ - உதிர்தலைப் பெறுகின்ற பழம்பூ. அரி- செவ்வரி. 'அறியமர். வனப்பின் கானம்' என்று பாடம் கொண்டு, அறிதலைப் பொருந்திய அமர்ந்த அழகினைக்கொண்ட கானம்' எனவும் கொள்வர். 'வண்டு'- கருவண்டு; 'உண்டு' என்றும் பாடம் கொள்வர்; அப்போது, நீதான் கானம் சேர்ந்து அருகிலே உளதானபோதும், அவ்வுணர்வை இழந்து, அடுத்து நீ பிரிவதைப் பற்றியே நினைந்து கண்கள் கலங்கும் என்று உரை கொள்க.

4

உள்ளுறை : பலாமரம் தினைப்புனமாகவும், கொக்கு தலைவனாகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்ப நுகர்ச்சி யாகவும், நாற்றம் ஊரலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு உவமையைப் பொருத்தி பொருத்தி உள்ளுறை பொருள் காண்க. தினைப்புனத்து வந்து இவளைக் கலந்து போவதாலாகிய நின் செயலை அலரால் அறிந்து அன்னையும் சினத்தோடு பார்ப் பாளாயினள் என்பதாம்.

விளக்கம் : கொழுஞ்சுளைப் பலாவினை உண்டு களிக்கக் கிளைமீது வந்த மந்தியானது, புலால் நாற்றத்தால் தும்மிக் கொண்டே அகலும் என்பதுபோல, தலைவியை தலைவியை அடைய விரும்பிவரும் தலைவனும், அலருரை ஆரவாரத்தால் அவளை அடையாதே வறிது மீளவும் நேரும் என்றும் சொல்லலாம்.

பயன் : தலைவன் விரைவிலேயே வரைந்துவந்து தலைவியை மணந்து கொள்வான் என்பதாம்.

327. சாகலும் இனிதே தோழி!

பாடியவர்: அம்மூவனார். திணை : நெய்தல். துறை: வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.

[ (து-வி.) தலைவன் நெடுங்காலம் களவுறவையே நாடி வருதலன்றி, மணவினையிற் கொள்ளக் கருதாத காரணத்தால் தலைவி வருந்துகின்றாள். அவளைப் பொறுத்திருக்குமாறு கூறும் 264

நற்றிணை தெளிவுரை

தோழிக்கு, அவள், தன் நிலைமையைச் சொல்லுவதாக அமைந்தது இந்தச் செய்யுள்.]

நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின்

பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்

சாதலும் இனிதே-காதலம் தோழி!

அந்நிலை அல்ல ஆயினும், 'சான்றோர்

கடன்நிலை குன்றலும் இலர்' என்று, உடனமர்ந்து

உலகம் கூறுவ துண்டென, நிலைஇய

தாயம் ஆகலும் உரித்தே—போதவிழ்

5

புன்னை ஓங்கிய கானல்

தண்ணம் துறைவன் சாயல் மார்பே.

தெளிவுரை: தோழீ! என்பால் அன்பு கொண்டவளே! நம்முடைய உறவினை விரும்பியவராக வந்து, அன்போடு ஒழுகு கின்ற சான்றோரான நம் தலைவரை நம்பி வாழுதல் பழியைத் தருவது என்றால், தூங்காதனவாய் அழுதபடியே துன்புறும் கண்ணினோடு, நாளுக்குநாள் உடல் இளைப்புற்றுச் சாவினைப் பெறுதலும் நமக்கு இனி இனிதேயாகும்! அவ்வாறு இறந்து போவதுதான் இயல்புடையதன்று என்றாலும், சால்பினை உடையவர் தாம் செய்யும் கடமையிலே எப்போதும் குறைவு படவே மாட்டார்' என்று, சேரப்பொருந்தி உலகம் உரைப்ப தான சொல்லும் உளதாகும் எனக் கொண்டோமாகிய எமக்கு, அரும்புகள் மலர்கின்ற புன்னைமரங்கள் உயரமாக வளர்ந்துள்ள கடற்கானற் சோலையினையுடைய அழகான துறைவனது மெத்தென்ற மார்பானது, உரிமைப் தண்ணிய பொருள் ஆகுதலும் முடிவில் உரியதேயாகும். இரண்டினுள் ஒன்று வாய்ப்பது தவறாது என்பதாம்.

கருத்து: இதனைக் கேட்பவன் பின்னும் காலம் தாழ்க் காதே அவளை வரைந்து மணப்பதற்கு முனைவான் என்பதாம். சொற்பொருள்: நாடல் - விரும்புதல். பழி -பழியுடைய தொரு செயல். பாடுஇல-படுதல் இழந்த; உறக்கமிழந்த. சாஅய் - தளர்ந்து சோர்ந்து இளைத்து. கடன்நிலை -கடமை யின் தன்மை. உடனமர்ந்து - ஒன்று சேர்ந்து.தாயம்- உரிமையாக வந்து வாய்க்கும் பொருள். போது - அரும்பு. துறைவன் - கடற்றுறை நாடன். சாயல் - மெத்தென்னும் தன்மை.

-

தோபூ

தலைவிக்கு

நற்றணை தெளிவுரை

தொல்கமலர்

265

இறைச்சிப் பொருள்: தன்னை அடைந்தாரைக் கைவிட்டு மனங்கலங்கி இளைத்துப் போகச் செய்த கொடுமையாளனை யுடைய சோலையாக இருந்தும், புன்னைதான்,தான் அரும்பு மலர்ந்து மணம் நிறைக்கா நிற்பதும் எதனாலோ என்று வியந்த தாம்.

விளக்கம்: புன்னை போதரும்பி மணம் பரப்பும் காலம் நெய்தல் நிலத்தவர் மணம் வேட்கும் காலமாதலால், அந்தச் செவ்வியைக் கண்டும் தன் கடமை மறந்தானே தலைவன் என்று வெதும்புகின்றனள். தானே உணராதானுக்கு அவை உணர்த்திக் காட்டியும் தெளிவு ஏற்படவில்லையே என்று நினைந்து நொந்ததும் ஆம்.

.

உலகத்தின் உரையானது உரையானது பொய்க்காது என ன உறுதி கொள்ளும் நிலையல்லாமல், அவனுடைய போக்கிலே அதற்கான எந்தவொரு குறிப்பும் காணாத அவள், முதலில், சாதலும் இனிதே' என்று கூறினள்; அதனால் எய்துவது யாதும் இல்லாத தால், பின்னர் உலக மொழிப்படி ஒருக்கால் அவனை அடை தலும் வாய்க்கும் என்று நினைந்து ஆறுதல் காண்கின்றனள்.

'தாயம்' என்பது உரிமைக்கான அடிப்படை; இது தாய் வயிற்றிலிருந்து பிறப்பதனால் வருதலின் 'தாயம்' என்றனர். 'தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி' என்பர் முடத்தாமக் கண்ணியார் (பொருநர் 132).

பயன் : தன் வருத்தம் புலப்படப் பிறருக்கு உணர்த்திய தால் சிறிது ஆறுதல் பிறக்கும் என்பதாம்.

328. எண் பிழி நெய்!

பாடியவர் : தொல் கபிலர். திணை: குறிஞ்சி. வரை விடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.

துறை :

[ (து-வி. : ) தலைமகளை வரைந்து வந்து மணந்து கொள்வ தாக உறுதிகூறியவனாகத் தலைவன் வரைபொருள் தேடிக் கொணரும் பொருட்டாகப் பிரிந்து போயினான். அவன் வருவ தாகக் குறித்த காலமானது வந்து நாட்களும் கழிந்துபோகத் தொடங்கவே, அவன் குறித்த காலம்வரை ஆற்றியிருந்த தலைவிக்கு மனவேதனை மிகுதியாகி நலிவிக்கின்றது. அதனால், நாளுக்கு நாள் சோர்ந்து தளர்ந்து மெலிகின்றாள். அவள்

ந. 17 34

4

266

நற்றிணை தெளிவுரை

துயர்கண்டு பொறுக்க மாட்டாதாளான தோழி, அவளுக்கு, அவன் தவறாமல் சொற்படியே வந்து சேர்வான் என்று கூறித் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கிச் சிற்சில வித்தப் பற்பல விளைந்து தினைகிளி கடியும் பெருங்கல் நாடன்

பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம்: அதனால் அதுஇனி வாழி, தோழி ! - ஒருநாள்

சிறுபல் கருவித் தாகி வலனேர்பு

பெரும்பெயல் தலைக, புனனே!- இனியே,

எண்பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது சார்ந்து தலைக்கொண்ட ஓங்குபெருஞ் சாரல், விலங்குமலை அடுக்கத் தானும்

கலம்பெறு விறலி ஆடும்இவ் ஊரே.

5

10'

10

தெளிவுரை : தோழியே! கிழங்குகள் வேர்வீழ்த்துக் கீழே இறங்கின. தேன் அடைகள் மரக்கிளைகளின் மேலாகத் தொங்க லாயின. சிற் சிலவான விதைகளை விதைத்த தினைப்பயிரும் பலப்பலவாகக் கிளைத்து, கதிர்கள் விளைந்து முற்றி விட்டன. அதைக் கவர்தற்கு வரும் கிளிகளைக் கடியும் குரலும் எழுந்தது. இத்தகைய பெரிய மலைநாட்டிற்கு உரியவன நம் தலைவனின் குடிப்பிறப்பானது, நமக்கு ஒப்பாகாத தன்மையினையும் இப் போது நாம் அறிந்து விட்டோம். அதனால், அவனது அந்த உயர்வு தானும் இனி என்றும் வாழ்வதாக!

இனிமேல், எள்ளைப் பிழிந்து பெறுகின்ற நெய்யோடு, வெண்மையான பொற்கிழியையும் பெற விரும்பாது போதலைக் கொண்டு, சந்தன மரங்களை உச்சியிலே மிகுதியாகக் கொண்டு, உயர்ந்த இடத்தைக் கொண்டதாக விளங்கும் மலைச்சாரலி னிடத்தே, குறுக்கிட்டுக் கிடக்கும் மலையடுக்குகள் விளங்கும் இடங்களிலே, நன்கலங்களைப் பரிசிலாகப் பெறுதலை விரும்பு கிறவரான விறலியர்கள் கூத்தாட்டு அயர்ந்தபடியே இருப்பர். அத்தகைய களிப்பையுடைய நம் ஊரிடத்தே, ஒரு நாளில் மேகங்கள் சிறிய பலவான மின்னல்களின் தொகுதிகளைக் கொண்டனவாக வலங்கொண்டு எழுந்து, நம் தினைப்புனங் களு விடத்தே, பெரிதான பெயலையும் பொழிவதாக. தோழி சூ

லவிக்கு

நற்றிணை தெளிவுரை

மதுரை மருதங்கிழார் மகளார் சொக்குத்தனார்.

207

கருத்து:- அவன் குறித்த கார்காலம் இன்னும் தொடங்க வில்லை; அவன் உயர்குடியினன் ஆதலின் சொற்பிழையானாய் மீள்வன்; நீதான் நின் துயரத்தைக் கைவிடுக என்பதாம்.

.

சொற்பொருள்: வீழ்ந்து - வேர்விட்டு நிலத்தினுள் இறங்கி. வள்ளி கீழ் வீழா' என்று கலியுள்ளும் வரும் (கலி.39): ஆகவே, இதனையும் குறிஞ்சிக்கு உரிய வள்ளிக்கிழங்காகவே கொள்க.தூங்கி - தொங்கி. பெருங்கல் நாடன் - பெரிய மலை நாட்டுத் தலைவன். ஓர் அன்மை - ஒரு தன்மை அல்லாமை, கருவி - தொகுதி. வலன்ஏர்பு - சூல்கொண்டு கறுத்து வானில் மேலெழுந்து. தலைக - தலைப்படுக; பெய்க.எண் - எள்; எண் பிழிநெய் - எண்ணெய், விலங்குதல் - குறுக்கிடல். கலம் - அணி

வகைகள்.

உள்ளுறைகள் : 1) கிழங்கு கீழ் வீழ்ந்து, தூங்கி என்றது, அன்பு உள்ளத்தே வேரூன்றியதனால் களிப்பான தேன் மேல் கனவுகள் மேலாக எழுந்து, பிறர்க்கும் புலப்படத் தோன்றுகின் றன என்பதாம்.

2) சிற்சில வித்திப் பற்பல விளைந்து' என்றது. அவ்வாறே நீ செய்த சிறுசிறு அன்புச் செயல்கள் பலவான நன்மைகளைத் தரும் மணவினையாக மலிந்து பெருகும் என்பதாம்.

3) 'கிளி கடியும்' என்றதனால், அந்தப் பயன் கெடாதபடி பாதுகாக்கும் என்பதாம்.

4) எண்ணெய் கிழி வேண்டாதே விறலி ஆடும்' என்றது, பரிசில் பெற்றே வாழும் வாழ்வினளாகிய அவள் தானும், தான் தன் செழுமைக் களிப்பின் காரணமாகத் தானே மகிழ்ந்து ஆடுவள் எனப் பொருள்பட்டு, சுற்றத்தார் வரைபொருள் யாதும் இன்றியே மகிழ்வுடன் அவனோடு மணம்புணர்க்க இசை வர் என்பதாம்.

பயன் : தலைவி மணவினை நிகழுங் காலம் வரை ஆற்றி யிருத்தலும், தலைவன் மணவினைக்கு விரைதலும் ஆம்.

329. கடல் முகந்த மழை!

பாடியவர் : மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. 268

நற்றிணை தெளிவுரை

( (து-வி.) தலைமகன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்து சென்றனனாக, தலைவி அவனைப் பிரிந்திருக்க இயலாதவளாகி வாடி நலிகின்றாள். அவளைத் தேற்றுதல் கருதித் தோழி கூறுவ தாக அமைந்த செய்யுள் இது.]

வரையா நயவினர் நிரையம் பேணார். கொன்றாற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெறாஅது புனிற்றுநிரை கதித்த பொறிய முதுபாறு

இறகுபுடைத் திற்ற பறைப்புன் தூவி செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர் ஆடுகொள் நெஞ்சமோடு அதர்பார்த்து அல்கும், அத்தம் இறந்தனர் ஆயினும் நத்துறந்து அல்கலர் வாழி தோழி!- உதுக்காண்

இருவிசும்பு அதிர மின்னி

கருவி மாமழை கடல்முகந் தனவே.

5

10.

எல்லையில்லாத

தெளிவுரை : தோழீ! வாழ்வாயாக! நன்மைகளை உடையவராய், நிரையத்தைச் சேர்க்கின்ற தீ நெறிகளுள் எதனையும் பேணாதவராய் விளங்குபவர் நம் காதலர் ஆவார். அவர் -கொன்று வழிப்பக்கத்தே போட்டுச் செல்லப் பட்ட மக்களுடைய செத்தபிணங்களின் முடைநாற்றத்தினாலே அருகே சென்று கொத்தித் தின்னுதற்கேற்ற வாய்ப்பைப் பெறாதாய்; ஈன்ற அணிமையால், வரிசையாகத் தோன்றும் புள்ளிகளையுடைய முது பருந்தானது, இறகினை அடித்தடித்து வருந்தும். அப்படி அது இறகடிக்கும்போது உதிர்ந்து பறந்து கிடக்கும் புல்லிய இறகுகளைத் தம் சிவந்த கணையிலே செறித் மறத்தன்மையுடையவரான ஆடவர்கள். துத் திரிபவர் அவர்கள் வெற்றிகொள்ளும் கருத்தோடு வழியையே பார்த்த படியாக மறைந்திருக்கும் காட்டுவழியிலே சென்றனராயினும், நம் தலைவர், நம்மைக் கைவிட்டு அங்குத் தங்கிவிடுவார் அல்லர். உவ்விடத்தே பாராய்! பெரிய ஆகாயமெல்லாம் அதிரும்படியாக இடித்து மின்னலின் தொகுதியைக் கொண்ட கார் மேகமானது, கடல் நீரை முகந்து வந்துள்ளன. ஆதலின் அவர் இப்போதே வந்து விடுவார்காண் என்பதாம்.

பக்கத்து கருத்து: கடல் முகந்து மேகம் நம்மூர்ப் வான்மேல் வந்து இடித்து மின்னி நமக்கு மழைவளம் தருதலே A

நற்றிணை தெளிவுரை

269

போல, தலைவரும் தாம் தேடிய பெரும் பொருளோடு வந்து நம்மை வரைந்து மணந்து இன்பம் தருவர் என்பதாம்.

சொற்பொருள்: வரையா - எல்லையற்ற. நயவினர் நன்மையுடையவர்; நன்மையாவது நற்பண்பு. நிறையம் நரகம்; இங்கே நரகம் உய்த்தற்குரிய தீவினை. அடுபிணன் கொலைப்பட்டுக் கிடக்கும் அழுகற் பிணம். மருங்கு - பக்கம் நிரை கதித்த பொறிய - வரிசையாகத் தோன்றிய புள்ளிகளைக் கொண்ட.பாறு - பருந்து. புடைத்தல் - அடித்துக்கொள்ளல். இற்ற - உதிர்ந்து வீழ்ந்த. வன்கண் ஆடவர் - வன்கண்மை யுடைய ஆறலை கள்வர். ஆடு - வெற்றி. அதர்-வழியிடம். அல்கும் - தங்கியிருக்கும்.

இறைச்சிப் பொருள்:1) ஈன்றணிமையுடைய பருந்து பசியால் மிகத்துன்புற்றபோதும், அழிந்த பிணத்தினின்றும் எழுந்த முடைநாற்ற மிகுதியினாலே, நெருங்கித் தின்ன மாட்டாதும், விட்டுப்போக மனமின்றியும் சிகறடித்து வருந்தும் என்றது, நின்பால் தோன்றும் பசலையானது, அவர் குறித்த நாளிலே வருதல் மெய்ம்மையாதலின், தாம் அகன்று போதல் நேருமென வருந்தியிருக்கும் என்றதாம்.

2) கணைசெறித்த ஆடவர் வெல்லும் கருத்துடன் நெறிபார்த்துத் தங்கியிருப்பர் என்றது, கொடுமையுடைய அலர்வாய்ப்பெண்டிர் நின்னைத் தூற்றி மகிழும் கருத்தோடு நின் சோர்வு பார்த்துக் காத்திருப்பர் என்பதாம்.

.

விளக்கம்: வன்கண் ஆடவர் அதர்பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும், நம் தலைவர் வரையா நயவினர் ஆதலின், ஊறு ஏதுமின்றிக் குறித்த காலத்தில் தவறாதே வந்து நின்னை மணங்கொண்டு இன்புறுத்துவர் என்பதாம். வரையா நயவின் நிரையம் பேணார்' என்பதற்கு, நயமான எந்தவொரு செயலையும் கருத்துட் கொள்ளாரும், நரகம் புகுதல் தீவினையால் நேரும் என்பதைக் கருதாதவருமான வன்கண் ஆடவர் என்றும் பொருள் கொள்ளலாம். செல்லுங் காலைப் பொருள்மிகுதியின்மையால் கள்வர் கொடுமைக்கு அஞ்சவேண்டா. வருங்காலை அஞ்சுதல் வேண்டும் என்பது நினைந்தும் அங்கேயே தங்கிவிடார், நின்னைத் துறந்து இருந் தற்கு இயலாராதலின் என்று, அவனது காதலன்பின் மிகுதி யையும் ஆண்மையையும் கூறியவாறும் ஆம்.

பயன் : தலைவி, தலைவன் வரைபொருளோடு மீண்டு வரும் காலம்வரை பிரிவைப் பொறுத்து ஆற்றிருப்பாள் என்ப தாம். தோழி

லைமுகன்

270

ஆலங்குடி வங்கரை நற்றிணை தெளிவுரை

330. உண்மையோ அரிதே!

பாடியவர் : ஆலங்குடி வங்கனார். திணை : மருதம். துறை: தோழி தலைமகனை வாயில் மறுத்தது.

( (து - வி.) பரத்தையை நாடிப் போன தலைவனுக்கு மீண்டும் தலைவியின்பால் ஆர்வம் உண்டாகிறது. அவன் வீட்டிற்கு வந்து, தலைவியின் இசைவைப் பெற்றுத் தருமாறு தோழியை வேண்ட, அவள் அவன் போக்கைக் கடிந்து மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து மடநடை நாரைப் பல்லினம் இரிய நெடுநீர்ந் தண்கயம் துடுமெனப் பாய்ந்து நாள்தொழில் வருத்தம் வீடச் சேட்சினை இருள்புனை மருதின் இன்னிழல் வதியும் யாணர் ஊர! நின் மாணிழை மகளிரை எம்மனைத் தந்துநீ தழீஇயினும், அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே. அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்போடு

எம்பா டாதல் அதனினும் அரிதே!

5

10

தெளிவுரை : வளைந்த கொம்புகளையுடைய எருமையின், அசையும் பிடரினையுடைய கருமையான கடா ஒன்று, இள நடையையுடைய நாரைகளின் பலவான கூட்டம் எல்லாம் அச்சமுற்று ஒடும்படியாக, நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே, துடுமென்னும் ஒலியுண்டாகச் சென்று பாய்ந்து, நாளிற் செய்த உழு தொழிலின் வருத்தமானது நீங்கும் படியாக நீராடும். அதன்பின் நீண்ட கிளைகளை உடையதும். இருள் நிரம்பியது போன்ற அடர்த்தியுடையதுமான மருதமரத் தின் இனிய நிழலிலே சென்று ஓய்வாகத் தங்கியிருக்கும். அத்தகைய புதுவருவாய் மிகுந்த ஊரினை உடையவனே! நீதான், நின்னுடையவரான மாட்சிகொண்ட கலனணிந்த பரத்தை மகளிரை, எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து வைத்து, குலமகளிரைப் போலப் பேணிக்கொண்டு அவரோடு கூடியிருந் தாலும், அவர்களது புன்மையான மனத்திலே உண்மையான காதலன்பு நின்னிடத்து உண்டாதல் என்பதோ அரிதேயாகும். நற்றிணை தெளிவுரை

271

அவரும், பசிய நொடியணிந்த புதல்வியரோடு புதல்வரையும் நினக்குப் பெற்றுத்தந்து, நன்மை பொருந்திய கற்புடைமை யுடனே, எம்பக்கத்தவராக ஆகுதல் என்பதோ அதனினும் அரிதாகும். இதனை நீயும் அறிந்தாய் அல்லையோ!

கருத்து: பரத்தையராகிய அவர்பால் விருப்புடைய “நின்னைத் தழுவி மகிழ்தல் எம்முடைய செவ்விக்கு மாசாவது என்று இடித்துக் கூறியதாம்.

சொற்பொருள் : தட மருப்பு - வளைந்த கொம்பு. பிறழ்சுவல் - அசைந்து பிறழும் பிடரியிடம்; பிணர் சுவல் எனப் பாடங்கொண்டு சருச்சரையுடைய பிடர் என்றும் கூறுவர். நாள் தொழில் - நாட் காலையிலே செய்த உழுதொழில். சேட்சினை இருள்புனை மருது - நெடிய கிளைகளோடு இருள்போல அடர்ந்த நிழலைக்கொண்டதான மருதமரம். யாணர் - புது வருவாய். மாணிழை மகளிர் -மாண்பான இழைகள் பூண்ட பரத்தையர்; இது எள்ளல் உவமை. எம்மனை - எம் மனைப் புறம்; இது தலைவன் வீடாயினும், அதற்கு உரியவள் மனைவியே என்னும் மரபுபற்றிக் கூறியதாம். புன்மனம் - புன்மை வாய்ந்த மனம்; நன் மனத்திற்கு எதிரானது இது. நன்றி- து.நன்றி நன்மை. எம்பாடு -எம் பக்கல்; எமக்கு இணையான தகுதி பெறல்.

உள்ளுறை : எருமைக் கடா நாரையினம் இரியப் பொய் கையிலே புகுந்து தன் வருத்தம் தீர்ந்தபின், தான் புகுதற் சூரியதான தன் தொழுவம் புகுந்து தங்காது, இன்னிழல் மருத நீழலிலே தங்கும் ஊரன் என்றனள். இவ்வாறே தலைவனும் பரத்தையர் சேரியிற் புகுந்து, அதனால் காமக்கிழத்தியர் வெருவி ஒதுங்கி அகன்று போக, பின்னும் வீடு திரும்பாது, பாணன் கூட்டிய புதுப்பரத்தையுடன் தங்கியிருந்தனன் என்று தலைவனைக் குறிப்பாற் சுட்டிப் பழிக்கின்றனள். இங்கு நினக்கு வேண்டியதுதான் இனி யாதுமில்லை என்றதாம்.

விளக்கம்: 'பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை' (46) என அகத்தினும் வருவதால், இவ்வாறு காம மீதூர்ந்த தலைவர்கள் சிலபோது பரத்தையைத் தம்மனைக்கே கொண்டுவந்து வைத்துக் கூடிமகிழ்வதும் உண்டென்பது புலனாகும். எனினும், 'பொருளே அவர்தம் குறியாதலால் அவர் உண்மையன்பினர் ஆதல் அரிதென்றும், மற்று அவரும் மகப்பெற்றாலும் அம் மக்கள் மனைவிக்குப் பிறந் தோழி

உலோச்சனார்

கடிக்கு

272

தாரைப் போலக்

நற்றிணை தெளிவுரை

குலத்துக்குச்

என்றும் தலைவனுக்குச் சொல்லி,

சிறிதளவும் பயன்படார் அவனைப் பழிக்கின்றாள்

தோழி.

பயன் :

வாயின் மறுத்தலே துறையாயினும், தலைவன்

தன் குற்றமுணர்ந்து வருந்த, தலைவியும் அவனை ஏற்றுக் கொள்வாள் என்பதாம்.

331. முனிவில் நல்லூர்!

பாடியவர் : உலோச்சனார். திணை : நெய்தல். தோழி இரவுக்குறி நேர்ந்தது.

துறை:

(து-வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனின் உள்ளத் திலே தலைவியை மணந்து கொள்ளும் நினைவைத் தீவிரமாக்கக் கருதுகின்றாள் தோழி. அதனால், பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள் போலச் சொல்லுகின்றாள். அவ்வாறு தோழி சொல்வ தாக அமைந்த செய்யுள் இது.)

உவர்விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வருபதம் நோக்கி, கானல் இட்ட காவற் குப்பை புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி, மடநோக்கு ஆயமொடு உடனூர்பு ஏறி, 'எந்தை திமிலிது நுந்தை திமி'லென வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப! இனிதே தெய்யஎம் முனிவில் நல்லூர்: இனிவரின் தவறும் இல்லை; எனையதூஉம் பிறர் பிறர் அறிதல் யாவது

தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

5

10

தெளிவுரை : புலவு நாற்றத்தை உடைய மீனை உப்பிட்டு காயவைத்திருக்கும் பொழுது, அதனைக் கவர்தற்கு வந்து வீழும் புள்ளினங்களை ஓட்டியபடி இருப்பர் பரதவர் மகளிர், மடப்பம் பொருந்திய பார்வையினைக் கொண்ட அவர்கள், தம் தோழிய ரோடு -

நற்றினை தெளிவுரை

273

உழாது, உவர் நிலத்திலே, உப்பாகிய விளைவைக் கொள்ளும் உழவராகிய பரதவர்கள், ஒழுங்காக ஒன்றன்பின் ஒன்றாக உமணர்கள் வண்டியோடு உப்பை விலைக்குக் கொள்வ தற்கு வருகின்ற காலச்செவ்வியை எதிர்பார்த்தவராக, கடற் கானலிலே குவித்து இட்டிருக்கும் காவலையுடைய உப்புக் குவியல்களின் மேலே தவழ்ந்து ஏறி நின்றவராகக், கடலிடத்தே கரைநோக்கி வரும் திமில்களைச் சுட்டியபடி,

அதோ வருவது என் தந்தையின் படகு; அதோ வ ருவது நின் தந்தையினது படகு' என்றும் கூவுவர். வளைந்த கடல் நீரிடத்தே மீன் வேட்டை குறித்துச் சென்றுள்ள தம் சுற்றத் தாருடைய திண்மையான படகுகளை அம்மகளிர் எண்ணிக் கொண்டிருப்பர். இத்தகைய தண்மையுடைய கடற் சேர்ப்பனே! எவரையும் வெறுத்தல் என்பதே இல்லாத எம்முடைய நல்ல ஊர்தானும் மிகவும் இனிமை உடையதே. இனி, நீதான் அங்கே வந்தாலும் தவறு ஏதும் இல்லை. சுற்றத்தார்களும் ஒருவர் போக்குவரவை மற்றவர் அறியாதாராக, அவரவர் தத்தம் கடமைகளில் மனஞ் செலுத்தியிருக்கும் சேரியினை உடையதாதலால், எவ்வளவேனும் நின் வரவைப் பிறர் எவரும் அறிவர் என்பதும் இயலுமாறில்லை.ஆதலின், நீதான் அஞ்சாதே எம்மூர்க்கு வருவாயாக என்பதாம்.

கருத்து: இரவில் நின்னையே நினைந்து அவன் படுகின்ற துயரம் மிகவும் பெரிதாதலின், விரைவில் அவளை மணந்து பிரியாத வாழ்வைத் தருக என்பதாம்.

சொற்பொருள்: ஒழுகை - வண்டிகளின் வரிசை. உமணர் உப்பு வணிகர். பதம் - காலச் செவ்வி. குப்பை - மேடு. படுபுள் படுகின்ற புள் - காக்கை கொக்கு போல்வன. திமில் - மீன்பிடி படகு. முனிவு - வெறுத்தல். நல் ஊர் - நல்ல பண்புடைய

ஊர்.

உள்ளுறை : பகல் வேளையிற் புள்ளோப்பியபடி மீன் உணங்கற்குக் காவலிருக்கும் பரதவர் மகளிர், மாலையில் உப்புக் குவட்டின்மீது ஊர்ந்து ஏறி நின்று, கரை நோக்கி வரும் படகு களை எண்ணி மகிழும் துறை என்றனள். இது, பகற்போதில் கானலிலே புள்ளோப்பியிருந்த யாம். இரவில் மனையகம் புகுந் திருந்து, நீதான் சோலையிலே வந்து நின்று புள்ளோசையிட்டுக் குறி செய்வதை நினைந்து, இது நின்குறி என்று எண்ணியபடி நின் வரவையே எதிர்பார்த்திருப்போம் என்பதாம்,

· கனவி

274 Echangi

குன்றள் கிழார் மகனார் கண்ணத்தரை நற்றிணை தெளிவுரை

விளக்கம் : 'இனிதே' என்றது, எம்மூர் நின் ஊர் போன்றே இன்னாது கருதாத செவ்வியது என்றதாம். அன்னையும் பிறரும் நீவரின் ஐயுறார் என்பாள், தமர் தமர் அறியாச் சேரி என்றனள். 'பிறர் பிறர் அறிதல் யாவது' என்றது, அலர் உரைத்துப் பேசு வாரும் எவரும் இல்லையென்று கூறியதாம். இதனால், அவனை இரவு வேளையிற் கானற் சோலைக்கு அஞ்சாது வருமாறு கேட்டுக்கொள்ளுகின்றாள் தோழி.

பயன் : இரவுக்குறி நேர்தல் மூலம் வரைவு வலியுறுத்தல் என்று கொள்க; இரவுக்குறி வாயாது என்பதற்கு உப்பு விளைப் போர் காத்திருக்கும் நிலைமை கூறினள்.

332. குவளை குறுநர்!

பாடியவர்: குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார். திணை : குறிஞ்சி. துறை : 1. பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப, தலைவி கூறியது; 2. பொறை எதிர் மறுத்ததூஉம் ஆம்.

[(து-வி.) 1. தலைமகன் பிரிவினால் மெலிந்த தலைமக ளிடம், நாள் தவறாதே அவன் வந்து நின்னைத் தழுவியும் நீதான் மெலிதல் எதனாலோ?' எனத் தோழி கேட்கின்றாள். அவன் வரும் வழியினது கொடுமையை நினைந்து மெலிவேன் என்கிறாள் தலைவி. அத்தலைவியின் கூற்றாக அமைந்த செய்யுள் இது. 2. தலைவியின் மெலிவுக்குத் தோழி வருந்தித் தலைவனைப் பழிக்க, அது பொறாத தலைவி தன் நிலையைத் தோழிக்கு உரைக் கின்றனள்.)

இகுளை தோழி! இஃது என்னெனப் படுமோ குவளை குறுநர் நீர்வேட் டாங்கு'

நாளும் நாள்உடன் கவவும், தோளே

தொன்னிலை வழீஇய நின்தொடி' எனப் பல்மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை ஈன்பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி இரைநசைஇப் பரிக்கும் மலைமுதற் சிறுநெறி தலைநாள் அன்ன பேணலன், பலநாள், ஆர் இருள் வருதல் காண்பேற்கு

யாங்கு ஆகும்மே, இலங்கிழை செறிப்பே?

LO

5

1000 நற்றிணை தெளிவுரை

275

தெளிவுரை : இகுளையாகிய என் தோழியே! "நீரிலேயே இறங்கி நின்று குவளை மலரினைக் கொய்பவர்கள், நீர் வேட்கை யாலே வருந்தினாற்போல், நாள்தோறும் காதலனுடனே தழுவு தலைப் பெற்றும், நின் தோள்கள், தம்முடைய பழைய பூரிப் பிழந்தவாய்த் தொடிகள் கழன்று வீழ்கின்றபடி மெலிந்தனவே" என்று. பலவான மாட்சிமைப்படச் சொல்லுதலை நீயும் மேற் கொண்டுள்ளனை. துருகல்லினை அடுத்த மலைப்பிளவினுள்ளே குட்டிகளை யீன்ற பெண் புலியின் பசியைப் போக்குதலை வேண்டி, கரிய நிறத்தையுடைய வலிமையுள்ள ஆண் புலி யானது இரையினை விரும்பிப் பதுங்கியிருக்கின்ற, மலையின் தொடக்கத்தேயுள்ள சிறிதான வழியிலே, அதனைப் பாராட் டாதவனாய், என்னைக் கண்டு கூடிய தலைநாள் போன்ற விருப்பம் கொண்டவனாய், பலநாளும் கடத்தற்கு அரிய இருள்வேளை யிலே வருதலைக் காணுகின்ற எனக்கு, விளங்கும் அணிகள் செறிப்புடன் விளங்குதல்தான் எவ்வாறு இயலுமோ?

கருத்து: அவன் இரவிலே வருகின்ற வழியினது தன்மை என்னைப் பெரிதும் வருத்துதலால் யான் மெலிவேன் என்பதாம்.

சொற்பொருள்: இகுளை - இளம் பருவத்தினள், குறுநர் :, கொய்பவர். தொன்னிலை - பழைய தன்மை. தொடி-தோள் வளை. விடர் முகை - துறுகல் அடுத்த மலைப் பிளப்பிடம். பிணவு - பெண்புலி. இருங்கேழ் - கரிய நிறம்; 'இருங் கோள்' எனக்கொண்டு, கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடைய புலி எனவும் உரைப்பர். பரிக்கும் - பதுங்கியிருக்கும். காண் பேற்கு - காண்பாளாகிய எனக்கு.

-

இறைச்சி : பெண்புலியின் பசியைத் தீர்ப்பதற்கு, ஆண் புலி இரை தேடிப் பதுங்கி இருக்கின்றதான பாசத்தின் செவ் வியைக் கண்டோனாகியும், என்னுடைய மனக்கவலையை உணர்ந்து, அது தீர்தற்கு, என்னை மணந்து கொள்ளும் முயற்சி யிலே மனஞ் செலுத்துகின்றான் இல்லையே என மனம் நொந்து கூறியதாம்.

விளக்கம்: 'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு' என்றது, காதலின்பத்தை நுகர்ந்தும் மீண்டும் மீண்டும் நுகர் தலையே நாடும் மனப்போக்கை விளக்குவதாகவும் கொள்ளக்கூடும். இனி, 'விடர் முகை ஈன்பிணவு' பற்றிக் குறித்தது, தானும் மனையறம் பேணிப் புதல்வனைப் பெற்றுத் தந்திட, அவன் தன்னையும் தன் புதல்வனையும் பேணிக் காத்திட, வாழ்கின்ற ढकनापु

276

கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்

நற்றிணை தெளிவுரை

தான, இல்லற வாழ்வியலின் நாட்டத்தைப் புலப்படுத்தற்கு என்றும் கருதலாம். தலைநாள் - முதல் நாள்; அவர்கள் ஒன்று கூடிய நாளாதலால் தலையாய சிறந்த நாள் எனினும் பொருந்தும்.

பயன் : தலைவன் விரைந்து திரும்பத் தலைவியும் மீண்டும் புதுநலன் அடைவாள் என்பதாம்.

333. ஒண்சுவர்ப் பல்லி

பாடியவர் : கள்ளிக்குடிப் பூதம் புல்லனார். திணை : பாலை. துறை: பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகித் தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

[(து-வி.) தலைமகன் வரைபொருள் தேடுதலின் பொருட் டாகப் பிரிந்து போயிருந்த காலத்தில், அந்தப் பிரிவினைத் தாங் காதவளாக வெம்பி வாடுகின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் குறித்தபடி வருவான் என்று தோழி தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக் கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் பரலவல் ஊறல் சிறுநீர் மருங்கின்,

பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணும் சுரனிறந்து அரிய என்னார் உரன்இழிந்து, உள்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்; நீங்குக மாதோ நின் அவலம்-ஓங்குமிசை உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி,

நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

தெளிவுரை : தோழீ!

உயர்வான

5'

10

இடத்திலே, உயர்ந்த புகழையுடைய நல்ல வீட்டிலுள்ள ஒளியுடைய சுவரினிடத்திலே பொருந்தியிருந்து, மீண்டும் கேட்கும் விருப்பம் வருதலைக்கொண்ட குரலையுடைய பல்லியானது, நம் காதலரை இரவின் நடுயாமப்பொழுதிலும் துயில் பெறாதிருந் நற்றிணை தெளிவுரை

277

தேமாய் நாம் நினைக்கும்பொழுதெல்லாம், நல்ல சொல்லைச் சொல்லியபடியிருக்கும். ஆதலினாலே-

மேகம் தன் தொழிலிலே வெறுப்புற்று பெரிய வானத் திடத்தே சென்று போனதாலே வெப்பம் மிகுதியாகிப் போக அதனாலே மூங்கில்கள் வாடிப்போய் அழகழிந்து கிடக்கும் மலைவழியின் சிறிதான நெறியினிடத்தே, பருக்கைக் கற்கள் மிகுந்துள்ள பள்ளத்திலே ஊறுகின்ற சிறிதளவான நீரினிடத் திலே, பொலிவுபெற்ற நெற்றியையுடைய யானையோடு புலி யானது போரிட்டு வென்று அந்நீரை உண்ணும்; அத்தகைய சுரநெறிகளைக் கடந்துசென்று ஈட்டும் போருள் தமக்கு அருமை யானது என்று நினையாராய், வலிமையழிந்து உள்ளே பொரு ளாசையே மிகுந்துவிட்ட நெஞ்சத்தோடு, தாம் வள்ளன்மை உடையரெனப் புகழ்பெறுதலை அடைதல் வேண்டி,அரியதான பொருளைத் தேடிவரக் கருதிச் சென்றவர் நின் காதலர்! அவர்தாம், நின்னைத் தழுவுதலை எதிர்பார்த்து வந்து, நின் திருந்திய அணிகளையுடைய பணைத்த தோளையும் இன்று வந்து பெறுவர் போலும்! அதனால், பெண்ணே! நின் துயரம் எல்லாம் இப்போதே நீங்குவதாகுக.

கருத்து: ‘பல்லி அவர் வருவாரெனச் சொல்வதால், நின் மனக் கவலை தீர்க' என்பதாம்.

சொற்பொருள்: மழை - மேகம். மாவிசும்பு - பெரு வானம்; கரிய வானமும் ஆம். உகத்தல்-உயரப் போதல். கழை - மூங்கில். பரல் - பருக்கைக் கற்கள். அவல் - பள்ளம். உரன் அழிந்து - உறுதி கெட்டு; உறுதி கெட்டு என்றது தலைவி யைப் பிரியாது வாழ்தல் என்னும் மனவுறுதியை இழந்து என்றதாம். ஓங்கு மிசை - உயர்ந்த இடம்; சுவரில் உயரமான இடத்தில். நயவரு - நயத்தல் வருதலையுடைய; விரும்பப் படுகின்ற. படுதல் - ஒலித்தல்.

இறைச்சி : பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் சிறிதளவான நீரையும், புலி யானையோடு போரிட்டாயினும் உண்ணும் என்றது. அவ்வாறே தலைவனும் தான் விரும்பிய பொருளை எதிர்க்கும் பகையெலாம் வென்றேனும் ஈட்டிக் கொணர்வன் என்பதாம்.

விளக்கம்: இதனால், தலைவன், பகை முடித்து வருதலைக் கருதி, வேந்து வினையாக வேற்று நாடு சென்றவன் என்பதும் பொருந்தும்.உயர்புகழ் நல்லில்' என்றது. தலைவியின் குடும்பப் 278

தோழி தலைவிக்கு

ஐயூர் முடவனார

நற்றிணை தெளிவுரை

பெருமிதத்தைக் கூறியதாகும். 'பல்லி படுமே - நீங்குக அவலம்' என்றதனால், பல்லி நல்ல பக்கம் சொல்ல, நினைத்தது நடக்கும் என்பது அந்நாளினும் மக்கள் நம்பிக்கையாயிருந்ததென்பது பெறப்படும். கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயிற் பல்லியும் பாங்கொத்து இசைத்தன' எனக் கலியுள் ளும் (கலி. 11) இம்மரபு எடுத்துக் காட்டப்படும்.

பயன் : தலைமகளை ஆறுதல் கூறி அமைதிப்படுத்துதலால். அவளும் ஆறுதலுற்றவளாக அமைதி பேணுவாள் என்பதாம்.

334. இன்னுயிர் நிலையே!

பாடியவர் : ஐயூர் முடவனார். திணை : குறிஞ்சி. துறை: தோழி இரவுக்குறி முகம் புக்கது.

[(து.-வி.) முகம்புக்கது என்பது' முகத்தோற்றத்தாலேயே தான் சொல்லக் கருதி வந்ததொன்றினை, உரியவர் உணர்ந்து கொள்ளச் செய்வதாகும். தலைமகன் இரவுக்குறி வேண்டினான் என்னும் செய்தியைத் தலைமகளுக்கு அறிவித்து இசைவிக்க வந்த தோழி, அதனைச் சொல்லால் இவ்வாறு கூறி, தன் முகக் குறிகளால் புரியவைக்கின்றனள்.)

கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை பெருவரை அடுக்கத்து அருவி ஆடி, ஓங்குகழை ஊசல் தூங்கி, வேங்கை வெற்பணி நறுவீ கற்சுனை உறைப்ப; கலையொடு திளைக்கும் வரையக நாடன் மாரி நின்ற ஆரிருள் நடுநாள், அருவி அடுக்கத்து ஒருவேல் ஏந்தி, மின்னுவசி விளக்கத்து வரும் எனின், என்னோ-தோழி! நம் இன்னுயிர் நிலையே!

தெளிவுரை: தோழி! கரியவான விரல்களையுடைய மந்திக் கூட்டத்தின், சிவந்த முகங்களையுடைய பெரியவொ ரு கூட்டி மானது, பெரிய பெரிய மலைப்பக்கத்துள்ள அருவியிலே நீராட உயர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின் நுனியைப் பற்றி ஊசலும் ஆடி,மனைக்கே அழகுசெய்திருக்கும் வேங்கைமரத்தின் நறுமலர்கள் கல்லிடையேயுள்ள சுனை நீரிலே உதிர்ந்து வீழும்

5 நற்றிணை தெளிவுரை.

279

படியாகத்,தம் கடுவன்களோடு களித்திருக்கின்ற மலையகநாடன் நம் தலைவன். அவன்தான், தன் கையிலே ஒப்பற்ற வேலினை ஏந்தியவனாக, மாரிக்கால மழையானது நிலைத்துள்ள மிக்க இருளையுடைய இரவின் நடுச்சாம வேளையிலே, மின்னலானது இருளைப் பிளக்க எழுகின்ற வெளிச்சமே வழியறியும் விளக்க மாகக் கொண்டு, அருவிகளையுடைய மலைப்பக்கத்தைக் கடந்து, நம்மைக் காணுதற் பொருட்டாகவும் வருவான் என்றால், தோழி! நம் இன்னுயிர் எவ்வாறு நிலைத்திருக்குமோ, அறி கின்றிலேனே!

கருத்து: அவன் வரும் வழியின் ஏதத்தை நினைத்து நினைத்துத் துடித்து வருந்துவேன் என்பதாம்.

-

சொற்பொருள் : கருவிரல் - கரியவிரல். மந்தி - குரங்கின் பெண். ஊசல் தூங்கி - ஊசல் ஆடி. 'வெற்பணி வேங்கை நறுவீ' என்று கூட்டிப் பொருள் காண்க. கலை - குரங்கின் ஆண். திளைக்கும் - காதற் களியாட்டயர்ந்து இன்புறும். ஆர் இருள்- மிகுதியான இருள். நடுநாள் - இரவின் நடுச்சாமவேளை. ஒரு வேல் - ஒப்பற்ற வேல்; ஒற்றை வேலெனினும் பொருந்தும். வசி - பிளக்கும். விளக்கம் - ஒளியாகிய விளக்கம்.

உள்ளுறை : மந்தி அருவியாடி, ஊசல் தூங்கி, வேங்கை வீ கற்சுனை உடை றைப்பக் கலையொடு திளைக்கும் என்றது, அவ்வாறே நீயும் பகற்போதில் ஆயத்தாருடனே அருவியாடிக் களித்தும், ஊசலில் அமர்ந்து இனிதாடியும், வேங்ைகப் பூக் கொய்து விளையாடியும் மகிழ்ந்தனையாய், இரவிலே நின் காமவேட்கை முற்றத் தீருமாறு நம் வீட்டை யடுத்த வேங்கை மரத்து நீழலிலே அவனுடன் இன்புற்று மகிழ் வாயாக என்பதாம்.

.

விளக்கம்: 'என்னோ நம் இன்னுயிர் நிலையே!' என்னும் சொற்கள், இரவில் அவன் வருதலைத் தாம் ஏற்கவில்லை என்று கூறினபோதும், உட்பொருள் செய்தி அறிவித்தலும், அதனைக் கேட்கும் தலைவி, முகக்குறிப்பால் இசைவு தெரிவித்தலும் நிகழ்ச்சியாகக் கொள்க. பேச்சிலே உள்ளத்தை மறைத்துப் பேசி, உரியவர் மட்டும் புரிந்துகொள்ளச் செய்யும் ஆற்றலும் இதனாற் பெறப்படும்.

வேங்கை நறுவீ கற்சுனையில் வீழ்ந்தது க கிளையிலே கலையும் மந்தியும் கூடிக் களித்த களியாட்டத்தால் வீழ்ந்தது வேங்கை மரக்

என்க. 280

சூலைவி இருஞ்சுக்கு

வெள்ளி வீதியார் நற்றிணை தெளிவுரை

பயன் : இதனால், தலைவியும் தோழியின் குறிப்புச் செய்தி களை உணர்ந்தாளாய், ஆயத்தினின்றும் நீங்கிச் சென்று, தலைவனுடன் கூடியின்புற்றுத் தன் ஆர்வம் தணிவாள் என்பதாம்.

335. என்புற நரலும்!

பாடியவர் : வெள்ளிவீதியார். `திணை : நெய்தல். துறை: காம மிக்க கழிபடர் கிளவி மீதூர்ந்து, தலைமகள் சொல்லியது.

[ (து - வி.) தலைவன்மீது பெருகிப் படர்ந்த காமநினை வினாலே நெஞ்சழிந்த தலைமகள், நள்ளிரவுப் போதிலும். கண் மூடாதவளாக நினைந்து நினைந்து சோர்கின்றவள், தனக்குத் தானே கூறிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.)

திங்களும் திகழ்வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் பொங்குதிரைப் புணரியும் பாடு ஓவாதே; ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலிபுனற் பல்பூங் கானல் முள்இலைத் தாழை

சோறுசொலி குடையின் கூம்புமுகை அவிழ, வளிபரந்து ஊட்டும் விளிவுஇல் நாற்றமொடு மையிரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புற நரலும்; அன்றி விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் யாமம் உய்யாமை நின்றது

காமம் பெரிதே; களைஞரோ இலரே!

5

10

தோன்றி

தெளிவுரை : திங்களும் வானத்திடத்தே அழகினைப் பொழிகின்றது; ஒலிக்கும் நீரோடு பொங்குகின்ற அலைகளையுடைய கடலும் தன் ஒலியை விடாதே ஒலித்தபடி யுள்ளது; ஒலியிலே மிகுந்ததாகிக் கடல்நீரும் கரையை மோதி மோதி மீண்டு செல்லும்; புனல்வளம் மலிந்த பலவான பூக்களை யுடைய கடற்கரைச் சோலையினிடத்தே யுள்ள, முள்ளுள்ள இலைகள்கொண்ட தாழையும், சோற்றைச் சொரிகின்ற குடையைப்பேரல நடுப்பருத்தும் முனை கூம்பியும் விளங்கிய அரும்பு, அவிழ்ந்து மலர்ந்துள்ளது; காற்றானது அத் தாழை மலரின் நறுமணத்தை எங்கணும் கொண்டு கெடுதல் இல்லாத நறுமணத்தோடே நிறைக்கின்றது; கரிய பெரிய பனையின் நற்றிணை தெளிவுரை

€81

மேலிருந்து துன்புற்றதாய் ஒலிக்கும் அன்றிலின் குரலும் என் பக்கத்தே வந்து ஒலித்தபடி இருக்கும்; அன்றியும் விரலாலே தடவி வருந்தி இசைகூட்டிய விருப்பந்தரும் நல்ல யாழும். இரவின் நடுயாமப் பொழுதிலே யான் உயிர் வைத்து வாழாத படி சோக இசையை எழுப்புகின்றது; யான் கொண்ட காம நோயோ பெரிதாயிரா நின்றது; அதனைப் போக்கவல்லவரான காதலரோ என்னருகே இரலாயினார்? இனி, யான் எவ்வாறு உய்வேனோ?

கருத்து: என்பதாம்.

'யான் இனிச் சாவதுதான் நேரும்போலும்

4

சொற்பொருள்: திகழ்தல் - விளங்கல். இமிழ்தல் - ஒலித் தல். புணரி - கடல். பாடு -ஒலித்தல். ஓதம் - கடல் நீர்; கரையிலே மோதிச் சிதறும் அலை நீர். கூம்பு - குவிந்துள்ள. முகை - அரும்பு. விளிவு இல் - கெடுதல் இல்லாத. மை இரும் - கரிய பெரிய. பைதல் - துன்புற்றதாக. என்புற - என் பக்கத்தே யான் இருக்கும் இல்லின் அருகே. உழந்த - வருந்திய. உய்யாமை உயிர்தரியாமை. களைஞர் - களைவாரான காதலர்.

விளக்கம்: காதலனைப் பிரிந்து விட்ட மகளிர், இரவிலும் துயில் பெறாதே கிடந்து வருந்தியிருப்பர் என்பது இயல்பு; ஊர் ஒலியடங்கிய அந்த நள்ளிரவிலே, தலைவியின் தனிமை யைச் சூழ்நிலைகளின் தன்மையும் சேர்ந்து பெரிதும் வருத்த, அவள் புலம்புகின்றதாக அமைந்தது இச் செய்யுள்.

