நேரு தந்த பொம்மை
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நேரு தந்த
பொம்மை
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
- பொம்மை
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை :
பாரி நிலையம்
184 பிராட்வே, சென்னை 108
வெளிட்டோர்:
குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை-40
விலை ரூ. 4.50
POETRY
Books Title | : NEHRU THANTHA BOMMAI |
(interesting anecdotes from the life of Javaharlal Nehru) | |
Author : | : AL. VALLIAPPA |
Illustrator | : LATHA |
Language | TAMIL |
Paper | : 11.6 Kg |
Printing Point | : 12 POINTS |
Size | : 18.5 * 12.5 CM |
Pages | : 56 |
Edition | : First Edition - 14Th November (childrens day) |
: 2nd Edition 1987 | |
Price | : Rs. 4.50 |
Publisher | : Printers : KULANDAI PUTHAKA NILAIYAM |
: MADRAS -40 | |
Sole Distributors | : PAARI NILAIYAM MADRAS -108 |
Printers | : DEIVAM PRINTING PRESS |
: Devakottai - 623 302 |
- புலவர், கவிஞர்
சில ஆண்டுகளுக்கு முன்னே நடந்தது, இன்னும் என் உள்ளத்தில் பசுமையோடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி, நினைக்க நினைக்க உள்ளத்தில் இன்பத்தேன் துளிக்கிறது, சென்னை வானொலி நிலையத்தார் குழந்தைகள் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த நீதிபதி எஸ். மகராஜன் அவர்கள் தமது பேச்சு முடிவில், குழந்தைக் கவிஞர் - பிள்ளைக் கவியரசு - அழ. வள்ளியப்பாவின்
'அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே.
இளைஞர் நேரு பிறந்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே,’
என்னும் பாடலைப் பாடினார். அவ்வளவுதான்; கூடியிருந்த குழந்தை ரசிகர்களின் கைதட்டல் வான்முட்ட அதிர்ந்தது. அன்றைய வானொலி நிலைய இயக்குநராக இருந்து, இன்று தொலைக்காட்சி டைரக்டர் ஜெனரலாக இருக்கும் திரு. பி. வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேடையில் ஒரு துள்ளு துள்ளினர் ‘நேருவின் நினைவை மழலைச் செல்வங்களின் மனத்தில் புதிய வைக்க இதைவிடச் சிறந்த பாடல் என்ன இருக்கிறது?' என்று வியந்து பாராட்டினார்,
தித்திக்கும் இந்த முத்திரைப் பாடலை! முதற்பாடலாகக் கொண்டு, நண்பர் வள்ளியப்பா அவர்கள் நேரு தந்த பொம்மை என்னும் அருமையான நூலைப் படைத்திருக்கிறார். திரு அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தை இலக்கிய உலகின் ஒளி விளக்கு. வாழ்நாளெல்லாம் குழந்தைகளுக்காகவே எழுத்தாலும் பேச்சாலும் அரும்பாடுபட்டு வருபவர்; பிறரையும் குழந்தைகளுக்காக எழுத வைத்துக் குழந்தை எழுத்தாளர்களின் உற்பத்திச் சாலையாக விளங்குபவர்.
ஒருசமயம் நேரு அவர்கள் பொம்மைக்காரனிடம் இருந்த எல்லாப்பொம்மைகளையும் விலைக்கு வாங்கிக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை அமுதக் கவிதைகளால் சித்திரித்த கவிஞர் நேரு தந்த பொம்மை என்னும் தலைப்பையே இந்தப் புத்தகத்துக்குச் சூட்டியுள்ளார். இந்நூல் நேருவின் வாழ்க்கையில் நேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவருடைய அருமை பெருமைகளையும் எடுத்துக் கூறும் கவிதை மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூஞ்சோலை. பொன் குடத்துக்குப் பொட்டு வேண்டுமா? இந்த அருமையான நூலுக்கு அணிந்துரை வேண்டுமா?
