உள்ளடக்கத்துக்குச் செல்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

குலசேகரப்‌ பெருமாள்‌ அருளிச்‌ செய்த பெருமாள்‌ திருமொழி

பெருமாள் திருமொழி

[தொகு]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம:

பெருமாள் திருமொழித் தனியன்கள்‌

[தொகு]

உடையவர்‌ அருளிச்‌ செய்தது

இன்னமுதம்‌ ஊட்டுகேன்‌ இங்கே வா பைங்‌கிளியே! * தென்னரங்கம்‌ பாட வல்ல சீர்ப்‌ பெருமாள்‌ * - பொன்னஞ்‌ சிலை சேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌ “ எங்கள்‌ குலசேகரன்‌ என்றே கூறு.

மணக்கால்‌ நம்பி அருளிச்‌ செய்தது

ஆரம்‌ கெடப்‌ பரன்‌ அன்பர்‌ கொள்ளார்‌ என்று அவர்களுக்கே * வாரங்கொடு குடப்‌ பாம்பிற்‌ கை இட்டவன்‌ * மாற்றலரை வீரங்கெடுத்த செங்கோல்‌ கொல்லி காவலன்‌ வில்லவர்‌ கோன்‌ * சேரன்‌ குலசேகரன்‌ முடி வேந்தர்‌ சிகாமணியே.

முதல்‌ திருமொழி - இருளிரியச்‌ சுடர்மணிகள்‌

[தொகு]

(திருவரங்கனைக்‌ கண்டு களிக்க ஆசைப்படுதல்‌)

இருள்‌ இரியச்‌ சுடர்‌ மணிகள்‌ இமைக்கும்‌ நெற்றி*
இனத்‌ துத்து அணி பணம்‌ ஆயிரங்கள்‌ ஆர்ந்த*
அரவரசப்‌ பெருஞ்சோதி அனந்தன்‌ என்னும்‌*
அணி விளங்கும்‌ உயர்‌ வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப்‌ பெருநகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி*
திரைக்‌ கையால்‌ அடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌*
கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டு*
என்‌ கண்ணிணைகள்‌ என்று கொலோ களிக்கு நாளே? (1) 647


வாயோர்‌ ஈரைஞ்ஞூறு துதங்கள்‌ ஆர்ந்த*
வளை உடம்பின்‌ அழல்‌ நாகம்‌ உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச்‌ சென்னி விதானமே போல்*
மேன்மேலும்‌ மிகவெங்கும்‌ பரந்ததன்‌ கீழ்‌*
காயாம்‌ பூமலர்ப்‌ பிறங்கல்‌ அன்ன மாலைக்‌*
கடி அரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌*
மாயோனை மணத்தாணே பற்றி நின்று*
என்‌ வாயார என்று கொலோ வாழ்த்து நாளே? (2) 648


எம்‌ மாண்பின்‌ அயன்‌ நான்கு நாவினாலும்‌ எடுத்தேத்தி*
ஈரிரண்டு முகமும்‌ கொண்டு*
எம்‌ மாடும்‌ எழிற்‌ கண்கள்‌ எட்டினோடும்‌ தொழுதேத்தி*
இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்‌*
அம்மான்‌ தன்‌ மலர்க்‌ கமலக்‌ கொப்பூழ்‌ தோன்ற*
அணி அரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்*
அம்மான்‌ தன்‌ அடியிணைக்‌ கீழ்‌ அலர்கள்‌ இட்டு*
அங்கு அடியவரோடென்று கொலோ அணுகு நாளே? (3) 649


மாவினை வாய்‌ பிளந்துகந்த மாலை*
வேலை வண்ணணை என்‌ கண்ணணை வன்‌ குன்றம்‌ ஏந்தி *
ஆவினை அன்றுய்யக்‌ கொண்ட ஆயர்‌ ஏற்றை *
அமரர்கள்‌ தன்‌ தலைவனை அந்தமிழின்‌ இன்பப்‌ பாவினை*
அவ்வடமொழியைப்‌ பற்றற்றார்கள்‌ *
பயில்‌ அரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ *
கோவினை நாவுற வழுத்தி என்தன்‌ கைகள்‌ *
கொய்ம்மலர்‌ தூய்‌ என்று கொலோ கூப்பு நாளே? (4) 650


