நேரு தந்த பொம்மை/பிறந்த நாள்
Appearance
கண்ணைப் போல நாட்டினைக்
காத்து வளர்த்து வந்தவர்;
எண்ணம், வாக்கு செயலிலே
என்றும் தூய்மைஉடையவர்.
[இன்று]
பார தத்துக் குழந்தைகள்
பண்பு பெற்றுச் சிறக்கவே
நேரு கனவு கண்டனர்;
நிறைவு செய்வோம்
நாமுமே. [இன்று]
பிறந்த நாள்
குழந்தை யெல்லாம் கூடுவோம்;
கூடிக் குதித்தே ஆடுவோம்;
மழலை மொழியில் பாடுவோம்;
மகிழ்ந்து தாளம் போடுவோம்.
“குழந்தை யோடு பழகவும்,
குழந்தை யோடு பேசவும்.
குழந்தை யோடு ஆடவும்
கொள்ளை ஆசை உள்ளது.”
என்று சொன்ன நேருவை
- இந்த நாடு பெற்றநாள்.
என்றும் நமது நெஞ்சிலே
- இருக்கும் நேரு பிறந்த நாள்.
'எனது பிறந்த நாளையே
- இன்ப மூட்டும் குழந்தைகள்
தினமாய்க் கொள்வோம்’ என்ற நம் தேசத் தலைவர் பிறந்தநாள்.
இந்தி யாவில் மட்டுமா?
- இல்லை, இல்லை, உலகிலே
எந்த நாட்டுக் குழந்தையும்
- இவரைப் போற்றும் நல்ல நாள்.
தேச நலனை எண்ணியே
- தினமும் பாடு பட்டவர்;
ஆசை யாக நாமெலாம்
- அழைக்கும் 'மாமா' பிறந்தநாள்.
நாட்டை ஆளும் தலைவராய்
- நாமும் ஆக நல்வழி
காட்டிச் சென்ற நேருவின்
- கதை படித்து மகிழுவோம்.