'கொண்டவர்க்கு எது பிடிக்கும் குழந்தைகள் எதை விரும்பும்?' என ஒரு நல்ல தாய் இனிய உணவைச் சமைக்கிறாள், அத்தகைய தாயுள்ளம் நம் கவிஞருக்கும் உண்டு. பிஞ்சுச் செல்வங்கள் சந்த இன்பத்தோடு பாடி ஆடும் வண்ணம் கவிதைச் சமையல் படைத்துள்ளார், குழந்தைக் கவிஞர். தின்னத் தின்னத் தெவிட்டாத மிட்டாய்க் கடையை விரித்துள்ளார். இனிமை எளிமை, பொருளமைதி, கற்பனை நயம், உவமை நயம், நகைச்சுவை ஆகிய அனைத்தும் இவர் பாடல்களில் பின்னிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் படிக்கும் போது நேருவையே நேரில் காண்பது போன்ற உணர்ச்சி தோன்றுகிறது.
சின்னஞ் சிறுவர் நம்மையும்
சிவந்த ரோஜா மலரையும்
என்றும் மறந்திடாதவர்
எவரும் போற்றும் நல்லவர்
என்னும் பாடல் நேரு அவர்களுக்குக்குழந்தைகளிடம் இருந்த பேரன்பையும் பெருமதிப்பையும் காட்டுகிறது.
ஒரு நாள் நேருவை வீட்டில் காணவில்லை. எங்கும் ஒரே பரபரப்பு; அதிகாரிகளும் காவலரும் பல இடங்களிலும் தேடி அலைந்தனர், முடிவில் நேரு அவர்கள் பூங்கா ஒன்றில் குழந்தைகளின் ஆடல்பாடல்களைக்கண்டு களித்துத் தாமும் அவர்களுடன் கும்மாளமடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தனர். இந்த நிகழ்ச்சி பற்றிக் குழந்தைக் கவிஞர் எவ்வளவு அருமையாகப் பாடுகிறார், பாருங்கள்:
கோடை வெயிலைப் போன்றது என்றும்
அரசியல் உலகம் தான் .
குளு குளு தென்றல் காற்றைப் போன்றது
குழந்தைகள் உலகம்தான்
என்று நேருவின் குழந்தை உள்ளத்தையும் தெள்ளத் தெளி வாக எடுத்துக் கூறியுள்ளார்.
பழங்காலத்திலே தற்கால வசதிகள் யாவும் நிறைந்த 'ஆனந்த பவனம்' என்னும் தமது மாளிகையை நாட்டுக்குத் தானம் செய்தவர் ஜவஹர்லால்.
'இந்த நாடே எனது வீடு
என்றி நினைத்த நேரு
சொந்த வீட்டை நாட்டி னுக்கே
சொந்த மாக்கி விட்டார்'
என்று பாடியது நேருவின் நாட்டுப்பற்றையும் வள்ளல் தன்மை யையும் காட்டுகிறது.
வேட்டைக்குச் சென்ற ஜவஹர், மான்குட்டி ஒன்றைச் சுட்டார், பாவம்! அந்த மான்குட்டி அவர் காலடியில் வந்து விழுந்து,
எவர்க்கும் கெடுதி செய்தறியேன்;
என்னைச் சுட்டது சரிதானா?
என்று கேட்பது போல் கண்ணீர் சிந்தியது.
கண்ணீர் சிந்தும் மான் அதனைக்
கண்டார் ஜவஹர்; கண்டதுமே,
புண்ணாய்ப் போனது அவர் மனமும்;
புழுங்கிக் கண்ணீர் விட்டனரே.
என்னும் அடிகளைப்படிக்கும்போது நமது உள்ளம் உருகுகிறது. கண்ணீர் பெருகுகிறது. நேருவின் இளகிய நெஞ்சம் கண்ணெதிரே நிற்கிறது. ‘அன்று முதல் துப்பாக்கிதனைத் தொடமாட்டேன்' என்று சத்தியம் செய்து இறுதி வரையில் தமது சொல்லைக் காத்தனர்’ என்று கவிஞர் உருக்கமாகப் பாடியுள்ளார்.