வானிலே எழுந்து நிலவைப் பொழியும் திங்கள்; ஒலிக்கும் கடல்: மோதிப் பெயரும் அலையோசை எல்லாம் அவள் காது களில் வந்து மோதியடியே இருக்கின்றன. இதழவிழ்ந்த தாழை யின் நறுமணத்தைக் காற்று எங்கும் பரப்பி மயக்குகின்றது. துணைபிரிந்த அன்றிலின் சோகக்குரலும் அவள் மனத்தின் துயரை மிகுவிக்கின்றது. அவள் விரலால் தடவி மீட்டி வீணை இசையிலாவது ஆறுதல் பெறுவதற்கு முயன்றால், அதிலிருந்தும் அவளைக் கொல்வதுபோன்ற சோகமான இசையே எழுகின்றது. அவளின் துயரமோ பெரிதாகின்றது! களைஞரோ இலர்! நல்ல சோகப் படப்பிடிப்பு இச்செய்யுள்!

தாழை முகைக்குச் சோறு பொதி குடையையும், அது இதழ் அவிழ்தலுக்குச் சோறு சொரிதலையும் சொன்னதும் மிகச் சிறந்த உவமையாகும். 'குடையோர் அன்ன கோள் அமை எருத்திற் பாளை' (அகம். 335) என இவ்வுவமையைக் கமுகம் பாளைக்குத் தருவர் பிறர்.

5-18

= 282

தோமி

லைமகளுக்கு

காலர்

நற்றிணை தெளிவுரை

பயன் : உள்ளத்தெழுந்து வருத்தும் பெருந்துயர நினைவலைகள், வாய்விட்டுப் புலம்பும்போது, சிறிது தணிவதால் அவள் அமைதியைச் சிறிது காணலும் கூடும் என்பதாம்.

336. குடிமுறை பகுக்கும் நாட!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.

( (து-வி.) இரவுக் குறியை விரும்பி வருகின்றான் தலைவன். அவன் மனத்தை, மணவினையை விரைந்து செய்தற்கு முயலுவதிற் செலுத்த விரும்புகிறாள் தோழி. ஆகவே, இரவிலே அவன் வரும் வழியினது கொடுமைக்கு அஞ்சியதுபோலக் கூறி, இரவில் வருவதை மறுத்து உரைக்கின்றாள். இந்தக் கூற்றாக அமைந்த செய்யுள் இது.]

பிணர்ச்சுவற் பன்றி தோன்முலைப் பிணவொடு கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், கல்லதர் அரும்புழை அல்கிக் கானவன் வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டி,

குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட! உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் ஈரளைப் புற்றங் காரென முற்றி இரைதேர் எண்கினம் அகழும்

5

10

வரைசேர் சிறுநெறி வாரா தீமே.

தெளிவுரை : சிலிர்த்திருக்கும் மயிர்மிகுந்த பிடரினையுடைய ஆண் பன்றியானது, தோலாக வற்றித் தொங்கும் முலையை யுடைய தன் பெண்பன்றியோடும் சென்று, திரண்ட தண்டினை யுடைய தினையின் கதிரை அளவுக்கதிகமாகக் கவர்ந்து தின்றது. அதனாலே கானவன், கற்கள் நிரம்பிய மலையிடத்திலுள்ள கடத்தற்கரிய புழையிடத்தே பதுங்கியிருந்து, வில்லினால் அம் பெய்து அந்தச் சிறிய ஆண்பன்றியைக் கொன்றான். கொன் றவன், அதனைத் தன் மனைவியிடம் கொண்டு தந்தான். அலங் கரித்த கருமையான கூந்தலையுடையவளான அவன் மனைவி யானவள், அப் பன்றியை அறுத்து, தசையை அவ்விடத்துக் நற்றிணை தெளிவுரை

283

குடிகளுக்கெல்லாம் முறையாகப் பகுத்துக் கொடுத்தனள். அத்தகைய நெடிய மலை நாடனே!

மிக்க வலிய சினமுடைய களிற்றியானையானது, வருகின்ற புலியினை எதிர்பார்த்திருக்கும் இரவின் கண்ணே, இங்கு வருவதனை நீயும் அஞ்சமாட்டாய்; ஆயின், யான் அஞ்சுவேன். பாம்பின் ஈரிய புறத்தையுடைய புற்றினைக் கார்மேகம் போலக் கவிந்துகொண்டு, புற்றாஞ்சோறாகிய இரையினை ஆராய்கின்ற கரடிக்கூட்டம் தோண்டியபடி இருக்கும். மலையைச் 'சார்ந்த சிறு நெறியிலே, இனியும் இரவிலே வாராதிருப்பாயாக.

கருத்து: ஆகவே, விரைய வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வாயாக என்பதாம்.

தன்மை;

சொற்பொருள் : பிணர் - சொரசொரப்பான இங்கே மயிர்ச் சிலிர்ப்பை உணர்த்தும். சுவல்-பிடரி. தோல் முலைப் பிணவு - குட்டிகளையுடையதாகவே, அவற்றுக்குப் பாலூட்டியதனாலே வற்றிய முலையுடைய பெண்பன்றி. கைம் மிக - மிக அதிகமாக. கவர்தலின் - கவர்ந்து உண்ணுதலினாலே. புழை - பொந்து. அல்கி - பதுங்கி. கெண்டி - இங்கே பன்றியின் தசை. குடிமுறை பகுத்தல் - ஊரிலுள்ள குடிகள் யாவர்க்கும் முறையாகப் பகுத்துத் தருதல். உரவு - வலிமை. உறுபுலி - நாளும் வரும் புலி. காரென -கருமேகம் போல; இது கரடியின் உருவைக் குறித்தது. எண்கினம் - கரடிக் கூட்டம்.

உள்ளுறை : தினை கவர்ந்த பன்றியைக் கானவன் கொன்று கொணர்ந்து தர, அவன் மனைவி அதனை அறுத்து ஊரிலுள்ள குடியினர் அனைவருக்கும் முறையாகப் பகுத்துக் கொடுக்கும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவனும் இல்லறம் தொடங்கித் தான் ஈட்டிவரும் பொருளையெல்லாம் மனைவிபால் அளிக்க, அவள் ஐம்புலத்தாரையும் பேணிக் காத்து அறம் பேணுபவளாவாள் என்பதாம்.

விளக்கம்: தன் முயற்சியாலே தேடியதெனினும், அதனை மனையோளிடம் தந்து, அவள் குடியினர்க்கெல்லாம் பகுத்து அளிக்கத் தான் மகிழும் அக்கால ஆடவர் மனப்பான்மை இதன்கண் விளக்கப்பட்டுள்ளது. 'வருநெறிக்கு அஞ்சுவல்' என்றதால், அவ்வச்சத்தால் தலைவிக்கு ஊறு நேரிடா வகையில் தலைவன் அவளை வரைந்து கொள்வதற்கு முயற்சி செய்பவன் ஆவான் என்பதாம். 'எண்கினம் அகழும்' என்றதால் கரடி களின் மிகுதியும், பாம்புப் புற்றுக்களின் மிகுதியும் கூறினள்; 284

தொழி தலைவன்

பாலை பாடிய

நற்றிணை தெளிவுரை

இத்துடன் உறுபுலி பார்க்கும் களிறும் உடைத்தாதலால், இரவில் தனியே வழி வருவார்க்குத் தீங்கு நேருமென அஞ்சுதல் இயல்பே என்பதும் தெளிவாகும்.

பயன் : இரவின் வழி ஏதத்துக்கு அஞ்சுவதுபற்றிக் கூறு தலால், இனி இரவுக்குறியும் வாயாது என்பதை உணரும் தலைவன் தலைவியை வரைந்து வந்து மணந்துகொண்டு பிரியா இன்பம் நுகர்தலிலேயே மனம் செலுத்துவான் என்பதாம்.

337. சிறந்தார் மறந்தாரோ?

பாஉயவர் : பாலை

பாடிய பெருங்கடுங்கோ. திணை: 1. தோழி. தலைமகன் பொருள்வயிற் பிரிய லுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; 2. தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.

[(து-வி.) 1. பொருள் தேடிவரப் பிரிந்து போவதற்குத் தலைவன் திட்டமிடுவதைக் குறிப்பால் அறிந்து, தோழி அறநெறி கூறிப் போகாது தடுத்து நிறுத்தியது; 2. தலைவன் பிரிந்து செல்வது உலகியல் அறத்தோடு பொருந்துவதே; ஆயின் அடைந்தாரைக் காப்பதும் வேண்டும் என்று தலைவனிடம் கூறித் தோழி உலகியல் உணர்த்தியதும் ஆம்.

உலகம் படைத்த காலை- தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்தி சினோரே!

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்,

நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய

5

செப்பிடந்து அன்ன நாற்றம் தொக்குஉடன்,

அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால் தளர்நறுங் கதுப்பில் பையென முழங்கும் அரும்பெறற் பெரும்பயம் கொள்ளாது, பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே.

10

தெளிவுரை : தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தினை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலரையும், பருத்த அடியை யுடைய பாதிரியின் நுண்மயிர் கொண்ட சிறந்த மலரையும், நறுமணம் கமழும் செங்கருங்காலியின் மலரோடு ஒன்றாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ள செப்பினைத், திறந்து நற்றிணை தெளிவுரை

285

வைத்தாற்போன்ற நறுமணம் ஒருங்கே கமழ்வதான, அழகிய நிறங்கொண்ட நீலமணிபோலும் ஐந்து பகுதியாக முடித்தற் குரிய, சரிந்து வீழும் வண்டுகள் மெல்லென ஒலித்தலையுடைய நறுமணமிகுந்த தலைவியரின் கூந்தலினது, அரிதாகப் பெறுதற் குரிய பெரும் பயனைக் கொள்ளாதவராய், அவரைப் பிரிந்து வாழ்கின்ற பகுதியையுடைய பொருளீட்டி வாழ்கின்ற ஆடவர்கள், உலகம் படைத்த காலத்திலிருந்தே, அடைந் தாரைப் பேணிக்காக்கும் அருள்நெறியை மறந்தனரோ! அத் தகையவர் சிறந்த தகுதிப்பாட்டினை உடையவரேயாம் என்ப தாம்.

கருத்து: அடையாரைக் கைவிடாது பேணுதலே சிறந்த அறநெறி என்பதாம்.

சொற்பொருள்: சிறந்திசினோர் - சிறந்த தகுதிகளை உடை யோர். முதிரா வேனில் - முற்றாத இளவேனில். எதிரிய எதிர்நோக்கிய; எதிர்ப்பட்ட எனினும் ஆம், அதிரல் மலர்வது இளவேனிலில் என்பதால். பராரை - பருத்த அடிமரம். நறுமோரோடம் - செங்கருங்காலி. அடைச்சிய - அடைத்து வைத்த. செப்பு - பூவைக்கும் செப்பு. அணி - அழகு. தளர் தல் - சரிந்து வீழ்தல். பையென முழங்கும் - மெல்லென ஒலிக்கும் என்றது, வண்டினம் மொய்த்து ஆரவாரித்தலை.

விளக்கம்: 'உலகம் படைத்த காலை மறந்தனர் கொல்லோ' என்றது, உலகியல் வகுத்த சான்றோர் அன்றே மறந்துவிட்டனர் போலும், அதனால் ஆடவர் மனைவியரை அவர் வருந்தி நலியத் தனித்து வைத்துப் பிரிதலும் அறமாயிற்று என்று ஆடவர் பொதுவியல்பைச் சுட்டி நொந்து உரைப்பதாம்.

காட்டு மல்லிகை, பாதிரி, செங்கருங்காலிப் பூக்களை ஒன்றாகச் செறித்து வைத்து, அச் செப்பினின்று வெளிவரும் இனிய கூட்டுமணத்தை நுகர்ந்து. இன்புறுதல் இங்கே கூறப் பட்டுள்ளது. இத்தகைய நறுநாற்றம் உடையது தலைவியின் கூந்தல் என்றது, அவளது செவ்வியைக் கூறி, அவளையும் பிரிதற்கு நினைத்த தலைவனின் மனப் போக்கிற்கு நொந்ததாம்.

'சிறந்திசினோர்' என்றது எள்ளற் குறிப்பு; அங்ஙனம் வகுத் தவர் சிறந்தவர் ஆகார் என்று சொன்னதாம்.

பயன் : தலைவியைப் பிரிதலால் அவளுக்கு உண்டாகும் துயரமிகுதியை உணர்கின்ற தலைவன், தன் பொருளார் வத்தைச் சிறிது ஒதுக்கிவிட்டு, அவளோடு தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம். அலுவி 288 Copy

4,

மதுரை ஆருலவிஷய நாட்டு ஆலம் பேரிச்சாத்தனார நற்றிணை தெளிவுரை

338. யாங்ஙனம் விடுமோ?

பாடியவர் : மதுரை ஆருலவிய நாட்டு ஆலம் பேரி சாத்தனார். திணை : நெய்தல். துறை : ஒருவழித் தணந்த காலை, ஆற்றாத தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது.

[ (து -வி.) தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகிவரும் காலத்திலே, அலர் எழுதலைக் கண்டு சிலநாள் வருவதை நிறுத்தி விட்டனன். தலைமகள் அதனால் வருந்தி நலியத் தோழி, 'வருந்தாதிரு' என்று தேற்றுகின்றாள். அவளுக்குத் தலைவி, தன் நிலைமைபற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே; அரும்பு கொடி துமிய ஆழி போழ்ந்தவர் நெடுந்தேர் இன்னொலி இரவும் தோன்றா; இறப்பு எவ்வம் நலியும் நின்நிலை: நிறுத்தல் வேண்டும் என்றி; நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே! - மால்கொள வியலிரும் பரப்பின் இரைஎழுந் தருந்துபு, புலவுநாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடரைப் பெண்ணை தோடுமடல் ஏறிக் கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர்செலக் கடை இப் புணர் துணைப் பயிர்தல் ஆனா, பைதலம் குருகே!

5

10

தெளிவுரை : "கடுங்கதிரையுடைய ஞாயிறும் மேற்றிசை மலைப்பின்னே சென்று மறைந்து விட்டது; அடும்பின் கொடிகள் துண்டித்து வீழும்படியாகச் சக்கரங்கள் அறுத்துக்கொண்டு வரும் அவருடைய நெடிய தேர் வருகின்ற இனிய ஒலியானது இந்த இரவுப்போதிலும் தோன்றவில்லை. அதனாலே, அவரை நினைந்து மிகுதியான துன்பத்தோடு வருந்தும் நின்னுடைய நிலைமையினைப் புறந்தோன்றி அலராகாதபடி பொறுத்து நிறுத்தி வைத்தல் வேண்டும்" என்று சொல்லுகின்றாய். தோழீ! பரந்த கழிக்கானற் பரப்பிலே இரையினை அருந்திவிட்டு, நேரமானது இருண்டு மயக்கங்கொள்ளவும், புலவு நாற்றத்தை யுடைய சிறு குடியிருப்பின் மன்றத்திடத்தே வளர்ந்துள்ளதும், பருத்த அடியையுடையதுமான பனையின் ஓலையிடத்து மட்டை யிடத்தே ஏறி இருந்தவாறு, வளைந்த வாயினையுடைய நற்றிணை தெளிவுரை

தளைவக்கு

சலைச் சாத்தினார்

287

தன்னுடைய பேடையைக் கூட்டிடத்தே வருமாறு உயிரே போகும்படியாகக் கூவியதாக, அது வந்து சேர்ந்து, அதனோடு கூடிக்கலந்து இன்பமடையும் வரைக்கும் அழைத்துக்கொண்டே இருக்கும், பிரிவுத்துயரைக் கொண்ட நாரையினைப் பார். யான் எவ்வாறு எங்ஙனம் என் துயரத்தை மறந்து கைவிடுவேனோ? அதுதான் என்னால் இயலாததாகின்றதே என்பதாம்.

கருத்து: 'என்னால் அவரைக் காணாது இருக்க இயல வில்லையே!' என்று வருந்திக் கூறியதாம்.

சொற்பொருள் : கடுங்கதிர் ஞாயிறு - கடுமையான வெப்பக் கதிர்களையுடைய ஞாயிறு.அடும்பு - அடும்பின் கொடி; குதிரைக் குளம்புபோல பிளந்த இலையுடைய கொடிவகை இது. தேர் இன் ஒலி; இனிமை, தனக்கு அதனால் ஏற்படும் உணர்வு. இறப்பு - அளவு கடந்து மால்கொள் - மயக்கம் கொள்ள; பொழுது மயங்க எனினும் ஆம். ஆடு அரை -பருத்த அடிமரம். அசைந்தாடும் அடிமரம் எனினும் ஆம், இது பனையின் இயல் பாதலால். தோடு மடல்-தோடாகிய மடல்; அதனிடத்தே நாரை இருந்தபடி என்று கொள்க. கொடுவாய் - வளைந்த வாய். கடைஇ - கூப்பிட்டு. பயிர்தல் - அழைத்தல். பைதல் காமத்துன்பம். அம் - அழகிய; அம் குருகு' என்றது. அது, தன் காதலியை ஆசையோடு விரும்பிக் கூவி அழைத்துக் சேர்ந்து மகிழ்ந்து இன்புறுத்தியதனால்.

.

விளக்கம்: கடற்குருகும் தன் பேடைபால் அன்பு காட்டிக் கூடி மகிழும் செவ்வியுடையதாயிருப்ப, நம் தலைவரோ நம்மை அறவே மறந்தனர் என்பதாம். நெடுந்தேர் இன்னொலி' தோன்றா என்றதால், அவன் மணம்வேட்டு ஊரறிய வருவதை எதிர்பார்த்து உரைத்ததும் ஆம்; அப்போது அடும்பு கொடி துமிய ஆழி போழ்வது போல அலர்வாய்ப் பெண்டிர் பேச்சடங்கி ஒதுங்க, அவன் வெளிப்படையாகவே வருவான் என்று கொள்க.

பயன் : தன்னுடைய துயரம் அவனை அடைந்தன்றித் தீராது என்று, தன் நிலைமையைத் தோழி உணருமாறு விளக்கிக் கூறியதாம்.

339. என்னோ பண்பு ?

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார். திணை: குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. 288-ஆராட்டு

நற்றிணை தெளிவுரை

((து -வி.) களவுக் காலத்தே, தலைமகன் வந்து ஒருபக்க மாகச் செவ்வி நோக்கி ஒதுங்கி நிற்பதைத் தோழி கண்டாள். அவன் மனத்தைத் திருமணத்திற்குத் தூண்டக் கருதியவள், தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

தோலாக் காதலர் துறந்துநம் அருளார்; 'அலர்வது அன்று கொல் இது?' என்று நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை- சிறந்த சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் ஒள்நுதல் பெதும்பை நல்நலம் பெறீஇ, மின்நேர் ஓதி இவளொடும், நாளைப் பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித் தெண்ணீர் மணிச்சுனை ஆடின், என்னோ மகளிர்தம் பண்பென் றோளே!

5

10

தெளிவுரை: தோழீ! அன்னையானவள், சிறந்த சீர்கள் எல்லாம் நிரம்பிய நம்முடைய அகன்ற மாளிகையின் கண்ணே என்னருகே வந்தனள்; என்னையும் அன்போடு தழுவிக் கொண் டனள். 'நீராலே அலைக்கப்பட்டுக் கலைந்த மாலையையுடைய ஒள்ளிய நுதலையுடைய பெதும்பைப் பருவத்தாளாகிய இவள் தான், நல்ல அழகினைப் பெறுதலின் பொருட்டாக, மின்னலைப் போன்று இடைவகிடு பெற்ற கூந்தலையுடைய இவளோடும், நாளைப் பகற்போதில், பலவகையான மலர்களும் விளங்கி மணம் கமழும் வேலியையுடையதான, தெளிந்த நீரினைக் கொண்ட அழகிய சுனையிலே சென்று நீராடினால், மகளிர்களது உடலின் வனப்பெல்லாம் எப்படியாகுமோ? என்றும் கேட்டனளே! ஆதலினாலே, 'பகையிடத்துத் தோல்வியே காணாத நம் காதலர், நம்மைக் கைவிட்டவராக, நமக்கு அருள் செய்யாராயினர்; இதுதான் ஊரெல்லாம் அலராவதற்கு உரியதொன்று ஆகுமல்லவோ?' என்று. நன்மையேதும் தோன்றாத வாடிய நெஞ்சத்துடனே, புதியபுதிய எண்ணங் களையே பேசிக்கொண்டு, நாம் இருவரும் நீந்திக் கரைசேராது தவிக்கும் துன்ப வெள்ளத்தினை, நம் அன்னையும் அறிந்தாள் போலும்! லைவி

வளங்கு

தலைவ

прибе

நற்றிணை தெளிவுரை

கருத்து: அன்னை அறிந்தால்

நக்கீரர்

289

இற்செறிப்பு நிகழும்; ஆதலின், இனிக் களவுறவு வாயாது, கடிமணமே செய்தற்கு உரியது என்பதாம்.

சொற்பொருள்: தோலா-தோல்வி கண்டறியாத. அலர்வது - அலராகிப் பிறரால் தூற்றப்படுவது. இது இந்த உறவு. நன்றும் புலரா நெஞ்சம் - வருவது நன்றாகும் என்ற நினைவே தோன்றாது, தீமை வரவையே நினைந்து நலியும் மனம். புதுவ-புதிதான பேச்சுக்கள். பருவரல் வெள்ளம் - துன்பமாகிய கடல். சிறந்த சீர் கெழு வியல் நகர் - சிறந்த சிறப்புகள் நிரம்பிய பெரிய அரண்மனை. தொடையல் - மார்பிலே அணியும் மாலை; தொடுக்கப்படுவதால் தொடையலாயிற்று. 'பெதும்பை' பருவம் குறித்தது. கஞலிய - கலந்து நிறைந்த. வெறி - மணம். வேலி - சுற்றிலுள்ள எல்லைக் காப்பு. மணிச் சுனை - அழகிய சுனை. தெண்நீர் மணிச்சுனை - தெளிவான நீரானது கருமணிபோலத் தோன்றும் சுனையும் ஆம். சுனை மலைப்பள்ளத்து நீர்த் தேக்கம்.

சுனை

-

விளக்கம்: 'நாளை, ஆடின், மகளிர் பண்பு என்னோ' என்றோளே;' என்று அன்னை கூறியதாகச் சொன்னது, தலைவியின் மேனியிலே புணர்ச்சியால் நேர்ந்த மாற்றத்தைச் சுனையாடியதால் வந்தவென்று தோழி கூறியதுகேட்டு, அன்னை நகையாடி, நாளைக்கு நீராடினாலும் இவ்வாறு இன்னும் புது மாற்றம் நேருமோ என்று, கேலியாகக் கூறியதாகக் கொள்க. இனி, மணந்து கூடுதலே செயத்தக்கது என்பதாம்.

பாட பேதங்கள் : புலவா நெஞ்சமொடு; மின்னேர் ஓதி.

பயன் : அன்னை அறிந்தாளெனச் சொன்னதால், இனி தலைவி இற்செறிக்கப் படுவாளாகவே, அவளை மணங்கொண் டன்றிக் கூடியின்புறல் வாய்ப்பதரிது என்பதாம்.

340. புலத்தலும் இல்லேன்!

பாடியவர் : நக்கீரர். திணை : மருதம். துறை: பரத்தை யின் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.

( (து - வி.) தலைமகன், பரத்தை மோகத்தால் தலைவியை மறந்து சிலகாலம் சுற்றியவன், மீண்டும் தன் தலைவியின் உறவை நாடி வருகின்றான். அவன் செயலைப் பாராட்டாது

J 290

நற்றிணை தெளிவுரை

மறந்து, அவனிடம் மாறாத அன்புடைய தலைவியானவள், அவன் செயலுக்கு மனம் நொந்து கூறியதாக அமைந்த செய்யுள் இது சிறப்பிக்கப் பெற்றோர் : செழியன், வாணன்.]

புல்லேன் மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை அள்ளலம் கழனி உள்வாய் ஓடிப்

பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவின் அளைமுதற் பிறழும்

5

வாணன் சிறுகுடி அன்ன என்

கோள்நேர் எவ்வளை நெகிழ்த்த நும்மே!

10

தெளிவுரை : மகிழ்நனே! பாகனின் குறிப்புக்கு இசைந்து நடப்பதற்குக் கற்றறியாத இளங்களிற்றைப் போன்றவன், விரையச் செல்லும் தேரினையுடைய செழியன். அவனுடைய படையினைப்போலப் பரப்பினாலே மாட்சிபெற்றது பெருங் குளம் ஒன்று. அது மிக்குப் பெருகியதனாலே, மடையைத் திறந்து நீரைப் புறம்போக விட்டனர். அதனாலே, கால்வாயை அடைந்து எதிரிட்டு வருவதாயிற்று, திரண்ட கொம்பினையுடை வாளை மீன் ஒன்று. அதுதான், சேற்றையுடைய அழகிய வயலின் உட்புறத்தேயாகப் பின்னர் ஓடியும் சென்றது. உழும் பகடுகள் சேற்றினைக் காலால் உதைத்தலாலே தெறித்த சேற்றுத் துளிகள் காய்ந்து வெண்ணிறப் புள்ளிகளாக உடலிலே தோன்ற, செவ்விய சாலினை மடக்கி உழுகின்ற உழவர்களின் கைக்கோலால் அடிக்கப்படுவதற்கும் அதுதான் அஞ்சிற்றில்லை. பசுமை பொருந்திய வயலின் வரம்பிடத்தே சென்று, அதன் அடிப்பக்கத்திலேயே புரண்டபடி யிருந்தது. இத்தகைய வளம் கொண்டது வாணனின் 'சிறுகுடி' என்னும் ஊர். அவ்வூரின் வளமை போன்ற, என்னுடைய கொள்ளுதல் பொருந்திய ஒளிகொண்ட வளைகளைப் பிரிவுத் துயரால் நெகிழச் செய்தவர் நீர். நும்மை, யான் தழுவுதலையும் செய்யேன்; ஆனால், வெறுத்தேனும் அல்லேன்.

கருத்து: 'புலத்தலும் இல்லேன்' என்றதால், அவன் முற் பட்டு வந்து தழுவ, அவளும் இசைந்து தழுவுவாள் என்பதாம்.

! .

நற்றிணை தெளிவுரை

291

சொற்பொருள்: புல்லேன் - தழுவேன். புலத்தல் - ஊடல். கல்லா - கற்றறிவு இல்லாத. கல்லா யானை - வலிமிகுந்த இளங் களிறு. கடுந்தேர் - விரையச் செல்லும் தேர். செழியன் - பாண் டியன். கால் - கால்வாய். கணைக்கோட்டு வாளை - திரண்ட கொம்புடைய வாளை மீன்; கொம்பு தலையின் இருபுறத்துமுள்ள கூரிய முட்களைக் குறிக்கும். அள்ளல் - சேறு. பகடு - எருமைக் கடா. புள்ளிவெண்புறம் - சேற்றுப்புள்ளி காய்ந்து வெண்மை யாகத் தோன்றும் உழவனின் உடற்புறம் சால் - உழவு சால். புடை மதரி - புடைத்தற்கும் அஞ்சாமல். பைங்கால் - பசுமை யான நீர்வளம். அணை-வரம்பு. சிறுகுடி - ஓர் ஊர். கோள் நேர் - கொள்ளுதல் அமைந்த தன்மையுடைய; இறுகப் பிடித் திருந்த.

உள்ளுறை : குளத்திலிருந்து மடைநீரோடு வெளியேறிச் சென்ற வாளை மீனானது, கால்வாய் வழியாகச் சென்று, வயலுள் ஓடி, உழவர் புடைத்தற்கும் அஞ்சாமல்,வரப்படியிலே சென்று புரளும் என்றனர். இவ்வாறே மனையகம் நீங்கிய தலைவன், பாணன் காட்டிய வழியே பற்றிச்சென்று, பரத்தையர் சேரியுட் புகுந்து, பிறர் பழியுரைக்கும் அஞ்சாதவனாக, ஒருத்தியின் வீட்டினுட் சென்று, அவளோடு இன்பம் துய்த்துக் கிடந்தவ னாவான் என்பதாம்.

விளக்கம்: செழியன் படைமாண் பெருங்குளம் செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம் எனினும் பொருந்தும். எதிரிய - எதிர்த்து நீந்தி வந்த; நீர் வரத்தில் எதிர் ஏறி வருதல் இது. 'பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து' என்பது, வயலுள் உழுங் காலத்தே பகடுகள் சேற்றுக்காலால் உதைக்கவும், மேலெல்லாம் புள்ளிபட்டுக் காய்ந்த வெண்ணிறமான முதுகுப்புறத்தைப் பெற்ற உழவர் என, உழவரின் தன்மை கூறினர்; இது சேற்று உழவு. கடுந் தேர்ச் செழியன்'-பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்தது. வாணன்-வாணன் மரபினன். சிறுகுடி - காவிரியின் வடபால் உள்ளதொரு ஊர் என்பர்; இதனால், அந்நாளில் செழியனுக்கு அப்பகுதி உட்பட்டிருந்தது எனலாம். கணவனின் குறையைப் பாராட்டாது பொறுத்து ஏற்கும் மனைவியின் மாண்பு இதனாற் புலனாகும். பெருங்குளம் விட்டகன்ற வாளை வயல் வரப்படி யில் புரளுதல் போல, அவனும் மனையகம் விட்டுச்சென்று பரத்தையில்லில் துயின்றனன் என்று கூறி, அவன் சிறுமைக்கு மனம் நொந்ததும் ஆம். 292

இலைவன் ளுங்சுக்கு

மதுரை மரு ணிறங்களை நற்றிணை தெளிவுரை

பாடபேதம்: பெயர்மாண் பெருங்குளம்.

பயன் : ஊடல் நீங்கிக் கூடி மகிழ்தலைத் தலைவி மேற் கொள்வாள் என்பதாம்.

341. துணையிலேம் யாமே!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை : குறிஞ்சி. துறை : வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல் லியது.

( (து - வி.) வேந்துவினை முடித்தற்குப் போர்முனை சென்ற தலைவன், வாடைக்காலத்தில் காதலியைப் பிரிந்துறையும் பிரிவின் வெம்மை தாங்காதவனாகத் தனக்குள் சொல்லி வருந்து வதாக அமைந்த செய்யுள் இது.]

.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முனையின், செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன்நகை அழுங்கா, பால்மடுத்து, அலையா, உலவை ஓச்சிச் சில கிளையாக் குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள், மடந்தை, யாமே வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென, நீர் இரங்கு அரைநாள் மயங்கிக் கூதிரொடு வேறுபுல வாடை அலைப்பத்

துணையிலேம், தமியேம், பாசறை யேமே!

5

10

தெளிவுரை : வெள்ளியாலே செய்யப்பெற்ற, வரிகளை யுடைய பறையினை அடித்துச் சிறிதுபொழுது விளையாடியபின், அது தானும் வெறுத்ததானால், சிவந்த புள்ளிகொண்ட அரக் கினது வட்டுப்போன்ற நாவாலே வடித்து இறக்கப்படும் விளை யாட்டின் இனிய களிப்பானது நீங்கப்பெறாதபடி பாலினையும் சென்று பருகுவான். அதன்பின், அங்குமிங்குமாகச் சுற்றியலைந் தும், சிறு குச்சியைக் கைக்கொண்டு ஓங்கிக் காட்டிப் பிறரை அச்சுறுத்தியும், இடையிடையே சிலசில சொற்களைப் பேசியும் விளையாடுவான், குன்றத்துக் குறவனாகிய எம் மகன். அம் மகனோடு, சிறிய நொடி பயிற்றியபடியாகப் பிரிவை மறந் திருக்கும் துணைமையினை, நல்லபடியே அவள்தானும் பெற்றிருக் கின்றாள். ஆனால், யாமோ,நற்றிணை தெளிவுரை

.

293

கொடிய பகைவர் நாட்டிலேயுள்ள போர்முனையிடத்தே குளிர்ந்த மழையானது பெய்ததாக, மழை நீர் அருவியாக வீழ்ந்தபடியேயிருக்கும் ஒலியானது கேட்டபடியிருக்கின்ற இரவின் நடுயாமப் பொழுதிலே, கூதிரோடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடையானது வந்து வருத்துதலாலே மனம் மயங்கி, அதனை நீக்குதற்குத் துணையாவார் யாரும் இல்லாதே மாய், தமியேமாய், பாசறையிலேயே உள்ளோம்!

கருத்து: 'என் பிரிவால் அவளும் நலிந்தாலும் மகனைத் துணையாகப் பெற்றுளதால் ஆறுதல் பெறலாம், எனக்கோ யாரும் துணையில்லை' என்பதாம்.

சொற்பொருள்: 'வங்கா வரிப்பு அறை' எனப் பாடம் கொண்டு, வெள்ளிபோன்ற வெண்கோடுகள் அமைந்துள்ள கற்பாறையிலே சென்று, அதன்பால் வீழும் அருவி நீரிலே எனவும் உரைகொள்வர். சிறுபாடு முணையின் - சிறிதளவு வெறுப்படைந்தால். செம்பொறி அரக்கின் வட்டு நா - சிவந்த புள்ளிகளையுடைய அரக்கின் வட்டம்போன்று விளங்கும் நாக்கு. நாவடிக்கும் பால் மடுத்து - நாவாலே சுவைத்துக் குடிக்கும் தாய்ப்பாலைப் பருகி. விளையாடு இன் நகை -விளை யாட்டிலே பெறுகின்ற இனிய மகிழ்ச்சி. 'குன்றக் குறவன்’ என்றது, தன் குடிக்குத் தலைவனாகப் பிறந்த தன் மகனை. நீர் இரங்கு - நீர் ஒலிக்கும். அரைநாள் - இரவின் நடு யாமப் பொழுது.

.

விளக்கம்: 'குன்றக் குறவெனொடு' என்பதற்கு வேறு குறவன் எனப் பொருள்கொள்வது, தலைவிக்கு ஏற்காததாத லின், தலைவன் அவ்வாறு நினைப்பது பொருந்தாததாதலின் ஏற்புடைத்தாகாது என்க. 'மகனாவது அவளுக்குத் துணையாக உள்ளனன்' என எண்ணுவதே பொருந்தும் என்க. கார்காலத் தில் மீள்வேன் என் உறுதிகூறிப் பிரிந்து வந்தவன், கூதிர் காலமும் வந்து, மழையும் வாடையும் வருத்தத் தன் ஆசை மனைவியை நினைத்து இவ்வாறு புலம்புகின்றான் என்பதே சிறப்பாகும்.

வேறுபுல வாடை அலைப்ப என்றது, வேற்றுப் புலத்து வாடை வருத்த என்று பொருள்பட்டு, அவன் தன் நாட்டிலிருப் பின் வாடை வருத்தாது அவள் அணைப்பிலே கிடப்பன் என்ப தையும் உணர்த்துவதாம். இது பாசறைப் புலம்பல். 294

தோது

தர்ளுர்கக்கு

மோசி கீரரை

நற்றிணை தெளிவுரை

பாடபேதங்கள் : வட்டு நா வடிக்கும், விளையாட்டின்னகை அழுங்கப் பால்மடுத்துத், தலையா உலவை ஓச்சிச் சில்கிளைக் குன்றக் குறவனொடு.

'முணைவு வெறுப்பாகும்' என்பது தொல்காப்பியம் சொல் லதிகாரம் (சூ. 386); ஈங்கை முகையானது அட்டரக்கு உருவின் வட்டுமுகை போல்வதென (நற்.193) முன்னரும் கண்டோம். இங்கே அது குழந்தைக் குறவனின் நாக்குக்கு உவமையாயிற்று.

பயன் : மேலும் காலம் தாழ்த்தாதே, தன்னூர் திரும்பு தற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதலிலே, தலைவன் மனம் செலுத்துவானாவான் என்பதாம்.

342. கண் கோட்டியும் தேரலள்!

பாடியவர்: மோசி கீரனார். திணை: நெய்தல். துறை: (1) குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; (2) தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே சொல்லியது.

( (து - வி.) தலைவனுக்கு, அவன் குறைதீர்க்கத் தலைவி யிடம் செல்லும் தூதாகச் செல்கின்றாள் தோழி. செய்தியைக் கண்ணாலே பலவாறாகக் குறிப்பித்துக் காட்டியும், தலைவி முகத்தில் ஏதும் இசைவுக்குறி காட்டாதாளாக, அவன் நிலை யாதாகுமோ என்று நினைத்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகன் விருப்பத்தைக் குறிப்பால் தலைவிக்குப் புலப்படுத்திய தோழி, அவள் முகக்குறிப்பிலே அதற்கு இசைவாக எதுவும் காணாதவளாக நொந்து கூறியதாகவும் கொள்ளலாம்.]

|

மாவென மதித்து மடலூர்ந் தாங்கு மதிலென மதித்து வெண்தேர் ஏறி, என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின்

சேரி சேரா வருவோர்க் கென்றும்

அருளல் வேண்டும் அன்புடை யோய்! என, கண்ணினி தாகத் கோட்டியும் தேரலள்;

5 நற்றிணை தெளிவுரை

யானே- எல்வளை! யாத்த கானல்

வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த சென்னிச் சேவடி சேர்த்தின்,

என்னெனப் படுமோ?' என்றலும் உண்டே.

295

10

தெளிவுரை "அன்பினை உடையவளே! பனங்கருக்குக் குதிரையினைத் தான் உவந்து ஏறுதற்குரிய குதிரையெனக் கருதி மடலூர்ந்து வந்தான்; அவ்விடத்தே இதுவோர் காவற் கோட்டை மதிலேபோலும் என்று வெளிதான பேய்த்தேரினைச் சென்றும் மோதிப் பார்த்தான்; இப்படி வருந்துகின்றவருக்கு என் வாயாலே நின்னுடைய பேச்சு இன்னதுதான் என்று நானே கூறமாட்டேன். நின்னை விரும்பியவராக, நம் சேரியிடத்துக்கு வருதலைக் குறித்தவராக வருகின்ற அவருக்கு, நாம் எப்போதும் அருள்செய்தல் வேண்டும்" என்று, கண்ணினாலேயே இனி தாகச் சுழித்துக் குறிப்பாலே பலவாறு உணர்த்திக் காட்டினேன்; தலைவிதான், அது கண்டும், எந்த முடிவையும் எனக்குத் தெரி வித்தாள் அல்லள். யான்தான். இனி, ஒளியுள்ள சங்கினம் ஊர்தலாலே வரிகளையிட்டுள்ள கானற்சோலையிலே, வண்டுகள் உண்ணும் நறுமலர்கள் உதிர்ந்து நுட்பமாக அழகு செய் திருக்கும் அவ்விடத்தே, என் தலையை அவன் சிவந்த அடிகளிலே சேர்த்துப் பணிந்தால், இதுதான் என்னவோ' என்று கேட்கப் படுவேனோ என்றவொரு கேள்வியும் உண்டாதல் கூடுமே! யான் தான் இனி என்ன செய்வேனோ?

ரு

.

கருத்து: 'தலைவன் நிலை இனி யாதாகுமோ?' என்பதாம். சொற்பொருள்: மா - மா-குதிரை. ம ட ல்-பனங்கருக்கு மட்டையாலாகிய குதிரைமேல் ஏறிவருதலான ஒரு செயல். வெண்தேர் - வெளிய பேய்த்தேர். நின் மொழி மாட்டேன் நின் பேச்சைச் சொல்ல மாட்டேனாய். சேரா -சேர். கண்கோட்டல்- கண்ணை இடுக்கிக் காட்டி ஒன்றைத் தெரிவிக்க முற்படுதல்.எல்வளை - ஒளியுள்ள சங்கினம். யாத்த ஊர்தலாலே கோடிட்டுப் போந்த கானல் - கடற்கானல் மணலிடம். வீ-மலர்.

=

விளக்கம்: மாவென மதித்து மடலூர்தலை மேற் கொள்ளலும், மதிலென மதித்து வெண்தேர் ஏறலும்,அவன், காம நினைவாலே கருத்தழிந்து பித்தாயின் நிலையைக் குறிப்ப தாகும். இந்நிலையினனாகியவன், இனி என்னென்ன அறிவிழந்த செயற்களைச் செய்வானோ என்று நினைந்து நொந்ததாம். இது,

தலைவி

296

நுள்

duojan

கருவூர்க் கதப்படை சித்தி

நற்றிணை தெளிவுரை

நின் மொழி மாட்டேன்' என்றது, காள்க.

.

தன் குறிப்பைத் தலைவி உணராளாயிருந்து விட்டதனை நினைந்து தோழி தனக்குள் கூறிக்கொள்வதாகக் கொள்க. 'என் வாய் பலருடன் சேர்ந்திருந்த காரணத்தால், தலைவனின் குறையை வாயாற் சொல்லமுடியாது போயினேன் என்பதாம். எல்வளை' என்பதைத் தலைவிக்கு ஆக்கி, 'எல்வளை தேரலள்' எனக் கூட்டியும் பொருள்கொள்ளலாம். வண்டுண் நறுவீ நுண்ணி தின் வரித்த' என்றது, அவ்வாறே தலைவனால் நலனுண்ணப் பட்டுக் கிடக்கும் தலைவியைக் குறிப்பால் உணர்த்துவதும் ஆகும். 'சென்னி சேவடி சேர்த்தின்' என்றது, தான் கொண்ட முயற்சி தோற்றமைக்கு இரங்கி அவனிடம் பொறுத்தருள வேண்டுதல். என்னெனப்படுமோ என்றலும் உண்டே' என்றது, என்னதான் தலைவிக்கு நிகழ்ந்ததோவென்று மயங்கித், தான் வீழ்ந்து படுதலான ஒரு நிலைமையும் உளவாக லாமே' எனக் கலங்கியதாம்.

பேய்த்தேர்

வெயிலில் நீர்நிலைபோலக் காணப்படும் என்பதைப் பலரும் கூறுவர்; 'அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ' என்பது அகம் (395).

பாடபேதங்கள்: அறலென மதித்து; சேரிற் சேரா; கண்ணினி தாகக் காட்டியும்; என்னெனப் படுங்கொல்.

பயன் : தோழியின் இந்த மனத்துயரையும், தலைவனின் நிலையையும் அறிதலுறும் தலைவி, தலைவனுக்கு இசைபவளாகி, அவன் குறைதீர்த்துத் தானும் இன்புறுவாளாவள் என்பதாம்.

343. மாலை இல்லை கொல்?

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். திணை : பாலை. துறை: தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல் லியது.

[ (து - வி.) தலைவனைப் பிரிந்து, அந்த நினைவாலே வருந்தி யிருக்கும் தலைவியின் துயரம், மாலைக் காலத்து வரவினாலே மேலும் பெரிதாகின்றது. அதனைத் தாங்காத அவள், இம் மாலைப் பொழுது அவர் சென்றுள்ள நாட்டிலேயும் இல்லையோ? அவரும் நம்மை நினையாரோ? என்று நினைந்து துடிப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.] நற்றிணை தெளிவுரை

முல்லை தாய கல்லதர்ச் சிறு நெறி அடையா திருந்த அங்குடிச் சீறூர்த் தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும் நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை -புன்கண் அந்திக் கிளைவயின் செறியப் படையொடு வந்த பையுள் மாலை

இல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்து அரும்பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே!

297

5

10

தெளிவுரை: தோழீ வாழ்வாயாக! முல்லைக் கொடி யானது தாவிப் படர்ந்திருக்கின்ற, கல்லிடைப்பட்ட சிறிதான வழியினை, அடையாதே இருந்த அழகான குடிகளையுடைய சிற்றூர்; அச் சிற்றூரிடத்து, பூந்தாதுகள் வீழ்ந்து மக்கி எருப்போலக் கிடக்கின்ற தெருவினிடத்தே, பசுக்களின் முதுகைத் தீண்டுகின்ற நெடிதான விழுதுகளை இட்டுள்ளது, கடவுள் உறையும் ஆலமரம் ஒன்று. அந்த ஆலமரத்திலே இருந்தபடி, அம் மரத்தடியிலே அக் கடவுளுக்குப் படைத்த பலிச்சோற்றைத் தின்ற, தொகுதியான விரல்களையுடைய காக்கையானது, துன்பந் தருகின்ற மாலைக் காலத்திலே. அவ்விடம் விட்டுநீங்கித் தன்னுடைய சுற்றமிருக்கும் இடத்தைச் சென்று அடையும். பிரிந்தாரை வருத்தும் படைத்துணையோடு வந்துள்ள, நோயைச் செய்யும் இம் மாலைக் காலமானது, நம்மைக் கைவிட்டு, அருமையான பொருளின் கூட்டத்தை விரும்பிப் பிரிந்து சென்றுள்ளவரான நம் காதலர் தங்கி யிருக்கும் வேற்று நாட்டிடத்தேயும் உண்டாவதில்லையோ?

கருத்து: 'நம்மைப் பிரிந்து வாழும் தலைவர், இம் மாலை வேளையிலே நம்போல் துயருற்றிருப்பின், விரைந்து நம்பால் வந்திருப்பாரே' என்பதாம்.

சொற்பொருள்: தாய - தாவிப் படர்ந்துள்ள. கல்லதர் கல்லிடைப் பட்ட வழி; மலைவழியும் ஆம். அடையாதிருந்த அடைக்காதே கவலையற்றிருந்த; அடையாதிருந்தது அவர் எந்த ஆபத்தையும் அவ்வழியே எதிர் நோக்காததால். தாதெருமறுகு- தாதாகிய பூந்துகள் வீழ்ந்து காய்ந்து எருவாகிக் கிடக்கும் தெரு. கடவுள் ஆலம் -கடவுள் குடியிருக்கும் ஆலமரம்;

p-19

298

நற்றிணை தெளிவுரை

ஆலமர் செல்வன் என்று போற்றப் பெறுகிறவன் சிவபிரான்; வழிபடுவார் ஆலடியிற் படையலிட்டுப் போற்றினர் என்க. உகுபலி - இட்ட பலிச்சோறு. புன்கண். துன்பந்தருதலையுடைய. கிளை - இனம் ; மரக்கிளை எனின், அம் மரத்தின் கிளையிலுள்ள தன் கூட்டிடத்தே என்க! படை - படைக்கலம்; இது வாடைக் காற்றும், முல்லை மணமும், பசுக்கள் வீடுதிரும்பலும் பிறவும் ஆம். கூட்டம் - சேர்க்கை.

லின் கீழ்

இறைச்சிப் பொருள்: 1. ஆலின்கீழ் இடப்பெறும் பலியைத் தின்ற காக்கை, தன் சுற்றத்திடம் சென்று மாலையில் தங்கும் என்றது,என் நலனுண்ட பசலையானது நெற்றியிலே சென்று தங்கி நின்றது என்பதாம்.

2. ஆலம்வீழ் ஆவின் புறத்தே வருடுமென்றது, அருகிலிருந்து தோழி தன் துயரை ஆற்றிவருதலைக் குறிப் பிட்டதாம்.

விளக்கம்: 'பலி அருந்திய காக்கை' என்றது, பிற மகளிர் தத்தம் காதலர் வந்த மகிழ்ச்சியினாலே காக்கைக்குப் பலியிட் டுள்ளனர்; நம்மவர்தான் வந்தாரில்லையே என்பதை நினைத்துக் கூறியதும் ஆம். வீழால், வீடுதிரும்பும் பசுக்களைத் தடவிவிடும் ஆலமரம் என்றது, அதற்குள்ள அன்பு நெகிழ்ச்சிக்கூடத் தலைவன்பால் இல்லை என்று நினைத்து நொந்ததாம். 'காக்கை கிளைவயிற் செறிய' என்றது, அதற்குள்ள பாசமும் அவர்பால் இல்லையே என்று கூறி வருந்தியதாம். 'நத்துறந்து அரும்பொருட் கூட்டம் வேண்டி' என்பதன் உருக்கம் நினைத்து இன்புறத் தத்கது. 'நம் கூட்டத்தை வெறுத்து, அரும்பொருட் கூட்டத்தை விரும்பினர்' என்னும் ஏக்கக் குரல் இது.

பாடபேதங்கள்: தொகுகருங் காக்கை; சினைவயிற் செறியர்; அரும்பொருள் ஈட்டம் வேண்டி.

பயன் : வேதனை மிகுதியால் வெதும்பும் உள்ளமானது, இவ்வாறு தன்னிலை புறம்தோன்ற வாய்விட்டுக் கூறுதலாலே சிறிதளவுக்கு அமைதி பெறும் என்பதாம்.

344. செந்தினை உணங்கல்!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். திணை : குறிஞ்சி. துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. Gany

நற்றினை தெளிவுரை தரிைமகன்

இளவேட்டனார்

299

[(து -வி.) களவிலே வந்தொழுகுவானாகிய தலைவன், வந்து, ஒருபக்கமாக மறைந்திருத்தலை அறிந்த தோழி, அவன் மனத்தை வரைவு வேட்டலில் செல்லுமாறு தூண்டக் கருது கின்றாள். அவள், அவன் கேட்கும்படியாகத் தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட மணியேர் தோட்ட மையார் ஏனல்

இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் காவல் கண்ணினம் ஆயின்-ஆயிழை!- நம்நிலை இடைதெரிந்து உணரான், தன்மலை ஆரம் நீவிய அணிகிளர் ஆகம்

சாரல் நீளிடைச் சாலவண் டார்ப்பச்

செல்வன் செல்லுங் கொல் தானே-உயர்வரைப்

பெருங்கல் விடரகம் சிலம்ப, இரும்புலி

களிறுதொலைத் துரறுங் கடியிடி மழைசெத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும்

இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே.

.

5

10

தெளிவுரை : ஆராய்ந்த அணிகளைப் பூண்டுள்ளவளே! அழகிய மலைப்பக்கத்திலே செழுமையாக வளர்ந்ததும், நீல மணி போன்ற தோட்டினைக் கொண்டதுமான, கருமை பொருந்திய தினைக்கதிர்கள், கரிய பிடியானையின் பெருங்கையைப் போல வளைந்து தொங்கும் பெரிய தினைப்புனத்தினை, நாம் காவல் காப்பதனை நினைத்தோமாயின்,

நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்து உணராதேயே வருபவன். தன் மலையிடத்தேயுள்ள சந்தனத்தைப் பூசியுள்ள அழகு கிளர்கின்ற மாப்பிலே, மலைச்சாரலின் நெடுவழியிலேயுள்ள மிகுதியான வண்டினம் வீழ்ந்து மொய்த்து ஆரவாரிக்க வருபவனும் அவன். அவன் தான், உயர்ந்த மலையிடத்துள்ள பெரிய பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்கும்படியாக, பெரிய 4. லி யானது களிற்று யானையைத் தொலைத்து முழங்கும் கடுமையான முழக்கத்தைக் கேட்டு, இடியின் முழக்கமோ?' என்று நினைத்து, முற்றத்திலே காயவைத்திருக்கும் செந்தினையின் காய்ந்த மணிகளைக் கூட்டிக் குவிக்கும், இனிய மலைவருவாயினையுடைய, தம் உறவினரோடு தான்வாழும் தன் ஊருக்கும் மீண்டு போவான் போலும்! 300

நற்றிணை தெளிவுரை

கருத்து: 'அவன் தலைவியை மணந்து, தன் ஊருக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று, முறையாகப் பிரியாதுறையும் குடும்பவாழ்வை இனி நடத்தவேண்டும் என்பதாம்.

சொற்பொருள் : அணிவரை - அழகிய மலை; மருங்கு - பக்கம்; மலைச்சாரல். ஐது வளர்தல் - சிறப்பாகச் செழித்து வளர்தல். மணியேர் தோடு - நீலமணி போன்ற கரும்பின் தோடு. மையார் ஏனல் - கருமைபொருந்திய தினைக்கதிர்; தடைஇய வளைந்துள்ள. பெரும்புனம் - பெரிய தினைப்புனம்; கண்ணுதல் நினைத்தல். அணிகிளர் - அழகுகிளர்தல்; அணிகள் ஒளிர்தலும் ஆம். சால - மிகுதியாக. கடியிடி - கடுமையான முழக்கம். செத்து - என்று நினைத்து. தினைஉணங்கல் - காய்ந்த தினை மணிகள். யாணர்- புதுவருவாய். தம் உறைவின்ஊர் - தம்மவரோடு வாழும் வாழ்தற் கினிதான ஊர்.