இணை இல்லா இன்னிசை யாழ்‌ கெழுமி* இன்பத்‌
தும்புருவும்‌ நாரதனும்‌ இறைஞ்ச ஏத்த*
துணை இல்லாத்‌ தொன்மறை நால்‌ தோத்திரத்தால்‌*
தொன்மலர்க்கண்‌ அயன்‌ வணங்கு ஓவாதேத்த*
மணிமாட மாளிகைகள்‌ மல்கு செல்வ*
மதி‌ள் அரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌*
மணிவண்ணன்‌ அம்மானைக்‌ கண்டு கொண்டு* என்‌
மலர்ச்‌ சென்னி என்று கொலோ வணங்கு நாளே? (5) 651


அளி மலர்‌ மேல்‌ அயன்‌ அரன்‌ இந்திரனோடு* ஏனை
அமரர்கள்‌ தம்‌ குழுவும்‌ அரம்பையரும்‌ மற்றும்‌*
தெளி மதி சேர்‌ முனிவர்கள்‌ தம்‌ குழுவும்‌ முந்தித்‌*
திசை திசையில்‌ மலர்‌ தூவிச்‌ சென்று சேரும்‌*
களி மலர்‌ சேர்‌ பொழில்‌ அரங்கத்துரகம்‌ ஏறிக்‌*
கண்‌ வளரும்‌ கடல்‌ வண்ணர்‌ கமலக்‌ கண்ணும்‌
ஒளி மத சேர்‌ திருமுகமும்‌ கண்டு கொண்டு* என்‌
உள்ளம்‌ மிக என்று கொலோ உருகு நாளே? (6) 652


மறம்‌ திகழும்‌ மனம்‌ ஓழித்து வஞ்சமாற்றி*
வன்புலன்கள்‌ அடக்கி இடர்ப்‌ பாரத்‌ துன்பம்‌
துறந்து* இரு முப்பொழுதேத்தி எல்லை இல்லாத்‌
தொன்னெறிக்கண்‌* நிலை நின்ற தொண்டர்‌ ஆன*
அறம்‌ திகழும்‌ மனத்தவர்‌ தம்‌ கதியைப்‌ பொன்னி*
அணி அரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌*
நிறம்‌ திகழும்‌ மாயோனைக்‌ கண்டென்‌ கண்கள்‌*
நீர்‌ மல்க என்று கொலோ நிற்கு நாளே? (7) 653


கோல்‌ ஆர்ந்த நெடும்‌ சார்ங்கம்‌ கூனற்‌ சங்கம்‌*
கொலை ஆழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்‌*
கால்‌ ஆர்ந்த ௧திக்‌ கருடன்‌ என்னும்‌* வென்றிக்‌
கடும்‌ பறவை இவை அனைத்தும்‌ புறஞ்சூழ்‌ காப்ப*
சேல்‌ ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*
திருவரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌*
மாலோனைக்‌ கண்டின்பக்‌ கலவி எய்‌தி*
வல்வினையேன்‌ என்று கொலோ வாழு நாளே? (8) 654


தூராத மனக்‌ காதல்‌ தொண்டர்‌ தங்கள்‌
குழாம்‌ குழுமித்‌* திருப்புகழ்கள்‌ பலவும்‌ பாடி*
ஆராத மனக்‌ களிப்போடழுத கண்ணீர்‌
மழை சோர* நினைந்துருகி ஏத்தி** நாளும்‌
சீர்‌ ஆர்ந்த முழவோசை பரவை காட்டும்‌*
திருவரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌*
போர்‌ ஆழி அம்மானைக்‌ கண்டு துள்ளிப்‌*
பூதலத்தில்‌ என்று கொலோ புரளு நாளே? (9) 655


வன்பெரு வானகம்‌ உய்ய அமரர்‌ உய்ய
மண்ணுய்ய * மண்ணுலகில்‌ மனிசர்‌ உய்ய*
துன்ப மிகு துயர்‌ அகல அயர்வொன்றில்லாச்‌
சுகம்‌ வளர * அகமகிழும்‌ தொண்டர்‌ வாழ*
அன்பொடு தென்‌திசை நோக்கப்‌ பள்ளி கொள்ளும்‌“
அணி அரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்கள்‌*
இன்ப மிகு பெருங்குழுவு கண்டு* யானும்‌
இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே? (10) 656
திடர்‌ விளங்கு கரைப்‌ பொன்னி நடுவு பாட்டுத்‌ *
திருவரங்கத்தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ “
கடல்‌ விளங்கு கருமேனி அம்மான்‌ தன்னைக்‌ *
கண்ணாரக்‌ கண்டுகக்கும்‌ காதல்‌ தன்னால்‌ *
குடை விளங்கு விறல்‌ தானைக்‌ கொற்ற ஒள்வாள்‌ *
கூடலர்‌ கோன்‌ கொடைக்‌ குலசேகரன்‌ சொற்‌ செய்த *
நடை விளங்கு தமிழ்‌ மாலை பத்தும்‌ வல்லார்‌ *
நலம்‌ திகழ்‌ நாரணன்‌ அடிக்‌ கிழ் நண்ணுவாரே (11) 657

