உள்ளடக்கத்துக்குச் செல்

நாடும் ஏடும்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை


தமிழ்நாட்டு மக்களிடையே ஒருவித விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசியலிலே, சமுதாயத் துறையிலே இன்ன பிறவற்றிலே அவர்களை ஏமாற்ற நினைப்பது இனிமேல் முடியாது என்ற அளவிற்கும் அது வளர்ந்து வீட்டது. தூங்கிக்கிடந்த மக்களை மனம் தாங்காது முனைந்து நின்று தனது சொற்பெருக்கால் தட்டி யெழுப்பிய பெருமை தளபதி சி. என். அண்ணாத்துரை எம். ஏ, அவர்களுக்கு உரியதென்பது புதிதாக நாம் சொல்வதல்ல. அனல் கொளுத்தும் அவரின் பேச்சுக்களை நூல் வடிவில் செய்து தருதல் தமிழருக்கு நாம் செய்யும் தொண்டு என்று கருதி "நாடும் ஏடும்” என்ற இந்நூலை மகிழ்ச்யுடன் வெளியிடுகின்றோம். எடுகளால் நமது நாடு அடைந்த தீமை, ஏட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள தொடர்பு, ஏடுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது ஆகியவற்றை மிக விரிவாகக் கூறுகின்றார் ஆசிரியர் அண்ணாத்துரையவர்கள். "பண்டிதர் முதல் பாமரர்" இறுதியாக அனைவர்க்கும் இந் நூல் மிகப் பயன்தரும் என்ற துணிவுடையோம்.


மே மாதம் 1945
சென்னை மாணவர் பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நாடும்_ஏடும்/பதிப்புரை&oldid=1644455" இலிருந்து மீள்விக்கப்பட்டது