நேரு தந்த பொம்மை/பறவைக் கப்பல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchஆகாய விமானம்

இங்கி லாந்தில் ஜவஹரும்
இருந்து வந்த நாளிலே
அங்கே வந்த நாள் இதழ்
அனைத்தும் படித்து வந்தனர்.
பறவை போல வானிலே
பறந்து பறந்து செல்லவே,
விரும்பிச் சிலரும் முயன்றதை
வியந்து படித்து மகிழ்ந்தனர்.
"அண்ணன், தம்பி இருவராம்
ஆர்வில், வில்பர் என்பவர்
விண்ணில் பறக்கும் வகையிலே
விமானம் கண்டு பிடித்தனர்",
என்ற செய்தி அறிந்ததும்
எழும்பிக் குதித்தார் ஜவஹரும்
அன்று தமது தந்தைக்கே
அன்புக் கடிதம் அனுப்பினார்.
“விரைவில் இந்த வாரமே
விமானம் ஏறி அங்குநான்
வரவே முடியும்” என்றுதான்
மகிழ்ச்சி யோடே எழுதினார்!