நூலக ஆட்சி/நூலக ஆண்டறிக்கை
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஆண்டறிக்கை (Annual Report) தயாரித்தல் வேண்டும். ஆண்டறிக்கையானது அந்தந்த ஆண்டு நூலகத்தைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தருவதாகும். ஆண்டறிக்கை தயாரிப்பதற்குப் பின்வரும் புள்ளி விவரங்கள் (Statistics) இன்றியமையாதன ஆகும்.
1. வரிசைப் பதிவு செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை (Books accessioned) :
- 1. புதிதாக விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள்
- 2. நன்கொடையாகக் கிடைத்த நூல்கள்
- 3. நூல் பரிமாற்றத்தின் மூலம் (exchange) வந்த நூல்கள்
2. வகைப்படுத்திய நூல்களின் எண்ணிக்கை - (Books classified) :
- 1. மத்திய நூலகத்தில் (Central Library)
- 2. பல துறை நூலகங்களில் (DepartmentalLibraries)
3. நூல் பட்டியல் தொகை எழுதப்பட்ட அட்டைகளின் (Catalogue cards) எண்ணிக்கை :
- 1. முதல் அட்டைகள் (Main Cards)
- 2. துணை அட்டைகள் (added entries) 4. நூலக உறுப்பினர்களுக்குப் படிப்பதற்குக் கொடுத்துதவிய நூல்களின் எண்ணிக்கை (No. of books issued) :
- 1. பொருள் வாரியாக
- 2. மொழி வாரியாக
5. காலம் நீட்டிக்கப்பட்ட நூல்களின் (Books renewed) எண்ணிக்கை :
6. பார்வையாளர் எண்ணிக்கை (No. of visitors) :
7. மேற்கோளுக்காக ஆண்ட நூல்களின் (Books consulted) எண்ணிக்கை :
இப் புள்ளி விவரங்களை நூலக அலுவலகத்தார் அன்றாடம் பின்வரும் நூலக நாட்குறிப்புக்களில் (Diaries) எழுதி வந்தால்தான் ஆண்டினிறுதியில் ஆண்டறிக்கை தயாரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
1. நூல்களை வரிசைப் பதிவு செய்பவரது நாட் குறிப்பு
இதில் புதிதாக விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள், நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்கள், நூல் பரிமாற்றம் மூலம் வந்த நூல்கள் இவைகளின் எண்ணிக்கை தனித்தனியாகவும் மொத்தமாகவும் குறிக்கப்பெறுதல் வேண்டும்.
2. நூல்களை வகைப்படுத்தல் நாட்குறிப்பு (classification Diary)
இந் நாட்குறிப்பில் வகைப் படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எழுதப்படல் வேண்டும். ஒவ்வொரு பொருள் வாரியாக எண்ணிக்கை தருதல் மிக்க நலம் விளைவிப்பதாகும். 3. நூல் பட்டியல் தொகை நாட்குறிப்பு (cataloguing Diary)
இதில் நூல் பட்டியல் தொகை எழுதப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையினைக் குறிக்க வேண்டும்.
4. நூல் வழங்கும் பகுதி நாட்குறிப்பு (Counter Diary)
முன்னர்க் கூறப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களில் 4, 5, 6, 7 பிரிவுகளைச் சார்ந்த புள்ளி விவரங்கள் இந்நாட் குறிப்பில் குறிக்கப்பெறுதல் வேண்டும்.
அடுத்து நூலக ஆண்டறிக்கை எவ்வாறு தயாரிக்கப் பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதற் பொருட்டு, சான்றுக்காக ஆண்டறிக்கையொன்று அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
மதுரை.
நூலக ஆண்டறிக்கை,
அ. திருமலைமுத்துசுவாமி M.A., B.T., Dip. lib. Sc.
துணை நூலகத் தலைவர் :
ஆ. சிவகாமி B.A., Dip. Lib. Sc.
செய்தி விளக்கமளிக்கும் நூலகத்தார் :
1. அலுவலர் (Staff) :
1. மேற்பார்வையாளர் (Superintendent) 1
2. மேல் பிரிவு எழுத்தாளர் (U.D,C.) 2
3. கீழ்ப் பிரிவு எழுத்தாளர் (L,D.C.) 8
4. உதவியாளர்கள் (Assistants) 8
5. பணியாட்கள் முதலியவர்கள் 13
புதிய பதவி நியமனம்
சூன் மாத முதல் மேற்பார்வையாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. மேல் பிரிவு எழுத்தாளர்களில் அநுபவம் மிக்கவரும் நூலகப் பயிற்சி பெற்றவருமாகிய திரு வி.சந்தானம் என்பவர் இப் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 2. நூலகம் மூடப்பட்ட நாட்கள் :
3. நூலகத்தைப் பார்வையிட்ட பெருமக்கள் :
- 1. உயர்திரு காமராசர், சென்னை மாநில முதலமைச்சர்.