உள்ளுறை : புலி யானையை வீழ்த்தி முழங்கிய வெற்றி முழக்கத்தை,இடிமுழக்கம் என்று பிழைபட நினைத்து,மழை வருமென அஞ்சிக் காய்ந்த தினையைக் குவிக்கும் ஊர் என்றனள். தலைவனை வரவொட்டாதபடி எழுந்த ஊரலரினைத் தாய் திரியவுணர்ந்து, கட்டும் கழங்கும் காணற் பொருட்டுத் தலைவியைப் புனங்காவலின் விலக்கி, இல்லத்திற்கு அழைத் தேகுவாள் என்பதாம்.

களவை

.

விளக்கம்: 'செழித்த தினைக்கதிர் பிடியானை கைபோலத் தொங்கும் பெரும்புனம்' என்றது, அங்ஙனம் மயங்கிக் களிற்றி யானை வருதல் கூடும் என்பதாம். இது, புனங்காவல் மேற் கொண்ட தலைவியுடன் தலைவன் வந்தொழுகும் நுட்பமாகச் சுட்டியதுமாம். சுட்டியதுமாம். 'இடை தெரிந்து' என்றது, எழுந்த ஊரலரையும், அன்னை ஏற்பாடு செய்துள்ள வேலனை அழைத்துக் கட்டுக்காண முயலும் முயற்சி போன்றவற்றையும். இதனால், இனி இற்செறிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் உணர்த்தினள். 'சந்தனம் பூசிய மார்பிலே சால வண்டு ஆர்ப்பச் செல்வன் செல்லுங்கொல்' என்றது, பிற மாதர் அவனை விரும்புமாறு நம்மைக் கைவிட்டுப் போவான் போலும் என்றதாம். புலிமுழக்கை இடிமுழக்கென மயங்கித் தினை தொகுக்கும் ஊரன் என்றது, அவனும் நம்முடைய உண்மை நிலையினை உணராதே, தன் இன்பநாட்டமே மிகுதியான மயக்கினன் என்றதாம்.

பாடபேதங்கள் : செல்வன் செல்லுங்கொல் தானே; இன் பல்யாணர். நற்றிணை தெளிவுரை

பயன் : தலைவன்

தலைவன்

நம்பிகட்டுவனார்

301

தலைவியை மணங்கொள்ளுதலிலே

முயற்சி செய்பவனாகி, அவளைப் பிரியாது இன்புறும் மனையுறை வாழ்க்கையைப் பெறுவதற்கு நாடுவான் என்பதாம்.

345. '`தெளிவே தேய்க!

பாடியவர் : நம்பி குட்டுவனார். திணை : நெய்தல். துறை: தெளிவிடை விலக்கியது.

[(து -வி.) வரைந்து கொள்ளாது காலம் தாழ்க்கின்ற காதலன் நிலையை உளங்கொண்டு, இடையிடை நேரும் சிறுசிறு பிரிவுக்கும் ஆற்றாதவளான தலைவி கலங்குகின்றாள். அவளைத் தெளிவிக்கக் கருதித்,தலைவன், 'யான் விரைய வந்து வரைவேன்; பொறுத்திரு' என்கின்றான். அது கேட்ட தோழி, அவனை அவ்வாறு கூறுதல் வேண்டாவென விலக்கிக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது.)

கானற் கண்டல் கழன்றுகு பைங்காய் நீல்நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென, உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல், சிறுவெண் காக்கை ஆவித் தன்ன, வெளிய விரியும் துறைவ! என்றும்,

.

5

அளிய பெரிய கேண்மை நும்போல்,

சால்பு எதிர்கொண்ட செம்மை யோரும்

தேறா நெஞ்சம் கையறுபு வாட,

நீடின்று விரும்பார் ஆயின்,

வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!

10

தெளிவுரை: மிகுதியான காற்று எழுந்து மோதுதலாலே, கடற்கரைச் சோலையிலேயுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்றன பசுமையான காய்கள்; நீல நிறத்தையுடைய கருமையான கழியிடத்தே அவை வீழ்ந்து உள்ளேயும்

போகின்றன. அவை வீழ்ந்ததாலே, ஆம்பலின் அரும்பானது சாய்ந்து, சிறிய வெண்ணிறமுள்ள நீர்க்காக்கை வாய்திறந்து கொட்டாவி விட்டாற்போல வெளியவாய் மலர்கின்றன. அத்தகைய துறைக்கு உரியோனே! எக் காலத்தினும், கருணையே செய்தலையுடைய பெரிய கேண்மையினைப் பாராட்டும் நும்மைப் போலச், சால்பினை எதிரேற்றுக் கொண்ட செம்மை உடைய 302

நற்றிணை தெளிவுரை

வர்களும், தெளியாத நெஞ்சத்துடனே செயலழிந்து வாடும் படியாக, நெடிது காலம் விரும்பாதிருப்பார் ஆயினால், அதன் பின்னும், அருள்தலை எதிர்பார்த்து உயிர்வாழ்ந்திருத்தல்தான் எதற்காகவோ? ஆகவே, நின் தெளிவுப் பேச்சுக்களும்,இனி, அழிந்து இல்லாதேயே போவனவாக என்பதாம்.

கருத்து : ‘நின்னை நம்பி உறவாடிய எமக்கு வருத்தமும் சாவுமே பரிசுபோலும்' என்று வருந்தியது இது.

சொற்பொருள்: கானல் - கடற்கானல். கண்டல் - கடற் கரைப் பாங்கிலுள்ள ஒருவகை மரம், உட்பட - உள்ளே சென்றுமறையுமாறு. உறுகால் - எழுந்த காற்று. ஆவித்தன்ன - கொட்டாவி விட்டாற் போல. சால்பு - சான்றாண்மைப்பண்பு. எதிர்கொண்ட - எதிரேற்றுக் கொண்ட. கையறுதல் - செய் லழிதல்; கை - முயற்சி; செயல். அறுதல் - அழிதல். தெளிவு- தெளிவிக்கும் நிலை.

உள்ளுறை : மலரும் பருவத்தை அடையாத பொதியரும் பும், கண்டற்காய் வீழ்ந்ததால் வருத்தமுற்று மலரும். அது போல அலருரைக்கும் பெண்டிரின் தூற்றுதலால், இதுகாறும் தன் உள்ளத்துயரை மறைத்து வாழ்ந்த இவள், இனி வாய் திறந்தே புலம்புதலும் கூடும் என்பதாம்.

விளக்கம்: காற்றால் உதிர்க்கப் பெற்ற கண்டற்காய் ஆம்பல் அரும்பை மலர்வித்துப் பின்னே உட்சென்று கழிச் சேற்றுள் மறையும் என்பது மிக நல்ல உவமையாகும். 'பைங்காய்' என்றது, அதுவும் வீழும் பருவத்துக்கு முன்னே 'பசுங்காய்' காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தது என்பதாம். தாயைக் குறித்ததாகக் கொண்டால், அலராலே சினமுற்று வீடுவந்த அன்னை, இவள் உள்ளடங்கிய காமநோயை வலிந்து வெளித்தோன்றச் செய்வாள் என்றலும் ஆம்.

இனிக், காற்றால் வீழ்ந்த கண்டற்காய் ஆம்பல் முகையை மலரச் செய்தாற்போல, அலராலே எழுந்த தூற்றுதல் தலைவன் உள்ளத்தையும் தாக்கி விரைவில் மணம்புரிந்து கொள்ளும்படி செய்யும் என்பதுமாம். 'அளிய பெரிய கேண்மை நும்போல என்றது எள்ளற் குறிப்பு.

மேற்கோள்: 'இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரை வேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளி விடை விலக்கியது' என்று குறிப்பிட்டு, இச் செய்யுளை நாற்றமும் தோற்றமும் (தொல் 114) என்னும் தொல்காப்பியப் நற்றிணை தெளிவுரை

எயிறை

Bibb ororing and Go in B மகாங் சிற

தலைமகன் ஐஞ்சு

303.

பொருளதிகாரச் சூத்திர உரையுள், ஆசிரியர் நச்சினார்க்கினியர் காட்டுவர்

பயன் : தெளிவித்தால் ஆவதென்ன? இவளை விரைந்து மணங்கொள்ளுதலே செய்யத்தக்கதான ஒரு செயலாகும் என்பதாம்.

346. நக்கனைபோலும் நெஞ்சே!

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார். திணை : பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: பொறையன் கொல்லி.

[ (து -வி.) 'பொருள் தேடி வரக் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற் சென்று வாழ்கின்றான் தலைவன் ஒருவன். அவன், அவள் உறவின் வேட்கை மேலெழுந்து வருத்த, தனக்குள் ஆற்றாமையால் கூறுவபோல அமைந்த செய்யுள் இது.]

குணகடல் முகந்து, குடக்கேர்பு இருளி, தண்கார் தலைஇய நிலந்தணி காலை, அரசுபகை நுவலும் அருமுனை இயவின், அழிந்த வேலி அம்குடிச் சீறூர்

ஆளில் மன்றத்து, அல்குவளி ஆட்டத் தாள்வலி ஆகிய வன்கண் இருக்கை, இன்று, நக்கனைமன் போலா-என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந்தண் சொல்லிச் சிறுபசுங் குளவிக் கடிபதம் கமமும் கூந்தல்

மடமா அரிவை தடமென் தோளே?

5

.cn

10

தெளிவுரை : நெஞ்சமே! கீழ்கடலிலே நீரினை முகந்து கொண்டு, மேற்றிசைக்கண்ணே எழுந்து சென்று, இருண்டு. குளிர்ந்த மேகம் மழைபெய்ய, அதனாலே நிலமும் தன் வெம்மை மழைபெய்ய,அதனாலே தணிந்து குளிர்ந்துவிட்ட பொழுதிலே-

அரசினது பகையால் அழிவுற்றேன்' என்று தன்னுடைய அழிபாட்டைப் பிறருக்குக் காட்டிச் சொல்லியபடி அழிந்து 304

நற்றிணை தெளிவுரை

கிடக்கும், அரிய போர்முனையை அடுத்துள்ள வழியிலே, வேலி யழிந்து போய்க் கிடக்கும் முன் அழகியதாயிருந்த குடிகளை யுடைய சிற்றூரினிடத்தே, ஆள் வழக்கற்றுப்போன ஊர்ப் பொது மன்றத்திலே, அசையும் காற்றானது ஆட்டி அசைத்துக் கொண்டிருக்க, வீரத்தன்மை கொண்ட வன்மையமைந்த பாடி இருக்கையிலே,

மணம்

இன்றைக்கு, எக்காலத்தும் நிறைவோடு பொருந்தி. விளங்கும் மதியத்தைப்போல விளங்குகின்ற பொறையனது. மிகத் தண்மைகொண்ட கொல்லிமலையிடத்திலேயுள்ள, சிறிய பசிய மலைப்பச்சையினைச் சூடுதலாலே, மிகுதியான கமழும் கூந்தலையுடையவளும், இளைய அழகிய மடந்தையு மாகிய அவளின், வளைந்த மென்மையான தோள்களை, நீதான் தழுவுதற்கு விரும்பினாய் போலும் என்பதாம்.

கருத்து: 'என்றைக்கு அவளைத் தழுவும் இன்பத்தை அடைவோமோ?' என்பதாம்.

சொற்பொருள்: குணகடல் - கீழ்கடல்; இந்நாளைய வங்கக் கடல். 'குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி' என்றதால், இது வடகிழக்குப் பருவக் காற்று என்க. தலைஇய - பெய்து விட்ட. நிலம் தணி காலை - நிலம் வெம்மை தணிந்து குளிர்ந்து விட்ட காலம்; இது வாடைக் காலம். தாள்வலி - முயற்சியின் வலிமை. வன்கண் இருக்கை - வன்கண்மை தரும் இருக்கையும் ஆம்; அது . பாசறை இருக்கை. நிறையுறு மதி - முழுநிலவு. பொறையன் - பாண்டியன்; குளவி - மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறுவர். கடிபதம் - மணத்தின் தன்மை.

விளக்கம்: அவன் மீள்வதாகச் சொல்லி வந்த கார்கால மும் கழிந்து,வாடைக்காலமும் வந்தது. அவனோ பகையழித்து வென்று, பாழூர் மன்றிலே அமைந்த பாசறை இருக்கையிலே உள்ளனன். இரவின் அமைதியில், வானத்து முழுநிலவு அவன் வேதனையை மிகுவிக்கிறது. வினை முடிந்ததாதலின், ஊர் திரும்பும் நினைவு மேலெழுகின்றது. அரசாணையை எதிர்பார்த் திருக்கும் அவன் நினைவிலே, அவன் காதலி நிற்கின்றாள். காலம் கழிந்ததாதலின், அக்காலத்தே செழித்திருக்கும் பச்சையை, அவள் தன் கூந்தலுக்குச் சூடுவதும் அவன் நினை விலே வந்து நிழலிடுகின்றது.

கார்

'நக்கனை மன் போலா' என்றது, அன்று திண்மையோடு பிரிந்துவரத் துணைசெய்த மனம், இன்று நெகிழ்ந்து அவள் நற்றிணை தெளிவுரை

கலைவி

спров

பெருங்குள்தூள் கீழார்

305

நினைவை எழுப்பி வருந்தியதை நினைந்து இகழ்ந்து சொல் லியதும் ஆம்.

பயன் : வினை முடிந்ததாகலின், விரைவிலே தன் ஊருக்குத் திரும்புதற்குரிய முயற்சிகளிலே தலைமகன் மனம் செலுத்துபவ னாவான் என்பதாம்.

347. காண விடுமோ?

பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார். திணை: குறிஞ்சி. துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.

( (து - வி.) தலைவன் சொன்னபடி மணந்து கொள்ளும் முயற்சியிலே மனஞ் செலுத்தாமல் இருப்பது கண்டு தலைவி மனம் கலங்கி நலிகின்றாள். அவன் சொற்பிழையான் என்று தோழி தேறுதல் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி தன்னு டைய மனநிலைமையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மாமழை மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறியு வான்புகு தலைய குன்றம் முற்றி அழிதுளி தலைஇய பொழுதில், புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடம்தொட் டன்ன, அருவி இழிதரும் பெருவரை நாடன், நீர்அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அளிய

காண விடுமோ-தோழி என் நலனே?

·5

10

தெளிவுரை: தோழீ! வேனிற்காலத்திலே தவளையானது மணலினுள்ளே சென்று அடியிற் புகுந்துகொண்டு, வெப்பத் திற்கு மறைந்து வாழும். அதனைப் போலவே, என் நலனும், அவர் பிரிவின் வெம்மைக் காலத்திலே 'என்னை வாட்டி வதைத்து விடுவதே அல்லாமல், என்னுள்ளேயே சென்று மறைந்து ஒடுங்கிக் கிடக்குமோ? முழங்கும் கடலினிடத்தே 306

நற்றிணை தெளிவுரை

ச்

நீரினை முகந்த,நிறைந்த சூலையுடைய கருமேகங்கள், அகன்ற திசையிடம் எல்லாம் மறையும்படியாக வானிலே எழுந்து பரவும்; உயர்ந்த மலையிடம் எல்லாம் ஒளிரும்படியாக மின்னலைச் செய்து வருத்தும்; பாம்புகள் தலைதெறித்து இறந்து வீழுமாறு இடிகளை முழக்கும்; வானத்தே புகுவதுபோல உயர்ந்த முடிகளைக் கொண்ட குன்றங்களைச் சூழ்ந்து வளைத்துக் கொள்ளும்; கொண்டு, மிகுதியான மழையினையும் பெய்யத் தலைப்பட்ட பொழுதிலே, புலையன், அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணிடத்தே மோதுதலால் எழுகின்ற ஓசை போல அருவியும் ஒலியோடு வீழுகின்ற பெரிய மலைநாட்டவன் நம் தலைவன். அவன், 'இன்ன நிலையினன் ; பேரன்பினை உடை யவன்' எனப், பலவாறாக அவன் சிறப்புக்களை எல்லாம் கூறும் பரிசிலர்களுடைய பெரிய பேச்சுக்களை யான் காணவும் கேட்க வும் உயிரோடிருக்க, விதிதான் என்னையும் நெடுநாள் இனியும் விட்டு வைக்குமோ? என்பதாம்.

கருத்து: 'அவர் மனங்கனிந்து வந்து மணம் செய்து கொள்ளும் வரைக்கும் யான் உயிரோடு இரேன்' என்பதாம்.

சொற்பொருள்: கமஞ்சூல் - நிறைந்த சூலையுடைய. மாமழை - கார்மேகம். மாதிரம் - திசை. நனந்தலை - அகன்ற இடம். புதைய - மறைந்து போய்ப் புலப்படாது போக. மிளிர - ஒளிசெய்ய; தெறித்து வீழ என்றும் ஆம். வான் புகுதலைய- வானிற் புகுவது போன்ற உயர்ந்த முடிகளைக் கொண்ட. அழிதுளி - சிதைந்த துளிகளும் ஆம். புலையன் - தண்ணுமை கொட்டுவோன். பேழ்வாய் - அகன்ற வாய். இடம் - கண்ணிடம். தொடுதல்-அடித்தல். பெருவரை பெரு மலை. நெடுமொழி - பெரும்பேச்சு: வாழ்த்திப் பாடுதலும் ஆம். தேரை - தவளை வகை.

இறைச்சி : மலையிலே மழைபெய்த காலத்திலே, புலையன் அடிக்கும் தண்ணுமையின் ஒலிபோல அருவி வீழும் என்றனர்; இது தலைவன் வந்து தலையளி செய்து திரும்பியதும் எங்கும் அலர் எழுந்து ஒலிக்கும் என்றதாம்.

விளக்கம்: மழை பெய்து அருவியும் ஒலியோடு வீழ்தலைக் குறிப்பிட்டுக் கூறியது. கார்காலம் வந்து கழிந்தபின்னும், அவன் மனம் வரைந்து மணந்து கொள்வதிற் செல்லவில்லை என்று வருந்திக் கூறியதாம். எங்கும் குளிர்ச்சி பரவியபோதும் தன்னுளத்து வெம்மை மாறிற்றில்லை என்றதும் ஆம். 'வேனில் தேரையின் அளிய என் நலன்' என்றது, 'வேனிற் காலத்துத் நற்றிணை தெளிவுரை

புவிழவம் வெள்ளிவீதிய

307

தேரைபோல ஒட்டியுலர்ந்து வெளிறிப்போன என் அழகு என்று குறித்துக் கூறியதும் ஆம். அதுதானும், கார்மழை பெய்யத் தன் வாட்டம் தீர்ந்தது; யானோ என் வாட்டம் தீரப் பெற்றேனில்லை என்றதும் ஆம். 'புலையன் தண்ணுமை கொட்டி எழுப்பும் ஒலி' என்று அருவி ஒலியைக் கூறியது, அதுதான் மங்கல நாளில் ஒலிக்காது..அமங்கல நாளிலே ஒலிக்கும் ஒலி யாதலின், தன் அழிவே உறுதி என்ற மன அழிவால் கூறியது. எனவும் கொள்க.

י

வான்புகு தலைய குன்றம்' என்ற சொற்றொடரையும் பாடிய ஆசிரியரின் பெருங் குன்றூர் கிழார்' என்பதையும் பொருத்திக் கண்டு மகிழ்க.

.

பயன் : தலைவியின்

மனநெகிழ்வால் துடிப்படையும்

தலைவன், வரைந்து வருதலிலே மனஞ்செலுத்துபவனாவான் என்பதாம்.

348. உலகத்தோடு போராடுமோ?

பாடியவர்: வெள்ளி

வீதியார். திணை: நெய்தல்.

துறை : வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்

கின்றாள் சொல்லியது.

[ (து - வி.) தலைவன் பிரிவாலே பொங்கி எழும் ஆற்றாமையைத் தாங்க முடியாத ஒரு தலைவி, தன் துயரை நினைந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]

நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப்

பான்மலி கடலின் பரந்துபட் டன்றே;

ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக்

கலிகெழு மறுகின் விழவய ரும்மே

கானே, பூமலர் கஞலிய பொழிலகம் தோறும்

தாதமர் துணையொடு வண்டிமி ரும்மே;

யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு கனையிருங் கங்குலும் கண்படை இலெனே; அதனால், என்னொடு பொரும் கொல்இவ் உலகம்? உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே?

5

10. 808

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : நிலவானாலோ, நீல நிறத்தையுடைய வானிடமெல்லாம் கதிர்களைப் பரப்பியதாய், பால் மிகுந்த கடலைப் போல, எங்கும் பரந்திருக்கின்ற தன்மைத் தாய் உள்ளது;

ஊரானாலோ, தழைந்து வருகின்ற பேரொலியோடு நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்தெழும் பேராவாரத்தோடு, தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மைத்தாய் உள்ளது;

காடானாலோ, பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொழிலிடங் கள் தோறும், தாம் விரும்பும் துணையோடு கூடியவாக வண்டினங்கள் திரிந்து ஒலி செய்வதாக உள்ளது;

யானோ. புனைந்துகொண்ட அணிகளையும் கழன்று வீழுமாறு செய்தவளாகத், தனிமைத்துயராலே கொண்ட வருத்தத்தோடு, மிகுதியான இருளையுடைய இந்த இரவுப் போதெல்லாம், கண்களை மூடாதவளாகத் துயிலின்றி வருந்தியவளா யுள்ளேன்.

அதனாலே, இந்த உலகம், தன்னோடு மகிழவில்லையென்று நினைத்து என்னோடு வந்து போரிடுமோ? அல்லது, என்னுடைய துயரங்கொண்ட நெஞ்சமானது, தன்னோடு நெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லை யென்று சென்று,உலகத்தோடு உலகத்தோடு போய்ப் போரிடுமோ?

எதுவுமே தோன்றவில்லையே எனக்கு?

கருத்து: 'எங்கும் மகிழ்ச்சியே தோன்றும் வேளையிலும், தனிமைத் துயரம் என்னை மட்டுமே வருத்துகின்றது' என்பதாம்.

சொற்பொருள்: பான்மலி கடல் - பால் நிறைந்த கடல்; நிலவு பாற்கடல் போல எங்கும் ஒளிபரப்பிப் பரந்தது என்பதாம். ஒலிவருதல் - தழைந்து வருதல். சும்மை - பேரொலி. கலி - ஆரவாரம். விழவு - விழா; இது வேனில் விழா ஆகலாம். கனையிரும் கங்குல் - மிகுதியான இருளையுடைய பொழுது. புலம்பு - தனிமைத் துயரம்.

இரவுப்

விளக்கம்: நிலவொளியானது காமத்துயரை மிகுவிக்கும் என்பதால், அதனை முதலில் கூறினள். பாற்கடலிடத்தே நிலவு தோன்றியபின், அடுத்து ஆலகாலமும் நஞ்சாகத் தோன்றியது என்பதும் நினைக்க. ஊர் விழா நினைந்து வருந்தியது, விழவிலே கலந்தாடும் மகிழ்ச்சியும் துணையோடியிருப்பவர்க்கே இன்பந் தருவது என்பதனால் ஆகும். அடுத்து, துணையோடு வண்டினம் கலைவள்

My goa

நற்றிணை தெளிவுரை

மிளைகிழான் நல்வேட்டாார்

309

ஒலித்தலைக் கூறியது, சிற்றறிவினவான அவையும் துணையைப் பிரியாது கலந்து மகிழ்கின்ற போதில், தான் தனித்திருந்து வருந்துவதை எண்ணியது. தனிமையாலே வருந்துவாரின் மனம், துணையோடு கலந்து செல்லும் எந்த உயிரினத்தைக் காணும்போதும், மேலும் கனன்று நலியும் என்பதாம்.

ஆகவே, ஊரோடு ஒன்றாது தனித்துள்ள நான், என்னோடு துயரப்படாத ஊரைப் பொருதுவேனோ? அல்லது, ஊர் தன்னோடு மகிழாத என்னைப் பொருதுமோ? என்றது, அவள் தனிமை மிகுதியின் தாங்கவியலாத் தன்மையைப் புலப்படுத்துவதோடு, மனித மனத்தின் இயல்பையும் காட்டும். தன்னைப்போலவே தன் சுற்றுப்புறமும் பிறரும் விளங்குவதை எதிர்பார்ப்பதும், விளங்காதபோது நொந்து வருந்துவதும் மனவியல்பு ஆகும்.

பயன் : தலைவியின் ஆற்றாமை மிகுதியானது. இந்தப் புலம்பலாலே சிறிது தணிதல் கூடும் என்பதாம்.

349. என்னென நினையும்?

பாடியவர்: மிளைகிழான் நல்வேட்டனார். திணை : நெய்தல். துறை : தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

[ (து - வி.) தலைவன் ஒருவன், தலைவியின் தோழியின் உதவியால் தலைவியை அடைய முயல்கின்றான். அவள் அவனுக்கு இசையாளாய் ஒதுக்கவே, அவன் துயரம் பெருகுகின்றது. அவன், அவள் கேட்டுத் தன் நிலையைத் தெளியும்படியாகத் தனக்குள்ளே சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]

கடுந்தேர் ஏறியும், காலிற் சென்றும்,

கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனையம் ஆகவும், செய்தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப், பின்னிலை முனியா நம்வயின்,

என்னென நினையுங்கொல் பரதவர் மகளே!

5

LO'

10. 310

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை: விரையச் செல்லும் தேரிலே ஏறிச் சென்றேன். தேரைத் தொலைவிலே நிறுத்திவிட்டுக் காலால் நடந்தும் சென்றேன். வளைந்த கழியின் அருகிலேயுள்ள அடும் பின் மலர்களைக் கொய்து தந்தேன். தாழையின் மலரைப் பறிக்குமாறு அவளைத் தூக்கியும் உதவினேன். நெய்தல் தழை யையும் மலரையும் கொய்து தந்தேன். இவ்வாறெல்லாம் செய்து, அவளைச் சேர்ந்தது போலவே கருதிய உள்ளம் உடையவனானேன். அந்நினைவோடு நாள்தோறும் இத்தன்மைய னாகவே ஆயினேன். இருந்தும் -

செய்யதான தாரினையும் பசுமையான பூண்களையும் அணிந்த வேந்தர்கள் பட்டு வீழ்ந்த பாசறையின்கண்ணே, வேல்கள் ஒளிசெய்த வண்ணமிருந்த படைக்கடலிலே, பகைக் களிறு பட்டு வீழும்படியாக ஆண்மையோடு போரிட்டான் ஒருவன். அவன், அப்போது பெரும் புண்ணையும் களத்திலே பெற்றான். அவனைப் பேணிக் காப்பார் எவரும் இல்லாமை யால், பேய் ஒன்று வந்து காத்து நின்றது. அதுபோல, இத் தோழியின் பின்னாகவே நின்று, இவள் தெளிவடையும் வரையும் வெறுப்படையாமலிருக்கின்றோம் நாம். நம்மிடத்தே, நம் காதலியாகிய பரதவர் மகள்தான் என்னென்னவெல்லாம் நினைவாளோ?

·

கருத்து: 'இவளும் உதவ முன்வந்திலன்; அவள்தான் என்ன நினைப்பாளோ?' என்பதாம்.

சொற்பொருள்: கடுந்தேர் - கடிதாகச் செல்லும் குதிரை களையுடைய தேர்; தேர் ஏறிச் சென்றது கூறியது அவனுடைய உயர்குடியைச் சொல்லியதாம். காலிற் சென்று - நடந்து சென்று; காற்றாலே செலுத்தப்படும் கலத்தினைச் செலுத்திக் கடல்வழியே சென்று எனவும் கொள்ளலாம். கைதை தாழை. தூக்கியும் - கொய்யுமாறு அவளைத் தூக்கியும், அவளைக் கரையிலிருந்து எட்டிப் பறிக்குமாறு. தான் தாளையை மேலாகத் தூக்கியும் என்றலும் பொருந்தும். 'புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சம் - புணர்ந்ததேபோல இச்சிறு சிறு உதவிகளைச் செய்ததனாலேயே களிப்புற்ற நெஞ்சம். அழுவம் - படைப் பெருக்கம். பின் நிலை - பின்னேயாக இரந்து நிற்றல். முனியா - வெறுக்காத.

விளக்கம்: புண்பட்டுக் கிடக்கும் வீரனைக் காப்பார் இல்லாத போதில், பேயும் இரங்கி வந்து காத்து நிற்குமே? இங்கோ, இத் தோழி புண்பட்டு நலியும் எனக்கு உதவி செய்ய தல வி

நலைவன்

நற்றிணை தெளிவுரை

பரனத

811

மனமில்லாதிருக்கின்றனளே என்பதாம். 'என் என நினையுங் கொல்' என்றது, தான் தோழியின் பின்னாகவே இரந்து நிற்ப தைக் காணும் தலைவி, தன் செயலைக் குறித்து மாறுபாடாகவும் நினைப்பாளோ என்று வருந்திக் கூறியதாம். இதனைக் கேட்கும் தோழி, தலைவியும் இவனும் பலகாற் பழகிய நட்பினர் என்று தெரிவாளாகவே, அவனுக்கு உதவ முன்வருவள் என்பதாம்.

மேற்கோள்: 'தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையுங்கொல் என்றது' என, இச் செய்யுளை, மெய்தொட்டுப் பயிறல் என்னும் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் காட்டுவர்.

பாடபேதங்கள் : கைதை ஊக்கியும், முனியா நம்மை ஓராள் என்னுங் கொல்; பெரும்புண் உறுநர்க்கு.

பயன் : தலைவன் இனி இறந்துபடுதலும் நேருமென அஞ்சலுறும் தோழி, தலைவியுடன் பேசி, அவளையும் அவனையும் கூட்டுவிப்பாள் என்பதாம்.

350. நின்னைச் சார விடேன்!

பாடியவர்: பரணர். திணை : மருதம். துறை : தலை மகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. சிறப்பு : விரானின் இருப்பை.

- வி.) தலைமகன் பரத்தையுறவு கொண்டிருந்தவன்

மீண்டும் தன் மனைக்கு வருகிள்றான். தலைமகள் உள்ளத்திலேன்

அன்ன்மீது ஊடல் இருந்தாலும், கூடவே, அவனை ஏற்றுக் கொள்ளும் பண்பும் கலந்திருக்கிறது. அவள், அவனைப் பழித்துக் கூறி, தன் ஆற்றாமை தீர்ந்தவளாக, அவனை ஏற்றுக் கொள்ளு கின்றாள்.]

வெண்ணெல் அரிநர் தண்ணுறை வெரீஇப் பழனப் பல்புள் இரியக் கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை அன்ன, என் தொல்கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன், விடுக்குவென் ஆயின், கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை

5 $18

சாடிய சாந்தினை, வாடிய கோதையை;

ஆசில் கலந்தழீ இயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின் றோளே!

நற்றிணை தெளிவுரை

10

தெளிவுரை : வெள்ளை நெல்லை அரிபவர்கள் முழக்குகின்ற தண்ணுமையின் ஒலிக்கு வெருவிப், பழனத்திடத்தேயுள்ள பலவான புள்ளினங்களும் கழனியிடத்தேயாக வளைந்திருக்கும் கிளைகளைக்கொண்ட மருதமரத்தின்மீதே சென்று சேர்தலால், அதனிடத்தேயுள்ள தொங்கும் பூங்கொத்துக்கள் கழனியிடத்தே உதிரும். இத்தகையதும், இரவலருக்குத் தேர்களையே வழங்கும் வண்மையுடைய விராஅனுக்கு உரியதும், இருப்பையூர் ஆகும். அதனைப் போன்று, என் பழைய கவின் முற்றத் தொலைவதாயினும் தொலைவதாகுக. நின்னை என்னருகே நெருங்கவே விடமாட்டேன். அங்ஙனம் நெருங்க விடுவேனாயின் தாவி என்னை மார்பகத்தேயிடும் நின் கைகளோ விலக்குதற்கு இயலாதவாறு தடுத்து என்னைத் தான் தாங்கும் வன்மை உடையன. பரத்தையின் குவிந்த முலைகளாலே மோதப்பெற்ற சந்தனத்தையும் நீ நின் மார்பிலே உடையை. அவளோடு தழுவிக் கிடத்தலாலே வாடிப்போன கோதையினை யும் பெற்றுள்ளனை. ஆதலாலே, நின்னைத் தழுவுதல் என்பது, கழித்துப் போடப்பெற்ற கலங்களைத் தொடுவதற்கே எமக்கு ஒப்பானதாகும். ஆகவே, எம் மனையிடத்துக்கு வாராதே கொள். நின்னைத் தழுவி நின்றவளான அந்தப் பரத்தையும், நின்னோடு கலந்து மகிழ்ந்தாளாய் நெடுநாள் வாழ்வாளாக!

கருத்து: அவனைப்பற்றிய சொல்லித் தன் சினம் தீர்ந்தவள், ஏற்பாள் என்பதாம்.

குறையை மனந்திறந்து ஊடல் தீர்ந்து, அவனை

சொற்பொருள்: வெண்ணெல்- வெள்ளை' அரிசியுடைய நெல். அரிநல் - அரிதல் மேற்கொள்வார். வெரீஇ - அஞ்சி. இரிய - அஞ்சி அகல. வாங்குசினை - வளைந்துள்ள கிளை. தூங்கு துணர் - தொங்கும் பூங்கொத்து. தேர்வண் - தேர் வழங்கும் இருப்பை - இருப்பையூர். கடைஇ - சொல்லி. சாந்து - சந்தனத் தேய்வை. கோதை-மலை.ஆசுஇல் கலம் - கழித்துப்போட்ட பழங்கலம்; இதனைத் தொடுவதும் தகாது என்பது மரபு. கவைஇ - தழுவி.

வண்மை.

உள்ளுறை : மள்ளர் முழக்கும் தண்ணுமை ஒலிக்கு அஞ்சிய புள்ளினம் செறிதலால், மருதின் கிளையிலுள்ள பூங் கொத்துக்கள் உதிரும் கழனியில் என்றனள்; என்பால் நினக்கு நற்றிணை தெளிவுரை

Cons :

தாய்

மலுறைக்கண்ணத்தனார்

313

அன்பில்லையாயினும், அயலார் உரைக்கும் பழிக்கு அஞ்சியே, நீயும் இங்கு வந்தனையாதலின், என் உள்ளம் நின்னை ஏற்காமல் வெறுத்தே ஒதுக்கும் என்பதாம்.

விளக்கம்: 'வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை' பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்' என்று அகநானூற் றுள்ளும் (204) வரும். 'கவு' என்பது அகத்திடுதல் என்னும் பொருளது; கவவுக்கை- என்பது தன்னோடு உடல் இறுகக்கட்டித் தழுவும் கையணைப்பு என்று கொள்க. 'என் தொல் நலனும் தொலையினும் தொலைக' என்றது, நின் செயலாலே தொலைந்து போயின அதுதான், இனிமேலும் தொலைவதானாலும் தொலை வதாக என்பதாம். நெல்லரிவோர் தண்ணுமை கொட்டுவது கழனியிடத்துள்ள பறவையினம் அகல்வதற்கும்; அரிவோர் திரள்வதற்குமாம்.

பாடபேதங்கள் : கலங் கொளீஇயற்று; கலம்கழீயற்று; ஆசில்கலம் தழீஇயற்று.

பயன்: அவன் வலிந்துபற்றிக் கைவளைத்து இறுகத் தழுவினால், அப்பிடியை விலக்கி ஒதுக்க முடியாதவள் தான் என்று கூறுதலால், வெறுப்பினிடையிலும் அவள்பால் குடிப்பண் பின் உயர்ச்சி உள்ளத்தில் இழையோடுவதனை அறியலாம். ஆகவே, ஊடிப் பிணங்கினாலும், முடிவில் இசைந்து கூடுதலே பயனென்று கொள்ளலாம்.

351. புனம் காப்பின் நலன் பெறுவள்!

பாடியவர்: மதுரைக் கண்ணத்தனார். திணை : குறிஞ்சி. துறை : தோழி அருகடுத்தது.

[(து - வி) களவுக்காலத்தே "தலைவன் இடையிடையே வராதுபோகத் தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அதனால், அவள் உடலின் வனப்பும் குன்றுகின்றது. உடல் மாற்றங் கண்ட தாய்,'முருகு அணங்கிற்றுப் போலும்' என்று கருதி, வெறியயர் ஏற்பாடு செய்கிறாள். அதற்கு அஞ்சிய தோழி, 'புனங் காவலுக்கு இவள் சென்றாலே இவள் அழகு மீண்டுவிடும் என்று சொல்வது போல அமைந்த செய்யுள் இது.]

5.-20 314

நற்றிணை தெளிவுரை

இளமை தீர்ந்தனள் இவளென வளமனை அருங்கடிப் படுத்தனை யாயினும் சிறந்திவள் பசந்தனள் என்பது உணராய் பல்நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி-வேண்டு, அன்னை! கருந்தாள் வேங்கையம் குவட்டிடைச் சாந்தின் செய்த களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்துச் சிறுதினை வியன்புனம் காப்பின்

பெறுகுவள் மன்னோ என் தோழீதன் நலனே.

தெளிவுரை : அன்னாய்! வாழ்வாயாக! யான் சொல்லப் போகும் இதனையும் கேட்பாயாக; இவள்தான் தன்னுடைய பெதும்பைப் பருவமாகிய இளமையிற் கழிந்து விட்டனள் என்று நினைத்து, நம் வளமான வீட்டிலே வைத்து அரிய காவலுக்கு உட்படுத்தினை. என்றாலும், இவள் தன் பழைய அழகிலே சிறப்படைந்தாளல்லள்; மேலும் பசலை நோயை மிகுதியாக அடைந்தனள் என்பதை உணர்ந்தாய் அல்லை.பல நாட்களாகவே துயரமுற்ற நெஞ்சத்தைக் கொண்டனையாகித் தெய்வத்தைப் பேணிப்பேணி வருந்தாதே இருப்பாயாக. கருமையான அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய அழகான குன்றத்திடத்திலே, சந்தன மரத்தாலே செய்த, களிற்றியானையின் வலிமைக்கும் அஞ்சாத புலியினது தோலாலே வேயப்பட்டுள்ள கட்டுப்பரணிடத்தே சென்றிருந்து, சிறிய தினைகளையுடைய பெரும்புனத்தை மீண்டும் காத்திருப் பாளானால், என் தோழியாகிய இவளும், தன் அழகினை மீண்டும் அடையப் பெறுவாளே! அதற்கு ஏற்பாடு செய்க என்பதாம்.

கருத்து: இவள் மாற்றம் புனங்காவலின்போது ஏற்பட்ட காதலின் விளைவென்பதைக் குறிப்பால் உணர்த்தியதாகும்.

-

சொற்பொருள்: இளமை - இளமைப்பருவம்; இங்கே இது பெதும்பைப் பருவத்தைக் குறிக்கும். கடி - காவல். எவ்வம் - துன்பம். தெய்வம் - தெய்வம் என்ற பொதுச் சொல்லாயிருப் பினும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகனை வேட்டு வெறி அயர்தலாகவே கொள்க. குவடு - குன்று; கவட்டிடை என்பதும் பாடம்; அப்போது வேங்கைமரத்தின் இரண்டு கிளைகளாகப் பிரியும் கவடுபட்ட பகுதியிலே கட்டிய பரண் என்று கொள்க. சாந்தில் - சந்தன மரத்தில்.புலியதள் -புலித்தோல்.

5 நற்றிணை தெளிவுரை

315

விளக்கம்: பேதைமை கடந்து மங்கைமையாகிய மணப் பருவம் எய்தியதால் (இல்லிகவாப் பருவம்) காடுகாவலாற் கேடுசூழும் என்றஞ்சி இற்சிறைப்படுத்தல் வளமனை மரபு என்று கொள்க. 'தெய்வம் பேணி வருந்தல் வேண்டா' என்பத னால், அது மறுத்துக், குறிப்பாக அவள் கொண்ட காதல் நோயை கூறியதாகும். 'களிற்றுத் துப்பு அஞ்சாப் புலியதள்' என்றது. அதனையும் வென்று மேம்பட்ட மறமாண்பினர். அவள் தந்தையும் தமையன்மாரும் என்பதாம்; அது கண்டு தினைகவர வரும் யானைகள் அஞ்சி அகலும் என்பதும் ஆம்.

பயன் : இதனால், தலைவியின் களவுறவை அறிந்த நற்றாய், அதன் விவரங்களை மேலும் ஆராய்ந்து, அவனோடு தலைவியை மணவினைப்படுத்தி மகிழ்வள் என்பதாம்.

352. எவ்வாறு வந்தாளோ?

பாடியவர்: மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். திணை : பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்த தலைமகன், இடைச்சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.

((து-வி.) பொருளார்வம் மிகுதலாலே தலைவியைப் பிரிந்து வேற்று நாடு நோக்கிச் செல்கின்றான் தலைவன். இடை வழியிலே, அவன் நினைவிலே அவள் தோற்றம் தோன்றி மயக்க, அவன் வியந்து வருந்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.] இலைமாண் பகழிச் சிலைமான் இரீஇய

'.

அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன் வம்பலர் தொலைத்த அஞ்சுவரு கவலை அழல்போல் செவிய சேவல் ஆட்டி நிழலொடு கதிக்கும் நிணம்புரி முதுநரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத் தேர்திகழ் வறும்புலம் துழைஇ நீர்நயந்து பதுக்கை நிழல் ஒதுக்கிடம் பெறாஅ அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய நமக்கும் அரிய வாயின அமைத்தோள் மாண்புடைக் குறுமகள் நீங்கி,

யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

5

10 316

நற்றிணை தெளிவுரை

தெளிவுரை : நெஞ்சமே! இலைவடிவாகிய மாட்சியமைந்த அம்பினை வில்லிடத்தே மாண்புபட இருத்தியவர், உயிர் களிடத்தே அன்பற்ற ஆறலைப்போரான ஆடவர்கள். அவர்கள் கொன்றும் புண்படச்செய்தும் வருத்துதலாலே, வழக்கமாகப் போய்வருவார் பலரோடு புதியவரும் பட்டு வீழ்ந்துகிடந்த, அச்சம் வருதலையுடைய கவர்த்த நெறி அது. அதனிடத்தே, அழலைப் போலச் சிவந்த காதுகளையுடைய கழுகின் சேவல் பிணங்களைத் தின்னாதபடி, அதனை அலைக்கழிக்கும் கிழநரி யானது, அங்கே தோன்றும் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடும். அதன்பின், பச்சை ஊனை நிறையத் தின்று,நீர் வேட்கையுற்றதாய்ப், பேய்த்தேர் தோன்றும் வறண்ட பாலை யிலே, அங்குமிங்குமாக நீர் பருகுதற்கு விரும்பித் தேடியபடி அலையும். அலைந்து வருந்தியபின், பிணத்தை மூடியுள்ள கற் குவியலின் நீழலிலே தான் ஒதுங்கிக் கிடந்து களைப்பாறு தற்கும் இடம்பெறாது வருந்தியிருக்கும். அத்தகைய கடத்தற் கரிய சுரத்தின் கவர்த்த நெறியானது வருதலினாலே, வழி நடந்து வருந்தியுள்ள நமக்கும் கடத்தற்கு அரியவாயின். இவ்விடத்தே, மூங்கில் போலும் தோள்களையுடைய மாட்சி யமைந்த இளமடந்தையான நம் காதலியும், தன் மாளிகையை விட்டு வெளிப்போந்து எவ்வாறு வந்துசேர்ந்தாளோ? அவள் இரங்கத்தக்கவள்காண்!

கருத்து: "அவள் நினைவே தொடர்ந்து நெஞ்சில் நிறை கின்றது" என்பதாம்.

சொற்பொருள்: இலை மாண் பகழி -இலை வடிவாக முனை அமைந்துள்ள மாண்பமைந்த அம்பு; மாண்பாவது கூர்மையும் முன்னர்ப் பல உயிரைக் குடித்துள்ள தகுதியும். வேறு வடிவு களினின்றும் வேறுபடுத்த இலைமாண் அம்பு என்றனர்; பிற பிறைவாய் அம்பு முதலியன. மாண் இரீய - மாண்புடன் இருத்திய; மாண்பு என்பது இங்கே தன் குறி தப்பாது என்னும் திடமான மனவுறுதி. அன்புஇல் ஆடவர் - ஆறலை கள்வர். பிறரைக் கொன்று வழிபறிக்கும் இயல்பினர் ஆதலால், அன்பில் ஆடவர் என்றனர். வம்பலர் - புதியவர். 'பலருடன் என்றது, முன்பே அவ்வழி வந்து உயிரிழந்தவர் பலரையும். வம்பலர் - அன்று பட்டு வீழ்ந்தவர். சேவல் - கழுகுச் சேவல்; எருவைச் சேவலும் ஆம். வெய்துற்று - நீர் வேட்கையாலே வருத்தமுற்று. முதுநரி - கிழநரி; முதுநரியாயிருந்தும் அறிவற்று மயங்கித் திரிந்தது என்க. தேர் - பேய்த் தேர்; கானல் நீர். நற்றிணை தெளிவுரை

தோது

தலைவன்

கடிலர்

317

கொள்ளை-மிகுதி. மாந்துதல் - நிறையத் தின்னல். கவலை கவர்த்த நெறி.

விளக்கம்: ‘அழல்போற் செவிய சேவல்' என்றது போலவே, 'ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல்' (அகம். 51) எனப் பிறரும் கூறுவர். செஞ்செவி என்பதையே அழல்போல் என்று உவமித்தனர். வழியின் கொடுமை மிகுதியைச் கூறினதால், அதற்கு அஞ்சினான் என்பது பொருளன்று; அவ்விடத்தே வருந்துமவன் நினைவிலே தலைவி பின் நினைவு உருவெளித்தோற்றமாகத் தோன்ற மனம் மயங்கி இவ்வாறு கூறினான் என்றே கொள்க. "யாங்கு வந்தனள் கொல் அளியள்' என்பது அதனையே குறிக்கும். ஆழமாக அழுந்திய நினைவுகள் இவ்வாறு உருவெளித் தோற்றமாகத் தோன்றும் என்று கொள்க. 'பதுக்கை' புதைகுழிமேல் குவிக்கப் பெற்றுள்ள கற்குவியல். 'மாண்பு' என்னும் சொல் மூன்று முறை வந்துள்ள செவ்வியையும் இச் செய்யுளிற் காணலாம்.

இறைச்சி : ஆறலைப் போரால் வீழ்த்தப் பெற்றுக் கிடக்கும் பிணங்களைக் கழுகு தின்னாதபடி வெருட்டிவிட்டுத் தானே தின்ற நரியானது, உண்ண நீர் கிடைக்காதும், உறங்க நிழலிடம் கிடைக்காதும் வருந்திற்று என்றனன். அவ்வாறே தலைவனும், தானடைந்த தலைவியை நுகர்ந்து இல்லறமாற்றப் பொருள் தேடி வந்து எய்த்தும் இளைத்தும் பொருள் பெறும் இடம் தோன்றாமல் வருந்துவேன் என்றதாம்.

பாடபேதங்கள் : 1. சிலைமாண் வல்வில், சிலையார் வல்வில். : 3. வெம்பலை அருஞ்சுரம், வெம்பரல் அருஞ்சுரம். 10. அளிய வாயின.

பயன் : தலைவன், மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து வழிச்செல்ல வியலாதபடி வருந்தினாலும், சென்று செயல் முடித்து விரைந்து திரும்பி வருவான் என்பதாம்.

353. மந்திக்கு விருந்து அயரும்!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை ; தோழி ஆற்றாமை அஞ்சித் தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.

( (து - வி.) களவுக் காலத்திலே இரவுக்குறியில் காத லர்கள் சந்தித்து வருகின்ற காலம். தலைவன் அஞ்சாது வருவானாயினும், வழியின் ஏதத்தை நினைந்து தலைவி வருத்தம் 318

நற்றிணை தெளிவுரை

மிகுதியாகித் துடிக்கின்றாள். அதனை அறிந்த தலைவியின் தோழி நெஞ்சம் வருந்தித் தலைவனிடம், இரவில் வருவதை நிறுத்தி விட்டு, வரைந்துவந்து தலைவியை மணந்துகொண்டு, பிரியா துறையும் இல்லறம் ஆற்றுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

ஆளில் பெண்டிர் தாளின் செய்த

நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்கெழு குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான்தோய் வெற்ப சான்றோய் அல்லை-எம் காமம் கனிவ தாயினும் யாமத்து அரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின உருமின் உரறும்

அஞ்சுவரு சிறுநெறி வருத லானே.

5

10

தெளிவுரை : தம்மைப் பேணுதற்கான ஆடவர்களின் துணையற்ற பெண்கள், முயற்சியோடும் செய்த மிகவும் நுண்மை யான பஞ்சுக் குவியல்போல, காற்றால் அலைக்கப்பட்டுத் தவழும் மேகக் கூட்டங்களைக்கொண்ட. உயர்ந்த உச்சிகளையுடைய நெடிய மலைப் பகுதியினிடத்திலே, முடம்பட்டு முதிர்ந்து விளங்கும் பலாமரத்தினது குடம்போன்ற பெரும் பழத்தினை. கற்கள் நிரம்பிய குறிஞ்சிக்கு உரியவரான குறவர்களின் அன்பான இளமகள், கருமையான விரல்களைக்கொண்ட மந்திக்கு, வீட்டுக்குவந்த விருந்தினரை உபசரிப்பதுபோல விருப்புடனே அளித்து மகிழ்வாள். அத் தன்மையுடைய வானத்தைத் தழுவுகின்ற வெற்புக்கு உரியவனே! எம்பால் நீ கொண்டிருக்கும் காமமானது கனிவதாக இருந்தாலும், இரவின் நடுயாமப் பொழுதிலே, வலிய புலியைக் கொன்ற பெருங் கையினையுடைய யானையானது கொடிய சினத்தை யுடைய இடியைப் போல முழங்குகின்ற, அச்சமுடைய சிறிதான மலைவழியிலே துணிந்து வருதலினாலே, நீதான் சால் பாளன் இல்லைகாண்!

கருத்து: 'இரவு வருவதனைக் கைவிட்டு, இவளை மணந்து, இந்தக் கவலையற்று, ஆரா இன்பம் துய்ப்பாயாக' என்பதாம், நற்றிணை தெளிவுரை

319

சொற்பொருள்: ஆளில் பெண்டிர் -பேணுவாரற்ற மகளிர்; இவரைக் கணவனை இழந்தோர் எனவும் கூறுவர். தாள் - முயற்சி; அது தம் வாழ்வுக்கான பொருள் தேடுதல். நுணங்கு நுண்பனுவல் - நுணங்கும் நுண்மையான பஞ்சு; இது கொட்டை நீக்கிய பஞ்சை அடித்துப் பட்டையிடுதற்கு ஏதுவாக அமைத்தல். கணம் கொள-கூட்டம் கொள்ள. ஆடு மழை - தவழும் மேகம். முடமுதிர் பலா - முடக்கம் பெற்று முதிர்ந்த பலாமரம்; சிறு பெண்கள் எறிக் கனியைச் கொய்வதற்கு எளிதாயிருந்தது முடக்கமே எனலாம். வரு விருந்து - வீட்டுக்கு வந்த விருந்து. அயரல் - உபசரித்தல்; உண்க உண்க என வற்புறுத்தி உண்ணச் செய்தல். காமம் கனிவது - காமமானது முதிர்ந்து நெகிழ்வது. இரும்புலி - வலியபுலி; கரும்புலி, பெரும்புலி எனினும் பொருந்தும்.

உள்ளுறை : குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான்தோய் வெற்ப' என்றது, அவ்வாறே நீயும் இவளுடன் மணந்து இல்லறமாற்றும்போது, இவளும் விருந்து பேணியும் நல்லறம் காத்தும் நின் குடிக்குப் பெருமை சேர்ப்பாளாவாள் என்பதாம்.

