உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/பிற்குறிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

பிற்குறிப்புகள்

நூறாசிரியத்தின் மூலப் பாடல்கள் எழுதப்பெற்றிருந்த சுவடியில் இந்நூல் தொடர்பாகவும் பிறவாறும் எழுதி வைத்திருந்த குறிப்புகள் பல. அவை இங்கே தரப் பெறுகின்றன.

★ நூறாவது பாடலாக எழுதப்பெற்றிருந்த ஒன்றிறை என்னும் பாடலை முதற்பாடலாக எடுத்துக் கொண்டு 'உயிரின் மாட்டே' எனத் தொடங்கும் தொண்ணுற்றொன்பதாம் பாடலை யொட்டி

“நூறாவது பாட்டாகக் கொள்க!”

என்று குறிக்கப் பெற்றிருப்பதோடு

“ஆங்கவ னருள லிங்கிவ ணிற்றது”

என்னுங் குறிப்பும் காணப்பெறுகின்றது.

பிற குறிப்புகளாவன.

“உயிரின் மாட்டே உடலின் இயக்கம் -உயிரே
நீருண் கனலா நிகழ்விலாப் பதுவாய்,
உளமும் அறிவுப் உறுத்த வுறுவதுவே
உளமே அறிவே உவராய் நீராய்”

★ “கதிரவன் சூட்டை உடலுட் புகுத்துவதும் சுவற்றுவதும் செய்தல் போல்”

‘நெடுந்தொலைமே’ இப்பாடலையும் நூறாசிரியத்துட் சேர்க்க!

தெ.மொ.இயல்! பொங்கல் மலர்

★ “காமரா சென்னுங் கடமை மாமலை” - இப்பாடலையுஞ் சேர்க்க.

★ “எண்ணலொன்று நாவால்
 எடுத்துரைத்தல் மற்றொன்று
பண்ணலொன்று சாரும்
 பயனொன்று -மண்ணுலகின்
மாந்த வினத்தின்
 மதி நலத்தை என்னென்போம்
காந்து மனமறிமோ
 கண்?”

“பல உயிர்களின் ஓடம் இவன்!
உடல்களின் ஓடம் போலும்
உயிர்களின் ஓடம் இவன்!”

◯ .....
உயர்செந் தமிழ்க்கே உறநின் றாரை
வெய்வேட் டெஃகம் விதிர்ப்பறத் தாங்கிக்
கொய்துயிர் துணித்தது கொலையோன் கோலே!
புன்றலைச் சிறாஅர் செந்நீர் ஆடியோன்
முந்நிற நெடுங்கொடி முன்றிலும் சிதைக!
அன்னோன் தாங்கிய அரசுஞ் சிதைக!
முற்றா இளவுயிர் தமிழ்க்கெனப் போக்கி
வற்றா நெடும்புகழ் வழிவழிக் கொண்ட
இளையோர் காத்த எந்தமிழ்
கிளையுறப் பொலிக குலைவிலா தினியே!

(நூறாசிரியம் 51)

◯ .....
குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்
கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே
யாரும் யாவும் யாண்டுந் துய்மெனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரியா ராகலி னவரே
பெரியா ரென்னும் பெயரி யோரே!

(நூறாசிரியம் 24)

◯ .....
யாண்டவ னாயினும் மாண்டுப் பீடொடு
வேண்டுவ சுரக்கும் வியன்றமிழ்க் கல்வி
துறையறப் போகித் துணிந்து குறையற . . .
குணங்குயர் காட்சி வணங்குறு வாழ்வின்
சான்றோர்க் கினித்த சொல்லி னானை
ஈன்றோர் தவிர்க்கினும் வேண்டுமென் நெஞ்சே!

(நூறாசிரியம் 71)


தென்மொழி நூல் வெளியீட்டு விற்பனையகம்,
5, அருணாசலத் தெரு, சென்னை - 600 005.