- 2. உயர்திரு ஏ. லட்சுமணசுவாமி முதலியார், துணை வேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
- 3. உயர்திரு நெ. து. சுந்தரவடிவேலு, மாநில நூலகத்துறைத் தலைவர், சென்னை.
- 4. நூலகப் பேரறிஞர், டாக்டர் ஆர். ரெங்கநாதன் சென்னை.
4. நூலகத்திற்கு வந்த சுவரொட்டிகள் (Posters) முதலியன :
5. செய்தி விளக்கம் - தரும் பகுதி (Reference Section):
மேற்கோளுக்குரிய நூல்களின் பட்டியல் வழக்கம் போல் தயாரிக்கப்பட்டு நூலக உறுப்பினர்களுக்கும், விரும்பியவர்களுக்கும் வழங்கப்பட்டது.
6. நூல்கள் வழங்கும் பகுதி (Lending Dept.) :
- 1. நூலக உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை:
- 2. அந்த ஆண்டில் மாத்திரம் உறுப்பினர் ஆனவர்களின் தொகை :
- 3. வெளியூர் உறுப்பினர்கள் எண்ணிக்கை :
- 4. மேற்கோளுக்காக மக்களால் பயன் படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை :
- 5. உறுப்பினர்கள் எடுத்துச் சென்று படித்த நூல்களின் எண்ணிக்கை :
- 6. நூலகத்தை அவ்வாண்டில் பயன்படுத்திய மக்கள் தொகை :
7. நூலக வேலை நேரம் :
தவிர்க்க முடியாத சில நாட்கள் தவிர ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை பணியாற்றும்.
8. நூல்களைப் பழுது பார்க்கும் பகுதி (Binding Section) :
பருவ வெளியீடுகள் உட்பட அவ்வாண்டு பழுது பார்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை.
9. தொழில் நுட்பப் பகுதி (Technical section) :
அவ்வாண்டில் வரிசைப் பதிவு செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதலியவற்றின் எண்ணிக்கையும் நூல் பட்டியல் தொகை எழுதுவதற்குப் பயன் படுத்தப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையும்.
10. நூல் பகுதி (Book Section) :
1. நூலகத்திற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை:
- 1. விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள்:
- 2. நன்கொடையாகக் கிடைத்த நூல்கள்:
- 3. நூல் பரிமாற்றம் மூலம் வந்த நூல்கள்:
இவைகளில் மத்திய நூலகத்திற்கும் பலதுறை நூலகங்களுக்கும் அனுப்பப்பட்ட நூல்களின் புள்ளி விவரங்கள்:
- 2. நூல்களின் மொத்த எண்ணிக்கை :
- 3. நூல்கள் தவிர நூலகத்திலிருக்கும் நாட்டுப்படங்கள், கையெழுத்துச் சுவடிகள், ஒளி நிழற் படங்கள் முதலியவற்றின் எண்ணிக்கை :
- 4. சிறப்புப் பட்டங்கள் பெறுவதற்காக எழுதப் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை:
11. நூல்களையும் பருவ வெளியீடுகளையும் நூலகத்திற்கு அன்பளிப்பாய் நல்கியவர்களின் பெயர்ப்பட்டியல்:
- 1. உயர்திரு கருமுத்து தியாகராச செட்டியார்.
- 2. அமெரிக்கச் செய்தி இலாகாவினர், சென்னை.
12. பருவ வெளியீடுகள் (Periodicals):
மத்திய நூலகத்திற்காகவும் பலதுறை நூலகங்களுக்காகவும் வரவழைக்கப்படும் பருவ வெளியீடுகளின் பெயர்ப் பட்டியலும் எண்ணிக்கையும்:
13. பொருளாதாரம் (Finance):
- (1) நூலகத்திற்கென வழங்கப்பட்ட பொருள்:
- (2) பிற துறையினர் நூல்களுக்கென வழங்கிய பொருள்:
- (3) பொறுப்புத்தொகை, முன்பணம் இவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வரவு:
14. ஆண்டு வரவு செலவுக் கணக்குகளைப் பரிசீலனை செய்தவர் :
- திரு பெரி. தியாகராசன், பி.காம்.,எப்.சி.ஏ.
15. நூலகப் பயிற்சி வகுப்பு :
- 1. ‘டிப்ளமா’ பயிற்சி வகுப்பு 2. ‘சர்டிபிகேட் பயிற்சி வகுப்பு.
- இதுவரை படித்த மாணவர்களது தொகை :
- இவ்வாண்டில் சேர்ந்த மாணவர்களது எண்ணிக்கை :
அ. திருமலைமுத்துசுவாமி,
நூலகத்துறைத் தலைவர்,
தியாகராசர் பல்கலைக் கழகம்.