பசித்து வந்து மந்தி ளாய் திறந்து கேட்காதாயினும், அதன் வருகைக் குறிப்பறிந்து குறமகள் பலாக் கனியை உண்ணத் தந்து விருந்தயரும் மலைநாடனாக இருந்தும், நீதான் நின்னோடு பிரியாதுறையும் வாழ்வை விரும்பும், நின் காதலியின் வேட்கை தணிதற்கு, உரியன செய்தாயல்லை என்பதும் ஆம்.

விளக்கம்: 'மணவினை பற்றி நினையாதே கலவையே நாடி வரும் இத்தகைய கொடிய நெஞ்சினனாயிருந்தும், நின் மலைச் சாரலில் மழைமேகம் தவழ்கின்றது; நின்னூர்க் குறமகள் மந்திக்கும் விருந்தயர்வாள்; இதுதான் என்ன பொருத்தமோ?' என்று வியந்து கூறியதும் ஆம்; இதனைப் பொருட்புறத்தே தோன்றும் இறைச்சிப் பொருளாகவும் கொள்ளலாம். சிறு நெறி வருதலானே எம் காமவுணர்வு மேலும் கனிவதே யாயினும், அதுதான் நெடிது நிலைக்கும் இல்வாழ்வாக மலராத தால், மலரச்செய்யும் முயற்சியை நீதான் மேற்கொள்ளாத தால், நீதான் சான்றோய் அல்லை என்கின்றனளாம். பலாமரம் முடம்பட்டு விளங்குவதை முடமுதிர் பலவின் கொழுநிழல்" என அகத்துள்ளும் (91) கூறுவர்.

பயன் : இதனாலே, தலைவன் உள்ளம் மணங்கொண்டு இல்வாழ்தலிலே செல்லும் என்பதாம். 320

நற்றிணை தெளிவுரை

354. நட்புக் கௌவையாகின்றது!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை : (I) தோழியாற் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; (2) மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தார்க்கு மறுத்துச் சொல்லியதூஉ மாம்.

(து - வி.) (1) களவிலே வந்தொழுகும் தலைமகனிடம் இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் போன்று நிலையுளது என்று குறிப்பாகக் கூறி, விரைந்து மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக அமைந்த செய்யுள் இது;(2) மணவினை கழிந்தபின், செவிலியோடு வந்த தோழியைத் தலைவன் புகழ்ந்து கூற, அவள், அதனை மறுத்து, எல்லாம் தலைவியது சால்பே என்று கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]

தானது பொறுத்தல் யாவது கானல் ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த கானல் நண்ணிய வார்மணல் முன்றில் எல்லி அன்ன இருள்நிறப் புன்னை நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின் கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம்போகு ஆகுலம் கடுப்பக்

கௌவையா கின்றது ஐய! நின் நட்பே!

5

10

ஐயனே! கழிச்சோலையிடத்தேயுள்ள, ஆடியசையும் அடி மரத்தையுடைய நெடிய கரிய பனையிலிருந்து, கழித்து வீழ்த்திய காவோலைகளால் மறைப்புண்டாகக் கட்டியிருக்கப்பெற்ற கட்டுவேலியைக் கொண்ட, கானற்சோலையை அடுத்துள்ள வெண்மணல் முற்றத்திலே, இரவுபோன்ற இருண்ட நிறத்தை யுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரமாகிய அவ்விடத்திலே பிணித்துக் கிடத்தலினாலே தங்குதல் கொண்ட தோணியை உடையதும், நீர்த்துவலைகள் தெறித்து விழுவதுமான கடற் கரையிடத்தே, கடுமையான வெயிலினாலே கொதிப்பேறிய கல்லைப்போல் விளைந்த உப்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு நீண்ட வழியிலே செலுத்தும் வண்டிகள், ஒன்றன்பின் ஒன்றாக

நற்றிணை தெளிவுரை

321

வரிசையாக ஒழுங்குபடச் செல்வதைப் பார்ப்பவர்கள், அளத்து வெளியிலே விரைந்தோடும் ஆரவார ஒலியைப்போல, நின் நட்பானது, இப்போது பெரும் அலராகின்றது. யாங்கள் அதை எவ்வாறு பொறுத்திருப்போமோ?

தாம்.

கருத்து: 'விரையவந்து மணந்து கொள்வாயாக' என்ப

கரிய பனை.

சொற்பொருள்: ஆடரை - ஆடியபடியிருக்கும் அடிமரம். - ஒழித்த - கழித்த. நீடிரும் பெண்ணை - நெடிய காவோலை - காய்ந்துபோன ஓலை. சூழ் சிறை - சூழச் செறிக்கப் பெற்ற வேலி; சூழயாத்த சிறை என்று கொள்க. வார்மணல் வெண்மணல். முன்றில் - முற்றம்; இல்லின் முன்பக்கம்.எல்லி- இரவு . தூவல் - சிதறும் துளிகள். சேர்ப்பு - கடற்கரைப் பகுதி. கல்விளை உப்பு - கல்லாக விளைந்த உப்பு; நீர்ப்பசையற்ற உப்பு எனலும் ஆம். நெடுநெறி - நெடிய வழி. அளம் - உப்பளப் பகுதி . கௌவை - பழிச்சொல்.

இறைச்சி: 'ஓலை சூழ்சிறை யாத்த கானல்' என்றது எமரும் எம் அன்னையும் எம் இல்லகத்தைப் பாதுகாத்தலை மேற்கொண்டனர்; ஆதலின் இனி இரவுக்குறி வாயாது என்று உணர்த்தியதாம். புன்னை அடி மரத்திலே கோணி இயக்க மின்றிக் கட்டிக் கிடப்பது போல, இனித் தலைவியும் புறம் போகாதவாறு இற்செறித்துக் கட்டுப்பாடுகள் செய்யப் பெறுவள் என்பதாம்; தூவல் போல நின் அன்புரைகளால் அவள் வாழ்வாள் என்பதுமாம்.

விளக்கம்: பனையோலையால் வேலியை மறைத்துக் கட்டு தலைக் கூறியது; புறத்தே நின்றும் பிறர் கண்டு மயங்காதபடி என்று கொள்க. வேலியைக் கற்பாகவும், பனையோலையால் மறைத்தலைத் தன்நம்பிக்கையால் காத்தலாகவும் காத்தலாகவும் கொள்ள லாம். உப்பு வண்டிகள் களத்தை நோக்கி வருவது கண்டு பரதவர்கள் களிப்போடு நெருக்கியடித்துச் செல்வதுபோல, நீ இவளைக் காண வந்துபோவதும் பலர்க்கும் சொல்விருந்தாகி ஆரவாரமாயிற்று என்பதாம். அவ்வாறே, நீ வரைந்துவந்த போது ஊரெல்லாம் மகிழ்வோடு ஆரவாரித்து மகிழ, உங்கள் திருமணமும் நிகழ்வதாயிற்று என்று இரண்டாவது துறையோடு பொருத்திப் பொருள்கொள்க. கட்டுண்டு கிடக் கும் தோணி தூவலால் நனையும் என்பதுபோல, இற்செறித்து வருந்தியிருப்பினும், அலர் எழுவதனால் அவள் மனம் நின்பால் நிலைத்திருக்கும் என்பதும் கொள்சு, 3 22

conf

தலைவன்

நற்றிணை தெளிவுரை

பயன் : தலைமகன் தலைமகளோடு பிரியாது வாழும் பெரு நெறி பேணி. இன்புறுவான் என்பதாம்.

பாடபேதங்கள் : யாவது வேனல்; வான்மணல்; முன்றில் கடுவெயிற் கலித்த.

இரண்டாவது பொருள் காண்க.

துறைக்கும் ஏற்றவாறு பொருத்திப்

355. நனி நாகரிகர்!

பாடியவர் : ...... திணை : குறிஞ்சி. துறை : (1) தோழி அருகடுத்தது; (2) தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடயாதூஉம் ஆம்.

-

( (து - வி.) தலைமகன் வரவு இடையிடையே தடைப் படுகின்றது.. அதனால் வருந்தும் தலைமகளது நிலைகண்டு கலங்கிய தோழி, தலைவனை நெருங்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது;(2) தலைமகள் இடையீடுபடும் தலைவனது வரவாலே வருந்தி நலியக் கண்ட தோழி, தலைமகனை நெருங்கி, அவளை விரைந்து மணந்து கொள்ளக் கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.)

புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைபோல் காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை அம்மடற் பட்ட அருவித் தீநீர் செம்முக மந்தி ஆரும் நாட!

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் அஞ்சில் ஓதியென் தோழி தோள்துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அதுநீ

என்கண் ஓடி அளிமதி-

நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே!

5

10

தெளிவுரை: புதல்வனை ஈன்ற பூப்போலும் கண்ணை யுடைய மடந்தையானவள், தன் மகனைக் கையால் அணைத்தபடி பாலருந்தச் செய்வாள். அது போலக் காந்தள் மலர்கள்

T நற்றிணை தெளிவுரை

323

குலையினிடத்தே முன்பக்கமாகத் தோய்ந்திருக்கும், கொழுமை யான மடலையுடைய வாழையிலுள்ள, வாழைப்பூவின் மடலி னுள்ளே கிடைக்கும் அருவி நீர்போல இனிதான நீரினைச், செம் முகத்தையுடைய மந்தியானது வாய்வைத்துப் பருகியபடியிருக் கும் மலைநாட்டோனே! முன்னதாக அமர்ந்து நட்புடையாளர் கொடுத்தாரானால், மிக்க நாகரிகத்தை உடையவர்கள், அவர்கள் தந்தது நஞ்சாகவே இருப்பினும் உண்பார்களே! அழகிய சிலவாய கூந்தலை உடையவளான என் தோழியின் தோளிடத்தே துயின்று பெறும் இன்பத்தினை, நீ நெஞ்சிலே இன்பமாகக் கெள்ளாய் என்றாலும், நின் கண்ணோட்டம் இல்லாது பிறிது யாதொரு பற்றுக்கோடு எதுவும் இல்லாதாள் அவளாதலினாலே, அந்த இன்பத்தை, நீ, என்னிடத்தே கண்ணோட்டம் செலுத்தியாவது, அவளுக்கு அளிப்பாயாக.

.

கருத்து: அவனை இனியும் காலம் தாழ்க்காது மணந்து கொள்ளல் வேண்டும் என்பதாம்.

சொற்பொருள்: பூங்கண் மடந்தை - நீலமலர்போலக் கண் களையுடைய மடந்தை; புதல்வனை ஈன்றதன் பெருமையால் கண் தாய்மை நோக்கம் பெற்று மென்மை மிகுதியாயிற்றென்க. முலைவாய் உறுக்கும் கை - குழந்தையை அணைத்து முலையை அதன் வாயிடத்தே எடுத்துச் சேர்த்துப் பாலூட்டும் கை. தீ நீர் - இனிய நீர். வாழைக்குலையின் முற்பகுதியிலுள்ள பூவிலே காந்தள் மலர் தொட்டபடி இருக்க, அந்தப் பூவிதழ் மடலிடையேயுள்ள இனிய நீரை வாய் வைத்து அருந்தும் மந்தியானது, தாய் கையால் அணைத்து முலையூட்டப் பருகும் குழந்தைபோலத் தோன்றிற்று. முந்தை இருந்து - முகத் தெதிரே அமர்ந்திருந்து. நட்டோர் - நட்புச் செய்தவர். நனி நாகரிகர் - மிக்க பண்பாளர்.

விளக்கம்: புதல்வனை ஈன்ற தாயது அன்பைக் கூறியது, அவ்வாறே அவனும் அவளுடன் இல்லறம் பேணி, அவள் மகிழ்தல் கண்டு இன்புற வேண்டும் என்பதற்காம். வாழைப் பூவின் தேனை மந்தி அருந்தி இன்புறும் மலைநாடனாயிருந்தும், தமக்கு அருள் செய்து, தலைவியை மணந்து இன்புறும் மனம் பெற்றானில்லையே என வருந்துகின்றனள். முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் என்ற தொடர்களோடு, 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (குறள் 580) என்னும் குறளையும் ஒப்பிட்டு இன்புறுக, நட்டோர் இயல்பு அதுவாகவும், நினக்கு 324

தலைவன் Bish

பரனத

நற்றிணை தெளிவுரை

இன்பமே தந்த எம்மை நீ வெறுத்து ஒதுக்குவது நின் சால்புக்கு ஒவ்வாதது என்று கடிந்து கூறி அறிவுறுத்தியதுமாகும்.

தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும்' என்றதனால், டையிலே அவன் நாட்டம் பிறிதின்மேற் செல்ல, நொந்து, தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.

i

‘முந்தையிருந்து...' என்னும், இரண்டடிகளும் பெருங் கதையிலும் எடுத்தாளப் பட்டுள்ளது. நஞ்சும் என்பதில் வரும் உம்மையால் அவர் ஒருபோதும் நஞ்சைத் தரமாட்டார் என்பதும் விளக்கும்.

·

பயன் : தலைவன் விரைவிலே மணம்கொண்டு தலைவியின் துயரைப் போக்குவான் என்பதாம்.

356. கீழ்த்திசை வெள்ளி!

பாடியவர்: பரணர். திணை : குறிஞ்சி. துறை : வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

((து-வி.) : தலைமகன், தன் காதலியைத் தனக்கு மணம் பேசி வருமாறு சான்றோரை அனுப்புகின்றான். தலைவியின் தமரோ அவனுக்கு அவளைத் தர இசையவில்லை. அவர் வந்து அந்த மறுப்பைச் சொல்லியதும், தலைவன் மனம் நொந்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது.]

நிலந்தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் அசைவில் நோன்பறை போலச் செல்வர வருந்தினை-வாழியென் உள்ளம்!-ஒருநாள் காதலி உழையள் ஆகவும்,

குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே!

5

தெளிவுரை : என் உள்ளமே! நிலத்திடத்தே தாழ்வாக உள்ள பக்கத்திலேயுள்ள, தெளிந்த கடலிடத்தே சென்று இரைமேய்ந்த, விலகிய மென்மையான இறகையுடையதும் நற்றிணை தெளிவுரை

325

சிவந்த கால்களைக் கொண்டதுமான அன்னப்பறவையானது. பொன்படுதலையுடைய நெடிதான உச்சிகளைக் கொண்ட இமயத்தின் உச்சியிலேயுள்ளவரான, தெய்வ மகளிர்க்கு விருப் போடு விளையாடுவதற்குப் பயன்படும், வளராத தம் இளம் குஞ்சுகளுக்கு இட்டு உண்பிக்கும் இரையைக் கொண்டு செல்லும். அப்படி, நாள்தோறும் செல்லும்போது, வருந்துதல் என்பதில்லாத அதன் வலிய சிறகும் வருத்தம் அடைந்தாற்போல, நீயும் அவள்பால் செல்வதும் மீண்டும் வருவதுமாக அலைந்தலைந்து வருத்தம் கொண்டனை! நீ தான் வாழ்வாயாக! ஒரு நாள்,எம் காதலியானவள் எம் அருகே இருப்பவளாகவும், கீழ்த்திசைத் தோன்றும் வெள்ளியைப் போலத் தோன்றுவதும், எமக்கு என்று வாய்க்குமோ?

?

கருத்து: 'அவளை ஒரு நாள் அடைவோம்' என்பதாம்.

சொற்பொருள் : நிலம் தாழ் மருங்கில் - நிலப்பகுதியானது பள்ளம்பட்டுக் கிடக்கும் பக்கத்தே. தெண்கடல் - தெளிந்த கடல்; குளிர்ந்த கடலும் ஆம். விலங்குதல் - ஒன்றையொன்று ஒட்டாதே பிரிந்து அமைந்திருத்தல். பொன்படு - பொன் படுதலையுடைய; அழகுபடுதலைக் கொண்ட எனினும் ஆம், பொன் -அழகு. இமயத்து உச்சி - இமயத்தின் மேற்பரப்பு; இது வானுரை மகளிர் வாழுமிடம் என்பர். அல்கிரை - இட்டு வைத்துண்ணும் உணவு. அசைவு - வருத்தம். செல்வர- செல்லவும் வரவுமாக. உழை - பக்கம். வெள்ளி - விடிவெள்ளி

.

இறைச்சி: இமயத்து உச்சியிலுள்ள வானர மகளிர்க்கு விளையாட்டிற்கு உதவும் அன்னப் பார்ப்புகளுக்கு, அதன் தாய் கடலிடத்தேயுள்ள இரையை மிக வருத்தத்துடன் கொண்டு செல்லும் என்றனர்; அவ்வாறே தலைமகனும் தமர் பேச்சுக்கும் காப்புக்கும் உட்பட்ட தன் காதலியை வரைந்து கொள்ளற் கான பணத்தைத் தேடிவரும் பொருட்டுச் சென்று சென்று வருந்தினன் என்பதாம்.

விளக்கம்: இதனால், அவன் தந்த வரைபொருள் போதா வென்று தலைவியின் தமர் அவளைத் தர மறுத்தனர் என்பதாம். அன்போடு சிரமப்பட்டுத் உணவு தேடித்தரும் தாயைவிட்டு, வானர மகளிர்க்கு விளையாட்டுத் துணையாகி விளங்கும். அன்னப் பார்ப்புகள் போலத், தலைவியும் தலைவனின் துன்பம் நோக்காதே, தமர்பால் கட்டுண்டு அமைந்தனள் என்பதுமாம். ஆகவே, தலைமகன் மீளவும் சென்று பெரும் பொருள் தேடி வந்து தந்து, அவளைப் பெறுவதற்கு உறுதிபூண்டான். எனவே

326

cond

குறமகள் குறுப்னி

நற்றிணை தெளிவுரை

காதலியை மீண்டும் முயன்று அடைவோம் என்பான், 'காதலி உழையளாக... எமக்குமார் வருமே' என்றனன். அது தான் நிகழ்தல் உறுதியென்பவன், 'குணக்குத் தோன்றும் வெள்ளி யை'க் குறித்தனன்.

பயள் : இதனைக் கேட்கும் தோழி, தலைவனின் மிகுதியான பேரன்பை அறிந்தவளாக. உடன்போக்கிற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாளாவள் என்பதாம்.

357. கெட அறியாதே!

பாடியவர்: குறமகள் குறியெயினி. திணை: குறிஞ்சி. துறை : (1) தலைமகன் வரைவு நீடியவிடத்து ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது; (2) மனை மருண்டு வேறுபாடா யினாய் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

((து-வி.) : (1) வரைந்து வருதல் குறித்த காலம் கழிந் தும், அவன் வரானாக, அதனால் தலைவிக்கு யாதாகுமோ என்று வருந்தும் தோழிக்குத், தலைவி, தான் அவன் வரும்வரை துயர் பொறுத்து இருப்பதாகக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது. (2) மனைக்கண் இருந்தபடியே பிரிவாற்றாமையால் வேறு பட்டாய் என்ற தோழிக்கு, அதனை மறுத்துத் தலைவி, தன் உறுதி கூறுவதாக அமைந்தது எனவும் கொள்ளலாம்.]

நின் குறிப்பு.எவனோ?-தோழி!-என்குறிப்பு என்னொடு நிலையா தாயினும், என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெடவறி யாதே- சேணுறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,

பெயலுழந் துலறிப் மணிப்பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை,

அங்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை

உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி

நீரலைக் கலைஇய கண்ணிச்

சாரல் நாடனொடு ஆடிய நாளே.

10

தெளிவுரை: தோழீ! என்னுடைய நோக்கமானது என்னோடு நிலையாக நிலைத்திருக்கமாட்டாதாயினும், என்றைக் கும், நெஞ்சத்தைப் புண்படுத்திக் கெட்டொழிவதனை அறியாத தாயும் இரா நின்றது. கெடுந்தொலைவுக்கு உயர்ந்து தோன்றும்

5 நற்றிணை தெளிவுரை

327

மலையின் பக்கத்திலே மழையிலே நனைந்து சிலிர்த்த நீலமணி போன்ற புள்ளிகளையுடைய குடுமியையும், தோகையையும் உடைய மயில்கள் ஆடியபடியிருக்கும் சோலையிடத்தே, அவ் விடத்துள்ள பாறையிடத்தேயுள்ள, அகன்ற வாயைக்கொண்ட பசிய சுனையிலேயுள்ள, மையுண்ட கண்களை ஒப்பான குவளை மலர்களைக் கொய்தபடி, அவனுடன் நான் சுனையாடி மகிழ்ந்த போது, அந்நீர் அலைத்தலானே கலைந்துபோன தலைக் கண்ணியையுடைய அச்சாரல் நாடனோடு. ஆடிய அந்த இன்ப மான நாளினை என்றுமே மறக்கமுடியுமோ? நின் கருத்துத் தான் யாதோ? கூறுவாயாக, என்பதாம்.

கருத்து: அவனை மறத்ததற்கு அரிது என்பதாம்.

சொற்பொருள்: குறிப்பு - நோக்கம்; கருத்து. வடுப்படுத் தல் - புண்படுத்தல். சேண் உறத் - நெடுந்தொலைவு உயர்ந்து. கவாஅன் - பக்கமலை. பெயல் - மழை. குடுமி - தலைமேலுள்ளது. ஆலும் - ஆடும். அம்கண் - அழகான இடம். அறை - பாறை, உண்கண் - மையுண்ட கண். நீலம்- குவளை.

விளக்கம்: சாரல் நாடனோடு மகிழ்ந்து சுனையாடி இன்புற்ற அந்த நினைவை என் நெஞ்சம் என்றும் மறப்பதில்லை யாதலினாலே, அந்நினைவையே பற்றிக்கொண்டு, அவர் வரும் வரை அவர்பற்றிய நினைவினாலேயே நம்பிக்கையினாலேயே உயிர்தரித்திருப்பேன் என்பதாம். 'நின் குறிப்பு எவனோ?" என்றது. நீதான் அவன்மேல் யாதும் ஐயுறவு உடையையோ?' என்று அவள் கருத்தை வினவியதாம். 'என்னோடு நிலையாது ஆயினும்' என்றது. அதுதான் அவனையே நினைந்து நினைந்து ஆழ்ந்திருக்கும் என்பதனால் ஆம். 'பீலிமஞ்ஞை ஆலும் சோலை என்றது. இயற்கையாக எழும் உணர்வுக்கிளர்ச்சியைக் காட்டு தற்காம். 'உண்கண் ஒப்பின் நீலம்' என்றது, நீலத்தைக் கண்ணுக்கு உவமையாக்கும் மரபை மாற்றிக் கூறியதாம்.நீர் அலைக் கலைஇய கண்ணி - நீர் அலைத்தலால் கலைந்த கண்ணி என்றும் நீர் அலையால் கலைந்த கண்ணி என்றும் கொள்க.

இறைச்சி : மழையால் நனைந்த மயிலானது சோலையிலே ஆடிக் களிக்கும் என்றது, அவனால் தலையளி செய்யப் பெற்ற யான் அந்த இன்பநினைவிலேயே களித்திருப்பேன் என்பதாம்.

பயன் : 'தலைமகளின் மனவுறுதியறிந்த தோழியும், தன் கவலையை மறந்தாளாக நிம்மதி பெறுவாள் என்பதாம். தாழி

$28

कod

லைமகள் कर्जु

நக்கீரர்

நற்றினை தெளிவுரை

358. பரவினம் வருகம்!

பாடியவர்: நக்கீரர். திணை : நெய்தல். துறை: 1. பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத், தோழி, 'இவள் ஆற்றாளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; 2. அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.

[ (து - வி.) பிரிந்து சென்ற காதலனின் வரவு நீட்டிக்கத் தலைவியின் துயரம் மிகுவதைக்கண்ட தோழி பெரிதும் வருந்து கின்றாள். தலைவி இறந்துபடுவாளோ என்றும் நினைக்கின்றாள். அதனால், கடல் தெய்வத்துக்கு வழிபாடு செய்வோம் என்று கூறுகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. 2.அப்படி அவள் வருந்திய காலத்திலே தலைவி, தோழிக்குச் குச் சொன்னதாகவும் கொள்ளலாம்.]

பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறுமெல் ஆகம் பெரும்பசப்பு ஊர இன்னேம் ஆக எற்கண்டு நாணி

நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம்

அணங்கள் ஓம்புமதி வாழிய நீயெனக் கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப்

5

பரவினம் வருகம் சென்மோ தோழி! பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் சிறுவெண் காக்கை நாளிரை பெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்னவென் அரும்பெறல் ஆய்கவின் தொலையப் பிரிந்தாண்டு உறைதல் வல்லி யோரே!

10

தெளிவுரை : பெரிதான சிவந்த பஞ்சுபோன்ற தலையை யுடைய இறவின் முடங்கலைச், சிறிய வெண்காக்கையானது தனக்குரிய நாட்காலையின் இரையாகப் பெறுகின்ற வளமை யுடையது, பசும்பூண் பாண்டியனுக்கு உரியதான மருங்கூர்ப் பட்டினம். அதைப் போன்ற, என் அரிதாகப் பெறலான நுட்ப மான அழகெல்லாம் தொலைந்துபோக, என்னைப் பிரிந்து, தாம் சென்றுள்ள அவ்விடத்தேயே தங்கியிருத்தற்கு வல்லமை கொண்டவர் நம் தலைவராகிய அவர். தோழீ! அதனாலே-

ட் நற்றிணை தெளிவுரை

329

பெருத்த நம் தோள்களும் தளர்ந்தன; அழகான ரேகை களும் வாடிப் போயின; சிறிய மென்மையான மார்பகத்திலும் பசலையானது பெரிதாகப் பரவிற்று; நாம் இந்த நிலையினை முன்பே அடைந்தேமாகவும், என்னைக் கண்டு வெட்கப்பட்டு, 'என்றும் பிரியேன்' என்று நின்பால் சொல்லித் தெளிவு செய் தனர் என்றாலும், அங்ஙனம் அவர் சொல்லிய நாளும் இப்போது பொய்யாயிற்று; அதனாலே-

கணங்களையுடைய கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டுச் சாந்தி செய்து வழிபட்டு, அவரை நீ வருத்தாதிருப்பாயாக என்று வேண்டிச் சென்று பணிந்து, நாமும் வருவேமோ?

கருத்து: 'அவர் வருகை வேண்டித் தெய்வம் பராவு வோம்' என்பதாம்.

-

சொற்பொருள்: பெருந்தோள் - பெருத்த தோள்கள்; பெருத்தல் பூரிப்பால் உண்டாகும் வளமை. அவ்வரி - அழகிய ரேகைகள்; கண்களிடத்தே தோன்றும் செவ்வரிகள் என்க. 'சிறு மெல் ஆகம்' - சிறிதான மென்மைகொண்ட மார்பகம்: இது இளம் பருவம் என்று விளக்கியது. பசப்பு - பசலைநோய். ஊர்தல் - பற்றிப் படர்தல். அணங்கல் வருத்தல். கொண்ட கடவுள்; கணம் கெழு கடவுள் - கணங்களைக் நெய்தல் நிலத்துக்கு உரிய தெய்வம் வருணன் ஆதலின் அவனைக் குறிப்பதாகலாம்; நக்கீரர் பாடியதாகவே, பூதகணங்கள் நிறைந்திருக்க விளங்கும் சிவத்தையே குறித்ததாகக் கருதுதலும் சிறப்பாகும். பலிதூஉய் - பலிப்பொருள்களைத் தூவி: இது கடல் நீரிலே தூவுதல். நாள் இரை - காலை உணவான இரை. பசும்பூண் வழுதி - பசும்பூண் பாண்டியன். மருங்கை - மருங் கூர்ப் பட்டினம்; இதனைத் தழும்பன் என்னும் தலைவனுக்கு உரிய ஊணூர்க்கு அப்பாலுள்ளதென்று, 'பெரும் பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர், விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம் என அருகானூறு (227) கூறும்; இன்றைய மரக்காணம் என்னும் ஊரே இது என்பர் சிலர்.

உள்ளுறை : இறாவின் முடங்கலைச் சிறுவெண் காக்கை யானது நாளிரையாக அருந்தும் என்றது, அவ்வாறே அவளும் தலைவன் வந்துசேரத் தான் தன் துயரந்தீரக் காமநலம் உண்டு களிப்பவளாவள் என்பதாம்.

விளக்கம்: 'அணங்கல் ஓம்புமதி வாழிய நீயெனக் கணங் கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் பரவினம் வருவம் சென்மோ

ந.21 330

நற்றிணை தெளிவுரை

தோழி' என்பது, அந்நாளைய நெய்தல்நிலை மக்கள், தம் குறை முடிதலை விரும்பிப் போற்றிவந்த கடல்வழிபாட்டு மரபைக் குறிக்கும். கடல் தெய்வத்தை வழிபடுதலால், தலைவன் கடல் கடந்து பொருள்தேடச் சென்றவனாதலும் நினைக்கவேண்டும். பாடபேதம் : கடல்கெழு கடவுள்.

பயன் : இதனால் தலைவி அவன் வரும்வரை பொறுத் திருந்து, வந்ததும் கூடியின்புற்று மகிழ்வாள் என்பதாம்.

சிறப்பு : பசும்பூண் வழுதியின் மருங்கைப் பட்டினத்து எழில்.

359. அஞ்சுதும் யாமே!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை : தோழி தழையேற்றுக் கொண்டு நின்று, தலைமகள் குறிப்பின் ஓடியது.

( (து - வி.) தோழியின் உதவியோடு தலைவியைப் பெற முயல்கின்றான் தலைவன். அவளிடம் தான் கொடுத்த தழை யுடையைத் தலைவிக்குத் தருமாறு கேட்கின்றான். தோழியின் நிலைமை சங்கடமாகிறது. மறுத்தால், அவன் வருந்துவான். தலைவி உடுத்தால் அன்னை சீறுவாள். என் செய்வது என்று தானே வருந்துவது போலத், தலைமகள் கருத்தினைத் தான் ஏற்று நடப்பவள்போலக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா அலங்குகுலைக் காந்தள் தீண்டித், தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் உடுக்கும் தழைதந் தனனே; அவையாம் உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை வாடல கொல்லோ தாமே-அவன்மலைப் போருடை வருடையும் பாயாச்

சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே!

5

LO`

தெளிவுரை : மலையினிடத்தே மேய்ந்தபடியிருந்த சிறிய கொம்பை உடையதான செம்மைநிறப் பசுவானது, அசை கின்ற கொத்தையுடைய காந்தளைத் தீண்டிவிட்டது. அப்போது, அதனின்றும் பூந்தாதுக்கள் தன்மேலே உதிர, நற்றிணை தெளிவுரை

331

அப்படியே வீடு திரும்பியது. அதன் கன்று, தாயின் மேனி வேறுபாட்டைக் கண்டு, அது தன் தாய்தானோவென்று மயங்கி நின்றது. அத்தன்மையுடைய குன்றத்து நாட்டிற்குரியவன் தலைவன். அவன் உடுத்துக்கொள்ளும் தழையைக் கொணர்ந்து தந்துள்ளனன். அவற்றை யாம் உடுத்தோமானால், எவ்வாறு கிடைத்ததெனச் சினந்துகொள்ளும் தாயின் பேச்சுக்கு அஞ்சு வோம். மறுத்து,அவனிடமே கொடுப்பதானாலோ, அதனாலே அவன் படுகின்ற ஆற்றாமைத்துயரத்தை நினைந்து அஞ்சுவோம். இவற்றிடையே, அவன் மலையிடத்தே போரிடுதலையுடைய வரையாடும் பாய்ந்து செல்லாத தெய்வமிருக்கின்ற மலைப் பக்கத்திலேயுள்ள, கொய்தற்கு அருமையான தழையாலே ஆகிய அவைதான், வாடுதல் உடையதாகவும் ஆகலாமோ? என்பதாம்.

கருத்து: தழையுடையை ஏற்று அவனுக்கு உதவுவோம் என்பதாம்.

-

சொற்பொருள்: சிலம்பு - மலை. சிறு கோடு - சிறிதான கொம்பு. சேதா - சிவப்புநிறப் பசு. அலங்குகுலை - அசையும் பூங்கொத்து. கன்று தாய் மருளும் - கன்றானது தாயைப் பார்த்து மயங்கும். கேள் - உறவு: தலைவனைக் குறித்தது. கேடு - துன்பம்; ஆற்றாமை. வருடை-வரையாடு; செங்குத் தான மலையினும் விரைந்து சென்றுவரும் திறனுள்ளது. சூர் சூர்த்தெய்வம்.

விளக்கம்: சிவப்புப் பசுவின் மேலே காந்தளின் தாது விழ, அது நிறம் மாறுபட்டு, கன்று மயங்கும் நிலையடையும் என்றதால், காந்தள் செங்காந்தளன்று என்று கொள்க. உடுப்பின் யாய் அஞ்சுதும்' என்றது, அவன் கொணர்ந்த தழை அம் மலைப்பகுதியில் உள்ளதன்று ஆதலின், தந்தவர் யாவ ரெனத் தாய் சினந்து கொள்ளுவளாதலின், அதற்கு அஞ்சு வோம் என்றதாம். வருடையும் பாயாச் சூருடை அடுக்கம் என்றது, வரையாடும் தெய்வமிருப்பதை அறிந்து அஞ்சிச் செல்லாத மலைப்பகுதி என்றதாம். என்றதாம். அவ்விடத்தேயிருந்து கொய்த கொயற்கரும் தழையாதலால், அதுவும் தெய்வமேறிய தழையாக இருந்து, அதனை மறுத்து ஒதுக்கின் கேடுபயக்குமோ என்று கலங்குகின்றனள். இதனால் அதனை ஏற்றலே முடிவாதல் அறியலாம்.

உள்ளுறை : சேதாவானது காந்தள் தாது உகப்பெற்று வரும்போது, அதன் கன்றே இனம் காணாது மயங்கும் என்றது 332

தா

adbam

ஊடல்

of pacevirdim

நற்றிணை தெளிவுரை

அவ்வாறே தலைவி வேற்றுமலைத் தழையுடை அணிந்து வரக் காணின் தாயும் பிறரும் மயங்குவர் என்றதாம். அன்றித் தலைவியின் குறிப்பிலே நாணங் கவிந்து இசைவு தோன்றாது போகக் கண்ட தோழி, அவள் மறுத்தாளென மயங்கினள் என்றும் கொள்ளலாம்.

தழையை வாடவிடின், தாயறியாது மயங்கும் நாடனாத லினாலே, அவன்றான், நாம் அவனிடத்து அன்பற்றோம் என்று கருதி மயங்கி, நம்மை அகன்றுபோதலும் கூடும் என்பதுமாம்

பயன் : 'தழையுடையைத் தலைவி ஏற்றுக்கொள்ளக் காதலர் இருவரும் மகிழ்ந்து இன்பிலே திளைப்பர்' என்பதாம். பாடபேதம் : கேடு நீயும் அஞ்சுதியே.

360. சிறக்க நின் பரத்தை!

பாடியவர்: ஓரம் போகியார். திணை : மருதம். (1) பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப் துறை : பறிந்து வாயில் மறுத்தது: (2) தலைமகள் ஊடிச் சொல்லியதும் ஆம்.

[(து-வி.) (1) தலைமகன், தன்னைப் பிரிந்து கைவிட்டுப் பரத்தையின் உறவிலே களித்துக் கிடந்தான் என்பதனால் தலைவிக்கு அவன்மேல் வருத்தமும் சினமும் ஏற்பட்டன. இவ் வேளையில் ஒருநாள் அவன் மீண்டும் தலைவியின் உறவை நாடித் தன்வீட்டிற்கு வருகின்றான். அப்போது தலைவிமுகங்கொடுத்துப் பேசாது ஒதுங்கி விடுகின்றாள். அவள் குறிப்பறிந்த தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலை வியே தன் ஊடற்சினம் வெளிப்படச் சொல்லியதாகவும் கொள்ளலாம்.]

முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவொழி களத்த பாவை போல நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வெளவி இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர் சென்ற பெரும!-சிறக்க நின் பரத்தை! பல்லோர் பழித்தல் நாணி, வல்லே காழின் குத்திக் கசித்தவர் அலைப்பக் கையிடை வை த்தது மெய்யிடைத் திமிரும்

5 நற்றிணை தெளிவுரை

முனியுடைக் கவளம் போல நனிபெரிது உற்றநின் விழுமம் உவப்பென் மற்றுங் கூடும் மனைமடி துயிலே.

333

10

தெளிவுரை : பெருமானே! பலரும் பழித்துப் பேசுதற்கு நாணங்கொண்டனையாய், வன்மையாக இரும்பு முள்ளாலே குத்திப் பாகர்கள் வருத்துதலினாலே துதிக்கையிடத்தே வைத்த கவளத்தினை உண்ணாது, உடலின் மேல் எல்லாம் வாரி இறைக் கின்ற, சினத்துக்கு உட்பட்ட யானைக்கன்றது கவளத்தைப் போல, மிகப் பெரிதும் நீயும் அடைந்துள்ள சீர்மையைக்கண்டு யானும் உவப்படைவேன். மனையிடத்தே வந்து துயில்கின்ற இன்பமானது பிறிதொரு பொழுதும் நினக்குக் கைகூடுவதே. யாகும். அதனாலே, முழவின் கண்ணிடத்தே வைத்த மார்ச்சனை யானது காய்ந்து போகும்படியாக, முறையோடு கூத்தினை ஆடிய விழாவானது ஒழிந்த களத்திடத்தேயுள்ள ஒரு பாவை யைப் போல, நேற்றுப்போதிலே நின்னைச் சேர்ந்தோரின் புதுவ தான அழகு நலத்தையெல்லாம் கொள்ளை கொண்டாயாய், இற்றை நாளிலே பாணனால் கொண்டுதரப்படும் மகளிரது மென் மையான தோள்நலத்தைப் பெறும் பொருட்டாக, நீதான் விரைந்து போவாயாக! நின் பரத்தையும் நின்னாலே நாளும் இன்பம் பெற்றுச் சிறப்பாளாக!

லால்.

கருத்து: 'நின் பரத்தையிடமே செல்க' என்பதாம்.

பாவை

-

சொற்பொருள்: முழவு முகம்-முழவின்கண் அடித்து முழக்கும் கண் பகுதி. புலர்ந்து - காய்ந்து; காய்தல் முழக்குத கூத்தாடிய பெண். நெருநை - நேற்று. வௌவி - கவர்ந்து கொண்டு. சென்றீ - சென்று வருக. வல்லே- வலிமையாக. காழ் - தோட்டிமுள் கசிந்தவர் - பாகர். கலைப்ப- வருத்த. முனி - யானைக்கன்று; முனியுடைக் கவளம் எனக் கொண்டு சினத்துக்குட்பட்ட கவளம் எனவும் கொள்ளலாம். டு மனைமடி துயில் - மனைக்கண் பெறுகின்ற இனிய உறக்கம்; இ மனைவியோடு கலந்து மகிழும் இன் துயிலாகும்.

இது

விளக்கம் : அவன் மனை வரவும்கூடப் பல்லோர் பழித்தற்கு நாணியதனாலே நிதழ்ந்ததன்றி, உண்மையான அன்பினாலே ஏற்பட்டதன்று என்று இடித்துக்கூறிப் பழிக்கின்றனள். பாகர் குத்துதலாலே வருத்தமுற்ற யானைக்கன்று உண்ண எடுத்த கவளத்தை உண்ணாது தன் மேலெல்லாம் வாரி இறைத்தாற் போல, நீயும் ஊரார் பழியாலே புண்பட்டு, நின் பாணனாலே தரப்பட்ட பரத்தையை நுகர்தலன்றிக் கைவிட்டனையாய் 834

cont

மண

நற்றிணை தெளிவுரை

இங்கே வந்து வீணாகப் பொழுதைக் கழிக்கின்றனை என்று பழிப்பாள்.உள்ள நின் விழுமம் உவப்பென்' என்கின்றனள். உரை இருதுறைகட்கும் பொருந்தும்.

பாடபேதங்கள் : களத்திற்; பாவை; கையிடைக் கவளம்; கூடுமால் மனைமடி துயிலே.

பயன் : இதனாலே தன் குறையுணர்ந்து நாணிய தலைவன், தலைவிக்கு இதமான பலவும் நயந்து கூறி, அவள் சினந்தணித்துக் கூடி மகிழ்வளிப்பான் என்பதாம்.

361. விருந்தயர் விருப்பினள்!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர். திணை : முல்லை. துறை: வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.

[ (து -வி.) : தலைவன் பிரிந்து சென்றவன், குறித்த பருவம் கடந்த பின்னரே வீடு திரும்புகின்றான். அதனால், தலைவி அவனை மகிழ்ந்து வரவேற்காமல் ஊடிச் சினத்தலும் கூடும் என்று அஞ்சுகிறாள் தோழி. அவள் வீட்டுப் பணியாளர் களிடம் சொல்லித் தலைவியும் கேட்டு மனம் திரும்புமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர் விசும்புகடப் பன்ன பொலம்படைக் கலிமாப் படுமழை பொழிந்த தண்நறும் புறவின் நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப மாலை மான்ற மணன்மலி வியனகர்த் தந்தன நெடுந்தகை தேரே; என்றும் அரும்படர் அகல நீக்கி

விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே!

தெளிவுரை : சிறிதான மலர்களையுடைய

5

முல்லையது.

பெரிதாக மணம் கமழுகின்ற மலரினை நம் தலைவன் தானும் சூடியுள்ளனன்; அவனுடன் வரும் ஏவல் இளைஞரும் சூடி யுள்ளனர். வானத்தையே கடந்தாற் போன்ற விரைவுடன் பொன்னால் ஆகிய முகபடாத்தை அணிந்துள்ள செருக்குடைய குதிரைகள், மிகுதியான மழை பொழிந்து தண்ணென்று தரை நற்றிணை தெளிவுரை

335

குளிர்ந்துள்ள நறுமணம் கமழும் காட்டினிடத்தையும் கடந்த வாய், நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியானது ஒலியாலே சிறந்ததாக ஒலி முழக்க, மாலைப் பொழுது மயங்கிய வேளையிலே மணல் மிகுந்த அகன்ற நாம் மாளிகையின் வாயிலிலே நம் நெடுந்தகையின் தேரையும் கொண்டு வந்து சேர்த்தன. எந்நாளும் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பம் எல்லாம் முற்ற விலகுமாறு நீக்கி, அவனுக்கு விருந்தினைச் செய்கின்ற விருப்பின ளாக, நம் திருந்திய நலனணிந்த தலைவியும் ஆதலால், யாரும் கவலையடைதல் வேண்டாம் என்பதாம்.

கருத்து: 'அவள் துயர் மறந்து அவனை வரவேற்பாள்' என்பதாம்.

சொற்பொருள் : சிறுவீமுல்லை -சிறுபூக்களையுடைய முல்லை; முல்லையின் ஒரு வகை இது; இதன் பூக்கள் மிக்க மண்ம் ண உடையன; தனைச் சாதிமுல்லை என்பர். அலரி - அலர்ந்த பூக்கள். இளைஞர் - ஏவலிளைஞர் படை-பொற்பட்டம்; கலணை எனக்கொண்டு சேணமாகவும் கொள்வர்; தேரிலே பூட்டப் பெருங் குதிரைகட்குச் சேணம் வேண்டாம் என்பதால் முகத் திலே அணியும் முகபடாம் என்றே கொள்க. படுமழை- மிகுந்த மழை; படுவெயில் எனவருவதும் நினைக்க. தண்நறும் புறவு என்றது, மழையிற் குளிர்ந்து மண்மணம் கமழும் காடு என்றற்காம். மான்ற- மயங்கிய; இது பொழுதைக் குறித்தது; இதனை அந்தி என்பது மரபு. மணல்மலி வியனகர் - பெருமனை யிடத்தே, மணல் மிகுந்துள்ள முற்றப்பகுதி. அகல நீக்கல் - முற்றவும் போக்குதல். விருந்தயர் விருப்பு - விருந்து செய்யும் விருப்பம்; இது தலைவனுக்கும் பிறர்க்கும் இன்சுவை உணவு அளித்து உபசரித்தலும், அவனுக்கு ஆசைதீர முயங்கி இன்பம் தருதலும் என்னும் இருவகை விருந்தையும் குறிக்கும்.

விளக்கம்: தலைவனும் இளைஞரும் முல்லை சூடினர் என்றதும், தேர் படுமழை பொழிந்த தண்நறும்புறவின் வழியாக வந்தது என்றதும், அதுதான் கார்காலம் என்று சுட்டித் தலைவி யின் சினத்தைத் தணிவித்ததாம். 'நெடுந்தகை' என்றது, தலைவனின் உயர்வைச் சுட்டி, அவன் சொற்பிழையான் என்று போற்றியதாம்.

பயன் ; தோழி வாயில்களிடம் தலைவி விருந்தயர்வாள் என்று கூறும் பேச்சைக் கேட்டலுறும் தலைவியானவள், தன் சினத்தை மறந்து இன்முகத்தோடு தலைவனை வரவேற்று மகிழ் வாள் என்பதாம். 336**

கவும நல்மகள்

மஆ.

நற்றிணை தெளிவுரை

362. நீ விளையாடுக!

பாடியவர் : மதுரை மருதனிள நாகனார். திணை : பாலை. துறை: உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல் லியது.

[ (து - வி.) தலைவன், தலைவியை, அவள் தமரறியாமல், தன்னூர்க்கு அழைத்துச் செல்லுகின்றான். இடைவழியில், அவள் சோர்வு கண்டு, அவளைத் தேற்றுவானாகச் சொல்லு கின்ற முறையிலே அமைந்த செய்யுள் இது.]

வினையமை பாவையின் இயலி, நுந்தை

மனைவரை இறந்து வந்தனை; ஆயின்,

தலைநாட்டு எதிரிய தண்பெயல் எழிலி

'அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டும், கொண்டும் நீவிளை யாடுக சிறிதே: யானே. மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்; நுமர்வரின், மறைகுவென் - மாஅ யோளே!

5

10

தெளிவுரை : மாமை நிறத்தை உடையவளே! வினைத் திறன் அமைந்த பாவைபோல் இயங்கினையாய், நின் தந்தை யின் மனையின் எல்லையைக் கடந்து, என்னோடும் வந்தனை. ஆதலாலே, முதற்பெயலைப் பெய்யத் தலைப்பட்ட தண்ணிய பெயலையுடைய மேகமானது பெய்தலினாலே, அழகுமிகுந்த காட்டினது அகன்ற பக்கங்களிலே பரந்துள்ள, விரைந்த செலவையுடைய சிவந்த தம்பலப் பூச்சிகளைப் பார்த்தும், பிடித்துக் கொண்டும், நீதான் சிறிதுபொழுது விளையாடியிருப் பாயாக. யானோவென்றால், இளங்களிறு உரித்துவிட்ட பருத்த அடியையுடைய வேங்கை மரத்தின், மணற்பரப்பினையுடைய பக்கத்தின், பெரிய பின்பக்கமாக மறைந்திருந்து, எவராயினும் போரிடுதற்கு வருவாராயின் அஞ்சாதே போரிட்டு அவரை ஓடிப்போகச் செய்வேன்; நின் சுற்றத்தார் தேடி வந்தனராயின் அம் மரத்தின் பின்னேயே நன்றாக மறைந்து கொள்வேன்;

காண்பாயாக.

கருத்து: 'நின்பால் அன்பும், நின்னைக் காக்கும் வலிமை யும் உடையவன்' என்றனனாம். कप

நற்றிணை தெளிவுரை

2 Goind demy

337

பாவை

சொற்பொருள்: வினை - கைவினைத்திறம். எந்திரப் பாவை. இயலி - நடந்து வந்து, மனைவரை - வீட்டின் எல்லை. இறந்து - கடந்து, தலைநாள் - முதல்நாள். அணி அழகு. செம்மூதாய் - தம்பலப் பூச்சிகள். கண்டும் - அது ஓடும் அழகினைக் கண்டும்; கொண்டும் - கையிற் பற்றி அதன் மென்மையும் அழகும் வியந்தும். மழகளிறு - இளம் களிறு. உரிஞ்சிய - உரிந்திட்ட. மணல் இடு மருங்கின் - மணல் இடப் பெற்றுள்ள பக்கத்திலே. இரும்புறம் - பெரிய பின்புறம். மாஅயோள் - மாமை நிறத்தவள்; மாயவள் போன்றாளும் ஆம்.

-

விளக்கம்: 'எந்திரப் பொற்பாவை போல இயங்கி என்றது, அவள்தான் தன் அறிவினால் எதனையும் ஆராயாமல் காதல் வேகத்தாலே இயக்கப்படும் பொம்மைபோல இயங்கி என்பதாம். தம்பலப் பூச்சிகளைப் பற்றி விளையாடுதல் சிறுமியர் மரபு. இதனால் கார்காலம் வந்தது என்பதையும், அது மணவினைக்கான காலமாகும் என்பதனையும் உணர்த் தினன். 'அமர்வரின்'- போர் வந்தால் என்றது, ஆறலைக் கள்வரோ பிற கொடியரோ போருக்கு வந்தால் என்றதாம். 'பெயர்க்குவென்' என்றது, அவரை ஓட்டுவேன் என்று ஆண்மை தோன்றக் கூறியதாம். நுமர் வரின் மறைகுவன் என்றது, அவருக்கு ஊறுவிளைவிக்கும் கொடுமை தன்பால் இல்லை என உரிமை காட்டிக் கூறியதாம். இதனால் அவன் வல்லமையும் அன்பும் காணும் தலைவி, தன் மயக்கம் நீங்கி, மகிழ்வுடன் அவனைப் பின்பற்றிச் செல்வாளாவள் என்பதாம்.

இறைச்சி : வேங்கையானது, மழகளிறு தன் பராரை யினை உருஞ்சிய பின்னும், தன் நிலையிற் குன்றாது நின்று செழித் திருக்குமாறு போலத் தானும் எத்துயர் வரினும் குன்றாது, அவளைக் காத்து நிற்கும் வலிமையாளன் என்பதாம்.

சோர்வும் நீங்கியவ ளாக

பயன்: அவள் அச்சமும் அவனுடன் அவனூர் செல்வாள் என்பதாம்.

பாடபேதம் : அகன்றலைப் பறந்த.

363. மணல் கொண்டு வருக!

பாடியவர் : உலோச்சனார். உலோச்சனார். திணை : நெய்தல். துறை 1. பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை என்னை ஆற்றுவிக்கும் என்று ஆகாதோ எம்பெருமான் தவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் 338

நற்றிணை தெளிவுரை

நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; 2. கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்.

[(து - வி.) 1. 'யான் வருந்தாது தெளிவிப்பேன் என்றோ நீதான் கவலையில்லாமற் போகின்றனை? யான் தெளிவிக்கவும் அவள் கவலை தீர்ந்திலது என்றால், நீதான் வந்து ஆற்றுவிக்க வேண்டும்' என்று, பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி தலைவியின் கவலைபற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. 2. தலைமகன் தந்த கையுறையை ஏற்று, அதனைத் தலைவிக்குத் தருவதற்கு இசைந்த தோழி, தலைவனிடத்தே சொல்வதாக அமைந்ததும் ஆம்.]

‘கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத்

தெண்கடல் நாட்டுச் செல்வேன் யான்' என, வியங்கொண் டேகினை யாயின், எனைய தூஉம் உறுவினைக்கு அசாவா உலைவில் கம்மியன்

வம்மோ- தோழி! மலிநீர்ச் சேர்ப்பு-

பொறியது பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு

5

பைந்தழை சிதையக் கோதை வாட

நன்னர் மாலை நெருநை நின்னொடு

சிலவிளங்கு எல்வளை நெகிழ

அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.