இவ்வளவும் பாடிய கவிஞர் நகைச்சுவையையும் விட்டுவிடவில்லை. டில்லிக்குப் போன சிறுவன், நேரு மாமாவைப் பார்த்து சல்யூட் அடித்தாலும் யானைவேண்டும்’ என்றானாம் நேரு அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து யானைப் படம் வரைந்து, சிறுவனிடம் கொடுத்தார். சிறுவன் பக்கெனச் சிரித்தான். ஜவஹர் சிறுவனப் பார்த்து,
யானை நீ கேட்டாய்; அன்புடன் தந்தேன்
தீனியே வேண்டாம்; செலவுமே இல்லை.
அடக்கமாய் இருக்கும்; அங்குசம் வேண்டாம்
மடித்து நீ பைக்குள் வைத்திடு,” என்றார்
படத்தை வாங்கிய சிறுவன்,
"தலைவர் தந்தார் தங்கக் கையால்
விலைக்கா வேண்டும்? விற்கவே மாட்டேன்”
என்று மார்தட்டிப் பெருமைப்படுகிறான்.
இப்படியெல்லாம் குழந்தை நண்பரைப்பற்றிக் குழந்தைக் கவிஞர் அவர்கள் எழுதிய இந்தப்புத்தகம் சிறுவர் சிறுமியர்க்குக் கிடைத்த ஒரு மாணிக்கப் புதையலாகும். இந்நூல் குழந்தைகளிடையே தேசபக்தியையும் நல்லொழுக்கத்தையும் வளர்ப்பதாகும். குழந்தைகளுக்குச் செய்யும் தொண்டு தேசத்துக்குச் செய்யும் சேவை; தெய்வத்துக்குச் செய்யும் திருப்பணி. இப்பணியினையே தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்ட வள்ளியப்பா அவர்கள் மேலும் பலப் பல குழந்தை இலக்கியங்கள் இயற்றி நீடுழி வாழ்க! வளர்க! வெல்க! விளங்குக! என அகம் குளிர-முகம் மலர வாழ்த்துகின்றேன்.
நேரு தந்த பொமையினே நித்தம் விரும்பிப்படிப்பவர்கள் பாரில் சிறந்த பண்புடனே-பலவளம் பெற்றே வாழ்குவரே!
சென்னைதணிகை உலகநாதன்
1-11-1977
குழந்தைகள் கொண்டாடும் நேருஜியின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளைத் தமது பாடல்கள் மூலமாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக்காட்டுகிருர் குழந்தைக் கவிஞர் திரு. வள்ளியப்பா அவர்கள். இப்பாடல்களில் பெரும்பாலானவை ‘கல்கி', 'கண்ணன்', 'திட்டம்’, ‘தமிழரசு’ முதலிய இதழ்களில் வெளிவந்தவை.
குழந்தை உலகுக்குப் பலவகையிலும் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவரும், சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவைத் தலைவரும், மாணவர் மன்றச் செயலாளரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமாகிய புலவர், கவிஞர் தணிகை.உலகநாதன் அவர்கள் இப்புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றி.
நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றிக் குழந்தைக் கவிஞர் எழுதிய ‘பாட்டிலே காந்தி கதை’ என்ற நூல் இந்திய அரசின் பரிசையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. காந்தி மகானின் வாரிசாக விளங்கிய நேருஜியைப் பற்றிய இந்த நூல் இப்போது இரண்டாம் பதிப்பாக வெளி வருகிறது * .
பதிப்பகத்தார்
30-7-87
1. | 9 |
2. | 10 |
3. | 11 |
4. | 13 |
5. | 15 |
6. | 17 |
7. | 22 |
8. | 24 |
9. | 27 |
10. | 30 |
11. | 32 |
12. | 34 |
13. | 37 |
14. | 40 |
15. | 41 |
16. | 44 |
17. | 47 |
18. | 49 |
19. | 51 |
20. | 54 |
21. | 55 |