இரண்டாம் திருமொழி - தெட்டறும் திறல்

[தொகு]

(அரங்கன் மெய்யடியாரது அடிமைத் திறத்தில் ஈடுபடுதல்)

:தேட்டரும்திறல் தேனினைத் தென்னரங்கனைத் *திருமாதுவாழ்

வாட்டமில்வன மாலை மார்வனை வாழ்த்திமால் கொள்சிந்தையராய்*
ஆட்டமேவி யலந்த ழைத்தயர் வெய்தும் மெய்யடி யார்கள்தம்*
ஈட்டம் கண்டிடக் கூடு மேலது காணும் கண்பய னாவதே (1) 658


தோடுலாமலர் மங்கைதோளிணை தேய்ந்ததும் *சுடர்வாளியால்
நீடுமாமரம் செற்றதும் நிரை மேய்த்தும் இவையே நினைந்து*
ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும் தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில்* கங்கைநீர்குடைந் தாடும்வேட்கை யென்னாவதே? (2) 659


ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன் இராமனாய்*
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி* வண்பொன்னிப்பேர்
ஆறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம்*
சேறுசெய் தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே (3) 660


தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சிகண்டு*
ஆர்த்ததோளுடை யெம்பிரான் என்னரங்கனுக் கடியார்களாய்*
நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்து மெய்தழும் பத்தொழு
தேத்தி* இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே (4) 661


பொய்சிலைக்குர லேற்றெருத்த மிறுத்துபோரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித் திண்ண மாமதிள் தென்ன ரங்கனாம்*
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்து என்மனம்மெய் சிலிர்க்குமே (5) 662


ஆதி யந்தம னந்த மற்புதம் ஆனவானவர் தம்பிரான்*
பாத மாமலர் சூடும் பத்தி யிலாத பாவிகள் உய்ந்திட*
தீதில் நன்னெறி காட்டி யெங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே*
காதல்செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே (6) 663


காரினம்புரை மேனிநல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய்*
ஆரமார்வன் அரங்க னென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை*
சேரும் நெஞ்சின ராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கொரு வார மாகுமென் னெஞ்சமே (7) 664


மாலை யுற்ற கடல்கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய்*
மாலை யுற்ற வரைப்பெருந் திருமார்வனை மலர்க்கண்ணனை*
மாலை ற்றெழுந் தாடிப்பாடித் திரிந்து அரங்கனெம் மானுக்கே*
மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே (8) 665


மொய்த்துக் கண்பனி சோரமெய்கள் சிலிர்ப்பஏங்கி யிளைத்துநின்று*
எய்த்துக்கும்பிடு நட்டமிட் டெழுந் தாடிப்பாடி யிறைஞ்சி*என்
அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி* அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே (9) 666


அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடி யார்கள்தம்*
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்*
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்*
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே (10) 667

மூன்றாம் திருமொழி - மெய்யில் வாழ்க்கையை

[தொகு]

(ஆழ்வார் அரங்கனுக்கு அடியாராய் உலகத்தாரோடு தாம் சேராமை)

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்*இவ்
வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்*
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டாழிந்தேன் என்தன் மாலுக்கே (1) 668


நூலி னேரிடை யார்திறத்தே நிற்கும்*
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்*
ஆலியா! அழையா! அரங்கா! வென்று*
மாலெ ழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே (2) 669


மார னார்வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்*
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே (3) 670


உண்டியே உடையே உகந்தோடும்*இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்*
அண்ட வாணன் அரங்கன்* வன்பேய்முலை
உண்ட வாயன்தன் உன்ம த்தன் காண்மினே (4) 671


தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்*
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்*
ஆதி ஆயன் அரங்கன்* அந்தாமரைப்
பேதை மாமண வாளன்தன் பித்தனே (5) 672


எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே (6) 673


எத்தி றத்திலும் யாரொடும் கூடும்*அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
பித்த னாயொழிந்தேன் எம்பி ரானுக்கே (7) 674
பேய ரேயெனக் கியாவரும்* யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்!*
ஆயனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
பேய னாயொழிந் தேன் எம்பி ரானுக்கே (8) 675