10

தெளிவுரை : நீர் மலிந்த கடற்கரை காட்டுத் தலைவனே. உடுத்திருந்த பசுமையான தழையுடைய சிதையவும், அணிந் திருந்த தலைமாலை வாடவும், நேற்றை மாலைப்பொழுதிலே, நின்னோடும், நல்லபடியாக, சிலவாகிய ஒளியுள்ள தன் கைவளைகள் நெகிழ்ந்தோட, வண்டுகளை ஆட்டி விளையாடிய வளது, காற்சிலம்பானது உடைந்து போயினது. ஆதலினாலே, கண்டல் மரங்களை வேலியாகக் கொண்டதும், கழிகளாலே சூழப்பெற்றதுமான கொல்லைகளையுடைய தெளிந்த நல்ல கடல் நாட்டுக்கு யானும் செல்வேன் என்று நீயும் நெறிக்கொண்டு போவாய் ஆயினை. ஆயின், எத்துணையளவேனும், தான் செய் தற்குரிய தொழிலைச் செய்தற்கு வருத்தம் அடையாது, கெடுத லில்லாத கம்மியன், பொறியற்றுப் போனதை இணைத்து ஒன்று சேர்த்துச் செப்பஞ் செய்யவேண்டும் அல்லவோ! அதற்குக் 'கருக்கட்டுவதற்கான மண் எடுக்கும் துறையினின்றும் வேண்டிய மணலைக் கொண்டு தந்துவிட்டு நீயும் போவாயாக என்பதாம். நற்றிணை தெளிவுரை

வை

கிடங்கில் காவிதிப் பெருல்ல

339

கருத்து: 'இவளை மணந்து கொள்வதே இனி விரையத் தக்கது என்பதாம்.

சொற்பொருள்: படப்பை- படப்பை-கொல்லைப்புறம். தெண் கடல் - தெளிந்த நீரையுடைய கடல். வியங்கொண்டு - நெறிக் கொண்டு. உறுவினை - செய்தற்கான வினை. அசாவா - சோர்த லற்ற. உலைவில் - வருத்தமும் அடையாத. கம்மியன் - பொற் கொல்லன். பொறியறு - விட்டுவிட்டுப் போன. அலவன் ஆட்டல் - கடற்கரை நண்டுகளை விரட்டியோட்டி விளையாடி மகிழ்தல்.

.

விளக்கம்: 'நின்னொடு நெருநை அலவன் ஆட்டுவோள்' எனவே, இருவருக்கும் உள்ள உறவைத் தான் அறிந்ததை உணர்த்தினளாயிற்று. சிலம்பு உடைதலால் அன்னையறிந்து இற்செறிப்பு நிகழ்தலை நினைந்து தலைவி வருந்துவள்; அவளை என்னால் ஆற்றுவித்தல் அரிது; ஆதலின், நீயே துறைமணல் கொணர்ந்து, கொல்லனிடம் இச் சிலம்பினைச் சரிசெய்து தந்து, இவள் கவலையைப் போக்குவாய் என்பதாம். 'நீ வந்து ஆற்று விப்பாயாக' என்றது, அதுதான் வரைதற்பொருட்டு வருத லன்றிப் பிறவாற்றால் இயலாதென்பதும் குறிப்பாக உணர்த்தி

னளாம்.

பயன் : 'தலைவன் வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான்' என்பதாம்.

f

இரண்டாவது துறைக்கு : 'தோழி! சேர்ப்பனோடு நேற்று அலவனாடியதனாலே உடைபட்ட நின் சிலம்பு கண்டு அன்னை சினங்கொள்வாள்; ஆதலின், சிலம்பனிடம், நீ பிரிந்து போயினை என்றால், உடைந்த சிலம்பை மீளவும் ஒன்றுகூட்டு தற்கான மணல்கொண்டு வருவாயாக என்போம்' என்று பொருள் காண்க.

பயன் : தன் காதலைத் தோழி அறிந்தாளென அறியும் தோழி, கையுறைப் பொருளை ஏற்றுத் தலைவனுக்கு அருள் செய்வாள் என்பதாம்.

364. பல்நாள் வாழலேன்!

பாடியவர் : கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார். திணை முல்லை. துறை: தலைமகள் வரைவிடை மெலிந்தது. 340

நற்றிணை தெளிவுரை

( ( து - வி.) தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றான் தலைமகன். அவன் மீண்டுவருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்து கழிந்தும், அவனை வரக்காணாததால் தலைவியின் துயரம் அளவு கடந்து பெரிதாகின்றது. அவன் தன் நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி ஆர்கலி வானம் நீர்பொதிந் தியங்கப் பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப இன்ன சில்நாள் கழியின், பல்நாள் வாழலென் வாழி-தோழி!-ஊழின் உருமிசை அறியாச் சிறுசெந் நாவின் ஈர்மணி இன்குரல் ஊர்நணி இயம்பப் பல்லா தந்த கல்லாக் கோவலர்

கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப,

உயிர்செலத் துனைதரும் மாலை,

செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே!

.

5

10

தெளிவுரை : தோழீ! நெடுங்காலம் நீதான் வாழ்வாயாக. தலைவர் வருவேம் என்று சொல்லிய பருவமோ கழிந்துவிட்டது. பகற்போதும் இருள்மிகுந்த நடுயாமத்துக் காரிருளோடு சேர்ந்து நிரம்பிய இடிமுழக்கையுடைய மேகங்கள் நீர்நிறைந்து வானத்தே இயங்க, வாடைக்காற்றோடு பனிக்குள்ள சினமெல் லாம் என்மீது வந்து மோதுகின்றது. இப்படிச் சிலநாட்கள் கழிந்ததானால்-

முறையே இடிமுழக்கத்தை அறியாத, சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இன்னோசை, ஊரிடத்தே புகுந்து ஒலிக்கும்படியாகப் பலவான ஆநிரைகளைச் செலுத்தி வந்த, பிற தொழிலைக் கல்லாத கோவலர்களின், கொன்றைப் பழத்தாலே செய்துள்ள அழகான இனிய புல்லாங்குழலின் ஒலியும் மன்றிடந்தோறும் ஒலியா நிற்கும். என் உயிர் செல்லும். படியாக விரைந்துவருகின்ற மாலைப் பொழுதானது, குற்றந் தீர்ந்த மாரியுடனேயும் சேர்ந்து ஒன்றுகூடி வருமானால், அப்பாலும் பல நாட்கள், நான் உயிர் வாழ்ந்திருக்கவே மாட்டேன், காண்பாயாக! நற்றிணை தெளிவுரை

341

கருத்து: 'இனிச் சாவுதான் எனக்கு அமைதி தரும் என்பதாம்.

சொற்பொருள் : எல்லையும் - பகலும். மங்குல் - காரிருள். முனிவு - சினம். இறுப்ப - வந்து தங்க. ஊழின் - முறையாக. உரும் - இடி. ஈர்மணி - குளிர்ந்த ஒலிசெய்யும் மணி. இயம்ப - எழுந்து ஒலிக்க. கல்லா - கல்லாத; வேறு ஒரு தொழிலையும் கற்றிலாத. மன்று - ஊர்மன்று; வந்த மாடுகளை ஒருங்கு சேர்த்துச் சரிபார்க்கும் மந்தைவெளி. துனைதரும் - விரையும். செயிர் - குற்றம்.

-

விளக்கம்: 'கிடங்கில்' என்பது இந்நாளையத் திண்டிவனம் பக்கத்திருந்த ஓர் ஊர் என்பர் ஒளவை. 'உருமிசை அறியாச் சிறு செந்நாவின் ஈர்மணி' என்றது, அது தான் இனிதாக ஒலிப் பதன்றி, எக்காலத்து உருமிசைபோலக் (இடியொலி போல) கடிதாக ஒலித்தல் இல்லை என்பதற்காம். 'செயிர்தீர் மாரி" என்றது, அது தன் காலத்தே பொய்க்காதாய் வந்து பெய்த லால். சொன்ன காலம் கழிந்தது; மாலையும் வாடையும் வந்து என்னை வருத்திக் கொல்லும் என்றால் அவற்றுக்குத் தப்பி இனியும் பல நாட்கள் உயிர்வாழ இயலாது என்பது தலைவியின் துயரக் குரலாகும். 'பல்லான்' என்பது பசுவினப் பெருக்கையும், மன்றுதோறிசைப்ப என்றது, அவை கூடும் மன்றுகளின் பெருக்கத்தையும் காட்டுவதாம். 'கல்லாக் கோவலர்' என்பது, பிரிந்தாரைத் தம் குழலொலி வருத்தும் என்பதைக் கல்லாத வரான கோவலர் எனினும் ஆம்; ஆகவே, அவர் மிக்க இளம் பருவத்தாராதலும் பொருந்தும்.

"

பயன் : இதன் பயனாகத் தலைவியின் வேதனை மிகுதி கண்டு, அவர் விரைய வருவார்; சொற்பிழையார்' எனத் தோழி ஆற்றுவிப்பாள்; அது கேட்டுத் தலைவியும் சிறிது அமைதி அடைவாள் என்பதாம்.

பாடபேதங்கள் : நீர் பொழிந்து இயங்க; முனிவு மெய்ந் நிறுப்ப; ஊர்வயின் இயம்ப மன்றுதோறு இசைப்ப.

365. அவனூர் வினவிப் போவோமா?

பாடியவர் : (கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சோகோவனார். திணை : குறிஞ்சி. துறை-தோழி, தலைமகன் - சிறைப்புறத் - தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து, 'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது. 342

நற்றிணை தெளிவுரை

((து - வி.) தலைவன் வந்து செவ்விநோக்கி ஒருபக்கமாக மறைந்து நிற்பனைத் தோழி காண்கின்றாள். அவன் உள்ளத்தை விரைந்து தலைவியை மணந்து கொள்வதிலே செலுத்த நினைக் கிறாள். தலைவியிடம் நெருங்கிச் சென்று, அவனை இகழ்ந்து பேசு கின்றாள். இதனைக் கேட்கும் தலைவன், தன் அறியாமையை உணர்ந்து தெளிவான் என்பது இதன் பயனாகும். அந்தத் தோழியின் பேச்சாக அமைந்த செய்யுள் இது.]

அருங்கடி அன்னை காவல் நீவிப் பெருங்கடை இறந்து மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய்விட்டு அகல்வயற் படப்பை அவனூர் வினவிச் சென்மோ வாழி-தோழி!-பல்நாள் கருவி வானம் பெய்யா தாயினும் அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின் வான்தோய் மாமலைக் கிழவனைச் 'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

தெளிவுரை: தோழீ! வாழ்வாயாக! பலப்பல நாட்களும் தொகுதியையுடைய மேகம் பெய்யாது போனாலும், அருவியின் ஒலியானது கேட்டபடியேயிருக்கும், நீர்வளத்தையுடைய பக்க மலைகளைக் கொண்டதும், வானத்தே தோய்ந்தாற்போல உயர்ந்ததுமான பெரிய மலைநாடன், நம் தலைவன். அவனை, நீ தான் சால்புடையவன் அல்லை' என்று சொன்னோமாக, மீண்டும் நம்மூர்க்கு வருவதற்கு-

'நீ

அருமையான காவலைச் செய்துள்ள அன்னையின் காவல் ஏற்பாடுகளையும் கடந்தேமாய், பெரிய கடைவாயிலையும் நீங்கினமாய், ஊர்ப்பொதுவாகிய மன்றத்திடத்தே சென்று, பகற்போதிலேயே, பலரும் நம் செயலைக் காணும்படியாக, வாய்விட்டு, அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவன் ஊரினைக் கேட்டறிந்தேமாய், நாமும் செல்வோமோ? நீதான் கூறுவாயாக என்பதாம்.

கருத்து: 'அவன் நம்பால் அருளுடையவனாகத் தோன்றாத தனாலே, அவனூர்க்கு நாமே நம் நாண்விட்டுச் சென்று, அவனிடம் 'இதுதான் இதுதான் நின் சால்போ? எனக் கேட்டு வருவோமா? என்பதாம்.

5 நற்றிணை தெளிவுரை

343

சொற்பொருள்: கடி- காவல் காவல் நீவி - கடந்து நீவி- கடந்து. இறந்து - நீங்கிச் சென்று. மன்றம் - ஊர்மன்றம். படப்பை - கொல்லை. கருவி-தொகுதி. அயம் - நீர்வளம். சான்றோய்- சால்பு உடையவன்.

இறைச்சி : 'சால்பில்லாதவனது மலையாயிருந்தும். பல நாளும் மழையற்றபோதும், அருவிநீர் வீழ்கின்ற ஒலியுடைய தாயிருக்கின்றதுதான் எதனாலோ?' என்று கூறி வியப்பது போலப் பழித்ததாகும்.

கூ

விளக்கம்: 'மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய் விட்டு அவனூர் வினவிச் சென்மோ?' என்றது, பெண்மைக்கு ஏலாத செயலேயானாலும், அதனை நாண்விட்டாயினும் நாம் செய்தால் அல்லாமல், அவன்றான், தானே நமக்கு அருளிச் செய்து காக்கும் சால்புடையவன் அல்லையே! என்று கூறி நொந்து பழிப்பதாகும் இது. இந்த நிலைக்கு அவரை அவன் செல்லவிடான் ஆதலின், விரைவிலே மணவினைக்கு ஆவன செய்வான் என்பதும் விளங்கும். 'அவனூர்வினவி' என்றதனால் வினவுதல் தம்மூரின் மன்றிடத்தே எதிர்ப்படும் பலரையும் என்க. இதனால், விளைவது பழியென்பதும் குறிப்பாக உணர்த் தினளாம். இதனால். அவன் களவே விரும்பியவனாக ஒழுகும் மனப்போக்கினன் என்பதும் அறியப்படும். ஊர்மன்றிற் சென்று அவனூர் வினவிச் செல்வோம் என்றது,ஊர்மன்றமே வழியோடு செல்வாரான பாணர் முதலியோர் பலரும் தங்கிப் போகும் இடமாதலால்.

"ஒரு சிறை நெஞ்சமோடு உசாவுங்காலை, உரியதாகலும் உண்டென மொழி" (தொல்.பொருள். 203) என்னும் விதியால் இவ்வாறு மரபல்லாதன செய்வோமோ என்று நினைத்தலும் கூறுதலும் இயல்பாகும் என்று கொள்க. ஆயின் செய்வது என்பது இல்லை என்பதும் உறுதியாம்.

பயன் : இதனை கேட்கும் தலைவன் வெட்கித் தன் பிழை யுணர்ந்தவனாய் விரைவில் மணவினைக்கு ஏற்பாடு செய்வான் என்பதும், தலைவி, அவன்பாற் கொண்ட அன்பின் உறுதிப் பாட்டைத் தோழிக்கு உணர்த்துவாள் என்பதுமாம்.

366. பிரிவோர் மடவர்

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்.திணை: பாலை. துறை: உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. 344

நற்றிணை தெளிவுரை

[ (து - வி.) இல்வாழ்விலே விருந்தோம்புதல் தலையாய அறமாகும். அதற்குப் பொருள் வசதியும் வேண்டும். ஆகவே மனைவியைப் பிரிந்து சென்றேனும் பொருள் தேடிவர நினைக்கின்றான் தலைவன். அந்த நினைவோடு, பிரிந்தால் நலிந்து நலனழியும் மனைவியையும் நினைக்கின்றான். இல்வாழ்வின் ஆதாரமே அவள்தானே! அவளை வருந்தச் செய்து விருந்தறம் செய்தல் முடியுமா? எண்ணம் சிதறுகிறது! அவன் தன் நெஞ்சுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

அரவு கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் திருந்திழை அல்குல் பெருந்தோட் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கி லம்கழைத் தூங்க ஒற்றும்

வடபுல வாடைக்குப் பிரிவோர்

மடவர் வாழி, இவ் உலகத்தானே!

5

LO'

10

தெளிவுரை : நெஞ்சமே நீ வாழ்க! பாம்பானது தலை யுயர்த்துப் படமெடுத்தாற் போன்றதும், பலவாகக் கலந்துள்ள பல கோவைகள் வீழ்ந்திருந்தலைப் பொருந்திய நுண்மையான துகிலினது ஊடாக வெளித்தோன்றித் தோன்றி இமைப்பதும், திருந்திய இழைகளை அணிந்திருக்கப் பெற்றதுமான அல்குல் தடத்தையும், பெருத்த தோள்களையும் கொண்ட இளமடந்தை நம் மனைவி. அவள்தான், நீலமணிக்கு ஒப்பான தன் கூந்தலை மாசில்லாதபடி தூய்மையாகக் கழுவி, கூதிர்காலத்தே பூக்கும் முல்லையின் குறுகிய காம்புடைய மலர்களை இளைய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகளும் மொய்க்குமாறு சூட்டிக் கொள்பவள். கருமையானதும் பலவான மென்மை சேர்ந்தது மான அந்தக் கூந்தலணையிலே துயிலும் இன்பத்தைக் கைவிட்டு,

கரும்பின் வேல்போன்ற வெண்மொட்டு விரியும்படியாகத் தீண்டி, அறிவுமிகுந்த தூக்கணங் குருவியானது முயற்சி யெடுத்துச் செய்தமைத்த கூடானது, மூங்கிலின் அழகிய கழை நற்றிணை தெளிவுரை

345

யிடத்தே தொங்கியபடியிருக்க, அதை அசைத்து வருத்தும் வடபுல வாடைக்காற்று; அத்தகைய பருவத்தில் மனைவிமாரைப் பிரிவோரே இவ்வுலகத்திலே மிகுந்த அறியாமை உடைய வராவர்;ஆதலினால், நாமும் அவளைப் பிரியோம் என்பதாம்.

கருத்து: இவளை வாடவிட்டுப் பிரியோம் என்பதாம். சொற்பொருள் : அரவு - நல்லபாம்பு. கிளர்தல் - தலை யுயர்த்துப் படம் விரித்தாடுதல். விரவுறு - கலப்புக் கொண்ட காழ் -வடம். வீடுறு-வீழ்தல் பொருந்திய. ஊடுவந்து - இடையிடையே தோன்றி. இமைக்கும் - கண் சிமிட்டுவது போலத் தோன்றியும் மறைந்தும் அழகுகாட்டும். குறுமகள்- இளமடந்தை; காமநுகர்வுக்கு உரிய பருவத்தள் என்று குறித்துக் கூறியது. கூதிர் - வாடைக்காலம். கால் - காம்பு. அலரி -

அலர்ந்த மலர். மாதர் வண்டு -பெண்வண்டு; அழகிய வண் டெனினும் ஆம், பிரிய - கட்டு அவிழ்ந்து பிரிய.தீண்டி- கோதி; அதன் ஓரத்தை நாராகக் கிழித்துப் போவதன் பொருட்டுக் குருவி கரும்பின் மொட்டைக் கோதும் என்க. முதுக்குறை - அறிவு நிரம்பிய. ஒற்றும்-தாக்கி மோதும்.

மடவர் - மடமை உடையவர்.

இறைச்சிகள் : 1) மணமற்ற கரும்பின் மலரைத் தீண்டித் தான் கூடு கட்டுவதற்குரிய நாரினைக் குருவி பெறுவது போலத், தானும் இன்பமற்ற வேற்றுநாட்டிற்குச் சென்று, இல்லத்துப் பொருள் வளத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் கடமைகளைச் செய்வதற்கு உரியவன் என்று நினைத்தான்

அவன் என்க.

2) குருவி தன் கூட்டை மூங்கிலிலே கட்டியிருப்பினும், வாடைக் காற்று மூங்கிலையே அசைத்தாட்ட, அதனுடன் அக்கூடும் ஆடியாடி வருந்தும் என்றது, இவ்வாறே பிரிவாலே நலிந்திருக்கும் தலைவியும், பாதுகாவலான வீட்டில் இருந்த போதும், பிரிவின் துயரத்தை வாடையானது மிகுதியாக்கி நலிவிக்கத், துன்புறுவள் என்பதாம்.

விளக்கம் :

வண்டினம் மொய்க்கும் முல்லையின் விரிந்த மலரைக் கூறியது மாலைக்காலத்தை உணர்த்தற்காம்; முல்லை மலர்வது மாலையாதலின் என்று கொள்க. 'மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇ... முல்லை சூடி' என்றது, காமம் நுகரத் துடிக்கும் இளமகளிர் மாலையிலும் நீராடித் தம்மை ஒப்பனை செய்து காதலரை இன்புறுத்துவர் என்பதைக் காட்டுவதாம். அந்தப் பழக்கம் பிரிவுக்காலத்திலும் தொடர்ந்தாலும், அவள் 5.-22 346

நற்றிணை தெளிவுரை

துணைபெற்று மகிழாது, வாடையும் மாலையும் தாக்கி வருத்தத் தளர்ந்து நலிவாள் என்று நினைத்துத், தலைவன் கலங்குகின்றான் எனக் கொள்க.

பயன் : தலைவன், தான் பொருள்தேடிவரப் பிரிந்து போவதைச் சிறிது காலம் ஒத்திப்போட்டுத், தன் ஆசை மனைவியுடன் இனிதாகக் கூடி வாழ்ந்திருப்பன் என்பதாம்.

367. பரியாது வருவர்!

பாடியவர் : நக்கீரர். திணை: முல்லை. துறை: வரவுமலிந்தது. சிறப்பு: அருமனின் சிறுகுடி.

( (து - வி.) தலைவன் குறித்த காலத்தில் திரும்பிவரத் தவறியதால், அதுவரை பொறுத்திருந்த தலைவிக்கு, மேலும் பொறுத்திருக்க முடியாமல் ஆற்றாமை மிகுதியாகின்றது. அவள் வேதனையை மாற்றக்கருதிய தோழி, தலைவனின் உடன் சென்ற வீரர்கள் முல்லைசூடித் திரும்பியது காட்டி, அவனும் விரைவில் வருவான் எனத் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இது.]

கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு

சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் கூழுடை நன்மனை குழுவின இருக்கும் மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி

மெல்லியல் அரிவைநின் பல்லிருங் கதுப்பிற்

குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத்

தளையவிழ் அலரித் தண்நறும் கோதை இளையருஞ் சூடி வந்தனர் நமரும்

விரியுளை நன்மா கடைஇப்

பரியாது வருவர், இப் பனிபடு நாளே.

5

10

தெளிவுரை : வளைந்து பார்க்கும் கண்ணினையும், கூர்மை யான வாயினையும் உடையதான காக்கையின் பேடையானது, நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டதாய், தன் சுற்றத்தைக் கூப்பிட்டழைத்து, கருங் கண்ணையுடைய கருணைக்கிழங்கின் கறியோடு கூடிய செந்நெல் நற்றிணை தெளிவுரை

347

அரிசியாற் சமைத்த வெண்சோற்றுத் திரளையை, அச்சமுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலியோடு கவர்ந்து கொள்ளும் படியாக, குறிய கால் நாட்டிக் ஈட்டிய சோறூட்டும் இடங்களையுடைய நல்ல மனையினிடத்தே கூட்டமாக அமர்ந் திருக்கும், பழமையான வீடுகளையுடையது அருமன் என்பானின் பெரும் புகழ்பெற்ற சிறுகுடி என்னும் ஊர். அவ்வூரைப் போன்ற மென்மையான சாயலையுடைய அரிவையே! நின்னுடைய பலவான கரிய கூந்தலிலே சூடிய மாலைபோல, குவளையோடு கலந்து தொடுத்த நறிய முல்லைப்பூவின் கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த மாலைகளைச் சூடியவராக, நம் தலைவனுடன் சென்றிருந்த வீரர்கள் திரும்பி வந்து விட்டனர். நம் காதலரும், விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக்கொண்டு, இடையில் எங்கும் தங்கி வருந்தாது. இப் பனிகொட்டும் நாளிலேயே வந்துவிடுவார்; ஆதலின், நீயும் வருந்தாதிருப்பாயாக என்பதாம்.

கருத்து: நம் தலைவர் இன்றே வருவர்; நின் ஏக்கமும் தீரும் என்பதாம்.

-

.

சொற்பொருள்: கொடுங்கண் - வளைந்து ஒரு பக்கமாகப் பார்க்கும் கண். பேடை - பெட்டை. நடுங்குசிறைப் பிள்ளை நடுங்கும் சிறகையுடைய காக்கைக் குஞ்சு; நடுங்குவது குளிரால் என்று கொள்க. பயிர்ந்து - அழைத்துக் கூப்பிட்டு. கருனை- கருணைக்கிழங்குப் பொறிக்கறி. சூருடைப் பலி - அச்சத்தை யுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலிச்சோறு.குறுங்கால் குறுகிய கால்கள் கொண்ட பந்தர். கூழ் - உணவு. மூதில் - பழைமையான வீடுகள்; இது ஊரின் பழமையைக் குறிப்பது. பல்லிருங் கதுப்பு -பலவாகப் பகுத்து முடிக்கும் கரிய கூந்தல். 'பல்லிருங் கதுப்பிற் குவளை' எனக்கூட்டி, கதுப்பினைப்போன்ற கரிய குவளைமலர் என்றும் பொருள்கொள்ளலாம். கோதை தலைமாலை. உழை - பிடரிமயிர். பரியாது - தங்கி வருந்தாது.

விளக்கம் : மூதில் அருமனின் சிறுகுடியிலுள்ள பெண்கள் தாம் நேர்ந்து கொண்டபடி, தம் கணவர் வந்ததும், பலிச் சோறிட்டுக் காக்கையைப் போற்றினர் என்று கருதலாம். 'சிறுகுடி மெல்லியல்' என்றது, அச் சிறுகுடிபோன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண், தலைவி என்று கூறியதாம். குவளையும் முல்லையும் சேர்த்துக்கட்டிய மாலையானது, நீலமும் வெள்ளையும் விரவியதாக அழகுடன் விளங்குவதோடு, கார்காலத்தின் வரவையுணர்த்துவதும் ஆகும். இளைஞர்-போர் மறவர்; இதனால் தலைவன் படைத்தலைவன் என்பதும் அறியப்படும். 348

நற்றிணை தெளிவுரை

உள்ளுறை : காக்கையின் பெடையானது தன் குஞ்சைத் தழுவிக்கொண்டு சோற்றுப்பலியைக் கவரக் கூடியிருக்கும் மனை என்று குறித்தனர்; இவ்வாறே தலைவியும் தன் மகனைத் தழுவிக் கொண்டு சுற்றம் பேணி நல்விருந்தாற்றி இல்லறத்தைப் புகழுடன் நடத்துபவாளாவள் என்பதாம்.

'பாளைதந்த பஞ்சியங் குறுங்காய், ஓங்கிரும் பெண்ணை நுங்கோடு பெயரும் ஆதியருமன் மூதூர்' என்று குறுந்தொகை யுள் கள்ளில் ஆத்திரையனார் (193) கூறுவர். ஆகவே, ஆதி அருமனின் ஊர் மூதூர் என்றே வழங்கியது எனலாம். சிறுகுடி- சிறிய குடியிருப்பென்று கொள்ளலாம்.

368. வெய்ய உயிர்த்தனள்!

பாடியவர் : கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.

[ (து - வி.) தலைமகன் தலைமகளை வரைந்து வருவதற்கு முயலாதவனாகத் தொடர்ந்து களவுறவிலேயே ஈடுபட்டு வருத லால், தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவள், தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை அவனுக்கு அறிவுறுத்துவதன் மூலம், அவனால் இனியும் களவுறவிலே இன்பங்காண்பது இயலாதென்பதைச் சுட்டிக்காட்டி, அவன் உள்ளத்தை

மணவினையின்பாற் செலுத்த முயல்கின்றாள். அவள் சொல் வதாக அமைந்த செய்யுள் இது.)

பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பிக்

கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக்

கோடேந்து அல்குல் தழையணிந்து, உம்மொடு

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ,

நெறிபறி கூழைக் கார்முதிர்பு இருந்த

5

வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய

பசலை பாய்தரு நுதலும் நோக்கி

வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி

வெய்ய உயிர்த்தனள் யாயே--

ஐய! அஞ்சினம், அளியம் யாமே!

10

தெளிவுரை : ஐயனே! பெரிய தினைப்புனத்திலே புகுந்து

கதிர்களைக் கவரும் சிறுகிளிகளை ஒப்பியும், கருமையான அடியை நற்றிணை தெளிவுரை

349

யுடைய வேங்கை மரத்திலே தொடுத்துள்ள ஊசலிலே அமர்ந்து ஆடியும், பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே பசுந்தழையால் அமைந்த உடையணிந்தும், உம்மோடு அருவியாடியும் வருதலைக் காட்டிலும் இனிதாவது ஒன்றும் எமக்கு உளதாகுமோ? நெறிப் பமைந்த கூந்தலிலே கருமை முதிர்ந்திருந்த நறுமணம் கமழ் தலைக் கொண்ட புதுநாற்றத்தையும், சிறிதளவிலே பசலை பரவிய நெற்றியையும் பார்த்து, பயனின்றிச் சிதைந்த உள்ளத்தினள் ஆயினள் யாய். பிறிதொன்றைக் காரணமாகக் குறித்தவளாக அவள் சுடுமூச்செறிபவளும் ஆயினள். அதனால், இனி யாம் என் செய்வேம்! இரங்கத் தகுந்தவராகவே யாம் ஆவோம் போலும்! என்பதாம்.

கருத்து: 'இனி இற்செறிக்கப்பட்டு வாடி நலிவோம் என்பதாம்.

-

சொற்பொருள்: பெரும்புனம்- பெரிய தினைப்புனம்; தலைவியது தந்தையின் வளமையைக் குறித்துச் சொல்லியது. சிறுகிளி - சிறிய உருவினதான கிளி. ஓப்பி -வெருட்டி. தூங்கி - தொங்கியாடி.கோடு - பக்கம். தழை - தழையுடை நெறி- நெறிப்பு.கார் - கருமை. முதிர்பு - முதிர்ந்து. வெறி - நறுமணம். பசலை - பசலை நோய். அளியம் - இரங்கத் தக்கவராவோம்.

-

விளக்கம்: 'பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பி' என்றது. புனம் பெரிதாயினும் தினையைப் பிறர் கவர்ந்து போகாதே காத்துப் பேணும் கடமையுணர்ச்சியைக் கூறியதாம்; இதனால் தலைவியைக் களவுறவில் தலைவன் கூடியின்புறுவதறியும் பெற்றோர் சீறி எழுவர் என்பதும் குறிப்பாக உரைத்தனளாம். காவல் கடமைகொண்டு வந்தபோதும், வேங்கையில் ஊசலாடி மகிழும் இயல்பான தன்மையும் உளது என்றது, அவன் ஊச லாட்ட ஆடி மகிழ்ந்ததனை நினைவுபடுத்திக் கூறியதாகும். 'தழை அணிந்து' என்றது, அவனால் தரப்பட்ட கையுறையான தழையுடையை ஏற்று அணிந்து என்றதாம். 'ஆடினம் என்றது. சோலையிலே நின்னோடு விளையாடினம் எனவும், அருவியாடி இன்புற்றனவும் எனவும் குறித்ததாம்.

ஒன்று சுட்டி' என்றது, தெய்வம் அணங்கியதாகக் குறித்து, வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்ய முற்பட்டனள் என்றதாம். 'அளியம்' என்றது, இற்செறிப்பு உணர்த்தியதாம்; உண்மையை உரைக்க வியலாதும், அன்னையின் வெறியாட்டை ஏற்க முடியாதும் அலமரலால், இவ்வாறு கூறியதாகவும் கொள்ள

லாம்.

. 350

நற்றிணை தெளிவுரை

பயன் : தலைவன் தெளிவடைந்து மணந்துகொள்ள வேண்டிய முயற்சிகளிலே மனம் விரைவான் என்பதாம்.

369. நீந்துமாறு அறியேன்!

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார். திணை: நெய்தல். துறை: பட்ட பின்றை வரையாது பொருள் வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.

( (து - வி.) அறத்தொடு

நின்றனள் தலைவி. அதன் பின்னும் வரைந்து வராமல், வரைபொருள் குறித்துப் பிரிந்து போயினான் தலைவன். இதனால், தலைமகள் ஆற்றாமை மிகுதி யாகின்றது. அதனைப் பொறுத்திரு என்று தேறுதல் கூறும் தோழிக்கு அவள் கூறும் எதிர் உரையாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேர

நிறைபறைக் குருகினம் விசும்புகந்து ஒழுக எல்லை பைபயக் கழிப்பி முல்லை

அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை

இன்றும் வருவது, ஆயின், நன்றும்

அறியேன் வாழி தோழி!-அறியேன் ஞெமை ஓங்கு உயர்வரை இறையத்து உச்சி

வாஅன் இழிதரும் வயங்குவெள் அருவிக் கங்கையம் பேர்யாற்றுக் கரையிறந் திழிதரும் சிறையடு கடும்புனல் அன்னவென் நிறையடு காமம் இந்து மாறே.

5

10

தெளிவுரை: தோழீ! கதிரோன் தன் சினம் தணிந்தவனாக மேற்றிசைக் குன்றத்தைச் சென்றடையவும், நிறைந்த சிறகை யுடைய நாரைக் கூட்டமானது ஆகாயத்திடத்தே நெருங்கிச் செல்லவும், பகற் பொழுதையெல்லாம் மெல்ல மெல்லப் போக்கி முல்லையின் அரும்பு வாய்திறந்து மலரவும், பெரிய புன்மையுடைய மாலைக் காலமானது நேற்றுவரையும் நம்மைத் துன்புறுத்தியது. இன்றும் அதுதான் வருமானால்-

மூங்கில்கள் வளர்ந்த உயர்ந்த இமயமலைத் தொடரின் உச்சியிடத்தே, வானினின்றும் வீழ்கின்றதுபோல விழும் நற்றிணை தெளிவுரை

351

விளங்கும் வெள்ளிய அருவிகளை உடைய அழகிய கங்கைப் பேராற்றினைக் கரைகடந்து இடித்துச் செல்லும், அணையை உடைத்துச் செல்லும் வெள்ளத்தைப் போன்றதான், என் னுடைய நிறையை அழித்துப் பெருகும் காமவெள்ளத்திலே நீந்திக் கரையேறும் வழியினை, நான் நன்றாகத் தெரிந்தேனாகவும் இல்லையே! இனி, நான் எவ்வாறு உய்வேனோ? என்பதாம்.

கருத்து :'இனி, யான் உயிரோடு இருப்பதரிது' என்பதாம். சொற்பொருள்: சுடர் - கதிரோன். சினம் - வெம்மை. குன்றம் - மேற்றிசைக் குன்றம். நிறை பறை - நிறைந்த சிறை யுடைய; நிறைத்துப் பறத்தலையுடைய எனினும் ஆம்.விசும் புகந்து - வானத்தை விரும்பி. எல்லை -பகற்போது. பெரும்புன் பெரிய புன்மையுடைய.ஞெமை - மூங்கில். கரையிறந்து கரை கடந்து. இழிதரும் - வழிந்தோடும். நிறை -நாண் முதலியவை. அடு காமம் - அவற்றை மோதிக் கடந்து வெளிப் படும் காமத் துயரம்.

விளக்கம் : மாலைப் பொழுது வருகின்றது; கதிரவனின் சினம் தணிந்துள்ளது; அவன் மேற்கு மலையைச் சேர்கின்றான்; இரையுண்ட நாரையினம் வானை அடைத்தாற்போலப் பறந்து கூடுநோக்கிச் செல்லுகின்றன; முல்லையரும்பும் இதழவிழ்ந்து மலர்ந்துள்ளது; இவ்வாறு எங்கும் இன்பமே பெருகும் காலத் திலும், துணைவரை அடையாது புலம்பும் தான்மட்டும் வருந்தி யிருப்பேன் என்கின்றனள். ' இன்றைக்கும் வருவது ஆயின் என்றது, வரின் தான் உயிர் தரிப்பதரிது என்பதாம். அடக்கவும் அடங்காது கரைகடக்கும் காமமிகுதிக்குக், கங்கையின் கடும் புது வெள்ளம் கரைகடந்து சென்று, இடைப்படும் தடைகளை உடைத்துக்கொண்டு ஓடுவதைக் கூறுகின்றனள். நீந்தும் ஆறு- நீந்திக் கரை சேரும் வழி.

பயன் : இதனால், தலைவியின் ஆற்றாமைத் துயரமானது சிறிது தணிவதனால், அவள் மேலும் சிலகாலம் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பாள் என்பதாம்.

370. நகுகம் வாராய்!

பாடியவர்: உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார். திணை : மருதம். துறை: (1) ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணற்குச் சொல்லியது; (2) முன் நிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியது. 352

நற்றிணை தெளிவுரை

[(து - வி.) (1) மனைவியைப் பிரிந்து மறந்து பரத்தை இன்பத்திலே மயங்கிக் கிடந்தவன், மீண்டும் தன் மனைவியை நாடி வருகின்றான். அவளோ ஊடலாற் சினந்து ஒதுங்கி விடுகின்றாள். அவன் பன்முறை வேண்டியும் அவள் இசைய வில்லை. அப்போது, அவனிடம் ஆற்றாமை மிகுகின்றது. அவளும் கேட்டறியுமாறு, தம் முன்னைக் காலத்து நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தவனாகத் தன் பாணனிடம் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைவியை மறந்தனையே, அவள் சினந்து வெறுத்து ஒதுக்கினால் யாதாகுமோ எனக் கவலையோடு சொன்ன பாணனுக்கு, அவளது உழுவலன்பு புலப்படத் தலைவன்.கூறியதாக அமைந்ததாகவும் கொள்ளலாம்.]

வாராய் பாண நகுகம்- நேரிழை

கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப் புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் திதலை அல்குல் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல முகைநாள் முறுவல் தோற்றித்

தகைமலர் உண்கண் கைபுதைத் ததுவே!

5

10

தெளிவுரை : பாணனே! இங்கே வருவாயாக. நேரான அணிகலன்களை அணிந்தவள் நம் தலைவி. அவள் சுற்றத்தாரால் பேணப்படும் தலைச்சூலினைக் கொண்டாளாக, நம் குடிக்குப் புதல்வனையும் தந்து உதவினாள். நெய்யுடனே கலந்து ஒளி வீசு கின்ற சிறு வெண்கடுகாகிய திரண்ட விதைகளை மாளிகையுள் அவளிருந்த இடம் எங்கும் பேய்க்காப்பாக விளங்கும்படித் தூவிவைத்திருந்தனர். அதற்கிடையே படுத்திருந்தவளை நெருங்கி, 'புதல்வனைப் பெற்றதனாலே தாய் என்னும் வேறொரு பெயரினையும் பெற்றனையாய், அழகிய வரிகளும் தித்தியும் உண்டய அல்குலைப்பெற்ற முதுபெண்டாகித் தூங்குகின்றாயோ. மென்மையோடு அழகிய சிலவாக முடிக்கப்பெறும் கூந்தலை யுடையாளே!' என்று சொல்லி, பலவான மாட்சியுடைய அவள் வயிற்றிடத்தே என் கையிடத்துள்ள குவளை மலரால் ஒற்றிய படியே சிலபொழுது சுருதினேன். அங்ஙனம் சிந்தனை வயப் நற்றிணை. தெளிவுரை

353

பட்டு நின்ற என்னைக் கண்டு, அவளும், முல்லையின் நாளரும் பைப் போன்ற குறுநகையினைத் தோற்றுவித்தனள். சிறந்த நீல மலர்போன்ற மையுண்ணும் தன் கண்களையும் கையால் மறைத்து மூடிக்கொண்டனள். அதனை நினைத்து எப்போதும் நான் மகிழ்ந்து நகையுடையவனாவேன். இப்போதும் நகுகின் றேன். நீயும் என் நிலைமையைக் காணாய் என்பதாம்.

கருத்து: "குடும்பத் தலைவியான அவளை யான் என்றுமே மறந்தேனில்லை" என்பதாம்.

சொற்பொருள்: பாணன் - பாணர் குலத்தவன்; தலை வனுக்குப் பரத்தையர் உறவிற்குத் துணையாக நின்று உதவும் பணியாளன். நேரிழை - நேரிய அணிகளை உடையவள்; பிற மகளிரினும் சிறந்தவள் என்று வியந்து பாராட்டிக் கூறியது. கடும்பு - சுற்றம். கடுஞ்சூல் - தலைச்சன் பிள்ளைப்பேறு. நம்குடி. நம்குடும்பம். நகர் - மாளிகை. ஐயவி - சிறு வெண்கடுகு. திதலை தேமற்புள்ளிகள். பெயர் பெயர்த்து - பெயர் வேறொன்றாகி; புதல்வன் தாயாகி. அவ்வரி - அழகிய கோடுகள். அகடு - வயிறு. குவளை - குவளை மலர். குவளை ஒற்றி - கண்களை ஓடவிட்டுப் பார்த்து என்றும் சொல்லலாம். முகை நாண் முறுவல் - முல்லை யது நாளரும்பு போன்ற மென்முறுவல்; முல்லைமுகையும் நாணித் தோற்கும் இளமுறுவல் எனினும் ஆம்.

.

விளக்கம்: 'குடிக்கு விளக்காகிய புதல்வனைப் பெற்றுத் தந்த சிறப்புடையவள்; என் புதல்வன் தாய் எனப் புதிய தகுதி யும் பெற்றவள்; அவளை எவ்வாறு மறப்பேன்?' என்று தலைவன் தன் உள்ளன்பை இதன்மூலம் உணர்த்துகின்றான். இதனால், அவள் புதல்வனைப் பெற்று வாலாமையில் இருந்திட்ட காலத்திலே. அவன் புறம்போந்து பரத்தையொழுக்கத்திலே ஈடுபட நேர்ந்தது என்பதும் அறியலாம். அவள் பெற்று, அந்தக் களைப்புடன் கிடந்து துயின்றபோது அவன் சென்று கண்டதும், அவள் முறுவலித்துக் கையாற் கண்புதைத்ததும் சிறந்த குடும்ப ஓவியமாகும். நகுகம்' என்றது, அத்துணை உறவுடையாளே இப்போது நம்மை வெறுத்து ஒதுக்குகின்றனள்; நம் நிலை இத்தகையதோர் நிலைக்குத் தாழ்ந்ததனை நினைத்து நாம் நகுவோம்' என்று, விரக்தியாற் கூறினதாகக் கொள்க.

கருவுயிர்த்த பெண்களின் வயிறு மீண்டும் பழைய நிலைக்கு வருமுன், உயிர்த்த சில நாட்களில், வரியும் திதலையுமாகத் தோன்றும் என்பதனையும் நயமாகக் காட்டியுள்ளனர் ஆசிரியர்.

. 354

நற்றிணை தெளிவுரை

பாடபேதங்கள் : துறையினை, 'ஊடல்நீட ஆற்றானாய் நின்றான்,முன் நிகழ்ந்தனைப் பாணற்குக் சொல்லியது' என ஒன்றாக்கிக் கொள்வர்; இலங்கு நகர் விளங்க; நின்றனன் அல்லனோ யானே எற்கண்டு; உண்கண் புதைத்து வந்ததுவே.

தலைவனை

பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தன்னுடைய பொறுப் பின் கடமையை நினைந்தாளாய்த் கொள்வாள் என்பதாம்.

371. பெயல் தொடங்கினவே!

ஏற்றுக்

பாடியவர்: ஔவையார். திணை : முல்லை. துறை : வினை முற்றி மறுத்தரா நின்றான் பாகற்குச் சொல்லியது.

((து -வி.) சென்ற வினையானது முடிந்ததன் பின்னே, தேரேறித் தன் ஊர் நோக்கி வருவானாகிய தலைவனின் உள்ளத் திலே, தலைவியின் நினைவே மேலோங்கி நிற்கின்றது. குறித்த கார்காலமும் தொடங்கியதால், அவள் வருந்துவாளே என்ற நினைவும் தொடர்கிறது. அவன், தேரை விரையச் செலுத்து மாறு பாகனைத் தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.)

.

காயாங் குன்றத்துக் கொன்றை போல மாமலை விடரகம் விளங்க மின்னி, மாயோள் இருந்த தேஎம் நோக்கி, வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பெயல்தொடங் கினவே பெய்யா வானம் நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங் கினளே ஆயிழை; அதனெதிர் குழல்தொடங் கினரே கோவலர்-

தழங்குகுரல் உருமின் கங்கு லானே!

5

தெளிவுரை : பாகனே! காயா மரங்களையுடைய மலையி னிடத்தே கொன்றைப் பூக்கள் மலர்ந்து சரம் சரமாகத் தொங்கும்; அதனைப்போல, பெரிய மலைப்பிளப்பிடங்கள் விளங்கித் தோன்றுமாறு மேகங்கள் மின்னலிடுகின்றன. மாமை நிறத்தவளாகிய அவள் இருந்த இடத்தை நோக்கியும் அவை செல்லுகின்றன. அகன்ற கரிய ஆகாயத்திடமெல்லாம் மறைந்து படும்படியாக எங்கணும் பரவியும் நிறைகின்றன. நற்றிணை தெளிவுரை

355

இவ்வாறாக, இதுவரை பெய்யாதிருந்த மேகங்கள், இதுகாலை மழை பெய்தலையும் தொடங்கிவிட்டன. ஆதலினாலே, ஆராய்ந் தணிந்த கலன்களை அணிபவளான எம் காதலியும், நிழல் விளங்கும் ஒளிவளைகள் நெகிழ்ந்து சோர, ஏங்கியவளாக அழுதலையும் தொடங்கி விட்டனள். அந்த அழுகைக்கு எதிராகக், கோவலரும் மாலைநேரத்திலே வீடு திரும்புவோர், தம்முடைய கொன்றையம் தீங்குழலினை இசைக்கத் தொடங் கினர். இடிமுழக்கம் மிகுதியாகவுடைய இரவுப் போதிலே அவள்தான் யாதாவாளோ? ஆதலின், அவளைக் காக்கும் வண்ணம் யாம் சென்று சேர, விரைந்து தேரினைச் செலுத்து வாயாக என்பதாம்.

கருத்து: 'இன்றிரவுப் பொழுது தொடங்குவதற்கு முன் பாகவே நாம் ஊர்போய்ச் சேரவேண்டும்' என்பதாம்.

.

சொற்பொருள்: காயா- கரு நீல வண்ண மலர்களை யுடைய மரம். கொன்றை - சரக்கொன்றை. கரு நீல மலர் நிரம்பிய குன்றின் இடையிடையே சரக்கொன்றை மலர்கள் தோன்றுவது, இருண்ட வானிடையே மின்னல் ஒளிவிட்டுத் தோன்றுவதுபோலத் தோன்றும் என்க. விடரகம் - மலைப் பிளப்பிடம். விளங்க மின்னி - விளங்கும்படியாக மின்னலிட்டு; பிளப்பிடம் இருளடர்ந்திருப்பினும், மின்னலால் ஒளிபெற்றுப் புறத்துள்ளார்க்குக் காணப்படும் என்பதாம். மாயோள்- மாமை நிறத்தவள். தேஎம்-நாடு; அவன் வேற்றுநாடு சென் றிருந்தவன் என்பதால், இவ்வாறு 'அவள் இருந்த தேஎம்' என்று, அவள் இருப்பிடத்தைக் குறிப்பிடுகின்றான். பாஅய் பரவி. பெய்யா வானம் - இதுவரை பெய்யாதிருந்த வானம்; பொய்யா வானம் என்பது பாடம் ஆயின், காலத்தே வருதலைப் பொய்த்தலறியாத மேகம் என்று கொள்க. நிழல் திகழ் சுடர்த் தொடி - ஒளியுள்ள வளைகளின்பால் எதிர்ப்படும் பொருள்களின் நிழல் தோன்றும் என்பதாம்; இது தொடியின் சிறப்பினைக் காட்டும். தழங்கு குரல் - முழங்கும் குரல்.

-

விளக்கம்: அவன் வேற்று நாட்டிலிருந்தமையால், இவ்வாறு தன் வீடிருக்கும் தன் நாட்டிடத்துங் கார்காலம் தாடங்கியிருக்கும்; தொடங்கியிருந்தால், அவள் ஏங்கி அழத் தொடங்கிவிடுவாள்; ஆகவே, விரைந்து செல்லுதல் வேண்டும் என்று நினைக்கின்றான். அழல் தொடங்கினளே, குழல் தொடங் கினரே, என்று உரைப்பது உறுதிபற்றியாகும்.ா அவன் நினை வோட்டத்தில் அவள் நிழலாடிய துயரநிலைமை எனினும் பொருந்தும்; தெளிவுபற்றி வந்த கால வழுவமைதி என்று 356

நற்றிணை தெளிவுரை

கொள்க. தேரினை விரைந்து செலுத்துக என்று சொல்லா திருப்பினும், தலைவனின் ஏக்கத்தை உணர்பவன் விரையச் செலுத்துவான் என்பதாம். வானம் பெயல் தொடங்கியது காலத்தை நினைவுபடுத்தி, நம் வராமையை நினைப்பித்து ஏங்கச் செய்யும்; மாலைக்காலத்துக் கோவலர் குழலோசை அத்துயரை மேலும் ஊதிஊதி மிகுதியாகக் கனலச் செய்யும்; இதன்மேல், இரவில் எழும் இடிக்குரல் முழக்கத்திலே அவள் நிலைதான் யாதாகுமோ? என்று தலைவன் வருந்தியதாகக் கொள்க.

பயன் : தலைவன் விரைவாகத் தன்னூர் அடைந்து, மனை வியின் துயரைப் போக்கி மகிழச் செய்வான் என்பதாம்.

372. விளக்கம் எண்ணும் மகளிர்!

துறை :

பாடியவர் உலோச்சனார். திணை : நெய்தல். மேல் இற்செறிப்பான் அறிந்து, ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்றவேண்டி, உலகியலின்மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியாரெனச் செப்பியது.

((து - வி.) களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கும் தலைவிக்கு, தான் இற்செறிக்கப்படுதல் கூடும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. அதை நினைந்து நினைந்து கவலையும் அதிகமாகி வருத்துகின்றது. அவளைத் தேற்ற நினைக்கும் தோழி, இது உலகத்தியல்பு; நின்னை நம்மவர் இற்செறித்து வையார் என்று தேறுதல் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது.)

அழிதக் கன்றே தோழி!-கழிசேர்பு கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம் வள்ளிதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் கிளைக்குருகு இரியும் துறைவன் வளைக்கோட்டு அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான்கோடு

உலைந்தாங்கு நோதல் அஞ்சி-' அடைந்ததற்கு இனையல் என்னும்' என்ப-மனையிருந்து இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர்

திண்திமில் விளக்கம் எண்ணும்

கண்டல் வேலிக் கழிநல் லூரே!

5

10 நற்றிணை தெளிவுரை

357

தெளிவுரை : தோழீ! கழிக்கரையைச் சேர்ந்துள்ள கானற்சோலையிலேயுள்ள, பனையின் தேனையுடைய அழிந்த பழமானது மூக்கு இற்று, வளவிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு கரிய சேற்றிலே வீழ்ந்து ஆழமாகப் புதையுண்டு போனது. அது விழுந்த ஓசைகேட்டுச் சுற்றத்தைக் கொண்ட வான நாரைகள் அஞ்சி ஓடிப்போயின. அத்தகு நீர்த்துறை யினுக்கு உரியவன் தலைவன்! அவன், வளையாகிய சங்கைப் போன்ற வெண்மணலை உடையதான இடத்திலே நின்னைத் தழுவி மகிழவேண்டும் என்று விரும்பியது நினது பெருமித உள்ளம். அதனோடு பொருந்துமாறு, மனையிடத்தே இருந்தபடி மகளிர் ஓம்பிவர, கருங்கழியிடத்தே சென்று மீன்தேடுவர் பனியால் நனைந்த தலையினையுடைய பரதவர். அவருடைய திண்மையான மீன்பிடி படகிலிருக்கும் விளக்குகளை. அம்மகளிர் வீட்டிலிருந்து பார்த்து எண்ணியபடியே இருக்கின்ற தன்மை யுடையது, கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழிசூழ்ந்த நம்முடைய நல்ல ஊராகும். அதுதான் நின்னை இனிமையோடும் பார்த்து, அன்னை நினக்குத் தந்த தந்த அசைகின்ற பெரிய கோலானது குலைந்ததனாலே நீ நோகின்றனை என நினைந்து அஞ்சும். "நினைந்து அதற்கு வருந்தாதே கொள்" எனவும் நின்னைத் தேற்றும். ஆதலின், நீதான் ஏங்காதிருப்பாயாக என்பதாம்.

