நூலக ஆட்சி/வரவு செலவுத் திட்டம்
Appearance
நடப்பு ஆண்டினிறுதியில் வருகிற ஆண்டிற்குரிய செலவுத் திட்டத்தை (Budget) வகுத்தல் எல்லா அலுவலகங்களிலும் நடைமுறையிலுள்ள தொன்றாகும். வரவிற்கேற்றபடி செலவுத் திட்டத்தினை முதலிலேயே வகுத்துக் கொண்டால்தான் செலவினைச் செம்மையாகச் செய்தல் முடியும்.
ஒவ்வொரு ஆண்டிற்கும் வழங்கப்படும் பொருளினைப் பின்வரும் விகிதத்தில் பகிர்ந்து, பின்னர் செலவுத் திட்டத்தினை வகுத்தல் சாலச் சிறந்ததாகும்.
- வழங்கப்பட்ட பொருள்: 100
செலவு :
- 1. அலுவலர்கள் ஊதியம் : 40%
- 2. நூல்கள், பருவவெளியீடுகள் வாங்குவதற்கு : 50%
- 3. பிறசெலவினங்கள் : 10%
இவ்வடிப்படையில் எடுத்துக்காட்டாக பெரிய நூலகத்திற்குரிய வரவு செலவுத் திட்டமொன்று அடுத்த பக்கத்தில் தரப்பட்டிருக்கின்றது. அந்நூலகத்திற்கு வழங்கப்பட்ட பொருள் ரூ. 80,000 ஆகும்.
வரவு | விவரங்கள் | எண்ணிக்கை | சம்ப |
---|---|---|---|
அளிக்கப்பட்ட பொருள்: ரூ. 80,000 | 1. அலுவலர்களது சம்பளம்: | ||
1. நூலகத்துறைத் தலைவர் | 1 | 250-2 | |
2. துணை நூலகத் தலைவர் | 1 | 200-1 | |
3. மேல்பிரிவு எழுத்தாளர் | 2 | 70-7½- | |
4. கீழ்ப்பிரிவு எழுத்தாளர் | 8 | 50-4- | |
5. உதவியாளர் | 1 | 30-2- | |
6. வேலையாட்கள் | 8 | 25-1- | |
7. துப்புரவு செய்வார் | 2 | 16-½- | |
8. ஓய்வுக் கால உதவித் தொகை | |||
2. சேமவைப்பின் நன்கொடை : | |||
3. நூல்கள் பருவவெளியீடுகள் : | |||
4. பிறசெலவுகள்: | |||
1. தபால் செலவு | |||
2. பணியாளர்க்குரிய ஆடை முதலியன | |||
3. தட்டுமுட்டுச் சாமான்கள் | |||
4. இன்யூரன்சு (Insurance) | |||
5. வரி | |||
6. நூல்களை ஆண்டிறுதியில் சரிபார்ப்பவருக்குரிய ஊதியம் | |||
7. பிறசெலவினங்கள் | |||
மொத்தம் 1, 80,000 |