அங்கை யாழி யரங்க னடியிணை*
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்*
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்*
இங்கு வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே (9) 676

நான்காம் திருமொழி - ஊனேறு

[தொகு]

(திருவேங்கடமுடையான்)

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (1) 677


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே (2) 678


பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்*
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே (3) 679


ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே (4) 680


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே (5) 681


மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே (6) 682


வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே (7) 683


பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே (8) 684


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (9) 685
உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்*
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே (10) 686


மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (11) 687

ஐந்தாம் திருமொழி - தருதுயர்

[தொகு]
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (1) 688


கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே (2) 689


மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே (3) 690


வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே (4) 691


வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (5) 692


செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே (6) 693


எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே (7) 694


தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (8) 695


நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே (9) 696


விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (10) 697

ஆறாம் திருமொழி - ஏர்மலர்

[தொகு]

மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே

உன்தன்பொய்யைக்கேட்டு

கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்

கூசிநடுங்கியமுனையாற்றில்

வார்மணற்குன்றில்புலரநின்றேன்

வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (1) 698


கெண்டையொண்கண்மடவாளொருத்தி

கீழையகத்துத்தயிர்கடையக்

கண்டு ஒல்லைநானும்கடைவனென்று

கள்ளவிழியைவிழித்துப்புக்கு

வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ

வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப

தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்

தாமோதரா! மெய்யறிவன்நானே. (2) 699


கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்

கடைக்கணித்து ஆங்கேயொருத்திதன்பால்

மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து

ஒருபேதைக்குப்பொய்குறித்து

புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்

புணர்திஅவளுக்கும்மெய்யனல்லை

மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே

வளர்கின்றதாலுன்றன்மாயைதானே. (3) 700


தாய்முலைப்பாலிலமுதிருக்கத்

தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று

பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு

பித்தனென்றேபிறரேசநின்றாய்

ஆய்மிகுகாதலோடுயானிருப்ப

யான்விடவந்தஎன்தூதியோடே

நீமிகுபோகத்தைநன்குகந்தாய்

அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே. (4) 701

மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு

வீங்கிருள்வாயென்றன்வீதியூடே

பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்

போகின்றபோதுநான்கண்டுநின்றேன்

கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்

கைவிளிக்கின்றதும்கண்டேநின்றேன்

என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?

இன்னமங்கேநடநம்பி! நீயே. (5) 702


மற்பொருதோளுடைவாசுதேவா!

வல்வினையேன்துயில்கொண்டவாறே

இற்றையிரவிடையேமத்தென்னை

இன்னணைமேலிட்டகன்றுநீபோய்

அற்றையிரவுமோர்பிற்றைநாளும்

அரிவையரோடும்அணைந்துவந்தாய்

எற்றுக்குநீயென்மருங்கில்வந்தாய் ?

எம்பெருமான்! நீயெழுந்தருளே. (6) 703

பையரவின்னணைப்பள்ளியினாய்!

பண்டையோமல்லோம்நாம் நீயுகக்கும்

மையரியொண்கண்ணினாருமல்லோம்

வைகியெம்சேரிவரவொழிநீ

செய்யவுடையும்திருமுகமும்

செங்கனிவாயும்குழலும்கண்டு

பொய்யொருநாள்பட்டதேயமையும்

புள்ளுவம்பேசாதேபோகுநம்பீ! (7) 704

என்னைவருகவெனக்குறித்திட்டு

இனமலர்முல்லையின்பந்தர்நீழல்

மன்னியவளைப்புணரப்புக்கு

மற்றென்னைக்கண்டுழறாநெகிழ்ந்தாய்

பொன்னிறவாடையைக்கையில்தாங்கிப்

பொய்யச்சங்காட்டிநீபோதியேலும்

இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல் என்சினம்தீர்வன்நானே. (8) 705

மங்கலநல்வனமாலைமார்விலிலங்க மயில்தழைப்பீலிசூடி பொங்கிளவாடையரையில்சாத்திப் பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து கொங்குநறுங்குழலார்களோடு குழைந்துகுழலினிதூதிவந்தாய் எங்களுக்கேயொருநாள்வந்தூத உன்குழலின்னிசைபோதராதே. (9) 706


அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை நயந்திளவாய்ச்சிமார்கள் எல்லிப்பொழுதினிலேமத்தூடி எள்கியுரைத்தவுரையதனை கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான் குலசேகரனின்னிசையில்மேவி சொல்லியவின்தமிழ்மாலைபத்தும் சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (10) 707