.

கருத்து: "நின் துயரத்தை மறந்து ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

சொற்பொருள் : அழிதக்கன்றே - அழியத் தகுந்தது அல்லவே. தேனுடை அழி பழம் - தேனையுடையது போல முற்றக் கனிந்து அழிந்த பனம்பழம். வள்ளிதழ் -வளவிய இதழ். மூக்கு - குலையில் இணைத்திருந்த பாகம். அள்ளல் இருஞ் சேறு - அள்ளுதல் அமைந்த கரிய சேறு ஆழப் படுதல் - வளைக்கோட்டு ஆழத்துள் வீழ்ந்து புதையுண்டு போதல். அன்ன - வளையாகிய சங்கு போன்ற. பெருந்தகவுடைய

அண்ணல்

உள்ளம்.

வருந்தல். கடற்கரை

உள்ளம். இனையல் - அழுது விளக்கம் - விளக்குகள். கண்டல் - ஒருவகைக் மரம். அலங்கல் - அசையும். மணற்று -மணலையுடையது. கோடு - கொம்பு.

உள்ளுறை : முதிர்ந்து கனிந்த பனம்பழமானது, நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு நாரையினம் அஞ்சியோடும் என்றது, கனிந்த காதலுடையோனாகிய தலைமகன் நின்னை வரைந்தானாக நின்னில்லத்திற்கு வருவானாயின், அலர் கூறும் பெண்டிர்கள் அஞ்சி, வாயடங்கியவராகி ஒதுங்கிப் போவர் என்பதாம். 358

நற்றிணை தெளிவுரை

இறைச்சி : மகளிர் வீட்டிலிருந்தவாறு. மீன் பிடிக்கும் பரதவருடைய விளக்குகளை எண்ணியபடி இருப்பர் என்றது, பரதவர் மகளிரின் உள்ளம் எப்போதும் அவர்தம் காதலரைச் சுற்றியே படர்ந்துகொண்டிருக்கும் என்பதாம். இதை அறியாது போயினரே நம் தலைவர் என நொந்ததுமாம்.

விளக்கம்: மீன் பிடிக்கப் போகும் பரதவர் அவர்தம் தொழிலே கவலையுடையராய் முனைந்திருப்பர். அவர்தம் மகளிரோ அவர்தம் படகின் விளக்கினை எண்ணிக் கண்டபடி அவர் நலனை விரும்பி வேண்டியிருப்பர். அவ்வாறே தலைவி இல்லறமாற்றலை விரும்பி மணத்தை எதிர்பார்த்திருக்கவும், தலைவன் அவள் நினைவற்றுத் தன் போக்கிலேயே காலம் கடத்துகின்றான் என்பதாம். மீனுணங்கலைக் காப்பதற்குத் தந்த கோல் வளைந்ததென அவள் வருந்துவதாக நினைத்து, அவள் காதலனைக் காணாது வருந்துதலை நினையாத ஊர்ப் பெண்டிர், அவளைத் தேற்றுவர் என்று, ஊர்ப்பெண்டிரது கரவற்ற நல்ல உளப்பாங்கையும் உரைத்தனள்.

பயன் : தலைவன் வரைந்து வந்து மணந்து கொள்ளத் தலைவியும் அவனுடன் இணைந்து இல்லறம் இனிதாற்றி மகிழ்வள் என்பதாம்.

373. நாளையும் இயலுமோ!

பாடியவர்: கபிலர் திணை : குறிஞ்சி. துறை : செறிப்பு அறிவுறீஇயது.

.

((து - வி.) களவிலே வந்து மகிழும் இயல்பினனாகிய தலைவன், ஒரு பக்கமாகச் செவ்விநோக்கி மறைந்திருப்பதைத் தோழி காண்கின்றாள். அவனுள்ளத்திலே, தலைவியை மணந்து இல்லறம் பேணுதற்கான முயற்சியிலே விரைவு உண்டாக்குதல் வேண்டும் என்றும் கருதுகின்றாள். அவள், தலைவியிடம் சொல்வாள் போல,அவனும் கேட்குமாறு, இனிக் களவுறவு வாய்ப்பதரிது எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது வாகும்.]

முன்றில் பலவின் படுசுளை மரீஇப்

புன்தலை மந்தி தூர்ப்பத் தந்தை மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி, ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக்

5 நற்றிணை தெளிவுரை

காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப் பாவமை இதணம் ஏறிப் பாசினம் வணர்குரல் சிறுதினை கடியப்

புணர்வது கொல்லோ,நாளையும் நமக்கே?

359

தெளிவுரை : தோழீ ! இன்று நம் அன்னையும் நம்மை இற்செறிக்கக் கருதினள். முற்றத்துப் பலாமரத்திலேயுள்ள பழுத்த பழத்தைப் பிளந்து கிளறிப் புல்லிய தலையையுடைய மந்தியானது சுளைகளைத் தின்று கொட்டைகளைக் கீழே உதிர்க் கும். அயலிலே நின்ற கொடிச்சியானவள், தன் தந்தையது மேகந்தவழும் பெரிய மலையினது வளத்தைப் போற்றிப் பாடியவளாக, ஐவன வெண்ணெல்லைக் குத்தியபடியே இருப்பாள். அத்தகைய வளநாடன் தலைவன்! அவனோடு, அச்சத்தையுடைய மலையிடத்திலே அருவியாடிக், கருநிறத்தை யுடைய அரும்புகள் இதழவிழ்ந்து மலர்ந்த, சோதிடம் வல்லார் போன்ற வேங்கைமரத்திலேயுள்ள பரப்பமைந்த பரணிடத்தே ஏறி, வளைந்த கதிர்களையுடைய சிறுதினையைக் கவரவரும் பசிய கிளியினத்தைக் கடிந்து ஓட்டியபடி இருத்தலானது, நாளையும் நமக்குப் பொருந்துவதாகுமோ? ஆகாதே காண்!

கருத்து: நாளைக்குத் தலைவனை நம்மாற் சந்திக்க முடியாது என்பதாம்.

-

சொற்பொருள்: முன்றில் - முற்றம். படுகளை - நிறைந்த சுளைகள். மரீஇப் - கிளறிப் பிளந்து எடுத்து. தூர்ப்ப - உதிறு மாறு வீழ்த்த. மைபடு - மேகம் தவழும். மால் வரை - பெரிய மலை. கொடிச்சி - குறவர் மகள். ஐவன வெண்ணெல் - ஐவன மாகிய மலைவெண்ணெல். குறூஉம்-குற்றும். சூர் - அச்சம்; அணங்கும் ஆம்.காரரும்பு - கருமையான அரும்பு. கணிவாய் கணிபோன்று காலம் அறிவிப்பதான். பாவமை - பரப்பமைந்த. இதணம் - பரண். பாசினம் - பசிய கிளியினம். வணர்குரல் - வளைவான தினைக்கதிர். புணர்வது - பொருந்துவது; கூடுவது.

கை

காலம்,

-

விளக்கம் : வேங்கை அரும்பவிழ்ந்து மலருங் கானவர் தினை கொய்வதற்கு முற்படுகின்ற காலமாதலின், தினை கொய்யும் காலம் வந்ததென்று அறிவிக்கும் கணிபோன்று வேங்கை மலர்ந்தது என்றனள். வேங்கை மலருங்காலம் மணவினைக்கு உரிய காலமாதலின், இல்லத்தார் மகளுக்கு 360

நற்றிணை தெளிவு

மணவினை முடித்தலைக் கருதி இற்செறிப்பர் எனவும் கொள்ள லாம். இப்போதும் 'கணிவாய் வேங்கை' என்பது பொருந்தும்.

உள்ளுறை : மந்தியானது முற்றத்துப் பலாவின் பழத்தைப் பிளந்து பழச்சுளைகளைத் தின்றுவிட்டுக் கொட்டைகளைக் கீழே த் போடும். அதனைப் பாராட்டாது குறமகள் மலைவளம் பாடி நெற்குற்றுவாள். அத்தகைய மலைநாடன் என்றனர். இது தலைவியைக் களவிலே கூடி நலனுண்டுவிட்டுச் செல்லும் தலைவன், ஊரிலே பழிச்சொல்லை உதிர்த்துச் செல்வான்; அதனையறியாதே அன்னையும் தெய்வம் அணங்கிற்றுப் போலும் என நினைந்து, இற்செறித்து, வெறியாடலுக்கு ஏற்பாடு செய்வாள் என்றதாம்.

பயன் : தலைவன்,

தலைவியை, விரைவிலே மணந்து கொண்டு, பிரியா இன்பவாழ்விலே இல்லறமாற்றுதலை நிகழ்த் தற்கு முற்படுவான் என்பதாம்.

374. முற்றையும் உடையமோ?

பாடியவர்: வன்பரணர், திணை : முல்லை. துறை : வினை முற்றி மீள்வான், இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

[(து -வி.) சென்ற வினையினைச் செவ்வையாக முடித்த பின், தன் ஊர் நோக்கித் திரும்பி வந்துகொண்டிருக்கின்றான். இடைவழியிலே, வினைமேற் செல்லும் புதியவர் சிலரைக் காணு கின்றான். அவர்கள் அவனைப்பற்றிய சிறப்புக்களை வினவ, அவன் அவர்கட்குத் தன்னுடைய நிலையைச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்

ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப

உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர்! முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் நீர்வார் புள்ளி ஆகம் நனைப்பு, விருந்தயர் விருப்பினள் வருந்தும்

திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே?

5'

நற்றிணை தெளிவுரை

361

தெளிவுரை : பரற்கற்கள் மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடக்கின்ற, சென்று கடத்தற்கு இயலாத வழியிலே. உயர்ந்து தோன்றுவது உப்புவாணிக மாக்கள் நிறைந்துள்ள சிறுகுடி. அவ்விடத்திலே, களர்நிலத்திலே விளைந்த புளியின் காயானது பசியைப் போக்கும். அப்படிப் பசிபோக்கிக் கொண்டு, உயரத்தே ஏறுதலை மேற்கொண்ட உயர்ந்த குடை யினையுடைய புதியவர்களே! யாம் பிரிந்து வரும்போது மலர்ந்த முகத்தோடு விடைதந்தாலும், பின்னர், கண்ணீர் வழிந்து புள்ளிபுள்ளியாக மார்பகத்தை நனைப்ப, எமக்கு விருந்து செய்கின்ற விருப்பினளாக, எம்மை விருந்துண்ணப் பெறாதத னாலே வருந்தியபடியிருக்கும், திருந்திய அணிகளையுடையவளும், விரும்பும் கருமணிபோன்ற புனைதற்குரிய நெடிய கூந்தலை யுடையவளும், இனிய பேச்சை உடையவளுமான அவள் நிலையினை, யாம் முற்றவும் அறிதலை உடையம் ஆவேமோ? ஆகோம்காண் என்பதாம்.

கருத்து: 'அவள் துயரத்தினை நம்மால் முற்றவும் உணர முடியாது' என்பதாம்.

சொற்பொருள்: முரம்பு - வன்னிலம்; மேற்பரப்புக் காலை வருத்தும் பரற்கற்களை கொண்டது. தலைமணந்த - மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடந்த. நிரம்பா இயவு -நடக்க நடக்கத் தொலையாமல் நீள்கின்ற காட்டு வழி. ஓங்கித் தோன்றும் உயரமான மேட்டு இடத்திலே காணப்படும். உமண்-உப்பு வாணிகர். சிறுகுடி - சிற்றூர். களரி - களர் நிலம். புளியின் காய் - புளியினது காய். பசி பெயர்ப்ப - பசியைப் போக்க. உச்சிக்கொண்ட -உச்சிநோக்கிச் செல்லுதலை மேற்கொண்ட. ஓங்குகுடை-உயர்த்தகுடை; இது வெயிலுக்கு நிழல் பெறுவதற்கு உயர்த்தது 'உச்சிக்கொண்ட ஓங்கு குடை' என்பதற்கு, உச்சி மேலே வைத்துக்கொண்டுள்ள உயரமான சோற்றுப் பொதி யினைக் கொண்ட குடை எனவும் பொருள்கொண்டு, உமணர் சிறுகுடி காரிப்புளியைப் போலக் காயும் பசியைப் போக்குவ தற்கு, உச்சிமேற்கொண்ட உயர்ந்த சோறுபொதி குடைகளை உடைய வம்பலீர்' எனவும் கொள்ளலாம். முற்றையும் - முழு - வதையும். உடையமோ - அறிந்துள்ளேமோ. வீழ் - விரும்பப் படும். மாமணி-கருமணி. புள்ளி - புள்ளிகள்; வீழ்ந்து வீழ்ந்து காய்தலால் உண்டாகும் புள்ளிகள். விருந் தயர் விருப்பு - விருந்தூட்டும் ஆர்வம்; வயிற்றுப் பசிக்கும் காமப் பசிக்கும் என்று கொள்க. தேமொழி - இனிய பேச் சுடையாள்.

P.-23

கண்ணீர்

362

நற்றிணை தெளிவுரை

விளக்கம்: வினைமேற் செல்வார் எத்தகு துயரையும் ஏற்றுத் தம் கருமமே கண்ணாக மேற்செல்வர் என்பதற்கு வழிச் செல்வாரின் பசி வருத்தமும், அதனைப் பாராட்டாதே அவர் முயன்று வழிநடத்தலும் கூறினர். அவரும் தத்தம் குடும்பங் களைப் பிரிந்தே வருபவராதலின், அவர்க்குத் தான் வினை முடித்துத் திரும்பினும், தன் மனைவி பட்டிருக்கும் வேதனைகளை நினைந்து வருந்தும் நிலையைக் கூறுகின்றான் என்று கொள்க. இப்படிச் சொல்வது இவன் வெற்றிப் பெருமிதத்தால் எனவும் அறிதல்வேண்டும்.

பயன் : இதனால், வழிச்செல்வாருள்ளும் ஓரிருவர் தம் காதன் மனைவியரைப் பிரிந்தவர், மனம் மாறி ஊர் திரும்பு தலும் கூடும் என்பதாம்.

375. நன்னுதல் உவப்ப வருக!

பாடியவர்: பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி. திணை: நெய்தல். துறை : வரையாது ெ நடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலையுணர்ந்து தோழி, வரைவு

கடாயது.

[(து -வி.) மணம் செய்துகொள்வது பற்றிய நினைவே இல்லாமல், நெடுங்காலம் களவுறவிலேயே தலைவியோடு இன்பம் நுகர்ந்துவரும் தலைவனின் போக்கு தலைமகளுக்கு மிகுந்த வருத்தம் தருகிறது என்றாலும், அவளால் வெளிப்படச் சொல்லவும் இயலவில்லை. இந்நிலையில் தோழி, தலைமகனிடம் தம்முடைய நிலையைக் குறிப்பாக உரைத்து வரைவு வேட்டுக் கூ றுவதாக அமைந்த செய்யுள் இது.)

நீடுசினைப் புன்னை நறுந்தாது உதிரக் கோடுபுனை குருகின் தோடுதலைப் பெயரும் பல்பூங் கானல் மல்குநீர்ச் சேர்ப்ப அன்பிலை; ஆதலின் தன்புலன் நயந்த என்னும் நாணும் நன்னுதல் உவப்ப

வருவை ஆயினோ நன்றே-பெருங்கடல்

இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத்திரை எறிவன போல வரூஉம்

உயர்மணல் படப்பைஎம் உறைவின் ஊரே!

5 į

நற்றிணை தெளிவுரை

363

உடைய

தெளிவுரை : நீண்ட கிளைகளைக் கொண்ட புன்னையின் நறிய பூந்தாது உதிரும்படியாக, அக் கிளைகளின்மீது அழகாக அமர்ந்திருக்கும் நாரைக்கூட்டம், அக் கிளைகளை அலைத்தபடி பெயர்ந்து உலவாநிற்கும். பலவாகிய பூக்களையுடைய கானற் பெருக்கையும் சோலைகளையும் மிக்க உவர்நீர்ப் சேர்ப்பனே! நீதான் என்பால் அன்புள்ளவன் 'அல்லை! ஆதலினாலே, பெரிதான கடலிடத்து இரவுப் பொழுதிலே திங்கள் மண்டிலம் வானிடத்தே வெளிப்பட்டதனாலே, வலிய அலைகள் எழுந்து கரையை வந்து மோதுவனபோல வாரா நிற்கும், உயர்ந்த மணல்மேட்டுப் பகுதியிலுள்ள கொல்லை யிடத்ததான, எம்முடைய வாழ்தற்கு இனிதான ஊருக்கு, அவளது கருத்தின்படியே விருப்போடு நடக்கும் என்பாலும் தன் துயரத்தை வாய்விட்டுச் சொல்லுவதற்கு வெட்கப்பட் டிருக்கும், நறிய நுதலையுடையவளான தலைவி உவப்படையு மாறு, நீதான் வரைவொடு வந்தாயானால், மிகவும் நலமா யிருக்கும்.

கருத்து: 'அன்பிலை எனினும், கடமை கருதியாவது நீதான் வரைந்து வருதல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : நீடுசினை - நீண்ட கிளைகள்; உயரமாக வளர்ந்திருக்கும் கிளைகளும் ஆம். புன்னை -புன்னைமரம். தாது மகரந்தம். தோடு - தொகுதி. தலைப்பெயரல் - புறப்பட்டுப்

போதல். மல்கு நீர் - மிகுதியான நீர்வளம். புலன் - அறிவு:

மண்டிலம் - திங்கள்

மண்

எழுதல். உரவு - வலிமை. படப்பை - தோட்டப்புறம்.

கருத்து. என்னும் - என்பாலும். டிலம். பெயர்தல் - வானிலே எறிவன -மோதித் தாக்குவன. உறைவின் ஊர் - உறைதற்கு இனிதான ஊர்.

உள்ளுறை : 'புன்னைக் கிளையிலே தங்கி மகிழ்ந்த நாரைக் கூட்டம், பின்னர் அதன் பூக்களிலுள்ள மகரந்தத்தை உதிர்த்த படி, அதற்குத் தீமை விளைத்துப் போகும் பல்பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப' என்றனள். அவ்வாறே, நீயும் களவிலே கூடி யின்புற்று மகிழ்ந்தனையாகி, இப்போது அவள் கலங்கித் துயரடையுமாறு கைவிட்டு அகன்றனை என்பதாம். அப்பழி தான் தீரும்படிக்கேனும், அவளை வரைவொடு வந்து மணந்து கொள்வாயாக என்பதுமாம்.

இறைச்சி: திங்கள் வானிலே எழுதலைக் கண்டதும், கடலானது பொங்கியெழுந்து. ஆரவாரித்து வரவேற்கும் என்றது, அவ்வாறே நீதான் வரைவொடும் வரின், எம் ஊரவர் 364

நற்றிணை தெளிவுரை

மகிழ்ச்சியால் ஆரவாரித்தவராக நின்னை வரவேற்று வரைவுடன் படுவர் என்றதாம்.

விளக்கம்: அன்பிலை' என்றதன்பின், 'வதுவை ஆயின் நன்றே' என்றது, நினக்கு இயல்பாக இருத்தற்குரிய அன்பில்லை என்றபோதும், நின்னாலே துயருள் வீழ்த்தப் பெற்ற தலைவி யைக் காக்கும் பொருட்டாகவேனும், நீ வந்து அவளை மணந்து கொள்வாயாக என்பதாம்.

பயன் : தலைவன் தெளிவுற்று வரைவொடு வர, மண வினையும் தமர் இசைவுடன் நிகழ்ந்திட, அவர்கள் இல்லற வாழ்விலே இன்பத்துள் திளைத்துத் துயரம் தீர்வர் என்பதாம்.

376. சிறிய உரைமின்!

பாடியவர்: கபிலர். திணை : குறிஞ்சி. துறை : தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.

((து-வி) தலைவன் களவு உறவிலேயே மனவீடுபாடு கொண்டு தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் ஒரு நாள் வந்து, ஒருபுறமாக நிற்பதனைக் கண்டாள் தோழி. கிளிகளுக்குச் சொல்வாள்போல, அன்னை இற்செறித்த செய்தியைத் தலைவனும் கேட்டுணருமாறு தெரிவிக்கின்றாள்.) முறஞ்செவி யானைத் தடக்கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை வரையோன் வண்மை போலப் பலவுடன்

கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! குல்லை குளவி கூதளங் குவளை

5

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும் நற்றார் மார்பன் காண்குறில் சிறிய

நன்கவற்கு அறிய உரைமின்; பிற்றை

அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி

10

வறும்பும் காவல் விடாமை

அறிந்தனிர் கொல்லோ அறனில் யாயே?

தெளிவுரை : முறம்போலும் செவியையுடைய யானையது, வளைந்த கைபோல வளைந்து தலைசாய்த்த கதிர்களைக் நற்றிணை தெளிவுரை

365

கொண்டன பசுமையான தாளினையுடைய செந்தினைப் பயிர்கள். அவற்றை வரையாது கொடுப்பவனின் வள்ளன்மை போலக் கருதி, பலவாகக் கிளையோடும் உண்ணுகின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளிக்கூட்டமே! தலைவன் நம்மோடு உறவாடிப் போயினதன் பின்னர், பின்பு, நம்மை அணங்கு தாக்கி வருத்துவது என்பதும் நிகழும்போலும்! அறநெறியில் நில்லாத அன்னையானவள் எம்மை வருத்தி, காவலின் அழிகின்ற தினைப்புனத்திற்குக் காவலின் பொருட்டுச் செல்வதற்கு விடாதிருத்தலையும் நீவிர் அறிவீர் அல்லவோ! ஆதலின், குல்லை, மலைப்பச்சை. கூதாளி, குவளை. தேற்றா என்பவற்றின் மலராலே புனைந்த ஈரிய தண்ணிய பூமாலையை உடையவனும், வரிந்து கட்டிய வில்லை உடையவனுமாக, அசோக மரத்தின் அடியிலே எம்பொருட்டாக வந்து நிற்கும், நல்ல தாரணிந்த மார்பனான எம் தலைவனைக் காண்பீரானால், சிறிதளவேனும், அவனுக்கு நன்றாகப் புரியும்படியாக எம்முடைய துயரத்தை உரைப்பீராக.

கருத்து: இனி அவனை எம்மால் களவிற் கண்டு கூடுதல் இயலாது என்பதாம்.

சொற்பொருள்: முறஞ்செவியானை - முறம்போலும் காது களைக் கொண்ட யானை. தடைஇ - வளைந்து. இறைஞ்சிய தலைதாழ்ந்த, பைந்தாள் - பசுமையான தாள். செந்தினை சிவப்புத் தினை. வரையோன் - வரையாது வழங்கும் வள்ளல். பலவுடன் - பலவாக வளைவாய் - வளைந்த வாயினையுடைய. ஈர்ந்தண் கண்ணி - ஈரிய தண்ணிய தலைமாலை. சுற்றமை வில் - வரிந்து கட்டிய வில். செயலை - அசோகு. சிறிய - சிறிதளவு. அவற்கு நன்கு அறிய - அவனுக்கு நன்றாகப் புலப்படுமாறு. அணங்கு - தெய்வம். அறனில்யாய் - அறமற்ற தாய்; அறமற்ற வளானது. கன்னியர் காதல் கொள்வது அறமே என்பதை ஆன்றோர் வாக்காலும், தன் அநுபவத்தாலும் அறிந்திருந்தும் அதற்கு மாறானவே கருதும் தாய் என்பதால். வறும்புனம்- காவலிழந்துபோன புனம்.

விளக்கம்: செந்தினைக் கதிர்களை வள்ளலின் கொடை போலக் கருதிக் கிளியினம் தம் கூட்டத்தோடு கவர்ந்து உண்ணும் என்றது, அவ்வாறே தலைவியை இதுகாறும் தலைவன் தன் விருப்பம்போல் களவிலே இன்புற்றனன்; இனி அதுதான் இயலாது என்றதாம். 'சிறிய அவற்கு நன்கு அறிய உரைமின்!" என்றது, சிறிதளவேனும் எம் நிலையை அவன் நன்கு புரிந்து,

-

366

நற்றிணை தெளிவுரை

கொள்ளும்படியாகச் சொல்வீராக என்றதாம். 'பிற்றை அணங்கும் அணங்கும் போலும்' என்பது தலைவியின் எழிலிலே தோன்றும் புதிய மாறுதல்கள் அவனை நினைந்து ஏங்கும் ஏக்கத் தின் விளைவாயிருக்க, இனி வேறு ஓர் அணங்கும் தாக்கி வருத்துமோ என்பதாம். 'வரையோன்' என்பது வரையான் என்பதன் திரிபு.

பயன் : இதனைக் கேட்டலுறும் தலைவன், இனிக் களவு உறவு வாயாதென்பதும், தன்னையன்றி அவள் வாழாள் என்பதும் உணர்ந்தானாய், விரைவிலே மணந்துகொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடுவானாவான் என்பதாம்.

377. கழறுபு மெலிக்கும் நோய்!

பாடியவர் : மடல் பாடிய மாதங்கீரனார். திணை : குறிஞ்சி. துறை : சேட்படுக்கப்பட்டு, ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

.

[(து-வி.) தலைவன் பாங்கியின் உதவியோடு தலைவியை அடைய முற்படுகின்றான். அவளோ, அவன் வரைந்து கொள்வ தன்றிக் களவுறவிலேயே தொடர்ந்த நாட்டம் உடையவனாக இருப்பதறிந்து, அவனுக்கு உதவ மறுக்கின்றாள். அதனைப் பொறாத தலைவன், தன் நெஞ்சோடு சொல்வான் போல, அவளும் கேட்டுத் தனக்கு இரக்கம் காட்டும் வகையில் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

மடல்மா ஊர்ந்து மாலைசூடிக்

கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்

ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று அதுபிணி யாக விளியலங் கொல்லோ- அகலிறு விசும்பின் அரவுக்குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகனிலாப் போல அளகஞ் சேர்ந்த சிறுநுதல்

கழறுபு மெலிக்கும் நோயா கின்றே?

5

தெளிவுரை : அன்ற கரிய வானத்திடத்தே, அரவினாலே விழுங்கப்பட்டுக் குறைப்படுத்தப்பட்ட, பசுமையான கதிர்கள் விரிதலையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல ஒளி வீசுகின்ற, கூந்தலோடு சேர்ந்த சிறு நுதலையுடையவள், நற்றிணை தெளிவுரை

367

சொல்வதானால், என்னை மெலிவிக்கின்ற ஒரு நோயாக ஆகின்றனளே? அதுதான் தீருமாறு, பனை மடலாலே செய்த குதிரையை ஏறிவந்தும், ஆவிரை எருக்கம் போன்ற மலர்களா லான மாலையைச் சூடியும், இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுதோறும் ஊர்தோறும், ஒள்ளிய நுதலுடையாளின் அழகினைச் சிறப்பித்துக் கூறியபடியாகச் செல்வதனை மேற் கொள்ளாதேம் ஆகி, அரிதாக நிலைப்படுத்தி, அதுவே பிணியாக நலிவிக்க, இறந்து போகவும் மாட்டேமோ? நெஞ்சமே! இனி, என்செய்வேம்.

கருத்து: 'அவள் நோயால் சாவதுதான் செயத்தக்கது போலும்' என்பதாம்.

-

-

சொற்பொருள்: மடல்மா - பனைமடலாலாகிய குதிரை. மாலை - எருக்கும் ஆவிரமும் பூளையும் விரவிக் கட்டிய மாலை. வைப்பு -நிலப்பகுதி. நலம் - அழகு முதலியன. அரிதுற்று அரிதாக நிலைப்படுத்தி வைத்து; அஃதாவது அடக்கற்கரிய ஆசையையும் அடக்கி நிறுத்தி வைத்து. குறைபடுத்தல் விழுங்கி ஒரு பகுதி மட்டும் வெளித்தோன்றுமாறு விட்டு வைத்திருத்தல்; கூந்தல் நாகமாகவும், நுதல் நிலவாகவும் கொண்டு நுதலானது நாகத்தால் குறைபடுத்தப்படுத்தப்பட்ட நிலவுபோலத் தோன்றும் என்றனன். மேவலம் - மேற் கொள்ளமாட்டோம். அது - அவள் தந்த காமநோயாகிய விளிதல் - சாதல். பசுங்கதிர் மதியம் - பசுமையான - கதிர்களையுடைய மதியம். அளகம் - கூந்தல். கழறுபு சொல்வதற்கு. மெலிக்கும் - மெலிவிக்கும்.

அது.

-

விளக்கம்: அவளைச் சிறப்பித்துக் கூறியது, அவள் தந்த முன்னைய இன்ப நினைவுகளினாலேயாகும். முழுநிலவுபோல இன்பந் தந்தவள், இதுகால் அரவுக்குறைபடுத்த நிலாப்போல எனக்குத் துன்பந்தருவதேன் என்பவன், சிறுநுதலுக்கு அரவுக் குறைபடுத்த அகனிலாவை உவமை கூறுகின்றான். நோய் கொண்டு மெலிந்து மெலிந்து முடிவில் இறத்தலையே அடைவோம் என்பவன், மடலேறி வருதலையும் மேவலம் என் கின்றனன். மடலேறியும் மனமிரங்காளாயின், வரைபாய்ந்து உயிர்துறத்தலே செயத்தக்கது என உறுதிபூண்டு மடலேறத் துணிந்தானாகச் சொல்லியது எனவும் கொள்ளலாம். இதனை உணரும் தலைமகள் அவனுடைய ஆழமான அன்பின் வேகத்தை அறிந்து, அவனுக்கு உதவுதற்கு மனம் நெகிழக் கூடும் எனலாம். "குவிமகிழ் எருக்கம் கண்ணியும் சூடும்" எனவரும் 368

நற்றிணை தெளிவுரை

அகம்(10) மடலூர்வார் சூடும் மாலையைக் குறிக்கும். சிறுநுதல் நோய் செய்தலை, 'கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் பிணித் தற்றால் எம்மே' எனக் குறுந்தொகையும் (129) கூறும்.

பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தலைவியை அவனோடு கூட்டுவித்து, அவன் ஏக்கத்தைப் போக்குவாள் என்பதாம்.

பாடபேதங்கள் : மடல் பாடிய மோதங் கீரனார், அணிநிலாப் போல கழறும் மெலிக்கும்; அரிது துற்றது; துற்றது நுகர்ந்தது.

378. நாடாது இயைந்த நட்பு!

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார். திணை' நெய்தல். துறை: (1) தோழி சிறைப்புறமாகச் சொல்லியது? (2) தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்பொறை எதிர் மொழிந்ததூஉம் ஆம்.

( (து - வி.) களவிலே வந்தொழுகுவானாகிய தலைவன் ஒருபுறம் வந்து நிற்பதறிந்த தோழி, தலைவியிடம் சொல்வாள் போல, அவனும் கேட்டு வரைவொடு புகுதற்கு முயலும் வண்ணம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைவன் பிரிவின்போது வருந்தி நலிந்த தலைமகளிடம், வலிதிற் பொறுத்திருப்பாயாக என்று தோழி சொல்லத், தலைவி தன்னுடைய நிலைமை அவளுக்குப் புலப்படுமாறு கூறியது இது வென்றும்கொள்ளலாம்.]

யாமமும் நெடிய கழியும்; காமமும் கண்படல் ஈயாது பெருகும்; தெண்கடல் முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும், ஆங்கவை நலியவும், நீங்கி யாங்கும், இரவிறந்து எல்லை தோன்றலது; அலர்வாய் அயலிற் பெண்டிர் பசலை பாட ஈங்கா கின்றால் தோழி! ஓங்குமணல் வரியார் சிறுமனை சிதைஇ வந்து பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, பாடிமிழ் பனிநீர்ச் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே!

LO

5

10 நற்றிணை தெளிவுரை

$69

தெளிவுரை : தோழீ! யாமமும் நெடும்பொழுதாக வளர்ந்தபடியே மெல்லக் கழியா நிற்கும்; காமநோயும் கண்களை மூடவிடாதாய்ப் பெருகாநிற்கும்; தெளிந்த கடலிலே முழங்கும் அலைகளும், முழவோசைபோல, மெல்லமெல்லப் பழம்புண் பட்டவர்களைப் போலக் கடலிடத்தே புரண்டு இயங்கி அசைந்தபடி யிருக்கும். அவை அவ்வண்ணமாக, நம்மை நலிவிக்கவும், எவ்விடத்தும் இரவைக் கடந்து நீங்கியதாகக் கதிரவனும் தோன்றினபாடில்லை.

உயர்ந்த மணற்பரப்பிடத்தே, வரிகள் அமைந்த நம் சிறு வீட்டைக் கலைத்தவனாக வந்து, அதற்கு வருந்தினான் போல நமக்கு அவன்மேற் பரிவுண்டாகுமாறு அவன் சொல்லிய பணிவான பேச்சுக்களை நம்பினோம். பக்கத்திலே ஒலிக்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய சேர்ப்பனோடு, ஆராய்ந்து பாராதே உடன்பட்டதனால் ஆகிய நட்பினது அளவுதான் என்ன? அலர் கூறும் வாயையுடையவரான அயல்வீட்டுப் பெண்கள் எம் நெற்றியிலே தோன்றியுள்ள பசலைநோயைக் குறிப்பிட்டுப் பாடும் இழிவுதான் நமக்கு ஏற்பட்டது.

ஆறாத

கருத்து: 'அவன் உறவால் பெற்றது பழியே' என்பதாம். சொற்பொருள்: யாமம் - இரவின் நடுயாமம்; நெடிய கழியும் என்றது, தன் ஆற்றாமையால் தோன்றுவது. படல் ஈயாது - விடாது. மூடல். பழம்புண் - நெடுநாள் புரண்டு புண். ஆலும் - அசையும்; கடல் அலை புரண்டு ஓயாது இயங்குவதற்குப் பழம்புண்பட்டவர் நோவால் இடை யறாது புரண்டு புரண்டு படும் வேதனைமுனகலைக் குறித்தனள். இரவு இறந்து - இரவைக் கடந்து.எல்லை - பகல் பெண்டிர் - பக்கத்துவீட்டுப் பெண்கள். பற்றியே வாய் ஓயாது பாடிக்கொண்டிருக்க. வரியார் சிறுமனை - வரிகள் பொருந்திய சிற்றில். சிதைஇ - சிதைத்து. பணிமொழி - பணிந்து கூறிய சொற்கள். தொட்ட - சொல்லிய. நாடாது - ஆராயாது.

+

அயலிற்

பசலை பாட - பசலை

விளக்கம் : நாடாது நட்டலும் ஊழால் விழைவது என்பது 'நாடாது இயைந்த நண்பினது என்பதால் விளங்கும். :நாடாது நட்டலிற் கேடில்லை' எனவரும் குறளும் இந்தக் கருத்தை எதிரொலிக்கும். 'மணற்சிற்றில் சிதைத்து, அதன் காரணமாக யாம் வருந்தி நலிந்தேமாக, எம்மைத் தேற்று மாறு அவன் கூறிய பணிமொழிகளாலே பரிவுற்று, யாம் அவனுடன் கொண்ட நட்பு' என்றது, அன்றும் அவ்வாறு 970

நற்றிணை தெளிவுரை

சிறுமனை சிதைத்தான்; இன்றும் நம்மை மணந்துகொண்டு மனையறம் காவாது, அயலிற் பெண்டிராற் பசலைபாடச் செய்து வருத்தினான் என்றுகூறி மனம் வேதனைப்படுதலாம்.

து

புரிதற்கு

பயன் : (1) கேட்கும் தலைவன் மணவினை வேண்டியன விரைவிற் செய்பவனாவான் என்பதாம்; (2) அன்றும் மனைசிதைத்தான், இன்றும் பழிக்கு ஆளாக்கினான் எனக்கூறிப் பெருமூச்சுவிட்டுச் சிறிது ஆறுதல் பெறுதலுமாம்.

379. நீலமும் கூந்தலும்!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை : குறிஞ்சி. துறை : (1) தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.

[(து -வி.) (1) தலைமகன் தோழியின் உதவியை வேண்டு கின்றான், தலைவியைப் பெறுவதற்கு. அவள், தலைவியின் குழந்தைத்தனம் மாறாத இயல்பை எடுத்துக்காட்டி, இத்தகை யாள் எவ்வாறு நின்னுடைய ஆர்வத்துக்கு உதவமுடியும் என்று மறுக்கின்றாள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைமகள் வீட்டிலே வைத்துக் காவற் படுத்தப் பெற்றனள். அவள் கலக்கத்தைப் பிரிவின ஏக்கத் தால் என்று கருதிய தோழி ஆறுதல் கூற, அவள் அதற்கான காரணம் கூறுவதாக அமைந்த செய்யுள் கொள்ளலாம்.] இதுவாகவும்

புன்தலை மந்திக் கல்லா வன்பறழ்

குன்றுழை நண்ணிய முன்றில் போகாது.

எரியகைந் தன்ன வீததை இணர வேங்கையம் படுசினை பொருந்திக் கைய தேம்பாய் தீம்பால் வௌவலின் கொடிச்சி எழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயில்

5

மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த

பெயலுறு நீலம் போன்றன விரலே

பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது

10 நற்றிணை தெளிவுரை

ஆடுமழை தவழும் கேரடுயர் பொதியில் ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த

காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே!

371

தெளிவுரை : ஐயனே! புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் அறிவு முதிராத வலிய குட்டியானது, குன்றத்தின் பக்கமாக வுள்ள சிறுகுடியிருப்பிலுள்ள வீடுகளின் முற்றத்தினின்றும் போகாதேயே இருக்கும். நெருப்பு கப்புவிட்டாற் போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய வேங்கையின் தாழ்ந்த கிளைமீதிலே பதுங்கியிருந்தபடி, ஒருநாள் கொடிச்சியின் கையகத்திலிருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தோடும் பறித்துக்கொண்டும் அது போய்விட்டது. அதனாலே, கண்மை எழுதிய எழிலுடைய தன் அழகெல்லாம் கெடும்படியாக அவள் அழுத கண்ணினள் ஆயினாள். இரவலர்க்குத் தேர்களை வழங்கி மகிழும் சோழரது 'குடவாயில்' என்னும் ஊரிடத்து, மழை பெய்து நிரம்பிக் கிடக்கும் அகழியிலே குளிர்ச்சியாக மலர்ந் துள்ள, பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலரைப் போன்ற வாயின, அக் கண்ணீரைத் துடைத்த அவள் கையின் விரல்கள். அத்துடனும் நில்லாது, அழகிய வயிற்றினிடத்தேயும் மீண்டும் மீண்டும் அவள் அடித்துக் கொண்டதனாலே, இடையறாது இயங்கும் மேகங்கள் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் மலையினிடத்தே, உயர்ந்த பெரிய மலைப்பக்கத்திலே பூத்த காந்தளின் கொழுமையான மொட்டை யும் போன்றவாய் அவை சிவந்தும் போயின. இத்தகையாளைக் கண்டு மயங்கியதும், நின் காமம் தணிப்பாள் அவளே என்பதும் பொருந்தாதுகாண் என்பதாம்.

கருத்து: அவள் நின் வேட்கை தீர்க்கும் பருவத்தாள் அல்லள் என்பதாம்.

சொற்பொருள்: கல்லா - தன் குலத் தொழில் ஏதும் - கல்லாத. வன்பறழ் - முரட்டுத்தனமுடைய குட்டி. குன்று உழை - குன்றின் பக்கம். முன்றில் - வீட்டு முற்றம். அகைதல் - கப்பு விட்டு எரிதல். இணர் - பூங்கொத்து. படுசினை - தாழ் வான கிளை. கைய - கையகத்துள்ள. கொடிச்சி - குறமகள். எழுதெழில் - மை தீட்டிய அழகு. மாரியங் கிடங்கு மழை நீரால் நிரம்பிக்கிடக்கும் அகழி. குடந்தைவாயில் - குடவாயில். ஈரிய - தண்ணென. பா அய் - பரவி. அவ்வயிறு - அழகிய வயிறு. பொதியில் - பொதியில் மலை. கொழுமுகை - கொழுமையான மொட்டு, மணக்கும் பருவத்தது.

372

.நற்றிணை தெளிவுரை

விளக்கம்: கையிடத்துப் பாற்கலத்தைக் குரங்கு பறிக்க அழுது அழுது வயிற்றலடித்துப் புலம்பும் அறியாப் பருவத்தாள். என்று கூறுகின்றனள். அதுபோல அவள் நலனை நுகர்ந்து நீயும் அழுதரற்றச் செய்ய நினைத்தனை போலும் என்பதாம். ஏதிலார் அவளுக்கு வரைபொருளீந்து மணந்துபோக, நீ தான் மனந் தளர்ந்து வாட நேரிடும்; ஆகவே விரைய வரைவோடு வருக என்று குறிப்பால் உணர்த்தியதுமாம்.

பயன் : தலைமகன் தன் முயற்சியைக் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பவனாவான் என்பதாம்.

2வது துறையின் தெளிவுரை : கொடிச்சியாகிய தோழியே! என் மேனியிலேயுள்ள மாற்றம் பற்றி வருந்துவையோ? பாலைப் பறித்துப்போக அழுதலால் கண் அழகழிந்தன; கண்ணீரைத் துடைத்துத் துடைத்துக் கைவிரல்கள் நீலம்பெற்றன; வயிற்றி லடித்து வாடியதால் கைவிரல்கள் சிவந்து காந்தள் முகை போல ஆயின ; நீ வேறு நினைந்து வருந்தாதே என்பதாம்.

பயன் : தன் துன்பம் வாய்விட்டுக் கூறுதலானே சிறிது ஆறுதல் அடைதல்.

380. ஒத்தனெம் அல்லேம்!

பாடியவர்: கடலூர்ப் பல்கண்ணனார். திணை : மருதம். துறை : பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

[( து - வி.) : பரத்தையிடமிருந்து பிரிந்து தலைவியை விரும்பியவனாக வருகின்றான் தலைவன். தலைவியோ ஊடியிருக் கின்றாள். அவளிடம் சமாதானம் பேசுவதற்குத் தலைவனிடம் பணி செய்யும் பாணன் செல்லுகின்றான். அவனிடம், தலைவி மறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)

நெய்யும் குய்யும் ஆடி மையொடு

மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனம் அல்லேம்; அதனால் பொன்புரை நரம்பின் இன்குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

5' நற்றிணை தெளிவுரை

கொண்டுசெல் பாண!-நின் தண்துறை ஊரனை பாடுமனைப் பாடல்; கூடாது நீடுநிலைப்

புரவியும் பூண்நிலை முனிகுவ,

விரகுஇல மொழியல், யாம் வேட்டதில் வழியே.

373

10

தெளிவுரை : பாணனே!எம் ஆடையோ நெய்யும் நறும் புகையும் படிந்ததாய் கருமைநிறத்தோடு மாசுபட்டிருக்கின்றது. சுணங்குடைய மென்மையான கொங்கைகளின் இனிதான பாலானது சுரந்து பெருகும்படியாக எம் புதல்வனை அணைத்துக் கொள்வதாலே, எம் தோள்களும் ஈன்றதன் அணிமைக்குரிய பால் நாற்றம் உடைத்தாயிருக்கும். தூய அணிகளணிந்த பரத் தையரின் சேரியிடத்தே காணப்படும் தேரோனாகிய நம் தலைவனுக்கு, அதனால் நாம் இயைந்தவர் ஆகமாட்டோம். அதனாலே, பொன் போன்ற நரம்பினிடத்தே இனிய குரலை எழுப்புகின்ற சிறிய யாழை இசைத்துப் பாடுதலிலே நீ வல்ல வனே என்றாலும், இவ்விடத்தே எம்மைத் தொழுது நிற்றல் வேண்டா. சிறந்த எமதுமனையிடத்தே நின்று நீதான் பாடுதலைச் செய்யாதபடியாக, நெடும்பொழுதுக்கு நிற்றலையுடைய, தேரிற் பூட்டிய குதிரைகளும், வெறுத்துக் கனைக்கின்றன காணாய். யாம் விரும்பியது என்பது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற் களைப் பேசவேண்டா. நின் தண்ணிய துறையுடைய ஊரனை அப் பரத்தையர் சேரிக்கே கொண்டுபோய் விடுப்பாயாக! அதனால், பொன்பெற்று நீயும் உவப்பாயாக என்பதாம்.

I

கருத்து: தலைவனை ஏற்க எம் மனம் இசையாது என்பதாம்.

.

சொற்பொருள்: நெய் - வாலாமை நீங்க ஆடும் நெய் அல்லது எண்ணெய்.குய் - தாளிதப்பு. ஆடி - ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து படிந்து. மையோடு - மைபோலக் கருமை யோடு. மாசு - அழுக்கு. கலிங்கம் - உடை; மென்பூங் கலிங்கம் எனலாம். திதலை - தேமற்புள்ளிகள். தீம்பால் - இனியபால். பிலிற்ற - பீச்சிட. புல்லி - அணைத்து. புனிறு - ஈன்றதன் அணி மையிலே உண்டாவது போன்றவொரு பால் மணம், வாலிழை -ஒளி செய்யும் அணிகள். மகளிர் - (இங்கே) பரத் தையர்; மனைவி அழுக்குப் படிந்த உடையும், புதல்வனை அணைத் துப் பால்நாறும் தோளும் உடையவளாக இருக்கப் பரத்தையர் ஒளி செய்யும் அணிகள் பூண்டு ஆடம் பரமாயிருப்பர் என்பதாம். சேரி- சேர்ந்திருக்கும் இடம். தேரோன் - தேருடைய தலைவன்; தலைவனது வளமை சுட்டியது. சீறியாழ் - சிறிய யாழ். எழாஅல்-

374

நற்றிணை தெளிவுரை

எழுப்புதல்; யாழிசைத்து ஒலியெழுச்செய்து மயக்குதல், பாடுமனை - சிறந்த மனை; தலைவியிருக்கும் மனை; பாடுகிடக்கும் மனையெனக் கொண்டு, அவள் விரதநெறி ஓம்பியிருக்கும் மனை எனலும் ஆம்; விரதம் தலைவனை இனிக் கூடோம் என்பது. பூணிலை - பூண்டிருக்கும் நிலை. முனிகுவ - வெறுப்ப. விரகு - பயன்தரும் தகுதிப்பாடு. வேட்டது - விரும்பியது.

விளக்கம்: தன்னையும் புதல்வனையும் மறந்து, பரத்தை தரும் இழிந்த இன்பமே பெரிதென மயங்கி, அவ்வீடே கதியெனச் சுற்றும் அவனுக்கும் எமக்கும் இனி எந்த உறவும் வேண்டாம்; இங்கே நின்று வீண்பேச்சுப் பேசுதலும் வேண்டாம்; நின் தலைவனுடனும், யாழுடனும் அங்கேயே போவாயாக என்று சீறுகின்றாள் தலைவி.

பாடபேதம் : மாசு பட்டின்றே; தீம்பால் பனிற்ற; புனிறு நாறு வம்மே; பாடல் பாடல் கூடாது நீடலின் பூணிலை பொறாஅ.

பயன் : பாணன் நிகழ்ந்தது சொல்லக் கேட்கும் தலைவன், தான் குடிமரபு குன்றியமைக்கு நொந்து, தலைவியைப் பணிந்து பலப்பல சொல்லித் தெளிவித்து.. மகிழ்ச்சி செய்வான் என்பதாம்.

381. வேர்கிளர் மாஅத்து அம் தளிர்!

பாடியவர்: ஔவையார். திணை : முல்லை. துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.

[ (து - வி) : வினைவியிற் பிரிந்து போகும்போது, 'இன்ன காலத்து வருவேன்' எனக் குறித்துச் சென்றனன் தலைவன். அந்த காலம் வரும்வரை பொறுத்திருந்த தலைவி, அது வரவும் அவனை வரக்காணாதாளாகத் துடித்துச் சோர்கின்றாள். அவள் தன்னுள்ளே வருந்திக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் .இது.]

..

"அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப் பெரும்பிறி தின்மையின் இலேனும் அல்லேன்;

கரைபொரு திழிதரும் கான்யாற் றிகுகரை

வேர்கிளர் மாஅத்து அந்தளிர் போல நற்றிணை தெளிவுரை

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனந் தாங்குவென் மற்றே!-ஓங்குசெலல் கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி ஈர நெஞ்சமோடு இசைசேண் விளங்கத் தேர்வீசு இருக்கை போல

மாரி இரீஇ மான்றன்றால் மழையே!

375

5

10

தெளிவுரை : தலை நிமிர்ந்தவாய்ச் செல்லும் விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையினையும், விரைவாகச் செல்லும் குதிரைப்படையையும் உடையவன் அஞ்சி என்பவன். அவன், குளிர்ந்த உள்ளத்தோடு, தன் புகழானது நெடுந்தொலை வுக்கும் சென்று விளங்குமாறு, தன் நாளோலக்கமாகிய அரசிருக் கையிடத்தே வந்து, இரப்பவருக்குத் தேர்களையே பரிசிலாக வீசு வான். அவனது நாளிருக்கைபோல் மேகமானது நிலைத்திருந்து மழையையும் பெய்யத் தொடங்கியது-

தாங்குவதற்கு அரிதான துயரினாலே வருந்துதலால் உண்மையாகவே சாகும்' எனச் செத்தொழியாமையினாலே, அவர்பால் அன்பில்லாதவளும் யான் அல்லேன். கரையைப் பொருதி ஓடுகின்ற காட்டாற்றின் இடிகரையிடத்தேயுள்ள, வேர்கள் எல்லாம் வெளிப்பட்டுத் தோன்றும் மாமரத்தின் அழகான தளிரைப்போல, நடுங்குதல் நீங்காத நெஞ்சத்தோடு இந்தத் துன்பத்தையும் எவ்வாறு தாங்குவேனோ?' என்பதாம்.

கருத்து: இனியும் இத் துயரம் தாங்கேன் என்பதாம்.

சொற்பொருள்: உழத்தல் - உழன்று வருந்துதல். பெரும் பிறிது - சாக்காடு. இலேனும் - இல்லாதேனும்; இல்லாமற் போனது அன்பு. இகுகரை - இடிந்து கொண்டிருக்கும் கரை. மாஅத்து - மாமரத்தின். வேர்கிளர் - வேர் பறிக்கப்பட்ட ஆனா - நீங்காத. இடும்பை - துன்பம். ஓங்கு செலல் - தலை யுயர்த்துச் செம்மாந்து நடத்தல். பகட்டுயானை - களிற்றியானை. நெடுமான் - விரையச் செல்லும் குதிரை; நெடுமான் அஞ்சி பெயரும் ஆம். ஈரநெஞ்சம் - இரக்கமுள்ள குளிர்ந்த நெஞ்சம். தேர்வீசு இருக்கை - தேர்களைப் பரிசாகத் தருவதைக் குறித்து அமர்ந்திருக்கும் பரிசில் இருக்கை. மாரி - மழை.

விளக்கம்: மேகம் நிலையாக நின்று மழை பெய்வதற்கு அஞ்சியின் வழங்குதல் வேண்டுமென்னும் ஈரநெஞ்சத்தோடு அமர்ந்திருக்கும் இருக்கையை உவமித்தது மிகவும் சிறப்பாகும். 376

நற்றிணை தெளிவுரை

ஆற்றங்கரையிலே இடிகரையிலிருக்கும் மாமரம், வேர் பறிக்கப் பட்டு எந்தநேரம் வீழுமோ என்ற நிலையிலே தந்தளித்தபடி யிருக்கும்; அதன் அழகிய தளிர் சிறிது பொழுதிலேயே அழிவை அடையக்கூடும்; இவ்வாறு பிரிவுத் துயரம் தன் உயிரை வேரறுக்கத் தானும் மாந்தளிர்போல உயிர்கொண்டு இருப்ப தாகத் தலைவி கூறுவது சோகத்தின் இறுதி எல்லையாகும்.

பாடபேதங்கள் : ஈரநெஞ்சம் ஓடிச் சேண் விளங்க.

பயன் : இதனால் அவள் மேலும் சிறிதுகாலம் அவன் வரவுநோக்கிப் பொறுத்திருப்பாள் என்பதும், அவனும் சொற்பிழையானாய் வந்து சேர்ந்து அவள் துயர் தீர்ப்பான் என்பதும் ஆம்.

382. நண்ணார் தூற்றும் பழி!

பாடியவர்: நிகண்டன் தலைக்கோட்டுத் தண்டனார். திணை: நெய்தல். துறை: ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாள் ஆகிநின்ற தலைமகளைத், தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத், தலைமகள் சொல்லியது.

[(து - வி.) களவுறவிலே இடையில் ஏதோ ஒரு செயல் பற்றித் தலைவன் சில நாட்கள் வாராதிருக்கின்றனன். அக் காலத்து மாலைவேளைகளில் தலைவி படும் துயரைக் கண்டு தோழி மிகவும் வருத்தமுற்றுச் சோர்ந்து போகின்றாள். அவளைத் தேற்றும் வகையிலே, தலைவி, தான் ஆற்றியிருப்ப தாகக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

கானல் மாலைக் கழிநீர் மல்க

நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த ஆனாது அலைக்கும் கடல்மீன் அருந்திப் புள்ளினம் குடம்பை உடன்சேர்பு உள்ளார் துறந்தோர் தேஎத்து இருந்துநனி வருந்தி ஆருயிர் அழிவ தாயினும்-நேரிழை! கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்புநீர்த் தண்ணம் துறைவன் நாண. நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.

5 நற்றிணை தெளிவுரை

377

தெளிவுரை: நேரியவான கலன்களணிந்த தோழியே! பரவிக் கிடக்கும் கடல் நீரையுடைய குளிர்ந்த துறைக்குத் தலைவனாகிய நம் காதலன் நாணும்படியாக நமக்குப் பகையாயினோர் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுந்தான் மிகுதியாக உண்டல்லவோ! ஆதலினாலே-

று

கானற் சோலையிலே, மாலைப் பொழுதிலே, கழியிடத்து நீரானது மிகுதியாகப் பெருகிற்று; நீல நிறத்தையுடைய விட்டன; நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிந்து அமைந்திராதே அலையெழுந்து உலவும் கடலிடத்தே சென்று, மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுப், புள்ளினங்களும் தத்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று சேர்கின்றன; இவற்றைத் தாமும் கண்டறிந்தும் நம்மை நினையாதவராயினார் நம் தலைவர். நம்மைப் பிரிந்து சென்ற அவர், நம்மை இருக்கவென விட்டுச் சென்ற இத் தேசத்திலேயே இருந்தபடி, அவரை நினைந்து நினைந்து மிகவும் வருந்தி, நம் அரிய உயிரே அழிவதானாலும் அழிவதாக. நாம் நம் துயரம் புறத்தார்க்குத் தோன்றா தபடி மறைத்தலே எவ்வாற்றானும் வேண்டுங்காண்!

கருத்து: 'உயிரே போவதாயினும் நம் துயரம் வெளித் தோன்றாதவாறு மறைத்தல் வேண்டும்' என்பதே என் நிலை என்பதாம்.

சொற்பொருள்: கானல் - கானற் சோலை. மாலைக் கழிநீர் மல்க - மாலைப் போதிலே கழியிடத்தே நீரானது பெருக; அலை பெரிதாக எழுந்து மோதுதலால் கழியிலே கடல் நீர் புகுந்து, அது பெருகுவதாயிற்று என்க. நிரையிதழ் - வரிசையாக அமைந்த இதழ். இதழ். பொருந்த - குவிந்து - மூடிக்கொள்ள. அலைக்கும் - அ சை ந் தபடியிருக்கும். குடம்பை - கூடு. உடன் சேர்பு - ஒன்றாகக் கூடிச் சேர்ந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியபடி தத்தம் கூட்டிற் சென்று சேரும் என்க. துறந்தோர் தேஎத்து - துறந்தோர் இருக்கவெனக் கைவிட்டுச் சென்ற இந் நாட்டிடத்து. காத்தல் - மறைத்துக் காத்தல். பரப்பு நீர் - பரவிய நீர். நாண் - நாணும்படியாக.

ஆனாது - அமையாது.

விளக்கம்: கானலை முதற்கண் கூறியது, இயற்கைப் புணர்ச்சி பெற்ற இடமாதலால், அந் நினைவே முதற்கண் உளத் தெழுதலால். நீலநிற நெய்தல் நிரையிதழ் பொருந்துதலைக் கூறியது, தான் இதழ் பொருந்தாதே உறக்கமின்றித் துயரப் படவேண்டியதை நினைத்துக் கூறியதாம். கடல் மீன் அருந்திய புள்ளினம் குடம்பைக்கு ஒருசேரச் சென்றது கூறியது, அவரும் 5.-24 378

நற்றிணை தெளிவுரை

பொருள் தேடியதும் தன்னை நாடி வராததை நினைந்து வருந்தியதாம். நண்ணார் தூற்றும் பழியாவது, அவன் மீண்டு வருங்காலத்தே, தலைவி தான் துயரத்தால் உயிரிழந்து போகக் கண்ட அயற்பெண்டிர், அவள் சாவுக்கு அவனே காரணன் என்று பழிப்பதை உளங்கொண்டு சொன்னதாம். இதன் அமைப்பு, இவள் காதலன் கடல் கடந்து வினைமேற் கொண்டு வேற்றுநாடு சென்று, குறித்த நாளிலே மீண்டு வராதே காலம் தாழ்த்தவன் என்பதையும் காட்டும்.

பயன் : தோழி, தலைவி ஆற்றியிருப்பாள் என்று தெளிந்து தன் மனத்துயரம் தீர்வாள் என்பதாம்.

383. அருளாய் அன்றே!

பாடியவர் : கோளியூர்கிழார் மகனார் செழியனார். திணை : குறிஞ்சி. துறை : தோழி, ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.

( (து - வி.) களவிலே வந்து உறவாடிச் சொல்லும் தலை வனின் உள்ளத்தை வரைந்துவந்து மணந்துகொள்வதிலே செலுத்த நினைக்கின்றாள் தோழி. அதனாலே, அவன் வரும் வழியிலுள்ள துன்பங்களை நினைந்து தாம் அஞ்சுவதாகக் கூறி, அவனுக்குத் தன் கருத்தை நுட்பமாகப் புரியவைக் கின்றாள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.)

கல்லயற் கலித்த கடுங்கால் வேங்கை

அலங்கலம் தொடலை அன்ன குருளை வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென, வயப்புலி புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு உருமிசை உரறும் உட்குவரு நடுநாள் அருளினை போலினும் அருளாய் அன்றே- கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் பாம்புடன்று இரிக்கும் உருமொடு ஓங்குவரை நாட! நி வருத லானே!

தெளிவுரை: உயர்ந்த மலைநாட்டைச்

5

சேர்ந்தோனே!

நீதான் தலைமகளுக்கு அருளுடையவன் போலவே நடந்து கொண்டாயானாலும், உண்மையிலே அருளற்றவனே ஆவாய் காண்! மலையின் தாழ்ந்த பக்கத்திலே, தழைத்துள்ள கரிய அடியையுடைய வேங்கைமரத்தினது பூக்களாலே தொடுக்கப் நற்றிணை தெளிவுரை

379

பெற்ற, அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை அணித்தாக ஈன்றிருந்தது பெண்புலி யொன்று. வயாநோய் பொருந்திய அந்தக் கரிய பெண்புலியானது பசியாலே வருந்தியதாக, அதனையறிந்த வலியுள்ள ஆண்புலியானது இரைதேடிவரப் புறப்பட்டது. புள்ளிகளையுடைய முகம் சிதையுமாறு தாக்கி, ஒரு களிற்றைக் கொன்று வீழ்த்தியது. அப்படி வீழ்த்திய அது, இடியினும் காட்டில் உரத்த குரலோடு முழக்கமிட்டபடி யிருக்கும் அச்சமிகுந்த நடு இரவு நேரத்திலே, செறிந்த இருளானது மூடிமறைத்திருக்கும் அச்சம் வருதலையுடைய வழியிலே, பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லும் இடியும் இடிக்கும்போதிலே, நீயும் வருகின்றனை! அதனாலே, எங்கள் கவலையே மிகுவதனால், நீயும் எங்கள்பால் அருள் உள்ளவன் அல்லை காண்!

கருத்து: 'இரவு நேரத்தில் இனி வருதல் வேண்டா என்பதாம்.

சொற்பொருள்: கல் - மலை. அயல் - அடுத்துள்ள பக்கத் கல்-மலை. திலே. கலித்த - தழைத்த. அலங்கல் - அசைதல். தொடலை- மாலை. குருளை - குட்டி. வய - வயாநோய்; ஈன்ற தாய்க்குச் சிலநாள்வரை உள்ள சோர்வும் நோயும். புனிறு - ஈன்றதன் அணிமை. பிண - பெண்புலி. வயம் - வலிமை. புகர் - புள்ளி. உரறும் - முழக்கும். உட்கு - அச்சம். நடுநாள் - நள்ளிரவு. கனையிருள் - மிகுதியான செறிந்த இருள்.இயவு - வழி.உரும் இடி. உடன்று - சினந்து. இரிக்கும் - கொல்லும். ·வரை - உயர்ந்த மலை.

ஓங்கு

விளக்கம்: 'அருளினை போலினும்' என்றது.அவன் அவ்வாறு நினைத்தாலும், அவன் வரும் வழியினை நினைந்து வருந்தும் அவர்களுக்கு, அஃது அருளாகாது துயராகவே விளங்குகின்றது என்றதாம். நெறியின் ஏதங்கூறி இரவுக் குறி மறுத்தலால் இது வரைவு வேட்டலும் ஆயிற்று.

இறைச்சி : பெண்புலி பசியுற்றதென்று ஆண்புலி களிற்றைக் கொன்று அதனை உண்பிக்கும் என்றது, அவ்வாறே நீயும் நின் காதலியின் துயரத்தை நினைந்து, உரிய வரைபொரு ளோடு வந்து மணந்து கொள்ளவேண்டும் என்பதாம். களிற்றைக் கொன்று இரைபெற்ற புலியானது, அந்த வெற்றிக் களிப்பால் காடே அதிரும்படி முழங்கும் என்றது, அவ்வாறே நீயும் வரைவொடு வரும்போது, இன்னியங்களின் முழக்கோடு ஊரறிய வரலாம் என்பதாம். 380

நற்றிணை தெளிவுரை

பயன் : தலைவியின் மனத்துயரத்தை உணரும் தலைவன், அவளை முறையாக வரைவொடு வந்து மணம் புரிந்து கொள்ளும் உறுதியுடையவனாகச் செயல்படுவான் என்பதாம்.

384. மருந்து எனப் படூஉம்!

பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ. திணை : முல்லை. துறை : உடன் போகா நின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

( (து - வி.) தலைமகளைப் பாலைவழியே தன்னூர் நோக்கி அழைத்துப் போகின்றான் தலைவன் ஒருவன். அவள் கால் பரற்கற்கள்மேல் பட்டு வருந்தாவாறு, வேங்கை மலர் உதிர்ந்து கிடக்கும் பக்கமாக அழைத்துச் செல்பவன், அவளுக்குச் சோர்வு ஏற்படாதிருக்கத், தன் நெஞ்சொடு சொல்வான்போல, அவளும் கேட்டு மகிழக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.] பைம்புறப் புறவின் செங்காற் சேவல் களரி ஓங்கிய கவைமு ட்கள்ளி முளரியம் குடம்பை ஈன்றிளைப் பட்ட உயவுநடைப் பேடை உணீஇய, மன்னர் முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம் மாணில் சேய்நாட்டு அதரிடை மலர்ந்த நல்நாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ காண்இனி வாழி-என் நெஞ்சே! நாண்விட்டு அருந்துயர் உழந்த காலை

மருந்தெனப் படூஉம் மடவோ ளையே!

5

10

தெளிவுரை : என்னுடைய நெஞ்சமே! நீதான் வாழ் வாயாக! நாம் இவளை அடையமுடியாதேமாய்ப் பொறுத்தற் கரிய துயரத்திலே வருந்தியிருந்த போதிலே, தனக்குரிய பண் பாகிய நாணத்தையும் ஒதுக்கிவிட்டு, நம் நோய்க்கு மருந்தென வந்து வாய்த்தவள், இந்த இளமையோள். இவளை -

பசுமையான புறத்தையும் சிவந்த கால்களையும் கொண்ட புறவின் சேவலானது, களர் நிலத்திலே உயரமாக வளர்ந் திருந்த கவையான முட்களைக்கொண்ட கள்ளியின் தலைப்புறத் நற்றிணை தெளிவுரை

381

திலே, சுள்ளிகளால் கட்டப்பெற்ற கூட்டிலே, குஞ்சுகளை ஈன்று அவற்றைக் காத்திருத்தலாலே களைத்துப்போன், வருந்திய நடையினையுடைய பேடையானது உண்ணும் பொருட்டாக

வேற்று நாட்டவரான மன்னர் வந்து போரிட்டுப் போர் முனையிலே வளத்தை யெல்லாம் கவர்ந்து போய்விட, முதிர்ந்து கிடந்த பாழ்முனையிலே, தானே விளைந்து கொள்வாரன்றி உதிர்ந்து கிடக்கும் நெற்களைக் கொண்டுவந்து கொடுத்து உண்பிக்கும்-அத்தகைய மாட்சிகள் ஏதுமற்ற தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியினிடையிலே, நல்ல நாட்காலை யிலே மலர்ந்த வேங்கையின் பொன்போன்ற புதுப்பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்க, அப் பரப்பின் மீதாக, மென்மெல நடக்கவும் யாம் கண்டனமே! அதன் செவ்வியை நீதானும் காண்பாயாக!

கருத்து: 'அவளை அடைந்தது என் பேறு' என்பதாம்.

2

.

சொற்பொருள்: பசும்புறம் - பசுமையான மேற்புறம். செங்கால்- சிவந்த கால். களரி - களர்நிலம். கவைமுள் - கவைபட்டமுள். முளரி - சுள்ளி. இளைப்பட்ட - காவற்பட்ட உயவு நடை - வருந்திய தளர்ந்த நடை. முனை - போர்முனை. கவர்- கவர்ந்து போனதனாலே. முதுபாழ் - மக்கள் நெடுங் காலம் முன்பே நீங்கிப்போகப் பாழ்பட்டு முதிர்ந்து கிடக்கும் வயற்புறம். உகுநெல் - உதிர்ந்துகிடக்கும் நெல். நல்நாள் நாட்காலை வேளையில். புதுப்பூ - அன்று பூத்த பூ. நாண்விட்டு நாணத்தை விட்டு; இது புதியவனோடு அவனே துணையாகத் தன் வீட்டைவிட்டு வெளியேறி உடன்போக்கிலே சென்றதைக் குறித்துக்கூறியது. உழந்த - வருந்திய. மடவோள் - இளையவள்; மடப்பம் உடையவளும் ஆம்.

-உ

இறைச்சி : பார்ப்பை ஈன்று அவற்றுக்குக் காவலாக இருக்கும் புறவுப்பேடை உண்டு பசிதீருமாறு, அதன் சேவல் முதுபாழிற்சென்று உதிர்ந்த நெற்களைப் பொறுக்கி வந்து அளிக்கும் என்றனர். இவ்வாறே, இவளைக் கொண்டுசென்று மணந்து இல்லறம் பேணுவதற்கு முற்பட்ட யாமும், இவள் இனிதே குடும்பம் நடத்துவதற்கு வேண்டுவன முயன்று தேடி வந்து தந்து, உதவி நிற்போம் என்பதாம்.

விளக்கம்: நாணம் பெண்ணின் ஒப்பற்ற பண்பு. எனினும், கற்பறம் பேணுவதற்கு இடையூறு வந்த காலத்தில். அதையும் கைவிட்டுத் தாம் காதலித்தவனோடு யாருமறியாமற்

1 882

நற்றிணை தெளிவுரை

செல்லும் துணிவைப் பெண் கொள்ளும்போது, நாணத்தை விட்டு விடுதலும் அறமென்றே கொள்க. இது முல்லைத் திணைச் செய்யுள் என்றிருப்பினும், 'முனைகவர் முதுபாழ்' எனப் பாலை யும் வந்தது காண்க? பாலையெனத் திணை கொள்ளின், பிரிந்துறையும் தலைவன், தன் காதலி தன்னோடு முன்னர் உடன்போக்கில் உடன்வந்த செவ்வியை நினைத்து, அவள் நினைவாலே ஏங்கி வருந்துவதாகக் கொள்க.

பாடபேதங்கள் : வண்புறப் புறவு: பண்புறப் புறவு : மாணில் சேய்நாட்டு.

பாடியவர் :

385. மலரும் கூம்பின!

...திணை: நெய்தல். துறை:

இப்பாட்டின் ஆசிரியர் பெயர் முதலிய விவரங்கள் எதுவும் இந்நாள் வரையிலும் கிடைக்கப் பெறவில்லை. ஏழு அடிகள் மட்டுமே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன.

பேராசிரியர் ஔவை, சு அவர்கள் தம்முடைய விரிவான ஆராய்ச்சியுரை பதிப்பில், 'அஞ்சிலாந்தையார் பாட்டு' என்ற குறிப்பினைத் தமிழ்ச்சங்கப் பதிப்பில் கண்டதாகவும் எழுதி யுள்ளார்கள்.

ஆகவே கிடைத்த வரைக்கும் இங்கே நாமும் காணலாம். எல்லை சென்றபின், மலரும் கூம்பின ; புலவுநீர் அடைகரை யாமைப்பார்ப் போடும்

அலவனும் அளைவயின் செறிந்தன; கொடுங்கழி

இரைநசை வருத்தம் வீட மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால்

பொழுதன்று ஆதலின், தமியை வருதி எழுதெழில் மழைக்கண்......

தெளிவுரை: பகற்போதானது சென்று

5

கழிந்ததன்

பின்னர் வந்துற்ற மாலைக் காலத்திலே, கழிப்பாங்கரிலேயுள்ள நெய்தல் மலர்களும் இதழ் குவிந்துவிட்டன; புலவு நாற்றத் தையுடைய அடைகரையினிடத்தே, யாமையின் பார்ப்போடு நண்டுகளும் தத்தம் அளைகளினிடத்தே சென்று ஒடுங்கிக் கொண்டன, வளைந்த கழியினிடத்தே சென்று இரையினைத் நற்றிணை தெளிவுரை

383

தேடித்திரியும் வருத்தமானது கழிந்து போனதாக, மரத்தின் மேலுள்ள கூட்டினிடத்தே நாரைகளும் தம் குஞ்சுகளோடு சென்று தங்கின. அதனாலே, இதுதான் நீயும் வருதற்குரிய பொழுது அல்ல. ஆதலினாலே, தனியனாகவே வருகின்றனை. மையெழுதிய மலர் போன்ற குளிர்ந்த கண்......

சொற்பொருள்: எல்லை - பகற்போது; கதிரவனும் ஆம். மலர் - நீல மலர். கூம்பின - இதழ்குவிந்தன. புலவு நீர் - புலவு நாற்றத்தையுடைய நீர். நீர்மை - தன்மை. அடைகரை அடையாக அமைந்துள்ள கரைப்பாங்கர்; அது புலவு நாற்றம் உடையதானது, கடற்பறவைகள் தாம் பற்றிய மீன்களை அதன்கண் இருந்து குத்தித் தின்பதனால். கொடுங்கழி - வளைந்த கழி. வீட - இல்லாது ஒழிய. மரமிசை - மரத்தின்மேல்; கண்டல் மரமாகவோ, பனைமரமாகவோ கொள்க. பிள்ளை - குஞ்சுகள். பொழுதன்று - பொழுது இதுவன்று; கடற்கரைப் பாங்கரிலே, பரதவர் மகளிர் களவு வாழ்க்கையானது பெரும்பாலும், அவர் மீனுணங்களைக் காத்திருப்பதும், பிறவுமான தொழில்களில் ஈடுபட்டோராய் இருக்கும் 'பகற் போதிலேயே நிகழும்; மாலைப்பொழுது கடல்மேற் சென்ற தமர் திரும்பிவரும் கால மாதலானும், இல்லுறை மகளிர் தத்தம் இல்லத் தலைவரை எதிர்கொள்ளக் கடற்கரை நோக்கி வரும் நேரம் ஆதலாலும், கடற்கரையும் கழிச்சோலையும் ஆரவாரத்துடன் திகழ்வதனால், களவு வாழ்க்கைக்கு இசைவானது அன்று எனலாம். ஆகவே தான், பொழுதன்று ஆதலின்' என்று குறித்தனர். தமியை வருதி - தனியனாக வருகின்றனை; அவன் வரைவு வேட்டுச் சான்றோரோடு வருவதனை எதிர் பார்த்திருந்த தோழி, அவன் தனியனாக வருவது கண்டு மனம் வருந்திக் கூறியதாகும்.

து

விளக்கம்: எல்லை சென்றபின் மலர் கூம்பினது போல, இவளும், நீதான் அருளிச்செய்து அகன்றுபோயின. பின்னர் வாட்டமடைவாள் என்பதாம். யாமைப் பார்ப்பொடு நண்டும் தம் அளைவயிற் செறிந்தன என்றது, பிறர் வரவஞ்சி அவை ஒடுங்கின என்பதாம்; அதுபோல அலர் உரைப்பார் பேச்சுக்கு அஞ்சித் தலைவியும் வீட்டினுள் ஒடுங்கினள் என்ப தாம். புள்ளும் பிள்ளையோடு வதிந்தன என்றது, அவ்வாறே தலைவனும் தலைவியை மணந்து இல்லறமாற்றிப் புதல்வனை அவள் பெற்றுத்தர, மாலைவேளையிலே, அவளுடன் இல்லி லிருந்து மகிழவேண்டும் கடப்பாடுடையன் என்று சுட்டிய தாம். 384

நற்றிணை தெளிவுரை

386. வதுவை என்றவர் வந்த ஞான்று!

பாடியவர்: தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார். திணை : குறிஞ்சி. துறை : பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புகுவல் என முற் பட்டாள். தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றின்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிப் படுவேனாவேன் மன்னோ' எனச் சொல்லியது.

[(து -வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன் வீட்டிற்குத் திரும்புகின்றான். மனைவியிடம் நேரே சொல்ல அஞ்சியவன், தோழியின் உதவியை வேண்டுகின்றான். அவளும் அவரை ஒன்றுபடுத்த நினைக்கின்றாள். தலைமகளிடம் சென்ற போது, அவள் முகபாவத்திலே தோன்றிய சினம் அவளை ஏதும் சொல்லமுடியாமற் செய்து விடுகின்றது. தான் வந்த நிலைக்குத் தலைவியும் தன்னைச் சினந்து கொள்ளலாம் என்று நினைப்பவள். இனித் தான் தலைவியின் குறிப்பின்படியே நடந்து கொள்வ தாகத் தலைவியிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகட் கண்ணிக் கானவர் உழுத. குலவுக்குரல் ஏனல் மாக்தி, ஞாங்கர் விடரளைப் பள்ளி வேங்கை அஞ்சாது

கழைவளர் சாரல் துஞ்சும் நாடன்-

'அணங்குடை அருஞ்சூள் தருகுவென்' எனநீ,

5

'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' எனத்

தெரிந்தது வியந்தெனன் - தோழி! பணிந்து நம்

கல்கெழு சிறுகுடிப் பொலிய,

வதுவை என்றவர் வந்த ஞான்றே.

10

தெளிவுரை: தோழீ! சிறுத்த கண்களையுடைய பன்றியது பெரும் சினத்தைக் கொண்ட ஆண், கள் நிரம்பிய மாலைகளை அணிந்துள்ள கானவர்கள் உழுது விளைவித்துள்ள, வளைந்த தினைக்கதிர்களை நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே, மலைப் பிளப்பினைத் தான் தங்குமிடமாகக் கொண்டிருக்கும் வேங்கைப் புலிக்கு அஞ்சாததாய். மூங்கில்கள் வணர்ந்துள்ள மலைச் சாரலினிடத்தே உறங்கியபடியிருக்கும் மலைநாட்டவன் நம் தலைவன். அவள்,அணங்குறடைய அரிய சூர நற்றிணை தெளிவுரை

985

நினக்குத் தருவேன்' என்றனன். நீயோ, 'நும்போன்ற சால்புடையவர்கள் தம் வாக்கைப் பொய்யாதவர் ஆதலினால், இத்தகைய சூளுரைகளைச் சொல்ல மாட்டார்கள்' என்று கூறினை. பின்பொரு காலத்திலே, அவன், நம் தமர்களைப் பணிந்தவனாக, நம்முடைய மலையகத்து விளங்கிய சிறு குடி யானது அழகடையுமாறு, வதுவை அயர்தும். என்று அந்தணர் சான்றோரை முன்னிட்டு வந்த பொழுதிலே, அவன் உண்மைப் பண்பை அறிந்தேனாகிய யானும், நின் அறிவு நுட்பத்தை வியந்தேன் அல்லேனோ!

கருத்து: 'அத்தகைய நின் தலைவனை நீதான் வெறுத்து ஒதுக்குதல் முறையன்று' என்பதாம்.

சொற்பொருள்: ஒருத்தல் - தலைமையுடைய ஆண் பன்றி. துறுகட் கண்ணி - கள் நிரம்பிய தலைக்கண்ணி. உழுது - உழுது விளைத்த. குலவுக்குரல் - வளைந்து தலைசாய்ந்திருக்கும் முற்றிய தினைக்கதிர். மாந்தி - நிறையத் தின்றுவிட்டு. ஞாங்கர் - அடுத் துள்ள பக்கத்திடத்தே. அருஞ்சூள் - பொய்த்தற்கரிய சூளுரை. அணங்குடை - அணங்குதலை உடைய; அணங்குதல் தெய்வம் சாற்றிச் சொல்லும் சூளுரை பொய்ப்பின் அத் தெய்வம் பொய்த்தானைத் தாக்கி வருத்துதல். துன்னார்-சொல்லார். பொலிய - அழகு கொள்ள. வதுவை - திருமணம்.

A

.

உள்ளுறை : பன்றியின் ஒருத்தல், கானவர் விளைத்த தினைக் கதிரை நிறையத் தின்றுவிட்டு, பக்கத்திலே தங்கியிருக்கும் வேங்கைப் புலிக்கும் அச்சப்படாததாய், மூங்கிற் காட்டிலே கிடந்து உறங்கும் நாடன் என்றனள். இது தலைவனும் அவ்வாறே பரத்தையரின் அன்னையர் அறியாதே அவர் தம் இன்பத்தை நுகர்ந்து களித்து மயங்கியவனாய், அண்டை அயலிலுள்ளவர் பழித்துப் பேசுவதற்கும். அச்சப்படாதவனாக வந்து, மனைவி வீட்டின் முற்றத்திலே காத்து நிற்கின்றனன் என்றதாம்.

விளக்கம்: 'அன்று சூளுரைத்தல் வேண்டா; நின் சொல்லே போதும்' என்று அவனிடமுள்ள பெருகிய காதலால் நீயுரைத்த சொற்கள், பின் அவன் வதுவை வேட்டு வந்தபோது மெய்யாயினதும் அறிந்து வியந்தேன். இப்போது, அவன் தவறு செய்துவிட்டு, அதுபற்றி அஞ்சாமல் வந்து வீட்டின்முன் நிற்கின்றான். அவனைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளாமல் நீதான் சினந்து ஒதுக்குகின்றனை. நின் குறிப்பை என்னாற்

1 886

நற்றிணை தெளிவுரை

புரிந்துகொள்ள முடியவில்லை; நீதான் அறிவுள்ளவளாதலின் ஏற்றது ஆராய்ந்து செய்க என்று தோழி உணர்த்துவதாக கொள்க.

பயன் : இதனால், தன் சினம் தணியும் தலைவி, தலைவனை ஏற்றுக் கொள்வாள் என்பதாம்.

387. உறைகழி வாளின் மின்னி!

பாடியவர்: பொதும்பில் கிழார் மகனார். திணை : பாலை. துறை: பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.

((து-வி.) தலைமகன், வருவதாகக் குறித்த காலத்தின் வரவிலும் வாராதானாகத், தலைவியின் வருத்தம் கனன்று பெரி தாகின்றது. அப்போது தோழி, எதிர்ப்படும் பருவவரவைக் காட்டி, அவன் சொற்பிழையாது திரும்புவான் எனக் கூறித், தலைவியின் கவலையைத் தணிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.]

நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும்

அம்ம! நாளும் தொன்னலஞ் சிதைய ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன்னருங் கவலை அருஞ்சுரம் இறந்தோர் வருவர் வாழி-தோழி! செருவிறந்து ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தானைச் செழியன் பாசறை உறைகழி வாளின் மின்னி, உதுக்காண், நெடும்பெருங் குன்றம் முற்றிக்

கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே!

in'

5

10

தெளிவுரை: தோழீ! வாழ்வாயாக. இதனையும் கேட் பாயாக. போர்க்களத்தே பகையழித்து வென்று, ஆலங்கானம் என்னுமிடத்திலே, களத்தில் எதிராத பிறரும் அஞ்சி நடுங்கு மாறு பாசறையிலே வீற்றிருந்தான், வேல்வீரர் நிரம்பிய படை யினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன். அவனது பாசறை யிடத்தே உள்ளவர் உறையினின்றும் உருவியெடுத்த வாளைப் போல மின்னலிட்டபடியே, அதோ பாராய், நெடிய பெரிய நற்றிணை தெளிவுரை

887

குன்றத்தைச் சூழ்ந்து, இடிமுழக்கம் மிகுந்த மேகங்கள் கடுமை யான மழையைப் பெய்கின்றன. அதனாலே, நெறித்த கரிய கூந்தலும், நெடிய தோளும் நாளுக்குநாள் தம்முடைய பழைய அழகுகள் சிதைந்து போகுமாறு, செவ்விதாக அம்பு தொடுத் தற்கு இயையாதவரும், அவிழ்ந்து சோரும் கண்ணியை உடைய வருமான, தம் தொழிலைக் கல்லாத மழவர்கள் வில்லின் செய லாலே, வழிச்செல்வார் செல்வதற்கு அரிதாகிப்போன, குறுக் கிட்டுக் கிடக்கும் கவர்த்த வழியினைக் கொண்ட அருஞ்சுரத் தைக் கடந்து, வேற்று நாட்டிற்குப் போயிருப்பவரான நம் தலைவரும், தவறாது திரும்பி வருவார்காண். அதனால், நீயும் துயர் மறந்து ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

கருத்து: தலைவர் வருவார் என்று தேறுதல் கூறியதாம்.

.

சொற்பொருள்: நெறி - நெறிப்பு; கூந்தல் அலையலையாக அமைந்திருக்கும் செவ்வி. கதுப்பு - கூந்தல். நீண்ட தோள் - நெடிய தோள்; நெடுமை பூரிப்பால் அமைவது. ஒல்லா -கைகூடாத. செந்தொடை -செவ்விதாக அம்பு தொடுத்து எய்யும் திறன்; எய்த அம்பு தவறாமற் சென்று குறியை வீழ்த்துதல் இது. ஓரீஇய - விலகிய; தலையினின்றும் சோர்ந்து கலைந்து கிடக்கும். மழவர் -ஓர் இனத்தார்; இவருட் சிலர் ஆறலை கள்வராயும் இருந்தனர்; பிறர் மாவீரர்களாகப் படையணிகளில் சிறந்தனர். துன்னரும் - நெருங்குதற்கு அரிய. கவலை-கவறுபட்டுக் கிடக்கும் பாதை. அருஞ்சுரம் - கடத்தற் கரிதான சுரநெறி செருவிறந்து - செருவினைக் கடந்து; கடந் தாவது பகைவரையழித்து வெற்றி காணல். அஞ்சுவது- அச்சம் உண்டாக; இது களம் வராதுள்ள பிறபிற அரசரைக் குறித்தது. உறைகழிவாள் - உறையினின்றும் உருவப்படும் வாள். கலி - ஆரவாரம்; இது இடி முழக்கம். வான் - மேகம்

.

விளக்கம்: 'செருவிறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தானைச் செழியன் பாசறை உறைகழி வாளின் மின்னி' என்று மின்னலைக் கூறியது, அதுதான் கோடை வெம்மையாகிய பகையை முற்றக் கடிந்து, வெற்றி மிடுக் குடன், பிறரை வாழ்விக்க எழுந்த மின்னல் என்று சுட்டிய தாகும். அருஞ்சுரத்தையே முயற்சியோடு கடந்து போயினவர் இதுகாலை மழை பெய்தலாலே பசுமைப் பொலிவோடு விளங்கும் வழியினை எளிதாகவே கடந்து மீள்வர் என்றும் கூறினாள். தொன்னலம் சிதைந்த தோளும் கதுப்பும் அவர்வர மீளவும் தொன்னலம் பெறும் என்பது தேற்றமாம். 388

நற்றிணை தெளிவுரை

பயன் : இதனால் தலைமகள் தன் துயரம் சிறுகக் குறைந்து அவன் வரவை ஆவலோடு எதிர்நோக்குபவளாக மகிழ்வாள் என்பதாம்.

பாடபேதங்கள்: தொன்னலம் சிதையேல்; ஓராச் செந் தொடை.

388. அகல்வு அறியான்!

பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார். திணை : நெய்தல். துறை (I) வரைவு நீட ஆற்றா ளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது; (2) மனையுள் வேறுபடாது ஆற்றினாய் என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.

[(து - வி.) தலைமகன் வரைபொருள் குறித்துச் சென்றவன் குறித்த காலத்து வராது, காலம் நீட்டித்தலாலே தலைவியும் மனம் கலங்குகின்றனள். அவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்து, தோழி. அவன் செயலை ஐயுற்றாள் போலக் கூறுகின்றாள். அவளுக்குத் தான் அவன்பாற் கொண்டுள்ள நம்பிக்கையைத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2) வீட்டிலிருந்தபோது எழில் வேறுபாடு தோன்றாமல் பிரிவுத் துயரை அடக்கிக் காத்தாய்' என்று தோழி பாராட்டிய போது, அதற்குத் தலைவி பதில் சொல்வதாகவும் இதனைப் பொருத்திக் கொள்ளலாம்.]

அம்ம வாழி தோழி!-நன்னுதற்கு

யாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக் கயிறுடை யாத்த கடுநடை எறிஉளித் திண்திமிற் பரதவர் ஒண்சுடர்க் கொளிஇ நடுநாள் வேட்டம் போகி வைகறைக்

கடல்மீன் தந்து கானற் குவைஇ ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து, தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப்

பெரிய மகிழும் துறைவன், எம்

சிறிய நெஞ்சத்து அகல்வறி யானே!

5

10

தெளிவுரை : தோழீ.வாழ்வாயாக யான் சொல்வதனையும் கேட்பாயாக. கடலிலே விரையச் செல்லக்கூடிய திண்ணிய 1

நற்றினை தெளிவுரை

389

படகினையுடைய பரதவர்கள், வலிமையான புரிகளைக் கொண்ட கயிற்றின் நுனியிலே கட்டிய, பெருமீன்களை எறிந்து கொல்லும் உளியினைக் கைக்கொண்டவர்களாக, ஒள்ளிய விளக்கங்களைக் கொளுத்திக்கொண்டு, நள்ளிரவுப் போதிலே மீன்வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று, வைகறை வேளையிலே கடலிற் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து, கானற் சோலையிடத்தே அவற்றைக் குவித்து வைத்துவிட்டு, உயர்ந்த கரிய புன்னை மரங்களின் வரிப்பட்ட நிழலிலே அமர்ந்திருந்த வராக, தேன் மணம் கமழ்கின்ற கள்ளினைத், தம் சுற்றத் தோடும் சேர்ந்திருந்து நிறையக் குடித்து, பெரிதாக மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய துறையை உடையவன் தலைவன்! அவன். எம் சிறிய நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் நீங்கி அறியான்! ஆகவே, என் நல்ல நெற்றிக்குப் பசலைநோய் என்பதும் எப்படி உண்டாகும்? அது தான் உண்டாகாதுகாண் என்பதாம்.

.

கருத்து: 'அவன் நெஞ்சிலே நிற்பதால் யான் பிரிவை நினைந்து வருந்திலேன்' என்பதாம்.

சொற்பொருள்: நோன்புரி - வலிமிக்க புரி; வலிய புரிகளை மூன்றும் ஐந்துமாகச் சேர்த்து முறுக்கிய கயிறு என்பார் நோன்புரிக் கயிறு என்றனர். யாத்த-கட்டிய. கடுநடை கடுமையான வேகம். எறி உளி - எறியும் உளி. கடுநடை எறி உளி' எனக்கொண்டு, கடுவேகத்துடன் பெருமீன்கள் மேல் எறிந்து கொல்லும் உளி எனவும் கொள்ளலாம். திமில் மீன்பிடி படகு. வைகறை - விடியல். குவைஇ - குவித்து. வரிநிழல் - வரிப்பட்ட நிழல். கிளை - சுற்றம்; ஏவற்சுற்றம் என்றலும் பொருந்தும். பெரிய மகிழும் - பெரிதான மகிழ்ச்சி கொள்ளும்.

.

-

உள்ளுறை : பரதவர் எறி உளியும் விளக்கமும் கொண்டு நள்ளிரவிலே கடல்வேட்டத்திற்குச் சென்று, வைகறையில் மீன் கொள்ளையோடு வந்து, மீன்களைக் கானலிலே குவித்து விட்டுப், புன்னை நிழலிலே சுற்றத்தோடு அமர்ந்து கள்ளைக் குடித்துப் பெரிதாகக் களித்திருக்கும் துறைவன் என்றனள். தலைவனும், அவ்வாறே வரை பொருளுக்குச் சென்று, பொருள் தேடியவனாக வந்து, அப்பொருளைத் தலைமகள் வீட்டு முற்றத்திலே குவித்துத், தமர் இசைவோடு தலைவியை மணந்து கொண்டு காமக் களிப்பிலே பெரிதாக இன்புற்றுக் களிப் பவனாவான் என்பதாம்.

i 890

நற்றிணை தெளிவுரை

விளக்கம்: 'சிறிய நெஞ்சம்' என்றது,அவன் உயர்வைச் சிறப்பிக்க நினைந்து கூறியதாம். 'தேங்கமழ் தேறல் கிளையோடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன்' என்றது, தலைவனையே குறித்ததாகவும் கொள்ளலாம். அப்படித் தன் இனத்தோடு கூடிப் பெரிதாகக் களித்திருக்கும் அவன், 'என் சிறிய நெஞ்சத்தும் அகலாதே உள்ளனன்' என்கிறாள் தலைவி. அவள் மீது வருத்தம் இருந்தாலும், அதையும் தன் செவ்வியால் மறைத்தொழுகும் பெண்மைப் பண்பு இது. அவள் இரவெல்லாம் உறங்காது புலம்பியிருந்தமையும். வைகறையில் அவன் களிப்புக் குரல்கேட்டு மேலும் நொந்தமையும் இச் செய்யுள் காட்டும்.

பயன் : இதனை

நிலைக்கு வருந்தி விரைந்து

முயல்வான் என்பதாம்.

மண ட்பவன், தன்னுடைய

மணவினைக்கான பலவும்

389. காமம் அமைந்த தொடர்பு!

பாடியவர்: காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறி வந்து ஒழுகா நின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[ (து - வி.) பகற்போதிலே வந்து தலைவியோடு களவிலே உறவாடி மகிழ்ந்து வருகின்ற தலைவன், தலைவியை வரைந்து வந்து மணந்துகொள்வது பற்றிய சிந்தனையே இல்லாதவனாக இருப்பதறிந்து, தலைவி கவலை கொள்கின்றாள். இனித் தினைப் புனம் காவல் கைகூடாது; ஆகவே, இத் தொடர்பு எப்படி முடியுமோ?' என்று கவலைப்படுவது போலத், தலைவனும் கேட்டுணருமாறு தோழியிடம் சொல்லுகின்றதாக அமைந்த செய்யுள் இது.]

வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் தேம்படு நெடுவரை மணியின் மானும்; அன்னையும் அமர்ந்துநோக் கினளே, என்னையும் களிற்றுமுகம் திறந்த கல்லா விழுத்தொடை ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் யென் றோளே? சேவலொடு சிலம்பின் போகிய சிதர்கால் வாரணம்

5 நற்றிணை தெளிவுரை

முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடனொடு

அன்புறு காமம் அமையுநம் தொடர்பே! #

·

391

10

தெளிவுரை : என் தந்தையும், களிற்றின் முகத்தைப் பிளந்த விற்றொழில் அல்லது பிறதொழிலைக் கல்லாத, சிறந்த அம்புதொடுக்கும் ஆற்றலையுடைய ஏவல் மக்களாகிய வீரரோடு, விலங்கினங்களைப் பின்பற்றி வேட்டைமேற் சென்றனன். அதனாலே, 'சிறு கிளிகள் கொய்தழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின் காவலும் நீதான் என்றனள் அன்னை. தன் சேவலோடு மலைப்பகுதியிலே சென்ற தான, கிளைக்கின்ற காலையுடைய கோழியானது, பழங்கொல்லை யின் மேற்புறத்தைக் கிளைத்தெழுப்பிய புழுதியானது, மிகப் பலவாகிய நல்ல பொன் துகள்போல ஒளி வீசுகின்ற மலைநாடன் நம் தலைவன்! அவனோடு அன்புமிகுந்த காமமே தலைக்கீடாக நாமும் தொடர்பு உடையவராயினோம். அங்ஙனம் ஏற்பட்ட நம் தொடர்ச்சியானது விரைவில் நீங்கும்படியாக, வேங்கை மரங்களும், புலிபோன்ற புள்ளியுள்ள பூக்களை ஈன்றன. அருவிகள் தேன்மணமிகுந்த நெடிய மலையிடத்தே நீலமணிபோலத் தோன்றுகின்றன. அன்னையும் அமர்ந்து நோக்கியவளாயினள். இல்லத்தார் மணவினைக்கு முயல் நேருமாதலால், நம் தொடர்பு எப்படித்தான் முடியுமோ?

கருத்து: 'விரைய வந்து தலைவன் வரைந்து கொள்ள வேண்டும்' என்பதாம்.

-

சொற்பொருள்: புலி - வேங்கை மலருக்கு உவமையாகு பெயர்; புள்ளிபெற்ற பூக்கள் என்பதனால் இவ்வாறு கூறினர். தேம்படு நெடுவரை - தேன் மிகுந்த நெடிய மலைத்தொடர் மணி - நீலமணி. அமர்ந்து நோக்கல் - ஒன்றை மனம் கருதித் தொடர்ந்து பார்த்தல். மா-விலங்கு. வழிப்படல் - துரத்திப் பின்செல்லல். முதை - பழங் கொல்லை.சுவல் - மேற்புறம். பூழி - புழுதி. அன்புறு காமம் - அன்புபொருந்திய காமவுறவு.

இறைச்சி: சேவலோடு சென்ற கோழியானது கிளைத்து எழுப்பிய புழுதிமண்ணும் பொன்போலத் தோன்றும் நாடன் என்றது, அவன்றான் வளமான குடியினன் ஆதலின், எமர் வேண்டும் வரைபொருளைத் தந்து விரைவிலேயே மணந்து கொண்டானில்லையே என்று வருந்திச் சொன்னதாம். 892

நற்றிணை தெளிவுரை

விளக்கம்: தந்தையும் பிறரும் விலங்குகளைத் தொடர்ந்து சென்றவர் விரையத் திரும்புதல் கூடுமாதலால், அவர் தலைவனைக் காணின் அவனுக்கும் தலைவிக்கும் ஊறு நேரும் என்று சுட்டிப் பகற்குறி மறுத்ததாகக் கொள்க. தினை கொய்யும் காலமும் வந்தது. வேங்கையும் மலர்ந்தது என்றது, மணவினைபற்றி இனித் தாயும் தமரும் விரைந்து ஏற்பாடு செய்தல் நேரும் என்று அறிவித்ததாம். ஆகவே, இற்செறிப்பு நிகழும் என்பது, தலைவன் வரையாது தாழ்த்தலால் தலைவிக்கு உண்டாகும் வேதனை தலைவனுக்குப் புலனாகும் என்பதும் இதனால் அறியப்படுவதாம். வேங்கைப் பூவைப் புலி யென்றது,அது தன் தாயின் உள்ளத்திலே மணவினை நினைவை உண்டாக்கி, தன்னையும் தலைவனையும் உறவாடாத நிலைக்கு இற்சிறை வைக்கத் தூண்டிய கொடுமைக்குக் காரணமாதலால் என்றும் கொள்க.

·

பயன் : தலைவன் வரைபொருளோடு சான்றோரை முன்னிட்டு வந்து மணம் வேட்டுத் தலைவியை முறைப்படி மணந்து கொள்வான் என்பதாம்.

(1)

390. தொலையுந பலவே!

பாடியவர்: ஔவையார். திணை : மருதம். துறை : பாங்காயின் வாயில் கேட்ப நெருங்கிச் சொல்லியது: (2) தலைமகள் தோழிக்கு உரைப்பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.

( (து - வி.) (1)- தலைவன் மனம் விழாக்களத்திலே ஆடும் மற்றொருத்திபாற் செல்லுமோ என்று அஞ்சுகின்றாள் அவன் காதலி; ஆகவே, தன்னைப் புனைந்துகொண்டு எழிலோடு வந்து அவனைத் தானே கைப்பற்றிச் செல்வதாக, அந்தப் புதிய. வளின் ஏவற்பெண்டுகள் கேட்குமாறு,வெகுண்டு கூறுவதாக அமைந்த செய்யுள் இது; (2) பரத்தையுறவு உடையான் தலைவன் என்று ஊடியிருந்த தலைவி, அவன் மீண்டும் அவளை நாடி வருவதை விரும்பியவளாக, அவன் ஏவலர் கேட்குமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவெனவும், கொள்ளலாம்.] நற்றிணை தெளிவுரை

வாளை வாளின் பிறழ, நாளும்

பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ; யாணர் ஊரன் காணுநன் ஆயின், வரையா மையோ அரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையும் நற்றோள் அளிய-தோழி!-தொலையுந பலவே.

393

5

10

தெளிவுரை: தோழீ! வாளை மீன்கள் பொய்கையிலே வாளைப் போல ஒளிவீசியபடியே பிறழும். நாள்தோறும் பொய்கையிலேயே உள்ளதான நீர்நாயோ

+

அதனைப் பாராட்டாது தங்கிய துயிலை ஏற்று உறங்கியபடி இருக்கும். கைவண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்துள்ள வயல்களிலேயுள்ள, வெள்ளை ஆம்பலின் அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக்கொண்டு, உடுத்துக்கொண்டு, யானும் விழாக்களத் திற்குச் சென்றுதான் ஆகவேண்டுமோ? அவ்வாறு யான் செல்ல, புதுவருவாய்களையுடைய ஊரன் என்னையும் காண் யான் ஆயின், என்னை வரைந்து கொள்ளாமற் போவதோ அப்போது அரிதாகுமே! அப்படி என்னையே அவன் வரை வானாயின், மலைபோலத் தோன்றும் யானைகளையும், வாய்மை யையும் கொண்ட முடியனது, மலையிடத்துள்ள மூங்கிலைப் போன்று விளங்கும் பிறமாதரின் நல்ல தோள்கள் பலவும், தம் அழகினை இழப்பனவாகுமே! அவைதாம் இரங்கத்தன!

கருத்து: 'யான் அவ்வாறு போகேன்' என்று தன் தகுதி தோன்றக் கூறியதாம்.

சொற்பொருள்: வாளை-வாளை மீன். வைகு துயில் தங்கும் துயில்: நெடுந்துயில். கைவண் கிள்ளி - கைவண்மை யுடைய கிள்ளிவளவன். உருவ - நிறமுள்ள; அழகிய. நெறி - நெறிப்பமைந்த. ஐது மெல்லிதாக. தைஇ -உடுத்து. வாய் - மொழி - சொன்ன சொல் பிறழாத வாய்மை. முடியன் - ஒரு மலைநாட்டுச் சிற்றூர்த் தலைவன். அளிய - இரங்கத் தக்கன.

D-85 394

நற்றிணை தெளிவுரை

உள்ளுறை : பொய்கையிலே வாளைமீன் பிறழவும், அதனைப் பற்றி உண்பதில் மனஞ் செலுத்தாது, பொய்கை நீர் நாய் துயிலேற்கும் என்றனள். விழாக் களத்திலே ஆடுகின்ற பரத்தையர் மகளிர் எத்துணைதான்

தலைவனை

மயக்கி, அவன் தம்மைக் கொள்ளுமாறு தூண்டினாலும், அவன்தான் அவர் செயலைப் பாராட்டாதே தன்னை நாடி வந்து சேர்வான் என்றதாம். அவர்தாம் தம் கருத்து நிறைவேறாமற் சோர்வார் என்பவள்' 'நற்றோள் அளிய தொலையுந பலவே என்றனள்.

விளக்கம்: 'செலீஇயர் வேண்டும் மன்னோ' என்பதைச் செல்ல வேண்டும், சென்றால் அவன் பிறர்பாற் செல்லான் எனவும் சொல்லலாம். 'செல்லவும் வேண்டுமோ' எனின். அவன் வாளை பிறழக் கவலையுறாது துயிலும் நீர்நாய் போல, அவர் எத்துணைதான் ஆடியாடித் தம் அழகைக் காட்டினும், அவர்பால் மனம்போக விடான் என்று கூறியதாகும்.

பயன் : இதனைக் கேட்கும் வாயிலோர் தலைவியின் சிறப்பை உணர்ந்து போற்றுவர் என்பதும், தலைவன் அதனை யுணர்ந்தானாய் அவள்பால் திரும்புவான் என்பதும் கொள்க.

391. அழுங்குவர் செலவே!

பாடியவர்: பாலைபாடிய பெருங் கடுங்கோ. திணை : பாலை. துறை : (1) பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; (2) வரைவு உணர்த்தியது

மாம்.

[(து-வி.) (1) தலைவன் பிரிந்து போவதாகச் சொல்லவும். கேட்ட தோழியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தோழி அவட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது; (2 தலைமகன் வரைவொடு வருதற்பொருட்டாகப் பொருள்தேடி விரைவில் வருவான் என்று கூறித் தோழி தலைவியைத் தெளிவிப்பதாக அமைந்த செய்யுள் இது.) ஆழல் மடந்தை! அழுங்குவர் செலவே - புலிப்பொறி யன்ன புள்ளியம் பொதும்பில் பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின்- மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும்

5 நற்றிணை தெளிவுரை

பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் யாரோ பிரிகிற் பவரே - குவளை

-

நீர்வார் நிகர்மலர் அன்னநின்

பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே!

395

10

பசுவானது,

தெளிவுரை : மடந்தையே! குவளையினது நீர்சோரும் ஒளிமிகுந்த மலரைப்போன்ற, நின்றனது பெரிதாக அமர்த் தலையுடைய குளிர்ந்த கண்களிலே, தெளிந்த கண்ணீர் நிறையும் படியாக, நீதான் அழாதேயிருப்பாயாக. புலியது புள்ளிகளைப் போன்ற, புள்ளிபுள்ளியாக நிழல் விளங்கும் சோலையிலே, குளிர்ச்சியான கொடியை மேய்ந்த, பெரிய கரிய கொம்பை யுடைய, பருத்த தலையமைந்த கருப்புப் தின்றொழித்த குளிர்ச்சியான தழையினை, ஒள்ளிய தொடி யணிந்த மகளிர்கள் கலன்களை யணிவதற்குப் பயன்படுத்து வதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள். அத்தகைய பொலிவு பொருந்திய கொண்கானத்து நன்னனின், நல்ல நாட்டிலுள்ள ஏழிற்குன்றத்தையே தாம் பெறுவதாக இருந்தாலும், பொருள் தேடிவருவதற்காக நின்னை யார்தான் பிரிந்து போவாரோ? நின் காதலராகிய அவர்தாம் பிரிந்து போகமாட்டார்; நின் கவலையையும் விட்டொழிப்பாயாக என்பதாம்.

கருத்து: 'அவர் பிரிவாரென நீ வருந்தாதிரு' என்பதாம்.

சொற்பொருள்: ஆழல்-அழாதே கொள். அழுங்குதல் - செலவு தவிர்ந்து தங்குதல். பொறி - புள்ளி. பொதும்பில் - சோலை. காரான் - காராம்பசு; எருமை எனவும் கொள்வர். அடை - இலை; தழை; 'தண்ணடை', மலைப்பச்சை எனவும் சொல்வர். மலர்தலை - பெரிதான தலை. இழையணிக் கூட்டும் - கலன்களை அணிதற்கென்று கூட்டும். ஏழில் குன்றம் - ஏழில் - மலை. தெண்பனி - தெளிவான கண்ணீர்; தெளிந்த நீர்போல வழிந்தோடும் கண்ணீர்.

உள்ளுறை : காரான் தின்றொழித்த மலைக்கொடிகளிலே எஞ்சியுள்ள தழைகளை, மகளிர் தாம் அழகுற அணிந்து கொள் வதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள் என்றனள். கொண்கான நாட்டின் வளமை இது. நீங்கள் சிறப்பாக இல்லறம் ஆற்றினாலும், எஞ்சிய பொருள் மற்றும் பலருக்கும் வழங்கப் பயன்படுவதும் உண்டு என்றதாம். 396

நற்றினை தெளிவுரை

விளக்கம்: இதனால், பொருள் தேடி வருவதற்காக அவன் அவளைத் தனித்திருக்கவிட்டுப் பிரிந்து போகவேண்டிய தில்லை; அவன் போகமாட்டான். அதனால் ஆற்றியிருப்பாயாக. என்று தேற்றியதாம். 'காரான் அகற்றிய தண்ணடை' என்றது அதுதான் செழித்துப் பலவிடங்களிலும் இருந்ததனால், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தின்று விட்டுப்போன தழை என்பதாம். இனி, கொடிகளை அது வேரொடும் அகற்றிய தனால் தோன்றும் பொன்துகள்களைப் பெண்கள் கலன் செய்யக் கூட்டுவர் என்பதுமாம்.

திணை பாலையானதால், வளமான பொதும்பில் புள்ளிநிழல் உடைத்தாய்த் திரிந்தது எனவும்; காரான் புல்லைக் காணாது அங்கங்கே தோன்றிய கொடிகளைப் பற்றித் தின்ன, அதனால் சிதறிய பொற்றுகளை மகளிர் சேர்ப்பர் எனவும் கொள்வதும் பொருந்தலாம். நன்னன் ஏழில் நெடுவரைப் பாழி (அகம். 152) சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி (அகம் 15) என்று பிறரும் நன்னனின் நாட்டைப் பற்றிக் கூறுவர்.

பயன் : இதனால், தலைவி பிரிவைப் பாராட்டாது ஆற்றி யிருப்பாள் என்பதாம்.

பாடபேதம் : நன்னன் ஆய்நாட்டு ஏழிற்குன்றம்.

392. நனி பேர் அன்பினர்!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார். திணை: நெய்தல். துறை: (1) இரவுக்குறி முகம் புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.

[(து - வி.) (1) பகற்குறி வாயாமற் போதலாலே, தலை வியைச் சந்திக்க முடியாமற் போன தலைவன், தோழியின் உதவி யோடு இரவுக்குறிச் சந்திப்பை விரும்புகின்றான். அவளும் அதற்கு இசைந்தாளாகித் தலைவி இருக்குமிடம் செல்கின்றாள். ஆயம் சூழ அமர்ந்திருந்த அவளிடம் சொல்லால் எதுவும் கூறமுடியாமல், முகக்குறியால், அவள் மட்டுமே அறிந்து கொள்ளுமாறு செய்தியைத் தெரிவிக்கின்றாள். அவள் கூற்றாக அமைந்த செய்யுள் இது; (2) வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த காலத்தில் வாராத வேதனையாலே வருந்தி யிருந்த தலைவியிடம் வந்து, அவன் வருவது உறுதி எனத் தேறு தல் உரைக்கிறாள் தோழி என்றும் கொள்ளலாம்.] நற்றிணை தெளிவுரை

கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை

புள்ளிமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென மனையழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர் துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் பணைகோள் வெம்முலை பாடுபெற்று உவக்கும் பெண்ணை வேலி உழைகண் சீறூர் நன்மனை அறியின் நன்றுமற் றில்ல செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த கானலோடு அழியுநர் போலாம் பால்நாள் முனிபடர் களையினும் களைப

நனிபேர் அன்பினர் காத லோரே!

+

397

5

10

தெளிவுரை: கொடுமையான சுறாமீனை எறிந்து கொன்று கைப்பற்றிய, கடுமையான முயற்சியையுடைய நம் தந்தை யானவன், கடற்பறவைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடலிலே தம்மையும் உடன்கொண்டு போகாமற் சென்றனனாக, அதனால் மனையிடத்தேயிருந்து அழுதழுது வருந்தினர், மெல்லிய தலையை யுடையவரான அவன் சிறுவர்கள். அவர்கள், விரைவாக முயற்சியோடு கிடைத்த இனிய கண்ணையுடைய நுங்கின், பணைத்தலைக் கொண்ட விருப்பம்வரும் கொங்கையின் பயனைப் பெற்று, அதனால், தம் மனம் உவப்படைந்தனர். பனைமரங்கள் வேலிபோல அமைந்த அகன்ற இடத்தையுடையஅச் சிற்றூரி லுள்ள நம்நல்ல மனையினை காதலரும் அறிந்தால் மிகவும் நன்றே அல்லவோ! இரவின் நடுயாமத்திலே நம்மை வருத்தும் துன்பத்தை அவர் போக்கினாலும் போக்குவர். நம்பால் மிகப் பெரிய அன்பையும் உடையவர். அவர்தாம். செம்மாப்புற்ற நெஞ்சத்தோடு. முன்பு தாம் வந்து நம்மையும் மகிழ்வித்துப் பிரிந்துபோன கானற் சோலையிடத்துக்கு வந்து நின்று. இப் போதும், நம்மை வரக்காணாதே நெஞ்சம் அழிகின்றனர் போலும்!

கருத்து: 'அவர்தாம் நம் மனையகத்துக்கு விருந்தாக வரின் நன்று' என்பதாம்

சொற்பொருள்: கடுஞ்சுறா - கடுமையினையுடைய சுறாமீன். எறிந்த - எறி உளியால் எறிந்து வேட்டமாடிய. கொடுந்தாள் கொடுமையான முயற்சி; கொடுமையாவது துடிக்கத் துடிக்கச் சுறாவைக் கொல்வது. புள் - கடற் புட்கள்; நீர்க் காக்கை 398

நற்றிணை தெளிவுரை

-

-

போல்வன. கொள்ளான் - உடன்கொண்டு செல்லானாய்.மனை வீட்டில். ஒழிந்த - ஓய்ந்து கிடந்த பாடுபெற்று - பயனைப் பெற்று; நுங்கை வாய்வைத்து உறிஞ்சிப் பருகி: பெண்ணை பனை. உழைகண் - அசன்ற இடத்தையுடைய. செம்மல் தலைமை; செம்மாப்பு. கானல் - கானற்சோலை; பகற்குறியிற் சந்தித்த இடம். பானாள் - நள்ளிரவு. முனி படர் - வருத்தும் துன்பம்.

இறைச்சி : தம் தந்தையோடு தாமும் செல்ல விரும்பியும், அவனால் நீத்து மனையிடத்தே விடப் பெற்றதனாலே அழுது வருந்திய சிறுவர்கள், பனையின் நுங்கை அருந்தி மகிழ்ச்சி அடைவர் என்றது. தலைவனோடு அவனை மணந்து மனைவி யாகி அவனில்லம் சேர்ந்து மனையறம் நடத்த விரும்பும் தலைவியானவள், அஃது வாயாமற் போயினும், தலைவியின் இல்லத்திற்கே விருந்தினன் போல் வந்து தங்கி, அவளை அவன் இன்புறுத்தினனாயின், அதனாற் சிறிது மகிழ்ச்சியேனும் அடைவள் என்பதாம்.

விளக்கம்: பனை நுங்கை வாய்வைத்துக் கண்ணிடத்தே உறிஞ்சிச் சிறுவர் குடித்து மகிழ்வதற்கு, 'பணைகொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும்' என்று உரைத்த உவமை மிகவும் சிறப்பானது. மார்பகத்துக்குப் பனை நுங்கை உவமிப்பது மரபு; அந்த உவமையை மாற்றியுள்ளது மிகவும் சிறந்த நயமாகும். முதல் துறைக்கு, நீ யுடன்படின் அவர் இரவு நேரத்தில் நம் மனைப்பாங்கில் வந்து நின் துயர்தணிப்பர் என்று குறிப்பால் உணர்த்தினதாகக் கொள்க. இரண்டாம் துறைக்கு அவன் வரைவொடு வந்தமை உணர்த்தியதாகக் கொள்க. தந்தை வேட்டம் போகியது உரைத்தது, இரவுக்குறி ஏதமின்றி இனிது வாய்ப்பதைக் குறிப்பால் உனர்த்தியதுமாகும்; 'நன்மனை அறியின் நன்று' என்றதால், அறியாது திகைக்காவாறு யானே சென்று அழைத்து வருவேன் எனத் தோழி சொன்னதாகவும் கருதலாம்.

வந்து

பயன் : விரைவிலே தலைவன் வரைவொடு தலைவியை மணந்து அவள் துயர் தீர்ப்பவனாவான் என்பதாம். பாடபேதம்: கடுஞ்சுறா எறிந்த கொடுங்கோள் தந்தை.

F நற்றிணை தெளிவுரை

393. புதுவர் ஆகிய வரவு!

399

பாடியவர்: கோவூர் கிழார். திணை : குறிஞ்சி. துறை: வரைவு மலிந்தது.

[(து-வி.) : தலைவன் வரைவொடு வருவதனை முற்படவே கண்டறிந்த தோழி, அந்தச் செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு தலைவியிடம் வந்து.சொல்லி, 'நம்மவர்கள் இசைவார்களோ!' என்று ஆராய்ந்து பேசுவதுபோல அமைந்த செய்யுள் இது.) நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப் பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி நிலைகிளர் மீனின் தோன்றும் நாடன் இரவின் வரூஉம் இடும்பை நாம்உய வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப நமர்கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் நேர்வர் கொல் வாழி - தோழி! நம் காதலர் புதுவர் ஆகிய வரவும், நின்

வதுவைநாண் ஒடுக்கமும் காணுங் காலே?

5

10

தெளிவுரை: தோழீ! வாழ்வாயாக! நெடியவான மூங்கில் கள் உயரமாகச் செறிந்துள்ள நிழல்மிகுந்த மலையிலே, தலைச் சூலினைக் கொண்டுள்ள இளையபிடியானது, கன்றை ஈன்று வாலாமையால் வருந்தியிருந்தது. பால்மடி சுரந்த பசுமையான அதன் வாலாமையானது தீரும்படியாக, மகிழ்ச்சி மிகுந்ததாய், வெண்மையல்லாத கரிய அதன் களிறானது, வளைந்த தினைக் கதிரைச் சென்று கவர்ந்தது. அதனைக் கண்ட கானவன் எறிந்த கடுமையான செலவையுடைய எரிகொள்ளியானது, மூங்கில்கள் நிரம்பிய மலையடுக்கம் விளங்கும்படி மின்னிச் சென்றதாக, வானத்தேயுள்ள தம் நிலையிலிருந்து பெயர்ந்து வீழும் எரிமீனைப் போலத் தோன்றும் அத்தகைய நாட்டிற்குரியவன் நம் காதலன்.

அவர்தாம். இரவுநேரத்திலே வந்து போதலாகிய நம் துன்பத்திலிருந்து மீண்டு நாம் பிழைப்பதைக் கருதியவராக 400

நற்றிணை தெளிவுரை

நம்மை வரைவதற்கு வந்தனர். அவருடைய வாய்மைக்கு ஏற்றபடியாக, நம்மவர்களும் நம்மை மணம் செய்து கொடுப் பதற்கு இசைந்தனர் என்றால், அவருடன் இசைவாகப் பேசுவார் களோ! நம் காதலரின் புதியவர் போல வருகின்ற வரவினையும், வதுவை. நாளிலே காணப்படும் நாணத்தால் ஒடுங்கிய நின் ஒடுக்கத்தையும் பார்க்கும்போது,யானும் மகிழ்வேனே என்பதாம்.

கருத்து: இனி மணம்பெற்று மகிழ்வாயாக' என்றதாம்.

சொற்பொருள்: நிவந்த -உயர்ந்து வளர்ந்துள்ள. நிழல்படு- நிழல்பட்டுக் கிடக்கும்; இருண்டடர்ந்த மரங்களையுடைய. கடுஞ்சூல் - தலைச்சூல். வயப்பிடி - இளைய பிடி; வலிய பிடியும் ஆம். உயங்க - வாடியிருப்ப. பசும்புனிறு - பசிய வாலாமை; ஈன்றதன் மிக அண்மை நாட்கள். களி - மகிழ்ச்சி. வாலா-கரிய; வெண்மையற்ற. ஞெகிழி - எரிகொள்ளி. நிலைகிளர் மீன் - விண்வீழ் கொள்ளி; நிலைகிளர் மின் என்று பாடம் கொண்டால் வானத்திருந்து இறங்கிப் பாயும் மின்னல் என்று கொள்க. வாய்மை - சொன்னசொற் பிழையாமை. நேர்வர்கொல் - இசைவார்களோ. வதுவை நாண் ஒடுக்கம் - வதுவை நாளில் மணப்பெண் தலைகவிழ்ந்து இருக்கும் வெட்கம் கவிந்த நிலை; வதுவை நாள் ஒடுக்கம், வதுவை நாண் ஒடுக்கம் என இரு வகையும் பொருள் கொண்டு மகிழலாம்.

உள்ளுறை : கன்றீன்ற பிடியின் பசியைப் போக்குவதற்குக் கருதித் தினைகவரவந்த யானையின்மீது கானவன் எறிந்த எரிகொள்ளி விண்வீழ் கொள்ளிபோலத் தோன்றும் என்றனள். இது நீ படும் பிரிவுத்துயரைத் தீர்க்கக் கருதித் தலைவனிடம் யான் இயற்பழித்துரைக்கக் கேட்டதும், அவன்றான் நின்னை வரைதற்கு வந்து நின் மனைமுற்றத்திலே குவித்துள்ள செல்வங் கள் சுடரொளி வீசாநின்றன என்றதாம்.

விளக்கம்: கானவன் வீசும் எரிகொள்ளிக்கும் அஞ்சாதே தன் கன்றீன்ற பிடியின் பசிகளையத் தினைக்கதிரைச் சென்று கொணரும் களிற்றைப் போன்று. தலைவனும். தலைவியின் துயர் களைதற் பொருட்டாக எந்த இன்னற்கும் அஞ்சாத கழிபெருங் காதலன்பு கொண்டவன் என்பதாம். தலைவியின் களவுறவையறிந்த தோழி சொல்லும், 'புதுவர் ஆகிய வரவும்; நின் வரைவு நாண் ஒடுக்கமும் காணும் காலே' என்பது மிகவும் இன்பந்தரும் கற்பனைச் சுவையும் நகைச்சுவையும் மிகுந்த பேச்சாகும். நற்றிணை தெளிவுரை

401

பயன் : தலைவி களிப்பிலே மிதப்பவளாவாள் என்பதாம். ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளத்தை நிறைக்க, நிகழ்வதை அறியத் துடிப்பள் என்பதுமாம்.

394: தண்ணியன் கொல்லோ!

பாடியவர்: ஒளவையார். திணை: முல்லை.துறை : (1) வினை முற்றி மறுத்தரா நின்ற தலைமகனை இடைச்சுரத்துக் கண்டார் கூறியது; (2) வன்சொல்லாற் குறை நயப்பித்த தோழி, தான் தனித்துக் கூறியதும் ஆம்.

[(து-வி.) : (1) வினை முடித்து மகிழ்வோடு வீடு திரும்பி வரும் தலைவனை, வழியிலே கண்டவர் வியந்து பாராட்டித் தம்முள் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது: (2) தலைவன் வந்து எவ்வளவு வேண்டியும் தலைவிக்கு அவன் குறையைச் சொல்லி இசைவித்துக் கூட்டுவதற்கு இசைய மறுத்த தோழி, அவனை விபந்து தன்னுள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் எனினும் ஆம்.)

.

மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து. அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கும் இழைகிளர் நெடுந்தேர் வன்பரல் முரம்பில் நேமி அதிரச்

சென்றிசின் வாழியோ, பனிக்கடு நாளே; இடைச்சுரத் தெழிலி உறைத்தென மார்பின் குறும்பொறிக் கொண்டே சாந்தமொடு நறுந்தண் ணியன்கொல் நோகோ யானே?

.G

தெளிவுரை : மரங்கள் மிகவும் நெருங்கி அடர்ந்துள்ள இடமகன்ற கானத்திடத்தே, வாடிப்போன ஞெமை மரத்திலே இருந்த பேராந்தையானது, பொன்வேலை செய்யும் கொல்லன் தட்டி எழுப்பும் ஒலிபோல இனிதாக ஒலித்துக்கொண்டிருக்க, பெய்துள்ள மணிகள் ஒலிக்கும் அணிபூட்டிய நெடிய தேரிலே வன்மையான பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே தேர்ச்சக்கரம் அதிரும்படியாக, முன்பனி கடுமையாகப் பெய்த நாளிலே வேற்றூர் நோக்கி

அவன்தான். இப்போது இடைச் சுரத்திடத்தேயே மேகங்கள் மழைபொழிந்ததென, மார்பினிடத்தே குறுகிய புள்ளிகளைக்

பொருட்டாகச் சென்றனன்.

. 402

நற்றிணை தெளிவுரை

கொண்ட சந்தனப் பூச்சோடு, நறிய குளிர்ச்சியமைந்தவனாயும்` மீண்டு வருகின்றன, இதற்கு யானும் நோவேனோ? மகிழவே செய்வேன். அவன் வாழ்வானாக என்பதாம்.

கருத்து: இனித் தலைவியின் வருத்தம் தீரும் என்பதாம்.

சொற்பொருள் : அலந்தலை - வாடிப்போன. குடிஞை- பேராந்தை. தெளிர்ப்ப - ஒலிப்ப. இழை -அணி. முரம்பு- மேட்டுநிலம். பனிக்கடுநாள் - முன்பனிக் காலமாகிய நாள். உறைத்தென - பெய்ததாக. தண்ணியன் - குளிர்ச்சியான பண்பினன்; தண்ணிய மலர்மாலை அணிந்தோனும் ஆம்.

விளக்கம்: அவன் பிரிந்து செல்லும்போது கானத்தி லிருந்த வெம்மையின் தன்மைபோலவே, அவன் உள்ளமும் துன்புற்றுக் கடுமையாகிக் கிடந்தது; இப்போது திரும்பி வரும் போது மழையிற் குளிர்ந்த கானம் போலவே தன் உள்ளமும் நம்பாலுள்ள காதல் நினைவால் குளிர்ச்சியாக உள்ளது என்பதாம். சாந்தம் குறும்பொறிக் கொண்டது மழைத்துளி வீழ்தலால் என்க.

பயன் : இனித் தலைவியின் வேதனை அகன்று, அவளும் மனம் குளிர்வாள் என்பதாம்,

இரண்டாவது துறை: குறிஞ்சித் திணையின்பாற் படும். இதற்கு முன்னர் என்னிடம் வந்து தன் குறைதீர்க்க வேண்டி இரந்து நின்று கையுறை தந்துவிட்டுச் சென்ற தலைவன், இன்று, இடைச்சுரத்தே மழை பெய்தாற்போலக் குளிர்ச்சி யோடு இன்று மீண்டும் வருகின்றானே! யான் நேற்று வன்சொற் கூறி அவனைப் போக்கினதற்கு நோவேனோ? இன்று அவன் தான் விரும்பியவாறு இன்புற்று மகிழ்வானாக என்று மகிழ்வேனோ? யாது செய்வேன்? என்று கூறியதாகக் கொள்க.

பயன் : தோழி, தானே தன்னுள்ளத்திற்குத் தலைவனின் காதலன்பைச் சொல்லி இவ்வாறு மகிழ்வாள் என்பதாம்.

395. நலம் தந்து சென்மே!

பாடியவர்: அம்மூவனார். திணை: நெய்தல். துறை: 'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு

கடாயது.

[(து - வி.) தலைமகன் வரைந்து வருவதற்குக் கருத் தின்றிக் காலம் தாழ்த்தானாக, களவு உறவையே விரும்பி வரக் நற்றிணை தெளிவுரை

403

கண்ட தோழிக்கு அவன்பால் ஆத்திரம் உண்டாகின்றது. அவள் அவனால் தாம் - நலனழிந்த கொடுமையைக் கூறிப் பழித்துப் பேசுவதன்மூலம், அவனை வரைந்து வருவதற்கு விரையுமாறு தூண்டுகின்றாள். அவள் பேச்சாக அமைந்த செய்யுள் இது.]

யாரை எலுவ? யாரே நீ எமக்கு

யாரையும் அல்லை; நொதும லாளனை! அளைத்தாற் கொண்கநம் மிடையே நினைப்பின் கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன

ஓங்கல் புணரி பாய்ந்தாடு மகளிர்

அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்ந்த

5

ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக்

கடல்கெழு மாந்தை அன்னஎம்

வேட்டனை அல்லையால், நலந்தந்து சென்மே!

10

தெளிவுரை : நண்பனே! நீதான் எமக்கு யாராகும் தன்மையை! நீதான் யாரிடத்து நட்பு உடையை! எண்ணிப் பார்த்தால்.நீதான் எமக்கு யாராகவும் தோன்றுவாயல்லை. அயலான் போலவே உள்ளனை. நம்மிடையே உள்ளதாம் உறவைப்பற்றி நினைத்தால், அதன் தன்மையானது அவ்வாறு தான் உள்ளது. கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரினை யும் உடையோனாகிய குட்டுவன், பகைவேந்தரை அடுகின்ற போர்க்களத்தினிடத்தே வெற்றி முரசமானது அதிர்ந்தாற் போல,ஒலியைக் கொண்ட அலைகள் உயர்ந்து

எழுந்து வருகின்ற கடலிலே, பாய்ந்து நீர்விளையாட்டு அயர்கின்ற பெண்கள் அணிந்திருந்த பலவான பூக்களும் வீழ்ந்து ஒன்றோடு ஒன்று கலந்துவர, அவற்றைத் தின்ற மூதாவானது, மீண்டும் தான் தங்கியுள்ள இடத்தினுட் புகாநின்ற, பெரும்புகழுடைய மாலைக் காலத்திலே விளங்கும், கடல் வளம் நிரம்பிய மாந்தை நகரைப் போன்ற எம்மையும் நீதான் விரும்பினாய் அல்லை; ஆதலின், நின்னாலே யாம் இழந்துவிட்ட எம் பழைய நலனை யாவது தந்துவிட்டு நின் போக்கிலே செல்வாயாக.

கருத்து: 'எம் நலனை நின்னால் இழந்து வாடினோம் என்பதாம்.

404

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள்: எலுவ - தோழ, நண்ப. நொதும லாளன் - அயலான். பகடு - போர்க்களிறு. குட்டுவன்- சேரருள் ஒருவன். வேந்தடு களம் - பகை வேந்தரைக் கொன் றழித்த போர்க்களம். முரசு - வெற்றி முரசு. புணரி - அலை. மரீஇ ஆர்ந்த - கலவையாகத் தின்ற. பேரிசை - பெரும்புகழ்; - பேராரவாரமும் ஆம். மாந்தை - மாந்தைப் பட்டினம்;

மரந்தை எனவும் வழங்கும்.

உள்ளுறை : கடலாடும் மகளிர் கூந்தலிலிருந்து கழிந்து கடலலையோடு கரையிலே ஒதுங்கிய பலவகையான பூக்களையும் முதிர்ந்த பசுவானது தின்னும் என்றனள்; இது நின்னால் நலனுண்டு கைவிடப்பெற்றுத் துயருற்றுற்றிருக்கும் தலைவியை ஏதிலார் வந்து மணம் பேசிக்கொள்வற்கு முற்படுவர் என்று குறிப்பாற் கூறியதாம்.

விளக்கம்: மகளிர் அலைகடலிலே பாய்ந்து பாய்ந்து கடலாடி மகிழும் ஆரவாரத்திற்கு, குட்டுவன் வேந்தடு மயக் கத்து முரசின் அதிர்வை ஒப்புமையாகக் கூறினது மிகவும் சிறப்பாகும். அலையலையாக வரும் எதிர்ப்பணிகளை மோதி வீழ்த்தி வெற்றிகொள்ளும் செயலும், அலைபாய்ந்து நீராடும் செயலும் போர்க்களத்தை நினைப்பிக்கும். முல்லையிலே காடு சென்று மேய்ந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலைக் காலம் என்பர்; அதுபோலவே இங்கே கடற்கரையிலே பூக்களைத் தின்றுவிட்டு பசு வீடு திரும்பும் மாலை என்று கூறினர். 'ஓங்கற் புணரி என்பதனை, கடற்கரையிலுள்ள உயர்ந்த பாறைகளிலே. மோதும் அலைகள் எனக்கொண்டு, அப்போது எழும் ஒலி போர் முரசின் ஒலிபோன்று இருக்கும் என்றும் சொல்லலாம். வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே' என்பது அவனைச் சுட்டெரிக்கும் சுடுசொற்கள்.. அவன் தன் குறையறிந்து விரைவில் மணம்பேசி வருதற்கு ஆவன செய்வான் என்பதாம்.

பயன் : தலைவன் மணம்பேசி வந்தானாகத், தமரும் இசைவு சொல்ல, அவர்கள் மணந்து, பிரியாத இல்லற இன்பத்திலே திளைப்பர் என்பதாம்.

பாடியவர்:

396. ஏமம் என்று அருளாய்!

திணை: குறிஞ்சி. துறை : (I) தோழி, தலைமகனை வரைவு கடாயது; (2) வரைவு உணர்த்தப் பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்; (3) இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம். நற்றிணை தெளிவுரை

405

[ (து - வி.) வரைந்துகொள்வதற்கு நினையாதே களவு வாழ்வினை விரும்பி வருபவனைத் தோழி நெருங்கிச் சென்று, வரைந்துகொள்ளல் வேண்டும் என்பதனைக் குறிப்பாக உணர்த் தியது இது; (2) வரைவுடன் வரும் நாள் உணர்த்தப்பட்டும் அதுவரை அவனைக் காணமுடியாதுபோவதை நினைந்து பெருகிய ஆற்றாமையால் சொல்லியதும் இதுவாகலாம்;(3) இரவுக்குறி வருவானை வாராதே என மறுத்துக் கூறுவதன்மூலம், வரைவு வேட்டலாகவும் கொள்ளலாம்.]

பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத் தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப வேங்கை தந்த வெற்பணி நன்னாள் பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன் நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பன்னாள் காமர் நனிசொல் சொல்லி

ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே!

தெளிவுரை: மழையைப் பெய்து கழித்த

5

10

பின்னே

செல்லும் மேகங்கள் தாம் தங்குவதற்கான மலையைச் சென்று சேர்ந்தன; தேன் கூடுகள் தொங்கும் உயர்ந்த வெற்பிடத் திருந்து வீழும் அருவிகள் ஆரவாரித்து வீழ்கின்றன; வேங்கை மலர்ந்ததனாலே வெற்பிடம் அழகுடன் விளங்கும் நல்ல நாட் காலையிலே, பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலே துழாவி மணம் கமழும் மகரந்தத்திலே அளைந்து, அதனாலே பொற்கவின் பெற்றது மயில்; அது பசுமை போர்த்த பாறையின் உச்சிமீதிலே தன் கூட்டத்தோடுங் கூடியதாக, ஞாயிற்றின் மிக்க கதிராகிய இளவெயிலைத் துய்த்தப்படி இருக்கும்; இத் தகைமைகொண்ட மலைநாடனே! நின் மார் பானது தாக்கியதனாலே நீங்குதற்கும் அரிதாகி எம்மைப் பற்றிக்கொண்டுள்ள இக் காமநோயினை, மனம் நொந்து யானும் யாரிடத்துத்தான் சொல்வேனோ? பலநாளும் இனிய சொற்களை மிகுதியாகச் சொல்லியதன்றி, மணவாழ்வே இவட்குக் காப்புடைத்தென்று அருளாதவன் ஆகி, நீதான் மயங்கியுள்ளனையே! இனி என்செய்வேம்? என்பதாம்.

கருத்து: 'நின் உறவாலே துன்புற்றனம் என்பதாம். 406

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள்: பெய்து போகு பெய்து போகு எழிலி எழிலி' - பெய்தபின் மேலும் போகும் மேகம்; பெய்துகொண்டே செல்லும் மேகமும் ஆம். வைகுமலை - தங்கும் மலை. தேன் தூங்கு - தேன்கூடுகள் தொங்கும். வேங்கை தந்த வெற்பணி - வேங்கை மலர்ந்து அளித்ததான மலையின் அழகு. பூஞ்சினை - பூவினைக் கொண்ட கிளை. துழைஇ - துழைந்தாடி. கவின்பெறு தோகை - அழகு பெற்ற மயில்; இது வேங்கையின் பூந்தாது படிதலாலே பெற்ற பசுமை புதிய கவின். பாசறை - பசுமையான பாறை; கணம் - கூட்டம். மேலுள்ள செடிகொடிகளால் வந்தது. உறுகதிர் - மிகுந்த கதிர். உண்ணும் - துய்க்கும். அணங்கிய தாக்கி வருத்திய. செல்லல் - துன்பம்; நீங்குதலும் ஆம் காமர் - விருப்பந்தரும். நனி சொல் - மிகுதியான சொற்கள்

L

விளக்கம்: தலைவியைக் களவிற் பெறுகின்ற காலத்து,

அவள்பால் அச்சம் தோன்ற, அதைத் தெளிவிக்கும் வகையால் 'நின்னிற் பிரியேன்; நின்னையே விரைவில் மணந்து வாழ்வேன்; பிரியின் உயிர் தரியேன்' என்றாற்போலச் சொல்லிய சொற்களை நினைப்பிப்பாள். 'காமர் நனி சொல் சொல்லி' என்றனள். அவை சொல்லளவாகவே பொய்ப்பட்டுக் கழிந்தன என்பாள், 'ஏமம் என்று அருளாய்' என்றனள். 'மயங்கினையே' என்றது செய்வோமோ வேண்டாமோ என எதுவும் துணியாது குழம்பி யிருந்த மனநிலையை.

மழை பெய்தலும், அருவி ஆர்த்தலும், மயில்கள் இளவெயில் நுகர்தலும், வேங்கை பூத்தலும் கூறியது, அதுதான் மணவினைக்கு உரிய காலம் என்பதை உணர்த்தி, அதனால் இனி வேற்றுவரைவும் பிற தொல்லைகளும் தம்மைச் சூழும் என்பதை நினைப்பித்ததுமாம்.

உள்ளுறை: மயிலானது வேங்கைத் தாதினை அளைந்து வந்து தன். கூட்டத்தோடு சேர்ந்து இளவெயில் துய்க்கும் என்றது, நீதானும் இவளோடு மணம் பெற்றனையாய், நின் னூர்க்குக் கொண்டு சென்று, நின் தமரோடும் கூடியிருந்து, மனையறம் பேணி மாண்படைவாய் என்பதாம்.

பயன் : இதனாலே மனம் தெளிபவன், வரைந்து மணங்கொண்டு இன்புறுதற்கு என்பதாம்.

விரைவிலே முற்படுவான்

பாடபேதம்: வேங்கை தந்த வெற்பணி நன்னாள். நற்றிணை தெளிவுரை

397. சாதல் அஞ்சேன்!

407

துறை :

பாடியவர்: அம்மூவனார். திணை : பாலை. பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறா நின்ற தோழிக்கு, ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.

[ (து - வி.) தலைமகன் பிரிந்து போயிருந்த காலத்திலே, அவன் பிரிவைத் தாங்கமாட்டாது வருந்திய தலைவியை, அவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடனென வலியுறுத்தித் தெளிவிக்க முயன்றாள் தோழி. அவளுக்குத் தலைவி, தான் ஆற்றியிருப்பதாகச் சொல்லும் முறையிலே அமைந்த செய்யுள் இதுவாகும்.)

தோளும் அழியும் நாளும் சென்றென நீளிடை அத்தம்நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தௌவின என்நீத்து அறிவு மயங்கிப் பிறிதா கின்றே நோயும் பெருகும் மாலையும் வந்தன்று யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவது ஆயின்

மறக்குவென் கொல், என் காதலன் எனவே!

5

தெளிவுரை : நம் தலைவர் வருவதாகக் குறித்துச் சென்ற நாளும் கழிந்தது. அதனாலே என் தோள்களும் நலன் அழிந்து போம். நீண்ட நெறியையுடைய சுரத்து வழியை நோக்கி நோக்கித் தம் ஒளியிழந்தவாய், என் கண்களும் பார்வை மங்கின. என்னைக் கைவிட்டு என் அறிவும் மயக்கமடைந்து வேறாகப் போயிற்று. காமநோயானது பெருகுகின்ற மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எவ்வாறுதான் ஆவேனோ? இவ்விடத்திலே, இதனாற் சாதல் வந்தடையும் என்பதற்கு யான் அஞ்சமாட்டேன். ஆனால், சாவின் பின்னர் வரும் பிறப்பானது வேறொன்றாக அமைவதாயின், என் காதலனை அப்பிறப்பிலே மறந்துவிடுவனோ என்றே யான் அஞ்சாநிற்பேன் என்பதாம்.

கருத்து; 'அவனன்றி எனக்கு வாழ்வில்லை' என்பதாம்.

சொற்பொருள்: வாள் அற்று - ஒளியிழந்து. தௌவின - பொலிவிழந்தன. பிறிது ஆகின்று - வேறாகின்றது; அஃதாவது 408

நற்றிணை தெளிவுரை

பித்தாகிப் போதல். ஈங்கோ - இவ்விடத்திலோ; என்றது இந்த உலகிலே இப்போது பெற்றுள்ள பிறப்பினைக் குறித்துக் கூறிய தாகும். பிறப்பு பிறிது ஆகுவது - பிறப்பு வேறொன்றாக நேர்வது; இது மக்கட் பிறப்பன்றி வேறு உயிர்வகைகளுட் சென்று பிறத்தலும்; மக்கட் பிறப்பாயினும் நெடுந்தொலைவு இடைப்பட்ட வேற்று நாடுகளிற் சென்று சென்று பிறத்தலும் போல்வன.

·

விளக்கம்: அவர் வரவில்லை, என் நலன்கள் அழிந்தன. நோய் பெருகுதற்குரியதான மாலைக்காலமும் வந்தது. இனி எவ்விதம் ஆற்றியிருப்பேனோ என்று துயருற்றதாம். சாதல் அஞ்சேன் என்றது, அதுதான் தனக்கு நேரப்போகின்றது என்ற வெறுப்பிடையிலே கூறியதாம். பின் பிறப்பில் இவன் காதலன் என்பதனை என் பிறப்புச் சார்ந்த அறியாமையால் மறப்பேனோ என்றே அஞ்சுவேன் என்றது, அவளது கற்புச் செவ்வியை உணர்த்தும். கண்கள் ஏக்கத்தாலும் நோக்கி நோக்கி உண்டாகும் சோர்வாலும் ஒளியிழந்துபோகும் என்பது இயல்பு.

'என் கண்ணே நோக்கி நோக்கி வாழ் இழந்தனவே' எனக் குறுந்தொகையுள்ளும் (44) வருவது காண்க. இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49) என அம்மூவனார் பிறிதோரிடத்தும் தமிழ் மகளிரின் கற்புளப் பாங்கினை எடுத்துச் சொல்வர்.

பயன் : தன் ஆற்றாமை தீரத் தலைவி மேலும் சில நாட்கள் பொறுத்து ஆற்றியிருப்பாளாவள் என்பதாம்.

பாடபேதம்: ஆசிரியர் பெயர் கழார்க்கீரன் எயிற்றியார் எனவும் சில ஏடுகளிற் காணப்படும்.

398. சொல்லாள் சிலவே!

துறை :

பாடியவர் : உலோச்சனார் . திணை : நெய்தல். முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, நீதான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.

[ (து - வி.) தலைவன் களவொழுக்கத்தினையே நாடி வருத லன்றி, முறையாக மணந்து கொள்வதிலே நாட்டமில்லாமல் இருப்பதறிந்து தோழி கலங்குகின்றாள். பகற்குறி நாடி நற்றிணை தெளிவுரை

409

வந்துள்ள அவனிடம், "நின் காதலி நின் களவிடைச் சிறு பிரிவையும் ஆற்றது வருந்தும் துயரமோ மிகப் பெரிது. அதனை; எம்மால் ஆற்றவியலாது. நீயே ஏற்பன கூறி ஆற்றுவித்துப் போவாயாக' என்று கூறுவதன் மூலம், விரைவிலே வரைந்து வந்து மணத்தலே சிறப்பு என்னும் நினைவினை அவனுக்கு ஏற்படச் செய்கின்றனள். இவ்வகையில் அமைந்த செய்யுள் இது.]

உருகெழு தெய்வமும் கரந்துறை யின்றே விரிகதிர் ஞாயிறும் குடக்குவாங் கும்மே நீரலைக் கலையிய கூழை வடியாச் சாஅய் அவ்வயிறு அலைப்ப உடனியைந்து ஓரை மகளிரும் ஊர் எய் தினரே பல்மலர் நறும்பொழில் பழிச்சி யாம்முன் "சென்மோ சேயிழை' என்றனம், அதனெதிர் சொல்லாள் மெல்லியல் சிலவே-நல்லகத்து

யாணர் இளமுலை நனைய

மாணெழில் மலர்க்கண் தெண்பனிக் கொளவே.

5

10

நின்

தெளிவுரை : அச்சம் பொருந்திய தெய்வமும் மறைந் திருக்காமல் நடமாடியபடியிருக்கும். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேலைத்திசைக்குச் சென்று மறையும். ஓரையாடிய மகளிரும், நீர் அலைத்தலாலே கலைந்துபோன கூந்தலைப் பிழிந்து நீரை வடித்தவராக, துவண்டு, அழகிய வயிறானது பசியாலே வறுத்த, ஒருசேரக் கூடியவராக ஊரைவந்து சேர்ந்தனர். பலவான மலர்களையுடைய நறும் சோலையிடத்தே, காதலியைப் பாராட்டிப் பேசியபடியே யாம் முன்னே செல்வோமா?' என்று கேட்டனம். அதற்கு எதிராக, மென்மைத் தன்மையினளான அவள்தான் சிலவான சொற்களேனும் உரைத்தாளில்லை. நல்ல மார்பினிடத்தே, புத்தெழில் பெற்றுள்ள இளைய கொங்கைகள் நனையும்படியாக மாட்சிமைகொண்ட எழிலோடுங்கூடிய குவளை மலர் போன்ற கண்கள் தெளிந்த கண்ணீரைக் கொள்ளக் கலங்கி நின்றனள். அவளை நீயே தேற்றிச் செல்வாயாக என்பதாம்.

கருத்து: அவள் நின் களவிடை இடையீடுபடும் பிரிவை யும் பொறுத்திராது புலம்பும் தன்மையள் ஆயினாள்

என்பதாம்.

5.-26 410

நற்றிணை தெளிவுரை

சொற்பொருள் : உரு கெழு - அச்சம் செய்யும். தெய்வம்- தெய்வங்கள்; இவை மாலை மயங்கும் வேளையிலே காட்டுச் சோலைகளிலே திரிந்தபடி இருக்கும் என்பது பழைய நம்பிக்கை. குடக்கு வாங்கல் - மேற்றிசையில் மறைந்து போதல். கூழை பெண்கள் தலைமயிர்; குட்டையான மயிரும் ஆம். வயிறு அலைப்ப - வயிறு பசியாலே வருத்தம் செய்ய; நேரமாயிற்றென்று வயிற்றில் அடித்தபடி எனலும் பொருந்தும். பழிச்சி - பாராட்டி; பொழில் பழிச்சி' பொழிலிடத்துத் தலைவியைப் பாராட்டி; பொழிலுறை தெய்வத்தைப் போற்றி எனினும் ஆம். யாணர் இளமுலை - பார்க்குந்தோறும் புதிதுபுதிதாக அழகுடைத் தாகத் தோன்றும் இளமுலை.

விளக்கம் : 'ஓரை மகளிர்' என்றது,ஓரையாடியிருந்த சிறுமியர் என்பதாம். இவர் மாலை மயங்கியதும், அன்னைமார் சினந்துகொள்வாரே எனத் தம் வயிற்றலடித்தபடி ஊர்நோக்கி ஒன்றுசேர்ந்து செல்வராயினர் என்றனள்; ஆகவே, யாம் ஊர் செல்லாதிருப்பின் அன்னையின் கோபத்துக்கு ஆளாக, அதனால் இற்செறித்தலும் பிறவும் நேரும் என்றனளும் ஆம். தலைவி. அழுதது, பிரிவைப் பொறாமையாலும், பிரியாது இன்புற்றிருக்கத் தலைவன் மணந்து கொள்ளற்கு முற்பட்டா னில்லையே என்ற ஏக்கத்தாலும் ஆம்.

பயன் : தலைமகளது ஆற்றாமை மிகுதியை உணர்பவன், அவளை மணந்து கொள்ளலிலே மனம் விரைபவனாவான் என்பதாம்.

399. நயந்தனன் வரூஉம்!

பாடியவர் : தொல்கபிலர். திணை: குறிஞ்சி. துறை : (1) நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலை மகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும் என்று, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது; (2) இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும் என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.

((து-வி.) களவொழுக்கத்திலே நெடுங்காலம் ஒழுகி வந்த தலைவனின் போக்கினைக் கண்டு, அதனால் வருந்தி நலிந்து மெலிந்த தலைவியைக் கண்டு மனங் கலங்கிய தோழி, அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, 'அவன் தக்கது செய்வான்' என்று

நற்றிணை தெளிவுரை

411

கூறித் தேற்றுவதுபோல, அவனும் கேட்டு வரைதற்கு விரையும் படியாகச் சொல்கின்றனள்; (2) இதற்கான நல்லது செய்யும் பெருமானாகிய நம் தலைவனின் ஆற்றலை விரும்புவோம்' என்று கூறிய தோழிக்குத் தலைமகள் சொன்னதாகவும் கொள்ளலாம்.] அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக் குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் வரியணி சிறகின் வண்டுண மலரும் வாழையம் சிலம்பிற் கேழல் கெண்டிய நிலவரை நிவந்த பலவுறு திருமணி ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி களிறு புறங்காப்பக் கன்றொடு வதியும் மாமலை நாடன் நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது

தருமோ - தோழி!-நின் திருநுதல் கவினே?

5

10

தெளிவுரை: தோழீ! அருவிகள் ஒலித்தபடியிருக்கும் பெரிய மூங்கில்கள் செறிந்த மலைச்சாரலிலே, செங்குருதியைப் போலத்தோன்றும் மணம் கமழ்கின்ற அழகிய செங்காந்தள். வரிகள் அழகுசெய்யும் சிறகினைக் கொண்டவான வண்டினம் தேனுண்ணும்படியாக மலர்ந்திருக்கும். வாழைமரங்களை மிகுதி யாகக் கொண்ட அத்தகைய சிலம்பினிடத்தே, பன்றிகள் பறித்த நிலத்துப் புறங்களிலே வெளியிற் போந்தவாய்க் கிடந்த பலவான அழகிய மணிகளின் ஒளிசுடர்கின்ற விளக்கொளியிலே கன்றை ஈன்றது இளைய பிடியானை ஒன்று. அதுதான். அதன் களிறானது அயலிலே நின்று காவல்காத்தபடியிருக்கத், தன் கன்றோடும் தங்கியிருக்கும். இத்தகைய பெரிய மலைநாடன் நம் தலைவன். நின் அழகான நெற்றியின் கவினானது, அவன், தானே விருப்பம் உடையவனாகித் தேடி வருகின்ற பெருமையினை உடையவள் நீ என்பதைத் தருவதாகும் அல்லவோ! ஆதலினாலே அவன், தானே விரைவில் நின் குறையைத் தீர்ப்பனாதலின் நீயும் வருந்த வேண்டாம் என்பதாம்.

கருத்து: நின் அழகு அவனைத் தானே வந்து மணக்குமாறு செய்யும் என்பதாம்.

சொற்பொருள்: குருதி - இரத்தம், வரியணி சிறகு வரிகள் அழகுற அமைந்திருக்கின்ற சிறகு. கேழல் - பன்றி. மடப்பிடி இளைய பிடியானை. புறங்காப்ப - புறத்தே காவலாகக் காத்து 412

நிற்க.

நற்றிணை தெளிவுரை

மாமலை- பெருமலை; கருமையான மலையும் ஆம். திருநுதல் - அழகான நுதல்; சிறப்பு மிகுந்த நெற்றியும் ஆம்.

உள்ளுறை : பன்றிகள் கிளைத்த மணிகளின் ஒளியிலே கன்றீன்ற பிடியானையானது, களிறு புறங்காப்பக் கன்றுடன் தங்கியிருக்கும் என்றது, நின்னை மலைநாடன் மணந்துகொண்டு இல்லறம் பேண, நீயும் புதல்வரையீன்று அவன் பாதுகாத்துப் பேண மகிழ்ச்சியோடு வாழ்பவளாவாய் என்பதாம்.

இறைச்சி : வண்டினம் வந்துண்டு மகிழுமாறு காந்தள் மலரும் என்றனள், இது அவன் வந்து இன்புற்று மகிழும் வண்ணம், நீதான் அவனை வெறுத்தொதுக்காதே அவனுடன் இசைந்து மனம் பொருந்தி இன்பந் தருவாயாக என்றதாம்.

விளக்கம்: காந்தள் மலர் வண்டுண்ண மலர்ந்து, வரும் வண்டினங்களைத் தேனளித்து மகிழ்விப்பது களவு வாழ்வின் போக்கிற்கும், கன்றீன்ற பிடியினைக் களிறு புறங்காத்து நிற்பது இல்லறக் கடமைச்செறிவுக்கும் எடுத்துக் காட்டுக்களாகும். இவற்றை அறிபவன், தன் கடமையை மறவான் என்பதும் ஆம். தலைவி கூற்றாகக் கொள்ளும்போது அதற்கேற்ப உரை கொள்ளல் வேண்டும்.

பயன் : இதனைக் கேட்பவன் விரைந்து வருதற்கு ஆவன விரைவிற் செய்வான் என்பதாம்.

பாடபேதம் : பாழியஞ் சிலம்பில்.

400. கெடுவறியாய் நீயே!

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். திணை : மருதம். துறை: பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்த வாறு எனின், 'நின்று இன்று அமையாம்' என்று சொன்னமை யால் என்பது.

[(து-வி.) பரத்தை தன்னைப் பிரிந்து போகும் தலைவ னிடம் அண்மி, 'நின்னை இன்றி எனக்கு வேறு என்ன நலன் இருக்கின்றது? ஆகவே நீ சென்றாலும், என்னை மறவாதே மீண்டும் வருவாயாக என்று புகழ்ந்துகூறி வழியனுப்புவதாக அமைந்த செய்யுள் இது.] நற்றிணை தெளிவுரை

413

வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி நேர்கண் செறுவின்

அரிவனம் இட்ட சூட்டயல் பெரிய

இருஞ்சுவல் வாளை பிறழும் ஊரே!

நின்னின்று அமைகுவென் ஆயின் இவண்நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்கெட அறியா தாங்கு சிறந்த கேண்மையொடு அளைஇ நீயே

கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே!

5

10

தெளிவுரை : வாழையின் மெல்லிய தாற்றின் நுனியிலே தொங்கும் பூவினை, அசையச் செய்கின்ற அளவுக்கு நெற்பயிர் ஓங்கி வளர்ந்திருக்கின்ற வயலிடத்தின், கண்ணுக்கு இனிதான சேற்றிலே, கதிரறுக்கும் உழவர்கள் அறுத்துப்போட்ட அரிச் சூட்டின் அயலிலே, பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறண்டபடி இருக்கும் வளமான ஊரனே! நின்னையின்றி யானும் இங்கே இருப்பேனாயின், இவ்விடத்திலே இருந்தும் இனிமை யன்றித் துயரமே விளைவிக்கும் நோக்கத்துடனே எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டென்று சொல்வாய்? மறம் பொருந்திய சோழர்களது உறையூரின் அவைக்களத்தே அறமானது கெடுதல் என்பதை அறியாதாய் நிலைபெறுமாறு போலச், சிறந்த நட்புரிமையோடு அளவளாவி என்னை இன்புறுத்திய நீதான் என் நெஞ்சத்தினின்றும் நீங்குதல் அறிய

மாட்டாய்காண்!

கருத்து: அதனாலே, 'விரைவிலே எனக்கும் வந்து அருள் செய்வாயாக' என்று வேண்டினளாம்.

சொற்பொருள்: தோடு - தாறு; வாளையின் இலையும் ஆம்; அப்போது வளைந்து தொங்கும் வாழை இலையின் நுனியை உயர்ந்து வளர்ந்த நெற்பயிர் மோதி மோதி அசைக்கும் என்று கொள்க. செறு - சேறு.இருஞ்சுவல் - கரிய பிடரிப்புறம். இன்னாநோக்கம் - துன்புறுவதான கருத்து; துன்புறுவது அவனைக் காணாமையால். 'அவை' என்றது. உறையூர் அறமன்றினை. அளைஇ - அளவளாவி மகிழ்ந்து. கெடு அறியாய்- நீங்கற்கு அறியாய்.

உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வயலிலே, மள்ளர்கள் அறுத்துப் 414

நற்றிணை தெளிவுரை

போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர். வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத் தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை; வாயிலர்கள் அவள் உறவை முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப் போன்றதாம். சூட்டயலிலே வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவனைக் கொண்டு செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம்.

விளக்கம்: : 'வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி' என்றது, நெல்லானது செழித்து வளர்ந் துள்ளபோது. வாளையின் மெல்லியவான தாற்றின் நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந் நெற்பயிர் காற்றால் அசையும்போது, அப் பூவையும் ஆட்டு விக்கும் என்றனர். இளமைச் செழுமைக் கவினாலே செருக் குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால் ஏவும்பொழுதெல்லாம் அவனை அதற்கேற்றபடி செய்வர் என்பதாம்.

ஆடச்

சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத் தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும் பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம்.அன்றித் தன்னோடு உறவாடி யிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை மீன்போல, தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க முயன்றனள் பரத்தை என்பதுமாம்.

பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாத வனாக மீண்டும் அவளை விரும்பி வருதலும் கூடும் என்பதாம். இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டு அடிகாறும் உயரப் பெற்றது;

இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

நற்றிணை நானூறு மூலமும் புலியூர்க் கேசிகன் தெளிவுரையும் முற்றுப்பெற்றன.